வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
389 topics in this forum
-
தனிநாயகம் அடிகளார் & நூற்றாண்டு நினைவுக் கருத்தரங்கு கிருஷ்ண பிரபு லயோலா கல்லூரியும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அடிகளார் – 100 நினைவுக் கருத்தரங்கு என்ற முழுநாள் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன. அதனை முன்னிட்டுப் பல்வேறு அமர்வுகளில், தனிநாயகம் அடிகளார் தமிழ் மொழிக்கு ஆற்றிய அரும்பணிகளைக் குறிப்பிட்டுக் கல்விப்புலத்தில் இயங்கும் ஆய்வாளர்கள் பலர் கட்டுரைகள் வாசித்தார்கள். “தனது முப்பதாவது வயதில் தமிழ் படிக்க ஆரம்பித்திருந்தாலும், தமிழ்மொழியின் செழுமைக்கும் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கும் தனிநாயகம் அடிகளார் ஆற்றிய தமிழ்ப்பணி முக்கியத்துவம் வாய்ந்தது. எனினும் தனிநாயகம் அடிகளார் பணிகளைச் சுட்டும் ஆளுமைச் சித்தி…
-
- 0 replies
- 957 views
-
-
எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை - யோ. கர்ணனுடனான நேர்காணல் இணையத்தின் மூலம் எனக்கு அறிமுகமான யோ கர்ணனை இந்த வருடத்தின் ஆரம்பகாலப் பகுதியில் நான் தாயகம் சென்ற பொழுது நேரிடையாகவே சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பழகுவதற்கு மிகவும் இனிமையான இவர், நேரடி சந்திப்பின் பின்பு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவராகிவிட்டார். இங்கிருந்து வெளியாகும் ஆக்காட்டி சஞ்சிகைக்கு ஓர் நேர்காணல் ஒன்று தரமுடியுமா ??என்று நான் கேட்ட பொழுது ,உங்களுக்கு இல்லாத நேர்காணலா என்று மிகவும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். மின்னஞ்சல் மூலம், நான் அவரிடம் நடத்திய நேர்காணல். நேசமுடன் கோமகன் ************************************** யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஓரு மார்க்சீயரின் முன்னுரிமைகளை அவர் வாழ நேர்ந்த காலத்தின் சூழலே தீர்மானிக்கிறது * மே 2012 தொறான்ரோ பயணத்தையொட்டி கனடா சுயாதீனத் திரைப்படக் கழகத்தின் செயல்பாட்டாளரான ரதன் என்னுடன் மேற்கொண்ட நீண்ட உரையாடலின் பதிவு * கடந்த பல வருடங்களாக ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றீர்கள். ஒரு சக தமிழன் என்பதற்கு அப்பால் உங்களைத் தூண்டியவை என்ன? குழந்தைப் பருவத்திலிருந்தே எனது வாழ்க்கைப் பின்னணி என்பது பல்கலாச்சார-பல்மத-பல்சாதியச் சூழலால் ஆட்கொள்ளப்பட்டிருந்தது. எனது தந்தை கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர். எனது தாய் ஒரு பஞ்சாலைத் தொழிலாளி. எனது தாய்தான் எமது குடும்பத்தின் ஆதாரம். ஒரு குடும்பமாக நாங்கள் தெருவுக்கு வராமல் இருந்ததற்கு அவரது கடுமையான உழைப்ப…
-
- 1 reply
- 1.8k views
-
-
பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் "வேலணை வாழ் வித்தகரே' என உயர்திரு சாலை இலந்திரயன் வேலணை அம்மன் கோவில் பாடசாலையில் இடம்பெற்ற திருமறை மகாநாட்டில் ஒலித்த கவி வரிகள் என் இளமைக் காலத்திலிருந்து இன்றும் ஒலிப்பதுண்டு... ஓவியர் நாதனின் கைவண்ணத்தில் உருவான மண்டப முகப்பு அலங்காரம் இன்னும் கண்களில் தெரியுது. பண்டிதர் க.பொ.இரத்தினம் அவர்களுடன் இணைந்து தமிழ் இலக்கியப் பற்றுமிக்க "தில்லைச்சிவன்' இளைஞராக ஓடித்திரிந்து விழா ஏற்பாடுகளைக் கவனித்தார். நாம் அவர்பின் திரிந்து உதவி செய்ததும் இன்னும் நினைவுகளில் நிழலாடுகின்றன. சரவணையில் பிறந்த அமரர் சிவசாமி மாஸ்ரர் பன்முக ஆளுமை கொண்டவர். வெள்ளை வேட்டி தரித்த ஆசிரியர்களின் இளம் தலைமுறையினராகவும், பலமாற்றுச் சிந்தனைகளுக்கு வித்திட்டவராகவும்…
-
- 6 replies
- 1.3k views
-
-
இலங்கைப் பேராசிரியர் க.கைலாசபதி(05.04.1933-06.12.1982) : முனைவர் மு.இளங்கோவன் ஈழத் தமிழ் இலக்கியத்தினதும் திறனாய்வினதும் அடையாளமாகக் கருதப்படுபவர் கைலாசபதி. மார்க்சியப் பார்வையில் இலக்கியத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர். ஒரு புறத்தில் சைவ சமய மரபுக்குள் முடங்கியும், மறுபுறத்தில் சாதிய அடையாளங்களுக்குள் அழைத்தும் வரப்பட்டுக்கொண்டுமிருந்த தமிழ் இலக்கியத்திற்கு முற்போக்கு மரபை அறிமுகப்படுத்தியவர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முதலாவது துணை வேந்தர். கைலசபதி தொடர்பான குறித்துக்காட்டத்தக்க அறிமுகம் தென்னிந்தியவிலிருந்து கிடைப்பதற்கு இக்கட்டுரை துணை புரிகிறது. முனைவர் இளங்கோவனின் அறிமுகக் கட்டுரை தமிழ் இளைய சமூகத்திற்குக் கைலாசபதியை மீள அறிமுகம் செய்கிறது. கைலாசபதியின…
-
- 0 replies
- 895 views
-
-
வர்ணகுலசிங்கம் மாஸ்ரர் பற்றிய நினைவு கொள்ளல் கலாநிதி. சி. ஜெயசங்கர் - வர்ணகுலசிங்கம் மாஸ்ரர்என்றபெயர் மிக இளவயதிலிருந்தேஎனக்குப் பரிச்சயமானது. எனது சகோதரிகள் இருவர் இசைக் கலைஞர்களாகவும், எனதுதந்தையார் இசைஆர்வலராகவும் இருந்தமை இந்தவாய்ப்பைத் தந்திருக்கின்றது. ந. சண்முகரத்தினம் மாஸ்ரர், திலகநாயகம் போல் மாஸ்ரர், பொன் புஸ்பரத்தினம் அவர்கள், ச. சண்முகராகவன் அவர்கள் எனதலை சிறந்த இசைக் கலைஞர்கள் வகுப்பெடுப்பதும்;, இசைச் கச்சேரிகளுக்கென பயிற்சிகள் நடப்பதும் எனது வீட்டுச் சூழல். மிருதங்கவித்துவான் இ. பாக்கியநாதன் அவர்களிடம் எனதுசகோதரன் மிருதங்கம் பழகியமை, சர்வேசரசர்மா அவர்களது வீட்டில் வருடாவருடம் நிகழும் நவராத்திரி இசைக் கச்சேரிகள், இசைக் கலைஞர்களின் கலந்துரையாடல்கள் என இ…
-
- 0 replies
- 798 views
-
-
ஈழ மண்ணில் பிறந்து, ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து, பெரும்பான்மை வருடங்களைத் தமிழ்நாட்டில் தமது அயராத இலக்கியப் பணியில் கழித்த எஸ்.பொ என்னும் எஸ்.பொன்னுத்துரை நவம்பர் 26-ம் தேதி காலமானபோது ‘இறுதியில் இந்தச் சாலையில்தான்/ வந்தாக வேண்டும் நான்/ என நன்றாகத் தெரியும்/ ஆனால்/ இன்றுதான் அந்த நாள் என்று/ எனக்குத் தெரியாது நேற்று' என்ற ஜென் கவிதைதான் நினைவுக்கு வந்தது. எழுத்துப் பணி ஒரு போர் ஈழத்தின் ‘இலக்கியப் பொன்னு' என்று செல்லமாக அழைக்கப்படும் எஸ்.பொ.வின் மரணம் முதுமையின் நிசர்சனம் சுமந்தாலும், இழப்பின் துயர் அதனோடு மல்லுக்கு நிற்கிறது. தன்னை மூன்றாம் உலகப் படைப்பாளியாக அறிவித்துக் கொண்ட எஸ்.பொ., ஈழத்தின் இலக்கியத்தை முன்னெடுத்துச் சென்றதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் …
-
- 0 replies
- 598 views
-
-
நவம்பர் 29: கலைவாணர் பிறந்த தினம் தமிழ் சினிமாவின் முதல் சமூகப்படமான ‘மேனகா’வில் மொட்டைத் தலையுடன் அறிமுகமான என்.எஸ்.கே. எத்தனை சாதனைகள் படைத்திருந்தாலும் காலம் எல்லோரையும் பொக்கிஷமாகப் பொத்தி வைத்துப் பாதுகாப்பதில்லை. நூறாண்டு தமிழ்த் திரைக்கு ஆரம்ப அஸ்திவாரத்தைப் பலமாகப் போட்டுத்தந்த ஜாம்பவான்களில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தமிழ் சினிமா மறக்காத பொக்கிஷம். நகைச்சுவையைச் சமூக மாற்றத்துக்காகப் பயன்படுத்த முனைந்த முதல் முன்மாதிரி. ஒப்புமையும் மாற்றும் இல்லாத அசல் கலைஞன். ‘சிரிப்பு என்பது வியாதிகளை விரட்டும் மருந்து’ என்று மருத்துவர்கள் கண்டறிந்து சொல்லும் முன்பே, மக்களுக்குப் புரிய வைத்தவர். தனது முற்போக்குச் சிந்தனைகளால், கட்டியங்காரனுக்கும் கோமாளிக்கும் நாடக மேடை…
-
- 0 replies
- 688 views
-
-
கமல்- முடிவிலா முகங்கள் ஜெயமோகன் கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் ஆடிக்கொண்டிருந்தார். உண்ணாயி வாரியர் எழுதிய கதகளி நாடகம், நளதமயந்தி. நளன் தமயந்திக்கு அன்னப்பறவையை தூதனுப்பும் காட்சி. அன்னத்தை மென்மையாக, மிகமிக மென்மையாக தொட்டு எடுக்கிறான். வருடுகிறான். இதயத்தோடு சேர்த்து வைக்கிறான். உருகுகிறான், சிலிர்க்கிறான்,கொஞ்சுகிறான், அழுகிறான். பறவை திரும்பத்திரும்ப அவனிடமே வருகிறது. மூச்சுத்திணற ஓடிப்போய் எடுக்கிறான். ஏன் போகவில்லை என்ற பதற்றம், நல்லவேளை போகவில்லை என்ற ஆறுதல் விழித்துக்கொண்டேன். பதினெட்டு வயதில் நான் திருவட்டாறு ஆலயத்தின் களியரங்கில் பார்த்த கதகளி துல்லியமாக நினைவுக்கு வந்தது. அதை எண்ணியபடி இருளில் கிடந்தேன்.இன்னொருநினைவு. நான் என் என் பிற்கால மனைவியான அரு…
-
- 0 replies
- 1.4k views
-
-
திருமாவளவன். ஈழத்தின் வளம்பொருந்திய வருத்தலைவிளான் (வலிவடக்கு தெல்லிப்பளை) கிராமத்தின் மண்வாசனையோடுயுத்தம் கனடாவுக்கு தூக்கியெறிந்த ஒரு ஆளுமை. இடதுசாரித்துவ பின்னணியுடன் ஒரு நாடகக் கலைஞனாக கிராமத்தோடு இயைந்திருந்த அவரை கவிஞனாக்கியது புலப்பெயர்வு வாழ்க்கை. பனிவயல் உழவு, இருள்யாழி, அஃதே இரவு அஃதே பகல், முதுவேனில் பதிகம் என்ற நான்கு கவிதைத்தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகள், பத்தி எழுத்துகள், அரங்குசார் நிகழ்வுகள் எனத் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பவர். இவரின் இயற்பெயர் கனகசிங்கம் கருணாகரன். யாழ் அருணோதயாக் கல்லூரி மற்றும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் பழையமாணவர். புலம்பெயர் வாழ்வின் துயரப்பொழிவினை ஊடுகடத்தும் கவிதைகள் அதிகம் இருந்தாலும் அவை மெல…
-
- 4 replies
- 2.8k views
-
-
இவ்வார ஆனந்தவிகடனில் "உயிர்த்தெழும் சாட்சியங்கள்" என்ற தலைப்பில் ஈழத்து படைப்புகள் பற்றிய பார்வை (Facebook)
-
- 1 reply
- 951 views
-
-
மேற்குறித்த நாடகத்தனமான தலைப்பு உங்களைப் பிழையாகவழி நடத்த அனுமதிக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். குழந்தை சண்முகலிங்கம் அவர்கள் இலங்கைத் தமிழ் நாடகஉலகின் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர். ”குழந்தை”என்ற பெயரில் அறியப்படும் குழந்தை சண்முகலிங்கம்அவர்கள் பலருக்கு 83 வயதாகும் ஒரு முதியவர். நாடகம் பற்றிய புரிதல்கள் அற்ற வேறு பலருக்கு அவர்ஆரவாரமற்ற தன்னடக்கம் நிரம்பிய ஒருவர். உண்மையிலும் குழந்தை சண்முகலிங்கம் என்ற பெயர்இலங்கைத் தமிழ் நாடக உலகுடன் ஒன்றி விட்ட பெயர். இலங்கைத் தமிழ் நாடக உலகின் கடந்த தசாப்தங்களைஅவரின் பெயரை விட்டு விட்டுப் பேசமுடியாது. புகழ்ச்சியையோ விளம்பரத்தையோ விரும்பாத அவர் இந்தநேர்காணலை ஏற்றுக்கொண்டிருந்தார். எப்படி நீங்கள் “குழந்தை” என்னும் வித்தியாசமானதொரு …
-
- 0 replies
- 5k views
-
-
ஈழத்து கலைத்துறையில் மிகவும் பிரபலமான நடிகர்+இயக்குனர் மன்மதன் பாஸ்கி. இவரின் குறும்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவை. இவர் நம் ‘சினி உலகம்’ நேயர்களுக்காக பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார். இதோ உங்களுக்காக.... 1)உங்களை பற்றியும், சினிமா துறைக்கு வந்ததை பற்றியும் சொல்லுங்கள்? முதலில் ஒரு பாடகராக தான் என் சினிமா பயணத்தை தொடங்கினேன். பின் படி படியாக ஒவ்வொறு துறையிலும் பயணிக்க ஆரம்பித்தேன். 96ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என் பயணம். பாரிஸில் இருக்கும் பொன்குமரன் என்பவர் தான் என்னை இந்த துறைக்கே அறிமுகப்படுத்தினார். நான் முதல் இயக்கிய குறும்படம் நதி. இக்குறும்படம் நிறைய இடங்களில் திரையிடப்பட்டது. 2)நீங்கள் எத்தனை குறும்படங்களை இயக்கிய இருக்கிறீர்கள…
-
- 1 reply
- 934 views
-
-
பதிவுகளையும் அவற்றிற்கான பின்னூட்டங்களையும் கூடுதலாகப் பதிந்து, பச்சைப் புள்ளிகளையும் அதிகம் பெற்ற யாழ் உறவுகளை வாழ்த்துவது உறவுகளின் ஆர்வத்தை ஊக்குவிப்பதோடு மனதுக்கு மகிழ்வையும் தரும் நிகழ்வாகும். அந்தவகையில் மன மகிழ்வை நானும் பெற்றேன். என்னை வாழ்த்திய விதமும் புதுமையாக இருந்தது. வாழ்துக்கான படங்களையும், அவற்றுக்கான கவிகளையும் பார்த்தவுடன் மனம் துள்ளவே செய்தது. ஆனாலும் நான் துள்ளவில்லை!. ஏன் துள்ளவில்லை? என்ற உறவொன்றின் கேள்வியும் எழுந்து நின்றது. யோசித்தேன்! நான் ஏன் துள்ளவில்லை? திரும்பத் திரும்ப படங்களையும், கவிகளையும் புரட்டிப் பார்த்தபோது என் சிந்தனையில் எழுந்தவற்றை இங்கு தருகிறேன். http://i60.tinypic.com/nwc9kw.gif யாழ்களத்தின் ஒளியைத்தான் கோபுரம் பரப்பியது…
-
- 6 replies
- 1.3k views
-
-
பாச மலர்' படத்தில் கணவன் - மனைவியாக ஜெமினி, சாவித்திரி 'காலம் மாறிப்போச்சு' படத்தில் ஜெமினி, அஞ்சலி தேவி திரையில் கதாநாயகியைக் காதலிப்பதில் எம்.ஜி.ஆர். கைதேர்ந்தவராக இருந்தார். பிறகு மெல்ல மெல்ல வளர்ந்து வாள் சண்டை, குஸ்தி என ஆக்ஷன் காட்சிகளில் அதிகம் ரசிக்கப்படும் நாயகனாக உருப்பெற்றார். சிவாஜியோ உணர்ச்சிகரமான நடிப்புக்காக உச்சிமுகரப்பட்டார். இந்த இரண்டு ஜாம்பவான் நாயகர்கள் ஜம்மென்று தங்கள் ராஜபாட்டையில் பயணித்துக்கொண்டிருந்தபோது உருகும் காதலனாக, நொறுங்கிய கணவனாக உள்ளே நுழைந்தவர்தான் ஜெமினி கணேசன். இந்தியாவின் மிக உயரிய விருந்தான பத்மஸ்ரீயைத் தன் புகழின் உச்சியிலேயே (1971) பெற்றுக்கொண்டவர் ‘காதல் மன்னன்’. கேஸ்டிங் உதவியாளர் சுதந்திர வேட்கை சுள்ளென்று சூடு பறந…
-
- 1 reply
- 1.9k views
-
-
இசை மேதை யானிக்கு இன்று 60-வது பிறந்தநாள். யானியின் பெயரைக் கேள்விப்படாதவர்கள் இருக்கலாம். ஆனால் அவரது இசையைக் கேட்டிராதவர்கள் யாரும் இருக்க முடியாது. உலகம் முழுவதும் 2 கோடிக்கும் அதிகமாக அவர் ஆல்பங்கள் விற்பனையாகிச் சாதனை படைத்துள்ளன. உலகின் எந்தத் தேசத்தின் திரையிசையிலும் யானியின் தாக்கம், மெட்டுகளாகவும் பின்னணி இசையாகவும் பெருக்கெடுத்து வழிந்தோடியபடியே இருக்கிறது. தமிழ்த் திரையிசையில் யுவன், ஜி.வி. பிரகாஷ் இருவரிடமும் யானியின் சாயல்கொண்ட இசைக் கீற்றுக்கள் மின்னுவதைக் காண முடியும். 1997-ல் தாஜ்மஹால் முன் தொடர்ச்சியாக 3 இரவுகள் நேரடி இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார் யானி. அதன் பிறகு 17 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டுதான் சென்னையில் மாபெரும் இசை நகழ்ச்சி ஒன்றை அரங்கேற்றி இந்தியா…
-
- 1 reply
- 690 views
-
-
எம்.எஸ்.எஸ். பாண்டியன் யார் வரலாறு? இந்தியாவின் பண்டைய இலக்கியங்கள் மட்டுமல்ல, தேசியவாதிகளால் முன்னிறுத்தப்படும் இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறும்கூட மேட்டுக்குடியினரின் ஆதிக்க வரலாறே என்றார் பெரியார். மேல்சாதியினர், தங்கள் தலைமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் சவால்களைக் கொடுமையாக அடக்குவதும், முடியாத கட்டத்தில் எதிரிகளோடு இணங்கிப் போவதுமே இவ்வரலாறு என்றுரைத்தார். இந்த வரலாற்றை இந்தியாவின் பழம்பெருமையெனத் தொடர்ந்து சொல்லி வருவதன் மூலம் நிகழ்காலத்திலும் அடித்தட்டு மக்களை அடக்கிவைக்க முடிகிறது என்பது பெரியாரின் கருத்து. பழமை மறையவில்லை; இன்றும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது; எல்லோருக்கும் சுதந்திரம், சமதர்மம் என்பதை மறுக்கிறது; எனவே தற்சார்புடைய குடியுரிமை வழங்கும்…
-
- 0 replies
- 711 views
-
-
சமீபத்தில் இசையமைப்பாளராக புதிய அவதாரம் எடுத்த ‘டிரம்ஸ்’ சிவமணி, தற்போது குடும்ப வாழ்வில் நுழையும் முடிவிற்கு வந்துள்ளார். சிவமணியின் இசைக்குழுவில் இடம்பெற்றிருக்கும் ரூனா ரிஸ்வி என்ற பின்னணிப் பாடகியை சிவமணி வருகிற நவம்பர் 10ஆம் தேதி மும்பையில் மணக்கவிருக்கிறார். சிவமணி இசையமைத்த அரிமா நம்பி திரைப்படத்தில் ரூனா ரிஸ்வி ஒரு பாடல் பாடியிருக்கிறார். நவம்பர் 10ஆம் தேதி திருமணம் நடப்பதைப் பற்றி மட்டுமே சிவமணி தெரிவித்தார். பாடகி ரூனா ரிஸ்வி, பிரபல கசல் பாடகர் ராஜ்குமார் ரிஸ்வியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. - http://thinakkural.lk/article.php?cinema/doglkw6ivz5152876e1c590216259pirsl3b1a0e95808168e1a8ff89zgmya#sthash.ejpnRsHx.dpuf
-
- 1 reply
- 2.1k views
-
-
சந்தோஷம் என்றுமே சலிக்காத பாடல்தான்! வாலி பிறந்த நாள்: 29 அக்டோபர், 1931 கோடிக் கணக்கான மக்களின் உணர்வுக் கடலில் கரைந்துகொண்டே தனது தனித்துவ ஆற்றலையும் தக்கவைத்துக்கொண்டவர் வாலி. தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை அரசியல், வரலாறு, பாலியல், சமய நம்பிக்கைகள் என்ற அனைத்து உணர்வுகளும் பொழுது போக்கு வடிவமான சினிமாவுடன் பின்னிப் பிணைந்தவை. இயல்பான பாலியல் வேட்கைகள்கூடத் தொடர்ந்து ஒடுக்கப்படும் நம் சமூகம், தனது ரகசிய ஆசைகளைத் தொடர்ந்து சினிமா வழியாகவே தீர்த்துக்கொள்கிறது. சாதாரண ஆண்-பெண் நட்புக்கும், காதல் உறவுகளுக்கும் தடைவிதிக்கும் தமிழகம்தான் 24 மணிநேரமும் ஊடகங்கள், நவீனத் தொலைத்தொடர்புச் சாதனங்கள் வழியாகப் பாலுறவைக் கனவு கண்டுகொண்டே இருக்கிறது. வழிபாடு, வன்ம…
-
- 0 replies
- 691 views
-
-
நேர்காணல்: போலிகளைக் கண்டு ஏமாந்துவிடாதீர்கள் - யோ. கர்ணன் ஞாயிறு தினக்குரலில் வெளியானது. நேர்கண்டவர் மல்லிகா. கேள்வி- எழுதத் தொடங்கிய ஆரம்பகாலம் பற்றிச் சொல்லுங்கள்? பதில்- நான் பிறந்ததும் வளர்ந்ததும் புத்தகங்களிற்கு மத்தியில்த்தான். எங்கள் வீட்டில் நிறைய இந்தியசஞ்சிகைகளின் சேமிப்பிருந்தது. பழைய ஆனந்தவிகடன், கல்கி, குமுதங்களில் வந்த தொடர்கதைகள் எல்லாம் தொகுத்து கட்டப்பட்டிருந்தன. வரலாற்று நாவல்கள் எல்லாம் இருந்தன. அதனால் சிறிய வயதிலேயே வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. நிறைய வாசிப்பவர்கள் எல்லோரும் எழுதிப்பார்ப்பார்கள். அப்படித்தான் பாடசாலை நாட்களில் அம்புலிமாமா பாணிக்கதைகள் சில எழுதினேன். அவற்றை கொப்பியில் எழுதி சிறிய சிறிய புத்தகங்களாக தொகுத்தும் வைத்தேன். …
-
- 1 reply
- 932 views
-
-
சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் 1927 ஜூன் 24ல் சிறகை விரித்து, சிகாகோ மண்ணில் 1981 அக்.,17ல் வாழ்வை முடித்துக் கொண்டவர். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தாலும், பிறருக்கு எட்டாத கருத்துக்களை கொட்டியவர். 'பத்து வயதானதொரு பாலகன் உன் சன்னதியில் பாடியதும் நினைவில் இலையோ முத்து என இட்ட பெயர் முத்தாக வேண்டுமென முறையீடு செய்ததிலையோ! தமிழில் ஒரு கவிமகனை சிறுகூடல் பட்டிதனில் தந்த மலையரசித் தாயே'- என மலையரசி கோயிலில் கவிதை வடித்தவர். அப்போது அவரது வயது பத்து. அவர் கவிஞர் கண்ணதாசன். வேலை கேட்டு ஒரு பத்திரிகை அலுவலகம் சென்றவரிடம், 'ஏதாவது இதழ்களில் எழுதி இருக்கிறீர்களா' என கேட்க, 'ஆமாம்' என்றார் கவிஞர். 'என்ன பெயரில் எழுதுகிறீர்கள்' என சட்டென கேட்க, கொஞ்சமும் தயக்கமின்றி, '…
-
- 7 replies
- 6.2k views
-
-
என் சிலேட்டுப் பருவத்தில் ஓர் உறவினரைப் போலவே சினிமா வழியாக எனக்குப் பரிச்சயமானார் சிவாஜி கணேசன். தஞ்சாவூர் ஜில்லாவில் முடிகொண்டான் என்கிற எங்கள் கிராமத்திலிருந்து ஐந்து மைல்கல் தொலைவில் நன்னிலம் என்கிற ஊரைத் தொட்டுக்கொண்டு இருந்தது மணவாளம்பேட்டை. அங்கு இருந்த லட்சுமி டாக்கீஸில்தான் நான் முதன்முதலாக சிவாஜியை பாபுவாகப் பார்த்தேன். “டேய்… இன்னிக்கு உன்னை சினிமா கொட்டாய்க்கு அழைச்சுட்டுப் போறேன்’’ என்று காலையிலேயே அப்பா சொல்லிவிட்டார். மனசு குதி யாட்டம் போட ஆரம்பித்துவிட்டது. புத்தகங்களுக்கு லீவு கொடுத்து விட்டு, அப்பாவின் டைனமோ (லைட்) வைத்த சைக்கிளை எண்ணெயெல் லாம் போட்டு நறுவிசாகத் துடைத்து வைத்தேன். சைக்கிளில் லைட் இல்லாமல், அதிலும் டபுள்ஸ் போனால் போலீஸ் பிடிக்கிற சமயம…
-
- 2 replies
- 1.6k views
-
-
http://www.youtube.com/watch?v=f2RlmTUM7sY
-
- 0 replies
- 784 views
-
-
கே.பி.எஸ். பிறந்த நாள்: 11.10.1908 தமிழிசை என்ற மாயக் கயிற்றால் தமிழகத்தைக் கட்டிப்போட்டவர் கே.பி.எஸ். இந்திய அளவில் நடிப்புக்காக ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தை முதன்முதலில் பெற்ற நடிகை; இந்தியாவிலேயே முதன்முதலாக சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை கே.பி.சுந்தராம்பாள்தான்; காந்தியடிகளே நேரில் வந்து தேசச் சேவைக்குப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஒரே நடிகை கே.பி.எஸ்தான்; தமிழ்நாட்டில் அதிக அளவு இசைத்தட்டு விற்றதும் கே.பி.எஸ். பாடிய பாடல்களுக்குத்தான். இப்படி எத்தனையோ சாதனைகளைச் செய்தவர் கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள். நாடக உலகில் ஆண்களுக்கு இணையாகப் பாடி, நடித்துப் பலரை மேடையை விட்டே விரட்டியவர் அவர். “15 வயதுக்குள்ளாகவே சுந்தராம்பாள் ‘அயன் ஸ்திரிபார்…
-
- 6 replies
- 4.9k views
-
-
அண்மையில் கலையும் ,படைப்பும் சம்பந்தமான ஒரு பதிவை சில கேள்விகளுடன் பொது வெளியில் கலைஞ்சர்கள் மத்தியில் கேட்டிருந்தேன் .எம் கள உறவு வல்வை சகாறா அக்கா மிக அற்புதமான ஒரு பதிவை பதிந்திருந்தார் அதை கள உறவுகள் உங்களோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அதல் இங்கே பதிவிடுகிறேன் .நன்றி சாகாறா அக்கா . எம்முடைய படைப்புகளை நாம் பெரும் சோதனைகளைச்சந்தித்தே வெளியே கொண்டு வர வேண்டும் என்பது மறுக்கமுடியாத உண்மை. குறுகிய மனம் படைத்த சூழலில் வாழும் கலைஞன் பெரிதாக எதனையும் சாதித்துவிடமுடியாது. பொருளாதாரப்பலமும் புறச்சூழலின் ஆதரவும் கணிசமாக இருந்தால் கண்ணாடிக்கற்களும் வைரங்களாக யொலிக்கலாம் அன்றில் போராட்டங்களில் யெயிக்கும் மன ஓர்மம் இருக்கவேண்டும் தளம்பல்களும் எம்மை எம்முடைய த…
-
- 1 reply
- 937 views
-