Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் ஊர் நதியாவும் எனது நினைவுகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊர் நதியாவும் எனது நினைவுகளும் - அங்கம் - 1

12வருடங்களின் பின் ஊரை மிதித்த போது உண்டான மகிழ்வும் நாங்கள் படித்த அந்த ரியூசன் வளவும் அது தந்த ஞாபகங்கள் எத்தனையோ. அந்த மாமரமும் பலாமரமும் சொன்ன சோகங்கள் இதயத்தை இறுக்கிப் பிழிந்து மனசை வதைத்த கணங்கள் ஒவ்வொன்றும் நினைவுகளை விட்டுப் போகாமல் மனசுக்குள் மழைத் தூறலாய் நனைத்துக் கொள்கிறது.

அது 'பிறெய்ன் கல்வி நிலையம்" 6ம்வகுப்பு முதல் 9ம்வகுப்பு வரை கல்வி தந்த அந்த வளவும் சிவாமாஸ்ரரின் உழைப்பில் குப்பிளானிலேயே முதல்தர கல்வி நிலையமாக உருவாகியது மட்டுமின்றி ஊரிலே உருவாகிய அனேகமான இளம் கெட்டிக்காரர்களின் உருவாக்கத்திலெல்லாம் ஊக்கு சக்தியாய் நின்ற அந்த மனிதரின் உழைப்பெல்லாம் இன்று உருக்குலைந்து உருமாறி.....

அந்த வளவின் உயிர்ப்பெல்லாம் தொலைந்து முறிந்த மரங்களும் காயங்கள் தாங்கிய வளவும் அந்த வீடும் எந்த நேரமும் பிள்ளைகளின் சிரிப்பும் படிப்புமாக நிறைந்திருந்த அந்த வீட்டின் அறைகள் எல்லாம் சிங்கள வசனங்கள் எழுதப்பட்டு இரத்தக் கறைகள் படிந்து ஒரு நூற்றாண்டுச் சோகத்தை சுமந்தபடி இருக்கிறது. அந்த வீட்டில் உலா வந்த சிவாமாஸ்ரரின் குழந்தைகளும் சிவாமாஸ்ரரும் அவரது குடும்பமும் புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வாழ்கிறார்கள். அவர்கள் நினைவு சுமந்து அந்த வளவு மட்டும் அவர்களை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது.

நீண்ட பிரம்பெடுத்து வரிசையில் நிறுத்தி வைத்து கையில் அடிதந்து கல்வியில் கண்ணாயிருத்திய அந்த உயர்ந்த மனிதனின் அக்கறையில் அவதானிப்பில் எத்தனையே பேர் இன்று புலம்பெயர் தேசங்களில் நல்ல நிலையில் இருப்பதற்கு சிவாமாஸ்ரரின் கண்டிப்பும் கவனமும் கணிசமான பங்குண்டு. தான் படிப்பிக்கும் விஞ்ஞான பாடம் மட்டுமின்றி எல்லாப்பாடங்களிலும் 80புள்ளிக்கு குறையாமல் எடுக்காதவர்களுக்கெல்லாம் பிரம்பால் எச்சரிக்கை தந்த சிவாமாஸ்ரரின் கவனிப்பு எங்கள் ஊருக்குள் எத்தனையோ வல்லவர்களை உருவாக்கிய தருணம் போர் உழுது ஊர் அழுது உலகெங்கும் ஒவ்வொருவரும் சிதறி இன்று அகதிகளாய்.....

1990 அந்த வீடு எங்களுக்கு இருப்பிடமாய் அமைந்ததும் அத்தையும் , மாமாவும் , அம்மாவும் , அப்பாவும் , அம்மம்மாவும் , நாங்களுமாய் அந்த வீட்டுக் குந்தில் இருந்து கதைத்த இரவுகள்....செல்கூவிவர ஒழித்திருந்த புகைக்கூடு இன்று மீளவும் தாயகம் திரும்பிய போது அந்த வாசலே அடைக்கலம் தந்துள்ளது.

அன்றைய இரவு நிலவில்லாத வானம். இருள் கவ்விய கனத்த அந்த போட்டிக்கோ குந்தில் அம்மா , அப்பா , மாமா , அத்தை , தங்கை , தங்கமணி , தாசன் , நாங்களுமாய் அந்த நாள் ஞாபகங்களை அழைந்து முகர்ந்து.....வீதியில் நாய்களின் குரைப்பில் விழிகள் மிரள சிங்களக்குரல்கள் வீதியில் கேட்கிறது. சத்தம் போடாதையுங்கோ ஆமி போறான் றோட்டாலை. அப்பா முணுமுணுத்தார். சமாதான காலமென்று உலகெங்கும் சொல்கிறார்கள் ஆனால் இன்னும் அச்சம் கழியாத இரவுகள் எங்கள் தேசத்துக்கு உரியதென்பதை அப்பாவின் வார்த்தைகள் உணர்த்தின. தாண்டிக்குளம் தாண்டும் வரையும் இருந்த அச்சத்தை விட இந்த இரவு கொடியதாய்.....

அப்போது தான் அவளது கதை வந்தது. என்னுள் ஒளியாயிருந்த என் தோழியின் கதையது. அந்தத் திண்ணையில் அவளும் நானும் பரிமாறிய கதைகள் சொல்ல திண்ணைக்கு வாயிருந்தால் அது எங்கள் மொழியை அப்படியே மொழி பெயர்த்திருக்கும். 5ம் வகுப்பில் அறிமுகமானவள். 7ம் வகுப்பில் இருவருக்குள்ளும் உருவாகிய நட்பு ஊரில் அனேக கண்களில் அது உறுத்தலாய்.....அவளும் நானும் ஒரே சைக்கிளில் டபிள் போனதும் ஒரே கோப்பையில் உணவருந்தியதும் அவளது அம்மாவின் விருப்புக்குரியவளாய் நானும்.....

அந்த நாட்கள் நதியா கொடிகட்டிப்பறந்த காலம். அவளும் நதியாவின் மறு வடிவம் போலத்தான் இருந்தான். அவளை எங்கள் வகுப்பில் சிலோன்நதியா என்றே அழைப்போம். அந்த அழகியை ஒருதலையாய் காதலித்தவர்கள் பலர். அந்த ஒருதலைக்காதல் கொண்டவர்களில் எங்கள் ஊரைச் சார்ந்தவர்களும் அடங்குவர். எத்தனையோ பேரின் காதலை மறுத்தவள் அண்ணன் என்று முறைசொல்லி அவள் அழைத்த ஒருவனால் அவள் வாழ்வே திசைமாறிவிடக் காரணமாகியது.

இரு பிள்ளைகளின் தந்தையான ஒருவனுக்கு அவளில் காதல். அந்தக் காதலை மறுத்ததால் தனது இரு குழந்தைகளையும் மறந்து அந்த ஒருதலைக் காதலன் தற்கொலை செய்து ஒரு இரவு தனது காதல் மனைவியின் கூறைப்புடவை தாலி எல்லாவற்றையும் நடுவீட்டில் கொழுத்திவிட்டு செத்துப்போய் விடுகிறான். விடியற்காலை விடயமறிந்து ஊரெங்கும் அவள்தான் உரை பொருளாகிவிட்டாள். அவள் மீதே ஊரெங்கும் குற்றம் சுமத்தல்கள் திட்டல்கள். என் ஆத்மதோழி அவள் அன்று அழுதழுதே சோர்ந்து விட்டாள். ஆண்களையே முதன்மையாய் பார்க்கும் நமது ஊரில் அவளே எதிரியாய் போக அவள் எல்லாப் பழிகளையும் தன் தலையில் கட்டிக்கொண்டு சோர்ந்து விடுகிறாள். வில்லங்கக்காதல் கொண்டவனின் குடும்பம் முதல் எல்லாரும் அவளையே வார்த்தைகளால் வதைத்தனர்.

16வயதில் அவள் ஊரின் பழிக்கு ஆழாகி உடைந்துவிடுகிறாள். என் வீட்டு அச்சுறுத்தலுக்கு அஞ்சி நானும் அவளுடன் பேசுவதையும் பார்ப்பதையும் நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் அவளை மறக்காமல் நெஞ்சுக்குள் சுமந்தபடி.....அவள் வீட்டில் அவள் எதையும் மறைத்ததில்லை. அவள் அம்மாவுக்கு அவளில் அத்தனை நம்பிக்கை. ஆயினும் ஊர்வாயில் அவள் இப்போ உதவாதவளாய்.....அவளை உயிராய் நேசிப்பதாய் சொன்ன ஒருதலைக்காதல்களும் அவளை எதிரியாகப் பார்க்க எங்களுக்குள் சிறந்த மாணவியாயிருந்த அவளது கல்வி முற்று வைக்கப்பட்டு அவள் வீட்டுக்குள் முடங்கிக் கொள்கிறாள்.

யாரும் அவளை நம்பத் தயாரில்லை....ஆத்மதோழியென்றிரு

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊர் நதியாவும் எனது நினைவுகளும் அங்கம் - 2

ஊர் சென்றதில் உலகை வென்ற மிதப்பு. மனசு மேகத்தில் கால் வைத்து பூமிக்கு இறங்குகிறது. அந்தநாளைய எங்கள் ஊர் தன் அடையாளம் கரைத்து ஏதோ இருக்கிறேன் என்றது. என் பால்ய தோழியின் பெயர் சொல்லிய போது அவள் தனது ஊரிலேயே இருக்கிறாள் என அத்தை சொன்னா. 12வருடங்களின் பின் அவள் இப்போது எப்படி இருப்பாள் என்பதை உள் மனசு சித்திரமாய் தீட்டியது. அவளும் நானும் டபிள் போன சைக்கிளின் சத்தமும் சிரிப்பும் இன்று போல் காதுக்குள் புது ராகமிசைக்கிறது.

போட்டு வருவமோ பிறேமினி ? தங்கைச்சியையும் கூட்டிக்கொண்டு குப்பிளானிலிருந்து ஏழாலை நோக்கி எங்களது நைய்ந்த சைக்கிள் போகிறது. அது ஏழாலை வடக்குச் சந்தி. போஸ்மாஸ்ரர் மாமாவையும் வடக்கு ஏழாலை அக்காவின் முகத்தையும் தேடுகிறது விழிகள். யாருமற்று அந்தத் தபாற்கந்தோர் தனித்திருக்க எல்லோரும் எங்கெங்கோ போய்விட்டார்கள். நாங்கள் உலவிய அந்த வீதியும் வீடுகளும் புதிய மனிதர்களின் வரவில் ஏதோ உயிருடன் இருந்தன.

என் பால்யதோழியின் வீட்டை அண்மிக்கிறோம். பழைய அடையாளங்கள் இல்லாது போனாலும் அந்த இடத்தை அடையாளம் கண்டு கொள்கிறேன். அவளது அம்மாவினதும் அவளது குடும்பத்தினதும் ஜீவனமாயிருந்த கடை இன்றும் அவர்களது ஜீவனமாய் இருந்தது. சோட்டியணிந்து கொண்டைபோட்டு நெற்றியில் பெரிய குங்குமமும் கழுத்து உச்சியிலும் குங்குமம் இட்ட பெண்ணொருத்தி அந்தக் கடையின் வாசலில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். சமூகக்கல்வி படிப்பித்த செல்வம் மாஸ்ரர் அவளுக்குச் சற்றுத்தள்ளி சைக்கிளுக்கு காற்றடித்துக் கொண்டிருந்தார். அந்த வளவிற்குள் 5வயதிலிருந்து 2 வயது வரை மதிக்கத்தக்க 3 சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அக்கா தெரியுதோ அதாரெண்டு ? தங்கைச்சி கேட்டாள். யார் ? கேட்ட எனக்குச் சொன்னாள் அவள். உங்கடை தோழிதான் அது. ஒரு தரம் இதயம் தனது துடிப்பை நிறுத்தி மீண்டாற்போல இருந்தது. எனது கற்பனைக்குள் இருந்த அவளது தோற்றம் சுக்குநூறாகிறது. அவளைப்பார்க்கும் அவசரத்தில் கையில் எதுவும் கொண்டு வராமல் வந்தது உறைக்க, அவளது கடைக்கு 50மீற்றர் தொலைவாயிருந்த கடைக்குப்போய் அவளது பிள்ளைகளுக்கு இனிப்பு வகைகள் சில வாங்கிக் கொள்கிறேன். அவளது கடை வாசலில் போயிறங்குகிறேன்.

அவளது அம்மாவுடன் கதைத்துக் கொண்டிருந்த செல்வம் மாஸ்ரர் என்னை அடையாளம் கண்டு கொள்கிறார். என்னடி திடீரெண்டு வந்திறங்கியிருக்கிறாய் ? அப்போதுதான் அவளும் என்னை அவதானித்தாள். சற்று நேரம் அவள் வாயே திறக்கவில்லை. கலங்கிய கண்களை சிரித்தபடி துடைத்துக் கொண்டு என்னிடம் ஓடிவந்தாள். அம்மா பாருங்கோ ஆரிதெண்டு சொல்லுங்கோ என்றாள். எத்தனையோ தரம் அந்த அம்மாவின் கையால் சாப்பிட்டிருக்கிறேன். தன் மகள் மீதுள்ள பாசம் அந்த அம்மாவுக்கு என்னிலும் இருந்தது. அந்த நாளில் பலசரக்குக்கடையாக இருந்த அந்தக்கடை இப்போது மில்லாகியிருந்தது. ஒரு மனிதன் அங்கு மிளகுதூள் அரைத்துக் கொண்டு நின்றான். அவனுக்கு என்னை அவள் அறிமுகம் செய்து வைத்தாள். அவன்தான் அவளது இராஜகுமாரன். நதியாவை ஞாபகப்படுத்தும் எங்களது அந்நாள் சிலோன் நதியா அம்மாவாக அந்நாள் அடையாளங்கள் இன்றி சாதாரணமானவளாக......

என்ன தனியவோ வந்தனீ ? கலியாணங்கட்டீட்டியா ? எத்தினை பிள்ளையள் ? எந்த ஊரிலை கலியாணங்கட்டினனீ ? அவள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள். கலியாணங்கட்டினது வவுனியாவிலை. 2பிள்ளைகள், ஒரு பொடி 8வயது, பெட்டை 6வயது. அப்பா மருமகனுக்கும் பேரப்பிள்ளையளுக்கும் ஊர் காட்டப்போட்டார். நீ இஞ்சைதானிருக்கிறாயெண்டு அத்தை சொன்னா அதுதான் வந்த உடனும் ஓடிவந்திட்டன்.

எப்ப போப்போறாய் ? கேட்டாள். 3நாள் நிப்பன். அப்ப மனிசனையும் பிள்ளையளையும் கூட்டிவா நான் பாக்க வேணும் என்றாள்.

ஒரு சின்னவள் அவள் மடிக்குள் வந்து ஏறினாள். இதுதான் என்ரை கடைசி. மூண்டும் பெட்டையள். நீ மாறேல்ல அப்பிடியே இருக்கிறாய் , அந்தக் காலத்திலை வைச்ச அதே சிவப்பு ஸ்ரிக்கர் பொட்டு , அதே தலையிழுப்பு , அதே பாவாடை சட்டை , அதே சிரிப்பு எதுகும் மாறேல்ல , முந்திச் சொல்றமாதிரி கலியாணத்துக்குப் பிறகும் இருக்கிறாய் என்றாள். எப்படியோ எல்லாம் இருப்பேன் என்று சொன்ன அவள் மட்டும் என் எண்ணங்களிலிருந்து விலகியவளாய்......

மறுநாள் காலை 10 மணிக்கு அவள் வீட்டில் நானும் எனது குடும்பமும். அப்பா அம்மா எல்லாரும் பழையகதைகள் முதல் எல்லாம் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அவள் எங்களுக்காக குசினிக்குள் அலுவலுடன் நின்றாள். எனது பிள்ளைகள் அவளது பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். குசினிக்குள் நானும் அவளும்.....

நான் எதிர்பாக்கேல்ல நீ இப்பிடி இருப்பாயெண்டு சொல்லி முடிப்பதற்குள் என் கண்கள் குளமாகிறது. என்ன செய்யிறது எல்லாம் விதி....படிக்க வேண்டிய நேரம் எல்லாத்தையும் விளையாட்டா நினைச்சு எல்லாத்தையும் துலைச்சிட்டன்.....அதற்கு மேல் ரணங்களை அவளுக்குப் பரிசளிக்க விரும்பவில்லை நான். அவளது அல்பத்தை எடுத்து விரிக்கிறேன். நானும் அவளும் சுன்னாகம் சித்திரா ஸ்ரூடியோவில் சேர்ந்து எடுத்த படமொன்று அவளது அல்பத்தில் பத்திரப்படுத்தப்பட்டிருந்த

Edited by shanthy

போர் உழுது ஊர் அழுது உலகெங்கும் ஒவ்வொருவரும் சிதறி இன்று அகதிகளாய்.....

உழவு விளைச்சலைத்தான் கொடுக்கும் ..அழிவைக்கொடுப்பதையும் உங்கள் கவிதையில் (கதையில்) கண்டு கொண்டேன்.... நல்ல எழுத்தாற்றல்... கீப் இற் அப்... (தமிழ்ப்படுத்தவும் இல்லாவிட்டால் வெட்டிவிடுவார்கள்)

உங்கள் நதியாவைப் போல் எத்தனை பேர் இருந்தாலும் நீங்கள் சொட்டும் மழைத்துளிதான் அவர்களை எத்தனை இடர் கடந்தும் வாழ வைக்கின்றது....

துன்பப் படுபவர்களைக் கேட்டுப் பாருங்கள்.... அவர்களின் ஜீவ நதி மனிதம் கொண்டவர்களின் மனதில் உருவாகும் இரக்கம் தானென்று கூறுவார்கள்... குப்பிளானில் உருவான சிற்றாறு பெருகிப் பேராறாக வேண்டும்.... யாழ் களம் வருவதே இது போன்ற சிறு விருந்துண்ணவே... வாழிய

-எல்லாள மஹாராஜா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள் எல்லாள மகாராஜா.

விளைச்சல் இன்றி உறவுகளின் பிரிதலும் நினைவுகளுமே மிஞ்சிக் கிடக்கிறது.

இடர்கடந்தும் உயிர்ப்புடன் இயங்கும் வலிமையை காலம் அழித்திருக்கிறது நமக்கெல்லாம். தோழமை தந்தோர் தோழ் தந்தோரென இனிய சுமைகள் உயிரின் வேரில் இன்னும் பச்சையம் உலராது பத்திரமாயிருக்கின்றன.

.. கீப் இற் அப்... (தமிழ்ப்படுத்தவும் இல்லாவிட்டால் வெட்டிவிடுவார்கள்) இன்னும் இதைக் காணேல்லப்போல களத்துக்கத்திகள். :unsure:

கண்டா வெட்டி வீழ்த்தட்டும். :unsure:

நெகிழவைக்கும் சம்பவம்!! அழகாக எழுதியிருக்கிறீர்கள் சாந்தி அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்

இரு பிள்ளைகளின் தந்தையான ஒருவனுக்கு அவளில் காதல். அந்தக் காதலை மறுத்ததால் தனது இரு குழந்தைகளையும் மறந்து அந்த ஒருதலைக் காதலன் தற்கொலை செய்து ஒரு இரவு தனது காதல் மனைவியின் கூறைப்புடவை தாலி எல்லாவற்றையும் நடுவீட்டில் கொழுத்திவிட்டு செத்துப்போய் விடுகிறான். விடியற்காலை விடயமறிந்து ஊரெங்கும் அவள்தான் உரை பொருளாகிவிட்டாள். அவள் மீதே ஊரெங்கும் குற்றம் சுமத்தல்கள் திட்டல்கள். என் ஆத்மதோழி அவள் அன்று அழுதழுதே சோர்ந்து விட்டாள். ஆண்களையே முதன்மையாய் பார்க்கும் நமது ஊரில் அவளே எதிரியாய் போக அவள் எல்லாப் பழிகளையும் தன் தலையில் கட்டிக்கொண்டு சோர்ந்து விடுகிறாள். வில்லங்கக்காதல் கொண்டவனின் குடும்பம் முதல் எல்லாரும் அவளையே வார்த்தைகளால் வதைத்தனர்.

இது எப்ப நடந்தது? நான் அறியவே இல்லை. நீங்கள் எழுதியதை வாசிக்க மிகவும் கவலையாக உள்ளது. நீங்கள் எழுதிய குறிப்பின் படி யாரென அறிய முடிந்தது. எப்பிடி சிட்டு குருவியாக பறந்து திரிந்தா, நம்பவே முடியவில்லை. நானும் ஊருக்கு போன போது வைத்தியர் ஞானாவின் வீட்டிற்கு சென்றிருந்தேன். இவர்களின் கடையை கண்டதும் இன்னாரின் வீடென ஞாபகம் வந்தது. அவ்வளவு பளக்கம் இல்லாததனால் பெரிதாக எதையும் ஞாபகப்படுத்தவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மலரும் ஊர் நினைவுகள் வாழ்த்துகள் சாந்தி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாய் உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா! அற்புதமான எழுத்துக்கள். நிறையபேரின் மனதில் பல ஏக்கங்களை உருவாக்கியுள்ளீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞாபகக்குறிப்பைப் படித்துக் கருத்திட்ட வசி,றதி, வில்லன், பிரசாந் , சபேஸ் அனைவருக்கும் நன்றிகள்.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது எப்ப நடந்தது? நான் அறியவே இல்லை. நீங்கள் எழுதியதை வாசிக்க மிகவும் கவலையாக உள்ளது. நீங்கள் எழுதிய குறிப்பின் படி யாரென அறிய முடிந்தது. எப்பிடி சிட்டு குருவியாக பறந்து திரிந்தா, நம்பவே முடியவில்லை. நானும் ஊருக்கு போன போது வைத்தியர் ஞானாவின் வீட்டிற்கு சென்றிருந்தேன். இவர்களின் கடையை கண்டதும் இன்னாரின் வீடென ஞாபகம் வந்தது. அவ்வளவு பளக்கம் இல்லாததனால் பெரிதாக எதையும் ஞாபகப்படுத்தவில்லை.

அறியாமலும் அறியாமையினாலும் நடந்தவை ஏராளம்.

சிட்டுக்குருவியாய் திரிந்த என் நதியா சிறகுடைபட்டு நொருங்கிப்போனதுயர் நிகழ்ந்து 18ஆண்டுகளாகிவிட்டது. ஞாபகங்களைக் கரைத்துக் கரைத்துக் காலநதியில் எல்லாம் அள்ளுண்டு போயிற்று.

கண்ணே என்றோர் அன்புக் காதலே என்றோரெல்லாம் அடக்கறுமமே என்று அந்தக்கண்ணழகியின் கண்களில் நிரந்தரமாக்கியது மாரிகாலத்தைத்தான். :)

[quote name='shanthy'

சிட்டுக்குருவியாய் திரிந்த என் நதியா சிறகுடைபட்டு நொருங்கிப்போனதுயர் நிகழ்ந்து 18ஆண்டுகளாகிவிட்டது. ஞாபகங்களைக் கரைத்துக் கரைத்துக் காலநதியில் எல்லாம் அள்ளுண்டு போயிற்று.

அப்ப விஞ்ஞானப்பாடம் படிச்சுத்திரிஞ்ச காலம் எண்டால் ஏ எல் படிக்கிற நேரமாயிருக்க வேணும்... அப்போ எப்பிடியும் ஒரு 18 வயசிருக்கும்.... அதில இருந்து பிளஸ் 18... ம்...ம் 36 வயசு மினிமம்.....அடிக்கடி குண்டு போட்டு ரெண்டாந்தரம் மூண்டாந்தரம் ஏ எல் படிச்சிருந்தால்...... சொல்லப்போனால் ...சாந்தி பாட்டியாகி... பேரப்பிள்ளையளைக் கொஞ்சிக்கொண்டிருக்கும் போது..... அசை போட்டிருக்கா....

போடுங்க ...போடுங்க.... நாங்களும் அப்ப பாத்த சுந்தரக் கொடிகள் எல்லாம் ... :)<_< இப்ப வாடி வதங்கி....

வெள்ளை முடிக் கொழுப்புகளாய் (வெளி நாட்டுக்கு வந்திருந்தால் கொழுத்து கொலஸ்ரரோல் கூடி ..ஊரிலிருந்தால் ....... மெலிஞ்சு ..வதங்கி வனப்பிழந்து.... )

-மீண்டும் அவர்களை இக்கோலத்தில் பார்க்காதிருக்கும் வரம் வேண்டும்... எம்பெருமானே...

-இறையிடம் இறைஞ்சும் எல்லாள மஹாராஜா

Edited by எல்லாளன்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப விஞ்ஞானப்பாடம் படிச்சுத்திரிஞ்ச காலம் எண்டால் ஏ எல் படிக்கிற நேரமாயிருக்க வேணும்... அப்போ எப்பிடியும் ஒரு 18 வயசிருக்கும்.... அதில இருந்து பிளஸ் 18... ம்...ம் 36 வயசு மினிமம்.....அடிக்கடி குண்டு போட்டு ரெண்டாந்தரம் மூண்டாந்தரம் ஏ எல் படிச்சிருந்தால்...... சொல்லப்போனால் ...சாந்தி பாட்டியாகி... பேரப்பிள்ளையளைக் கொஞ்சிக்கொண்டிருக்கும் போது..... அசை போட்டிருக்கா....

இல்லை மகாராஜா. 18 வருடத்திற்கு முன்னர் ஓ.எல். கூட எடுக்க இல்லை. கிட்டத்தட்ட ஓ.எல் எடுக்கிற நேரம். சாந்தி விஞ்ஞானத்தை பற்றி கதைத்தன் காரணம் அந்ந தனியார் கல்வி நிலையத்தை நடத்திய ஆசிரியர் விஞ்ஞானம் (10ம் வகுப்பு வரையான) கற்பிக்கும் ஆசிரியர் என்பதாலும் அந்த ஆசிரியர் மாணவர்களின் மீது மிகுந்த சிரத்தை மற்றும் மிகவும் கண்டிப்பானவர் என்தபாலும்.

அதனால பாட்டி இல்லை, ஆன்ரி...சரிதானே சாந்தி ஆன்ரி? :D

Edited by Sabesh

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் பாட்டி சாந்தியின் கதை நன்றாக உள்ளது

நிஜத்தை மறக்க முடியாது பாட்டி [சாந்தி] :D:D

  • கருத்துக்கள உறவுகள்

அறியாமலும் அறியாமையினாலும் நடந்தவை ஏராளம்.

சிட்டுக்குருவியாய் திரிந்த என் நதியா சிறகுடைபட்டு நொருங்கிப்போனதுயர் நிகழ்ந்து 18ஆண்டுகளாகிவிட்டது. ஞாபகங்களைக் கரைத்துக் கரைத்துக் காலநதியில் எல்லாம் அள்ளுண்டு போயிற்று.

கண்ணே என்றோர் அன்புக் காதலே என்றோரெல்லாம் அடக்கறுமமே என்று அந்தக்கண்ணழகியின் கண்களில் நிரந்தரமாக்கியது மாரிகாலத்தைத்தான். :rolleyes:

நானும் அந்த இடியப்பக்கடையிக்கை தானே குந்தியிருந்தனான் என்ரை கண்ணிலை அந்த நதியா எத்துபடடேல்லையே??

கவலையுடன் சாத்திரி :rolleyes::lol:

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்திட்டோர் அனைவருக்கும் நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை மகாராஜா. 18 வருடத்திற்கு முன்னர் ஓ.எல். கூட எடுக்க இல்லை. கிட்டத்தட்ட ஓ.எல் எடுக்கிற நேரம். சாந்தி விஞ்ஞானத்தை பற்றி கதைத்தன் காரணம் அந்ந தனியார் கல்வி நிலையத்தை நடத்திய ஆசிரியர் விஞ்ஞானம் (10ம் வகுப்பு வரையான) கற்பிக்கும் ஆசிரியர் என்பதாலும் அந்த ஆசிரியர் மாணவர்களின் மீது மிகுந்த சிரத்தை மற்றும் மிகவும் கண்டிப்பானவர் என்தபாலும்.

அதனால பாட்டி இல்லை, ஆன்ரி...சரிதானே சாந்தி ஆன்ரி? :huh:

கணக்குச் சரி மாமா. :D

அத்தோடு 35வது பிறந்தநாள் வாழ்த்துக்களும். :D

மகாராஜா உங்களின் ஞாபகத்தில் நிழலாடும் யாராவது இங்கையிருக்கினமோ தெரியாது :D இந்த இணைப்பில வாசிச்சுப் பாருங்கோ. சிலவேளை யாராவது நினைவில் வரலாம்.

என் ஞாபகப்பதிவிலிருந்து...

எங்கள் பாட்டி சாந்தியின் கதை நன்றாக உள்ளது

நிஜத்தை மறக்க முடியாது பாட்டி [சாந்தி] :D:)

முனிவருக்கும் ஞாபகப்பகிர்வுகளா ? நம்ப முடியவில்லை :D

நானும் அந்த இடியப்பக்கடையிக்கை தானே குந்தியிருந்தனான் என்ரை கண்ணிலை அந்த நதியா எத்துபடடேல்லையே??

கவலையுடன் சாத்திரி :( :(

நீங்கள் காவியுடை தரித்த சாத்திரியாய் இடியப்பக்கடையில இருந்திருப்பியள் அதுதான் தெரியாமலிருந்திருக்கும்.

இனிக்கவலைப்பட்டு எதுவும் நடக்கப்போறேல்ல

  • கருத்துக்கள உறவுகள்

கணக்குச் சரி மாமா. :D

மருமோன் எண்டு எழுதிறதுக்கு பதிலா மாமா எண்டு எழுதிட்டிங்கள் போல இருக்கு. :(

அத்தோடு 35வது பிறந்தநாள் வாழ்த்துக்களும். :D

சும்மா பொய்யான வதந்திகளை பரப்பாதைங்கோ :D(அதக்கென்னும் 7 மாதங்கள் இருக்கு)

மகாராஜா உங்களின் ஞாபகத்தில் நிழலாடும் யாராவது இங்கையிருக்கினமோ தெரியாது :D இந்த இணைப்பில வாசிச்சுப் பாருங்கோ. சிலவேளை யாராவது நினைவில் வரலாம்.

என் ஞாபகப்பதிவிலிருந்து...

இது முன்னர் ஒரு தடவை வாசித்தனான். அந்த காலப்பகுதியில் நான் அங்கு இருக்காததனால் யாரையும் தெரியாது. அதைவிட அங்கிருக்கும் போது குப்பிழானையும் ஏழாலையையும் தவிர வேறெங்கும் நண்பர்கள் இருக்கவில்லை. :( அதுசரி, பிறேமிளா எண்டு ஒருவா படிச்சவா இல்லோ... :) அவா இப்ப எங்கே? சும்மாதான் கேக்கிறேன். :huh:

அங்க சனங்கள் சாகுதுகள் இங்க நதியாவும் நாயும். ஏதும் உருப்படியா செய்யுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்க சனங்கள் சாகுதுகள் இங்க நதியாவும் நாயும். ஏதும் உருப்படியா செய்யுங்கோ.

தங்கச்சி நீங்களும் ஈழத்துக்கு செய்த, செய்யுற வீரதீர தியாகங்களை இஞ்சை எடுத்து விடுங்கோவன். :mellow:

அப்பதானே எங்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி வரும் :mellow:

தங்கச்சி நீங்களும் ஈழத்துக்கு செய்த, செய்யுற வீரதீர தியாகங்களை இஞ்சை எடுத்து விடுங்கோவன். :(

அப்பதானே எங்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி வரும் :D

ஏனுங்க கு.சா

:mellow: உங்களுக்கு தங்கச்சி செய்யுறதை எடுத்து விட்டால்த் தானோ புத்துணர்ச்சி வரும் ?? :mellow:

ஏன் தம்பி செய்யுறதை எடுத்து விட்டால் வராதோ ??? :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனுங்க கு.சா

:mellow: உங்களுக்கு தங்கச்சி செய்யுறதை எடுத்து விட்டால்த் தானோ புத்துணர்ச்சி வரும் ?? :mellow:

ஏன் தம்பி செய்யுறதை எடுத்து விட்டால் வராதோ ??? :lol::D

சரி எடுத்து விடுங்கோவன் பாப்பம்? :(:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry489421

வசம்பு அண்ணை இதைப்பற்றி என்ன நினக்கிறியள்? :mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மருமோன் எண்டு எழுதிறதுக்கு பதிலா மாமா எண்டு எழுதிட்டிங்கள் போல இருக்கு. :lol:

இல்லை மாமா சரியாத்தான் எழுதியிருக்கு சரி கவலையை விடுங்கோ :lol:

சும்மா பொய்யான வதந்திகளை பரப்பாதைங்கோ :D(அதக்கென்னும் 7 மாதங்கள் இருக்கு)

இது முன்னர் ஒரு தடவை வாசித்தனான். அந்த காலப்பகுதியில் நான் அங்கு இருக்காததனால் யாரையும் தெரியாது. அதைவிட அங்கிருக்கும் போது குப்பிழானையும் ஏழாலையையும் தவிர வேறெங்கும் நண்பர்கள் இருக்கவில்லை. :lol: அதுசரி, பிறேமிளா எண்டு ஒருவா படிச்சவா இல்லோ... :lol: அவா இப்ப எங்கே? சும்மாதான் கேக்கிறேன். :rolleyes:

ஏழுமாதத்துக்கு கனகாலம் இல்லை. ஆக 35நெருங்குகிறது. :lol:

நீங்கள் கனடாவுக்குப் போனாப்பிறகு நடந்த கதைகள் அவை. குப்பிளான் ஏழாலையைவிட்டு நீங்கள் கனடா போனபிறகு அங்கு நிகழ்ந்தவை நிறைய.

பிறேமிளாவோ அவ இங்கைதான் இருக்கிறா. சும்மா இல்லை உண்மையாத்தான் :D

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

பிறேமிளாவோ அவ இங்கைதான் இருக்கிறா. சும்மா இல்லை உண்மையாத்தான் :)

இங்கைதான் என்றால் நீங்கள் இருக்கும் நாட்டிலோ? என்ன செய்யுறா? (2 பேரும் ஒரே ஆளைத்தானே கதைக்கிறோம்?)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.