Jump to content

ஆத்தா நான் வயசுக்கு வந்திட்டேன்.


Recommended Posts

ஆத்தா நான் வயசுக்கு வந்திட்டேன்.

அண்மையில் யெர்மனியில் உள்ள பெண்ணியவாதி ஒருவருடன் புலம்பெயர் தேசத்தில் பெண்களின் பிரச்சனைகள் பற்றியவிடயங்களை உரையாடிக்கொண்டிருந்த பொழுது அவர் புலத்தில் இன்று பூப்புனித நீராட்டுவிழா எண்டது ஒரு வியதி மாதிரி பரவி அதன் உள்ளே தென்னிந்திய சினிமா மோகமும் கலந்து பெற்றோர் பெண்பிள்ளைகளை படாத பாடு படுத்துகின்றனர் என்று கவலைப்பட்டா.அவாவிட்டை நான் சொன்னன் அக்கா அது எங்கடை பண்பாடு கலை கலாச்சாரம் காலம் காலமாய் எங்கடை முன்னோர்கள் செய்து வந்தது நாங்களும் அவையளை போலவே ஏன் எதுக்கு எண்டு தெரியாமல் அதுகளை ஆராயாமல் தொடர்ந்து செய்யவேணும் அப்பதான் எங்கடை இனத்துக்கும் கலாச்சாரத்துக்கும் பெருமை வேணுமெண்டால் இன்றைய தொழில் நுட்பத்தையும் புகுத்தி ஏதாவது செய்து தொடர்ந்து செய்யவேணும் என்று அடிச்சு சொல்லிபோட்டு இருக்க.

பாரிசிலை என்ரை நண்பன் ஒருதனின்ரை மகளும் பருவமடைஞ்சிட்டுது. அவன் அதை கொண்டாட பெரிய மண்டபம் எடுத்து காட் எல்லாம் அடிச்சிட்டு எனக்கு செய்தியை சொல்ல போனடிச்சு கதைச்சு கொண்டிருக்கும்பொழுது சொன்னான் டேய் பாரிசிலை ஏன் யுரோப்பிலையே ஒருத்தரும் செய்யாத அளவுக்கு விசேசமா மகளின்ரை சாமத்திய வீட்டை செய்யவேணும் எல்லாம் ஏற்பாடு செய்திட்டன் ஆனாலும் எல்லா நிகழ்ச்சியிலையும் முக்கியமானது இந்த வீடியோ ஏணெண்டால் அதைதான் விழாவுக்கு வரஇயலாத ஆக்கள் மற்றது ஊரிலை உள்ளவை எல்லாருக்கும் அனுப்பிறது. அது மட்டுமில்லை பிறகும் வீட்டுக்கு வாற ஆக்களுக்கும் போட்டுக்காட்டி பெருமையடிக்கிற ஒரு முக்கியமான சாமான் அதாலை இந்த வீடியோவிலையும் இப்ப எல்லாரும் ஒரு வித்தியாசத்தை செய்யினம். அதாலை எல்லாரும் மற்றசாமத்திய வீடுகளிலை எடுக்காத மாதிரி அந்த வீடியோ ஆரம்பத்தை அதாவது ஓப்பினிங் வித்தியாசமா வாற மாதிரி சினிமாப்பட ரேஞ்சுக்கு ஒரு யோசனை சொல்லு எண்டான்.

எனக்கு தலை சுத்த தொடங்கிட்டுது இதென்னடா வில்லங்கம். செய்யிறது சாமத்திய வீடு இதிலை வித்தியாசமான ஓப்பினிங் வேணுமெண்டால் நான் எங்கை போறது எண்டு யோசிக்க.அவனும் விடுறமாதிரி இல்லை .நீதானே கதையெண்ட பேரிலை எத்தினை அறுவையளை எழுதிறாய் அதாலை கட்டாயம் நீ கொஞ்ச யொசனை சொல்லத்தான் வேணுமெண்டு அடம்பிடிக்க நானும் "சரி கஸ்ரப்பட்டு யோசிக்கிறதை உனக்கு மட்டும் சொல்லாமல் எல்லாரும் பாக்கிறமாதிரி வழைமை போல பேப்பரிலையே எழுதி போடுறன் அதிலை விருப்பமானதை எடுத்து உன்ரை ஓப்பினிங்கிலை போடு என்று சொல்லி விட்டன். இதோ உங்கள் மகள்களும் வயதுக்கு வந்துவிட்டார்களா வீடியோவில் வித்தியாசமான ஆரம்பத்துடன் படமாக்க வேண்டுமா பெரும்சிரமப்பட்டு யோசித்தில் எனக்கு தோன்றிய சில யோசனைகள்.

1)வீடியோ ஸ்ராட். பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்தில் சிறீதேவி ஓடிவந்து ஆத்தா நான் பாசாயிட்டேன் என்று கத்தியபடி எழும்பி குதிப்பார் அப்போது அவரை அந்தரத்தில் நிறுத்தியபடி கதை வசனம் டைரக்சன் பாரதிராஜா எண்டு எழுத்து விழும் அது போலவே உங்கள் மகள் அறையில் இருந்து ஓடிவந்து உங்கள் வரவேற்பறையில் ஆத்தா நான் வயசுக்கு வந்திட்டேன் என்று கத்தியபடி எழும்பி குதிக்கும் போது அப்படியே அந்தரத்தில் அவரை நிறுத்தி விட்டு பூப்புனித நீராட்டுவிழா என்று எழுத்தோட்டம் போடலாம்.

2)இப்ப வெளிநாடுகளிலை தமிழ்கடை காரரிட்டை சொல்லி இந்தியா தாய்லாந்து ஆகிய நாடுகளிலை இருந்து குருத்தோலை முதல் காவேலை வரை இறக்குமதி செய்யலாம். எனவே தென்னிந்திய கிராமங்களில் வயசுக்கு வந்த பெண்ணை பரிசம் போடுவது போல . நீங்களும் தென்னோலை வரவழைத்து உள்கள் வீட்டு குளியலறையில் கூடுமாதிரி கட்டி தாய்மாமனை விட்டு தண்ணீர் ஊற்றசொல்லி வீடியோ எடுக்கலாம். வசதியெண்டால் உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஏதாவது பூங்கா இருந்தால் அங்கும் தென்னோலையால் கூடு கட்டி செய்யலாம்.இயற்கையாகவும் நல்ல ஓப்பினிங்காகவும் இருக்கும்.ஆனால் உங்கள் மாநகரசபை உங்கள் மீது வழக்கு போட்டால் நான் பொறுப்பு அல்ல.

3)அடுத்ததா ஒரு சங்கர் பட ஸ்ரைலில் உங்கடை பெண்ணிற்கு மேற்கத்தைய மொடேண் உடுப்பு மினியோ மிடியோ கையில்லாத முண்டா பெனியனோ போட்டு அவாவோடை படிக்கிற ஒரு பத்து வெள்ளைக்கார பெட்டையளை பிடிச்சு பாவாடை தாவணியை போட்டு அவையை உங்கடை மகளை சுத்திவர ஆடவிட்டு பின்னணியிலை ஒரு பாடலை போட்டு ஒரு ஓப்பினிங்கை குடுக்கலாம். பின்னணி போடக்கூடிய சில பாடல்கள் சட்டென்று எனக்கு நினைவுக்கு வந்தவை

1) சக்கரவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது எப்படி எப்படி

2)பூசைக்கேத்த பூவிது நேத்து தானே பூத்தது பூத்தது யாரதை பாத்தது

3)நான் ஆளான தாமரை ரெம்ப நாளாக தூங்கலை

4)அடுத்ததாக எல்லா வீடியோ காரரரையும் போலை ஆரம்பத்திலை சோடினையளையும் இயற்கைக்காட்சியளையும் காட்டாமல் பெண்ணின் தகப்பனை காட்டலாம். அவர் பாரதிராஜா ஸ்ரைலில் இரண்டு கையையும் தலைக்கு மேலை தூக்கி கும்பிட்டபடி "என் இனிய சொந்த பந்தங்களே புதிதாய் பூப்படைந்து புறப்பட்டு வருகிறாள் என் புத்திரி.அவளிற்காய் வட்டிக்கு பணமெடுத்து பெருமெடுப்பில் விழா எடுக்கிறான் இந்த தந்தை.நீங்கள் வாயார வாழ்த்தாவிட்டாலும் பரவாயில்லை வயிறார சாப்பிட்டதற்கு வஞ்சகம் பண்ணாமல் பொய் செக் (காசோலை)எழுதிதராமல் மெய்யாய் மொய் எழுதிபோகும்படி கேட்டுகொள்கிறேன்.நன்றி

இப்பிடி கனக்க யோசனையள் இருக்கு ஆனால் எல்லாத்தையும் இஞ்சை எழுதஏலாது வெட்டிபோடுவாங்கள். எழுத்தை மட்டுமில்லை என்னையும் சேத்துதான். அதாலை மேலதிக ஆலோசனை தேவைப்படுகிற ஆக்கள் என்னோடை மின்னஞ்சலிலை தொடர்பு கொள்ளுங்கோ.சரி கடைசியா ஒரு ஆலோசனை இந்த சாமத்தியபட்ட பிள்ளையளுக்கு வாழ்த்து சொல்லுறவை றேடியோவிலையோ இல்லாட்டி தொலைக்காட்சியிலையோ வாழ்த்து சொல்லுற ஒரு நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம். அது மட்டுமில்லை வாழ்த்து சொல்லுறவை கொஞ்சப்பேர் ஒண்டாய் சேர்ந்து தங்கடை பெயர்களை போட்டு ஒரு வாழ்த்து நோட்டிஸ் அடிச்சு தமிழ் ஆக்கள் அதிகமாய் இருக்கிற இடங்களிலையும் ஒட்டலாம் நன்றி சாத்திரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சாத்திரியார், வியாழமாற்றம் வேலை செய்யுதோ? களத்தில எழுதினது காணும், இனித் தூக்கட்டும் எண்டு முடிவு பண்ணி எழுதின மாதிரி இருக்கு? அதுக்குப் பிறகு உங்கட ஒரு பேப்பர் புளொக் எண்டு நாங்களெல்லோ உங்கட எழுத்தத் தேடி அலைய வேணும்! கொஞ்சம் அடங்கினால் என்ன? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தலை சுத்த தொடங்கிட்டுது இதென்னடா வில்லங்கம். செய்யிறது சாமத்திய வீடு இதிலை வித்தியாசமான ஓப்பினிங் வேணுமெண்டால் நான் எங்கை போறது எண்டு யோசிக்க.அவனும் விடுறமாதிரி இல்லை .நீதானே கதையெண்ட பேரிலை எத்தினை அறுவையளை எழுதிறாய் அதாலை கட்டாயம் நீ கொஞ்ச யொசனை சொல்லத்தான் வேணுமெண்டு அடம்பிடிக்க

:D:lol:இதுவும் ஒரு அறுவை மாதிரித்தான் இருக்கு சாத்திரி சார்

Link to comment
Share on other sites

சாத்திரி நான் முடிவெடுத்திட்டன்.

சாத்திரியின் மகளின் சாமத்திய வீட்டிற்கு நான் தான் வீடியோ எடுப்பது. அதில் ஓப்பிணிங்கில்; அறையில் இருந்து ஓடிவந்து உங்கள் வரவேற்பறையில் அப்பு நான் நான் வயசுக்கு வந்திட்டேன் என்று கத்தியபடி உங்கள் மகள் எழும்பி குதிக்கும் போது, நீங்கள் நெஞ்சைப் பிடித்தபடி நிலத்தில் சரிகின்றீர்கள். அப்புறமென்ன கலெக்ஷன் சொல்லவா வேண்டும். :D:lol:

Link to comment
Share on other sites

என்ன சாத்திரியார், வியாழமாற்றம் வேலை செய்யுதோ? களத்தில எழுதினது காணும், இனித் தூக்கட்டும் எண்டு முடிவு பண்ணி எழுதின மாதிரி இருக்கு? அதுக்குப் பிறகு உங்கட ஒரு பேப்பர் புளொக் எண்டு நாங்களெல்லோ உங்கட எழுத்தத் தேடி அலைய வேணும்! கொஞ்சம் அடங்கினால் என்ன?

இப்ப நான் என்ன பிழையாய் சொல்லிபோட்டன் ஏதோ என்னாலை முடிந்த ஆலோசனை அவ்வளவுதான் :lol:

சாத்திரியார்,கொஞ்ச நாளுக்கு முதல் நல்லா தானே இருந்தனீங்கள்.?

இப்பவும் நல்லாத்தான்: இருக்கிறன் ஆனால் இனிமேல் எப்பிடி இருப்பன் எண்டுதான் தெரியேல்லை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி நான் முடிவெடுத்திட்டன்.

சாத்திரியின் மகளின் சாமத்திய வீட்டிற்கு நான் தான் வீடியோ எடுப்பது. அதில் ஓப்பிணிங்கில்; அறையில் இருந்து ஓடிவந்து உங்கள் வரவேற்பறையில் அப்பு நான் நான் வயசுக்கு வந்திட்டேன் என்று கத்தியபடி உங்கள் மகள் எழும்பி குதிக்கும் போது, நீங்கள் நெஞ்சைப் பிடித்தபடி நிலத்தில் சரிகின்றீர்கள். அப்புறமென்ன கலெக்ஷன் சொல்லவா வேண்டும். :D:lol:

சாத்திரியின் மகளின் சாமத்திய வீட்டுக்கு நான் என்ன செய்ய சொல்லுங்க

Link to comment
Share on other sites

சாத்திரி நான் முடிவெடுத்திட்டன்.

சாத்திரியின் மகளின் சாமத்திய வீட்டிற்கு நான் தான் வீடியோ எடுப்பது. அதில் ஓப்பிணிங்கில்; அறையில் இருந்து ஓடிவந்து உங்கள் வரவேற்பறையில் அப்பு நான் நான் வயசுக்கு வந்திட்டேன் என்று கத்தியபடி உங்கள் மகள் எழும்பி குதிக்கும் போது, நீங்கள் நெஞ்சைப் பிடித்தபடி நிலத்தில் சரிகின்றீர்கள். அப்புறமென்ன கலெக்ஷன் சொல்லவா வேண்டும்.

வாங்கோ வசம்பு கன காலத்துக்கு பிறகு கண்டது சந்தோசம். மற்றறது முக்கிய விசயம் நீர் வீடீயோ எடுக்கிறது பிரச்சனையில்லை ஆனாலும் ஓப்பினிங் யோசனை நான் தான் தருவன்.அதுக்காக றிபனும் கத்திரிக்கோலும் கொண்டு வாறேல்லை . அதுசரி அங்கை என்னமாதிரி :lol::D

Link to comment
Share on other sites

சாத்திரியின் மகளின் சாமத்திய வீட்டுக்கு நான் என்ன செய்ய சொல்லுங்க

அட உங்களுக்கில்லாததா; ஏனுங்க விளக்குப் பிடிப்பீங்களா?? அதானுங்க நான் வீடியோ எடுக்க நீங்கள் லைற் பிடிக்கணும் ஓகேயா?? :D:lol:

அதுசரி அங்கை என்னமாதிரி :wub::wub:

இங்கை மட்டுமல்ல எங்கையும் கடைசிலே சங்கு தான். :(:lol:

Link to comment
Share on other sites

அட உங்களுக்கில்லாததா; ஏனுங்க விளக்குப் பிடிப்பீங்களா?? அதானுங்க நான் வீடியோ எடுக்க நீங்கள் லைற் பிடிக்கணும் ஓகேயா??

கறுப்பி உங்களுக்கு இது தேவைவதான் அதாவது விளக்கு பிடிக்கிறது.

இங்கை மட்டுமல்ல எங்கையும் கடைசிலே சங்கு தான்.

அதை தானுங்கோ நானும் சொன்னன் அந்த சங்கிற்கு எதுக்கு ஆலாத்தி ஆலவட்டம் விளக்கு வீடியோ மேளம் தாளம். ஊதுமட்டும் ஊதிட்டு போகவேண்டியது தானே கூகூகூகூகூகூகூகூகூகூகூகூ :lol::D

Link to comment
Share on other sites

ஆத்தா நான் வயசுக்கு வந்திட்டேன்.

1)வீடியோ ஸ்ராட். பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்தில் சிறீதேவி ஓடிவந்து ஆத்தா நான் பாசாயிட்டேன் என்று கத்தியபடி எழும்பி குதிப்பார் அப்போது அவரை அந்தரத்தில் நிறுத்தியபடி கதை வசனம் டைரக்சன் பாரதிராஜா எண்டு எழுத்து விழும் அது போலவே உங்கள் மகள் அறையில் இருந்து ஓடிவந்து உங்கள் வரவேற்பறையில் ஆத்தா நான் வயசுக்கு வந்திட்டேன் என்று கத்தியபடி எழும்பி குதிக்கும் போது அப்படியே அந்தரத்தில் அவரை நிறுத்தி விட்டு பூப்புனித நீராட்டுவிழா என்று எழுத்தோட்டம் போடலாம்.

வாசித்துவிட்டு வயிறு வலிக்க மட்டும் சிரித்தது தான்! :D :D :D

சரி! உங்கள் கதாநாயகி "ஆத்தா நான் வயசுக்கு வந்துட்டேன்" என்று சொல்லும் போது அந்த காட்சியுடன் இணைக்க பாரதிராஜா பாணியில் ஒரு கவிதை !

மொட்டென்று இருந்தாள்

சட்டென்று மலர்ந்தாள்

கற்றோடு சேர்ந்து குழலாடும் - அந்த

கண்கொள்ளா காட்சி

கண்டு களித்திட வாரீர்

காசுகள் பரிசுகள் தாரீர்

:unsure::(:unsure:

Link to comment
Share on other sites

சாத்திரி அங்கிள் அந்த மாதிரி இருக்கு உங்களின்ட ஆலொசணை எல்லாம் ஆனாலும் வீடியோ எடுக்க நானும் நீங்களும் போவோமோ :unsure: ......இறுதியாக மகளின்ட அப்பா வந்து "எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்" என்ற வசனத்தை மட்டும் கண்டிப்பா பேச வேண்டும் சொல்லிட்டேன்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சாத்திரியால எப்படி முடியுது... சிரிப்பு தாங்க முடியுதில்லை :D

சாத்திரி அங்கிள் அந்த மாதிரி இருக்கு உங்களின்ட ஆலொசணை எல்லாம் ஆனாலும் வீடியோ எடுக்க நானும் நீங்களும் போவோமோ :lol: ......இறுதியாக மகளின்ட அப்பா வந்து "எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்" என்ற வசனத்தை மட்டும் கண்டிப்பா பேச வேண்டும் சொல்லிட்டேன்!! :D

அப்ப நான் வரட்டா!!

ஆமா..நிச்சயாமா சொல்லுவா..ஜம்முட கண்ணுபட்டால் :lol:

ஜம்மு..இங்க விளக்கு பிடிக்க அங்க லச்சிகா வுட்டுபுட்டு ஓடப் போறாள் :lol:

Link to comment
Share on other sites

ஆத்தா நான் பாசாயிட்டன் என்ற தலைப்பைப் போட்டு இரண்டு மூன்று வாரத்திற்கு முன்னமே சாத்து கேட்டப்பவே சந்தேகப்பட்டேன். பின்னாடி ஏதோ வில்லங்கம் வரப்போகுது என்டு சரியாப் போச்சு....

சாத்து உங்களுக்கு இப்ப ஏழரையானா? அட்டமத்தானா?

கறுப்பியக்காவை விளக்குப் பிடிக்கச் சொல்லுறியள்..... எள்ளுப் பொட்டலி இல்லைத்தானே...

அட வம்பரைப் பாரும், ஓப்பினுங் குடுக்கிறார். அதிலயும் சாத்து நெஞ்சைப்பிடிச்சுக் கொண்டு சாயிற சீன்..... வீடியோக்காரன் அட்டகாசந்தான்.

சாத்து இண்டைக்கு நான் ஆர் முகத்தில முழிச்சன் என்று தெரியேல்லை. யாழ்க்களத்திற்கு வந்த நேரத்தில இருந்து சிரிப்பை அடக்க முடியேல்லை. ஆமா சாத்து என்னோட வால் பத்திரமாத்தான் இருக்கு. நீங்க ஆரோட வாலைக் களவாடினீங்க?

Link to comment
Share on other sites

ஆமா..நிச்சயாமா சொல்லுவா..ஜம்முட கண்ணுபட்டால் :lol:

ஜம்மு..இங்க விளக்கு பிடிக்க அங்க லச்சிகா வுட்டுபுட்டு ஓடப் போறாள் :D

குட்டி மாமா நானே பேபி என்ட கண் பட்டா சொல்ல மாட்டார் ஆனா நீங்க மட்டும் அங்கே வந்தா கண்டிப்பா சொல்லுவார் :D ......அட......அட லக்சிகா என்று கொன்வேர்ம் பண்ணியாச்சோ :lol: என்னும் கதை முடியவில்லை முடிவை பாருங்கோவேன் :lol: ........விளக்கும் எல்லாம் நான் பிடிக்கமாட்டேன் அது சாத்திரி அங்கிள் பிடிப்பார் நான் வந்து கமரா :lol: ..........ஆனா இறுதியா படம் வந்தா நான் தான் எல்லாரையும் விட கூடுதலா சந்தொசபடுவேன் படம் வராட்டி சாத்திரி அங்கிள் அடுத்த "தர்ம அடிக்கு" ரெடியா இருக்க வேண்டும்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

வாற 28 திகதி நம்ம ஜமுனா ஒடி வாற மாதிரியும் நான் வீடியோ எடுக்கிற மாதிரியும் ஒரு கற்பனை

ஹிஹிஹி நல்லா தான் இருக்கு..

Link to comment
Share on other sites

வாற 28 திகதி நம்ம ஜமுனா ஒடி வாற மாதிரியும் நான் வீடியோ எடுக்கிற மாதிரியும் ஒரு கற்பனை

ஹிஹிஹி நல்லா தான் இருக்கு..

நீங்க என்ன சொல்ல வாறீங்கள்

வாற 28ம் திகதி ஜம்மு வயசுக்கு வாறார் எண்டுறியள்

Link to comment
Share on other sites

28ம் திகதிக்குள் ஜம்மு நினைப்பது நடந்து விட்டால்

ஆத்தா நான் வழுக்கி விழுந்துட்டேன்

என்று ஒரு தலைப்பை திறந்து விடுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாறி சாத்திரி.. என்னால் இவ்வாக்கத்தில் நகைச்சுவையை உணர முடியல்ல. பதிலாக நக்கல் நளினம்.. இவையே மிகுந்திருக்கிறது..! :lol::lol:

Link to comment
Share on other sites

சாத்திரி சாரு......ஊங்க தலைப்பு,.ஜனகராஜ்... தங்கச்சிக்கு நாய் கடிச்சுட்டுது என்றுகிட்டு அழுகிறது மாடிரி இருக்குதுங்க.. :lol::lol:

Link to comment
Share on other sites

சாத்து உங்களுக்கு இப்ப ஏழரையானா? அட்டமத்தானா?

கறுப்பியக்காவை விளக்குப் பிடிக்கச் சொல்லுறியள்..... எள்ளுப் பொட்டலி இல்லைத்தானே...

யோவ் ஆதி

என்ன லொள்ளா கறுப்பியை விளக்குப் பிடிக்கச் சொன்னது சாத் இல்லை. நானு. சாத்துக்கு விளக்குப் பிடிச்சென்ன பிடிக்காவிட்டாலென்ன எல்லாமே ஒன்று தான்

சாத்துக்கு தற்போதைய குருப்பெயர்ச்சிப் பலன் தான் இப்படி ஆட்டி வைக்குது.

Link to comment
Share on other sites

வாற 28 திகதி நம்ம ஜமுனா ஒடி வாற மாதிரியும் நான் வீடியோ எடுக்கிற மாதிரியும் ஒரு கற்பனை

ஹிஹிஹி நல்லா தான் இருக்கு..

சுண்டல் அண்ணா நான் ஓடி வாற மாதிரியும் அப்படியே அங்கால இருந்து என்னோருவா ஒடி வாற மாதிரியும் கற்பனை பண்ணிணா என்னும் நல்லா இருக்கும் அல்லோ..... :lol:

அப்ப நான் வரட்டா!!

நீங்க என்ன சொல்ல வாறீங்கள்

வாற 28ம் திகதி ஜம்மு வயசுக்கு வாறார் எண்டுறியள்

அட அட விட்டா ஜம்மு பேபிக்கு ஒரு வங்சன் வைத்திவிடுவியள் போல இருக்கு :D நேக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை இரண்டு கையில இலையை பிடித்து கொண்டு இருக்க தலையில கொண்டு வந்து தண்ணியை ஊத்துவீனம் அது தானே :lol: சரி சரி ஊத்துற நேரம் சூடு தண்ணியை கலந்து ஊத்துங்கோ குளிரில பிறகு பேபிக்கு வருத்தம் வந்தாலும் :lol: .........ம்ம் சிவா அண்ணா முதலில நீங்க தான் வந்து ஊத்த வேண்டும் சொல்லிட்டேன் சுண்டல் அண்ணா வந்து "கப்பி வயசிற்கு வந்த டே" சொல்ல வேண்டும் சொல்லிட்டேன்...... :lol:

அப்ப நான் வரட்டா!!

28ம் திகதிக்குள் ஜம்மு நினைப்பது நடந்து விட்டால்

ஆத்தா நான் வழுக்கி விழுந்துட்டேன்

என்று ஒரு தலைப்பை திறந்து விடுங்கள்

வெற்றிவேல் அண்ணா நீங்களே அந்த தலைப்பை தொடங்கிவிடுங்கோ அந்த மாதிரி இருக்கும் பட் அக்சுவலா பேபியின் ஆத்தா பார்த்தா தான் இருக்கு....... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நீங்க என்ன சொல்ல வாறீங்கள்

வாற 28ம் திகதி ஜம்மு வயசுக்கு வாறார் எண்டுறியள்

வர்ற 28ந்திகதி எப்படி இருப்பாங்கள் .......இன்ட வீடியோ பாறுங்க.. :lol: :lol:

http://video.google.com/videoplay?docid=82...h&plindex=6

அப்ப நானு வரட்டுங்களா :lol:

Link to comment
Share on other sites

வர்ற 28ந்திகதி எப்படி இருப்பாங்கள் .......இன்ட வீடியோ பாறுங்க.. :lol: :lol:

http://video.google.com/videoplay?docid=82...h&plindex=6

அப்ப நானு வரட்டுங்களா :lol:

தண்ணீர் ஊற்றி மஞ்சள் புசிவிடுகிறது யார்? சுண்டலா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.