வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
389 topics in this forum
-
வணக்கம் உறவுகளே! மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கை தமிழர்கள் சில திரைப்படங்களை தயாரித்து இருந்ததும், பின்னர் அந்த படச்சுருள்கள் கலவரங்களின் போது எரிக்கப்பட்டதும் யுத்தகாலத்தில் வன்னிப்பகுதகளிலிருந்து படைப்புகள் வெளியானதும் வரலாறு. 2009க்கு பின் அவ்வப்போது துளிர்விட ஆரம்பித்த ஈழசினிமா துறை தற்போது மெல்ல தவள ஆரம்பித்துள்ளது. இங்கும் தரமான ஒளிப்பதிவு, இந்திய தரத்திலான இசை, வெள்ளித்திரை தரத்திலான படத்தொகுப்பு என நவீன வளங்களுமன் படைப்புகள் வெளிவந்தாலும், எதுவித துறைசார் கல்விகளுமின்றி உலகத்தரமான படைப்புகளை தருவது சவாலானதாகவே இருந்து வருகிறது, நமது கலாசாரம், நமது வாழ்க்கை முறைகள், நமது பேச்சுவழக்கு, நமது வரலாறு, நமது அடையாளம், நமது பிரச்சினைகள போன்ற பல விடையங்கள் நமது …
-
- 5 replies
- 1.7k views
-
-
பரமேஸ் - கோணேஸ் உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது http://parameshkonezsh.blogspot.com/2010/02/blog-post.html
-
- 5 replies
- 4.1k views
-
-
-
கலாநிதி கவிஞர் காரை. செ. சுந்தரம்பிள்ளை 20.05.1938~21.09.2005 வாழ்க்கைக் குறிப்பு: ஈழத்தின் வடக்கே அழகிய தீவு காரைநகர்; அங்கு வரலாற்றுக் காலத்தில் மன்னர்கள் போர் புரிந்தார்களென்ற காரணப் பெயருடன் விளங்கும் பூமி, களபூமி எனும் இடம். அதுவே காரை செ. சுந்தரம்பிள்ளையின் பிறப்பிடம். அப்பூமியின் உரமே எப்போதும் தன் வாழ்வின் உரமெனக் கொண்டு வாழ்வோடு போராடிப் போராடி உயர்வு கண்டதே இவரின் வெற்றியாகும். கவிஞர் 1938 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 20 ஆம் திகதி செல்லர் - தங்கம் தம்பதியினருக்கு பிள்ளைகள் ஐவரில் மூன்றாவதாக வந்து பிறந்தார். காரைநகர் ஊரித் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக்கல்வி கற்றவர், தொடர்ந்து ஊர்…
-
- 5 replies
- 1.5k views
-
-
தமிழ் இசை விழா இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தந்த அட்டகாசமான தமிழ் இசை விழா. நிகழ்ச்சிக்கு அனுசரணையினை நாம் தமிழர் கட்சியினர் வழங்கி இருந்தனர். தமிழக அரசும், கலைவாணர் அரங்கை கொடுத்து உதவியது. மெய்சிலிர்க்க வைக்கும் தமிழ் இசைவிழா: கேட்டுப்பாருங்கள்.
-
- 5 replies
- 1.4k views
-
-
நாங்கள் ஏன் இலக்கிய சந்திப்பில் இல்லை? - யோ. கர்ணன் ஐரோப்பாவிலுள்ள நண்பரொருவர் சிலதினங்களின் முன்னர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அது சற்றே நீண்டது. அதன் குறிப்பிட வேண்டிய பகுதிகள் கீழே உள்ளன. ‘சில விடயங்களை ஊகிக்கத்தான் முடியும். ஆதாரங்களுடன் நிறுவ முடியாது. ஆதாரமான நம்பிக்கைகளினடிப்படையில் முன்னேறிச் சென்று கொண்டிருந்தால், சிலவேளைகளில் அவற்றை ஆதாரங்களுடன் நிறுவவும் கூடும். இலக்கிய சந்திப்பு விவகாரமும் இவ்வாறனதே. இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதே ஒருவிதமான உள்நோக்கத்தினடிப்படையிலானதுதான் என்பதே எனதும் இங்குள்ள சில தோழர்களினதும் அசையாத நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அதனை ஆதாரபூர்வமாக நிறுவ முடியவில்லை. உங்கள் முகப்புத்தக தகவல்களை கவனித்து வருகிறேன். எனது நம்பிக்கைகளிற்கா…
-
- 5 replies
- 1.1k views
-
-
நன்றி: விகடன்
-
- 5 replies
- 2.9k views
-
-
"நிலவே என்னிடம்"~ கீபோர்ட் இன்னிசை விருந்தில் லண்டன் மாநகரில் என்னுடன் இணைந்து தபலா இசைத்து மகிழ்வித்த இளம் நல்கலைஞன்,ஜனன் சத்தியேந்திரன்!~மற்றும் நமது கலையுலக நண்பர்'ஆறுமுகம் ரவீந்திரனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
-
- 5 replies
- 937 views
-
-
தமிழ் விக்கிபீடியாவில் சேர்த்துக் கொள்வதற்காக பின்வருபவர்களைபற்றிய மேலதிக விபரங்கள் தயவு செய்து அறியத்தாருங்கள். பண்டிதர் கே.வீரகத்தி 'மன்னவன்' கந்தப்பு திருமதி யோகா பாலச்சந்திரன் பேராசிரியர் கே.சிவலிங்கராசா கரவைக்கிழார்
-
- 5 replies
- 2.2k views
-
-
ஈழத்து நடிகர் நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்களின் அரிச்சந்திரன் நாடகம் ஈழத்து நடிகர் நடிகமணி வி.வி.வைரமுத்து மண்ணில் 11.02.1924 விண்ணில் 08.07.1989 வி. வி. வைரமுத்து (பெப்ரவரி 11, 1924 - சூலை 8, 1989) இலங்கையின் மிகச்சிறந்த இசை நாடகக் கலைஞராகக் கருதப்படுபவர். இவர் அரிச்சந்திரனாகத் தோன்றி நடித்த 'மயான காண்டம்' எண்ணற்ற தடவைகள் மேடையேற்றப்பட்ட இசை நாடகமாகும். தனது இனிய குரல் வளத்தால் பாடி, உருக்கமாக வசனங்கள் பேசி நடிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறையைச் சேர்ந்த வேலப்பா, ஆச்சிக்குட்டி தம்பதியினருக்கு மகனாக வைரமுத்து பிறந்தார். காங்கேசன்துறை சைவ வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியை ஆரம்பித்தார். 1932 இல் கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூர…
-
- 5 replies
- 6.1k views
-
-
எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை - யோ. கர்ணனுடனான நேர்காணல் இணையத்தின் மூலம் எனக்கு அறிமுகமான யோ கர்ணனை இந்த வருடத்தின் ஆரம்பகாலப் பகுதியில் நான் தாயகம் சென்ற பொழுது நேரிடையாகவே சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பழகுவதற்கு மிகவும் இனிமையான இவர், நேரடி சந்திப்பின் பின்பு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவராகிவிட்டார். இங்கிருந்து வெளியாகும் ஆக்காட்டி சஞ்சிகைக்கு ஓர் நேர்காணல் ஒன்று தரமுடியுமா ??என்று நான் கேட்ட பொழுது ,உங்களுக்கு இல்லாத நேர்காணலா என்று மிகவும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். மின்னஞ்சல் மூலம், நான் அவரிடம் நடத்திய நேர்காணல். நேசமுடன் கோமகன் ************************************** யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்…
-
- 5 replies
- 1.2k views
-
-
மாற்குவியம் – சி.ஜெயசங்கர். adminJanuary 8, 2025 நவீன காலத்து ஈழத்து ஓவிய உலகின் ஆச்சரியந்தரும் ஓவியப் படைப்பாளி அ.மாற்கு அவர்கள். ஓவிய உலகின் உருவாக்கமான ஓவியர் அ.மாற்கு அவர்கள் நவீன ஓவிய உலகின் தராதரங்களாலும்;; வரன்முறைகளாலும் கட்டுப்படுத்தமுடியாத ஓவிய ஆளுமையாகத் திகழ்ந்திருப்பதை அவரது வாழ்க்கைக் காலப் படைப்புகள், செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. அ.மாற்கு அவர்கள் தான் வாழ்ந்த சூழலையும், சூழ்நிலைமைகளையும் தனது கைக்கெட்டும் சாதனங்களை வைத்து சாதித்திருப்பதை அவரது படைப்புகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. அவர் தனது படைப்பாக்கங்களுக்கான சாதனங்களுக்காகக் காத்திருந்ததில்லை, அங்கலாய்ந்திருந்ததில்லை. இந்தத் திறந்த, பரந்த, துணிந்த தன்மை கடந்த ஐம்பது ஆண்டுக…
-
-
- 4 replies
- 485 views
-
-
-
- 4 replies
- 4.4k views
-
-
ஈழத்தின் பொப்பிசை சக்கரவர்த்தி...AE மனோகரன் நினைவாக.... ”காலம் ஆகிய” ஈழத்தின் பொப்பிசை சக்கரவர்த்தி என துள்ளல் இசைக்கு புகழ் சேர்த்த, ஈழத்தமிழர்களின் இசை நுனுக்கத்தை உலகறியச் செய்த, தென்னிந்திய தமிழ் திரை உலகில் சிலோன் மனோகரன் என்ற பெயரோடு 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த AE மனோகரன் நினைவாக....
-
- 4 replies
- 952 views
-
-
எம் மூத்த இசை அமைப்பாளர் மாண்புமிகு இசைத்தென்றல் எஸ் .தேவராஜா அவர்கள் யாழ்களத்தின் 16 ஆவது அகவையை முன்னிட்டு வாழ்த்தி ஒருபதிவைனை இணையத்திலே இட்டுள்ளார் .மிக்க நன்றிகள் ஐயா .......ஒவ்வொரு யாழ்கள உறுப்பினரும் அவருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வோம். அகவை பதினாறைக் கொண்டாடும் யாழ் களமே ஆழுமையோடு நீ வாழி ஆயிரம்காலத்தையும் தாண்டி அதியுயர் சேவை செய்து-நீ வாழி ஆனந்தம் மகிழ்வோடு நீ வாழி ஆண்டொல்லாம் புதுமையுடன்-பல அகவை கண்டு நீ வாழி தேன்மதுரத் தமிழுக்கு நீர் ஊற்றி நீ வாழி திசை எட்டும் புகழ்பரவ தென்றலாய் நீ வாழி தெம்மாங்கு பாட்டுக்கு சொல்லெடுத்து நீ வாழி தித்திக்க தித்திக்க சுவையாகும் சுவையாக நீ வாழி யாழ் எடுத்து இசைதொடுத்த யாழ் மண்ணே நீவாழி யதியோடு இசை…
-
- 4 replies
- 688 views
-
-
கவிஞர் காசி ஆனந்தனுடன் ஒரு சந்திப்பு வாழ்வில் எத்தனையோ நபர்களைத் தினம் தோறும் சந்திக்கிறோம். எல்லோரும் ஏதோ ஒரு வகையில் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். நீ யாரையோ பார்த்து பிரமிக்கும் அதே வினாடியில் யாரோ உன்னைப் பார்த்தும் பிரமிக்கிறார்கள் என்று நான் ஒரு கவிதையில் குறிப்பிட்டிருப்பேன். அவ்வப்போது சந்திக்கும் நபர்களையும், அவர்களுடன் பகிர்ந்து கொண்ட செய்திகளையும் வலையேற்றலாமே என்று திடீரென ஒரு சிந்தனை, அந்த சிந்தனையின் விளைவாகத் தான் இந்த முதல் பதிவு. உங்கள் அங்கீகாரம் கிடைத்தால் ஆனந்திப்பேன். விமர்சனங்கள் கிடைத்தால் வளர்வேன். பார்வையில் கூர்மையும், பேச்சில் நேர்மையுமாக புன்னகைக்கிறார் கவிஞர் காசி ஆனந்தன். வார்த்தைகளில் வீரியமடிக்க…
-
- 4 replies
- 4.4k views
-
-
புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகத்தின் கலை இலக்கிய பண்பாட்டு நிகழ்வுதளத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் ஒரு ஆற்றொழுக்கான மாற்ற நிலையினை அண்மைய காலங்களில் அனுபவிக்க கூடியதாக இருக்கிறது. ஆனால் அந்த மாற்ற நிலையானது புலம்பெயர் தமிழ் இலக்கிய தரத்தினை மேம்படுத்துகிறதா என்று நோக்கினால் அதற்கான பதில் ஒரு மௌனம் கலந்த பெருமூச்சாகவே இருக்கிறது. ஒரு வாசகனின் வெளிப்பார்வைக்கு ஒரு கவர்ச்சிகரமான உலகமாக தோற்றமளிக்கும் புலம்பெயர் ஈழத்தமிழ் படைப்பாளிகள் சமூகம் மிக கேவலமான பண்புசார் உத்திகளுடன் தான் இன்று தமக்கான தளத்தினை கட்டமைத்துள்ளது என்றால் அது மிகையில்லை. ஒரு குறிப்பிட்ட கால இயங்கு நிலை இழந்த அல்லது மறுக்கப்பட்ட ஒரு தரப்பினரும், தொடர்ந்து இயங்கு நிலையில் இருக்கும் ஒரு தரப்பினரும்…
-
- 4 replies
- 1.1k views
-
-
வைரமுத்துவும் மாயச்சூழலும் வா. மணிகண்டன் புகழ் ஒரு மாயச் சூழல். இழுத்துக் கொண்டேயிருக்கும். யாராவது நம்மைக் கவனிக்கத் தொடங்கும் போதே ஒரு பரபரப்புத் தொற்றிக் கொள்ளும். அதன் பிறகு அந்தப் புகழ் இன்னமும் பரவ வேண்டும் என மனம் விரும்புகிறது. அதற்கான காரியங்களைச் செய்யத் தொடங்குகிறோம். அந்த வெளிச்சம் ஒரு போதை. போதை குறையும் போதெல்லாம் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. எதையெல்லாம் செய்ய வேண்டும் என கணக்குப் போட்டு அதன்படி காய்களை நகர்த்துகிறோம். மீண்டும் தாங்கிப்பிடித்துவிட்டால் பிரச்சினையில்லை. இல்லையென்றால் ஒரு படி கீழே இறங்கவும் தயங்குவதில்லை. ஒரு படி இரண்டு படிகளாகி இரண்டு படிகள் என்பது மூன்று படிகளாகி எவ்வளவு வேண்டுமானாலும் கீழே இறங்கும் போதுதான் சந்தி சிரிக்கிறது. நமது பு…
-
- 4 replies
- 2.4k views
-
-
சின்ன அறை. சுவரில் பெருமாள், சமயபுரம் மாரியம்மன், ராமர், சீதை என்று ஏகப்பட்ட கடவுளர் படங்கள். சின்ன கட்டில். அதையட்டி மேஜை. சுற்றிலும் புத்தகங்கள். தமிழின் மகத்தான படைப்பாளி அசோகமித்திரனின் உலகம் இப்போது இவ்வளவுதான். ''சமீபத்தில் ஓர் இலக்கிய விழாவுக்குச் சென்றிருந்தேன். பேசி முடிக்கும்போது, 'இத்துடன் விடைபெறுகிறேன்...’ என்று சொன்னேன். விழாவில் இருந்த ஒரு கவிஞர் உடனே பதறிப்போய், 'நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும்’ என்று சொன்னார். இப்போது எனக்கு 81 வயது ஆகிறது. நூறாண்டு வாழ்வதைவிடக் கொடுமையான தண்டனை இருக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை...'' - கண்களை இடுக்கிச் சிரிக்கிறார். ''இந்த வயதில் இருந்து பார்க்கும்போது, வாழ்க்கை எப்படி இருக்கிறது?'' ''ரொம்பச் சோர்வாக இருக…
-
- 4 replies
- 803 views
-
-
இலங்கைக்கு உள்ளும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ்த்தேசியக் கருத்தாக்கம் பெண்ணியத்தை சிறைப்பிடித்து வைத்திருப்பதாக கூறுகிறார் ஈழத்தின் பெண்ணிய செயற்பாட்டாளர் நிர்மலா ராஜசிங்கம். இந்தியாவின் கூட்டுப் பாலியல் வல்லுறவில் கொல்லப்பட்ட பெண் தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் இந்திய அரசால் தடுக்கப்பட்ட சர்ச்சை தொடரும் பின்னணியில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஈழத்தமிழ்ப்பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் பலாத்கார பிரச்சனைகள் குறித்து பிபிசி தமிழோசையிடம் விரிவாக பேசிய பெண்ணிய செயற்பாட்டாளர் நிர்மலா ராஜசிங்கம் இந்த கருத்தை முன்வைத்தார். தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்த மற்றும் எடுத்துவரும் அரசியல் கட்சிகளானாலும் சரி, ஆயுதக்குழுக்களானாலும் சரி, பெண்ணை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கவே கடந்தகாலத…
-
- 4 replies
- 845 views
-
-
பத்திரிகையுலகப் பிதாமகர் ( சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள் - பகுதி - 1) அன்பு வாசகர்களே... இன்று, ஆகஸ்ட் 10-ம் தேதி, பத்திரிகையுலகப் பிதாமகர் சாவியின் (சா.விஸ்வநாதன்) நூற்றாண்டு. அதையொட்டி, அவரைப் பற்றிய 100 தகவல்கள், ஐந்து பகுதிகளாக இங்கே பதிவிடப்பட்டுள்ளது. முதல் பகுதிக்கான 20 தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது... 1) பத்திரிகையுலகப் பிதாமகர் சா.விஸ்வநாதன் என்கிற சாவி பிறந்தது 10.08.1916-ல்; அமரர் ஆனது 9.02.2001-ல். 2) காஞ்சி மகா பெரியவா அவ்வப்போது போய்த் தங்கும் கலவை என்னும் ஊரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது மாம்பாக்கம் என்னும் கிராமம். அங்கே சாமா சுப்பிரமணிய அய்யர், மங்களம் அம்மாள் தம்பதியின் புதல்வராகப் பிறந…
-
- 4 replies
- 3.9k views
-
-
நீங்கள் இளையராஜாவின் ரசிகரா… இசையின் ரசிகரா..? B.R. மகாதேவன் தமிழர்கள் குழந்தைகளைப் போன்றவர்கள். அவர்களுக்குப் பிடித்த விஷயத்தைப் பற்றி யாரேனும் ஏதேனும் நியாயமான சிறு விமர்சனத்தை முன் வைத்தால்கூட, பொம்மையைப் பறித்தால் அழும் குழந்தைகள்போல் கையையும் காலையும் உதைத்துக் கொண்டு அழுவார்கள். பிஞ்சுக் கைகளால் சட் சட்டென்று நம்மை அடிப்பார்கள். குழந்தைகளைப் போலவே தமிழர்களின் உலக அனுபவமும் வெகு குறைவு என்பதால் எதையும் சொல்லிப் புரியவைக்கவும் முடியாது. தமிழர்களின் இத்தகைய மனநிலை தெரிந்த பிறகும் சில உண்மைகள், சிலரால், சில நேரங்களில் சொல்லப்படுவதுண்டு. அப்படி ஓர் உண்மையைச் சொல்லும் முயற்சியே இது. தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே என்ற தாலாட்டுக்கும் லைஃப் ஆஃப் பை படத…
-
- 4 replies
- 1.2k views
-
-
எவராலும் கற்பனை செய்ய முடியாத நான் கிழக்கு இலங்கையின் சிற்றூர் ஒன்றில் 1982-ல் பிறந்த ஸர்மிளா ஸெய்யித் ‘சிறகு முளைந்த பெண்’ என்ற கவிதைத் தொகுப்பு ஊடாக நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் தனது தடத்தைப் பதித்தவர். தொடர்சியாக, புனைவுப் பிரதிகளை மட்டுமல்லாமல் அ-புனைவுப் பிரதிகளையும் அவர் முனைப்புடன் எழுதிக்கொண்டிருக்கிறார். முப்பதாண்டு கால ஈழப் போருக்குப் பின்னான காலத்தில், போரின் காயங்களோடும் வடுக்களோடு அலைந்துறும் மாந்தர்களையும் இலங்கையின் இனத்துவப் பிரச்சினைப்பாடுகளையும் மையமாக வைத்து ஸர்மிளா ஸெய்யித் எழுதிய நாவலான ‘உம்மத்’ இந்த வருடத்தின் தொடக்கத்தில் ‘காலச்சுவடு’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. சமகால அரசியற் பிரச்சினைகளிற்குள் சிக்கிக்கொள்ளாமல் லாவகமாக நழுவப் பார்க்…
-
- 4 replies
- 1.7k views
-
-
V விருது வெற்றியாளர் வைத்தியர் திரு சின்னையா தேவானந்தன்
-
- 4 replies
- 1.9k views
-
-
கலைஞன், திரு.அஜீவன் அவர்களுடனான உரையாடல் பகுதி 01 கலைஞன், திரு.அஜீவன் அவர்களுடனான உரையாடல் பகுதி 02
-
- 4 replies
- 2.7k views
-