Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் வார்த்தையில் இறந்திருக்கலாம் - வாழ்க்கையில் மரணம் அடைய மாட்டார்: சீமான்

Featured Replies

பிரபாகரன் வார்த்தையில் இறந்திருக்கலாம் - வாழ்க்கையில் மரணம் அடைய மாட்டார்: சீமான்

சென்னை: பிரபாகர‌ன் செ‌‌த்து ‌வி‌ட்டார‌ா‌ம். மா‌வீரனு‌க்கு ஏதடா மரண‌ம்?. வா‌ர்‌‌த்தை‌யி‌ல் வே‌ண்டுமானா‌ல் அவ‌ர் மரண‌ம் அட‌ை‌ந்‌‌திரு‌க்கலா‌ம். வா‌ழ்‌க்கை‌யி‌ல் அவ‌ர் ஒருபோது‌ம் மரண‌ம் அடைய மா‌ட்டா‌ர். பிரபாகர‌ன் செ‌ய்த ஒரே தவறு, ந‌ல்லவனாக, ‌அ‌ற்புத ம‌னிதனாக இரு‌ந்ததுதா‌ன் எ‌ன்று இய‌க்குன‌‌ர் ‌‌சீமா‌ன் கூ‌றியுள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை யில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

பெருமளவிலானோர் திரண்டிருந்த இந்தக் கூட்டத்தில் சீமான் அனல் பறக்க பேசினார்.

அவர் பேசுகையில்,

இய‌க்குன‌ர் பார‌திராஜா ஒரு மாபெரு‌ம் கலைஞ‌‌ன். பாலா,

சேர‌ன், த‌ங்க‌ர்ப‌ச்சா‌ன் உ‌ள்‌ளி‌ட்ட எ‌ண்ண‌ற்ற கலைஞ‌ர்க‌ள் பூ‌த்து‌க் குலு‌ங்க காரணமாக உ‌ள்ள அடிமர‌ம். அவ‌ர் அலுவலக வாச‌லி‌ல் உ‌ள்ள வே‌‌ப்பமரமு‌ம் நா‌‌ங்களு‌ம் ஒ‌ன்றாக வள‌ர்‌ந்தவ‌ர்க‌ள். அவ‌ர் அலுவலக‌த்தை தா‌க்‌கியு‌ள்ளன‌ர்.

ஒரு த‌மிழ‌ன் த‌மிழனாக இரு‌ந்தத‌ற்காக ‌கிடை‌த்த ப‌ரிசு இது. ஈழ‌த் த‌‌மிழ‌ர்க‌ள் இல‌ங்கை‌யி‌ல் ‌மிர‌ட்ட‌ப்படு‌‌கிறா‌ர்க‌ள

  • Replies 57
  • Views 6.2k
  • Created
  • Last Reply

இனிதாண்டா போர் நடக்கப் போகிறது..

இதுவரை நட‌ந்தது மு‌ன்னோ‌ட்ட‌ம்தா‌ன். இ‌னி தா‌ண்டா போ‌ர் நட‌க்க‌ப் போ‌கிறது. 5ஆ‌ம் க‌ட்ட‌‌ப் போ‌ரி‌ல் ‌பிரபாகர‌ன் கடைப்பிடி‌த்த மரபுகளை நா‌ங்க‌ள் கடைப்‌பிடி‌க்க‌ப் போ‌வ‌தி‌ல்லை. ஒரு ‌சி‌ங்கள‌வன் கூட ‌‌நி‌‌ம்ம‌தியாக உற‌ங்க முடியாத அள‌வி‌ற்கு தா‌க்குவோ‌ம். கொழு‌ம்பு நகரு‌க்கு‌ள் புகு‌ந்து தா‌க்குத‌ல் நட‌த்துவோ‌ம். மானமு‌ள்ள கடை‌சி ஒரு த‌மிழ‌ன் இரு‌க்கு‌ம் வரை ‌சி‌ங்கள‌வர்களு‌க்கு எ‌திரான போரா‌ட்ட‌ம் தொடரு‌ம்.

சீமான் ஐயாவின் உணர்வுகளிற்கு தலைவணங்கும் அதேசமயம்... யதார்த்ததுடன் ஒத்துச்செல்ல முடியாத அவரது இந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஏற்கனவே தாயகம் சுடுகாடாகி விட்டது. இனி ஐந்தாம் கட்ட ஈழபோர் மண்ணாங்கட்டி என்று சிந்தித்தால் அதற்கு அடுத்த பலிக்கடா தமிழ்நாடுதான். ஏனெனில் தாயக மக்கள் இன்னொருபோரின்பின் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டுவிடுவார்கள். கடைசியில் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள்தான் சர்வதேசத்தின் அணுசரணையுடன் கொலை செய்யப்படுவதற்கு எஞ்சி இருப்பார்கள்.

தாயகத்தில் உள்ள ஒட்டுமொத்த தமிழினமும் அழிக்கப்படுவதற்கே தாயகபோராட்டம் ஆரம்பிக்கப்பட்டதா? கொஞ்சம் சிந்தியுங்கள் ஐயா. வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்களிற்கு அல்ல... முதலில் தாயகமக்களிற்கு தாயகத்தில் நிம்மதியான வாழ்வு கிடைக்கவேண்டும். உங்கள் ஐந்தாம் ஆறாம் ஏழாம் கட்ட போர்கள் தமிழ் மக்களின் இன அழிப்பை தவிர வேறு ஒன்றையும் தமிழருக்கு பெற்றுத்தரப்போவது இல்லை.

அப்போ தமிழ் மக்கள் என்ன செய்யலாம் என்று தாங்கள் நினைக்கின்றீர்கள் கலைஞன்? சிங்களத்தின் காலடியில் சரணாகதியடைந்து அவர்கள் ஏதாவது தருவார்கள் எனக்காத்திருந்து அவர்கள் கால்களினால் நசுக்கப்பட்டு அழிக்ப்படுவதுதான் எங்களுக்குள்ள தெரிவு என்ற சொல்ல வருகின்றீர்களா................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் நண்பரே!

ஐந்தாம் கட்ட ஈழ போர் என்று ஒன்று வந்தால், அதில் நாம் நேரடியாக நிற்க சூழ்நிலைகள் இல்லை. ஆனால், எம்மினத்தை அழிக்க துணை போன ஓநாய்களில் ஒன்று சிங்களவன் தொண்டையை கவ்வ செய்யலாம் அல்லவா?

சீமான் ஜயா முதல் செய்யவேணும் பிறகு சொல்லவேண்டும்.போதும் ஜயா நாங்கள் இழந்த உயிர்கள் இனிமேலும் இழக்க எம்மிடம் ஒன்றுமில்லை ...தயவு செய்து வன்னிமக்களை மீள் குடியமர்த்த எதாவது உதவிகள் செய்ய முடிந்தால் செய்யவும் தாழ்மையாக கேட்டு கொள்கிறோம்

சீமான் அவர்களே இனியும் உங்கள் மேடை பேச்சை கேட்க தயாராக இல்லை. மேடை இல்லாமல் செயல் வடிவம் கொடுத்து நடாத்திய விடுதலை வேள்வியே ஒரு வெறுமை நிலைக்கு வந்த உணர்வோடு நாங்கள் செய்வதறியாது நிற்கின்றோம்.

நீங்கள் சும்ம்மா மேடைகளில் கூச்சல் போடுவதில் பயன் இல்லை.

பொய்க் கணக்கின் படியே 25000 தமிழர் செத்து விட்டார்கள் 3 இலட்சம் தமிழர்கள் நாசி முகாம்களில் அடைக்க பட்டிருக்கிறார்கள் என்று அறிந்த பின்னும் சஞ்சலம் இல்லாமல் இருக்கும் தமிழகம், அழாமல் இருக்கும் தமிழகம் இதற்கு பிறகும் தொப்புள் கொடி உறவு என்பதா?

தயவு செய்து எங்களை வாழ விடுங்கள்.

நீங்கள் தனிதமிழ்நாடு கோரி விடுதலையை ஆரம்பியுங்கள்.

எங்கள் வாழ்வை, விடுதலையை ,சாவை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

இவ்வளவு காலமும் தந்த மேடை பேச்சு ஆதரவுக்கு நன்றி..........

Edited by நேசன்

  • கருத்துக்கள உறவுகள்

பொய்க் கணக்கின் படியே 25000 தமிழர் செத்து விட்டார்கள் 3 இலட்சம் தமிழர்கள் நாசி முகாம்களில் அடைக்க பட்டிருக்கிறார்கள் என்று அறிந்த பின்னும் சஞ்சலம் இல்லாமல் இருக்கும் தமிழகம்இ அழாமல் இருக்கும் தமிழகம் இதற்கு பிறகும் தொப்புள் கொடி உறவு என்பதா

ஆழமான கேள்வியிது......

பதில் தருவாரா சீமான்...?

இதுவரை நாம் கொடுத்தது காணாது என்றாவது சொல்வாரா?

Edited by விசுகு

அப்போ தமிழ் மக்கள் என்ன செய்யலாம் என்று தாங்கள் நினைக்கின்றீர்கள் கலைஞன்? சிங்களத்தின் காலடியில் சரணாகதியடைந்து அவர்கள் ஏதாவது தருவார்கள் எனக்காத்திருந்து அவர்கள் கால்களினால் நசுக்கப்பட்டு அழிக்கப்படுவதுதான் எங்களுக்குள்ள தெரிவு என்ற சொல்ல வருகின்றீர்களா................

தமிழ்மக்கள் என்ன செய்யவேண்டும் என்று அங்கு தாயகத்தில் உள்ள பெரும்பான்மை தமிழ்மக்கள் தீர்மானிக்க வேண்டும். அவர்களின் விருப்பத்திற்கு வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் ஆதரவு அளிக்கலாம். ஐந்தாம் ஆறாம் ஏழாம் கட்டங்களான ஈழப்போரில் செத்துமடிவதவற்கு தயாராக இருக்கின்றார்களா என்று அங்குள்ள தமிழ்மக்களை முதலில் கேளுங்கள்.

தவிர, கடந்த சில மாதங்களில் 30,000 இற்கு மேற்பட்ட தமிழ்மக்கள் கொலை செய்யப்பட்டும், 30,000 இற்கு மேற்பட்ட தமிழ்மக்கள் நிரந்தர அங்கவீனர்கள் ஆகியும், மற்றும் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் காணாமல் போயும், மற்றும் லட்சக்கணக்கான தமிழ்மக்கள் வதைமுகாம்களில் அடைபட்டும் கிடக்கின்றார்கள். தாயகத்தில் எஞ்சியுள்ள தமிழ் உயிர்களாவது - ஏதும் அறியா பச்சிளம் பிஞ்சுகள் உட்பட - இந்த ஜீவன்களிற்கு தேவையான அடிப்படை உதவிகள் கிடைப்பதற்கு வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தொடர்ச்சியாக ஏதாவது செய்யலாம்.

சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக இனி போர் செய்வதாய் இருந்தால்... அந்தப்போரை தமிழர்கள் செய்யாது அவர்களிற்காக ஐ.நா படைகள் அல்லது வேறு ஓர் நாடு - இந்தியா போன்ற வல்லரசு சிறீ லங்காவிற்கு எதிராக செய்து தமிழர்கள் தனிநாடு பெறுவதற்கு உதவிசெய்யவேண்டும். அல்லது உலகில் உள்ள ஓர் வல்லரசு நாடு அல்லது ஆகக்குறைந்தது ஐ.நா உறுப்புரிமை பெற்ற ஓர் நாடு பகிரங்கமாக தமிழ்மக்களிற்கு தனித்தமிழீழம் அமைப்பதற்கு ஆயுத, மற்றும் இதர உதவிகள் செய்யவேண்டும். அப்படி ஓர் காலம் கனியும்வரை ஓர் வேட்டு ஒலி தாயகத்தில் தமிழர் தரப்பில் இருந்து எழுவது தவிர்க்கப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//இதுவரை நட‌ந்தது மு‌ன்னோ‌ட்ட‌ம்தா‌ன். இ‌னி தா‌ண்டா போ‌ர் நட‌க்க‌ப் போ‌கிறது. 5ஆ‌ம் க‌ட்ட‌‌ப் போ‌ரி‌ல் ‌பிரபாகர‌ன் கடைப்பிடி‌த்த மரபுகளை நா‌ங்க‌ள் கடைப்‌பிடி‌க்க‌ப் போ‌வ‌தி‌ல்லை. ஒரு ‌சி‌ங்கள‌வன் கூட ‌‌நி‌‌ம்ம‌தியாக உற‌ங்க முடியாத அள‌வி‌ற்கு தா‌க்குவோ‌ம். கொழு‌ம்பு நகரு‌க்கு‌ள் புகு‌ந்து தா‌க்குத‌ல் நட‌த்துவோ‌ம். மானமு‌ள்ள கடை‌சி ஒரு த‌மிழ‌ன் இரு‌க்கு‌ம் வரை ‌சி‌ங்கள‌வர்களு‌க்கு எ‌திரான போரா‌ட்ட‌ம் தொடரு‌ம்//

சீமான் சரியாகத்தானே சொல்லி இருகிறார் 5ம்கட்டபோர் புலம்பெயர்தமிழர் கையில்தான் இருகிறது.

1. முகாமிற்குள் ஜநா உதவி நிறுவனங்களை விடுவதற்க்கான போராட்டம்

2. அங்கிருப்பவர்களுக்கு தேவையான உணவு, உடை, மருந்தை அனுமதிப்பதற்க்கான போராட்டம்

3. அவர்களையும் சரணடைந்த அனைத்து போராளி, பொதுமக்ளையும் வெளியே விடுவதற்க்கான போராட்டம்

4. அவர்களது இடங்களில் மறு குடியேற்றுவதற்கான போராட்டம்

5. அவர்களது. வாழ்வாதாரத்துக்கு தேவையான வருவாயை அமைத்து கொடுப்பதற்க்கான போராட்டம்

6. அவர்கள் சகமனிதனாக சம உரிமை பெற்று வாழ்வரற்க்கான அரசியல் போராட்டம்.

7. இதை எல்லாம் சிங்களவனை செய்ய வைப்பதற்கான அழுத்ததை கொடுப்பதற்க்கான சர்வதேசத்தில் நடைபெறவேண்டிய போராட்டங்கள்.

8 இந்த காலப்பகுதியில் மிகுதியான போராளிகளை ஒன்றினைப்பதும் அவர்களை பலப்படுத்துவதும், அவர்களை உறங்கு நிலையில் வைத்து இருப்பதும் இதை இரகசிமாக செய்யவேண்டும்.

9. இனியொரு ஆயுத போராட்டத்தை எம்மால் செய்யமுடியாது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும், இனி எல்லாம் அரசியல் போராட்டம் மட்டுமே. இலங்கையுடன் மட்டும் என்றால் எமது போராளிகள் வெண்று இருப்பார்கள், இந்திய இலங்கையுடன் மட்டும் என்றாலாவது முயற்சி செய்து பார்த்து இருக்கலாம். இலங்கை , இந்தியா,சீனா,பாகிஸ்தான், ரச்சியாவுடன் தனியாக நின்று மோதுவது என்றால் அமெரிக்க போண்று ஆயுத ஆட்பலம் வேண்டும் தனித்து அமெரிக்கவினால் கூட முடியாத ஒரு காரியத்தில் நாம் ஈடுபடுவது புத்திசாலித்தனம் இல்லை,

முடிந்த வரை உலக நாடுகளுக்கு அழுத்தங்களை கொடுப்போம், எங்கள் பிள்ளைகளை அந்த அந்த நாட்டு அரசியலில் ஈடுபடுத்தி அதன்மூலம் எமது ஞாயத்தை உரைப்போம், எமது பிள்ளைகளை யாழ்ப்பான கனவுலகான் டொக்ரர், எஞ்சினியர் கன்வுலகத்தில் இருந்து மீண்டு விமானிகளாகவும்,விஞ்ஞானிகளாக

சீமான் கோமான் போதும் போதும் எல்லாமே போதும்.எம் மக்கள் எனி எந்தக்காலத்திலும் இந்தியாவை

நம்ப மாட்டார்கள்: இலட்சக்கணக்கான மக்களுக்கு இப்போது தேவையானது அடிப்படை வசதி வேறொன்றுமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.judgeandjury.org/

* Yes (74%, 1,067,092 Votes)

* No (26%, 367,283 Votes)

Total Voters: 1,434,376

தமிழ்மக்கள் என்ன செய்யவேண்டும் என்று அங்கு தாயகத்தில் உள்ள பெரும்பான்மை தமிழ்மக்கள் தீர்மானிக்க வேண்டும். அவர்களின் விருப்பத்திற்கு வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் ஆதரவு அளிக்கலாம். ஐந்தாம் ஆறாம் ஏழாம் கட்டங்களான ஈழப்போரில் செத்துமடிவதவற்கு தயாராக இருக்கின்றார்களா என்று அங்குள்ள தமிழ்மக்களை முதலில் கேளுங்கள்.

தவிர, கடந்த சில மாதங்களில் 30,000 இற்கு மேற்பட்ட தமிழ்மக்கள் கொலை செய்யப்பட்டும், 30,000 இற்கு மேற்பட்ட தமிழ்மக்கள் நிரந்தர அங்கவீனர்கள் ஆகியும், மற்றும் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் காணாமல் போயும், மற்றும் லட்சக்கணக்கான தமிழ்மக்கள் வதைமுகாம்களில் அடைபட்டும் கிடக்கின்றார்கள். தாயகத்தில் எஞ்சியுள்ள தமிழ் உயிர்களாவது - ஏதும் அறியா பச்சிளம் பிஞ்சுகள் உட்பட - இந்த ஜீவன்களிற்கு தேவையான அடிப்படை உதவிகள் கிடைப்பதற்கு வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தொடர்ச்சியாக ஏதாவது செய்யலாம்.

சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக இனி போர் செய்வதாய் இருந்தால்... அந்தப்போரை தமிழர்கள் செய்யாது அவர்களிற்காக ஐ.நா படைகள் அல்லது வேறு ஓர் நாடு - இந்தியா போன்ற வல்லரசு சிறீ லங்காவிற்கு எதிராக செய்து தமிழர்கள் தனிநாடு பெறுவதற்கு உதவிசெய்யவேண்டும். அல்லது உலகில் உள்ள ஓர் வல்லரசு நாடு அல்லது ஆகக்குறைந்தது ஐ.நா உறுப்புரிமை பெற்ற ஓர் நாடு பகிரங்கமாக தமிழ்மக்களிற்கு தனித்தமிழீழம் அமைப்பதற்கு ஆயுத, மற்றும் இதர உதவிகள் செய்யவேண்டும். அப்படி ஓர் காலம் கனியும்வரை ஓர் வேட்டு ஒலி தாயகத்தில் தமிழர் தரப்பில் இருந்து எழுவது தவிர்க்கப்படவேண்டும்.

மிக மிக சரியான விதத்தில் சொல்லியுள்ளீர்கள் கலைஞன்..!!

புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு 5ஆம் கட்ட போர் என வீர வசனம் பேசுகின்றவர்களை அல்லது அவர்களின் பிள்ளைகளை முதலில் சண்டைக்கு அனுப்ப வேண்டும்

//இதுவரை நட‌ந்தது மு‌ன்னோ‌ட்ட‌ம்தா‌ன். இ‌னி தா‌ண்டா போ‌ர் நட‌க்க‌ப் போ‌கிறது. 5ஆ‌ம் க‌ட்ட‌‌ப் போ‌ரி‌ல் ‌பிரபாகர‌ன் கடைப்பிடி‌த்த மரபுகளை நா‌ங்க‌ள் கடைப்‌பிடி‌க்க‌ப் போ‌வ‌தி‌ல்லை. ஒரு ‌சி‌ங்கள‌வன் கூட ‌‌நி‌‌ம்ம‌தியாக உற‌ங்க முடியாத அள‌வி‌ற்கு தா‌க்குவோ‌ம். கொழு‌ம்பு நகரு‌க்கு‌ள் புகு‌ந்து தா‌க்குத‌ல் நட‌த்துவோ‌ம். மானமு‌ள்ள கடை‌சி ஒரு த‌மிழ‌ன் இரு‌க்கு‌ம் வரை ‌சி‌ங்கள‌வர்களு‌க்கு எ‌திரான போரா‌ட்ட‌ம் தொடரு‌ம்//

சீமான் சரியாகத்தானே சொல்லி இருகிறார் 5ம்கட்டபோர் புலம்பெயர்தமிழர் கையில்தான் இருகிறது.

1. முகாமிற்குள் ஜநா உதவி நிறுவனங்களை விடுவதற்க்கான போராட்டம்

2. அங்கிருப்பவர்களுக்கு தேவையான உணவு, உடை, மருந்தை அனுமதிப்பதற்க்கான போராட்டம்

3. அவர்களையும் சரணடைந்த அனைத்து போராளி, பொதுமக்ளையும் வெளியே விடுவதற்க்கான போராட்டம்

4. அவர்களது இடங்களில் மறு குடியேற்றுவதற்கான போராட்டம்

5. அவர்களது. வாழ்வாதாரத்துக்கு தேவையான வருவாயை அமைத்து கொடுப்பதற்க்கான போராட்டம்

6. அவர்கள் சகமனிதனாக சம உரிமை பெற்று வாழ்வரற்க்கான அரசியல் போராட்டம்.

7. இதை எல்லாம் சிங்களவனை செய்ய வைப்பதற்கான அழுத்ததை கொடுப்பதற்க்கான சர்வதேசத்தில் நடைபெறவேண்டிய போராட்டங்கள்.

8 இந்த காலப்பகுதியில் மிகுதியான போராளிகளை ஒன்றினைப்பதும் அவர்களை பலப்படுத்துவதும், அவர்களை உறங்கு நிலையில் வைத்து இருப்பதும் இதை இரகசிமாக செய்யவேண்டும்.

9. இனியொரு ஆயுத போராட்டத்தை எம்மால் செய்யமுடியாது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும், இனி எல்லாம் அரசியல் போராட்டம் மட்டுமே. இலங்கையுடன் மட்டும் என்றால் எமது போராளிகள் வெண்று இருப்பார்கள், இந்திய இலங்கையுடன் மட்டும் என்றாலாவது முயற்சி செய்து பார்த்து இருக்கலாம். இலங்கை , இந்தியா,சீனா,பாகிஸ்தான், ரச்சியாவுடன் தனியாக நின்று மோதுவது என்றால் அமெரிக்க போண்று ஆயுத ஆட்பலம் வேண்டும் தனித்து அமெரிக்கவினால் கூட முடியாத ஒரு காரியத்தில் நாம் ஈடுபடுவது புத்திசாலித்தனம் இல்லை,

முடிந்த வரை உலக நாடுகளுக்கு அழுத்தங்களை கொடுப்போம், எங்கள் பிள்ளைகளை அந்த அந்த நாட்டு அரசியலில் ஈடுபடுத்தி அதன்மூலம் எமது ஞாயத்தை உரைப்போம், எமது பிள்ளைகளை யாழ்ப்பான கனவுலகான் டொக்ரர், எஞ்சினியர் கன்வுலகத்தில் இருந்து மீண்டு விமானிகளாகவும்,விஞ்ஞானிகளாக

அங்க சனம் தெளிவாய்தான் இருக்கு.. நாங்கள் இஞ்சை இருந்து அந்த மக்களை காப்பாற்றுங்கோ என்று குரல் கொடுத்து உள்ளதையும் கெடுக்காமல் விடுதல் நல்லது.

இல்லை நான் அங்க உள்ள மக்களுக்காக குரல் கொடுப்பன் என்பவை முடிஞ்சால் தாங்களோ தங்கள் பிள்ளைகளையோ கொழும்புக்கு அனுப்பி வன்னி முகாம் கொடுமைகளுக்கு எதிரா குரல் கொடுக்க சொல்லுங்கோ.. ஒருத்தரும் வரமாட்டினம்.

இதுக்கு முன்னம் இப்படி கத்து கத்து எண்டு தெருவில நின்று இரவுபகலாய் கத்தி என்னத்த கிழிச்சம். சிங்களவன் தான் நினைச்சதை செய்தான்.. சர்வதேசமாவது மயிராவது..

இப்பவும் இங்க இருந்து மக்களை காப்பதுங்கோ காப்பாந்துங்கோ என்று கத்தி.. சும்மா இருக்கிற சிங்களவனை உசுப்பேத்தி மிச்ச சனத்தையும் கொன்றுடாதீங்கோ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேசன் நீங்கள் சொல்வதுதான் சரி..

பலரகம்.. கனரகம்.. நவீனம்.. எல்லா படையும் கொண்ட போராட்டமே முடிந்துவிட்டது.. இன்னமும் இவர்களின் மேடைப்பேச்செல்லாம் எமக்கு வேண்டாம்.. தொப்புள் கொடி உறவு 2ரூபாய் அரிசியிற்கும்..இலவச ரீவியிற்கும் முன்னால் அறுந்துவிடும்... சாவும் வாழ்வும் எம்முடனே நடக்கட்டும்.. நமக்கு நாமே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்க சனம் தெளிவாய்தான் இருக்கு.. நாங்கள் இஞ்சை இருந்து அந்த மக்களை காப்பாற்றுங்கோ என்று குரல் கொடுத்து உள்ளதையும் கெடுக்காமல் விடுதல் நல்லது.

இல்லை நான் அங்க உள்ள மக்களுக்காக குரல் கொடுப்பன் என்பவை முடிஞ்சால் தாங்களோ தங்கள் பிள்ளைகளையோ கொழும்புக்கு அனுப்பி வன்னி முகாம் கொடுமைகளுக்கு எதிரா குரல் கொடுக்க சொல்லுங்கோ.. ஒருத்தரும் வரமாட்டினம்.

இதுக்கு முன்னம் இப்படி கத்து கத்து எண்டு தெருவில நின்று இரவுபகலாய் கத்தி என்னத்த கிழிச்சம். சிங்களவன் தான் நினைச்சதை செய்தான்.. சர்வதேசமாவது மயிராவது..

இப்பவும் இங்க இருந்து மக்களை காப்பதுங்கோ காப்பாந்துங்கோ என்று கத்தி.. சும்மா இருக்கிற சிங்களவனை உசுப்பேத்தி மிச்ச சனத்தையும் கொன்றுடாதீங்கோ....

அப்ப அவன் விடுற நேரம் விடட்டும் என்று அமைதி காப்பது நல்லதா? :lol:

சித்தன்.. நான் அப்பிடி சொல்லேல்லை.. நாங்கள் எவ்வளவுதான் கத்தினாலும் அவன் தான் நினைச்சதை தான் செய்வான் என்று சொல்லுறன்..

சித்தன்.. நான் அப்பிடி சொல்லேல்லை.. நாங்கள் எவ்வளவுதான் கத்தினாலும் அவன் தான் நினைச்சதை தான் செய்வான் என்று சொல்லுறன்..
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அவர்களே இனியும் உங்கள் மேடை பேச்சை கேட்க தயாராக இல்லை. மேடை இல்லாமல் செயல் வடிவம் கொடுத்து நடாத்திய விடுதலை வேள்வியே ஒரு வெறுமை நிலைக்கு வந்த உணர்வோடு நாங்கள் செய்வதறியாது நிற்கின்றோம்.

நீங்கள் சும்ம்மா மேடைகளில் கூச்சல் போடுவதில் பயன் இல்லை.

பொய்க் கணக்கின் படியே 25000 தமிழர் செத்து விட்டார்கள் 3 இலட்சம் தமிழர்கள் நாசி முகாம்களில் அடைக்க பட்டிருக்கிறார்கள் என்று அறிந்த பின்னும் சஞ்சலம் இல்லாமல் இருக்கும் தமிழகம், அழாமல் இருக்கும் தமிழகம் இதற்கு பிறகும் தொப்புள் கொடி உறவு என்பதா?

தயவு செய்து எங்களை வாழ விடுங்கள்.

நீங்கள் தனிதமிழ்நாடு கோரி விடுதலையை ஆரம்பியுங்கள்.

எங்கள் வாழ்வை, விடுதலையை ,சாவை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

இவ்வளவு காலமும் தந்த மேடை பேச்சு ஆதரவுக்கு நன்றி..........

கூடி பிறந்த நாங்களே ..... வீதியில் இறங்கி இரண்டநாள் கத்தினோமே தவிர வேறெதை செய்தோம்? அப்படியிருக்க சிறையே சென்றவன் எம்மிலும் சிறந்தவன் என்பதை மறந்து வரும் உங்கள் வார்த்தைகள் அநாகரீகமானவை. எதை முடியுமோ அதோடு நிற்காது முடியாததையும் முடியுமென முயற்சி செயட்பவர்களை விமர்சிப்து என்பது ஒரு நேர்மை செயலாக எனக்கு தெரியவில்லை.

அப்போ தமிழ் மக்கள் என்ன செய்யலாம் என்று தாங்கள் நினைக்கின்றீர்கள் கலைஞன்? சிங்களத்தின் காலடியில் சரணாகதியடைந்து அவர்கள் ஏதாவது தருவார்கள் எனக்காத்திருந்து அவர்கள் கால்களினால் நசுக்கப்பட்டு அழிக்ப்படுவதுதான் எங்களுக்குள்ள தெரிவு என்ற சொல்ல வருகின்றீர்களா................

நீங்கள் வெளிநாட்டில் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?...3 வேளை உணவு கிடைக்குதா....குடும்பம் பிள்ளைகள் எல்லாம் வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

அப்பசரி இனி சொல்லுவம்..."எத்தனை ஆயிரம் மக்கள் செத்தாலும் ஆயுத போராட்டம் நிறுத்தப்படக்கூடாது...வன்னி மக்கள் சாகும்வரை போராட வேண்டும்...அவர்கள் வெற்றி செய்தி கேட்டு நான் புலத்தில் பியர் அடிச்சு வீரம் கதைக்க வேண்டும்.... we want thamil eelam we want thamil eelam"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்மக்கள் என்ன செய்யவேண்டும் என்று அங்கு தாயகத்தில் உள்ள பெரும்பான்மை தமிழ்மக்கள் தீர்மானிக்க வேண்டும். அவர்களின் விருப்பத்திற்கு வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் ஆதரவு அளிக்கலாம். ஐந்தாம் ஆறாம் ஏழாம் கட்டங்களான ஈழப்போரில் செத்துமடிவதவற்கு தயாராக இருக்கின்றார்களா என்று அங்குள்ள தமிழ்மக்களை முதலில் கேளுங்கள்.

இதே கருத்தை எனது வலைப்பதிவில் போட்டபோது என்னைத் துரோகியாக்கிவிட்டார்கள். கவனம்

அப்போ தமிழ் மக்கள் என்ன செய்யலாம் என்று தாங்கள் நினைக்கின்றீர்கள் கலைஞன்? சிங்களத்தின் காலடியில் சரணாகதியடைந்து அவர்கள் ஏதாவது தருவார்கள் எனக்காத்திருந்து அவர்கள் கால்களினால் நசுக்கப்பட்டு அழிக்ப்படுவதுதான் எங்களுக்குள்ள தெரிவு என்ற சொல்ல வருகின்றீர்களா................

சீமான் என்னும் தன்மானத் தமிழனிற்கு நான் தலைவணங்குகின்றேன். அவரின் ஈழப்பற்றை விமர்சிக்க நாங்கள் தகுதியற்றவர்கள்.

அவருக்கு இதெல்லாம் தேவையா? நமக்காக ஏன் குரல்கொடுக்க வேண்டும்...? படம் எடுத்தோமா ... பணம் பார்த்தோமா என இருக்கலாமே?!

ஏன் எங்களுக்காக அவர் சிறைபோக வேண்டும்???

சீமானை விமர்சிப்பவர்கள் தங்களைத் தாங்களே ஒருதடவை கேள்வி கேட்டுக் கொள்ளட்டும்!

தயவு செய்து தமிழுணர்வாளர்களை மதிக்கப் பழகுங்கள்.

இது எனது தாழ்மையான வேண்டுகோள்.

Edited by பருத்தியன்

அதே.. அதே..

தமிழ்நாடு குறித்து சிங்களவ‌னுக்கு மனவியல் ரீதியாக ஒரு அழுத்தம் எப்பவுமே உண்டு. அதை சீமான் போன்றவர்கள் தங்கள் பேச்சால் அதிகரித்தால் நல்லதுதானே..! :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் ஓங்கி தாக்கும் போது கைதட்டியோரும்.....

சீமான் எங்களுக்காக வீரவாசமாக பேசிய போது சீமான் பேச்சு கேட்டீங்களா என்று கேட்டவர்களும் தான் இன்று விமர்சனம் செய்ய முனைவதாக படுகின்றது.

புலிகள் வீரியமுடன் தாக்கும் போதெல்லாம் கண்டிப்பாக தமிழீழம் கிடைக்கும் என்றார்கள்... ஆனால் அது தங்கள் மேல் வைத்த நம்பிக்கை இல்லை அங்கு போராடிய போராளிகள் மீது வைத்த நம்பிக்கை என்று இப்போது தமிழீழத்தை வேண்டாத ஒன்றாக பேசும் நபர்களை பார்க்க தோன்றுகின்றது.

தமிழீழம் என்ற ஒன்றை தாயக மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நீங்கள் எல்லாம் தயார் என்றால் தமிழீழ மக்கள் அதை வேண்டாம் என்று சொல்ல மாட்டினம் தானே! சீமான் வாய் அளவில தனும் பேசுறார் ஆனால் இங்க உங்கட எழுத்தில கூட அந்த தொனியில்லை....

வெட்கப்பட வேண்டிய விசயம்... நேற்று முன்தினம் கனடாவில் தமிழீழ தாகத்திலும் பார்த்தம் எங்கட மக்களின்ர எழுச்சியை... வாழைப்பழத்தை உரிச்சு கொடுத்தாலும் திண்ணாத கூட்டம் இந்த "புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் கூட்டம்" தமிழீழம் எட்டும் கனியாக இருக்கும் போது அதை பறிக்க வக்கில்லாமல் இருந்திட்டு இப்ப சீமான் அப்பிடி பேசுறான் இப்பிடி பேசுறான் என்று சொல்லுறது.

சீமானுக்கு வேற வேலை இல்லை. உங்கள போல சுயநலக்கூட்டத்துக்கு எல்லாம் உதவி செய்ய முயற்ச்சிக்கிறார் பாருங்க. தானுன்டு தன் படமுண்டு என்றா இந்த புலம்பெயர் யாம்பவான்கள் இயக்குனர் சீமான்ர படத்தை விசில் அடிச்சுப்பார்த்திருப்பினம்.. அது எங்கட சனம் முகாமுக்குள்ள கிடந்தா என்ன.... முள்வேலிக்குள்ள செத்தா என்ன...

இப்ப மட்டும் அக்கறை பொத்துக்கிட்டு வருது....மக்கள்... தேசம்... விடுதலை.... எல்லாத்தையும் இழந்ததுக்கு முழமைக்கும் காரணம்... புலத்தில புண்ணாக்கு வேலை செய்யுற எங்கட சனம் தான்.. அதை ஏற்றுக்கொள்ளாததுகள் ஏன் தான் ஏதோ வாயாள கத்தி ஜெயிலுக்காவது போய் வாறவனை விமர்சிக்குதுகளோ தெரியல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமான் ஜயா முதல் செய்யவேணும் பிறகு சொல்லவேண்டும்.போதும் ஜயா நாங்கள் இழந்த உயிர்கள் இனிமேலும் இழக்க எம்மிடம் ஒன்றுமில்லை ...தயவு செய்து வன்னிமக்களை மீள் குடியமர்த்த எதாவது உதவிகள் செய்ய முடிந்தால் செய்யவும் தாழ்மையாக கேட்டு கொள்கிறோம்

சீமானும் அவரது பேச்சும் இருப்பதாலேயே, ஊடகங்களால் மறைக்கப்பட்ட கொஞ்ச நஞ்ச உண்மையும் தமிழக மக்களுக்குத்தெரிகிறது

எத்தனையோ தமிழ்மக்களுக்கு அவரது பேச்சு உண்மையான தமிழுணர்வை ஊட்டியிருக்கிறது

சீமானுக்கு வன்னிமக்களை மீளக்குடியமர்த்த உதவி செய்ய வேண்டுமென்று எந்த அவசியமும் இல்லை

புலிகள் அடிக்கும்போது விசிலடித்த புலம்பெயர் தமிழர்களுக்கு மட்டுமே அந்த உரிமை உண்டு

படம் நன்றாக ஓடும்போது கதாநாயகனை வாழ்த்துவதும், படம் ஓடவில்லையென்றால் இயக்குனரை ஏசும் பேச்சை முதலில் ஈழமக்கள் விடவேண்டும்

இந்த சீமானை பெரிய ஆளாக்கியது புலம்பெயர் ஈழமக்கள்தானே யன்றி, தமிழகத்தமிழர் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்

தமிழகத்தில் சீமானுக்கு என்று பெரிய பெயர் ஏதும் இல்லை

அப்படி இருந்த போதிலும் தன்னலமில்லாது இதைப்பற்றி பேசியே சிறை சென்றார்

இன்னும் ஒரு சில மாதங்களில் நீங்களும் கூட ஈழப்பிரச்சனையை மறந்து போகலாம்

பலரும் தத்தம் வேலையைப்பார்க்கப்போய் விடலாம்.

ஆனால் ஈழமக்களுக்காக பேசிய பேச்சுக்காக தனது நட்பையும் வியாபாரத்தையும் இழந்து நிற்கிற சீமானை உங்களால்

கோடம்பாக்கத்தில் மீளக்குடியமர்த்த முடியுமா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.