Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளுக்கு வெலிக்கடையில் நிர்வாணமாக்கி பாலியல் கொடுமைகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளுக்கு வெலிக்கடையில் நிர்வாணமாக்கி பாலியல் கொடுமைகள்.

PHOTOS, சிறீலங்கா | ADMIN | OCTOBER 26, 2012 AT 09:23

சிறீலங்கா இராணுவத்தினரும், கடற்படையினரும் தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளை மிகக் கேவலமான முறையில் முழு நிர்வாணமாக்கிச் சோதனை என்ற பெயரில் பாலியல் ரீதியான கொடுமைகளைச் செய்ததாக வெலிக்கடைச் சிறைச்சாலையின் பெண் அரசியல் கைதிகள் தெரிவிக்கின்றனர். முறையற்ற சோதனை நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி நிற்கின்றனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சிறைத்துறைச் சட்டத்தின்படியும், விதிமுறைகளுக்கமைவாகவும் சிறைக்கைதிகளைச் சிறை அதிகாரிகள் தவிர வேறு பிரிவினர் சோதனை செய்வது முறையற்ற செயல். ஆனால் நீதிக்குப் புறம்பான வகையில் இவற்றை எல்லாம் மீறி கொழும்பு நகரில் அமைந்துள்ள மூன்று பிரதான சிறைகளிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெலிக்கடை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, புதிய சிறைச்சாலைகளில் இராணுவத்தினர், கடற்படையினர் சட்டத்துக்கு முரணான வகையில் சோதனைகளை மேற்கொள்கின்றனர். மிகவும் கேவலமான முறையில் முழு நிர்வாணமாக்கி, பத்து, பதினைந்து தடவைகள் இருத்தி எழுப்பி, கேலிச் சிரிப்புகளுக்கு நடுவில் சோதனை என்ற பெயரில் பாலியல் ரீதியான சித்திரவதைகள் இடம்பெறுகின்றன.

வெலிக்கடைப் பெண்கள் பகுதியில் உள்ள பெண் அரசியல் கைதிகளை மிகவும் மிலேச்சத்தனமான முறையிலும் கீழ்த்தரமான வகையிலும் பெண் அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். இதன்போது இழிவான சொற்பிரயோகங்களையும் மேற்கொண்டு எம்மை வதைக்கின்றனர்.

இவையனைத்தும் சிறை அதிகாரிகளின் பூரண பாதுகாப்புடன் விலங்கிடப்பட்டு நீதிமன்ற தவணைகளுக்கும், வைத்திய பரிசோதனைகளுக்காகவும் சென்றுவரும் போதே நடைபெறுகின்றன. அவர்களுள்ளேயான நம்பிக்கையீனமான நிலையில் நாம் பாதிக்கப்படுவது சரியானதா? இந்த நிலையைச் சுட்டிக்காட்டிய இரண்டு கைதிகள் அண்மையில் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

பெண்களாகிய நாம் எத்தனை துன்பங்களுக்கு முகம் கொடுத்து வெளியில் சொல்ல முடியாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இந்த விடயங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கையும் தாக்கல் செய்ய எண்ணியுள்ளோம். ஏனைய சிறைச்சாலைகளில் இடம்பெறும் நடவடிக்கைகளைப் போல் இந்த சிறைச்சாலைகளிலும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற உறுதிசெய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://thaaitamil.com/?p=36672

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செயல்களை ஒருவரும் கண்டுகொள்வதில்லை என்பதற்கு ஒரு பதிவும் அற்ற இந்தத் தலைப்பே சாட்சி.

வெல்லும் வரை வாழ்ந்தவர்கள் வீரர்கள், மடிந்தவர்கள் தெய்வங்கள், தோற்றுச் சரணடைந்து அவலங்களுடன் வாழ்வோர் சாறு உறிஞ்சிய பின்னர் எறியப்படும் வெறும் சக்கைகள்.

தமிழ் அரசியல் தலைமைகளும் தீவிர தேசியவாதிகளும் இவர்களைக் கண்டுகொள்ளமாட்டார்கள். முடிந்தால் தங்கள் அரசியலுக்கு எப்படி இந்த அவலங்களைப் பாவிக்கலாமே என்று சிந்திப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான விடயங்களை வெளியே கொண்டு வந்து போராட்டம் நடாத்த புலம்பெயர்ந்த தேசங்களில் இருக்கும் அறிக்கைப் போர் மன்னர்களுக்கும், ஊடக மற்றும் அரசியல் மேதாவிகளுக்கும் தெரியாதாம். ஒவ்வொரு பெண்களும் படும் சித்ரவதையைப்பற்றி கவலைப்பட்டு உருப்படியாகச் செய்ய யாருமே இல்லை என்ற கசப்பான உண்மையை பூசி மெழுகிவிட்டு இவன் எங்களுக்கு என்ன செய்தான்? அவன் எங்களுக்கு என்ன செய்தான் என்று பக்கம்பக்கமாக எழுதிக் கிழிப்போம். ஏனென்றால் அங்கு மிகக்கொடிய பாலியல் ரீதியான வன்முறைக்குள் நொந்து கிடப்பவர்கள் எங்கள் வீட்டுப்பெண்கள் இல்லைத்தானே... சீ... மானங்கெட்ட பிறப்புகளே.

இங்கு புலம்பெயர்ந்த தேசங்களில் குய்யோ முறையோ என்று குதிக்கும் பெருமக்களே.... உங்கள் வீட்டுப் பெண்களை வெளிநாடுகளில் பாதுகாத்துக் கொண்டிருக்கிறீர்கள் தவறில்லை... அதே நேரம் அங்குள்ள பெண்களின் அவலத்தை வெளியுலகிற்குக் கொண்டுவந்து அவர்களின் வாழ்வுக்கு மீட்சி கொடுக்க என்ன செய்துள்ளீர்கள்? யாராவது ரோசமுள்ளவர்கள் இருந்தால் இதற்கு வந்து பதில் எழுதுங்கள்.

கிருபன் இன்னும் மே 2009 க்கு முந்திய மனநிலையில் உள்ளார். இப்ப இதுதான் பாஷன்.

நாளை (28 -10 - 2012) பிரான்சில் நாடுகடந்த அரசாங்கத்தின் அரசியல் கருத்தாடல் நடைபெறுகின்றது. இந்தப் பெண்களின் அபல நிலைகுறித்து கவனத்தில் கொள்ளுமாறு முடிந்தவர்கள் எல்லோரும் கையெழுத்திட்டு ஒரு மனுவை அரசாங்கத்திடம் கொடுக்கலாம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=110275&hl=

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்ணியம் பேசும் பலர் கூட "பு" னா, "சு" னா எழுதியவிடன் பெண்விடுதலை கிடைத்திவிடும் எனும் போது புதிதாய் என்னத்தைச் சொல்ல????? :wub:

நாளை (28 -10 - 2012) பிரான்சில் நாடுகடந்த அரசாங்கத்தின் அரசியல் கருத்தாடல் நடைபெறுகின்றது. இந்தப் பெண்களின் அபல நிலைகுறித்து கவனத்தில் கொள்ளுமாறு முடிந்தவர்கள் எல்லோரும் கையெழுத்திட்டு ஒரு மனுவை அரசாங்கத்திடம் கொடுக்கலாம்.

http://www.yarl.com/...topic=110275=

நல்ல விடையம், பிரான்ஸ்வாழ் உறவுகள் இதனைச்செய்யலாமே. !

கலந்துரையாடலுக்கு செல்லும் உறவுகள் இதுபற்றியும் பேசுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் இன்னும் மே 2009 க்கு முந்திய மனநிலையில் உள்ளார். இப்ப இதுதான் பாஷன்.

தற்போதைய தமிழ் தலைமைகளும் தேசியத்திற்கு என அறிக்கைபோர் நடாத்துபவர்களும் 2009 மேக்கு முன்னர் இருந்த மனநிலையில்தான் இப்பவும் இருக்கின்றார்கள். மக்களின் அவலங்களும் உரிமைகளும் முக்கியமல்ல, தமது பதவிகளும் பந்தாக்களும்தான் முக்கியம் அவர்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுதி எவரும் தீர்வை முன் வைக்கவில்லை.

மற்றவர் மீது பழியை அல்லது தாக்குதலை மட்டுமே செய்துள்ளனர்.

அல்லது எவராவது செய்யட்டும் என வழமைபோல் தம்மை விடுவித்துள்ளனர்.

இதுவே தமிழர்.

தொடரட்டும் தங்கள் பணி. :( :( :(

வழிகாட்டிகள் என்று தம்மை முன்னிலைப்படுத்துபவர்களிடமும்? தம்முடைய கட்டுப்பாட்டுக்குள் மற்றவர்கள் இயங்கவேண்டும் என்று கொம்புக்கு மண்ணெடுப்பவர்களிடமும்தான் கேள்விகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் நீங்கள் வருத்தப்பட எதுவும் இல்லை விசுகு அண்ணா.... எவர் மீதும் பழிவாங்கலோ தாக்குதலோ நடாத்துவதாக உங்களுக்குப் பட்டால் நீங்கள் அங்கு இவ்வாறு பாதிக்கப்படும் மக்களில் இருந்து விலகி இருக்கிறீர்கள் என்றுதான் எண்ணவேண்டும்

இங்கு மேலே எழுதியிருப்பது பற்றி நீங்கள் எழுதிய கருத்து உங்களை பாதிக்கிறது என்றால் ஒன்று நீங்கள் எல்லோருக்கும் வழிகாட்டியாக இருப்பதாக உங்களை உயர்த்தி வைத்திருக்கவேண்டும் இல்லாவிட்டால் உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் எல்லோரும் இருக்கவேண்டும் என்ற நிலையில் இருக்கவேண்டும்.... இதில் நீங்கள் எந்தவகை?

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கொள்கை

அவர் குலைத்தால் நானும் குலைப்பேன் என்பது.

இங்கு மேலே எழுதியிருப்பது பற்றி நீங்கள் எழுதிய கருத்து உங்களை பாதிக்கிறது என்றால் ஒன்று நீங்கள் எல்லோருக்கும் வழிகாட்டியாக இருப்பதாக உங்களை உயர்த்தி வைத்திருக்கவேண்டும்

இல்லாவிட்டால் உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் எல்லோரும் இருக்கவேண்டும் என்ற நிலையில் இருக்கவேண்டும்.... இதில் நீங்கள் எந்தவகை?

இரண்டும் இல்லை

ஒவ்வொருத்தரும் தங்கள் தங்கள் நேரத்தை அவர்களுக்காக செலவளியுங்கள்.

உங்களுக்குள் கடி படுவதற்காக செலவளிக்காதீர்கள் என்று அர்த்தம்

அத்துடன் எவர்குற்றியும் அரிசியானால் சரி என்பதே எனது வாதம்

கருத்துக்கு கருத்தெழுதியிருக்கலாம் இதை விட கிரேட் இன்சல்ட் வேறு இருக்கமுடியாது. இருக்கட்டும்.

எவர் குற்றி அரிசியானால் சரி என்பது எனக்கும் பிடித்திருக்கிறது... இங்குதான் கேள்வியே எவர் குற்றுவது?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செயல்களை ஒருவரும் கண்டுகொள்வதில்லை என்பதற்கு ஒரு பதிவும் அற்ற இந்தத் தலைப்பே சாட்சி.

வெல்லும் வரை வாழ்ந்தவர்கள் வீரர்கள், மடிந்தவர்கள் தெய்வங்கள், தோற்றுச் சரணடைந்து அவலங்களுடன் வாழ்வோர் சாறு உறிஞ்சிய பின்னர் எறியப்படும் வெறும் சக்கைகள்.

தமிழ் அரசியல் தலைமைகளும் தீவிர தேசியவாதிகளும் இவர்களைக் கண்டுகொள்ளமாட்டார்கள். முடிந்தால் தங்கள் அரசியலுக்கு எப்படி இந்த அவலங்களைப் பாவிக்கலாமே என்று சிந்திப்பார்கள்.

[size=4]இதனை எல்லோரும் வாசித்திருப்பார்கள்...[/size]

[size=4]குற்ற உணர்வும் தலைகுனிவும் வந்திருக்கும். தலை குனிந்து சென்றிருப்பார்கள்.[/size]

[size=4]இதற்கு யாரை கை நீட்டி காட்லாம் என்று நீங்கள் யோசித்து [/size]

[size=4]உங்களுக்கு மூளையில் வந்தவர்களை கை நீட்டி காட்டிவிட்டு போய்விட்டீர்கள். [/size]

[size=4]நாங்கள் எங்களையே கை நீட்டி காட்டுகிறோம். யார்மீதும் பலியை சுமற்றி தப்பிக்கும் தந்திரம் எங்களுக்கு தெரியாதது ஒரு காரணமாகவும் இருக்காலாம்.[/size]

[size=4] [/size]

[size=4]யோனி. கர்ணனோ சோபா சுத்தியோ இதை வைத்து ஒரு தமிழ் இலக்கியம் படைத்தால் கொண்டு வந்து இணையுங்கள். தமிழுக்கு செய்யும் பணியாக நினைத்து வாசித்து கொள்கிறோம்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

எவரையும் செய் என்று உத்தரவிட என் மனம் இடம் தரவில்லை.

நீங்கள் எவர் மீதாவது நம்பிக்கை வைத்திருந்தால் அவருக்கு அறியத்தாருங்கள்.

நானும் எனக்குத்தெரிந்தவருக்கு அறியத்தருகின்றேன்

என்னால் முடிந்தளவு ஏதாவது செய்ய முயல்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுதி எவரும் தீர்வை முன் வைக்கவில்லை.

மற்றவர் மீது பழியை அல்லது தாக்குதலை மட்டுமே செய்துள்ளனர்.

அல்லது எவராவது செய்யட்டும் என வழமைபோல் தம்மை விடுவித்துள்ளனர்.

இதுவே தமிழர்.

தொடரட்டும் தங்கள் பணி. :( :( :(

விசுகு ஐயா, தமிழர்களுக்கு என்று பல அரசியல் அமைப்புக்கள் உள்ளன, புலம்பெயர் நாடுகளில் பல விடுதலைச் செயற்பாட்டு அமைப்புக்கள், மனிதநேயச் செயற்பாட்டு அமைப்புக்கள் உள்ளன. ஏன் நாடு கடந்த அரசாங்கம் கூட இருக்கின்றது. இவர்கள் எல்லாம் அரசியல் ரீதியில் காத்திரமான செயற்பாட்டில் இறங்கினால் பொதுமக்கள் இணைந்து அரசியல் ரீதியிலான அழுத்தங்களுக்கான ஆதரவு நடவடிக்கைகளில் இறங்குவார்கள்தானே.

சண்டமாருதன் சொன்னமாதிரி இப்படியான விடயங்களை முதலில் அரசியல் கருத்தாடல்களில் கொணர்ந்து இலங்கையரசிற்கு அழுத்தங்களைக் கொண்டுவரமுடியுமா என்று கேட்டுப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கு கருத்தெழுதியிருக்கலாம் இதை விட கிரேட் இன்சல்ட் வேறு இருக்கமுடியாது. இருக்கட்டும்.

எவர் குற்றி அரிசியானால் சரி என்பது எனக்கும் பிடித்திருக்கிறது... இங்குதான் கேள்வியே எவர் குற்றுவது?

[size=4]ஏன் அடுத்தவரை குற்றம் சாடுகிறேன்.....[/size]

[size=4]நான் குத்தினால் என்ன? என்ற கேள்விதான் இந்த தலைப்பின் கீழ் எதையும் எழுதாமல் எமை கடந்து செல்ல வைத்தது.[/size]

[size=4] [/size]

[size=4]எம்மால்தான் முடியவில்லை....[/size]

[size=4]யாராவது குத்தமாட்டார்களா? என்று இரண்டு தரப்பினர் காத்திருக்கிறார்கள்.[/size]

[size=4]ஒருசாரர் அவர்கள் கைகளை முடிந்த அளவில் பலபடுத்தும் ஆவல் கொண்டவர்.[/size]

[size=4]மற்றையவர் என்ன குற்றம் காணலாம் உலக்கை பிடித்தது பிழை சர்வதேச முறைப்படி இது குற்றம் போன்ற விண்ணாணம் பேசி சுய விளம்பரம் செய்வதற்கு.[/size]

[size=4]நீங்கள் இதில் எந்த சாரர்?[/size]

  • கருத்துக்கள உறவுகள்

எவரையும் செய் என்று உத்தரவிட என் மனம் இடம் தரவில்லை.

நீங்கள் எவர் மீதாவது நம்பிக்கை வைத்திருந்தால் அவருக்கு அறியத்தாருங்கள்.

நானும் எனக்குத்தெரிந்தவருக்கு அறியத்தருகின்றேன்

என்னால் முடிந்தளவு ஏதாவது செய்ய முயல்கின்றேன்.

ஏன் விசுகு அண்ணா நீங்கள் நாடு கடந்த அரசு, மக்களவை போன்ற எவற்றுக்கும் வாக்களிக்கவில்லையா?

அப்படியோ வாக்களித்திருந்தால் ஏன் வாக்களித்தீர்கள்?

[size=4]ஏன் அடுத்தவரை குற்றம் சாடுகிறேன்.....[/size]

[size=4]நான் குத்தினால் என்ன? என்ற கேள்விதான் இந்த தலைப்பின் கீழ் எதையும் எழுதாமல் எமை கடந்து செல்ல வைத்தது.[/size]

[size=4]எம்மால்தான் முடியவில்லை....[/size]

[size=4]யாராவது குத்தமாட்டார்களா? என்று இரண்டு தரப்பினர் காத்திருக்கிறார்கள்.[/size]

[size=4]ஒருசாரர் அவர்கள் கைகளை முடிந்த அளவில் பலபடுத்தும் ஆவல் கொண்டவர்.[/size]

[size=4]மற்றையவர் என்ன குற்றம் காணலாம் உலக்கை பிடித்தது பிழை சர்வதேச முறைப்படி இது குற்றம் போன்ற விண்ணாணம் பேசி சுய விளம்பரம் செய்வதற்கு.[/size]

[size=4]நீங்கள் இதில் எந்த சாரர்?[/size]

அடடா உங்களுக்குத் தெரியாதா மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்குத்தான் அந்தத் தகுதி உண்டென்று.... சரியான உலகம் தெரியாத அப்பாவியா இருக்கீங்களே மருது..!

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இதனை எல்லோரும் வாசித்திருப்பார்கள்...[/size]

[size=4]குற்ற உணர்வும் தலைகுனிவும் வந்திருக்கும். தலை குனிந்து சென்றிருப்பார்கள்.[/size]

[size=4]இதற்கு யாரை கை நீட்டி காட்லாம் என்று நீங்கள் யோசித்து [/size]

[size=4]உங்களுக்கு மூளையில் வந்தவர்களை கை நீட்டி காட்டிவிட்டு போய்விட்டீர்கள். [/size]

[size=4]நாங்கள் எங்களையே கை நீட்டி காட்டுகிறோம். யார்மீதும் பலியை சுமற்றி தப்பிக்கும் தந்திரம் எங்களுக்கு தெரியாதது ஒரு காரணமாகவும் இருக்காலாம்.[/size]

[size=4]யோனி. கர்ணனோ சோபா சுத்தியோ இதை வைத்து ஒரு தமிழ் இலக்கியம் படைத்தால் கொண்டு வந்து இணையுங்கள். தமிழுக்கு செய்யும் பணியாக நினைத்து வாசித்து கொள்கிறோம்.[/size]

நல்லது மருதங்கேணி..

தங்களையே கைகாட்டி குற்றவுணர்வில் தலைகுனிந்து எதையும் பார்க்காமல் அப்பால் நகர்ந்து, மனங்குமைந்து அழுதுவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதுதானே பலருக்கு இப்போது பழக்கம்.

சில கூட்டமைப்பில் இருக்கும் அரசியல்வாதிகள் முன்னாள் போராளிகளை வெளியேவிட்டால் தங்கள் சொந்த அரசியலிருப்புக்கு ஆபத்து என்று உள்ளேயே வைத்திருங்கள் என்று மகிந்தவுக்கு சொன்னார்களாம் என்று அண்மையில் வாசித்திருந்தேன். அவர்களை விட தலைகுனிந்து நிற்கும் நீங்கள் உயர்வானர்களே.

[size=4]நானும் நீங்களும் கூட்டமைப்பில் இருந்திருந்தால்.....?[/size]

[size=4]இப்படி செய்திருப்போமா?[/size]

[size=4]நானும் நீங்களும் ஏன் கூட்டமைப்பில் இருக்கவில்லை. எமது இருப்பை உறுதியாக வைத்துக்கொண்டுதானே அரசியல் பேசுகிறோம். இந்த குற்ற உணர்வுதான் என்னுடையது. [/size]

தமிழ் மக்களின் விடுதலைக்கு என்று போராட்டம் நடந்தபோது வடம் பிடித்தவர்களில் பலர், போராட்டம் முற்றுப் பெற்று எஞ்சிய போராளிகளும் பொதுமக்களும் அவலங்களில் இன்னமும் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது 'தேர் விழுந்துவிட்டதுதானே; இனிச் செய்ய என்ன இருக்கின்றது' என்று எதுவித குற்றவுணர்வும் இன்றியுள்ளனர்.

இவர்களை மீண்டும் ஒரு அரசியல் சக்தியாக்கவேண்டியது அரசியல் தலைமைகளின் பொறுப்பு. அந்தக் கடமையை அவர்கள் சரிவரச் செய்யாமல் இருப்பதனால்தான் நீங்களும் நானும் எமது இருப்பை உறுதியாக வைத்துக்கொண்டு கழிவிரக்க அரசியல் பேசுகின்றோம். இல்லாவிட்டால் வேறு பொழுதுபோக்குகள் என்ன இருக்கின்றது?

நன்றி கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் விசுகு அண்ணா நீங்கள் நாடு கடந்த அரசு, மக்களவை போன்ற எவற்றுக்கும் வாக்களிக்கவில்லையா?

அப்படியோ வாக்களித்திருந்தால் ஏன் வாக்களித்தீர்கள்?

வாக்களித்தது உண்மைதான்

ஆனால் அவர்களுக்கான எந்த தொடர் உதவியும் செய்யாமல்

(அவர்கள் வண்டி காற்றில் அல்லது தண்ணியிலா ஓடுகிறது)

இதையும் செய்யுங்கள் என சொல்ல மனம் கூசுது.

அவ்வளவு தான்

  • கருத்துக்கள உறவுகள்

வாக்களித்தது உண்மைதான்

ஆனால் அவர்களுக்கான எந்த தொடர் உதவியும் செய்யாமல்

(அவர்கள் வண்டி காற்றில் அல்லது தண்ணியிலா ஓடுகிறது)

இதையும் செய்யுங்கள் என சொல்ல மனம் கூசுது.

அவ்வளவு தான்

அப்படியானால் அவர்களின் இருப்புக்கே நாம்தான் வழிகாட்டவேண்டுமா?...

ஓ...மை... காட் ஏனிந்த சோதனை?

இவர்களுக்கே இருப்புக்கு வழியில்லையாம் இவர்கள்போய் எப்படி எதையாவது உருப்படியாக செய்யப்போகிறார்கள்? ஆமா தமது இருப்பையே கேள்வியாக வைத்திருப்பவர்கள் ஏன் மக்கள் வாக்கெடுப்பு நடாத்தினார்கள்? ஏன் போட்டி அரசியலை முன்னெடுத்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எதையே மனதில் வைத்து எழுதுகின்றீர்கள்

நான் எனக்கு மனம் கூசுது என்றுதான் சொன்னேன்

சத்தியமாக உங்களை புண்படுத்துவது எனது நோக்கமல்ல...

உங்களிடம் சில வினவல்களைச் செய்தேன் அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சகோதரி

எனக்கு எல்லோரோடும் தொடர்பு உண்டு

ஈனி இப்படித்தான் பயணிக்கப்போகின்றோம் என்று புரிகிறது.

ஒரு அணி

ஒரு தலைமை என்பதெல்லாம் இனி வராது

அதனால் ஆளை ஆள் முட்டுப்படாமல்

குறை கூறிக்கொண்டிராமல்

பாதைகள் வேறாயினும் இலட்சியம் ஒன்றே என்ற கோட்பாட்டோடு பயணிப்பதே சிறந்தது.

அந்தவகையில் தான் நானும் எழுதினேன்.

ஒரு வார்த்தை

அதை வார்த்தையாகவே எழுதினேன்

மனதளவில் அன் அர்த்தத்தை புரிந்து கொள்ள அதை நீங்கள்சுட்டிக்காட்ட வேண்டியிருந்தது

மன்னிப்பீர். மறப்பீர் என்ற நம்பிக்கையுடன்.

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.