எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
http://youtu.be/cyb2MhspJFw
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழப்புயல்கள் வழங்கும் பாடல் : முள்ளிவாய்க்கால் சொல்லிய சேதி ... குரல் : நாதன் (நெதர்லாந்து) பாடல் வரிகள் : ஈழப்பிரியன் (ஜேர்மனி) இசை : சேகர் - தமிழ்சூரியன் (நெதர்லாந்து) Eelappuyalkal Presents Song: Mullivaaikkaal Solliya Sethi... Vocal : Nathan (Netharland) Lyrics:Eelappriyan (Germeny) Music:Sekar - Tamilsooriyan (Netharland) https://www.youtube.com/watch?v=RzZNccVNBHc
-
- 2 replies
- 906 views
-
-
இது எந்த ஊருங்கப்பா? இணையத்தில் மதுரையில் பொறியியல் சம்பந்தமான திட்ட வேலைகளை தேடியபோது இந்த படங்கள் கிடைத்தன.. ஒரு மாதத்திற்கு முன் எடுத்த இந்த படங்களில் மிளிர்வது இது உங்கள் தாய் மண் போல் தெரிகிறது... சரி பாருங்கள் உறவுகளே..!
-
- 8 replies
- 1.3k views
-
-
முள்ளிவாய்க்கால்: துயரத்தின் முகவரி ஈழத்தமிழர்களுடைய வாழ்க்கை முள்ளிவாய்க்காலுக்கு முன், முள்ளிவாய்க்காலுக்குப் பின் எனப் பிரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு அதாவது 2013ஆம் ஆண்டு, முள்ளிவாய்க்காலுக்குப் போயிருந்தேன். திட்டமிட்ட இனப்படுகொலை நடந்த அந்த இடத்தைப் பார்த்தபோது, வரலாறு கண்ணீர்சிந்திய இடத்தில் நின்றுகொண்டிருப்பதைப் போல உணர்ந்தேன். ஏற்கெனவே இணையத்தில் வெளியாகிய புகைப்படங்களிலும் காணொளிகளிலும் பார்த்த இடந்தான். என்றாலும், நேர்முகமாகப் பார்த்தபோது வார்த்தைகளில் சொல்லிவிட இயலாத வலியை அனுபவித்தேன். தென்னை மற்றும் பனைமரக் குற்றிகளால் அரணமைக்கப்பட்ட பதுங்குகுழிகள் உட்சரிந்திருந்தன. மண்ணுள் புதையுண்ட துணிகளதும் நீலநிறக் கூடாரத்துண்டுகளதும் சிறிய பகுதிகள் வெளியி…
-
- 1 reply
- 597 views
-
-
ஈழப் போராட்டத்தில் முக்கிய வரலாற்று விடயமாக நடந்த வட்டுக்கோட்டை பிரகடனம் செய்யப்பட்ட நாள் இன்றாகும். வட்டுக்கோட்டைத் தீர்மானம் யாழ்பாணத்தின் வட்டுக்கோட்டையில் 1976 மே 14 ம் திகதி நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும். தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்பதே அத் தீர்மானத்தின் சாராம்சம் ஆகும். 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர் பிரதேசங்களில் பெரும் வெற்றி பெற்றது. ஈழத்தமிழர்களுக்காக ஈழத் தந்தை எனப்படும் செல்வநாயகம் தலைமையில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டை எனும் இடத்தில் ஒரு பிரகடனம் செய்தனர். 01. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம…
-
- 0 replies
- 463 views
-
-
இலங்கையின் இரவுகளும் வெள்ளைவான் கடத்தல்களும் கருணாகரன் லீனா மணிமேகலையின் 'White Van Stories' (வெள்ளைவான் கதைகள்) - கொடிய வாழ்க்கையின் நேரடிச்சாட்சியம் வயதை மீறி, ஒடுங்கிய கன்னங்களோடும் ஒளிமங்கிய கண்களோடும் ஓர் இளம் பெண், கையிலே தன்னுடைய கணவரின் படத்தை ஏந்திக் கண்ணீர் விட்டபடி கதறி அழுது கொண்டிருக்கிறாள். அவளின் இடுப்பில் ஒரு குழந்தை. அவளுடைய கால்களைப் பற்றி அணைத்தபடி இன்னும் இரண்டு பிள்ளைகள். ஐந்து ஆண்டுகளாக தன்னுடைய கணவரைத் தேடிக்கொண்டிருக்கிறாள். 2009 இல் ஒரு முன்னிரவில் திடீரென அவர்களின் வீட்டுக்கு வந்த யாரோ அவளுடைய கணவரைக் கடத்திக் கொண்டு போனார்கள். அவள் அழுது புலம்பினாள். காற்றிலே அவளுடைய குரலும் அவளுடைய கணவரைக் கடத்திச் சென்ற 'வாகனத்தின்' சத்தமும் கரை…
-
- 0 replies
- 691 views
-
-
எமது நிலம் எமக்கு வேண்டும்! படம் | கட்டப்பரிச்சான் முகாம் வீடுகள் எமக்கு மாற்றிடமும் தேவையில்லை, நஷ்டஈடும் அவசியமில்லை. எமக்கு சம்பூர் நிலமே வேண்டும் என்கிறார் கட்டப்பரிச்சான் இடம்பெயர் முகாமின் தலைவரும் மூதூர் மீனவ சங்கத் தலைவருமான கிருஷணப்பிள்ளை. “மாற்றுக் காணிக்கு போகவேண்டுமாக இருந்தால் இத்தனை வருஷம் காத்திருக்கத் தேவையில்லை. எப்போதோ நாங்கள் போயிருப்போம். இத்தனை வருட காலமாக எமது நிலத்துக்கு போய்சேர்வதற்காகவே காத்திருக்கிறோம். எமக்கு எமது நிலம்தான் வேண்டும்” என்கிறார் கிருஷ்ணப்பிள்ளை. சம்பூரில் உயர் பாதுகாப்பு வலயத்துக்காக மேற்கொள்ளப்பட்ட நிலக்கையகப்படுத்தல் முயற்சியில் நிலமிழந்த மக்களுக்கு, இழப்பீடு வழங்க 300 மிலியன் ரூபா நிதி ஒதுக்கியிருப்பதாக உயர்நீதி…
-
- 2 replies
- 625 views
-
-
இப்படியொரு அம்மாக்கள்… ஜெரா காணாமல்போன பிள்ளையின் அம்மாக்கள். ‘இப்படியொரு அம்மாக்கள்’ நம் மத்தியில் உலாவுகின்றனர். அவர்களுடனான ஒருநாள் வாழ்தல் எப்படியானது. புகைப்படங்களைத் தாங்கி அவர்கள் நடத்தும் போராட்டத்தை ரசிக்கும்பொழுதும், அதை செய்தியாக படிக்கும்போதும், கண்ணீர் ததும்பும் அந்தக் கண்களை நிழற்படங்களில் தரிசிக்கும்போதும், அவர்களிடம் செய்தி சேகரிக்கும்போதும், அந்தத் தாய்களின் ஒருநாள் எப்படியானதென்றோ, அந்தக் குடும்பங்களின் ஒரு இரவு எப்படியானதென்றோ யாரும் நினைத்துப் பார்த்ததுண்டா? உதாரணத்துக்கு ஒரு தாயின் நாளொன்றை அனுபவித்ததுண்டா? அந்த வாழ்தலை கற்பனைகூட செய்துபார்க்க தவறியவர்கள் கட்டுரையினுள் நுழையலாம். முதல் நாள் இரவு எப்போது முடிந்ததென்று அந்த அம்மாவுக்கு தெரி…
-
- 4 replies
- 1.3k views
-
-
இயக்கச்சி - காணாமற்போன 'வல்லியக்கன்' கருணாகரன் 'வல்லியக்கனைத் தெரியுமா? ஒரு காலம் உங்கள் ஊரில் வல்லியக்கன் என்றொரு கோயில் இருந்தது. பிறகு அது மருவி அந்தக் கோயில் கிருஷ்ணன் கோவிலாகி விட்டது' என்றார் பொ.ரகுபதி. பொ.ரகுபதி இலங்கையின் புகழ்மிக்க வரலாற்றுத்துறைப் பேராசிரியர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் வல்லியக்கன் என்ற சிறுதெய்வ வழிபாட்டைப் பற்றி அவர் செய்த ஆய்வு 'வல்லியக்கனும் வல்லிபுரநாதரும்' என்ற நூலாக வந்திருக்கிறது. ரகுபதி குறிப்பிட்டுள்ளதைப்போல வல்லியக்கன் கோயில் இருந்த இடத்தில் இப்பொழுது மல்வில் கிருஷ்ணன் குடியமர்த்தப்பட்டிருக்கிறார். வல்லியக்கனை வழிபட்டவர்கள் இன்று அங்கேயில்லை. பதிலாக இப்பொழுதிருக்கும் கிருஷ்ணன் கோவிலுக்கு ஏகப்பட்டவர்கள் பங்காளர்களாக இருக்கிறார்கள். இ…
-
- 4 replies
- 1.7k views
-
-
எட்டு வருடங்களாக அகதியகளாயிருக்கும் சம்பூர்மக்கள் - குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- 27 ஏப்ரல் 2014 சம்பூர் மக்கள் இடம்பெயர்ந்து நேற்றோடு எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னமும் தங்கள் ஊருக்குத் திரும்பாமல் அகதிமுகாங்களில் வாழும் இந்த மக்களின் போராட்டம் என்பது உக்கிரமானதொரு வாழ்தலே. ஈழத் தலைநிலம் திருகோணமலை மாவட்டத்தின் இத் துயர் என்பது ஒட்டுமொத்த ஈழம்மீதும் படிந்திருக்கும் பெருந்துயர். உலக அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 7.6 மில்லியன் மக்கள் இன்னமும் அகதிகளாக உள்ள நிலையில் ஒவ்வொரு 41.1 விநாடிக்கு ஒருவர் அகதியாகிக் கொண்டிருக்கிறார். இந்த அகதிகளின் எண்ணிக்கையில் ஈழ அகதிகளும் குறிப்பிட்டளவு பங்கை வகிக்கின்றனர். இலங்கையில் நடந்த யுத்தம்…
-
- 0 replies
- 522 views
-
-
ஆதரவாக இருக்கவேண்டிய சிறுவர் இல்லங்கள்… யுத்தத்தினால் பெற்றோர்களை இழந்த மற்றும் குடும்பப் பிணக்குகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பராமரிப்போர் தொடர்பான உண்மை நிலையை முறைப்படி அறிந்துகொள்ளாது அவர்களின் ஒப்புதலுடன் பணத்தைப் பெற்றுக்கொண்டு பிள்ளைகளை சிறுவர் இல்லங்களில் தங்க வைப்பதாக குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. பதியப்படாமல் இயங்கி வரும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் உள்ள சிறுமிகள் தொடர்பிலும் அவர்களைக் கொண்டு வந்து இணைந்து விடுவோர் தொடர்பிலும் நிர்வாகத்தினர் தகுந்த ஆதாரங்களைக் கேட்டு ஆராயாமல் இணைத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் இவ்வாறானதொரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வவுனியா அருகில் இயங்கி வரும் மடத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்…
-
- 4 replies
- 803 views
-
-
வணக்கம் உறவுகளே எம் கள கவி நாயகன் கவிதையின் வரிகளில் முள்ளிவாய்க்கால் கோரத்தில் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்கான பாடலின் முன்னோட்டம் ......... நன்றிகள்.
-
- 0 replies
- 927 views
-
-
(நன்றி: மனசாட்சி எனும் வலைப்பூவில் இருந்து..!!) “சிலோன் முதல் ஈழம் வரை“ அறிமுகம். 2008ல் ஈழத்தமிழர்கள் மீதான ஈர்ப்பில் “சிலோன் முதல் ஈழம் வரை“ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை தொகுத்தேன். 2009ல் போரின் உச்சத்தால் அதை அப்படியே மூடிவைத்துவிட்டேன். முள்ளிவாய்க்கால் போருக்குபின் 2012ல் தொகுப்பின் இறுதி பகுதியை முடித்திருந்தேன். புத்தகத்தின் உள் தலைப்புகள்.......... 1.இலங்கை வரலாறு. 2.சுதந்திர தீவான இலங்கை. 3.மலையக மக்களின் வாழ்வும் துயரமும். 4.இன கலவரம். 5.ஆயுத குழுக்கள். 6. விடுதலைப்புலிகள். 7. இந்தியாவி (ல்) ன் காதல்!. 8. இராஜிவ் காந்தி கொலை!. 9. தமிழகத்தின் நிலை. 10. சண்டையும் சமாதானமும். 11. தமீழிழம் நோக்கி . . . . . 12. தளபதிகள் - துரோகிகள். 13. …
-
- 14 replies
- 9.4k views
-
-
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தனித்துவம் இருக்கின்றன. அதை மேலாதிக்கம் என்பது அடக்கி தன்வசப்படுத்த முயல்கின்றன. ஒரு காலத்தில் கிரந்தமொழியான சமஸ்கிருதம் செய்தததை இன்று ஆங்கிலம் செய்கின்றது.அதை விட மேலாக. நாளைக்கும் இனவுனர்வு இருந்தால் யாராவது போராடுவார்கள். ஒரு இனத்தின் அழிவு, ஒரு மொழியின் அழிவு என்பது பேசும் மக்கள் அளவே கணிக்கின்றது. ஒரு மொழியைப் பேசுபவர்கள் இல்லாது போனால், அந்த மொழி அழிந்துவிடுகின்றது. பார்ப்பானர்களைத் தமிழர் இல்லை எனத் திராவிடம் தமிழர்களின் அளவினைக் குறைக்க முயல்வதாகவே என் சந்தேகம் உள்ளது. இதில் முதலாவதாக இணைக்கப்படுபவர்கள் தோடா மொழி பேசுபவர்கள். இன்று இவர்களின் சனத்தொகை 600 பேரிலும் குறைவு. இவர்கள் தமிழ்மொழியைப் பேசுவர்களாக மாறிக் கொண்டுள்ளனர். இரு…
-
- 3 replies
- 1.7k views
-
-
-
- 5 replies
- 999 views
-
-
இலங்கை படையில் இணைக்கப்பட்ட வீராங்கனைகளை பயிற்சியின் போது இராணுவ பயிற்சியாளர்கள் துன்புறுத்துவதாக வெளியான வீடியோ உண்மையானது என்று இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது இந்த வீடியோ காட்சிகள் யூடிப்பில் வெளியான நிலையில், அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு இராணுவ தளபதி உத்தரவிட்டிருந்தார். இதன்படி நடத்தப்பட்ட விசாரணைகளில், இந்த சம்பவம் 2012 ஆம் ஆண்டு அநுரதபுரத்தில் வைத்து புதிதாக இணைக்கப்பட்ட பெண் சிப்பாய்களுக்கு எதிராக இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. இராணுவத்தில் தண்டனைகள் இருக்கின்ற போதும் குறித்த சம்பவம் தனிப்பட்ட ரீதியில் வழங்கப்பட்ட தண்டனையை போல உள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி தண்டனை வழங்குமாறு இராணுவ தளபதி உத்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
என் நண்பறும் நெருங்கிய தோழருமான மல்லிப்பூ சந்தி திலகர் அப்பா பற்றி பற்றி நான் எழுதிய குறிப்பொன்றில் நான் அப்பாவின் இறுதிச்சடங்கில் “முற்போக்களராக இருந்தும் அப்பாவின் மரண சடங்குகள் அணைத்தையும் மரபு ரீதியாக செய்து அவருக்கு மரியாதை செய்தீர்கள்..” என தவறுதலாக வெளியிட்ட ஒரு குறிப்பொன்ற மறுத்து எழுத வேண்டியதாயிற்று. அதனைத்தொடர்ந்த கருத்து பரிமாறலில் சில சுவாரஸ்யமான அனுபவங்களையும் அவர் பகிர்ந்திருந்தார். "....இலக்கிய கூட்டங்களுக்குப் போகும் போது வாசலில் கும்பம் வைத்து வரவேற்பதாக விபூதிபூசி, பொட்டு வைத்து நம்மை வரவெற்கும் வழமை உண்டு. சில நேரங்களில் இந்த முறைமை நம்மை சங்கடப்படுத்துவதாகவும் இருக்கும். ஆனாலும் எவ்வித கோட்பாட்டுச் சித்தாந்தங்களும் அறியாமல்வருவபர்களை ‘கெளரவிப்…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஊர் கூடி இழுத்தால் தேர் மட்டுமல்ல எம் தேசமும் கையில் வரும். 'ஒற்றுமை' என்ற வலிமையான ஆயுதத்துடன் எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி ஜ.நா.வை முற்றுகையிடுவோம். இதற்கு வலுசேர்க்கும் வகையில் தனிஈழத்துக்கு ஆதரவாக (2013 மார்ச் மாதம்) தமிழ்நாட்டு மாணவர்கள் நடத்திய பெரும் போராட்டங்களை பதிவு செய்த அறப்போர் ஆவணப்படத்தில் இடம் பெற்ற எழுவோம் எழுவோம் விழ மாட்டோம் பாடல் காணொளி முதல் முறையாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பாடலை கண்டுகளிக்கவும். பாடலாசிரியர்; கவி பாஸ்கர் https://www.youtube.com/watch?v=UiSr_AqmQEA
-
- 0 replies
- 940 views
-
-
நம் எதிரி கிளிநொச்சி மீண்டான் என்ற செய்தி வலிக்கிறது. எனினும் கிளிநொச்சியின் விழுகை எமது எழுச்சிக்கு உத்வேகம் அளிப்பாதாய் அமைகிறது. மேற்படி கூற்றுக்கள் இரண்டும் ஒன்றோடொன்று முரண்படுவது போல்த் தோன்றினும் இங்கு முரண்பாடு ஏதுமில்லை. முதலில் கிளிநொச்சியின் விழுகை ஏன் நெஞ்சைப் பிழிகிறது என்று பார்த்தால், இக்கேள்வி பிறந்த கணத்திலேயே நம் மனக்கண்களில் விரிவோர் சென்ற தடவை கிளிநொச்சி மீட்பிற்காய் உயிர் நீத்தவர்கள் : மக்களும் மாவீரரும். ஒரு காலத்தில் ஒவ்வொரு மாவீரனது பெயரும் முகமும் தமிழ் மக்களிற்கு நன்றாய்த் தெரிந்திருந்தது. இன்று எண்ணிக்கை இருபதினாயிரத்தைக் கடந்து போராட்டத்தின் வீச்சு அபரிமிதமாய் பரந்துவிட்ட நிலையில் ஒவ்வொரு தமிழரிற்கும் சில பத்து மாவீரர்களின் முகங்களே ஞாபத்த…
-
- 7 replies
- 3.8k views
-
-
-
- 0 replies
- 656 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தாயார் பார்வதியம்மாள் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள். மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்து, ‘பிரபாகரனின் தந்தை நான்’ என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார். ‘நான்தான் அவர் அன்னை’ என்று மெல்லிய குரலால் சொன்னார் பார்வதி. 00:00 00:00 பரபரத்த இராணுவம், அவர்கள் இருவரையும் பனாகொடைக்கே கொண்டுபோய் ஏழு மாதங்கள் வைத்திருந்தது. எப்படி எல்லாம் அன்னையும் தந்தையும் துன்பம் அனுபவித்தனர் என்பதை அவர்கள் இருவர் மட்டுமே அறிவார்கள். 80 வயதான அன்னை பார்வதியம்மா உடல்நிலை சுகையீனமற்ற நேரத்திலும…
-
- 9 replies
- 1.7k views
-
-
நாவற்குழி படைமுகாம் மீதான தாக்குதலுக்கு 14.02.1987 அன்று வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி ஒன்று வெடிக்க வைத்த பின்னரேயே தாக்குதல் அணிகள் உட்புகுந்து முகாமைக் கைப்பற்றுவதெனத் திட்டம் தீட்டப்பட்டது. படைமுகாமின் வாயில் உள்ள படையினர் ஐயம் கொள்ளக்கூடாது என்பதற்காக படையினருக்கு குடிநீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் தண்ணீர் தாங்கி ஊர்தி (பவுசர்) போன்றதொரு ஊர்தி வெடிமருந்து நிரப்பப்பட்டது. எனினும் இறுதி நேரத்தில் தண்ணீர் தாங்கியிலிருந்து நீர் ஒழுகியது. இதனை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வேளை எதிர் பாராத வகையில் ஏற்ப்பட்ட வெடிவிபத்தில் காவியமான மூத்த தளபதி லெப்.கேணல் பொன்னம்மான், தென்மராட்சி பொறுப்பாளர் மேஜர் கேடில்ஸ், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் …
-
- 5 replies
- 681 views
-
-
12.02.2014 சத்தியமூர்த்தியின் நினைவு நாள்:- இன்று உடகவியலாளனும் கலை இலக்கியப் படைப்பாளியுமான பு.சத்திய மூர்த்தியின் 5-ஆம் ஆண்டு நினைவுநாள்... அறிவு இப்படிச் சொன்னாலும் மனமோ அவன் இன்னமும் எங்கோ இருக்கிறான்...வந்துவிடுவான் என்று அடம்பிடிக்கிறது. இன்னும்தான் எங்களால் நம்ப முடியவில்லை அவனது சாவை. வாழ்வு பற்றிய ஏராளம் கனவுகளேர்டு வாழ்ந்தவனை, காலம் வாழவிடாது அழைத்துச் சென்றுவிட்டது.... மன்னமபிட்டியில் பிறந்து... தீவகத்தில் வளர்ந்தவன்... பண்பான அன்பான பெற்றோரின் பிள்ளை... அமைதியும் சாந்தமும் அமையப்பெற்றவன்.... ஆனால். அந்த சிரித்த முகத்தையும், அந்த இளகிய இதயத்தையும் நாங்கள் இழந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன.. சத்தியமூர்த்தியின் 7 வயது நிரம்பிய பெண் குழந்தை…
-
- 1 reply
- 610 views
-
-
தமிழர் தாயகமான தமிழீழத்தின் தென் தமிழீழ மண்ணும் மக்களும் இந்த விடுதலை போராட்டத்துக்கு அளப்பரிய தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் செய்யக்கூடிய உறுதிமிக்க போராளிகளை உவந்தளித்துள்ளமை என்றுமே தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. உன்னதமான தலைவனின் தமிழீழ தேசிய விடுதலைப்போராட்ட கொள்கையை ஏற்று புறப்பட்ட அனைவருக்குப் பின்னாலும் நீண்ட வரலாற்று தாக்கங்கள் குடிகொண்டு இருந்தன தங்கள் கண்கள் முன்னால் சிங்கள அரச பயங்கரவாதத்தால் சொந்த உறவுகள் சுட்டு கொல்லப்பட்டதையும் தங்கள் பூர்வீக நிலத்தில் இருந்து மக்கள் விரட்டி அடிக்கப்பட்டதையும் தங்கள் தமிழ் மொழி,கல்வி, கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் என்பன புறக்கணிக்கப்பட்டு பாரபட்சம் காட்டப்பட்டு இழக்கப்பட்டு வருவதையும…
-
- 4 replies
- 751 views
-
-
என் நண்பன் ஒருவன் அனுப்பிய இணையதள முகவரி புகைப் படங்கள் அழகாக இருக்கின்றன. http://www.album2000.com/special/7865.html
-
- 6 replies
- 1.3k views
-