துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
யாழ் கள உறவும் எங்கள் எல்லோராலும் அன்புத் தங்கையாகப் போற்றப்பட்டவருமான யாயினி அவர்களின் அம்மா 11.04.2020 அன்று அமரத்துவம் அடைந்துவிட்டதாக யாயினியினின் முகப்புத்தகக் குறிப்பு அறிவித்துள்ளது. யாயினிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களும் தெரிவிப்பதோடு.. எங்கள் ஆற்றுப்படுத்தலையும் வெளியிடுகிறோம். அவரது அன்னைக்கு..கண்ணீரஞ்சலி.
-
- 64 replies
- 5.5k views
- 2 followers
-
-
யாழ்ப்பாணத்தின் மூத்த ஓவியர் இராசையா மறைந்தார்.! யாழ்ப்பாணத்தின் மூத்த பிரபல்யமான ஓவியர் ஆ.இராசையா இன்று காலமாகியுள்ளார். புற்று நோய்த் தாக்கத்துக்கு உட்பட்டிருந்த அவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்திருப்பதாக தெரியவருகிறது.. "ஓவியர் பற்றிய இந்த வரலாறு - 2015ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது" 16.08.1946 இல் அச்சுவேலியில் ஆசை – செல்லம்மா தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்த ஓவியர் இராசையா தற்போது இல 36, பண்டாரிக்குளம் வீதி, நல்லூரைத் தனது வாழ்பதியாகக் கொண்டுள்ளார். இலங்கையின் மிகப்பிரபல ஓவியர்கள் வரிசையில் வைத்து எண்ணப்படும் இவர் பிறப்பு முதல் 1965 வரை அச்சுவேலியில் வாழ்ந்தவர். அச…
-
- 2 replies
- 568 views
-
-
-எஸ்.நிதர்ஷன் ஈழ விடுதலை போராட்டத்தின் முதலாவது போராளி பொன்.சிவகுமரனின் 70ஆவது பிறந்த தினம், இன்று நினைவுகூரப்பட்டது. சிவகுமரன் நினைவுதின ஏற்பாட்டுக் குமுவினரின் ஏற்பாட்டில், இன்று காலை 8.30 மணிக்கு உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. ஏற்பாட்டு குழுவில் உறுப்பினர் செந்தூரன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் சிவகுமாரனின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பன-சவகமரனன-ஜனன-தனம/71-254843
-
- 0 replies
- 510 views
-
-
இலங்கையின் முதலாவது எதிர்க்கட்சித் தலைவர், சுட்டுக் கொல்லப்பட்ட அமரர் அ.அமிர்தலிங்கத்தின் 93வது ஜனன தினம் இன்று (26) அனுஷ்டிக்கப்பட்டது. இதன்படி வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலிலுள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு இன்று காலை மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் அ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். https://newuthayan.com/அமிர்தலிங்கத்தின்-93வது-ஜ/
-
- 0 replies
- 476 views
-
-
தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் அமரர் சங்கரப்பிள்ளை வல்லவசீலன் அவர்களுக்கு எமது இதயவணக்கம். Posted on August 22, 2020 by சிறிரவி 201 0 அமரர் திரு. சங்கரப்பிள்ளை வல்லவசீலன் (சீலன்) பிறப்பிடம்: யாழ்ப்பாணம்,கொக்குவில்.(பிரம்படிலேன்) தமிழீழம் வதிவிடம்: பிராங்பேட், யேர்மனி..( Frankfurt / main, Germany).( Frankfurt / main, Germany) இயற்கையின் படைப்பில் மானிடம் ஒரு அரிய படைப்பாகக் கருதப்படுகின்றது.அத்தகைய உன்னதமான மானிடப்படைப்பின் இயல்;புகளில் சுதந்திர உணர்வு மேலோங்கி நிற்பது மானிடத்தின் உயர்வுக்கு ஆணிவேராக அமைந்துள்ளது. ஒரு தனிமனிதன் முதல், ஓர் தேசம்வரை சுதந்திர வேட்கையின் உச்சத்தைத் தொடுவதே இலக்காகக் கொண்டுள்ளது என்பது உண்ம…
-
- 0 replies
- 570 views
-
-
மந்துவிலில் 106 வயது வரை வாழ்ந்த மூதாட்டி மரணம்! தென்மராட்சி – மந்துவில் பகுதியில் 106 வயது வரை ஆரோக்கியத்துடன் உயிர் வாழ்ந்த மூதாட்டி ஒருவர் நேற்று (09) இரவு மரணமடைந்துள்ளார். மந்துவில் கிழக்கு கொடிகாமப் பகுதியில் வசித்து வந்த சின்னத்தம்பி வள்ளி என்ற குறித்த மூதாட்டி 80 வயதுவரை கூலி வேலை செய்து வந்ததாகவும் தெரியவருகிறது. மூதாட்டியின் கணவர் 1998ம் ஆண்டு மரணமடைந்துள்ளார். இவருக்கு ஒரு மகளும் இரு பேரப்பிள்ளைகளும் மூன்று பூட்டப்பிள்ளைகளும் இருக்கின்றனர். https://newuthayan.com/மந்துவிலில்-106-வயது-வரை-வாழ/
-
- 2 replies
- 747 views
-
-
சா. கந்தசாமி: சதை அழியும், கதை அழியாது! மின்னம்பலம் சாகித்ய அகாதமி விருது பெற்ற மூத்த எழுத்தாளரான சா. கந்தசாமி இன்று (ஜூலை 31) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். காலத்தைக் கடந்த சா. கந்தசாமிக்கு வயது 80. அன்றைய கீழ்த் தஞ்சை மாவட்டத்தின் மயிலாடுதுறையில் திருமண சேலைகளுக்குப் புகழ்பெற்ற கூறைநாட்டில் 1940 ஆம் ஆண்டு பிறந்தவர் சா. கந்தாமி. சிறுவயதிலேயே தந்தையை இழந்த சா.கந்தசாமி தனது 14 ஆவது வயதில் தாயார் ஜானகியுடன் சென்னைக்கு சென்றார். வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை பள்ளியில் பயின்ற கந்தசாமி, பள்ளிப் படிப்பு படித்த பின் சென்னை மத்திய பாலிடெக்னிக்கில் ஆட்டோமொபைல் துறையில் டிப்ளமோ பெற்றார். ஒருபக்கம் தொழில் ரீதியான பட…
-
- 1 reply
- 621 views
-
-
இ.தொ.கா. முன்னாள் செயலாளர் எம்.எஸ்.செல்லச்சாமி காலமானார் August 1, 2020 இ.தொ.காவின் முன்னாள் பொதுச் செயலாளர் எம்.எஸ்.செல்லச்சாமி இன்று கொழும்பில் காலமானார். மரணமடையும் போது அவருக்கு வயது 95. சுகவீனமடைந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக படுக்கையிலிருந்த அவர் வீட்டிலேயே இன்று நண்பகல் அளவில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். http://thinakkural.lk/article/59421
-
- 0 replies
- 435 views
-
-
எழுத்தாளர் கோவை ஞானி காலமானார் கா.சு.வேலாயுதன் மார்க்சிய அறிஞரும் எழுத்தாளருமான கோவை ஞானி இன்று காலமானார். அவருக்கு வயது 86. கோவை, துடியலூர் வெள்ளக்கிணறு பிரிவு, விஆர்வி நகரில் வசித்துவந்த கோவை ஞானிக்கு இன்று மதியம் 12.45 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. அச்சமயம் அவர் மகன் பாரிவள்ளல் அருகில் இருந்துள்ளார். ‘மார்க்சிய அழகியல்’, ‘கடவுள் இன்னும் ஏன் சாகவில்லை?' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நூல்களை கோவை ஞானி எழுதியுள்ளார். ‘நிகழ்’, ‘தமிழ்நேயம்’ உள்ளிட்ட சிற்றிதழ்களையும் நடத்தினார். கோவை ஞானியின் இயற்பெயர் கி.பழனிசாமி ஆகும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் கற்றவர். கோவைய…
-
- 2 replies
- 707 views
-
-
ஈழத்து மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்.! ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கிய மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார். இவர் நேற்று (புதன்கிழமை) மாலை கொழும்பில் காலமாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்மா சோமகாந்தன், பெண்கள் தொடர்பாக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்ததுடன் எழுத்து ஆளுமையாலும் பல விடயங்களை சமூகத்திற்கு எடுத்துரைந்த எழுத்தாளர் ஆவார். இவரது இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/மூத்த-பெண்-எழுத்தாளர்-பத/ கண்ணீர் அஞ்சலிகள் ..
-
- 3 replies
- 920 views
-
-
சிரேஷ்ட ஊடகவியலாளர் நடராஜசிவம் காலமானார்! இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர், சிறந்த ஒலி, ஔிபரப்பாளர் மற்றும் நடிகர் எனப் பல பரிணாமங்களை கொண்ட சி.நடராஜசிவம் இன்று (24) சற்றுமுன் காலமானார். இவர் இலங்கை வானொலி, சூரியன் எப்எம், ரூபவாஹினி போன்ற வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களிலும் பணியாற்றியுள்ளார். https://newuthayan.com/சிரேஷ்ட-ஊடகவியலாளர்-நடரா/
-
- 6 replies
- 1.3k views
-
-
பொறியியலாளர் சேந்தனின் சமூக அர்ப்பணிப்பு Ahilan Kadirgamar on June 21, 2020 திரு. வீரகத்தி சேந்தன் ஒரு பொறியியலாளர் மற்றும் முற்போக்கு புத்திஜீவி, அவர் தனது 71வது வயதில், ஜூன் 12, 2020இல் இயற்கையெய்தியமை தமிழ் சமூகத்திற்கு ஒரு பெரும் இழப்பு. அவர் தனக்கென புகழ் தேடாது எளிமையாக வாழ்க்கையை முன்கொண்டு போனதுடன் தன் அறிவையும் திறன்களையும் ஆழமாக வளர்த்து அவற்றை மக்களுக்காகப் பயன்படுத்திய ஒருவர். இவருடைய அர்ப்பணிப்பு தமிழ் சமூகத்தின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையூட்டுவதாயும், இளம் தலமுறையினருக்கு ஒரு முன்னுதாரணமாகவும் அமையும். பண்டிதர் வீரகத்தியின் மகனான சேந்தனுடைய உரையாடல்கள் ஒரு கவிஞனுடைய ஆழமான இல…
-
- 1 reply
- 696 views
-
-
பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார் சென்னையில் பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். பதிவு: ஜூன் 19, 2020 15:46 PM சென்னை, தமிழ் திரையுலகில் பழம்பெரும் பின்னணி பாடகராக இருந்தவர் ஏ.எல். ராகவன். சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த அவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரை உடனடியாக சென்னையில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.30 மணியளவில் அவர் காலமானார். அவருக்கு வயது 87. இவரது மனைவி நடிகை எம்.என். ராஜம். பல தசாப்தங்களாக பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்றவர். கடந்த 1947ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் மற்றும் சுதர…
-
- 3 replies
- 874 views
-
-
வட, கிழக்கு மாகாண முன்னாள் செயலாளர் காலமானார்! வடக்கு – கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் சிவகுருநாதன் இரங்கராஜா தனது 71வது வயதில் நேற்று (15) காலமானார். பொன்னாலையில் பிறந்த அவர் இலங்கை நிர்வாக சேவை அதிசிறப்புத் தரத்தில் மாகாண பிரதம செயலாளர் பதவியை வகித்தார். இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணதின் பிரதம செயலாளராகவும் பின்னர் வடக்கு மாகாணத்தின் நிர்வாகம் தனியாகப் பிரிக்கப்பட்ட பின்னர் அதன் முதலாவது பிரதம செயலாளராகவும் சிவகுருநாதன் இரங்கராஜா பதவி வகித்தார். மாகாண சபை நிர்வாகம் தொடர்பில் நன்கு அனுபவம் உடைய அவர், அனைத்துத் தரப்பினருடன் இணைந்து சேவையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரின் பூதவுடல் கொழும்பில் உள்ள அவரது …
-
- 3 replies
- 934 views
- 1 follower
-
-
தொழில்நுட்ப கல்வியை வளர்த்த அருட்தந்தை மரணம்! இலங்கையில் தகவல் தொழில்நுட்ப கல்விக்கு பெரும் பங்காற்றிய அருட்தந்தை ரைமன்ட் ஏர்னஸ்ட் அலெக்ஸ்சான்டர் போருதொட்ட இன்று (16) தனது 88வது வயதில் காலமானார். நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் மரணமடைந்துள்ளார். https://newuthayan.com/தொழில்நுட்ப-கல்வியை-வளர்/
-
- 0 replies
- 607 views
-
-
புலிகளின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் சுரேந்திரன் சாவடைந்தார்! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன் அவர்கள் சுகயீனம் காரணமாக கடந்த சனிக்கிழமை (30-05-2020) தமிழகத்தில் சாவடைந்தார். நடராஜா சுரேந்திரன் அவர்கள் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண வட்டவைக்கு உட்பட்ட பகுதிகளில் ”புலிகளின் குரல்” என்று அழைக்கப்பட்டு பின்னர் ”உறுமல்” என்று பெயர்மாற்றம் பெற்று யாழ்ப்பாணத்தில் முக்கிய சந்திகளில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட கரும்பலகைகளில், அன்றைய யுத்தகாலச் செய்திகளை எழுதும் பொறுப்பை ஏற்று கடமையாற்றியவர். இதேவேளை இவரது ஆங்கில புலமையையும், எழுத்தாற்…
-
- 6 replies
- 1.4k views
-
-
மெல்பேர்னில் வெள்ளிக்கிழமை(29.05.2020) காலமான தமிழ் சமூக செயற்பாட்டாளர் சபேசன் சண்முகம் குறித்த நினைவுப் பகிர்வை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம். இந்நிகழ்வில் பங்கேற்றோர் மெல்பேர்னிலிருந்து Dr.நடேசன் மற்றும் சிட்னியிலிருந்து A.ரஜீவன் ஆகியோர். https://www.sbs.com.au/language/tamil/audio/a-eulogy-for-sabesan-shanmugam
-
- 10 replies
- 1.6k views
-
-
கனடா ஒட்டாவா நகரில் ஏற்பட்ட வாகன விபத்தில் தேசிய செயல்பாட்டாளர் சுரேஸ் பலி. இன்று மாலை (May 15, 2020, 5:30 PM) கனடா ஒட்டாவா மாநகருக்கு அருகில், ஸ்மித்ஸ் நீர்வீழ்ச்சிக்கு தெற்கே (Smiths Falls) மூன்று வாகனங்கள் மோதியதில், அதில் ஒரு வாகனத்தை செலுத்தி சென்ற சுரேஷ் தம்பிராஜா என்ற தமிழர் கொல்லப்பட்டுள்ளார். மற்றைய வாகன சாரதி ஒருவர் சிறு காயம் அடைந்துள்ளார். போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒட்டாவா சுரேஷ் என எல்லோராலும் அறியப்பட்ட 5 பிள்ளைகளின் தந்தையான சுரேஷ் அவர்கள் புத்தூரை பிறப்பிடமாகவும், கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒட்டாவாவில் வசித்தும் வருகிறவருமாவார். ஓட்டவா நகரில் உள்ள மக்களின் தொடர்புகளை பேணுதலும் பல அரசியல் வேலை திட்டங்களயும் தமிழ்த் தேசியத்த…
-
- 16 replies
- 2.4k views
-
-
மதுரை: தமிழ்த் திரைப்பட நடிகையும் பின்னணி பாடகியுமான பரவை முனியம்மா இன்று மதுரையில் முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு வயது 76. சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். தூள் படத்தில் வரும் சிங்கம் போல.. பாடல் இவருக்கு மிகவும் பிரபலமானது. மேலும் தனது நாட்டுப்புறப் பாடல்களாலும் தனது கிராமிய பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்தவர் பரவை முனியம்மா. தூள், சண்டை, காதல் சடுகுடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். . 2000க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் தன் பாடல் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். இவரது கலைச் சேவையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமண…
-
- 13 replies
- 1.1k views
-
-
மூதறிஞர் ஆ.சபாரத்தினம் பிரிந்தார்- இன்று இறுதி நிகழ்வு ஊர்காவற்றுறை கரம்பனைப் பிறப்பிடமாகக்கொண்ட மூதறிஞர், சைவசித்தாந்த வித்தகர்ஆ.சபாரத்தினம் ஆசிரியர் (காவல் நகரோன்) வெள்ளிக்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்த இவர் சைவசித்தாந்தம், கீழைத்தேய அல்லது இந்திய தத்துவதிலும் பரந்துபட்ட அறிவைக்கொண்டிருந்தார். நாவலர் பாரம்பரியத்தின் கடைசி மாணவன் எனக்கருதப்படும் முதுபெரும் அறிஞரான பண்டிதமணி கணபதிப்பிள்ளைக்கு ஆங்கில நூல்களிலிருந்து தகவல்களை மொழிபெயர்ப்புச்செய்து உதவியமையுடன் அளவையூர் பொ. கைலாசபதியின் சிந்தனைகள் என்ற நூலைப் பேராசிரியர் சுசீந்திரராஜாவுடன் இணைந்து தொகுத்து வெளியிட்டார். சுவீடிஷ் ப…
-
- 12 replies
- 1.3k views
- 2 followers
-
-
-
- 3 replies
- 1.1k views
-
-
முருகனின் தந்தை யாழில் மரணம்; முகம் பார்க்க அனுமதிக்காத அரசு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் எனும் ஸ்ரீஹரனின் தந்தை வெற்றிவேல் (75-வயது) இன்று (27) அதிகாலை யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று மரணமடைந்துள்ளார். தனது தந்தை இறப்பதற்கு முன்னர் வீடியோ கோலில் தந்தையின் முகத்தை பார்க்க சட்டத்தரணி ஊடாக முருகன் விடுத்த கோரிக்கை தமிழக அரசு மறுக்கப்பட்டுள்ளது இந்நிலையில் தந்தையின் உடலையாவது இறுதியாக பார்க்க அனுமதிக்குமாறு முருகன் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது உறவினர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜீவ் கா…
-
- 0 replies
- 501 views
-
-
சிரேஷ்ட ஊடகவியலாளர் நல்லதம்பி நெடுஞ்செழியன் காலமானார் சிரேஷ்ட ஊடகவியலாளர் நல்லதம்பி நெடுஞ்செழியன் காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அன்னார் தனது 65 ஆவது வயதில் நேற்று(செவ்வாய்கிழமை) காலமானார். இலங்கையின் தமிழ் ஊடகத்துறையில் நடுநிலை செய்தியாளராகவும், சர்வதேச செய்தி அறிக்கையிடலின் சிறப்புத் தேர்ச்சி பெற்றவராகவும் அன்னார் அளப்பரிய பங்காற்றியுள்ளார். பல்வேறு தமிழ் பத்திரிகைகளில் சிரேஷ்ட ஊடகவியலாளர் நல்லதம்பி நெடுஞ்செழியன் எழுதிய கட்டுரைகள் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தன. http://athavannews.com/சிரேஷ்ட-ஊடகவியலாளர்-நல்ல/
-
- 1 reply
- 814 views
-
-
யாழ்பாணம் வண்ணார்பேட்டை பண்ணையை சொந்த இடமாகவும் பிரான்ஸ் (பாரிஸ்) வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரம் பிள்ளை விஜயன் (விசயப்பு) இன்று 12/4/2020 காலமானார். என்ற செய்தி கேட்டவுடன் விசயப்புவின் நினைவுகளின் அதிர்வலைகள் என்னுள் உயிர்த்தது. ஒரு சிலரே மரணித்த பிறகும் மக்கள் மனங்களில் ஈரமான நினைவுகளாக என்றென்றும் நிலைபெற்றுவிடுகிறார்கள்,அதில் ஒருவர் இந்த சிதம்பரம் பிள்ளை விஜயன். 1995 ம் ஆண்டில் இவரை சந்திப்பதற்கு சென்றேன். Belleville இல் பர்ஹான் அவர்களின் இல்லத்தில் இவர் தங்கியிருந்தார் .அங்கு வைத்து என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன் . ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறியவர்களை அந்த நாட்டின் சட்டம், மொழி ,தெரியாத காரணத்தால் அவர்களை சுரண்டி பிழைப்பவ…
-
- 2 replies
- 994 views
-
-
முன்னாள் பேராயர் நீக்ளஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ ஆண்டகை காலமானார் கொழும்பு மறை மாவட்டத்தின் முன்னாள் பேராயர் டி. நீக்ளஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ ஆண்டகை காலமானதாக பேராயர் இல்லம் அறிவித்துள்ளது. இவர் சிறப்பான எடுத்துக்காட்டான பல்வேறு சேவைகளை செய்துள்ளதோடு, அனைவரிடத்திலும் அன்பும், கருணையும் கொண்டவராக இருந்துள்ளார். http://athavannews.com/முன்னாள்-பேராயர்-நீக்ளஸ்/
-
- 3 replies
- 581 views
-