அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
தமிழ் மக்களின் தெரிவுகளில் ஆயுதப் போராட்டமும் ஒன்றா? பலருக்கு இதுகுறித்த பேச்சுக்களோ அல்லது கருத்துக்கள் முன்வைக்கப்படுவதோ அபத்தமாக நிச்சயம் தோன்றலாம். இத்தனை அழிவுகளுக்குப்பின்னரும் ஆயுதப் போராட்டம் குறித்து உன்னால் எப்படிச் சிந்திக்க முடிகிறது என்று கேட்கலாம். அப்படிக் கேட்பதிலும் அர்த்தம் இருக்கிறது. ஏனென்றால், பலரைப் பொறுத்தவரை ஆயுதப் போராட்டம் முற்றான தோல்வியைத் தழுவிக்கொண்டிருப்பதுடன் பேரழிவையும் எமக்கு விட்டுச் சென்றிருக்கிறது. தமிழ் மக்களின் மனங்கள் இனிமேல் ஆயுதப் போராட்டம் ஒன்றுகுறித்துச் சிந்திப்பதையே உளவியல் ரீதியாக முறியடித்து, அதனை அவர்களின் மூலமாகவே இயலாத காரியம் என்று நம்பவைப்பதில் சிங்களப் பேரினவாதம் பெருவெற்றி பெற்றிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. …
-
- 1 reply
- 418 views
-
-
பொறுப்புக் கூறலும் அபிவிருத்தி அரசியலும் உரிமை அரசியல் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுமா அல்லது அபிவிருத்தி அரசியலின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுமா என்று இப்போது சிந்திக்க வேண்டிய தேவை எழுந்திருக்கின்றது. கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இனப்பிரச்சினை இந்த நாட்டை உலுக்கி எடுத்து வருகின்றது. கூடவே அபிவிருத்தி தொடர்பான பிரச்சினையும் தமிழ் மக்களைப் பல்வேறு வழிகளில் வாட்டிக்கொண்டிருக்கின்றது. இனப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே அகிம்சை ரீதியிலும், ஆயுதமேந்திய வழிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன. மென்முறையிலும், வன்முறையிலும் மேற்கொள்ளப்பட்ட தமிழர் தரப்பின் வலிமையான போராட்டங்களினால், அரசுகள் பெரும் நெருக்கடிகள…
-
- 1 reply
- 508 views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
-
M.A.சுமந்திரன் அவர்கள் கலந்துகொண்ட UTV இன் The Battle நிகழ்ச்சி
-
- 1 reply
- 950 views
-
-
#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன.…
-
- 1 reply
- 2.4k views
-
-
பாவ மன்னிப்பு பெற்ற சிறீதரன்.. சுமந்திரனின் திடீர் மாற்றம் | இரா மயூதரன்
-
- 1 reply
- 440 views
-
-
Published By: VISHNU 20 JUL, 2025 | 06:08 PM ஆர்.சேதுராமன் இலங்கையில் முதலீடு செய்வதில், ஜப்பானிய நிறுவனங்கள் உட்பட அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மீள நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு, ஊழலை ஒழிப்பதும் நல்லாட்சியும் அவசியமான முன்நிபந்தனைகளாக உள்ளன என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா அண்மையில் கூறியுள்ளார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு இலங்கை தீவிரமாக முயன்றுவரும் நிலையில், ஜப்பானிய தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் கடந்த 4 ஆம் திகதி நடைபெற்ற 4 ஆவது ஜப்பானிய –இலங்கை பொருளாதார ஒத்துழைப்பு கொள்கை உரையாடலின்போது அவர் இதனை கூறினார். ஜப்பான் வெளியுறவு பிரதி உதவி அமைச்சரும், ஜப்பா…
-
- 1 reply
- 216 views
- 1 follower
-
-
சுவிஸ்லாந்து கருத்தரங்கு – நடந்தது என்ன? சிங்கள, தமிழ் உறுப்பினர்கள் பரஸ்பர உரையாடல் September 21, 2025 11:26 am 2015 ஏக்கிய இராஜ்ஜிய என்ற அரசியல் யாப்பை மீள புதுப்பிக்க ஏற்பாடு- இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை பற்றிய பேச்சுக்கள் தவிர்ப்பு– அநுராவுக்கு தமிழர்களின் ஆணையா? மறுத்து நிராகரித்த கஜேந்திரகுமார்… அ.நிக்ஸன்- வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வை வழங்கும் ஆணையை பெற்றுள்ளதாக ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் பெருமையுடன் வலியுறுத்திக் கூறியுள்ளது. ஆனால் இக் கருத்தை மறுத்துரைத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈழத் த…
-
- 1 reply
- 371 views
-
-
படம் | Dinuka Liyanawatte Photo, Reuters, Time | சீனாவின் நிதியுதவியுடன் கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கப்பட்ட பகுதி. சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜி சியான்லியாங் (Yi Xianliang) வடக்கில் துனைத் தூதரகம் ஒன்றை உருவாக்குவதில் தாம் ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு சாதாரண செய்தி. ஆனால். அரசியல் கண்கொண்டு நோக்கினால் இது மிகவும் முக்கியமானதொரு செய்தி. ஏற்கனவே இந்தியா யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் ஒன்றை நிறுவியிருக்கும் நிலையிலேயே சீனாவும் அவ்வாறானதொரு ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. சீன முதலீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதல் பகுதி 2010இல் திறந்துவைக்கப்பட்டது. இதே ஆண்டுதான் …
-
- 1 reply
- 483 views
-
-
கொய்யப்படும் மாகாண அதிகாரங்கள் இல. அதிரன் மனம் உண்டானால் இடமுண்டு. ஆனால், இலங்கையில் இந்த வார்த்தைக்குரிய அர்த்தம், யாருக்கும் தெரியாது என்பதே உண்மையாகிக் கொண்டிருக்கிறது. கேட்பதும் கிடைப்பதும் தேவையுள்ளவனுக்காக இருந்தால், அது சரியானதாக இருக்கும். இலங்கை சுதந்திரமடைந்தது முதற்கொண்டு உருவான தமிழர்களின் உரிமைக்கோசம் ஆயுதப் போராட்டமாக வடிவம் பெற்ற நிலையில், மாகாண சபை ஆட்சிமுறை ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அது சிங்களவர்களுக்கு ஒரு பொருட்டல்ல; தேவையானதும் கிடையாது. அவர்கள் அதிகாரப்பரவலாக்கல் கேட்டோ, உரிமை கேட்டோ போராட்டம் நடத்தியது இல்லை. இப்போது அதிகாரப் பறிப்புகள் நடைபெறுகின்றன. இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் இந்தியப்பிரதமர் ராஜீவ்…
-
- 1 reply
- 545 views
-
-
வைரஸ் மட்டுந்தான் தோல்விகளுக்கு காரணமா? நிலாந்தன். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த அரசுத் தலைவரும் அரசும் இப்பொழுது ஆட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆட்சிக்குள்ளேயே பங்காளிக் கட்சிகள் அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அவ்வாறு அரசை விமர்சித்த சுசில் பிரேம் ஜயந்த அண்மையில் ராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரைப் பதவி நீக்கியமை ஒரு குறியீட்டு நடவடிக்கை என்று தென்னிலங்கையில் வர்ணிக்கப்படுகிறது. அவர் மஹிந்தவுக்கு நெருக்கமானவர். அவரைப்போலவே அரசுக்குள் இருந்துகொண்டு அரசை விமர்சிக்கும் பங்காளிக் கட்சித் தலைவர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார போன்றவர்களும் மகிந்தவிற்க…
-
- 1 reply
- 468 views
-
-
ரஷ்யாவின் போர்ப்பயிற்சி அயல்நாடுகள் அச்சம் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-10#page-8
-
- 1 reply
- 507 views
-
-
நரேந்திர மோடி: ஒரு குறுக்கு வெட்டுமுகத் தோற்றம் - நிலாந்தன்:- 25 மே 2014 சீன அரசாங்கத்தின் சிந்தனைக் குழாத்தைச் சேர்ந்த ஒருவர் நரேந்திர மோடியை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ''நிக்ஷனைப் போன்றவர்' என்று வர்ணித்துள்ளார்.குஜராத்தில் ஒரு முதலமைச்சராக அவர் எப்படிச் செயற்பட்;டார் என்பதன் அடிப்படையில் சில விமர்சகர்கள் அவரை சிங்கப்பூரின் லீகுவான் யூ வைப் போன்றவர் என்று வர்ணித்துள்ளார்கள். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவரை தென் ஆசியாவின் மகிந்த என்று வர்ணித்துள்ளார். ஏறக்குறைய இதே தொனிப்படவே அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் கருத்துக் கூறியுள்ளார். தயான் ஜெயதிலக மகிந்தவும் மோடியும் ஒரே தறியில் நெய்யப்பட்ட துணிகள் என்று கூறியுள்ளார். பி.பி.சிக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு …
-
- 1 reply
- 844 views
-
-
கவனம் : பொய் வாக்குறுதிகளுடம் தகுதியற்ற வேட்பாளர்கள்! May 1, 2025 — கருணாகரன் — இது தேர்தற்காலம். உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தற் பரப்புரைகள் நாடு முழுவதிலும் நடக்கிறது. பல்வேறு கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தேர்தற் பரப்புரைகளில் முழுமூச்சாக ஈடுபடுகின்றன. ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் முதற்கொண்டு கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் என எல்லோரும் நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடில்லாமல் எல்லா இடங்களுக்கும் சென்று நிற்கிறார்கள். தேர்தற் களப்பணியை ஆற்றுகிறார்கள். இதைப்போல இவர்களெல்லாம் தேர்தலுக்குப் பிறகும் வந்து மக்களைச் சந்திக்க வேண்டும். மக்களுக்குப் பணிகளைச் செய்ய வேண்டும் என்று மக்கள் பேசுவதைக் கேட்க முடிகிறது. மக்களுடைய நியாயமான எதிர்பார்ப்…
-
- 1 reply
- 320 views
-
-
உலகின் மிகப் பெரிய மனிதநேயப் பணியகங்களில் ஒன்றான ‘செஞ்சோலை’யை தமிழீழத்தில் ஆரம்பித்தவர் தமிழீழத் தேசியத் தலைவர். மானுட தர்மம் என்னவென்பது அங்கு போதிக்கப்படவில்லை. செயலுருவம் பெற்றிருந்தது. உலகமே பார்த்து அதிசயித்த அரும்பெரும் தலைவரின் மடிமீது அமர்ந்து குலுங்கிச் சிரிக்கும்போது உலகமே தம்வசமிருப்பதாக செஞ்சோலை செல்வங்கள் நினைப்பதுண்டு. குழந்தைகளோடு குழந்தையாக சிரித்து மகிழும் ஒப்பற்ற தலைவரின் மனிதத்தைப் புரிந்து புல்லரித்துப் போனவர் ஏராளம். அது ஒரு வரலாற்றுப் பதிவு. காலச் சக்கரத்தின் கண்ணாடி. அதில் புலம்பெயர் தமிழர்களுக்கும் சிறியதொரு வகிபாகம் உண்டு. செஞ்சோலை வளர்ச்சிக்காக தலைவர் திட்டங்களை முன்வைத்தபோது அவற்றிற்கு உதவியவர்கள் அவர்கள். ஆனால், அந்தப் புனிதப் பயணத்…
-
- 1 reply
- 765 views
-
-
அரசியல் ரீதியான அணுகுமுறையை சர்வதேச சமூகம் கைவிட வேண்டும் – ஒக்லன்ட் நிறுவன நிகழ்வில் விக்கி 71 Views “சர்வதேச சமூகம், இலங்கை விடயத்தில் இனிமேலும் அரசியல் ரீதியான அணுகுமுறையைப் பின்பற்றாமல் மனித உரிமைகள் அடிப்படையிலான ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மனித உரிமைகள் சபை ஆணையாளர் பச்லட் அம்மையாரின் அறிக்கை அத்தகைய மனித உரிமைகள் அடிப்படையிலான ஒரு அணுகுமுறையை கொண்டிருக்கின்றது. ஆனால், தற்போது, மனித உரிமைகள் சபையில் சமர்பிக்கப்படவிருக்கும் பூஜ்ய அறிக்கை அரசியல் அணுகுமுறை அடிப்படையில் அமைந்திருக்கின்றது” இவ்வாறு குற்றஞ்சாட்டியிருக்கின்றார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக…
-
- 1 reply
- 373 views
-
-
எதிரியின் கையில் இருக்கும் ஆயுதங்களை விட, ஆதரவாளர்களின் மௌனம் தான் கொடுமையானது - என்கிற மார்டின் லூதர் கிங்கின் வார்த்தைகளை, உலகின் எந்த மூலையில் எவர் நினைவில் வைத்திருக்கிறார்களோ இல்லையோ, ஒட்டுமொத்தத் தமிழகமும் நினைவில் வைத்திருக்க வேண்டும். ஈடு இணையற்ற அந்தக் கறுப்பினத் தலைவன், நமக்கே நமக்காகச் சொன்னதைப் போலவே இருக்கிறது அந்த வார்த்தைகள். அமைதிப்படை என்கிற பெயரில் தமிழ் ஈழ மண்ணில் தரையிறங்கிய ராஜீவின் படைகள், விடுதலைப் புலிகளை அழிக்கும் பணியையும், நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களை நசுக்கும் பணியையும் ஈவிரக்கமின்றி மேற்கொண்டபோது, 26வது மைலில் மைல்கல் போன்று அசைவே இல்லாமல் கிடந்தது யார்? 2008 - 2009ல், ஈழத்தில் ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை நடந்த சமயத்தில், 26வது மைலில்…
-
- 1 reply
- 937 views
-
-
கள்ளன் - பொலிஸ் விளையாட்டு அச்சத்துக்குள் வாழ்தல் மிகவும் மோசமான அனுபவமாகும். அடுத்து என்ன நடக்கும், என்னவும் நடக்கலாம் என்கிற பீதி - நிம்மதியைக் கொன்று விடும். இலங்கை முஸ்லிம்கள் கிட்டத்தட்ட இப்படியானதொரு சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அடுத்து எந்தக் கடை எரியும் என்கிற பயத்தில், ஒவ்வொரு முஸ்லிம் வியாபாரியும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு படுக்கைக்குச் செல்லுகின்றான். நெருப்பை வைத்துக் கொண்டு, எப்படி உறங்க முடியும். முஸ்லிம்கள் மீது உமிழப்பட்டு வந்த இனவெறுப்பு பேச்சுகளும் அச்சுறுத்தல்களும் இப்போது வேறு புள்ளிக்கு நகர்ந்திருக்கின்றன. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களைத் தீயிட்டுக் கொழுத்தும் ஒரு நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று…
-
- 1 reply
- 434 views
-
-
மூலம்: globaltamilnews.net Roma Rajpal Weiss தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ஈசா:- Surge of radical Buddhism in South Asia - தெற்காசியாவில் பௌத்தத்தின் தீவிர எழுச்சி- Roma Rajpal Weiss தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ஈசா:- இலங்கையிலும் மியன்மாரிலும் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ள மத வன்முறைகள் பௌத்த மதகுருமார் முஸ்லீம் எதிர்ப்பு வன்முறைகளை தூண்டுவது குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. யூன் 15ம் திகதி இலங்கையின் தென்பகுதியில் பௌத்தர்கள் முஸ்லீம்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்களின் போது அளுத்கம, பேருவல, தர்ஹா நகர் பகுதிகளில் 3பேர் கொல்லப்பட்டதுடன் 85 பேருக்கு மேல் காயமடைந்தனர். பௌத்த துறவியை முஸ்லீம் ஒருவர் தாக்கிவிட்டார் என்ற வதந்தி…
-
- 1 reply
- 541 views
-
-
கோட்டா ஒரு ஹிட்லரா? “ஹிட்லர் ஒருவராக மாறியேனும் இந்த நாட்டைக் கட்டியெழுப்புங்கள்” என்று அஸ்கிரிய பௌத்த பீடத்தின் அனுநாயக்க தேரர் வெண்டருவே உபாலி தேரர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவைப் பார்த்துக் கூறிய ஒரு கருத்து, இப்போது சிங்கள பௌத்த சமூகத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர், அந்தக் கூற்றை விமர்சித்து இருக்கும் நிலையில், சில கடும் போக்குவாத சிங்களத் தலைவர்கள், அதை நியாயப்படுத்தியும் அதற்குப் புதிய கருத்துகளைக் கற்பித்தும் வருகிறார்கள். எவ்வாறாயினும், நாட்டில் பெரும்பான்மையான பௌத்தர்கள், உயர்வாக மதிக்கும் ஒரு தேரர், கோட்டாபய போ…
-
- 1 reply
- 443 views
-
-
இஸ்லாமிய விரோதியா தீவிரவாதியா, நான் யார்? - ஸர்மிளா ஸெய்யித் Sharmila Seyyid on May 12, 2019 பட மூலம், Tharaka Basnayaka Photo, Axios இஸ்லாத்தின் எந்தவொரு அடிப்படைவாத சிந்தனைகளையும் ஒரு சந்தர்ப்பத்தில்கூட தூக்கிப்பிடித்திராத, குறைந்தபட்சம் புர்காவோ ஹிஜாபோகூட அணியாத பெண் நான். பெரும்பாலான இடங்களில் “நானொரு முஸ்லிம்” என்று சொல்லிக் கொண்டாலே தவிர, என்னை அவ்வாறு அடையாளப்படுத்திக் கொண்டு தோன்றுவதுமில்லை. மதம் ஆன்மீகமானதும், அது முழுக்க முழுக்க ஆழ் மனத்தோடு தொடர்பான ஒரு உள்மன யாத்திரை என்பதுமே மதம் பற்றிய எனது புரிதல். இருந்தும் நாட்டின் தற்போதைய சூழலில் நானும் ஒரு தீவிரவாதியாகவே பார்க்கப்படுகிற…
-
- 1 reply
- 1.1k views
-
-
எங்கும் கடன்,எதிலும் கடன்,எங்கும் ஊழல்,எதிலும் ஊழல். இதுவே அரசின் தாரக மந்திரம் போல இந்திய அரசு நடந்து கொண்டிருக்கிறது. ஆயிரம் கோடி ஒதுக்கீடு,பத்து கோடி ஒதுக்கீடு என வரி பணம் ஒதுக்கி செலவு செய்வதில் உள்ள அரசின் ஆர்வத்திற்கு ஒரு எல்லையே கிடையாது.நாட்டில் பணக்காரர்கள் கூட்டம் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு உதவுவதில் உள்ள ஆர்வத்திற்கு தான் ஒரு எல்லை உண்டா...! காலம் காலமாக பணக்கார வர்க்கம் மட்டும் முன்னேற அனைத்தையும் செய்துவரும் அரசு தேவையா என என்ன தோன்றுகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் எழுத்தாளர் படுகொலை,நிருபர் படுகொலை, செய்திதாளுக்கு தடை,இணையதள சேவை என கருத்து சுதந்திரத்திற்கு எதிராக எல்லாமே கோலாகலமாக நடந்துகொண்டு தான் இருக்கிறது. முதலாளிகள் ஆதரவு,செய்தி தா…
-
- 1 reply
- 555 views
-
-
‘நேர் கொண்ட பார்வை’ காரை துர்க்கா / 2019 ஓகஸ்ட் 13 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:53 Comments - 0 நாங்கள், பாடசாலையில் கல்வி கற்ற காலம்; அன்று தமிழ்ப் பரீட்சை; ‘நான் விரும்பும் பெரியார்’ பற்றி எழுதுமாறு கட்டுரை எழுதும் பகுதியில் கேட்கப்பட்டிருந்தது. உடனடியாகவே, ‘நான் விரும்பும் பெரியார் மஹாத்மா காந்தி’ எனத் தொடங்கி, விரல்கள் எழுதிச் சென்றன. அவ்வாறாக, இலங்கைத் தமிழர்களின் மனங்களில் இந்தியப் பெரியார்கள் கொலுவீற்றிருந்தார்கள். இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டே, தமிழர்கள் மீதான பேரினவாதத்தின் கொடூரக் கரங்கள் நீளத் தொடங்கிவிட்டன. எனவே, இதிலிருந்து இந்தியா எங்களைப் பாதுகாக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, காலங்காலமாகவே இலங்கைத் தமிழ் மக்கள் மனங்களில் குடிகொண்ட…
-
- 1 reply
- 775 views
-
-
சம்பந்தனின் தோல்வி யதீந்திரா கொழும்பிலிருந்து வெளிவரும் சிலோன் டுடே என்னும் ஆங்கிலப் பத்திரிகையில் சம்பந்தனை புகழ்ந்து ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. ‘சம்பந்தன் சேர் பொன்னம்பலம் இராமனாதனின் மறு உருவம்’ என்பது அந்தக் கட்டுரையின் தலைப்பு. இராமனாதன் எவ்வாறு தமிழ் மக்களின் தலைவராக மட்டும் தன்னை கருதி செயற்பட்டிருக்கவில்லையோ அதைப் போன்றுதான் சம்பந்தனும் முழு நாட்டிற்குமான தலைவராகவே செயற்பட்டு வருகிறார் என்று அந்தக் கட்டுரையாளர் சம்பந்தனின் தலைமைத்துவ ஆற்றலை பாராட்டியிருக்கிறார். அந்தக் கட்டுரையாளர் குறிப்பிடுவது போன்று சம்பந்தன் தற்போது தான் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் தேசிய இனத்திற்கான தலைவராக செயற்படவில்லை என்பது முற்றிலும் சரியான ஒரு…
-
- 1 reply
- 525 views
-