Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Autism : தற்புனைவு ஆழ்வு (ஆட்டிசம்/ ஓற்ரிசம்)

Featured Replies

தற்புனைவு ஆழ்வு நோ‌யி‌ன் அ‌றிகு‌றிகள்

பிற‌ந்த குழ‌ந்தைக‌ளி‌ன் மூளையை‌த் தா‌க்‌கி அவ‌ர்களது இய‌ல்பான ‌நிலையை ‌பா‌தி‌க்க‌ச் செ‌ய்யு‌ம் நோ‌ய் தா‌ன் ஆ‌ட்டிச‌ம் என‌ப்படு‌கிறது. இ‌த‌ன் மு‌க்‌கிய‌ப் ‌பிர‌ச்‌சினை எ‌ன்னவெ‌ன்றா‌ல் இ‌ந்நோ‌ய் கு‌றி‌த்து மரு‌த்துவ உலகா‌ல் கூட இதுவரை ச‌ரிவர பு‌ரி‌ந்து கொ‌ள்ள முடிய‌வி‌ல்லை எ‌ன்பதுதா‌ன்.

ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌த்த குழ‌ந்தைக‌ள் ‌பிற‌ந்த 6 மாத‌த்‌தி‌ல் செ‌ய்ய வே‌ண்டிய ‌சி‌ன்ன ‌சி‌ன்ன செய‌ல்களை‌க் கூட செ‌ய்யாம‌ல் முட‌ங்‌கி இரு‌க்கு‌ம். அதாவது தா‌யி‌ன் முக‌த்தை அடையாள‌ம் காணுத‌ல், ‌சி‌ரி‌த்த‌ல், மழலை‌யி‌ன் ஒ‌லி எழாம‌ல் இரு‌ப்பது, அரு‌கி‌ல் ‌நி‌ன்று கூ‌ப்‌பி‌ட்டாலு‌ம் எ‌ந்த சலனமு‌ம் இ‌ல்லாம‌ல் இரு‌ப்பது, பொ‌ம்மைகளோடு கூட ‌விளையாட மறு‌த்த‌ல், கைக‌ளி‌ல் ஒரு ‌பிடி‌ப்‌பு‌த் த‌ன்மை இ‌ல்லாம‌ல் போவது போ‌ன்றவை ஆ‌ட்‌டிச‌ம் நோ‌யி‌ன் அ‌றிகு‌றிகளாகு‌ம்.

தற்புனைவு ஆழ்வு எ‌ன்பதை ‌விள‌க்கமாக‌க் கூற வே‌ண்டுமானா‌ல் அது ஒரு நோய் அல்ல

மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு. மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு த‌ன்னை‌ச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாது செய்யும் ஒரு குறைபாடு. த‌ன்னை‌ச் சு‌ற்‌றி நட‌க்கு‌ம் எதை‌ப் ப‌ற்‌றியு‌ம் கவலை‌ப் படாம‌ல், த‌ங்களு‌க்கெ‌ன்று ஒரு த‌னி உலக‌த்தை உருவா‌க்‌கி‌க் கொ‌ண்டு அ‌தி‌ல் மூ‌ழ்‌கி ‌கிட‌ப்பா‌ர்க‌ள். ‌ஸ்பெ‌க்‌ட்ர‌ல் டி‌ஸ்ஆ‌ர்ட‌ர் (Spectral Disorder) எ‌ன்று ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் இ‌ந்த நோ‌ய் அழை‌க்க‌ப்படு‌‌‌கிறது.

இ‌ந்த நோ‌ய் பா‌தி‌த்த குழ‌ந்தைக‌ள் ம‌ற்றவ‌ர்களுட‌ன் உறவை‌ப் பேண முடியாது, ம‌ற்ற குழ‌ந்தைகளுட‌ன் இணை‌ந்து ‌விளையாடுத‌ல் போ‌ன்ற சாதாரண ‌விஷய‌ங்க‌ளி‌ல் கூட ஈடுபட முடியாது. பொதுவாக ஆ‌ட்‌டிச‌ம் பா‌தி‌த்த குழ‌ந்தைகளு‌க்கு பே‌ச்சு வருவ‌தி‌ல் ‌சி‌க்க‌ல் ஏ‌ற்படு‌ம். ‌சிலரு‌க்கு ந‌ல்ல முறை‌யி‌ல் பே‌ச்சு வருவது‌ம் உ‌ண்டு. ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌த்தவ‌ர்க‌ள் இ‌ப்படி‌த்தா‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்று எ‌ந்த ஒரு வரையறையு‌ம் இரு‌ப்ப‌தி‌‌ல்லை. ஒ‌வ்வொருவரு‌ம் ஒ‌வ்வொரு வகை‌யி‌ல் செய‌ல்படுவது‌ண்டு.

தற்புனைவு ஆழ்வு பா‌தி‌ப்‌பி‌ற்கு எ‌ந்த காரணமு‌ம் இதுவரை க‌ண்டு‌பிடி‌க்க‌ப்பட‌வி‌ல்லை. பெ‌ண்களை ‌விட ஆ‌ண்களையே அ‌திகமாக ஆ‌ட்டிச‌ம் நோ‌ய் தா‌க்கு‌கிறது.

தற்புனைவு ஆழ்வு பா‌தி‌த்தவ‌ர்களை எ‌ப்படி பராம‌ரி‌ப்பது

ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌த்தவ‌ர்களை எ‌ப்படி பராம‌ரி‌ப்பது போ‌ன்ற அடி‌ப்படை ‌விஷய‌ங்க‌ள் கூட, மெ‌த்த படி‌த்தவ‌ர்களு‌க்கு‌ம் அ‌றியாத ஒ‌ன்றாகவே உ‌ள்ளது. மேலு‌ம், உட‌லிய‌ல் ப‌ரிசோதனைக‌ள் மூல‌ம் ஆ‌ட்டி‌ச‌ம் நோ‌ய் இரு‌ப்பதை க‌ண்ட‌றிய முடியாது. ‌சில அடி‌ப்படை அ‌றிகு‌றிகளை‌க் கொ‌ண்டுதா‌ன் ஆ‌ட்‌டிச‌ம் நோ‌ய் இரு‌ப்பதை க‌ண்ட‌றிய முடியு‌ம். அ‌ப்படி ஆ‌ட்டிச‌ம் இரு‌ப்பது தெ‌ரிய வ‌ந்தா‌ல், அத‌ற்கான உ‌ரிய ‌சி‌கி‌ச்சை முறைகளை மே‌ற்கொ‌ண்டு, ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌த்தவ‌ர்களு‌க்கு மறுவா‌ழ்வு அ‌ளி‌‌ப்ப‌தி‌ல் சமூக‌ம் அ‌க்கறை செலு‌த்த வே‌ண்டு‌ம்.

இதுவரை ஆ‌ட்டிச‌ம் ஏ‌ற்படுவது எதனா‌ல் எ‌ன்பதை க‌ண்ட‌றிய முடிய‌வி‌ல்லை. ‌சில கரு‌த்து‌க்க‌ளி‌ன் அடி‌ப்படை‌யி‌ல், தாய், தந்தையரின் பரம்பரையில் யாரேனும் பாதிக்கப்பட்டிருத்தல், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற கனிமச் சத்துகளின் குறைபாடு, 'செக்ரடின்' என்ற ஹார்மோன் குறைபாடு என பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் 'ஆட்டிசம்' ஒரு நோய் அல்ல என்பது மட்டும் உறுதி. எனவே அதற்கு மருந்து என்பது கிடையாது. ஆனால் ஆரம்பக்கட்டத்திலேயே அறிகுறிகளைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்கள் நடந்து கொள்ளும் முறையை முழுமையான பயிற்சிகள் மூலம் மாற்றி அமைத்து அவர்கள் வாழ்க்கையை முழுமையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் செய்துகொள்ள உதவலாம்.

இதற்கான வழிமுறைகள் குறைபாடுகளின் தன்மையைப் பொறுத்தும், பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் பொறுத்தும் வேறுபடும் என்பதை புரிந்து கொள்வது அவசியம். எனவே, ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌த்தவ‌ர்களு‌க்கு முறையான ப‌யி‌ற்‌சி அ‌ளி‌த்து அவ‌ர்களையு‌ம் இய‌ல்பான வா‌ழ்‌க்கை வாழ வ‌ழி செ‌ய்யலா‌ம்.

Edited by akootha

  • தொடங்கியவர்

குழந்தைகள் "வக்சீன்" - தடுப்பூசி எடுப்பதால் தற்புனைவு ஆழ்வு ஏற்படுகின்றது என்பது பொய் என கூறப்பட்டுள்ளது.

Study Linking Vaccine to Autism Was Fraud

LONDON (AP) — The first study to link a childhood vaccine to autism was based on doctored information about the children involved, according to a new report on the widely discredited research.

The conclusions of the 1998 paper by Andrew Wakefield and colleagues was renounced by 10 of its 13 authors and later retracted by the medical journal Lancet, where it was published. Still, the suggestion the MMR shot was connected to autism spooked parents worldwide and immunization rates for measles, mumps and rubella have never fully recovered.

A new examination found, by comparing the reported diagnoses in the paper to hospital records, that Wakefield and colleagues altered facts about patients in their study.

http://www.wfaa.com/news/health/kids-doctor/113078384.html

Edited by akootha

  • தொடங்கியவர்

Autism - தற்புனைவு ஆழ்வு உள்ள பிள்ளைகளுக்கு எப்படி கற்பிப்பது?

இது ஒரு மூளைவளர்ச்சிக்குறைபாடு ஆகும்.அதாவது மூளை நன்கு தொழிற்படாத தன்மை (Dysfunctional brain )இதை நல்ல தமிழில் "தற்புனைவு ஆழ்வு" என்கிறார்கள். சிலர் இதை நோய் அல்ல என்கிறார்கள்.

1943 ல் Dr.Kanner என்பவர் முதன்முதலாக இது பற்றிய தன் ஆய்வை வெளியிட்டார். உலகில் பல குழந்தைகள் ஓற்ரிசத்தால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.எனினும், ஆண் குழந்தைகளையே அதிகமாகப் பாதிப்பதாகக் கூறப்படுகிறது. இது உடலியக்க செயல்பாட்டில் ஏற்படும் கோளாறு. இதனால் குழந்தைகளுக்கு மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் ஆற்றல் இல்லாமல் போகிறது.

பிறந்தமூன்று வருடங்களுக்குள் ஒரு குழந்தையிடம் தென்படத் தொடங்கும் ஓற்ரிசம் என்ற இந்தக் குறைபாட்டிற்கு உடல்ரீதியான அறிகுறிகள்கிடையாது.ஓற்ரிசத்திற்குரிய மரபியல் காரணம் என Dr.Kanner குறிப்பிட்டுள்ளார்.ஆனால் காரணம் எதுவாயினும், பல பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு "ஓற்ரிஸ்ரிக்" என லேபிள்(lable) அதாவது வகைப்படுத்துவதை விரும்புவதில்லை என அம்புலேற்ரறி என்ற சஞ்சிகையில் வந்த ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட அநேகமான குழந்தைகளைப் பார்த்தால் அவர்கள் நேருக்கு நேர் கண்வைத்து மற்றவர்களை அல்லது முன்னின்று பேசுபவர்களை பார்க்கமாட்டார்கள், ஏதாவது ஒரு சொல்லை அல்லது சொற்றொடரைத் சில சமயங்களில் திரும்பத் திரும்பச் சொல்வர், ஏதாவது சத்தங்களையும் இப்படிச் செய்யலாம், தலையை அல்லது கை,காலை ஆட்டி ஆட்டி வித்தியாசமான சத்தம் போடுவார்கள்.

சிலருக்கு ஏதாவது குறிப்பிட்ட பாடங்களில் அதீத திறமை இருக்கும், வரலாற்றுச் சிறப்புமிக்க பலருக்கு இதன் குணாதிசயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. உதாரணமாக ஐசாக் நியூற்றன் ,சிலர் மனக் கணக்கு(கூட்டல்)நல்லாச் செய்வர். பேச்சுத்திறன் குறைவாகவோ அல்லது முழமையாக இழந்திருப்பர். சிலர் நீங்க சொன்னதை திருப்பிச் சொல்வர்,

சுற்றியிருக்கும் சடப்பொருட்களை ஆராய்வர், சில சமயங்களில் அவற்றின் அளவு, வடிவம், தன்மை பற்றி அறிவதில் ஆர்வமாயிருப்பர்.

இவர்களை தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும்.தினமும் ஒரே மாதிரியான ஒழுங்கு முறைக்குப் பழக்கப்படுத்தினால், தமது அலுவல்களை அந்த ஒழுங்கில் செய்ய முனைவர். இதனால் ஆசிரியர் அந்த வேறுமாற்றத்தை அக் குழந்தைகளுக்கு முன்கூட்டியே திரும்பத் திரும்பச் சொல்லி அதற்குத் தயார்ப்படுத்துவர். அந்த ஒழுங்கில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் அவர்களால் வேறுமற்றத்திற்கு ஒத்துப்போக முடிவதில்லை. உதாரணத்திற்கு, "கரன்,இண்டைக்கு உன்ர அம்மா 4 மணிக்குத்தான் வருவா. 3 மணிக்கு இண்டைக்கு வரமாட்டா" என திரும்பச் சொல்ல அக் குழந்தை அந்த மாற்றத்திற்கு தயாராகிவிடும். இல்லையேல், மூர்க்கமாகிப் பக்கத்திலிருப்பவரைத் தாக்குவும் செய்வர். சில குழந்தைகள் கையால் நிலத்தை விறாண்டுவர், சிலர் நெஞ்சில் அல்லது தலையில் ஓங்கி ஓங்கி அடிப்பர்.இக் குணமுள்ள பிள்ளைகளிடம் முற்பாதுகாப்பு (proactive) கற்பித்தல் முறகளைக் கடைப்பிடிப்பது நல்லது.

ஓற்ரிசத்தால் மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு, பேச்சு, அல்லது வேறு வகையில் சூழ இருப்பவரிடம் தொடர்பு கொள்ள இயலாத நிலை ஏற்படுகிறது. இதனால் ஓற்ரிசம் குறித்த விவரங்களைச் சிறு வயதிலேயே கண்டுபிடித்தால், அந்தக் குழந்தையின் வாழ்வில் நல்ல பயிற்சியின் மூலம் மேம்பாட்டினைஏற்படுத்தலாம்.

படங்கள் மூலம் சொற்களைக் கற்பிக்கலாம்.(The pictures help develop word level vocabulary and early literacy skills. ) படங்களப் பயன்படுத்திக் கதைகள் சொல்லலாம். சிறுவயதில் மொழி அறிவைப் புகட்ட இது உதவும்.

அபிவிருத்தி அடைந்த நாடுகளான அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இவ்வாறு குறைபாடுள்ள பிள்ளைகளுக்கென "விசேட பள்ளிக்கூடங்கள்"(Special School") உண்டு். அங்கு விசேட பாடத்திட்டம் , கற்பித்தல் முறை பின்பற்றப்படுகின்றன. ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அவர்களின் ஊனத்திற்கு ஏற்ப "தனிப்பட்ட கல்விதிட்டம்" (Indiviualized Education Plan -IEP) ) ஆசிரியர் எழுதிப் படிப்பிக்க வேண்டும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இத்தைகைய குழந்தைகள் உள்ள பெற்றாருக்கு நிறைந்த பொறுமை வேண்டும். வளர வளர குழப்படி அதிகமாகும் .ஏதாவது செயலில் ஈடுபடுத்தி அவர்களை அமைதியாய் செய்யலாம். ஊரில் அதிகம் காணபடவில்லை .இங்கு நம் ஈழத்த்வரிடயும் காணபடுகிறார்கள்.

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்

எவ்வாறு ஒரு குழந்தை "தற்புனைவு ஆழ்வு" - பாதிக்கப்பட்டுள்ளதா இல்லையா என முன்கூட்டியே அறிவது:

Edited by akootha

இணைப்பிற்கு நன்றி அகூதா.

தமிழர்களிடம் இதனைப் பற்றிய விழிப்புணர்ச்சி குறைவாக உள்ளது. ஒட்டிசத்தைப் பற்றிய ஒரு பதிவு ஏற்கனவே உள்ளது. இரண்டையும் இணைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76362

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி அகூதா! :D

  • தொடங்கியவர்

குழந்தைகளின் வயதில் இரண்டுக்கு மேலே இருக்கும் போது, தற்புனைவு ஆழ்வு (ஓற்ரிசம் அல்லது ஆட்டிசம்) வாய்ப்புக்கள் குறைவு - ஆய்வு.

அமெரிக்கவில் 5 இலட்சம் குழந்தைகள் மத்தியில் நடத்திய ஆய்வில் வயதில் இரண்டுக்கு மேலே இருக்கும் போது, தற்புனைவு ஆழ்வு (ஓற்ரிசம் அல்லது ஆட்டிசம்) வாய்ப்புக்கள் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றுக்கு மேலே வயது வித்தியாசம் இருக்கும்போது தற்புனைவு ஆழ்வு (ஓற்ரிசம் அல்லது ஆட்டிசம்) தாக்கம் குறைவு என அறியப்படுகின்றது.

Close birth spacing may put a second-born child at higher risk for autism, suggests a preliminary study based on more than a half-million California children. Children born less than two years after their siblings were considerably more likely to have an autism diagnosis compared to those born after at least three years.

Closely Spaced Pregnancies Are Associated With Increased Odds of Autism in California Sibling Births

Conclusions These results suggest that children born after shorter intervals between pregnancies are at increased risk of developing autism; the highest risk was associated with pregnancies spaced <1 year apart.

ஆதாரம் - அமெரிக்க மருத்துவ சஞ்சிகை - குழந்தை வைத்தியதுறை (pediatrics)

http://pediatrics.aappublications.org/cgi/content/abstract/peds.2010-2371v1?ijkey=57edc792e132c18363b1721f965d741015fa2cce&keytype2=tf_ipsecsha

Edited by akootha

  • 1 year later...
  • தொடங்கியவர்

[size=5]புதிய ஆய்வு ஒன்றின் படி தாய்மாரின் வயது அல்ல தகப்பன்மார்களின் வயதுகளால் ஆட்டிசம் அதிகரிக்கின்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது[/size]

[size=6]Autism risk linked to father’s age in new study[/size]

[size=5]“Conventional wisdom has been to blame developmental disorders of children on the age of mothers,” said Kari Stefansson, chief executive of the private firm deCODE Genetics in Reykjavik, whose work was published in the journal Nature.[/size]

[size=6][size=5]“(But) our results all point to the possibility that as a man ages, the number of hereditary mutations in his sperm increases.”[/size][/size]

[size=6] [/size]

[size=6][size=5]He said this age-linked increase in mutations proportionally increased the chance a child might carry a harmful mutation that could lead to conditions like autism and schizophrenia.[/size][/size]

[size=6] [/size]

[size=6][size=5]“It is the age of fathers that appears to be the real culprit,” he added.[/size][/size]

[size=6]Among core features of the disorders are poor communication skills and difficulties with social engagement. In the United States, an estimated 1 in 88 children have autism, while in Europe the rate is thought to be around 1 in 100.[/size]

[size=3]http://www.thestar.com/news/world/article/1245523--autism-risk-linked-to-father-s-age-in-new-study[/size]

இதில் மேலும் எழுதியவற்றில் கவனிக்கத்தக்கது

"

“There are three billion of letters in the DNA code of humans and the numbers of mutations detected in this study are in the dozens,” he said.

Other studies in Iceland have shown that the risk of both schizophrenia and autism increases significantly with a father’s age at conception, and that men are having children later. The average age of Iceland fathers conceiving in 2011 was 33 years, up from 27.9 years in 1980."

  • 2 months later...
  • தொடங்கியவர்

[size=6]The Autism Project: In search of autism[/size]

[size=5]In this industry-driven, slick, modern city, the most ambitious scientific study to date on the genetic causes of autism is underway.[/size]

[size=4]

[size=5]The Chinese call it the 10 K Project.[/size][/size][size=4]

[size=5]It is unprecedented in scale and scope.[/size][/size][size=4]

[size=5]In two years, when it is complete, blood samples from 10,000 autistic children from around the world, including Canada, will have been pulled apart and analyzed in the hope of creating a definitive map of the genes responsible for autism.[/size][/size]

http://www.thestar.com/news/world/article/1285818--the-autism-project-in-search-of-autism

[size=5]http://www.thestar.com/news/world/autismproject[/size]

http://www.thestar.com/news/canada/article/1285628--the-autism-project-in-china-private-school-for-autistic-children-provides-hope

  • தொடங்கியவர்

[size=5]ஆட்டிசம் உள்ள பிள்ளைகளுக்கு ஐ.பாட். உதவக்கூடும். இதில் உள்ள ஒளிப்பதிவை பாருங்கள் .[/size]

http://www.thestar.com/videozone/1286225--autism-project-breaking-through

[size=5]For many young children, tablets technology means games and entertainment. For those with Autism Spectrum Disorder, iPads can be a conduit to the outside world. And they are transforming lives at the Beverley School.[/size]

[size=5]இன்னொரு அமெரிக்க பதிவு:[/size]

  • 2 months later...
  • தொடங்கியவர்

உனக்கேன் இவ்வளவு அக்கறை..
Posted on January 21, 2013 by யெஸ்.பாலபாரதி

 


ஆட்டிசம் தொடர்பான கட்டுரைகள் ஒரு தற்காலிக முடிவுக்கு வந்துவிட்டதாக நினைக்கிறேன். தொடர்ந்து ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வுக்காக எழுதிக்கொண்டிருப்பேன் என்றாலும் இதுவொரு கமா தான்.

 

//..உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.. //பராசக்தி படத்திற்காக கலைஞர் மு.கருணாநிதி எழுதிய வசனம்.

 

 

மேற்கண்ட வசனம் அப்படியே எங்களுக்கும் பொருந்தும். தொடர்ந்து எழுதிவரும் ஆட்டிசம் குறித்த கட்டுரைகளுக்குப் பின் ஓர் உண்மை இருக்கிறது. உங்களில் பலர் எங்களது கனி அப்டேட்ஸ் வகை பதிவுகளில் வரும் செய்திகளில் ஒரு வித்யாசத்தை உணர்ந்திருக்கலாம் – மூன்றரை வயதுக் குழந்தையைப் பற்றி வருகின்ற குறிப்புகள் போலில்லையே, ஒன்னரை வயதில் செய்யக் கூடிய விஷயங்களாக அல்லவா இருக்கிறது என்று நினைத்திருக்கலாம்.

 

ஆம், உங்கள் யூகம் சரியே. எங்கள் மகன் கனிவமுதனுக்கு ASD எனப்படும் ஆட்டிசத்தின் வகைகளில் ஒன்றான.. PDD என்று அறிந்த போது முதலில் மிகவும் துவண்டுதான் போனோம். விழுவதல்ல வாழ்க்கை, மீண்டும் எழுவதுதான் என்று பலரும் சொல்லிக்கேட்டிருப்பதால், ஆட்டிசம் குறித்து, தேடத்தொடங்கினோம். எளியதமிழில் ஆட்டிசம் குறித்த கட்டுரைகள் ஏதும் இங்கே சரியாக இல்லை என்று படவே, நாங்கள் படிப்பதையும், பார்ப்பதையும், உணர்வதையும் எழுதுவது என்று தீர்மானித்து செயல்படத்தொடங்கினோம்.


 

oneismine91.png
 

                                              இந்த கணக்கு நம்மூரில் வேறுபடலாம்.

 

கனிக்கு இப்பிரச்சனை இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்ட பின், சென்னை மட்டுமில்லாது, தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று பல ஆட்டிசக்குழந்தைகளையும், அவர்களின் பெற்றோரையும், பல தெரபி நிலையங்களையும் பார்த்துவந்தேன். பலரும் பகிர்ந்துகொண்ட அனுபவங்களை உள்வாங்கிய போது நிறைய விஷயங்களை உணர முடிந்தது. பலருக்கும் இப்படியான இன்னொருவரின் அனுபவங்கள் பாடமாக அமையும் என்ற எண்ணம் ஏற்பட்டபோது, ஆட்டிசம் குறித்த இக்கட்டுரைகளை எழுதத்தொடங்கவேண்டும் என்று தீர்மானித்தேன்.


 

இப்படி ஒரு முடிவு எடுத்த உடனேயே சரியென ஒப்புதல் கொடுத்து, தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கம் கொடுத்த என் மனைவி லக்ஷ்மியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவரின் தொடர் வற்புறுத்துதல் இல்லை என்றால்.. என்னை மாதிரியான ஒரு சோம்பேறி இவ்வளவு விசயங்களை எழுதி இருக்க முடியாது. தொடர்ந்து எழுதுவதை பகிர்ந்துகொண்ட இனைய நட்புகளுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

 

ஒன்னரை வயதிலேயே கனிக்கு இப்பிரச்சனை இருப்பதைக் கண்டுகொண்ட உடன், உடனடியாக செயலில் இறங்கினோம். தொடர்ந்து பலதரப்பட்ட பயிற்சிகளை கொடுத்து வருகிறோம். இப்போதும் பயிற்சிகள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. முன்னைக்கு இப்போது நல்ல முன்னேற்றங்களை அவனிடம் காணமுடிகிறது என்பது தெம்பூட்டும் நம்பிக்கை.


 

எங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தின் வாயிலாக தனிப்பட்ட முறையில் சுற்றுவட்டாரத்தில் சில குழந்தைகளுக்கு இப்பிரச்சனை இருப்பதை அறிந்து, வழிகாட்டி இருக்கிறோம். மேலும் ஆலோசனை கேட்டு கடிதங்கள் எழுதும் பல பெற்றோர்களுக்கும் உதவிக்கொண்டிருக்கிறேன். ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களில் அவா. ஆயிரம் பிட் நோட்டீஸ் அடித்து, விநியோகித்தோம். ஆனால்.. அது போதாது என்று தெரிந்த போது, சிறுநூலாக்கி கொண்டுவருவோம் என்ற எண்ணம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆட்டிசத்தின் பல்வேறு ஏரியாக்களையும் எழுத அதுவும் முக்கிய காரணமாயிற்று.

 

பொதுவாகவே ஏதேனும் ஒரு குறைபாடுள்ள குழந்தைகளும், அவர்களின் பெற்றோர்களும் அதிகம் வெறுப்பது – பரிதாபப் பார்வைகளைத்தான். குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சமவாய்ப்பை உருவாக்கித் தருவது என்பது மட்டுமே நாம் செய்ய வேண்டியது. ஆறுதலையும், பரிதாபத்தையும் அள்ளிச்சொரிவது அல்ல.


 

எனவே நண்பர்கள் யாரும் எனக்கு ஆறுதல் தரும் வார்த்தைகளையோ, சோக ஸ்மைலிகளையோ இங்கே இடவேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

உங்களால் ஆகக்கூடிய காரியம் ஒன்று உண்டெனில் அது, ஆட்டிசம் தொடர்பான கட்டுரைகளைத்தொகுத்து வைத்திருக்கும்,

http://blog.balabharathi.net/?page_id=25

 

இந்தச்சுட்டியை பகிர்ந்து, விழிப்புணர்வுக்கு துணைநிற்பதைத்தவிர வேறெதும் இருக்க முடியாது.


 

பகிருங்கள்! தொடர்ந்து ஆட்டிசம் விழிப்புணர்வுக்கு தோள்கொடுங்கள்!!

 

ஆட்டிசம் தொடர்பாக தொடர்ந்து இயங்குவயதற்கு ஊக்கமும் உதவிகளையும் செய்துவரும் நண்பர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லிக்கொள்கிறேன்.


 

தோழன்

பாலபாரதி

 

http://blog.balabharathi.net/?p=1328

 

  • 1 month later...
  • தொடங்கியவர்

ஆட்டிஸம் குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாத தமிழகச் சூழலில் ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கும் அவன் தந்தைக்குமான உறவையும் நெகிழ்ச்சியாக பதிவு செய்திருக்கும் படம் `ஹரிதாஸ்’.

 

 

419879_4471419869938_741528232_n.jpg

 

கொஞ்சம் சொதப்பியிருந்தாலும் பிரச்சாரம் செய்யும் ஒரு டாக்குமெண்ட்ரி படமாகியிருக்கக் கூடிய இந்தக் கதைக்களம் இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலனின் புத்திசாலித்தனத்தால் பிரமாதமாக வந்திருக்கிறது.

 

என்கவுண்டர் ஆபீஸராக வரும் கிஷோர் மற்றும் அவரது டீம் ஒரு கும்பலை போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போடுவதிலில் ஆரம்பித்து விறுவிறுப்பாகப் போகும் படம் சிறிது நேரத்திலே வேறு ஒரு கோணத்தில் பயணிக்கிறது.

 

 

என்கவுண்டர் பணியிலிருந்து விலகி ஆட்டிஸம் பாதித்த மகனை கவனித்துக்கொள்ள விரும்புகிறார் கிஷோர். அவர்களுக்கிடையிலான உறவையும், அதோடு என்கவுண்டரால் தொடர்ந்த ஒரு வில்லங்கத்தையும் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கிறது கதை.


ஆட்டிஸம் என்ற ஒரு கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து படமாக்கியதற்காகவே இயக்குனர் குமரவேலனையும், அதைத் துணிச்சலாகத் தயாரிக்க முன்வந்த டாக்டர்.ராமதாஸை (நம்ம மருத்துவர் ஐயா இல்லை.. இவர் வேற.. ) எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

 

ஆட்டிஸம் பாதித்த மகனாக வரும் பிருத்விரஜ், ஆட்டிஸம் பாதித்த குழந்தையாக உடல்மொழியில் பிரமாதமாக நடித்திருக்கிறான். படத்தில் அவனுக்கு ஒரே ஒரு வசனம் தான் இருக்கிறது.. அந்த வசனம் `அப்பா’.

முரட்டு போலீஸ்காரராகவும் பாசமான தந்தையாகவும் கிஷோர் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அதுவும் மழையில் நனைந்து கொண்டு நிற்கும் மகனை கட்டிப்பிடித்து அழும் காட்சியில் நெகிழ வைக்கிறார். அவருடன் வரும் என்கவுண்டர் டீம் நண்பர்களும் ஓகே.

 

டீச்சராக வரும் சினேகா அழகாக இருக்கிறார். கதாப்பாத்திரத்தை உணர்ந்து அலட்டலில்லாமல் நடித்திருக்கிறார்.

பரோட்டா சூரியிடம் லைட்டாக வடிவேவின் டயலாக் வாசனை அடித்தாலும் கொஞ்சம் கலகலப்பாக்குகிறார். டாக்டராக வரும் யூகிசேதுவின் ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளைப்பற்றிச் சமூகச்சாடல் கவுண்டர்களால் திரையரங்கு சிரிப்பால் அதிர்கிறது. விஜய் ஆண்டனியின் இசையும், ரத்னவேலுவின் ஒளிப்பதிவும் அழகு.

 

இடையில் கொஞ்சம் காணாமல் போன நண்பனை தேடுவது தொடர்பாக காட்சிகள் இல்லாமல் போனதும், தேவையில்லாமல் போலீஸ் காலனியில் ஒரு குத்துப்பாட்டு வைத்ததும் கொஞ்சம் சொதப்பல். ஹரிக்கு அம்மாவாக விரும்பு சினேகாவின் கோரிக்கைக்கு கிஷோர் கொடுக்கும் பதில் மிக அருமை.


பெரும்பாலும் அம்மா சென்டிமெண்டில் சிக்கியிருக்கும் தமிழ் சினிமாவில் பெருவாரியான இயக்குனர்கள் கண்டுக்கொள்ளாத அப்பா மகன் உறவுப் பற்றிய உணர்வுப்பூர்வமான படமாகவும், ஆட்டிஸம் பற்றிப் பிரச்சாரம் இல்லாத விழிப்புணர்வு படமாகவும், `ஹரிதாஸ்’ இருக்கிறது.

 

படம் பார்த்துவிட்டு ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர்கள் இயக்குனருக்கு மனதார நன்றி சொல்வார்கள். மற்றவர்கள் அந்தக் குழந்தைகளைப் புரிதலுடன் நடத்துவார்கள்.. அதுவே இயக்குனருக்கு கிடைக்கப்போகும் மிகப்பெரிய விருது. வாழ்த்துகள் குமரவேலன்.


அனைவரும் கண்டிப்பாகப் பார்க்கவும்.. :)

 

- Cartoonist Bala

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் இந்நோய் பற்றி சரியாக அறியாததால் இந்நோய் உள்ள தங்கள் பிள்ளைகளை
மர்ரவர்முன் கூட்டி வருவதற்கே கூச்சப்பட்டு, விருந்தினர் வரும்போது
அறைக்குள் அடைத்துவைக்கும் கொடுமை எல்லாம் கூட நடப்பதைப் பார்த்துள்ளேன்.
நன்றி அண்ணா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.