Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. [size=4][size=5]ஈழத்தில் புதிய போராட்டம்: இம்முறை புலிகள் பெயரில் அல்ல"[/size] இலங்கையில் 33 வருடப் போராட்டம் 2009ம் ஆண்டு முடிவடைந்துவிட்ட நிலையில், மீண்டும் ஒரு பிரிவினைவாதப் போராட்டம் ஆரம்பிக்கப்படலாம் என கேணல் ஹரிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். 1987ம் ஆண்டு இலங்கை சென்ற இந்திய சமாதானப்படையின், உளவுப் பிரிவின் தலைவராக இருந்த கேணல் ஹரிகரன் அவர்கள், தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களை நன்கு அறிந்துவைத்திருக்கும் நபர்களில் ஒருவராவர். பிரபாகரன் அவர்களின் நகர்வுகள் அனைத்தையும் அவர் துல்லியமாக ஆராய்ந்து வந்துள்ளார். நேற்றைய தினம் அவர் இந்திய இணையச் செய்தி ஒன்றிக்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். போர் முடிவுற்ற சூழலில் இலங்கையில் தமிழர்கள் இன்னமும் நிம்மதிய…

  2. தேசத்துரோகத்தை இனக்குரோதத்தால் நியாயப்படுத்தும் சிங்களக் காவியங்கள்! தேசத்துரோகத்தை இனக்குரோதத்தால் நியாயப்படுத்தும் சிங்களக் காவியங்கள்! “எஹலப்பொலவின் சேனை ஆங்கிலேயருடன் சேர்ந்து போர்ப்பிரகடனம் செய்தது. நாட்டைச் சீரழிக்கும் தமிழனைக் கைதுசெய்து நாட்டைக் காப்பாற்ற அவர்கள் திடசங்கற்பம் பூண்டனர். அந்த துஸ்ட மன்னன் தீயைக் கண்ட மெழுகாக உருகி பயந்து நடுநடுங்கி மனைவி மற்றும் உறவினர்களுடன் தும்பறையை நோக்கி ஓடினான். துட்டகைமுனு தமிழர்களை அழித்தது போன்ற பெருமையுடன் எஹலப்பொல நகருக்குள் எழுந்தருளினர். தேசத்தை சீரழித்த தமிழன் தும்பறையில் மறைந்திருப்பதை அறிந்த எஹலப்பொல குதிரை மீது ஏறி வீராவேசமாக புறப்பட்டான். அவனுடன் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள ஆயுதம் ஏந்திய…

  3. தமிழ் மக்களுக்குத் தேவை அபிவிருத்தியா, அதிகாரமா ? தமிழ் மக்கள் ஒன்றும் கூடுதல் அதிகாரங்களைக் கேட்கவில்லை. வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் தான் அதிகாரப் பகிர்வைக் கேட்கிறார்கள்” இது முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்‌ஷ அண்மையில் கூறியிருந்தார். அவரது அந்தக் கருத்தை அப்படியே பிரதி செய்யும் வகையில் கருத்து வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன. “வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் தான், கூடுதல் அதிகாரங்களைக் கேட்கிறார்களே தவிர, அங்குள்ள மக்கள் அல்ல; அங்குள்ள மக்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் பொருளாதார அபிவிருத்தியும் நிம்மதியும் தான்” என்று, அவர் சில நாள்களுக்கு முன்னர் கூறியிருக்கிறார். மஹிந்த ராஜபக்‌ஷ, த…

  4. 19 வருடங்களிற்கு முன்னர் அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்ட மனிதாபிமான பணியாளர்கள் ; மூதூர் செல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை தடுத்த இராணுவத்தினர் ; வீதியை மறித்த கும்பல் ; ஆதாரங்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டாத பொலிஸார் Published By: Rajeeban 04 Aug, 2025 | 03:40 PM ஏசிஎவ் அமைப்பின் அறிக்கையிலிருந்து -- ஜூலை 31 ஆகஸ்ட் முதலாம் திகதி காலை பட்டினிக்கு எதிரான அமைப்பின் 17 பணியாளர்கள் மூதூர் நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தங்கள் திட்டங்களை முன்னெடுப்பதற்காக புறப்பட்டு சென்றனர். பட்டினிக்கு எதிரான அமைப்பின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவும் தேவையற்ற பயணங்களை மட்டுப்படுத்துவதற்காகவும் மூதூரில் ஒரு அலுவலகத்தை கொண்டிருந்தது. ஆகஸ்ட் முதலாம் திகதி அவர்கள் கடல்வழியாக மீ…

  5. விளையாட்டு வீரனும் ஒரு கலைஞனும்-பா.உதயன் துன்பமும் துயரமும் நிறைந்த ஒரு மக்களின் வாழ்வை புரிந்துகொள்ளாதவன் ஒரு கலைஞனாக இருக்க முடியுமா என்ற கோள்வி எழுவது நியாயமே. ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்தில் வாழும் ஒரு சிறு பான்மை இனத் தாய்மார்கள் தொலைந்துபோன தம் பிள்ளைகளை தேடி கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் ஓர் தாயின் அவலத்தை புரிந்து கொள்ளாதவன் மானிடத்தின் மதிப்பை உணராதவனாக ஒரு கலைஞனாக இருக்க முடியுமா.கலைஞன் என்பவன் யார் ஒரு மானிடத்தின் விடுதலையை பேசுபவன் எழுதுபவன் படிப்பவன்.அந்த மக்களின் வாழ்வை பிரதிபலிப்பவன்.அந்த மக்களால் வாழ வைக்கப்படுபவன்.ஒரு அரசியல் சமூக கலாச்சார மாற்றத்தை உருவாக்க கூடியவன். ஒரு சமூக வாழ்வின் அரசியலோடும் பொருளாதாரத்தோடும் கலாச்சாரத்தோடும் பின்னிப் பிணைந…

  6. இந்திய தேசியமும் தமிழ் தேசியமும் B.R. மகாதேவன் இந்தியாவுக்கு 1947-ல் சுதந்தரம் தரும்போதே, அது நீண்ட காலம் சுதந்தர நாடாக நீடிக்காது/ நீடிக்கக்கூடாது என்பதே பிரிட்டிஷ் உள்ளிட்ட மேற்குலகின் எண்ணமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஒவ்வொரு சமஸ்தானமும் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ சேரலாம்; விரும்பினால் தனியாகவும் இருந்துகொள்ளலாம் என்று மிகவும் தாராள மனதுடன்தான் இந்தியாவை விட்டு வெளியேறியிருந்தார்கள். பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் கூட்டமானது விரைவிலேயே தமக்குள் அடித்துக்கொண்டு மடியும். பிரிட்டிஷாரின் மேலான ஆட்சியை வேண்டாம் என்று எதிர்த்தவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய முடியாது, அமைந்துவிடக்கூடாது என்பதே அந்த கனவான்களின் பெருவிருப்பமாக இருந்தது. ஏற்கெனவே இஸ்லாமியர்கள…

    • 3 replies
    • 873 views
  7. இமாலயப் பிரகடனமும் மகா சங்கமும் – நிலாந்தன். இமாலயப் பிரகடனத்தை செய்த உலகத் தமிழர் பேரவையானது,அது தொடர்பாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.அந்த அறிக்கையில் பின்வரும் தகவல்கள் காணப்படுகின்றன…. பிரகடனக்குழு மல்வத்த பீடாதிபதியை சந்தித்தபோது அவர் பின்வருமாறு கூறியுள்ளார்…“கடந்த காலங்களில் கட்சிகளுக்கிடையில் உருவாக்கப்பட்ட பல்வேறு உடன்படிக்கைகள் இல்லாமல் போவதற்கு வீதிக்கு இறங்கிய பௌத்த பிக்குகள்தான் காரணமென்று தமிழ் பிரதிநிதிகள் கூறியது உண்மைதான் (இந்தச் சந்திப்பின் ஒவ்வொரு கூட்டத்திலும் GTF பிரதிநிதிகள் பலதைக் குறிப்பிட்டிருந்தனர். “பண்டா – செல்வா ஒப்பந்தம்”, “டட்லி – செல்வா ஒப்பந்தம்”, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனான “போர்நிறுத்த ஒப்பந்தம்” மற்றும் அரச…

    • 3 replies
    • 655 views
  8. வடமாகாண சபை ஒரு பதுங்கும் புலியா? - நிலாந்தன் 28 செப்டம்பர் 2014 வடமாகாண சபைக்கு ஒரு வயதாகிவிட்டது. ஒரு அரசியல் செய்முறையின் நன்மை தீமைகளை ஆராய்வதற்கு ஓராண்டு காலம் போதாது தான். ஓராண்டு என்பது ஒரு இனத்தின் வரலாற்றில் மிக அற்பமான ஒரு காலமே. ஆனால் மாகாண சபைத் தேர்தலில் வழங்கப்பட்ட விறுவிறுப்பான உணர்ச்சிகரமான, வாக்குறுதிகளுக்கூடாகப் பார்க்கும் போதும், கடந்த ஓராண்டு காலமாக இந்தியாவும் மேற்கு நாடுகளும் வட மாகாண சபைக்கு கொடுத்து வரும் முக்கியத்துவத்திற்கூடாக பார்க்கும் போதும் குறிப்பாக மே 19க்கு பின்னரான பொதுவான ஈழத் தமிழ் உளவியலுக்கூடாக பார்க்கும் போதும் வடமாகாண சபையின் ஓராண்டு காலம் என்பது கவனிப்புக்குரியதே. கண்டி வீதியில் பழமை வாய்ந்த கைதடி முதியோர் இல்லம் ம…

  9. சின்னத்தில் என்ன இருக்கிறது? - நிலாந்தன் தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு புதிய கூட்டமைப்பை அமைக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இதனால் விக்னேஸ்வரன்-மணிவண்ணன் அணியானது மான் சின்னத்தின் கீழும் ஏனைய கட்சிகள் குத்துவிளக்கு சின்னத்தின் கீழும் போட்டியிடுவதாக முடிவாகியுள்ளது. தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு பெரிய கூட்டை உருவாக்கப் போகின்றன என்று எதிர்பார்க்கப்பட்ட கட்சிகள் ஒரு பொதுச் சின்னத்தை கண்டுபிடிக்க முடியாமல் தங்களுக்கு இடையே இரண்டாக உடைந்து விட்டன. இந்த உடைவை தொகுத்துப் பார்த்தால் வெளிப்படையாக ஒரு விடயம் தெரிகிறது. ஆயுதப்போராட்ட மரபில் வந்த கட்சிகள் ஓரணியிலும் ஆயுதப்போராட்ட மரபில் வராத கட்சிகள் இன்னொரு அணியாகவும் நிற்பதைக் காணலாம். இது ஆ…

  10. பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப விக்னேஸ்வரன் உருவாக்கிய தமிழ் மக்கள் கூட்டணி செயற்படுமா? சர்வதேசம் தமிழ்த் தரப்புடன் பேச வேண்டும் என்ற கட்டாயச் சூழலை ஏற்படுத்தும் கொள்கை எது? வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கிய விக்னேஸ்வரன் தற்போது அதில் இருந்து வெளியேறி தமிழ் மக்கள் கூட்டணியை உருவாக்கியுள்ளார். ஆனால் தமிழ் மக்கள் பேரவையில் அவருக்கு ஆதரவாகச் செயற்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் அவருடைய புதிய கட்சி…

    • 3 replies
    • 1k views
  11. நாங்கள் ஸ்ரீலங்காவிலுள்ள தமிழர்களுக்கு கெடுதலையே செய்து கொண்டிருக்கிறோம். தமிழ் அரசியல் வார இதழான துக்ளக்கின் ஆசிரியரான சோ ராமசாமி,அவர்கள் தமிழ் நாட்டில் மிகவும் புகழ் வாய்ந்த அரசியல் ஆய்வாளராவார். ஷோபா வாரியாருக்கு அவர் வழங்கியுள்ள இந்த பிரத்தியேக நேர்காணலில் அவர் ஸ்ரீலங்காத் தமிழர்கள் விடயம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து திராவிட முன்னேற்ற கழகம் வெளியேறியது, மற்றும் அடுத்து வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கான அவரது எண்ணங்கள் என்பனவற்றை வெளிப்படுத்துகிறார். திராவிட முன்னேற்ற கழகம்(திமுக) ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து(யு.பி.ஏ) வெளியேறப்போவதாக அச்சுறுத்தல் விடுத்தபோது, அவர்கள் மற்றுமொரு நாடகத்தை அரங்கேற்றுவதாகத்தான் பலரும் எண்ணினார்கள். ஆனால் இறுதியாக அவர…

    • 3 replies
    • 942 views
  12. நீதி கோரும் தமிழர் அரசியலின் தோல்வி ? -யதீந்திரா முள்ளிவாய்க்கால் அவலம் இடம்பெற்று 14 வருடங்கள். முள்ளிவாய்க்கால் என்பது, ஒரு ஆயுத போராட்டத்தின் தோல்வியின் விளைவாகும். இந்த பின்புலத்தில் முள்ளிவாய்க்காலை நினைவு கொள்வதென்பது, இன்னொரு வகையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியை, அழிவையும் நினைவுபடுத்துவதாகும். 2010இல், இந்தக் கட்டுரையாளர், பின்வருமாறு எழுதியிருந்தார். அதாவது, இலங்கையில் ஒரு மனிதப் பேரவலம் நிகழ்ந்தது பற்றி, அதிகம் எழுதி ஓய்ந்துவிட்டது. முன்வைக்கப்பட்ட கண்டனங்களும் ஏராளம். “அவர் – இவர் எனப் பலர் வரக்கூடும் என ஊட்டப்பட்ட நம்பிக்கைகளும் அலாதியானவை. இறுதியில் நடந்தது எதுவுமில்லை. இனி முள்ளிவாய்க்க…

    • 3 replies
    • 645 views
  13. இனப்படு*கொ*லை | முன்னணியின் மூடிமறைப்பு அரசியல் .

  14. யாழ்ப்பாணத்தின் புதிய சுவரோவியங்கள் – நிலாந்தன் December 21, 2019 ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் வடமாகாண ஆளுநராக சந்திரசிறி இருந்த காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு படைப்பாளியும் புலமையாளரும் ஆகிய எனது நண்பர் கைபேசியில் என்னை அழைத்தார். யாழ். புகையிரத நிலையத்தில் ஒரு சுவிட்சலாந்து பெண் ஓவியம் வரைகிறார் வருகிறீர்களா போய் பாப்போம் என்று கேட்டார்.இருவரும் புகையிரத நிலையத்திற்கு போனோம். அங்கே இரண்டாவது மேடையை நோக்கிச் செல்லும் நிலக்கீழ் வழியில் அந்த வெளிநாட்டுப் பெண் ஓவியம் வரைந்து கொண்டிருந்தார். அந்த ஓவியங்களில் பென்குயின்கள் இருந்தன. கடலைப் போல அலையைப் போல வடிவங்கள் இருந்தன. ஆனால் யாழ்ப்பாணம் இருக்கவில்லை. நாங்களிருவரும் அவரோடு கதைத…

    • 3 replies
    • 1.5k views
  15. யார் விரும்புகிற ஒருவர் பிரதமராக நியமிக்கப்படவேண்டியவர் என்கிற சர்ச்சை இப்போது தலைதூக்கியுள்ளது. பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றவரா அல்லது ஜனாதிபதியின் விருப்பைப் பெற்றவரா என்பதை சட்ட ஆராய்ச்சிக்கு உட்படுத்துமளவுக்கு பூதாகரமாகியுள்ளது இந்தப் பிரச்சினை. இந்த சர்ச்சையை உருவாக்கியிருப்பவர் ஜனாதிபதி. தான் விரும்பிய ஒருவரைத் தான் நியமிப்பேன் என்றும் அது அரசிலமைப்பின்படி சரியானதே என்றும் வாதிடுகிறார். இதே மைத்திரிபால 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகாவால் பிரதமராக முன்மொழியப்பட்ட கதிர்காமரை நியமிக்கவிடாமல் மகிந்தவுக்குத்தான் பாராளுமன்றத்தில் ஆதரவு அதிகம் என்று வாதிட்டு மகிந்தவை பிரதமராக்க காரணமாக இருந்தவர். கதிர்காமர் போன்ற “தமிழர்களுக்கு” வரலாற்றில் நேர்ந்த கதியை நாம…

  16. சோல்பரி ஆணைக்குழு நியமிக்கப்பட்ட 80வது ஆண்டில் ஈழத்தமிழர் இறைமையின் தொன்மை குறித்து சில தெளிவுகள் – மூத்த அரசியல் ஆய்வாளர் சூ. பற்றிமாகரன் January 31, 2025 நீதியரசர் சச்சி பொன்னம்பலத்தின் “சிறிலங்கா-தமிழர் தேசியப் பிரச்சினையும் தமிழர் விடுதலைப் போராட்டமும்” நூலிருந்து சில தரவுகள்சிறிலங்காவின் இன்றைய அரசத்தலைவர் அநுரகுமர திசநாயக்கா இரு தேச இனங்களின் இறைமைகளின் சமத்துவத்தை உறுதிப்படுத்தி நாட்டை பொருளாதார பெருவீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கான சில வரலாற்று வழிகாட்டல் ஈழத்தமிழர் இறைமையை இலண்டன் கிழக்கிந்தியக் கம்பெனி 1796 இல் டச்சுக் காலனித்துவ அரசிடம் இருந்து கைப்பற்றி மதராசில் இருந்து ( இன்றைய சென்னை) தமிழகத்துடன் இணைந்ததாக முழு இலங்கையையும் 1802 வரை ஒரே சட்டத்தில் ஓரே …

  17. Ramanathan Archchuna வைப் பற்றிய Sepal Amarasinghe வின் you tube பதிவினது தமிழாக்கம். பகுதி 1. சில இடங்களில் எனது கருத்துக்களையும் சேர்த்திருக்கிறேன். Ramanathan Archchuna வால் கேட்கப்படும் பிரச்சனை என்ன என்பது தான் you tube பதிவின் தலையங்கம்… இதை சுருக்கமாக சொல்வதானால்…. 1)இப்போது (தமிழர்களுக்கு பழையது) பெரும்பான்மையினருக்கு சமூகவலைத்தளத்தில் மிகவ…

  18. கழுதைப்புலி அரசியல் – கிரிஷாந் June 15, 2017 ஓர் ஆளுமை சமூகத்தில் நிகழ்த்தியிருக்கும் மாற்றத்தையே அவரை அளவிடுவதற்கான அளவுகோலாகக் கொள்ளமுடியும். மதிப்பீடுகளற்றுப் போன ஒரு சமூகமாக மாறியிருக்கும் நாம் எல்லாவற்றையும் வாய் பார்த்துவிட்டு நகர்ந்துகொண்டிருக்கிறோம். அரசியல்வாதியாக ஒருவர் வருவதற்கு முன் ஒரு வாழ்க்கையிருக்கிறது. அந்த வாழ்க்கையில் அவர் என்னவாக இருந்தார், எப்படி நடந்து கொண்டார், எவற்றை உருவாக்கினார் என்பது பிற்கால அவரது அரசியல் பயணத்தில் செல்வாக்குச் செலுத்தும். இந்தப் பத்தியை அமைச்சர் ஐங்கரநேசனின் ஆளுமை தொடர்பிலும் அவர் தொடர்பான விமர்சனங்களை நாம் எவ்வாறு உரையாடப்போகிறோம் என்பது தொடர்பிலும் ஒரு முன்வரைவை உருவாக்கிக் கொள்ளவும் தொகுக்கிறேன். ஐங்கரநேசன்…

    • 3 replies
    • 1.2k views
  19. சம்பந்தனின் பதவி வெறியைத் தணிக்குமா தமிழரசின் குழு? புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை, அவர் வகித்து வரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறு கோருவதற்காக, சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவை இலங்கை தமிழரசுக் கட்சி அமைத்திருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, சி. வி. கே சிவஞானம், எம். ஏ சுமந்திரன் உள்ளிட்டவர்கள் அடங்கிய அந்தக் குழு, எதிர்வரும் நாள்களில் சம்பந்தனை நேரில் சந்தித்து, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்யுமாறு ‘பக்குவமாக’க் கோரும். வவுனியாவில், ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டது. …

  20. [size=4]இலங்கையில் தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக எதிர்கொண்ட பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன.[/size] [size=3][size=4]ஆனாலும் அந்த ஒப்பந்தம் வெற்றியா அல்லது தோல்வியா என்கிற கேள்விகள் இன்றும் தொடருகின்றன.[/size][/size] [size=5]எனினும் அந்த ஒப்பந்தம் இன்றளவும் இந்தியாவின் மிகப்பெரிய ராஜந்திர தோல்வி என்றே விமர்சிக்கப்படுகிறது.[/size] [size=3][size=4]இந்தியாவின் முன்னெடுப்பில் உருவாகி, ராஜீவ் காந்தி-ஜெ ஆர் ஜெயவர்தன ஆகியோரிடையில் அந்த ஒப்பந்தம் கையெழுத்தானாலும், அதை நடைமுறைபடுத்த எத்தரப்பும் முழுமையாக செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டு இன்னும் உள்ளது.[/size][/s…

    • 3 replies
    • 709 views
  21. வெள்ளக் கதைகள் -நிலாந்தன் December 13, 2020 புரேவிப் புயல் கடந்த வாரம் தமிழர் தாயகத்தை ஓரளவுக்குச் சேதப்படுத்தியது. மூன்று மரணங்கள். ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தார்கள்.சொத்துக்களுக்கு நட்டம் ஏற்பட்டது.குறிப்பாக யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலைச் சூழ்ந்து வெள்ளம் நின்றது. யாழ் நகரத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. கோவில் வீதியில் அமைந்துள்ள இரண்டு நாடாளுமன்ற உறுபினர்களின்(விக்னேஸ்வரன்,அங்கஜன்) வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. விக்னேஸ்வரனின் வாடகை வீட்டின் படிக்கட்டுக்கு வெள்ளம் ஏறியது. இவ்வாறு யாழ்ப்பாணத்தின் சில பகுதிகள் வெள்ளத்துள் மிதந்தமை குறித்து சமூக வலைத்தளங்களில் ஊடகங்களில் பரவலாக விமர்சனங்கள் எழுந்தன. நகைச்சுவை உணர்வு மிக்…

    • 3 replies
    • 644 views
  22. தந்திரம் பழகு “அரசியல் என்பது சதுரங்கத்தை விட மேலானது. அது துடுப்பாட்டத்தைப்போல ஒரு குழுச்செயற்பாடு.மரதன் ஓட்டத்தைப்போல அதற்கு ஒரு திராணி இருக்க வேண்டும்.நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும்….அது ரகர் விளையாட்டைப்போல கடினமானது,குத்துச்சண்டையைப்போல,ரத்த விளையாட்டு…..”இது ரணில் விக்கிரமசிங்க கூறியது.அவர் சதுரங்கம் விளையாடுவது போன்ற ஒரு காணொளியின் பின்னணியில் இவ்வாறு கூறுகிறார்.இந்த வசனங்களை அவருக்கு எழுதிக் கொடுத்தது தமிழ் ஊடக முதலாளியான ராஜமகேந்திரன் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இப்பொழுது ரணில் ஆட்சிக்கு வந்திருக்கிறார்.மஹிந்தவை,கோட்டாவை நீக்கியதுபோல ரணிலையும் அரகலி…

  23. கல்முனை விவகாரம் – நிலாந்தன் June 22, 2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னரான விழிப்பின் அடிப்படையில் முடிவெடுக்குமா? கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விவகாரம் கிழக்கில் தமிழ் – முஸ்லிம் உறவுகளை மறுபடியும் சோதனைக்குள்ளாக்கியிருக்கிறது. ஈஸ்ரர் குண்டு வெடிப்பையடுத்து குறிப்பாக சீயோன் தேவாலயத்தில் முப்பதிற்கும் குறையாதவர்கள் கொல்லப்பட்ட பின்னணியில் கிழக்கில் தமிழ் – முஸ்லிம் உறவுகளில் பதட்டம் அதிகரிப்பதைத் தடுக்கும் விதத்தில் அங்குள்ள சிவில் சமூகங்களும் கிறிஸ்தவ சமயப்பணி நிறுவனங்களும் விசுவாசமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டன. சீயோன் தேவாலயத்தின் மீது நடந்த தாக்குதலின் பின்னரும் கிழக்கில் முஸ்லிம்களின் மீது தமிழ் மக்கள் தனியாட்களாகவோ அல்லது கும்பலாக…

    • 3 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.