அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 3 புலிகளின் ராஜதந்திர உத்திகள் கடந்த இருபது ஆண்டுகளில் எந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது ? இன்று ஈழப் போராட்டம் சர்வதேச மயமாகி பல நாடுகளின் தடைகள் புலிகள் மீது பாய்ந்துள்ள நிலையில் இந்தக் கேள்வி வலுப்பெறுகிறது. இதற்கு விடை தேடும் பொருட்டு என்னுடைய கருத்தாக எதனையும் முன்வைக்காமல் புலிகள் எவ்வாறு இந்தப் பிரச்சனையை கடந்த 20 ஆண்டுகளில் அணுகியிருக்கிறார்கள் என்ற கோணத்தில் இந்தப் பதிவினை எழுத முயன்றுள்ளேன். புலிகளின் உத்தி ஆரம்பத்தில் இருந்தே இந்தப் பிரச்சனையை படிப்படியாக அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் உந்துதல் மட்டுமே கொண்டு அமைந்திருந்தது. இந்தப் போராட்டத்தை அடுத்தக் கட்ட நிலைக்கு கொண்டுச் செல்ல புலிகள் தொடர்ந்து பல்வேறு வழி…
-
- 2 replies
- 1.5k views
-
-
இனப் பிரச்சினைக்கு இன ரீதியான தீர்வு காண்பது ஆபத்தாக முடியும் என்றார் ஹாண்டி பேரின்பநாயகம். (செப்.18,1947) இன அடையாளத்தைவிட நாமனைவரும் மனிதர்களே என்ற புரிதல் அவசியம் என்கிறார் லக்ஸ்ரீ ஃபெர்னாண்டோ அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில். சுயநிர்ணய உரிமை என்பது கருத்தியல் கோணத்தில் எழுப்பப்படக்கூடாது. ஆனால், அத்தகைய உரிமை பெறுவதால் சமூகம் முன்னேறமுடியும் என்ற சாத்தியக்கூறு இருக்குமாயின், அவ்வாறு செய்யலாம் எனவும் ஃபெர்னாண்டோ குறிப்பிடுகிறார். ஆனால், சுய நிர்ணய உரிமை வழியேதான் இலங்கைத் தமிழர்கள் கண்ணியத்துடன் வாழமுடியும் என நான் உறுதியாக நம்புகிறேன். நாடு விடுதலை பெற்ற 1948லேயே மலையகத் தமிழர்கள் இனத்தின் பெயரால் ஒடுக்கப்பட்டார்கள். அந்த சோகம் தொடர்ந்திருக்கிறது. …
-
- 5 replies
- 1.5k views
-
-
ஜனாதிபதித் தேர்தலின் முடிவு, இலங்கையின் அரசியல் நடைமுறைகளில் பெரியளவிலான மாற்றங்களுக்கு வித்திடும் சூழல் ஒன்றை உருவாக்கியுள்ளதாக தெரிகிறது. இந்த தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ பெற்றிருக்கின்ற வெற்றியானது, சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்குப் பெருந்தீனியாக அமைந்திருக்கிறது இது முதல் விடயம். இந்த வெற்றியைக் கொண்டு, ராஜபக் ஷவினர் நிரந்தரமான அரசியல் இருப்புக்கு வழிதேடத் தொடங்கியிருக்கின்றனர் என்பது இரண்டாவது விடயம். இந்த இரண்டும் வெவ்வேறான விடயங்களாக இருந்தாலும், தனித்தனியாக இந்தப் பத்தியில் ஆராய்வது பொருத்தம். கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும், பொது பலசேனா அமைப்ப…
-
- 5 replies
- 1.5k views
-
-
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கபட்டது. . இலங்கை அதிபர் சிறீசேன நாடாளு மன்றத்தைக் கூட்டும்படி ஓயாமல் நச்சரித்துக் கொண்டிருந்த மேற்குலகின் முகத்தில் திடீரென அறைந்துவிட்டார். இன்று சீனாவுக்கு முதல் வெற்றி நாளை என்ன நடக்கும்? மேற்க்கு நாடுகளும் இந்தியாவும் தென் இலங்கையில் சீனாவை வெல்லுதல் சாத்தியமில்லை. ஆனால் சீனாவை வட கிழக்கு இலங்கைக்குள் கால்வைக்கமல் தடுக்க முடியும்
-
- 6 replies
- 1.5k views
-
-
எதிர்வினை நீங்களுமா நுஃமான்? வெப்பியாரத்துடன்தான் இதை எழுதத் தொடங்குகிறேன். ‘நீங்களுமா நுஃமான்?’ என்ற ஒரு வாக்கியம்தான் என்னுள் எழுகிறது. மானிட விரோதிகள் என்று என்னால் உணரப்படுபவர்கள் எவரின் கருத்துக்கும் நான் எதிர்வினையாற்றுவதில்லை. நுஃமான் சேர் என்றவுடன் என்னால் எதிர்வினையாற்றாமல் இருக்க முடியவில்லை. சொல்லுங்கள் நுஃமான் சேர், முள்ளிவாய்க்கால் துயர் ஒரு துளிதானும் உங்களை அசைக்கவில்லையா? நீங்கள் மக்கள் கவிஞர், மார்க்சீயவாதி என்ற பெயர் எல்லாம் எடுத்தவர். என் ஆதர்சங்களில் ஒருவராக உங்களை நான் வைத்திருந்தேன். நீங்களுமா நுஃமான்? பிழையையாருக்குப் பிரித்துக் கொடுப்பது என்று கணக்குப் போடுகின்றீர்களே இதுவா கவிஞரின் வேலை? ஓர் இனம் அதுவும்…
-
- 9 replies
- 1.5k views
-
-
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் வாக்குப் பொறுக்குவதற்காக பயன்படுத்தும் சின்னம்கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் வடக்குக் கிழக்கில் ஒரு தேசம் இரு நாடு என்ற முழக்கத்தை முன்வைத்து வாக்குக் கேட்கிறது. ஒற்றையாட்சி முறைக்குள் உள்ள சிங்கள பௌத்த பேரினவாதிகளின் பாராளுமன்றத்தில் குறைந்தபட்ச உரிமைகளைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் ஒரு நாடு இரு தேசம் என்ற சுலோகம் வெறும் வாக்கு வேட்டைக்காகவே முன்வைக்கப்படுகிறது. அந்த சுலோகம் வாக்குச் சேகரிக்க்ப் பயன்படுகிறது என்று மட்டும் அனுமானித்துக்கொள்ள முடியாது. மலையகத் தமிழர்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள மறுத்து அவர்களை அரசின் பக்கம் சேர்க்கும் சதி இதன் பின்புலத்தில் உளடங்கியிருக்கிறதா என்ற சந்தேகங்க…
-
- 0 replies
- 1.5k views
-
-
இது வெறும் போர்வையா? ஒரு பெரிய தேசம். பற்பல மொழிகள், மதங்கள், ஜாதிகள், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்கள், நகராட்சிகள், கிராமங்கள்; இதைப் போல இன்னும் பல பிரிவுகள். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, நான்காவது பெரிய ராணுவம், என்றெல்லாம் நாம் பெருமையாகச் சொல்லலாம். ஆனாலும் இந்தியா இப்போது எதிர்நோக்கியுள்ள சிலப் பிரச்சினைகளின் தொகுப்பு. காஷ்மீர் பிரச்சினை சீனாவுடன் எல்லைப் பிரச்சினை ஸ்ரீலங்காப் பிரச்சினை நேபாள மாவோயிஸ்டுகளின் தொல்லை இந்து - முஸ்லீம் - கிருஸ்த்தவ பிரச்சினை [மும்பை, குஜராத், கோயம்புத்தூர், பிரிவினை, இன்னும் சில) காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம் பிரச்சினை உள்நாட்டுத் தீவிரவாதிகள் (உல்ஃபா, நக்சலைட்டுகள், ...) மொழிப் பிரச…
-
- 1 reply
- 1.5k views
-
-
கூட்டமைப்பின் அடுத்த தலைமை தொடர்பாக இப்போதே கேள்விகள் எழ ஆரம்பித்து விட்டன. சம்பந்தன் மூப்பின் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டதால் இந்தக் கேள்விகள் எழுவது இயல்பானது. இந்தியாவின் தமிழ்நாட்டில் மு.கருணாநிதியும் மூப்பின் எல்லையில் நின்றபோது தி.மு.கவுக்கு அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் வாரிசு அரசியலில் ஊறிப்போன இந்தியாவில் வழக்கம்போல கருணாநிதியின் மகன்களில் ஒருவரான மு.க. ஸ்டாலினின் பெயர் நீண்ட காலமாகவே அந்தப் பதவிக்கு அடிபட்டு வந்தது. இதற்கு ஏற்றாற்போன்று தி.மு.கவின் செயல் தலைவராக அவர் அந்தக் கட்சியின் தலைவரான அவரது தந்தையாரான கருணாநிதி…
-
- 13 replies
- 1.5k views
-
-
-
- 6 replies
- 1.5k views
-
-
என்ன தீர்ப்பை ஈழத்தமிழர் வழங்கப்போகிறார்-பா.உதயன் இந்தியா வந்தால் என்ன சர்வதேசம் வந்தால் என்ன இலங்கையின் இறைமையை எவராலும் பிடுங்க முடியாது என்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்க முடியாது என்றும் சீனாவின் தோளில் ஏறி நின்று அரசு அறிவித்திருக்கும் நிலையில்.இனி எந்தப் பாதையில் யதார்த்த ரீதியாக ஈழத்தமிழ் இனம் தமது தீர்வு நோக்கி பயணிக்கப் போகிறார்கள் என்பதை ஒட்டு மொத்தத் தமிழ் இனமும் உணர்ந்து இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என நம்புவோம். இறந்து போனவருக்கும்,தொலைந்து போனவருக்கும், இனப்படுகொலைக்கும்,ஈழத்தமிழர் தீர்வுக்கும் என்று ஏதும் நீதி கிடைக்குமா. இனி வரும் அரசியல் அமைப்பு ஏதும் தீர்வு தருமா.இல்லை ஈழத்தமிழருக்கான இன்னுமோர் அடிமை வாழ்வை எழுதுமா.இந்தியாவின் 13 …
-
- 15 replies
- 1.5k views
-
-
`பாலா' சொல்ல முற்பட்டது என்ன? -கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்- * இந்தியத் தொலைக்காட்சிப் பேட்டி ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள்.... நாட்டில் சொல்லிக் கொள்ளத்தக்க நம்பிக்கையூட்டும் அபிவிருத்திகள் எதுவும் ஏற்பட்டிராதபோதும் அரசியலும் அதைச் சுற்றியுள்ள ஏனைய மூலக்கூறுகளும் விரைவாகவே நகரத் தொடங்கியுள்ளன. அதன் காரணமாக இந்த நாடகத்தின் காட்சிகள் வேகமாக மாறத் தொடங்கியுள்ளன. ஒரு காட்சியின் முக்கியத்துவம் மனதில் பதியுமுன் மறுகாட்சி வந்து போவதால் எல்லாம் மறைக்கப்பட்டு விடலாம். உடனடி நிலையில் மாபெரும் காட்சிபோல் தோற்றமளித்த பாரமி குலதுங்கவின் மரணம் கூட ஒரு வாரத்திற்கு மேல் நினைவிலிருக்குமா என்பது சந்தேகமே. இந்த வேகம் எங்கு போய் நிற்குமோ என்பது சுவாரஸியமானது மட்டுமல்ல இச்சமூகத…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஈ.பி.டி.பி கட்சியில் இருந்து விலகிய ஒருவரின் நேரடி வாக்கு மூலம். வணக்கம் மக்களா. நான் தவராசா தினேஷ் நான் இலங்கையின் வவுனியா பகுதியை சேர்ந்தவன் இப்போது மலேசியாவில் வாழ்கிறேன். நான் EPDP கட்சியில் இருந்து தப்பி ஓடியவன். அது கட்சி என்று சொல்வதைவிட நரகக்குழி என்று சொல்லலாம் அந்த அளவுக்கு மோசமான இடம். டக்ளசின் தலைமையில் மிகப்பெரும் சட்டவிரோத செயல்களே அங்கு நடைபெறுகிறது. இதில் இடம்பெறும் உறுப்பினர்கள் எல்லோரும் மிகப்பெரும் குற்றவாளிகள். நானும் அப்படியே இருந்தேன் இப்போது திருந்தி வாழ்கின்றேன். இக்கும்பலிடம் சிக்கினால் எனக்கு மரணம் தான் நான் உயிருக்கு பயப்பிடவில்லை நான் செய்த பாவங்களுக்கு தண்டனை பெறத்தானே வேண்டும் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறேன். மக்களே நான் இந்த நரகக…
-
- 9 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணத்தின் புதிய சுவரோவியங்கள் – நிலாந்தன் December 21, 2019 ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் வடமாகாண ஆளுநராக சந்திரசிறி இருந்த காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு படைப்பாளியும் புலமையாளரும் ஆகிய எனது நண்பர் கைபேசியில் என்னை அழைத்தார். யாழ். புகையிரத நிலையத்தில் ஒரு சுவிட்சலாந்து பெண் ஓவியம் வரைகிறார் வருகிறீர்களா போய் பாப்போம் என்று கேட்டார்.இருவரும் புகையிரத நிலையத்திற்கு போனோம். அங்கே இரண்டாவது மேடையை நோக்கிச் செல்லும் நிலக்கீழ் வழியில் அந்த வெளிநாட்டுப் பெண் ஓவியம் வரைந்து கொண்டிருந்தார். அந்த ஓவியங்களில் பென்குயின்கள் இருந்தன. கடலைப் போல அலையைப் போல வடிவங்கள் இருந்தன. ஆனால் யாழ்ப்பாணம் இருக்கவில்லை. நாங்களிருவரும் அவரோடு கதைத…
-
- 3 replies
- 1.5k views
-
-
-
- 7 replies
- 1.5k views
-
-
தொல்நிலம் – போகன் சங்கர் வரலாறு எப்போதும் மையம் நோக்கிக் குவிகிறது. வரலாறு மையத்தில் உள்ளோர் நோக்கிச் சாய்வது. இலக்கியமோ வெளிநோக்கிச் சரிவது. அதிலும் முன்னதும் பின்னதும் உண்டு. உரத்ததும் மெலிந்ததும் உண்டு. இலக்கியத்தின் வகைகளிலும் கவிதையே மறக்கப்பட்டவர்களின் குரலாக இருக்கிறது. ஆப்பிரிக்க – அமெரிக்க கறுப்பினத்தவர் துயரங்கள் இலக்கியத்தில் இன்று புறக்கணிக்கப்படாத ஒரு வகை. அங்கிள் டாமின் கேபின் இன்றைக்குப் பாட நூல்களில் ஒன்று. ஒரு சமூகத்தின் பாட நூல்கள் என்பது அந்தச் சமூகம் எந்தெந்தக் குரல்களை அனுமதிக்கிறது என்பதற்கான ஒரு சாட்சியாகும். ஒருவகையில் அது பெரும்போக்குச் சரித்திரத்துக்கான நுழைவுச் சீட்டு. ஆனால் இன்னமும் இலக்கியத்தின் தெருக்களில் கூட …
-
- 0 replies
- 1.5k views
-
-
"குரலற்றவரின் குரல்“ –கருணாகரன்- நேர்காணல் - கோமகன் ஈழத்தின் வடபுலத்தில் உள்ள இயக்கச்சி கிராமத்தில் பிறந்தவர் கருணாகரன். தற்பொழுது கிளிநொச்சியில் வசித்து வருகிறார். கவிஞராகவே ஈழத்து இலக்கியப்பரப்பில் அடையாளப்படுத்தப்பட்டவர். இருந்த போதிலும் ஒரு கதைசொல்லியாகவும், ஊடகவியலாளராகவும், தொடர் இலக்கியச்செ யற்பாட்டாளராகவும், பதிப்பு முயற்சிகளில் ஈடுபடுகின்றவராகவும் பொது வெளியில்வெளிப்படுத்திருக்கின்றார். இவர் "வெளிச்சம் " கலை இலக்கிய இதழின் ஆசிரியராகவும் "காட்சி" ஊடகத்திலும் பணியாற்றியிருக்கிறார். 1980 களில் ஈழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை ஒரு போராளியாக இணைத்துக்கொண்ட கருணாகரன், விடுதலைப்போராட்டம் உச்சம் பெற்ற வேளையிலும், வீழ்ச்சி அடைந்த காலகட்டத்திலும் சமக…
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
#தமிழ்தேசியம்: சாதியை ஒழிக்காமல் தமிழ்த் தேசியம் சாத்தியமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இந…
-
- 0 replies
- 1.5k views
-
-
இந்திய தேர்தல் ஆணையம் புதிதாக ஆரம்பிக்க பட்ட கட்சியினை மாநில கட்சியாக அங்கிகாரம் செய்ய சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி குறிபிட்ட விழுக்காடு ஒட்டுகளும். சட்டமன்றத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ள ஒரு புதிய கட்சியினை தேர்தல்ஆணையம் அங்கிகாரம் அளித்து ஒரு சின்னத்தை அந்த கட்சிக்கு அளிக்கிறது. இவ் நிபந்தனையினை நிறைவேற்ற பாமக , மாதிமுக போன்ற கட்சிகள் பல தேர்தல்களில் முயன்று, மேற்படி நிபந்தனை நிறைவு செய்ய இயலாமல்,கடைசியில் திமுக அல்லது அதிமுக போன்ற பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மேற்படி நிபந்தனையினை நிறைவு செய்து அங்கிகாரம் பெற்றன. தற்போது, நடிகர் விஜயகாந்த் கட்சி அதிக விழுக்காடு ஓட்டு பெற்றும் , சட்டமன்றத்தில் இரண்டு உறுப்பினர் இல…
-
- 0 replies
- 1.5k views
-
-
Exclusive Post Only in Yarl Forum.. அரச சார்பற்ற அமைப்பான Centre for Policy Alternatives.. கொழும்பில் உள்ள Social Indicator என்ற புள்ளிவிபரம் சேகரிக்கும் அமைப்பின் உதவியோடு சிறீலங்காவில் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பில் போர் மூலம் புலிகளைத் தோர்க்கடித்து அதன் பின் பேச்சுவார்தைகள் மூலம் தீர்வு எட்ட வேண்டும் என்ற எண்ணப்பாடு சிங்கள மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளமை வெளிப்பட்டுள்ளது..! பெரும்பாலான சிங்களவர்கள் மகிந்தவின் செயற்பாடுகளை ஆதரிப்பதோடு அவர் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணுவார் என்றும் நம்புகின்றனர்..! பெரும்பாலான சிங்கள மக்கள் புலிகள் போர் நிறுத்ததைக் சரி வர கடைப்பிடிக்கவில்லை என்று கருதுகின்றனர்..! பெரும்பாலான சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அரசு மன…
-
- 2 replies
- 1.5k views
-
-
.கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் திரு எம்.எ.சுமந்திரன் அவர்கள் தனது புதிய பகைவர்களுக்கு எதிராக கெட்டவார்த்தைகளை பயன்படுத்துவதக்கு கூட்டமைப்பு மேடைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனேனில் இது தமிழர் கலாசாரல்ல. மேலும் இது தமிழர் நலன்களைப் பாதிக்கும். .வவுனியாவில் நீங்கள் திரு.மைதிரிபால சிறிசேனவுக்கு எதிராக கெட்ட வார்த்தை பேசியமைக்கு மன்னிப்புக் கோருமாறு வேண்டுகிறேன். என்ன இருந்தாலும் அவர் சிங்கள மக்களின் தலைவர் ஆவார். இது எங்கள் மகத்தான தமிழ் கலாச்சாரத்துக்கும் தமிழர் நலன்களுக்கும் உகந்ததல்ல..மதிப்புக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன் அவர்களே, நீங்கள் திரு ரணில் விக்கிரசிங்க அவர்களை பாதுகாக்க வவுனியாவில் ஆவேசப்பட்ட அளவுக்கு கோவத்தை இதுவரைக்கும் தமிழ் அரசியல் கைதி…
-
- 10 replies
- 1.5k views
-
-
இன்று போய் நாளை வா! Atha Gila Heta Enda! வடக்குக் கிழக்கினைச் சிங்கள தேரவாத பௌத்தத்திற்கு உரிமைகோரும் Ven. Ellawala Medhananda Thera The Sinhala Buddhist Heritage in The East and The North of Shri Lanka என்ற நுல் பற்றிய விமர்சனம் சாணக்கியன் 07.01.2005, சனி. இலங்கையில் அன்று, முடிவுகளைத் தாமாகவும், சரியாகவும் எடுக்கும் பக்குவ நிலையை அடையாத சிறுவர்கள, தேரவாத பௌத்த பிக்குகளாக ஆக்கப்பட்டும், கத்தோலிக்க பாதிமார்களாக ஆக்கப்பட்டும் வந்துள்ளனர். ஆனால், இன்று, எந்தவித முடிவுகளையும் தாமாகச் சிந்தித்து எடுக்க முடியாத நிலையில் இருக்கும் சிறுவர்களுக்கு இவை தொடரும் அதே வேளையில், தென்னிலங்கையில் 40,000 இற்கு மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் களியாட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்…
-
- 0 replies
- 1.5k views
-
-
வடக்கில் இராணுவத்தின் operation Psychologyயும் வெற்றிகர தாக்குதல்களும்… June 17, 2018 யார் இந்த கேர்ணல் ரட்ணப்பிரிய பண்டு? அப்படி என்னதான் செய்தார்? மு.தமிழ்ச்செல்வன்… எந்த இராணுவத்தின் மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டதோஇ எந்த இராணுவம் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது என குற்றச்சாட்டப்படுகின்றதோஇ எந்த இராணுவத்தினரால் தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என விரல் நீட்டப்படுகிறதோ அதே இராணுவத்தின் கேர்ணல் அதிகாரியபன கேர்ணல் ரட்ணப்பிரிய பண்டு இடமாற்றம் பெற்றுச் செல்லும் போது ஏன் இவ்வாறு ஒரு பிரியர்விடை?! அப்படி அவர் என்ன செய்தார்? ஏன் முன்னாள் போராளிகள் அவரை தூக்கிச் சென்றனர்? பெண்கள் ஏன் கதறி அழுது விடைகொடுத்தார்கள்? போன்ற பல கேள்விக…
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கை கொடி, கண்டியை ஆண்ட கடைசி தமிழ்மன்னன் விக்ரமராஜசிங்கனுடயது. பிரித்தானியானியர் இறுதியாக கைப்பறியபிரதேசம் கண்டி ராஜ்ஜியம், ஆதலால் இலங்கை சுதந்திரம் அடைந்தபோது சம்பிரயாத முறைப்படி கண்டி தமிழ் மன்னனின் கொடியாகிய சிங்க கொடியை ஏற்றி இலங்கைக்கு சுதந்திரத்தை கொடுத்தார்கள். How national is our National Flag? By: C. V. Vivekananthan Courtesy: Sunday Times - February 2, 2003 Article Tools E-mail this article Printer friendly version Comments [ - ] Text Size [ + ] The 'Lion Flag' of the last King of Kandy, was hauled down when the Kandyan Convention was signed on March 2, 1815. Though it was buried in the sand of…
-
- 0 replies
- 1.5k views
-
-
கீனி மீனி: இலங்கையில் பிரித்தானிய கூலிப்படைகள் உண்மை வலியது; அதலபாதாளத்தில் ஒளித்து வைத்தாலும், உண்மை ஒருநாள் வௌிவந்தே தீரும். உண்மைகள் வெளியாகிற போது, பலவித உணர்வுகளை அது ஏற்படுத்தும். சங்கடம், துரோகம், வேதனை, அதிர்ச்சி போன்றவற்றை, வெளிக்கொணரப்பட்ட உண்மை உருவாக்கிவிடும். இது, உண்மையின் வலிமையையும் ஆழத்தையும் முக்கியத்துவத்தையும் எமக்குப் புரிய வைக்கின்றன. பெரும்பாலும், நீண்ட முயற்சியின் பின்னர் வெளிவரும் உண்மைகளை ஏற்றுக்கொள்ள, ‘பொதுப்புத்தி’ மனநிலை தயாராக இருப்பதில்லை. “இப்படி நடந்திருக்காது” என்ற ஆறுதலுடன், அப்பால் கடந்து போகிறோம். உண்மைகள் கொடியன; அவை, எமது நம்பிக்கைகளில் தீ வைப்பன; எதிர்பார்ப்புகளில் கல்லெறிவன. ‘கீனி மீனி’ என்ற தலைப்ப…
-
- 6 replies
- 1.5k views
-
-
"ஒப்பில்லாத சமுதாயம் உலகத்திற்கொரு புதமை" தமிழ் மக்களின் அழிவுக்கும் பிரச்சினைகளுக்கும் பிரதாமான காரணமாக இருந்தது ஒற்றுமையின்மையே! அதை உணராமல், இன்னும் தொடர்ந்த ஒற்றுமை அற்ற தமிழ் தலைமைக்கு இது ஒரு பாடமாகட்டும்!! ஆனால் இனியாவது திருந்துவார்களா ?? இன்று சமதர்ம சமுதாயம் மலர்வதற்கும் மக்களின் ஒருங்கிணைப்பும் மனங்களின் ஒருமைப்பாடும் இன்றியமையாத தேவைகள். நாடு நன்னாடாகவும் வளத்தில் பொன்னாடாகவும் திகழ்வதற்கு முழுமுதற்காரணமாக விளங்குபவர்கள் அந்நாட்டு மக்களே ஆவர் இதைத் தான் ஔவையார் "நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே" என்றாள். மலைநாட்டவர், கடல்பகுதியினர், மருதநிலத்தவர், …
-
- 0 replies
- 1.5k views
-