அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
தீவிரவாதத்தால் நிலை குலைந்த கிழக்கு Editorial / 2019 மே 05 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:31 Comments - 0 -இலட்சுமணன் ஆளாளுக்கு ஊடக சந்திப்புகளை நடத்தி தமிழ், முஸ்லிம் அமைப்புகள் அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கின்றன. சோதனைச்சாவடிகள், கடந்து போன யுத்த காலத்தைப் போல முளைத்து, நிரந்தரமாகிக் கொண்டிருக்கின்றன. “முகத்தாடியை வழித்துவிட்டு, பொட்டு ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்” என்று பொலிஸ் நண்பர் ஒருவர் சொல்கிறார். ‘எனக்கு இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை; எதிரிக்கு ஒரு கீறலேனும் ஏற்பட வேண்டும்’ என்று நினைப்பது போலத்தான். கிழக்கின் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மீதான வெறுப்பு எரிந்து கொண்டிருக்கிறது. இலங்கை வரலாற்றில் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி, மற்றுமோர் இரத்தக்கறை…
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
தோல்வி நிலையென நினைத்தால் .... கடந்து சென்ற 2009 மே மாதத்தில், ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் ஒரு பெரிய பின்னடைவைச் சந்தித்தது. எனினும் அந்த விடுதலைப்போராட்டம் தோற்றுவிட்டது என்பது அதன் கருத்தல்ல.ஏனெனில் ஒரு விடுதலைப்போராட்டம் அது அடையவேண்டிய குறிக்கோளை அடையும்வரை முடிந்துவிட்டதாகக்கருதமுடியாது.அதனுடைய பாதையில் அது பல பின்னடைவுகளைச் சந்திக்கலாம்.அவற்றை எவரும் தோல்வியாகவோ அல்லது எல்லாம் முடிந்துவிட்டதாகவோ எடுத்துக்கொள்வதில்லை.மேலும் 'விடுதலை' என்பது எல்லா மனிதர்களினதும் பிறப்புரிமை,அடிப்படை உரிமை.எந்த மனிதரும் அடிமைத்தனத்தை விரும்பி ஏற்றுக்கொண்டதாக வரலாறு இல்லை.எல்லா மனிதரும் தம்மால் இயன்ற வழிவகைகள் மூலம் விடுதலையைப்பெறவே முயன்றுகொண்டிருக்கிறார்…
-
- 1 reply
- 1.2k views
-
-
மேதகு திரைப்படம் ஓர் அரசியல் குண்டு
-
- 6 replies
- 1.2k views
-
-
2008 விடுதலைப் புலிப் போராளி கலைக்கோன் மாஸ்ரரின் பார்வையில்... இன்றைய காலத்தில் எழுப்பப்படும்.. பல கேள்விகளுக்கு அன்றே பதில் சொன்னவர்களுக்கு இப்போது சிலர் மீள்பார்வை.. மீளாராய்ச்சி என்று கத்துக்குட்டிக்கள் வகுப்பெடுப்பது தான் வேடிக்கை.
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு தமிழ் பொது வேட்பாளர் ஏன் வேண்டும்? நிலாந்தன்… October 6, 2019 சில மாதங்களுக்கு முன்பு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை உல்லாச விடுதியில் தமிழ் கருத்துருவாக்கிகள் சிலரை சந்தித்தார். வெவ்வேறு அரசியல் நம்பிக்கைகளைக் கொண்ட மேற்படி கருத்துருவாக்கிகளுடனான இச்சந்திப்பில் தமிழ் மக்கள் மத்தியில் கோத்தபாயவுக்கு எவ்வாறான ஆதரவு தளம் உள்ளது என்பது குறித்து அறிவது அவருடைய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. அவரைச் சந்தித்துச் சில வாரங்களின் பின் மற்றொரு அமெரிக்கத் தூதரக அதிகாரியும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த ஓர் உயர்நிலை அதிகாரியும் யாழ் நகரப்பகுதியில் அமைந்துள்ள ஜெற்விங் உல்லாச விடுதியில் தமிழ் கர…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஏமாற்றத்தின் விளிம்பில் ஈழத் தமிழ் மக்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணாமல் தொடர்ந்து இழுத்தடிப்பதால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் ஏற்பட்டு விடும் என்பதை ஆட்சியாளர்களும் தென்பகுதி அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிர மரட்ண இதை உணர்த்தும் வகையிலேயே அரச தலைவருக்கும், தலைமை அமைச்சருக்கும் எச்சரிக்கை கலந்த வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அரசமைப்பு உருவாக்கம் மற்றும் ஏனைய விடயங்க ளில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத தலைவர்களாக இவர்கள் இருவரும்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜெனிவா காச்சல் சிங்கள ஆட்சியாளர்களை தேசங்கள் எங்கும் ஓட வைத்துள்ளது. சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சே ஆபிரிக்க - இலத்தீன் அமெரிக்க நாடுகளைக் குறி வைத்து தனக்கான பாதுகாப்பு வளையத்தை அமைக்க முயற்சி செய்துவரும் காலத்தில், அவரது துதர்களாக அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பிரித்தானியாவுக்குச் சென்று திரும்பியிருந்தார். தற்போது, மகிந்த ராஜபக்சேயின் செயலாளது லலித் வீரதுங்க அமெரிக்கா சென்றுள்ளார். ஜெனிவா காச்சலால் சிங்கள ஆட்சியாளர்கள் திசை எங்கும் ஓடித் திரிய, இந்திய காங்கிரஸ் கட்சியோ தாங்க முடியாத வயிற்று வலியுடன் துடிக்கின்றது. ஜெனிவா மனித உரிமைகள் பேரவை அமர்வு நடைபெறும் காலத்தை அண்டியே, இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தலும் நடைபெறவுள்ளதால், ஏற்பட்ட கிலி காங்கிரஸ் காரர்களுக…
-
- 3 replies
- 1.2k views
-
-
கல்முனை விவகாரம் – நிலாந்தன் June 22, 2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னரான விழிப்பின் அடிப்படையில் முடிவெடுக்குமா? கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விவகாரம் கிழக்கில் தமிழ் – முஸ்லிம் உறவுகளை மறுபடியும் சோதனைக்குள்ளாக்கியிருக்கிறது. ஈஸ்ரர் குண்டு வெடிப்பையடுத்து குறிப்பாக சீயோன் தேவாலயத்தில் முப்பதிற்கும் குறையாதவர்கள் கொல்லப்பட்ட பின்னணியில் கிழக்கில் தமிழ் – முஸ்லிம் உறவுகளில் பதட்டம் அதிகரிப்பதைத் தடுக்கும் விதத்தில் அங்குள்ள சிவில் சமூகங்களும் கிறிஸ்தவ சமயப்பணி நிறுவனங்களும் விசுவாசமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டன. சீயோன் தேவாலயத்தின் மீது நடந்த தாக்குதலின் பின்னரும் கிழக்கில் முஸ்லிம்களின் மீது தமிழ் மக்கள் தனியாட்களாகவோ அல்லது கும்பலாக…
-
- 3 replies
- 1.2k views
-
-
சீனாவுக்கு கிடைத்துள்ள இராஜதந்திர வெற்றி – என்.கண்ணன் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் கேள்விக்குறியாக மாறியிருந்த, கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்கு, புதிய அரசாங்கம் பச்சைக்கொடி காண்பித்திருக்கிறது. இது பலரது புருவங்களையும் உயர்த்திப் பார்க்க வைத்திருக்கிறது. ஏனென்றால், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக – வர்த்தக சமூகத்தினர் மத்தியில் உரையாற்றிய இப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுற்றுச் சூழலைக் கருத்தில் கொள்ளாத- இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கு அச்சுறுத்தலான கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இரத்துச் செய்வோம் என்று உறுதிபடத் தெரிவித்திருந்தார். அது அப்போது சீனாவுக்கு அதிர்ச்…
-
- 2 replies
- 1.2k views
-
-
நசுக்கப்படும் மனித உரிமை : சட்டங்களை கடந்து போராட தமிழ் தலைமைகள் தயாரா.? ஒரு இனத்தின் மீது இன்னொரு ஆதிக்க இனம் ஒடுக்கு முறையை மேற்கொள்ளுகின்ற போது சட்டங்கள் மேலாதிக்கம் கொண்டவர்களின் அதிகாரமாகவே துலங்குகிறது. இது இலங்கையில் மாத்திரமல்ல, இலங்கை போன்ற இன மேலாதிக்க நாடுகள் பலவற்றிலும் இருக்கின்ற நடைமுறை. ஆனாலும் தேச விடுதலை, சமூக விடுதலை என சிந்திக்கும் மக்கள் தரப்பினரும் அவர்களின் ஆளுமை மிக்க தலைவர்களும் அதனைக் கடந்து ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். உண்மையிலே சட்டங்களுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகவே சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்த எண்ணப்பாங்கில்தான் நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்கள் கூட உருவாக்கப்பட்டன. மக்களிடம் அதிகாரம் இருக்கவும் அவர்கள் அதனை பாதுகாக்கும…
-
- 0 replies
- 1.2k views
-
-
சர்வதேச அரசியற் கட்டமைப்பிலே மிகவும் சிறியதாகவும் தற்காப்பு பலம் குறைந்ததாகவும் இருக்கும் ஒரு நாடு, மிகஇலகுவாக அடிபட்டு போகக்கூடிய நிலையை கொண்டதாக உள்ளது. பலங்குறைந்த நாடுகளை பலம் பெற்ற நாடுகள் தமது அணுகூலங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளும் நிலையே தற்போதைய அடாவடி உலகின் பண்பாகும். சர்வதேச அரசியற்கட்டமைப்பு என்பது அடாவடித்தனம் கொண்டது. எல்லா அரசுகளையும் கட்டுப்படுத்தக் கூடிய சட்ட விதிமுறைகளோ அல்லது பலம் வாய்ந்த உலக அரசுகளுக்கான கட்டமைப்போ என எதுவும் இல்லாத உலகில் அடாவடித்தனம் கொண்ட சர்வதேச கட்டமைப்பே நடைமுறையில் உள்ளது. உலகின் காவல்காரன் என்று எவரும் இல்லாத நிலை என்பது பலம் இல்லாதவன் அடிபட்டு போகவும் பலம் கொண்டவன் வாழ்வு பெறவும் வாய்ப்பளிக்கிறது. தற்…
-
- 0 replies
- 1.2k views
-
-
கல்வி ஒரு தீவிரமான அரசியல் ஆயுதம் திரு. கா. ஆறுமுகம் மலேசியக் கல்விச் சூழலில் மிக முக்கியமாக அவதானிக்கப்படுபவர். குறிப்பாக கல்வி கொள்கைகள்வழிதான் தாய்மொழிக்கல்வி என்பதை ஓர் அரசியல் அடையாளமாக உருவாக்க இயலும் என்பதிலும் அதன்வழிதான் பண்பாட்டை காக்க இயலும் என்றும் வாதிடுபவர். தொடர்ந்து நமது நாட்டிலும் அனைத்துலக அளவிலும் கல்வி சார் கருத்தரங்குகள், மாநாடுகள், சந்திப்புகளில் முக்கிய பேச்சாளராகப் பங்குகொண்டு விவாதித்து வருபவர். சுவராம் எனப்படும் மலேசியாவின் மனித உரிமை இயக்கத்தின் தலைவரான இவர், பல முக்கிய நிறுவனங்களில் பொறியியலாளராக பணிபுரிந்தவர். வணிக நிர்வாக துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் ஒரு வழக்கறிஞரும் ஆவார். செம்பருத்தி இணைய இதழின் ஆசிரியரான அவரோடு இடம்பெற்ற ஓர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
ஈழத்தமிழருக்காக உலகிடம் கையேந்துவோரிடம் சில கேள்விகள் ஈழத் தமிழருக்கான விடிவு, சர்வதேசத்திடமும் இந்தியாவிடமும் இருக்கிறது என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள். இந்த நம்பிக்கை, நீண்ட காலமாக கட்டி எழுப்பப்பட்ட ஒன்று. இன்றும் இந்தியா ஈழத்தமிழர்களைக் கைவிடாது என்று சொல்லுபவர்கள் இருக்கிறார்கள். சர்வதேசம் இலங்கையை சீனாவிடம் இருந்து மீட்டெடுக்க, தமிழ் மக்களின் பக்கமே நிற்கிறது என்று நம்பச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். இவ்விரண்டு பற்றியும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர்கள் மத்தியில் மலிந்து போய் கிடக்கிறார்கள். இவர்களிடம் இரண்டு அடிப்படையான கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். முதலாவது, இவர்கள் சொல்லும் சர்வதேசம் என்பதும் இந்தியா என்பதும் …
-
- 7 replies
- 1.2k views
-
-
நிகழ்கால அரசியலுக்குத் தேவைப்படும் தனித்துவ தலைவர் மர்ஹும்அஷ்ரப்- நினைவைநோக்கி- எஸ். எம். சஹாப்தீன் 12 செப்டம்பர் 2012 முஸ்லீம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் அஷ்ரபின் 12ஆம் ஆண்டு நினைவுதினம் - 16.09.2012 முஸ்லீம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் அஷ்ரபின் 12ஆம் ஆண்டு நினைவுதினம் - 16.09.2012 அன்று நினைவு கூரப்படுகிறது. எனினும் காலத்தின் தேவை கருதி கலாபூஷணம் எஸ். எம். சஹாப்தீன் அனுப்பி வைத்த இந்த கட்டுரை முன்கூட்டியே பிரசுரமாகிறது:- கலாபூஷணம் எஸ். எம். சஹாப்தீன் முன்னாள் தேசிய அமைப்பாளர் - ஸ்ரீ ல.மு.கா நிகழ்கால அரசியல் நடவடிக்கைகள் மக்களுக்கு அவநம்பிக்கையை அன்றாடம் ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. அரசியற் தலைமைத்துவங்கள் நம்பிக்கையை ஏற்படுத்துவன…
-
- 1 reply
- 1.2k views
-
-
மகிந்த ராஜபக்ச வேலணை மக்களின் உறவினன், கருணா சிங்கள மக்களின் உறவினன், டக்ளஸ் சமூக வேறுபாடுகளின் தலைவன். இவர்கள் தான் கிழக்கின் உதயத்தையும், வடக்கில் வசந்தத்தையும் கொடுக்கிறார்கள். அவ்வளவிற்கு ஈழத்தமிழர் இழிவானவர்களோ அல்லது மடையர்ககளோ அல்ல. கருணாவிற்கு மது, மங்கை - டக்ளசிற்கு சாதிவெறி, பணவெறி, சமயவெறி, ஈழத்தமிழ் மக்களுக்கு விடுதலைத் தாகம். மகிந்த, கருணா, டக்ளஸ் இவர்களின் வெறிகள் ஒரு போதும் விடுதலை தாகத்தை தணிக்க முடியாது. ஈழத்தமிழரின் ஆயுதப் போராட்டம் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தோல்வி கண்டிருக்கலாம். ஆனால் மக்களின் உணர்வுகள் ஆயுதப் போராட்ட காலத்திலிருந்ததைவிட தற்பொழுது பன் மடங்கு அதிகரித்துள்ளது மட்டுமல்லது, இவ் மும்மூர்த்திகளின் ஆட்டம் நிரந்தரமற்றது என்பதையும், ஈழத…
-
- 2 replies
- 1.2k views
-
-
எமக்காக இன்றும் போராடும் பிரபாகரன் என்ற மந்திரச்சொல் - கவிஞர் தீபச்செல்வன் வானத்தின் விரிவையும் கடலின் ஆழத்தையும் அளந்துவிட முடியாது என்பதைப் போலவே தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குறித்தும் ஒருவர் எழுதி முடித்துவிட முடியாது. உலகின் எந்தக் கவிஞனாலும் பிரபாகரன் பற்றிய காவியத்தை எழுதி விட முடியாது என்பதுதான் உண்மையானது. பிரபாகரன் என்ற பெயரே கவியம்தான். ஆனாலும் அந்தப் பெயரின் முழுமையை உணர்ந்தெழுத முடியாது. நாம் தலைவர் பற்றி அறிந்துகொண்டது எல்லாமே அவர் புறவயமான வரலாறே. அவர் அகமும் புறமுமாய் இருந்த ஈழ விடுதலைப் பயணத்தை அவரால் மாத்திரமே எழுதி விட முடியும். தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தும் அதில் போராளிகள், தளபதிகள், பொறுப்பாளர்களின் பங்களிப்…
-
- 1 reply
- 1.2k views
-
-
சீனா முன் அமெரிக்கா தோல்வி! 15 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் – இந்தியா விலகல்; இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம் Bharati November 16, 2020 சீனா முன் அமெரிக்கா தோல்வி! 15 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் – இந்தியா விலகல்; இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்2020-11-16T08:07:19+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore அ.நிக்ஸன் அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக ஜனவரி மாதம் பதவியேற்கவுள்ள நிலையில், ஆசியான் நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு (Regional Comprehensive Economic Partnership) (RCEP) ஒப்பந்தத்தில் 15 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. உலகின் 39சதவீத பொருளாதார கட்டமைப்புகளை இந்த நாடுகள் உள…
-
- 2 replies
- 1.2k views
-
-
நான் உலகத் தமிழர்களுக்கு தலைவன். தமிழகம் எனது கோட்டை. அரச பணத்தை வேட்டையாடி வேட்டையாடி நான் உழைத்ததோ, சண் ரீ.வி. தற்போது என் பெயரில் வர இருப்பதோ, ரூயாட்ட கொம்பனி. மக்களுக்கு கலர் ரீவி. கேபிள் பாசு என் கெட்டிக்கு. ஆனாலும் தமிழ் நாட்டில் நல்லாட்சி. நல்லவர் ஆளும் காலம் தமிழகத்துக்கு எப்போது வரும்? அன்பிற்கினிய கலைஞர் அவர்களே! உங்களுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு நான் சிறியவன் அல்ல. ஏனெனில் சிறு குழந்தை கூட உங்களிலுமு் நன்றாகவே சிந்திக்கும் ஆற்றல் கொண்டது. நீங்கள் சிந்திக்கும் விடையங்கள் எல்லாம் நன்றே. ஆனால் சொந்த சகோதரர் வாழ்வில் தீயேறிகையில், எரியும் வீட்டுக்கு விலை பேசும் குணம் எப்போது உங்களோடு ஒட்டிக்கொண்டது.? வைகோவிற்கெதிரான அரசியல் செய்வதாக சொல்ல…
-
- 2 replies
- 1.2k views
-
-
மோட்சத்துக்கு வழிகாட்ட வேண்டியவர்கள் அரசியலில் ஈடுபடலாமா? அரசியல் என்பது வேறு, மதம் என்பது வேறு இந்நிலையில் அரசியலில் மதம் ஊடுருவுமானால் அது பல்வேறு சிக்கல்களையும் தோற்றுவிப்பதாகவே அமையும். எனவேதான் உலக நாடுகள் மதச்சார்பற்ற அரசியல் தொடர்பில் அழுத்தம் கொடுத்தும் கவனம் செலுத்தியும் வருகின்றன. அந்தவகையில் இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில் மதத்துக்கும் அரசியலுக்கும் இடையிலான தொடர்பு நிலை காணப்படுகின்றது. மதகுருமார் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பல்வேறு விமர்சனங்களும் இருந்து வருகின்றன. மதகுருமார் அரசியலில் ஈடுபடுவது சரியானதா? தவறானதா என்று கேள்விக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
‘கோர்ட்’ போட்ட கோட்டாவின் சிங்கப்பாதை -விரான்ஸ்கி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், சமாதான காலப்பகுதியில், இராணுவ சீருடை இல்லாமல், சாதாரண உடையில் சர்வதேச செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டது, அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட விடயமாகும். செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னரும்கூட, பல அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள் உடனான சந்திப்பில், அவர் சாதாரண உடையிலேயே கலந்துகொண்டார். அதுபோல, தென்னிலங்கையிலும்கூட, அரசாங்கத்தின் தலைவர்கள், பாரம்பரிய உடையணிந்து கொண்டதற்கும் வேறு சிலர் மேற்கத்தேய உடையணிந்ததுக்கும் இலங்கை அரசியலில் பல்வேறு அரசியல், இராஜதந்திரப் பார்வைகள் உள்ளன. இந்த உடை விவகாரம், அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் மாத்திரமல்ல, படைகளிலும்கூட, பல ச…
-
- 2 replies
- 1.2k views
-
-
[size=4]ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின்போது முள்ளிவாய்க்காலில் வைத்து தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்த அன்று, 2009 மே 17-ம் நாள், நாங்கள் மறைந்துவிட்ட ஆருயிர் நண்பர் அசுரனுக்கு நாகர்கோவில் நகரிலே அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தோம். அந்த ஒருநாள் நிகழ்வின் அங்கமாக “தமிழரின் எதிர்காலம்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்தினோம். நிகழ்காலம் இருண்டு கிடந்ததால், எதிர்காலம் பற்றி ஏக்கத்தோடு விவாதித்துக் கொண்டிருந்தோம். அதேபோல 2012-ம் ஆண்டு மே 17 அன்றும் இடிந்தகரையில் “தமிழரின் எதிர்காலம்” என்ற தலைப்பில் ஒருநாள் மாநாடு நடத்தினோம். இந்தத் தலைப்பின் அவசியம், அவசரம் பற்றி நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை.[/size] [size=4]இன்றைய உலகில் மக்கள…
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கை இனமுரண்பாட்டின் திருப்புமுனை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கறுப்பு ஜூலை நாற்பதாண்டுகளின் பின்னர் - 01 சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வுகள் மிகச்சில! அவை ஒவ்வொன்றும் வரலாற்றின் வழித்தடத்தில் விட்டுச்சென்ற செய்திகள் சிந்தனைக்குரியன. 75 ஆண்டுகால சுதந்திர இலங்கையின் வரலாற்றின் பெரும்பகுதியை, இனமுரண்பாடு நிறைத்திருப்பது தற்செயலானதல்ல. சுதந்திரத்துக்கு முந்தைய இலங்கையிலேயே இனமுரண்பாட்டுக்கான வித்துகள் இருந்தன. மகாவம்சம் என்ற புனைவு வரலாறாகக் கருக்கொண்டதும், அதன் வழிப்பட்ட சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையும் இதன் தொடக்கப் புள்ளிகள். 19ஆம் நூற்றாண்டு இறுதிப் பகுதிகளில் ‘கொச்சிக்கடை கலவரம்’ எனப்படும் பௌத்த-க…
-
- 5 replies
- 1.2k views
-
-
நீராவியடியில் குருகந்த புற்றுநோயால் இறந்துவிட்ட குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதாலங்காரகித்தி தேரரின் உடல் நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் கடந்த 23 அன்று அடாவடித்தனமாகவும், அராஜகத்தனமாகவும் தகனம் செய்ததை அனைவரும் கவனித்தோம். ஏற்கெனவே அந்த பிரதேசத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட விகாரை குறித்த சர்ச்சை இன்னமும் தீராத நிலையில் இந்த அக்கிரமம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை நீராவியடி சர்ச்சையோடு பிக்குகளின் சண்டித்தன வரலாற்று நீட்சியையும் சுருக்கமாக பதிவு செய்கிறது. ஞானசார தேரர் நீராவியடியில் என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு மணித்தியாலத்துக்கும் அதிகமான நேரத்தைக் கொண்ட வீடியோ காட்சியொன்றைக் காணக் கிட…
-
- 0 replies
- 1.2k views
-
-
திருகோணமலையை மையமாக வைத்துச் சுழலும் உலக அரசியல் கோவிட் 19இற்குப் பின்னரான உலக அரசியல் என்பது, பொருளாதார உடன் படிக்கைகளின் வழியான அரசியல் கட்டங்களை உருவாக்குதல் வழி நகரத் தொடங்கியுள்ளது. சீனாவின் முன்னைய பட்டுப்பாதைக் கடல் வழித் துறைமுக இணைப்பு வழி உலகைத் தனது மனித வளத்துடனும், இயற்கை வளத்துடனும் இணைத்து எழுதல் என்ற அற்புதமான திட்டத்தை இன்று கால மாற்றத்திற்கு ஏற்ப புதிய வடிவில் வெற்றிகரமாக முன்னெடுத்து, உலக நாடுகள் பலவற்றிலும் சீனா முதலீட்டு நாடாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்த முதலீட்டு வழி அரசியல் இணைப்பு பெறும் அரசியல் தந்திரோபாயத்தை அமெரிக்கா தனது முதலீட்டாளர்கள் மூலம் செய்வித்துத் தான் சீனாவுக்குச் சமானமான வெற்றி யினைப் பெறுவதற்கான பயணத்தை கோவிட் 1…
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-