Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. சென்னை: பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் அசோக்குமார் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் இந்த அசோக்குமார், ஊரப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை மரணம் அடைந்தார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜானி, கமல்ஹாசன் நடித்த வெற்றிவிழா, பிரசாந்த் நடித்த ஜீன்ஸ் உள்பட பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக அசோக்குமார் இருந்துள்ளார். மேலும், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கில படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தின் ஒளிப்பதிவிற்காக தேசிய விருதை அசோக்குமார் பெற்றுள்ளார். மறைந்த அசோக்குமாருக்கு, மனைவி மற்றும் 4 மகன்கள் உள்ளனர். http://news.vikatan.com/article.php?module=news&aid=3381…

  2. கப்டன் குணாளனுக்கு வீரவணக்கங்களும் கண்ணீர் அஞ்சலிகளும்............... கப்டன் குணாளனின் வித்துடல் விதைப்பு [ த.இன்பன் ] - [ ஓகஸ்ட் 11, 2007 - 06:04 AM - GMT ] கடந்த ஏழாம் நாள் வவுனியா நகரப்பகுதியில் சிறிலங்கா படையினரால் மறிக்கப்பட்டவேளை தற்காப்பு அங்கியை வெடிக்க வைத்து வீரச்சாவைத் தழுவிய கப்டன் குணாளனின் வித்துடல் முழு படைய மதிப்புடன் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மூங்கிலாறு மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மாவீரர் மண்டபத்தில் இம் மாவீரரின் வித்துடல் வைக்கப்பட்டு வீரவணக்கக் கூட்டம் நடைபெற்றது. பொதுச்சுடரினை போராளி பிரபா ஏற்றினார். வித்துடலுக்கான ஈகைச்சுடரினை தளபதி ஜனார்த்தனன் ஏற்றினார். மலர் மாலையை போராளி பேரின்பம…

    • 1 reply
    • 1.4k views
  3. மதுரை சிந்தாமணி இழப்பு! மதுரை: மதுரை மக்களின் ஒரு முக்கிய அடையாளம் சினிமா ரசனை. சினிமாவை ரசிக்காத, ரசிக்க முடியாத மக்களை மதுரையில் பார்ப்பது அரிது. அப்படிப்பட்ட மதுரையில் சினிமா தியேட்டர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கும்.? மதுரையில் உள்ள ஒவ்வொரு தியேட்டருக்கும் ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கும். ஒவ்வொரு தியேட்டர் குறித்தும் பக்கம் பக்கமாக பேசிச் சிலாகிக்கக் கூடிய அளவுக்கு கதைகள் இருக்கும். அப்படிப்பட்ட தியேட்டர்களில் ஒன்றுதான் சிந்தாமணி. 'அம்சவல்லி பவனி'ல் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, சிந்தாமணிக்குப் போய் செகண்ட் ஷோ பார்க்காத மதுரைக்காரர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்ட சிந்தாமணி தியேட்டர் தற்போது உடைபட்டுக் கொண்டிருக்கிறது. மது…

  4. நடிகர், வினு சக்கரவர்த்தி காலமானார்! உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல குணசித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி இன்று காலமானார். அவருக்கு வயது 72. குரு சிஷ்யன்', 'அண்ணாமலை' உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் வினு சக்ரவர்த்தி (72). உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். 1945 ஆம் ஆண்டு உசிலம்பட்டியில் பிறந்தவர் வினுசக்கரவர்த்தி. தம…

  5. நாளையுடன் (29-April-2009) டி.சிவராம் அண்ணா கொல்லப் பட்டு நான்கு வருடங்கள் முடிவடைகின்றன. மிகச் சிறந்த இராணுவ பத்தி எழுத்தாளராகவும், தமிழ் தேசியம் தொடர்பாக பல பங்களிப்பை ஆற்றியவருமான டி.சி யின் இழப்பு ஏற்படுத்திய வெற்றிடம் (vacuum) இன்னும் நிரப்பப் படாமல் எம் சமூகத்தில் இருப்பது வேதனையான விடயம். 70 களில் சிங்கள இனவாதம் யாழ்ப்பாணத்தில் நூல் நிலையம் எரித்து ஆரம்பித்து வைத்த 'தமிழ் புத்திஜீவிகளை, தமிழ் புலமைசார் தளத்தினை அழிக்கும் படலம்' குமார் பொன்னம்பலம் அவர்களின் கொலையுடன் மீண்டும் 2000 களில் புத்துயிர்ப்பு பெற்று டி.சிவராம் அண்ணாவையும் காவு கொண்டு இன்று பலரை தினம் தினம் கொன்று கொண்டு வருகின்றது. கிழக்கு பல்கலைகழக உபவேந்தர், விரிவுரையாளர்கள் என நீளும் இந்த பட்ட…

  6. சிரேஷ்ட ஊடகவியலாளர் நல்லதம்பி நெடுஞ்செழியன் காலமானார் சிரேஷ்ட ஊடகவியலாளர் நல்லதம்பி நெடுஞ்செழியன் காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அன்னார் தனது 65 ஆவது வயதில் நேற்று(செவ்வாய்கிழமை) காலமானார். இலங்கையின் தமிழ் ஊடகத்துறையில் நடுநிலை செய்தியாளராகவும், சர்வதேச செய்தி அறிக்கையிடலின் சிறப்புத் தேர்ச்சி பெற்றவராகவும் அன்னார் அளப்பரிய பங்காற்றியுள்ளார். பல்வேறு தமிழ் பத்திரிகைகளில் சிரேஷ்ட ஊடகவியலாளர் நல்லதம்பி நெடுஞ்செழியன் எழுதிய கட்டுரைகள் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தன. http://athavannews.com/சிரேஷ்ட-ஊடகவியலாளர்-நல்ல/

  7. வாகன விபத்தில் போராளி சாவடைந்துள்ளார் மட்டக்களப்பு புலிபாய்ந்த கல் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில், போராளி ஒருவர் சாவடைந்துள்ளார். லெப்.கேணல் வீமன் என்றழைக்கப்படும், திருமலை மூதூர் இறால்குழி பகுதியை சொந்த இடமாகக் கொண்ட நடராஜா அன்பழகன் எனப்படும் இந்த மாவீரரின் வித்துடல், இன்று பகல் கொக்கட்டிச்சோலை இராமக்கிருணமி~ன் பாடசாலையில், மக்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு வீர வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இதனை தொடர்ந்து இன்று மாலை தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட மாவீரரின் வித்துடல், முழுமையான வீர மரியாதைகளுடன் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  8. பொறியியலாளர் சேந்தனின் சமூக அர்ப்பணிப்பு Ahilan Kadirgamar on June 21, 2020 திரு. வீரகத்தி சேந்தன் ஒரு பொறியியலாளர் மற்றும் முற்போக்கு புத்திஜீவி, அவர் தனது 71வது வயதில், ஜூன் 12, 2020இல் இயற்கையெய்தியமை தமிழ் சமூகத்திற்கு ஒரு பெரும் இழப்பு. அவர் தனக்கென புகழ் தேடாது எளிமையாக வாழ்க்கையை முன்கொண்டு போனதுடன் தன் அறிவையும் திறன்களையும் ஆழமாக வளர்த்து அவற்றை மக்களுக்காகப் பயன்படுத்திய ஒருவர். இவருடைய அர்ப்பணிப்பு தமிழ் சமூகத்தின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையூட்டுவதாயும், இளம் தலமுறையினருக்கு ஒரு முன்னுதாரணமாகவும் அமையும். பண்டிதர் வீரகத்தியின் மகனான சேந்தனுடைய உரையாடல்கள் ஒரு கவிஞனுடைய ஆழமான இல…

  9. பேராசிரியர் கா.சிவத்தம்பி: புதிய வார்த்தை அ.முத்துலிங்கம் எம். ஏ. நுஃமானிடமிருந்து ஒரு மின்னஞ்சல் இன்று வந்தது. பேராசிரியர் கா. சிவத்தம்பி காலமானார். கடந்த 25 வருடங்களாக நான் அவரைக் காணவில்லை. அவருடன் தொலைபேசியில் உரையாடி 15 வருடங்கள் ஓடிவிட்டன. கடைசிக் கடிதம் எழுதி 10 வருடம் இருக்கும். ஒரு காலத்தில் எவ்வளவு அணுக்கமாக அவருடன் இருந்தேன் என்பதை நினைத்தபோது மனம் கனத்தது. காலை ஆறு மணி இருக்கும். ஒடுக்கமான மாடிப்படிகளில் ஏறி ஓர் அறையின் கதவைத் தள்ளுகிறான் இளைஞன். அவனுக்கு 19, 20 வயதிருக்கும். வழக்கம்போல கதவு பூட்டப்பட்டிருக்கவில்லை. திறந்து உள்ளே சென்றால் அங்கே இரண்டு கட்டில்களில் இரண்டு பேர் தூங்குகிறார்கள். இளைஞன் அங்கேயிருந்த கதிரை ஒன்றில் அமர்ந்து கொள்க…

  10. அஞ்சலிக்குறிப்பு: யுகமாயினி சித்தன்!… முருகபூபதி. கலை, இலக்கியத்தில் பல்துறை ஆற்றல் மிக்க படைப்பாளி யுகமாயினி சித்தன் தமிழக – இலங்கை – புகலிட எழுத்தாளர்களின் உறவுப்பாலமாக திகழ்ந்தவரும் விடைபெற்றார் முருகபூபதி. “பல மொழிகளிலும் ஒருவரது படைப்பு மொழிபெயர்க்கப்பட்டு நூலுருவில் வெளியாவதும் ஒரு வகையில் படைப்பாளிக்கு கிட்டும் அங்கீகாரம்.” எனச்சொன்னார் நாமக்கல் கு. சின்னப்பபாரதி. என்னருகில் அமர்ந்திருந்த யுகமாயினி சித்தன் உடனே அதனை மறுத்துரைத்தார். “மொழிபெயர்ப்பில் ஒரு நாவல் வெளியானால் அதனை இலக்கிய அங்கீகாரம் என எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஒரு நாவல் சர்வதேச தரத்தில் எழுதப்பட்டால் மாத்திரமே அதற்கு அங்கீகாரம் தரமுடியும். ஒரு நாவல் இந்திய மொழிகளிலும…

    • 1 reply
    • 1.1k views
  11. தெய்வ மகனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! ஆண்டொன்று ஆனதையா அறிவுடைத் தந்தாய் அவனியைப் பிரிந்துநீவீர் ஆண்டவன் பாதம் வேண்டித்தான் சென்றீரே விலையில் மாண்பே விடிவெமக்குத் தூரமில்லை விதியை நொந்தோம் தாண்டிநாமும் செல்கின்றோம் தடைகள் நீக்கி சார்புநெறி வகுத்திங்கு இயங்கு காலை தூண்டிநிற்கும் நல்லறிவினைத் துணையாய்க்; கொண்டு தூயதிரு வடிபோற்றிப் புனைந்தேன் பாடல். கலைமகளாம் எம்தெய்வம் கல்விக்கரசி யென்றும் களிப்புடனே வீணையிற் கவிமழை பொழிந்திட அலைமகளாள் நிலம்நோக்கி அகம்குளிர்ந்து நீரடித்து ஆர்ப்பரிப்பிற் றிளைத்து அணைத்து மகிழ்ந்திட மலைமகளாள் மங்கலக் குங்குமமும் மனையும் மாண்புடைத் திடமும் மேன்மையும் அளித்திட விலையிலா வீரத்தின் விளைநில…

  12. புகழ்பெற்ற... இலக்கியத் திறனாய்வாளரும், ஊடகத்துறையில் பன்முக ஆளுமை மிக்கவருமான... கே.எஸ்.சிவகுமாரன் காலமானார்! புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் ஊடகத்துறையில் பன்முக ஆளுமை மிக்கவருமான கே.எஸ்.சிவகுமாரன் நேற்று(வியாழக்கிழமை) இரவு காலமானார். இலங்கையின் மூத்த அறிவிப்பாளர், இலக்கியவாதி, விமர்சகர், எழுத்தாளர், திறனாய்வாளராக தமிழிலும் ஆங்கிலத்திலும் தேர்ச்சியும் தெளிவும் கே.எஸ். சிவகுமாரன் பெற்றிருந்தார். https://athavannews.com/2022/1299374

  13. ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அவர்களின் 14ம் ஆண்டு நினைவு நாள் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக (25) சனிக்கிழமை பி.ப 12.00 மணிக்கு இடம்பெறவுள்ளது படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகளாகின்ற போதிலும் இதுவரை நீதி கிடைக்கவில்லை என ஊடக அமைப்புகளினால் கவலை வெளியிடப்பட்டுள்ளது. 2006 இல் உயர்தரக் கல்வியை முடித்து பின்பு, பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த 5 மாணவர்கள், திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவ் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களை இவர் நிழற்படமெடுத்து செய்தி வெளியிட்டிருந்தார். மாணவர்களி…

  14. இரும்பு தலைவனுக்கு இறுதி மரியாதை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் மறைவு உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் அவர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்துவிட்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலையும், செவ்வஞ்சலியையும் செலுத்துகிறது. தோழர் தா. பாண்டியன் 8-ஆம் வகுப்பு படிக்கும்போதே பேச்சுப்போட்டியில் இணைந்து சிறந்த பேச்சாளராக உருவானவர். தனது 15 வயதி…

  15. தலைவர் பிரபாகரனின் நெருங்கிய நண்பர் காலமானார்! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் நெருங்கி நண்பரும் அவ்வமைப்பின் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கான பொறுப்பதிகாரியுமாக விளங்கிய பிறைசூடி காலமானார். யாழ்ப்பாணம், வடமராட்சியை பிறப்பிடமாக கொண்ட இவர், உடல் நலக் குறைவின் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் காலமாகியுள்ளதாக அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர். இவர் அரசதுறையில் சேவையாற்றிய வேளையில் இலங்கையில் தனிச்சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டு, தமிழ் அரச ஊழியர்கள் அனைவரும் சிங்களத்தை கற்க வேண்டியது அவசியமென வலியுறுத்தப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை துறந்திறந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது. பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்புக…

  16. தமிழீழ விடுதலைப்புலிகளின் சாள்ஸ் அன்ரனி படையணியின் தளபதிகளில் ஒருவரான பல்லவன், அமுதாப் ஆகியோரின் புகைப்படங்கள் எங்கு எடுக்கலாம் அல்லது தங்களிடம் இருந்தால் தந்து உதவுங்கள்,

    • 1 reply
    • 1.1k views
  17. சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார் சென்னை, புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தா. இவருக்கு 93 வயது. ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர். இதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் சாந்தா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். மேலும் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலகப்புகழ் பெற்றவர் சாந்தா. அவர் தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக மகசேசே, பத்ம விபூஷண் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். டாக்டர் ச…

  18. ஈழத்து மண்ணில், மிகச்சிறந்த ஓர் ‘ஒளிப்பதிவுத் தொழில் நுட்ப வல்லுனர் மரணம் ஈழத்து மண்ணில், மிகச்சிறந்த ஓர் ‘ஒளிப்பதிவுத் தொழில் நுட்ப வல்லுனராக’ வரலாறு படைப்பார் என நான் எதிர்பார்த்த தம்பி ‘சஞ்சீவ்’ இன்று காலை, வாகன விபத்தில் தன் இன்னுயிரை நீத்தார் என்ற அதிர்ச்சிச் செய்தி, என்னைப் பெரும்சோகத்தில் ஆழ்த்திவிட்டது. மூன்றுமாதங்களுக்கு முன், எண்ணற்ற கனவுகளுடன் என்னைச் சந்தித்த சஞ்சீவ் தன் ‘Drone Camera’ மூலம் ‘ஒரு பறவையின் பார்வையில்’ யாழ்மண்ணின் அழகைப் படம்பிடித்து அனுப்பிய திறமை பார்த்து வியந்துபோனேன். பிறப்பவர் எல்லோருமே, என்றோ ஓர் நாள் இறப்பது உறுதி. ஆனால்… 21 வயதில் இறப்பு…! பெற்றோருக்கு மட்டுமல்ல அவரை நேசித்த அனைவருக்குமே இது ஓர்-ப…

  19. தமிழீழ விடுதலையுணர்வுடன் தமிழர் விடுததைக் கூட்டணியிலும்; இளைஞர் பேரவையிலும் ஏனய தமிழ் அமைப்புக்களுடன் இணந்து தமிழ் மக்களின் துயரங்களை துடைக்க செயலாற்றியவரும் 29.11.1980 ஆம் நாள் அகாலமரணமானவருமான அமரர் திரு தம்பிப்பிள்ளை தர்மராசா அவர்களின் 30வது வருட நினைவு நாளில் அன்னாரின் மறைவையொட்டி அவரது 31ம் நாள் நினைவு தினத்தில் தமிழ் அமைப்புக்களின் தலைவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை இங்கே பார்வையிடலாம்.

  20. வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 14 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்! AdminJanuary 29, 2023 சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும் அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் 29.01.2009 அன்று தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 14 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் தன்னிகரற்ற தியாகத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும், புலத்தில் வெவ்வேறு தேசங்களிலும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள் இந்நாளிலே தீயாய் பூத்த தீந்தமிழ் ஈகியர் அனைவருக்கும் வீரவணக்கம். முத்துகுமாரின் கடைசிக் கடிதம்: ஈழத்தமிழர் பிரச்சனை முடி…

  21. சா. கந்தசாமி: சதை அழியும், கதை அழியாது! மின்னம்பலம் சாகித்ய அகாதமி விருது பெற்ற மூத்த எழுத்தாளரான சா. கந்தசாமி இன்று (ஜூலை 31) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். காலத்தைக் கடந்த சா. கந்தசாமிக்கு வயது 80. அன்றைய கீழ்த் தஞ்சை மாவட்டத்தின் மயிலாடுதுறையில் திருமண சேலைகளுக்குப் புகழ்பெற்ற கூறைநாட்டில் 1940 ஆம் ஆண்டு பிறந்தவர் சா. கந்தாமி. சிறுவயதிலேயே தந்தையை இழந்த சா.கந்தசாமி தனது 14 ஆவது வயதில் தாயார் ஜானகியுடன் சென்னைக்கு சென்றார். வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை பள்ளியில் பயின்ற கந்தசாமி, பள்ளிப் படிப்பு படித்த பின் சென்னை மத்திய பாலிடெக்னிக்கில் ஆட்டோமொபைல் துறையில் டிப்ளமோ பெற்றார். ஒருபக்கம் தொழில் ரீதியான பட…

    • 1 reply
    • 621 views
  22. கடந்த நான்கு நாட்களாக யாழ்குடாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா படையினருக்கும் இடம்பெற்ற மோதல்களில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் பெயர் விபரங்கள் விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விரிப்பு வருமாறு... 11.08.2006 அன்று சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதலின்போது வீரச்சாவடைந்தோர் 01. வீரவேங்கை அருங்கதிர் மதனி சிவப்பிரகாசம் யோகேஸ்வரி யாழ். மாவட்டம். 02. வீரவேங்கை ஆர்த்தி பொன்னுத்துரை சரஸ்வதி யாழ். மாவட்டம் 03. வீரவேங்கை வாணி மார்க்கண்டு சாந்தமலர் விடத்தல்தீவு, பள்ளமடு, மன்னார். 04 வீரவேங்கை கவிமதி கிண்ணியா றெங்கநாதன் தேவிகா. முரசுமேட்டை கிளிநொச்சி. 05 வீரவேங்கை ஆனந்த சுரவி சந்…

  23. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா காலமானார் ! இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் Sayanolipava முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உப தலைவருமான பொன்.செல்வராசா இன்று காலமானார். 1994ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில், தேர்தலில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினராக இவர் தெரிவானர். 2000ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நிமலன் சௌந்தரநாயகம் படுகொலை செய்யப்பட்ட பின்னர், பொன்.செல்வராசா அவரது வெற்றிடத்திற்கு நியமன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2010ம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாக தேர்தலில் போட்…

  24. மயிலந்தனைப் படுகொலை: இன்றைக்குப் பத்தொன்பது ஆண்டுகளின்முன் 1992ஆம் ஆண்டு ஆகசுடு 0...9ஆம் நாள், மட்டக்களப்பு நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மயிலந்தனை என்ற கிராமத்தில் சிங்கள இராணுவத்தினர் நடத்திய வெறியாட்டத்தில் 39 அப்பாவித்தமிழ் மக்கள் சுடப்பட்டும், வெட்டப்பட்டும் கொல்லப்பட்டனர். 34பேர் கை, கால்கள் வெட்டப்பட்டு அங்கவீனர்களாக்கப் பட்டனர். கொல்லப்பட்டோரில் கர்ப்பிணிப்பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். இவ்வெறியாட்டத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு ஊழிய சலுகையும், அதிகாரி பதவிகளும் வழங்கப்பட்டு அவர்கள் மேலும் ஊக்குவிக்கப்பட்டனர். திராய்க்கேணி படுகொலை: 21 ஆண்டுகளின்முன் ஆகசுடு 07ஆம் நாள் 1990ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள திராய்க்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.