நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
பொதுப்படத் தேர்தல் சார்ந்த நடைமுறைகளையே பலரும் அரசியல் என்று கருதுகின்றனர். ஆனால் அது மட்டுமே அரசியல் இல்லை. அரசுகளின் இயங்குமுறை மட்டுமல்லாமல் அவற்றை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்களையும் அரசியல் என்றே குறிப்பிடுகிறோம். வகுப்பு(வர்க்க)ப் போராட்ட எழுச்சியை வகுப்பு (வர்க்க) அரசியல் என்றும், புரட்சி நோக்கிய செயற்பாடுகளைப் புரட்சிமய அரசியல் என்றும், தேசம் தழுவிய முயற்சிகளைத் தேசிய அரசியல் என்றுமாகவெல்லாம் குறிப்பிடுகிறோம். போர் என்பது குருதி சிந்தும் அரசியல் என்றும், அரசியல் என்பது குருதி சிந்தாப் போர் என்றும் குறிப்பிடுகிறார்கள். ஒவ்வொரு செயலுக்கும் பின்புலமாக அச் செயலுக்குரிய வகுப்பு (வர்க்க) அரசியல் இருக்கிறது என்று சொல்லப்படுவதைச் சரியாக விளங்க…
-
- 2 replies
- 763 views
-
-
மேஜிக் என்று சொல்லப்படும் மாயாஜாலம் அல்லது கண்கட்டு வித்தைகள் பல விதம். இதில் பலர் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். சிலர் ஏற்கனவே செய்துவைத்த பொருட்களை எடுத்து அதில் வித்தைகளைச் செய்துகாட்டுவது வழக்கம். ஆனால் இங்கே அரங்கத்தில் எல்லோரும் பார்கும் போதே வினோதமான கண்கட்டு வித்தை ஒன்று செய்துகாண்பிக்கப்பட்டுள்ளது இதனைப் பார்த்த அனைவரும் கதிகலங்கி வியப்பில் ஆழ்ந்துபோனார்கள் thamizil manithan.com
-
- 2 replies
- 6k views
-
-
ஹிஷாலினியின் மரணம் கொலையா? தற்கொலையா?: பலகோணங்களில் விசாரணைகள் தீவிரம் - ரிஷாத்தும் விரைவில் கைதாவார்..! (செய்திப்பிரிவு) முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில், வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட 16 வயதான ஹிஷாலினி, உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில், தற்போது சி.ஐ.டி.யின் தடுப்புக் காவலின் கீழ் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும் சந்தேக நபராக பெயரிட்டு விரைவில் மன்றில் ஆஜர் செய்ய உத்தேசித்துள்ளதாக அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் நேற்று நீதி…
-
- 2 replies
- 296 views
-
-
யதார்த்தம். என்னவோ.... இது தான். 2002ஆம் ஆண்டு... கொழும்பில் அமைக்கப்பட்ட. இந்தியாவின் அப்பலோ மருத்துவ மனையில் பணியாற்றிய வைத்தியர்கள். தாதியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுமே தமிழ்நாடு. கேரளா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். எல்லோரும் நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டும் பெண்கள் தலையில் பூவும் பொட்டும் வைத்துக் கொண்டுமே பணியாற்றியிருந்தனர். இதனை அவதானித்திருந்த மகிந்த ராஜபக்ச தரப்பு 2005ஆம் ஆண்டு ஆட்சி அமைத்ததும் பிரபல சிங்கள தொழில் அதிபர் ஒருவர் மூலம் வெவ்வேறு நபர்களைப் பயன்படுத்தி 80 சதவீத பங்குகளை கொள்வனவு செய்தது. ஆனால் இது முறைகேடான செயல் என்று அப்போது கொழும்பில் இருந்த இந்தியத் தூதுவர் முரண்பட்டிருந்தார். …
-
- 2 replies
- 491 views
-
-
ஒரு ஊமை பெண்ணை, பெரும் பணம், நகைக்காக கலியாணம் செய்து, ஒரு குழந்தையையும் பெற்று, பின்னர் மனைவியை, கொலை செய்து வேறு ஒரு பெண்ணை கலியாணம் செய்யும் திட்டத்தில் ஒரு மனித மிருகம் செய்த வேலை கேரளாவை திடுக்கிட வைத்துள்ளது. பாம்பை ஏவி விட்டு மனைவியை கொலை செய்த கணவன் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்த உத்ரா சமீபத்தில் இறந்துவிட்டார்.. கல்யாணம் ஆகி ஒரு வயதில் மகன் உள்ள நிலையில், நகைக்காகவும், 2வது கல்யாணம் செய்து கொள்வதற்காகவும் மனைவியை பாம்புகளை ஏவி கொன்றுள்ளார் இவரது கணவர் சூரஜ்!! மார்ச்-2 ம் தேதிதான் முதல்முறையாக உத்ராவை பாம்பு கடித்தது.. போராடி அவர் உயிரை பெற்றோர் மீட்டு கொண்டு வந்து தங்கள் வீட்டில் ஓய்வுக்காக அழைத்து சென்றனர். அ…
-
- 2 replies
- 650 views
-
-
பிரம்மசீடன் எழுதிய '' இனி? '' தமிழீழ விடுதலைப் புலிகளை ஆணிவேருடன் அழித்து, பயங்கரவாதத்திற்கும், பிரிவினைவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக சிங்களம் எக்காளமிடும் இவ்வேளையில், தனியரசுக்கான தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடுத்த படிநிலை என்ன? என்ற பெரும் கேள்வி இன்று உலகத் தமிழர்களின் மனங்களின் எழுந்துள்ளது. ஆயுதப் போராட்டம் இனி சாத்தியமில்லை என்று ஒருசாரரும், உலகோடும், சிங்கள தேசத்தோடும் ஒத்துப்போவோம் என்று இன்னொரு சாரரும், ஆயுதப் போராட்டமே ஒரேயொரு வழியென்று உறுதிபட மறுசாரருமாக, இன்று மூன்று துருவங்களாக உலகத் தமிழர்களின் கருத்தியல் உலகம் காட்சிதருகின்றது. இவற்றை அகக்கண் முன்னிறுத்தி, தனியரசுக்கான பாதையில் எம்முன்னே விரிந்து கிடக்கும் கடமைகளை…
-
- 2 replies
- 769 views
-
-
அமெரிக்காவில் கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடி துப்பாக்கிக் சன்னங்களினால் சல்லடையிடப்பட்டு உயிர் நீத்த மார்டின் லூதர் கிங்கின் வரலாற்றுப் புகழ் மிக்க ''எனக்கொரு கனவுண்டு" என்ற உரை நிகழ்த்தப்பட்டு இன்றுடன் ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. 1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் திகதி வொஷிங்டனில் உள்ள ஆபிரகாம் லிங்கன் நினைவாக முன்றலில் அவர் ஆற்றிய உரை வரலாற்றின் ஏடுகளில் அழிக்கப்பட முடியாத ஆவணமாக பதியப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுமார் இரண்டரை இலட்சம் ஆதரவாளர்கள் செவிமடுத்த அந்த உரை இன்று வரை பல்லாயிரக்கணக்கானோரால் மீட்டப்பட்டு வருகின்றமை அந்த உரையின் ஆழத்தினை பறை சாற்றுகின்றது. ''நான் உங்களுக்குச் சொல்கிறேன் தோழர்களே, இன்றும் நாளையும் நாம் துன்பங்களை சந்தித்தாலும் எனக்கு ஒரு கன…
-
- 2 replies
- 3.8k views
-
-
மட்டக்களப்பு அறிக்கை. - வ.ஐ.ச.ஜெயபாலன் . மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் இளைஞர்களை சந்தித்து பேசி திரும்பியுள்ளேன். போருக்குப் பிந்திய நிலமைகள் வேகமாக மாறி வருகிறது. இரு பக்கத்துக் கனவுகளையும் சாதனைகளையும் கனலும் பலவிடயங்களையும் எழுத வேணும். ஆனாலும் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்ள தயக்கமாக உள்ளது. மிகவும் கவனமாக எடிற் பண்ணியே எழுதுகிறேன். . போருக்குப் பிந்திய சூழலையை மாறி வரும் புதிய இன அரசியல் சமன்பாடுகளை உருவாகும் புதிய சமூக பொருளாதார வாய்ப்புகளை தமிழரும் முஸ்லிம்களும் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. சமாதனத்தின் புதிய சமன்பாடுகளைப் புரிந்துகொண்டிருந்தால் இப்பவே ஒன்றுபட்டால் உண்டு பெரு வாழ்வு என கைகோர்த்து நெடுந்தூரம் முன் சென்றிருபார்கள். . …
-
- 2 replies
- 521 views
-
-
அடுத்த ஆண்டு சிறந்த ஈழத்தவர் திரைப்படத்திற்கு 10 ஆயிரம் யூறோக்கள் வழங்கப்படும் என்ற முழக்கத்துடன் பரிஸ் தமிழ்த் திரைவிழா ஈழத்தவர் திரைப்படங்களின் சங்கமமாக சிறப்புடன் நிறைவுகண்டுள்ளது. கடந்த ஓகஸ்ற் 23ம் நாள் முதல் மூன்று நாள் நிகழ்வாக இடம்பெற்றிருந்த இத்திரைவிழாவில், யாழ்பாணம் உட்பட சுவிஸ், அவுஸ்றேலியா, கனடா ஆகிய நாடுகளில் ஈழத்தவர்களால் உருவாக்கப்பட்டிருந்த ஏழு திரைப்படங்கள் காண்பிக்கப்பட்ட்டிருந்ததோடு கருத்தாடல்களும் இடம்பெற்றிருந்தன. சுவிசில் இருந்து திரைத்துறைக் கலைஞர்கள் உட்பட பிரான்சின் தமிழ்ச்சூழலில் செற்பட்டு வருகின்ற பல்வேறு துறைசார்ந்தவர்கள் பலரும் இந்நிகழ்விற்கு பங்கெடுத்து சிறப்பூட்டியிருந்தனர். மூன்று தiலைமுறைகளைக் கண்டு நிற்கும் புலம்பெயர் வாழ்வியல் பயணத்தி…
-
- 2 replies
- 427 views
-
-
இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளாத ஐரோப்பாவில், முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள், இதனால் உண்டாகும் எதிரொலிகள் எல்லாம் கலாசார மோதல்களைக் கூர்மைப்படுத்தி சமய நம்பிக்கைகளைக் காயப்படுத்துகின்றன. இந்நாடுகளில் உள்ள எல்லையில்லாக் கருத்துச் சுதந்திரங்களை மட்டுப்படுத்தாத வரை, இக்காயங்கள் அடிக்கடி ஏற்படவே செய்யும்.கருத்துச் சுதந்திரம் ஏன், ஒருவரைக் காயப்படுத்த வேண்டும். எவற்றையும் பொருட்படுத்தாது இருந்தால் சரிதானே. இப்படியும் சிலர் சொல்கின்றனர். பிறர், தம்பிள்ளைகளை திட்டினால் அல்லது வசைபாடினால் பெற்றோரின் பொருட்படுத்தாத தன்மை எதுவரை இருக்கும். ஒரு தடவை, இரு தடவை அல்லது ஒரு எல்லை வரைதான் இதில் பொறுமை இருக்கும். இவ்வாறுதான், சில முஸ்லிம்கள் பொறுமை இழக்கின்றனர். கர…
-
- 2 replies
- 1.4k views
-
-
கருணாநிதியை ஏன் துரோகி, எட்டப்பன் என்று சொல்கிறோம்? இனப்படுகொலை சமயத்தில் அவர் அப்படி என்ன செய்தார்? இது போன்ற கேள்விகளுக்கான சில விளக்கங்கள் உதாரணத்தோடு: (இவற்றை படித்துவிட்டு நண்பர்களிடம் பகிருங்கள். திமுக, என்ற உதவாக்கரை கட்சிகளையும் அப்புறப்படுத்துவோம்) 1. தமிழீழப் படுகொலை நடந்த 2008-2009இல் மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறப்போகிரோம் என்று சொல்லிவிட்டு பின்னர் பின்வாங்கினார் 2. தமிழீழ ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர் ... சட்டம் இவர்களுக்கு மட்டும் கடுமையாக்கப்பட்டது. 3. போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது 4. போரை நிறுத்து என துண்டறிக்கை கொடுத்ததற்காக மே பதினேழு இயக்க தோழர்கள் 13 பேர் 10 நாட்களாக புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர் 5. கரு…
-
- 2 replies
- 934 views
-
-
சிறுமி வித்தியாவின் கொலையின் அரசியல் 05/21/2015 இனியொரு... சிறுமி வித்தியாவின் படுகொலையைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த போராட்டம் வட மாகாணம் ஈறாக இன்று கிழக்கிலும் பரவ ஆரம்பித்துள்ளது. சமூகவிரோதிகள் சிலர் சிறுமி வித்தியாவைப் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திப் படுகொலை செய்த நிகழ்வு ஒரு தீப்பொறி மட்டுமே. மக்கள் மத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாகப் புகைந்துகொண்டிருந்த நெருப்பு இன்று தீயாக எரிய ஆரம்பித்துள்ளது என்பதே இதன் பின்புலத்திலுள்ள யதார்த்தம். போர் என்று அழைக்கப்படும் இனப்படுகொலைக்குப் பின்னான காலப் பகுதி முழுவதும், யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கு முழுமையும் சமூக விரோதிகளின் புகலிடமாகிவிட்டது. குறைந்த பட்ச சட்ட ஒழுங்கு முறைகளை இராணுவமே நடத்தி வந்த…
-
- 2 replies
- 614 views
-
-
முழுமையாக காண வேண்டிய காணொளி. தலைப்புக்குரிய விடயம்.. இப்பேச்சில்.. 17 - 22 ஆவது நிமிடத்தில்... வருகிறது.
-
- 2 replies
- 572 views
-
-
வன்னிப்பகுதியில் மோதல்கள் உக்கிரம் பெற்றிருந்த 2009 இன் ஆரம்பத்தில் எல்லாளன் திரைப்பட முன்னோட்டம் வெளியாகி இருந்தது.மிக நேர்த்தியான காட்சியமைப்புகளோடு இருந்த அந்த முன்னோட்டம் அநேகர் கவனத்தை ஈர்த்திருந்தாலும் பின் இறுகிய முற்றுகையும் முள்ளிவாய்க்கால் முடிவும் அத்திரைப்படம் தொடர்பிலான அக்கறையை இல்லாது செய்திருந்தன.ஆனால் இதையெல்லாவற்றையும் தண்டி இவ்வருட ஆரம்பத்தில் திரைப்படம் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பு இணையங்களூடாக இடுகையிடப்பட்டதோடு "நடவடிக்கை எல்லாளன்" என்ற பெயரில் இணையத்தளம் ஒன்றும் தொடங்கப்பட்டிருந்தது.அனுராதபுரம் வான்படைத்தளத்தின் மீது கரும்புலிகள்,வான்புலிகள் நடத்திய வெற்றிகரமான கூட்டு நடவடிக்கை பற்றியதே எல்லாளன் திரைப்படம் என்பதைவிடவும் மேலதிக விடயங்கள்,பேட்டி…
-
- 2 replies
- 6.3k views
-
-
வட ஆபிரிக்காவில் டியூனீசியாவிலும் எகிப்திலும் மக்கள் கிளர்ச்சிகள் கண்ட முடிவமைதிக்கு முற்றிலும் வேறுப்டடதாகவே லிபியாவின் கிளர்ச்சி அமைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. டியூனீசியாவில் இருந்து இரவோடிரவாக ஜனாதிபதி பென் அலி குடும்பத்தினர் சகிதம் விமானத்தில் ஏறித் தப்பியோடி சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்தார். எகிப்தில் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவியைத் துறந்து தலைநகர் கெய்ரோவில் இருந்து வெளியேறி வேறு ஒரு நகரத்தில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் உண்மையில் எகிப்தில் இல்லையென்றும் வேறு நாட்டுக்கு சிகிச்சைக்காகச் சென்று விட்டதாகவும் கூட தகவல்கள் வெளியாகியிருந்தன. லிபியாவில் நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக அதிகாரத்தில் இருந்துவரும் கேணல் மும்மர் கடாபிக்கு எதிரான மக…
-
- 2 replies
- 1.1k views
-
-
இந்தியாவை இலக்கு வைத்து இலங்கையில் கால் பதிக்கிறதா சீனா? தமிழர்களைப் பதறவைக்கும் சீன ஆக்கிரமிப்பு தீபச்செல்வன் ஈழத் தீவு முழுவதும் ஈழத் தமிழர்கள் பரந்து வாழ்ந்தார்கள் என்பதற்கு ஈழத்தின் நாற்புறமும் உள்ள சிவாலயங்கள் சாட்சியாக இருக்கின்றன. ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்கள் எனப்படும் இந்தக் கோயில்கள் பல்லவர் காலத்தில் நாயன்மார்களால் பாடல் பெற்றவை. அவற்றின் வரலாறு கிறிஸ்துவுக்கு முந்தைய தொன்மைக்கும் முந்தையவை. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஈழத்தில் வாழ்ந்த ராவணன் என்ற தமிழ் மன்னன், சிவபக்தனாக இருந்திருப்பதும் தொன்மையின் ஆதாரமாகும். இப்படிப்பட்ட தொன்மையைக் கொண்ட ஈழத் தமிழ் மக்கள் இன்றைக்கு தாம் எஞ்சியுள்ள வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் வாழ்வுரிமையை, ஆட்சியுரிமையைக்…
-
- 1 reply
- 286 views
-
-
ஜெ : சில குறிப்புகள் சட்டத்துக்கு விரோதமான முறையில் சொத்துகள் சேர்த்த வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ள பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அவருக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்திருக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடைய சசிகலா, வி.என். சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு நான்காண்டு சிறைத் தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் அளிக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் முதல்வர் பதவியைப் பறித்து அவரைச் சிறையிலும் தள்ளியுள்ள இந்தத் தீர்ப்பு வழக்கத்துக்கு மாறான சில எதிர்வினைகளையும் அசாதாரணமான ஒரு சூழலையும் இங்கே ஏற்படுத்தியிருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது? 1) நிலப்பிரபுத்துவ மனோபாவம் அஇஅதிமுக மீது பெரிதளவு பற்றோ ஆர்வமோ இல்லாத திரளான மக்கள…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜனவரி 8 திகதி தேர்தலில் ஆச்சரியமளிக்ககூடிய வெற்றியை பெற்ற பின்னர் இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் மைத்திரிபால சிறிசேன அவருக்கு முன்னர் பதவிவகித்தவரை விட வித்தியாசமானவர். உள்நாட்டின் ஆட்சி முறையில் கவனம் செலுத்துவதே அவரது முன்னுரிமைக்குரிய விடயமாக காணப்படப் போகின்றது, அது நடைமுறைப்படுத்துவதற்கு கடினமான விடயம். மகிந்த ராஜபக்சவின் மீதான வெறுப்பு என்ற விடயத்தை தவிர வேறு எதிலும் ஓற்றுமை இல்லாத கூட்டணிக்கு அவர் தலைமை தாங்குகின்றார். அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை இந்தியா மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளை சரிசெய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. இதனை சாத்தியமாக்குவதற்கு அவருக்கும் அவரது வெளிநாட்டு நண்பர்களுக்கும் திறமையும், கற்பனாசக்தியும் அவசியமாகின்றத…
-
- 1 reply
- 739 views
-
-
'உலகில், மாபெரும் ஜனநாயகத் திருவிழா' - இது, இந்தியத் தேர்தலைக் குறித்து சொல்லப்படும் வாக்கியம். மக்கள் தொகையில் உலக அளவில் இரண்டாமிடத்தில் இருக்கும் இந்தியாவில், வாக்களிக்கச் செல்லும் மக்களின் எண்ணிக்கை உலகின் எந்த நாட்டைவிடவும் அதிகம். ஆனால், இந்தியாவைவிட அதிகமான மக்கள்தொகை உள்ள நாடான சீனாவைப் பற்றி ஏன் அப்படிச் சொல்வதில்லை? ஏனெனில், சீனாவில் தேர்தலும் இல்லை, ஜனநாயகமும் இல்லை. ஆனால், 70 ஆண்டுகளாக ஒரே கட்சி ஆட்சியில் இருக்கும் சீனாவில், சோஷியலிச ஜனநாயகம் நிலவுவதாக சீனா சொல்லிக்கொள்கிறது. 1949-ம் ஆண்டு, சீனாவில் மாவோ தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் அமர்ந்தது. அன்றிலிருந்து இன்று வரை, 'ஒரே நாடு ஒரே கட்சி' எனப் பயணித்துக்கொண்டிருக்கிறது சீனா. சீனாவி…
-
- 1 reply
- 454 views
-
-
கொரோனாவால் உலகம் அழியப் போவதில்லை ஆர். அபிலாஷ் டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலனின் யுடியூப் பேட்டி மற்றும் சன் டிவி சிறப்பு நேர்காணலைப்பார்த்தேன் - “நாளைக்கே உலகம் அழிஞ்சிருங்க” என கையை உதறும் டாக்டர்களைப் போலஅன்றி தெளிவாக நிதானமாகப் பேசுகிறார். பவித்ரா அமெரிக்காவில் பலவருடங்களாககொரோனா வைரஸ்கள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கியவர். அவரிடம்சமூகவலைதளங்கள் வழி மக்களிடம் பரவி வரும் பல குழப்பங்கள் குறித்து கேள்விகள் பலகேட்டார்கள். அவற்றில் ஒன்று கொரோனா எந்தளவுக்கு ஆபத்தானது என்பது. அதற்கு அவர்சொன்ன பதில் முக்கியமாகப் பட்டது: 1) கொரோனா என்பது ஒரு புதிய வைரஸ் அல்ல. Covid-19 எனும் இந்த வைரஸானது ஏற்கனவே(70 வருடங்கள…
-
- 1 reply
- 665 views
-
-
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 75 ஆவது பிறந்த தின நினைவுப் பேருரை நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு திருமறைக்கலா மன்ற கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குமார் பொன்னம்பலத்தின் உருவப் படத்திற்கு விளக்கேற்றி, மாலை அணிவித்து அஞ்சலி செய்து ஆரம்பித்து வைத்தார். மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் ஞாபகார்த்தக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் “தற்கால சர்வதேச சட்ட மற்றும் அரசியல் ஒழுங்கில் போருக்குப் பின்னரான தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம்” என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் உரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் யாழ்.பல…
-
- 1 reply
- 281 views
-
-
ஹிஸ்புல்லாஹ்வின் ‘கணக்கு’ மொஹமட் பாதுஷா ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன்னர், அது தொடர்பில் ஓர் அனுமானமும் திட்டமும் இருக்கும். அது விடயத்தில் காணப்படும் நிகழ்தகவுகள் என்ன என்பது பற்றியும், இலாப நட்டம், அனுகூலங்கள், பிரதிகூலங்கள் பற்றியும் ஒரு திட்டவகுப்பு நிச்சமாக இருக்கும். இதை மனதால் கூட்டிக் கழித்துப் பார்த்தே, அந்தக் காரியத்தில் இறங்குவதா இல்லையா என்ற முடிவை எடுப்பது வழமை. இந்தத் தேர்தல் காலத்திலும், இவ்வாறான முடிவையே அரசியல்வாதிகள் எடுத்திருக்கின்றார்கள். சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்ஷ, அநுர குமார திஸாநாயக்க தொடக்கம், இத்தேர்தலில் தனி முஸ்லிம் வேட்பாளர் என்ற சுலோகத்துடன் களமிறங்கியுள்ள முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வரை, எ…
-
- 1 reply
- 601 views
-
-
தமிழக தேர்தல் நாடகம் அரங்கேற்றம்!; மீண்டும் நடிகை வேடமேற்கும் ஜெயலலிதா! தமிழக சட்டமன்றத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு தேர்தல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த முறை எப்படியாவது அதிமுகவை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றி விடவேண்டும் என்ற முனைப்பில் திமுக தேசிய காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளது.மறுபுறம்,நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக வை வளைத்துப் போடும் நோக்கில் ஆளுங் கட்சியான பாஜக அக்கட்சியுடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றது. இந்த நிலையில்,இந்த முறையும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அதிமுக பல அதிரடி நடவடிக…
-
- 1 reply
- 551 views
-
-
சுனாமி என்னும் ஆறாவடு- தொகுப்பு- குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் December 26, 2018 வழமைக்கு மாறான காலநிலை. மேகங்கள் இருண்டு போயிருந்தன. இந்தோனேசிய சுமாத்திராத் தீவின் வடமேல் ஆழ்கடலில் ஏற்பட்ட புவினடுக்கத்தினால் பொங்கியெழுந்த பேரலை இந்து சமுத்திரத்தின் கரையோரப் பிரதேசங்களை தாக்கியது. தெற்கு மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோரைக் காவு வாங்கியது. அந்தக் கொடுந் துயரம் நடந்தேறி இன்றுடன் 14 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும் சுனாமியின் வடுக்கள் ஆறவில்லை. சுனாமி, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது. வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் மூன்றில் இரண்டு பகுதி கடற்கரை சுன…
-
- 1 reply
- 626 views
-
-
காந்தி–ஈழம் அன்புள்ள ஜெ, நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்., அஜிதன் சுகம் தானே ?! இப்போது தான் உங்களது ‘காந்தியும் ஈழமும்’ வாசித்து முடித்து, தற்செயலாக முகப் புத்தகம் சென்றேன்., திரு.பிரபாகரன் அவர்களின் மகன் திரு. பாலச்சந்திரன் அவர்களை சிங்கள ராணுவம் சித்ரவதை செய்து கொலை செய்த புகைப்படம் பலரால் பகிரப்பட்டு இருந்தது. அதை நீங்களும் பார்த்து இருப்பீர்கள் என எண்ணுகிறேன். இனியும் அங்கு காந்திய வழிக்கான தேவை அவசியம் தானா ?! மணிப்பூர் இரோம் ஷர்மிளாவும் காந்திய வழியின் அருகில் தானே இருக்கிறார். ஆனால், யாருமே கண்டுகொள்ளவில்லையே.. -ஹாரூன், சிங்கப்பூர் அன்புள்ள ஹாரூன், பாலச்சந்திரன் படத்தை ஒரு கணத்துக்குமேல் பார்க்க முடியவில்லை. உடனே ஒரு தந்தையாக என் மனம் ஓர் அ…
-
- 1 reply
- 645 views
-