Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்டிசம் - Autism | 'பால் வேணும்' என்று கேட்கத் தெரியாமல் பக்கத்திலிருப்பவிரிடம் 'உங்களுக்குப் பசிக்குது பால் குடுங்கோ' என்றுதான் நர்மிதா சொல்வாள்

Featured Replies

ஆட்டிசம்

V விருது வெற்றியாளர் வைத்தியர் திரு சின்னையா தேவானந்தன்

வீட்டில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் நம்மில் பலர் குழந்தைகளைப் பார்த்தவுடன் மனச்சுமை எல்லாவற்றையும் மறந்து குழந்தையோடு குழந்தையாகி விளையாடும்போது மனம் எவ்வளவு லேசாகி விடுகிறது. “யாழினிது குழலினிது என்பர் மழலை மொழி கேளாதோர்” என்று சும்மாவா பாடி வைத்தார்கள்?

ராசன் சுஜா தம்பதிகள் குழந்தைச் செல்வம் வேண்டுமென்று தவமிருந்து பெற்ற பிள்ளை தான் நர்மிதா. எல்லாப் பெற்றோரைப் போலவும் தங்கள் குழந்தையின் ஒவ்வொரு சிறிய வளர்ச்சியையும் பார்த்துப் பார்த்துப் பூரித்துக்கொண்டிருந்தவர்களுக்கு எப்போது தம்பிள்ளை தங்களைப் பார்த்துச் சிரிப்பாள், தூக்கச் சொல்லிச் சிணுங்குவாள, தவழ்ந்து வந்து செல்லக் குறும்புகள செய்து தங்களைச் சிரிக்க வைப்பாள் என்ற எதிர்பார்ப்பெல்லாம் நாளடைவில் ஏக்கமாக மாறத் தொடங்கி விட்டன. ஏனென்றால் நர்மிதா மற்றக் குழந்தைகளைப் போல ஐந்து ஆறு மாதத்திலேயே பெற்றோரினதும் மற்றோரினதும் முகம் பார்த்துச் சிரிக்கவில்லை. கார்ட்டூன் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கவில்லை எவற்றிலுமே ஒரு பிடிப்பில்லாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பாள். காச்சலோ தடிமனோ வந்தால் கூட தன்னைத் தேற்ற யாரும் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு சிறிதுமற்று இருப்பாள். பேச்சுத்திறன் கூட மிகவும் மட்டுப் படுத்தப் பட்டதாகவே இருந்தது. உதாரணமாக தனக்குப் பசிக்குது "பால் வேணும்" என்று கேட்கத் தெரியாமல் பக்கத்திலிருப்பவிரிடம் "உங்களுக்குப் பசிக்குது பால் குடுங்கோ" என்றுதான் நர்மிதா சொல்வாள்.

தங்களுடைய குழந்தை வளர்ச்சி மற்றைய குழந்தைகளைப் போலில்லாதிருப்பதால் வைத்தியரிடம் அழைத்துச் சென்றபோது நர்மிதாவுக்கு ஆட்டிசம் என்ற மூளைவளர்ச்சிக்குறைபாடு நோய் இருப்பதாக சொல்லிவிட்டார் வைத்தியர்.

உலகில் வாழும் குழந்தைகளில் 1 : 2500 என்ற விகிதத்தில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வாழ்கிறார்கள். அன்பு செலுத்துவோரிடத்தில் திரும்ப அன்பு செலுத்தும் தன்மையற்ற சமூகத்தோடு ஒன்றி வாழும் தன்மையற்ற பேச்சுத்திறன் குறைவாகவோ அல்லது முழமையாக இழந்த கற்பனா சக்தி சிறிதுமற்ற இந்த ஆட்டிசம் குழந்தைகளைப் பற்றி முதன் முதலில் தெரிந்து 1943 ல் வெளியுலகத்திற்கு சொன்னவர் Dr.Kanner.

பெண் குழந்தைகளை விட மூன்று மடங்கு அதிகமாக ஆண் குழந்தைகளைத் தாக்குகிறது இந்த ஆட்டிசம். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட அநேகமான குழந்தைகளைப் பார்த்தால் தங்களைப் பராமரிப்பவர்களை விட தங்களைச் சுற்றி இருக்கும் சடப்பொருட்கள் மீதே பாசமாக இருப்பார்கள். எந்நேரமும் ஏதாவது பொருளை எடுத்து வைத்து அதன் அளவு, வடிவம், தன்மை பற்றியே ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள். தாம் நேசிக்கின்ற பொருளைக் காணாவிட்டால் மூர்க்கமாகிப் பக்கத்திலிருப்பவரைத் தாக்கும் குழந்தைகளுமுண்டு. சில குழந்தைகள் கையால் தரையைப் பிறாண்டுவார்கள் தரையில் கையால் குத்துவார்கள் தலையை ஆட்டி ஆட்டி வித்தியாசமான சத்தம் போடுவார்கள். இந்த ஆட்டிசம் குழந்தைகளிடம் சில அதீத சக்தி இருக்கும். உதாரணமாக மூன்று நான்கு இலக்க எண்களைக் கூட இலகுவாகப் பெருக்கிச்சொல்வார்கள்.

ஆட்டிசத்திற்குரிய காரணமாக Dr.Kanner சொன்னது மரபியல் காரணங்களாகும். ஆனால் அவருக்கு பின்பு வந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் பெற்றோர்களின் சரியான கவனிப்பின்மையால்தான் குழந்தைகளுக்கு இந்த பரிதாப நிலையென்றார்கள். தற்போதுள்ள நிபுணர்கள் பெற்றோர்கள் நிந்திக்கப்பட வேண்டியவர்கள் அல்ல பதிலாக அன்பும் உதவியும் தேவைப்படுபவர்கள் என்கிறார்கள்.

இந்த ஆட்டிசத்திற்கான முக்கியமான ஒரு காரணம் மரபணுக்களாகும். ஓரு குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் இருக்கென்றால் அந்தக்குழந்தையின் சகோதரர்களில் ஒருவருக்கோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவருக்கோ ஆட்டிசம் இருப்பதற்கான சாத்தியக்கூறு 3 % ஆகும். அதனால்தான் ஆட்டிசம் குழந்தையுள்ள பெற்றோர்களில் சிலர் தொடர்ந்து குழந்தை பெற்றுக்கொள்வதை விரும்புவதில்லைப் போலும். ஓரே கரு முட்டையிலிருந்து பிறந்து இரட்டைக்குழந்தைகளில் ஒருவருக்கு ஆட்டிசம் இருந்தால் மற்றக்குழந்தைக்கும் ஆட்டிசம் இருப்பதற்கான சாத்தியக்கூறு 75% ஆகும். எமதுடம்பிலுள்ள 23 சோடி நிறமூர்த்தங்களில் ஆட்டிசத்தோடு தொடர்புடைய நிறமூர்த்தங்கள் 2, 7, 15, மற்றும் X நிறமூர்த்தங்கள் என்று Folstein & Roseb என்ற ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

குழந்தைக்கு கருவிலோயோ அல்லது பிறந்த உடனேயே கொடுக்கப்படும் றுபெல்லா தலிடோமைட் போன்ற மருந்துகளால் ஏற்படும் பின்விளைவுதான் ஆட்டிசம் எனச் சில நிபுணர்கள் கூறுகிறார்கள். உதாரணமாக 1960 களில் கர்ப்பிணிப்பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட தலிடோமைட் என்ற மருந்து அக்கர்ப்பிணிப்பெண்களின் குழந்தைகளின் மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதித்ததும் நாளடைவில் அக்குழந்தைகள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை MRI பரிசோதனைக்குட்படுத்தியபோது சாதாரண குழந்தைகளின் மூளையை விட ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மூளையின் அளவு பெரிதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆட்டிசம் குழந்தைகள் பிறக்கும்போது அவர்களின் மூளை அளவு சாதாரணமாகத்தானிருக்கும் ஆனால் இரண்டு வயதுக்குப்பிறகு மூளையின் முக்கிய பகுதியான Cerebellum என்ற பகுதியிலுள்ள white matter மற்றும் cerebral hemispheres இல் உள்ள Grey matterன் அளவும் அதிகரிக்கிறது. அதேபோல cerebellar cortex லுள்ள ஒருவித நரம்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 31 வீதம் குறைகிறது. எங்களுடைய அசைவுகளை நிர்ணயிக்கும் Cerebellum பகுதியில் ஏற்படும் மாற்றங்களும் ஆட்டிசத்திற்குரிய காரணமாகும் என நிபுணர்கள் கண்டுபிடித்திருந்தாலும் குறிப்பாக மூளையிலுள்ள குறைபாடுகளுக்கும் ஆட்டிசக் குழந்தைகள் வெளிப்படுத்தும் ஒவ்வொரு அறிகுறிகளுக்கும் இடையேயான தொடர்பு இன்னமும் தெளிவாக அறியப்படவில்லை.

அநேகமான மூளை சம்பந்தப்பட்ட நரம்பு சம்பந்தப்பட்ட வருத்தங்களுக்கு நிரந்தரமான தீர்வு இல்லாதது போலவே ஆட்டிசத்துக்கும் நிரந்தரமான தீர்வு இல்லை.ஆனால் குழந்தையின் வளர்ச்சியில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய பேர்ஸனல் ரியுட்டர் போன்றோரை வைத்து முறையான பயிற்சி கொடுத்து வந்தால் நாளடைவில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் முன்னேற்றம் காணலாம் .நான் ஏற்கனவே சொன்னதுபோல சில குழந்தைகளிடம் உள்ள அபார சக்தியை வளர உதவி செய்தால் அந்தக் குழந்தைகளாலும் சாதனை படைக்கலாம்.

தகவல் மூலம்: தத்தக்க பித்தக்க | சினேகிதி, நன்றி.

ஓட்டிசம் பற்றியது.இங்கு எமது பிள்ளைகளுக்கு பலருக்கு இந்த பிரச்சனை இருக்கின்றது.பிள்ளை தோற்றத்தில் சாதாரணமாகவே இருப்பார்கள் அவர்களின் மூளை கொஞ்சம் பின் தங்கியதாகவே இருக்கும்.அந்த பிரச்சனையை பெற்றோர் உணர்ந்து அதை ஏற்றுக்கொள்ளும் பாக்குவம் வந்து பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.பிரச்சனை தெரியாமல் பிள்ளைகளை போட்டு திட்டித்தீர்ப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை..ஓட்டிசம் வைத்தியத்தால் குணமடைய வைக்க முடியாதது.

அர்ஜுன் கூறிய 'ஒட்டிசம்' பல குழந்தைகளுக்கு உண்டு. ஆனால் இந்த குறைபாடு ஒருத்தருகொருத்தர் வேறுபடும். பிறப்பிலேயே இப்படி வருகிறது. சில குழந்தைகளுக்கு MMR (Measles, mumps and rubella vaccination) தடுப்பூசி போடுவதாலும் வருவதாக ஒரு வதந்தி உண்டு. பிரித்தானியாவில் இதற்காக ஒரு வழக்கு நடந்தது. எனக்கு நெருங்கிய ஒரு சிறுவனுக்கு இது உண்டு. அவனுக்கு 11 வயது. சில வேலை நாங்கள் கூறுவதையே திரும்பக் கூறுவான் (Ecolalia ). இந்தப் பழக்கம் நன்றாக குறைந்து விட்டது. ஒரு விஷயத்தை தொடர்ச்சியாக அவதானிக்க மாட்டான். ஆனால் இவனிடம் ஒரு தனித் திறமை உண்டு. வருடத்தின் திகதியைச் சொன்னால் உடனடியாக அதன் கிழமையை கூறுவான். அத்துடன் Raw Maths (பெருக்குதல் பிரித்தல்) நன்றாக வரும். பெரியவர்களை விட விரைவாகச் செய்வான். இதை பற்றி யாருக்கும் தெரியுமா?

ஒட்டிசம் என்பது பல் வேறு நடத்தைகளை வெளிக்காட்டக் கூடிய ஒரு நரம்பியல் குறைபாடு. சில ஒட்டிசம் உள்ள நபர்கள் அபரிமிதமான திறமைகள் ஒன்றை அல்லது பலவற்றைக் கொண்டிருப்பது இந்தக் குறைபாடு கண்டுபிடிக்கப் பட்ட காலத்திலிருந்தே ஆவணப் படுத்தப் பட்டிருக்கு. அஸ்பேர்கர் சின்ட்றோம் (Asperger syndrome) என்பது இப்படி அபரிமித திறமை வெளிப்படும் ஒட்டிச வகை. அண்மையில் அஸ்பேர்கர் சின்ட்றோம் உடைய ஒரு பிரிட்டிஷ் இளைஞன் அமெரிக்காவின் கணணி வலையமைப்புகளைச் சீர்குலைத்த ஒரு அதி புத்திசாலியாக அடையாளம் காணப்பட்ட செய்திகள் பத்திரிகைகளில் வந்தன. என்ன தான் தனித் திறமை இருந்தாலும் சமூகத்தில் மற்றவர்களுடன் உறவாட இயலாமை காரணமாக இந்த வகை ஒட்டிசம் கொண்டவர்கள் சாதாரண வாழ்க்கை வாழ இயலாமல் போகிறது.

எல்லா Autism நிலைகளும் ஓரளவினதல்ல. குழந்தையாக இருக்கும் போது பல குழந்தைகளில் இவை வெளிப்படுத்தப்படுவதில்லை. அவர்கள் வளர்ந்து ஒரு இரண்டு மூன்று வயதை அடையும் போதே இது பெரிதும் தோன்ற ஆரம்பிக்கும். அல்லது பெற்றோரால் உணரப்பட ஆரம்பிக்கும். அப்போது பெற்றோர் அக்குழந்தைகள் மீது அன்பும் கவனமும் அதிகம் செலுத்த வேண்டும். இது மூளை சம்பந்தப்பட்ட ஒரு மரபணு சார்ந்த நிலை ஆகும். இந்த நிலைக்கு குழந்தைகளை குறை சொல்லக் கூடாது.

குழந்தையாக இருக்கும் போது அப்பா அம்மா சொன்ன குழந்தை திடீர் என்று அதை நிறுத்தும். கைகளை தட்டி ஓசை எழுப்பும். தலையை உடலை சுற்றி மகிழும். ஒரே விடயத்தை திரும்ப திரும்ப செய்ய முற்படும்.

சாதகம் பார்த்து திருமணம் செய்யும் நம்மவர்கள் அதில் வைக்கும் நம்பிக்கையை விட.. இரத்தப் பரிசோதனை.. மரபணு பரிசோதனைகள் செய்து அவற்றின் அடிப்படையில் திருமணம் செய்து கொண்டால்.. இப்படியான குழந்தைகளை உருவாக்கும் வாய்ப்பை வெகுவாகக் குறைக்கலாம். இதுகளைச் சொன்னா.. உவர் பெரிய விஞ்ஞானி என்று சொல்லி தட்டிக்கழிக்கும் சமூகத்தில் இருந்து கொண்டு நல்லதை சொல்லவோ செய்விக்கவோ வாய்ப்புக் குறைவாகவே உள்ளது. ஏன் மேற்குநாடுகளில் வாழும் நம்மவர்கள் ([பெற்றோர்கள்) மரபணு பரிசோதனைக்கு இணங்குவதையே செய்ய பயப்படுகின்றனர்.

மேலும்.. Autism spectrum என்று அதில் பல அளவீட்டு நிலைகள் உள்ளன. பிள்ளைகளை தொடர்ச்சியாக பல மூளை பயிற்சி செயற்பாடுகளுக்கு உட்படுத்தி அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று கண்டறியலாம். அதற்கேற்ப அவர்களுக்கு பாடசாலைகளில் கல்வி மற்றும் வாழ்க்கைத் தேவைக்கான சிறப்பு வசதிகள் பயிற்சிகள் அளிக்கக் கோரலாம். மேற்கு நாடுகளில் அரசாங்கங்கள் இவ்வாறான குழந்தைகளுக்கு முழு அளவிலான உதவிகள் வழங்குவதுடன் பெற்றோருக்கு disability living allowance என்று வாராந்தம் பண உதவித்தொகையும் அளிக்கின்றன.

Autism குறிப்பாக Mild (குறைந்த நிலை) நிலையில் உள்ளவர்களின் அந்த நிலையில் இருந்து முற்றாக வெளிவர வாய்ப்பு இருக்கிறது. மூளையின் செயற்பாட்டை பயிற்சிகள் மூலம் வழமை நிலைக்கு உயர்த்துவது இதில் அடங்குகிறது.

தற்போது gene therapy மூலம் இதனை குணப்படுத்தும் ஆராய்ச்சிகள் வெற்றி கண்டுள்ளன. இருந்தும் இன்னும் சில காலத்தின் பின்னே தான் அவை மேற்குநாடுகளில் வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படலாம்.

குழந்தையாய் இருக்கும் பொழுது நான் முன்னைய பதிவில் கூறிய சிறுவனிடம் வித்தியாசம் ஏதும் தெரியவில்லை. 3 வயதிலேயே இசைப் பெட்டியில் (Multi CD Stereo) தனக்கு விரும்பிய பாடலை தெரிவு செய்து போடுவான். கை தட்டுவது, ஆடிக்கொண்டிருப்பது (Rocking ), மற்றவர்களைப் பார்த்து பிரதி பண்ணுவது போன்ற பழக்க வழக்கங்கள் நீண்டகாலமாய் இருந்தது. இப்பொழுது நன்றாக குறைந்து விட்டது. 9 வயது வரை பேச்சு அவ்வளவாக வரவில்லை. இப்பொழுது நன்றாக கதைக்கிறான். தமிழில் மிக ஆர்வம். தமிழ் சஞ்சிகைகளைப் பார்த்து எழுதிப் பழகுவான். ஒவ்வொரு ஆங்கில சொல்லுக்கும் தமிழ் கருத்துக் கேட்பான். அவனுடைய நிலையில் முன்னேற்றம் தெரிவதாகத்தான் நினைக்கிறேன். தாய் தந்தையரின் ஒத்துழைப்பு நிறைய உண்டு. பாடசாலையில் பாடங்களில் உதவுவதற்கு உதவியாளர் உண்டு.

மற்றைய குறைபாடுகள் போல ஒட்டிசம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் மத்தியில் இக்குறைபாடு அதிகம் உள்ளது என்பது எனது தனிப்பட்ட கணிப்பு. அறிவயல் காரணம் தெரியவில்லை. புலம்பெயர் தமிழர் மத்தியில் இதனைப் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

நான் இக்குறைபாடு உள்ளவர்களை இலங்கையில் காணவில்லை. சிலவேளை அங்குள்ள வாழ்க்கை முறைகளில் குழந்தை வளர வளர இக்குறைபாடு மெல்ல மெல்ல குணமாகிறதோ தெரியாது.

நெடுக்ஸ் கூறியபடி எதிகால சந்ததினரின் நலன் கருதி திருமணத்தின் முன் 'மரபணு பொருத்தம்' பார்ப்பது அவசியம். இன்றுள்ள அறிவயல் வளர்ச்சியை எங்களின் தேவைகளுக்கு பாவிக்க வேண்டும்.

எனது உறவுகளிலேயே ஒருவர் இருக்கின்றார்.இப்போ வயது 20.பிறந்ததிலே இருந்து எமது கண்முன் வளர்ந்துவருபவர்.மிகவும் அழகான் சிறுவனாக இருந்தார்.8 மாதமளவில் கதை துப்பரவிற்கு இல்லை என்று குடும்ப வைத்தியரிடம் போனார்கள்.ஒரு தமிழ் பெண் வைத்தியர் ஆண்பிள்ளகள் கொஞ்சம் பிந்தித்தான் கதைப்பார்கள் என்று ஆறுதல் சொல்லி அனுப்பிவிட்டா.பின்னர் ஒரு 3,4 மாதங்களின் பின் அவர்கள்திரும்ப வைத்தியரிடம் போக உள்நாக்கை கொஞ்சம் வெட்டினால் சரியென்று அதையும் செய்தார்கள்.பின் 2 வயது வரை பெரிதாக கதையில்லை ஆனால் அம்மா,அப்பா என ஓரிரு வார்த்தைகள் பேசுவார்.டே கெயருக்கு போகத்தொடங்க அங்கு இவர் ஒருவருடனும் சேருவதில்லை தனியே ஏதோ சத்தம் போட்டபடியே இருக்கின்றார் என சொன்னார்கள்.பின் அவர்களாகவே மொழிபழக்குபவரென ஒருவரை நியமித்து தனிக்கவனம் செலுத்தினார்கள்.இருந்தும் அவர் பேசுவதுதாமதமாகவே இருந்து வந்தது.வேறொரு உறவினரின் ஆலோசனையின் பெயரில் டவுன்ரவுணில் ஒரு மூன்றுமாதங்கள் சத்தம் தான் அவரது பிரச்சனையென்று ஒரு $4000 செலவழித்து ஒரு சிகிச்சை கொடுத்தார்கள்.அந்த சிகிச்சை இவர் தாயின் வயிற்றில் இருக்கும் போது முழுமையாக சத்தங்களி உணரவில்லை என்று அதே சத்தத்தை டேப் பண்ணி இவருக்கு இயர் போன் மூலம் கேட்கப் பண்ணுவார்கள்.பிள்ளை ஊஞ்சலில் ஆடியபடியே ஒவ்வொரு நாளும் 3 மணித்தியாலம் இந்த சத்தத்தை கேட்ட வேண்டும்.அந்த சிகிச்சை வேலை செய்ததோ இல்லையோ என அந்தப் பெற்றோருக்கு இன்றுவரை சரியாகசொல்லமுடியவில்லை.ஆனால் அவர் சும்மா சத்தம் போடுவது கொஞ்சம் குறைததாக சொல்வார்கள்.

பின்னர் அவர் பாடசாலை போக ஆரம்பிக்கும் போது தான் பெரிய பிரச்சனை தொடங்கியது.அவர் போக வேண்டிய பாடசாலையில் இருந்து ஒரு கடிதம் வந்தது உமது மகன் வேறு ஒரு பாடசாலைக்கு கல்வி திணைகளத்தால் சிபார்சு செய்யப்படுகின்றாரென்று.

அந்த பாடசாலை குறைபாடுகள் உள்ளவர்களுக்கான பாடசாலை.ஆனால் எல்லோரும் ஒரே குறைபாடுகளுள்ளவர்களல்ல.இதனால் வேறுபல பிரச்சனைகள் அவர்களுக்கு உருவாகத்தொடங்கிவிட்டது.அங்கு இருக்கும் பலவிதமான குறைபாடுள்ளவர்களையும் பார்த்து இவர்கள் பிள்ளை இமிடேட் பண்ண தொடங்கிவிட்டது கல்வித்திணைக்களத்துடன் அவர்கள் எவ்வளோ வாதாடியும் அவர்களால் ஒன்று செய்ய முடியவில்லை.ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு பாடசாலைகளுக்கு 5ஆம் வகுப்புவரை போனார்.அவர்கள்போகாத ஸ்பெசலிட்டுகள் இல்லை.பிரச்சனை ஒன்றென்றாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி தீர்வு சொன்னார்கள்.ஆனால் பலர் இவருக்கு இருப்பது ஓட்டிசம், கைப்பர் அல்ல எனவே றிடிலின் என்ற பிள்ளைகளை அமைதியாக்கி ஒருமனதாக்கும் மருந்தை கொடுக்க வேண்டாம் என்றார்கள்.காரணம் வளர்ந்தபின் பக்க விளைவுகள் ஏதும் வரலாம் அல்லது ஆயுள்முழுக்க எடுக்க வேண்டிவரலாம்.சாதரணபிள்ளைகளுடன் பெரிதாக பழகாததால் பிள்ளை ஒரு மாறுபட்ட குணாம்சங்களுடன் இருந்தது.டீ.வீ நிகழ்சிகள்,படங்கள் பார்த்தால் அந்த நடிகர்களி அப்படியே கொப்பி பண்ணித்தான் கதைக்கும்.தனியா எந்த நேரமும் ஏதோ கதைத்தபடி.

5ஆம் வகுப்பு வர இனியும் தாமதித்தால் ஆபத்து என உணர்ந்த பெற்றோர் தனியார் பாடசாலைகளில் படிப்பிக்க முயற்சி எடுத்து பலரால் நிராகரிக்கப் பட்ட நிலையில் ஓரிடத்தில் அனுமதி கிடைத்தது.இவ்வளவிற்கு கணிதமும்,விஞானமும் அவரின் வகுப்பிற்கேற்ப பழைய பாடசாலைகளில் படிப்பிற்கப் படவில்லை.முதல் வருடம் மிகவும் கஸ்டப் பட்ட அந்தப்பிள்ளை மெதுவாக முன்னேறத்தொடங்கினார்.பழக்க வழக்கங்களும் மெதுவாக மாறத்தொடங்கியது.இருந்தும் தன்னில் இருக்கும் குறைபாட்டை உணரும் நிலை வந்ததால் குறிப்பிட்ட ஒரு வட்டத்திற்குள்ளேயே வாழ்ப் பழகி 10 வகுப்பு வர திரும்ப பப்ளிக் பாடசாலைக்கு போகத்தொடங்கியது தொடரும்.

Edited by கரும்பு

தனியாக திரி திறந்து பயனுள்ள, பாதுக்காக்க வேண்டிய திரியாக்கியதற்கு நன்றி முரளி

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டிசம் என்பது பரம்பரையாக வருமா?...அல்லது நெருங்கிய சொந்தத்தில் திருமணம் முடித்தால் வருமா?...ஒரு குடும்பத்தில் இரு பிள்ளைகள் இருந்தால் இரண்டாவது பிள்ளைக்கு ஆட்டிசம் இருந்தால் அந்த மூத்த பிள்ளை திருமணம் முடித்து அவருக்கு பிள்ளை பிறந்தால் அந்த பிள்ளைக்கு ஆட்டிசம் வரும் வாய்ப்புகள் உண்டா?

ஓட்டிசத்தை பற்றி எழுதாமல் அது ஓட்டிசம் உள்ளநபரின் வாழ்க்கையை எழுத தொடங்கிவிட்டேன்.முடித்துவிடுகின்றேன்

10 வகுப்பில் மிகவும் சிரமப்பட்டு படிப்படியாக முன்னேறி ஒருவருடம் தாமதாமாக இப்போ யோக் யோக் யுனிவெசிடியில் பிசினஸ் படிப்பொன்று படிக்கின்றார்.

இதை நான் எழுதியதற்கு காரணம்.

1.குடும்ப வைத்தியர் முதலிலேயே ஓட்டிசமாக இருக்கலாமோ என பெற்றோருக்கு ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.

2.கல்வி திணைக்களம் இப்படி ஆயிரம் பேரை பார்த்திருப்பார்கள்.அவார்களால் தனிப்பட ஒவ்வொருவரின் பிரச்சனைகளும் ஆராய முடியாது.எனவே பல வேறு பிரச்சனைகள் உள்ள எல்லோரையும் ஒரே இடத்திலே தள்ளிவிடுவார்கள்.

3.அவர்களாக முடிவு எடுத்து 5ஆம் வகுப்பில் தனியார் பள்ளிக்கு அந்த பிள்ளை போயிருக்காவிட்டால் பிள்ளை இன்று இந்த நிலமைக்கு வந்திருக்க மாட்டாது.ஆனால் அது எல்லோராலும் சாத்தியமும் ஆகாது.தனியார் பாடசாலை வருடத்திற்கு $25,000 வரை முடியும்.

ஓட்டிசத்தின் தன்மையும் பாதிப்புகளும் வெவ்வேறு அளவுகளில் இருப்பதால் மேலே நான் சொன்னவை எல்லோரூக்கும் பொருந்தும் என்றில்லை.ஆனால் தங்களது பிள்ளைகளில் தாங்களே தனிக்கவனம் எடுக்கவேண்டும் என்பது நூற்றுக்கு நூறு கண்கூடாக கண்ட உண்மை.

இப்பவும் அவர் தனிய பெரிய சத்தமாக தனது அறையில் இருந்து கதைத்துக்கொண்டிருப்பார்.

டொரொன்டோவில் மிகவும் பிரபலம் வாய்ந்த பீடீயோட்டிசன். டொக்டர் உமேஸ் ரயார்.இவர் ஒரு இலங்கை தமிழர்

இக்குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பாடங்களில் உதவி செய்ய தனி உதவியாளர் தேவை என்பதால்அரச பாடசாலைகள் (Main Stream School ) இவர்களை விசேட பாடசாலைகளுக்கு (Special Needs) அனுப்பவே விரும்புகிறார்கள். அங்கு வேறு பிரச்சனைகள் உள்ள பிள்ளைகளும் இருப்பதால் இவர்களின் வளர்ச்சிக்கான வசதிகள் குறைவாகவே இருக்கின்றன. போதாததற்கு மற்ற பிள்ளைகளின் கெட்ட பழக்கங்களையும் பழகுகிறார்கள். இதனால் ஒட்டிசம் குறைபாடு குறைவாக உள்ள குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள்.

பெற்றோர்களுக்கு உதவுவதற்கெனவே இங்கு உதவி நிறுவனங்கள் உள்ளன. பாடசாலை நிர்வாகத்திடம் பேசும் முன் இவர்களை தொடர்புகொண்டால் தேவையான ஆலோசனைகளை வழங்கி பாடசாலை / உள்ளூராட்சி சபை (Council) பெற்றோர்களுடன் நடத்தும் கூட்டங்களிலும் உடனிருந்து உதவிகள் வழங்குவார்கள். தனியார் பாடசாலைக்கு அனுப்ப முடியாதவர்கள் இந்த முறையை பின்பற்றலாம்.

உதவி நிறுவனம் ஒன்றின் இணைப்பு.

http://www.kids.org.uk/

அமெரிக்க நிறுவனம் ஒன்று ஒட்டிசம் உள்ளவர்களின் (வயது வித்தியாசமின்றி) பெற்றோருக்கு பிள்ளைகளை எப்படி வளர்ப்பதென்று பயிற்சி வழங்குகிறார்கள். பிரித்தானியாவிலும் தொடங்கியுள்ளார்கள். இது நல்ல பலனை கொடுப்பதாக சிலர் கூறுகிறார்கள். முன்பு பிபிசி இணையத்திலும் வாசித்தேன்.

http://www.autismtreatmentcenter.org/

ஆரம்பத்திலேயே இக்குறைபாட்டை அடையாளம் கண்டு, ஒட்டிசத்தின் முழு வீச்சிலிருந்து கூடுமானவரை பிள்ளையை மீட்டெடுப்பது பெற்றோர்களிலே தங்கியுள்ளது.

.தனியார் பாடசாலை வருடத்திற்கு $25,000 வரை முடியும்.

இத்தனியார் பாடசாலை ஓட்டிசத்திற்கான விசேட பாடசாலையா?(Special School) அல்லது சாதாரண தனியார் பாடசாலையா?

Edited by thappili

  • 2 weeks later...

Scientists make autism breakthrough

In “a culmination of decades of cognitive behavioural work,” scientists have found the connection between an autism-risk gene and the part of the brain linked to autism.

“We believe we’re the first to look at a system-wide network in association with a gene,” Dr. Ashley Scott-Van Zeeland told the Star Wednesday. “This study provides that link.”

Discovering the link started with genetic variations in CNTNAP2 (fondly called “catnap2” by scientists), which have been associated with autism, specific language impairment and other neurological disorders.

“Everyone has two copies of the gene. Even if you just carry one copy of the version that is at risk for autism, it shows up in what the middle frontal part of the brain is hooked up to.”

The frontal lobes are responsible for “higher-order cognitive functions” such as decision-making, cognitive control and abstraction, as well as speech and language.

The brain mappings for children with the “risk variant” of CNTNAP2 genes, showed up as a stronger left connectivity in the frontal lobes and weaker long-range connections in the back of the brain.

“We tested to see if they are truly different,” said Scott-Van Zeeland. “The risk carriers have this over-connectivity in the front and reduced in the back.”

When that statistical evidence unfolded on her computer screen, said Scott-Van Zeeland, “I ran around the lab screaming, Eureka!’”

The celebration continues this weekend, she said, following Wednesday’s publication in Science Translational Medicine.

“It’s really exciting. Now we have the tools to look into the genome and to look into the brain. We can actually run this experiment. We’re a whole lot closer than we were” at finding the cause for or fixing autism.

Dr. Stephen Scherer, director of the Centre for Applied Genomics at Toronto’s Hospital for Sick Children, co-wrote the groundbreaking report in June that revealed autism is likely to have hundreds of genetic risk factors.

“From my perspective the data look interesting,” he said of the new study. “But I am not yet convinced the common variant they are testing is actually an autism-risk variant, so while this finding might support that it is, the argument is also somewhat circular.”

Scott-Van Zeeland cautioned that having the risk variant of the gene and the different brain wiring doesn’t mean a child will develop autism in its many forms. Other genetic and environmental factors are still required, she said.

What it does mean is that “very early therapies” such as intensive language training could rewire a young, malleable brain into a “more normal” one, she said.

The risk gene showed up in the brain scans as a frontal lobe over-connected to itself and connected differently to the rest of the brain.

Because of that, the frontal lobe “talks to itself” more than it talks to the rest of the brain. The left side of the brain is associated with language and in children with no risk variants of the gene, the frontal lobe was hooked up to the left side. In risk-variant children, it was hooked to both sides.

“The next step is to find out at what point this difference is detectable,” said Scott-Van Zeeland.

Since many of children tested were healthy, science still has to learn if the risk variant gene translates into more difficulty acquiring language, even within the “normal” range, for kids who develop normally.

Researchers first examined 32 children, 16 developing normally and 16 with autism. To test their initial findings, they examined another 39 healthy children, 10 with no risk variants of CNTNAP2 and 29 with one or both genes at risk.

www.parentcentral.ca

  • 1 year later...

'ஒட்டிசம்' தொடர்பான மற்றைய திரிகளின் இணைப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=80066&hl=autism&fromsearch=1

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100342&hl=

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101048&pid=751510&st=20&#entry751510

  • கருத்துக்கள உறவுகள்

brain-structures-autism.gif

ஆட்டிசம்.. பிறப்புரிமையியல் சார்ந்த ஒரு நிலையாகும் (disorder). இது நோய் (disease) அல்ல..! ஆட்டிசம் உள்ளவர்களின் மூளைச் செயற்பாட்டில் ஏற்படும் திடீர் மாற்றங்களே அவர்களின் இந்த நிலைக்குக் காரணம்.

diagram_spectrum.jpg

(This diagram as developed by Daniel Rosenn, M.D. (1997) shows autism as a spectrum disorder with different levels of severity and presentation. Considering autism as a continuum of its own may help solve the problems of defining and classifying people who are within the autism spectrum. The cluster of circles at the Severe-Kanner’s end of the graphic depict the relative ease of diagnosing autism in a person when she is at this end of the spectrum. Towards the moderate area, the presentation of autism becomes more varied as indicated by the introduction of different shapes such as the square and the triangle. The high-functioning-Asperger (HFA/AS) portion of this syndrome has the greatest diversity in shapes because the variation in presentation along with the number of people with autism in this area is the greatest. At the extreme right, those with autism blend into the general population. This autism spectrum severity wedge diagram shows that it is impossible to state unequivocally that a person with autism must have a particular trait or cannot have another trait.)

ஆட்டிசம் வகைகளிலும் ஒரு வீச்சு (spectrum) உண்டு. அதற்கேற்ப விசேட சிகிச்சை அல்லது பயிற்சி முறைகள் உள்ளன. அவற்றினூடு.. ஆட்டிசம் நிலை உள்ளவர்களை இயல்பு நிலைக்குரிய வாழ்வுக்கு மீட்டு வர முடியும்..!

இப்போ எல்லாம்.. பிறப்புக்கு முன்னான மருத்துவப் பரிசோதனைகள் மூலம்.. ஆட்டிசம் தொடர்பான பரம்பரை நோய் உள்ளதா என்பதை தீர்மானிக்கக் கூடிய முறைகள் உள்ளன. இருந்தாலும் பல பெற்றோர் இதனை விரும்புவதில்லை. அது தவறாகும்.

ஆட்டிசம் பரம்பரையின் பின்னணியை எப்படி அறிவது:

autism+new+children+in+the+world.png

உங்கள் குடும்பத்திலோ..(கணவன் அல்லது மனைவி அல்லது குழந்தை ஒன்று உருவாகக் காரணமானவர்கள்) அதன் பின்னணியில் வந்தவர்களிடத்திலோ.. ஆரம்ப வயதுகளில் நீண்ட கால நோக்கில் காணப்பட்ட பேச்சாற்றல் பிரச்சனை.. திடீர் என்று பேச்சுத் தடைப்படுதல்.. ஒரே விடயத்தில் மட்டும் கவனம் செலுத்துவது.. ஒன்றையே உற்றுநோக்கிக் கொண்டிருப்பது.. தங்களைத் தாங்களே கைதட்டி.. அல்லது ஆடி மகிழ்ச்சிப்படுத்திக் கொள்வது.. தனிமை விரும்புதல்..போன்ற நிலைகள் காணப்பட்டு இருப்பின் நீங்கள் பெற்றோர் மரபணு பரிசோதனை செய்து கொண்ட பின்.. குழந்தைகளுக்கு திட்டமிடுதல் ஆட்டிசம் பாதிப்பை கட்டுப்படுத்த உதவும்..!

மேலும்.. சூழல் காரணிகள் சிலவும்.. சூழல் மாசுக்களும் பரம்பரை அலகுகளில் ஏற்படுத்தும் விகாரத்தின் விளைவாக.. பரம்ரையில் ஆட்டிசம் இல்லாதவர்களுக்கும் ஆட்டிசம் நிலையில் குழந்தைகள் பிறக்கலாம். இதற்கு சூழலில் உள்ள நச்சுப் பொருட்களின் தாக்கமே முக்கிய காரணமாகும்..! தடுப்பூசிகள் சில இந்த நிலையை ஊக்குவிப்பதாக சொல்லப்பட்ட நிலையிலும் ஆராய்ச்சிகள் அவற்றை உறுதியாக நிறுவவில்லை. இருந்தாலும்.. risk ஐ குறைக்கும் வகையில் சில தடுப்பூசிகளுக்கு தடைகள் உள்ளன. நிச்சயமாக வைத்தியசாலைகளில் அவ்வாறான தடுப்பூசிகளை போடமாட்டார்கள். போட்டால் அது சட்டப்படி குற்றமாகும்..!

குறைந்த வயதில் (16-24) திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களும்.. (குறிப்பாக ஆசிய பிராந்திய நாடுகளைச் சேர்ந்த பெண்கள்).. கிட்டத்தட்ட 40 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ள விளையும் பெண்களும்.. 45 வயதை தாண்டி குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் ஆண்களும்.. IVF மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறவர்களும்.. கிரமமான மருத்துவப் பரிசோதனையை வளரும் சிசுவின் மீது மேற்கொண்டு.. இவ்வாறான பரம்பரை நிலைகளின் தாக்கம் உள்ளதா இல்லையா என்று உறுதி செய்து கொள்வது சிறந்ததாகும்..!

Genetics-of-ASD.jpg

மனிதனில் உள்ள 23 சோடி நிறமூர்த்தங்களில் 23 நிறமூர்த்தங்கள் (ஆண்) படத்தில் காட்டப்பட்டுள்ளன. (எமது உடலில் உள்ள பரம்பரையை காவும் அலகுகள்) இவற்றில் ஊதா நிறமூட்டப்பட்ட பகுதிகள்.. ஆட்டிசம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஏதோ ஒரு வகையில் காரணமாக உள்ளன.

(A schematic summary of association and linkage studies of ASD, organised by chromosome. Purple bands indicate a chromosomal region that shows a linkage with ASD. Red and yellow bars (parallel to the chromosome) correspond to losses/gains in copy number, respectively, that are observed in people with ASD when compared to matched controls. Green bars correspond to genes that are observed to modulate the risk for ASD (either through a rare syndrome or genetic association): light green and dark green bars represent locations of candidate genes.

Adapted by permission from Macmillan Publishers Ltd: Nature Reviews Genetics (Abrahams and Geschwind, 2008: 9, 341-355), copyright (2008).)

தொகுப்பு: நெடுக்காலபோவன்

படங்கள்: இணையம்.

http://www.autism.or...-disorders.aspx

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ்,

ஹோமியோபதி சிகிச்சை மூலம் பெருமளவு குணமாக்கலாம் என்றும் நோயின் வீரியத்தைப் பொறுத்து முற்றாக குணமாகியவர்களும் உண்டு எனக் கூறுகிறார்கள்.

'ஹோமியோபதி' சிகிச்சை முறையின் நம்பகத்தன்மை என்ன?

http://www.healthyhomeopathy.com/

http://www.drugfreeasperger.com/

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்,

ஹோமியோபதி சிகிச்சை மூலம் பெருமளவு குணமாக்கலாம் என்றும் நோயின் வீரியத்தைப் பொறுத்து முற்றாக குணமாகியவர்களும் உண்டு எனக் கூறுகிறார்கள்.

'ஹோமியோபதி' சிகிச்சை முறையின் நம்பகத்தன்மை என்ன?

http://www.healthyhomeopathy.com/

http://www.drugfreeasperger.com/

ஹோமியோபதி.. அக்கியுபஞ்சர் (Acupuncture) ரெலிபதி..(Telepathy).. ஹிப்னாரிசும் (Hypnotism) இவை எல்லாம்.. அறிவியல் சாரா நம்பிக்கைகள் (non-scientific claims) என்று சொல்லுறது. இவற்றின் மூலம் மக்கள் தாங்கள் நன்மை பெறுவதாக சொல்கிறார்கள். ஆனால் அறிவியல் ரீதியான ஆராய்ச்சிகள் மூலம் இவை முற்றாக நிறுவப்படவில்லை..!

மக்களுக்கு நன்மை கிடைக்கிறது என்றால் மக்கள் அதனை கையாளலாம். தவறில்லை. ஆனால்.. எதற்கும் வைத்திய ஆலோசனை பெற்றுச் செய்வதே சிறந்தது. இப்போ எல்லாம் Acupuncture முறை கலந்த மருத்துவத்தை physiotherapist பாவிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இங்கிலாந்தில் அரச வைத்தியசாலைகளில் கூட இதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

V விருது வெற்றியாளர் வைத்தியர் திரு சின்னையா தேவானந்தன்

விளக்கத்திற்கு நன்றி நெடுக்ஸ். :)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்,

ஹோமியோபதி சிகிச்சை மூலம் பெருமளவு குணமாக்கலாம் என்றும் நோயின் வீரியத்தைப் பொறுத்து முற்றாக குணமாகியவர்களும் உண்டு எனக் கூறுகிறார்கள்.

'ஹோமியோபதி' சிகிச்சை முறையின் நம்பகத்தன்மை என்ன?

http://www.healthyhomeopathy.com/

http://www.drugfreeasperger.com/

நன்றி நெடுக்கு பகிர்வுக்கு, நல்ல ஆக்கம்.

ஹோமியோபதி சிலவற்றுக்கு மிகச் சிறந்த மருத்துவ முறை, பக்கவிளைவுகள் இல்லை. கல்கிசை சுடலைக்கு முன்னால் போகும் பாதையில் ஒரு சிங்கள் வைத்தியர் கிளினிக் வைத்துள்ளார், நான் அங்குதான் போறனான் கொழும்பில் இருக்கும் போது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்கு பகிர்வுக்கு, நல்ல ஆக்கம்.

ஹோமியோபதி சிலவற்றுக்கு மிகச் சிறந்த மருத்துவ முறை, பக்கவிளைவுகள் இல்லை. கல்கிசை சுடலைக்கு முன்னால் போகும் பாதையில் ஒரு சிங்கள் வைத்தியர் கிளினிக் வைத்துள்ளார், நான் அங்குதான் போறனான் கொழும்பில் இருக்கும் போது.

நான் நினைக்கிறேன்.. யுனானி.. ஆயுள்வேதம்.. சித்த மருத்துவம்.. ஹோமியோபதி.. அக்குபஞ்சர்.. இவற்றை பல்கலைக்கழக மட்டத்தில் மருத்துவத்துறையில் இலங்கையில் கற்பிக்கிறார்கள் என்று. கொழும்பில்.. யுனானி மருத்துவம் உண்டு. யாழ்ப்பாணத்தில் சித்த மருத்துவம் உண்டு. அதேபோல்.. ஆயுள் வேத மருத்துவம் தென்னிலங்கையில் படிக்க வாய்ப்புள்ளது..! மக்கள் இவற்றின் மூலம் நன்மை பெறுவதால் தானே படிப்பிக்கினம்..! இல்லை என்றால் இவ்வளவு செலவு செய்து மருத்துவப் பட்டங்களைப் படிப்பிப்பார்களா என்ன..!!

நன்றி உடையார் உங்கள் கருத்துக்கு..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டிசம் என்பது பரம்பரையாக வருமா?...அல்லது நெருங்கிய சொந்தத்தில் திருமணம் முடித்தால் வருமா?...ஒரு குடும்பத்தில் இரு பிள்ளைகள் இருந்தால் இரண்டாவது பிள்ளைக்கு ஆட்டிசம் இருந்தால் அந்த மூத்த பிள்ளை திருமணம் முடித்து அவருக்கு பிள்ளை பிறந்தால் அந்த பிள்ளைக்கு ஆட்டிசம் வரும் வாய்ப்புகள் உண்டா?

இன்னமும் சரியான தொடர்பை யாரும் கண்டுபிடிக்கவில்லை.

நெருங்கிய உறவுக்குள் திருமணத்தால் இது வருவதென்றால் நாம் எல்லாம் இன்று ஆட்டிசத்துடன் தான் இருக்க வேண்டும். எதோ ஒரு தலைமுறையில் நாம் மச்சான் மச்சாள் மணத்தில் தான் போய் நிற்போம்.

மேற்கு நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் பிள்ளைகள் பிறந்தவுடன் போடும் தடுப்பூசிகளில் மேற்குரியும் ஒன்றாக இருந்தது. இதுவே காரணம் என்று தற்போது அதை தடைசெய்ததோடு. மெர்குரி நிறைந்த பெரிய வகை மீன்களை வயிற்றில் பிள்ளை உள்ள நேரம் சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறார்கள்.

பத்து வருடங்களுக்கு முன்பு லேட் என்ற இரசாயனம் எங்கும் இருந்தது விளையாட்டு பொருட்கள் சுவருக்கு அட்டிகும் பெயிண்ட் இப்படி பல இடத்தில் இருந்தது இதை கற்பமான பெண்கள் சுவாசித்ததால் அது கருவில் உள்ள சிசுவை பாதித்திருக்கும் என்று சொல்கிறார்கள்.

நான் உடன்பட கூடியதாக ஒன்றை சொல்கிறார்கள் ( எனக்கு தெரிந்த ஆடிசம் உள்ள பிள்ளைகளின் தாய் தந்தைமாரை பார்த்து இது சரி என்ற முடிவுக்கும் என்னால் வர கூடியதாக இருக்கின்றது)

இருவேறு நேருடையான ஒரு ஆணும் பெண்ணும் சேருவதால் அவர்களுடைய ஜீன் குழப்பமே காரணம் என்கிறார்கள். அதாவது ஒரு துடிப்புள்ள ஆணும்............. ஒரு பதுமையான பெண்ணும்.

எப்போதுமே சுத்தியடிக்கும் ஆணும் எப்போதுமே வீட்டுக்கு உள்ளேயே இருக்க விரும்ம்பும் ஒரு பெண்ணும்.

இப்படி இரு நேர் எதிர் மறையான ஜீன்கள் சேரும்போது ஒரு குழப்ப நிலை உருவாக சாத்தியம் இருப்பதை நான் நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் சரியான தொடர்பை யாரும் கண்டுபிடிக்கவில்லை.

நெருங்கிய உறவுக்குள் திருமணத்தால் இது வருவதென்றால் நாம் எல்லாம் இன்று ஆட்டிசத்துடன் தான் இருக்க வேண்டும். எதோ ஒரு தலைமுறையில் நாம் மச்சான் மச்சாள் மணத்தில் தான் போய் நிற்போம்.

மேற்கு நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் பிள்ளைகள் பிறந்தவுடன் போடும் தடுப்பூசிகளில் மேற்குரியும் ஒன்றாக இருந்தது. இதுவே காரணம் என்று தற்போது அதை தடைசெய்ததோடு. மெர்குரி நிறைந்த பெரிய வகை மீன்களை வயிற்றில் பிள்ளை உள்ள நேரம் சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறார்கள்.

பத்து வருடங்களுக்கு முன்பு லேட் என்ற இரசாயனம் எங்கும் இருந்தது விளையாட்டு பொருட்கள் சுவருக்கு அட்டிகும் பெயிண்ட் இப்படி பல இடத்தில் இருந்தது இதை கற்பமான பெண்கள் சுவாசித்ததால் அது கருவில் உள்ள சிசுவை பாதித்திருக்கும் என்று சொல்கிறார்கள்.

நான் உடன்பட கூடியதாக ஒன்றை சொல்கிறார்கள் ( எனக்கு தெரிந்த ஆடிசம் உள்ள பிள்ளைகளின் தாய் தந்தைமாரை பார்த்து இது சரி என்ற முடிவுக்கும் என்னால் வர கூடியதாக இருக்கின்றது)

இருவேறு நேருடையான ஒரு ஆணும் பெண்ணும் சேருவதால் அவர்களுடைய ஜீன் குழப்பமே காரணம் என்கிறார்கள். அதாவது ஒரு துடிப்புள்ள ஆணும்............. ஒரு பதுமையான பெண்ணும்.

எப்போதுமே சுத்தியடிக்கும் ஆணும் எப்போதுமே வீட்டுக்கு உள்ளேயே இருக்க விரும்ம்பும் ஒரு பெண்ணும்.

இப்படி இரு நேர் எதிர் மறையான ஜீன்கள் சேரும்போது ஒரு குழப்ப நிலை உருவாக சாத்தியம் இருப்பதை நான் நம்புகிறேன்.

அறிவியல் சார்ந்த எல்லோருக்கும் விளங்கக் கூடிய நல்ல விளக்கம்... மருதங்கேணி. இத்தலைப்பில் பகிர்ந்து கொட்டமை தலைப்புக்கு அவசிமானதும் கூட..! :icon_idea:

கரும்பு / நுணாவிலன் இணைப்பில் உள்ள வைத்தியர் திரு சின்னையா தேவானந்தன் கூறும் சில விடயங்கள் கவனிக்கப்பட வேண்டும். முக்கியமாக வன்னிப் போரின் போது பிறந்த பிள்ளைகளுக்கு 'ஒட்டிசம்' இருப்பதற்கான சான்றுகளை அலசியுள்ளார். இதனை புலம் பெயர்ந்த தமிழர்கள் கவனிக்காமல் போய்விட்டால் வரும் அடுத்த சந்ததி பாதிப்பிற்குள்ளாகும்.

நான் உடன்பட கூடியதாக ஒன்றை சொல்கிறார்கள் ( எனக்கு தெரிந்த ஆடிசம் உள்ள பிள்ளைகளின் தாய் தந்தைமாரை பார்த்து இது சரி என்ற முடிவுக்கும் என்னால் வர கூடியதாக இருக்கின்றது)

இருவேறு நேருடையான ஒரு ஆணும் பெண்ணும் சேருவதால் அவர்களுடைய ஜீன் குழப்பமே காரணம் என்கிறார்கள். அதாவது ஒரு துடிப்புள்ள ஆணும்............. ஒரு பதுமையான பெண்ணும்.

எப்போதுமே சுத்தியடிக்கும் ஆணும் எப்போதுமே வீட்டுக்கு உள்ளேயே இருக்க விரும்ம்பும் ஒரு பெண்ணும்.

இப்படி இரு நேர் எதிர் மறையான ஜீன்கள் சேரும்போது ஒரு குழப்ப நிலை உருவாக சாத்தியம் இருப்பதை நான் நம்புகிறேன்.

மருதங்கேணியின் கருத்தை வைத்து 'ஒட்டிசம்' உள்ள பிள்ளைகளைப் பார்க்கையில் அது சரியாகவே உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மருதங்கேணி.

  • 6 months later...

தொடர்புள்ள திரியில் உள்ள புதிய கருத்துக்களை பார்வையிட

http://www.yarl.com/forum3/index.php?showtopic=80066#entry822774

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.