Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்கள் பெயரில் எழுதும் ஆண்கள்

Featured Replies

"பெண்விடுதலை", "பெண்ணியம்", "பெண்சுதந்திரம்" என்று குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்தக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிப் பலகாலம் ஆகிவிட்டது. பெண்கள் மீதான வன்முறை என்பது பல்வேறு தளங்களில் இன்னமும் நிகழ்ந்து கொண்டுதானிக்கின்றது. அரசியல் பொருளாதார சமூகத் தளங்களில் அன்றாடம் இது வெளிப்படுவதை நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்.

உடல்சார்ந்து நிகழ்கிற வன்முறை ஒருபுறம். உளம்சார்ந்து நிகழ்கிற வன்முறை ஒருபுறம். இவற்றுக்கும் அப்பால் கருத்தியல் தளத்தில் நிகழ்கிற வன்முறை என்று ஒன்றிருக்கிறது. இது கருத்துக்களை உருவாக்கும் சமூக ஊடகங்கள் ஊடாக நிகழ்கின்றது. கலை, இலக்கியம், ஊடகம் என்று இது பரந்து இருக்கிறது.

எல்லாத் தளங்களிலும் ஏதோ ஒருவகையில் பெண்களின் உரிமைகள் (பெண்கள் என்பதால்) பறிக்கப்படுவதாக இருக்கிறது. அதற்கு இந்த கலை இலக்கிய ஊடகத் தளங்களும் விதிவிலக்கல்ல. சரி... இந்த இடத்தில் அதிகமாக அலட்டாமல் நேரடியாகவே விடயத்தைச் சொல்லிவிடுகிறேன்...

மேற்குறிப்பிட்ட இந்தத் தளங்களில் பெண்களின் பெயரை பயன்படுத்தும் ஆண்கள் பற்றியதே இந்தத் தலைப்பு. உதாரணமாக ஒரு கவிஞன் தனது புனை பெயராக பெண்ணின் பெயரை பயன்படுத்திக் கொள்கிறான். ஒரு இலக்கியவாதி பெண்ணின் முகமூடி அணிந்து இலக்கியத்தைப் படைக்கிறான். இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் பெண் உரிமை பற்றி இடிமுழக்கம் செய்பவர்களில் பலரும் பெண்கள் பெயரில் எழுதுகிற நிலை தான். மொழி என்பது ஆணை மையப்படுத்திய சமூகக் கட்டமைப்பிலிருந்து உருவானதால் அதன் தாக்கம் இன்றுவரை இருக்கிறது. அந்த நிலையில் பெண்களின் பெயர் உரிமை கூட இப்படிப் பறிக்கப்படுவது சரியா? ஏன் இந்த நிலை?

பெண்கள் பலவீனமானவர்கள் என்பதாலா?

பெண்களால் இலக்கியம் படைக்கமுடியாது என்பதாலா?

பெண்கள் பெயரில் வாசகர் வட்டத்தைக் கவர்வதற்கா? (பெயர்க் கவர்ச்சி காட்டல்?)

பெண்கள் பெயரில் எழுதி பெண்களுக் பெருமை சேர்க்கிறார்களோ?

பெண்களுக்கு சுயம் என்பது இல்லை என்பதாலா?

ஆண்களின் புனைபெயருக்கு பஞ்சமா?

இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன. பெண்கள் பெண்கள் பெயரில் எழுதட்டும். ஆண்கள் ஆண்கள் பெயரில் எழுதட்டும். புனைபெயர் என்ற போர்வையில் இன்னொருவரின் உரிமையை எப்படிப் பறிக்க முடியும்? இந்தப் புனைபெயர்ப் பிரச்சனை இணையத் தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னர் அதிகமாகியுள்ளது என்று சொல்லலாம். காரணம் முகமூடிகளை இங்கு தானே அதிகம். உரையாடற் தளங்கள்(chatrooms), கருத்தாடற் தளங்கள் (forums), வலைப்பதிவுகள் (Blogs) போன்றவற்றில் இது அதிகம் நிகழ்வதைக் காணலாம். இந்த இடங்களில் பெண்கள் பெயர் பயன்படுத்தப்படுவதற்கு வேறு சில காரணங்களும் மேலதிகமாகச் சேர்ந்து கொள்கின்றன. ஆண்களை ஏமாற்றுவதற்கு, பெண்களுடனான தொடர்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு என்று இன்னொரு பக்கம் உண்டு.

அதைவிடுவோம். யாழ் கருத்துக்களம் போன்ற கருத்தாடற் தளங்களை எடுத்துக் கொள்வோம். இங்கும் பெண்கள் பெயரில் எழுதுபவர்கள் எல்லாம் பெண்களா என்பது சந்தேகமே. இது மற்றப் பக்கமாகவும் நிகழ்கிறது. ஆண்கள் பெயரில் பெண்கள் எழுதுவது. ஒப்பீட்டளவில் பார்க்கிறபோது மேற்குறிப்பிட்ட தளங்களில் இது குறைவாகத்தான் இருக்கிறது. பெண்கள் எழுதுவது (பெண் எழுத்தாளர்கள் அல்லது படைப்பாளிகள்) குறைவாக இருப்பதுவும் இதற்கு காரணமாக இருக்கலாம். எது எப்படியாக இருந்தாலும் பெண்கள் பெயரில் ஆண்கள் எழுதுவது என்பது பெண்ணுரிமையைப் பறிக்கும் நிகழ்வாகும்.

உங்கள் கருத்துகள் ஊடாக ஒரு ஆக்கபூர்வமான விவாதத்தை தொடருங்கள்... :blink:

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக எல்லா ஆண்களிடமும் சில பெண்களின் இயல்புகள் எனச் சொல்லப்படுபவை (உ.ம். மென்மை) உள்ளன. எனவே அவற்றை வெளிக்காட்ட பெண்களின் பெயரைப் பாவிக்கலாம்.. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

25 ஆண்டுகளுக்கு முன் அமுதசுரபி -:பெண்கள் பெயரில் ஆண்கள் எழுதலாமா?

?B]க்ற்?ஒஜ்று

சமீபத்தில் மயிலையில் தமிழ்நாடு ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி அவர்கள் தலைமையில் ஒரு மகாநாடு நடந்தது. இலக்கியத்திலும், கலைகளிலும் மலிந்து வரும் ஆபாசத்தை எதிர்ப்பதற்காக நடத்தப்பட்ட மகாநாடு அது.இந்த மகாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட்ட ஒரு விஷயம், பெண்களின் பெயர்களை வைத்துக்கொண்ட ஆண்கள், ஆபாசமான கதைகளையும் நாவல்களையும் எழுதலாமா என்பது. விவாதம் என்று நான் சொன்னது கூடத் தவறு. மகாநாட்டில் இது விஷயமாகப் பேசியவர்கள் இந்தப் பழக்கத்தைக் கண்டித்துத்தான் பேசினதாகப் பத்திரிகைச் செய்திகளிலிருந்து தெரிய வந்தது. ஒருவர் கூட இதை ஆதரித்துப் பேசவில்லை.

ஆபாசத்தைக் கண்டிக்கப் புறப்பட்ட அவர்கள் ஆபாசமாக யார் எழுதினாலும் தவறு என்று சொல்வதை விட்டுவிட்டுப் பெண்களும், பெண்களின் பெயரை வைத்துக் கொண்டு ஆண்களும் எழுதுவது தான் தவறு என்பது போலவும், ஆண்களும் பெண் பெயர் வைத்துக்கொண்ட பெண், ஆண் என்றோ பெண் என்றோ தெரியாத பெயர்களை வைத்துக் கொண்டிருப்பவர்களும் எழுதினால் அவ்வளவாகத் தவறில்லை என்பது போலவும் பேசியிருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டேன்.அதன் பிறகு சில இலக்கிய வட்டங்களின் கூட்டங்களிலும் பத்திரிகைகளின் கேள்வி - பதில் பகுதிகளிலும் இந்த எழுத்தாளர் களைப் ""புடவை போர்த்துக்கொண்டிக்கும் ஆண்கள்'' என்றும் இன்னும் பலவாறாகவும் கிண்டல் செய்யப்பட்டதைக் கேட்டேன், படித்தேன். பெண்களின் பெயரில் ஆண்கள் எழுதுவதே தவறு. மோசமாக எழுதாமல் நல்லபடியாக எழுதினாலும் கூடத் தவறுதான் என்கிற ரீதியில் ஆட்சேபணைகள் எழுந்தன. எனவே இதைச் சற்று நிதான புத்தியுடன் ஆராய்ந்து பார்ப்பது நல்லது என்று தோன்றியதால் என் கருத்துகளைக் தெரிவிக்க இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

பெண்களின் பெயரில் இன்று எழுதும் ஆண் எழுத்தாளர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? பிரபலமானவர்களை மட்டும் எடுத்துக் கொள்வோம்.புஷ்பா தங்கதுரை, சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, லட்சுமி சுப்பிரமணியம், கோமதி சுவாமிநாதன், பாக்கியம் ராமசுவாமி.

இவர்களை அல்லாமல், சுகந்தி, சகுந்தலா, ஹம்ஸா, சரஸ்வதி ராம கிருஷ்ணன், பி. ரங்கநாயகி, ஜெயபாரதி, வேதம் போன்ற சிலரும் (இவர்கள் பிரபல எழுத்தாளர்களானாலும் அவர்களுடைய பெண் புனை பெயர்கள் அவ்வளவாகப் பிரபலமாகாதவை) எழுதி வருகிறார்கள்.இவர்களெல்லாம் எதற்காகப் பெண்களின் பெயரை வைத்துக் கொண்டு எழுதுகிறார்கள்?

வாசகர்களை ஏமாற்றுவதற்காகவா? வேறு காரணங்களுக்காகவா?முதலிலே கூறப்பட்ட பிரபலமான பெயர்களும், இரண்டாவதாகக் கூறப்பட்ட அவ்வளவு பிரபலமாகாத பெயர்களும் ஆண் எழுத்தாளர்கள் வைத்துக்கொண்டிருக்கும் பெயர்கள் என்பது எல்லாப் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் நன்கு தெரியும். ஆகவே பத்திரிகையாசிரியர்களை ஏமாற்ற, அவர்கள் அந்தப் பெயர்களை வைத்துக்கொண்டிருக்க முடியாது.வாசகர்களிலும் பெரும்பாலோருக்கு இவர்கள் ஆண் எழுத்தாளர்கள் என்கிற உண்மை தெரிந்ததுதான். சில வாசகர்களுக்குத் தெரியாமலிருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். அப்படியிருந் தாலும் இது வாசகர்களை ஏமாற்றுவதாகுமா?

கதையைப் படிக்கும் வாசகர்கள் எழுதியவர், பெண்ணாக இருந்தால் படிப்பார்கள், ஆணாக இருந்தால் படிக்க மாட்டார்கள் என்று கூற முடியுமா? ஆண்கள் என்பதற்காக அகிலன், ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, ரா.கி.ரங்கராஜன், சாண்டில்யன் கதைகளை யாராவது படிக்காமல் விட்டு விடுவார்களா? லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, வாஸந்தி, ராஜம் கிருஷ்ணன் முதலியவர்களின் கதையை எழுதியவர்கள் பெண்கள் என்பதற்காகவா வாசிக்கிறார்கள்?

எவ்வளவோ வாசகர்கள் கதை எழுதியவர் யார் என்பதையே பார்க்காமல் கதையை வாதிப்பதையம் கண்டிருக்கிறேன். படித்து முடித்த பிறகு யார் எழுதியது என்று பார்ப்பதும் சிலருடைய வழக்கம்.ஆக, பெண்களின் பெயர்களை வைத்துக்கொண்டு எழுதும் ஆண் எழுத்தாளர்கள், பத்திரிகையாசிரியர்களையோ, வாசகர்களையோ ஏமாற்றுவதற்காக அப்படிச் செய்யவில்லை.

வேறு என்ன காரணம்?

அது அவர்கள் சொந்த விஷயம். அழகான ஒரு பெயரைப் புனைபெயராக வைத்துக்கொள்ள வேண்டுமென்ற விருப்பத்தால் அப்படிச் செய்யலாம். ஒருத்தர் தன் ஜவுளிக்கடைக்கு ""சரோஜா டெக்ஸ்டைல்ஸ்'' என்றும், இன்னொருவர் தனது மருந்துக் கடைக்கு ""விமலா மெடிகல் ஸ்டோர்ஸ்'' என்றும் தம் மனைவியின் பெயரையோ, மகளின் பெயரையோ வைத்திருக்கலாம். வானதி பதிப்பகம் உரிமையாளர் திரு. திருநாவுக்கரசு என்பதும், மணிமேகலைப் பிரசுரத்தின் உரிமையாளர் திரு. லெட்சுமணன் (திரு. தமிழ்வாணனின் குமாரர்) என்பதும் யாருக்குத் தெரியாது? இவர்கள் தங்கள் பதிப்பகங்களுக்குப் பெண்களின் பெயர்களை வைத்து ஏமாற்றுகிறார்களென்று சொல்வது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம்தான் பெண்களின் பெயரை வைத்துக்கொண்டு எழுதும் ஆண் எழுத்தாளர்கள் யாரையோ ஏமாற்றப் பார்க்கிறார்கள் எனச் சொல்வதும்.""ஓர் எழுத்தாளன் தன்னுடைய identityஐ மறைக்கக் கூடாது, அப்படி மறைத்து எழுதினால் அவன் எழுத்தாளனாக இருப்பதற்கே யோக்கியதை இல்லாதவன்.'' என்ற அர்த்தமற்ற கருத்தைத் திரு. சு.சமுத்திரம் என்னும் எழுத்தாளர், ""இலக்கியச் சோலை'' என்றும் அமைப்பின் ஒரு கூட்டத்திலே வெளியிட்டார். அப்படியானால் புனை பெயர் வைத்துக்கொண்டு எழுதும் எழுததாளர்கள் எல்லோருமே எழுத்தாளர்களாக இருக்க யோக்கியதையற்றவர்களா? இந்தக் கேள்வி, அவரிடம் அந்தக் கூட்டத்திலேயே எழுப்பப்பட்டபோது அவரால் எந்த விதமான திருப்திகரமான பதிலும் அளிக்க முடியவில்லை.

திரு. இந்திரா பார்த்தசாரதி, பெண்ணின் பெயரை வைத்துக்கொண்டு எழுதுகிறார் என்பதற்காக சாகித்ய அகாடமி அவருக்குப் பரிசு கொடுக்காமல் விட்டு விடவில்லையே? அல்லது அவர் பெண்ணின் பெயரை வைத்துக்கொண்டு எழுதுவதால்தான் அவருக்குப் பரிசு கிடைத்தது என்பது நமது நண்பர்களின் வாதமா?

தன் identity ஐ மறைத்துக்கொண்டு எழுதும் எழுத்தாளன் அல்லது எந்த ஒரு அரசியல் வாதியைத் தாக்கியே, அரசியல் கட்சிகளின் கொள்கைகளைத் தாக்கியோ எழுதுவது தவறு. அவ்வாறெல்லாம் எழுதுபவர்கள் தங்கள் சொந்தப் பெயரில் எழுதும் துணிவு பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் கதையும், கவிதையும், நாவலும், நாடகமும் எழுதுபவன் எந்தப் பெயர் வைத்துக் கொண்டு வேண்டுமானாலும் எழுதலாம். அது அவனுடைய சொந்த விஷயம். அதை ஆட்சேபிப்பதில் அர்த்தமில்லை.பெண்களின் பெயரை வைத்துக் கொண்டு எழுதுவது ஆட்சேபிக்கத் தக்கதென்றால் பெண்ணும் ஆணும் அல்லாத அலிப் பெயர்களையும் ஜடப் பெயர்களையும் புனை பெயர்களாகக் கொண்டு எவ்வளவு எழுத்தாளர்கள் எழுதவில்லை? அதை ஏன் நமது நண்பர்கள் எதிர்க்கவில்லை?அன்னம், தூன், அய்க்கண், புனர்வசு இந்தப் பெயர்களிலிருந்து இவர்கள் ஆணா பெண்ணா என்று சொல்ல முடியுமா? கல்கியவர்கள் ""கர்நாடகம்'' என்ற பெயரில் எழுதி வந்த போது வெகு காலம் நான் ஒரு பெண் எழுத்தாளர்தான் அப்பெயரில் எழுதி வருவதாக நினைத்திருந்தேன். ""சாவி'' என்பது சா.விஸ்வநாதனாகவும் இருக்கலாம் சா.விசாலமாகவும் இருக்கலாம். நாடோடி ஆண் என்பது நமக்குத் தெரியும். ஆனால் நாடோடி என்ற பெயர், பெண்பாலுக்குப் பொருந்துமே?

""சோ'' - ஆளை மறந்துவிட்டு, பெயரை மட்டும் வைத்து ஆண் என்று சொல்ல முடியுமா?

ஒரு பிரபல பத்திரிகை ஆசிரியர் சிறிதும் கூச்சமின்றி ""நான் மணியனுக்கு edit assistantஆக இருந்திருக்கிறேன்'' என்று சொல்கிறார். இதற்கே அவர் கூச்சப் படாதபோது பெண்ணின் பெயரைப் புனை பெயராக வைத்துக்கொண்டு எழுதும் ஆண் எழுத்தாளர்கள் எதற்காகக் கூச்சப்பட வேண்டும்?

இவற்றையெல்லாம் பார்க்கும் போது இந்த அர்த்தமற்ற ஆட்சேபணைக்கு அடிப்படைக் காரணம், பெண்களின் பெயர்களை வைத்துக்கொண்டு எழுதிப் பெரு வெற்றி பெற்றிருக்கும் சுஜாதா, புஷ்பா தங்கதுரை போன்ற ஆண் எழுத்தாளர்களின் பேரில் உள்ள பொறாமை உணர்வுதான் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

http://tamil.sify.com/vaarasurabi/may14/fu...php?id=13475064

  • தொடங்கியவர்

அநேகமாக எல்லா ஆண்களிடமும் சில பெண்களின் இயல்புகள் எனச் சொல்லப்படுபவை (உ.ம். மென்மை) உள்ளன. எனவே அவற்றை வெளிக்காட்ட பெண்களின் பெயரைப் பாவிக்கலாம்.. :blink:

உளவியல் ரீதியாக நீங்கள் சொல்வது யோசிக்கக் கூடிய விடயம் தான் :huh:

நுனாவிலான் பொருத்தமான கட்டுரையை இணைத்துள்ளீர்கள். நன்றி.

அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விடயங்களோடு என்னால் உடன்படமுடியவில்லை. அத்தோடு இந்தக் கட்டுரை அவர்களின் இலக்கிய அரசியல் சம்மந்தப்பட்டிருக்கிறது. அது இங்கு தேவையில்லை.

முதலில் புனைபெயரில் எழுதுவது பற்றியதல்ல பிரச்சனை. ஆனால் பெண்ணின் பெயரை ஒரு ஆண் தனது புனைபெயராக தேர்ந்தெடுப்பது என்பது பெண் உரிமை மீறலாக பார்க்கப்படவேண்டியிருக்கிற

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

பாரதிக்கு முன்னைய காலத்தில் இருந்து பெண்களுக்கே ஆண்கள் தான் குரல்தரவல்ல அதிகாரிகளா இருக்கினம்.

ஏன் இந்தத் தலைப்புக் கூட.. பெண்கள் திறக்கல்ல. பெண்களுக்கு குரல்தரவல்லவர்கள் என்போர் திறந்திருக்கினம்.

உலகத்தில காரணம் தேடி நேரத்தை வீணாக்கிறதிலும்.. கேள்வியக் கேட்டவரே தன்னை சுற்றி நோக்கினால் விடை சுலபமாகக் கிடைகலாம்..! :huh::wub::):blink:

பெண் என்றால்.... பேயும் இரங்கும்.... :blink:

  • 1 month later...

இந்தப் பழைய மொழியில் கூட தவறுதான்.

பெண் என்றால் பேயும் இறங்கும். என்பதுதான் சரி

பெண் என்றால்.... பேயும் இரங்கும்.... :D
  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் பெயரில் எழுதும் ஆண்கள்

ம்.............எழுதிட்டுப் போகட்டுமே

  • கருத்துக்கள உறவுகள்

ம்.............எழுதிட்டுப் போகட்டுமே

ஆ என்ன பெருந்தன்மை :D

  • கருத்துக்கள உறவுகள்

அழகியல் கருதி பெண் பெயரை தேர்ந்தெடுக்கிறார்களாம். அப்ப ஆண்களின் பெயர்கள் அழகில்லையா? புனைபெயர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எழுதத் தொடங்கியவுடன் தெரியவந்துவிடுமா? பிரபலமடைந்தவர்கள் பின்னாளில் புனைபெயருக்கு பின்னால் தாம் தான் இருக்கிறோம் என்று முகத்தைக் காட்டுவார்கள். அதுவரைக்கும் வாசகருக்கு பெரும்பாலும் இந்த விடயம் தெரியாமலே இருக்கும். அவர்கள் பெண் எழுத்தாளராக எண்ணித்தான் படைப்பை உள்வாங்குவான். உதாரணமாக பெண் பற்றிய ஒரு கவிதையை பெண் எழுதுவதற்கும் ஆண் எழுதுவதற்கும் வேறுபாடு உள்ளது. அந்தக் கவிதையை உள்வாங்குகிற சாதாரண வாசகன் அந்தக் கவிதையை பெண் எழுதியதாக உள்வாங்குவதற்கும், ஆண் எழுதியதாக உள்வாங்குவதற்கும் இடையில் வேறுபாடு உள்ளதாகவே நினைக்கிறேன். இது எப்படியென்றால் தமிழர்கள் பெயரில் சிங்கள அரசு கருத்துச் சொல்வதைப் போன்றது.

ஒரு அறிஞர் சொல்ல்கிறார் இப்படி,"உலகில் உள்ள எல்லா உயிரினங்களில் மனிதனில் மட்டும் பெண் அழகானவள்(சிலர் மட்டும் என் பார்வையில்) என்று கூறுகிறார்.ஆகவே அது தான் காரணமோ? :lol::D:(

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இருந்தாலும் கசப்பான மருந்தை தேனிலோ, சக்கரையிலோ கலந்து கொடுப்பதில்லையா? அப்படித்தான் இதுவுமென கொள்ளுங்களேன். விடயம் மற்றவர் மனதைக் குறிப்பிட்டுக் காயப்படுத்தாதவரை தப்பில்லைத்தானே! :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞன், எழுத்துத்துறைக்கு ஒருவர் அறிமுகமாவற்கு பெண்பெயரை வைத்தால் வரவேற்கப்படும் என்றோ ஆண்பெயரை வைத்துக்கொண்டால் தவிர்க்கப்படும் என்றோ சொல்ல முடியாது. எழுத்தில் ஒருவருக்கு இருக்கும் ஆளுமை என்பது மட்டுமே அவரின் படைப்பை வாசிக்கும் வாசகர்களால் ஏற்று அங்கீகரிக்கப்படும்.

இணையங்களில் பெண்களின் பெயர்களை பல ஆண்கள் பயன்படுத்தக் காரணம் ஒருவிதக் கிளுகிளுப்பு என்று சொல்லலாம். சிலர் விதிவிலக்காக இருக்கக்கூடும். இப்பெயர் வைப்பிற்கு பிரதான காரணம் என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

எனக்குத் தெரிந்த சில ஆண் எழுத்தாளர்கள் தமது மனைவி பெயரையோ அல்லது மகளின் பெயரையோ தமது புனைபெயராக வைத்துள்ளனர். இச்செய்கையை அவ்வெழுத்தாளர்கள் தமது உறவுகளிடம் கொண்ட பற்றை வெளிப்படுத்தும் வாய்ப்பாகச் செய்கிறார்கள்.

அடுத்து பெண் பெயரில் எழுதும் ஆண் பெண்ணின் உளஓட்டத்தை எழுத முடியாது. அப்படி அவர்கள் எழுதினாலும் அவர்களைப் பொறுத்தவரை அது நுனிப்புல்தான். அதற்காக பெண் எழுத்தாளர்கள் முழுமையாக பெண்களைப் பிரதிபலிக்கிறார்கள் என்றும் கருத முடியாது. ஆண்கள் பெண்ணின் பெயருக்குள் மறைந்திருந்து வக்கிர எழுத்துக்களை எழுதாத வரைக்கும் பெண்களுக்கு அது பாதகமில்லை.

இளைஞன், ஆண் எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களைச் சுமந்து எழுதுவதால் பெண்களுக்கு ஒன்றும் வலிமை சேர்க்கவில்லை. சந்தர்ப்ப வசத்தால் அவர்கள் பெண் பெயர்களில் எழுதுகிறார்களே ஒழிய, பெண்களை விழிப்பு உணர்வடைய வைக்கும் நோக்கில் அல்ல,

  • 3 months later...

ஒருவர் தான் மிகவும் அன்பு வைத்துள்ள தாயின் பெயரிலோ அல்லது தன்னுடைய மனைவியின் பெயரிலோ அல்லது தன்னுஐடய மகளின் பெயரிலோ ஒரு வியாபார நிறுவனத்தை வைத்திருப்பதைப் போல இதுவும் இருக்கலாம்.

இது குறித்து அதிகம் அலட்டிக் கொள்ள எதுவும் இருப்பதாகப் படவில்லை :)

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் பெயரில் எழுதும் ஆண்கள்

இப்போதும் சொல்கிறேன் எழுதிட்டுப்போகட்டும்.

ஆண்கள் பாவம் அவர்களை இப்படியாவது எழுத விடுங்கள். :):D

சுஜாதா என்பவர் ஆண் என எனக்கு பல காலமாக தெரியாது.

அது போல பெரியம்மா படிக்கும் ரமணிசந்திரன் என்பவரை நான் ஆண் என நினைத்ததுண்டு.

அதிகம் இத்துறைகளை பற்றி தெரியாதவர்களுக்கு பெயர்கள் குளப்பம் உண்டு பண்ணுவது நிஜம் தான்.

எதற்காக பெண்கள் பெயரை வைத்துள்ளனர் என வைத்தவர்களை தான் காரண்ம் கேட்க வேண்டும்.

பெண் தானே சக்தி. ஒரு பெண்ணின் பெயரை கேட்கும் போதும் ஒரு ஆணின் பெயரை கேட்கும் போதும் உள்ள மனநிலையை உணர்ந்தால்.ஓரளவு காரணம் புரியும் :lol:

அட...அட இப்படியும் ஒரு இசு போதோ..(நடகட்டும்...நடகட்டும் <_< )...எந்த பெயரில எழுதுறோம் என்பது முக்கியமல்ல என்னத்தை எழுதினோம் என்பது தான் முக்கியம்..அதோட பெண் பெயரில எழுதுறது என்றா லேசுபட்ட வேளையா... :D (அந்த கொடுமையை பற்றி நேக்கு தானே தெரியும்)..நிசமா முடியல்ல.. :(

அக்சுவலா ஆணிற்கு இந்த பெயர்கள் தான் வைக்க வேண்டும் பெண்களுக்கு இந்த பெயர்கள் வைக்க வேண்டும் என்று லோவில தான் இருக்கோ இல்லையே...(விருப்பமான பெயர்களை யார் வேண்டும் என்றாலும் வைக்கலாம் :D )...அது சுஜாதாவா இருந்தாலும் சரி எங்க சுண்டல் அண்ணாவா இருந்தாலும் சரி..(அட சுண்டல் அண்ணாவை வேற சுஜாதா ரேஞ்சிற்கு கொண்டு வந்துட்டன் :D )..

அத்தோட பாருங்கோ பெண் பெயரில எழுதுற ஆட்கள் எல்லாரையும் முதற்கண் பாராட்ட வேண்டும் பாருங்கோ பிகொஸ் பெண் பெயரில கருத்து எழுதி நின்று பிடிக்கிறது என்றா அது கிரேட் தான் அந்த வகையில் பிரபல எழுத்தாளர் சுஜாதா பாராட்டபட வேண்டியவர் தான் பாருங்கோ.. :(

எந்த பெயரையும் கொண்டு எழுதலாம் கருத்து ஆழமாக இருந்தா எந்த பெயரிலையும் எழுதினாலும் செல்லுபடியாகும் இல்லாட்டி ஊத்திடும் பாருங்கோ.. :o (என்ன நான் சொல்லுறது சரி தானே :( )...

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா இருக்கக்க பெயர் சொல்லுவாங்க போனா பிறகு எல்லாருக்கும் ஒரே ஒரு பெயர் தான்" :)

அப்ப நான் வரட்டா!!

:rolleyes: உதாரணத்திற்கு ஜம்முவையே எடுத்துக்கொள்ளுங்கோவன் :lol:

:lol: உதாரணத்திற்கு ஜம்முவையே எடுத்துக்கொள்ளுங்கோவன் :D

இது என்ன கொடுமை நிலா அக்கா.. :rolleyes: (ஜம்மு பேபி கேள் ஆக்கும் :D )...ரொம்ப கொடுமையோ... :D

அப்ப நான் வரட்டா!!

இது என்ன கொடுமை நிலா அக்கா.. :D (ஜம்மு பேபி கேள் ஆக்கும் :D )...ரொம்ப கொடுமையோ... :(

அப்ப நான் வரட்டா!!

ஓ நான் அடிக்கடி தம்பி என கூப்பிட்டாலும் எனக்கும் இன்றுவரை சின்ன டவுட் தானுங்கோ. :) இப்ப நன்னா புரிஞ்சிடிச்சு நீங்கள் பேபி கேர்ள் தான் என்று.

எதுக்கும் நான் முழுமையாக நம்பணும் என்றால் உங்கள் குரலை காட்டுங்கோ. அதாவது யாழில் எழுதுவதை விட்டு ஒருக்கா கதையுங்கோவன் பார்ப்பம் சீ கேட்பம் :o

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் பெயரில் எழுதும் ஆண்கள்

ஆண்கள் பெயரில் பெண்கள் இப்படி ஒரு தலைப்பு போட்டால் நல்லாயிருக்குமே :D

கறுப்பி அக்கா! ஏன் இந்த விளையாட்டு...ஒரு முடிவுக்கு வந்திடுவம்...

ஓ நான் அடிக்கடி தம்பி என கூப்பிட்டாலும் எனக்கும் இன்றுவரை சின்ன டவுட் தானுங்கோ. :D இப்ப நன்னா புரிஞ்சிடிச்சு நீங்கள் பேபி கேர்ள் தான் என்று.

எதுக்கும் நான் முழுமையாக நம்பணும் என்றால் உங்கள் குரலை காட்டுங்கோ. அதாவது யாழில் எழுதுவதை விட்டு ஒருக்கா கதையுங்கோவன் பார்ப்பம் சீ கேட்பம் :D

அட...நிலா அக்காவிற்கே சந்தேகமா..(இதை வானிலா தான் பொறுக்குமா :unsure: )..அட இப்பவாது கிளியர் ஆச்சே ரொம்ப சந்தோசம் அக்கா..என்ன யாழில குரலை காட்டுறதா..(போங்கோ நேக்கு வெட்கம் வெட்கமா வருது :( )..கதைச்சிட்டா போச்சு நிலா அக்கா பட் உங்க கூட மட்டும் இது எப்படி.. :wub:

அப்ப நான் வரட்டா!!

கறுப்பி அக்கா! ஏன் இந்த விளையாட்டு...ஒரு முடிவுக்கு வந்திடுவம்...

கொக்குவிலன் அண்ணா இங்க என்ன விளையாட்டு நடக்குது முடிவிற்கு வர :( ..(நேக்கு ஒன்னுமே விளங்கல்ல :) )..

அப்ப நான் வரட்டா!!

அட...நிலா அக்காவிற்கே சந்தேகமா..(இதை வானிலா தான் பொறுக்குமா :unsure: )..அட இப்பவாது கிளியர் ஆச்சே ரொம்ப சந்தோசம் அக்கா..என்ன யாழில குரலை காட்டுறதா..(போங்கோ நேக்கு வெட்கம் வெட்கமா வருது :( )..கதைச்சிட்டா போச்சு நிலா அக்கா பட் உங்க கூட மட்டும் இது எப்படி.. :wub:

அப்ப நான் வரட்டா!!

:D ம்ம் நிலாக்கு சந்தேகம் வந்தால் வானிலா பொறுக்காதோ? அட கடவுளே :(

ம்ம் யாழில் தான் குரலைக் காட்டுங்கோ. ஹீஹீ என்ன வெட்கம் பேபி. குரலை தானே காட்ட சொன்னேனாக்கும் :D ஓ என் கூட கதைச்சு என்ன யாழே அதிரும்படி திருவாயை திறவுங்கோ மழலைமொழி கேட்க ஆசையாக இருக்கு :)

:D ம்ம் நிலாக்கு சந்தேகம் வந்தால் வானிலா பொறுக்காதோ? அட கடவுளே :(

ம்ம் யாழில் தான் குரலைக் காட்டுங்கோ. ஹீஹீ என்ன வெட்கம் பேபி. குரலை தானே காட்ட சொன்னேனாக்கும் :unsure: ஓ என் கூட கதைச்சு என்ன யாழே அதிரும்படி திருவாயை திறவுங்கோ மழலைமொழி கேட்க ஆசையாக இருக்கு :D

ம்ம்ம்...நிலா அக்கா உது கூட தெரியாதே என்ன..யாழில எல்லாம் காட்டமாட்டன்.. :( (வேண்டும் என்றா உந்த சுண்டல் அண்ணாவின்ட குரலை எடுத்து தாரேன் என்ன :wub: )..அக்கா ஆசைபடுற படியா யோசிப்போம் ஒகேயா.. :)

அப்ப நான் வரட்டா!!

:wub: சில ஆண்களின் குரல் பெண்ணின் குரலை ஒத்ததாகவும் சில பெண்களீன் குரல் ஆணின் குரலை ஒத்ததாகவும் இருக்குமாமே உண்மையோ ஜம்மு :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.