வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
389 topics in this forum
-
சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் 1927 ஜூன் 24ல் சிறகை விரித்து, சிகாகோ மண்ணில் 1981 அக்.,17ல் வாழ்வை முடித்துக் கொண்டவர். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தாலும், பிறருக்கு எட்டாத கருத்துக்களை கொட்டியவர். 'பத்து வயதானதொரு பாலகன் உன் சன்னதியில் பாடியதும் நினைவில் இலையோ முத்து என இட்ட பெயர் முத்தாக வேண்டுமென முறையீடு செய்ததிலையோ! தமிழில் ஒரு கவிமகனை சிறுகூடல் பட்டிதனில் தந்த மலையரசித் தாயே'- என மலையரசி கோயிலில் கவிதை வடித்தவர். அப்போது அவரது வயது பத்து. அவர் கவிஞர் கண்ணதாசன். வேலை கேட்டு ஒரு பத்திரிகை அலுவலகம் சென்றவரிடம், 'ஏதாவது இதழ்களில் எழுதி இருக்கிறீர்களா' என கேட்க, 'ஆமாம்' என்றார் கவிஞர். 'என்ன பெயரில் எழுதுகிறீர்கள்' என சட்டென கேட்க, கொஞ்சமும் தயக்கமின்றி, '…
-
- 7 replies
- 6.2k views
-
-
1985 களில் யாழ் குடாவின் எல்லாப் பாகங்களிலும் அரங்கேறிய மக்களின் எதிரிகள் எனும் வீதி நாடகம் யாரால் ஏற்றப் பட்டது.அவர்கள் எங்கு இருக்கிறார்கள். ஏனெனில் என் மிகச் சிறிய வயதில் நான் பார்த்து வியந்தவற்றில் அவர்களின் நாடகம் ஆடும் முறை இன்று வரை என் கண்களில் உள்ளது.
-
- 3 replies
- 2.8k views
-
-
30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை -உமா (ஜேர்மனி )- 1990ம் ஆண்டு ஜேர்மனியின் கேர்ண நகரில் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பின் 30வது தொடர் ஒக்டோபர் மாதம்12ம் திகதி பாரிஸில் நடைபெற்றது. இச்சந்திப்பின் ஆரம்பவுரையை நிகழ்த்திய விஜி, 1990 களில் ஜேர்ம னி கேர்ண நகரில் தொடங்கிய இப்பெண்கள் சந்திப்பு, 30 வது சந்திப்பு வரை பல ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடக்கூடியது. இதற்கு முதல் மூன்று சந்திப்புகள் பிரான்சில் நடைபெற்றுள்ளதாகவும், எல்லாச் சந்திப்புகளுமே காத்திரமான சந்திப்புகளாக அமைந்தனவென்றும், 2000ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பெண்கள் சந்திப்பில் தலித் சிந்தனையாளரும் பெண்ணியவாதியுமான சிவகாமி கலந்து கொண்டு ஆழமான கருத்துகளை வழங்கியதோடு பங்குபற…
-
- 50 replies
- 5.6k views
-
-
மென்டலின் சிவகுமாரின் லலித ஷேத்ரா" எனும் இசை ஒழுங்கமைப்பு நிறுவனம் கடந்த மூன்று வருடங்களாக அற்புதமான-இதயத்தே ஆழப் பதிந்து நிற்கும் கர்நாடக சாஸ்திரீய இசை நிகழ்சிகளை நடத்தி வருகிறது. இதுவரை எமது நாட்டில் நடந்தேறாத -முற்றிலும் புதியதும், புதுமையானதுமான நிகழ்சிகள் நான்கு நிறைவேறி விட்டன. ஜனார்த்தனின் "saxovil fusion concert" ,விக்குவிநாயகரானின் "சதுர் கட லய சமர்ப்பணம்", இராதாகிருஷ்ணன் "scintillating strings", ராகவேந்திராவின் "பிரணவம்" போன்றவை ஆகும். இவை ஒவ்வொன்றும் ஒன்றிலிருந்து மற்றொன்று முற்றிலும் வேறுபட்டதே. இந் நிகழ்ச்சிகளில் இந்தியாவின் பிரபல வித்துவான்கள் அணிசேர் கலைஞர்களாக பங்கு…
-
- 0 replies
- 742 views
-
-
"வெட்டப்பட்ட நகங்களை விடுத்து விரல்களைப்பாதுகாப்போம்" நிந்தவூர்ஷிப்லி-தீபச்செல்வன் :சந்திப்பு ஈழத்தின் தென்கிழக்கு நிந்தவூரை சேர்ந்தவர் ஷிப்லி. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்கிறார். இதுவரை 3 கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறார். 2002 இல் சொட்டும் மலர்கள் 2006இல் "விடியலின் விலாசம்" 2008 இல் "நிழல் தேடும் கால்கள்".2007 இல் "தேசிய ஒருமைப்பாட்டிற்கான அவசியம்" என்ற ஆய்வு தேசிய சமாதான பேரவை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தினால் சிறந்த ஆய்வுகளுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கி
-
- 3 replies
- 2k views
-
-
ஈழத்தின் பொப்பிசை சக்கரவர்த்தி...AE மனோகரன் நினைவாக.... ”காலம் ஆகிய” ஈழத்தின் பொப்பிசை சக்கரவர்த்தி என துள்ளல் இசைக்கு புகழ் சேர்த்த, ஈழத்தமிழர்களின் இசை நுனுக்கத்தை உலகறியச் செய்த, தென்னிந்திய தமிழ் திரை உலகில் சிலோன் மனோகரன் என்ற பெயரோடு 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த AE மனோகரன் நினைவாக....
-
- 4 replies
- 950 views
-
-
ஓவியர் ஜீவாவுடன் நேர்காணல் படித்தது சட்டம் பிடித்தது தூரிகை சிறந்த திரைப்பட நூலுக்கான தேசிய விருதை இந்த ஆண்டு திரிசக்தி பதிப்பக வெளியீடான திரைச்சீலை என்னும் நூல் பெற்றுள்ளது.இந்நூலைக்கோவையைச் சேர்ந்த ஓவியர் ஜீவா எழுதியுள்ளார்.1982இல் அறந்தை நாராயணன் எழுதிய தமிழ்ச் சினிமாவின் கதை என்னும் நூலுக்குப் பின்பு இவ்விருது பெறும் தமிழ் நூல் இதுவே.கோவையின் போக்குவரத்து நெரிசல் மிக்க டவுன்ஹால் சாலையின் அஞ்சு முக்கு வீதியில் உள்ள அவரது வீடும் ஸ்டூடியோவுமான இடுக்கமான இடத்தில் செம்மலர் சார்பாக அவரைச் சந்தித்து வாழ்த்துச் சொன்னோம். நாகர்கோவில் மாவட்டம் பூதப்பாண்டி இவரது பூர்வீக பூமி.ஆம்.அதே பூதப்பாண்டிதான்.தோழர் ஜீவா பிறந்த மண்ணில் அவருடைய உறவுக்காரப் பைய…
-
- 0 replies
- 810 views
-
-
பூவரசு நூறாவது சிறப்பிதழ் எழுதியவர்: சோழியான் திங்கள், 29 தை 2007 வெளிவந்துவிட்டது பூவரசு இனிய தமிழ் ஏட்டின் நூறாவது இதழ். ஜேர்மனி, பூவரசு கலை இலக்கியப் பேரவையின் வெளியீடான 'பூவரசு' நூறாவது இதழில், 'எதிர்ப்படும் தடைகளைக் கடந்து இந்தப் பயணத்தை மேலும் இலகுவாக்குவதற்கு உங்களால்மட்டுமே இயலும். உங்கள் அன்பும் ஆதரவும் தொடரும்வரை பூவரசு இன்னும் பல தமிழ்ப் பூக்களைப் பூத்துச் செழிக்கும்' என்ற ஆசிரியர் இந்துமகேஷ் அவர்களின் முகவுரையானது, 'பூவரது தொடர்ந்து வருமா வராதா' என்ற என்ற வாசகர்களதும் படைப்பாளிகளதும் சந்தேகத்தைப் போக்கும்வண்ணம் உள்ளமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும். ஊடகங்களின் வளர்ச்சி, இணையத்தின் வீக்கம், சூழலின் தாக்கம் எனப் புகலிடத் தமிழர்களத…
-
- 1 reply
- 1.5k views
-
-
கனடா தந்த இசைக்குயில் சின்மயி சிவகுமார்! தற்போது விஜே ரிவியில் இடம்பெறும் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியைப் புலம் பெயர்ந்த மக்கள் அதிகமாகப் பார்ப்பதற்கு முக்கியமான காரணம், புலம் பெயர்ந்த மண்ணில் இருந்து புதிய தலைமுறையினர் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றுவதேயாகும். அந்த வகையில் எமக்கு நன்கு அறிமுகமான சின்மயி சிவகுமாரும் இந்த நிகழ்வில் இம்முறை கலந்து கொள்கின்றார். ஏற்கனவே ஜெசிக்கா யூட் சுப்பர் சிங்கர் மூலம் பலருக்கும் அறிமுகமாகி இருந்தார். அப்போது அவரைப்பற்றி உதயன், தினக்குரல் போன்ற பத்திரிகைகளில் நான் எழுதியிருந்தேன். அந்த வரிசையில் மிகத் திறமையாகப் பாடக்கூடிய சின்மயி கனடாவில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் தனது இசைத் திறமையை பல தடவைகள் வெளிக்காட்டியிருந்தார…
-
- 7 replies
- 2.9k views
-
-
சர்வதேச ஊடகங்களை சொல்லிசையால் திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளம் கவிஞர் ஈழத்து இளம் கவிஞர் ஒருவர் சர்வதேச ஊடகங்களை திரும்பி பார்க்க வைத்துள்ளார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம். இசையின் இப்போதைய உச்சமான வடிவம் சொல்லிசை. வார்த்தைகளை இசையுடன் இணைத்து வேகமுடன் ஆனால் அதிக அர்த்தத்துடன் கருத்து ஆழத்துடன் வெளிப்படுத்தும் ஒரு முறை. உலகம் முழுதும் இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் ஒரு இசை முறை இது. ஈழத்தில் பிறந்து தற்போது டென்மார்க்கில் வாழ்ந்து வரும் இளம் சொல்லிசை கலைஞன் டேரியல் தன்னுடைய புத…
-
- 0 replies
- 469 views
-
-
http://www.youtube.com/watch?v=xTLwfbDzvRQ&feature=related
-
- 20 replies
- 4.7k views
-
-
முன்று கலைஞர்களின் அறிமுகம்.கேள்விப்பட்ட ஒரு கலைஞரின் அறமுகமும் கேள்விப்படாத இரு கலைஞர்களின் அறிமுகமும் டிசேயின் வலைப்பதிவில் வாசித்தேன்.நீங்களும் பாருங்கள். http://djthamilan.blogspot.com/2006/02/blo...og-post_22.html
-
- 0 replies
- 1.5k views
-
-
திரு. அப்துல் ஹமீது இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் என்று சொல்லும் போது, திரு. அப்துல் ஹமீது அவர்களின் பெயர் ஞாபகத்திற்கு வராதவர்கள் மிகவும் சொற்பம் என்று கூறலாம். தனது காந்தக் குரலினால் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமின்றிப் பிற பல தமிழர்கள் வாழும் நாடுகளிலும் எண்ணிலா ரசிகர்களைக் கவர்ந்தவர் திரு அப்துல் ஹமீது. வானொலி மட்டுமல்ல, பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதுடன், பல்வேறு தமிழ் மேடை நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகப் பல நாடுகளுக்கும் சென்று ஈடில்லாப் புகழ் ஈட்டிக்கொண்டிருப்பவர். கடந்த வருடம் லண்டனில் இவரது ஒலிபரப்புத் துறையின் பொன்விழா நடைபெற்றது. நிலாச்சாரல் வாசகர்களுக்காகத் திரு. அப்துல் ஹமீது வழங்கிய சிறப்புப் பேட்…
-
- 12 replies
- 4.8k views
-
-
எந்த துறையானாலும் அந்த துறையில் தனித்துவமாக செயற்படுகின்றவர்களுக்கான இடம் என்பது என்றைக்கு நிரந்தரமாகிவிடுகின்றது. அந்த வகையில் தற்காப்புக் கலையினை தனக்கான பாணியில் மக்களை கவர்ந்த உன்னதமான கலைஞன் புரூஸ் லீ. உலகின் பல பாகங்களிலும் தற்காப்புக் கலை வளர்வதற்கு பிரபல்யமடைவதற்கும் நடிகரும் தற்காப்புக் கலைஞருமான புரூஸ் லீயின் பங்கு அளப்பரியது. குங்பூ, கரத்தே, வில்வித்தை, வாள் சண்டை போன்ற ஏராளமான தற்காப்புக் கலைகள் இன்று பல நாடுகளில் பல விதமான முறைகளில் பிரபல்யடைந்துள்ளன. ஆனால் அனைத்து தற்காப்பு கலை விரும்பிகளுக்கும் பொதுவான ஒரு முன்னுதாரணமாய் இன்றும் இருப்பவர் புரூஸ் லீ. எந்த ஒரு தற்காப்புக் கலைஞனை விடவும் வேகமாகவும் விவேகமாகவும் தனித்துவமான தற்காப்பு நகர்வுகளை புரூஸ் …
-
- 1 reply
- 1.6k views
-
-
வானவில் பெண்கள்: ஊரடங்கிலும் அடங்காத கலைச் சேவை வானவில் பெண்கள்: ஊரடங்கிலும் அடங்காத கலைச் சேவை க்ருஷ்ணி அலை ஓய்ந்த பிறகு கடலில் இறங்கலாம் என்று நினைப்பதைப் போன்றதுதான் கரோனா நோய்த்தொற்று முடிவுக்கு வரும்வரை நம் பணிகளை ஒத்திப்போடுவதும். எதையும் எதிர்கொள்ளும் சூழலும் கொஞ்சம் சமயோசிதமும் இருந்தால் நெருக்கடி காலத்தில்கூடச் செயலாற்ற முடியும் என்கிறார் ஓவியர் சத்யா கௌதமன். தான் அறிந்த கலையை விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருவியாகப் பயன்படுத்துவதுடன் தன்னால் இயன்ற அளவுக்குச் சேவை செய்வதற்கான வாய்ப்பாகவும் இதை இவர் பயன்படுத்திவருகிறார் சிங்கப்பூரில் வசித்துவரும் சத்யா, கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர். அப்பா எல்.ஐ.சி. நிறுவனத்தில் பண…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ் உடுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட கனடிய தமிழன் லெனின் சிவம் ஹாலிவுட்டில் The Protector’. என்ற ஆங்கில திரில்லர் திரைபடத்தை இயக்கியிருக்கிறார் அவர் ஏற்கனவே மூன்று தமிழ் திரைபடங்களை இயக்கியுள்ளார் அவருடைய தந்தையார் கம்னியூஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருந்தமையால் அவருக்கு லெனின் என்ற பெயரை அவருக்கு சூட்டியதாக கூறுகிறார் அத்துடன் அவரது தந்தையார் இலங்கை சினிமா ஒன்றில் கதாநாயகனாக நடித்தவர் என்று கூறப்படுகிறது ஆனால் எந்த திரைபட கதாநாயகன் என்று தெரியவில்லை இவரது சொந்த உடுப்பிட்டி கிராமத்…
-
- 0 replies
- 819 views
-
-
சிட்னி கலை நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தேன்,ஈழதமிழர்கள் தான் அதை ஒழுங்கு செய்து இருந்தார்கள்,அங்கு வந்திருந்தவர்களில் ஈழதமிழர்கள்95 சதவீதம் என்று கூறலாம்.பரத நாட்டியம் ஏனைய இந்திய மாநிலங்களின் நடனங்களும் இடம்பெற்றது நிகழ்ச்சி நன்றாக இருந்தது. பிரதம விருந்தினராக ஒரு அவுஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டார்,அவர் அங்கு உரையாடும் போது சிறிலங்கன்,இந்து,இந்தியன் இந்த மூன்று சொற்களை தான் தனது உரையின் போது பாவித்தார்.மருந்துக்கு கூட தமிழர் என்ற சொல் பாவிக்கபடவில்லை இது அவரின் குற்றமல்ல இப்படியான நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்பவர்கள் பிரதமவிருந்தினராக வருபவர்களுக்கு(பாராளுமன்ற உறுப்பினர்கள்,ஏனைய சமூக தலைவர்கள்)எங்களுடைய கலாச்சாரம்,தாய்மொழி அத…
-
- 18 replies
- 4.2k views
-
-
'சுஜாதா என்கிற நான்... 60 களின் மத்தியில் எழுதத்துவங்கி, இறக்கும் காலம் வரை எழுத்தில் மழுங்கல் இன்றி வாசகர்களை தன் எழுத்தினால் கட்டிப்போட்டவர் எழுத்தாளர் சுஜாதா. எழுத்து என்றால் இலக்கியம் என்ற வரையறைக்குள் சிக்காமல், நவீனத்தை தன் எழுத்திலும் சிந்தனையிலும் ஏற்றி, இளைய தலைமுறையினரின் ஆதர்ஷ எழுத்தாளராக திகழ்ந்தவர். இந்நிலையில் எழுத்தாளர் என்று மட்டும் வெகுஜன உலகில் அறியப்பட்ட சுஜாதா என்கிற ரங்கராஜனின் தனிப்பட்ட குணங்களை பகிர்ந்து கொள்கிறார் அவரது மனைவி சுஜாதா. சுஜாதாவிற்கு முன், அவருடன், அவருக்குப்பின் என உங்களைப் பற்றி மூன்று வார்த்தைகளில் சொல்லுங்களேன்..... சுஜாதாவிற்கு முன்-களிமண் ... அவருடன் -முதலில் சாது, பின் கொஞ்சம் தைரியம் ,பின் அனுசரிப்பு இப்போது- தனிமை, வெ…
-
- 0 replies
- 697 views
-
-
மல்லாடல் சிலப்பதிகாரத்தின் ஒரு அத்தியாயமான கடலாடுக்காதையில் குறிப்பிடப்பட்டுள்ள பதினொரு நடனங்களில் நான்காவது நடனம் மல்லாடல் என்று குறிப்பிடப்படுகிறது. மல்லாடல் என்பது மல்யுத்த வீரர்களுக்கு இடையே நடக்கும் முஷ்டி சண்டையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நடனம். இங்கே வானாசுரன் மற்றும் மாயோன் கதை சார்ந்த மல்யுத்தம் நிகழ்த்தப்படுகிறது. மதங்களின் நெறிமுறைகள், தத்துவங்கள் மற்றும் உளவியலில் "நல்லோர்- தீயோர். மேலோர் - கீழோர்" என்ற கறுப்பு வெள்ளை கருத்தாக்கங்களைக் கொண்டவை. இக்கருத்தாக்கங்கள் இன்று புதிய பார்வைகளால் விமர்சனத்திற்குள்ளாக்கப்படுகிறது. தத்தமது அதிகாரத்த்தினை நிலைநிறுத்திக் கொள்வதே பெரும்பாலானா யுத்தங்களின் அடிப்படை அம்சம். இந்நடனம், நல்லோர் தீயோர், வெற்றி தோல்வி என்பத…
-
- 0 replies
- 1.4k views
-
-
தீபச்செல்வன் அவர்கள் தமிழ்கவி அவர்கள் சோபா சக்திக்கு வழங்கிய நேர்காணலுக்கு எழுதிய கருத்து அல்லது எதிர்வினை. இது தீபனின் முகநூலில் இருந்து இங்கு பதிவிடுகிறேன். தமிழ்க்கவி அம்மாவை சிறிய வயதில் வரிச்சீருடையுடன் தெருக்களிலும் கூடட்டங்களிலும் சிவப்பு எம்.ரி.நையின்டி மோட்டார் சைக்கிளில் கம்பீரமாக சொல்லுவதைப் பார்த்திருக்கிறேன். நான் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் பணியாற்றிய காலங்களில் அன்றைய அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் மாதாந்தம் நடக்கும் கூட்டங்களில் அடிக்கடி குறுக்கிட்டு பேசிக் கொண்டிருப்பார். அவர் அங்கு பேசிய விடயங்கள் பல இன்னமும்எனக்கு நினைவிருக்கின்றன. விபத்தில் இறந்தவர்களின் படங்களை விபத்து விழிப்புணர்வு படமாக போடக்கூடாது. அது அவர்களின் குடும…
-
- 7 replies
- 1.7k views
-
-
ஓவியர் விஜிதன் நேர்காணல் கற்கை, ஆர்வம், தேடல் புதுமை நோக்கிய பயணத்துக்கான துடிப்புக்கொண்ட இளம் ஓவியனின் வருகை சின்ன வயசிலேயே எனக்கு ஓவியத்தில் ஈடுபாடிருந்தது, வீட்டில நான் ஓவியத்துறையில போறது பற்றி ஒரு பிரச்சினையும் இல்லை. நானும் என்னுடைய வழியில் ஓவியத்துறையிலேயே சின்னன் சின்னனாக வளர்ந்து வந்து பாடசாலை, பல்கலைகழகம் அந்த வகையில வெளிப்பட்டதுதான் இந்த ஓவியக் கண்காட்சி என்று சொல்லலாம். இந்த விதி முறைகளை தெரிவுசெய்ய அடிப்படைக் காரணம் என்ன? பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிப் போனவுடன், எண்ணெய் வர்ணத்தை பாவிக்கின்ற முறையை அறிந்து கொண்டேன். அந்த முறையை வைத்துக் கொண்டு ஏதாவது புதிதாகச் செய்ய வேண்டும் என்று யோசித்ததால் சில விடயங்களை புதிதாக செய்திருக்கிறேன். பட…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
நாமும் பார்க்காவிடில் யார் பார்ப்பார்கள்? புலம் பெயர் தமிழர்களின் பரதநாட்டியம்,வயலின்,மிருதங்க
-
- 22 replies
- 4.8k views
-
-
இருபதாம் நூற்றாண்டின் ”இசை நந்தன்” ராசையாவுக்கு… இசை குறித்தும் அதனது ஆழ அகலங்கள் குறித்தும் அணுவளவும் அறிவற்ற பாமரன் எழுதும் மடல். இதனை எழுதும்போது கூட…. சுரங்கள் ஆறா, ஏழா என்று அநாவசியக் குழப்பத்துடன்தான் ஆரம்பிக்கிறேன் இதனை. நினைவு தெரிந்த நாளிலிருந்து…. “…திரை இசை இத்தோடு முடிந்தது. மீண்டும் அடுத்த திரை இசை மாலை 6.10-க்கு….” என்பதோடு என் வீட்டு வானொலியின் கழுத்து திருகப்பட்டு விடும். ஹம்சத்வதனியோ..கல்யாணியோ.. கரகரப்ப்ரியாவோ..கரகரப்பில்லாத ப்ரியாவோ… அணுவளவும் அறிந்ததில்லை நான். உன்னை இசைஞானி என்றழைக்க மாட்டேன். ஏனெனில், படத் தயாரிப்பாளனில்லை நான். உன்னை ராகதேவன் என்றழைக்க மாட்டேன். ஏனெனில் எந்தப் படத்தையும் இயக்கப் போவதில்லை நான். உன்னை மேஸ்ட்ரோ என்றழைக்க மாட்டேன…
-
- 0 replies
- 886 views
-
-
எங்கள் வீட்டு கேபிள் டிவியில் நேற்றுதான் 'நான் கடவுள்' படம் போட்டார்கள். அதன் விமர்சனம் கீழே... ஹீரோவாக வரும் கலைஞர் நடிக்கவே இல்லை. வாழ்ந்து காட்டியிருக்கிறார். கடவுள் கிடையாது என்று அடிக்கடி பிதற்றும் ஹீரோ, தானே கடவுள் என்றும் முரணாக நினைத்துக்கொள்கிறார். பிணங்களோடு வாழும் அகோரி போல இவர் பணங்களோடு வாழ்கிறார். சொந்த பந்தம் எல்லாவற்றையும் அறுத்துவிட நினைக்கும் இவர், எல்லா சொந்த பந்தந்துக்கும் செட்டில்மெண்ட் செய்துவிடுகிறார். ஆனாலும் எல்லா நேரத்திலும் கண்கள் பனிப்பதில்லை, இதயம் துடிப்பதில்லை. நானே கடவுள் என்பதை நிரூபிக்க நானே கேள்வி நானே பதில் என வாழ்கிறார்.அதை நிரூபிக்கும் விதமாக, 'நானே கேள்வி, நானே பதில்' என்று அடிக்கடி எழுதுவதாகக் காண்பிப்பது இயக்குநரின் புத்திசாலி…
-
- 0 replies
- 2.2k views
-