அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9217 topics in this forum
-
சம்மந்தரின் கடும் போக்கு: வரையறை…? நரேன்- எந்தவொரு ஆளும் வர்க்கமும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் குரலை கடும்போக்கு, தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் என்றே வரையறை செய்வது உலகநியதி. பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் அல்லது சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக குரல் கொடுக்கும் அதே தரப்பில் இருந்து கடும் போக்கு என்ற வார்த்தைப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதில்லை. பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் காந்தி தலைமையில் போராட்டம் நடந்து கொண்டு இருக்கையில், பிரித்தானியரின் அடக்குமுறைகளை தடுத்து நிறுத்துவதற்காக ஆயுதம் ஏந்தியவர்களை காந்தி வன்போக்காளர்களாக சித்தரித்திருந்தார். ஆயினும் அவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.…
-
- 1 reply
- 499 views
-
-
பலவீனமான நிலைக்கு செல்கின்றதா இஸ்ரேல்? | அரசியல் களம் | அரசியல் ஆய்வாளர் அருஸ்
-
- 1 reply
- 604 views
-
-
கச்சதீவை கையில் எடுத்த மோடி!இலங்கைக்கு நெருக்கடியா? | தாயகக்களம் | செல்வின் மரியாம்பிள்ளை
-
- 1 reply
- 602 views
-
-
பிள்ளையான் கைது ஏனைய தமிழ்க்கட்சிகளுக்கான எச்சரிக்கையா? April 22, 2025 — கருணாகரன் — “புலியைப் பிடிப்பதற்குப் பதிலாக எலியையா பிடித்து வீரம் பேசுகிறது NPP?” என்று கேட்கிறார்கள் பலரும். அவர்களுடைய கேள்வி நியாயமானதே! ஏனென்றால், தங்களிடம் “400 கோவைகள் உண்டு. நாட்டுக்குத் துரோகமிழைத்தவர்களும் ஊழல்வாதிகளும் குற்றவாளிகளும் தப்பவே முடியாது. அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் தவறுகளுக்கும் ஆதாரம் உண்டு. நிச்சயமாக தவறிழைத்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்தனைபேரும் தண்டிக்கப்படுவார்கள்..” என்று முழங்கியவர்கள் NPP யினர். அப்படி முழக்கமிட்டுத்தான் (நம்பிக்கையூட்டித்தான்) ஆட்சியைக் கைப்பற்றியது NPP. ஆனால், அதற்குப் பிறகு அவர்கள் சொன்னமாதிரி எதுவுமே நடக்கவில்லை. அத்தனை பெருச்சாள…
-
- 1 reply
- 436 views
-
-
கூட்டமைப்பு, முன்னணி என்கிற போலி அடையாளங்கள் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 மே 27 தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கட்சிகளாக ஏன் இன்னமும் பதிவு செய்யப்படவில்லை என்கிற கேள்வி, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், கடந்த பத்து ஆண்டுகளாக நீடித்து வருகின்றது. குறிப்பாக, கூட்டமைப்புக்குள் இருக்கும் பங்காளிக் கட்சிகள் ஒன்றோடும் தங்களைப் பொருத்திக் கொள்ள முடியாதோரிடமும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் அடையாளம், தங்களின் மீது என்றைக்கும் விழுந்துவிடக் கூடாது என்று நினைக்கும் முன்னணியின் தொண்டர்களிடம், இந்தக் கேள்வி தொடர்ந்தும் இருக்கின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, 2001ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும், அது முள்ளிவாய்க்கால் முடிவுகள் வரையில்…
-
- 1 reply
- 558 views
-
-
இலங்கைக்கு இராணுவ சேவை கட்டாயமா? -கவிதா சுப்ரமணியம் இராணுவத்துக்கு கட்டாயமாக ஆட்களைச் சேர்க்கும் நடைமுறை, பண்டைய மெசொப்பெத்தேமியா காலத்துக்கு, அதாவது ஆயிரக்காணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். ஆனால், அண்மைய நவீன வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது, பிரெஞ்சுப் புரட்சியில் இருந்தே ஆரம்பமாகின்றது. 17, 18ஆம் நூற்றாண்டுகளில், பிரஸ்ஸியா, சுவிட்ஸர்லாந்து, ரஷ்யா உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளாலும் கட்டாய இராணுவ சேவை வலியுறுத்தப்பட்டதாக அறியமுடிகிறது. இலங்கையில், 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு, கட்டாய இராணுவப் பயிற்சியை வழங்குவதற்கான முன்மொழிவொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக, மக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்திருந்ததை அடுத்து, சமூக…
-
- 1 reply
- 874 views
-
-
மாவீரர்களின் சரித்திரச் சாவினை ஒன்றாக நினைவு கூறுங்கள் . “ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒர் உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஓர் இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.” – என தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாள் தொடர்பாக கூறிய இரத்தின சுருக்கமான பதிவு இது. மாவீரர்களினது வீரச்சாவு நிகழ்ந்த இடங்களும் நாட்களும் வேறுபாட்டவை. எனினும் ஒரே இலட்சியத்திற்காய் விதையாகிப்போன மாவீர…
-
- 1 reply
- 413 views
-
-
['சமாதானம்' நிலவ வேண்டும் என்றால் அங்கு 'மன்னிப்பு' முக்கிய பங்கை வகுக்கிறது. 'மன்னிப்பு' என்ற கட்டுரையை, 'மன்னிப்பு' என்ற கவிதையுடன் சமாதான விரும்பிகளின் கருத்துக்கு சமர்ப்பிக்கிறேன். நன்றி, உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!] "இருஇனம் வாழும் ஒரு நாட்டில் இருக்கையை தனதாக்கி பெரும்பான்மை அதிகாரத்தில் இறுமாப்புடன் வரலாற்றை திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? " "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி இணக்கம் கண்டு இதயம் பரிமாறி இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு இனியாவது மன்னிப்புகேள் நாடு முன்னேறும்! " இரக்கமின்றி சுடும் காட்டுமிராண்டிகள் அவர்களல்ல இந்தநாட்டின் பூர்வீககுடிகளில் அவர்களும் ஒருவர் இணைந்து வாழ்ந்த குடிம…
-
- 1 reply
- 476 views
-
-
"சிந்துவெளி ஒரு திராவிட நாகரிகம், கட்டாயம் ஆரிய நாகரிகம் அல்ல" சிந்துவெளி நாகரிகம் தமிழ் கலாச்சாரத்தை சேர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது ஆய்விற்குரிய கருத்தாக, உதாரணமாக சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு உடந்தையாக இருக்கின்ற போதிலும் இன்னும் பலர் நான்கு [உண்மையில் மூன்று , நாலாவது அதிகமாக தனித்தே இருக்கிறது] வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்று தான் சிந்து வெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுகின்றனர். மேலும் வேதங்களுள் காலத்தால் முந்திய ரிக் வேதத்தில், வேதகாலத்தவர் வாழ்க்கையின் பிரதிபலிப்புகளை நாம் காணலாம். அதுமட்டும் அல்ல இந்த ஆரியர்கள் மேய்ச்சல் நி…
-
- 1 reply
- 371 views
-
-
ரிச்சர்ட் ஆமிரேஜ் நிறைவுசெய்ய விரும்பும் இலக்கு? - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் முன்னைநாள் உதவி இராஜாங்கச் செயலரும் மூத்த ராஜதந்திரியுமான ரிச்சர்ட் ஆமிரேஜ் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தார். அவர் கொழும்பில் தங்கியிருந்த நாட்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உட்பட பல அரசியல் தலைவர்களையும் சந்தித்திருந்தார். அவர் கொழும்பில் இருந்த வேளையில் சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு ஒரு நேர்காணலையும் வழங்கியிருந்தார். மேற்படி நேர்காணலை சண்டே ரைம்ஸ் - ஆமிரேஜ் இலங்கையில் என்ன செய்துகொண்டிருக்கின்றார்? என்னும் தலைப்பில் வெளியிட்டிருந்தது. சீனா தொடர்பிலான கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது ஆமிரேஜ் - இது வேறு இலங்கை (t…
-
- 1 reply
- 727 views
-
-
தமிழருக்கு சிவசேனை பெரும் சோதனையா? ப.தெய்வீகன் ஈழத்தமிழர் தாயகத்தில், இந்தியாவின் அதிதீவிர வலதுசாரிக் கட்சியும் மதவாத அமைப்புமான ‘சிவசேனா’ கால் பதித்திருப்பது தொடர்பான அகோரமான எதிர்ப்புக்கள் அனைத்துத் தரப்பிலும் முன்வைக்கப்பட்டாயிற்று. இந்த அமைப்பின் வருகையின் பின்னணி என்ன? அமைப்பை ஆரம்பித்திருப்பவர் யார்? இதனால் ஏற்படப்போகும் தாக்கங்கள் என்ன? போன்ற ‘மயிர் பிளக்கும்’ வாதங்கள் சமூக வலைத்தளங்களில் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவின் திட்டமிட்ட காலக்கணிப்பின் பிரகாரம் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையை ஈழத்தமிழர்கள் எதிர்க்க வேண்டும்; எதிர்த்துக் களமாட வேண்டும் என்று ஆளுக…
-
- 1 reply
- 700 views
-
-
‘அரந்தலாவ படுகொலை’ விசாரணைகள்: ராஜபக்ஷர்களின் புதிய திட்டம் புருஜோத்தமன் தங்கமயில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், ‘அரந்தலாவ படுகொலை’ தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம், உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) அறிவித்திருக்கின்றது. 1987ஆம் ஆண்டு, ஜூன் இரண்டாம் திகதி, அம்பாறை, அரந்தலாவ பகுதியில் வைத்து, இளம் பிக்குகள் அடங்கிய 33 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலையை, தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாக, அரசாங்கம் குற்றஞ்சாட்டி வந்திருக்கின்றது. இந்த நிலையில், குறித்த படுகொலைச் சம்பவத்தில், மயிரிழையில் உயிர்தப்பிய ஒருவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையிலேயே, 34 வருடங்களுக்குப் பிறகு, அரந்தலாவ படுகொலை தொ…
-
- 1 reply
- 695 views
-
-
பார்ப்பனர்கள் மத்தியில் ஈழ விடுதலை பற்றிய கருத்து முகநூலில்(Facebook) ஐயர்களும் ஐயங்கர்களும் The Iyer – Iyengar Network என்னும் பெயரில் ஒரு குழு அமைத்து வைத்திருக்கிறார்கள். பதின்மூவாயிரத்திற்கு மேல் உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவில் ஈழ விடுதலையைப் பற்றி தெரிவிக்கும் கருத்துக்கள் பார்ப்பனர்கள் மத்தியிலான ஒரு கருத்துக் கணிப்பாக எடுத்துக் கொள்ள முடியும். நிறையப் பெரிசுகள் இங்கு கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். The Iyer – Iyengar Network என்னும் குழுவில் “சுப்பிரமணிய சுவாமி, சோ, இந்து ராம் போன்றோர் வாழும் நாட்டைத் தமிழ்நாடு என்று அழைக்க முடியாது. ஒன்றில் இந்த தெருநாய்களை தமிழ்நாட்டில் இருந்து விரட்ட வேண்டும் அல்லது தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும்” என்று ஒர…
-
- 1 reply
- 958 views
-
-
‘ஹிட்லர்’ மீதான காதல் அடோல்ப் ஹிட்லரின் மனதுக்குள், எந்தளவுக்கு அன்பும் கருணையும் காதலும் இருந்தது என்று தெரியாது. ஆனால், உலக சரித்திரக் குறிப்புகளின்படி, ஒரு சர்வாதிகாரியாகவே ஹிட்லர் பதிவு செய்யப்பட்டிருக்கின்றார். ஈவா பிரவுண் அல்லது ஹிட்லரின் வாழ்க்கையில் வந்த மற்றைய இரு பெண்களும், எந்தளவுக்கு ஹிட்லரைக் காதலித்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், ஹிட்லரை வேறு ஒரு கோணத்தில், நல்ல ஆட்சியாளராகப் பார்க்கின்றவர்களும், அவரது போக்கை வரவேற்கின்ற சிலரும், நம்மோடு இருக்கின்றார்கள் என்பதைச் சில சம்பவங்கள் எடுத்துக் கூறுகின்றன. மகாத்மா காந்தி என்கின்ற மிகப் பெரும் தேசபிதாவை, இத்தன…
-
- 1 reply
- 464 views
- 1 follower
-
-
அடுத்தது என்ன? தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சவால்களும் வாய்ப்புக்களும் அடுத்தது என்ன? - இந்த சொற்தொடரை இன்று பரவலாகக் கேட்க முடிகின்றது. இவ்வாறு கேள்வி எழுப்புவோரின் இலக்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இருக்கிறது. விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்பின் குறியீடாகவும், அதனை வெற்றி கொள்வதற்கான ஸ்தாபன வடிவமாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வெளித்தெரிந்தது- தெரிகிறது. இதுவே அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இலக்கு வைப்பதற்கான காரணமாகும். ஆனால் இவ்வாறு த.தே.கூட்டமைப்பை இலக்குவைத்து வெளிவரும் கருத்து வெளிப்பாடுகள், த.தே.கூட்டமைப்பை முன்நோக்கி நகர்த்துவதற்கான ஆக்கபூர்வமான விமர்சனங்களாக இருக்கின்றனவா? இதனைப் பார்ப்பதற்கு, முதலில் த.…
-
- 1 reply
- 461 views
-
-
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் தன்னை ஜனநாயக நாடு என்று வேசம் கொள்கின்ற இந்தியாவிலே நேரு குடும்பத்திற்கு ஒரு சட்டம், பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், பொலிசுக்கு ஒரு சட்டம், அப்பாவி மக்களுக்கு ஒரு சட்டம் என்று பலவிதம் உண்டு. ரஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில அவரால் இலங்கைக்கு அமைதிப்பணிக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் பெண்கள,; குழந்தைகள், வயோதிபர்கள், இளைஞர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் ஆறாயிரம் பேரை கொன்று குவித்தது. பல நூற்றுக்கணக்கான பெண்களை கற்பழித்தது. பெண்கள் கற்புடன் இருப்பதும், வயோதிபர்கள் குழந்தைகள் உயிருடன் இருப்பதும் இந்தியப்படையின் கண்ணோட்டத்தில் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருந்தது. உண்மையில் இலங்கையில் இந்தியப்படை இரு…
-
- 1 reply
- 1k views
-
-
எழுக தமிழ் 2019: யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி? – நிலாந்தன்…. September 21, 2019 கொழும்பில் தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்பட்ட அதேநாளில் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது எழுகத்தமிழ் இடம்பெற்றது. தாமரைக் கோபுரம் எனப்படுவது இலங்கைத் தீவு சீனமயப்பட்டு விட்டதைக் குறிக்கும் தென்னாசியாவின் மிக உயரமான குறியீடுகளில் ஒன்று.இலங்கைத்தீவின் பெருமைக்குரிய அடையாளங்களாக இது வரை இருந்து வந்த புராதன சின்னங்களை மீறி நாட்டின் ஒரு நவீன அடையாளமாக அது உயர்த்திக் காட்டப்படுகிறது. சீனா இலங்கைத் தீவின் வரை படத்தை மாற்றி விட்டது. நாட்டுக்கு ஒரு புதிய அடையாளத்தையும் வழங்கியிருக்கிறது. தாமரைக் கோபுரத்தைப் பற்றி வெளிவந்த பெரும்பாலான கார்ட்டூன்களில் கடன்காரர்களாக ம…
-
- 1 reply
- 705 views
-
-
ஒர் எழுத்தாளரான ஜெயமோகனின் தமிழக மக்கள் பற்றிய புரிதல்: ( இது சரியானதா? தவறானதா என்பதைப்பற்றி முழுமையாகப்படித்தபின் உங்கள் கருத்தை பதிவுசெய்க. நன்றி : > தமிழகத்தின் பொதுமக்களிடையே வேறு எந்தக் கலையில் தரமான ரசனையும் ஆர்வமும் இருப்பதைக் கண்டீர்கள்? எந்தத் தளத்தில் பொருட்படுத்தவேண்டிய சிந்தனைகள் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்கள்? எங்கே அடிப்படைத்தகவல்களாவது தெரிந்துவைத்திருப்பவர்களை சந்தித்திருக்கிறீர்கள்? நேற்று ஒரு நண்பர் சொன்னார். சில ஆண்டுகளுக்கு முன்னல் ஃபேஸ்புக்கில் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஒரு கன்னடர் என்பதை அவர் சொன்னதும் நூற்றுக்கணக்கானவர்கள் கொந்தளித்து வந்து அதை எதிர்த்தார்கள். அது ஓர் அவதூறு என்றார்கள். எல்லாருமே ஈவேரா ஆதரவாளர்கள். அவரைப்பற்றி அவர்களுக்குத் தெரிந…
-
- 1 reply
- 986 views
-
-
விசாரணையில் தேசியம் : -யதீந்திரா தமிழ்த் தேசிய அரசியல் போக்கானது இன்று இந்தளவிற்கு வீரியம் கொள்வதற்கான பிரதான காரணம்,இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த வெற்றிகரமான அரசாங்கங்களின் எதேச்சாதிகார போக்குகளும்,அவற்றின் உதாசீனப்போக்குகளுமே ஆகும். இதில் என்னிடம் இரு வேறு கருத்துக்கள் கிடையாது. உதாரணமாக பண்டா-செல்வா ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமானால்,பின்னர் 83இன் துயர் நிகழ்ந்திருக்காது. அது 2009 வரை நீண்டிருக்காது. இத்தனை அழிவுகள் ஏற்பட்டிருக்காது. எனவே இன்றும்,தமிழ் தேசியம்,ஒரு விடயமாக விவாதிக்கப்படுவதற்கான பின்னனியாக,அரசாங்கத்தின் எதேச்சாதகாரப் போக்கே இருக்கின்றது. ஆனால் இவ்விடத்தில் நம் முன் எழும் கேள்வி – அவ்வாறு நியாயபூர்வமான காரணங்களின் அடிப்படையில் எழுச்சிபெற…
-
- 1 reply
- 623 views
-
-
வீ(கூ)ட்டை சிதைக்க "பிரித்தாளும் சூழ்ச்சி' "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டாமா?', "வெண்ணெய் திரண்டுவரும்போது தாழியை உடைக்கலாமா?' இந்த இரண்டு பழமொழிகளுக்குமான அர்த்தத்தை தற்போதைய அரசியல் சூழலில் கேட்கக்கூடிய மிகச்சிறந்த தரப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகத்தான் இருக்கும். அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றில் நடைபெற்றுவருகின்றது. இன்றைய தினம் (08112017) இறுதிநாள் விவாதம் நடைபெறுகின்றது. இவ்வாறான ஒரு சூழலில் ஒற்றுமையாக இருந்து அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் சிந்திக்கவேண்டிய சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி மோதல் வடக்கு, கிழக்குத…
-
- 1 reply
- 903 views
-
-
அம்பாறையில் இனவாத தாக்குதல் முஸ்லிம் அரசியல்வாதிகள் முடிவுகளை எடுப்பதற்கு முன்னமே முஸ்லிம்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்கத் தீர்மானித்தார்கள். முஸ்லிம்கள் மைத்திரிபால சிறிசேனவின் மீது கொண்ட இரக்கத்தினால் அல்ல. மாறாக மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியின் போது முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்களின் மதவிழுமியங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டன. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவற்றிலிருந்து பாதுகாப்புப் பெற வேண்டுமாயின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டுமென்று முஸ்லிம்கள் எண்ணினார்கள். முஸ்…
-
- 1 reply
- 428 views
-
-
கறைகளைக்கழுவ முற்படுகிறதா பிரித்தானியா? சுபத்ரா இலங்கையில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளின் ஆயுதப் போராட்டம் முளைவிடத் தொடங்கிய 1978 - –1980 காலகட்டத்தில், புலிகள் மற்றும் இலங்கையில் பிரித்தானியாவின் எம்.ஐ 5 மற்றும் எஸ்.ஏ.எஸ். அமைப்புகள் பயிற்சிகளை அளித்தமை தொடர்பான, 200 ஆவணங்களை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் அழித்து விட்ட தகவலை லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி கார்டியன்’ கடந்த வாரம் அம்பலப்படுத்தியிருக்கிறது. தேவையற்ற ஆவணங்கள் என்று, கூறி, இலங்கை தொடர்பான – முக்கியமாக இந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் தமிழ்ப் புலிகள் மற்றும் தமிழ்ப் புலிகளின் ஆயுதப் போராட்டத்த…
-
- 1 reply
- 681 views
-
-
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பிணைப்பும் இனப்பிரச்சினையும்! நிலாந்தன். “இன்று நாம் நடத்திய கலந்துரையாடல் இலங்கை-இந்தியாவின் அடுத்த 25 வருடங்களுக்கான அடித்தளத்தை இடும்” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓர் இந்திய ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான தனது இரு நாள் விஜயத்தைக் குறித்து அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கைத் தலைவர்கள் இந்தியாவிற்கு போகும்பொழுது இதுபோல கவர்ச்சியான பல பிரகடனங்களை வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அவை செயலுக்கு வந்ததில்லை. ஏனெனில் யதார்த்தத்தில் இலங்கைத் தீவுக்குள் சீனா கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு நிற்கப் போகின்றது. அம்பாந்தோட்டையில் 99 ஆண்டு கால குத்தக…
-
- 1 reply
- 214 views
- 1 follower
-
-
கூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது - புருஜோத்தமன் தங்கமயில் 2018 ஒக்டோபர் 17 புதன்கிழமை, மு.ப. 01:12Comments - 0 அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், சாதகமான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ளாது போனால், பாதீட்டுத் திட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடாதென்கிற கோரிக்கைகள் மேலேழுந்து வருகின்றன. அந்தக் கோரிக்கைகளின் பக்கத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் நிற்கிறார்கள். 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், நல்லாட்சி அரசாங்கம், நாடாளுமன்றத்துக்கு உள்ளும் புறமும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பலவற்றுக்கு, கூட்டமைப்பு ஆதரவளித்து வந்திருக்கின்றது. அதுவும், பாதீட்டுத் திட்டம் போன்ற, மிக முக்கிய நாடாளுமன்ற நடவடிக்கைக…
-
- 1 reply
- 478 views
-
-
தமிழ் மக்கள் கூட்டணி தமிழ் மக்களை மேலும் பிளக்குமா? அல்லது ஒட்ட வைக்குமா? - நிலாந்தன் January 27, 2019 நிலாந்தன்…. விக்னேஸ்வரன் கடந்த ஒக்ரோபர் மாதம் ஒரு புதிய கட்சியை அறிவித்த பின் ஒரு மூத்த ஊடகவியலாளர் என்னிடம் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார். ‘அவர் சம்பந்தரால் பரசூட் மூலம் அரசியலுக்குள் இறக்கப்பட்டவர். ஆனால் ஒரு கட்சியை பரசூட் மூலம் இறக்க முடியாது.’ என்று. இதே தொனிப்பட பல மாதங்களுக்கு முன்பு டாண் ரி.வியின் பணிப்பாளரும் என்னிடம் சொன்னார். ‘கொழும்பு மைய விக்னேஸ்வரனால் யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தன்னோடு நிற்பவர்களுக்கு சம்பளத்தையும் கொடுத்து முழு நேரமாக ஒரு கட்சியைக் கட்டியெழுப்ப முடியுமா?’ என்று. விக்னேஸ்வரனின் ஐந்தாண்டுக…
-
- 1 reply
- 980 views
-