Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆறு கால்களுடன் லக்சுமி என்ற குழந்தை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு கால்களுடன் லக்சுமி என்ற குழந்தை

http://www.thisislondon.co.uk/news/article...tion/article.do

லச்சுமி சுவாமிக்கு ஆறு காலா? நாலு கையும், இரண்டு காலும் தானே படங்களில் கீறப்பட்டுள்ளது?

:lol:

8LimbGirlBARC_468x319.jpg

8LimbXrayBARC_468x533.jpg

கூடுதல் கைகால்களுடனான குழந்தைக்கு பெங்களூரில் அறுவை சிகிச்சை

_44220774_203family-ap.jpg

தாயுடன் குழந்தை லக்ஷ்மி

நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்திருந்த ஒரு இரண்டு வயது குழந்தைக்கு இயல்பான ஒரு வாழ்க்கை கிடைக்க 13 நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழு அறுவை சிகிச்சை மூலம் முயன்றுவருகிறார்கள்.

இந்தியாவின் பெங்களூரு நகர புறநகர்ப் பகுதியில் ஒரு அசாதாரணமான அறுவை சிகிச்சை தற்போது நடைபெற்றுவருகிறது.

லக்ஷ்மி தத்மா என்ற அந்தக் குட்டிப் பெண்ணுடைய இடுப்புப் பகுதியில் ஒரு தலையற்ற, முறையான வளர்ச்சியற்ற ஒரு பிள்ளையின் உடல் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

தனது குழந்தையை இந்துப் பெண்தெய்வத்தின் அவதாரமென்று பெற்றோர்கள் பார்க்கிறார்களென்றாலும் அக்குழந்தையைக் காப்பாற்ற அது சிறுபிள்ளையாக இருக்கும்போதே அறுவை சிகிச்சை செய்வது அவசியமென்று மருத்துவர்கள் கூறுயிருந்தனர்.

லக்ஷ்மி விவகாரத்தை முதலில் கையிலெடுத்தவரும் இந்த அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவ குழுவுக்கு தலைமை ஏற்றிருப்பவருமான டாக்டர் ஷரன் பாடில், நாற்பது மணிநேரம் தொட்ர்ந்து சிகிச்சை நடக்கலாம் என்பதற்காக தங்களைத் தயார் செய்திருப்பதாகக் கூறினார்.

இந்த நல்ல காரியம் வெற்றிகரமாய் நிறைவடைந்து சிறுமி லக்ஷ்மி சிறப்பான ஒரு வாழ்க்கை வாழ்வாளென்று இந்த நிகழ்ச்சியைக் கேட்கும் அத்தனை பேரும் வாழ்த்துவார்களென்பதில் ஐயமில்லை.

-BBC

இக் குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்காக செலவாகும்

செலவை சத்திர சிகிச்சை நடைபெறும் மருத்துவ மனை ஏற்றுள்ளதாகவும்

வைத்தியர்கள் எதுவித கட்டணமும் பெறாமல் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிய வருகிறது.

சத்திர சிகிச்சை வெற்றி பெற்று

லக்ஷ்மி நலமுடன் நீண்ட காலம் வாழ

இறைவனிடம் வேண்டுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

சத்திர சிகிச்சை வெற்றி பெற்று

லக்ஷ்மி நலமுடன் நீண்ட காலம் வாழ பிரார்தனைகள்

சத்திர சிகிச்சை வெற்றி பெற்று இலக்ஷ்மி நலமுடன் நீண்ட காலம் வாழ

எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

8 கை, கால்களுடன் பிறந்த குழந்தைக்கு வாழ்வு தந்த டாக்டர்கள்

புதன்கிழமை, நவம்பர் 7, 2007

babywith4handsand4armsdb7.png

பெங்களூர்: 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த 2 வயது பெண் குழந்தைக்கு பெங்களூர் மருத்துவமனையில் கிட்டத்தட்ட 40 மணி நேரம் நடந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அந்தக் குழந்தை 2 கை, கால்களுடையதாக மாற்றப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பீகார் நேபாள நாட்டு எல்லைப் புறத்தில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்குப் பிறந்த குழந்தைதான் இலட்சுமி. 2 வயதாகும் இலட்சுமி பிறந்தபோதே நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்தது. ஆனால் தலை மட்டும் ஒன்றுதான் இருந்தது.

இதற்கு என்ன காரணம் என்றால், இலட்சுமியின் தாயார் கர்ப்பமானபோது அவரது கருப்பையில் இரட்டைக் குழந்தைகளுக்கான கரு உருவானது. ஆனால் அது குறிப்பிட்ட காலத்திற்கு மேல் ஒரு கரு வளராமல் அப்படியே நின்று விட்டது. இதனால் இலட்சுமியுடன் ஒட்டியபடி இன்னொரு சிசுவின் கைகளும், கால்களும் வளர்ந்தன. இதனால்தான் இலட்சுமி நான்கு கைகள், கால்களுடன் பிறக்க நேரிட்டது.

இப்படி குழந்தை பிறந்ததால் இலட்சுமியின் பெற்றோர் பெரும் வேதனை அடைந்தனர். பல டாக்டர்களையும் அணுகி வழக்கமான குழந்தையாக இலட்சுமிய மாற்ற முடியாதா என்று ஆலோசனை கேட்டனர். ஆனால் போன இடமெல்லாம் அவர்களுக்கு பாதகமான பதிலே கிடைத்தது.

50 ஆயிரம் பேரில் ஒரு குழந்தைக்குத்தான் இதுபோல பாராசைட் பிரச்சினை வருமாம். ஆனால் இதுவரை இப்படிப்பட்ட குழந்தைகளிடம் நடத்தப்பட்ட அறுவைச் சிகிச்சை வெற்றி பெற்றதில்லை.

இந்த நிலையில்தான் பெங்களூரைச் சேர்ந்த ஸ்பர்ஷ் மருத்துவமனை, இலட்சுமிக்கு புது உயிர் அளிக்க முன்வந்தது. அறுவைச் சிகிச்சை மூலம் 2 கைகளையும், கால்களையும் அகற்ற முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து இலட்சுமியை எடுத்துக் கொண்டு அவளது பெற்றோர் பெங்களூர் விரைந்து வந்தனர். ஸ்பர்ஷ் மருத்துவமனையில் இலட்சுமியை அனுமதித்தனர்.

குழந்தைகள் நல அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் சரண் பாட்டீல் தலைமையில் 30 பேர் கொண்ட டாக்டர்கள் குழு இலட்சுமிக்கு அறுவைச் சிகிச்சை செய்வது தொடர்பாக கடந்த ஒரு மாதமாக பல்வேறு சோதனைகள், ஆய்வுகளை மேற்கொண்டது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை ஆபரேஷன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை தொடங்கிய இந்த ஆபரேஷன் இன்று காலை வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. கிட்டத்தட்ட 40 மணி நேரம் நடந்த இந்த ஆபேரஷன் இந்தியாவிலேயே முதல் முறையாக நடந்துள்ள அரிய வகை ஆபரேஷன் ஆகும். உலக மருத்துவ வரலாற்றிலும் இந்த ஆபரேஷன் முக்கிய இடத்ைதப் பிடித்து விட்டது.

இலட்சுமியின் உடலில் எக்ஸ்ட்ராவாக வளர்ந்திருந்த கைகளையும், கால்களையும் முதலில் டாக்டர்கள் துண்டித்து அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் குழந்தையின் முதுகு தண்டுவடத்தை நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் சரி செய்தனர். இது மிகவும் சிக்கலான ஆபரேஷன் என்பதால் டாக்டர்கள் குழு மிகுந்த சிரமத்திற்கிடையே இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டது.

இலட்சுமியின் உடலில் செயல்படும் தன்மையில் இருந்த ஒரு சிறுநீரகம், பாலியல் உறுப்புகள், சிறுநீரக பைகள் உள்ளிட்டவை சரி செய்யப்பட்டுள்ளன.

இடுப்பு எலும்பும் சீரமைக்கப்பட்டுள்ளது. கால்களும் சீர் செய்யப்பட்டுள்ளன. இதற்கு பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

வெற்றிகரமாக நடந்த இந்த அறுவைச் சிகிச்சை குறித்து டாக்டர் சரண் பாட்டீல் கூறுகையில், எங்களது எதிர்பார்ப்புகளையும் தாண்டி குழந்தையிந் உடல் உறுப்புகள் மிகவும் சீராக இயங்குகின்றன. இலட்சுமி நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார்.

இனி இலட்சுமி வழக்கமான பெண் குழந்தையைப் போல அனைத்து நலமுடனும் வாழ வழி பிறந்துள்ளது என்றார்.

தற்போது இலட்சுமி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். அங்கு சில நாட்கள் டாக்டர்கள் அவரது உடல் நிலையைக் கண்காணிப்பார்கள்.

தங்களது மகளுக்குப் புது வாழ்வு கொடுத்துள்ள டாக்டர்களுக்கு இலட்சுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி கூறினர். தங்களது மகளுக்குப் புது வாழ்க்கை கொடுத்த டாக்டர்களுக்கும், கடவுளுக்கும் நன்றி சொல்வதாக லட்சுமியின் தந்தை சாம்பு கூறினார்.

இலட்சுமி விரைவில் முழு குணமடைய நாமும் பிரார்த்திப்போம்.

நன்றி தற்ஸ்தமிழ்

பெருமனத்துடன் இலவசமாகவும் வெற்றிகரமாகவும் இச்சத்திரசிகிக்சையை நடாத்தி முடித்த பெங்களூரைச் சேர்ந்த ஸ்பர்ஷ் மருத்துவமனை வைத்தியர் குழுமத்திற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

லஷ்மி நலமுடம் வாழ பிரார்திபதோடு இலவசமாக சந்திரசிகிச்சை செய்த வைத்திய குழுமதிற்கும் வைத்தியசாலைக்கும் நன்றிகலந்த வாழ்த்துகள்!! :)

நல்லவை தொடர இறையருள்

http://edition.cnn.com/video/

இங்கயும் விடியோவில் ,இந்த லக்ஸ்மி என்ற சின்னப்பிள்ளையை பற்றி போட்டிருக்கினம்....

ஆரம்பத்தில் துரதிர்ஸ்டவசமாக பிறந்தாலும்,

பின்னர் அதிர்ஸ்டக்காரியாகிய லஷ்மிக்கு,

தொடர்ந்தும் அதிர்ஸ்டம் கைகொடுக்க,

லஷ்மீகரமாக வாழ வாழ்த்துகிறேன்!

சத்திர சிகிச்சையின் பின் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்க்க ஆசையாக இருக்கிறது, கிடைத்தால் யாராவது தயவு செய்து இணைத்துவிடுங்கள்!

அனி,

பிழையான இணைப்பு போல இருக்கு. இஞ்ச பாருங்கோ மூன்று வீடியோக்கள் இதில இருக்கு. சேர்ஜரி வெற்றிகரமாக நிறைவேறியுள்ளதாக அறிவித்து உள்ளார்கள்.

சேர்ஜரி செய்யும்முன், சேர்ஜரி செய்தால் குழந்தை இறப்பதற்கு 30% சாத்தியம் இருப்பதாக டாக்டர்களினால் அச்சம் தெரிவிக்கப்பட்டது.

http://edition.cnn.com/video/#/video/healt...imbed.child.cnn

http://edition.cnn.com/video/#/video/healt...limbed.girl.cnn

http://edition.cnn.com/video/#/video/healt...ery.success.cnn

குழந்தையின் உடல்நலத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடைபெறாது இருக்க வைத்தியர்கள் இன்னும் மூன்று நாட்களுக்கு குழந்தையுடன் தொடர்ந்து இருந்து கவனிப்பார்கள் என்று அறிவித்து உள்ளார்கள். குழந்தை இப்போது இண்டென்சீவ் கெயார் யுனிட்டில் உள்ளதாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியில் உள்ள பிரபல்ய பத்திரிகைகளும்,இணையத்தளங்கள

கூடுதல் கைகால்களுடன் பிறந்த பெங்களூரு சிறுமிக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றி

_44222966_dr_patil_afp203.jpg

சிறுமியின் எதிர்காலம் குறித்து மருத்துவர் ஷரண் பாடில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் பெங்களூரு நகரில் கூடுதல் கைகள் கால்கள் கொண்ட ஒரு இரண்டு வயது பெண்குழந்தையின் மீது நடத்தப்பட்ட மிக நீண்ட நேர அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது.

இதுபோன்ற ஒரு அறுவை சிகிச்சை இந்தியாவில் நடைபெற்றிருப்பது இதுவே முதல்முறை.

டாக்டர் ஷரண் பாடில் தலைமையிலான மருத்துவர்கள் குழுவொன்று 24 மணி நேரங்களூக்கும் மேலாக நடத்திய இந்த அறுவை சிகிச்சையின் பின் குழந்தை லக்ஷ்மியின் உடலில் ஒட்டிக்கொண்டிருந்த கைகள் கால்கள் உடல் உறுப்புகள் அனைத்தும் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது.

2 வயதுக் குழந்தை லக்ஷ்மி இந்த அறுவை சிகிச்சையை நன்றாக சகித்துக்கொண்டாள் என்றும், இனி அவள் மற்றவர்களைப்போல் இயல்பு வாழ்க்கை வாழமுடியும் என்று தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தலைமை மருத்துவர் டாக்டர் ஷரண் பாடில் குறிப்பிட்டார்.

- BBC

அஜீவன் அண்ணா,

குழந்தை பிழைத்துவிட்டது நல்ல செய்தி. ஆனால் குழந்தை இந்த சத்திர சிகிச்சையின்போது எவ்வளவு வேதனையை சந்தித்து இருக்கும் என்பது நினைத்துப்பார்க்க முடியாமல் இருக்கின்றது. அவர்கள் வலியைக் குறைப்பதற்கு மருந்துகள் கொடுத்தாலும், யோசிச்சுப் பாருங்கோ ஏனைய நாலு கால்களை மூட்டுடன் கழற்றினால் எவ்வளவு வேதனையாக இருக்கும் என்று.

நானும் பல சேர்ஜரிகள் கண்டவன்தான். எனவேதான் யோசித்துப் பார்த்தேன் இந்தக்குழந்தை சேர்ஜரி முடிந்ததும் நினைவு திரும்பும்போது எவ்வளவு துன்பப்பட்டு இருக்கும் என்று.

கொடுத்துவைத்த குழந்தை, பலரின் அனுதாபத்துக்கு ஆளாகி இப்போது கஸ்டப்பட்டாலும் எதிர்காலத்தில் வளமான வாழ்வு வாழ சந்தர்ப்பம் உள்ளது. ஆனால், இப்படி இந்த லக்ஷுமி என்ற குழந்தையைப் போல் ஊடகங்களின் கவனத்தை பெறாத ஏனைய ஆயிரமாயிரம் குழந்தைகளை நினைச்சுப் பார்த்தா வாழ்க்கை வெறுக்கும்.

ஏதோ கடவுளின் திருசஷ்டியில், இயற்கையின் படைப்பில் இவை.. இப்படி எல்லாம் பிள்ளைகள் பிறப்பது தவிர்க்க முடியாதவை என்றாலும்.. வசதி உள்ளவர்கள் பிள்ளை பிறக்கும் முன்பே ஸ்கான் செய்து பார்த்து சிசுவின் உடல்நிலை சரியாக இருப்பதை ஸ்கான் செய்து உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அங்கவீனமான அல்லது குறைபாடுள்ள குழந்தைகள் என்று கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை அவை தாயின் உடலைவிட்டு வெளியில் வரும்முன்பே அழித்துவிட வேண்டும்.

இப்படிச் செய்வதே எனக்கு சரியாகப் படுகின்றது. ஒரு குழந்தை சாதாரணமாகப் பிறந்தாலே இந்த உலகவாழ்வை சமாளிப்பது மிகவும் கடினம். உலகில் எல்லாம் போட்டி மயமானது. இந்த நிலையில் குழந்தைகள் குறைபாட்டுடன் பிறந்தால் அதைப்போன்ற வேதனை வேறு ஒன்றும் பெற்றோருக்கு இருக்க முடியாது.

எனவே, குழந்தை பிறந்தபின் தலையில் அடித்து அழுவதைவிட பிறக்கும்முன்பே ஸ்கான் பண்ணிப் பார்த்து குறைபாடுள்ள சிசுக்களை அழிப்பதே புத்திசாலித்தனமானது.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

லக்சுமி லக்சுமிகரமாக தான் உள்ளார்.ஒரு நொடு நொடுத்த பிள்ளையா கிடக்கு.ஒரு இடத்தில இருக்குதில்லை.

ஸ்கான் பண்ணிப் பார்த்து குறைபாடுள்ள சிசுக்களை அழிப்பதே புத்திசாலித்தனமானது.

- கலைஞன்

நீங்கள் சொல்லும் கருத்து எனக்கு புரிகிறது கலைஞன்.

சில வேளைகளில்

நாம்

நம்மையே உதாரணமாக்கிக் கொள்ள முயல்கிறோம்?

இது மன அமைதியை குலைத்துவிடும்.

நீங்கள் சொல்லும் ஒரு நிலைக்கு பெற்றோர்கள் வந்தாலும்

எல்லாமே சரியாக முடியாது.

ஊனம் என்பது ஸ்கானில் தெரியலாம்

ஆனால்

ஊமையோ - குருடோ - செவிடோ கூட முறையாக தெரியாமல் போகலாம்?

இதுவும் ஊனம்தானே?

போராட்டம்தான் வாழ்கை.

வாழ இயலாதவர்களை வாழ வைக்க பலர் முயல்கிறார்கள்.

உடலின் ஊனத்தை விட

மன ஊனமே பலரை அழிக்கிறது.

உடல் ஊனமானவர்களுக்கு

சாதாரணமானவர்களை விட சில அபார சக்திகள் உண்டு.

சாதனைகள் படைத்தும் இருக்கிறார்கள்.

சரித்திரமாகியும் இருக்கிறார்கள்.

எனவே உனத்தை மறந்து

இப்படியானவர்கள் தன்னால் முடிந்ததை செய்ய முயல வேண்டும்!

மனதை ஊனமாக்க முயலக் கூடாது

ஸ்கான் பண்ணுவது இந்தியா போன்ற நாடுகளில்

பெண் சிசுக் கொலைகளுக்கே வழி கோலும்.

ஆண் குழந்தை வேண்டுவோர்

பெண் குழந்தைகளையும்

பெண் குழந்தை வேண்டுவோர்

ஆண் குழந்தையையும்

அழித்து விடுவார்கள் இல்லையா?

தேவையற்ற யுத்தங்களால்

எத்தனை ஆரோக்கியமான புத்திசாலி குழந்தைகள் மடிகின்றன?

சிந்தித்தால்..............?????

அஜீவன் அண்ணா,

நீங்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிது. ஆனா நீங்கள் பெண் சிசுக்களின் கொலையை இந்தப் பிரச்சனையுடன் ஒப்பிடுவது தவறு எண்டு நினைக்கிறன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.