Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கே இவர்கள் எங்கே....?

Featured Replies

எங்கே இவர்கள் எங்கே....?

eea821c595684934250eb0bsr7.jpg

இரண்டாயிரத்து நான்கில்

இனிய யாழ்களத்தில்

இணைந்த என்னோடு

இன்புடன் பழகிய

உறவுகள் பலரை சோக

உணர்வோடு தேடுகின்றேன்

எங்கே இவர்கள் எங்கே

ஏங்குகின்றேன் பதில் கூறுங்கள்

குதூகலமாக பறக்கும் குருவி எங்கே

தட்டிக்கொடுக்கும் தமிழினி எங்கே

கவிவடிக்கும் கவிதன் எங்கே

மழலை பேசும் மழலை எங்கே

இளங்கவிஞன் இளைஞன் எங்கே

இளகிய மனம் கொண்ட இளங்கோ எங்கே

சிரிக்க வைக்கும் சின்னப்பு எங்கே

வியக்க வைக்கும் விகடகவி எங்கே

மதிமுகம் கொண்ட மதிவதனன் எங்கே

முகம் மலரவைக்கும் முகத்தார் எங்கே

வீரமுள்ள வினீத் எங்கே

விளையாட்டுபிள்ளை விஷ்ணு எங்கே

பறந்து திரியும் பறவைகள் எங்கே

பெருமூச்சுவிடும் பெரியப்பு எங்கே

கலகத்தோடு வரும் நாரதர் எங்கே

எல்லோருக்கும் பிடித்த எல்லாளன் எங்கே

அரவணைக்கும் அருவி எங்கே

அரிவாளோடு வரும் இராவணன் எங்கே

பண்பாடுடைய பரணி எங்கே

புதிர்போடும் பரஞ்சோதி எங்கே

நிதானமான நிதர்சன் எங்கே

நித்தம் பேசும் நித்திலா எங்கே

சாந்தமுள்ள சந்திரவதனா எங்கே

சங்கடமின்றி பேசும் சண்முகி எங்கே

வாஞ்சையோடு பேசும் வசிசுதா எங்கே

விளக்கத்தோடு வரும் வியாசன் எங்கே

தயக்கத்தோடு உலாவும் தியாகம் எங்கே

தகவல்மன்னன் வானம்பாடி எங்கே

சுடர்விட்டெரியும் சுடர் எங்கே

சுடசுட பேசும் சுண்டல் எங்கே

செங்கோல் புரிந்த ஹரி எங்கே

சிரித்த முக சந்தியா எங்கே

காதல்கவி வடிக்கும் கெளரிபாலன் எங்கே

சத்தமின்றி கருத்தாடும் சயந்தன் எங்கே

சினேகமான சினேகா எங்கே

கீதங்கள் பலபாடும் கீதா எங்கே

வரம்போடு பேசும் வசம்பு எங்கே

வேகத்தோடு பேசும் புயல் எங்கே

சுடோக் போடும் ரமா எங்கே

லுக்கான லக்கிலுக் எங்கே

இவர்களோடு சேர்ந்து

இன்னும் பலர் களத்தினில்

இன்றுவரை காணவில்லை

இரக்கத்தோடு தேடுகின்றேன்

மேற்குறிப்பிட்டோரே

மாற்று நாமத்தில்

தற்போதும் களத்தில்

சுற்றுபவராக இருந்தால்

தேடும் என் மனதை

நோகடிக்காமல் சீக்கிரமே

நாடுங்கள் தனிமடல் மூலம்

நயந்து நான் கேட்கின்றேன்

:):(:(:(:(

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறவுகள்

தேடப்படுவோரே

உறவுகள் உன்னதமானவைமறவுங்கள் பகைமையை

திறவுங்கள் இனிய யாழை

பறவுங்கள் உல்லாசமாக

:):(:(

Edited by sathiri

உலகில் எதுவும் நிரந்தரமில்லை, மாற்றங்களே அதிகம் அப்படித்தான் இதுவும். அவர்களிற்க்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும், வரக்கூடிய சந்தர்பங்கள் கிடைக்காமல் போகும், ஒரு சிலர் வேறு பெயர்களில் வருவார்கள். பிரிவுகள் நிரந்தரமில்லை, தேடல்களும் நிரந்தரமில்லை. ஒரு நாள் வருவார்கள் நிச்சையம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான கவிதை நிலா.

நீங்க தேடும் உறவுகள் ஒரு நாளைக்கு நிச்சயம் வாருவார்கள். :)

நிலா , அனைத்து உறவுகளையும் ஞாபகப் படுத்திய உங்கள் கவி நல்லாயிருக்கு .. ! :P

எல்லாரும் வருவாங்க .... நேரம் கிடைக்கும் போது... கொஞ்ச நாளைக்கு முதல் உங்களையும் தேடினம்... இப்ப நீங்க வந்து எழுதுறத பார்க்க சந்தோசமாயிருக்கு ...! :(

சினேகமான சினேகா எங்கே

யார் சினேகா ? :)

Edited by அனிதா

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தாரை விட்டிட்டீர்களே. திருமலையில் நிலமை மோசம். யாராவது முகத்தார் பற்றிய தகவல் இருந்தால் சொல்லவும்.

முகம் மலரவைக்கும் முகத்தார் எங்கே

முத்தார் அங்கிளயும் எழுதியிருக்கின்றா ..... !

ஹும் அவர் இப்ப வாரதே இல்லை .... என்னாச்சு எண்டு எனக்கும் தெரியல.... ஆனால் அவருடைய முகத்தார் பகுடிய மறக்கவே முடியாது ...! :)

நாங்கள் மனதிற்குள் தேடிக் கொள்ளும் உறவுகளைப் பற்றிக் கவிதையே வடித்தவிட்டீர்கள். பாராட்டுக்கள்

எங்கே இவர்கள் எங்கே....?

eea821c595684934250eb0bsr7.jpg

இரண்டாயிரத்து நான்கில்

இனிய யாழ்களத்தில்

இணைந்த என்னோடு

இன்புடன் பழகிய

உறவுகள் பலரை சோக

உணர்வோடு தேடுகின்றேன்

எங்கே இவர்கள் எங்கே

ஏங்குகின்றேன் பதில் கூறுங்கள்

குதூகலமாக பறக்கும் குருவி எங்கே

தட்டிக்கொடுக்கும் தமிழினி எங்கே

கவிவடிக்கும் கவிதன் எங்கே

மழலை பேசும் மழலை எங்கே

இளங்கவிஞன் இளைஞன் எங்கே

இளகிய மனம் கொண்ட இளங்கோ எங்கே

சிரிக்க வைக்கும் சின்னப்பு எங்கே

வியக்க வைக்கும் விகடகவி எங்கே

மதிமுகம் கொண்ட மதிவதனன் எங்கே

முகம் மலரவைக்கும் முகத்தார் எங்கே

வீரமுள்ள வினீத் எங்கே

விளையாட்டுபிள்ளை விஷ்ணு எங்கே

பறந்து திரியும் பறவைகள் எங்கே

பெருமூச்சுவிடும் பெரியப்பு எங்கே

கலகத்தோடு வரும் நாரதர் எங்கே

எல்லோருக்கும் பிடித்த எல்லாளன் எங்கே

அரவணைக்கும் அருவி எங்கே

அரிவாளோடு வரும் இராவணன் எங்கே

பண்பாடுடைய பரணி எங்கே

புதிர்போடும் பரஞ்சோதி எங்கே

நிதானமான நிதர்சன் எங்கே

நித்தம் பேசும் நித்திலா எங்கே

சாந்தமுள்ள சந்திரவதனா எங்கே

சங்கடமின்றி பேசும் சண்முகி எங்கே

வாஞ்சையோடு பேசும் வசிசுதா எங்கே

விளக்கத்தோடு வரும் வியாசன் எங்கே

தயக்கத்தோடு உலாவும் தியாகம் எங்கே

தகவல்மன்னன் வானம்பாடி எங்கே

சுடர்விட்டெரியும் சுடர் எங்கே

சுடசுட பேசும் சுண்டல் எங்கே

செங்கோல் புரிந்த ஹரி எங்கே

சிரித்த முக சந்தியா எங்கே

காதல்கவி வடிக்கும் கெளரிபாலன் எங்கே

சத்தமின்றி கருத்தாடும் சயந்தன் எங்கே

சினேகமான சினேகா எங்கே

கீதங்கள் பலபாடும் கீதா எங்கே

வரம்போடு பேசும் வசம்பு எங்கே

வேகத்தோடு பேசும் புயல் எங்கே

சுடோக் போடும் ரமா எங்கே

லுக்கான லக்கிலுக் எங்கே

இவர்களோடு சேர்ந்து

இன்னும் பலர் களத்தினில்

இன்றுவரை காணவில்லை

இரக்கத்தோடு தேடுகின்றேன்

மேற்குறிப்பிட்டோரே

மாற்று நாமத்தில்

தற்போதும் களத்தில்

சுற்றுபவராக இருந்தால்

தேடும் என் மனதை

நோகடிக்காமல் சீக்கிரமே

நாடுங்கள் தனிமடல் மூலம்

நயந்து நான் கேட்கின்றேன்

:):(:(:(:(

முகத்தாரை விட்டிட்டீர்களே. திருமலையில் நிலமை மோசம். யாராவது முகத்தார் பற்றிய தகவல் இருந்தால் சொல்லவும்.

கந்தப்புவுக்கு குஞ்சாச்சிகிட்ட வாங்கி வாங்கி கண்ணும் தெரியலை :P

அப்படியே கோர்வையாக போகிறது உங்கள் 'எங்கே தேடல்' .... வாசிக்க இனிமையா இருக்கு ....

தேடலைக் கூட சுவையாக சொல்ல முடிகிறது உங்களால்.... சிறீலங்கா அரசுக்கு இப்படியானவர்கள் தானாம் தேவை... காணாமல் போனோர் பட்டியலை சுவையானதாக தயாரிக்க.... :)

ரூபன் சந்தர்ப்பமே இல்லை, மனிதர்களிற்க்குத்தான் கவிதை எல்லாம் புரியும் இலங்கை அரசில் உள்ளவர்கள் மிருகங்களை விட கேவலமானவர்கள் அவர்களிற்க்கு புரிய வாய்ப்பேயில்லை

தொலைந்து போன ஆட்கள் எல்லாரும் ஓடி வாங்கோ வெண்ணிலா அக்கா அழதொடங்கிட்டா

  • கருத்துக்கள உறவுகள்

யார் தொலைந்ததென்று தேடுகிறீர்கள்?எல்லோரும் சுற்றிச் சுற்றி சுப்பற்ரை கொல்லைக்குள்(யாழ்களம்) தான்.

  • தொடங்கியவர்

யார் தொலைந்ததென்று தேடுகிறீர்கள்?எல்லோரும் சுற்றிச் சுற்றி சுப்பற்ரை கொல்லைக்குள்(யாழ்களம்) தான்.

இப்படி ஒன்று இருக்கும் என்றதால் தான் மாற்று நாமத்தில் சுற்றினாலும் தொடர்பு கொள்ளச் சொல்லி இருக்கிறேன். :P

தொலைந்து போன ஆட்கள் எல்லாரும் ஓடி வாங்கோ வெண்ணிலா அக்கா அழதொடங்கிட்டா

நல்ல உள்ளம் கொண்ட உறவுகளை இலகுவில் சேகரிக்க முடியாது. அதனால் தான் இப்படி தேடல் தொடங்கியது. :P

அப்படியே கோர்வையாக போகிறது உங்கள் 'எங்கே தேடல்' .... வாசிக்க இனிமையா இருக்கு ....

தேடலைக் கூட சுவையாக சொல்ல முடிகிறது உங்களால்.... சிறீலங்கா அரசுக்கு இப்படியானவர்கள் தானாம் தேவை... காணாமல் போனோர் பட்டியலை சுவையானதாக தயாரிக்க.... :lol:

இலங்கையில் காணாமல் போனோர் பட்டியலை தயாரிக்க வெளிக்கிட்டால் நாமும் காணாமல் போயிடுவம். :P :P அதுக்கு எல்லையே இருக்காது என நினைக்கின்றேன்.

அழகான கவிதை நிலா.

நீங்க தேடும் உறவுகள் ஒரு நாளைக்கு நிச்சயம் வாருவார்கள். :unsure:

நிச்சயம் வருவார்கள் என்ற நம்பிக்கையில் தான் இருக்கின்றேன். பார்ப்போம். சில உறவுகள் தனிமடலில் அறிவிக்க முடியாது என்பதால் எம் எஸ் என் இல் சொன்னார்கள். தாம் வரமாட்டோம் என்று. :(

இப்படி ஒன்று இருக்கும் என்றதால் தான் மாற்று நாமத்தில் சுற்றினாலும் தொடர்பு கொள்ளச் சொல்லி இருக்கிறேன். :P

நல்ல உள்ளம் கொண்ட உறவுகளை இலகுவில் சேகரிக்க முடியாது. அதனால் தான் இப்படி தேடல் தொடங்கியது. :P

இலங்கையில் காணாமல் போனோர் பட்டியலை தயாரிக்க வெளிக்கிட்டால் நாமும் காணாமல் போயிடுவம். :P :P அதுக்கு எல்லையே இருக்காது என நினைக்கின்றேன்.

வெண்ணிலா இது நல்லா இல்ல எங்கள பாத்து இப்படி சொல்லுறது :angry:

ஜம்மு இத கேளு :unsure:

  • தொடங்கியவர்

உலகில் எதுவும் நிரந்தரமில்லை, மாற்றங்களே அதிகம் அப்படித்தான் இதுவும். அவர்களிற்க்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும், வரக்கூடிய சந்தர்பங்கள் கிடைக்காமல் போகும், ஒரு சிலர் வேறு பெயர்களில் வருவார்கள். பிரிவுகள் நிரந்தரமில்லை, தேடல்களும் நிரந்தரமில்லை. ஒரு நாள் வருவார்கள் நிச்சையம்

நீங்கள் சொல்வதும் சரிதான்.

வெண்ணிலா இது நல்லா இல்ல எங்கள பாத்து இப்படி சொல்லுறது :angry:

ஜம்மு இத கேளு :unsure:

அது தானே அப்ப வெண்ணிலா அக்கா எங்களை நல்லவர்கள் இல்லை என்று சொல்லிட்டீங்கள் நாங்கள் கோபம்

:angry:

  • தொடங்கியவர்

வெண்ணிலா இது நல்லா இல்ல எங்கள பாத்து இப்படி சொல்லுறது :angry:

ஜம்மு இத கேளு :unsure:

ஆமா நான் அபப்டி என்ன சொல்லிட்டேன் என்று இப்ப ஜம்முவைக் கூப்பிடுறீங்க? எனக்கு ஜம்மு என்றாலே கொஞ்சம் பயம் இருக்கு :lol::(

அது தானே அப்ப வெண்ணிலா அக்கா எங்களை நல்லவர்கள் இல்லை என்று சொல்லிட்டீங்கள் நாங்கள் கோபம்

:angry:

நான் அபப்டி சொன்னேனா? நான் காணாமல் போனோர்களை தானே சொன்னேன். சிலவேளை நீங்களும் காணாமல் போனால் தேடி இருப்பேனே. என்னங்க நீங்கள் கோபம் என்றால் நான் அழுவேன் ஆமா :(:(:(

ஜம்மு & வானவில் வெண்ணிலா கூட டூஊஊ

தலை வெண்ணிலா அக்கா அழுறா பாவமா இருக்கு இந்த முறை மன்னிபோம்

;)

யாழ் கள உறவுகளை தேடுவதில் நியாயம் இருக்கின்றது!

யாழ் களத்தில் 'காணவில்லை!' என்ற ஒரு தலைப்பில் காணாமல் போவர்களின் தகவல்களை அறிவிக்க முடிகின்றது....

இதேபோல், காணாமல் போகின்றோம் என்ற ஒரு தலைப்பும் விரைவில் ஆரம்பிக்கப்படவேண்டும்...

இங்கு குறுகிய காலத்திற்கு அல்லது நீண்ட காலத்திற்கு தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக யாழ் களத்தைவிட்டு விலகும் அல்லது வரமுடியாத உறவுகள் தமது காணாமல் போகும் அறிவிப்பை விட முடியும்....

விரைவில் 'காணாமல் போகின்றோம்' என்ற இந்த தலைப்பை கள உறுப்பினர்களிற்கு மட்டுமான பகுதியில் யாராவது ஆரம்பிக்கவேண்டும். அல்லது நான் ஆரம்பிக்கின்றேன்...

பாடசாலையில் சோதனைக்காக படிப்பவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், தாயகத்தில் வேறு பிரச்சனைகளில் இருப்பவர்கள், திருமண பந்தத்தில் இணைபவர்கள், விடுமுறை சுற்றுலாவில் செல்பவர்கள் என யாழ் கள உறவுகள் இங்கு தமது அறிவிப்பை - மற்றைய யாழ் கள உறவுகள் தம்மை நினைத்து ஏங்குவார்கள் என நினைத்தால் இங்கு அறியத்தரலாம்....

எனவே, இவ்வாறு அவர்கள் அறிவிக்கும் பட்சத்தில் நாம் அவர்களை கவலையுடன் தேடவேண்டி வராது. களத்திற்கு தொடர்ந்து வரமுடியாமைக்கு பலருக்கு பலவித சிரமங்கள் இருக்கலாம்...

:unsure:

  • தொடங்கியவர்

ஆரம்பியுங்கோ அண்ணா அப்படி ஒரு தலைப்பை.

நல்ல யோசனைதான். தலைப்பை நீங்களே தொடங்கலாமே.?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஜோதிகாவின் அழுற முகத்தை பார்க்க பாவமா இருந்துச்சு. உண்மையிலேயே மிஸ் பண்றிங்க என்று நினைக்கிறேன்...அதனால பதிகிறேன்.

குதூகலமாக பறக்கும் குருவி எங்கே

==>யாழ் களத்தில் ஒரே ஒருவர் தான் தற்போது எப்போதும் குதூகலமாக இருப்பார் - எங்க செத்த வீடு நடந்தாலும் சிரிச்சுக் கொண்டே இருப்பார். அனேகமாக அவரா இருக்கு என்று கிருபஞ்சு சார் பல தடவை கூறி செருப்படி வாங்கி இருக்கிறார் அவரிடம். கிருபஞ்சு சாரும் ரொம்பவே மிஸ் பண்றதா அறிக்க விட்டிருந்தார். எது எப்படியோ, குருவி 'நெடு'தூரம் பறந்திருக்காது - உங்களுக்கு தனி மடலில் கூவும் என்று நம்புவோமாக! இவரை நீங்கள் இழக்கவில்லை என்று மட்டும் உறுதியாக என்னால் கூறலாம்.

தட்டிக்கொடுக்கும் தமிழினி எங்கே

==>

இவர் தன் வீட்டு கணணி காலை வாரிவிட்டதாகவும், தான் வேறு இடத்திலிருந்து கணணி பாவிப்பதால் அடிக்கடி வரமுடியாது என்று சொன்னதாக படித்த நினைவு. இவரையும் நீங்கள் இழக்கவில்லை! உங்கள் கருத்துகளை பார்ப்பார் என்று நினைக்கிறேன்.

கவிவடிக்கும் கவிதன் எங்கே

???

மழலை பேசும் மழலை எங்கே

==>இவரி சிலகாலத்திற்கு முன் கண்டேன் - இவரும் இருக்கிறார்.

இளங்கவிஞன் இளைஞன் எங்கே

==> இருக்கார்....மாப்பு, அனிதா, இளைஞன் சேர்ந்து ஒரு வீடியோ செய்திருந்தார்கள்.

இளகிய மனம் கொண்ட இளங்கோ எங்கே

==>இருக்கார்

சிரிக்க வைக்கும் சின்னப்பு எங்கே

==> டங்குவை பிடியுங்கள்- விபரம் அறியலாம்

வியக்க வைக்கும் விகடகவி எங்கே

==> இருக்கார்

மதிமுகம் கொண்ட மதிவதனன் எங்கே

==> இருக்கார்

முகம் மலரவைக்கும் முகத்தார் எங்கே

வீரமுள்ள வினீத் எங்கே

==> வீரமுள்ள?...எப்ப விஜயின் படத்தை போடமுடியாதென்று சட்டம் வந்ததோ, அன்றிலிருந்து ஆளில்லை- ஆனால் வருவார்.

விளையாட்டுபிள்ளை விஷ்ணு எங்கே

==> திருமண வாழ்த்து சொன்னார்கள் - இடைக்கிடை வருகிறார்.

பறந்து திரியும் பறவைகள் எங்கே

பெருமூச்சுவிடும் பெரியப்பு எங்கே

கலகத்தோடு வரும் நாரதர் எங்கே

==>இருக்கிறார்

எல்லோருக்கும் பிடித்த எல்லாளன் எங்கே

==>இருக்கிறார் - புதுமுகத்தில்

அரவணைக்கும் அருவி எங்கே

==>இருக்கிறார்.

அரிவாளோடு வரும் இராவணன் எங்கே

பண்பாடுடைய பரணி எங்கே

புதிர்போடும் பரஞ்சோதி எங்கே

நிதானமான நிதர்சன் எங்கே

நித்தம் பேசும் நித்திலா எங்கே

சாந்தமுள்ள சந்திரவதனா எங்கே

சங்கடமின்றி பேசும் சண்முகி எங்கே

==>முகி தான் மூக்கியாக கொஞ்ச நாள் ஒராளுக்கு நோஸ் கட் பண்ணிகொண்டு இருந்தா - வருவா

வாஞ்சையோடு பேசும் வசிசுதா எங்கே

==> ஆள் இருக்கு - டண்ணை கேளுங்க

விளக்கத்தோடு வரும் வியாசன் எங்கே

தயக்கத்தோடு உலாவும் தியாகம் எங்கே

தகவல்மன்னன் வானம்பாடி எங்கே

சுடர்விட்டெரியும் சுடர் எங்கே

சுடசுட பேசும் சுண்டல் எங்கே

==>ஆள் இருக்கு

செங்கோல் புரிந்த ஹரி எங்கே

==>மன்னர் புலம் பெயர்ந்துள்ளாராம் - வியாசனை பிடியுங்கள்

சிரித்த முக சந்தியா எங்கே

காதல்கவி வடிக்கும் கெளரிபாலன் எங்கே

==>ஆள் இருக்கு

சத்தமின்றி கருத்தாடும் சயந்தன் எங்கே

சினேகமான சினேகா எங்கே

கீதங்கள் பலபாடும் கீதா எங்கே

வரம்போடு பேசும் வசம்பு எங்கே

==> ஆள் இருந்திட்டொருக்கா தலை காட்டியிருகார்

வேகத்தோடு பேசும் புயல் எங்கே

சுடோக் போடும் ரமா எங்கே

==>இருக்கிறா, ஆதியின் 'சாமத்திய கேள்விக்கு' கன்னத்தை பொத்தி குடுத்தவ

லுக்கான லக்கிலுக் எங்கே

==>அட இவர் நிச்சயமா துலைஞ்சிருக்க மாட்டார்...இங்கில்லாட்டியும் 'கவலையில்லா வாலிபர் சங்கம்' அமைத்து புலக்' இல் ரவுண்டு கட்டுவார். மடிப்பாக்கம் அவரது புலக்

உங்களின் தொலைந்தோர் பட்டியலில் 50% இற்கு அதிகமானோரை தேடி தந்திருக்கிறேன். அப்படியும் ரொம்பவே மிஸ் பண்ணிணிங்க எண்டா கள நிர்வாகத்தை தொடர்பு கொண்டீர்களென்றால் அவர்கள் குறித்த நபரின் அனுமதியுடன் அவர்களின் மின்னஞ்சலை தருவார்கள்.

அப்படியும் இல்லை நான் குருவி கூவித்தான் கவிதை படிப்பேன் என்று நீங்கள் அடம் பிடித்தால், யாரும் ஒன்றும் செய்ய முடியாது. :P :)

சரி அப்படியாயின் இவ்வளவு விபரமாக பதில்களை சொன்ன நீங்களும், மேலே கவிதையில் காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டிருக்கும் கள உறவுகளின் ஒரு மறு அவதாரமா? :):(:)

வெண்ணிலா அக்கா அருமையான கவிதை பாராட்டுக்கள் தேடப்படும் உறவுகள் நிச்சயம் களப்பக்கம் வருவார்கள் அல்லது மாற்று முகமூடியுடன் வந்து கொண்டுதான் இருகின்றார்கள்

ஒரு சின்ன ஆலோசனை உங்களது கவியை எஸ்.பி பாலசுப்பிரமணியம் பாடிய சத்தம் இல்லாத எனத்தொடங்கும் பாடலின் மெட்டில் பாடினால் அருமையாய் இருக்கும் என நினைகின்றேன் :)

சரி அப்படியாயின் இவ்வளவு விபரமாக பதில்களை சொன்ன நீங்களும், மேலே கவிதையில் காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டிருக்கும் கள உறவுகளின் ஒரு மறு அவதாரமா? :):(:)

அதுதானே ஜோகன் யார் நீங்கள் சொல்லுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.