Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    23958
    Posts
  2. தமிழினி

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    6
    Points
    3060
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    88882
    Posts
  4. theeya

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    612
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/24/20 in all areas

  1. சிங்களவனுடன் வாழலாம் என்பது மேற் கூறியவற்றை மறுத்து வாழலாம் என்பது பொருந்தாது . பல்வேறு நாடுகளில் பல்வேறு இனங்களுடன் நாம் புலம்பெயர்ந்து வாழ்கின்றோம். ஆனால் தேசத்தை முற்றாக மறந்து விட்டு வாழ்கின்றோம் என்று கூறினால் அதுவும் பொருந்தாது. தமிழர்கள் எந்த வகையில் ஒடுக்குமுறைக்கு உட்படுகின்றார்கள் என்பதைப் பொறுத்துதான் அந்த ஒடுக்கு முறைக்கு எதிரான எமது வீரியமும் வெளிப்படும். முன்பு சிங்களவர்களால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தப்பி ஓடவேண்டியிருந்தது. திருப்பி அடிக்கவேண்டியிருந்தது. வேறு நாடுகளில் குடியேறுதல் என்ற புதிய ஒரு வளியும் பிறந்தது. (நாங்கள்) இப்போது "நீ தமிழன் " என்று பொதுமைப் படுத்தி கொல்வதில்லை. அவ்வாறு பொதுமைப் படுத்தி ஒடுக்கினால் அதற்கு ஏற்ப தமிழரும் அதை எதிர்கொள்ள முற்படுவர்கள் என்பதை அறிந்து பகுதி பகுதியாக பிரித்து நுட்பமாக ஒடுக்குமுறையை செய்கின்றார்கள். வாழ்வது, தப்பி பிழைப்பது என்ற நிலையில், சிங்களவனை அனுசரித்து வாழ்வது தாயக மக்கள். நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேறி வாழ்வது நாங்கள். இந்த இரு தரப்பையும் கடந்து எமக்கென்று ஒரு நாட்டில் சுதந்திரமாக வாழ்வது என்ற மூன்றாவது நிலையில் தான் தமிழ்த்தேசீயம் வருகின்றது. இந்த மூன்றாவது தரப்பில் தற்போது ஒருவரும் இல்லை. இருக்கிற இரு தரப்பும் தான் இந்த மூன்றாவது தரப்புக்கு நகரவேண்டும். ஏன் நகரவேண்டும் ? ஆசை விருப்பங்களை கடந்து மூன்றாம் நிலைக்கு நகரவேண்டிய தேவை என்ன ? எனக்கு புலம்பெயர் நாட்டில் எல்லாம் ஒகே யா போகுது. தாயகத்தில இருக்கிற என்னுடைய உறவுகள் போராட்ட காலத்தில் கமம் செய்ய படு சிரமம் பட்டது போலன்றி இப்போது இலகுவாக கமம் செய்து வருமானம் ஈட்டக் கூடியவாறு உள்ளது. உரம் மருந்து மின்சாரம் பிரச்சனையில்லை. மூன்றாம் நிலைக்கு போகவேண்டிய தேவையின் அழுத்தம் இல்லை. தேவை தான் பிரதான உந்து சக்தி. கஸ்டம் வந்தால் கடவுளை அதிகம் நாடுவதுபோல தேவை ஏற்படில்தான் தேசீயமும். தேசீயம், இனம், சுதந்திரம் என்ற பொது உணர்வுத் தன்மைகளுக்கு உள்ளே இருப்பது " யாரும் எம்மை கொன்று விடக் கூடாது, நாம் இருந்த இடத்தை வீட்டை காணி நிலங்களை பறித்துவிடக் கூடாது. பட்டிணியால் சாகக் கூடாது".இப்படியான பிரச்சனைகள் தான் உள்ளே இருப்பது. வாழ்க்கைப் போரட்டம் தான் முதலில் பின்னரே எமது அடயாளங்கள் " இப்போது இந்த பொதுத் தன்மைகளுக்கு உள்ளே உள்ள பிரச்சனைகளுக்குள் சிங்கள ஒடுக்கு முறை றால் போட்டு சுறா பிடிக்கும் பொறிமுறையோடு வந்துவிட்டது. இந்த சிக்கலான நிலையை நாம் வெளியில் இருந்து பார்க்கும் போது சிங்களவருடன் சேர்ந்து வாழ விரும்புவது போல தோற்றமளிக்கலாம். கவனிக்காமல் விட்டால் காலப்போக்கில் இதுவே வாழ்வாகிவிடும் என்பதும் உண்மையே. தேவை என்ற அடிப்படையில் காணாமல்போகடிக்கப்பட்ட உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்க போராட வேண்டிய தேவை இருக்கின்றது. அநியாயமாக கொல்லப்பட்டவர்கள் அவர்களுக்கான நீதியை கேட்கும் தேவை இருக்கின்றது. சொந்த நிலங்களுக்கு திரும்வேண்டிய தேவை இருக்கின்றது. சிறையில் இருக்கும் கைதிகள் விடுபடவேண்டிய தேவை இருக்கின்றது. இப்டி ஏராளமான தேவைகள் இருக்கின்றது. ஊரில் இழவு விழுந்தால் எட்டு செலவு வரைக்கும் அருகில் உள்ளவர்கள் சாப்பாடு கொடுப்பார்கள், இழவு விழுந்த வீட்டை மீட்பது எமது குணத்தோடு சேர்ந்து இருக்கின்றது. அறம சார்ந்த அந்த பண்பு போல் தேவைகள் உள்ளவர்களோடு இந்த இரு தரப்பும் இணைந்துகொள்ளவேணும். அதுவே அறம். அறம் சார்ந்த ஒரு வாழ்வுக்கு நாம் மாறும்போது தேசீயம் புத்துயிர் பெறும். 40 ஆயிரத்துக்கும் மேலாக மடிந்த போராளிகள் முரண்பாடுகளால் நிறைந்த இந்த இனத்தில் அவற்றை எல்லாம் கடந்த அறத்தின் அடயாளம் தான். சிறந்த ஒரு அணுகுமுறையாக இது இருக்கும். இவ்வாறான முனைகளை இனம்கண்டு ஆதரவளிப்பது, தொடர்புளை பரந்து பட்டு ஏற்படுத்துவதுதான் இப்போது முட்டு சந்தில் நிற்பதுபோல் நிற்கும் நிலைக்கு புதிய வளிகள் ஏற்படுதும். சரியான தலமை இல்லை என்று புலம்புவதோ எதோ ஒரு காலத்தில் தலமை உருவாகும் என்று காத்திருப்பதோ அர்த்தமற்றது. இவ்வாறான முனைகளுக்கான ஆதரவுதான் வளிநடத்தும் தலமைகள் உருவாகும் சூழலை ஏற்படுத்தும்.
  2. 2016-ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் குறைவான இசைக்கருவிகளைக் கொண்டு எஸ்.பி.பி பாடிய பாடல் இது..! 🌺
  3. அண்மையில் ஒரு திரியில் நிர்மலனுக்கு பதிலளிக்கும் போது தான் உணர்ந்தேன். தாயக அரசியலை தக்கவைக்க புலம்பெயர் அறிவுஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள், பொருளாதார வளம் கொண்ட தேசியவாதிகள், இராஜதந்திரிகள் கொண்ட அரசியல் சார்பற்ற ஒரு தமிழர் அமைப்பு உருவாக்கப்பட்டு, மேற்குலகம், இந்தியா, சீனா, ரஷ்யா, இன்னும் தமிழர் பிரச்சனை தெளிவுறாத நாடுகளில் கிளைகள் திறக்கப்பட்டு, சட்ட பூர்வமாக எங்கள் நிலைப்பாடு, இழைக்கப்பட்ட அநீதி, வரலாறு, தேசியம் அந்த நாட்டு ராஜதந்திரிகளுக்கு கடத்தப்படவேண்டும். விலைபோகாத ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, தாயக அரசியல்வாதிகள் உள்ளடங்கலாக ஒரு நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு ஒரு கட்டமைக்கப்பட்ட அரசியல் நகர்வுகள் மேற்கொள்ளவேண்டும். நீண்ட கால நோக்கில் திட்டமிடப்பட்டு நகர்வேண்டும். இதுவே புலம்பெயர் மக்களால் தாயகத்துக்கு பொருளாதர உதவி தவிர்த்து செய்யக்கூடிய அரசியல் உதவி. சுருங்ககூறின் 1000 அன்ரன் பாலசிங்கள் 100 நாட்டில் தேவை. 🤭
  4. தாயக மக்களின் தேர்தல் தெரிவுகளுக்கு காரணங்கள் இருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொண்டால் யாரை அவர்கள் தேர்ந்திருக்கிறார்கள் என்றும் புரிந்து விடும்! ஈழத்தில் தமிழ் தேசியம் என்பது, நிலம், மொழி, அபிவிருத்தி என்ற மூன்று முனைகளில் முன்னேற வேண்டும். இந்த மூன்று முனைகளிலும் வேலை செய்யக் கூடிய தமிழர்கள் எந்த அணியில் இருந்தாலும் ஆதரவு மறைமுகமாவது கொடுக்கப் பட வேண்டும்! ஒரு அமைப்பின் legacy குறித்துக் கவலைப் பட வேண்டிய காலம் தாயகத்தில் மலையேறி விட்டது எனவே நினைக்கிறேன்!
  5. எமது விடுதலைக்கான அகிம்சை வழியிலான போரட்டங்களும், அரசியல் ரீதியிலான முன்னெடுப்புக்களும், கட்டாயப்படுத்தி முடித்துவைக்கப்பட்ட ஆயுத ரீதியிலான போராட்டமும் இதுவரையில் எமக்கு காத்திரமான விடுதலையினைப் பெற்றுத்தரவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னர் உருண்டோடிய 72 வருடங்களில் நாம் இதுவரை எதனையும் அடையவில்லை, மாறாக இருந்தவற்றையும் இழந்துவருகிறோம். 1977 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட தமிழ்த்தேசியத்தின் கோரிக்கைகளைப் போலவோ அல்லது அதனைக் காட்டிலும் வீரியமான கோரிக்கைகளை முன்வைக்கக் கூடிய மனோநிலையில் தமிழர்களோ அல்லது அதற்கான சூழ்நிலையோ இருப்பதாகத் தெரிகிறதா? 77 ஆம் ஆண்டிற்குப்பின்னரான சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தாயக விடுதலைப் போராட்ட எழுச்சியினைப் போன்று இன்னொரு எழுச்சியினை உருவாக்குதல் இப்போதைக்குச் சாத்தியமா? கடந்த 72 ஆண்டுகளில் சிறுகச் சிறுக முடுக்கிவிடப்பட்ட எமது விடுதலைக்கான அரசியலை, மீண்டும் செய்வதென்பது இன்னும் எத்தனை தசாப்த்தங்களை தனக்குள் இழுத்துவிடப்போகிறது? நியாயமான தீர்வொன்றிற்காக தமிழினம் இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்கப்போகின்றது? தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் அரசியல்மயப்படுத்தல்களும், தேசிய ரீதியிலான முன்னெடுப்புக்களும் நிச்சயமாக ஒரு தீர்வினை கொண்டுவரும் என்றதற்கும் என்ன நம்பிக்கை இருக்கிறது? எமது இனத்தையும், மொழியினையும், கலாசாரத் தொன்மையினையும், தாயகத்தினையும் முற்றாகக் கபளீகரம்செய்யக் காத்திருக்கும் சிங்களப் பேரினவாதத்திடமிருந்து காப்பதற்கு எமக்கான பலம் ஒன்று அவசியம். அது இன்றிருக்கும் அரசியல் செயற்பாடுகளாலோ அல்லது சமரசம் செய்யும் முயற்சிகளாலோ நிச்சயம் செய்ய முடியாதது. அப்படிப்பட்ட பலம் ஒன்றினை எப்படி உருவாக்கலாம் என்பதுபற்றியும் தமிழினம் சிந்திப்பது காலத்தின் கட்டாயம்.
  6. இங்கு சிலர்... மற்றவர்களுக்கு, வயித்தெரிச்சல் வரப் பண்ணுவதற்காகவே... சில பதிவுகளை போடுவார்கள். யாழ். களத்திலை, இப்பிடி கன ஆட்களை பார்த்திறமப்பு. 😂
  7. எப்போதும் தோசை இட்லி புட்டு இடியப்பம் என்று ஒரே போர்......ஒரு மாற்றத்துக்காக இதுபோல் செய்து சாப்பிடலாம் .....! 👍
  8. மதுரை மீனாட்சி கோயிலில் நடராஜர் கை கால் வீசி நடனமாட அடிகிடி பட்டுடப்போகுது என்று ஒதுங்கி நிற்கும் அம்பாள் .......! 🌹
  9. அது ஜோடி இல்லை வன்னியர் அண்ணா சகோதர்கள் அல்லது நெருங்கிய உறவினர் நண்பர்கள் சுவிஸில் இப்படி மூன்று முறை முத்தமிடுவது சுவிஸ் கலாச்சாரம் ஜெர்மனி பிரான்சில் இரண்டு முறை என்று நினைக்கிறன். அங்கு வாழ்ந்து வருவதால் அவர்களுக்கும் அது வந்திருக்கலாம். இங்கு அமெரிக்காவில் இந்த நடைமுறை இல்லை ஆனால் நெருங்கிய நண்பர்கள் என்றால் கட்டிப்பிடிப்பது உண்டு சுவிஸ் பிரான்ஸ் போகும்போது எனக்கும் இது கொஞ்சம் சங்கடமாக இருக்கும் அனால் நல்ல விடயம் ஒரு நம்பிக்கையான உறவு என்ற எண்ணம் தோன்றிவிடும்
  10. இன்று, சிலுக்கு ஸ்மிதா... நினைவு தினம்.
  11. ஆண்களே உங்கள் கவனத்திற்கு.! மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷார்.... ஒரு கணவனும் மனைவியும் லிப்ட்ல 10 வது மாடியிலிருந்து கீழே வந்தது கொண்டிருக்கிறார்கள். 5வது மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட் ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க, அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள்ளு விடுகிறான். சிறிது நேரத்துக்குப்பின் அவள் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு "இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள். இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம். லிப்ட் ல இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கி வாயடைத்தான். வீட்டிற்கு நடக்கிறார்கள். மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு. விடுங்க. ஏதாவது பேசிட்டு வாங்க. கணவன் : இல்லடி, நான் லிப்ட் ல...வந்து ... மனைவி : அட, அத தான் விடுங்க னு சொன்னேன். நீங்க ஜொள்ளு விடுறத பார்த்து பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன். கணவன் : மீண்டும் வாயடைத்தான்
  12. I இந்த கேள்விகளை நான் இங்கே முன் வைத்தமைக்கு ஒரு காரணம் இருக்கிறது. நாம் ஒரு பெரும் போராட்டத்தை தேசியத்தின் பால் நடத்தி இருப்பினும் உண்மையில் 1977 வரை தமிழ் தேசிய சிந்த்தனை தமிழர் மத்தியில் எழுச்சி பெறவில்லை என்பதே உண்மை. இத்தாலிய, பிரெஞ்சு, அரபிக், சிங்கள, தேசியங்கள் எல்லாம் வீறு கொண்டு எழுந்த்து பல காலத்தின் பின்பே தமிழ் தேசியம் தமிழர் மத்தியில் அதுவும் இலங்கையில் மட்டும் தளிர் விட்டது. ஆகவேதான் ஜின்ன்னாவுடன் பொன் ராமநாதனை ஒப்பிடலில் எனக்கு பெரிதும் உடன் பாடில்லை. ஆயுத போராட்டம் கூட முதலில், வன்முறைக்கு எதிரான எதிர்வினை, வர்க்க புரட்சி என்ற பல படிகளை தாண்டியே, திம்புவில் தமிழ் தேசியத்தில் மையம் கொள்கிறது. இதனாலேயோ என்னமோ -பிரபாகரன், பாலசிங்கம், போன்ற மிக சிலரைத்தவிர எம் அரசியல் தலைவர்கள் பலருக்கும் தமிழ் தேசியம் என்றால் மேடை ஏறி இனப்பெருமை பேசுவது, உரிமைக்காக குரல் கொடுப்பது என்பதுக்கு அப்பால் நகர முடியாமல் இருக்கிறது. யாழ் களத்தில் கூட இப்படி எழுதினால்- "பாரேன் இவர் எமக்கே வகுப்பெடுக்கிறார், நாம் போராட்டட்துக்கு எவ்வளவு செய்தோம்" என்பதாக எழுதுவார்கள். ஆனால் உண்மையில் நம்மில் எத்தனை பேர் இந்த கேள்விகளை நம்மை நாமே கேட்டு தெளிவாகியுள்ளோம்? இது இப்படி இருக்க "கிழக்கு தேசியம்" "அபிவிருத்தி சேர் தேசியம்" என்ற பதங்களுக்குள் எம்மக்கள் சிக்குண்டு போவதை நொந்து பலனேதும் இல்லை. மக்கள் ஒவ்வொரு மட்டத்திலும் தேசிய அரசியலுக்குள் ஈர்க்கபடவேண்டும், மாணவர்களை ஈர்க்க வேன்டும் என்பததெல்லாம் சரியே, ஆனால் முதலில் அத்திவாரம் ஒழுங்காக இருக்க வேண்டும். இந்த அத்திவாரம்தான் தமிழ் தேசியம் பற்றிய தெளிவான புரிதலும், வராலாற்று பற்றிய விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையும். இவையின்றி நாம் ஒரு அரசியல் சித்தாந்ததை கட்டி எழுப்பினால் அது மூன்று வகையான மக்களையே பிரசவிக்கும். 1. வெற்று இனப் பெருமை பேசும் மூடர்கள் 2. சந்தர்பவாதிகள் 3. ஒரு கட்டட்டுக்கு மேல் இது "முழுதும் பொய்" என முடிவு கட்டி பாதை மாறுபவர்கள் ஆகவேதான் இந்த அடிப்படை சித்தாந்த கேள்விகளுக்கு விடை சொல்லாமல்- ஒரு ஜனரஞ்சக (populist) அரசியலாக தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்க முடியாது. ஆயுத போராட்டம் இருந்த காலத்தில் தமிழ் தேசியத்தை ஜனரஞ்ச வழியில் எவ்வளோ தூரம் கடத்தி வந்த போதும், அடுத்த 10 வருடட்தில், அங்கயனும், வியாழேந்திரனும் வெல்லும் நிலை வந்து, தமிழ் தேசிய அரசியலின் எதிர்காலமே கேள்வி குறியாகி நிற்கிறதென்றால் அதன் காரணம் யாது? சித்தாந்த தெளிவின்மையே. ஆகவே இந்த திரியில் சில கேள்விகளை கேட்டு, நானும் வாசிப்பவர்களும் விளக்கம் அடைய முடியுமா என பரீட்சிக்க விழைகிறேன். இனம் என்றால் என்ன? ஆங்கில ரேஸ் (race), எத்தினிசிட்டி (ethnicity), நேசன் (nation) என்ற மூன்று பதங்களும் தமிழில் இனம் என்றே அழைக்கப்படுகிறன. ஆங்கிலத்திலும் கூட இவற்றுக்கு பல அர்தங்கள் உண்டு. இப்போதைக்கு நேசன்,எத்னிசிட்டி என்ற பதங்களை விடுவோம். ரேசை (race) மட்டும் பார்ப்போம். பொதுவாக ஒரு ஐரொப்பியரை அல்லது அமெரிக்கரை கேட்டால் தாம் காக்கேசியன் (Caucasian) ரேஸ், ஆங்கில/ஜேர்மன்/பிரென்சு எத்னிசிட்டி என்பார்கள். நாம் எப்படி? உலகளாவிய தமிழர்களின் ரேஸ் என்ன? ரேஸ் என்ற பகுப்பு ஒரு உயிரியல் பகுப்பு அல்ல. அது ஒரு சமூக படைப்பு (social construct). மனித மரபணுவில் வேறுபட்ட இனங்களை பகுத்தரிய முடியாது என்கிறது இக்கட்டுரை. https://www.nationalgeographic.co.uk/history/2019/02/race-and-ethnicity-explained சரி இந்த ரேஸ் எனும் பகுப்பு ஒரு சமூக கட்டமைவாகவே இருக்கட்டும். அப்படியானாலும் காக்கசோயிட், நீக்ரோயிட், மொங்கலோயிட், ஒஸ்ரலோயிட் இதில் நாம் யார்? அல்லது நாம் இன்னொரு தனி ரேஸ்சா? பிகு: என்னடா இதுக்கும் தமிழ் தேசியத்துக்கும் என்ன தொடர்பு? என மண்டையை பிய்க வேண்டாம். நாம் ஒரு கட்டிடத்தின் அத்திவார செங்கல்லை பற்றி கதைக்கிறோம். மேலே உள்ள விதானத்தை பற்றி அல்ல என்பதை மறக்க வேண்டாம்.
  13. நல்ல யோசனை. முதலில் மாதிரி வினாக் கொத்தொன்றினை யாழ்க்களத்தில் உருவாக்கி, இங்கிருப்போரின் கருத்தினை அறிந்தால் என்ன?
  14. வாரணமாயிரம் வாரண மாயிரம் சூழவ லம்செய்து, நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர், பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும், தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். (2) 1 நாளைவ துவைம ணமென்று நாளிட்டு, பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ், கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர் காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2 இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம், வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து, மந்திரக் கோடியு டுத்திம ணமாலை, அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3 நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி, பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி, பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை, காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4 கதிரொளி தீபம் கலசமு டனேந்தி, சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள, மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும் அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 5 மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத, முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6 வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால், பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து, காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி, தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 7 இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான், நம்மையு டையவன் நாராய ணன்நம்பி, செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி, அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 8 வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி, அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து, பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 9 குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து, மங்கல வீதி வலம்செய்து மணநீர், அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல், மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 10 ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை, வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல், தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர், வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே. (2) 11
  15. திரு பல்லாண்டு வாரணம் ஆயிரம்
  16. புள்ளிக் கலாப மயில் ஏறும் பெருமான் திருவடி பணிவேன் வள்ளல் தெய்வானை வேந்தனை தென்பரங்குன்ற நாதனை செல்வன் சிங்கார வேலனை சிரகிரிக்குன்ற பாலனை உள்ளம் இசை பாட நாத மலர்த்தூவி வேண்டுவேன் நாளென் செயும் வினை தானென் செயும் எனை நாடிவந்த கோளென் செயும் கொடுங் கூற்றென் செயும் குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனை செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனை கார்மயில் வாகனனைச் சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வு இல்லையே
  17. ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று பார்க்க சென்றனர். அதில் ” உங்கள் வளர்ச்சிக்கு இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது. நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர். சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும். நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர். சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது. கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது…”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்,நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது ,உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது. உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது. நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.