Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் தலைவரை இலக்கு வைப்போம் - சிறீலங்கா வான்படைத்தளபதி சூளுரை.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகளின் தலைவரை இலக்கு வைப்போம் - சிறீலங்கா வான்படைத்தளபதி சூளுரை.

சிறீலங்கா வான்படைத்தளபதி றோசான் குணதிலக கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தாம் விடுதலைப்புலிகளின் தலைவரை இலக்கு வைப்போம் எனவும் அது தமக்கு கடினமான காரியம் அல்ல எனவும் சூளுரைத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகளின் தலைவரது நடமாட்டம் வன்னியில் மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாத்திரமே காணப்படுவதாகவும் தமது இராணுவம் பொதுமக்களிடம் இருந்து இதுதொடர்பில் தகவல்கள் பெறுவதற்கு கோரியுள்ளதாகவும், பொதுமக்கள் தகவல்களை வழங்கும்பட்சத்தில் தாம் இலக்குமீது தாக்குதல்களை நிகழ்த்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Pathivu

"Air Marshall Roshan Goonetilleke, in an interview with the government-owned Sunday Observer, said it would not be a difficult task for the air force to get Prabhakaran because he was confined to a very limited area in the rebel-held northern Wanni region.

"I do not think it is that difficult for us to get him now. We will find him somehow soon. We need a great deal of patience," Goonetilleke was quoted as saying in the newspaper. The air marshall could not be reached to confirm the report.

His comments came a week after the air force bombed a rebel communications center, killing the Tigers' political chief, S.P. Thamilselvan and five other rebels"

The Associated Press

Edited by அருண்

அப்ப றோசான் குணதிலக்க தனக்கு நாள் குறிச்சிட்டார் போலை.

ஜனாதிபதி அடுத்த தளபதியை தேடலாம்

:lol::):wub:

தணிக்கை செய்யப்பட்டுள்ளது..நான் என்ன எழுதியிருப்பன் என்று உங்கள் விருப்பத்திற்கேற்ப கற்பனை செய்யலாம்.:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப றோசான் குணதிலக்க தனக்கு நாள் குறிச்சிட்டார் போலை.

ஜனாதிபதி அடுத்த தளபதியை தேடலாம்

:lol::):wub:

நிட்சயமாக அப்படியல்ல. தேசியத்தலைவரின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையான வட்டாரங்கள் சிதைக்கபடுகின்றனவா? ரோவால்?

அன்று மாத்தையாவால் இன்று???

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரை குறிவைக்க முடிந்திருந்தால் எப்பவோ குறி வைத்திருப்பார்கள். வன்னியில் நாள்தோறும் நடக்கும் எழுந்தமாறான விமனத் தக்குதல்களில் எதேச்சையாக தமிழ்ச்செல்வன் வீழ்த்தப்பட்டார். இது தலைவர் உற்பட்ட மற்றய ராணுவத் தளபதிகளுக்குப் பொறுந்தாது.

பிரபாகரனின் தாக்குதல் திட்டங்களையே அறியமுடியாதவர்கள் அவரின் இருப்பிடத்தை அறிவதாவது. இது கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வைகுண்டம் ஏறி எதோ பிடிக்க முயன்ற கதை தான்.......

வீணாக யாரும் கலக்கமடய வேண்டாம். இது புலிகளைச் சீண்டிப்பார்க்கும் வேலை. தமிழ்ச்செல்வன் அண்ணாவின் படுகொலைக்கான பதிலடியை புலிகள் தாமதிப்பதின் நோக்கம் புரியாமல் விழி பிதுங்கி நிற்கும் கையாலாகாத ஒரு வீணனின் கூச்சல் மட்டுமே.

மற்றொரு விஷயம்...நீங்கள் எண்ணுவது போல் ரா எனும் பார்ப்பணிய உளவுத்துறை இன்று நேற்றல்ல நீண்ட நெடுங்காலமாக தலைவரையும் எமது மூத்த தளபதிகளையும் குறிவைத்துத்தான் இருக்கிறது. ஆனால் மாத்தையாவின் பின் வடபகுதியில் இருந்து யாரையும் இழுக்க முடியவில்லை. இப்போது கே டீ ராஜசிங்கம் என்னும் கிழட்டு நரி மகிந்வுடன் சேர்ந்து சதி செய்யப் பார்க்கிறது.....இந்தச் சாகிற வயதிலயும் அதற்குப் பணத்தாசை விடவில்லை.

நிட்சயமாக அப்படியல்ல. தேசியத்தலைவரின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையான வட்டாரங்கள் சிதைக்கபடுகின்றனவா? ரோவால்?

அன்று மாத்தையாவால் இன்று???

"குருடன் எறிந்த கல் இலக்கைத் தாக்கியது போல்" அப்படித்தான் இந்த நடப்பும். உங்களது கருத்துப்படி சந்தேக விதைகள் தூவப்படுகின்றன. அது களத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். தமிழ்ச்செல்வன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வைத்துக்கொண்டு இந்த முடிவுகளுக்கு வரமுடியாது. அந்த இடம் அடையாளப்படுத்தப்பட்ட ஒரு பகுதி.

  • கருத்துக்கள உறவுகள்

றோ வால் தலைவரை ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பது றோவின் இயலாமையை காட்டுகிறது. அதே சமயம் மாத்தையா மாதிரி இன்னொருமொருவர் உருவாக மாட்டார் என நிச்சயமாக கூறமுடியாது.

றோ வால் தலைவரை ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பது றோவின் இயலாமையை காட்டுகிறது. அதே சமயம் மாத்தையா மாதிரி இன்னொருமொருவர் உருவாக மாட்டார் என நிச்சயமாக கூறமுடியாது.

ஆசை யாரைத்தான் விட்டது. மாத்தையாவைத்து அல்லது 20 வருடங்கள் இணைந்திருந்து இறுதியில் சதிசெய்த கருணாவை மட்டும் வைத்துக்கொண்டு எல்லாரையும் அப்படி எண்ணமுடியாது. இருப்பினும் பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்றொரு பழமொழியும் இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் அயல் நாடுகளில் எந்தநாடு நிம்மதியாக வாழ்க்கை நடத்துகின்றது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருடன் அடிக்க........... எல்லாம் அப்படியல்ல.

வெகுவிரைவில் விடுதலைப்புலிகளின் அரசியல் தலைமைப்பீடத்தில் சில மாற்றங்கள் வரும் என்பது மட்டும் நிட்சயமாக தெரிகின்றது.

மகிந்தவை விட அவரது சகோதரர் கோதா சிறந்த அரசியல் இராணுவ வகுப்பாளர் போல இயங்குகிறார்?

அவரை நான் புகழவில்லை :lol:

சிங்கள இணையதளத்திலிருந்து உதாரணமாக

srilanka government learned something from the =after Sadam effect= and how =an Iracquization= of the conflict can be avoided?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த எச்சரிக்கை உட்பட எதிரியின் நகர்வுகளை இலகுவாக எடுக்க முடியாது.

புலிகள் யாழ் குடாவில் இருந்த போது இருந்த பாதுகாப்பு தளபதிகளுக்கு இன்றில்லை. வன்னி மண்ணில் தளபதி சங்கர், கங்கை அமரன் என்று பலரை வீணாப் பலி கொடுத்திருக்கிறோம். தளபதி ராம் தளபதி பால்ராஜ் ஆகியோர் இலக்கு வைக்கப்பட்டு தப்பி இருக்கின்றனர். தமிழ்செல்வன் அண்ணா முன்னரும் இலக்கு வைக்கப்பட்டார். தெந்தமிழீழத்தில் தளபதி நிசாம் தளபதி கெளசல்யன் என்று பலரை அநியாயமா இழந்திருக்கிறம். எனியும் இழக்க முடியாது. இக்காலங்களில் இராணுவத்துக்கு அல்லது சிங்கள அரசியல் தலைமைக்கு ஏற்பட்ட இழப்பென்பது குறைவு.

தலைவரை லேசர் வழிநடத்தும் ஏவுகணைகள் கொண்டு ரத்வத்தை பல தடவைகள் இலக்கு வைத்திருக்கிறார். அப்போ எல்லாம் கிபீர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. தற்போது லேசர் வழிநடத்தப்படும் தோமோபரிக் குண்டுகளை மிக் 27 அல்லது 29 கொண்டு ஏவுவது என்பது செச்சின் போராளிகளுக்கு எதிராக ரஷ்சியா கடைப்பிடித்த வழியிலும் F 16 கொண்டு அமெரிக்கா அல்குவைடா தலிபான் ஈராக் தீவிரவாதிகளுக்கு எதிரா நடைமுறைப்படுத்தியவற்றின் தொடர்சியிலும் நீள்கிறது.

எனவே எச்சரிக்கைகளை இட்டு அவதானமாக இருப்பது அவசியம். எச்சரிக்கைகள் நகர்வுகளை அவதானிக்கவும் செய்யப்படலாம். குறிப்பாக செய்மதிப் பரிவர்த்தனைகள் சமிக்கைகளை அனுப்புதல் தொடர்பில் புலிகள் மிக அவதானமாக செயற்பட வேண்டும். முக்கிய செச்சினிய போராளித் தலைவரை பேச்சுக்கு அழைத்த ரஷ்சியா பின் அவருடன் செய்மதி மூலம் தொடர்பு கொண்டு அவரின் இடத்தை அறிந்து இதே வகையில் தாக்கிக் கொன்றது. தற்போது தமிழ்செல்வன் அண்ணாவும் தொடர்பாடல் இடத்தில் இருந்த போதே கொல்லப்பட்டுள்ளார்..!

எதிரி செய்மதி சமிஞ்சைகளை கண்டறியும் தொழில்நுட்பத்தை அமெரிக்க அல்லது இஸ்ரேலிடமிருந்து பெற்று அதன் வழி லேசர் வழிநடத்தல் ஏவுகணைகளை விமானங்களில் இருந்து இலக்கு நோக்கி இயக்கி இருக்க முடியும்..! ஏவுகணையை விமானம் 1000 அடி உயரத்தில் இருந்து இலக்கு நோக்கி செலுத்தியதாக இக்பால் குறிப்பிட்டுள்ளார். புலிகளின் விமான எதிர்ப்பு படைப்பிரிவினர் விமானத்தை 1000 அடிக்கு வர அனுமதித்தது கூட எதிரிக்கு சாதகமானதாகி விட்டது. ஏவுகணைகளை தொலைவில் இருந்து ஏவ அனுமதிக்கும் போது அவற்றின் எரிபொருள் மற்றும் இலக்கை அடையும் திறன் போதாமை இருக்க வாய்ப்புண்டு. 15 ஆயிரம் அடியில் பறந்த விமானம் 1000 அடிக்கு தாழ வந்து தாக்கிச் சென்றிருக்கிறது என்பது முக்கியமான ஒன்று. இரணைமடுவுக்குள் தாக்கச் சென்ற விமானம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இக்பால் அத்தாசின் 04-11-2007 ரிப்போட் கூறுகிறது. இருந்தும் விமானி புலிகளின் விமானம் இறங்கிய இடத்தை தாக்கினாராம் உயர இருந்து..!

வன்னியில் தற்போது முக்கியமாக இரண்டு வகையில் ஆபத்துக்கள் உள்ளன. ஒன்று வான் வழி. இரண்டு ஆழ ஊடுருவும் அணிகள் மூலம்..! ஆழ ஊடுருவும் அணிகள் மூலம் புலிகளின் முக்கியத்தவர்களின் நடமாட்டத்தை தரை வழி கட்டுப்படுத்திக் கொண்டு வான் வழி அவர்கள் செறிவாக உள்ள இடங்களை இனங்கண்டு தாக்குதலை எதிரி செய்ய விளைகிறான். நாம் எதிரியை குறைத்து மதிப்பிட முடியாது. அவன் சர்வதேசத்தின் ஆதரவோடு இயங்கும் சக்தியாக இருக்கிறான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்..!

மாவீரர் தினத்தையொட்டி தலைவரின் வழமையான நகர்வுகள் அசைவுகள் நுணுக்கமாக எதிரியால் கவனிக்கப்படும் என்பதால் புலிகள் தகுந்த மாற்று ஏற்பாடுகளை செய்வது சாலச் சிறந்தது. எதிரிக்கு அடித்து வீழ்வது வீரம். அவனின் சதிக்கு வீழ்வது எமது இனத்துக்கு பாதகமே..! :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தலைவரையும், தளபதிகளையும்,போராளிகள் ஏன் எஞ்சியிருக்கும் மக்களையும் காப்பாற்ற வேண்டுமென்றால் நாங்கள் முந்துவதைத்தவிர வேறு எந்த பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லை.

அதுதான் சிறந்த வழி.

............. மாவீரர் தினத்தையொட்டி தலைவரின் வழமையான நகர்வுகள் அசைவுகள் நுணுக்கமாக எதிரியால் கவனிக்கப்படும் என்பதால் புலிகள் தகுந்த மாற்று ஏற்பாடுகளை செய்வது சாலச் சிறந்தது.......... :lol:

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட அறு போராளிகளது இழப்பினால்.... இப்போ... எல்லாம்.... புரியாமலா... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு பல தடவை குறிப்பிட்டிருந்தேன் சர்வதேசம் சட்டங்கள் என்று விடுதலைப்புலிகள் பின்னின்றால் அதன் பலன் நாம் முற்றிலும் அழிந்து போக வேண்டிய நிலை தான் வரும்.

இப்போ தமிழ் நாடு அகிம்சை பொறுமை மற்றும் பழமொழிகளை கூறிக்கொண்டு இருந்தால் தமிழீழம் என்பது தண்ணீரில் எழுதிய கதையாகிவிடும்.

சிங்கள பகுதிகளில் பாரதுரமான அழிவுகள் ஏற்பட வேண்டும் (அரசியல் தலைமை மற்றும் இராணுவ பொருளாதார).

ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசியது. இப்போ சர்வதேசத்தில் அமெரிக்கா தலை நிமிர்ந்து நிற்கவில்லையா?

மனித உரிமை என்று கூறிக்கொண்டு இருக்கும் நிறுவனங்கள் ஏன் இப்போ அமெரிக்காவுக்கு கீழ் இயங்குகின்றன???

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியின் பின்னால் அமரிக்காவும் இச்ரேலும் நிற்பதால் புலிகள் தாக்காமல் பின்வாங்குகிறார்கள் என்பது எவ்வளவுக்கு சரியென்று தெரியவில்லை. அப்படி ஒரு தயக்கம் இருந்திருந்தால் எல்லாளன் நடவடிக்கை நடந்திருக்காது. சர்வதேசத்தின் நெருக்குதல்களென்பது இப்போது பூச்சியமே. அப்படியொரு நிலைக்கு தம்மை இட்டுச்சென்றது தமது நடவடிக்கைகளே என்பதும் சர்வதேசத்துக்குத் தெரியும். ஆக சரியான நேரத்தை தெரிவுசெய்வதுதான் பாக்கி.

போராட்டத்தையே வாழ்க்கையாய் வரிந்து கொண்டவர்களுக்கு தமது பாதுகாப்பு பற்றி நாம் வகுப்பெடுப்பது எந்தளவிற்குச் சரிவரும் என்றும் தெரியவில்லை. தமிழ்ச்செல்வன் அண்ணாவின் இழப்பை வைத்துக்கொண்டு மற்றயவர்களின் பாதுகாப்பும் பலவீனப்பட்டு விட்டது என்பது சரியல்ல.

அதற்க்காக புலிகள் அலட்சியமாக இருந்துவிடப்போவதில்லை என்பதுவும் உண்மை.

சரியான காரணமில்லாமல் புலிகள் பொறுமை காக்க போவதில்லை. ஏதோ ஒரு காரணம். இது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

தலைவரே எமது மூச்சு தலைவரினாலே எல்லாம் சாதிக்க முடியும் தலைவருக்கும் அது நன்கு தெரியும் ஆகவே தலைவர் தன் பாதுகாப்பில் மிக்க கவனம் எடுப்பார்.

எதிரிக்கு பின்னால எவன் இருந்தாலும் இருக்கட்டும்...

எங்க தலைவன் நல்லாயிருக்க பிரார்த்திக்கிற தமிழ்மக்கள் என்னைக்கு தலைவர் பின்னாலதான்..

பலம் ஓங்குறவங்க பின்னால பவ்யம் காட்டுற உலகத்திற்கு.. பயத்தால படம் காட்டமுடியாது..

பலத்தாலதான் படம் காட்டமுடியும்...

எங்க தலைவர் பட்டாளமா வந்து போராட்டம் தொடங்கவில்லை...

தொடங்கிய பிறகு பட்டாளமானது..

இவ்வளவு காலம் புலிகள் பலவீனமாயிட்டாங்க.. அவர்களை இப்ப அழிச்சிடமுடியும்..ஒழிச்சிடமு

தமிழ்செல்வன் அண்ணா மீதான தாக்குதல் பற்றி நம்மவர்கள் மத்தியில் (இங்கு எழுதும் கருத்தாளர் முதல் தமிழ் ஊடகங்கள் ஆய்வாளர்கள் கட்டுரையாளர்கள் வரை) ஒற்றுமையான விளக்கமோ நிலைப்பாடோ இல்லை. ஒருவருக்கு ஒருவர் முரணாக சிறீலங்க அரசின் புலம்பல் போல் எழுதுகிறார்கள்.

-1- குருட்டு அதிஸ்டம் அதாவது தமிழ்செல்வன் அண்ணா மீது தெரிந்து கொண்டு தாக்குதல் நடத்தப்படவில்லை என்று கூறுகிறார்கள். வழமைபோல் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட தாக்குதலில் தமிழ்செல்வன் அண்ண தற்செயலாக அம்பிட்டுவிட்டார் என்று. இவ்வாறு தான் சிறீலங்காவும் சர்வதேச விமர்சனத்தைக் கண்டு தற்பொழுது விளக்கம் கொடுக்க முற்படுகிறது.

-2- மேற் கூறிய வியாக்கியானத்திற்கு முரணாகத்தான் தமிழ்ச்செல்வன் மீது தெரிந்து தான் தாக்குதல் நடத்தப்பட்டது. இது சமாதானத்திற்கு விழுந்த அடி என்று மற்றப்பக்கத்தாலை ஒப்பாரி வைக்கிறம்.

-3- புலிகள் சொல்லியிருக்கிறார்கள் தமிழ்ச்செல்வனின் நகர்வுகள் இருப்பிடங்கள் இரகசியமாக பேணப்படவில்லை. ஏனெனில் அவர் ஒரு அரசியல் தலைவர் இராஜதந்திரி என்றவகையில் ஊடகங்கள் மக்கள் மற்றும் சர்வதேச அரசு அரசுசாரா பிரதிநிதிகளுடன் தொடர்பாடலில் தொடர்ச்சியாக இருப்பவர். தமிழரின் சமாதானப் புறாவை திட்டமிட்டு சிங்களம் கொன்றுவிட்டது என்று.

அதாவது 1 ஆவது நிலைப்பாட்டில் புலம்புவர்கள் சிங்களத்திற்கு இலக்கு இது தான் என்று தெரிந்தாலும் குண்டு போடத் தெரியாதவர்கள் என்று சொல்லி தமது வழமையான சிற்றின்பத்தில் மிதக்கிறார்கள். ஆனால் அவர்களது புலம்பல் 2 ஆவது நிலைப்பாட்டை பலவீனப்படுத்துவதுடன் புலிகள் சொன்னதையும் கணக்கெடுக்காது இருக்கிறது என்பதை விளங்கியுள்ளவர்களாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்காலபோவானிடம் ஒரு கேள்வி......

நீங்கள் சொல்வதுபோல் தமிழ்செல்வன் தெரிவுசெய்யப்பட்டு தாக்கப்பட்டிருப்பாரானால் இதுவரை காலமும் எதிரியின் வான் தாக்குதல்களில் கொல்லப்பட்ட அனைவரும் புலிகளாக இருந்திருக்க வேண்டும். ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்களில் முதலாவதாக கொல்லப்பட்ட புலிகளின் மூக்கியச்தர் தான் தமிழ்ச்செல்வன். வேறு எவரும் வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக எனக்கு நினைவு இல்லை.

இச்ரேலின் அறிவுறுத்தலின்படி நடக்கும் எதிரிக்குத்த் தெரிந்ததெல்லாம், 1000 தமிழரையாவது கொல்! அதில் ஒரு புலியாவது இருக்கும். அந்த ஒரு புலி-தமிழ்ச்செல்வன்.................வேறு என்னத்தைச்சொல்ல ...?

அந்த மாதிரி ஒரு கேள்வி கேட்டு மடக்கிப்போட்டியள். பிறகென்ன சிங்களம் வேணும் எண்டு இலக்கு வைத்து தமிழ்செல்வனை கொல்லவில்லை என்று சொல்வது தான் சரி.

ஆனாலும் ஒரு சந்தேகம் உப்பிடி குருட்டு சிறீலங்கா படைகளோடதான் 30 வருடமா நம்புங்கள் நாளை தமிழீழம் பிறக்கும் என்று .... :lol:

இனி கொஞ்சம் ஓர்மத்தோடை சிங்களவன் ( அரைவாசி நாட்டை விட வங்குரோத்தான நாடு மேலானது என்ற மனேநிலையோடு) சண்டை பிடிச்சா எங்கடை பாடு அரோகரா என்றியள். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் ஒரு சந்தேகம் உப்பிடி குருட்டு சிறீலங்கா படைகளோடதான் 30 வருடமா நம்புங்கள் நாளை தமிழீழம் பிறக்கும் என்று ....

30 வருடங்கள் இழுபடுவதற்கு காரணங்கள் பல

1.போராடாமல் அகதிகளாக வெளியில் ஓடியதால் போராட்டத்துக்கான இளம் சமூகத்தினர் போதாமை

2.இந்தியா என்னும் வல்லரசு எமது தாய் நிலத்தில் புகுந்து செய்த கொலைகள், கொள்ளைகள் ,கற்பளிப்புகள் ஆகியவற்றோடு போராளிகளை இயங்கவிடாமல் மனித,ஆயுத வலிமையை கொண்டு எம்மை நசுக்கியமை.இத்தோடு ஒட்டு குழுவின் உதவியோடு பல போராளிகளை அழித்தமை என்பன எமது போராட்டத்தை 10 வருடமாவது பின் நோக்கி தள்ளி விட்டது.

3.உலக நாடுகள் பல அரசுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆயுதங்களை வழங்கல், உளவு வேலைகளை செய்தல், உலக ஊடகங்கள் மூலம் தமிழீழ போராட்டத்தை பயங்கரவாதம் என சித்தரித்தல் என்று இன்னோரென்ன குள்ள வேலைகளை செய்கின்றன.

4. பேச்சுவார்த்தை என்ற மாய்மாலம் காட்டி எவ்வளவு காலம் வீணடிக்கப்பட்டுள்ளது.

5.வெளி நாட்டிலுள்ள எத்தனை வீதமானோர் தமது தாய் நாட்டுக்காக பணமோ அல்லது ஏதாவது வகையில் தமது பங்களிப்பை செய்கின்றனர் என்றால் மிக சொற்பமானவர்களே.

எதிரியை குறைவாக மதிப்பிடுவது நல்லதல்ல

அவரவரின் ஆதங்கத்திற்கேற்றவாறு கருத்துக்களை முன்வைக்கலாம்.

ஆனால் ஒன்று மட்டுந்தான் உண்மை.அது ஒற்றுமையில்லாத்தன்மை.அது தான் நம்மினத்தின்

சாபக்கேடு.

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்காலபோவான்.......

உங்களை மடக்குவதற்காக நான் கேள்வி கேட்கவில்லை, மாறாக எனது சந்தேகத்தைத்தான் கேட்டேன். மேலும் சிங்களவன் அரை நாட்டைவிடவும் சீரழிந்த நாடு மேல் என்று போர் தொடங்கி பல காலமாகி விட்டது குறுக்காலபோவான்......

குருட்டுச்சின்களவனுடன் 30 வருடம் போர் புரிவதற்கு காரணம் போரடுபவர்கள் போராடட்டும், நமக்கென்ன நாம் 20,30,40 என்று வருடங்களை எண்ணிக்கொண்டிருப்போம் என்னும் போக்குத்தான்.

எந்த விடுதலைப் போராட்டமும் ஓறிரு வருடங்களில் முடிவுற்றதாக வரலாறு இல்லை. பாலச்தீனர்கள் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள், வியெட்னாமியர் பிரான்சு, அமரிக்கா, அவுச்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் வருடக்கணக்கில் போராடித்தான் வெற்றி பெற்றார்கள். ஆப்கானியர் முதலில் நஜிபுள்ளா என்னும் சர்வாதிகாரியுடனும் பின்னர் ரஷியர்களுடனும் சுமார் 20 வருடம் போர் புரிந்துதான் வென்றாகள். எரித்திரியர்கள் எதியோபியருடன் நீண்ட காலப் போரின்பிந்தான் வென்றார்கள். சூடானில் 40 வருடமாக போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இவை எல்லாவற்றையும் போலல்லாது எந்த பிறநாட்டினதும் உதவியில்லாமல் போர் புரிந்து கொண்டு இருக்கிறோம். முடியுமானால் உதவி செய்யுங்கள். 20, 30 வருடம் குருடனுடன் போர் என்று கேலி வேண்டாம்!

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன், நீங்கள் சொன்ன விடுதலை பெற்ற நாடுகள் எல்லாம் நிறைய அர்ப்பணிப்புகளை செய்து தான் வெற்றியை பெற முடிந்தது.நாங்கள் 30 வருடமாகியும் அந்த நிலைக்கு வரவில்லை என்பது தான் குறுக்ஸ்ன் ஆதங்கம் என நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.