அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9217 topics in this forum
-
பொது மக்கள் மற்றும் இராணுவத்தினரை உள்ளடக்கும் வகையில் அபிவிருத்தி நிறுவனம் ஒன்றை உருவாக்குவதற்கான அனுமதியை சிறிலங்காவின் அமைச்சரவை அண்மையில் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பை கொழும்பிலுள்ள அமைச்சரவைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக வெளியிட்டார். சிறிலங்கா அமைச்சரவையின் இந்த தீர்மானமானது, சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் மீளிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விட, மேலும் மோசமான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதையே சுட்டிக்காட்டுவதாக கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் ஊடகவியலாளரான குசல் பெரேரா தெரிவித்துள்ளார். இந்தத் தகவலானது மங்கள சமரவீரவால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்துடன் ஒப்பிடும் போது முரண்பாட்டைத்…
-
- 1 reply
- 776 views
-
-
நன்றி - யூரூப்
-
- 1 reply
- 517 views
-
-
ரணிலின் துணிவும் ஏனைய போட்டியாளரும்! August 21, 2024 — கருணாகரன் — நெருக்கடி காலத்திலிருந்து நாட்டை – மக்களை மீட்டது தானே என்கிறார் ரணில் விக்கிரமசிங்க. அதாவது தானொரு மீட்பர், ஆபத்பாந்தகர் என்றெல்லாம் சொல்கிறார். “அன்றைய நெருக்கடிச் சூழலில் யாருமே பொறுப்பேற்க முன்வராதபோது தனியாளாக முன்வந்து அந்தப் பொறுப்பைத்துணிவுடன் ஏற்றேன். நெருக்கடியிலிருந்து நாட்டைமீட்பதற்கான தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காகச் சஜித்தையும் அநுரவையும் கூட அழைத்தேன். அதைப்போல தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் மலையக் கட்சிகளையும் முஸ்லிம்களையும் கேட்டிருந்தேன். யாரும் வரவில்லை. ஆனாலும், இணைந்து பணியாற்றக் கூடியவர்களைச் சேர்த்து ஆட்சியை அமைத்தேன். அதன் மூலம் பொருட்களுக்காகக் கா…
-
- 1 reply
- 675 views
-
-
சந்தேகங்களை களைவாரா ‘மாவை’? -புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமை என்பது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்தும் செயன்முறையாக மாத்திரம் இருந்து விடக்கூடாது என்று, சி.வி.விக்னேஸ்வரன் கடந்த வாரம் சுட்டிக்காட்டி இருந்தார். இதையடுத்து, அவரை அவசர அவசரமாகச் சந்தித்த மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையின் தேவையையும் அதன் செயற்பாட்டு நோக்கங்களையும் குறித்து விளக்கமளித்து இருக்கின்றார். தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக, தமிழ்த் தேசிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டமொன்றைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்கிற அடிப்படையில் மாவை சேனாதிராஜா முன்னெடுத்திருந்த…
-
- 1 reply
- 713 views
-
-
விடுதலைப் புலிகளும் கமாஸ் இயக்கமும் —பலஸ்தீனம் தனி நாடாக இருக்க வேண்டும் என்ற தீர்மானம் ஐ.நாவில் உண்டு. இந்தியா. இலங்கை உட்படப் பல நாடுகள் அதனை ஏற்றுள்ளன. அமெரிக்கா மாத்திரம் ஏற்கவில்லை. ஆனால் பலஸ்தீனம் போன்று ஈழத்தமிழர்களுக்கான அங்கீகாரம் ஐ.நாவில் இதுவரை கிடைக்கவில்லை. இஸ்ரேல் – கமாஸ் போர் ஈரான் அரசின் அணுசக்தியை அழிப்பதற்காக ஈரான் மீதான போராக மாறக் கூடிய ஏது நிலை தென்படுகின்றது— அ.நிக்ஸன்- பலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையும் பலஸ்தீனம் தனி நாடாக வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் பதினொரு வருடங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அத்துடன் கமாஸ் இயக்கத்…
-
- 1 reply
- 460 views
-
-
மாற்றம் மாற்றமா? - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா 16 மே 2015 முள்ளிவாய்க்கால் நினைவு வாரப் வெளியீடு - 1: விடுதலைப்புலிகள் தமது கைகளில் எடுத்துக்கொண்டு நிகழ்த்திய தமிழீழ விடுதலைப்போராட்டம் அழிக்கப்பட்டு ஆறுவருடங்கள் முடிந்துவிட்டன. போரை நிகழ்த்தி வெற்றி அடைந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இலங்கையின் அரசு கடந்த மூன்று தசாப்தங்களில் எதிர்கொண்ட உள்நாட்டுப் போரில் இருந்தும் பின் தொடர்ந்த ஊழல் நிறைந்த ஆட்சியில் இருந்தும் விடுபட்டுள்ளது. இலங்கையில் மாற்றம் வேண்டும் என்ற குரல் எழுச்சியுடன் மகிந்தவின் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது. மகிந்த அரசாங்கம் அது கொண்டிருந்த மோசமான ஊழல் மற்றும் சர்வாதிகாரக் குணங்களுக்காக சிங்களமக்களாலும் நான்காம் …
-
- 1 reply
- 444 views
-
-
அனைத்துலக உறவுகளை வென்றெடுப்பது குறித்து கா.சிவபாலன் அண்மைக்காலமாக தமிழ் அரசியல்வாதிகள் ஆய்வாளர்களின் பேச்சுக்களை, கட்டுரைகளை அவதானிக்கும்போது அடிப்படையில் பல பிழைகளை (fundamentally flawed) காணக்கூடியதாக இருக்கிறது. அரசியல்வாதிகளின் பேச்சில் தளம்பல் நிலையும், தாங்கள் கொண்டுள்ள கொள்கையில் அல்லது அவர்களின் அல்லது அவர்களைப் பின்பற்றுவோரின் முயற்சியில் பிழைகளும், சரியோ பிழையோ அவற்றை அடைவதற்காண வழிகளை சரியாக கூறமுடியாமையையும் காணலாம். எழுத்தாளர் எஸ்.பொ. அவர்கள் தன்னுடைய எழுத்தில் பிழை காணும் ஒரு விமர்சகரைப்பற்றி பேசும்போது, 'நான் 200 சிறுகதைகளை பெற்றவள், 4 நாவல்களை பெற்றவள், 8 குறுநாவல்களை பெற்றவள், எனக்கு இந்த இரும்பூரில் (Birmingham) தமிழ் படித்த துரும்பன், இவற…
-
- 1 reply
- 418 views
-
-
புல்வாமா தாக்குதலுக்கு பின் - சுணங்கிப் போன காங்கிரஸ். இந்துத்வா, தேசியவாதம், பாரத் மாதா கீ ஜெய் என சாதுர்யமாக காய் நகர்த்திய பாஜக
-
- 1 reply
- 509 views
-
-
இலங்கையின் உண்மையான வம்சாவளிகள் தமிழரா ?சிங்களவரா ? சுரேன் ராகவன் | Sooriyan
-
- 1 reply
- 415 views
-
-
2019-08-21 12:29:31 இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்தமை குறித்து ஐ.நா சபை மற்றும் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளும் தமது அதிர்ச்சியைத் தெரிவித்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிர்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்களாகச் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்து வதுதான் ஜனாதிபதி மைத்திரியின் நோக்கம். அந்த அடிப்படையில்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடந்த கால நடவடிக் கைகள் அமைந்துள்ளன. ஜனாதிபதியும் பிரதமரும் நமக்குச் சமன். இருவரையும் வைத்துக் கொ…
-
- 1 reply
- 608 views
-
-
பாலையும் வாழையும்* : பின்நவீனத்துவ அடையாளம் - மாற்று அரசியல் - மனித உரிமை - 19 ஜூலை 2011 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்- புலிகள் பிழையா? அனைத்து விடுதலை இயக்கங்களும் பிழையா? ஜனநாயகம், மனித உரிமை, சமத்துவம் போன்ற கருத்தாக்கங்கள் பிரபஞ்சமயமானவை. வர்க்கம், பால்நிலை, சாதி, இனம், மதம் என எதனை வைத்துப் பேசினாலும் ஜனநாயகம், மனித உரிமை மற்றும் சமத்துவம் என்பது அனைவருக்கும் பொதுவானவை. வர்க்கத்தின் பெயராலோ அல்லது பால்நிலை, இனம், மதம், சாதி என்பதன் பெயராலே ஒரு சமூகப்பிரிவினர் பிறிதொரு சமூகப்பிரிவினருக்கு ஜனநாயகம், மனித உரிமை, சமத்துவம் போன்றவற்றை மறுத்துவிட முடியாது. ஓரு விமோசனத் தத்துவம் எனும் அளவில் மாரக்சியம் இதனைக் கோட்பாடாகவும் நடைமுறையாகவ…
-
- 1 reply
- 1k views
-
-
முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட அரசியல் நியாயம்: தமிழர் தலைமைகளின் கூட்டுச் சதி 05/16/2015 இனியொரு... “ஆப்கானிஸ்தானிலும், அரபு நாடுகளிலும், ஆபிரிக்காவிலும் ஆசிய நாடுகளிலும் எங்களுக்கு அக்கறையிருக்கிறது. அங்கு மனித் உரிமைகள் மீறப்படும் போதும் மக்களுக்காகக் குரல் கொடுப்போம், அந்த நாடுகள் எல்லாம் அபிவிருத்தியடைவதற்கு நாம் உறுதுணையாக இருப்போம். ” இப்படித்தான் மேற்கு ஏகபோக நாடுகள் உலக மக்களை ஏமாற்றிக்கொண்டே அவர்களைச் சுரண்டி ஏழைகளக்கி அழித்து வருகின்றன. ராஜித சேனாரத்ன மேற்கு நாடுகளால் கற்பிக்கப்பட்ட இலங்கை அரசாங்கம் தமது உள்ளூர்ப் பதிப்பை ஆரம்பித்துள்ளது. “போர் வெற்றியை நாங்கள் வழமை போலக் கொண்டாடப் போவதில்லை. இலங்கையின் ஒரு பகுதி இன மக்களுக்கு எதிராகத் தொடுக்கப…
-
- 1 reply
- 614 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் மற்றும் பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்களும், இலங்கை அரசைக் கண்டித்து தமிழ்நாடு மீனவர்களும் நடுக்கடலில் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். மீனவர்களுக்கு இடையே என்ன பிரச்னை? தமிழக மீனவர்கள் தங்கள் கடற்பரப்பினுள் வருவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று கூறி, அதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இலங்கை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று (ஞாயிறு, மார்ச் 3) நடத்தினர். யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்மித்துள்ள கடற்கரைப் பகுதிகளிலுள்ள மீனவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி…
-
- 1 reply
- 320 views
- 1 follower
-
-
பெரும்பான்மை இனத்தின் பாதுகாப்பின்மை உணர்வு -என்.கே. அஷோக்பரன் இலங்கையின் புகழ்பூத்த வரலாற்றியல் ஆய்வாளர்களில் ஒருவர் கே.எம். டி சில்வா. 1998ஆம் ஆண்டு பிரசுரமான, இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி அவர் எழுதிய நூலொன்றில், ‘இலங்கையின் இனப்பிரச்சினையானது, சிறுபான்மை மனநிலையையுடைய பெரும்பான்மைக்கும், பெரும்பான்மை மனநிலையையுடைய சிறுபான்மைக்கும் இடையிலான மோதல் என்று விளிக்கிறார். இதில் இரண்டு விடயங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. முதலாவது, ‘சிறுபான்மை மனநிலையையுடைய பெரும்பான்மை’. இரண்டாவது, ‘பெரும்பான்மை மனநிலையையுடைய சிறுபான்மை’. இரண்டாவது விடயம், கொஞ்சம் சிக்கலானது. இலங்கைத் தமிழர்கள் கொலனித்துவக் காலத்தில், ஆங்கிலக் கல்வியைப் பெற்றுக்கொண்டு, அவர்களது இனவி…
-
- 1 reply
- 664 views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
காங்கோ - தங்கம், வைரம், இனப்படுகொலை மீண்டும் ஆப்பிரிக்கா கண்டம். மீண்டும் ஒரு ஆப்பிரிக்க நாடு. மீண்டும் பசி, பஞ்சம், படுகொலை தேசம். உலகில் இனப்படுகொலை பழியான உயிர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் பாதிக்கு மேல் இறந்தவர்கள் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லிவிட முடியும். அந்த அளவிற்கு வறுமை, வெறுமை அவர்களை ஆட்டிப்படைக்கிறது. ஒருவர் அழித்து இன்னொருவர் வாழ முடியும் என்ற நிலைமை. எல்லாம் ஐரோப்பிய காலனி நாடாக இருந்த பலன். ஆப்பிரிக்க நாடுகளில் “காங்கோ” மிகவும் வித்தியாசமானவை. மற்ற ஆப்பிரிக்க நாடுகள் போல் இல்லை. தங்கம், வைரம், செம்பு என்று எல்லா வளங்கள் கொண்ட நாடு. சூர்யா நடித்த “அயன்” படம் பார்த்தீர்களா ? ஒரு ஆப்பிரிக்க நாட்டில் இருந்து வைரத்தை கடத்தி இந்தியா…
-
- 1 reply
- 6.2k views
-
-
வரலாற்றில் இடம்பிடிப்பாரா மைத்திரி? சத்ரியன் “தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற விருப்பம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இருப்பதாக நாங்கள் அறிகிறோம். இந்த விடயத்தில் அவருக்கு இருக்கின்ற சவால்களை சமாளித்து தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்வாராக இருந்தால் சர்வதேச சமூகம் அவரை உள்நாட்டில் பிரச்சினைகளை தீர்த்த தலைவர் என்று அங்கீகரிக்கும்.” யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியில் நடந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்பாக- வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் மேடையில் அமர்ந்திருக…
-
- 1 reply
- 359 views
-
-
அதிகாரிகளும் தமிழ் தலைவர்களும் மடங்கினர்! February 3, 2025 — கருணாகரன் — தென்னிலங்கை அரசியற் களத்தைக் கலக்கும் NPP யும் அநுர குமார திசநாயக்கவும் வடக்கில் தமிழ்த்தரப்பையும் தடுமாற வைக்கும் உபாயத்தில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது. பாராளுமன்றத் தேர்தலில் வடக்கில் பெற்ற வெற்றி NPP க்கும் அநுர குமாரவுக்கும் வடக்கில் தமக்கான அரசியல் அடித்தளத்தைப் பலப்படுத்துவதற்கான ஊக்கத்தை அளித்துள்ளது. இதற்கான தந்திரோபாய நடவடிக்கையில் அநுர ஈடுபடுகிறார். அதனுடைய வெளிப்பாடுகளே, அவருடைய அண்மைய யாழ்ப்பாண விஜயமாகும். யாழ்ப்பாண விஜயத்தில் அநுர சில வெற்றிகளை உடனடியாகவே பெற்றுள்ளார். 1. யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் அநுரவைச் சுற்றி…
-
- 1 reply
- 465 views
-
-
நாட்டின் எதிர்காலம் கொரோனாவின் கையில் மொஹமட் பாதுஷா / 2020 மார்ச் 27 நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தபோது, “அப்படியென்றால், வாக்கெடுப்பு எப்போது நடைபெறும்?” என்று, ஊடகவியலாளர் தரப்பில் வினாத் தொடுக்கப்பட்டது. அப்போது அவர், “தேர்தல் எப்போது நடக்க வேண்டும் என்பதைக் கொரோனா வைரஸ்தான் தீர்மானிக்கும்” என்று சொல்லியிருந்தார். சுருக்கமாகச் சொன்னால், இதுதான் இந்த நாட்டினது நிலைமையாகும். கொரோனா என்ற, கண்ணுக்குப் புலப்படாத வைரஸ்தான் நமது அரசியல், பொருளாதார, சமூக ஸ்திரத் தன்மையையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப் போகின்றது என்பதில் இருவேறு நிலைப்பாடுகள் இல்லை. …
-
- 1 reply
- 617 views
-
-
[size=3][size=5][size=3]புலம் பெயர் தமிழ் மக்களை நோக்கி நீளும் சிங்களப்பேரினவாதத்தின் நேசக்கரம்[/size][/size][/size] [size=3][size=4]-இதயச்சந்திரன்[/size][/size] [size=3][size=4]புலம்பெயர் நாடுகளை நோக்கி மகிந்தரின் 'சூப்பர் சாண்டி' என்கிற பேரினவாதப் புயல் வீச ஆரம்பித்துள்ளது. [/size][size=4]அமெரிக்காவின் வட-கிழக்குப் பகுதிகளை மோசமாகப் பாதிக்கும் இப்புயல் குறித்த செய்திகளை நாம் அறிந்து கொண்டிருக்கிறோம்.[/size][/size] [size=3][size=4]ஆனாலும் மகிந்தரின் சூறாவளி ,அவரின் தூதுவர்களினால் காவி வரப்படுவதை புரிவது கடினமானதல்ல.[/size][/size] [size=3][size=4]கடந்த வாரம் பிற்பகுதியில் , அனைத்துக் கட்சி இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட புயலொன்று , இரண்டாவது தடைவ…
-
- 1 reply
- 752 views
-
-
எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள் - பௌத்த அச்சம் எம். ரிஷான் ஷெரீப் இலங்கையில் இன்னுமொரு இனக் கலவரத்தைத் தூண்டக்கூடிய பிரிவினைவாதச் சக்திகளின் சூழ்ச்சிகள் சிறிது சிறிதாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்த இனக் கலவரம், இஸ்லாமியர்களையும் அவர்களது வளர்ச்சியையும் குறிவைத்திருக்கிறது. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துவருகிறது. இந்நிலை தொடருமானால், இன்னும் சில தசாப்தங்களுக்குள் முஸ்லிம்கள் இலங்கையில் பெரும்பான்மையினராக ஆகிவிடுவார்கள் என்னும் அச்சம் இனவாதச் சக்தி களைப் பெருமளவில் அச்சுறுத்தி யிருக்கிறது. இந்நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் முஸ்லிம்களை அடக்…
-
- 1 reply
- 739 views
-
-
-
- 1 reply
- 791 views
-
-
இந்திய சினிமாவும் ஈழத்தமிழர்களும் -என்.கே. அஷோக்பரன் அண்மையில் வௌிவந்த, இரண்டு இந்திய சலனச் சித்திரப் படைப்புகள், புலத்தில் வாழும், அதைவிடக் குறிப்பாகப் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், முதலாவது அமேஸன் ப்ரைம் தளத்தில் வௌியான ‘ஃபமிலி மான்’ தொடரின் இரண்டாவது பகுதி. அடுத்தது, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்து நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வௌிவந்த ‘ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படம். இந்திய சினிமாவில் ஈழத்தமிழர்களும் ஈழத்தமிழர் பிரச்சினையும் கையாளப்படுவது இது முதன் முறையல்ல; அதுபோல, இது கடைசிமுறையாகவும் இருக்கப்போவதில்லை. ஆனால், ஒவ்வொரு முறையும், ஈழத்தமிழர்களையும் ஈழத்தமிழர்களின் அரசியலையும் ஈழத்தமி…
-
- 1 reply
- 641 views
-
-
பகிரங்கமாகும் இந்திய வியூகம்..?அம்பலமாகும் அமெரிக்கத் தரகு..?
-
- 1 reply
- 546 views
-
-
‘சுதந்திர இலங்கை’ - சில எண்ணப்பகிரல்கள் என்.கே.அஷோக்பரன் பொருளாதார ரீதியில் இலங்கை தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில், தினம் தினம் டொலருக்காக எல்லா நாடுகளிடமும் கையேந்தி நிற்கும் நிலையில், டொலர் இருந்தால்தான் எரிபொருள், எரிபொருள் இருந்தால்தான் மின்சாரம் என அடுத்தநாள் மின்சாரம் இருப்பதன் நிச்சயத்தன்மை இல்லாத நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் விண்ணையெட்டிப்பிடிக்குமளவிற்கு உயர்ந்துகொண்டிருக்கும் நிலையில், “கோலாகலமாக” பெரும் இராணுவ அணிவகுப்புக்களுடன், விமான சாசகஸப் பறத்தல்களுடன், 74வது சுதந்திர தினத்தை கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். சுதந்திர தினமென்றால் இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் நடக்கிறதுதானே எனச் சி…
-
- 1 reply
- 389 views
-