Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காஷ்மீர் போராட்டமும் தமிழ்மண் போராட்டமும் ஒன்றே: யாசின் மாலிக்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலைவன் கடைசிவரை  இந்தியாவை வேண்டிநின்றார்

அமைதி  காத்தார்

சரிவரல

ஏற்றுக்கொள்ளல

இந்தியா கருணை காட்டல

எனவே அந்த வழி சரியில்லை

 

எனவே அவரது தம்பிகள் மாற்றுவழியை நாடுவது தான் சரி.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்று காட்டணும்

இவர்களை கவனியாது விட்டால் முதலுக்கே ஆபத்து என்பரை உணர வைக்கணும்.

வேறு வழியில்லை............

ஏதும் இருப்பதாகவும்  தெரியவில்லை............

  • Replies 101
  • Views 7k
  • Created
  • Last Reply

 

 
பிரான்சில் இடம்பெற்ற மே 18 இனஅழிப்பு நினைவு நாள் நிகழ்வில் குர்திஸ்தான் விடுதலை அமைப்பு பிரமுகர்களும் குர்திஸ்தான் மக்களும் பெருமளவில் கலந்து கொண்டு தமிழ் மக்களுக்கான ஆதரவை வழங்கினர்.

பிரான்ஸ்தமிழிர் பேரவையின் இந்த இணைவும் முயற்சியும் பாராட்டபடவேண்டியது.

 

பிரான்சில் போராட்டத்தில் குர்திஷ் மக்கள் கலந்து கொண்டார்கள். அதே போல் பேரணி ஆரம்பிக்க முன்னர் அவர்கள் தமக்கு ஆதரவாக எம்மிடம் கையொப்பம் கேட்டார்கள். நானும் வைத்து கொடுத்தேன். பேரணி முடிந்து பொதுக்கூட்டத்தின் போது குர்திஷ் பிரமுகர் உரையாற்றியும் இருந்தார்.

 

இப்படத்தில் புலிக்கொடி தவிர்த்து தெரிவது அவர்கள் கொடி மற்றும் அப்துல்லா ஒசல்லானின் படத்துடனான கொடி.

 

 

 

 

 

310059_257914754353305_1799305269_n.jpg

 

600794_257915421019905_941967234_n.jpg

 

 

லண்டனிலும் குர்திஷ் இனத்தவர்கள் கலந்துகொண்டார்கள்.

 

இது என் கண்ணில் அகப்பட்ட லண்டன் போராட்ட காணொலி

 

 

(படம், வீடியோ: முகநூல்)

Edited by துளசி

சபைக்கு வரப் பிந்தியதால் எனக்கு  வாக்குரிமை இல்லாமல் போய்விட்டது.

அல்லது சரி என்பதற்கு வாக்குகள் அதிகரித்தபடியால் தூக்கிவிட்டார்கள்

 

தினமணி கருத்து கணிப்பு - இறுதி முடிவு .

நாம் தமிழர் கட்சி கூட்டத்திற்கு பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கை அழைத்தது.

சரி - 66 %

தவறு - 32 %

கருத்து இல்லை - 2%

நாங்கள் சத்தியத்தின் பக்கம் நிற்கும் பிள்ளைகள். சத்தியம் தோற்றதாக சரித்திரம் இல்லை. எனவே, நாங்களும் கட்டாயம் வெல்வோம்.

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கருத்துக்கணிப்பில் வாக்களித்தவர்கள் தமிழகத்தில் எத்தனை வீதம் என்று அறிய  ஆவல்

என்ன  செய்யலாம்??

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணை இப்ப தமிழகத்தில் ஈழ ஆதரவு கூடிக் கிட்டே போக்குது...முந்தி தான் சீமான் அண்ணா தனி மனிதர் இப்ப...ஆள் பலம் மிக்க ஒரு மனிதர்..........

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் செல்வாக்குப் பெற்று எம்மெல்லேக்களையும் எம்பிக்களையும் முதலில் கொண்டு வர வழியைப் பார்க்கவேண்டும். இல்லாவிட்டால் அரசியல் செய்து என்ன பிரயோசனம்?

இந்தக்கருத்துக்கணிப்பில் வாக்களித்தவர்கள் தமிழகத்தில் எத்தனை வீதம் என்று அறிய  ஆவல்

என்ன  செய்யலாம்??

 

தெரியவில்லை. ஆனால் இதில் வாக்களித்தவர்களில் பெருமளவானோர் தமிழக தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழக தமிழர்களாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் அதிகளவில் அவர்கள் முகநூலில் இதை பகிர்ந்திருந்தார்கள்.

ஆனாலும் கருத்துக்கணிப்பு பற்றி பல மக்களுக்கு தகவல் சென்றடைய முன்னமே முடிந்து விட்டது. எனவே எவ்வளவு பேர் வாக்களித்தார்கள் எவ்வளவு பேர் வாக்களிக்கவில்லை என்று பேசுவது பொருத்தமல்ல.

 

நான் பலர் கருத்துகளை வாசித்ததன் அடிப்படையில் ஒப்பீட்டளவில் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை விட ஆதரவு தெரிவிப்பவர்கள் அதிகமாக உள்ளார்கள். தமிழகத்திலுள்ள முஸ்லிம்கள் கூட இதற்கு ஆதரவு தெரிவித்து comment போட்டுள்ளார்கள்.

அண்ணன் வை கோ அவர்கள் ஒபாமாவை கூட சந்தித்த ஒரு பெரிய ஈழ ஆதரவு அரசியல்வாதி.....

 

 

சீமான் அண்ணன் இந்தியாவில் உள்ள  பிரிவினை மக்களிடம் ஆதரவை திரட்டி   சில நேரம் கனடாவில்  தனிநாடு கேட்டு போராட்டம் ஆரம்பிக்க வேண்டி இருந்தால் அதற்க்கு பயன்படுத்தலாம்.

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

சீமான் அண்ணன் இந்தியாவில் உள்ள  பிரிவினை மக்களிடம் ஆதரவை திரட்டி   சில நேரம் கனடாவில்  தனிநாடு கேட்டு போராட்டம் ஆரம்பிக்க வேண்டி இருந்தால் அதற்க்கு பயன்படுத்தலாம்.

விடுதலைப்புலிகள் இருக்கும்வரை தங்களால் ஈழத்தமிழருக்கு ஒன்றும் செய்ய முடியாது  எனக் கைவிரித்து , இன்றும்  சிங்கள அரசுடன் ஒட்டியிருக்கும் மாற்றுக்குழுக்கள்    2009 இற்குப்பின்னர் எதுவும் செய்ய முயற்சித்ததாகத் தெரியவில்லை.

ஆனால் சீமான் இன்றும் ஈழவிடுதலைப் போராட்டத்தை கையில் எடுத்து தமிழக மக்களின் ஆதரவு அலைகளை ஓங்க வைத்திருக்கும் நிலையில்,

அவருடைய ஈழ ஆதரவுப் போராட்டம் வலிமை மிக்கதொன்றாகவே இருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

ஆக, அடுத்த இருநூறு முந்நூறு வருடங்களுக்கு தமிழர்களுக்கு விடுதலை இல்லை என்று சொல்கின்றீர்கள்.

 

இந்தியா எமக்கு கணிக்க கூடிய கால கெதியில் உடையபோவதில்லை. இந்திய உடைவை அமெரிக்க, சீனா ஆகியவை விரும்பப்போவதும் இல்லை. இதுதான் யதார்த்தம். நாம் இந்திய உடைவை விரும்புகின்றோம் என்பதற்காக இந்தியா உடையப்போவதும் இல்லை.

 

என்னைப் பொறுத்தவரைக்கும் ஈழத் தமிழர்களுக்கு காசுமீர் மக்களினதும், ஆந்திர மக்களினதும், திரிபுரா மக்களினதும் ஆதரவை விட பல மடங்கு ஆதரவு தமிழக மக்களிடம் இருந்து கிடைப்பதே ஓரளவுக்கு பயன்தரும். தமிழக மக்கள் காசுமீர பிரிவினையை ஒரு போதும் ஆதரிக்கப் போவதில்லை. ஏற்கனவே இஸ்லாமியர்கள் தமிழகத்தில் தம் மீதான வெறுப்பினை தம் செயல்களினால் அதிகரித்துக் கொண்டு இருக்கும் போது, காசுமீர மக்களது போராட்டதுக்கு எந்தளவுக்கு ஆதரவு வழங்குவர் என்று தெரியவில்லை. அத்துடன் எமக்கான ஆதரவு தமிழக மக்களிடம் இருந்து ஏனைய மாநிலங்களுக்கும் பரவுவதுதான் நடைமுறையில் சாத்தியமானதும்.

 

இறுதியாக நான் சொல்வது, சீமான் இந்த விடயத்திலும் தவறிழைத்துள்ளார் என்பதே.

முதலில் இந்தியா இன்னும்  40 வருடங்கள் ஹிந்தியக் காங்கிரசின் கைகளில்

சிக்கித் தவிப்பதைத் தவிர்ப்பதற்கு செய்ய வேண்டிய முதல் வேலை

காங்கிரசின் பலத்தை இந்தியாவில் ஒடுக்க வேண்டும்

 

அதையே இப்போது சீமான் செய்ய ஆரம்பித்திருக்கின்றார்.

அதற்கு மாநிலவாரியாக ஒடுக்கப்படும் மக்களின் ஆதரவைத் திரட்டி வருகின்றார்.

இங்கு காஷ்மீர் போராட்டக்குழுவின் ஆதரவு கிடைத்திருக்கும் நிலையில் நாளை 

மற்றைய மாநிலத்தவர்களின் ஆதரவும் கிடைக்கலாம் 

 அல்லது அந்த ஆதரவினைப் பெற்றுக்கொள்ள அவர்களுடனான 

தொடர்புகள் பேணப்படவேண்டும் .

 

 ஈழத்தமிழ்த் தலமைகளுக்குள்ளும்  தமிழகத் தலைவர்களுக்குள்ளும் ஒற்றுமை

ஏற்பட்டால் அவர்கள் சரியான பாதையில் ஒருங்கிணைக்கப்பட்டால்

200 வருடங்கள் தேவையில்லை.

அது நாளையும் நடக்கலாம்.   

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியின் கருத்துடன் நான் உடன் படுகிறேன்...பஞ்சாப் மக்களுக்கும் காங்கிரசின் எதிரிகள்..இப்ப தமிழ் நாடு கஸ்மீர் இப்படியே படை எடுத்தால் எல்லாம் நல்ல மாரியே நடக்கும்....

இந்திரா காந்தி பஞ்சாப் ஆமியால் கொல்லப் பட்டதுக்கு..பஞ்சாப் மக்களின் சந்தோசத்தை பாருங்கோ

அதையே இப்போது சீமான் செய்ய ஆரம்பித்திருக்கின்றார்.

அதற்கு மாநிலவாரியாக ஒடுக்கப்படும் மக்களின் ஆதரவைத் திரட்டி வருகின்றார்.

இங்கு காஷ்மீர் போராட்டக்குழுவின் ஆதரவு கிடைத்திருக்கும் நிலையில் நாளை 

மற்றைய மாநிலத்தவர்களின் ஆதரவும் கிடைக்கலாம் 

 அல்லது அந்த ஆதரவினைப் பெற்றுக்கொள்ள அவர்களுடனான 

தொடர்புகள் பேணப்படவேண்டும் .

 

போனதடவை சீக்கிய தேசிய இனத்தின் விடுதலைப் போராளியை நாம் தமிழர் கட்சியினர் அழைத்து வந்திருந்ததாக ஒருவர் முகநூலில் குறிப்பிட்டிருந்தார். இம்முறை யாசீன் மாலிக்கை அழைத்திருக்கிறார்களாம். இன்னும் பலவற்றை செய்யவுள்ளோம் என்று கூறியுள்ளார்.

 

Edited by துளசி

காஸ்மீர் மக்களுக்கு மட்டுமல்லநியாயமாக  விடுதலை வேண்டி நிற்கும் அனைத்து இயக்கங்களுக்கும் நாம் குரல் கொடுக்க வேண்டும் .அதை சீமானும் செய்ய வேண்டும் செய்தும் வருகின்றார்.மிக நல்ல விடயம் .

ஆனால் சீமானால் எந்தவொரு தாக்கத்தையும் இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டில் அல்லது இலங்கையில் கொண்டுவரமுடியாது என்பது மிக நிதர்சனமான உண்மை .அது ஐந்து வருடங்கள் இல்லை ஐநூறு வருடங்கள் ஆனாலும் சாத்தியமில்லை .

அதை அவர் முயற்சி செய்வது முயன்று பார்ப்பது தவறென்று சொல்லவில்லை .

வைகோ தொட்டு ரஜனி ,விஜேய் என்று பலருக்கும் இதே நினைப்பு இருந்தது இருக்கின்றது .

முடியாவிட்டாலும் ஆசைப் படுவதில் தவறொன்றுமில்லை .

இன்றைய பாடல் 

 

 

 

 


மாற்றம் சிறிதோ பெரிதோ மாற்றம் வரும்

 

  • கருத்துக்கள உறவுகள்

காஸ்மீர் மக்களுக்கு மட்டுமல்லநியாயமாக  விடுதலை வேண்டி நிற்கும் அனைத்து இயக்கங்களுக்கும் நாம் குரல் கொடுக்க வேண்டும் .அதை சீமானும் செய்ய வேண்டும் செய்தும் வருகின்றார்.மிக நல்ல விடயம் .

ஆனால் சீமானால் எந்தவொரு தாக்கத்தையும் இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டில் அல்லது இலங்கையில் கொண்டுவரமுடியாது என்பது மிக நிதர்சனமான உண்மை .அது ஐந்து வருடங்கள் இல்லை ஐநூறு வருடங்கள் ஆனாலும் சாத்தியமில்லை .

அதை அவர் முயற்சி செய்வது முயன்று பார்ப்பது தவறென்று சொல்லவில்லை .

வைகோ தொட்டு ரஜனி ,விஜேய் என்று பலருக்கும் இதே நினைப்பு இருந்தது இருக்கின்றது .

முடியாவிட்டாலும் ஆசைப் படுவதில் தவறொன்றுமில்லை .

 

சீமான் அண்ணா ஒன்றும் பதவிக்கு ஆசை பட வில்லை...தன்ர இனத்துக்காக தான் போராடுகிறார்......மற்ற சொறிக் கூட்டத்துடன் இவர ஒப்பிட வேண்டாம்.....சீமான் அண்ணாவின் பலம் என்ன என்று இனி வரும் காலங்களில் தெரியும் அது மட்டும் பொறுத்து இருங்கோ.....இப்பவே கயவர் கூட்டம் அவரின் வளர்சியை பார்த்து வியக்கினம்...யார் ஆவது நினைத்து பார்த்து இருப்பினமா தமிழ் நாட்டில் இப்படி ஒரு மாணவ போராட்டம் வெடிக்கும் என்று...அதே மாரித் தான் இனி வரும் காலங்களில் தெரியும் சீமான் என்றால் யார் என்று அவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவு எப்படி என்று.......நீங்கள் அடுத்தவையை குழப்பாமல் இருந்தாலே போதும் நடக்கப் போரவை எல்லாம் நல்லவே நடக்கும்.....

யாசீன் மாலிக் அவர்களின் வருகை ஒரு நல்ல விவாதத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.

 

காஸ்மீரிகள் ஏதோ வம்படியாக இந்தியாவில் இருந்து பிரிந்து போக விரும்பும் தேவையற்ற கலக காரர்கள் என்ற நிலையை மாற்றி தமிழக இளைஞர்களுக்கு காஸ்மீரிகளின் போராட்டத்தை பற்றிய சிறிது புரிதலை கொண்டு வந்திருக்கும் என்று நம்புகிறேன். தனித்த தேசிய இனமான காஸ்மீரிகளின் போராட்டம் ஒரு மதவட்டத்திற்குள் பார்க்கப்படும் புரிதல் காரணமாக இங்கே காஸ்மீரிகளின் போராட்டம் பற்றிய விவாதமே எழவில்லை.

காஸ்மீரில் இந்திய ராணுவத்தின் ஆக்கிரமிப்பில் அம் மக்கள் படும்துயரம் உங்கள் செவிகளுக்கு இன்னும் சரியாக எட்டவில்லை.

1987ஆம் ஆண்டில் இருந்து 2010மாண்டு வரை காஸ்மீரில் கொல்லப்பட்ட மக்கள் 93,214 பேர்.

விசாரனை என்ற பெயரில் கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டவர்கள் 6,969 பேர்.

1987ல் இருந்து 2010 ஜூலை வரையிலான தகவல்கள் இவை. 2010 சூலையிலிருந்து இறந்த பொதுமக்களின் எண்ணிக்கையை மேலே நான் கொடுத்துள்ளேன்.

விதவைகளாக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 22,726

கைது செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 1,17,117

அநாதையாக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 1,07,347

பாலியல் வல்லுறவுக்கு ஆக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 9,912

இதுதான் இந்தியாவின் ஜனநாயக முகமூடி...
காஸ்மீர் மக்களின் மீதான இந்தியத்தின் இன படுகொலைகளையும், தொடரும் அரசப்படைகளின் தாக்குதல்களையும், சிறுவர்களை கைது செய்வதையும் கண்டிப்போம்....
காஸ்மீர் காஸ்மீரிகளுக்கே...
காஸ்மீர் மக்களின் சுதந்திர காஸ்மீருக்கான விடுதலை போராட்டத்தை ஆதரிப்போம்...

 

உமர்கயான்

இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்

 

(facebook)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி கூட்டத்துக்கு யாசின் மாலிக்கை அழைத்தது சரி என அனைவரும் வாக்களியுங்கள்.

 

http://dinamani.com/

 

(கீழே வலது பக்கம் வாக்களிக்கும் பகுதி உள்ளது.)

 

(via facebook)

 

சிங்களவன் தேர்தலை வைச்சுப் போட்டு தனக்கு மட்டும் தான் வோட் போடு என்ட மாதிரித் தான் இங்கேயும் நடக்குது.அவன் செய்தால் பிழை.நான் செய்தால் சரி.மக்களது அபிப்பிராயம் தேவையே இல்லை :lol:

சீமான் அண்ணா ஒன்றும் பதவிக்கு ஆசை பட வில்லை...தன்ர இனத்துக்காக தான் போராடுகிறார்......மற்ற சொறிக் கூட்டத்துடன் இவர ஒப்பிட வேண்டாம்.....சீமான் அண்ணாவின் பலம் என்ன என்று இனி வரும் காலங்களில் தெரியும் அது மட்டும் பொறுத்து இருங்கோ.....இப்பவே கயவர் கூட்டம் அவரின் வளர்சியை பார்த்து வியக்கினம்...யார் ஆவது நினைத்து பார்த்து இருப்பினமா தமிழ் நாட்டில் இப்படி ஒரு மாணவ போராட்டம் வெடிக்கும் என்று...அதே மாரித் தான் இனி வரும் காலங்களில் தெரியும் சீமான் என்றால் யார் என்று அவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவு எப்படி என்று.......நீங்கள் அடுத்தவையை குழப்பாமல் இருந்தாலே போதும் நடக்கப் போரவை எல்லாம் நல்லவே நடக்கும்.....

 

பையன்: நீங்கள் சீமானை வைச்சு காமெடி கீமெடி பண்ணலேயே .. :)

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

946702_657754167584148_1760552086_n.jpg

சிங்களவன் தேர்தலை வைச்சுப் போட்டு தனக்கு மட்டும் தான் வோட் போடு என்ட மாதிரித் தான் இங்கேயும் நடக்குது.அவன் செய்தால் பிழை.நான் செய்தால் சரி.மக்களது அபிப்பிராயம் தேவையே இல்லை :lol:

 

இது ஒன்றும் மக்களை கட்டாயப்படுத்தி வாங்கும் வாக்குகள் அல்ல.

சரி என்பதற்கு ஆதரவான வாக்குகளை கேட்கிறோம்.தவறு என நினைப்பவர்கள்  தவறு என்பதற்கு வாக்களித்துள்ளார்கள். நாங்கள் என்ன சிங்களவன் மாதிரி துப்பாக்கி முனையிலா வாக்களிக்க கேட்கிறம்? தவறு என வாக்களித்தவர்களை நாங்கள் அடிக்கவா போறம்?

எதை எதனுடன் ஒப்பிடுவதென்ற விவஸ்தையே இல்லையா உங்களுக்கு?

946702_657754167584148_1760552086_n.jpg

 

இணையத்தில் ஒருமாதிரியும் பத்திரிகையில் இன்னொருமாதிரியும் போட்டுள்ளார்கள். :(  பத்திரிகைக்கான இணைப்பு இது. :rolleyes:http://epaper.dinamani.com/117754/Dinamani-Delhi/23-05-2013#page/1/1

 

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு மாணவ போராட்டம் வெடிக்கும் என்று...அதே மாரித் தான் இனி வரும் காலங்களில் தெரியும் சீமான் என்றால் யார்

1979 களில் அசாம் மாநிலத்தில் மாணவர் போராட்டம் வெடித்தது .பின்பு அதன் தலைவர் மாநில முதலமைச்சராக வந்தார் பின்பு என்னாச்சு?

ஒரு காலத்தில் கே.பி யையும் இப்படித்தான் புகழ்ந்தோம்.அவரின்ட கப்பல் சுழிச்சுப்போட்டு ஆயுதத்தை கொண்டு வந்திடும் என்று....இப்ப அவர் எங்களை சுழிச்சுபோட்டார்.....அதேமாதிரி அம்மானை புகழ்ந்தோம் அம்மான் அடிச்சா அந்த மாதிரி அடியா இருக்கும் என்றோம் ...இப்ப அவர் அடிச்சார் நெத்தியடி எங்களுக்கு....

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்கள் காங்கிரசை விரட்டணும் என்று முடிவெடுத்தபோதே இதற்கெல்லாம் பதில் எடுத்து விட்டார்கள்.

அதுவே சீமானின்  மற்றும் மாணவர் போராட்டங்களிலும்   தெரிகிறது

தமிழகமா

சிறீலங்காவா என்று முடிவெடுங்கள் உங்களுக்கு வேண்டும் என்று அவர்கள் சொல்வதற்கு பதில்  கிடைக்காததன் மறுபக்கம் இது.

வேறு வழியில்லை.

ஒரு வழி அடைபட்டால்  மறுபாதை......

 

இந்த கேள்வியில் கூட 

மறைமுகமாக பிரிவினையை  ஆதரிக்கின்றீர்களா என்று தான் கேட்கப்பட்டுள்ளது

பதில் ஆம் என்று தான் வந்துள்ளது

நாம் தான் ஏற்றுக்கொள்ள  தயங்குகின்றோம்.... :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

946702_657754167584148_1760552086_n.jpg

 

இதில் இருந்து என்ன தெரியுது..ஊழல் நாடனா இந்தியாவில்..ஊடகமும் கேவலம் கெட்ட ஊடகம் என்று........

பையன்: நீங்கள் சீமானை வைச்சு காமெடி கீமெடி பண்ணலேயே .. :)

 

நீங்கள் தான் பெரிய காமெடியர் போல.... நான் உள்ளதை தான் சொன்னான்...

இந்த கேள்வியில் கூட 

மறைமுகமாக பிரிவினையை  ஆதரிக்கின்றீர்களா என்று தான் கேட்கப்பட்டுள்ளது

பதில் ஆம் என்று தான் வந்துள்ளது

நாம் தான் ஏற்றுக்கொள்ள  தயங்குகின்றோம்.... :(  :(

 

அது பத்திரிகைகளின் காழ்ப்புணர்வு. "பிரிவினைவாத தலைவர்" என்று போட்டால் மக்கள் சரி என்பதற்கு வாக்களிக்காமல் தவறு என்பதற்கு வாக்களிப்பார்கள் என தந்திரமாக நினைத்திருக்கிறார்கள்.

யோசித்துக்கொண்டிருந்தால் வாக்கெடுப்பில் தோற்க வேண்டியது தான். வாக்களித்தவர்கள் "பிரிவினைவாத தலைவர்" என்பதை தவிர்த்து விட்டு தான் வாக்களித்தார்கள்.

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.