Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    13
    Points
    46808
    Posts
  2. MullaiNilavan

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    125
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38780
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    88007
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/07/21 in all areas

  1. உலக ஒழுங்கு என்று வரும் பொழுது இன்றும் பழைய வலது/இடது அணி தான் அச்சாணி யாக இருக்கிறது .. அணிசேரா நாடுகள் என்ற அமைப்பும் இருந்தது ஆனால் அந்த அணி நாடுகள் உடைந்து போனது அல்லது வலது/இடது கூட்டணிகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டது எனது பார்வையில்... ஆசிய பிராந்தியத்தில் இரண்டாம் உலக போரின் பின்பு இரு பெரும் இடதுசாரி (??)நாடுகள்(சோவியத் சீனா)ஆசிய பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதை உலக போரை முடிவுக்கு கொண்டு வந்த தரப்பு விரும்பவில்லை. வலது நாடுகளின்(வநா) கூட்டு தங்களது வசதிக்கும் தங்களது செல்வாக்கை செலுத்துவற்குமாக சில தீவுகளை நாடுகளாக உருவாக்கி அல்லது குத்தகைக்கு எடுத்து தங்களது வலது/ஜனநாயக/பல்கலாச்சார கொள்கைகளை வகுத்து சென்றன.....மதங்களை மையப்படுத்தி நாடுகளின்எல்லைகளையும் வகுத்து சென்றனர். பிரித்தானியா தனது காலனித்துவத்திலிருந்த நாடுகளை ஒரு அணியின் கீழ் பொதுநலவாய நாடுகள் என உருவாக்கினர் இந்த பொதுநலவாய நாடுகள் தங்களது செல்ல பிள்ளைகளாக தங்களால் அறிமுகம் செய்யப்பட்ட பல் கலாச்சார,மற்றும் ஜனநாயக மரபுகளை மதித்து நடப்பார்கள் என நினைத்தார்கள்.அத்துடன் தங்களது மொழி,மற்றும் மத பண்பாடு (கிறிஸ்தவம)தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என நம்பினார்கள் . அரசியல் லாபங்களுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த நாடுகளை உபயோகிக்கலாம் என்ற தூர நோக்கு சிந்தனை யுடன் உடன் செயல் பட்டார்கள். அப்படி உருவான நாடு தான் சிலோன்..... பல பொதுநலவாய நாடுகள் பிரித்தானியாவை சுழிச்சு விளையாட தொடங்கின ,அதில் ஒன்று சிலோன். இதை அறிந்த வ/நா கூட்டு ஆசியா பிராந்திய நாடாகிய ஜப்பான் ஊடாக பல நிதியுதவிகளை செய்து தம் பக்கம் வைத்து கொள்ள முடிவு செய்தது. ஜப்பானும் சிறிலங்காவும் பாரம்பரிய நட்பு நாடுகளாக மாறியது. . அதே சமயம் சிலோன் தனது நாட்டை(இறையாண்மை) பாதுகாத்து கொள்ளவும்,அரசியல் வாதிகள் தங்களது அரசியல் /பணம் பலத்தை பெருக்குவதற்கு பல உத்திகளை பயன்படுத்தினார்கள். சிலோன் முழுவதும் ஒரே இனம் ,ஒரே மொழி, ஒரேமதம் பேசும் மக்கள் வாழ வேண்டும் .உலகில் சிங்கள பெளத்தம் இந்த நாட்டில் மட்டும் உள்ள காரணத்தால் இதை பாதுகாக்க நினைத்த‌ சிங்கள பெளத்த தேரர்கள் இனவாத்தை கையில் எடுத்தார்கள் .கிறிஸ்தவ சிங்கள அரசியல்வாதிகளும் இதைபயன்படுத்தி பெளத்தர்களாக மாறி அரசியல் செய்ய தொடங்கினார்கள். அரசியல் யாப்புக்களை மாற்றுவதும் இனவாதம் பேசுவதுமாக நாட்டை நடத்த தொடங்கினார்கள். வாக்குரிமை பறிக்கப்பட்டமை,சிங்களம் மட்டும் சட்டம்,பாத யாத்திரைகள் ,ஒப்பந்த்ங்கள் கிழித்தெறிதல் என்பன உள் நாட்டில் நடந்து கொண்டிருக்க மறுபக்கத்தில் சர்வதேச மட்டத்தில் சிலோன் என்ற பெயரை சிறிலங்கா குடியரசு என மாற்ற அரசியல் யாப்பை மாற்றினார்கள் . ஜெ.வி.பி (சேகுவார புரட்சி)இடது சாரி கொள்கையை புரட்சி மூலம் உருவாக்க போராடினார்கள். இந்த போராட்டம் இந்தியா இராணுவத்தின் உதவியுடன் சிலோன் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. (தற்பொழுது சீனா பணத்தை காட்டி நேரடியாக ஆட்சியை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவருகின்றனர்,முன்பு போல மாவோ யிஸ்ட்க்களை உருவாக்க வேண்டிய தேவையில்லை.) சிறிலங்காவில் ஆட்சிக்கு வருபவர்கள் யாவரும் தங்களது கட்சி தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு அரசியல் யாப்பில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றனர் . ஜெ.ஆர் ஆட்சிக்கு வந்தார் சிறிலங்கா குடியரசு என்ற பெயரை சிறிலங்கா சோசலிச ஜனநாயக குடியரசு என மாற்றி அரசியல் யாப்பையும் மாற்றினார் தனது கட்சி தொடர்ந்து 17 ஆண்டுகள் ஆட்சி அமைக்க கூடியதாக இருந்தது. தமிழ்மக்களின் ஆயுத போராட்டம் சிங்கள ஆட்சியாளர்களின் அரசியல் ஆசைக்கும் விருப்புக்கும் நன்றாக தீனி போட்டது.திறமையாக கையான்டார்கள் சிங்கள ஆட்சியாளர்கள் நாட்டில் அக்கறை கொள்வதை விட அதிகாரத்தை அலங்கரிப்பதிலயே கவனம் செலுத்தினர் சந்திரிக்கா ஆட்சி அமைத்தார் அவரும் அரசியல் யாப்பை மாற்றுவதாக சொல்லித்தான் ஆட்சி ஏறினார் ... ஐக்கிய தேசிய கட்சி ஆளுமை குறைய தொடங்க சிறிலங்கா சுதந்திரக‌ட்சி ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது .சந்திரிக்காவின் பதவிக்காலம் முடிய ராஜபக்சா ஆட்டம் தொடங்குகிறது .இதுவரை காலமும் மேற்குலகு, சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் சுளிச்சு ஓடிய ஒட்டம் ஒரு முட்டுக்கட்டை நிலைக்கு வந்து பகிரங்கமாக சீனாவுடன் உறவாட வேண்டிய நிலைக்கு சிறிலங்கா வந்து நிற்கின்றது .புதிய கட்சி நீண்ட நாள் ஆட்சி செய்ய வேண்டும் அத்துடன் இது குடும்ப கட்சியாகவும் நீண்டநாட்கள் பயணம் செய்ய‌ வேண்டியுள்ளது.இந்த குடும்ப கட்சியில் ஒரு சிக்கல் உண்டு சகோதரர்கள் அவர்களின் பிள்ளைகள் எல்லோரும் ஜனாதிபதி ,பிரமதர் ஆக வரும் தகுதியுடையவர்கள். மீண்டும் சிறிலங்கா யாப்பு மாற்றப்படுவதன் மூலம் அதன் பெயர் சிங்கலெ ஆக மாறும் .சீனா சகல அபிவிருத்தியையும் செய்யும் நாட்டின் பெரும் பகுதி சீனாவுக்கு சொந்தமாகும்.....சிங்கள மக்கள் சிங்கலெ என்ற பெயர் கிடைத்தது மற்றும் தமிழர்கள்,இஸ்லாமியர்கள் நாட்டின் சொத்தை அபகரிக்கவில்லை என பெரும் மூச்சு விடுவார்கள் ஆனால் ட்ரகன் விழுங்கிய சிங்கத்தை மறந்துவிடுவார்கள் வலதுசாரி பின்னனி கொண்ட கூட்டு ஐ.நா சபையில் மனித உரிமை மீறல் என்ற குற்றசாட்டை போட்டு சிறிலங்காவை சீனா பக்கம் சாயாமல் தடுக்க முயற்சி செய்து பார்கின்றது ஆனால் வலது சாரிகளின் நன்கொடையை விட சீனாவின் நன்கொடை பல மடங்கு அதிகம் அதனால் அரசியல்வாதிகளின் பணப்பையும் பெரிதாகும்... நீண்ட நாட்கள் அரசியல் எழுதவில்லை அதுதான் இந்த சின்ன கிறுக்கல்
  2. "எனது மகன் கருணாவால் விடுவிக்கப்பட்டாலோ அல்லது அவர்களின் பிடியிலிருந்து தப்பிவந்தாலோ, என்னால் அவனை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது" என்று கடத்தப்பட்ட 18 வயது இளைஞன் ஒருவனின் தாயார் தெரிவித்தார். "எப்படி அவர் தப்பிவந்தார் என்பதைப் பொறுத்து கருணா குழுவோ, இராணுவமோ அல்லது புலிகளோ அவனைத் தேடலாம். அவனுக்கு எப்படி பாதுகாப்பை வழங்குவதென்றே எனக்குத் தெரியவில்லை. கருணாவின் பிடியிலிருந்து தப்பிவரும் சிறுவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு நிலைமைகளை யாராவது ஏற்படுத்திக் கொடுத்தால் இன்னும் அதிகமான சிறுவர்கள் அவர்களின் பிடியிலிருந்து தப்பிவரச் சந்தர்ப்பம் இருக்கிறது" என்று அவர் மேலும் கூறினார். கடத்தப்பட்ட 21 வயதுடைய இளைஞனின் தாயார் கூறுகையில், "எமது பிள்ளைகள் கருணாவின் பிடியிலிருந்து தப்பிவந்தாலும், அவர்களுக்கு எமது வீடுகள் பாதுகாப்பாக இருக்கப்போவதில்லை. அவர்களைத் தேடி நிச்சயம் கருணா குழு வரும், அவர்களை மீண்டும் இழுத்துச் செல்லும் அல்லது வீட்டிலுள்ள ஏனையவர்களையாவது பலவந்தமாக இழுத்துச் செல்லும் என்பது எங்களுக்குத் தெரியும்" என்று கூறினார். கருணா குழுவினரால் கடத்தப்பட்டவர்கள் என்று முறைப்பாடு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கருணா துணைராணுவக் குழுவினரால் கடத்தப்பட்ட மொத்த சிறுவர்களினதும் இளைஞர்களினதும் சரியான எண்ணிக்கை இதுவரை யாருக்கும் தெரியாது. ஆனால், செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் நோர்வேயின் தலைமையிலான யுத்தக் கண்காணிப்புக் குழுவும் யுனிசெப் அமைப்பும் சில புள்ளிவிபரங்களை வைத்திருக்கின்றன. பெற்றோரால் உறுதிசெய்யப்பட்ட கடத்தல் விபரங்களை மட்டுமே கணக்கெடுத்திருக்கும் இவ்விரு அமைப்புக்களினதும் புள்ளிவிபரங்கள் உண்மையான கடத்தப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையினைக் காட்டிலும் மிகவும் குறைவானவை. பெரும்பாலான குடும்பங்கள் தமது பிள்ளைகள் கடத்தப்பட்டதுபற்றி வெளியே சொல்லத் தயங்குவதாகத் தெரிவிக்கிறார்கள். இக்கடத்தல்கள்பற்றி வெளியே சொல்லுமிடத்து தாம் பழிவாங்கப்படலாம், அல்லது தமது பிள்ளைகள் கொல்லப்படலாம் என்கிற அச்சத்தில் பல பெற்றோரும், பெருந்தொகைப் பணத்தினைக் கப்பமாகக் கொடுத்து தமது பிள்ளைகளை விடுவிக்க தாம் எடுத்துவரும் முயற்சிகளை முறைப்பாடுகள் பாதித்துவிடும் என்பதற்காக இன்னொரு பகுதியினரும் இக்கடத்தல்கள்பற்றி வெளியே பேசத் தயங்குவதாகத் தெரியவருகிறது. யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் புள்ளிவிபரப்படி 2006 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 18 வயதிற்கு உட்பட்ட 117 சிறார்களும், 167 இளைஞர்களும் கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேகாலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்தில் 3 சிறார்களும் 7 இளைஞர்களும் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாடுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆனால், இதே காலப்பகுதியில் யுனிசெப் அமைப்பு மேற்கொண்ட விசாரணைகளில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் குறைந்தது 208 சிறுவர்கள் கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவற்றுள் 181 கடத்தல்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலும், 23 கடத்தல்கள் அம்பாறை மாவட்டத்திலும் 4 கடத்தல்கள் திருகோணமலை மாவட்டத்திலும் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. ஆனால், இதே அறிக்கையில் யுனிசெப் அமைப்பு பின்வருமாறு கூறுகிறது, "கடத்தப்பட்டவர்களின் உறவினர்களின் தகவல்களின் அடிப்படையிலேயே இந்தப் புள்ளிவிபரம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைப்போல மூன்று மடங்காக இருக்கும் என்றும், பல பெற்றோர்கள் தமது பிள்ளைகள் கடத்தப்பட்ட விபரத்தைச் சொல்லத் தயங்குவதாகக் கூறுவதோடு, உள்ளூர் மனிதவுரிமை அமைப்புக்களின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டிருக்கும் மட்டக்களப்பு மாவட்ட கடத்தல்களின் எண்ணிக்கையான 600 - 700 எனும் எண்ணிக்கை சரியானதாக இருக்கலாம்" என்றும் கூறுகிறது. இங்கு குறிப்பிடத்தக்க இன்னொரு விடயம் யாதெனில், 18 வயதிற்கு மேற்பட்ட கடத்தல்களின் புள்ளிவிபரம்பற்றி யுனிசெப் அமைப்பு தகவல்களைச் சேகரிக்கவில்லையென்பது. யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவைப் போல் அல்லாது யுனிசெப் அமைப்பு கடத்தப்பட்ட சிறுவர்களின் விபரங்களை அவர்களின் வயது அடிப்படையில் பட்டியலிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் 2006 கார்த்திகை மாதம் யுனிசெப் அமைப்பினால் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் கருணா குழுவால் கடத்தப்பட்ட சிறுவர்களின் விபரம் வருமாறு: வயது 10 இலிருந்து 12 வரையான சிறுவர்கள் : 02 வயத்யு 12 இலிருந்து 14 வரையான சிறுவர்கள் : 08 வயது 14 இலிருந்து 16 வரையான சிறுவர்கள் : 59 வயது 16 இலிருந்து 18 வரையான சிறுவர்கள் : 109
  3. கடத்தப்பட்டவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்குமிடையிலான தொடர்பாடல் தமது பிள்ளைகள் கடத்தப்பட்ட இரு வாரங்களிலிருந்து ஒரு மாத காலப்பகுதிக்குள் அவர்களைப் பார்க்க தமக்கு அனுமதி வழங்கப்பட்டதாக சில பெற்றோர் தெரிவித்தனர். இவ்வாறு தமது பிள்ளைகளைப் பார்க்கச் சென்றவேளையில் அவர்கள் ஆயுதப் பயிற்சியளிக்கப்பட்டு, ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதைப் பார்க்க முடிந்ததாக இவர்கள் கூறுகின்றனர். இன்னும் சில குடும்பங்களுக்கு கடத்தப்பட்ட சிறுவர்களுக்கான மாதக் கொடுப்பனவாக 6000 இலங்கை ரூபாய்களை கருணா குழு வழங்கிவந்ததாகத் தெரியவருகிறது. இன்னும் சில சந்தர்ப்பங்களில் கடத்தப்பட்ட சிறுவர்களில் சிலர் பயிற்சியின்பின்னர் வேறு கருணா குழு உறுப்பினர்களின் பாதுகாப்புடன் குடும்பங்களை இரவுநேரங்களில் சென்று பார்த்துவரவும் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இப்படியான சந்தர்ப்பம் ஒன்றில், தன்னைக் கடத்திச்சென்றவர்களின் பாதுகாப்பிலேயே ஒரு சிறுவன் தனது பெற்றொரைப் பார்க்க அனுப்பிவைக்கப்பட்டதாகத் தெரிகிறது. கருணா குழுவினரால் விடுவிக்கப்பட்ட மற்றும் தப்பியோடிய சிறுவர்கள் 2006 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட சிறுவர்களில், மிகவும் அரிதான ஓரிரு சந்தர்ப்பங்களில் சில சிறுவர்கள் கருணா குழுவினரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இப்படி விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் தமது பிள்ளை விடுவிக்கப்பட்டதுபற்றி வெளியே சொல்லத் தயங்கியதாகவும், அவர் மீண்டும் கடத்தப்படலாம் என்கிற அச்சமே இதற்குக் காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெருமளவு பணத்தினைக் கப்பமாகச் செலுத்தியபின்னர் விடுவிக்கப்பட்ட தமது பிள்ளை தொடர்பான தகவல்களை பெற்றோர்கள் வெளியே சொல்லத் தயங்கினர் என்றும் கூறப்படுகிறது. யுனிசெப் அமைப்பின் அறிக்கையின்படி கடத்தப்பட்ட பலநூற்றுக்கணக்கான சிறுவர்களில் 23 சிறார்கள் கப்பம் செலுத்தியபின்னர் விடுவிக்கப்பட்டதாகவும், 18 சிறுவர்கள் பயிற்சியின்போது தப்பியோடியதாகவும் இன்னும் இருவர் பயிற்சியின்போது கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கருணா குழுவின் பிடியிலிருந்து தப்பிவந்த பல சிறுவர்கள் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தப்பிவந்ததற்கான தண்டனையாக மீண்டும் கடத்தப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்கிற அச்சமும், கருணா குழுவில் செயற்பட்டதற்காக புலிகளால் தண்டிக்கப்படலாம் என்கிற அச்சமும் இவர்களுக்கு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கில் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு அச்சுருத்தலுக்குள்ளாகும் சந்தர்ப்பங்களில் அவர்களை பாதுகாப்பாக கொழும்பிற்கு அனுப்புவதை வழமையாகக் கொண்டிருந்த பெற்றோர்கள், கொழும்பிலும் இடம்பெற்ற கருணா குழுவினர் கடத்தல்கள் மற்றும் படுகொலைகளையடுத்து பிள்ளைகளைத் தம்மோடு ஊரில் வைத்திருப்பதே பாதுகாப்பானது என்று கருதியதாகப் பலர் தெரிவிக்கின்றனர்.
  4. வாணி , அவனது சக வணிகப்பிரிவு வகுப்பு மாணவி , வாணி என்பதற்கு பதில் வாயாடி என்று பெயர் வைத்திருக்கலாம், தப்பித்தவறி வாயை கொடுத்தால் கூட திருப்பி வாங்கமுடியாது,தொட்டால் சிவந்து விடும் தோல் கொஞ்சம் குட்டையான பருமனான உடல் கிட்டத்தட்ட நித்தியா மேனன் போல இருப்பாள், அவனது வகுப்பு கனவுக்கன்னிகளில் ஒருத்தி, சுலக்சன் ஒரு பிஞ்சில் பழுத்தது ஆறாம் வகுப்பு படிக்கும் போதே வாணியில் கண்ணை போட்டுவிட்டான், தடித்தாண்டவராயன் என்றாலும் மண்டைக்காய் அது ஒன்று போதுமே பெண்களை இழுத்தெடுக்க, சகட்டு மேனிக்கு பெண்களிடம் வழியும் பழக்கமும் உண்டு, உயர்தரத்திற்கு வந்ததும் சாடை மாடையாக வாணியின் காதில் போட்டுவிட்டான், அவள் அதைக்கேட்டும் கேட்காதவள் போல் எந்த சலனமும் இல்லாமல் இருந்துவிட, பயப்பிள்ளை வாட்டியெடுப்பது அவனது நண்பர் குழாமைத்தான் ஒவ்வொருத்தராக தூது போயும் வேலைக்காகவில்லை,நண்பர் குழாமை விட அதிகமாக மாட்டுவது மைதிலி, அவனது வகுப்பு சகமாணவி, வாணியின் உற்ற நண்பி எப்போதும் சுலக்சனிடம் அவளுக்கு ராஜமரியாதை, பாடசாலை இடைவேளைகளில் விசேட தீன்பண்ட உபசரிப்பும் நடக்கும், ஒரே வகுப்பு என்பதால் முழு நண்பர் குழாமின் வீடுகளுக்கும் மைதிலி நன்கு பரீட்சயம், இப்படி வாணியின் நண்பியை கைக்குள் போட்டும் சொல்லிக்கொள்ளக்கூடியவாறு எதுவுமே நடக்கவில்லை, நிலைமை இப்படியிருக்க இன்று சுலக்சன் புது கதை ஒன்றை சொல்கிறான். அவனுக்கோ இருப்பு கொள்ளவில்லை, சரியாக இரவு ஏழுமணிக்கெல்லாம் வீட்டிலிருந்து புறப்பட்டு பாடசாலையை நெருங்க அங்கே என்றுமில்லாதவாறு சுலக்சன் இவனுக்கு முதலிலேயே வந்து பாடசாலை நுழைவாயிலில் இருந்த படி ஒன்றில் உட்கார்ந்து கொண்டு அவனுக்காக காத்துக்கொண்டிருந்தான். "என்னடா நேரத்தோடை வந்திட்டபோல " "ம்ம் ...உனக்காகத்தான் வெயிட்டிங், வா மண்டபத்திற்குள் போவோம், நிறைய கதைக்கவேண்டியிருக்கு " "வாணியை மடக்கிட்ட இனியென்ன" "உன்னோட ஐடியா வேணும் மச்சி " "சரி நடந்ததை சொல்லு அப்புறம் ஐடியா தறாதா இல்ல உன்னை போட்டு மிதிக்கிறதா என்று நான் சொல்றன்" என்று அவன் சொல்லவும், அவனை ஒரு முறை முறைத்துவிட்டு நொண்டிக்கொண்டே முன்னோக்கி நடக்கத்தொடங்கினான், உள்ளே வந்ததும் இருவரும் தங்களது படுக்கை விரிப்புகளை விரித்து விட்டு அதில் தங்களை கிடத்திக்கொள்ள முதலில் சுலக்சன் ஆரம்பித்தான். "மச்சான் வாணி வீட்டடியால தானே பள்ளிக்கு வாறவள், உனக்கும் தெரியும்தானே டெயிலி அவளை முன்னால விட்டு தானே நான் பின்னால வரானான், நேற்று வாணி வார டைமில நானும் வந்து கேட் பக்கம் நின்டானான் ,எப்போதும் ஒரு அசிப்பும் காட்டாமல் போறவள் நேற்று ஒரு இரக்கத்தோட ஒரு பார்வை பார்த்துவிட்டு காலில் என்ன என்று சைகையில் கேட்டாள்ரா" "பார்ரா ...பிறகு " " நானும் போத்தல் ஓடு கிழிச்சிப்போட்டு என்று மெதுவாக சொல்ல, எதோ சொல்ல வந்தவள் அம்மாவை காணவும் அப்படியே போய்ட்டாள் , பின்னேரம் அம்மா டேய் சுலக்சன் உன்னை தேடி மைதிலி வந்திருக்கிறாள் நோட்ஸ் கொப்பியை தர வேணுமாம் என்று எழுப்பவும் போய் ஒரு லூசுவேலை பார்த்துவிட்டேன், பெரிய சத்தமாக எந்த நோட்ஸ் கொப்பிடீ...? என்று கேட்க அவளோ மெதுவாக என்று சைகை காட்டிவிட்டு, அவள் கையிலிருந்த கொப்பியை தருவது போல் அருகில் கூப்பிட்டு வாணி உன்னை விசாரித்தவள், ஆளுக்கு உன்னோட செம லவ் டா, அமசடக்கு வெளியில காட்டவில்லை, உனக்கு காலில வெட்டு என்று என்னை இருக்க விடுறாளில்லை,போய் விசாரித்து விட்டு வரட்டுமாம், அதுதான் வந்தனான் அவளுக்கு என்ன சொல்ல என்று கேட்டாள் " "டேய் ..நீ கேடி டா சரி என்ன சொல்லி அனுப்பின நீ " " அவளை கேட்ட என்றும் , நானும் அவள் ஞாபாகமாக தான் இருக்கிறன், கால் சுகமாகினதும் எங்க மீட் பண்ணலாம் என்று கேட்க சொல்லி அனுப்பினனான் " "சரி...இதில நான் என்ன ஐடியா தாரது " இது அவன் "முதல் முதலாக சந்திக்கும்போது கிப்ட் ஒன்று வாங்கி கொடுக்கணும் மச்சான் அதுதான் என்ன வாங்கி கொடுக்கலாம் என்று உன்னிடம் கேட்போம் என்று தோணிச்சு " "நானே இந்த விவகாரத்தில் தத்தி நீ என்னிடம் கேட்கிற..!, சரி எதுக்கும் அக்காவிடம் கேட்டு சொல்றன், அவவுக்கு தான் உந்த வயசு பிள்ளைகள் என்ன விரும்பும் என்று தெரிந்திருக்கும் " "டேய் நாசமாபோவானே வீட்டில என்னை மாட்டிகொடுத்திடாதடா" என்று சுலக்சன் கூவவும் அவனோ "நான் இன்னொரு ஆளுக்கு என்று சொல்லித்தான் கேட்பன், உன்ன மாட்டிக்கொடுக்கிறதென்றால் உண்டை வீட்டிலேயே மாட்டிக்கொடுக்க வேணும் லவ் பன்றாராம் ...லவ் " "உனக்கு பொறாமை " என்று விட்டு சுலக்சன் புத்தகத்தை கையிலெடுத்தான். இவனிருக்கும் குஷியில் இண்டைக்கு நன்றாகதான் படிப்பு இவனுடைய மண்டையில் ஏறப்போகிறது என்று நினைத்துக்கொண்டு அவனும் கையில் ஒருபுத்தகத்தை தூக்கினான், ஒரு அரைமணி நேரம் கடந்திருக்கும் முன்னாலிருந்த சுலக்சன் புத்தகத்தை விட்டு மண்டபத்தையே சுற்றும் முற்றும் பார்த்தபடி இருந்தான் என்னத்தடா அப்படி பார்க்கிற என்று அவன் கேட்கவும், மச்சி படிக்கிற மூடில்லையடா என்று விட்டு சுலக்சன் மண்டபத்தின் மூலையிலிருக்கும் களஞ்சிய அறையை நோக்கி நடக்க (நிற்க!) நொண்ட ஆரம்பித்தான், அந்த அறையை பாடசாலையின் வரலாறு என்று சொல்லலாம், கறையான் அரித்து இற்றுப்போன கதவிற்கு பின்னே வருடக்கணக்கான வரலாறு உறங்கிக்கொண்டிருக்கிறது, உண்மையில் அங்கே என்னென்ன தஸ்தாவேஜுகள், ஆவணங்கள்,புத்தகங்கள் ,பழைய பொருட்கள் இருக்கின்றன என்று அதிபருக்கே தெரியாது, தட்டு முட்டு பொருட்கள் என்று குவித்து குவித்து என்ன எங்கே இருக்கிறது, எப்படி உள்நுழைந்து உடலில் காயம் படாது திரும்புவது என்று யாருக்குமே தெரியாது, அதிபர் யாரையும் அந்த களஞ்சிய அறைக்குள் அனுமதிப்பதில்லை ஒருவரை தவிர, அந்த ஒருவர் யாருமல்ல சாட்சாத் சுலக்சனே தான், அவன் கூட அதிபரின் மேற்பார்வையுடன் மட்டுமே உள்ளே செல்ல முடியும், சுலக்சனின் வீடு பாடசாலைக்கு மிக அருகாமையில் நடை தூரத்தில் இருப்பதால், எல்லா அதிபர்களுடைய எடுபிடிக்கான முதல் தேர்வு அவனாகவே இருப்பது வழக்கம், இந்த நேரத்தில் எதற்கு அந்த அறையை நோக்கி செல்கிறான் இவன்...? "டேய் எதற்கு அந்த பக்கம் போறாய் ...?" என்று பதறினான் அவன், சுலக்சனோ சாவகாசமாக திரும்பி "மச்சான் அறைக்கு உள்ள ஒரு அயிட்டம் இருக்கு பொறு எடுத்துக்கொண்டு வாறன்", என்று சொல்லிவிட்டு கதவில் மாட்டியிருந்த பூட்டை இடது பக்கமும் வலது பக்கமும் இருமுறை அசைக்கவும் பூட்டு தன்னை விடுவித்துக்கொண்டு அவனது கையுடன் வந்துவிட்டது, அவனை நோக்கி திரும்பிய சுலக்சன் சிரித்துக்கொண்டே "இந்த பூட்டு சாட்டிற்குத்தான் எனக்கும் அதிபருக்கும் தான் இந்த விடயம் தெரியும்" என்று ஒற்றை கண்ணை அடித்துவிட்டு கதவை தள்ளித்திறந்தான், அப்படியெதனை சுலக்சன் அந்த அறையிலிருந்து லவட்டி கொண்டுவரப்போகிறான் என்று அறியும் ஆர்வம் அவனுக்கும் தொற்றிக்கொண்டது 1962, இலங்கை கிழக்கு மாகாணம் கார்த்திகை 8 மெல்லத்தெரிந்த கதவிடைவெளியூடு பார்வையை படர விட்ட உதவியாளர், விறைத்துப்போனார் வாயில் எச்சில் உலரத்தொடங்கியது, சரியாக அந்த அறையின் நடுவில் இருந்த விட்டத்தில் இறுகக்கட்டப்பட்டிருந்த கயிற்றில் பீலீக்சின் உயிரற்ற உடல் அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருந்தது, கயிறு கழுத்தை மேல்நோக்கி இழுத்ததிலும் உடலெடை கீழ்நோக்கி இழுத்தத்திலும் பீலீக்சின் கழுத்துப்பிரதேசம் ஏகத்திற்கு நீண்டிக்க, வாயின் ஓரத்தில் துருத்திக்கொண்டிருந்த வெளிறிப்போயிருந்த நாக்கு, நாளங்களில் இரத்தஓட்டம் எப்போதோ நிறுத்தப்பட்டுவிட்டதை அறிவித்துக்கொண்டிருந்தது. அதிர்ச்சியில் அப்படியே சிலநிமிடங்கள் சுயநினைவற்று நின்ற உதவியாளர் நினைவிற்கு வந்தவராக அறையின் சுற்று முற்றும் நோட்டம் விட்டார், அறையின் ஓரத்திலிருந்த மேசை மேல் அவர் தேடிய பொருள் இருந்தது, அது பீலீக்சின் நாட்குறிப்பு, உடனடியாக அதனை நோக்கி பாய்ந்த அவர் வில்லி மரணமான அந்த நாளிலிருந்து இன்றைய தினம்வரை எழுதப்பட்டிருந்த அனைத்து பிரதிகளையும் கிழித்து தனது சட்டைக்குள் ஒழித்துக்கொண்டார், வடிந்த வியர்வையை துடைத்து தன்னை அசுவாசப்படுத்திக்கொண்டு அடித்தொண்டையிலிருந்து அவர் எழுப்பிய ஓலத்தில் ஒரு கணம் அந்த முழு இல்லமும் அதிர்ந்தது சற்று நேரத்தில் பரபரப்பு தொற்றிக்கொள்ள முழு இல்லமும் , ஆறு மாத இடைவெளியில் இரு ரெக்டர்களை பறிகொடுத்த சோகத்தில் பாடசாலையும் சோகமயமாகிவிட்டது, நடந்த துர் சம்பவத்தை கேள்விப்பட்டு அங்கே வந்த மக்களில் பலர் இந்த இல்லம் சபிக்கப்பட்ட இல்லமாக போய்விட்டது என்று பேசுவதையும் , பலர் இந்த இல்லத்தை இடித்துவிட்டு புதிய இல்லம் கட்டுவது சபைக்கு நல்லது என்று அவர்கள் கருத்தையும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டிருந்தனர் சற்று நேரத்தில் பீலீக்சின் உடல் சகல சம்பிரதாயங்களையும் முடித்து மக்கள் அஞ்சலிக்காக கிடத்தப்பட பீலீக்சின் உதவியாளரோ எதுவுமே நடக்காதது போல் பீலீக்சின் பூதவுடலுக்கு அருகில் உட்கார்ந்து விசும்ப ஆரம்பித்தார், அன்றிலிருந்து இரண்டு நாட்களில் பீலிக்சின் உடல் நல்லடக்கம் செய்யப்பட, கொஞ்சம் கொஞ்சமாக வில்லி மற்றும் பீலீக்சின் ஞாபகங்கள் காலவோட்டத்தில் கரைந்து அப்படியே எல்லோரதும் நினைவிலிருந்து மறைந்து விட்டன (தொடரும்)
  5. என்கூட படித்தவர்களும்.என்னிடம் படித்தவர்களும்.........! 😎
  6. . வேடிக்கை கலந்த கவிதைச் சொந்தக் காரனுக்கு என் பாராட்டுக்கள் 😀
  7. இலங்கை செய்யும் அரசியலில் எந்தவிதமான தூர நோக்குகள் எதுவுமில்லை....! ஒரு அழகிய இயற்கை வளம் கொழிக்கும் ஒரு தேசம், வெறும் மதம், மொழி என்ற ஒரு கோட்பாட்டுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு, மனித வளத்தையும்.....இயற்கை வளத்தையும் வீணே அழித்துக் கொண்டிருக்கின்றது! ஒரு காலத்தில்...சிங்கப்பூர் இலங்கையை அண்ணார்ந்து பார்த்த காலமொன்றிருந்தது! இன்று மிகவும் வேகமாக இந்தியா போன்ற ஒரு நிலைக்கு இலங்கை என்னும் தேசம் சென்று கொண்டிருக்கின்றது! இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்று எல்லாமே நன்றாகத் தானிருந்தது! பௌத்தம் இலங்கையைத் தின்று விட்டது! பௌத்தமதத்தை உலகுக்கு அளித்தவன்...காசியில்..இரந்து சாப்பிட்ட விஷ உணவால் இறந்து போனான்! எனினும் இலங்கையில் பௌத்த மதத்தை வளர்ப்பதாகக் கூறுபவர்களைப் பார்த்தால்...பிச்சை எடுப்பவர்களாகத் தெரியவில்லை! கொழுப்பேறிய உடம்புகளுடன் தான் திரிகின்றார்கள்! பௌத்தம் வளருதோ இல்லையோ, நிச்சயமாக அவர்களும்...அவர்களுக்குத் தினவேத்தும் அரசியல் வாதிகளும் மட்டும் வளர்ந்து வருகின்றார்கள்..!கொழுத்துப் போன உடல்களில் உண்மையான பௌத்தம் ஒரு நாளும் வளரப் போவதில்லை! நல்ல சிந்தனைகளும் வளரப் போவதில்லை! இது தான் வரலாறு கற்பிக்கும் பாடம்! ஒரு விபச்சாரியின் நிலையில்.. சிங்கள தேசம் இப்போது இருக்கின்றது! எவர் அதிக விலை கொடுக்கின்றார்களோ...அவர்கள் சிங்களத்தை வாங்க முடியும்! ஒய்யாரக் கொண்டையாம்... தாழம் பூவாம்...உள்ளே இருப்பது, ஈரும் பேனும்...! இது தான் இலங்கையின் உண்மையான நிலை..!
  8. நீயே எமது வழி | நீயே எமது ஒளி உன் புகழைப் பாடுவது | நான் மறவேன்
  9. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 நபி நபி எங்களின் நபி நபி
  10. ஆறுதலாக வாசிக்கவேண்டும் என்று சில பாகங்களுக்குப் பின்னர் இப்போதுதான் இங்கே வந்திருக்கின்றேன். ☺️ தமிழ்வாணனின் துப்பறியும் மர்மநாவல்களுக்குப் பின்னர் தமிழில் திகிலாகப் போகும் கதையை இப்போதுதான் வாசிக்கின்றேன். எழுத்துநடை அபாரம் அக்னி!!👏👏👏
  11. வீரம் தாய்மையில் விளைஞ்சது ........! 🦃
  12. பார்வைகள் “Me Too” Movement அவுஸ்திரேலியாவை சுற்றி வளைத்து பிரதம மந்திரி இலிருந்து பாதுகாப்பு அமைச்சர் , Attorney General , பிரபல உதை பந்தாட்ட வீரர்கள், கடை நிலை அலுவலக ஊழியர்கள் என்று வாழ்வின் எல்லா நிலைகளிலும் இருக்கக் கூடியவர்களின் இருப்பினை கேள்விக் குறியாக்கிக் கொண்டிருக்கிறது. பெண் உரிமை என்று வாய் கிழியக் கத்தி கொண்டிருக்கும் நாம் உண்மையில் நடை முறையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்…? எனது அனுபவங்களின் தொகுப்பாக சில பதிவுகள் ………… பார்வை 1 கொஞ்ச நாட்களாகவே எனது கண் பார்வை சரியில்லை என்று ஒரு ஃபீலிங். இரவு நேரங்களில் டிரைவ் பண்ணும் போது முன்னாலிருக்கும் ரோடு மங்கலாக தெரிவது போல ஒரு பிரமை . போன கிழமை நிலைமை மேலும் மோசமாயிற்று. இரவு டிரைவ் பண்ணும் பொது முன்பு மங்கலாயிருந்த தெருக்களெல்லாம் இப்ப கறுப்பாகத் தெரியத் தொடங்கிற்று.இதென்னடா கொடுமை சரவணா என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு ஹை பீம் ஐ தட்டி விட்டால் வீதி நன்கு தெரிந்தது. அத்துடன் எதிரே வந்த கார்க்காரனின் ஆட்சேப ஹார்ன் சத்தமும் கூடவே வந்தது. இருந்தால் போல் பொறி தட்டியது. வாகனத்தை நிற்பாட்டி விட்டு முன்னுக்கு ஹெட் லைட் ஐ போய்ப் பார்த்தல், சுத்தம் - இரண்டும் செத்துப் போய் இருந்தன . டொயோட்டா காரன் இப்ப இரண்டு வருடமாக முன்னும் பின்னமும் புது மொடலுக்கு மாத்தவில்லையோ என்று கேட்ட படி. அலுவலகத்தில் புதிதாக சேர்பவர்கள் முதல் தரம் எனது வாகனத்தைப் பார்க்கும் போது “என்ன ஒரு வருடம் இருக்குமா வாங்கி” என்று தான் கேட்பார்கள். ஏழு , எட்டு வருடம் என்று சொன்னால் நான் எதோ பகிடி விடுகிறேன் என்று அப்பால் போய் விடுவார்கள். இப்பிடி இருக்கும் போது அலுவலகம் தரும் வெஹிகிள் அலவன்ஸை திரும்பவும் கொண்டு போய் டொயோட்டா காரனிடம் கொட்டி அழ வேண்டிய அவசியம் இல்லை தானே. சொல்ல வந்த விஷயமே வேறு. எனது கார் ஓடும் 34 வருட கால அனுபவத்தில் -பழைய பியட் ஒன்றுடன் 1987 இல் திருகோணமலையில் தொடங்கியது- ஹெட் லைட் பல்பு பியூஸ் ஆகி மாற்ற வேண்டிய தேவை வந்தது இது தான் முதல் தரம். ஹெட் லைட் அப்பிடியே செட் ஆக மாற்ற வேண்டுமாக்கும் என நினைத்துக் கொண்டே டொயோட்டா சேவை காரனுக்கு அடிக்க , அவன் மாடல் நம்பரை கேட்டு விட்டு தங்களிடம் ரீபிளேஸ்மென்ட் பல்பு ஸ்டாக் இல் இல்லை என்றும் “சூப்பர் சீப் ஆட்டோ” போன்ற கடைகளில் இருக்கும் என்றும் சொன்னான் . அதனை வாங்கி வந்தால் போட்டுத் தருவானா என்று கேட்க, சில வினாடிகள் மௌனத்தின் பின்னர் “ ஓம் செய்யலாம், ஆனால் வாங்கிற இடத்திலேயேயே அவர்கள் போட்டும் தருவார்கள், இங்கே கொண்டு வந்தால் நாங்கள் சேவை சார்ஜ் எடுப்போம்” என்றான் . சோ “சூப்பர் சீப் ஆட்டோ “இற்கு போனேன். கவுண்டர் பெண்மணியிடம் கேட்க , இன்னொரு பெண்மணியிடம் என்னை அனுப்பி வைத்தா ள் , சிறு பெண்ணொருத்தி ,வயது இருபதுகளில் தான் இருக்கும் , பல்கலை மாணவியாக பகுதி நேர வேலை செய்பவராக இருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன். கார் சமாச்சாரங்களில் அனுபவம் உடையவர்கள் யாரிடமாவது கூட்டிச் செல்வாள் என நினைத்துக் கொண்டேன். அந்த பெண்மணி என்னை ஒரு கம்ப்யூட்டர் திரைக்கு அழைத்துச் சென்று எனது வாகன மாடல் போன்ற விபரங்களை கேட்டு கம்ப்யூட்டருக்குள் அவற்றை தட்டி அனுப்பி இரண்டு விதமான பல்புகள் இருக்கின்றன என்று 30 செகண்ட்ஸ் நேரத்தில் சொல்கிறாள். இதே அலுவலை எனது கம்ப்யூட்டர் இல் 10 நிமிடங்களுக்கு மேலாக செலவழித்தது கண்டுபிடித்தது எனது ஞாபகத்திற்கு வந்தது. மூன்றாவதாக ஒரு LED பல்பும் இருந்தது. 6000K ரகம் 50% வெளிச்சம் கூட. அதை பற்றி கேட்டேன் , இருக்கின்றது, ஆனால் அது Off-Road பாவனைக்கு மட்டும் தான் அலவ்டு , Town ஓட்டத்திற்கு தர மாட்டோம் என்று தெளிவாக சொன்னாள். அந்த பல்புகளை பொருத்தி விடும் சேவையும் இருக்கா என கேட்டேன் . “ஆம் பத்து டாலர் சேவைக் கூலி” என்று பதில் வந்தது. “நல்லது , பொருத்துபவனை அழைத்துக் கொண்டு போய் இந்த பல்புகள் சரியாக பொருந்துகின்றதா என சரி பார்த்து விடலாமா” என கேட்டேன். “பிரச்சனை இல்லை செய்து விடலாம்” என்று பதில் வந்தது . அந்த இரண்டு செட் பல்புகளையும் எடுத்துக் கொண்டு வாகனம் நிற்பாட்டி இருக்கும் இடத்தை காட்டுமாறு சொல்லிக் கொண்டு முன்னே போனாள். பொருத்துபவனுக்கு அறிவித்திருப்பாளாக்கும் என உள்ளுக்குள்ளே நினைத்து கொண்டாலும் எதற்கும் உறுதி செய்து கொள்வோம் என்று பொருத்துபவன் அங்கே வருவான் தானே என்று கேட்டும் ( whether HE will come over there ) வைத்தேன். நிமிர்ந்து பார்த்து மெல்லிய புன்சிரிப்புடன் ஓம் என்றாள். வாகனத்தை நெருங்கியதும் Bonnet ஐ திறக்கச் சொன்னாள். கைக்கு கையுறையை மாட்டினாள். ஹெட் லைட் இன் பின் புறமாக கையை கொடுத்து வெகு இலாவகமாக சுட்டுப் போயிருந்த பல்பை கழற்றி எடுத்தாள். கையில் வைத்திருந்த இரண்டு வகைகளுடனும் ஒப்பிட்டுப் பார்த்தாள். அதில் ஒன்று தான் பொருந்தும் என்றாள். எல்லாம் ஒரு நிமிடத்துக்குள்ளேயே நடந்து முடிந்திருக்கும். நான் பேச்சிழந்து போய் அவள் செய்வதை பார்த்து கொண்டிருந்தேன். என் உள்ளேயிருந்து ஒரு குரல் எங்கேயேடா உனது “அவன்” என்று என்னை பரிகாசம் செய்து கொண்டிருந்தது, அவளுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை தான். அடுத்த 10 செகண்ட்ஸ் இல் பல்பை மாத்தி விட்டு நிமிர்ந்தாள். மற்ற பக்கமும் மாத்த வேண்டும் என்றேன். இரண்டுக்குமென்றால் 15 டாலர் வரும் என்றாள். மௌனமாக தலையாட்டினேன். உள்ளுக்குள் ஒரேயடியாக வெட்கித்துப் போய் நின்றிருந்தேன். நான் இரண்டு வளர்ந்த பெண்பிள்ளைகளின் தகப்பன். இருவரும் மருத்துவ துறையில். வீட்டில் ஆண், பெண் சமத்துவம் பற்றி அடிக்கடி மனம் திறந்த உரையாடல்கள் இடம்பெறும் . தங்கள் அப்பா ஆண் பெண் சமத்துவம் பற்றி மிக நல்ல புரிந்துணர்வு கொண்டிருக்கிறார் என அவர்கள் முழுமையாக நம்புபவர்கள். அந்த பெண்ணுக்கு அந்த பல்புகளை மாற்றும் தத்துவம் இருக்கும் என்று யோசிக்கக் கூட இடம் கொடுத்திராத எனது ஆண் உயர்ச்சி மனப்பான்மை தடுத்துக் கொண்டிருந்த வெட்கக் கேடான விஷயத்தைப் பற்றி இளைய மகளுடன் கதைத்தேன் . “இதைத் தானே அப்பா நாங்களும் சொல்கிறோம் , எங்களையும் சமயங்களில் சில தூக்கி பறிக்கிற விடயங்களை நீங்கள் செய்ய விடுவதில்லை தானே; அதனுடைய நீட்சி தான் அப்பா இது.” “கவலைப்படாதீர்கள் எல்லாம் போக போக சரியாகி விடும். ரோம் கூட ஒரே நாளில் கட்டி முடிக்கப்பட்டதல்ல என்று நீங்கள் தானே அடிக்கடி சொல்வீர்கள்” என்று ஆறுதல் மொழியும் வந்தது…. பார்வை 2 வேறொரு சமயம் …..
  13. முழங்காலில் நோவுக்கு சத்திர சிகிச்சை பெற்றவர் நல்லது என்று ஜிம்மில் elliptical பயிற்ச்சி பெற்றது எனக்கு தெரியும்.
  14. அப்பாவி அப்பா. தொடருங்கள் அக்னி.
  15. தொடத் தொட இதயம் துடிக்கும் தொடர்.......தொடரட்டும்.....! 🧐
  16. நானும் எவ்வளவோ கதைகள் வாசித்திருக்கிறேன்...! ஆனால்...ஒரு கதைக்கு எந்த இடத்தில்...'தொடரும்..." போட வேண்டுமென்று, அக்கினியிடம் தான் படிக்க வேண்டும் போல உள்ளது! தொடர் அருமையாக...அதே நேரம்...திகிலாகவும் போகின்றது! தொடருங்கள்.....அக்கினி!
  17. அடடா கதை முடிந்திருக்கும் என்று வாசிக்க ஆரம்பித்தால் இப்படி வந்து நிற்குதே. அருமை மர்மக் கதை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.