Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையர்கட்டு கிராமமக்களுக்கு ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கல் நிகழ்வு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலையர்கட்டு கிராமமக்களுக்கு ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கல் நிகழ்வு.

 

போரால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களில் ஒன்றான மாலையர்கட்டில் வறுமைக்கோட்டிற்கு கீட்பட்ட 44குடும்பங்களுக்கான வாழ்வாதார ஊக்குவிப்பாக ஆயிரம் கோழிக்குஞ்சுகள் 01.10.2013 அன்று நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது.

 

நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பின் அமைப்பாளர் திரு.ஜனனன் , உபதலைவர் டினேஷ் , எமது உப அமைப்பான மீழ்ச்சி அமைப்பின் தலைவர் பொருளாளர் , உறுப்பினர்கள் , மலையர்கட்டு கிராம சேவகர் திரு.குகதாசன் , கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கயேந்திரன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

ஏற்கனவே இக்கிராமத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக அடிப்படைத் தேவைகளை எமது அமைப்பு வழங்கியிருந்தது. தொடர்ந்த இக்கிராமத்தின் வாழ்வாதார சுகாதார மனநல ஆதரவினை வழங்க வேண்டிய தேவைகள் இருப்பதனை அவதானித்துள்ளோம். புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு மட்டுமே இந்த மக்களின் வாழ்வை மாற்ற முடியும்.

 

கோழிக்குஞ்சுகளை வழங்க 150000ரூபா நிதியுதவியினை(ஒன்றரை லட்சரூபா)  வழங்கிய கனடா ரவி ,  சுரேஷ் நண்பர்களுக்கு எமது சிறப்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்கனவே 32 குடும்பங்களுக்கான நிலக்கடலை பயிரிடுவதற்காகவும் இவ்விருவரும் உதவியுள்ளனர்.  றவி , சுரேஷ் நண்பர்கள் வழங்கிவரும் ஆதரவானது எமது தொடர்ந்த பணிகளை மேலும் விரிவாக்கம் செய்யவும் பேராதரவாக அமைகிறது.

DSCF5787-150x150.jpg DSCF5790-150x150.jpg DSCF5798-150x150.jpg
DSCF5802-150x150.jpg DSCF5803-150x150.jpg DSCF5809-150x150.jpg
DSCF5812-150x150.jpg DSCF5813-150x150.jpg
DSCF5815-150x150.jpg DSCF5817-150x150.jpg DSCF5818-150x150.jpg
DSCF5823-150x150.jpg DSCF5825-150x150.jpg DSCF5827-150x150.jpg
DSCF5829-150x150.jpg

Chiken-1-744x1024.jpgChiken-2-744x1024.jpg

Chiken-3-744x1024.jpg

Chiken-4-744x1024.jpg

http://nesakkaram.org/ta/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் சமூக சேவக நண்பர்கள் கனடா ரவி மற்றும் சுரேஸ் அவர்களுக்கு நன்றி.

உங்களது திட்டங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

உதவும் உள்ளங்களுக்கு நன்றி..!

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் சமூக சேவக நண்பர்கள் கனடா ரவி மற்றும் சுரேஸ் அவர்களுக்கு நன்றி.

உங்களது திட்டங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். 

  •  

  •  

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரின் உதவிகளும் பெரும் பலமாக பாதிக்கப்பட்ட எங்கள் மக்களைச் சென்றடைய ஆதரவு தருகின்றவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் விவசாயி விக் , விசுகு , இசைக்கலைஞன் , ஆதி பகவான் , பெருமாள் உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றிகள்.

உதவும் உள்ளங்களுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

உதவியவர்களுக்கும் செயற்படுத்தியவர்களுக்கும்  நன்றிகள் பல.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திட்டத்தை ஒருவரிடமே முதல் இடுவதற்கு எவளவு சிலவாகும்

இட வளம்

உணவு வளம்

மற்றும் இன்ன பிற செலவுகள்

முதல் இடுபவருக்கான லாப வீதம்

வளர்பவருக்கான லாப வீதம் போன்ற விபரங்களை தர முடியுமா சாந்தி அக்கா ?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திட்டத்தை ஒருவரிடமே முதல் இடுவதற்கு எவளவு சிலவாகும்

இட வளம்

உணவு வளம்

மற்றும் இன்ன பிற செலவுகள்

முதல் இடுபவருக்கான லாப வீதம்

வளர்பவருக்கான லாப வீதம் போன்ற விபரங்களை தர முடியுமா சாந்தி அக்கா ?

 

 

நல்லதொரு  கேள்வியும் முயற்சியும் சுண்டல்

 

பதிலையும் இங்கே பதியுங்கள் சாந்தியக்கா

எல்லோரும் பார்க்கட்டும்

பார்க்கவேண்டும்..........

  • கருத்துக்கள உறவுகள்

உதவும் உள்ளங்களுக்கு நன்றி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல், விசுகு இருவருக்கும், :-
கோழிவளர்ப்பு பண்ணையொன்று ஆயிரம் கோழிக்குஞ்சு வளர்ப்புத் திட்டத்திற்கான செயற்திட்டம் மேலும் மாதிரிப்பண்ணைகளின் திட்டங்களும் 2014ம் ஆண்டு நேசக்கரத்தால் செயற்படுத்துவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. நவம்பர் மாதம் இதுபற்றிய செய்தியை வெளியிட இருந்தேன். ஆனால் நீங்கள் இது பற்றி இங்கு கேட்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நாளை கோழிப்பண்ணைக்கான முழுமையான விபரங்களைத் தருகிறேன். பயன் , இலாபம் ,பயனடையும் பயனாளிகள் தொகை , செயற்படுத்தல் முறை யாவும் நாளை தருகிறேன்.

 

மற்றும் கருத்திட்ட Kkaran, நுணாவிலான், சுவியண்ணா ஆகியோருக்கும் நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த திட்டத்தை ஒருவரிடமே முதல் இடுவதற்கு எவளவு சிலவாகும்

இட வளம்

உணவு வளம்

மற்றும் இன்ன பிற செலவுகள்

முதல் இடுபவருக்கான லாப வீதம்

வளர்பவருக்கான லாப வீதம் போன்ற விபரங்களை தர முடியுமா சாந்தி அக்கா ?

 

கோழிப்பண்ணை அமைத்தல்.

மாதிரிக்குடியேற்றமாக செய்வது சிறந்தது. போரால் பாதிக்கப்பட்ட விதவைகள் அல்லது ஊனமுற்றவர்களை இத்திட்டத்தில் இணைக்கலாம். அதுவும் நிலம் இல்லாது அவலப்படுவோரை உள்வாங்கி இத்திட்டத்தை செயற்படுத்துவது சிறப்பானது.

 

நிலமொன்றை கொள்வனவு செய்து அதில் குடியேற்றும் குடும்பங்களை வைத்து கோழிப்பண்ணையை நடத்தலாம். இவர்களுக்கு நிதி முதலீட்டை வழங்குவோரும் குறித்த குடும்பங்களும் தொடர்புகளைப் பேணிக்கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்து தேவையான ஒழுங்குகளை நேசக்கரம் செய்து தரும்.

குறித்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் காணியில் அவர்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வசதிகளோடு மரக்கறி வகைகள் பயிரிடுவதற்கான ஒழுங்கினையும் ஏற்படுத்திக் கொடுப்போம்.

பண்ணைக்கான தேவைகள் :-

1)  நிலம் - 300000.00ரூபா (அண்ணளவாக 1800.00€) (சொந்தமாக கொள்வனவு செய்வதற்கான விலை)

(நிலம் குத்தகைக்கு எடுத்து பண்ணையமைக்க வருடத்திற்கு – 75000.00ரூபா)

2) ஆயிரம் கோழிக்குஞ்சுகளை பராமரிக்க 5 குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும்.

3) 5குடும்பங்களுக்கான தற்காலிக வீடமைக்க – 200000.00ரூபா (அண்ணளவாக 1200€)

4) ஒரு கோழிக்குஞ்சின் விலை – 125ரூபா

1000 குஞ்சுகள் - 125000.00ரூபா ((அண்ணளவாக 750€)

5) கோழித்தீன் - 50000.00ரூபா((அண்ணளவாக 300€)

6) மருந்து – 10000.00ரூபா (அண்ணளவாக 60€)

7) கோழிக்கூடு தயாரிக்க  – 200000.00ரூபா (அண்ணளவாக1200€)

மொத்தம் - 885000.00ரூபா (அண்ணளவாக 5310€)

முட்டைக்கோழி மற்றும் 45நாள் இறைச்சிக்கோழி வளர்ப்பு இரண்டையும் செய்யலாம். முட்டைக்கோழியின் பயன் மூன்றரை மாதத்தில் கிடைக்கும். நாட்டுக்கோழி முட்டை விலை – 15.00ரூபா.

 

பயனடையும் குடும்பத்திற்கான கொடுப்பனவு தவிர்ந்து மூன்றில் இரண்டு பங்கு முதலீட்டாளருக்கு வழங்க முடியும். உங்கள் உதவி மூலம் ஒரு குடும்பத்திற்கான தொழில் வாய்ப்பும் வாழ்வதற்கான சொந்தமான நிலம் தற்காலிக வீடும் கிடைக்கிறது. இந்த தொழில் மூலம் அவர்கள் தங்களுக்கான நிரந்தர வீட்டை அமைத்துக் கொண்டு முன்னேற முடியும்.

 

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் அக்கா ......

சிலருடன் பேசி பார்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் அக்கா ......

சிலருடன் பேசி பார்கின்றேன்

 

வணக்கம் சுண்டல்

மற்றும் சாந்தியக்கா

 

 

எனக்கு பல நாளாக ஒரு  ஆசையுண்டு

யாழ்கள  உறவுகள் ஒன்றிணைந்து எதாவது செய்யவேண்டும் என்று.

 

அதற்கு இந்த திட்டத்தை பரீட்சித்து பார்த்தால் என்ன??

நான் எதிர்பார்த்த தொகையிலும் சிறிது இது பெரிதாக இருந்தாலும்

சில அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுமாயின் இதை  நாம் செய்யமுடியும்.

 

என்னுடைய அபிப்பிராயத்தை பதிகின்றேன்.

மற்றவர்களும் சொல்லுங்கள்

 

பத்து யாழ்கள உறுப்பினர்கள் இதை பொறுப்பெடுப்போம்.

ஆளுக்கு 500 ஈரோக்கள் வருகிறது

உங்களது நெருங்கிய  உறவுகள்  நண்பர்கள் அயலவர்கள் எவராயினும் வசதிக்கேற்ப

 

ஐந்து பேர் சேர்த்தால் ஆளுக்கு 100  ஈரோக்கள்.

10 பேரைச்சேர்த்தால்  ஆளுக்கு 50 ஈரோக்கள்.

 

5 குடும்பத்துக்கு வாழ்வு கொடுத்ததுடன்

அதே முதலீட்டை லாபத்தை நாம் எடுக்காமல் சுழற்சி முறையில்

சாந்தி அக்காவின்   மேற்பார்வையிலேயே  விட்டு விடலாம்.

வேண்டுமென்றால்

யாழ் இணைய  உறவுகளால் செய்யப்பட்டது என ஒரு விளம்பரத்தை அங்கு வைத்துவிடலாம் (மற்றவர்களுக்கு உற்சாகமும் அவர்களும் இதே உதாரணத்தை பின் பற்றி  செய்வதற்கு)

 

நவம்பர்  கடைசிக்குள் 10 பேர் இங்கு உடன்பட்டால்

மார்கழிக்குள் பணத்தை சாந்தியக்காவுக்கு அனுப்பி

தைப்பொங்கலில் செய்து முடித்து

தை பிறந்தால் 5 குடும்பத்துக்கு வழி காட்டலாம்.

வருவீர்களா???

 

 

(குறிப்பு : இத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 5000  ஈரோக்களுக்கும்  சம்மதம் தெரிவித்தால் மட்டுமே சாந்தியக்காவிடம் திட்டம்    கேட்கப்படும்.  ஒருவர் குறைந்தாலும் செய்யமுடியாது போகலாம்)

 

1- விசுகு............................ .அ- விசுகு

                                               ஆ-

                                                இ-

                                                ஈ-

                                                உ-  (ஐந்து பேரை  நான் சேர்த்து 500   ஈரோக்கள் தருகின்றேன்)

 

2-

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் அக்கா ......

சிலருடன் பேசி பார்கின்றேன்

 

முயற்சி செய்யுங்கள் சுண்டல் வெற்றியளித்தால் நடைமுறைப்படுத்துவோம்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனியே கோழிப்பண்ணைய நிர்வகிக்க கட்டாயம் 5 - 8பேர் தேவை. ஆயிரம் கோழிகள் பராமரிப்பு சிலரால் செய்ய முடியாது.  இதையே நாங்கள் நிலம் இல்லாதவர்களுக்கு நிலத்தையும் வழங்கி அவர்களை நிரந்தர முன்னேற்றத்தை நோக்கி வழிகாட்டி விடுவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தில் மாற்றத்தையும் கொண்டு வரலாம். விசுகு நீங்கள் குறிப்பிட்டது போல இந்தத் திட்டத்தை யாழிணையம் மாதிரிக்கிராமமாகவே செய்ய முடியும். இதனை நாங்கள் தொடர்ந்து பல இடங்களில் நடைமுறைப்படுத்தலாம். இந்த மாதிரிக்கிராம அமைப்பினுள் குடியேற்றப்படும் குடும்பங்களுக்குத் தேவையான யாவையும் செய்து கொடுக்கலாம்.

இந்தக் குடும்பங்களுக்கான நிலத்தை இலவசமாக பெறுவதற்கு காணியைத் தரக்கூடியவர்களை அணுகியுள்ளோம். சிலவேளை எமக்கான நிலம் இலவசமாகவும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

 

அப்ப நிலம் இலவசமாக கிடைத்தால் நிலத்துக்கான 1800€ ரூபா எமக்கு மீதமாகும. காணியைப் பெறுவதற்கான முயற்சி பயனளித்தால் இங்கே அறியத்தருவேன். காணி தவிர்ந்த மீத உதவியை முடிந்தால் கள உறவுகள் தயார்படுத்துங்கள்.

இத்திட்டத்தில் கிடைக்கும் வருமானத்தை மேலும் ஒரு மாதிரிப் பண்ணையை அல்லது நிலத்தை உருவாக்க பயன்படுத்தலாம். இதில் பங்களித்து திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நீங்களே இதன் முழுமையான நிருவாகத்தையும் கொண்டு நடத்தலாம். நேசக்கரம் ஒருங்கணைப்பு கணக்கு வளக்கு செயற்பாட்டை கவனித்து பயனறிக்கைகளை தந்து கொண்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுண்டல்

மற்றும் சாந்தியக்கா

எனக்கு பல நாளாக ஒரு ஆசையுண்டு

யாழ்கள உறவுகள் ஒன்றிணைந்து எதாவது செய்யவேண்டும் என்று.

அதற்கு இந்த திட்டத்தை பரீட்சித்து பார்த்தால் என்ன??

நான் எதிர்பார்த்த தொகையிலும் சிறிது இது பெரிதாக இருந்தாலும்

சில அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுமாயின் இதை நாம் செய்யமுடியும்.

என்னுடைய அபிப்பிராயத்தை பதிகின்றேன்.

மற்றவர்களும் சொல்லுங்கள்

பத்து யாழ்கள உறுப்பினர்கள் இதை பொறுப்பெடுப்போம்.

ஆளுக்கு 500 ஈரோக்கள் வருகிறது

உங்களது நெருங்கிய உறவுகள் நண்பர்கள் அயலவர்கள் எவராயினும் வசதிக்கேற்ப

ஐந்து பேர் சேர்த்தால் ஆளுக்கு 100 ஈரோக்கள்.

10 பேரைச்சேர்த்தால் ஆளுக்கு 50 ஈரோக்கள்.

5 குடும்பத்துக்கு வாழ்வு கொடுத்ததுடன்

அதே முதலீட்டை லாபத்தை நாம் எடுக்காமல் சுழற்சி முறையில்

சாந்தி அக்காவின் மேற்பார்வையிலேயே விட்டு விடலாம்.

வேண்டுமென்றால்

யாழ் இணைய உறவுகளால் செய்யப்பட்டது என ஒரு விளம்பரத்தை அங்கு வைத்துவிடலாம் (மற்றவர்களுக்கு உற்சாகமும் அவர்களும் இதே உதாரணத்தை பின் பற்றி செய்வதற்கு)

நவம்பர் கடைசிக்குள் 10 பேர் இங்கு உடன்பட்டால்

மார்கழிக்குள் பணத்தை சாந்தியக்காவுக்கு அனுப்பி

தைப்பொங்கலில் செய்து முடித்து

தை பிறந்தால் 5 குடும்பத்துக்கு வழி காட்டலாம்.

வருவீர்களா???

(குறிப்பு : இத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 5000 ஈரோக்களுக்கும் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே சாந்தியக்காவிடம் திட்டம் கேட்கப்படும். ஒருவர் குறைந்தாலும் செய்யமுடியாது போகலாம்)

1- விசுகு............................ .அ- விசுகு

ஆ-

இ-

ஈ-

உ- (ஐந்து பேரை நான் சேர்த்து 500 ஈரோக்கள் தருகின்றேன்)

2-

10 ல 1 பங்கு நானும் எடுக்கிறன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எட்டுப்பங்கு. இதனையும் ஒவ்வொருவர் தாங்கள் வாழும் நாடு சார்ந்து பொறுப்பேற்றால் திட்டத்தை நிறைவேற்ற  முடியும்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  சுண்டல்

இன்னும் எட்டுப்பங்கு.

இதனையும் ஒவ்வொருவர் தாங்கள் வாழும் நாடு சார்ந்து பொறுப்பேற்றால் திட்டத்தை நிறைவேற்ற  முடியும்.

 

இன்று கார்த்திகை 1

இந்த  மாதம் முடிவதற்குள்
தயவு செய்து எல்லோரும்  முயலுங்கள்  உறவுகளே....
மனமுண்டானால்  நிச்சயம் 
வழியுண்டு
தை பிறந்தால்
வழி  பிறக்கச்செய்வோம்....

எனக்கும் நிறைய செய்ய வேண்டும் என்று ஆசையிருக்கு ஆனால் நேரப்பற்றாக்குறை, அசட்டு தன்மையால் அதிகமானதை வாசிப்பதோடு போய்விடுவேன். இதில் நானும் 10ல் அல்லது 5இல் ஒருவராக இணைகிறேன். எனது பங்கை கந்தப்புவிடம் திங்கள் கொடுக்கின்றேன். அவர் யாராவது அவுஸ் நண்பர்களை தொடர்பு கொண்டு கொடுக்க இயலுமாயின் கொடுக்கட்டும் அல்லது பணத்தை அனுப்புவதயின் அனுப்பலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2ஏக்கர்காணி பார்த்துவிட்டோம். மிகவும் பொருத்தமான இடம். கோழிப்பண்ணை குடும்பங்கள் குடியேற்றம் அத்தோடு ஆயுர்வேத மருத்துவ பயிர்களை பயிரிடவும் அந்த இடத்திலேயே ஆயுர்வேத மருத்துவ நிலையயும் அமைக்க வேலைகள் நடக்கிறது. காணியை ஒருவர் மிகவும் குறைந்த விலையில் எமக்கு தருவதற்கு சம்மதித்துள்ளார்.

 

2ஏக்கரும் ஒருலட்சரூபாய்(600€).

உதவிகள் கிடைக்கும் பட்சத்தில் முதலில் காணியை கொள்வனவு செய்யலாம். மற்றவற்றை படிப்படியாக செய்ய முடியும். உங்கள் ஆலோசனைகள் கருத்துக்களையும் அறியத் தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.இங்கு குறிப்பிடப்பட்ட திட்டத்தில் சில விடையங்களில் தெளிவு பெற விரும்புகிறேன்.இது நேசக்கரத்தினுடான ஒரு முதலீடா அல்லது உதவியா.முதலீடு என்றால் சம்பந்தப்ட்ட முதல்(நிலம் கோழிக்குடு போன்றவை) யாருக்கு சொந்தம்.எனக்கு கோழி வழர்ப்பில் ஓரளவு ஆர்வமும் அனுபவமும் இருப்பதால் மேலதிகமான விரிவான தகவல்களை எதிர்பாக்கிறேன்..நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவைப்பிரியன் வேலைப்பழுவினால் உடன் பதில் போடவில்லை மன்னிக்கவும்.
ஏற்கனவே நாம் மலையர்கட்டு கிராமத்திற்கு வழங்கிய உதவியானது முதலீடு அல்ல. உதவியாக வழங்கப்பட்டது.

இங்கு சுண்டல், விசுகு இருவரின் எண்ணத்தில் உதித்த பண்ணைத்திட்டம். அதனை நாங்கள் ஒரு மாதிரிக்கிராம உருவாக்கத்தின் முதல்படியாக செய்வது நல்லமென தோன்றியது. அதனை யாழிணையம் மாதிரிக்கிராமமாகவே உருவாக்க முடிவெடுத்துள்ளோம்.

 

நிலம் இல்லாதவர்களை குடியிருத்தி அவர்களுக்கான தற்காலி வீட்டையும் அமைத்துக் கொடுத்து அதே நிலத்தில் கோழிவளர்ப்பினை செய்ய நாம் போடும் முதலீட்டை நேசக்கரம் கவனிக்கும். அதாவது அதன் முன்னேற்றம் இலாபம் யாவற்றையும் நேசக்கரமே அவதானித்து இலாபம் தொடக்கம்  பயன்களையும் முதலீட்டாளர்களுக்கு தெரிவிப்போம். பங்கு அடிப்படையில் முதலிடுவோருக்கான இலாபத்திலிருந்து பங்குக்கு உரிய வருமானத்தை வழங்குவோம்.

 

ஆனால் குறித்த குடும்பங்கள் வழங்கப்படும் காணியில் தங்களது தேவைகளை பூர்த்தி செய்யும் மரக்கறி வகைகள் முதல் மரங்கள் நாட்டி வளர்த்தலையும் ஊக்குவிப்போம். இதனால் கிடைக்கும் வருமானம் மூலம் அவர்கள் தங்களுக்கான நிரந்தர வீட்டை அமைக்கவும் முன்னேறவும் அவர்களே முயற்சியெடுக்க வேண்டும். ஆனால் முன்னேற்றத்துக்கான வழிகாட்டியாக நாங்கள் இருப்போம்.

 

கோழிப்பண்ணை பராமரிப்பு யாவும் குறித்த காலத்திற்கான பயிற்சிகள் வழங்கியே நடைமுறைப்படுத்துவோம். காரணம் சரியான அனுபவம் பயிற்சி இல்லாமல் அவர்களால் கோழிவளர்ப்பு செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.

நன்றி உங்கள் பதிவுக்கு.இந்த திரியில் உள்ள திட்டம் ஒரு நல்லதுதான்.அத்துடன் எனது திட்டத்த்தயும் சொல்கிறேன்

நான் ஊரில் கோழிப்பண்ணை தொடங்கும் எண்ணத்தில் உள்ளேன்.அதன் நிர்வாக மற்றும் பராமரிப்பு சம்பந்தமான வருமானத்தை யாரோ கொன்டு செல்வதை விட அதை நேசக்கரம் முலமாக செய்வதன் முலம் நேசக்கரமும் அதனால் தெரிவு செய்யப்படும் பயனார்களும் பயன் பெற முடியும்.சில வேண்டுகோள்கள் ஏற்றுக்கொள்ள படுமாயின் 1000 அல்லது 500 கோழிகள் வளர்க்கும் திட்டத்திற்கு நான் முதலிட தயார்.இது சரி வந்தால் இந்த துறை அல்லது இது சார்ந்த வேறு துறைகளிலும் அக்கறை செலுத்தாலாம்.இதற்க்கு எமது விவாசாயி விக் இடமும் ஆலோசனை பெறலாலம்.தேவை ஏற்படின் இது தொடர்பாக தனிப்படவும் கதைக்கலாம்.

                                          நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.