Jump to content

13 வயது ஈழத் தமிழ்ச் சிறுமியைப் பற்றிய திரைப்படம் "உச்சிதனை முகர்ந்தால்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Jul 11, 2011 / பகுதி: முக்கியச் செய்தி /

13 வயது ஈழத் தமிழ்ச் சிறுமியைப் பற்றிய திரைப்படம் "உச்சிதனை முகர்ந்தால்"

13 வயது ஈழத் தமிழ்ச் சிறுமியைப் பற்றி எடுக்கப்பட்ட படத்தில் சத்தியராஜ், சீமான் , நாசர், மணிவண்ணன் உட்பட பலர் நடித்துள்ளார்கள்.

இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளிவர உள்ள நிலையில், இப் பட இசைவெளியீட்டு விழா லண்டனிலும், நோர்வேயிலும் நடைபெற உள்ளது.

21556247.jpg

63932067.jpg

படத்தில் நடித்த பல நடிகர்கள் நடிகைகள், மற்றும் பாடகர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர். உச்சிதனை முகர்ந்தால் படத்தை ஈழத் தமிழர்கள் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடையமாகும் !

36645740.jpg

இன்ஸ்பெக்டராக வரும் சீமான் அவர்களின் வசனங்கள் அணல் பறப்பவையாக அமைந்துள்ளதோடு, ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக இத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

88059805.jpg

66831856.jpg

திரைப்படமானது உலகளாவியரீதியிலும், மற்றும் இந்தியாவிலும் பல விருதுகளை தட்டிச் செல்லும் அளவுக்கு நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

86369510.jpg

52307585.jpg

91421791.jpg

52834824.jpg

http://www.pathivu.com/news/17350/57/13/d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • 1 month later...

"இலங்கை சிறுமிக்கு நியாயம் கிடைக்குமா..? "

20uchithinai.jpg

சத்யராஜ், சீமான், நாசர், மணிவண்ணன், சங்கீதா, புனிதவதி மற்றும் பலர் நடித்து புகழேந்தி தங்கராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'உச்சிதனை முகர்ந்தால்'. இப்படத்தினை நார்வே வாழ் இலங்கை தமிழர்கள் தயாரித்து இருக்கிறார்கள்.

இலங்கையில் வாழ்ந்த 13 வயது புனிதவதி என்கிற தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த உண்மை கதையை வெள்ளித்திரையில் பதித்து இருக்கும் படம் இது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஏற்கனவே லண்டனில் நடைபெற்றாலும் சென்னையில் நேற்று ( ஆகஸ்ட் 19 ) கிருஷ்ண கான சபாவில் நடைபெற்றது. இவ்விழாவில் மூத்த இயக்குனர் சக்தி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

அந்த இசை வெளீயிட்டு விழாவின் சில தகவல் துளிகள் :

* 'உச்சிதனை முகர்ந்தால்' படத்தில் நடிக்க புனிதவதி பாத்திரத்திற்கு பல்வேறு சிறுமிகளை தேடி இறுதியாக நீநிகா என்ற பெண்ணை ஒப்பந்தம் செய்து நடிக்க வைத்து இருக்கிறார்கள். இப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து இவரை புனிதவதி என்றே அழைக்கிறது படக்குழு.

* படக்குழுவினர் அனைவரும் மேடையேறி படத்தின் இசையை அவர்களே வெளியிட்டார்கள்.

* முதலில் படத்தில் இடம் பெற்ற 'உச்சிதனை முகர்ந்தால்' என்ற பாடலை பால்ராம், பேபி பிரியங்கா மேடையில் தோன்றி பாடினார்கள்.

* 'இருப்பாய் தமிழா நெருப்பாய் நீ' என்ற பாடலை இசையமைப்பாளர் இமான் மேடையில் பாடினார். அவரைத் தொடர்ந்து அதே பாடலுக்கு நடனம் அமைத்த 'ஜோடி நம்பர் ஒன்' புகழ் பிரேம் கோபால் மேடையில் தத்ரூபமாக நடனமாடி அனைவரது கைதட்டல்களையும் பெற்றார்.

* இப்படத்தின் கதையைக் கேட்டு கண் கலங்கி இசையமைப்பாளர் இமான் " இந்த படத்திற்கு நான் கண்டிப்பாக இசையமைக்கிறேன். நீங்கள் உங்களால் கொடுக்க முடிந்த தொகையை கொடுங்கள் " என்று கூறினாராம்.

" நான் அவருக்கு கொடுத்த தொகை மிக மிகக் குறைவு தான். இமான் ஒரு நல்ல மனிதன்" என்று கூறினார் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்.

* சத்யராஜ் பேசும் போது "முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேருக்கும் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரும் அனைத்து இதயங்களுக்கும் நன்றி. அவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இதயமே இல்லை என்று தான் நான் கூறுவேன். 'உச்சிதனை முகர்ந்தால்' படம் கண்டிப்பாக வெற்றிப் படமாக அமையும். புனிதவதிக்கு நேர்ந்த கொடுமையை தத்ரூபமாக படமாக்கி இருக்கிறார் புகழேந்தி தங்கராஜ். 'பூவிழி வாசலிலே', 'என் பொம்முகுட்டி அம்மாவுக்கு', 'ரிக்ஷா மாமா' போன்று நான் சின்ன குழந்தைகளுடன் நடித்த படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. அது போலவே 'உச்சிதனை முகர்ந்தால்' கண்டிப்பாக வெற்றி படம் தான்" என்றார்.

*இப்படத்தின் கதையை கேட்ட நடிகர் நாசர் " இப்படத்தில் எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும். கண்டிப்பாக எனக்கு இந்த படத்தில் நடிக்க சந்தர்ப்பம் கொடுத்தால் போதும். ஒரு பைசா கூட சம்பளம் வேண்டாம்" என்று கூறி இருக்கிறார்.

* விழாவில் கலந்து கொண்டவர்கள் ஒரே நேரத்தில் இமான் பாட, பிரேம் கோபால் நடனம் ஆட வேண்டும் என்று வேண்டுக்கோள் வைக்க, அதற்கு இணங்கி, மீண்டும் இமான பாட நடனம் ஆடினார் பிரேம் கோபால்.

*இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் " காற்றுக்கென்ன வேலி படத்திற்கு விதித்த தடையை எப்படி மீறி படம் வெளிவந்ததோ அது போல் இப்படத்திற்கு எந்த தடை வந்தாலும் அதை எல்லாம் மீறி இப்படமும் வெளிவரும். 13 வயது குழந்தையான புனிதவதிக்கு நேர்ந்த கொடுமையை திரையில் கொண்டு வந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எனது முயற்சிக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி.

இலங்கையில் நடைபெற்று வரும் கொடுமைகளுக்கு நாம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. நமது தங்கை, அம்மாவிற்கு இது போல் ஏதாவது நேர்ந்தால் நாம் சும்மா இருப்போமா. நான் இந்த சமயத்தில் ஒரு உறுதி கூறுகிறேன்.

இப்படம் வெளிவந்தவுடன், புனிதவதி இலங்கையில் எங்கு இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து, தமிழகத்திற்கு கூட்டி கொண்டு வருவோம். சட்டம் அதை தடுத்தாலும், அதையும் மீறி சட்ட விரோதமாக கூட அழைத்து வருவோம்.

புனிதவதி இங்கு வந்து நமது அனைவரிடமும் நியாயம் கேட்பாள் " என்று இறுதியாக உணர்ச்சி உரை ஆற்றினார்.

சந்தோஷமாக ஆரம்பித்த 'உச்சிதனை முகர்ந்தால்' இசை வெளீயிட்டு விழா, உணர்ச்சி பிழம்பாக புகழேந்தி தங்கராஜ் பேச நிறைவுற்றது.

http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1034:q-q&catid=903:tamil-cinema-news&Itemid=63

Link to comment
Share on other sites

உச்சிதனை முகர்ந்தால்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி. கடந்த வெள்ளிக்கிழமை, சென்னை கிருஷ்ண கான சபாவில் அந்த நெகிழ்ச்சியான நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் புகழேந்தியைப் போன்ற ஒரு உணர்வுள்ள மனிதரை காணுவது அரிதிலும் அரிது.

தான் செய்யும் பணிகள் வெளியில் யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்து செய்யும் மனிதர். ஈழப் போர் இறுதிக் கட்டத்தில் இருந்த நேரத்தில் இந்த மனிதர் தனி நபராக செய்து, காரியங்கள் சொல்லி மாளாது.

எப்படியாவது இந்தப் போரை நிறுத்த முடியாதா ? ஒரு நாலு உயிரையாவது காப்பாற்றி விட மாட்டோமா என்று இந்த மனிதர் கண்ணீரோடு அல்லாடியது இவரது நெருங்கிய நண்பர்களுக்குத் தெரியும்.

ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் கூட, அந்த நெருக்கடியான நேரத்திலும் கூட, பணம் பண்ண வேண்டும் என்று புகழேந்தியை ஏமாற்றியவர்கள் உண்டு.

pugalenthi.jpg

அன்புத் தோழர் புகழேந்தி

ஆனால், அவர்கள் மீது தன் கோபத்தைக் கூட காட்டாமல் உதாசீனப் படுத்தி விட்டு தன் பணியை தொடர்ந்து செய்தவர் புகழேந்தி.

இறுதிப் போரின் போது, போரை நிறுத்து என்ற கோரிக்கையோடு சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களின் பின்னணியில், ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் தோழர் புகழேந்தி என்பது பலருக்குத் தெரியாது.

1.jpg

அந்தப் புகழேந்திதான் இந்தத் திரைப்படத்தை எடுத்திருக்கிறார்.

செய்தித்தாளில், புனிதவதி என்ற 13 வயது ஈழச் சிறுமிக்கு நேர்ந்த அவலத்தை படித்த உடன் புகழேந்தி மனதில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பே இந்தத் திரைப்படம்.

திரைப்படம் என்பது, பொழுதுபோக்கு ஊடகம் என்று ஒரு கருத்து இருக்கிறது. வணிக ரீதியாக வெற்றியைத் தருவதற்கு, பெரும்பாலான மக்களை சென்று அடைய வேண்டும் என்பதற்காக பொழுது போக்கு அம்சங்களை நிறைத்துத்தான் திரைப்படங்கள் எடுக்கப் பட்டு வருகின்றன.

அதே நேரத்தில், உலக சினிமா என்ற பிரிவில் இருக்கும் பல்வேறு நாடுகளின் திரைப்படங்களை காண்கையில், திரைப்படம் பொழுதுபோக்கு அல்ல. இறந்து போன உணர்வுகளை மீட்டு எடுக்கவும், மீண்டும் நம்மை மனிதர்களாக்கவும் இந்த ஊடகத்தைப் பயன்படுத்த முடியும் என்பதை நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் நிரூபித்திருக்கின்றன.

திரைப்படம் எடுத்து, வணிக ரீதியாக அதை வெற்றி பெறச் செய்து, அதன் மூலம் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதர் அல்ல புகழேந்தி.

அவர் எப்படிப்பட்ட திரைப்படத்தை எடுப்பார் ? அவர் எப்படிப்பட்ட மனிதரோ, அப்படிப்பட்ட திரைப்படத்தைத் தான் எடுப்பார். அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் தான் உச்சிதனை முகர்ந்து.

sm.jpg

இந்தத் திரைப்படத்தை எடுக்க முடிவு செய்த பிறகு, புனிதவதி பாத்திரத்திற்கு சரியான குழந்தை கிடைக்காமல் தாங்கள் பட்ட சிரமத்தையும், பிறகு ஒரு நாள் புனிதவதியே நேரில் வந்தது போல கிடைத்த குழந்தையையும், அந்தக் குழந்தைக்கு நீநிகா (நீர், நிலம் காற்று) என்று பெயர் வைத்ததையும் விரிவாக பேசினார் புகழேந்தி. இந்தத் திரைப்படத்துக்கு இசை அமைத்த இமான் கொடுத்த ஒத்துழைப்பை குறிப்பிட்ட புகழேந்தி, இசை அமைப்பதற்கான தொகையை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல், என்ன முடியுமோ, அதைக் கொடுங்கள் என்று கூறி விட்டு, இந்தத் திரைப்படத்துக்கு இழைத்து இழைத்து இசையமைத்திருப்பதை குறிப்பிட்டார்.

சத்யராஜ், சீமான் மற்றும் நாசர் ஆகியோர் இந்தத் திரைப்படத்துக்கு அளித்த ஒத்துழைப்பையும், ஒளிப்பதிவாளர் கண்ணன் மற்றும் அவர் உதவியாளர்கள் ஆகியோர் அளித்த உழைப்பைக் குறிப்பிட்டார்.

2.jpg

கவிஞர் காசி ஆனந்தன் பேசுகையில், உலகில் பல்வேறு நாடுகளில் நடந்த போராட்டங்களில் கலைஞர்களின் பங்கு குறிப்பிடத் தக்கதாக இருந்திருக்கிறது என்றார்.

பொதுவாக திரைப்படத்துக்கு பாடல் எழுதும் வழக்கம் இல்லாத காசி ஆனந்தன், புகழேந்தியின் இந்தத் திரைப்படமும் ஒரு போராட்டம் என்பதால் பாடல் எழுத ஒப்புக் கொண்டதாக குறிப்பிட்டார்.

திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களின் பங்கு போராட்டத்தில் எத்ததையது என்பதை தேசியத்தலைவர் பிரபாகரன் நன்கு உணர்ந்திருந்தார் என்பதைக் குறிப்பிட்ட காசி ஆனந்தன், பிரபாகரனோடு சபையர் தியேட்டரில் “Operation Day Break” என்ற திரைப்படத்தை பார்த்த நிகழ்வை நினைவு கூர்ந்தார்.

தன் சொந்த ஊரான மட்டக்களப்பு பற்றிய நினைவுகளில் ஆழ்ந்த காசி ஆனந்தன், அந்த ஊரின் உப்பேரியைப் பற்றிக் குறிப்பிட்டார்.

அந்த உப்பேரியில் படகில் செல்லும் போது, அந்த துடுப்பு நீரில் இருக்கையில், அந்தத் துடுப்பின் நுனியில் காதை வைத்தால் எழும் ஓசை, மீன் பாடுவது போன்று இருக்கும் எனவும், அதனாலேயே மட்டக் களப்புக்கு மீன் பாடும் தேனாடு என்ற பெயர் உண்டு என்று குறிப்பிட்டார்.

சமீபத்தில் ஈழத்தில் நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டார்.

ஒரு மர்ம நபர், இரவு நேரங்களில் முகாம்களுக்கு வந்து, பெண்களை கத்தியால் கீறி கொலை செய்வதைக் குறிப்பிட்ட அவர், உலகம் இலங்கையின் போர்க்குற்றத்தை மவுனத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாலும், இலங்கை முகாம்களுக்குள் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறிக்கொண்டிருந்தாலும், “நாங்கள் அழிந்து கொண்டிருக்கிறோம்” என்று சொல்லி முடித்தார்.

தோழர் சத்யராஜ் பேசுகையில், எடுத்த எடுப்பிலேயே, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்காக துடிக்கும் இதயங்களுக்கு வணக்கம் என்றார். கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பை புரிந்து கொண்ட சத்யராஜ், அப்போது, அவர்களுக்காக துடிக்காத இதயங்களுக்கு வணக்கம் இல்லையா என்றால், அவர்களுக்காக துடிக்காத இதயம் இதயமே இல்லை, பிறகு எதற்கு வணக்கம் என்றார். திரைப்படத்தில் நடிப்பது பணத்துக்காக என்றாலும், எப்போதாவது ஒரு முறைதான் மனத்திருப்திக்காக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்று குறிப்பிட்ட அவர், உச்சிதனை முகர்ந்து அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் என்று குறிப்பிட்டார்.

pugal.jpg

அதன் பிறகு இயக்குநர் ஆர்.சி.சக்தி, தோழர் மணியரசன், ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

நிகழ்ச்சியில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள “உச்சிதனை முகர்ந்தால்” மற்றும், “இருப்பாய் தமிழா நெருப்பாய்” என்ற பாடல்கள் மேடையில் பாடப்பட்டன.

இருப்பாய் தமிழா நெருப்பாய் என்ற பாடல், நடனக்கலைஞர்களால் மேடையில் காட்சியாக்கப் பட்டது.

இந்தப் படத்தின் இந்த இரண்டு பாடல்களையும் பற்றி குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும்.

உச்சிதனை முகர்ந்தால், உள்ளங்கால் வரை சிலிர்க்குதடி என்ற பாடல், ஒரு மிகச் சிறந்த மெலடி. இந்தப் பாடலின் வரிகளும், இருப்பாய் தமிழா நெருப்பாய் என்ற பாடலின் வரிகளையும் வடித்த காசி ஆனந்தன், பாடலைக் கேட்கையில் இப்பாடல் வரிகளின் சுவையால், தமிழ் என் தாய் மொழி என நினைத்து பெருமைப் பட வைக்கிறார்.

அந்தப் பாடலின் வரிகளோடு முடிப்பது பொருத்தமே…

இருப்பாய் தமிழா நெருப்பாய் நீ….

இழிவாய் கிடக்க செருப்பா நீ….

ஓங்கி ஓங்கி புயல் அடிக்கிறதே…

ஒரு தீபம் அணையும் முன்னே துடிக்கிதே…

துடித்துத் துடித்து உடல் சிதைகிறதே….

தினம் பிணங்கள் பிணங்களாய் புதைகிறதே….

என் பிள்ளையை மண்ணில் புதைப்பார்கள்…

அவள் தாய் மண்ணை அவர்கள் எங்கே புதைப்பார்கள்…….

http://savukku.net/home1/1178-2011-08-21-05-57-14.html

Link to comment
Share on other sites

...

திரைப்படம் என்பது, பொழுதுபோக்கு ஊடகம் என்று ஒரு கருத்து இருக்கிறது. வணிக ரீதியாக வெற்றியைத் தருவதற்கு, பெரும்பாலான மக்களை சென்று அடைய வேண்டும் என்பதற்காக பொழுது போக்கு அம்சங்களை நிறைத்துத்தான் திரைப்படங்கள் எடுக்கப் பட்டு வருகின்றன.

அதே நேரத்தில், உலக சினிமா என்ற பிரிவில் இருக்கும் பல்வேறு நாடுகளின் திரைப்படங்களை காண்கையில், திரைப்படம் பொழுதுபோக்கு அல்ல. இறந்து போன உணர்வுகளை மீட்டு எடுக்கவும், மீண்டும் நம்மை மனிதர்களாக்கவும் இந்த ஊடகத்தைப் பயன்படுத்த முடியும் என்பதை நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் நிரூபித்திருக்கின்றன.

திரைப்படம் எடுத்து, வணிக ரீதியாக அதை வெற்றி பெறச் செய்து, அதன் மூலம் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதர் அல்ல புகழேந்தி.

அவர் எப்படிப்பட்ட திரைப்படத்தை எடுப்பார் ? அவர் எப்படிப்பட்ட மனிதரோ, அப்படிப்பட்ட திரைப்படத்தைத் தான் எடுப்பார். அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் தான் உச்சிதனை முகர்ந்து.

...

http://savukku.net/h...1-05-57-14.html

எனக்கொரு சிறிய சந்தேகம்... 13 வயது ஈழத் தமிழ்ச் சிறுமியைப் பற்றிய திரைப்படம் "உச்சிதனை முகர்ந்தால்" உலகத்தமிழ் மக்களின் வரவேற்பைப் பெறும்...இதன் வருமானம் எல்லாம் யாருக்குப் போகிறது? அந்தச் சிறுமியைப் போன்று பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கா அல்லது அந்தச் சிறுமியின் வாழ்கையில் நடந்ததை திரைப்படமாக்கும் வியாபாரிகளுக்கா?

தயவு செய்து இதனை யாராவது தெளிவு படுத்துவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகையில் வந்த செய்தியைக் கேள்விப்பட்டே அதை படமாக்கியுள்ளனர் பின்னர் அந்த சிறுமி எழுதியதாக கடிதத்தையும் காட்டியுள்ளனர் :unsure:

Link to comment
Share on other sites

எனக்கொரு சிறிய சந்தேகம்... 13 வயது ஈழத் தமிழ்ச் சிறுமியைப் பற்றிய திரைப்படம் "உச்சிதனை முகர்ந்தால்" உலகத்தமிழ் மக்களின் வரவேற்பைப் பெறும்...இதன் வருமானம் எல்லாம் யாருக்குப் போகிறது? அந்தச் சிறுமியைப் போன்று பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கா அல்லது அந்தச் சிறுமியின் வாழ்கையில் நடந்ததை திரைப்படமாக்கும் வியாபாரிகளுக்கா?

தயவு செய்து இதனை யாராவது தெளிவு படுத்துவீர்களா?

இந்த முயற்சி ஒரு வியாபாரம், அதில் நட்டமும் வரலாம்.

Link to comment
Share on other sites

இந்த முயற்சி ஒரு வியாபாரம், அதில் நட்டமும் வரலாம்.

அப்படியானால் ஈழத்துச் சிறுமியின் வாழ்கையில் நடந்த அவலத்தைக் கூட வியாபாரிகள் விட்டு வைக்கவில்லை...

Link to comment
Share on other sites

அப்படியானால் ஈழத்துச் சிறுமியின் வாழ்கையில் நடந்த அவலத்தைக் கூட வியாபாரிகள் விட்டு வைக்கவில்லை...

ஈழத்து மக்களின் பிரச்சனைகள் தமிழக மக்கள் மத்தியில் பரந்தளவில் கொண்டுசெல்லப்பட 'சினிமா' ஒரு ஊடகம். அந்த வகையில் முதலீட்டாளர்கள் இலாபம் அடைந்தாலும் அதை அவர்கள் செய்வது பாரட்டப்படக்கூடியது. அத்துடன் அது ஒரு ஆவணமாகவும் வரலாற்றில் இடம்பெறுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக சினிமாத்துறையினர் எமது பேரட்டத்திற்காக கன காலமாக குரல் கொடுத்து போரடி வருகின்றார்கள், சிறுமிக்கு நடந்த அவலத்தை வெளி கொணர்ந்த இந்த படத்தை பார்ப்பதன் மூலம் அவர்களை வெற்றி அடையச் செய்து, மேன் மேலும் எங்கள் போராட்டதை தமிழகம் எங்கும் பரவச் செய்யலாம், எதிர்மறை கருத்துக்களை விட்டு, பல வழிகளில் எமது அவலங்களை பரவச் செய்வது நன்மையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13 வயது ஈழத் தமிழ்ச் சிறுமியைப் பற்றிய திரைப்படம் உச்சிதனை முகர்ந்தால்

13 நாளில் வெளிநாட்டில் ஓடவில்லை என்று பிலிம் பொட்டி திரும்பாம இருக்கணும் ... :( :(

Link to comment
Share on other sites

எனக்கொரு சிறிய சந்தேகம்... 13 வயது ஈழத் தமிழ்ச் சிறுமியைப் பற்றிய திரைப்படம் "உச்சிதனை முகர்ந்தால்" உலகத்தமிழ் மக்களின் வரவேற்பைப் பெறும்...இதன் வருமானம் எல்லாம் யாருக்குப் போகிறது? அந்தச் சிறுமியைப் போன்று பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கா அல்லது அந்தச் சிறுமியின் வாழ்கையில் நடந்ததை திரைப்படமாக்கும் வியாபாரிகளுக்கா?

தயவு செய்து இதனை யாராவது தெளிவு படுத்துவீர்களா?

பணம் போட்டு படம் எடுப்பவர்கள் லாபம் சம்பாதிக்கட்டுமே. அதில் கொஞ்சத்தை நல்ல விஷயத்துக்கும் பயன்படுத்துவார்கள் என்று நம்புவோம். இதில் முக்கியம் என்னவென்றால் இந்த மாதிரி சினிமாக்கள் மேலும் ஒரு விழிப்புணர்வை கொடுக்கும். இன்னொரு புனிதவதி காப்பாற்றப்பட்டாலே போதுமே!

பத்திரிகையில் வந்த செய்தியைக் கேள்விப்பட்டே அதை படமாக்கியுள்ளனர் பின்னர் அந்த சிறுமி எழுதியதாக கடிதத்தையும் காட்டியுள்ளனர் :unsure:

இது படத்துக்காக எழுதப்பட்டது. உண்மையான கடிதம் அல்ல.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

என்னடா பதில் சொல்லப் போறீங்க?

''ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழ் உயிர்களை சிங்கள வெறியர்கள் கொன்று குவித்தபோது, நாமெல்லாம் என்ன செய்தோம்? இங்குள்ள அரசின் மீதோ அல்லது ஓரிரு அரசியல்வாதிகள் மீதோ குற்றம் சுமத்திவிட்டுத் தப்பிக்க நினைத்தோம். அந்த இன அழிப்புத் துரோகத்தில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது. 'என் தங்கைக்கோ, அக்காவுக்கோ நடந்தால்தான் ரத்தம் கொதிக்கும் என்றால், அது என்னடா மானங் கெட்ட ரத்தம்’ என உயிர் ஆயுதம் ஏந்திய என் தோழன் முத்துக்குமார் கேட்ட கேள்விக்கு இன்று வரை பதில் இல்லையே! எம் மக்களின் வலியை, வேதனையை, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் உணரணும். இது பொழுதுபோக்கு வதற்கான படம் அல்ல. 'ச்சீ... நானும்தானே குற்றம் பண்ணியிருக்கேன்’ என குற்றவுணர்வில் குமுறி அழுதுத் தீர்ப்பதற்கான படம்!'' - வேதனையும் கண்ணீருமாகப் பேசுகிறார் புகழேந்தி தங்கராஜ். 'காற்றுக்கென்ன வேலி’ படத்தின் மூலம் ஈழத்தின் வீரத்தைப் பதிவு செய்தவர், ஒரு சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமை மூலம் ஈழ மக்களின் துயரை 'உச்சிதனை முகர்ந்தால்’ படம் மூலம் காட்சிப்படுத்த வருகிறார்.

p34.jpg''கதை என்ன?''

''இது நிஜம் கலந்த கதை. 2009-ம் ஆண்டின் பிற்பகுதியில் ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்த சமயம் மட்டக்களப்பில் புகுந்த சிங்கள ராணுவம், அங்கிருந்த ஆண்களை மட்டும் பிரித்து ஒரு கோயிலுக்குள் அடைத்துவிட்டு, சிறுமிகள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோரை இருட்டு விலகுவதற்குள் நாசம் செய்துவிட்டு வெளியேறியது. இதை மட்டக்களப்பு மருத்துவர் ஒருவர், ராணுவத்தின் எதிர்ப்பை மீறி, 'கேங் ரேப்’ எனப் பதிவு செய்தார். அதுபற்றி படித்தபோது, 'ஏன் இந்த உலகத்தில் இருக்கிறோம்?’ என்ற எரிச்சலும் ஆற்றாமையும் பொங்கியது. அங்கு நடந்த கொடுமையின் வீரியத்தை உணர ஒய்.புனிதவதி என்ற 13 வயதுச் சிறுமியின் கதை ஒன்றே போதும். அவளை என் நாயகியாக வைத்து ஒட்டுமொத்த ஈழ மக்களின் வலியைச் சொல்லி இருக்கிறேன்.

எல்லாக் குழந்தைகளும் இறைவனின் ஆசீர்வாதத்துடன் பிறக்கின்றன என்பார் கள். ஆனால், புனிதவதியை மட்டும் எல்லா சாத்தான்களும் சபித்திருக்கின்றன. தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்கள் எடுத்த அந்தக் குழந்தைக்குத் தன் எதிர்காலத்தைப்பற்றி எவ்வளவோ கனவுகள் இருந்திருக்கும். ஆனால், ஒற்றை இரவில் அது அனைத்தும் நசுக்கப்பட்டு சிதைக்கப்பட்டாள். போராளிகளின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த ஈழத்தின் அமைதி, அவளின் மகிழ்ச்சியான தருணங் கள், அவள் பழகிய போராளிகள் எனப் பல விஷயங்களைக் கதையோடு சேர்த்து இருக்கிறோம்!''

''இப்படி ஒரு படத்தில் நடிக்க பிரபல நடிகர் - நடிகைகள் தயங்கி இருப்பார்களே?''

''பேராசிரியர் நடேசனாக நண்பர் சத்யராஜ். அவருடைய மனைவி சங்கீதா. திருமணமாகி 20 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருப்பவர்களிடம் புனிதவதி வந்து தஞ்சம் அடைகிறாள். தங்கள் மகளாகவே நினைத்து அவளை வளர்க்கிறார்கள். மருத்துவராக நாசர். தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு அறிந்த சி.என்.டி. என்கிற சி.என்.தெய்வநாயகமாக இவரை உலவ விட்டு இருக்கிறோம். 'சம்பளம் வேண்டாம். இந்தப் படத்தில் நடிக்க இதுவே நிபந்தனை.’ என்றார். உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் துடிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆண்டனியாக என் தோழன் சீமான். இவர்களைத் தவிர, ஒரு நாயும் கதாபாத்திரமாக நடிக்க வேண்டிய அவசியம். புனிதாவின் உணர்வுகளை உள் வாங்கிக்கொண்டு அவள் அழுதால், அதுவும் அழுது... அவள் மகிழ்ந்தால், அதுவும் மகிழ்ந்து எனப் படம் முழுக்க உயிர்ப்புடன் பயணிக்கும் ஜீவன். ஒரு நாய்க்கு இருக்கும் உணர்ச்சிகூட தமிழனுக்கு இல்லையேனு படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் நினைக்கணும்!''

p34a.jpg

'' 'புனிதவதி’யாக நடிப்பது யார்?''

''நடிக்க விருப்பம் தெரிவித்து வந்த ஐந்தாறு பேரிடம் கேரக்டர்பற்றிச் சொன்னதும் உடனே நடிக்க மறுத்துவிட்டனர். 'என்ன செய்வது’ என்று எரிச்சலில் இருந்த சமயம் தான், இவள் வந்தாள். முகத்தில் அவ்வளவு பாவனை. 'இவள்தான் என் புனிதா’ என்று உடனே முடிவு செய்தேன். 'தாய்க்குப் பின் தாரம்’ படத்துக்கு வசனம் எழுதின சா.அய்யாபிள்ளையின் பேத்தி இவள். 'நீர், நிலம், காற்று’ என்பதைக் குறிக்கும் வகையில் 'நீநிகா’ என அவளுக்குப் பெயர்வைத்தோம். 'மிகப் பொருத்தமான பெயர்’ என்றார் கவிஞர் காசி ஆனந்தன்!''

p34b.jpg''கதைக் கரு வலுவாக இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாகவும் படம் பலமாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து இருக்கிறீர்களா?''

''அதில் நாங்கள் எந்தச் சமரசமும் செய்துகொள்ளவில்லை. கதையைக் கேட்டதும் இசையமைப்பாளர் இமான் அழுதேவிட்டார். 'உங்க மார்க்கெட் தெரியும். உங்க சம்பளத்தை நான் நிர்ணயிக்க முடியாது. எவ்வளவுனு சொல்லுங்க... தந்துடுறேன்’னு சொன்னேன். 'எதுவுமே கொடுக்கலைன்னாலும் இந்தப் படத்தை நான் பண்றேன்’னு சொன்னார். 'உச்சிதனை முகர்ந்தால் உள்ளங்கால் வரை சிலிர்க்குதடி’ன்னு எழுதத் தொடங்கிய அய்யா காசி ஆனந்தன்,

'மட்டு நகர் பாட்டும் மத்தாளம் கூத்தும்

மனசு மறக்கலையே

ஊரில் நான் வளர்த்த கிளிப்பிள்ளை

என் மனம்விட்டுப் பறக்கலையே

பனிச்சங்கேணி நண்டு வாங்கி வந்து

கறியாக்கிக் கடிக்கணும்

பதுங்குகுழிக்குள் நிலவொளியில்

நான் புத்தகம் படிக்கணும்’னு எழுத எழுத... எங்களால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியலை. இழைத்து இழைத்து தமிழருவி மணியன் அய்யா எழுதிய வசனங்கள் ஒவ்வொண்ணும் அம்பு மாதிரி தைக்கும். 'நீங்க ஏங்க்கா அழுவுறீங்க. எனக்கு அன்னிக்கு மட்டும்தாங்க்கா வலிச்சது’னு புனிதவதி வசனம் பேசும்போது, சுத்தி நின்ன எல்லாரும் நடிக்க மறந்து அழுதுட்டாங்க!''

''இப்போ புனிதவதி எங்கே இருக்காங்க?''

''புனிதவதியை என் சொந்த மகளாகத்தான் நான் நினைக்கிறேன். அந்தப் பிள்ளை 'எங்கே எங்கே’னு யூனிட் முழுக்க விசாரிச்சுட்டே இருந்தாங்க. அவளை அழைத்து வராமலா இருப்போம்? இந்தப் படத்தின் நோக்கமே புனிதவதியைத் தமிழகத்துக்கு அழைத்து வருவதாகத்தான் இருக்கும். புனிதாவை இந்த யூனிட்டே தத்துஎடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு கனவு. ஒரு குழந்தையைத் தத்து எடுக்கலாம். ஆனால், இவளைப்போல உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளை என்ன செய்வது? புனிதாவை அழைத்து வருவோம். 'இவளுக்கு இழைக்கப்பட்ட அநீதியில் உங்களுக்கும் பங்கு இருக்கிறதடா’ என இங்கு உள்ள எல்லோரிடமும் அப்போது கேட்போம்.அதற்கு என்னடா பதில் சொல்லப்போகிறீர்கள்?''- உகுக்கும் கண்ணீருக்கு இடையே உரத்து ஒலிக்கிறது புகழேந்தி தங்கராஜின் குரல்!

Vikatan.com

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

உச்சிதனை முகர்ந்தால் உலகத் தரத்திற்கு ஒப்பான படம் – தமிழகத் தலைவர்கள்

  • Thursday, November 17, 2011, 11:29

நேற்று சென்னையில் நடைபெற்ற உச்சிதனை முகர்ந்தால் சிறப்பு காட்சியில் கலந்து கொண்ட தமிழகத் தலைவர்கள் இந்தத்திரைப்படம் உலகத் தரத்திற்கு ஒப்பான படம் மட்டும் அல்ல, யூதப் படுகொலைக்கு பிறகு வெளியான படம் படங்கள் போல தமிழினப் படுகொலைக்கு பிறகு வெளியாக இருக்கும் ஆயிரக்கணக்கான படங்களுக்கு இத்திரைப்படம் முன்னோடி என்று புகழாரம் சூட்டினர்.

திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் வைகோ, சீமான், சி. மகேந்திரன், தமிழருவி மணியன், பெ.மணியரசன், திருச்சி வேலுச்சாமி, பேராசிரியை சரசுவதி, புலமை பித்தன், மல்லை சத்யா, தீரன் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

படம் முடிந்து வெளியே வந்து பத்திரிகைகளுக்கு செவ்வி கொடுத்தப் பொழுது வைகோ அவர்கள் கூறியது, ” இத்திரைப்படம் என்னுடைய நூறு மேடைகளின் தாக்கத்தை இரண்டரை மணி நேரத்தில் கொடுக்கிறது. நான் வாழ் நாளில் பார்த்த உலகத் திரைப்படங்களை விட இத்திரைப்படம் என்னில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.இத்திரைப்படமும் திரைப்படக் குழுவும் எண்ணற்ற விருதுகளை பெறும். ஏன் நிச்சயமாக ஆஸ்கர் விருதுகளைக் கூட பெறும். தமிழின அழிப்பின் தாக்கத்தை இப்படம் திரைப்பட சாயல் இல்லாமல் அப்படியே காட்டியிருக்கிறது. திரு நங்கைகளின் மனிதாபி மானத்தையும் அவர்கள் மீதான மதிப்பையும் இப்படத்தில் அழகாக காட்டப்பட்டு இருக்கிறது. உணர்ச்சி கவிஞரின் வரிகள் உச்சிதனை முகர்ந்தால் பாடலில் மனதில் மென்மையும் இருப்பாய் தமிழா நெருப்பாய் பாடலில் வீர உணர்வையும் கொடுக்கிறது.” என்றார்.

சீமான் அவர்கள், ” எம் இனத்தில் பிறந்ததற்காகவே ஈழத்தில் தமிழர்கள் எண்ணற்ற துயரத்தையும் அழிவையும் சந்தித்தார்கள். அதனை காட்சி ஊடகத்தில் பதிவு செய்து மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று என் அண்ணன் புகழேந்தி தங்கராஜ் எடுத்த முயற்சியில் நானும் சிறு பங்காற்றியிருக்கிறேன் என்பது என் வாழ் நாளில் சிறு நிம்மதியைத் தருகிறது. இத்திரைப்படத்தை உலகத் தமிழர்களுக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ளும் ஜெமினி நிறுவனத்தினருக்கு என் உளப்பூர்வ நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

சி.மகேந்திரன் அவர்கள்” இத்திரைப்படம் ஒவ்வொரு தமிழன் இடத்திலும் ஒவ்வொரு மனித இடத்திலும் கொண்டு செல்லப்பட வேண்டும். அதற்கு நாங்கள் அனைவரும் துணை நிற்போம்” என்றார்.

இத்திரைப்படம் வருகிற 25 ஆம் நாள் உலகமெங்கும் திரைக்கு வர இருக்கிறது.

http://www.tamilthai.com/?p=30461

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியாபார ரீதியென்றாலும் இப்படியான படங்கள் எடுக்கிறார்களே என்று சந்தோசப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

‘உச்சிதனை முகர்ந்தால்’ வைகோ-வை விம்மி அழவைத்தது- தமிருவி மணியன்.

தமிழ் சினிமாவுக்கென்று அன்றுதொட்டு இன்றுவரை தவிர்க்க முடியாத சில அடிப்படை அம்சங்கள் உண்டு. எதையும் சாதிக்கவல்ல ஒரு நாயகன்: அவனையே நினைத்து அவனுக்காகவே நெகிழ்ந்து அவனுள் கலந்து கரைந்துவிட உருகித் தவிக்கும் ஒரு நாயகி: இயற்கைக்கு எந்த வகையிலும் பொருந்தாமல் கடற்கரையிலும் பூந்தோட்டத்திலும் பரபரப்பான வீதிகளிலும் கட்டியணைத்துக் காம விகாரத்தை வார்த்தைகளிலும் அங்க அசைவுகளிலும் வெளிப்படுத்தும் இரண்டு காதல் காட்சிகள்: இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் பேசும் நகைச்சுவை நாயகர்களின் சகிக்கமுடியாத சேட்டைகள்: இருபது பேரை ஒரேயொரு தனி மனிதன் பறந்து பறந்து தாக்கும் அசகாய சூரத்தனம் மிகுந்த ஆவேசமான குத்துச்சண்டைகள்: ஒரு முழந்துணியுடன் மன்மதச் சரக்கை மலினமாய் கடைபரப்பும் இரவு ராணிகளின் குத்தாட்டங்கள் இல்லாத தமிழ் சினிமா அபூர்வம்: இவை எல்லாவற்றையும் திட்டமிட்டு ஒட்டுமொத்தமாக நிராகரித்து இனம் சார்ந்த உணர்வையும் மனிதம் சார்ந்த வலியையும் மையமாக வைத்துக் கலாபூர்வமாக வழங்கப்பட்டிருக்கும் ஒரு தனிக்காவியம் ’உச்சிதனை முகர்ந்தால்’.

முற்றிலும் வணிகமயமாகிவிட்ட திரைப்படவுலகில் சமூக அவலங்களைச் சமரசமின்றி வெளிப்படுத்தும் ஒரு படத்தைக் கலைநுணுக்கம் கலையாமல் காண்பவர் உள்ளங்களை உலுக்கியெடுத்து விழிகளில் கண்ணீர் வழிய இருதயத்தில் ரத்தம் சூடேற இனியும் மௌனப் பார்வையாளர்களாக இருந்துவிடாமல் இன நலனக்குத் தன்னளவில் உருப்படியாக ஏதாவது ஒருவகையில் பங்களிப்பைத் தந்தாகவேண்டும் என்ற உணர்வை உந்தும் விதத்தில் உருவாக்கியிருக்கும் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்: மிகையான நடிப்புக்கு இடமளிக்காமல் வெகு இயல்பாக ஒவ்வொரு பாத்திரத்தின் தன்மை உணர்ந்து சின்னச் சின்ன அசைவுகளிலும் தங்கள் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தயிருக்கும் கலைஞர்கள் சத்தியராஜ் சீமான் சங்கீதா லட்சுமி நாசர் உச்சிதனை முகர்ந்து நம் வாழ்த்துக்களை வெளிப்படுத்தத் தூண்டும் நீநிகா: இளந் தென்றலாய் வீசியும் எரிமலையாய் பொங்கிப் புரண்டும் பாடல்களில் ரசவாதம் காட்டியிருக்கும் இசைய்மைப்பாளர் இமான: ஒவ்வொரு வார்த்தையிலும் ஈழத் தமிழரின் இதயவலியை இறக்கிவைத்திருக்கும் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோரின் கூட்டுத் தவத்தில் உருவானதுதான் இந்த ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைக் காவியம். செப்புக்காசும் வாங்கமால் இந்த படத்திற்கு வசனம் எழுத நேர்ந்ததில் என் பேனா எப்போதும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

புனிதவதி என்ற பதிமூன்று வயது சிறுமி, உடலும் மனமும் சிங்கள வெறியர்களால் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் அவளுடைய வாழ்வு எப்படி சீர்குலைந்தது. அவளுடைய இனிமை ததும்பிய குடும்ப உறவுகள் எப்படி நிலைகுலைந்து நிர்மூலமாக்கப்பட்டன என்பதை ஒரு புள்ளியாக வைத்து உலகம் முழுவதுமுள்ள மனித குலத்தின் மனச்சான்றை உசுப்பிவிடும் வகையில் உறுக்கமாகவும் அடிமனதில் உரைந்துகிடக்கும் ஒவ்வொருவருடைய மனிதநேயத்தை மலரச் செய்வதாகவும் கலைநயத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டு ‘உச்சிதனை முகர்ந்தால்’ உருவாக்கம் கொண்டிருக்கிறது.

உலகத்தின் பொதுமொழி மனிதநேயம். இந்த மொழியை அறிந்தவர்கள் அனைவரும் தவறாமல் கண்டு கனத்த இதயத்துடன் கண்ணீர் சிந்தியபடி திரையரங்குகளில் இருந்து வெளியே வருவார்கள் என்பது தின்னம்.இது ஒரு சாதாரணத் திரைப்படம் அல்ல.மனிதம் மறந்த மக்களுக்கும் இன உறவு துறந்த தமிழர்களுக்கும் சினிமா என்னும் சக்திமிக்க ஊடகத்தின் மூலம் நடத்தப்பட்டிருக்கும் ஓர் உயர்ந்த பாடம்.

எந்த நிலையிலும் திரையுலக தாழ்வாரத்தில் அடியெடுத்து வைக்கலாகாது என்று நெஞ்சுக்குள் நேர்ந்துகொண்டவன் நான். ஓர் உயர்ந்த இன உணர்வாளரும் தன்னலமற்ற போராளியுமாகிய புகழேந்தி தங்கராஜ் நம் இனத்துக்காக நடத்த இருக்கும் கலைவடிவம் சார்ந்த கூட்டுத்தளத்தில் ‘உங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்திய போதும் நான் பேனா எடுக்க தயங்கினேன். ஆனால் என் இல்லத்தில் அமர்ந்து பல்யபருவம்தொட்டு என்னுடன் நெருக்கமாக நட்புறவுகொண்ட புகழேந்தி கதைசொல்லத் தொடங்கியதும் என் கண்களில் கண்ணீர் வடிந்தது.என் உள்ளத்தில் அலையடித்த உணர்வுகள் அனைத்தையும் பேனா முனையில் பிரசவித்துவிட வேண்டும் என்ற கனல் உடல் முவதும் கனன்றது. அதனுடைய வெளிப்பாடுதான் இந்த கலைக் காவியத்திற்கு என் பேனா வரைந்து கொடுத்திருக்கும் வசன ஓவியங்கள்.

சீற்றம் மிகுந்த சில வரிகள் தனிக்கை குழுவால் சிதைக்கப்பட்டு இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது என்னளவில் நிறைவை நான் அடைந்திருக்கின்றேன். என் பக்கத்தில் அமர்ந்து தனிக்காட்சியைக் கண்ட வைகோ பல இடங்களில் விம்மியதும் விழிநீர் சிந்தியதும் என் கரங்களைக் பற்றியபடி “உங்கள் ஒவ்வொரு வசனமும் இயல்பாய் காட்சிகளுக்கு ஏற்ப எளிமையாய் கலைஞரைப்போல் எதுகை மோனைக்கு முக்கியத்துவம் தறாமல் பாத்திரங்களின் பன்பறிந்து துள்ளியமாய் வெளிப்பட்டு இருப்பது இந்த படத்தின் பெரியபலம்” என்று பரவசத்தோடு சொல்லி மகிழ்ந்தது இப்போதும் என் நெஞ்சில் பசுமையாய் நிழலாடுகிறது.

ஒவ்வொரு தமிழனும் குறிப்பாக மென்மையான உணர்வு படைத்த ஒவ்வொரு பெண்ணும் பிள்ளைகளுடன் திரையரங்கம் சென்று பார்க்கவேண்டிய படம் ‘உச்சிதனை முகர்ந்தால்’. இதுபோன்ற நான்கு படங்கள் தொடர்ந்து வந்தால் தமிழீழம் உருவாவதற்கு தார்மீக துணையாக தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கும் என்பதில் இருகருத்துக்கு இடமில்லை.

அன்புடன்

தமிழருவி மணியன்.

சென்னை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.