அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
மஹிந்தவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தல் பரப்பு அதிகரித்து வருகின்ற சூழலில் நாளை 11ஆம் திகதி வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பானது நாட்டின் தேசிய அரசியலில் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளதாக மிகப்பரவலாக அந்தத் தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலிலேயே நாளை வெளியாக இருக்கின்ற இந்த அறிவிப்பானது மிக முக்கியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய அரசியல் சூழலில் இரண்டு பிரதான முகாம்களிலிருந்த…
-
- 0 replies
- 1k views
-
-
மன்னாரில் கண்வைத்துள்ள அவுஸ்திரேலிய நிறுவனம் – ஆபத்தில் தமிழர் தேசத்தின் வளங்கள்! BharatiDecember 30, 2020 சுதன்ராஜ் மன்னார் தீவுக்கடலில் பெற்றோல் உண்டு என்ற கதையாடல் மட்டுமல்ல, பெட்ரோலிய ஆய்வுகளுக்கு வெளிநாட்டு நிறுவனங்களை இலங்கை அரசாங்கம் அழைந்திருந்தமை எல்லாம் நாம் அறிந்த செய்தி. ஆனால் மன்னார் தீவின் கனியவளங்கள் மீது வெளிநாட்டு நிறுவனங்கள் குறிப்பாக அவுஸ்திரேலிய நிறுவனமொன்று ‘கண்’ வைத்திருப்பது மட்டுமல்லாது அவ்வளங்களை சத்திமில்லாமல் ஏற்றுமதி செய்துவருவதான தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. 26 கி.மீ நீளமும் 8 கி.மீ அகலமும் கொண்ட மன்னார்தீவின் மணலில் இல்மனைட் என்ற கனிய வளங்கள் உள்ளன. இக்கனிமம், வண்ணப்பூச்சுகள், மை, பிளாஸ்டிக் மற்ற…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழ் மக்களின் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டமும் 20 இன் பின்னால் இருக்கிறது: விக்னேஸ்வரன் Bharati 20 ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக ஜனநாயகத்தில் இருந்து சர்வாதிகாரத்தை நோக்கி ஆட்சி பண்புகளின் பரிணாமம் திசை மாறுவதற்கான காரணம் வெறுமனே பதவி மோகம் மட்டும் அல்ல என்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சில அரசியல் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாக இதனை பார்ப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கட்சியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 20 ஆவது சட்டத்திருத்த பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த விக்னேஸ்வரன், தமி…
-
- 0 replies
- 1k views
-
-
உலக வரலாற்றில் இதுவரைக்கும் நடைபெற்ற யுத்தங்களில் பெரும்பாலானவை நிலத்தை ஆக்கிரமிப்பதற்கான அல்லது நில மீட்புக்கான யுத்தங்களாகும். இன்று பலஸ்தீனம் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதும் முஸ்லிம்களை வேரறுத்து, அந்த மண்ணைக் கைப்பற்றி, அங்கிருக்கின்ற வளங்களை சுரண்டுவதற்கான பல்நோக்கு யுத்தமென்றே கூற வேண்டும். ஏனென்றால் நிலம் அல்லது காணி என்பது ஒரு குறிப்பிட்ட மக்களின் இருப்புக்கும் வாழ்தலுக்குமான அடிநாதமாக திகழ்கின்றது. காணிகள் மீதான உரிமை எந்தளவுக்கு முக்கியமானது என்பதை உலக வரலாற்றினூடு மட்டுமல்லாமல் இலங்கையின் அனுபவத்தின் ஊடாகவும் புரிந்து கொள்ள முடியும். அதாவது, விடுதலைப் போராட்டமும், அதற்கெதிரான அரச நடவடிக்கையும் வெறுமனே அரசியல் உரிமைகள் தொடர்பான இராண…
-
- 0 replies
- 1k views
-
-
ஓ டயரை கொன்றால் போராளி ராசீவைக் கொன்றால் குற்றவாளியா? ????????????? 1919 ஜாலியன் வாலா பாக் பஞ்சாபி சீக்கியர் படுகொலைக்கு பழிவாங்க லண்டன் சென்று 22ஆண்டுகள் கழித்து ஜெனரல் ஓ டயரைச் சுட்டுக்கொன்ற உதம் சிங் (பஞ்சாபி சீக்கியர்) இந்திய அரசுக்கு போராளி என்றால் அமைதிப்படை அனுப்பி ஆறாயிரம் தமிழ்மக்களைக் கொன்று 800 தமிழ்ப் பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்திய ராசீவைக் கொன்ற தனு எங்களுக்கு போராளியே. நன்றி: சனவரி 14 'நம்வேர்கள்' http://namvaergall.blogspot.co.uk/
-
- 0 replies
- 1k views
-
-
பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப விக்னேஸ்வரன் உருவாக்கிய தமிழ் மக்கள் கூட்டணி செயற்படுமா? சர்வதேசம் தமிழ்த் தரப்புடன் பேச வேண்டும் என்ற கட்டாயச் சூழலை ஏற்படுத்தும் கொள்கை எது? வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கிய விக்னேஸ்வரன் தற்போது அதில் இருந்து வெளியேறி தமிழ் மக்கள் கூட்டணியை உருவாக்கியுள்ளார். ஆனால் தமிழ் மக்கள் பேரவையில் அவருக்கு ஆதரவாகச் செயற்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் அவருடைய புதிய கட்சி…
-
- 3 replies
- 1k views
-
-
யுத்தத்திற்குப் பின்னான நிகழ்ச்சி நிரல் என்ன?
-
- 1 reply
- 1k views
-
-
புலம்பெயர் சமூகத்தின் உதவிகள் -01 August 22, 2023 —- கருணாகரன் —- கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகப் புலம்பெயர் சமூகம் இலங்கையில் உள்ள மக்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. இந்த உதவிகள், போராட்டத்துக்கான பங்களிப்பாக, போர் நெருக்கடிகளைத் தீர்ப்பதாக, சுனாமி மற்றும் கொரோனா கால பேரிடர்களில் துயர் களைவதாக எனப் பல வகையில் இருந்து வருகிறது. மட்டுமல்ல, இந்தப் பாதிப்புகளுக்குட்பட்ட மக்களை மீள் நிலைப்படுத்துவதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம், சமூக மேம்பாடு எனப் பலவற்றுக்காகவும் உதவுகிறது. கூடவே துறைசார் அறிவுப் பகிர்தலையும் இப்பொழுது ஆற்றி வருகிறது. இவற்றைப் பற்றி இந்தத் தொடர் விவாதிக்கிறது. புலம்பெயர் சமூகம் இன…
-
- 4 replies
- 1k views
-
-
பெருந்தொற்றுக் காலகட்டத்தில் மொழியுரிமையும் இலங்கையும் என்.கே. அஷோக்பரன் இலங்கையில் கொரோனா வைரஸின் பரவல்நிலை, அனைத்து மக்களையும் பதற்றம் அடையச் செய்துள்ளது. இந்தப் பெருந்தொற்றுப் பதற்றத்துக்கு, சமூக ஊடகங்கள் பரப்பும் போலிச் செய்திகள், ‘எரியும் நெருப்புக்கு எண்ணை ஊற்றும்’ கைங்கரியத்தைச் செய்கின்றன. இத்தகைய போலிச்செய்திகளின் வலுவைத் தகர்க்கவும் பதற்ற சூழமைவில் இருந்து, மக்களை அமைதிகொள்ளச் செய்யவும், மக்களோடு நேரடியாகவும் வினைதிறனுடனும் அரசாங்கம், தொடர்பாடலை மேற்கொள்ளுதல் அத்தியாவசியமானது. இலங்கை அரசாங்கம், ‘இந்திய-இலங்கை’ ஒப்பந்தத்தில், ‘இலங்கையானது சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மலாயர்கள் உட்பட்டவர்களைக் கொண்ட பல்லின, பல மொழிகளைக் கொண்ட பன்…
-
- 0 replies
- 1k views
-
-
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் தன்னை ஜனநாயக நாடு என்று வேசம் கொள்கின்ற இந்தியாவிலே நேரு குடும்பத்திற்கு ஒரு சட்டம், பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், பொலிசுக்கு ஒரு சட்டம், அப்பாவி மக்களுக்கு ஒரு சட்டம் என்று பலவிதம் உண்டு. ரஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில அவரால் இலங்கைக்கு அமைதிப்பணிக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் பெண்கள,; குழந்தைகள், வயோதிபர்கள், இளைஞர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் ஆறாயிரம் பேரை கொன்று குவித்தது. பல நூற்றுக்கணக்கான பெண்களை கற்பழித்தது. பெண்கள் கற்புடன் இருப்பதும், வயோதிபர்கள் குழந்தைகள் உயிருடன் இருப்பதும் இந்தியப்படையின் கண்ணோட்டத்தில் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருந்தது. உண்மையில் இலங்கையில் இந்தியப்படை இரு…
-
- 1 reply
- 1k views
-
-
ஸ்ரீ லங்கன்’ எனும் அடையாளம் -என்.கே. அஷோக்பரன் இங்கிலாந்தின் மாலபோன் கிரிக்கட் கழகத்தின் (எம்.சி.சி) வருடாந்த சொற்பொழிவை, 2011இல் ஆற்றிய இலங்கையின் புகழ்பூத்த கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார, அவருடைய உரையின் இறுதியில், “நான் தமிழன், நான் சிங்களவன், நான் முஸ்லிம், நான் பறங்கியன், நான் பௌத்தன், நான் இந்து, கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் வழிப்பற்றுபவன்; இன்றும், என்றும் நான் பெருமைமிகு இலங்கையன்” என்று தெரிவித்திருந்தமை, இந்தத் தீவில் வாழ்பவர்களை மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் இந்தத் தீவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களைப் புளங்காங்கிதம் அடையச் செய்திருந்தது. சுதந்திரம் கிடைக்கப்பெற்ற காலம் முதல், இனப்பிரச்சினையில் உழன்று கொண்டிருக்கும் இலங்கையில், மீளிணக்கப்பாட்டின் ஊ…
-
- 1 reply
- 1k views
-
-
கறுப்பு யூலையும் – முள்ளிவாய்க்காலும் – நல்லிணக்க யுத்தமும் புதிய சிந்தனை வேண்டி கட்டளையிடுகின்றன. மு.திருநாவுக்கரசு கறுப்பு யூலை இனப்படுகொலையின் குறியீடுட்டுச் சின்னமாய் இக்கறுப்பு வெள்ளை நிழற்படம் அமைகிறது. கொழும்பு மாநகரில் தமிழர்கள் மீது இனப்படுகொலை கட்டவிழ்த்துவிடப்பட்ட வேளை ஒரு சிங்கள அன்பரினால் எடுக்கப்பட்ட நிழற்படம் இது. கீர்த்தி பாலசூரிய என்ற எனது சிங்கள நண்பர் 12 நிழற்படங்கள் அடங்கிய கறுப்பு-வெள்ளை நிழற்பட சுருளை என்னிடம் சேர்ப்பித்தார். அந்த படங்களில் ஒன்றுதான் மேற்படி நிகழ்படமாகும். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் செயலாளாராக இருந்த நண்பர் கீர்த்தி பாலசூரியாவும் அவரது அமைப்பும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிம…
-
- 1 reply
- 1k views
-
-
நம்பிக்கையை நாசமாக்கும் அரசாங்கம் கே. சஞ்சயன் / 2020 ஜனவரி 10 , மு.ப. 10:14 முன்னாள் அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகியோரின் கைது நடவடிக்கைகளை அடுத்து, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்ட முறை, கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அதைத் திசை திருப்பி விடுவதற்காகவே, ரஞ்சன் ராமநாயக்கவின் அலைபேசி உரையாடல் பதிவுகள், சமூக ஊடகங்களில் கசியவிடப்பட்டு இருக்கின்றன. சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட போது, சபாநாயகருக்குத் தெரியப்படுத்தப்பட இல்லை; நீதிமன்ற உத்தரவும் பெறப்படவில்லை. விதிமுறைகளுக்கு முரணாக, அவர் கைது செய்யப்பட்ட போது, “அது சரியான நடவடிக்கை தான்; பொலிஸார் மீது எந்தத் தவறும் இல்லை” என்று அரசாங்கத…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழர் பகுதிகளில் புத்தர் இருந்தாரா? Editorial / 2018 டிசெம்பர் 04 செவ்வாய்க்கிழமை, மு.ப. 02:22 Comments - 0 - ஜெரா தமிழர்களின் பூர்வீக நிலப் பகுதிகளான வடக்கும் கிழக்கும், மிகவேகமாக பௌத்தமயப்பட்டு வருகின்றன. இலங்கையில் தீவிர அரசியல் கலப்புக்குள்ளாகிவிட்ட பௌத்த தத்துவமும் அதன் துறவிகளும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் தரப்பினரும், இதனை முன்னின்று செய்கின்றனர்; வழிநடத்துகின்றனர். இந்த நடவடிக்கைகள் குறித்து யார் கேள்வி எழுப்பினாலும், “இவ்விடங்களிலெல்லாம் முன்பொரு காலத்தில் பௌத்தம் இருந்தது. புத்தர் விஜயம் செய்தார்” என்கிற மாதிரியான வரலாற்றுக் “கதைகளை” அவிழ்த்துவிடுகின்றனர். இந்தக் கதையவிழ்ப்புகளின் அடிப்படையில்தான், வடக்கிலும் கிழக்கிலும், நாளாந்தம் பௌத்…
-
- 0 replies
- 1k views
-
-
"சிங்கள கடும்போக்குவாதிகள் தலைதூக்கியுள்ளனர்" தமிழீழத்தை உருவாக்கும் நிராயுத பொறி முறையில் நாடு கடந்த விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மேற்குலக நாடுகளின் அனுசரணையுடன் செயற்படுகின்றனர். இவர்கள் இலங்கைக்கு எதிராக பல்வேறு குற்றச் சாட்டுக்களையும் சாட்சியங்களையும் உருவாக்கியுள்ளனர். இவற்றின் நிழலாகவே ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நிகழ்ச்சி நிரலும் காணப்பட்டது என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். இறுதி யுத்தத்தின் போது வெறும் 26 பேர் மாத்திரமே இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனதாக தகவல்கள் உள்ளது. பல்லாயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக கூறுவது புலம்பெயர் விடுதலைப் புலி …
-
- 1 reply
- 1k views
-
-
வெற்றியின் அடுத்த கட்ட படிகளை நோக்கி முன்னேறுவோம்! தமிழீழ ஆதரவு அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு / திங்கள், 25 மார்ச் 2013 12:51 தமிழகமெங்கும் கல்வி வணிகமயமாக்கப்பட்டு கல்விக்கூடங்கள் சிறைகூடங்களாக மாற்றப்பட்டுள்ளன. சேனல் 4-ல் வெளிவந்த இனப்படுகொலை காட்சிகளும், மழலைச் செல்வன் பாலச்சந்திரனின் நெஞ்சை பதறவைக்கும் படுகொலையும் நம்மை பூட்டி வைத்திருந்த சிறைக் கதவுகளை உடைத்து சீறியெழ வைத்தது. ஈழத் தமிழர்களை படுகொலை செய்த "சிங்கள இனவெறியன் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக, இனப்படுகொலையாளனாக சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்", "வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு …
-
- 0 replies
- 1k views
-
-
[size=4][size=5]நெல்சன் மண்டேலா : வாழ்க்கை என்பது போராட்டமே![/size][/size] [size=4]தென் ஆப்பிரிக்கா நிறையவே மாறியிருக்கிறது. ஆப்பிரிக்கர்கள் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். [/size]ஹோட்டல்கள் திறந்திருக்கிறார்கள். செய்தித்தாள்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அடுக்கு மாடி அபார்ட்மெண்ட்டுகளைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இருபது சதவீத ஆப்பிரிக்கர்கள் தங்களை நடுத்தர வர்க்கம் என்று அழைத்துக்கொள்கிறார்கள். பெருமையாக. மற்றொரு பக்கம், மண் தரைகளும் ஒழுகும் மேற்கூரைகளும் அப்படி அப்படியே நீடிக்கின்றன. பல ஆப்பிரிக்கர்கள் ஜாகுவார் கார்களை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிக்னலில் வண்டியை நிறுத்தும்போது, பிச்சை கேட்டு கறுப்பு கைகள் நீள்கின்றன. சைரன் ஒலிகளுக்கு இ…
-
- 7 replies
- 1k views
-
-
மாநகர உறுப்பினர் மணிவண்ணன் இடைநிறுத்தம்!! பின்னணி என்ன?? |
-
- 0 replies
- 1k views
-
-
ஈழத்தில் கவிதைச் செயற்பாடுகளால் அறியப்பட்டவர் கருணாகரன். ஊடகவியலாளராகவும் செயற்பட்டு வருகிறார். ‘ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்’, ‘ஒரு பயணியின் நாட்குறிப்புகள்’, ‘பலியாடு’, ‘எதுவுமல்ல எதுவும்’ என நான்கு கவிதை நூல்கள் இதுவரையில் வெளிவந்திருக்கின்றன. பத்திரிகைகளிலும் இணையங்களிலும் தொடர்ச்சியாக அரசியல்ப்பத்திகள் எழுதி வருகிறார். ‘வெளிச்சம்’ என்ற கலை, இலக்கிய ஏட்டின் ஆசிரியராகவும், காட்சி ஊடகத்திலும் பணியாற்றியுள்ளார். ஈழப்போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் ஒரு போராளியாகச் செயற்பட்ட அவர் எழுச்சியும் வீழ்ச்சியும் கொண்ட அந்த வரலாற்றின் கணிசமான காலத்தில் அதனுடன் பயணித்திருக்கிறார். அரசியல், இலக்கியம் மற்றும் சமூகச் செயற்பாடுகளில் தொடர்ச்சியான அவதானிப்பையும் பங்கேற்பையும் கொண்டிருக்கும…
-
- 6 replies
- 1k views
-
-
‘கனிந்துள்ள காலத்தை தமிழ் தலைமைகள் பயன்படுத்த வேண்டும்’ Editorial / 2018 டிசெம்பர் 27 வியாழக்கிழமை, பி.ப. 04:57 Comments - 0 -அகரன் ‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்பது, தமிழ் பழமொழி. இவ்வாறான ஆழமான கருத்துகள், கால ஓட்டத்தில் எம் கண்முன் அதன் அர்த்தத்தைப் பறைசாற்றி நிற்கும் என்பது, அண்மைய அரசியல் களம் உணர்த்தி நிற்கின்றது. அரசியல் என்ற தத்துவார்த்தத்தின் தன்மையைப் புரியாது, அரசியல் அரங்கில் தடம் வைப்பது என்பது கடினமாக இருந்தாலும் கூட, தமது ஆளுமையின் வெளிப்பாட்டினால், அதனை தமக்குச் சாதகமாக்கி அரசியல் செய்வதென்பது ஒரு கலையே. இவ்வாறான ஓர் அரசியல் கலையை, முறையாக இலங்கை செயற்படுத்தியுள்ளதா என்ற கேள்வியே, தற்போது எழுந்துள்ளது. அண்மைய நாள்…
-
- 3 replies
- 1k views
-
-
கொவிட்-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 மார்ச் 26 இன்று உலகம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி புதிரானது. கண்ணுக்குத் தெரியாத, பொது எதிரியோடு போரிடும் யுத்தம் போன்றது. கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் சவால்களும் பல்பரிமாணம் உடையவை. எந்த உலக ஒழுங்கு, உலகைக் கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலாக ஆட்சிசெய்தோ அது, இன்று அவலப்பட்டு நிற்கின்றது. அது அமைத்த விதிகள், நெறிமுறைகள் குறித்தெல்லாம் அக்கறை கொள்ள யாருக்கும் நேரமில்லை. இன்று ஏதாவதொரு வழியில், தீர்வுகளை நோக்கியே எல்லா அரசாங்கங்களும் ஓடுகின்றன. உயிரிழப்புகளைத் தவிர்ப்பதும் நோய்த்தொற்றைக் குறைப்பதுமே பிரதான நோக்காக உள்ளன. பொருளாதாரத்தைக் காப்பாற்றுங்கள், நடைமுறையி…
-
- 0 replies
- 1k views
-
-
காஷ்மீர்- குளிர் தேசத்துக்குப் போர்!! பதிவேற்றிய காலம்: Mar 3, 2019 ஜம்மு காஷ்மீரில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கின்ற எல்லை 740 கிலோ மீற்றர் நீளமானதாக இருக்கிறது. இது பனி படர்ந்த மலைகளை ஊடறுத்து எல்லையிடப்பட்ட பிரதேசம். இந்தியாவையும் பாகிஸ்தானையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் இந்த எல்லைக் கோட்டின் இரண்டு பக்கங்களிலும் எந்த நேரமும் தயார் நிலையில் நிற்கின்றனர். அவர்கள் அந்தப் பனி மலைகளின் அழகை இரசிக்கும் நோக்கில் அங்கு நிலைகொள்ளவில்லை. ஒரு முனையிலுள்ளவரை மறு முனையிலுள்ளவர் கொல்லும் நோக்கில் ஆயுதம் தாங்கியவர்களாக வக்கிரத்துடன் காத்திருக்கிறார்கள். இந்தியாவின் …
-
- 0 replies
- 1k views
-
-
தவறாக வழிநடத்தியதா கூட்டமைப்பு? கே. சஞ்சயன் / 2019 நவம்பர் 29 , மு.ப. 06:03 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தவறாக வழிநடத்தி விட்டது என்றொரு குற்றச்சாட்டு, இப்போது சில தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. சஜித் பிரேமதாஸ தோல்வியடைவார் என்பதை அறிந்திருந்தும், கூட்டமைப்பு அவரை ஆதரித்தது தவறு என்பது போன்ற கருத்துகள் வெளியிடப்படுவதுடன், இப்போது நிர்க்கதியான நிலைக்குள், கூட்டமைப்பு தள்ளப்பட்டிருக்கிறது போன்ற விம்பத்தைத் தோற்றுவிக்கும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில், சஜித் பிரேமதாஸவின் தோல்வியை எதிர்பார்த்திருந்த போதும், அவருக்குத் தமிழ் மக்கள் திரண்டு போய் வாக்களித்தது, பலருக்கும் அதிர்ச்சிய…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
அமெரிக்கத் தளம்: நெருப்பில்லாமல் புகையுமா? கே. சஞ்சயன் / 2019 ஜனவரி 25 வெள்ளிக்கிழமை, மு.ப. 07:41 அமெரிக்க கடற்படை, தற்காலிக விநியோக வசதிக்கான மய்யமாக, இலங்கையை, மீண்டும் இந்த வாரம் முதல் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில், செய்து கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு உடன்பாடு, நாட்டுக்கு ஆபத்தானது என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இலங்கையைத் தமது விநியோக தேவைக்காக, அமெரிக்க கடற்படை பயன்படுத்துவது தொடர்பான தகவல்கள், வெளிவந்திருக்கின்றன. இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பக்கத்தில், அரபிக் கடலில் நிலைகொண்டு, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள…
-
- 0 replies
- 1k views
-
-
இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியமை மற்றும், சில வாரங்களுக்கு முன்னர் கூட்டு எதிர்க்கட்சியால் பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு ஆதரவளித்தமை தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர், கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்பட்ட பேரணியின் போது காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, நாடாளுமன்றில் கருத்துரைத்த போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இனத்தின் தலைவராக அல்லாமல் பல்கலைக…
-
- 0 replies
- 1k views
-