அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
அவர்கள் என்னைத் தேடி வந்தபோது... தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ நாடு வழமைக்குத் திரும்பிவிட்டதாக பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அடிப்படைப் பொருட்களை வரிசையில் நிற்காமல் பெறமுடிகின்றமை, உணவுப்பொருட்களின் விலை குறைந்துள்ளமை, போராட்டக்காரர்கள் காலிமுகத்திடலில் இருந்து அகன்றுள்ளமை போன்றன நிலைமை, சீராகியுள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், இங்கு நாம் கேட்க வேண்டிய அடிப்படையான கேள்வி இன்னமும் கேட்கப்படாமலேயே இருக்கிறது. நாட்டை இந்த நெருக்கடிக்குத் தள்ளிய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டனவா? இல்லையெனில், எதன் அடிப்படையில் நாடு வழமைக்குத் திரும்பி விட்டது என்று நாம் நம்புகிறோம்? இப்போது நாட்டில் நடைபெறுகின்ற விடயங்கள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளோமா? இ…
-
- 0 replies
- 388 views
-
-
தீவிரவாதம்: அமெரிக்கா மீது முஷாரப் பாய்ச்சல் அக்டோபர் 01, 2006 லண்டன்: பாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்கவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள்தான் தலிபான், அல் கொய்தா உள்ளிட்ட தீவிரவாதிகளை உருவாக்கி, வளர்த்தது என்று பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். முஷாரப் சமீபத்தில் அமெரிக்க இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், செப்டம்பர் 11 நியூயார்க் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானை குண்டு வீசி அழிக்கப் போவதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆர்மிடேஜ் மிரட்டியதாக பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து அல்கொய்தா தீவிரவாதிகளை ஒப்படைப்பதற்காக அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ பல கோடி ரூபாய் பணத்தை பாகிஸ்தானுக்குக…
-
- 2 replies
- 1.2k views
-
-
கடப்பாடுகளை மறந்த அரசு உள்ளூராட்சித் தேர்தல் நடந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகப் போகின்ற நிலையிலும், கொழும்பு அரசியல் அரங்கில் தோன்றிய கொந்தளிப்பு இன்னமும் அடங்குவதாகத் தெரியவில்லை. உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஏற்பட்ட பின்னடைவு, கூட்டு அரசாங்கத்தின் நிலையை கேள்விக்குள்ளாக்கியது. இரண்டு கட்சிகளுக்குள்ளேயும், உள்முரண்பாடுகளைத் தோற்றுவித்தது. இது கட்சிகள் சார்ந்து உருவாகிய பிரச்சினை. அதேவேளை, கூட்டு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள், பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரண…
-
- 0 replies
- 374 views
-
-
இரகசியமாக தயாராகும் தமிழரசுக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் இவர்தான்: மாவைக்கு இம்முறையும் அல்வாவா? June 1, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த வடமாகாண முதலமைச்சர் யார் என்ற சர்ச்சைகள் சூடு பிடித்துள்ள நிலையில், தமிழரசுக்கட்சியின் உயர்பீடத்தால் தற்போது சடுதியான புதிய நகர்வொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாவை சேனாதிராசாவை தவிர்த்து, புதிய- நிர்வாக பரிச்சயமுள்ள ஒருவரை அரங்கிற்கு கொண்டுவரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. யார் அந்த புதிய முகம்? அவரை அரங்கிற்கு கொண்டு வர முயற்சிப்பவர் யார்? ஆளை சொல்வதற்கு முன்னர், இந்த விவகாரம் குறித்த சிறிய பிளாஷ்பேக் ஒன்றை சொல்கிறோம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தான்தானென மாவை…
-
- 0 replies
- 620 views
-
-
கன்பூசியஸ் நிலையம் – சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு ஊடுருவல் கருவி? - யதீந்திரா அமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் ஒரு சக்தியாக சீனா எழுச்சியடைந்துவருகின்றது. இதில் தற்போது எவருக்குமே சந்தேகமில்லை. இன்றைய சீனாவின் எழுச்சியின் முதல் பகுதி டெங்சியோ ஒபியின் காலமென்றால், அதன் அடுத்த கட்டத்தை நகர்த்துபவராக தற்போதை சீனத் தலைவர் சி.ஜின்பிங்கின் இருக்கின்றார். சீன வரலாற்றில் மாவோவிற்கு பின்னர் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக சி.ஜின்பிங் நோக்கப்படுகின்றார். சீனாவை ஒரு மேலாதிக்க சக்தியாக எழுச்சியடைச் செய்யும் இலக்கில், ஜின்பிங்கின் நிர்வாகமானது, ஆக்கோரசமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த பின்புலத்தில் நோக்கினால், அமெரிக்க …
-
- 0 replies
- 244 views
-
-
இந்துமா சமுத்திரத்தின் பாதுகாப்பு, பயன்பாடுகள் தொடர்பான ஆதிக்கம் யாருக்கு? ஆராய கொழும்பில் சர்வதேச மாநாடு ஈழத் தமிழர்களின் திருகோணமலைத்துறைமுகம், வடக்கு- கிழக்குக் கடற் பிரதேசங்களை பிரதானமாகக் கருதி, இலங்கை இந்தியாவை மையமாகக் கொண்ட இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக இலங்கையின் தலைநகர் கொழும்பில் சர்வதேச மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது. எதிர்வரும் 11ஆம் 12ஆம் திகதிளில் இடம்பெறவுள்ள மாநாட்டில், இந்தியா, சீனா, ஜப்பான் அமெரிக்க, தென்ஆபிரிக்கா போன்ற நாடுகளின் பிரதான இராஜதந்திரிகள் கலந்துகொள்ளவர். இந்தியப் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண், ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களத்த…
-
- 1 reply
- 725 views
-
-
தமிழ் மக்களின் தெரிவுகளில் ஆயுதப் போராட்டமும் ஒன்றா? பலருக்கு இதுகுறித்த பேச்சுக்களோ அல்லது கருத்துக்கள் முன்வைக்கப்படுவதோ அபத்தமாக நிச்சயம் தோன்றலாம். இத்தனை அழிவுகளுக்குப்பின்னரும் ஆயுதப் போராட்டம் குறித்து உன்னால் எப்படிச் சிந்திக்க முடிகிறது என்று கேட்கலாம். அப்படிக் கேட்பதிலும் அர்த்தம் இருக்கிறது. ஏனென்றால், பலரைப் பொறுத்தவரை ஆயுதப் போராட்டம் முற்றான தோல்வியைத் தழுவிக்கொண்டிருப்பதுடன் பேரழிவையும் எமக்கு விட்டுச் சென்றிருக்கிறது. தமிழ் மக்களின் மனங்கள் இனிமேல் ஆயுதப் போராட்டம் ஒன்றுகுறித்துச் சிந்திப்பதையே உளவியல் ரீதியாக முறியடித்து, அதனை அவர்களின் மூலமாகவே இயலாத காரியம் என்று நம்பவைப்பதில் சிங்களப் பேரினவாதம் பெருவெற்றி பெற்றிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. …
-
- 1 reply
- 418 views
-
-
2009 இற்குப் பின்னரான புவிசார் - அரசியல் - பொருளாதாரம் பிறிக்ஸ் மாநாட்டு முடிவுகளும் இலங்கையின் எதிர்பார்ப்பும் பிறிக்ஸில் இலங்கை இணைய வேண்டுமென்ற உதயகம்பன்பிலவின் கோரிக்கையின் பின்னணி? புதுப்பிப்பு: செப். 01 11:56 உலகின் ஒன்பது பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளில், ஆறு நாடுகள் பிறிக்ஸ் கூட்டமைப்பில் இணைந்துள்ளன. இதன் மூலம் உலகின் எண்ணெய் வளத்தை பிறிக்ஸ் நாடுகள் கட்டுப்படுத்த முடியும். இதனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதை எவரும் மறுப்பதற்கில்லை. பிரேசில், ரசியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை கொண்ட வலுவான கூட்ட…
-
- 0 replies
- 574 views
-
-
போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறுதலும் ஊடக சுதந்திரமும் by Niran Anketell - on June 1, 2015 படம் | Photo, Lakruwan Wanniarachchi, GETTYIMAGES உலகின் பல பாகங்களிலே ஊடக சுதந்திர தினமானது தமது ஊடகப்பணியை ஆற்றும்போது கொலையுண்ட ஊடகவியலாளர்களை நினைவுகூருவதால் கொண்டாடப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் அப்படிப் பலியானவர்களின் தொகையானது எனது பேச்சிலோ இப்படியான ஒரு நிகழ்விலோ குறிப்பிட்டுச் சொல்லிமுடியாதபடிக்கு அதிகமானதாகும். இங்கு அமர்ந்திருக்கும் ஊடகவியலாளர்கள் உட்படப் பலர் இன்றும் அதேபோன்ற ஆபத்துக்குத் தொடர்ந்தும் முகங்கொடுத்தும் வருகின்றனர். இருண்ட காலகட்டங்களிலுங்கூட பாதுகாக்கப்பட்டு வந்துள்ள தொழிற்துறையில் ஒரு சட்டத்தரணி என்ற ரீதியிலே, பெரும் விலை கொடுத்த இந்தப் பிராந்தி…
-
- 0 replies
- 240 views
-
-
24 MAR, 2024 | 05:07 PM நாட்டின் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் நட்பு நாடுகளிடமிருந்தும் அரசாங்கம் நிதியுதவிகளைப் பெற்றிருந்தமை அனைவரும் அறிந்ததொரு விடயம். உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்தும் பொறிமுறைகள் தற்போதைய சூழலில் சாத்தியப்படாத ஒன்றாக உள்ளதால், அதன் காரணமாக, வரிகளை அதிகமாக அறவிட்டும் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தும், மின் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொண்டும் நெருக்கடிகளைத் தவிர்க்க அரசாங்கம் முயற்சி செய்கின்றது. அந்நிய செலாவணியை அதிகரிக்க அண்மைக்காலமாக சில நாடுகளுக்கு விசா முறைகளில் தளர்வுகளை ஏற்படுத்தி அந்நாட்டு உல்லாசப்பயணிகளை நாட்டுக்கு வரவழைக்கும் திட்டத்தையும் அரசாங்கம் மேற்கொண்டது.…
-
- 0 replies
- 374 views
- 1 follower
-
-
சம்மந்தனின் மறைவும் தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலமும் July 9, 2024 – கருணாகரன் — “சம்மந்தனின் மறைவுக்குப் பிறகு, தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம் எப்படி இருக்கும்?” – இந்தக் கேள்வி, சம்மந்தனின் மறைவுக்கு முன்னரே எழுப்பப்பட்டிருந்த ஒன்றுதான். ஆனாலும் அவர் மறைந்திருக்கும் இந்தச் சூழலிலும் இதற்குத் தெளிவான பதில் இல்லை என்பதே தமிழ்த்தேசியவாத அரசியலின் பரிதாபகரமான நிலையாகும். என்பதால் சம்மந்தன் இருந்தபோது ஏற்பட்டிருந்த குழப்பங்கள், இழுபறிகளையும் விட இனி வரும் நாட்களில் தமிழ்த்தேசிய அரசியற் பரப்பில் மேலும் பல குழப்பங்களும் பலத்த இழுபறிகளும் நிகழவுள்ளன. பல்வேறு குறைபாடுகள், கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ்த்தேச…
-
- 0 replies
- 495 views
-
-
சர்வதேச விசாரணைகளை அமெரிக்கா முன்னர் பெயருக்குத் தூக்கிப் பிடித்திருந்தாலும் கூட, இன்று அதைத் தேவையற்றது என்று கூறுவது எதற்காக என்பதை இக்கட்டுரை கூறுகிறது, கொழும்பு இனவழிப்பு அரசாங்கத்துக்கு முற்றான பாதுகாவலனாகச் செயற்படும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் போர்க்குற்றவாளிகள் இயல்பாகவே குற்றத்தை பிறர் மீது சுமத்துவதோடு தம்மீதிருக்கும் குற்றத்தை அகற்ற தம்மாலான அனைத்தையும் செய்வார்கள். புலிகள் மீது போர்க்குற்றங்களுக்கான பொறுப்புச் சுமத்தப்பட்டாலும் அவர்கள் இன்று இல்லை. ஆனால் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட மற்றத் தரப்பினர் இன்று சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் ரொபேட் பிளேக் அவர்கள் "தார்மீகப் பொறுப்பெடுத்தல்" பற்றி அடிக்கடி குறிப்பிட்டு வருகிறா…
-
- 0 replies
- 1.8k views
-
-
05 OCT, 2024 | 12:29 PM டி.பி.எஸ். ஜெயராஜ் இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஒன்றும் புதியது அல்ல. அந்த ஆட்சிமுறை என்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதோ அன்றிலிருந்தே அதை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப் போவதாக தேர்தல்களில் வாக்குறுதி அளித்து மக்களின் ஆணையைப் பெற்று ஜனாதிபதியாக ஆட்சியதிகாரத்துக்கு வந்தவர்கள் எவருமே அதை ஒழிக்கவில்லை என்பது அண்மைக்கால வரலாறு. இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் பிரதான வேட்பாளர்களில் அநுரகுமார திசாநாயக்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போவதாக மக…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தின் மிகஉயரமான கட்டிடத்தின் பெயரை ஏன் மாற்றினார்கள்? நிலாந்தன். தமிழ்ப் பகுதிகளில் கடலட்டை ஒரு ராஜதந்திரப் பொருளாகிவிட்டது. காற்றாலை ஒரு ராஜதந்திரப் பொருளாகிவிட்டது. ஒரு கலாச்சார மண்டபமும் அதன் பெயரும் ராஜதந்திரப் பொருட்களாகிவிட்டன. தமிழர்களுக்கான குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கான இந்திய அரசாங்கத்தின் பரிசு என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாண கலாச்சார மண்டபம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தமிழர்கள் சார்ந்த பலப் பிரயோகத்தின் குறியீடா? ஒரு பெரிய நாடு அயலில் உள்ள ஒரு சிறிய நாட்டின் சிறிய மக்கள் கூட்டத்துக்கு பரிசாகக் கட்டிய கலாச்சார மண்டபம் என்று பார்த்தால்,உலகிலேயே மிகப்பெரியது இந்த கலாச்சார மண்டபம்தான். உலகின் வெவ்வேறு பகுதிகளில் இதுபோன்ற வெவ்வேறு க…
-
-
- 3 replies
- 416 views
-
-
கோத்தபாயவின் அடுத்த அரசியல் நகர்வு என்ன ?
-
- 2 replies
- 1k views
-
-
இது விளையாட்டு அல்ல; விபரீதமானது காரை துர்க்கா / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 03:49 அன்றைய காலங்களில், அரசியல் என்பது முற்றிலும் பொதுச் சேவையாகக் காணப்பட்டது. மக்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரித்துடையோர், முழுமையா(ன)க மக்கள் பணியாக, அரசியலை ஆரோக்கியமாக முன்னெடுத்து வந்தார்கள். கல்வி அறிவு, சமூகம் பற்றிய பார்வை, எதிர்காலம் பற்றிய தூரநோக்கு, எனது மக்கள் என்ற பற்று எனப் பல்வேறு விடயங்களைத் தன்னகத்தே கொண்டவர்களாகவும் பல பரிமானங்களை உடையவர்களாகவும், மக்கள் தொண்டுகளை அரசியல்வாதிகள் ஆற்றி வந்தார்கள். தமது மக்களுக்கு விசுவாசமாகவும் நம்பிக்கையாகவும், வாழ்ந்தும் காட்டினார்கள். ஆனால் இன்று, அரசியல் என்பது, தொழில் அல்லது வணிகமென மாறிவிட்டது. அல்லது மாற்றி வி…
-
- 0 replies
- 657 views
-
-
தமிழ்நெற் ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான கோபிநாத் ஜெயச்சந்திரனுடனான செவ்வி.
-
- 0 replies
- 171 views
- 1 follower
-
-
நேபாளத்தில் சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டதற்கு எதிராக இளைஞர்களின் ஆர்ப்பாட்டங்கள். கட்டுரை தகவல் சந்தன் குமார் ஜஜ்வாரே பிபிசி செய்தியாளர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இந்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. கடந்த வாரம் நேபாள அரசு 26 சமூக ஊடக தளங்களுக்குத் தடை விதித்தது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற பிரபலமான சமூக ஊடக மற்றும் மெசேஜிங் தளங்களும் இதில் அடங்கும். சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இளைஞர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன…
-
-
- 7 replies
- 606 views
- 2 followers
-
-
[size=6]உடைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு [/size] - யதீந்திரா மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள் முரண்பாடுகள் ஊடகங்களின் பேசு பொருளாகியிருக்கிறன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்வதற்கு தமிழரசுக் கட்சி உடன்பட மறுக்கும் சந்தர்ப்பத்தில், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய நான்கு கட்சிகளும் இணைந்து கூட்டமைப்பை பதிவு செய்ய முயற்சிப்பதாக செய்திகள் வெளிவந்ததைத் தொடர்ந்தே, இதுவரை அமுங்கிக் கிடந்த உள் முரண்பாடுகள் மீண்டும் அரசியல் அரங்கில் தலைநீட்டியிருக்கிறன. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தலைமைகளின் அரசியல் அணுகுமுறையை சற்று உற்று நோக்கினால், சிறுவயதில் படித்த அம்புலிமாமாக் கதையில் வரும் வேதாளம் - விக்கிரமாதித்தி…
-
- 4 replies
- 1.3k views
-
-
பொறுப்புக் கூறலும் அபிவிருத்தி அரசியலும் உரிமை அரசியல் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுமா அல்லது அபிவிருத்தி அரசியலின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுமா என்று இப்போது சிந்திக்க வேண்டிய தேவை எழுந்திருக்கின்றது. கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இனப்பிரச்சினை இந்த நாட்டை உலுக்கி எடுத்து வருகின்றது. கூடவே அபிவிருத்தி தொடர்பான பிரச்சினையும் தமிழ் மக்களைப் பல்வேறு வழிகளில் வாட்டிக்கொண்டிருக்கின்றது. இனப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே அகிம்சை ரீதியிலும், ஆயுதமேந்திய வழிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன. மென்முறையிலும், வன்முறையிலும் மேற்கொள்ளப்பட்ட தமிழர் தரப்பின் வலிமையான போராட்டங்களினால், அரசுகள் பெரும் நெருக்கடிகள…
-
- 1 reply
- 507 views
-
-
கூட்டமைப்பின் ஏகபோகம் உடையுமா? July 5, 2020 நிலாந்தன் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு விவசாயியிடம் கேட்டேன் “இந்தமுறை யாருக்கு வாக்களிப்பீர்கள்?” அவர் சொன்னார் “யாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதில்லை. ஆனால் எல்லாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதாக வாக்குறுதி தருகிறார்கள். “இதில் யாரை நம்புவது?” நான் கேட்டேன், “அப்படி என்றால் யாருக்குமே வாக்களிக்க மாட்டீர்களா”? அவர் சொன்னார் “இல்லை வாக்களிப்பேன் யாருக்கு வாக்களித்தால் நமது எதிர்ப்பைக் கூடுதலாக காட்டலாமோ அவருக்கு வாக்களிப்பேன்” நான் திரும்ப கேட்டேன் “அப்படி நீங்கள் யாரை தமிழ் எதிர்ப்பின் கூர்மையான வடிவம் என்று கருதுகிறீர்கள் ?” என்று. அவர் சொன்னார் “இதுவரையிலும் யாரையும் அப்படி நான் கருதவில்லை” என்று. “முடி…
-
- 3 replies
- 702 views
-
-
நாடாளுமன்றில் பலகுரல்களில் பேசுதல்: சாத்தியங்களும் சவால்களும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஓகஸ்ட் 16 தமிழ் நாடாளுமன்ற அரசியல் பெரும்பாலும் ஏதோவோர் அந்தத்திலேயே இயங்கி வந்திருக்கிறது. ‘ஏக பிரதிநிதித்துவம்’, ‘கூட்டான மக்கள்தெரிவு’, ‘வலுவான பேரம்பேசல் சக்தி’ என்று காலகாலத்துக்குப் பெயர்களும் கோரிக்கைகளும் மாறினாலும் கடந்த இருபது ஆண்டுகளில் மக்கள் தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களித்து வந்துள்ளார்கள். ஆனாலும் மாற்றுக் குரல்கள் தொடர்ந்து ஒலித்த வண்ணமே இருந்தன. அவை இணக்க அரசியலை ஒருபுறமும் எதிர்ப்பு அரசியலை மறுபுறமும் கொண்டதாக இருந்து வந்திருக்கிறது. இம்முறை நாடாளு மன்றில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் அவ்வாறல்ல. தமிழ் மக்கள் எக்குரலுக்கும் வஞ்…
-
- 0 replies
- 828 views
-
-
ராஜபக்ஷர்களின் அரசியலை எதிர்கொள்ளுதல் ஓர் அரசியல்வாதிக்கும் (politician) ஓர் அரசியலாளுமைக்கும் (statesman) உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஒர் அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்திக்கும்போது, அரசியலாளுமை அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திக்கிறார்” என்கிறார் ஜேம்ஸ் க்ளார்க். சமகால இலங்கையின் தன்னிகரில்லா ‘அரசியல்வாதிகள்’, ராஜபக்ஷர்கள்தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதேவேளை, ஒருவகையில் பார்த்தால் அவர்கள், மிகச்சிறந்த அரசியலாளுமையும் கூட! ஏனென்றால், அவர்கள் அடுத்த தலைமுறையைப் பற்றியும் மிகத் தௌிவாகச் சிந்திக்கிறார்கள். ஆனாலென்ன, அது ராஜபக்ஷர்களினுடைய அடுத்த தலைமுறையாகவே இருக்கிறது; அவ்வளவுதான் வித்தியாசம். இதற்காகவே அவர்கள், தமக்கானதொரு கட்ச…
-
- 0 replies
- 608 views
-
-
வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா சம்பந்தன்? 'கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, 2016 ஆம் ஆண்டு முடிவுக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வழங்கியிருந்தார். இரா.சம்பந்தன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு முடிவதற்கு இன்னமும் இரண்டு மாதங்கள்தான் இருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தல்க் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை இரா.சம்பந்தன், பின்னரும் அவ்வப்போது நினைவுபடுத்தியிருந்தார். அந்த வாக்குறுதியை அவரால் நிறைவேற்ற முடியாது என்பது முன்னரே ஊகிக்கக்கூடிய விடயம்தான். ஏனென்றால், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடிக்கும் ஒரு பிரச்சி…
-
- 0 replies
- 501 views
-
-
எட்டிப்பார்த்தது புதிய கட்சி ரொபட் அன்டனி நாட்டின் அரசியல் களமானது தொடர்ச்சியாக சூடுபிடித்துக் கொண்டே போகிறது. என்றும் இல்லாதவாறு அரசியல் காய்நகர்த்தல்கள் அதிகரித்துச் செல்கின்றன. விசேடமாக மஹிந்த அணியினரின் புதிய கட்சி விவகாரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மிகவும் பரபரப்பாக முடுக்கிவிட்டுள்ளமை உள்ளிட்ட நகர்வுகளை காணமுடிகிறது. மஹிந்த அணியினர் கடந்த 20 மாதங்களாகவே புதிய கட்சியை ஆரம்பிப்பது தொடர்பான சமிக்ஞைகளை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது மஹிந்த அணியின் முக்கியஸ்தரான முன்னாள் வெ ளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் புதுக்கட்சியை ஆரம்பித்திருக்கிறார். அதாவது எமது ஸ்ரீ லங்கா சுதந்திர முன்னணி என்று …
-
- 0 replies
- 331 views
-