Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணி அதிகாரங்கள் மத்திய அரசிற்கு மாத்திரமே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

supreme_court(3).jpg

காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கு மாத்திரமே என உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தின் படி மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் வழங்க முடியாது எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

காணி உரிமை தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சு தாக்கல் செய்த மனுவொன்றிற்கு தீர்ப்பு வழங்கும்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையில் நீதியரசர்களான எஸ்.ஸ்ரீபவன் மற்றும் ஈவா வனசுந்தர ஆகியோரை கொண்டு குழவினரே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

 

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/83776-2013-09-26-05-26-31.html

இதைதான் நம்பி தேர்தலை நடத்தியவர்கள்.

 

JVP ஒரு வழக்குடன் வடக்கு கிழக்கைப் பிரித்தது. இன்னொரு வழக்குடன் காணி அதிகாரம் போய்விட்டது. எந்த சர்வதேச ஒப்பந்தமும் இலங்கை கோடுகளில் நடத்தப்படும் ஒரு தனி நபர் வழக்குடன் முடிவடைந்துவிடும் ஆச்சரியம் ஆசியாவில் இலங்கையிடம்தான் காணப்படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட கிழக்கு மாகாணங்களுக்கு காணி அதிகாரம் உட்பட அனைத்து அதிகாரங்களும் சரியான முறையில் பகிரப்படவேண்டுமானால் இந்தியாதான் கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்கவேண்டும் மற்றும்படி சிங்களவனை ஒரு வழிக்கும் வரமாட்டான்.  

ஆப்பு இலக்கம் - 1

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் இலங்கை தன் தலையில் மண் அள்ளி போடுகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே போலியாக ராஜீவ் தமிழ் மக்களை ஏமாற்ற இணைத்த வடக்குக் கிழக்கு மாகாண சபையை பிரித்ததன் மூலமே.. ஆப்பு அடிக்க ஆரம்பமாகிவிட்டது.

 

தேசிய தலைவர் 1987 இலேயே சொல்லிட்டார்.. இந்த மாகாண சபைகளில் எதுவும் இல்லை. இது தமிழ் மக்களை ஏமாற்றச் செய்யும் வேலை என்று. அன்று இந்த மாகாண சபைகளை.. இந்திய மாநிலங்களுக்கு ஈடாகக் காட்டி செய்யப்பட்ட பிரச்சாரத்தை முறியடிக்க புலிகள் எடுத்த முயற்சிகள் பல. இன்று... அன்று புலிகள் சொன்னவை அனைத்தும் உண்மையாக வரிசையாக நடந்தேறி.. வருகின்றன...!

 

ஆனால்.. இன்னும் 13 ம் திருத்தம்.. மாகாண சபை.. தமிழ் மக்களின் உரிமை.. நல்லிணக்கம்.. ஐக்கிய இலங்கை என்று பேசுவது.. நகைப்புக்கிடமானது. இதனைக் கடந்து.. சொல்ல வேண்டிய நிலையில் தமிழ் மக்கள்.. மீண்டும் இந்தியாவை நம்பி ஏமாற முடியாது. எனி சர்வதேசத்தின்.. ஐநாவின் பங்களிப்போடு.. ஒரு திடமான தீர்வை நோக்கிச் செல்வதே அவசியம். மாகாண சபைகள் காலாவதியான விடயம்..! உப்புச் சப்பற்ற ஒன்று.. என்பதே யதார்த்தம்..! அது ஜே ஆர்.. ராஜீவ் மோசடி..! :icon_idea:

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களே! நீங்கள் மீண்டும் ஆயுதம் தூக்கித்தான் உங்கள் உரிமையைக் கோரமுடியும். என்பதை வலியுறுத்தும் ஒரு தீர்ப்பாகவே இதனைக் கருதலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களே! நீங்கள் மீண்டும் ஆயுதம் தூக்கித்தான் உங்கள் உரிமையைக் கோரமுடியும். என்பதை வலியுறுத்தும் ஒரு தீர்ப்பாகவே இதனைக் கருதலாம்.  

 

சுருக்கமாய் சொல்லப் போனால்..அன்றில் இருந்து இன்று வர தமிழனுக்கு சிங்களவன் ஒன்றும் குடுக்க விரும்பினது இல்லை.....இனி ஆயுதம் தூக்கினா சிங்களவன் தான் கூடிய‌ அழிவை சந்திப்பான்.....

  • கருத்துக்கள உறவுகள்

சுருக்கமாய் சொல்லப் போனால்..அன்றில் இருந்து இன்று வர தமிழனுக்கு சிங்களவன் ஒன்றும் குடுக்க விரும்பினது இல்லை.....இனி ஆயுதம் தூக்கினா சிங்களவன் தான் கூடிய‌ அழிவை சந்திப்பான்.....

 

சிங்களவன்  எதுவும்  தரமாட்டான் என்பது  தமிழ் எல்லோருக்கும் தெரியும்

ஆனால்

உலகம் தருவான்

வாங்கித்தருகின்றோம் என்று தமிழருக்கு உறுதியளித்தது.

அதற்குத்தான்  சிங்களம் இப்ப வேட.டு வைக்கது

இனி  நாம் ஆயுதம் எந்தத்தேவையில்லை

உலகத்தை நோக்கி 

கேள்விக்கணைகளை  விடுக்கணும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன்  எதுவும்  தரமாட்டான் என்பது  தமிழ் எல்லோருக்கும் தெரியும்

ஆனால்

உலகம் தருவான்

வாங்கித்தருகின்றோம் என்று தமிழருக்கு உறுதியளித்தது.

அதற்குத்தான்  சிங்களம் இப்ப வேட.டு வைக்கது

இனி  நாம் ஆயுதம் எந்தத்தேவையில்லை

உலகத்தை நோக்கி 

கேள்விக்கணைகளை  விடுக்கணும்

புலிகள் போராடியதற்கான காரணங்களை உலகம் அறிந்திருக்கும் .... :( அறிந்து என்ன பிரயோசனம் ? :unsure: விட்ட தவறுக்காக விமோசமாக உரிமைகளை பெற்றுக்கொடுக்கவேண்டும் அதனை சிங்களவனிடம் பெற முடியுமா என்பதுதான் இன்று உள்ள கேள்வி :rolleyes:    

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன்  எதுவும்  தரமாட்டான் என்பது  தமிழ் எல்லோருக்கும் தெரியும்

ஆனால்

உலகம் தருவான்

வாங்கித்தருகின்றோம் என்று தமிழருக்கு உறுதியளித்தது.

அதற்குத்தான்  சிங்களம் இப்ப வேட.டு வைக்கது

இனி  நாம் ஆயுதம் எந்தத்தேவையில்லை

உலகத்தை நோக்கி 

கேள்விக்கணைகளை  விடுக்கணும்

 

நீங்கள் சொல்வதும் சரி தான்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.