Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. எழுத்தாளர் செ. கணேசலிங்கன் காலமானார் டிசம்பர் 4, 2021 யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டு, தற்போது சென்னை வடபழனியில் உள்ள தனது மகளின் இல்லத்தில் வசித்துவந்த தோழர் கணேசலிங்கன் இன்று (04.12.2021, சனிக்கிழமை) காலை காலமாகினார். இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமையாக விளங்கிய எழுத்தாளர் செ.கணேசலிங்கன், 40க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதை, சமயம், சமூகவியல், அரசறிவியல், பெண்ணியம், கலை, திறனாய்வு போன்ற பல்வேறு துறைகளிலும் 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தோழர் கணேசலிங்கன் அவர்களின் பூதவுடல் இன்று (04.12.2021, சனிக்கிழமை) பிற்பகல் 5.00 மணியளவில் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. …

  2. மூத்த பத்திரிகையாளர் கானமயில்நாதன் காலமானார் மூத்த ஊடகவியலாளரும் , உதயன் பத்திரிக்கை ஆசிரியருமான ம.வ. கானமயில்நாதன் இன்று திங்கட்கிழமை தனது 79 ஆவது வயதில் காலமானார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ம.வ. கானமயில்நாதன் 1942 ஆம் ஆண்டு யூலை மாதம் 25 ஆம் திகதி பிறந்தார். உதயன் பத்திரிகை 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட முதல் தனது வாழ்வின் இறுதிக்காலம் வரையிலான 36 வருடங்கள் பிரதம ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். நெருக்கடியான கால கட்டத்தில் தாயகத்தில் இருந்து ஊடகப்பணியாற்றிய மிக சொற்ப அளவிலான மூத்த ஊடகவியலாளர்களுக்குள் கானமயில்நாதனும் ஒருவர். பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி எல்லை…

  3. செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைகிறேன்,கண்மணி அக்கா தமிழினி மற்றும் உறவுகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் . தமிழினியின் சகோதரி என்னுடன் சில காலம் படித்தவர் . அமைதியானவர் . குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தையும் அஞ்சலியையும் தெரிவிக்கிறேன்.

  4. “திலீபன் அழைப்பது சாவையா இந்த சின்ன வயதில்…” பாடிய குரல் ஓய்ந்தது! AdminOctober 26, 2021 தமிழ் இனத்திற்கா மொழிக்காக உரிமைக்காக உழைத்த கலைஞர்கள் மறைந்து கொண்டே செல்கின்றார்கள். கடந்த காலங்களில் தமிழ் இனத்திற்காக போராடியவர்களுடன் இணைந்த கலைஞர்கள் இன்றும் எம் நாட்டிலும் புலம்பெயர் நாட்டிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். சிலர் திரைமறைவில் வாழ்ந்து கொண்டுவந்தாலும் கலைஞர்கள் தங்கள் கலை உணர்வுகளை வெளிப்படுத்தும் சந்தர்பங்கள் கிடைத்தவர்கள் வெளிப்படுத்தி வருகின்றார்கள். இவ்வாறானவர்களில் ஒரு பாடகிதான் மேரிநாயகி யாழ்ப்பாணம் நவாலியூரினை சேர்ந்த இவர் தமிழர்களின் உரிமைக்காக போராடிய காலகட்டத்தில் குறிப்பாக 80 காலப்பகுதிகளில் பல எழுச்சி பாடல்களைப் பாடியவரும், …

    • 5 replies
    • 988 views
  5. கழுத்தில் தங்கச்சங்கிலி கிடையாது கையில் தங்க மோதிரமும் கிடையாது. எளிமையான மனிதர் மட்டுமல்ல அவரிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை இன்னும் நிறையவே உண்டு என்பதையும் விட்டுச்சென்றிருக்கிறார். எந்த மன்னாதிமன்னனாயினும் மேலங்கி இல்லாமல்த்தான் கோவிலுள் நுழையலாம் என சட்டம் வைத்தவர் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  6. பிரபல தபேலாக் கலைஞர் சதா வேல்மாறன் மறைவு! September 19, 2021 ஈழத்தின் மூத்த பிரபல்யமான தபேலா வாத்தியக் கலைஞர் சதா வேல்மாறன் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலைக்குச் சென்றபோதே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் ஒலிப்பதிவாகிய கணிசமான பாடல்கள், பெருமளவான பக்திப்பாடல்களுடன் ஆயிரக்கணக்கான அரங்க நிகழ்வுகளிலும் அவர் அணி இசை செய்துள்ளார். பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களால் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, நூற்றுக்கணக்கான…

  7. தோழன் விஜயன் - எமது சிவப்பு அஞ்சலிகள்!! தோழன் விஜயன் இன்று தனது சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் நிறுத்திக் கொண்டான். தோழன் விஜயன் இனவாத இலங்கை அரசுகளுக்கு எதிரான தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் தனது அரசியல் செயற்பாடுகளை தொடங்கினான். பின்பு இலங்கையின் எல்லாச் சமூகங்களின் விடுதலையும் தமிழ் மக்களின் விடுதலையும் இணைந்து கொள்ளும் போதே நிலையான தீர்வு ஒன்று கிடைக்கும் என்னும் பொதுவுடைமை அரசியல் வழியில் தனது பாதையை வகுத்துக் கொண்டான். சம உரிமை இயக்கம், முன்னிலை சோசலிச கட்சி ஆகிய அமைப்புக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டான். மக்கள் போராட்ட அமைப்பின் பத்திரிகையான "போராட்டம்" இதழை பிரான்ஸ் தமி…

  8. நடந்தால் இரண்டடி .. இருந்தால் நான்கடி.. படுத்தால் ஆறடி போதும் இந்த நிலமும் அந்த வானமும் அது எல்லோர்க்கும் சொந்தம் கண்ணீர் அஞ்சலிகள் 💐💐

  9. பெருங்கவிஞன் பிரான்சிஸ் கிருபா மறைந்துவிட்டார். பல்லாண்டுகளாக மிகவும் தீவிரமான தளத்தில் இயங்கிய கிருபாவின் மரணம் மிகவும் துயரம் தருவதாக அமைந்துவிட்டது. உடல் உபாதைகளும், தேடிக்கொண்ட விட்டொழிக்க முடியாத போதையும் அவரை வாழ்வதற்கு வேறு நோக்கங்களே இல்லாத துயரமான தனிமைக்குள் தள்ளிவிட்டது. மிகக் காத்திரமான கவிதைகளையும் யாராலும் பிரதியெடுக்க முடியாத 'கன்னி'யையும் தந்தார். சிற்றிதழ்களில் தொடங்கியவர், திரைப்படங்களில் பாடல்கள் எழுத முனைப்புக் காட்டினார். எழுத்தின்மீது ஆர்வம் கொண்டவர். கவிஞனாக, இருந்ததை விற்று காசாக்கியவர் இல்லை. சில வெற்றி பெற்ற கவிஞர்களைப் போல தன்னையோ தன் படைப்புகளையோ முன்னிறுத்தாதவர். உலக சாதூர்யங்களைத் துறந்தவர். தடுமாற்றங்கள், தத்தளிப்புகள், நிகாக…

    • 5 replies
    • 1.2k views
  10. By தமிழரசி - September 16, 2021 12 இலங்கையின் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் தமது 72வது வயதில் திருகோணமலையில் காலமானார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவிலை பிறப்பிடமாக அவர் தமது ஆரம்ப கல்வியை மட்டுவில் கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலை, மட்டுவில் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வதிரி திரு இருதயக் கல்லூரி ஆகியவற்றில் கற்றார். இதனையடுத்து அவர் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிப சங்க இயக்கத்தில் இ…

  11. பிரகாஸ் எனும் ஊடகவியலாளன் Posted By: adminon: September 11, 2021In: இலங்கை, சிறப்பு கட்டுரைNo Comments Print Email பிரகாஸ் – கடந்த வாரம் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து பலரையும் உணர்வெழுச்சி கொள்ளச் செய்த பெயர். பிரகாஸ் ஞானப்பிரகாசம் – அவர் ஓர் ஊடகவியலாளர். சுயாதீன ஊடகவியலாளர். ஆனால் அவர் செய்தியாகிப் போனமையால் ஊடகங்களில் இடம் பிடித்து முக்கியத்துவம் பெற்றிருந்தார். ஊடகவியலாளர்கள் செய்திகளை தேடித் தெளிந்து வெளியிடுவார்கள். ஆனால் அவர்கள் தாங்களே செய்தியாக விரும்புவதில்லை. அந்தத் துரதிஸ்டம் பிரகாஸுக்கு நேர்ந்துவிட்டது. அந்தத் துயரம் ஊடகத்துறையை குறி;ப்பாக தமிழ் ஊடகத்துறையின் மனதைக் கீறி சோகமடையச் செய்து விட்டது. பிரகாஸ் ஓர் இளைஞன். மு…

  12. தமிழீழ தேசியத் தலைவரை அதிகம் நேசித்த புலமைப்பித்தன் ஐயா காலமானார் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஆதரித்தவரும் தமிழீழ தேசியத்தலைவரைஅதிகம் நேசித்தவரும் அ.தி.மு.க. மேனாள் அவைத்தலைவராகவும் இருந்த , பாடலாசிரியர் புலமைப்பித்தன் ஐயா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (08.09.2021) காலை 9.33 மணிக்கு உயிரிழந்தார் https://www.thaarakam.com/news/5fc1ecda-e350-4790-9ab5-3a417efff201 தமிழ் – தமிழர் – தமிழீழம் என இலக்கியமாகவும் அரசியலாகவும் வாழ்பவர் புலவர் புலமைப்பித்தன் தமிழ் – தமிழர் – தமிழீழம் என இலக்கியமாகவும் அரசியலாகவும் வாழ்பவர் புலவர் புலமைப்பித்தன் புலவர் புலமைப்பித்தன் மறைவிற்கு …

  13. விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான மொழி பெயர்ப்பாளராக இருந்த ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினரின் பிரதான மொழி பெயர்ப்பாளராக விளங்கிய வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் (ஜோர்ஜ் மாஸ்டர்) காலமானார். 1936ஆம் ஆண்டு பிறந்த அவர் தபாலதிபராக பணியாற்றியுள்ளார். பின்னர் 1994 ஆம் ஆண்டு காலப் பகுதி தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினருடன் இணைந்து மொழிபெயர்ப்புத் துறையில் செயற்பட்டு வந்திருக்கின்றார். இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச நாடுகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுக்களின் போது பிரதான மொழி பெயர்ப்பாளராகவும் அவர் செயற்பட்டிருக்கின்றார். இற…

  14. உலகப் புகழ்பெற்ற நாதஸ்வர சக்கரவர்த்தி சிதம்பரநாதன் சாவடைந்தார்! AdminSeptember 4, 2021 உலகப் புகழ்பெற்ற நாதஸ்வர சக்கரவர்த்தி சிதம்பரநாதன் நேற்றுக் (03-09-2021) காலமானார். அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நாதஸ்வர வித்துவான் சிதம்பரநாதன், தவிற்காரர் செல்லத்துரையின் மகனாவார். இவர் தமது நாதஸ்வரக் கலையைக் கும்பழாவளை ஆலயத்தில் இளமைப்பருவத்திலேயே ஆரம்பித்தார். இவருடைய தந்தையாரும் கும்பழாவளை ஆலயத்தில் தவிற்கலையில் ஈடுபட்டிருந்தவர். தந்தையாருடன் இணைந்து கலைத்தொண்டு பேணிய இவர் நாதஸ்வரக் கலையில் மிக நாட்டங் கொண்டவராக விளங்கினார். அக் காலத்தில் பிரபல நாதஸ்வரக் கலைஞராகவிருந்த மாவிட்டபுரம் இராசாவிடம் சாஸ்திர ரீதியில் நாதஸ்வரம் பயின்றார். அதன் மேல் இந்தியாவுக்க…

  15. வி.தர்மலிங்கத்தின் 36ஆவது நினைவு தினம் இன்று September 2, 2021 தமிழர் விடுதலை கூட்டணியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான வி.தர்மலிங்கத்தின் 36ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் மகனும் ,தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள நினைவிடத்தில் குறித்த அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. அதன் போது , தமிழரசு கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா சுன்னாகம் பிரதேச சபை தவிசாளர்,பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட…

  16. தமிழ் தேசிய செயற்பாட்டாளர் சண்முகவேல் விக்னேஸ்வரன் காலமானார் தமிழ் தேசிய செயற்பாட்டாளரும் சமூக சேவையாளருமான லயன் சண்முகவேல் விக்னேஸ்வரன் கொரோனா தொற்று காரணமாக கொழும்பில் நேற்று வியாழக்கிழமை காலமானார். அன்னாரது இறுதி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு பொரல்ல மயானத்தில் நடைபெற்றது. கொழும்பு றோயல் மருத்துவமனையில் கடந்த இரண்டுவரங்களாக அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிற்சை பலனளிக்காமல் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 50. Global Enterprises நிறுவனத்தின் ஸ்தாபகரான விக்னேஸ்வரன் கணனி தொழில்நுட்ப நிபுணராக கொழும்பில் நீண்டகாலம் பணியாற்றி வந்திருந்ததுடன் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் பால் பெரும் பற்று க…

  17. யாழ்.களத்தின் அன்புச் சகோதரி, யாயினி... அவர்களின் அன்பு சகோதரர் காலமாகி விட்டார். துயர் பகிர்வு அறிவித்தல்: கனகலிங்கம் பகீரதன்(கபிலன்) புங்குடுதீவு 3ம்வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கனடாவில் வாழ்ந்து வந்தவருமான கனகலிங்கம் கபிலன், இன்று அதிகாலை மாரடைப்பினால் காலமாகிவிட்டார். (தகவல்: விசுகு) அன்னாரின், ஆத்மா சாந்தியடைய... பிரார்த்திக்கின்றோம். 🙏 🙏 🙏

  18. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் மறைவு- வைகோ இரங்கல் 19 Views மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் அவர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு பலி ஆனார் என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க பெண்ணுரிமைப் போராளியாக பொதுவுடமை இயக்கத்தில் பணியாற்றியவர். பல ஆண்டுகளாகத் தொழிற்சங்க இயக்கத்திலும்,பெண்கள் இயக்கத்தைக் கட்டுவதிலும் பழுத்த அனுபவம் பெற்றவராகத் திகழ்ந்தார். ஐ.நா.மன்றத்தில் இந்தியாவுக்கான தூதுக்குழுவில் ஆய்வு உதவிய…

  19. ஈகைப்போராளி கொளத்தூர் முத்துகுமாரின் தந்தை காலமானார் 36 Views கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அரசால் நடத்தப்பட்ட போரில் தமிழீழ மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது, குறித்த படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி தீக்குளித்து தன்னுயிர் ஈந்த ஈகைப்போராளி கொளத்தூர் முத்துகுமாரின் தந்தை குமரேசன் ஐயா உடல் நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார். அன்னாரது இறுதி சடங்கு சென்னை கொளத்தூர் சிவசக்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (20.5.2021) வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குமரேசன் ஐயாவின் மறைவுக்கு “இலக்கு செய்தி நிறுவனம்” தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது. https://www.ilakku.o…

    • 9 replies
    • 1.2k views
  20. திருமலை முன்னாள் எம்.பி. துரைரெட்ணசிங்கம் காலமானார் – கொரோனா பலியெடுத்தது 1 Views திருகோணமலையின் முன்னாள் எம் பி கதிர்காமத்தம்பி துரைரெட்ணசிங்கம் , கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். கந்தளாய் தள வைத்தியசாலையில் கொரோனே தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டம், மூதூர், சேனையூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சேனையூர் மெதடித்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, மூதூர் புனித அந்தோனியார் பாடசாலை ஆகியவற்றில் கல்வி பயின்று பின்னர் மட்டக்களப்பு ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்றார். 1960 ஆம் ஆண்டு மு…

  21. அஞ்சலி: கி.ராஜநாராயணன் May 18, 2021 கி.ரா மறைந்ததாக இணையத்தில் செய்தி. சமஸ் உட்பட பலர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் உள்ளம் ஏற்க மறுக்கிறது. சென்ற சில மாதங்களாகவே உடல்நலம் குன்றித்தன இருந்தார். தசைகளின் இயக்கமும் குறைந்து வந்தது. ஆனாலும் பெரியவர், சாவே இல்லாதவர் என்று நம்பத்தான் உள்ளம் விரும்புகிறது. நோய்க்காலம், எவரும் சென்று சந்திக்கவேண்டாம் என்று நண்பர்களிடம் சொல்வேன். எனக்கே சந்திக்கவேண்டுமென ஆசையிருந்தது. ஆனால் கி.ரா இளையவர்கள், வாசகர்கள் சந்திக்க வருவதை விரும்பினார். உற்சாகமாகி நினைவுகளை பெருகவிட்டு பேசிக்கொண்டிருப்பார். அவருடைய விருப்பப்படி கோபல்லகிராமம் மலையாள மொழியாக்கத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தோம். இப்போது இச்செய்தி. வணங்கு…

  22. கொழும்பு கொட்டாஞ்சேனை அருள் கல்வி வட்டத்தின் ஊடாக பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் இதயத்தை வென்ற ஆசானும் அரசின் உயர் அதிகாரியுமான கல்விமான் வே.சிவஞானஜோதி காலமானார். இவரது மரணம் நாட்டிற்கு மட்டுமல்ல அவரிடம கற்ற அனைத்து மாணவர்களுக்கும் பேரிழப்பாகும். கணக்கியல் ஆசிரியரான இவரிடம் கற்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இன்று உயர் தொழிலில் இருந்து வருவது குறிப்பிடதக்கது யாழ்.சண்டிலிப்பாயை பிறப்பிடமாக கொண்ட வே.சிவஞானசோதி ஐயா பல அமைச்சுக்களின் செயலாளராக திறன்பட பணியாற்றி இருந்தார். குறிப்பாக இந்து கலாச்சார அமைச்சு, பாரம்பரிய சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு, வடக்கு மாகாண ஜனாதிபதி செயலணி, நல்லிணக்க அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தார். …

    • 0 replies
    • 747 views
  23. திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர், கலாநிதி மரியசேவியர் அடிகளார் காலமானார். April 2, 2021 திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர், கலாநிதி மரியசேவியர் அடிகளார் தனது 82 அவது வயதில் காலமானார். இளவாலையைச் சேர்ந்த அவர் ஆரம்பக் கல்வியை இளவாலை றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் அதன் பின்னர் சென் ஹென்றிஸ் கல்லூரியிலும் கற்றார். இவர் தன் வாழ்வைக் குருத்துவப் பணியில் அர்ப்பணிக்கும் பொருட்டு 1952 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மருதனார் குருமடத்தில் சேர்ந்து சென் பற்றிக்ஸ் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1956ஆம் ஆண்டு எஸ்.எஸ்.சி.பரீட்சையில் சித்தியடைந்து, குருத்துவ மேல் நிலைப்படிப்பைக் கண்டி அம்பிட்டிய குருமடத்தில் தொடர்ந்தார். இவர் 1958 ஆம் ஆண்டு இசையியலில் உயர…

  24. ஈழத்தின் மூத்த குரலிசையாளர் சங்கீதபூசணம் சுப்பையா கணபதிப்பிள்ளை காலமானார்.! ஈழத்தின் மூத்த குரலிசையாளர் சங்கீதபூசணம் சுப்பையா கணபதிப்பிள்ளை இன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். யாழ்.கல்விவலயத்தின் முன்னாள் அழகியற்பாடப் பணிப்பாளராக விளங்கிய அவர் ஆசியர் சேவையில் மிக நீண்ட காலமாக பணியாற்றி பெருமளவான குரலிசை மாணவர்களை உருவாக்கியவராக விளங்கி வந்திருக்கின்றார். இந்தியாவின் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சங்கீதபூசணம் பட்டம் பெற்ற கணபதிப்பிள்ளை வரகவி பொன்னாலை கிருஷ்ணபிள்ளையின் பெறாமகன் ஆவார். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முதல் தர (A)ப் பாடகராக விளங்கிய பெருமைக்குரிய கணபதிப்பிள்ளை வரன்முறையான ஆற்றுகையாளராக விளங்கியதுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பெருமளவான அரங்க…

    • 3 replies
    • 979 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.