Leaderboard
-
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்14Points46808Posts -
உடையார்
கருத்துக்கள உறவுகள்8Points23926Posts -
யாயினி
கருத்துக்கள உறவுகள்8Points10214Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்7Points88006Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/06/21 in Posts
-
நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
7 pointsநாமும் நம் பழக்க வழக்கங்களும்.. அனேகமாக நான் ஏதாவது எழுதினால் அது அப்படியே தேடுவார் இல்லாமல் கிடப்பதை பல முறை அவதானித்த படியால் தனித்து எழுத மனம் எழுவதில்லை.. ஆனாலும் சில சங்கடங்களை சந்திக்கும் போது எழுத வேண்டும் போலவும் இருக்கிறது.. எழுதுகிறேன்.. ஆண்டவன் படைப்பில் ஆண், பெண் என படைப்பில் அவை அவைக்கு ஏற்ப அவயவங்களையும் சேர்த்தே படைத்திருக்கிறார்.அதை நாம் இடம் பொருள் ஏவல் அறியாது நாகரீகமற்ற முறையில் பேபசிக்கொள்வது அவர்கள் மேல் உள்ள மதிப்பை எப்படியும் குறைத்து விடும். அதுவம் நாம் போகும் கடை தெருக்களில் பேசும் போது மிகவும் கவனமாக ஒன்றுக்கு இரண்டு தடவைகள் யோசித்து பேச வேண்டும்.. சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றம் வேண்டும்,மாற வேண்டும்.. நேற்று நான் ஒரு தமிழ் கடைக்கு போயிருந்தேன்.அங்கு மூன்று வாடிக்கையாளர்கள் நின்றோம்.இருவர் பெண்கள் ஒருவர ஆண்.அந்ந ஆண் முக கவசத்தை சரியாக அணியாமல் வநீதிருந்திருந்தார்.எனக்கு சற்று தள்ளி நின்ற பெண் பிள்ளை கவனித்து விட்டார் போலும்.மாஸ்க்கை சரியாக பார்த்து போடுங்கள் என்றார். சொன்னது தான் தாமதம் அந்த ஆண் நீங்கள் விட்டால் கால் சட்டைக்குள் போடடு இருப்பதையும் கழட்டி மாத்தி போடச் சொல்லுவீங்க போலிருக்கே என்று சத்தம் போட்டார்.. கொரோனாவோடு எல்லோருக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது.அவ்வப்போது குடுத்தால் தான் அடங்குவார்களாம். அது உங்கள் வீட்டுப் பெண் பிள்ளையாக கூட இருக்கலாம், இல்லாமலும் போகலாம் கொஞ்சம் அனுசரிப்பு வேண்டாமா.வெளியில் கேட்பவர்களுக்கு எவ்வளவு அசௌகரியம் புரிகிறதா. கடைக்காரருக்கு எப்படி சமாளிப்பது பேச்சை என்ற மாதிரி நின்றார்.ஏன் தமிழ் மக்களே போகும் இடத்திலுமா நாம் இப்படித் தான் என்பதை காட்ட வேண்டுமா...எப்போ மாறப் போகிறோம்..???7 points
-
காவலூர்க் கனவுகள்
5 pointsகாவலூர்க் கனவுகள் கடலோரம் அலைவந்து கரைமீது மோதும் காதோரம் ஆலய மணி வேதம் ஓதும் இனிதான தென்றலும் இடை வந்து வீசும் எங்கெங்கு நோக்கினும் தெய்வீகம் பேசும் இல்லங்கள் எங்குமே இறை புகழ் பாடும் இயம்பிடும் செபமாலை தினம் சாரல் தூவும் அதிகாலைத் திருப்பலி அரங்கேறும் நேரம் அற்புத கானங்கள் அகமெங்கும் மோதும் நிலவோடு கடல் வந்து நிதம் சங்கமிக்கும் கடலோடு மேகங்கள் தலை கோதிச் செல்லும் செம் பருத்திப் பூக்கள் வேலியில்; ஆடும் செவ்வந்திப் பூக்களும் பொன் அள்ளித் தூவும் அதி காலைச் சேவல்கள் அறை கூவிப் பாடும் அதை மிஞ்சும் திருந்தாதி மணி நாதம் கேட்கும் வான் முட்டும் ஆலய கோபுரம் நான்கும் ஆன்மீக தாகங்கள் தீர்த்திடும் பாங்கும் அறிவூட்டும் அதிசய கலைக்கூடம் எங்கள் அறிவுக்கண் திறந்திடும் அற்புதம் செய்யும் குயிலோசை காதிலே இன்னிசை பாடும் அலையோசை காற்றோடு சுதிதாளம் போடும் வெள்ளிக் கொலுசொலி வீதியில் சிந்தும் துள்ளும் வனிதையர் சிரிப்பொலி மிஞ்சும் காலைச் சந்தையும் களைகட்டிக் கூடும் காவலூர்த் துறைமுகம் கலகலப் பூட்டும் மாலைச் சூரியன் மறைந்திடும் வேளை மஞ்சள் குளித்திடும் கடல் மகள் நாணம் கண்டு களித்திட காளையர் கூடும் கடற்கரை பொன்மணற் பரப்பென மின்னும் பூவரசம் பூக்கள் சாமரம் வீசும் மாமரக் காற்றிலும் தமிழ் மணம் வீசும் காவலூர்க் கனவினைக் கண்களில் சுமக்கும் கண்மணிகள் வாழ்வில் வசந்தமே வீசும் --5 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
4 points
-
நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
3 points
-
மேஜர் சேரலாதன் - அன்பகத்தின் அம்மா
2 pointsவன்னி கிழக்கு விசுவமடுப் பகுதியிலே பூக்கள் பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை மற்றும் மாக்கள் கனிந்து கொட்டும் மாஞ்சோலையுடன் கூடிய அழகிய தென்னஞ்சோலையும் இதமாக தெம்மாங்கு பாட அன்புடன் புன்னகைக்கும் கணக்காய்வுப் பகுதி ஆண் போராளிச் சகோதரர்களுடன் நடுநாயகமாக கம்பீரமாக வீற்றிருக்கும் எமது விசுவமடு #அன்பகம் எனும் கணக்காய்வுப்பகுதி நடுவப் பணியகம்.அங்கே அன்பு எனும் வானிலே ஒளிரும் துருவ நட்சத்திரமாக எங்கள் சேரலாதன் அண்ணாவைக் காணலாம்.கனிவு மற்றும் பண்பு கலந்த ஒரு நிமிர்வான ஆளுமையுடன் கூடிய பொறுமையான ஒரு போராளியாக அவர் காணப்பட்டார்.அந்த முகாமின் ஒழுங்கான நிர்வாக நடவடிக்கைகளுக்கும்,தூய்மைக்கும் அழகுக்கும் அவரே காரணம்.அங்கு பூத்துக் குலுங்கும் பூஞ்சோலையின் அழகில் அவரின் கைவண்ணம் தெரியும். அம்முகாம் போராளிகளுக்கு கேட்டவற்றை /தேவையானவற்றை உடனே வழங்கும் “அட்சய பாத்திரமாக”ஒரு தாய் போல அவர் செயற்பட்டார். அம்முகாமுக்கு பணி நிமித்தம் வரும் ஆண்,பெண் போராளிகள் யாராக இருந்தாலும் ஒருபோதும் பசியுடன் திரும்பிச் செல்லக் கூடாது என்ற கொள்கையுடையவர்.அவர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து உணவு,தேநீர் போன்றனவற்றை வழங்கி அவர்கள் அகமலர்ந்து செல்வதனைக் கண்டு தானும் அகம் மலர்வார்.பொதுவாகவே எமது போராளிகளுக்கு மட்டுமேயுரிய தனிப்பட்ட சிறப்பம்சம் ஒன்று உண்டு.தனது “துணைவன்/துணைவியைத் தவிர மற்றைய போராளிகளைச் சகோதரர்களாக “கருதும் கொள்கை.அது எமது மகத்துவம் மிக்க ஒப்பற்ற பெருந்தலைவனின் சீரான வளர்ப்பு என்பதனை நான் என்றும் நிமிர்வுடன் சொல்லுவேன்.அந்தவகையில் சேரலாதன் அண்ணாவும் சக பெண் போராளிகளை தனது சொந்த சகோதரிகள் போலவே நடாத்துவார்.ஆதலால் நாம் தூர இடத்திலிருந்து களைத்து விழுந்து அன்பகம் முகாமுக்கு பணி நிமித்தமாக ஆவணக் கோப்புகளை ஒப்படைப்பதற்கு செல்லும் போது எப்போதும் உரிமையுடன் அவரிடம் உணவு,தேநீர் போன்றவற்றை கேட்டுப் பெறுவோம்.அவரும் எங்களைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது முகாமைச் சேர்ந்த மற்றைய போராளிகளை “பிள்ளைகளுக்கு சாப்பாட்டைக் குடுங்கோடா…தேநீரைக் குடுங்கோடா”என்று விரட்டியடிப்பார்.அப்படியொரு சகோதரத்துவமான தனித்துவம் மிக்க போராளி அவர்.இதன் காரணத்தினால் அவரது முகாம் போராளிகள் அவரை “மகளிர் வெளி விவகார அமைச்சர்”என்று பட்டப் பெயரை வைத்து அழைப்பார்கள்.அவரும் அதனை ஏற்று கோபிக்காமல் “உங்களுக்கு ஆகலும் நக்கல் கூடிப் போச்சு”என்று கூறி சிரித்தவாறு செல்லுவார். சேரலாதன் அண்ணா பிறந்து வளர்ந்தது எல்லாம் கடல் வளமும் இயற்கையின் செழிப்பும் கொண்ட யாழ்மாவட்டத்திலே உள்ள காரைநகர் எனும் மண்ணில் தான்.திரு.திருமதி மகாலிங்கம் தம்பதியினருக்கு மூன்று அண்ணன்மார்,இரண்டு அக்காமார்,ஒரு தங்கையுடன் ஆறாவது செல்வப் புதல்வனாக 16.05.1973 இல் துரைசிங்கம் எனும் இயற்பெயருடன் அவதரித்தார்.அவரை வீட்டில் சிவபாதம் என்றும் செல்லமாக அழைத்தார்கள்.துரைசிங்கம் தனது குடும்பத்தின் மீது சிறு வயது முதல் மிகுந்த பாச உணர்வும் பொறுப்புணர்வும் கொண்டவராக மிளிர்ந்தார்.அத்துடன் சட்டென எதனையும் புரிந்து கொள்ளும் நுண்ணறிவு கொண்ட கற்பூர புத்தி கொண்டவராக விளங்கினார்.1989இல் க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றி மிகச் சிறந்த பெறுபேற்றைப் பெற்றும் தன் குடும்பத்தை ஆழமாக நேசித்த அவர் தனது குடும்ப சூழ்நிலையின் காரணத்தினால் உயர்தரக் கல்வியைத் தொடராமல் தனியார் வெளிநாட்டு நிறுவனம் ( NGO)ஒன்றில் பணிக்கமர்ந்தார்.அவருக்கு இயற்கையாக காணப்பட்ட ஆங்கில மொழிப் புலமை அவருக்கு அப்பணியில் பெரிதும் உதவியது. 112877902_2336681233293422_8743216489579246517_n தனது குடும்பத்தில் அளவு கடந்த பாசம் கொண்ட துரைசிங்கம் அமைதியாக இருந்தாலும் அவருள் விடுதலை எனும் தீ கொழுந்து விட்டு எரிந்தது.சொந்த நிலம் இழக்கப்பட்டு அடிமை நிலையில் தாழ்ந்து கிடக்கின்ற தமிழினத்துக்காக வீரத்துடன் போராடி விடுதலை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று உணர்வு கொண்டெழுந்து தன்னுடன் ஒட்டிக் கொண்டிருந்த குடும்பம் சம்பந்தமான அனைத்து சுமைகளையும் இறக்கி வைத்து விட்டு 1993 ஐப்பசி மாதத்தில் எமது போராட்டத்தில் இணைந்து இருபாலையில் உள்ள டொச்சன் 2 பயிற்சி முகாமில் சேரலாதன் எனும் நாமத்துடன் அடிப்படைப் பயிற்சியினை மேற்கொண்டார். பூநகரியில் இலங்கை இராணுவத்தின் மிகப் பெரிய படைக் கூட்டுத்தளமும் நாகதேவன் துறையை மையமாக வைத்து ஒரு கடற்படைத் தளமும் இருந்தது.கிளாலிக் கடனீரேரியில் நடந்த அத்தனை படுகொலைகளுக்கும் நாகதேவன்துறைக் கடற்படைத் தளமே காரணமாக இருந்தது.இதனால் 10.11.1993 இப்பெரிய கூட்டுப்படைத் தளம் மீது எமது அமைப்பு தாக்குதல் நடாத்த திட்டமிட்டது.நீர் வழியிலும் நிலவழியிலும் தொடுக்கப்பட்ட சமர் என்பதால் இந்நடவடிக்கைக்கு “தவளைப் பாய்ச்சல்” என்று பெயர் சூட்டப்பட்டது.இச்சமரில் ஏராளமான ஆயுத தளபாடங்களும் ஒரு யுத்த டாங்கியும் கைப்பற்றப்பட்டு இன்னொரு டாங்கி முற்றாக அழிக்கப்பட்டது.அத்துடன் நாகதேவன்துறை கடற்படைத் தளத்தில் இருந்த ஐந்து நீரூந்து விசைப்படகுகளும் கடற்புலிகளினால் வெற்றிகரமாக கைப்பற்றப்பட்டன. இச் சமரின் போது ஏற்பட்ட ஆளணிப் பற்றாக்குறையின் காரணத்தினால் அடிப்படைப் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே சேரலாதன் அண்ணாவும் காவும் குழுவில் ஒருவராகத் திறமையாகச் செயற்பட்டார்.அப்போது,காயப்பட்ட போராளிகளை மிகவும் அவசரமாக மருத்துவ சிகிச்சைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உத்வேகத்திலும் தனது தாமதத்தினால் ஒரு போராளியின் உயிரை இழக்கக் கூடாது என்ற எண்ணத்திலும் விரைவாக பணியினை மேற்கொண்டிருந்த போது அவரது கவனம் பிசகி ஒரு கால் பிரண்டு விட்டது.இதனால் அவர் சிறிது காலம் மருத்துவ சிகிச்சையிலிருந்து பின்னர் 1994 தை மாதத்தில் ஆரம்பமான டொச்சன் 3 பயிற்சி முகாமில் தனது அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்து கொண்டு முழு நேரப் போராளியாகினார்.பின்னர் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணிக்கு சிறப்புப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டார். ஒரு நாடு நாடாகவும் ஒரு இனம் இனமாகவும் இருக்க வேண்டுமென்றால் வீரம்,அறிவு என்ற இரு விடயங்கள் இன்றியமையாதது.வீரத்தையும் அறிவையும் ஒருங்கிணைத்து பலம் கொண்ட சக்தியாக வளரும் போது தான் ஒரு இனம் யாருக்கும் அடிமைப்படாமல் இருக்க முடியும்.அவ்வாறே எமது தேசியத் தலைவரும் எமது போராளிகள் அறிவும் பலமும் உறுதியும் திடமும் பொருந்தியவர்களாக இருக்க வேண்டும் என்ற விருப்புடையவர்.அந்த வகையில் தமிழீழத்தின் நிர்வாகம் ,நிதி, நீதி,மருந்துவம் போன்ற எல்லாத் துறைகளிலும் எமது போராளிகள் துறைசார் வல்லுனர்களாக உருவாக வேண்டும் என்று திட்டமிட்டு அவர்களை அந்தந்த துறைகளில் கற்கை நெறிகளை மேற்கொள்ள ஊக்குவித்தார். எமது நிதித்துறை வாணிபங்களின் கணக்கியல் ரீதியான நிர்வாக நடவடிக்கைகளுக்கு போராளிகளால் மட்டுமே அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் அகத்தூய்மையுடனும் செயற்பட முடியும் என்பதனை புரிந்து கொண்ட தேசியத் தலைவர் நிதித்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவுடன் கலந்தாலோசித்து யாழ்.நீர்வேலிப்பகுதியில் நிதித்துறைப் போராளிகளுக்கான முதலாவது உயர்தரக் கல்விக்கான பயிற்சிக் கல்லூரி ஒன்றினை நிறுவினார்.அதனடிப்படையில் சேரலாதன் அண்ணாவும் க.பொ.த சாதாரணதரத்தில் பெற்ற மிகச் சிறந்த பெறுபேற்றின் அடிப்படையில் 1994 ஆம் ஆண்டு புரட்டாதி மாதத்தில் அக்கற்கைநெறிக்காக நிதித்துறை கணக்காய்வுப்பகுதிக்கு உள்வாங்கப்பட்டார். 1995இல் யாழ்மாநகரம் எமது கட்டுப்பாட்டில் இருந்தது.அதனைக் கைப்பற்றுவதற்கு இலங்கை இராணுவம் படாதபாடுபட்டு பலமுனைத் தாக்குதல்களினைத் தொடுத்தும் அவை எமது படையணிகளால் முறியடிக்கப்பட்ட வண்ணம் இருந்தன.இதனால் 11.07.1995 இல் இலங்கை இராணுவம் “முன்னேறிப் பாய்தல்” என்ற பெயர் குறித்த தாக்குதலோடு பாரிய முன்னகர்வு நடவடிக்கையை மேற்கொண்டது.இதனால் மக்களெல்லாம் அச்சப்பட்டு அவலப்பட்டு மனமிடிந்து புலம்பிக் கிடந்தவேளை “இருள் சூழ்ந்தவேளைகளில் எல்லாம் ஒளியேற்றும்”எம் தலைவர் இதனை அமைதியாகவும் நிதானமாகவும் அவதானித்து பலியெடுத்து வந்தோரை பழிவாங்கும் வேட்கையோடு 14.07.1995இல் “ஒப்பறேசன் புலிப்பாய்ச்சல்”எனும் வலிந்த தாக்குதல் நடவடிக்கையை திட்டமிட்டு நடாத்தினார்.இது எமது விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் புதியதோர் திருப்பு முனையாக இருந்தது.எமது மக்களை அடித்து துரத்தியவர்களை நாம் அடித்து விரட்டி புதிய வரலாறு படைத்தோம். பொதுவாக பெரிய அளவிலான வலிந்த,ஊடறுப்பு தாக்குதல் நடவடிக்கைகளின் போது ஏற்படும் ஆளணிப் பற்றாக்குறையின் போது எமது நிதித்துறைப் போராளிகளும் களப்பணிகளுக்குள் உள்வாங்கப்படுவதுண்டு.இதனால் எமது கணக்காய்வுப்பகுதிப் போராளிகள் ஒரு கையில் கணக்காய்வின் திறவுகோலான பச்சைநிறப் பேனாவையும்(வெளியகக் கணக்காய்வுக்கு பயன்படுத்தப்படும் பேனாவின் நிறம் பச்சை)மறுகையில் விடுதலையின் திறவுகோலான ஆயுதமும் ஏந்திக் களச் சாதனை படைத்தனர்.அந்தவகையில் சேரலாதன் அண்ணாவும் அவரது நிதித்துறை அணியுடன் இணைந்து தனது கற்கை நெறியினை இடை நிறுத்திவிட்டு புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் திறமையாகக் களமாடி வெற்றி வாகை சூடி முகாம் திரும்பினார். பின்னர்,தமிழீழத்தின் இதயபூமியான மணலாற்றில் இலங்கை அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டாய சிங்களக் குடியேற்றங்களுக்கு பாதுகாப்பை வழங்கி வந்த மணலாற்றில் உள்ள இலங்கை இராணுவத்தினரின் ஐந்து படைத்தளங்களினை அழித்தொழிப்பதற்காக 28.07.1995 இல் எமது படையணிகளால் தாக்குதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.எனினும் சில துரோகிகளின் காட்டிக் கொடுப்பினால் இத்தாக்குதல் நடவடிக்கை வெற்றியளிக்காத போதும் படைத்தளத்துக்குள் ஊடுருவி அந்த மரணப் பொறிக்குள் சிக்கிய எமது படையணிகள் வீரத்துடனும் சமயோசித புத்தியுடனும் போராடி வரவிருந்த பேரிழப்பைத் தவிர்த்து குறைந்த இழப்புடன் இலங்கை இராணுவத்தினரின் இரண்டு ஆட்டிலறிப் பீரங்கிகள் உட்பட பல படைக்கலங்களை அழித்து தீரமுடன் திரும்பினர்.சேரலாதன் அண்ணாவும் இத்தாக்குதல் நடவடிக்கையில் நிதித்துறை தாக்குதலணியுடன் இணைந்து வீரமுடனும் தீரமுடனும் களமாடி முகாம் திரும்பினார். பின்பு,17.10.1995 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்காக பலாலி இராணுவ முகாமிலிருந்து இலங்கை இராணுவம் மிகப் பெரிய “ரிவிரெச”(சூரியக்கதிர்)எனும் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது.இச்சமரிலும் சேரலாதன் அண்ணா பின்களப் பணியான களத்தில் நிற்கும் போராளிகளுக்கான உணவு ழங்கும் நடவடிக்கைகளுக்கு நிதித்துறை வழங்கல்பகுதியுடன் இணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.அதன் பின் அவர் யாழ் குடாநாட்டிலிருந்து எமது அமைப்பு பின் வாங்கிய பின்னர் வன்னிப் பெருநிலப்பரப்புக்கு இடம்பெயர்ந்து சுதந்திரபுரத்தில் இயங்கிய தமிழ்மாறன் பயிற்சிக் கல்லூரியில் தனது க.பொ.த உயர்தரக் கல்வியினையும் கணக்காய்வுக் கற்கைநெறியினையும் தொடர்ந்தார். அதன் பின்னர் 1996ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் எமது போராட்டத்தின் மரபுவழித் தாக்குதல் அத்தியாயத்தை வலுப்படுத்திய முல்லைத்தீவு இராணுவ முகாம் மீது நடாத்தப்பட்ட “ஓயாத அலைகள் 1″நடவடிக்கையிலும் அவர் களப் பணியின் முக்கியத்துவம் கருதி தனது கற்கை நெறியினை இடை நிறுத்தி விட்டு பின் களப்பணிகளிலும் பணியாற்றினார்.பின்பு தனது க.பொ.த உயர்தரத்திற்கான பரீட்சையினை 1996 ஆவணி மாதம் தனது அணியுடன் நிறைவு செய்து கொண்டு பின்னர் தொடர்ந்து கணக்காய்வுக் கற்கை நெறியினையும் நிறைவு செய்து கொண்டு 1997 ஆம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதியில் வன்னி கிழக்கு கணக்காய்வுப் பகுதிக்கு அனுப்பட்டு 1997 தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரை ஈரல் புற்று நோயினால் சாவடையும் வரை பாண்டியன் வாணிபத்தின் கணக்காய்வு அணிக்கு உள்வாங்கப்பட்டார். எமது போராட்டத்துக்கான பெருமளவிலான நிதியினை ஈட்டிக் கொடுக்கும் நிதித்துறையின் மாபெரும் வாணிபங்களில் ஒன்றான பாண்டியன் வாணிபமானது பாண்டியன் பல்பொருள் வாணிபம்,பாண்டியன் புடவை வாணிபம்,பாண்டியன் சுவையூற்று,பாண்டியன் எரிபொருள் வாணிபம்,பாண்டியன் உதிரிகள் வாணிபம்,பாண்டியன் அச்சகம்,மேலும் அவற்றின் மிகப் பெரிய களஞ்சியங்களென ஒவ்வொன்றிலும் பல கிளைகளென வன்னிப் பெரு நிலப்பரப்பின் பல பகுதிகளிலும் வியாபித்துக் காணப்பட்டது.இவ்வனைத்திற்குமான கணக்காய்வுப் பணியினை சேரலாதன் அண்ணாவின் கணக்காய்வு அணி திறமையாக மேற்கொண்டது.அவரும் இவற்றிற்கான கணக்காய்வுப் பணியினை தன் அணியுடன் இணைந்து அர்ப்பணிப்புடனும் மிகுந்த ஈடுபாட்டுடனும் மேற்கொண்டார். சொல்லுக்கு முன்னே செயல் இருக்க வேண்டும்.இது எமது தலைவனின் தாரக மந்திரம்.இதனால் தான் நாம் எமது போராட்ட வரலாற்றில் உலகியல் ரீதியில் செல்வாக்குப் பெற்றோம்.அவ்வாறே சேரலாதன் அண்ணாவும் எந்தப் பணியைக் கொடுத்தாலும் சொல்வதற்கு முன்னர் அந்தப் பணியினை முழுமையாக முடித்து விட்டு வரும் திறமையைக் கொண்டிருக்கும் ஒரு சிறந்த கணக்காய்வாளனாக இனங்காணப்பட்டார்.பணியிடத்தில் பணி நேரத்தில் பணியாளர்களிடம் அன்பாகவும் பண்பாகவும் தேவையேற்படுமிடத்தில் கண்டிப்பாகவும் ஆளுமையுடன் செயற்படுவார்.மிகவும் பணிச்சுமை கூடிய நேரங்களில் உதாரணமாக ஆண்டிறுதி இருப்பெடுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது பணியாளர்களுக்கும் மற்றும் சக போராளிகளுக்கும் பணிச்சுமை தெரியாமல் இருக்க மிகவும் நகைச்சுவையாகப் பேசி பணியினை நேரம் போவது தெரியாமல் நிறைவேற்றும்,நிறைவேற்றுவிக்கும் தனித் திறமை அவரில் காணப்பட்டது.பணி தவிர்ந்த மற்றைய நேரங்களில் பணியாளர்களுடன் மிகவும் நட்புரிமை பாராட்டக் கூடிய ஒருவராகவும் அவர் காணப்பட்டதால் பணியாளர்கள் அனைவரும் அவரில் மிகுந்த அன்பும் நன்மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்ததை அங்கே காணக்கூடியதாக இருந்தது. மகளிர் வெளி விவகார அமைச்சர் என்ற பட்டப் பெயருக்கேற்ப அவர் பொதுவாக அனைத்து சக பெண் போராளிகளுடனும் ஒரு சகோதரத்துவமான உரிமையில் பழகுவதனால் நாம் அவரிடம் ஒரு சகோதரன் என்ற முறையில் தேவையானவற்றைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுவோம்.புதுக்குடியிருப்பு பாண்டியன் பல்பொருள் வாணிபத்தில் அவர் கணக்காய்வுப் பணியினை மேற்கொண்டிருக்கும் நேரத்தில் நாம் அவ்வழியால் செல்லும் போது அவரைக் கண்டு விட்டோம் என்றால் அவரின் பணியிடத்தில் இறங்கி அவரிடம் வம்பிழுக்காமல் ஒரு போதும் செல்ல மாட்டோம்.அவர் தனது சட்டைப் பையில் வெளியகக் கணக்காய்வுப் பணிக்குப் பயன்படுத்தப்படும் பச்சை நிறப் பேனாக்கள் பல புதுப்புது வடிவங்களில் கொழுவி வைத்திருப்பார்.நாமும் பச்சைப் பேனாவிலுள்ள அதீத ஆசையினால் அதனை அவரிடமிருந்து சூறையாடாமல் விடமாட்டோம்.அதனால் எங்களைக் கண்டால் “பிசாசுகள் வருகுதுகள் பிசாசுகள் வருகுதுகள்”என்று செல்லமாக வைவார்.அவர் என்ன சொன்னாலும் அவரது பச்சைப் பேனாவைச் சூறையாடுவதிலும் அவரது திட்டைக் கேட்பதிலும் எங்களுக்கு ஒரு தனி சந்தோசம் ஏற்படும். அத்துடன் பொது மக்களோடு மக்களாக பழகும் ஒரு போராளியாகவும் மிகவும் இளகிய மனம் படைத்த ஒரு போராளியாகவும் அவர் காணப்பட்டார்.நிதித்துறையிலிருந்து வீரச்சாவடையும் மாவீரர்களின் வீடுகள் மற்றும் தனது முகாமுக்கு அருகில் வசிக்கும் மாவீரர் குடும்பங்களின் வீடுகள் போன்றவற்றிற்கு அடிக்கடி சென்று அவர்களது இன்ப துன்பங்களிலும் பங்குபற்றுவார்.அவருடன் ஒன்றாக இருந்த போராளி நண்பர்கள் வீரச்சாவடையும் போது அதனைத் தாங்க முடியாது அவர்களது பெற்றோர்களுடன் சேர்ந்து அவரும் கதறி அழுவதை நாம் நேரில் கண்டிருக்கின்றோம். பின்பு 2003 ஆம் ஆண்டில் அவர் திருமண வயதினை அடைந்திருந்தமையினால் எமது அமைப்பின் அனுமதியுடன் ஒரு மாவீரரின் தங்கையான பெண் போராளி ஒருவரைத் திருமணம் செய்தார்.போராளி ஒருவரைத் திருமணம் செய்த படியால் அவரது போராட்ட பணிக்கு குடும்ப வாழ்க்கை தடையாக இருக்காமல் பக்க பலமாகவே இருந்தது.பின்னர் 2004 இல் ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையாகினார்.2004-2008 ஆம் ஆண்டு வரை பாண்டியன் வாணிபத்தின் கணக்காய்வுப் பணியுடன் மேலதிகமாக நிதித்துறையின் தளவமைப்புப்பகுதி,உடமைப் பகுதி போன்றவற்றிற்கான கணக்கு நடவடிக்கைகளின் கணக்காய்வுப் பணியினையும் திறம்பட மேற்கொண்டார். பொதுவாக வெளி நிர்வாகப்பணிகளில் ஈடுபடும் போராளிகள் தமது பணியைச் சரிவரச் செய்து முடிக்க வேண்டும் என்ற கொள்கையில் தமது பணியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தங்கள் உடல் ஆரோக்கியத்தைச் சரிவரக் கவனிக்காது இயங்குவதால் களத்தினில் மட்டுமல்லாது சுகவீனம் காரணமாகவும் எமது போராளிகள் சாவடைவதுண்டு.அந்தவகையில் சேரலாதன் அண்ணாவும் பணியிடங்களில் ஏற்படும் பணிச்சுமைகளின் காரணத்தினால் தன் தேக ஆரோக்கியத்தைச் சரிவரக் கவனிக்காத காரணத்தினால் 2007 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் கொடிய ஈரல் புற்றுநோயின் தாக்கத்திற்கு உட்பட்டு மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.அப்போது அவரின் மனைவி இரண்டாவது மகவை வயிற்றில் தாங்கி கர்ப்பிணியாக இருந்தார்.தமது போராட்ட வாழ்க்கையில் எந்தவொரு போராளியும் களத்திற்கு சென்று வீரமரணம் அடைவதையே விரும்புவர்.அவ்வாறே சேரலாதன் அண்ணாவும் தான் களத்தினில் வீரமரணமடையாமல் சுகவீனம் காரணமாக சாவடையப் போகிறேன் என்று எண்ணி மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.பின்னர் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல்,தேசியத் தலைவனையும் சக போராளிகளையும் தமிழ் மக்களையும் தனது பணியையும் மிகவும் ஆழமாக நேசித்த போராளியான சேரலாதன் அண்ணா தனது கர்ப்பிணி மனைவியையும்,பெண் குழந்தையையும் அதுவரை வெளியுலகை எட்டிப் பார்க்காத தனது மற்றைய சிசுவையும் எம் எல்லோரையும் தவிக்க விட்டு 21.08.2008 இல் மேஜர் சேரலாதனாக சாவடைந்து எம் தேசத்தின் வரலாறாகினார். இவரது இழப்பானது போராளிகள் மத்தியில் மட்டுமன்றி பணியாளர்கள் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த வேதனையினை ஏற்படுத்தியிருந்ததை இறுதி வணக்க நிகழ்வில் அவர்கள் அனைவரும் கதறி அழுததிலிருந்து காணக்கூடியதாக இருந்தது.பல்லாண்டு காலங்கள் உயிருடன் இருந்து எம் தேசத்துக்கான பணியினையும் கணக்காய்வுப் பணியினையும் செய்ய வேண்டிய சேரலாதன் அண்ணா புற்றுநோய் எனும் கொடிய அரக்கனால் குறுகிய காலத்தில் எமை விட்டுப் பிரிந்தது எமது போராட்டத்திற்கும் நிதித்துறை கணக்காய்வுப் பகுதிக்கும் ஏற்பட்ட பேரிழப்புகளில் ஒன்றாகும். – நிலாதமிழ் சுட்ட இடம்: வேசுபுக்கு2 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
2 points
- பாவத்தின் சம்பளம்
2 pointsஇருவரும் இரத்தம் உறைந்து போய் , மெதுவாக பின்னேறிக்கொண்டிருக்க நாயோ இன்று ஒரு சம்பவத்தை நடத்திக்காட்டியே தீருவது என்ற முடிவில் இருவர்மேலும் வெறிகொண்டு பாய எதுவாக குனிந்து எம்ப தயாரானது, அந்தக்கணத்தில் ..திடீரென்று இவர்களிருவரும் பின்புறமிருந்து ஒரு டோர்ச்சின் மின்னொளியுடன் "தம்பி நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன செய்றீங்க...?" என்ற வசனமும் சேர்ந்து ஒலித்தது , திடுக்கிட்டு இருவரும் திரும்பி பார்க்க அங்கே பாடசாலை இரவு காவலாளி நின்றுகொண்டிருந்தார். அவரை பார்த்துவிட்டு இருவரும் நாயை நோக்கி திரும்பிய கணம் அங்கு நாய் நின்ற அடையாளமே இல்லை, கணப்பொழுதில் நடந்து முடிந்துவிட்ட சம்பவத்தால் இருவருக்குமே குரல் அடைந்துக்கொண்டது, இருந்தும் ஒரு மாதிரி சுதாகரித்துக்கொண்டு "அது .......ஒண்டுக்கு போக வந்தம் அண்ணன் " என்று சுலக்சன் சொல்ல காவலாளியோ சகட்டு மேனிக்கு கிழிக்க தொடங்கினான், "இங்கே வரக்கூடாது என்றெல்லா சொல்லியிருக்கன் ...நாளைக்கு நாய் அது இது என்று கடிச்சால் நான் தான் பதில் சொல்லவேணும், இப்படி நீங்க கண்டபடிக்கு இருட்டிற்குள் திரிவீர்கள் என்றால் நான் அதிபரிடம் முறையிட்டுவிடுவேன்,இது தான் கடைசி எச்சரிக்கை இனி உங்களில் யாரையும் இங்காலப்பக்கம் காணக்கூடாது " என்று முடித்தான், மன்னித்துக்கொள்ளுங்கோ அண்ணன் என்றுவிட்டு இருவரும் நடந்ததை தமக்குள்ளே மென்குரலில் பேசிக்கொண்டுசெல்வதை அவன் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன, அடுத்தநாள் மொத்த குழுவும் பாடசாலையில் அவர்கள் வழமையாக சந்திக்குமிடத்தில் ஆஜர், நடந்தவற்றை இவன் விபரிக்க, நாயிடம் மாட்டிய கதையை சுலக்சன் விபரிக்க மற்றைய மூவருக்கும் ஆர்வம் பற்றிக்கொண்டது, மூவரில் ஒருவன் (அவனது பட்டப்பெயர் ஐடியா மணி, முக்கியமான நேரங்களில் வித்தியாசமாக யோசித்து ஆச்சரியமூட்டும் வகையில் ஐடியா தருவதால் மொத்தக்குழுவும் அவனுக்கு வைத்த பெயர் அது ) தாடையை தடவி கொஞ்சம் யோசித்துவிட்டு சொன்னான். "புதரிட்க்கு அருகிலும் போகக்கூடாது, ஆனால் வளவிற்குள் என்ன நடக்குது என்றும் பார்க்கவேண்டும் டேய் எதுக்குடா இப்படி யோசிக்கிறீங்க கோமேர்ஸ் கிளாசில் வலப்பக்க சுவரில் மேசை வைத்து ஏறியிருந்து பார்த்தால் முழுவதுமே தெரியுமே ...? " .ஐடியா மணி ஐடியா மணிதான் அவன் சொல்லிய வர்த்தக வகுப்பு அந்த வெறும் வளவின் இடதுபுற வேலியுடன் ஒட்டிக்கொண்டுசெல்லும் மூன்று மாடிக்கட்டடத்தில் கடைக்கோடியில் இருந்தது, அட ஆமால்ல.... மெதுவாக காவலாளிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கட்டிடத்திற்குள் புகுந்தால் அப்புறம் வேட்டை தான், சரி இன்றைக்கு மொத்தக்குழுவும் இரவு 11:00 மணியளவில் கட்டிடத்திற்குள் புகுந்து தொடர்ந்து நோட்டம் விடுவது என்று தீர்மானிக்கப்பட்டது 1946, கோவா பதினைந்து நாட்களாக தொடர்ந்து பயணித்த களைப்பில் தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணுவதும் உறங்குவதுமாகவே போய்விட்டது வில்லிக்கு, எழுந்து ஒரு காப்பியை தயார்செய்து மேசையிவைத்துவிட்டு பத்திரிகையை கையில் எடுக்க அவரது சபை முதல்வரிடமிருந்து அழைத்துவந்தது, உடனடியாக முதல்வரை சந்திக்க அவரோ "நீர் உடனடியாக இன்னும் ஐந்து தினங்களில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் எங்களதுசபையின் கீழுள்ள பாடசாலைக்கு புறப்படவேண்டும், அங்கே ஆங்கில ஆசிரியருக்கு வெற்றிடமுள்ளதுடன் அடுத்த ரெக்டராக உம்மைத்தான் சபை தெரிவுசெய்துள்ளது, எனவே இப்போதுள்ள ரெக்டரின் கீழ் நீர் பணி செய்து அனுபவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும்" என்று முடித்தார் புதிய இடம் புதிய அனுபவம் புதிய இனக்குழுமத்திற்கு சேவை செய்யப்போவதை நினைத்து தனக்குள்ளே மகிழ்ந்து போன வில்லி பயண ஏற்பாடுகளை செய்யத்தொடங்கினார். (தொடரும்) பணியில் மாட்டிக்கொண்டதால் இரண்டுநாட்கள் எழுதமுடியவில்லை எதிர்பார்ப்புடன் இருந்த வாசக உள்ளங்களுக்கு எனது வருத்தத்தை பகிர்ந்துகொள்கிறேன்2 points- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
குடும்பத்தை இழந்து... தனி மரமாகி நின்ற, மிஷேலுக்கு.... வாழ்க்கையை... இனி, எப்படி நகர்த்துவது என்று புரியாத மாதிரி இருந்த போது... அதனை... எப்படியும், வெல்ல வேண்டும்... என்ற ஓர்மம் அவனை... உந்தித் தள்ளியது. திரும்பவும்... பழைய வேலை இடத்திற்கு சென்று, தான்... நடு விரலைக் காட்டிய முதலாளியிடம், வேலை கேட்கலாம் என்ற... தெரிவைத் தவிர, அவனுக்கு, வேறு வழியே இருக்கவில்லை. ஆனால்... எந்த முகத்தை வைத்துக் கொண்டு, அந்த முதலாளியிடம், மீண்டும் வேலை கேட்பது? என்ற அச்சம் இருந்தாலும்... நேரடியாக... தொழிற்சாலைக்கு போய் வேலை கேட்பது, இலகுவான விடயம் அல்ல. அவன்... இழந்ததில், முதலாளியின் தொலை பேசி இலக்கத்தையும், இழந்தது... பெரும் சோகம். ஒரு இரவு முழுக்க... நித்திரை முழித்து யோசித்ததில், அவனுக்கு... புது "ஐடியா" பிறந்தது.... ➡️ ➡️ ➡️ ..... ✍️ ✍️ ✍️ 🤣2 points- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointஒரு துரோகத்தின் நாட்காட்டி தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலாறுகளை அது கண்டிருக்கிறது. நமது முன்னோடிகளின் வாழ்க்கை வரலாறுகள் எமதினத்தின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாதது என்பதுடன், அவைபற்றித் தொடர்ந்தும் பேசப்படவேண்டும் என்பதும், எமது எதிர்காலச் சந்ததிக்கும் இவை கடத்தப்படவேண்டும் என்பது அவசியமானது. எமது வரலாற்றில் வீர மறவர்களினதும், வரலாற்று நாயகர்களினதும் கதை சொல்லப்படும்பொழுது உதிரியாக இன்னொரு விடயமும் கூட வருகிறது. இது தமிழினத்தால் தவிர்க்கமுடியாத, இனத்தினுள்ளேயே உருவாகி நெருக்கமாக இழையோடிப்போயிருக்கும் ஒரு சாபக்கேடு என்றால் அது மிகையில்லை. எமது வீர வரலாற்றின் ஒவ்வொரு எழுச்சியின்போதும் அல்லது அவ்வரலாற்றின் வீழ்ச்சிகளின்பொழுதும் இந்தச் சாபம் விடாது எம்மைப் பின் தொடர்ந்தே வருகிறது. வரலாற்றில் தனது சொந்த இனத்தையே தனது நலன்களுக்காகவும், இச்சைகளுக்காகவும் காட்டிக்கொடுத்து, எதிரியுடன் சேர்ந்து நின்றே தனது இனத்தைக் கருவறுத்து, சொந்த இனம் அழிவதில் இன்புற்ற பல சாபங்களைத் தமிழினம் கண்டதுடன், இப்பிறப்புக்கள் பற்றிய சரியான பதிவினையும் எமது வரலாற்றில் பதிவுசெய்தே வந்திருக்கிறது. இவ்வாறு தமிழினத்திற்கெதிராக எதிரியுடன் சேர்ந்து செயற்பட்ட துரோகிகளின் வரலாறு சரித்திரத்தில் நிச்சயம் பதியப்படவேண்டும் என்பதுடன், இத்துரோகங்களால் எமதினம் பட்ட அவலங்கள் தொடர்ந்து பேசப்படுவதும் அவசியமாகிறது. அந்தவகையில், கடந்த 15 அல்லது 16 வருடங்களுக்கு முன்னர் தமிழினம் இவ்வாறான மிகப்பெரிய துரோகம் ஒன்றிற்கு முகம் கொடுத்தது. தனது இச்சைகளுக்காகவும், நலனுக்காகவும் மட்டுமே தனது இனத்தையும், அவ்வினத்தின் சுந்தந்திர விடுதலைப் போராட்டத்தினையும் காட்டிக் கொடுத்து, பலவீனமாக்கி, ஈற்றில் அப்போராட்டமும் லட்சக்கணக்கான மக்களும் அழிக்கப்பட தானும் நேரடியாகக் காரணமாகவிருந்த ஒருவனது துரோகம் பற்றிய எனது புரிதலையும், நான் ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்ட விடயங்களையும் இங்கே பதிய நினைக்கிறேன். துரோகிகளை வரலாற்று நாயகர்களாகவும், உதாரண புருஷர்களாகவும் காட்ட முனையும் முனைப்புகள் வரலாற்றில் இத்துரோகிகளுக்கு வெள்ளையடித்து, அவர்களது துரோகத்தினை நியாயப்படுத்தும் கைங்கரியங்களில் ஈடுபடுவதால், இத்துரோகிகள் பற்றி நாம் தொடர்ந்து பேசுவதும், அந்தத் துரோகங்கள் பற்றித் தொடர்ந்து பதிவிடுவதும் அவசியமாகிறது. ஏனென்றால், இத்துரோகங்கள் மன்னிக்கப்படமுடியாத, மறக்கப்படமுடியாத, இனியொரு தடவை நடக்கக் கூடாத வெறுக்கப்படவேண்டிய நிகழ்வுகள் ஆகும். துரோகத்தின் நாள் 1 : 3 ஆம் திகதி மார்ச் மாதம், 2004 கேணல் கருணா என்னும் விநாயகமூர்த்தி முரளீதரனின் பேச்சாளர் செய்திச் சேவை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் புலிகள் இயக்கத்தினுள் பிளவுகள் இல்லை. நாம் எமது தலைவரின் நேரடிக் கட்டளையின்கீழ்த்தான் இனிமேல் செயற்படுவோம் என்று கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட புலிகள் இனிமேல் தலைவரின் நேரடிக் கட்டளைகளுக்கு மட்டுமே செவிசாய்ப்பதாகவும், இந்த மாவட்டங்களில் இருக்கும் மக்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு இனிச் செயற்படப் போவதாகவும் கூறுகிறார்.1 point- ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
முற்குறிப்பு: சிலருக்கு வாசிக்கும் போது சங்கடமாக இருக்கலாம் கதை: வழக்கமாக ராசுக்குட்டி சுச்சு போகின்றபோது ஒரு பாட்டை விசிலடிச்சுக் கொண்டோ, இல்லை ஊரில சுவரில் எட்டுப் போட்ட காலத்தை நினைச்சுக் கொண்டோ அல்லது விட்டத்தை பார்த்துக் கொண்டோ தான் போவது வழக்கம். ஆனால் அன்றைக்குப் பார்த்து ஏதோ ஒரு நினைவில் போய் கொமர்ட்டில் (commode) நீரில் கலந்தும் கலக்காமலும் விட்ட சுச்சுவை உற்றுப்பார்த்து வினையை தேடிக்கொண்ட கதைதான் இப்ப நான் சொல்லப் போற கதை. உற்றுப்பார்த்த ராசுக்குட்டிக்கு திடுக்கிட்டுப் போனார். சிவப்பாக ஒன்றிரண்டு துளிகள் சின்னஞ் சிறு வட்டங்களாக மிதந்து கொண்டு இருந்ததை கண்டு வெலவெலத்துப் போனார். ஐயய்யோ சுச்சுவில் இரத்தம் கலந்து வருகின்றதோ என்று ஆடிப்போயிட்டார். வாழ்வே மாயம் படத்தில் கமலஹாசன் இருமின பின் இரத்தம் வெளியேறிய சீனை தன் மனக்கண் முன் கொண்டு வந்து பார்த்தார். இது புற்று நோயாக இருக்குமோ அல்லது வேறு ஏதும் பாரதூரமான பிரச்சனையோ என்று ஒரு கையால பிடிச்சபடியே யோசிச்சுக் கொண்டு இருந்த ராசுக்குட்டியை, "என்னப்பா இவ்வளவு நேரம் என்ன செய்றீஙள்..." என்று கேட்ட மனைவியின் குரல் தான் மீண்டும் தன் நிலைக்கு கொண்டு வந்தது, ஆனாலும் பயம் விடவில்லை ராசுக்குட்டிக்கு. வீட்டில் நண்பர் குடும்பம் வந்து கதைத்து கொண்டு இருக்கும் போது தான் இது நிகழ்ந்து இருந்தது. ராசுக்குட்டி அவர்களுடன் கதைத்துக் கொண்டு இருந்த விடயத்தை மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தாலும் மனசில் சிவப்பாக பயம் மிதந்து கொண்டுதான் இருந்தது. எப்படியும் இது என்ன என்று அறியாவிடின் தலை உடனே சுக்கு நூறாக உடைந்து சிதறி விடுமோ என்று உள்ளூர அஞ்சிக் கொண்டு இருந்தார். எப்ப நண்பர் குடும்பம் போகும், எப்ப கூகிள் ஆண்டவரிடம் போய் என்ன விடயம் என்று அறியலாம் என்ற நினைப்பிலேயே இருந்தமையால் சரியாக அவரால் கதைக்க கூட முடியவில்லை. நண்பர் குடும்பம் அரை மணி நேரம் மேலும் கதைத்து விட்டு போன மறுகணம், ஓடிப் போய் தன் மொபைலில் இணையத்தில் கூகிள் ஆண்டவரை கூப்பிட்டு "blood in the urine" (சிறு நீரில் இரத்தம்) என்று டைப் செய்து தேடு பொறியை தட்டி விட்டார். கூகிள் ஆண்டவரும் வஞ்சகம் இல்லாமல் பின்வருவன ஒன்று காரணமாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களோ காரணஙள் என்று பட்டியலிட்டார்: 1. தொற்று - Urinary tract infections 2. சிறு நீர்ப்பையில் கல்லு -A bladder or kidney stone 3. சிறு நீரகத்தில் தொற்று Kidney infections (pyelonephritis). 3. புரஸ்ரேட் பெரிசாவது -Enlarged prostate. 4. புற்றுநோய் - Cancer 5. சீறு நீரக காயங்கள்- Kidney injury என்று வகை வகையாக பட்டியலிட்டார் கூகிள் ஆண்டவர். அவ்வளவு தான் ராசுக்குட்டி ஆடிப் போயிட்டார். அவர் மனக் கண் முன் மனைவியும் பிள்ளைகளும் பரதேசி கோலத்தில் நிற்பது போலவும், ஹீமோ தெரபி எடுத்து தலை முடி எல்லாம் உதிர்ந்து வயக்கெட்டுப் போய் தான் படுக்கையில் கிடப்பது போலவும், நண்பர்கள் எல்லாம் கண் ஓரத்தில் கண்ணீர் வழிய தான் வளர்த்தப்பட்டு இருக்கும் பெட்டியை சுற்றி ஒரு வட்டம் போட்டு நடப்பது போலவும் காட்சிகள் வழியத் தொடங்கி விட்டன ராசுக்குட்டிக்கு. முதல் வேலையாக உடனடியாக உயில் எழுதி வைக்க வேண்டும் என நினைத்தார். பின் அப்படி உயில் எழுதும் அளவுக்கு ஒரு சொத்தும் இல்லையே என அங்கலாய்த்தார். சொத்து கித்து சேர்த்து வைக்காமல் குடும்பத்தை நடுத்தெருவில் விடப்போகின்றேனே என தழுதழுத்தார். ஆயுள் காப்புறுதியில் கிடைக்கும் சில இலட்சங்கள் குடும்பத்துக்கு போதுமாக இருக்குமா என கணக்குப் போட்டார். தான் செத்த பின் எப்படியும் மறுமணம் செய்து கொள் என்று மனிசியிடம் சத்தியம் வாங்க வேண்டும் என உறுதி பூண்டார். புரண்டு புரண்டு படுத்தார், நடுக் கட்டிலில் எழும்பி இருந்து தன்னை தொட்டுப் பார்த்து எல்லாம் சரியாக இருக்குதோ என்று செக் பண்ணினார். இறுதியில் அடுத்த நாள் எழும்பியவுடன் குடும்ப மருத்துவருக்கு போன் போட்டு விடயத்தை சொல்லி உடனடியாக மருத்துவம் செய்ய தொடங்க வேண்டும் என்று நினைத்தார். எந்த நோயும் ஆரம்பத்தில் கண்டு பிடிக்கப்பட்டால் அதில் இருந்து பிழைக்கலாம் என எங்கோ வாசித்ததை பல தரம் மீள மனக்கண் முன் கொண்டு வந்து வாசித்தார். அப்படி நினைத்தது கொஞ்சம் மனசுக்கு ஆறுதல் கொடுக்க படுக்க போனார். நித்திரையானார். தான் செத்துப் போன பின் நண்பர்கள் எல்லாம் பியர் அடிச்சு அதைக் கொண்டாடுகின்றனர் என கனவு ஒன்றைக் கண்டு திடுக்கிட்டு எழும்பினார். உலகமே இப்படித்தான் போலியானது என்று கவலைப்பட்டார். சுருண்டு படுத்தார். அடுத்த நாள் மருத்துவரிடம் கதைக்க, மருத்துவர் இவர் சொல்வதை பெரிசாக கணக்கெடுக்கவில்லை போலிருந்தது. கொரனா காலத்தின் முதல் மாதம் என்பதால், மருத்துவர் கடும் யோசனையின் பின் இவர் கொடுத்த ஆக்கினையால "சரி வா வந்து சிறுனீரில் ஒரு டெஸ்ட் எடு... அதுக்குப் பிறகு பார்ப்பம் ": என்று சொல்லிய அடுத்த அரை மணி நேரத்தில் கிளினிக்கு போய் விட்டார். சிறு நீர் டெஸ்ட் செய்தார், 10 நிமிடங்களில் அதன் ரிசல்ட்ஸ் வந்தது. (தொடரும்....)1 point- அறம் என்பது என்னவென்றால்... - நிழலி
இரவில் டோர்ச் லைட் டின் வெளிச்சம் கூட தயங்கி தயங்கி நகரும் கடும் இருள் நிறைந்த வளவு. இலுப்பை மரங்களின் உச்சியில் தங்கி தூங்கும் வெளவால்களின் எச்சங்களால் நிறைந்திருக்கும் சிறு காடு போன்றது இந்த வளவு. பகலில் ஆடுகளுக்கு குழை வெட்டுவதற்காக மட்டும் சிலர் வந்து போனாலும், பலர் உள் நுழையவே அஞ்சும் தோற்றத்துடன் உள்ள இந்த வளவின் மண்ஂணுக்குள் புதைக்கப்பட்ட பெண் போராளிகளின் ஆவிகள் இரா காலங்களில் நாவல்மரங்களில் மீதேறி இருந்து தமக்குள் அரட்டுவதை கேட்ககூடியதாக இருப்பதாகவும் திகில் நிறைந்ததாகவும் சப்தங்களால் நிறைந்து இருப்பதகாவும் அயல் சனங்களால் சொல்லப்படும் பெரும் வளவு இது. அதன் மூலையில் என் சிறு குடில் . கொழும்புத்துறை வீதியில், கணக்கர் சந்திக்கு அருகில் இருக்கும் இந்த வளவுக்குள் நீண்டு செல்லும் ஒழுங்கையின் முடிவில் இருக்கும் இந்த காட்டு வளவின் மூலைக்குள் இரவில் நான் மட்டும் தனியாக நடந்து என் குடிலுக்குள் வரும் போது ஒரு போதும் நான் ஆவிகளின் சத்தங்களையோ அல்லது அயல் சனங்களால் சொல்லப்படும் எந்த பேய்களையுமோ பார்த்ததில்லை. இலுப்பை மரங்களின் இலைகளை சாப்பிட்டு விட்டு மந்தமாக அதே வளவுக்குள் படுத்து கிடக்கும் சில ஆடுகளை மட்டும் எப்பவாவது சில நாட்கள் பார்த்து இருக்கின்றேன். மற்றப்படி இந்த வளவு என் வாழ்வு. என் பெயர் கோசலை. எனக்கு வயது எத்தனை என்று தெரியாது. எப்ப பிறந்தேன், எங்கு வளர்ந்தேன் என்று நினைவில்லை. மஸ்கெலியாவில் இருந்து ஆத்தையுடன் இந்த ஊருக்குள் வந்த எனக்கு கோசலை என்று பெயர் மட்டுமே சொந்தமாக இருந்தது. பின் 5 பிள்ளைகள் ஒவ்வொருவரால் பிறந்து எனக்கு என்று ஒரு குடும்பம் ஆனது. பின் அந்த ஐந்து பிள்ளைகளும் ஒவ்வொரு வீடுகளில் வேலைக்கு வீட்டுக்கார முதலாளிகாளால் கவரப்பட எஞ்சியது இந்த குடிலும் இரவில் சத்தம் போடும் வெளவால்களும் மட்டுமே நான் நல்ல கறுப்பு, என்னை தொட்டு நெற்றியில் வைத்தால் போதும் கருப்பு பொட்டு உன் கலரில் இருந்தே வந்து விடும் என்று சொல்லும் அளவுக்கு நான் கருப்பு. ஆனால் நெற்றியில் ஒரு சிவப்பு பொட்டு வைத்து விட்டால் "அடியே உன்னை அடிக்க இந்த ஊரில் ஒரு அழகியும் இல்லையடி' என்று ஊரில் இருக்கும் பெண்கள் தம் வாயாலேயே சொல்லும் அளவுக்கு என் அழகு கூடிவிடும். இந்த அழகில் விழுந்தவர்கள் எல்லாம் ஒரு சில மணித்தியாலங்களில் தம் பசி தீர்த்த பின் சில சில்லறைகளை வீசி விட்டு விலகிச் சென்று விட மீண்டும் எனக்காக காத்திருப்பது இந்த வளவும் என் குடிலும் தான். சிவனே என்று இரவில் வந்து ஒரு தலையணையை என் குடிலில் இருக்கும் மண் நிலத்தில் போட்டு விட்டு படுத்தால் அப்படி ஒரு நித்திரை வரும். நான் நித்திரை கொண்டால் எவராலுமே எழுப்ப முடியாது. ஆனாலும் இக் குடிலில் இருந்து ஐந்து நூறு அடிகள் எடுத்து வைத்தால் இருக்கும் பெரிய வீட்டில் இருந்து வேலைக்காரியாக இருக்கும் என் பத்து வயது மகள் அடி வாங்கி அலறும் சத்தத்தில் மட்டும் எப்படி விளிக்கின்றேனோ தெரியவில்லை. நாளைக்கு காலையில் எழும்பி வீரமாகாளி அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற நினைவுடன் படுத்து விடியவே எழும்புகின்றேன்.எனக்கென்று மன்றாட ஒன்றும் இல்லையென்றாலும் என் ஐந்து பிள்ளைகளும் இப்படியே அடி வாங்கி சாகாமல் என்றாவது ஒரு நாள் கலியாணம் கட்டி நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று நேர்த்தி வைக்கவாவது நான் ஒவ்வொரு செவ்வாயும் வீரமாகாளி அம்மன் கோவிலுக்கு போகின்றவள். ஒரு நாளாவது அம்மன் எண்ட நேர்த்தியை காதால கேட்காமலா விடுவாள். விடியவே எழும்பிட்டன். வளவின் இன்னொரு மூலையில் இருந்து காட்டுக் கிணற்றில் வாளி போட்டு குளித்து விட்டு காலம்பற 6 மணிக்கு போய் கணக்கர் சந்தியில் நிற்கின்றேன். கொஞ்ச நேரத்தில் வான் பஸ் வரும். இந்த காலையில் சைக்கிளில் ரியுசன் கிளாசுக்கு சில பிள்ளைகள் சைக்கிளில் போய்க் கொண்டு இருக்கின்றனர். அதில் கொஞ்சம் வளர்ந்த பெடியங்களும் போவதால் அந்த பெடியன் எனக்கு அருகில் வரும் மட்டும் அவனை நான் கவனிக்கவில்லை. கிட்ட வருகின்றான். அவனை எங்கோ பார்த்து இருக்கின்றேன் என யோசித்து அவன் யார் என்றதை நினைவுபடுத்த முன் அவன் என்னை நெருங்கிவிட்டான். அவன் யார் என நினைவுக்கு வருகின்றது. இனி ஓட முடியாது. ஏதாவது சொல்லி அனுப்பிவிடலாம். அம்மாளாச்சி மேல அடிச்சு சத்தியம் செய்தால் என்னை விட்டு விடுவான். அவன் விடவில்லை அருகில் வந்தவன் "நீங்கள் எவ்வளவு சொல்லியும் திருந்தவில்லை" என்று சொல்கின்றான். பிஸ்டலை இடுப்பில் இருந்து எடுக்கின்றான். என் நெற்றியில் வைக்கின்றான். எனக்கு நல்ல வடிவாக இருக்கும் பொட்டில் துப்பாக்கி முனை அழுத்துகின்றது வெடி வைக்கின்றான் என் தலை சிதறுகின்றது பின் மண்டை வழி வெளியே வந்த மூளை சிதறி சின்னஞ்சிறு துண்டுகளாக அருகில் இருக்கும் வேலிக் கதியால் எங்கும் மஞ்சளும் வெளுப்பும் நிறைந்த நிறத்தில் போய் ஒட்டிக் கொள்கின்றது. மண்டையில் இருந்து வெளியேறிய இரத்தம் ஒரு சிறு தீவென விரைய, அதில் கிளைத்த இன்னொரு சிறு இரத்த தீவு எதையோ தேடி அலைந்தவாறு நீள்கின்றது. தன்னை கொல்ல சொன்ன அறம் ஏன் தன்னை மட்டும் ஏன் கொல்கின்றது என்று நியாயம் கேட்பதற்காக அது விரைகின்றது போல... என் இறுதி மூச்சு நிற்கும் முன்னர் என்னைப்பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல கிடக்கு. அது எனக்காக அல்ல... நியாயம் தேடி விரைந்து கொண்டு இருக்கும் என் இரத்தத்தின் நீட்சி அமைதியடைய. -தொடரும்1 point- அன்புள்ள அம்மா....
1 pointஅம்மா! சென்ற இரு வருடங்களுக்கு முதல் பாக்கியம் அக்காவும் இறைவனடி சேர்ந்து விட்டார். அதில் கொடுமை என்னவென்றால் அவவுக்கு இவ்வளவு பிள்ளைகள் இருந்தும் சொத்துக்கள் இருந்தும் கடைசியில் அனாதை போலவே வாழ்ந்தார். அவ வாழ்ந்த வாழ்க்கை உங்களுக்கு தெரியாதல்ல. பிள்ளைகளுக்காக தனது சுக போகங்களை தியாகம்செய்து பிள்ளைகளை படிக்க வைத்தார். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் நல்ல நிலையில் தான் இன்றும் வாழ்கின்றார்கள். ஆனால் பாக்கியம் அக்காவை பெற்ற பிள்ளைகள் யாருமே கவனிக்கவில்லை.பிள்ளைகளுக்குள் அவர் பாக்கட்டும் இவர் பாக்கட்டும் என்ற மனப்பாங்கும்....அவர் என்னை விட நல்லாய் இருக்கிறார் இவர் என்னைவிட நல்லாய் இருக்கிறார் என்ற மனப்பாங்கும் ஒரு பெற்றதாயை நடுத்தெருவில் விட்டு விட்டதம்மா. கொள்ளி வைக்கக்கூட ஆக்கள் இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரர் கொள்ளி வைத்ததாக கேள்விப்பட்டேன் அம்மா.ஆனால் பாக்கியம் அக்கா பெற்ற பிள்ளைகள் பணத்தின் மூலம் எதையும் சாதிக்கலாம் என நினைத்து விட்டார்கள். கொள்ளி வைத்தவருக்கு ஒரு லட்சம் ரூபா கொடுத்தார்களாம். இங்கே பாசத்திற்கு முதல் பணம் தான் முக்கியமாய் போய் விட்டதம்மா. இப்போது பாக்கியம் அக்காவின்ரை பெயரில் மணிமண்டபமும் பஸ் தரிப்பு நிலையமும் பிள்ளைகள் கட்டி குடுத்திருக்கினம். பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழாவும் பாக்கியம் அக்காவின்ரை பெயரிலை தான் செய்யினமாம். அது மட்டுமில்லாமல் பள்ளிக்கூடத்துக்கு குழாக்கிணறு அடிக்க அரைவாசி பணம் குடுத்து விட்டு உபயம் அமரர் பாக்கியம் என எழுத்தும் படியும் வற்புறுத்தினார்களாம்.வலக்கை குடுக்கிறது இடக்கைக்கு தெரியக்கூடாது என்பார்கள். ஆனால் ஒரு கையுமே கொடுக்காமல் புகழ் மட்டும் தேடுகின்றார்கள் அம்மா. அம்மா ! வட்டி கனகசபை மாமா இஞ்சை ஜேர்மனியிலை தான் இருக்கிறார். அவர் இப்ப எப்பிடி இருக்கிறார் தெரியுமே?1 point- ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
முடிவு வரைக்கும் வாசித்த உறவுகளுக்கும், பின்னூட்டங்கள் இட்டும் பச்சைப்புள்ளிகளை வாரி வழங்கியும் உற்சாகப்படுத்திய உறவுகளுக்கும் நன்றி. ராசுக்குட்டி பற்றி இன்னும் நிறைய கதைகள் உள்ளன. அவர் பெண்பார்க்கும் படலத்தில் நடந்த கதை, அவரது அம்மா கந்தசஷ்டி விரதம் பிடிக்கும் நிலை வரைக்கும் அவர் கொண்டு போய் விட்ட கதை, பிஸ்ஸா டிலிவரிக்கு போன காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களின் கதை என்று நீளமாக ஒரு பட்டியலே இருக்கு. உண்மைக் கதை, கொஞ்சம் புனைவுகள் கலந்து எழுதப்பட்டது. ராசுக்குட்டி ஆஸ்பஸ்திரியில் CT scan எடுக்கப் போயிருந்த போது, அவர் எழுதிக் கிழித்துக் கொண்டிருக்கும் ஒரு இணையத்தின் பிதாமகனுக்கு இப்படி தான் ஸ்கான் எடுக்கும் நிலைக்கு வந்திருப்பதாக தகவல் அனுப்பி அந்த பிதாமகனையும் கவலைப்பட வைத்த விடயத்தினை இடையில் செருக மறந்து விட்டார் என்று தகவல் வந்திருக்கு1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 30, ஐப்பசி 2015 தெற்கிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள மத யாணைக் கூட்டங்களைப் பாவித்து தமிழர்கள் விரட்டியடிப்பு - உபயம் சிங்கள ஆக்கிரமிப்பிற்கு துணையாக நின்ற துணைராணுவக் குழுக்களின் துரோகம் தமிழர் தாயகத்தை சிறுகச் சிறுகத் துண்டாடி ஈற்றில் அவர்களின் வாழிடங்களிருந்து நிரந்தரமாகவே விரட்டிவிடும் சிங்கள அரசின் இனரீதியிலான நில ஆக்கிரமிப்பிற்கான ஏதுநிலையினை கருணாவும் அவனுடைய சகாக்களும் ராணுவத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் இன்று தமிழர் தாயகத்தில் தங்குதடையற்ற சிங்கள ஆக்கிரமிப்பு இடம்பெறுவது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தவகையில் 2007 இற்கு முன்னர் கனரக பீரங்கிகளினாலும், விமானக் குண்டுவீச்சினாலும் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் இழந்த தமிழினம் தற்போது மதம் பிடித்த காட்டு யானைகள் வடிவில் உயிர்களையும், வாழ்வாதாரத்தினையும் இழந்துவருகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் காட்டு யானைகளின் அட்டகாசம் தானே என்று தெரிந்தாலும், இதன் பின்னாலிருக்கும் சூட்சுமம் மிகவும் திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்டுவரும் செயற்கையான அனர்த்தம் என்றால் அது மிகையில்லை. 2007 வரை புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த படுவான்கரைப் பகுதியில் தற்பொழுது மீள்குடியேறியுள்ள தமிழர்களின் நிலங்களில் அதிகப்படியான காட்டுயானைகளின் தாக்குதல்கள் நடக்கத் தொடங்கியிருக்கிறன. இத்தாக்குதல்களில் பெருமளவு தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, பல வீடுகள், விவசாயப் பயிர்கள் என்பன நாசமக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இத்தாக்குதல்கள் பற்றிக் கூறும் படுவான்கரையினை தனது பிறப்பிடமாகவும் வாழ்ந்த இடமாகவும் கொண்ட பல தமிழர்கள் இந்த யானைகளின் அட்டகாசம் தாம் இதுவரையில் பார்த்திராதவொன்று என்று குறிப்பிடுகின்றனர். இந்த யானைகளின் தாக்குதல்களின் பின்னால் தம்மை தமது நிலங்களிருந்து நிரந்தரமாக விரட்டியடிக்கும் சிங்கள ஆக்கிரமிப்பு அரசின் கை மறைந்திருக்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர். மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்தின் பட்டிப்பளை - கச்சகொடி கிராம அபிவிருத்திச் சபையின் தலைவரான யோகராசா கணேஷ் இதுபற்றிக் கூறுகையில், தம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ள பல முறைப்பாடுகளை பிரதேச செயலக அதிகாரிகளோ வனவள அமைச்சகமோ ஏற்றுக்கொள்ள மறுத்துவருவதாகவும், அதேவேளை சிங்களக் குடியேற்றக் கிராமங்களுக்கு தேவையானளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுவருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். "யுத்தம் நடைபெற்ற காலத்தில் எமது பகுதிகளில் யானைகாளின் தாக்குதல் எதுவுமே இருக்கவில்லை. காட்டுயானைகளை காண்பதென்பது மிக அரியவிடயமாகவே அப்போது இருந்தது. எப்போதாவது ஊர்மனைகளுக்குள் வரும் யானை எதுவித சேதத்தினையும் செய்யாது திரும்பிச் சென்றுவிடும். ஆனால், இப்போது அப்படியல்ல. கூட்டமாக மதம் பிடித்த யானைகள் வருகின்றன. இவை கண்ணில்ப் படும் மக்களைக் கொல்வதுடன் வீடுகள், பயிர்கள் என்பவற்றிற்கும் கடுமையான சேதத்தினை உண்டுபண்ணுகின்றன" என்று அவர் கூறுகிறார். இலங்கை வனவிலங்கு திணைக்களத்தின்படி தென்பகுதிக் காடுகளிலிருந்து பல அபிவிருத்தித் திட்டங்களுக்காக அப்பகுதி நிலங்கள் உபயோகிக்கப்பட்டபோது அக்காடுகளில் சுற்றித்திருந்த பல யானைகளை மட்டக்களப்பு மாவட்டத்தின் காடுகளில் தாம் இறக்கிவிட்டதாகக் கூறுகிறார்கள். குறிப்பாக அம்பாந்ந்தோட்டை, மத்தளை போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்ட துறைமுகம் மற்றும் விமான நிலையங்களுக்கான காட்டு நிலங்களிலிருந்து பிடிக்கப்பட்ட யானைகளே மட்டக்களப்பில் காடுகளுக்குள் விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் இப்பகுதிகள் இருந்தகாலத்தில் யானைகளின் பயம் இருக்கவில்லையென்று படுவான்கரை மக்கள் தெரிவிக்கின்றனர். புலிகளின் முகாம்களும், காவலரண்களும் இப்பகுதியெங்கும் பரவிக் கிடந்ததனால் யானைகள் இப்பகுதிக்குள் நுழைவதென்பது தடுக்கப்பட்டே வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், 2007 இன் பின்னர் துணைராணுவக் குழுக்களின் உதவியோடு கிழக்குமாகாணம் புலிகளிடமிருந்து ராணுவத்தால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டபின்னர் நிலைமை மாறியிருப்பதோடு, தென்பகுதி யானைகள் மட்டக்களப்பு காடுகளில் இறக்கிவிடப்படுவதும் நடந்துவருகிறதென்று மேலும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர். "எமது பிள்ளைகளால் பாடசாலைக்குச் செல்ல முடியவில்லை. வீட்டின் வருமானத்திற்காக ஆண்கள் வேலைக்குச் செல்வது கடிணமாக இருக்கிறது. வேலைக்குப் போகாது வீட்டிலிருந்து தமது குடும்பங்களை யானைகளிடமிருந்து காக்கவேண்டியிருப்பதால் பெருமளவு குடும்பங்கள் கடுமையான பிரச்சினைகளை சந்தித்துவருகின்றன. அண்மையில்கூட வெல்லாவெளிப் பகுதியில் வீட்டில் தனியாக உதவியின்றி இருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரை யானை அடித்துக் கொன்றிருக்கிறது" என்று அவர் மேலும் கூறினார். "காட்டுயானைகளின் அட்டகாசத்தினைப் பொறுக்கமுடியாத ஊர்மக்கள் வெல்லாவெளி பிரதேச செயலகத்தின் முன்னால் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்". "யானைகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரியபோது, "ஒன்று அல்லது இரண்டு யானைகள்தான் இருக்கின்றன. அவற்றையும் வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்றுவிட்டோம், இனி பிரச்சினையில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், யானைகளின் அட்டகாசம் தொடர்கிறது, மேலும் அதிகாரிகள் சொல்வதுபோல ஒன்றோ இரண்டு யானைகளோ அல்ல, அவை கூட்டமாக வருகின்றன" என்று அவர் மேலும் கூறுகிறார். 2007 இல் புலிகள் கச்சக்கொடி பகுதியிலிருந்து முற்றாக வெளியேறியபின்னர் இதுவரையில் யானைகளின் அட்டகாசத்தில் குறைந்தது 27 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 40 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் 20 வீடுகள் முற்றாக நாசமாக்கப்பட்டிருப்பதோடு, பெருமளவு பயிர்களும் நாசமாக்கப்படுள்ளன. "யானைகள் கூட்டம் கூட்டமாகவே தாக்குதலில் ஈட்டுபடுகின்றன. இவை எங்கிருந்து வந்தன என்பது பெரும் புதிராகவே இருக்கிறது" என்று கணேஸ் கூறுகிறார். மட்டக்களப்பு மாவட்டத்தின் அம்பாறையுடனான எல்லைப்பகுதியில் குடியேறிவரும் சிங்களவர்களுக்கு ராணுவமும், சிங்கள துணைராணுவக் குழுவொன்றும் யானைகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு வழங்கிவருகின்றன என்று தெரியவருகிறது. ஆனால், தமிழர்களின் கிராமங்களின் எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் ஊர்காவல் நிலையங்கள் யானைகள் தமிழர் பகுதிக்குள் ஊடுருவுவதை அனுமதிப்பதுடன், வேண்டுமென்றே தடைகளைத் தளர்த்திவருவதாகவும் தமிழ்மக்கள் முறையிட்டுவருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் துணைராணுவக்குழுக்களின் துணையுடன், சிங்கள அரசு பெருமளவு சிங்களவர்களைக் குடியேற்றிவருகிறது. அம்பாறை, பொலொன்னறுவை எல்லைகளில் இடம்பெறும் இக்குடியேற்றங்களை ஊக்குவிக்கும் முகமாக இவ்வெல்லைகளில் அமைந்திருக்கும் தமிழர் கிராமங்களுக்குள் காட்டுயானைகளின் ஊடுருவலினை அரசாங்கம் ஊக்குவித்துவருவதாக மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் பணிபுரியும் சமூக சேவக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழர்கள் தாமாகவே பாதுகாப்புக் கருதி இடம்பெயர்ந்தபின்னர் அப்பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றுவது இலகுவென்று அரசு நினைப்பதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். படுவான்கரைப்பகுதிகளில் தற்போது குடியேறிவரும் சிங்களவர்கள் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், அறுகம்பை, உகன ஆகிய பகுதிகளிலிருந்தும், கண்டி , நுவர எலிய மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் வந்திருப்பதாக மட்டக்களப்பு செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு குடியேறிவரும் பெருமளவு சிங்களவர்கள் சிங்கள ராணுவ வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. கச்சகொடி கிராம அபிவிருத்தி சபைத் தலைவரின் கருத்துப்படி, 2007 இல் இப்பகுதியில் யுத்தம் முடிவிற்கு வந்தபோது சுமார் 350 குடும்பங்கள் இப்பகுதியில் வசித்து வந்ததாகவும், அதன்பின்னர் இடம்பெற்றுவரும் யானைகளின் தாக்குதல்களையடுத்து பலர் வெளியேறிவிட்ட நிலையில் தற்பொழுது வெறும் 62 குடும்பங்களே கச்சக்கொடி பகுதியில் வாழ்வதாகவும் கூறுகிறார். மீதமுள்ள தமிழர்களில் பலர் கச்சக்கொடிப் பகுதியினை விட்டு வெளியேறும் எண்ணத்திலேயே இருப்பதாகவும், சிங்கள அரசும் இதைத்தான் எதிர்பார்க்கிறது என்று அவர் மேலும் கவலையுடன் கூறுகிறார்.1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 5, ஐப்பசி 2015 சிறிசேனவும், ராணுவமும் தமிழர் நிலங்களை அபகரிக்க, ஆதரவு நல்கும் துணைராணுவக் குழுக்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியான சிறிசேனவின் அதிகாரத்தில் இருக்கும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுப்புறச் சூழல் அமைச்சு மட்டக்களப்பு வனவளத் திணைக்கள அதிகாரிக்கு அனுப்பியிருக்கும் கட்டளையின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள வனப்பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்ட "ஒமுனுகல" எனும் சிங்களக் குடியேற்றத்தின்கீழ் மேலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலத்தினை சேர்க்குமாறு கோரப்பட்டிருக்கிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியென்கிற பெயரில் முன்னைய மகிந்தவின் அரசு ஆரம்பித்த இந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கு மேலும் 25,000 ஏக்கர்களை மைத்திரிபால சிறிசேனவின் அரசு இணைக்கவிருக்கிறது. முன்னைய அரசில் துணையமைச்சராகவும் கிழக்கு மாகாணத்தின் புணர்வாழ்வு மற்றும் அபிவிருத்திக்கான அமைச்சராகவும் இருந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி எனும் ஆயுததாரியும், கிழக்கு மாகாண முதலமைச்சராகவிருந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் ஆயுததாரியும் இந்தத் திட்டமிட்ட சிங்களமயமாக்கல் குறித்து எதுவித நடவடிக்கைகளையும் எடுக்க மறுத்துவருவதாகவும், சிலவிடங்களில் இவர்களே சிங்கள அரசின் ஏஜெண்ட்டுகளாக தமிழர்களை இந்நிலங்களிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சிறிசேன அரசினால் தமிழரிடமிருந்து பறிக்கப்படவிருக்கும் சுமார் 25,000 ஏக்கர்கள் காணிகளில் தமிழர்கள் தமது கால்நடைகளை மேய்ப்பதனை ராணுவம் தடுத்திருப்பதோடு, இது இனிமேல் சிங்களவர்களுக்குச் சொந்தமான பகுதி, அத்துமீறிப் பிரவேசித்தால் தண்டிக்கப்படுவீர்கள் என்றும் கூறியிருக்கிறது. தமிழர்களை அவ்விடத்தை விட்டு அகலுமாறு கோரும் அரசின் அறிவித்தற் பலகைகளும், புதிய எல்லைக் கோடுகளும் இப்பகுதியெங்கும் ராணுவத்தாலும், அரச அதிகாரிகளாலும், துணைராணுவக் கொலைக்குழுக்களாலும் போடப்பட்டு வருவதாகத் தெரிகிறது. தமது நிலங்களிலிருந்து துரத்தப்பட்ட தமிழர்களின் வேதனைகளை அதிகரிக்கும் முகமாக, "பாதுகாக்கப்பட்ட வனம் " என்கிற போர்வையில் பறிக்கப்பட்ட இந்த மேய்ச்சல் நிலங்களில் சிங்களவர்களை விவசாயம் செய்ய அரசும் ராணுவமும் ஊக்குவித்துவருவது வெளிப்படையாகவே தெரிகிறது. ஒமுனுகல வனப்பகுதிக்காக அரசினாலும் ராணுவத்தாலும் இடப்பட்ட அறிவிப்பு தமிழர்களின் தாயகத்திலிருந்து துண்டாடப்படுவதற்கு ஏதுவாக ராணுவத்தாலும், துணைராணுவக் கொலைக்குழுக்களாலும் நிலத்தில் வரையப்பட்டிருக்கும் புதிய எல்லைக் கோடுகள் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையில் அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட பிரேரணையினை எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்வதாகப் பாசாங்கு செய்துள்ள சிறிசேன அரசு, தமிழரின் நிலங்களை அவர்களிடமே மீண்டும் ஒப்படைப்பதென்றும், ராணுவம் நிர்வாக விடயங்களில் தலையிடாது என்றும் உறுதியளித்துவிட்டு கிழக்கில் தனது ராணுவத்திற்கும், சிங்கள அதிகாரிகளுக்கும் கொடுத்துள்ள பணிப்பின்படி, மேலும் மேலும் தமிழர் நிலங்களை சிங்களமயமாக்கி வருவதுடன் இப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்களை மீண்டும் அப்பகுதிக்கு வந்தால் தண்டிக்கப்படுவீர்கள் என்றும், கால்நடைகளைக் கைப்பற்றுவோம் என்றும் மிரட்டிவருகிறது. தமிழர்களை அழைத்து மிரட்டும் இந்த கூட்டங்களில் தவறாமல் பங்குகொள்ளும் கருணா மற்றும் பிள்ளையானின் முக்கியஸ்த்தர்கள் தமது பிரதேச மக்களின் அவலநிலைகண்டு எதுவுமே செய்யாமல், "இனிமேல் இங்கு வரவேண்டாம்" என்கிற ராணுவத்தின் பாணி மிரட்டல்களையே விடுப்பதாக பாதிக்கப்பட்ட தமிழர்கள் கூறுகிறார்கள். மகாவலி அபிவிருத்தியமைச்சு மற்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் ஒரு அபிவிருத்தி நிறுவனம் 1980 ஆம் ஆண்டு வரைந்த திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 53,665 ஹெக்டெயர்கள் நிலம் மகாவலி திட்டத்தின்ற்குள் உள்வாங்கப்படுமென்றும், இப்பகுதிக்கு "ஒமுனுகல பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி" என்று அழைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2013 ஆம் ஆண்டு, மகிந்த அரசின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த விடுத்த அறிக்கையில் 25,000 ஏக்கர்களுக்கும் அதிகமான நிலம் இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சேர்க்கப்படப்போகிறது என்று கூறியிருந்தார். அதன்படி கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று, கோரளைப்பற்று தெற்கு மற்றும் ஏறாவூர்பற்று ஆகிய தமிழர் பகுதிகளிலிருந்து பெருமளவு மேய்ச்சல் நிலங்கள் இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சேர்க்கப்படுவதாகவும் அறிவித்திருந்தார். சுமார் கடந்த 50 வருடங்களாக தமது வாழ்வாதாரத்திற்காக இந்நிலங்களை உபயோகித்துவரும் தமிழ் விவசாயிகள் இதனால் தமது கால்நடைகளை வளர்ப்பதற்கான மேய்ச்சல் நிலங்களையும், கூடவே வாழ்வாதாரத்தினை இழக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. படுவான்கரையில் வாழும் தமிழர்கள் மீது ராணுவமும், கருணா மற்றும் பிள்ளையானின் கொலைக்குழுக்களும், சிங்கள துணைராணுவக் குழுவொன்றும் கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து இப்பகுதிகளிலிருந்து அவர்களை நிரந்தரமாகவே வெளியேற்றும் கைங்கரியத்தில் ஈடுபட்டிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். படுவான்கரையில் இதுவரையில் ராணுவத்தால் அடாத்தாகக் கைப்பற்றப்பட்ட தமிழரின் நிலங்களுக்கு அரசின் உத்தியோகபூர்வ அங்கீகாரம் மூலம், நிரந்தரமாகவே தமிழர்கள் தமது தாயகத்தை பகுதிகளாக இழக்கும் நிலை உருவாகியுள்ளது. தமது நிலங்களில் சிங்களவர்கள் அடாத்தாகக் குடியேறிவருவதைக் கண்டித்து பொலீஸாரிடமும், பிரதேச செயலக அதிகாரிகளிடமும் தமிழர்கள் முன்வைத்த முறைப்பாடுகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், வருடம் தோறும் தமிழ் விவசாயிகளை பயிர்ச்செய்கைகளுக்கு முன்னர் சந்திக்கும் அதிகாரிகள் தற்போது வேண்டுமென்றே தவிர்த்துவருவதாகவும் மக்கள் கூறுகின்றனர். இதேவேளை அரசாங்கத்தாலும், ராணுவத்தாலும், துணைராணுவக் குழுக்களின் அனுசரணையுடனும் துண்டாடப்பட்டுவரும் தமிழரின் மேய்ச்சல் நிலங்களில் சிங்களவர்கள் காலப் பயிர்ச்செய்கைக்காக நிலங்களை கனரக இயந்திரங்கள் கொண்டு உழுதுவருவதை தமது காணிகளைப் பறிகொடுத்த தமிழர்கள் கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருப்பது நடந்துவருகிறது. பல நூற்றுக்கணக்கான சிங்கள விவசாயிகள், ராணுவத்தினதும், துணைராணுவக் கொலைக்குழுக்களினதும் உதவியுடன் இந்நிலங்களில் பயிர்ச்செய்கையினை ஆரம்பித்திருக்கும் நிலையில், தரவைப்பகுதியை ஆக்கிரமித்து நிற்கு ராணுவம் இப்பகுதிக்குள் காலநடைகளைக் கொண்டுவந்தால் தாக்கப்படுவீர்கள் என்று கூறியிருப்பதுடன், இனிமேல் இப்பகுதிக்குள் அவர்களை நிரந்தரமாகவே வரக்கூடாதென்று மிரட்டி அனுப்பியிருப்பதாக அங்கு வரவழைக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 5, ஆவணி 2015 மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமப்பகுதிகளில் ராணுவப் புலநாய்வுத்துறையினரால் ரோந்தில் ஈடுபடுத்தப்படும் பிள்ளையான் கொலைக்குழு கொக்கட்டிச்சோலைப் பகுதியிலிருந்து வரும் செய்திகளின்படி, படுவான்கரையின் பல கிராமங்களிலும் ராணுவப் புலநாய்வுத்துறையினரும், பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களும் மக்களைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகத் தெரிகிறது. திடீரென்று மக்களை அச்சுருத்தும் வகையில் ராணுவப் புலநாய்வுத்துறையினரும், பிள்ளையான் கொலைக்குழுவும் மக்கள் மத்தியில் நடமாடத் தொடங்கியிருப்பது தமக்கு அசெளகரியங்களை ஏற்படுத்துவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர். தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், பெருமளவு துணைராணுவக் கொலைக்குழு உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் ஆயுதங்களுடன் உலாவருவது மக்களை அச்ச நிலையில் வைத்திருந்து வாக்குகளைப் பிரிக்கும் தந்திரத்திற்காகத்தான் என்று அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். பொதுச்சந்தைகள், வங்கிகள், தேனீர்க் கடைகள், முக்கியமான சந்திகள் ஆகிய இடங்களில் பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களும் சிங்கள புலநாய்வுத்துறையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதாகத் தெரிகிறது. மூன்று நாட்களுக்கு முன்னர் தாந்தா மலை ஆலய உற்சவத்தின்போது, தொடர்ச்சியாக அவ்வாலயத்திற்கு வந்த துணை ராணுவக் கொலைக்குழு உறுப்பினர்கள் மக்களை அச்சுருத்தும் பாணியில் நடந்துகொண்டதாகவும், ஆலயத்திற்கு வருகைதந்த பல பக்தர்கள் இவர்களால் விசாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொலைக்குழுத் தலைவன் பிள்ளையானுக்குப் பெருமை சேர்த்த இரட்டைப் படுகொலைகள். அமரர்கள் ஜோசேப் பரராஜசிஙம் மற்றும் ரவிராஜ் ராணுவப் புலநாய்வுத்துறையினரும், துணைராணுவக் கொலைக்குழுக்களும் வீதிகளில் வலம்வந்து பாடசாலை செல்லும் மாணவிகளை துன்புறுத்துவதாகவும், இதனால் பாடசாலை செல்வதற்கே அவர்கள் அஞ்சுவதாகவும் தெரிவிக்கும் பெற்றோர்கள், வீடுகளில் தனியே இருக்கும் பெண்களின் பாதுகாப்பும் இந்தச் சமூக விரோதிகளால் கேள்விக்குறியாகியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். இதேவேளை படுவான்கரை மற்றும் பட்டிப்பளை ஆகிய பகுதிகளில் பிள்ளையான் கொலைக்குழுவுக்கு ஆதரவாக மக்களை அச்சுருத்திவரும் ராணுவப் புலநாய்வுத்துறையினரும், கொலைக்குழு உறுப்பினர்களும், மக்களை பிள்ளையானின் கட்சிக்கே வக்களிக்க வேண்டுமெ என்றும் வற்புறுத்திவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.1 point- நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
1 pointஅவரவராய் பார்த்து திருந்தினால்தான் உண்டு. கொரனா ஆட்டத்தில் இவ்வளவுபட்ட பின்பும் ஆபத்து புரிய இல்லை, சமூக பொறுப்பு இல்லை என்றால் நாம் என்ன செய்யமுடியும்? முககவசம் அணியாமல் அருகில் வருபவர்கள் உள்ளார்கள். முகக்கவசத்தை மூக்கின் கீழ், நாடியின் கீழ் இறக்கிவிட்டு பாசாங்கு செய்பவர்கள் உள்ளார்கள். சமூக இடைவெளியை பேணாதவர்கள், சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்காதவர்களில் நாங்கள்தான் ஆறு அடி தள்ளி நின்று ஏதோ முடியுமான அளவு எங்களை காப்பாற்றி கொள்ளவேண்டும். பொது இடங்களில் இவர்களுடன் வாயை திறந்தால் தேவை இல்லாத பிரச்சனைகளே வரலாம். அவர்கள் ஏற்கனவே தெரிந்துகொண்டுதான் சுகாதார வழிகாட்டுதல்களை உதாசீனம் செய்கின்றார்கள். தெரிந்துகொண்டு தவறு செய்பவர்களிடத்தில் வாயை கொடுத்து ஏன் நாம் ஏன் நமது அமைதியை, மரியாதையை இழக்க வேண்டும்? கொரனா காலத்தில் கடந்த வருடம் ஓர் தமிழ் கடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மரணத்தில் முடிந்தது.1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 pointமாண்புயர் இவ்வருள் அனுமானத்தை தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம் உனக்காகவே நான் வாழுவேன் உன் பாதை நான் செல்லுவேன்1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 pointகாலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 ஒரு நாளாகிலும்.. ஒரு பொழுதாகிலும்1 point- காவலூர்க் கனவுகள்
1 pointதூர இருந்து பாக்கும் கடல்கோட்டை, அந்தோனியார் கல்லூரி இடைவேளைநேரத்தில் 'பாதையில்' காரைநகர் போய்வருவதும் ஒரு சுகம்1 point- நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
1 pointஇது ஒரு வில்லங்கமான சமாச்சாரம். கோயில்/விழாக்கள் போன்ற இடங்களிலையும் இப்படியான வார்த்தைகள் வந்து போகும்.1 point- நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
1 pointயாயினி...காலத்துக்கு ஏற்ற பதிவு...அதே நேரம் உங்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகின்றது....! எமது மனம் சோகமான நிலையில் இருக்கும் போது ...அழுவதற்கு ஒரு தோள் கிடைக்காதா எனத் தேடும் நிலை வரும்போது, உண்மையான நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது அந்தச் சோகங்கள் கொஞ்சம் குறைவது எனது அனுபவத்தில் நான் படித்தது! மனிதர்களின் செயல்கள்...அவர்களது அப்போதைய மன நிலையையே வெளிப்படுத்தும்! அவர் அப்போது என்ன கொதி மனநிலையில் இருந்தாரோ தெரியாது! மற்றது....மனிதர்கள் எல்லோரும் சமூக விலங்குகளும் இல்லைத் தானே! விதி விலக்குகளும் உண்டு தானே! ஒரு வேளை....மரத்திலிருந்து...நேரே மகிழுந்துக்குள் விழுந்தவராகவும்...அவர் இருக்கக் கூடும்!1 point- நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
1 pointயாயினி... கொரோனா நேரத்தில், மிகப் பொருத்தமான பதிவை பதிந்தமை சிறப்பு. இங்கு, மாஸ்க் சரியாக போடாமல் ... கடைக்கு உள்ளே அனுமதித்தாலே... கடைக்காரருக்கு... 500 ஐரோ தண்டம் அறவிடுவார்கள். அதனால்... கடைக்காரர், பயந்து போய்... வாடிக்கையாளரை... வற்புறுத்தினால், அவர் திரும்ப வரமாட்டாரோ... என்ற, இக்கட்டான, நிலைமையில் உள்ளார்கள். இங்கு... இந்த, மாஸ்க் அணிவதை கண்காணிக்காத, 600 பேருக்கு மேல் வேலை செய்யும், பெரிய தொழில் நிறுவனங்களையே... தண்டமும் போட்டு, குறிப்பிட்ட காலத்துக்கு பூட்டி விட்டார்கள். ஒவ்வொருவரும் தங்கள் நாட்டு அரசாங்கம் சொல்லுகிற படி.... நாம் தான்.... அந்த நடைமுறையை... பின் பற்ற வேண்டும்.1 point- காவலூர்க் கனவுகள்
1 pointதாயக கனவுகள் எல்லாம் நனவாக்க வேண்டுமென்று தான் ஆசை . அது நிராசையாக போய்விடக்கூடாது , என்றுதான் எல்லோருக்கும் ஆசை ..1 point- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
சிறித்தம்பி! உழைக்காமல் வந்த சொத்தும் பணமும் ஒருகாலமும் கையோடை நிக்காது கண்டியளோ... தொடருங்கோ மிச்சத்தை வாசிப்பம்.1 point- காவலூர்க் கனவுகள்
1 pointநல்லதொரு மண்வாசனை கவிதை. ஒரு சில நாட்களுக்கு முன் யூரியூப்பில் ஊர்காவத்துறை,கரம்பொன் போன்ற இடங்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அற்புதமான இடங்கள். இவற்றையெல்லாம் இழந்து கொண்டு வருகின்றோமோ என்ற ஆதங்கம் நெஞ்சை வருடுகின்றது.1 point- காவலூர்க் கனவுகள்
1 pointஇதைத் தான் ....பொன் மாலைப் பொழுது...என்று கூறுவார்கள் போலும்....காவலூரின் கண்மணி..! எனக்கென்னவோ....அணைக்கட்டிலிருக்கும்...கண்ணா மரமாக இருக்கத் தான்...ஆசை...! பொன் மாலைப் பொழுதுகளை மட்டுமல்ல,,,,,,,,,அதி காலைப் பொழுதுகளையும் தரிசித்த படியே....வேர் தடவும் மீன்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளலாம்...! கவிதைக்கு நன்றி...!1 point- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
பூமியில் பிறந்த எல்லா உயிர்களுக்கும்...அவர்கள் பிறந்து வளரும் சூழலுக்கேற்பச் சில ஆசைகளும் ...எதிர் பார்ப்புகளும் இருக்கும்! அவற்றை நோக்கிய பயணம் தானே வாழ்க்கை, சிறியர்? அவற்றை அடைந்த பின்னரும்...ஒரு முழுமையான மனத் திருப்தி ஏற்பட மாட்டாது...! அதை விடவும் புதிய ஆசை ஒன்று தோன்றும்..! காரே இல்லாதவன்....காருக்காக ஏங்குவான்..! பென்ஸ் கார் வைத்திருப்பவன்....வீதியில் போகும் லம்போகினிக்காக ஏங்குவான்! இதையெல்லாம் கடந்தவன்....ஞானியாகின்றான்..! தொடருங்கள்....!1 point- காவலூர்க் கனவுகள்
1 pointஅந்த காவலூர்காரன் நானும் அந்த காற்றோடும் மண்ணோடும் என் கனவும் பேசியது நினைவிருக்கு.என் கண் முன்னே என் ஊரை கண்டது போல் கவிதை சொல்லியது.மகிழ்ச்சி வாழ்த்துகள்.1 point- காவலூர்க் கனவுகள்
1 pointகண்ணைக் கவரும், அழகிய படமும்.. அருமையான கவிதையும்.... ரசித்தேன்... கண்மணி அக்கா.1 point- காவலூர்க் கனவுகள்
1 point- ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
இறுதிப்பகுதி. சாலை எங்கும் பனிக்காலத்தின் முடிவுரையை சிறு சிறு பனித்துளிகள் எழுதி கொண்டு இருந்தன. காற்று கடுமையாக வீசி குளிர்காலத்தினை அகற்றி அந்த இடத்தில் இலையுதிர்காலத்தை விதைத்துக் கொண்டு இருந்தது. இனி கொஞ்ச காலத்துக்கு காற்று பெரிசாக வீசாது. இலைகளை உதிர்த்து கொட்ட வைப்பதற்காக செப்ரம்பர் இறுதியில் மீண்டும் வரும். குளிர் மறை இரண்டில் இருந்தது. ராசுக்குட்டி ஸ்கார்புரோவில் எல்ஸ்மியார் எனும் வீதியில் இருக்கும் ஆஸ்பத்திரியின் வரிசையில் நின்று கொண்டு இருந்தார். இந்த ஆஸ்பத்திரிக்கு தமிழர்கள் பலர் இணைந்து பெரியளவு கொடை கொடுத்து இருப்பதால் மனசுக்குள் ஒரு மிதப்புடன் தான் நின்று கொண்டு இருந்தார். கொரனா காலம் என்பதால் ஒவ்வொருவராக விசாரித்தே உள்ளே அனுமதித்துக் கொண்டு இருந்தனர். குளிர் காற்று வேகமாக வீசி முகத்தில் அறைய, மூக்கு விறைத்தவாறு நின்று கொண்டு இருக்கும் போது அவர் முறையும் வந்தது. முன்னுக்கு இருந்த தாதி ராசுக்குட்டியிடம், "நீ எப்ப கடைசியாக வெளிநாடு போனாய், காச்சல் இருக்கா, கொரனா வந்த எவருடனாவது தொடர்பில் இருந்தாயா" போன்ற கேள்விகளை கேட்டு விட்டு "இந்த முககவசத்தை அணிந்து கொண்டு உள் பகுதிக்கு செல்" என்று ஒரு முகக்கவசத்தை கொடுத்தார். ராசுக்குட்டி ஏற்கனவே வீட்டில் இருந்து முகக்கவசம் ஒன்றை கொண்டு சென்று இருந்தாலும், ஓசியாக கிடைக்கும் எதையும் மறுத்து பழக்கமில்லாத அற்(ப)புத குணத்தால் அந்த முக்கவசத்தை வேண்டாம் என்று சொல்லாமல் அதை வாங்கி அணிந்து கொண்டு உள்ளே சென்றார். போன கிழமையும் இதைத்தான் செய்தவர். ஏற்கனவே முதல் கிழமையும் இங்கு வந்திருந்தார். அல்றா ஸ்கானிங்கில் சிறுநீரகப் பாதையில் கல்லு கில்லு இல்லையென்று ரிசல்ட் வந்த பின்னர், சிறு நீரகத்தில் வேறு ஏதும் பிரச்சனை இருக்கா என்ரு பார்க்க CT scan எடுக்க வந்திருந்தார். வெறு வயிற்றில் போனவரை மூன்று கிளாஸ் தண்ணீர் கொடுத்து விட்டு, மல்லாக்க படுக்க வைத்து, ஒரு உருளை வடிவ ஸ்கானருக்குள் அனுப்பும் போது விழி பிதுங்கி, நெஞ்செல்லாம் பாரமாக, ஆள் பயந்து கொண்டு தான் உள்ளே போனவர். அந்த பயத்திலும் கூட அவருக்கு பரிசோதனையை செய்த பெண்ணுக்கு ஒரு 25 வயது தான் இருக்கும் என்றும், வடிவான பெட்டை என்றும், வேறு ஒரு வயதான பெண் வராமல் இந்த இளம் பெண் இன்று தனக்கு ஸ்கான் பண்ண வந்தது தன் அதிஷ்டம் என்றும் நினைக்க தவறவில்லை. CT scan முடிந்த பின் "எப்ப ரிசல்ட்ஸ்" வரும் என்று கேட்க அந்த அழகி, "அடுத்த கிழமை உனக்கு இருக்கும் மற்ற டெஸ்ட் இன் பின் தான் டொக்டர் இதன் முடிவையும் சொல்லுவார்" என்று அனுப்பி வைத்தார். மீண்டும் அந்த இறுதி பரிசோதனைக்கு வந்திருக்கின்றார். இன்று அப்படி எந்தப் பெண்ணுமே அறைக்குள் இருக்க கூடாது, எல்லாரும் ஆண்களாக இருந்து விட்டால் நல்லா இருக்கும் என்று மனசுக்குள் என்ணியபடி வரவேற்பறையில் இருந்த பெண் குறிப்பிட்ட அறைக்குள் சென்றார் ராசுக்குட்டி. ஆனால் அங்கு 25 வயது மதிக்கத்தக்க செக்கச் சிவந்த வேறு ஒரு பெண் நின்று கொண்டு இருந்தார். ராசுக்குட்டிக்கு கொஞ்சமே கொஞ்சமாக வெட்கம் எட்டிப் பார்த்தது. ராசுக்குட்டியின் மனவோட்டத்தை புரிந்து கொண்ட அந்த தாதி நான் தான் டொக்டருக்கு உதவப் போகின்ற பிரதான தாதி என்று சொல்லி, பக்கத்தில் இருக்கும் ஆண் தாதியைக் காட்டி இவர் உதவியாளர் என்று அறிமுகப்படுத்தி வைத்தார். ராசுக்குட்டி வந்திருப்பது cystoscopy எனும் பரிசோதனைக்கு. அது எப்படி இருக்கும் எந்தளவுக்கு வலி இருக்கும் என்பதை மூன்று நாட்களாக வாசிச்சு வாசிச்சு மனசுக்குள் தன்னை தயார்படுத்தி வைத்திருந்தார். இந்த பிரச்சனை ஆரம்பிக்கும் போது இருந்த பயத்தின் அளவு நல்லா குறைந்து இருந்தது ராசுக்குட்டிக்கு. மனுச மனம் எப்பவுமே இப்படித்தான். என்ன ஏது நோய் என்று அறிய முதல் போது பயந்து சாகும், பிறகு மெல்ல மெல்ல பயத்தில் இருந்து வெளியே வரப் பார்க்கும், பின் எது வந்தாலும் சரி என்று ஏற்கத் தொடங்கி தன்னை தயார்படுத்தி வைக்கும். ராசுக்குட்டிக்கும் கொஞ்சம் தைரியம் இந்த 4 மாதங்களுக்குள் வந்து இருந்தது. என்ன நடந்தாலும் குடும்பம் பாதிக்கப்பட கூடாது என்று நினைத்து இடைப்பட்ட காலத்தில் தன் ஆயுள்காப்புறுதி தொகையையும் கூட்டி விட்டிருந்தார். ஒருவிதமான அமைதியும் மனசுக்குள் குடிவந்து இருந்தது அவருக்கு. prostate இல், Bladder இல், சிறு நீரக பாதையில் (urethra ) புற்றுநோய் உள்ளதா அல்லது வேறு ஏதும் பிரச்சனை உள்ளதா என அறிவதற்காகவே cystoscopy செய்வினம். ராசுக்குட்டிக்கு ஏற்கனவே செய்த பரிசோதனைகளில் பிரச்சனை ஏதும் இல்லை என முடிவு வந்தமையால் இறுதிப் பரிசோதனையாக cystoscopy செய்யச் சொல்லியிருக்கினம். சின்னஞ் சிறு கமரா, அந்த. கமராவுக்கு வெளிச்சம் பாச்ச சிறு லைட்டுகள், இவை எல்லாவற்றையும் கொண்ட ஒரு சிறு டியூப். ஆணுக்கு எனில் அந்த சிறு டியூப்பை ஆண்குறியின் சின்னஞ் சிறு துவாரதின் வழியே உள்ளே சிறுக சிறுக Bladder வரைக்கும் அனுப்பி கமராவின் மூலம் அதை வீடியோ எடுத்து டியூப்பின் மறுமுனையில் இணைக்கப்பட்டு இருக்கும் திரையில் டொக்டர் பார்ப்பார். இதன் மூலம் அவரால் பிரச்சனை ஏதும் இருப்பின் கண்டு பிடிக்க முடியும். அத்துடன் biopsy செய்வதற்காக உள்ளே அனுப்பிய டியூப்பில் பொருத்தி உள்ள கருவி மூலம் சின்னஞ் சிறு பகுதி (துணிக்கை) ஒன்றை ஒன்றை கிள்ளி பின் அதை வெளியே எடுத்து பரிசோதித்து பார்ப்பர். "இப்படித்தான் மச்சான் நடக்கப் போகுது எனக்கு நாளைக்கு" என்று ராசுக்குட்டி தன் நண்பனுக்கு முதல் நாள் சொல்லும் போதே அவனுக்கு வேர்த்து விட்டது. "எப்படியடா...அதுவும் அந்த சின்ன துவாரத்துக்குள் கமரா எல்லாம் அனுப்பி...செரியாக வலிக்க போகுது பார் " என்று அவன் திருப்பி திருப்பி அதையே ரிப்பீட் மோட்டில் ராசுக்குட்டியிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். ராசுக்குட்டியை சிறு கட்டிலில் (வாங்கில்) மல்லாக்க படுக்க வைத்த பின் டொக்டர் ஆரம்பிக்க முன்னரே, "என்னால் உனக்கு வலி ஏற்படுவதற்கு முதலில் என்னை மன்னித்துக் கொள், இது ஆளை மயக்கி செய்யும் பரிசோதனை அல்ல... கொஞ்சம் வலிக்கும்.. முக்கியமாக Bladder இனை டியூப் சென்று அடைந்த பின் சிறு பகுதியை கிள்ளி எடுக்கும் போது வலி கூடியளவு இருக்கும், ஆனால் தாங்க கூடியது... என்னை மன்னித்துக் கொள்" என்று கூறியபின் தான் பரிசோதனையை ஆரம்பித்தார். "இவ்வளவு படிச்ச மனுசன்... எவ்வளவு தன்மையா கதைக்கின்றார்..அதுவும் மன்னிப்பெல்லாம் கேட்கின்றார்" என்று எண்ணிய ராசுக்குட்டி 'என்ன வலி வந்தாலும் தாங்கத்தான் வேண்டும்... அழுது கிழுது பக்கத்தில் நிற்கும் பெண் தாதி தன்னை ஒரு கோழை என்று நினைக்க வைக்க கூடாது என்பதில் உறுதியாக கிடந்தார். அவருக்கு இந்த ரணகளத்திலும் அருகில் நிற்கும் பெண்ணிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற நினைப்பு. டொக்டர் சொன்னது போலவே, நண்பன் அரண்டது போலவே ராசுக்குட்டிக்கு வலி இருந்தது. முதலில் உள்ளே நுழைக்கும் போது, உடனடியாக எழும்பி சுச்சு போக வேண்டும் போல உணர்வு வந்தது அவருக்கும் பின் வலி மெது மெதுவாக ஆரம்பித்து உச்சத்துக்கு போனது.அதுவும் Bladder இனை அந்த டியூப் அடைந்த அந்தக்கணமும் கிள்ளி எடுத்த வினாடியும் அவரை அறியாமலே இரண்டு சொட்டு கண்ணீர் துளி கடைக்கண்ணால் வழியுமளவுக்கு வலி வந்து போனது. பதினைந்து நிமிடங்கள் டியூப் அங்கும்மிங்கும் அலைந்து திரிந்தது. இது வரைக்கும் உடலில் ஒரு போதுமே தொடுகை உணரப்படாத இடத்தில் எல்லாம் நின்று நிதானித்து தொடுகையை உணர்த்திச் சென்றது. அந்த டியூபின் பின்னாலேயே ராசுக்குட்டியின் தன்னுணர்வும் பின் தொடர்ந்தது. அதன் கமரா பார்க்கும் இடமெல்லாம் ராசுகுட்டியின் மனமும் தொட்டுப் பார்த்தது. இதுவரைக்கும் இந்த இடமெல்லாம் தன் உடலில் உள்ளதா என்பதையே அறியாத மனம் அந்த டியூபின் வழி சென்று அறிந்து கொண்டது. வலியும் தன்னை அறியும் உணர்வும் ஒன்றுடன் ஒன்று கலந்தும் மேவியும் உரசியும் சமாந்தரமாகவும் சென்றன. எல்லாவற்றிலும் புதினம் பார்க்கும் ராசுக்குட்டியின் மனசும், எல்லாவற்றையும் அனுபவித்தே சாகும் என்ற ராசிக்குட்டியின் இயல்பும் அந்த டியூபின் வழி பயணித்து களித்தது. மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே என்ற பாடலை திடீரென ராசுக்குட்டியின் மனசு பாடியது எல்லாம் முடிந்த பின் டொக்டர் "உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. எல்லாமே மிக நல்லா இருக்கு.. உன் CT scan முடிவிலும் ஒரு பிரச்சனையும் இல்லை." என்று சொல்லும் போது "அப்படியென்றால் ஏன் டொக்டர் அன்று கொஞ்சம் இரத்தம் வந்தது...அதன் பின் மூன்று நாட்கள் கழிந்த பின்னும் ஏன் மீண்டும் வந்தது" என்று ராசுக்குட்டி கேட்க.. "சிலருக்கு எப்பவாவது ஒரு நாள், சில நாட்கள் இப்படி வரும். சிவப்பாக இருப்பினும் அது இரத்தம் அல்ல. சிறு நீரில் எத்தனையோ விசயம் வெளிவரும், அதில் சிலது இப்படி மங்கலான சிவப்பு நிறத்திலும் இருக்கும்" என்றார். டொக்டருக்கு நன்றி சொல்லி வெளியே வந்த ராசுக்குட்டி முதலில் மனுசிக்கு போன் போட்டார். "எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை" "நான் அன்றைக்கே சொன்னனான் தானே...நீங்கள் தான் எல்லாத்துக்கும் கூகிளை நோண்டி தேவையில்லாமல் பயப்பிடுகின்றீர்கள்... " என்று சொன்ன அவரது மனிசி மேலும் "ஆஸ்பத்திரியில் இருந்து வரும் போது அதுக்கு கிட்ட இருக்கின்ற இரா சுப்பர் மார்கெட்டில் புளியும் சின்ன வெங்காயமும், உள்ளியும் வாங்கிட்டு வாங்கோ: என்று சொல்ல, ராசுக்குட்டி தன் காரை இரா சுப்பர் மார்க்கெட் பக்கம் திருப்ப, அவரது இந்தக் கதையும் இத்துடன் முடிகின்றது.1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 pointஉண்மை தான் உடையார் அண்ணா அவர்கள் மூட்டிய தமிழீழ தீ ஒரு போதும் அனையாது ? இப்ப கூட லண்டனில் அம்மா சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறா ? தமிழீழத்திலும் எம்மவர்கள் பல அடக்குமுறைக்கு மத்தியில் அவர்களும் துணிந்து செயல் படினம் ? எல்லாம் நல்லதுக்கே என்று நினைப்போம்1 point- கொஞ்சம் சிரிக்க ....
1 point- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
1 point- இயற்கையே மாறிப்போச்சு..!
1 pointஇயற்கையே மாறிப்போச்சு..! ********************* கடல் நீரோ முக்கால் பாகம்-பூமி கால் பாகம் தரையே இங்கு இயற்கையின் செழிப்பு எல்லாம் ஏன் தானோ விறகாய் போச்சு பாரெல்லாம் வெய்யில் வெக்கை பாலைவனம்போல் காயும் தேசம் நீரெல்லாம் வற்றித்தானே-எம் நிலமெல்லாம் புழுதியாச்சு மழைவந்து கொட்டித் தாக்கும் மரமெல்லாம் காற்றால் சாயும் நெருப்பெல்லாம் காட்டுத் தீயாய் நிலமெல்லாம் நடுங்கித்தீர்க்கும். விஞ்ஞானம் உயர்ந்ததாலே விண் மேகம் கீழேயாச்சு சந்திரனில் கால் பதித்து—பூமி சரித்திரமே பின்னால் போச்சு நெருப்போடு நீரும் காற்றும் நிலத்தோடு ஆகாய ஐம்பூதம் அத்தனையும் எம்முள் வைத்தே அகிலமே எம் உடலாய்யாச்சு இயற்கையின் கொந்தளிப்பே-எம் உடலிலும் நோயாய் தோன்றும் அதனோடு இசைந்து வாழ்ந்தால் அனைவர்க்கும் இனிமை வாழ்வே. அன்புடன் -பசுவூர்க்கோபி-1 point- ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
பகுதி 2: சிறு நீர் தொற்று என்று தான் முடிவு வரும், டொக்டர் அன்ரி பயோடிக் பத்து தருவார், அதை தவறாமல் எடுப்பன், பார்மசியில் மருந்து தரும் போது வார இறுதியில் பிரண்டி அடிச்சால் அன்ரி பயோடிக் பிரச்சனை கொடுக்குமா என்றும் கேட்க வேண்டும், பத்து நாட்களில் எல்லாம் சரியாகி விடும், மீண்டும் கும்மாளம் அடிக்கலாம் என்று மனக்கணக்குகள் நிறைய போட்டு கொண்டு "ரிசட்ல் என்ன டொக்டர்" என்று ராசுக்குட்டி கேட்டார். "ஒரு தொற்றும் இல்லை... எல்லாம் கிளியராக இருக்கு" என்று டொக்டர் கொஞ்சம் யோசனையுடன் சொல்ல ராசுக்குட்டி மீண்டும் சுருண்டு போனார். தொற்று என்றால் சிம்பிளா எல்லாம் முடிஞ்சிடும், பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை என்று நிம்மதியாக இருக்கலாம் என்ற எண்ணமும் தவிடு பொடியாகி விட்டது. ஒருவேளை உந்த கிளினிக்கில் உடனே செக் பண்ணி சொல்வது பிழையாகுமோ தெரியாது என்று விட்டு, "அப்ப ஏன் டொக்டர் அப்படி வந்தது " என்று கேட்க," எதுக்கும் ஒருக்கால் இதற்கென்று இருக்கும் ஒரு Lab இற்கு போய் Urinalysis எனும் இன்னும் கொஞ்சம் ஆழமான செக்கப் ஒன்று செய்து பார்ப்பம் சொல்லி ஒரு சீட்டில் எழுதி தர அடுத்த நாளே காலைமை எழும்பி lab இற்கு ஓடிப் போய் - 12 மணித்தியாலம் எதுவும் சாப்பிடாமல் போய்- எடுத்து கொடுக்க, ரிசல்ட்ஸ் வர நாலு நாளாகும். கொரனா காலம் என்பதால் இன்னும் கொஞ்ச நாட்கள் கூட எடுக்கும் என்று சொல்லி அனுப்பி விட்டனர். ராசுக்குட்டி தான் ஒரு பெரிய இரும்பு மனிசன், எதுக்கும் கலங்காதவன் என்ற ஒரு பில்டப்பை மனிசிக்கும், பிள்ளைகளுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் கட்டி வைத்திருந்தவர். (ஆனாலும் மனிசிக்கு தெரியும் இது இரும்பு மனிசன் இல்லை, எல்லாம் சும்மா வெறும் பில்டப்பு என்று, ஆனாலும் நம்பினமாதிரி பாவனை செய்வதை உண்மை என்று தான் ராசுக்குட்டி நம்பிக் கொண்டு இருந்தவர்.). தான் இப்படி வருத்தத்துக்கு பயந்ததை வெளியே காட்டினால் தான் கட்டின பில்டப்பு உடைந்து விடும் என்று "இது எல்லாம் எனக்கு ஜுஜுப்பி என்ற மாதிரி முகத்தை வைச்சுக் கொண்டு நடந்து திரிந்தாலும் முகம் என்னவோ பேயறைந்த மாதிரி இருந்ததை மனிசி கவனிக்க தவறவில்லை. இதில வேற "உங்களுக்கு ஒன்றும் இல்லை....சும்மா உந்த கூகிளை பார்த்து பயப்பட வேண்டாம் " என்று மனிசி சொல்லி தன் பாட்டுக்கு சந்தோசமாக இருந்ததை பார்த்து ராசுக்குட்டிக்கு விசர் ஏறிக் கொண்டு இருந்தது. அடுத்த எட்டு நாட்களிலும், ஒவ்வொரு நாளும் கூகிளை நோண்டுவதும் அதில் சொல்லப்பட்டு இருக்கும் அறிகுறிகள் எல்லாம் தனக்கும் இருக்கு என்று கற்பனை பண்ணுவதும், குடும்ப வைத்தியருக்கு போன் அடிப்பதுமாக இருந்தார். இரண்டு வகையானவர்கள் உள்ளனர். ஒன்று வைத்தியர் சொல்லுவதைக் கேட்டு பயப்படுகின்றவர்கள். மற்றது, வைத்தியரையே பயப்பட வைப்பவர்கள். இதில் ராசுக்குட்டி இரண்டாம் வகை என்று இவ்வளத்தையும் வாசிக்கும் உங்களுக்கும் புரிந்து இருக்கும். அறப்படிச்ச குணம் உள்ளவர்ளுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர்கள் ஒரு வகையில் பாவம் செய்வதர்கள் போலும். சரியாக எட்டாவது நாள், குடும்ப வைத்தியர் தொலைபேசியில் அழைத்து Urinalysis சிலும் ஒன்றும் வரவில்லை...எல்லாம் சரியாக இருக்குது என்று சொல்ல, "இனி என்ன செய்வது டொக்டர்... ஏன் அப்ப அண்டைக்கு இரத்தம் வந்தது " என்று குடல் உடைந்து கேட்க வைத்தியரும் "ஒரு ஸ்பெசலிஸ்ட் இடம் உன்னை அனுப்புறன், அவர் இன்னும் கொஞ்சம் அதிகமாக டெஸ்ட் செய்யச் சொல்லுவார்" என்று அனுப்பி வைத்தார். அப்பொயிண்ட்மெண்ட் உடனே கிடைக்குமா டொக்டர் என்று கேட்க.. "இல்லை நாளேடுக்கும்... உன்னை மாதிரி கனக்க பேர் காத்திருப்பர் என்பதால் மூன்று மாதமாவது எடுக்கும்" என்று சொல்ல ராசுக்குட்டி மனசுக்குள் போட்ட சின்ன அலறலை அவர் கவனிக்கவில்லை. உந்த கனடவில் எல்லாத்துக்கு லைனில் தான் நிற்க வேண்டும். ஜஸ்ரின் ருடோவாக இருந்தாலும் சரி, ராசுக்குட்டியாக இருந்தாலும் சரி, வரிசையில் தான் நிற்க வேண்டும். ஊரில் என்றால் காசு கூடக் கொடுத்து உடனே எல்லா பரிசோசதனைகளையும் செய்து பார்க்கலாம்...ஆனால் கனடாவில் நாளெடுக்கும். ராசுக்குட்டியின் நேரம் கொரனா காலமாக வந்து சேர்ந்ததால் காத்திருப்பு நீளுமோ என்று பயந்து போயிருக்கும் போது மூன்றாம் நாளே ஸ்பெசலிஸ்ட் இடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. "முதலில் அல்ரா சவுண்ட் எடுத்துப் பார்ப்பம். சிறு நீரகத்தில் கல் என்றால் அது காட்டிக் கொடுக்கும். அனேகமாக உனக்கு அதுதான் பிரச்சனை என்று சந்தேகின்றேன் என்று கூறி மூன்று நாட்களில் அல்றா சவுண்ட் இற்கு அனுப்பி வைத்தார். இக்காலப்பகுதியில் கொரனா கூத்துக்காட்டிக் கொண்டு இருந்தது. ஒவ்வொரு Lab உம் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்து இருந்தனர். ராசுக்குட்டி மூன்றாம் நாள் உள்ளே போகும் போது அங்கிருந்தவர்கள் உடல் முழுதும் மூடிய ஆடையுடன் இருந்ததை பார்த்து லைட்டாக பயந்து விட்டார். அந்தப் பயத்தில் அரண்டு இருந்தவர். அவர்கள் அவரை மேலாடையை மட்டும் கழட்டி படுங்கோ என்று சொல்லியதை சரியாக காதில் வாங்காமல், முழு ஆடைகளையும் களைந்து விட்டு படுத்துக் கிடக்க, வந்த நேர்ஸ் தன் தலையில் அடித்து, உன்னை கீழே கழட்ட சொல்லவில்லையே என்று அலுத்துக் கொண்டு கீழாடையை போடச் சொன்னார். பாவம் மனுசி ஆர் முகத்தில் அன்று முழிச்சதோ தெரியவில்லை. - தொடரும்;1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 point- ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
பகுதி 3: - தவறான மருந்து இப்ப வரும் திரைப்படங்களில் நேர்கோட்டில் (linear) இல் கதை போய்க்கொண்டு இருக்கையில் இடையே இன்னொரு குட்டிக் கதை (nonlinear) வந்து போகின்ற மாதிரித்தான் ராசுக்குட்டியின் இந்தக் கதையின் இடையில் இன்னொரு குட்டிக்கதை. இது அவர் உயிர் அருந்தப்பில் பிழைத்தது கூகிள் ஆண்டவரால் தான் என்று நம்பி கொண்டிருந்த கதை. பிறக்கும் போதே தனக்கு ஞானம் வந்துவிட்டது என்று தன் மனசுக்குள் நினைத்துக் கொண்டு இருந்த ராசுக்குட்டிக்கு கடவாயில் கொஞ்சம் லேட்டாகத்தான் ஞானப்பல்லு முளைத்தது. சும்மா எல்லா பல்லும் தன் பாட்டுக்கு ஒரு கரைச்சலும் இல்லாமல் அமைதியாக வந்து தன்ர இடத்தில் அமர்ந்து கொண்டு இருக்க, உந்த ஞானப்பல்லு மட்டும் ராசுக்குட்டிக்கு தன் சேட்டையை காட்டியது. முதலில் கொஞ்சமே கொஞ்சமாக வெளியே வந்து முரசை அணு அணுவாக பதம் பார்த்தது. அது வளர்ந்து வரும் மட்டும் வலி என்றால் அப்படி ஒரு வலி ராசுக்குட்டிக்கு . பிறகு திடீரென வேகமெடுத்து வளர, நல்லா சாப்பிட்டு உருண்டு திரண்டு இருந்த சொக்கையை உள் பக்கமாக கிழிக்க தொடங்கி ஞானப்பல்லு தன் அடுத்த கட்ட தாக்குதலை மேற்கொள்ள துடிச்சுப் போனார் ராசுக்குட்டி, சரி, இப்படி எல்லா வேதனையை அனுபவித்த பின் முழுமையாக வந்த ஞானப்பல்லு சும்மா இருக்கவில்லை. அது தன் பக்கத்தில் முரசில் ஒரு சிறு வெடிப்பை நிகழ்த்த, ஒரு நாளைக்கு இரண்டு தரம் பல்லுத்தீட்டும் போதும் நிகழும் தாக்குதலை சமாளிக்க பக்றீரியாக்கள் அந்த வெடிப்புக்குள் கவர் எடுத்து தங்கிட்டினம். வந்து தங்கின பக்றீரியாக்கள் தங்கள் வேலையை காட்ட, வெண் குருதிச் சிறுதுணிக்கைகள் அவர்களுடன் மல்யுத்தம் நடத்த, ராசுக்குட்டி வேதனையில் மீண்டும் துடி துடித்துப் போனார். ஒரு கட்டத்தில் வேதனையின் அளவு அதிகரிக்க பல்லு டாக்குத்தரிடம் ஒடிப் போக, "நீ ஏன் இவ்வளவே லேட்டாக வந்தனீ" என அவர் கோபப்பட்டு அன்ரி பயோடிக்கு (Antibiotic) மருந்தெழுதி தந்தார். முதலிலேயே போயிருந்தால், ஞானப்பல்லு தேவையற்றது என்று கழட்டி எடுத்து மனுசன் கொஞ்சம் காசு பார்த்து இருக்கும். அது நடக்காத கோபம் போலும். ராசுக்குட்டியும் பக்கத்தில் இருக்கும் பார்மசிக்கு போய் மருந்து வாங்கி அடுத்த நாள் காலையில் முதல் குளுசையை போட்டு விட்டு, மனிசிக்கு 'ரற்றா' சொல்லி வேலைக்கு செல்லும் போது (மனுசி "போயிட்டு வாங்கோ" என்று சொல்லி வழியனுப்பாட்டில் விபத்தில் சிக்கி விடுவேனோ என்ற பயம் ராசுக்குட்டிக்கு) ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தார். ராசுக்குட்டிக்கு காரை ஒட்டு, போது லேசாக தலையை சுத்துற மாதிரி இருந்தது. பிறகு மூன்று விரல்கள் உணர்ச்சியற்று போனது போல இருக்க ஸ்ரியரிங்கை பிடிக்க கஷ்டப்பட்டுக் கொண்டே அலுவலகத்துக்கு ஒரு மாதிரி போய் சேர்ந்தார். அங்கு போன பின் தலைச்சுற்று அதிகரிக்க, மனிசிக்கு தொலைபேசியில் அழைத்து விடயத்தை சொல்ல, "நீங்கள் குடிச்ச மருந்து பிழை போல" என்று மனிசி குண்டைத் தூக்கி போட்டார். "எதுக்கும் மருந்தின் பெயரை படம் எடுத்து அனுப்புங்கோ" என்று சொல்லி, மருந்தின் லேபலை மனிசி படம் எடுத்து மொபைலில் அனுப்ப, ராசுக்குட்டி அதை பற்றி கூகிள் ஆண்டவரிடம் அபிப்பிராயம் கேட்க, "அது அன்ரி பயோடிக் இல்லை....இது புற்று நோயாளர்கள் ஹீமோ தெரபிக்கு பிறகு குடிக்கும் மருந்து" என்று விடை தந்தார் கூகிள் ஆண்டவர். அவ்வளவு தான் ஆடி போய் விட்டார் ராசுக்குட்டி. பல்லு டாக்குத்தரிடம் உடனே இது பற்றிக் கதைக்க, விடயம் தெளிவானது. அவர் எழுதித் தந்த மருந்தின் பெயருக்கும் பார்மசி தந்த மருந்தின் பெயருக்கும் இடையே இரண்டே இரண்டு எழுத்துகள் மட்டுமே வித்தியாசம். எனவே பார்மசிகாரர் பிழையாக மருந்து தந்து போட்டார். "நீ உடனடியாக அம்புலன்ஸ் இற்கு அடிச்சு எமர்ஜென்சிக்கு போ, அதற்குள் உன் வேலைக்கு அருகில் உள்ள ஹொஸ்பிடலுக்கு நான் தகவல் அனுப்புகின்றேன் என்று பரபரத்தார் பல்லு வைத்தியர். நம்மட ராசுக்குட்டிக்குத்தான் பொறுமை மருந்துக்கும் இல்லையே,.. எனவே தன்னால் காரில் உடனடியாக போய்ச் சேர முடியும் என நினைத்து அம்புலன்ஸை கூப்பிடாமல் தானே காரை செலுத்தி 30 நிமிடம் தாமதமாக ஹொஸ்பிடலின் எமர்ஜென்சி பிரிவில் தன்னை கொண்டு போய் தானே ஒப்படைச்சார். " நல்ல வேளை ஒரு தடவை மாத்திரம் நீ மருந்து எடுத்துள்ளாய் .. இன்னும் கொஞ்சம் எடுத்து இருந்தால் பாரதூரமாக போயிருக்கும்" என்று சொன்ன மருத்துவர்கள், " நீ உண்மையில் கெட்டிக்காரன், எப்படி இந்த மருந்து தவறு என்று கண்டுபிடித்தாய்" என்று ஆச்சரியப்பட்டு பாராட்டிக் கொண்டு இருக்கும் போது, ராசுக்குட்டி மனசுக்குள்"கூகிள் ஆண்டவரிடம் ஒரே அடியாக சரணாகதியாகிக் கொண்ரு இருந்தார். அன்று தொட்ட பழக்கம் கடைசியாக சிறு நீர் பிரச்சனையின் இறுதி பரிசோதனையில் அடைந்த அந்த ''கொடுமையான வலி'' வரை தொடர்ந்தது ராசுக்குட்டிக்கு. - தொடரும்0 points - பாவத்தின் சம்பளம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.