நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
சஜீத் தோல்வியடையும் வேட்பாளர் என்று தெரிந்து கொண்டதன் பின்பே எந்தத் தரப்பும் ஏற்றுக்கொள்ள முடியாத கடுமையான நிபந்தனைகளுடனான 13அம்ச கோரிக்கையை முன்வைத்து, எந்த வேட்பாளருக்கும் நேரடி ஆதரவை தவிர்க்கும் நோக்கத்துடன், ஒரு நாடகத்தையே அரங்கேற்றியுள்ளார்கள் தமிழ் அரசியல்வாதிகள். தமிழ் அரசியல்வாதிகளின் நிலைப்பாடானது, யுத்தத்தை வெற்றிகொண்ட தரப்பினர்களுடன் எவ்வகையிலும் கூட்டுச்சேர்ந்து பயணிக்க முடியாது என்பதேயாகும். அதன் காரணமாகவே மஹிந்தவுக்கு எதிரான அணியினருடன் பயணிப்பதே அவர்களுக்கு சிறந்ததாக அமைந்திருந்தது. அதனால்தான் 2010லும், 2015லும் மஹிந்த அணியினருக்கு எதிரான அணியினரோடு பகிரங்கமாகவே ஆதரவு தெரிவித்து பயணித்திருந்தார்கள். அதற்கான சந்தர்ப்பம…
-
- 0 replies
- 749 views
-
-
இன்னுமொரு இனக்கொலைக்கு தூண்டுதலா - வ.ஐ.ச.ஜெயபாலன். இந்திய நாடாளுமன்றத்தில் திரு டி ஆர் பாலு “விடுதலைப் புலிகளால் சோனியாவுக்கு ஆபத்துள்ளது” என்று ஒரு பாதகமான அபாண்டத்தை தெரிவித்தது மீண்டும் ஒரு இனக்கொலையை தூண்டும் முயற்சியா? இந்தியாவையும் ஈழத் தமிழரையும் பிழவு படுத்தும் முயற்ச்சியா? விடுதலைப் புலிகள் இன்னும் இயங்குகிறதா? அது குறித்த தலைவரை இலக்கு வைக்கிறதா? இந்த தகவல் டி.ஆர்.பாலுவுக்கு எங்கிருந்து கிடைத்தது? இது தீமுக வின் சம்மதத்துடன் தெரிவிக்கப்பட்டதா? திரு.ஸ்டாலின் இதுபற்றி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?” இது அரசின் முந்தைய தகவல் என்றால் இப்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லையென்ற அரசின் நிலைபாட்டை ஏன் தி.மு.க ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவரின் பாதுகாப்பை வ…
-
- 4 replies
- 749 views
-
-
றொட்டியா? அல்லது பிரியாணியா? அவனுக்குப் பிஸ்ஸா, உனக்கு கொத்து றொட்டி. ஏய் உனக்கு என்ன? எனக்கு பிரியாணி! டேய்! தம்பிகளா, என்னிடம் வெறும் மாவும் உப்பும் தான் இருக்கு. உனக்கு பிரியாணி. இப்ப சாத்தியமில்லை. என்னென்றால் வயலே நம்மட்ட இல்லை. வளைச்சு வெச்சிருக்காங்க. கொத்து றொட்டி! அதுகும் சாத்தியமில்லை. என்னென்றால் ஆட்டுக்கு எங்கபோறது. பிஸ்ஸா இது வெளிநாட்டயிற்மாயிற்றே இப்போதைக்குச் சாத்தியமில்லை. ஆனா எல்லோரும் சேர்ந்து இப்ப றொட்டியைச் சுட்டுச் சாப்பிட்டு தென்பாயிருந்து கொண்டு பிரியாணிக்கு உழைப்பமா?
-
- 0 replies
- 749 views
-
-
முக்கியமான ஏழு மாதங்கள் 76 Views 2021ஆம் ஆண்டு யூன் முதலாம் திகதியுடன் இவ்வாண்டுக்கான அடுத்த ஏழு மாதங்கள் ஆரம்பமாகப் போகிறது. தொடரவிருக்கும் இந்த ஏழு மாதங்களும் ஈழத் தமிழர்களின் உரிமைகளை மீட்டல் என்னும் இலக்கு நோக்கிய பயணத்தில் அதிமுக்கியமான மாதங்களாக அமையப் போகின்றன. காரணம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்வு நிறைவேற்றிய சிறீலங்கா குறித்த தீர்மானத்தின் படி மனித உரிமைகள் ஆணையகம் சிறீலங்காவின் யுத்தக் குற்றச் செயல்கள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை வன்முறைப்படுத்தல்கள் தொடர்பான சான்றாதாரங்களையும், சாட்சியங்களையும் திரட்டவென ஒதுக்கப்பட்ட நிதியில், இதற்கான தனியான அலுவலகம் ஒன்றை அமைத்துச் செயற்படுவதற்கான நடை முறைகள…
-
- 0 replies
- 749 views
-
-
http://www.youtube.com/watch?v=TsurVPrLYFg...feature=related
-
- 0 replies
- 748 views
-
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உண்மைகள் மறைக்கப்பட்ட நிலையில் தூக்கு கயிற்றை எதிர் நோக்கி காத்திருக்கும் பேரறிவாளன் அவர்களின் உயிர்வலியை சுமந்த ஆவணதிரைப்படம் -நன்றி- தந்தி தொலைக்காட்சி (facebook)
-
- 0 replies
- 748 views
-
-
இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவாவாதிகள் ஊடுருவி வருவதை, அண்மைக் காலமாக யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் மாற்றங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவ்வளவு காலமும், இலங்கை முழுவதும் உள்ள தமிழ்ப் பாடசாலைகளில் சிறு கோயில்கள் கட்டுவதில் மும்முரமாக இருந்தார்கள். தற்போது, தாலிபான் பாணியில் மாணவர்களுக்கு உடைக் கட்டுப்பாடு விதிக்குமளவிற்கு வளர்ந்து விட்டார்கள். பெப்ரவரி 13 ம் தேதி, யாழ் பல்கலைக்கழகத்தில் "அனைத்துலக சைவ மகாநாடு" நடைபெற்றது. (http://www.pathivu.com/?p=61671) அது நடந்து சில நாட்களுக்குள் (பெப். 17), கலைப்பீட மாணவர்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கும் அறிவித்தல் ஒட்டப் பட்டது. அந்த அறிவி…
-
- 2 replies
- 748 views
-
-
2015 ஆம் ஆண்டில் சுதந்திரமாகவும் அமைதியாகவும் சுற்றுலா செய்யக்கூடிய 10 நாடுகளின் வரிசையில் இலங்கை இடம்பிடித்துள்ளது. அமெரிக்க பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இலங்கைக்கு 10 ஆவது இடம்கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இதில் முதலிடம் ஐஸ்லாந்துக்கு கிடைத்துள்ளது. மொரக்கோ, வியட்நாம், அமெரிக்கா, தஸ்மேனியா, கொலம்பியா, ஜப்பான், ஆர்ஜன்டீனா, நோபாளம் ஆகிய நாடுகளும் இதில் இடம்பிடித்துள்ளன. http://onlineuthayan.com/News_More.php?id=434253687230426555
-
- 0 replies
- 748 views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு எந்தவொரு சர்வதேச நாடாலும் தீர்வை வழங்க முடியாது - சம்பிக்க எந்தவொரு வெளிநாடுகளாலும் இலங்கைப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்க முடியாது. மறப்போம் மன்னிப்போம் என எதிர்காலம் தொடர்பில் சிந்திப்பதே யதார்த்தமானதாகும் என பெருநகரங்கள், மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தேசிய அரசாங்கமொன்று அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தற்போதும் அரசாங்கத்திற்கு உள்ளதா? பதில்:- ஆம் கேள்வி:- தேசிய அரசாங்கத்திற்கான அவசியம் என்ன? பதில்:- நாட்டில் ஸ்திரமான அரசாங்கமொன்று அமைய வேண்டும். சிறந்த கொள்கையைக் கொண்ட அரசாங…
-
- 0 replies
- 747 views
-
-
1990ம் ஆண்டு ஜுலை மாதம் 10 திகதி. சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக ஒரு மிக முக்கிய தாக்குதலை விடுதலைப் புலிகள் ஆரம்பித்த தினம். சிறிலங்காவில் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சிpலங்கா ஆனையிறவுப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மிகப் பெரிய இராணுவ நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்திருந்தார்கள். ஒரு பிரதான இராணுவ முகாம் மற்றும் ஆறு சிறிய முகாம்களைக் கொண்ட அந்த பாரிய இராணுவத் தளத்தில், சிறிலங்கா சிங்க ரெஜமன்ட் இன் ஆறாவது பட்டாலியனைச் சேர்ந்த 600 படைவீரர்கள் தங்கியிருந்தார்கள். அந்தப் பாரிய படைத்தளத்தைத்தான் விடுதலைப்புலிகள் அந்த நேரத்தில் முற்றுகையிட்டிருந்தார்கள். ஆனையிறவு சிறிலங்காப் படைத்தளம் மீதான முற்றுகைக்கு விடுதலைப் புலிகள் சூட்டியிருந்த பெயர்: ஆகாய-கட…
-
- 0 replies
- 747 views
-
-
[size=4]இஸ்லாத்தை எப்போதும் தீவிரவாத சமயமொன்றாகக் காண்பிக்கும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரல், இடைவிடாது தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்தான், அண்மையில் பெண்டகனின் வகுப்பொன்றும் இடம்பெற்றுள்ளது. இஸ்லாத்தை உலகிலிருந்து முற்றாக ஒழித்து, முஸ்லிம்களின் அடையாளச் சின்னங்களான புனித மக்கா, மதீனா பிரதேசங்களை அணுகுண்டு போட்டேனும் தகர்க்க வேண்டுமென அதன் அதிகாரிகள் கீழ்மட்ட அதிகாரிகளுக்கு பாடமெடுத்துள்ளனர்.[/size] [size=4]இருந்தாலும், அமெரிக்காவின் மிஞ்சும் கழிவுப் பொருட்களில் சுகபோகம் அனுபவித்து வரும் அரபுலகமும் அரபு ஷேக்குகளும் அமெரிக்கா தொடர்பான தமது நிலைப்பாட்டையும் கருத்தையும் இதன் பிறகேனும் மாற்றிக் கொள்வார்கள் என ஒரு போதும் நாம் எண்ணி விட முடியாது.[/size] [size=…
-
- 1 reply
- 746 views
-
-
துரோகத்தின் பரிசு. எழுதியவர்: க.வாசுதேவன் பிரஞ்சுக் காலனித்துவப் பிடியிலிருந்து தம்மை விடுவிக்கத் தனது இறுதிப் போராட்டத்தை அல்ஜீரிய "தேசிய விடுதலை முன்ணணி" முடுக்கிவிட்டிருந்த காலகட்டமது. பல நூறாயிரம் படையினரைக் கொண்ட பிரஞ்சு இராணுவத்தின் எல்லை கடந்த கொடூரங்களையும் மீறி அல்ஜீரியத் தேசிய விடுதலை முன்ணணி உக்கிரமான தாக்குதல்களை பிரஞ்சு இராணுவத்தின் படைப்பிரிவுகள் மீது தொடுத்துக் கொண்டிருந்தது. ஏகாதிபத்தியக் காலணித்துவச் சக்தியிடமிருந்து விடுபட்டு தனது சுதந்திரத்தை நிலைநிறுத்தும் நோக்கில் அல்ஜீரியர்கள் முன்னெடுத்த சுதந்திரப் போராட்டம் மிகவும் கடினமானதாகவும் பாரிய இழப்புகளைக் கொண்டதாகவும் நகர்ந்துகொண்டிருந்தது. ஒரு தேசத்தின் விடுதலைப…
-
- 1 reply
- 746 views
-
-
கடலோர மீன்பிடிக்கு மரணம்: இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இலங்கையின் வடகடலில் கடல் வெள்ளரி விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வருகின்றன. யுத்தத்துக்குப் பின்னர் வடக்கு மீனவர்கள் பல்வேறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். பலமுறை எடுத்துகூறியும் ஆக்கப்பூர்வமான எந்தவிதமான நடவடிக்கைகளையும் இதுவரையிலும் எட்டப்படவில்லை என்று மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பு, வடகடலில் மீன்வளத்தை முழுமையாக சுரண்டும் செயற்பாடுகள், வடக்கு மீனவர்களின் மீன்பிடி வள்ளங்கள் அழிப்பு, மீன்வலைகளை அறுத்தெறிந்து அட்டகாசம் செய்தல், இந்திய மீனவர்களின் அத்துமீறல், இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றினால், தங்கள…
-
- 10 replies
- 746 views
- 1 follower
-
-
புலி ஊறுகாய் ஜெரா ஊறுகாய். நம் மத்தியில் மிகவும் பிரபலமான சுவையூட்டி. சமைக்கும் உணவில் காரமில்லாவிட்டாலோ, உப்பில்லாவிட்டாலே சுவையேற்றிக் கொள்வதற்காக தமிழன் கண்டுபிடித்த அரிய பண்டம். தேசிக்காய், மாங்காய், நெல்லிக்காய், நார்த்தங்காய், பூண்டு, இஞ்சி போன்றவற்றைக் கொண்டு இது தயாரிக்கப்படும். 2009இற்குப் பின்னர் புதியதொரு ஊறுகாயும் சந்தைக்கு வந்திருந்தது. அதற்கு நான் புலி ஊறுகாய் என்று பெயரிட்டிருக்கிறேன். இது சாப்பாட்டு மேசைகளிலோ, போத்தல்களிலோ அடைத்து விற்கப்படுவதல்ல. திரவத்தன்மையோ அல்லது திண்மத் தன்மையோ உடையதும் அல்ல. கருத்துத் தன்மையானது. அதனால்தான் காலப்பதிவிலும், மலிவான அரசியல் சந்தைகளிலும் முக்கிய விற்பனைப் பொருளாக மாறியிருக்கின்றது. கீழ்வரும் இடங்களில் புலி ஊற…
-
- 0 replies
- 745 views
-
-
இன்னும் சில நாட்களில் அலறி மாளிகையிலிருந்து ஃபெயார் வெல் பெறக் காத்திருக்கின்ற நம்ம நாட்டின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிக்கு என்ன ஒரேயடியாக என்னாச்சு என்று யோசிக்கின்ற அளவுக்கு இருக்கின்றது அவரது சிரிசேனத்தனமான செயற்பாடுகள். சட்டவாட்சியை சாக்கடையாக்கி அதனை புத்தளம் அருவாக்காட்டுக்கு அனுப்பி வைக்கின்ற அவரது அயோக்கியத்தனம் ஹை டெஸிபலில் அலற வைக்கின்றது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் (Contempt of Court) பதினெட்டு வருட காலம் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்ட ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பளித்து சட்டவாட்சியை கதறக் கதற பாலியல் வன்புறவு செய்த சிரிசேன இப்போது கொலைக்குற்றச்சாட்டில் மரண தண்டணை அளிக்கப்பட்டவருக்கு பொது மன்னிப்பென்ற ஒன்றை வழங்கி பொறம்போக்குத்தனம் செய்து அதுக்க…
-
- 2 replies
- 745 views
- 1 follower
-
-
அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் என்ற தகவல் தான் தற்போது ஆசிய கண்டத்தின் பரபரப்பான செய்தியாகியுள்ளது. அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்கும் முன், முந்தைய அதிபர் புஷ்ஷை காட்டிலும் இந்திய, அமெரிக்க உறவிலும், இந்திய, அமெரிக்க அணு ஒப்பந்த விஷயத்திலும் அதிக ஆதரவுடன் இருப்பார் என்று பெரும்பாலான இந்தியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இந்தியாவை காட்டிலும், சீனாவுடனான உறவை பலப்படுத்துவதிலேயே ஒபாமா அதிக ஆர்வம் காட்டி வந்தார். இது, அவரை மிகவும் எதிர்பார்த்த இந்தியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அடுத்து வரும் ஆண்டுகளில், ஒபாமாவின் செயல்பாடுகள் எப்படி இருக்குமோ என்று ஐயப்பட்டனர்.ஹிலாரியின் விஜயத்தால் திருப்பு முனை: அடுத்தடுத்து நடந்த பல ச…
-
- 0 replies
- 744 views
-
-
யாருக்கு இலாபம் – இந்த வழக்கால்? மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிரதிவாதிகள் பெயர் கூப்பிடப்படும்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எழுந்து நிற்பது கட்டாயம் என்று அறிவுறுத்தி அவரை எழுந்து நிற்கச் செய்திருக்கிறார் நீதியரசர் ஜானக டி சில்வா. ஒரு மாகாண முதலமைச்சராக இருந்தாலும், முன்னாள் நீதியரசராக இருந்தாலும், வயதில் மூத்தவராக இருந்தாலும், நீதியின் முன் எவருக்கும் பாகுபாடு காட்டப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் நீதியரசர் அவ்வாறு அறிவுறுத்தினார் என்பது ஏற்கத்தக்கதே. ஆனால், எந்த நீதிமன்றத்தின் உயராசனத்தில் அ…
-
- 1 reply
- 744 views
-
-
தமிழ் கைதிகள்: புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டிய தருணம் June 26, 2021 — கருணாகரன் — வரலாறு விசித்திரங்கள் நிறைந்தது. சில சந்தர்ப்பங்களில் நம்பக்கடினமான சங்கதிகளையே கொண்டது என்று சொல்வார்கள். அப்படியான ஒன்றே இதுவும். “தமிழ் அரசியற் கைதிகளை அரசாங்கம் விடுவிப்பதற்குச் சிந்திக்க வேண்டும்”என்று கேட்டிருக்கிறார் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ. “வழக்கு விசாரணைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் 10 – 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் அரசியற் கைதிகளை விடுவிப்பதற்கான ஒரு பொறிமுறையை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும். இந்தக் கைதிகள் தங்களுக்கு எதிரான வழ…
-
- 13 replies
- 744 views
-
-
வீ.பிரியதர்சன் நாம் கடைகளுக்கு பொருட்கள் வாங்கச் செல்லும் போது நாங்கள் சமூக இடைவெளியுடன் நடந்துகொள்ளாவிட்டால் எனக்கு அருகில் இருக்கும் நபர் சமூக இடைவெளி( social distance) உடன் நிற்குமாறு ஏசுகிறார் அதனால் எமது நாட்டில் இதனை கட்டுப்படுத்த முடிகிறது என ஜேர்மனில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தெரிவிக்கிறார். கொரோனா எனப்படும் கொவிட் 19 நோய்த் தொற்று உலகநாடுகளில் பரவி இதுவரை 1,431,533 பேரை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதுடன் 82,058 பேரை பலியெடுத்துள்ளது. இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்காத போதிலும் பல உலக நாடுகள் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் முழு முயற்சியுடன் இறங்கியுள்ளன. இருந்தாலும் மனிதர்களை பலியெடுக்கும் இந்த கொரோனா நோய்த் தொற்று ந…
-
- 1 reply
- 744 views
-
-
சுமைலா ஜாஃப்ரி பிபிசி ஆசியா பீபி வீட்டுக்கு வெளியே இழுத்து வரப்பட்டு, கோபமாக இருந்த கும்பலால் தாக்கப்பட்ட…
-
- 0 replies
- 743 views
-
-
http://www.youtube.com/watch?v=vog96KJQPCI&list=UUCK2hmE-RK3zP1Mu9ZyyFWA&index=1
-
- 2 replies
- 743 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தை எப்படி காப்பாற்றப்போகிறோம்?!… செ.துஜியந்தன் January 30, 2019 இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? மக்கள் எக்கேடு கெட்டுப்போனால் என்ன? நான் நன்றாக இருந்தால் சரி, என் பொக்கற்றை நிரப்பினால் சரி, ஏ.சீ காரிலும், ஓ.சீ வீட்டிலும் ஒய்யாரமாய் படுத்துக்கிடந்து அவ்வப்போது ஊடகங்கள் ஊடாக அறிக்கைகளை விட்டுக் கொண்டு இருந்தால் சரி என்ற நிலைப்பாட்டிலே பல அரசியல்வாதிகள் இருக்கின்றனர். அவர்களை நம்பி வாக்களித்த மாவட்ட மக்களைப்பற்றி கிஞ்சித்தும் நினைத்துப் பார்ப்பதில்லை. பாரதியார் சொன்னதைப்போல் எல்லோரும் ‘ வாய்ச் சொல்லில் வீரராகவே’ இருக்கின்றனர். இன்று கிழக்கு மாகாணம் சகல துறைகளிலும் பின்தங்கிய மாகாணமாகவுள்ளது. அதிலும் இங்கு வாழும் தமிழ் மக்க…
-
- 2 replies
- 743 views
-
-
நடக்கவிருக்கும் தேர்தல் தமிழருக்கு எதைவாது பெற்றுத்தருமா ? என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம் ... எனக்கும் இருப்பதால் இதை எழுதுகிறேன் இவை என்னுடைய சொந்த பார்வை மட்டுமே. வரும் தேர்தலில் தமிழர் தரப்பில் 3 கட்சிகள் அல்லது மூன்று பிரிவுகள் (பிரதானமாக ) தமிழர்களிடம் வாக்கு கேட்டு நிற்கின்றன யாருக்கு போடவேண்டும் ..? ஏன் போடவேண்டும் ..? இவை முக்கிய கேள்விகளாக ஆறு அறிவும் செயல்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு இருக்க கூடிய ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு (த தே கூ ) இப்போது முன்னணியில் நிற்கும் கட்சி தமிழர்களின் பலமாக இருக்கும் இவர்களை ஏன் இன்னமும் பலமாக்கி எமது பலத்தை நாம் கூட்ட கூடாது ? அதற்கு இந்த தேர்தலை நாம் ஏன் பயன்படுத்த முடியாது ? ஏன் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் என்றாலும் இவ…
-
- 0 replies
- 743 views
-
-
ஜனவரி 8 திகதி தேர்தலில் ஆச்சரியமளிக்ககூடிய வெற்றியை பெற்ற பின்னர் இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் மைத்திரிபால சிறிசேன அவருக்கு முன்னர் பதவிவகித்தவரை விட வித்தியாசமானவர். உள்நாட்டின் ஆட்சி முறையில் கவனம் செலுத்துவதே அவரது முன்னுரிமைக்குரிய விடயமாக காணப்படப் போகின்றது, அது நடைமுறைப்படுத்துவதற்கு கடினமான விடயம். மகிந்த ராஜபக்சவின் மீதான வெறுப்பு என்ற விடயத்தை தவிர வேறு எதிலும் ஓற்றுமை இல்லாத கூட்டணிக்கு அவர் தலைமை தாங்குகின்றார். அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை இந்தியா மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளை சரிசெய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. இதனை சாத்தியமாக்குவதற்கு அவருக்கும் அவரது வெளிநாட்டு நண்பர்களுக்கும் திறமையும், கற்பனாசக்தியும் அவசியமாகின்றத…
-
- 1 reply
- 742 views
-
-
யாழ் இந்து மாணவன் யதுசனின் மரணம் ஒரு அரசியல் கொலை! Print Email Details Published on Saturday, 18 January 2014 20:56 Written by ndpfront Hits: 373 . மறைந்த போராளிகளிற்கு அஞ்சலி செலுத்தியதற்காக ஒரு மாணவனை, தமிழ்ச் சமுதாயத்திற்காக தம்முயிரை துறந்தவர்களை நினைவு கொண்டதற்காக தாய், தந்தையின் கண் முன்னாலேயே அவர்களின் வாழ்வின் ஒளியை கொன்றிருக்கிறார்கள். இந்த சர்வாதிகார இலங்கை அரசிற்கெதிராக ஒரு சிறு எதிர்ப்பை காட்டினாலும் கொல்லப்படுவீர்கள் என்று பயப்படுத்துவதற்காக ஒரு மாணவனைக் கொன்றிருக்கிறார்கள். கைது, வழக்கு என்று போனால் ஊடகங்களில் வெளிவரும் என்பதனால் கள்ளர்களின் மேல் பழியைப் போட்டு கொலை செய்திருக்கிறார்கள். யாழ். உடுவில் பிரதேசத்தில் வீடொன்றினுள் புகுந்த க…
-
- 1 reply
- 742 views
-