Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. அன்று சூசையைத் தேடிய சந்திரிக்காவின் கணவர். AUGUST 29, 2015 COMMENTS OFF அரிய வீடியோ காட்சி. ( 4 ) சந்திரிக்காவின் கணவர் விஜயகுமாரதுங்க 1986ஆம் ஆண்டு யாழ் கோட்டையில் இருந்து வெளியில் வந்து விடுதலைப்புலிகளின் அன்றைய யாழ் மாவட்ட தளபதியாக இருந்த கிட்டண்ணாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அரிய வீடியோ காட்சி. இதில் காணப்படும் தளபதிமார்கள் தியாகி திலீபன் அண்ணா. கேடி அண்ணா. சூசை அண்ணா .ஜொனி அண்ணா. மற்றும் கோட்டை ராணுவ முகாமுக்கு பொறுப்பாக இருந்த கொத்தலாவலை. asrilanka.com

    • 20 replies
    • 2.1k views
  2. 1991 ஆம் ஆண்டு இலங்கை அரசு, விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளுக்கான பொருளாதாரத் தடையை விதித்தது. அதன்படி எரிபொருள் வரத்துத் தடைப்பட்டது. எரிபொருள் தடைப்பட்டால், விவசாயம் நேரடியாகப் பாதிக்கப்படும். இதனால் பட்டினியால் வாடும் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு வழிக்கு வருவார்கள் என்பதே அரசின் திட்டம். இந்தத் திட்டத்தைப் புலிகள் எப்படி முறியடித்தனர் என்பதை அவ்வியக்கப் போராளியொருவர் 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த தினசரியொன்றில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார். “...உழவு இயந்திரத்தின் தேவையை எமது சொந்த வளத்தால் மாற்றீடு செய்ய நாம் யோசித்தோம். வன்னிப் பிராந்தியத்தின் இன்னொரு பெரும் வளமான காளை மாடுகளைப் பயன்படுத்த எண்ணினோம். இதன்படி 1991 ஆம் ஆண்ட…

    • 4 replies
    • 853 views
  3. தமிழீழக் கடற்பரப்பில் இருந்து சர்வதேசக் கடற்பரப்பிற்கு சென்று தமிழீழத்திற்க்கு பலம் சோ்க்கும் பணிகளை கடற்புலிகளின் படையணிகளான சாள்ஸ் படையணி மற்றும் நளாயிணி படையனிகள் மேற்கொண்டது. இதில் கப்பலில் சாள்ஸ் படையணியினருடன் மக்களில் சிலரும் பங்குபற்றியிருந்தனர். இவ் விநியோக நடவடிக்கை சாலையிலிருந்தே மேற்கொள்ளப்பட்டது. இந் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக கடற்புலிகளின் சண்டைப் படகுகள் முறையே வட்டுவாகலில் சாள்ஸ்B நளாயிணிB படையணிகளும் செம்மலையில் வசந்தன் படையணியும் சுண்டிக்குளத்தில் நரேஸ் படையணியும் மாதவி படையணியும் நிலைகொள்ள, இம் மூன்று படையணிகளையும் கடலில் நடந்த பாதுகாப்பு சமர் நடவடிக்கைகளை கடற்புலிகளின் துணைத் தளபதி வழிநடாத்தி அதன் மூலம் தமிழீழத்திற்கு பொருட்கள் கொண்…

    • 4 replies
    • 723 views
  4. பாருங்கள் ஒரு பழைய கால கப்பல் ..........ஆனால் கொஞ்சம் உற்றுப்பாருங்கள் ....... தெரியவில்லையா...............நான் இதை நேரடியாக பார்த்ததும் என் மனதில் பட்டென்று அடித்தது .ஒரே விடயம்தான்..........எம்மை ஆக்கிரமித்த ஆக்கிரமிப்புச்சின்னங்களில் ஒன்று ........... ஆம் இந்தக்கப்பல் மூலமாகத்தான் ஒல்லாந்தர் அன்று எம்மண்ணுக்குள் பிரவேசித்து எம்மை அடிமை ஆக்கினர் ....இதன் பெயர் BATAVIA இது தற்போது ஹொலண்டில் lelystad என்னும் இடத்தில் தரித்துநிற்கிறது. இதை இனி பாவனைக்கு பயன்படுத்தமுடியாது .......தற்போது காட்சிப்பொருளாக சுற்றுலா பயணிகளின் மனதை கொள்ளை கொள்வதற்காக பாவிக்கப்படுகிறது......ஆனால் உள்ளே எழுதப்பட்ட வசனம் 1602 இலிருந்து 1799 வரை ஆசியாவுடன் பெரும் வர்த்தகத்தில் ஈடுபட்ட கப்…

  5. அபிராமியின் வலது கையும் சில கிபிர் விமானங்களும் ப்ரதீப் குணரட்ணம் படம் | Wikipedia முன் கதை - 01 சமீபத்தில் நண்பன் ஒருவன், “தங்கச்சிக்கு சாமத்திய வீடு செய்யிறம். வாடா…” என்று அழைத்தான். நான் ஏன்டா? என்றேன், அவன் நான் ஏதோ பகிடிக்கு கேக்கிறன் எண்டு நினைச்சு, பதில் ஒண்டும் சொல்லாம போட்டான். பின் கதை - 01 2008ஆம் ஆண்டு வன்னில நடந்த கதை இது. அப்ப நாங்கள் சின்ன பெடியள். வீட்டு கவலை, நாட்டுக் கவலை எத பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் அப்ப நாட்டு பிரச்சினை எண்டு கவலை பட்டது ஒண்டே ஒண்டுக்கு தான். அது கிபிர் விமானம். உங்களுக்கு எத்தின பேருக்கு கிபிர் விமானம் தெரியும்? சண்டை நடந்த காலத்தில வன்னில இருந்த சின்ன பெடியள கேட்டா கிபிர் பற்றி கதைகள் ஏராளம் …

  6. அப்பா இருக்கிறதாலதானே அம்மா இப்பவும் பொட்டு வைக்கிறார் அவர் வருவார்….. October 7, 2018 அம்மா இப்பவும் பொட்டு வைக்கிறதால அப்பா இருக்கிறார் காணாமல் ஆக்கப்பட்டவரின் மகள் கனியிசை– மு.தமிழ்ச்செல்வன் அப்பா எப்ப வருவார்?, அவர் வருவரா? ஏன் என்ர அப்பாவை இன்னும் விடவில்லை? அப்பா இருக்கிறார்தானே? அப்பா இருக்கிறதாலதானே அம்மா இப்பவும் பொட்டு வைக்கிறா? எனக் கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றால் கனியிசை. 2006 ஆம் ஆண்டு பிறந்த கனியிசை தற்போது ஏழாம் தரத்தில் கல்வி கற்கின்றாள். இவளது தந்தையும் காணாமல் ஆக்கப்பட்டோர்கள் பட்டியலில். 2009.05.16 அன்று உறவினர்களுடன் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இலட்சக்கணக்கான பொத…

  7. அப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன் March 24, 2019 எல்லா அப்பாக்கள் போன்று நானும் எனது மகன் என்னை அப்பா என்றழைக்கும் அந்த தருணத்திற்காக காத்திருந்தேன். ஓமந்தை தடுப்பு முகாமில் நான் எதிர்பார்த்து காத்திருந்த அத்தருணம் வந்தது. தாயுடன் என் மகனை ஆறு மாதங்களுக்கு பின் சந்திருக்கிறேன். இப்போது அவன் மழலை மொழியில் பேசுகிறான். அந்த மழலை மொழியில் அப்பா என்று கூப்பிடுவான் என்ற ஆவலோடு அருகில் சென்றேன். மாமா என்றான் என் நெஞ்சுக்குள் தற்கொலை தாக்குதல் நடந்து போன்றிருந்தது. அந்த வார்த்தை இடியாக இதயத்திற்குள் இறங்கியது. திகைத்து போய் நின்றேன். மனைவி விறைத்து போய் நின்றாள் அவளது முகத்தில் கண்ணீர…

    • 1 reply
    • 1.9k views
  8. அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் மறக்கப்பட்ட பக்கம் July 5, 2018 ♦ தமிழ்செல்வன் முன்னாள் யாழ் மாவட்ட எம்.பி அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாவது ஆண்டு நினைவுநாள் கடந்த மாதம் அனுட்டிக்கப்பட்டது. அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் நினைவுநாள் நிகழ்வில் பலர் உரையாற்றிய போதும், அவரைப்பற்றிய முழுமையான சித்திரத்தை உருவாக்க முடியவில்லை. கொஞ்சம் அப்பாத்துரை விநாயகமூர்த்தி நினைவுநாள், நிறைய அரசியல் மேடையாக- வழக்கமான தமிழ் மேடையாகவே அது முடிந்தது. பொதுவாகவே நமது சமூகத்தில் ஒரு இயல்புண்டு. மரணமடைந்தவர்களை அதீத மேன்மைப்படுத்தியே பேசுவோம். அந்த மேன்மையுடன் அவரது உண்மையான வரலாற்றை பேசுவதில்லை. இறந்தவருக்கான மேன்மையென்பது நாம் சொல்லும் முறையிலேயே இருக்க வேண்டுமே தவிர, …

  9. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்: சுதர்சன் 08/27/2015 இனியொரு... தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் பிறந்த நாள் நிகழ்வு நேற்று -26/08/2015- தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்டக் கிளையின் இன்று நடத்தப்பட்டது. 1949 ஆம் ஆண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்ட இளைஞன் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1952 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் பாராளுமன்றம் செல்வதற்காகத் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். எஸ்.ஜே.வி.செல்வநாயகம் மற்றும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்ற கொழும்புசார் அரசியல் தலைவர்கள் செல்வாக்குச் செலுத்திய காலத்தில் நடுத்தரவக்கக் குடும்பத்திலிருந்து தோன்றிய உள்ளூ…

  10. சிறிலங்காவில் பெற்றோலின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு [வெள்ளிக்கிழமை, 5 சனவரி 2007, 06:04 ஈழம்] [பா.பார்த்தீபன்] சிறிலங்காவில் பெற்றோலின் விலை 5 ரூபாயினால் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவிலிருந்து அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. ஒரு லீற்றர் ஓக்ரேன் 90 பெற்றோலின் விலை 97 ரூபாயாகவும் ஒரு லீற்றர் ஓக்ரேன் 95 பெற்றோலின் விலை 100 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. உலக சந்தையில் ஏற்பட்ட எண்ணை விலை அதிகரிப்பே இந்த விலை உயர்வுக்கான காரணம் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பெற்றோலின் விலையில் அதிகரிப்பு ஏற்படாவிட்டால் 175 மில்லியன் ரூபாயை இழக்க வேண்டி ஏற்படும் என்று கடந்த வாரம் கூட்டுத்தாபனம் அறிவ…

  11. அமெரிக்க தமிழர்கள் கைது ஒரு சத்தியத்திற்கு மாறான கொடூர நிகழ்வை அறிந்தவன், அவன் ஒரு கோழையாக இருந்தாலும் அதற்குரிய எதிர்ப்புணர்வை காட்டியே தீருவான். - FBI யின் தரம் குறைந்த புலனாய்வு அணுகுமுறை. தம் சொந்தங்களின் தாங்கமுடியாத இழப்பின் காரணமாக உணர்வுகளால் உந்தப்பட்ட அப்பாவித் தமிழர்கள் சிலரை ஏமாற்றி, தம் சதிவலைக்குள் சிக்கவைத்து அதனை தம் புலனாய்வு வெற்றியாக தம்பட்டமடிக்கும் தரங்குறைந்த புலனாய்வு செயற்பாடொன்றை அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சமஷ்டிப் புலனாய்வுப் பணியகம் (FBI) அரங்கேற்றியுள்ளது. இந்த வகையில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய முயன்றார்கள் எனக் கூறி எட்டு அப்பாவித் தமிழர்களை (FBI) கைது செய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளது. உலகெங்கும் வாழும் த…

  12. அமமனீல்ஸ் கோட்டை தெரியுமா.? இலங்கையில் ஐரோப்பியர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட பல கோட்டைகளில் இந்த அம்மன்னீல் கோட்டை முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக விளங்குகின்றது. அதற்கு பிரதான காரணம், கடலின் மத்தில் அமைந்துள்ளதும் இக்கோட்டையின் அழகிய தோற்றமுமாகும். 17 ஆம் நூற்றாண்டின் காலப்பகுதியில் போர்த்துக்கேயர்களால் யாழ்ப்பாண மாவட்டதில் காரைநகர்த் தீவுக்கும்,வேலணை என்ற தீவுக்கும் இடையில் மத்தியக் கடலில் இக்கோட்டையானது கட்டப்பட்டுள்ளது. ஒடுங்கிய கடல் நிலப்பகுதியிலுள்ள சிறிய மணற்திட்டு ஒன்றில் அமைந்துள்ள இக்கோட்டையானது, ஊர்காவற்துறை கடற்கோட்டை, அம்மன்னீல் கோட்டை போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் ஐரோப்பியர்களின் ஆதிக்க சின்னமாக காணப்படும் இக்கோட்டையானது 17ஆம் ந…

  13. மரணித்த ஈழத்தின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தனின் பாடல்கள் சில ..... கள உறவுகளே நீங்களும் உங்களுக்குத் தெரிந்த பாடல்கள இணையுங்கள் ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா -தமிழ் ஈழம் தரப்போகிறாவே நந்தலாலா.... ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்ட உவகையில் சாந்தன், சுகுமார் கூட்டில் வெளிவந்த பாடல் ஆகும். ஒருவித நையாண்டித் தன்மையோடு அமைந்த பாடல். இப்பாடலை கவிஞர் புதுவை இரத்தினதுரை இயற்றியுள்ளார். இசைவாணர் கண்ணன், முரளி இணைந்து இசையமைத்துள்ளார்கள். மலையவன் ஒலிப்பதிவு செய்துள்ளார். தர்மேந்திரா கலையகத்தில் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகத்தினால் தமிழீழத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனையிறவு (2001) இறுவட்டில் இடம்…

  14. அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டதை காரணம் காட்டி அவுஸ்திரேலியா குயின்ஸ்லாந்து பல்கலைகழகம் அறிவித்த முனைவர் (Doctorate) பட்டத்தை வாங்க மறுத்த அமிதாப்பச்சன் இலங்கையில் தமிழ் இனமே அழிக்கப்பட்ட அம்மண்ணில் குத்தாட்டம் போட செல்வது ஏன்? விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கையை அமிதாப் பச்சன் நிராகரித்துள்ளார் - சிங்கள ஊடகம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சன் நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாம் எனவும் அமிதாப் பச்சனிடம் புலி ஆதரவாளர்கள் கோரியுள்ளனர். …

  15. அமெரிக்கக் கழுகுகளும் ஈழத்துச் செண்பகங்களும் ஐம்பது வருடங்களுக்கு முன்னால், அமெரிக்காவின் அப்போதைய அதிபரான ஜோன். எவ். கென்னடி அமெரிக்கர்கள் அனைவருக்குமான ஓர் அவசர வேண்டுகோளை விடுத்திருந்தார். அது, அமெரிக்காவின் தேசியப் பறவையான மொட்டந்தலைக் கழுகு தொடர்பானது. ‘கொடூரமான அழகும் பெருமிதமான சுதந்திரமும் கொண்ட மொட்டந்தலைக் கழுகு அமெரிக்காவின் வலிமைக்கும் சுதந்திரத்துக்குமான மிகப் பொருத்தமான குறியீடு. இந்தப் பெரும் பறவையை அழிந்து போவதற்கு அனுமதித்தால் நாம் நம்பிக்கைத் துரோகம் இழைத்தவர்கள் ஆவோம்’ – என்று அறைகூவல் விடுத்திருந்தார். இது போன்றதொரு எச்சரிக்கையை, ஈழத்தில் நமது செண்பகப் பறவைகளுக்காகவும் விடுக்க வேண்டிய அவலம் இப்போது நேர்ந்திருக்கிறது. *** உலகில் இதுவரையி…

  16. அமெரிக்கா அட்லாண்டாவில் நடைபெற்ற தெருக்கூத்து - ஈழம்

  17. ஒருதிரியில் நிழலி வழங்கிய ஆலோசனைக்கு அமைய இத்திரி திறக்கப்படுகிறது! அவரது ஆக்கபூர்வமான ஆலோசனைக்கு நன்றிகள்!!! பல தனித்தனி இராச்சியங்களாக இருந்துவந்த இலங்கையை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்த பிரித்தானியர் இலங்கையைவிட்டு 1948 இல் அகன்ற பின்னர், ஜனநாயகம் என்ற போர்வையில் ஆட்சியை தொடர்ந்து கைப்பற்றிவரும் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசுகள் கட்டம் கட்டமாக திட்டமிட்ட தமிழின அழிப்பை 1950 களில் இருந்து இன்றுவரை அரங்கேற்றி வருகின்றனர். தமது சொந்த நலன்களுக்காக பல்வேறு பிறசக்திகளும் தமிழின அழிப்பில் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசுகளுக்கு உடந்தையாக இருந்துவந்துள்ளன. இதில் "அகிம்சை", "ஜனநாயகம்" போன்ற வேடங்களைப் பூண்டிருக்கும் அயல்நாடான இந்தியாவின் பங்களிப்பு மிகையானது. ஈழத்தமிழர் மீது…

    • 10 replies
    • 3.7k views
  18. அம்பனும் குரங்கும். நோர்வேயில் இருந்து வந்த எனது நண்பனை பார்க்க அம்பனுக்கு இன்று போயிருந்தேன். இதுவரையில் பருத்தித்துறைக்கு பஸ்ஸிலே போகாத எனக்கு நேரம் கணிப்பிட முடியவில்லை. எப்படியும் ஒரு மணித்தியாலம் அல்லது ஒன்றரை என்று யோசித்தபடி பஸ்ஸில் ஏறி அம்பனுக்கு போக எடுத்தது இரண்டரை மணிநேரம். அட யாழ் குடாநாட்டுக்குள்ளே இருக்கிற அம்பனுக்கு போக இவ்வளவு நேரமா? அம்பன் என்பது பருத்தித்துறை நாகர்கோவில் வீதியில் குடத்தனைக்கும் நாகர்கோவிலுக்கும் இடையில் அமைந்துள்ள கிட்டத்தட்ட 250 குடும்பங்கள் வாழும் ஒரு கிராமம். வெறும் பனையும் மணலும் கட்டாந்தரையுமா இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் போன எனக்கு ஆச்சரியம்தான் மிஞ்சியது. பச்சை பசேலென்று காணிகளும், வீடுகளும், நெல்லு இல்லாத காய்ந்த வயல்…

  19. அம்பலத்திற்கு வந்த “ஆவா“ குழு விபரம் -நேரடி றிப்போட் கடந்த இரண்டு வாரங்களாக யாழ்ப்பாணத்தையும் கொழும்பையும் ஆட்டிப்படைத்த “ஆவா குழு“ தொடர்பான முக்கிய விடயங்கள் தமிழ்கிங்டொத்தின் விசேட செய்திப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் உண்மையிலேயே ஆவா குழு யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது அதன் உறுப்பினர்கள் யார் யார் செயற்படுகின்றார்கள் என்ற விடயங்களை விசாரித்தபோது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவாகுழுவோ அல்லது இன்னொரு பிரிவாக செயற்படுவதாக சொல்லப்படும் சன்னாகுழு எனப்படுவதன் தோற்றம் மற்றும் அதனை தோற்ற…

  20. அம்பாறை திராய்க்கேணி தமிழின படுகொலை-06.08.1990

  21. அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் இருந்து மறைந்து போகும் ஒரு சைவத் தமிழ்க் கிராமம் Posted on January 7, 2023 by தென்னவள் 45 0 அண்மையில் மட்டக்களப்பின் சமூக ஆர்வலரும், வரலாற்றுப் பட்டதாரியுமான திரு.வை.சத்தியமாறன் இணையதளம் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தில் உளள புராதன சிவன் ஆலயம் ஒன்றின் புகைப்படங்களைப் பிரசுரித்து அவ்வாலயம் தமிழர்களால் பாதுகாக்கப்படவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அப்புகைப்படங்களில் இருந்து அது ஒரு புராதன ஆலயமாக இருக்கலாம் என்பதை கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் எஸ். சிவகணேசனிடம் எடுத்துக் கூறிய போது அவ்விடத்தில் ஆய்வு செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் அவர் மேற்கொண்டிருந்தார். …

    • 0 replies
    • 520 views
  22. (படுவான் பாலகன்) அம்பிளாந்துறையில் சித்திரைப் புத்தாண்டை சிறப்பித்து ஊஞ்சல் விழாவும் கலாசார விளையாட்டு நிகழ்வும் வியாழக்கிழமை கதிரவன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. அம்பிளாந்துறை கதிரவன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மிகவும் நீண்டகாலமாக கிராமத்தில் அமைந்துள்ள வாகை மரத்தில் ஊஞ்சில் இட்டு தேங்காய் உடைக்கப்பட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஊஞ்சலினை ஆரம்பித்து வைத்தார். பின் பெரியவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் பாரம்பரிய பாடல்களைப்பாடி ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தனர். விளையாட்டு கழகத்தின் தலைவர் கு.நமசிவாயம் தலைமையில் இடம்பெற்ற ஊஞ்சல் நிகழ்வினை தொடர்ந்து மிட்டாய் ஓட்டம், முட்டி உடைத்தல், கிடுகு பின்னுதல், தேங்காய் திர…

    • 0 replies
    • 940 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.