Leaderboard
-
கிருபன்
கருத்துக்கள உறவுகள்17Points38791Posts -
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்9Points8910Posts -
சுப.சோமசுந்தரம்
கருத்துக்கள உறவுகள்8Points488Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்7Points46808Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/21/21 in Posts
-
எனது நாத்திகம் - சுப. சோமசுந்தரம்
8 pointsஎனது நாத்திகம் - சுப. சோமசுந்தரம் நாம் விரும்பாமலே நாத்திகம் எனும் வடமொழிச்சொல் வெகுசனத்திடம் பரவிவிட்டதால், இறை மறுப்பை நான் இங்கு ‘நாத்திகம்’ என்றே பதிவிடுகிறேன். ‘கடவுள் உண்டா இல்லையா ?’ என்ற அருதப் பழசான விவாதத்தை ஆரம்பித்து, வாசிப்போரின் கழுத்தில் நரம்பு புடைக்க வைப்பது சாமி சத்தியமாக(!) இவ்வெழுத்தின் நோக்கமல்ல. “உண்டென்பார்க்கு உண்டு, இல்லையென்பார்க்கு இல்லை” என்று ஏனையோரிடம் உரக்கச் சொல்லிவிட்டு, “ஆனால் எனக்குத் தெரியும் இல்லையென்று” என எனக்குள் சொல்லி ‘கடவுளைக்’ கடந்து செல்பவன் நான். (ஆகையால் அது ‘கட உள்’ தானோ?) ‘நான் நாத்திகன் ஏன்?’ என்ற பகத்சிங்கின் அளவில் சிறியதொரு பெரிய படைப்பினை வாசித்த அனுபவம் எனது நாத்திகத்தையும் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்ததோ என்னவோ ! பகத்சிங் தமது சிந்தனையாலும் செயலாலும் தம் படைப்பினை உலகையே வாசிக்க வைத்தவர். குறைந்த பட்சம் நட்பு வாசக வட்டத்தில் அனுபவங்களைப் பகிரும் எண்ணமே எனது இந்த எழுத்து. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்வது நமக்குப் புதிதா என்ன? எனக்கு விவரம் தெரிந்து சுமார் பன்னிரெண்டு வயது முதல் நான் நாத்திகன். இது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. என் வீட்டின் ஜனநாயகச் சூழலும், வீட்டில் பெரியாரையும் அண்ணாவையும் சிலர் பேசிக் கொள்ளும் சுமாரான அரசியல் சூழலும், எனக்கு வாய்த்த ஆசிரியர் ஒருவர் அந்நாளைய பள்ளி வரைமுறைகளைத் தாண்டி திராவிட இயக்க விதைகளை அவ்வப்போது தூவியதும் காரணமாய் அமைந்தன எனலாம். பசுமரத்தாணியாய்ப் பதிந்து நிற்கும் பருவம் அது. இறை நம்பிக்கையும் அப்படித்தானே ! குழந்தைப் பருவத்தில், “கண்ணு, சாமி கும்பிடு ! சாமி கும்பிடு !” என்று சொல்லி வளர்ப்பதே இறை, மத நம்பிக்கையாய் முகிழ்க்கும் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை. பின்னர் அந்நம்பிக்கை சார்ந்த பெரியோரிடம் கற்றல், கேட்டல் மூலம் அது வலுப்பெறும். நிற்க. இளம் வயதில் பெரியார், அண்ணாவிடம் படித்த பாடம் கல்லூரி நாட்களிலும் பின்னாளிலும் மேலும் கிடைத்த நூலறிவினால் வாழ்வியலானது. குறிப்பிட்டுச் சொல்வதானால் ஆபிரகாம் கோவூரின் ‘Gods, Demons and Spirits’, பெட்ரன்ட் ரஸலின் ‘Why I am not a Christian’, கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸின் ‘God is not great’ என்னை நல்வழிப்படுத்தியவை. ஆயினும் இந்த ஆன்றமைந்த கொள்கைச் சான்றோர் எனக்குப் போதித்ததைப் போல் நாத்திகத்தை நான் யாருக்கும் போதிக்கவில்லை. என் குழந்தைகளுக்குக் கூட, உண்டு அல்லது இல்லை எனப் புகட்டியதில்லை. எனது நடவடிக்கைகள் மூலம் அவர்கள் இறைமறுப்பின்பால் ஈர்க்கப்பட்டது எனக்கான பேறு. அதிலும் அவர்கள் பெண்பிள்ளைகள் என்பது பெரிதினும் பெரிதான பேறு. இதில் இறைநம்பிக்கையுள்ள எனது இல்லாளின் பங்களிப்பு அபரிமிதமானது. அவளும் தன் நம்பிக்கையைக் குழந்தைகளுக்கு ஏற்றியது இல்லை. இந்த ஜனநாயகம் எல்லோருக்கும் வாய்ப்பதிலை. ஆத்திகர்களின் மொழியில் சொல்வதானால், நான் இறை மறுக்க அவர்களது இறைவனாலேயே ஆசீர்வதிக்கப்பட்டவன் போலும்! பெரும்பான்மைச் சமூகம் இறை நம்பிக்கை சார்ந்ததால், பெரும்பாலான இறை மறுப்பாளர்கள் தங்களை வெளிக்காட்டுவதில்லை. அது அவரவர் தனிப்பட்ட கருத்து எனும் நிலைப்பாடாக இருக்கலாம். இப்பூவுலகில் இவர்களோடுதானே வாழ வேண்டும் எனும் நடைமுறைச் சித்தாந்தமும் என் போன்றோர்க்கு ஏற்புடையதே. எனக்கு இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும் சமூகத்தில் பெரும்பாலானோர் அந்த நம்பிக்கையோடு வாழ வேண்டும் என்பது என் உள்ளக்கிடக்கை. அதற்கு நானாக வரித்துக் கொண்ட காரணங்கள் இரண்டு. ஒன்று, ‘மேலே ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்’ எனும் பயத்தினால் மட்டும் அதிகம் தவறு செய்யாமல் இருக்கும் வெகுசனம். இரண்டாவது, வாழ்வில் சொல்லொணாத் துயரத்தை எதிர்கொள்ள ‘மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான்’ என்று பாரத்தைக் கற்பனையான தோள் மீது இறக்கி வைக்கும் மனோபாவம்; அக்கற்பனை தரும் ஆறுதலை அவர்களுக்கு என்னால் தர இயலாத கையறுநிலை. எனவே அறியாதாரை அறியாமை இருளிலேயே வைத்து நமக்கும் அவர்களுக்கும் துன்பமில்லாமல் வாழ நினைக்கும் சுயநலம் எனது. வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி நமக்கும் தான் வரும். அப்போது நமக்கு அந்த கற்பனைத் தோள் வேண்டாமா ? இல்லையென்று நம்பிக்கை(!) ஏற்பட்டு சுமார் ஐம்பது வருடங்களான பிறகு, இல்லாததைக் கற்பனை செய்ய இயலாது. வாழ்வில் ஏற்படும் இன்பத்தை அளவாய்த் துய்க்கத் தெரியும். துன்பத்தில் அழத் தெரியும், விழத் தெரியும், எழத் தெரிய வேண்டும். இது தான் பக்குவம் பெற்ற வாழ்விற்கான இலக்கணம் என்பது எனக்குப் பால பாடம். எனக்கு இலக்கிய ஆர்வம் உண்டாகையால் பக்தி இலக்கியங்களையும் விட்டு வைக்க மனம் வருவதில்லை. நான் உருகவில்லையாயினும் அவர்கள் எப்படி உருகுவார்கள் என்பதை உணரும் அளவு இலக்கியச் சுவை தெரிந்தவன். நாத்திகராயிருந்தும் கோயில்களையும் பக்தி இலக்கியங்களையும் சமயங்களின் அடிப்படைத் தத்துவங்களையும் உணர்ந்த அறிஞர் தொ. பரமசிவன் இவ்விடயத்தில் எனக்கான வழிகாட்டி. இவையனைத்தும் மக்களை வாசிக்க உதவும் கருவிகள் எனக் கொள்ளலாம். பக்தி இலக்கியம் பேசும்பொழுது, எழுதும் பொழுது நமது இறைமறுப்பை வெளிக்காட்டாது அவ்விலக்கியச் சுவை காட்டுவது கயிற்றின் மேல் நடப்பது. “கடவுள் இல்லை; இல்லவே இல்லை” என அறிவித்து மக்கட்சேவை செய்யும் நாத்திகப் பெரியோர் வீரமரபில் தோன்றிய சான்றோர். மக்கள் கூட்டத்திலிருந்து தனித்தியங்கும் ஆற்றல் பெற்றோர். அவ்வகையில் தமிழ்ச் சமூகத்தில் பெரியார் எஞ்சாமி(!). நடிப்பாற்றலால் வெகுசனத்தில் விரவி தன் அடையாளத்தைத் தொலைத்து வாழ்ந்து தொலைக்கும் நான் ஒரு கோழை. இதுகாறும் எனது நாத்திகத்தில் பொதுவான விஷயங்களைப் பேசிய நான் இது தொடர்பில் ஒன்றிரண்டு நிகழ்வுகளை நினைவு கூற நினைக்கிறேன். இத்தகைய நிகழ்வுகளும் என்னைப் பெரிதும் செதுக்கியதாக உணர்கிறேன். அவை என் மனதில் காட்சிகளாய் விரிகின்றன. காட்சி 1: இறை மறுத்து வளர, வாழ எனக்குச் சாதகமான சூழலே அமைந்தது எனக்கான வரம். அவ்வரம் எனக்கு பள்ளி, கல்லூரி வடிவிலும் அமைந்தது கூடுதல் சிறப்பு. உரோமன் கத்தோலிக்க நிறுவனங்களிலேயே நான் வளர்ந்தாலும், தம் மத நம்பிக்கைகளை என்மீது இம்மியளவும் அவர்கள் ஏற்ற முயற்சி செய்ததில்லை. கத்தோலிக்க மாணவர்களுக்கு வாரம் ஒரு மணி நேரம் கத்தோலிக்க மறை வகுப்பு நடைபெறும் பொழுது ஏனையோருக்கு நல்லொழுக்க வகுப்பு நடைபெறும். அவ்வளவே. ஒருமுறை கல்லூரியில் வகுப்புத் தோழன் ஒருவன் வேலைக்கு மனுச் செய்த போது அவனுக்கு நன்னடத்தைச் சான்றிதழ் தேவைப்பட்டது. கிறித்தவனான அவன் எங்களது தமிழ் ஆசிரியரும் அவனது விடுதிக் காப்பாளருமான பாதிரியாரிடம் சான்றிதழ் கேட்கப் போகும் பொழுது என்னையும் துணைக்கு அழைத்தான். நன்றாகப் படிக்கும் மாணவன் நல்ல மாணவன் என்ற வேடிக்கையான வரையறை அன்றும் இன்றும் உண்டே ! அதனால் பெரும்பாலான ஆசிரியர் பெருமக்களுக்கு என் மீது அன்பும் மதிப்பும் உண்டு என்பது என் கணிப்பு. பாதிரியார் அவனிடம், “எடேய், நீ ஜெபத்துக்கே வர மாட்டே ! உனக்கு எப்படி நான் காண்டக்ட் (conduct certificate) தரமுடியும்?” என்று கடிந்துகொண்டார். அவன் கூடப் போய் நான் அங்கு நின்றதே அநாகரிகம். அதையும் தாண்டி நான் அதிகப்பிரசங்கித் தனமாக அப்போது இடைமறித்துப் பேச வேறு ஆரம்பித்தேன். அவ்வயதில் எங்களுக்குத் தெரிந்த நாகரிகம் அவ்வளவுதான். “ ஃபாதர் ! ஒழுக்கத்திற்கும் ஜெபத்திற்கு என்ன தொடர்பு ? ஜெபம் ஒருவரின் தனிப்பட்ட விஷயம்தானே ?” – சாதாரணமாக ஒரு பாதிரியாரிடம் சராசரி மனிதர்கள் கேட்காத கேள்வி. என் மீது கொண்ட அன்பினால் அவர் கோபம் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். மாறாக, “நீ சிறிது நேரம் வெளியே நில்!” என்று சாந்தமாகச் சொல்லி அனுப்பிவிட்டு அவனிடம் பேசினார். பின்னர் அவனை அனுப்பிவிட்டு என்னை உள்ளே அழைத்துச் சொன்னார், “நீ சொன்னது உனக்குச் சரி, நான் சொன்னது அவனுக்குச் சரி. படிப்பெல்லாம் எப்படிப் போகிறது ? கம்பனில் நம் பாடப்பகுதியில் உள்ள அந்த சிறு பகுதியை நீ செமினார் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று வெகு சாதாரணமாய்ப் பேசி, புன்னகை மாறாமல் அனுப்பிவிட்டார். அவர் உள்ளே அழைத்ததும் எனக்கு கடவுள், ஜெபம் பற்றிய பாடம் எடுக்கப் போகிறார் என்று நினைத்தேன். தம் செயல்பாட்டின் மூலமாக அவர் எனக்குத் தந்த பாடம் ஜனநாயகம் என்று நம்புகிறேன். அன்று என்னுள் இருந்த இளைஞன் கபடமின்றி இப்படி யோசித்தான், “அவர் சான்றோர் என்பதில் ஐயமில்லை. கூடவே, அவரும் என்னைப் போல் இச்சமூகத்தில் ஒரு நாத்திக நடிகர்தானோ !” காட்சி 2 : அடிப்படைக் கணிதக் கோட்பாடுகளை அழகுற எடுத்துச்சொல்லி அத்துறையில் நான் நானாக பெரிதும் காரணமானவர் எனது கணிதப் பேராசிரியர் திரு. ஜோதிமணி அவர்கள். இலக்கிய ஆர்வமும் உள்ளவர். சிந்தனைச் சிற்பியான அவர் வாழ்வியலிலும் எனக்கு ஆசான். பல்துறை சார்ந்த அறிவே சான்றாண்மை என்பதை எடுத்துக் காட்டியவர். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகும் அவருடன் தொடர்பில் இருந்தேன். நான் எங்கள் ஊரிலேயே புதிதாகத் தோன்றிய பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியனாய்ப் பணி அமர்ந்ததால் நாங்கள் குடும்ப நண்பர்கள் ஆனோம். அவர் ஞாயிறு தவறாமல் தேவாலயம் செல்லும் கிறித்தவர். வழியில் மாரி அம்மனையும் வணங்கும் விந்தை மனிதர். பேராசிரியர் தொ.ப விற்கு அடுத்தபடியாக சைவமும் வைணவமும் அவரிடம்தான் கேட்டிருக்கிறேன். இவ்வாறு நிரம்பிய நூலுடையோர் கேண்மை வாய்த்தது எனக்கான அடுத்த பேறாக அடுக்குவது, கூறியது கூறலாகவும் தம்பட்டம் ஆகவும் அமையும் என்பதால் தவிர்க்கிறேன் (!!!). பேரா. ஜோதிமணி அவர்களுக்கு என்னிடம் ஒரு சிறிய மனக்குறை உண்டு. அது என் இறை மறுப்பு. தம் கருத்தை மற்றவர்களிடம் வலிந்து திணிக்கும் இயல்புக்கு எதிரானவர் அவர். எனினும் இறையருளில் பரிபூரண நம்பிக்கை அவருக்கு இருந்ததால் அவ்வருள் எனக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஆதங்கம் அவருக்கு. சமயக் கருத்துகளையும் பக்தி இலக்கியத்தையும் அவர் மேற்கோள் காட்டும்போது மிகுந்த (நடிப்பில்லாத) ஆர்வத்துடன் நான் கேட்பதுண்டு. ஆகையால் இறைவன்பால் ஒரு நாள் என்னை ஈர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகக் கூறினார். அவர் நம்பிக்கை அவருக்கு. சவால் விடும் தொனியில் இல்லாமல் நான் அவருக்குப் பதில் சொன்னேன், “இறையுணர்வை இத்துணைப் பகுத்தறிவுடன் அணுகும் உங்களை இறைமறுப்பின்பால் திருப்ப முடியும் என்று எனக்கும் தோன்றுகிறது”. இது குரு, சிஷ்யன் இருவரின் தன்னம்பிக்கையையும் ஒருவர் மற்றவர் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் குறிக்கிறது. இருவருமே தோற்கக்கூடாது என்பது இயற்கையின் நியதியோ என்னவோ, திடீரென்று ஒரு நாள் அவர் தமது கர்த்தருக்குள் நித்திரை கொண்டார். அந்த நேரத்தில் என் கைபேசியும் காலாவதியானதால் ஒரு வாரம் கழித்துப் புதிய கைபேசி வாங்கலாம் என்று சோம்பேறித்தனமாய் இருந்துவிட்டேன். அந்த நேரத்தில் அந்தப் படுபாவி காலன் என் கண்ணையும் காதையும் மறைத்து அவரைக் காவு கொண்டான். மரணச்செய்தி நேரில் ஆள் மூலம் வந்ததும் சென்றேன். எனினும் அவர் மருத்துவமனையில் இருந்த கடைசி நேரத்தில் அவரிடம் பேச முடியாத வருத்தம் எனக்கு நிரந்தரமாகி விட்டது. சோகத்திலும் கவித்துவமாய் அவலச் சுவையில் சொல்வதாய் இருந்தால் அவரது விருப்பத்திற்கு மாறாக நான் இறை மறுத்ததால் அவரது இறைவன் எனக்கு அளித்த தண்டனையோ ! அவர் சீக்கிரம் விடை பெறுவார் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் தோற்று விட்டதாக - அவரது இறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டதாக – நடித்திருப்பேன். உலகத்தாரிடம் அங்கங்கே நடிக்கும்போது எனது குருவானவரின் இறுதி நாட்களில் அவரது மன நிறைவுக்காக நடிக்கக் கூடாதா, என்ன ? ஆனால் அவர் அதை நம்புவது ஐயப்பாடே ! எனது குருவை நான் அறிந்தது போல் அவருக்கும் தமது சீடனைத் தெரியும். மேலும் தமது ஞானபுத்திரனாய் அவரால் அறிவிக்கப்பட்ட நான் கருத்தியலில் அவரிடம் தோற்பதை அவரே விரும்ப மாட்டார். அவரும் எஞ்சாமி !8 points
-
எனது நாத்திகம் - சுப. சோமசுந்தரம்
3 pointsஇப்படியாய், வாழ்வை சுதந்திரமாய் வாழும் சூழலைத் தோற்றுவித்த திராவிடப் பெரியாரும், பேரறிஞர் அண்ணா வும் உழுது பண்படுத்திய மண்ணில் உதித்த இரு கிறித்தவப் பாதிரிமார்கள் கிறித்துவரல்லாத மாணவர்களை எவ்வாறு கண்ணியமாக அவரவர் பாதைகளில் சுதந்திரமாக வாழ வழி நடத்தினர் என்பது தமிழ்ச் சமூகத்தில் திராவிட இயக்கத்தின் தாக்கம் என்றால் மிகையில்லை. திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் தமிழ் மண்ணில் விளைந்த பன்முகத் தன்மைக்கோர் நற்சான்று இந்நிகழ்வுகள். "நீ சொன்னது உனக்குச் சரி. நான் சொன்னது அவனுக்குச் சரி" என்ற இரு வரிகள் எவ்வளவு பட்டவர்த்தனமான வாழ்வியல் யதார்த்தம். உளவியல் அடிப்படையில், மதவாதம் பேசும் பிஜேபி ஏன் தமிழ் மண்ணில் காலூன்ற இயலவில்லை என்பதை இக்கட்டுரையை வாசிப்போர்க்கு நன்கு விளங்கும்.3 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
2 pointsகிழக்கைச் சேர்ந்த பிள்ளையான்,கருணா போன்றோர் தாம் பிறந்த மண்ணைச் சார்ந்த தமது மக்களையே இல்லாதொழிக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதும், அதற்கு அதே மண்ணைச் சேர்ந்தவர்களையே அடியாட்களாக (இத்தொடரில் பிள்ளையானிற்காக 700 பேர் சேவகம் செய்கின்றதாக எழுதப்பட்டிருந்தது) வைத்திருப்பதையும் பார்க்க - தமிழர் மண் பறிபோவதை எண்ணி - வேதனையாக இருக்கிறது . ஆனால் தாம் பிறந்த மண்ணையும் இனத்தையும் தாமே அழித்துவிட கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கும் கிழக்கைச் சேர்ந்த துணைக்குழு உறுப்பினர்களை எண்ணி அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. "என்னமோ போங்கடா.... உங்கட தலையில நீங்களே கொள்ளிக்கட்டையைச் செருகாமல் இருந்தால் சரி"2 points- எனது நாத்திகம் - சுப. சோமசுந்தரம்
நானும் அப்படித்தான். அவ்வளவுக்கும் எனது தந்தையார் பெரிய பக்திமான். நல்லதோர் பதிவு. தற்செயலாக உருவான பிரபஞ்சத்தில் தற்செயலாக உருவான பூமிப்பந்தில் தற்செயலாக உருவான உயிரிகளில் நாங்களும் அடக்கம்! எனக்கு தமிழ் கற்பித்த பண்டிதர் சதாசிவம் திருநீற்றுப் பூச்சும், சந்தனப் பொட்டும், பூவும் தவறாமல் இட்டு வருவார். அதேவேளை பாடசாலையில் சைவசமயம் கற்பித்த பண்டிதர் பரந்தாமன் சமயநம்பிக்கை இல்லாதவராக இருந்தபோதும் கணீர் என்ற குரலில் சைவ சமய தத்துவங்களை சொல்லுவார். பக்திக்கு அப்பால் சைவ/இந்து சமய தத்துவங்களில் ஈடுபாடு வர அவரது கற்பித்தல்முறைதான் காரணம்.1 point- எனது நாத்திகம் - சுப. சோமசுந்தரம்
1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointஇக்கடத்தல்கள் பற்றி மேலும் தெரியவருவதாவது, கிழக்கில் செயற்பட்டு வரும் இரு துணை ராணுவக் குழுக்களான கருணா குழு மற்றும் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் குழு ஆகிய இரண்டும் ஒன்றையொன்று இப்படுகொலை தொடர்பாக குற்றஞ்சாட்டி வருகின்றன. கொல்லப்பட்ட வர்ஷாவின் பாடசாலைப் புத்தகப்பை மற்றும் அவளது இன்னும் சில உபகரணங்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரின் அலுவலகத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதையடுத்து, பிள்ளையான் குழுவினரே இக்கடத்தல் மற்றும் படுகொலையின் பின்னாலிருப்பதாக பெரும்பாலும் நம்பப்படுகிறது. அதேவேளை சுமார் 2000 ஆயுததாரிகளோடு அரசாங்கத்தின் சுதந்திரக் கட்சியில் இணைந்த கருணா தனது அலுவலகங்களைச் சூறையாடிச் சென்றிருப்பதாகக் குற்றஞ்சாட்டும் பிள்ளையான் தன்மீதான கடத்தல் மற்றும் கொலைப்பழியினை திசைதிருப்ப முயற்சிப்பது தெளிவாகிறது. கிழக்கு மாகாண மக்களின் உண்மையான கவலை இந்த இரு துணை ராணுவக் குழுக்களில் எது வர்ஷாவைக் கடத்திச் சென்று கொன்றிருக்கிறது என்பதல்ல, மாறாக இந்தக் கொலைகாரர்களையே தமது இரட்சகர்களாக, பாதுகாவலர்களாக உலகின் பார்வைக்கு அரசாங்கம் முன்வைத்து வருகிறது என்பதுதான். திருகோணமலை நகரில் இதே பாணியிலான கடத்தல்கள் கடந்த சில வாரங்களில் நடந்திருக்கிறது. ஒரு வர்த்தகர், சினிமாக் கொட்டகை முகாமையாளர், பஸ் நடத்துனர் ஆகியோர் உட்பட பலர் கப்பப் பணத்திற்காக இக்குழுக்களில் ஒன்றினால் அரச ஆசீர்வாதத்துடன் கடத்தப்பட்டிருக்கிறார்கள். இன்றைய வன்முறைக் கலாசாரம் பற்றிக் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயங்கள். 1. கடத்தல்கள் என்பது நாளாந்த வாழ்க்கையின் தவிர்க்கப்பட முடியாத ஒரு நிகழ்வாக இப்பகுதியில் மாறியிருப்பது, சட்டமும் நீதித்துறையும் இப்பிரதேசத்தில் முற்றாகச் செயலிழந்துவிட்டது என்பதைத்தான் காட்டுகிறது. போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இப்பகுதியில், போரின் பின்னர் அரசு செய்திருக்கவேண்டிய மிக முக்கியமான கடமை சட்டம் ஒழுங்கினை இப்பகுதியில் அமுல்ப்படுத்துவதுதான். ஆனால் இதுதொடர்பாக எதுவித நடவடிக்கையினையும் அரசு எடுக்க முன்வரவில்லையென்பதே உண்மை. இதற்கான காரணமாக முன்வைக்கப்படுவது, யுத்தம் இடம்பெறாத நாட்டின் தென்பகுதியில் கூட அரசு சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டத் தவறியிருக்கிறது அல்லது அதனால் முடியாமல் இருக்கிறது என்பதைத்தான். சாதாரண நிலைமை இருக்கும் தெற்கின் பல மாவட்டங்களிலேயே சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டத் தவறும் ஒரு அரசு போரிற்குள் இருந்து வெளியே வந்திருக்கும் நாட்டின் கிழக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதுபற்றி அக்கறை கொண்டிருக்கும் என்பதை எதிர்பார்ப்பது முட்டாள்த்தனமானது. 2. சட்டத்திற்கு உட்படாத, சட்டத்திற்குப் புறம்பான குழுக்களிடம் கிழக்கு மாகாணத்தைக் கையளிப்பது. நாட்டின் தென்பகுதியிலேயே சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டத் தவறியிருக்கும் இந்த அரசாங்கம், கிழக்கு மாகாணத்தில் தனக்கு ஆதரவான ஆயுதக் குழுக்களுக்கு இம்மாகாணத்தின் அதிகாரத்தினை ஒப்படைத்திருப்பதென்பது விளங்கிக்கொள்ளக் கடிணமானது அல்ல. அரசாங்கத்தைப் பொறுத்தவரை கிழக்கு மக்கள் மீதான தனது அதிகாரத்தினை நிலைநாட்ட கொலைகாரர்களை, கடத்தல்க்காரர்களை துணைராணுவக் குழுக்களைப் பாவிக்க விரும்புகிறது. 3. கடத்தல்க்காரர்கள் சட்டத்திற்குப் புறம்பான முறையில் பொலீஸாரினால் படுகொலைசெய்வதைக் காணும்போது சாதாரண பொதுமக்கள் அடையும் சந்தோஷம் அல்லது திருப்தி. பொலீஸாரைப் பொறுத்தவரை வர்ஷாவின் கொலைகாரர்களைச் சுட்டுக் கொன்றதில் திருப்த்திப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஏனென்றால், கடத்தலில் சம்பந்தப்பட்ட அனைவருமே கொல்லப்பட்டுள்ளதையடுத்து இக்கடத்தல் தொடர்பாக மேலும் விசாரிக்க வேண்டிய தேவை அவர்களுக்கில்லை. அத்துடன் இக்கடத்தல்காரர்களின் படுகொலைகள் பொதுமக்களிடமிருந்து வரவேற்பினைப் பெற்றிருப்பது அவர்களின் வேலையினை இலகுவாக்கியிருக்கிறது. பொதுமக்களின் இவ்வாறான மனநிலை, ஒரு தோல்வியடைந்த, நீதியற்ற சமூகத்தில், அநாதரவாக அவர்கள் விடப்பட்டுள்ளார்கள் என்பதையே காட்டுகிறது. இப்படியான சமூகத்தில் கொலைகாரர்களை பொதுமக்கள் அடித்தே கொல்கிறார்கள் அல்லது காவல்த்துறை கொல்லும்போது அகமகிழ்கிறார்கள். இவ்வாறான நிகழ்வுகளை நாம் இந்தியாவின் பீகாரிலும் நாள்தோறும் காண்கிறோம். பல சமயங்களில் பீகாரில் குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்படும் பலர் குழுக்களாக பொலீஸாரினால் என்கவுண்ட்டர் பாணியில் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். சில இடங்களில் சந்தேக நபர்களை போலீஸார் தமது வாகனங்களில் கட்டி தெருக்களில் மக்கள் பார்த்திருக்க இழுத்துச் சென்று கொன்றதும் நடந்திருக்கிறது. மனித நேயமும், நீதியும் செத்துவிட்ட தேசத்தில் குற்றவாளிகளை கொடூரமான முறையில் பொலீஸாரோ அல்லது வேறு எவரோ கொல்லும்போது பொதுமக்கள் மகிழ்வதும், தமது பழியினைத் தீர்த்துக்கொள்வதும் நடக்கிறது. குற்றங்களுக்கான சரியான தண்டனை விசாரணைகள் ஊடாக, சட்டத்தினால் சரியான முறையில் வழங்கப்படவேண்டும் என்பது மக்களின் மனதிலிருந்து முற்றாகவே காணாமல்ப் போயிருக்கிறது. 4. வர்ஷாவின் கொலைகாரர்கள் இறந்ததாகக் கூறப்படும் பொலீஸாரின் நாடகபாணிக் கதையினை எதுவித கேள்விகளுமின்றி இச்சமூகம் ஏற்றுக்கொள்ள விரும்புவதோடு, இக்கடத்தல் குறித்தோ, இதன்பின்னால் உண்மையிலேயே இருக்கும் அரசுக்கு ஆதரவான கிரிமினல் குறித்தோ மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை அது கேட்க மறுக்கிறது. பொலீஸாரின் பாதுகாப்பில் இருக்கும்போது மர்மமான முறையில் கொல்லப்பட்டிருக்கும் கொலைகாரர்களின் மரணம் பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. பெரும்பாலானவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனாலும்கூட, அரசாங்கமோ அல்லது ஏதும் ஒரு அமைப்போ இதுபற்றிய மேலதிக விசாரணைகளைச் செய்வதை மறுத்தே வருகின்றன. தொடர்ச்சியான விசாரணைகள் மூலம் வெளிக்கொணரப்படக்கூடிய உண்மைகள் அரசாங்கத்தையும், அரசுக்கு ஆதரவான சிலரையும், கூடவே மக்களையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் என்று அவை கருதுகின்றன. அரசாங்கத்தினது இந்த பாராமுகமும், உண்மையினைக் கண்டறிவதில் அதற்கு இருக்கும் உண்மையான தயக்கமும் வர்ஷாவின் கொலையின் பின்னால் இருக்கும் அரசுக்கு ஆதரவான சக்திகள் இம்மாதிரியான பாதகச் செயல்களைத் தொடர்ந்தும் செய்ய ஊக்கிவித்துக்கொண்டிருக்கின்றன. ஆக, பீகாரில் இருக்கும் மிகச் சிக்கலான சட்டம் ஒழுங்கு பிரச்சினையினை மத்திய அரசே கைவிட்டுள்ள நிலையில், அம்மாநிலம் இந்தியாவின் வன்முறைகள் மிகுந்த மாநிலமாக மாறியிருப்பதுபோன்று, இலங்கையின் கிழக்கு மாகாணமும் அரசுக்கு ஆதரவான ஆயுததாரிகளால் மாற்றப்பட்டிருக்கிறது. அதிர்ச்சியிலும், வெட்கத்திலும் அமிழ்ந்திருக்கும் ஒரு சமூகம் இலங்கை இன்று அதிர்ச்சியிலும் வெட்கத்திலும் உறைந்திருக்கும் நீதியற்ற சமூகமாக மாறியிருக்கிறது. 6 வயதுப் பாலகியின் கடத்தல் மற்றும் மரணம் தொடர்பாக சட்டத்திற்கு உட்பட்ட வகையில் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தக் கூட தகமையற்ற நாடாக அது மாறியிருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரை வர்ஷாவின் படுகொலையானது இன்னொரு நிகழ்வு, இன்னொரு மரணம், அவ்வளவுதான். அம்மக்களைப் பொறுத்தவரை இந்தப் படுகொலையினையும் முடிந்தவரை வெகு சீக்கிரமாகவே மறந்துவிடவேண்டும். பாலகியின் கடத்தலையும், படுகொலையினையும் கொல்லப்பட்ட நான்கு கடத்தல்க்காரர்களின் தலையிலும் போட்டுவிட்டு, அவர்கள் தற்போது உயிருடன் இல்லையெனும் மனத் திருப்தியுடன் கடந்து சென்றால்ப் போதுமானது. மனித உயிரின் மீதான மதிப்பினை இழந்த இச்சமூகத்தின் இன்றைய மனநிலை, இம்மக்களை ஆளும் அரசாங்கத்திற்கு இனிமேல் ஒருபோதுமே நீதியால் வழிநடத்தப்படும் சமூகம் ஒன்றினை உருவாக்க வேண்டிய தேவையினை இல்லாமலாக்கி விட்டிருக்கிறது. மனித நேயத்தினை அழித்து, படுகொலைகளை அன்றாட வாழ்வின் சாதாரண நிகழ்வாக்கியிருக்கும் இலங்கையின் இன்றைய அரசாங்கம் இப்போது செய்வது தான் உருவாக்கிய வன்முறைகளுக்குப் பலியாகும் பாலகி வர்ஷா உட்பட அப்பாவிகளின் உயிர்களுக்காக முதலைக் கண்ணீர் சிந்துவதுதான். நீதியினை விட்டு நீண்டதூரம் சென்றிருக்கும் அரசு ஒன்றினால் ஆளப்படும் மக்களே தமது சமூகத்தை மீளவும் நீதியின்பாற்பட்ட , சட்டத்திற்கு உட்பட்ட, மனித உயிர்களை போஷிக்கிற சமூகமாக மாற்றத் தலைப்பட வேண்டும். அவர்களால் ஏற்படுத்தப்படும் மாற்றமே வன்முறையற்ற , நீதியான சமூகம் ஒன்றினை உருவாக்க உதவும். ஆசிய மனிதவுரிமை கமிஷன் இவ்வமைப்பு 1984 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் ஆசிய நாடுகளின் மனிதவுரிமை மீறல்கள் பற்றி கண்காணிக்கவும், அவற்றுக்கு எதிராக நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் ஏற்படுத்தப்பட்டது. ஆங்கில மூலம் : ஆசிய மனிதவுரிமைக் கமிஷன் https://www.scoop.co.nz/stories/WO0903/S00468/sri-lanka-east-has-become-bihar-like.htm1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நீ... வீட்டுக்கு வா... உன்னை, போன பிறவிக்கே... அனுப்பி வைக்கிறேன். 🤣1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 pointகடல் அலை சுருளிமலை பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா இலஞ்சி நில பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா குன்றக்குடி பலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா விராலிமலை பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா வயலூரின் பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா வைத்தீஸ்வரன் பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா திருத்தணிகை பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா திருப்போரூர் பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா திருக்கயிலை பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா மருதமலை பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா வல்லக்கோட்டை பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா வடபழனி பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா வள்ளிமலை பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா மயிலமலை பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா எட்டுக்குடி பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா கழுகுமலை பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா கந்தக்கோட்ட பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா கதிர்காம பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா பத்துமலை பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா தண்ணிமலை பாலனே அரோகரா முருகய்யா ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா வேலனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா பாலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா பாலனுக்கு அரோகரா1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 pointகாலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 எல்லாமே நீதான்! வல்லோனே அல்லாஹ் கவிஞர் நாகூர் காதர் ஒலியின் இன்றைய பதிவு: 🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻 🛑கடந்த 9.10.20 அன்று இந்த தகவலை மட்டும் பதிந்தேன். அதை பார்த்து பலரும் அவருடைய பாடல்களை தனக்கு அனுப்பும் படி வேண்டினர். அனுப்பியும் வைத்தேன்.இன்று ஒரு பாடலை இணைத்து பதிந்துள்ளேன். தொடர்ந்து மற்ற பாடல்களையும் பதிய இருக்கிறேன்...... 🛑இஸ்லாமிய பாடகர் வடகரை( மாயவரம்) A.M. தாலிப்.. 🛑 இந்த பாடகரைப் பற்றி சிலருக்கு தெரியும், பலருக்கு தெரியாது. ஆனால் இவர் பாடிய பாடல்களை இசைத்தட்டு மூலமும், கேசட்கள் மூலமும் அனைவரும் கேட்டு மகிழ்ந்து உள்ளத்தில் பதிய வைத்து இருக்கலாம்.இந்தப் பதிவை வாசிக்கும்போது அவரைப் பற்றியும், அவர் பாடிய பாடலின் வரிகளும் உங்கள் நினைவில் நிச்சயமாக மலரும். 🛑 1970 காலக்கட்டங்களில் தமிழ் வானொலி நிலையங்களில் ஒலிப்பரப்பாகும் இசுலாமிய பாடல்களில் அதிகமாக இசைமுரசு, S M A காதர், இசைமணி யூசுப், மதுரை ஹுசைன்தீன், மொஹிதீன் பேக் ஆகியோரின் பாடல்களைதான் கேட்க முடியும். இதில் இசைமுரசு பாடல்கள் தான் அதிகமாக இருக்கும்.இலங்கை வானொலியில் அழகிய வர்ணனையோடு ஒலிப்பரப்பாகும்.k அந்த நாளையில் வானொலியில் கேட்ட பாடல்கள் அனைத்தும் வற்றாத வெள்ளமாய் எங்கள் நினைவலைகளில் இன்றளவும் பொங்கி பாய்கிறது. 🛑அந்த நேரத்தில் தான் இந்த A.M. தாலிப் அவர்களின் பாடல்கள் வானொலி வழியாக பலரது செவிகளையும், சிந்தைகளையும் ஈர்க்கிறது.இனிமையான குரல், அருமையான வரிகள், புதுமையான இசையமைப்பு எல்லோரையும் கவர்ந்திழுக்கிறது.யார் இந்த பாடகர், யார் இந்த யார் பாடகர் என்ற கேள்விகளுடன் புருவங்கள் நெளிங்கின்றன.ரொம்ப ரொம்ப நல்லா இருக்கே என்ற பாராட்டு விமர்ச்சனங்களும் குவிகின்றன.o சவுண்டு சர்விஸ்க்காரர்கள் இவர் பாடிய பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுகளை போட்டிப் போட்டுக் கொண்டு வாங்குகின்றனர்.முஸ்லிம்கள் வீட்டு அனைத்து இனிய நிகழ்ச்சிகளிலும், கல்யாணங்களிலும், தர்காக்கள் நிகழ்ச்சி, இசுலாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி அனைத்திலும் இவரது பாடல்கள் இடம் பிடிக்க தொடங்கின.இசைமுரசு பாடலுக்கு அடுத்த இடத்தை அந்நாளில் இவரது பாடல்கள் தக்க வைத்துக் கொண்டன.. 🛑இவ்வளவுக்கும் இவரை மேடை பாடகர் என சொல்லி விட முடியாது.அந்த முத்திரையையும் அவர் தமிழ்நாட்டில் பெறவில்லை. அதிக பேர் பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை.அப்படி இருக்க இவரது பாடல்கள் எப்படி ஹிட்டானது.அதுதான் மக்கள் விரும்பும் மாற்றம். இந்த புதிய குரலைக் கேட்டதும் உள்ளத்தில் ஒருவிதமான ஆனந்தம்.உற்சாகம். 🛑 70 களில் ஒரே நேரத்தில் இவர் பாடிய 8 பாடல்கள் இசைத்தட்டு வாயிலாக வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எட்டு பாடல்களில் சில பாடல்கள் கவிஞர் நாகூர் சலிம் அண்ணன் எழுதியது என நினைக்கிறேன்.m சரியாக ஞாபகமில்லை. குறிப்பாக தென்னகத்தின் திருவிளக்கு தெய்வம் தந்த ஒரு விளக்கு, நன்னாகூர் புகழ் விளக்கு, நானிலத்தின் பொது விளக்கு என்ற பாடல் சலிம் அண்ணனின் வரிகள். இது அந்நாளில் ஏதோ ஒரு பத்திரிக்கையில் கவிதையாக வெளியானது. அந்த கவிதையை பாடகர் மெட்டமைத்து பாடலாக பாட விரும்பியதால் கவிஞர் அவர்களின் அனுமதிப் பெற்று அதை பாடினார். இச்செய்தி கவிஞர் அவர்கள் என்னிடம் நேரில் சொன்னது. 🛑மீண்டும் 1975 ,80க்குள் இன்னுமொரு இசைத்தட்டில் 4 பாடல்களை பாடி வெளியிட்டார்.அந்த 4 பாடல்களும் கவிஞர் நாகூர் சலிம் அண்ணன் அவர்கள் எழுதியது.k ஒரு பாடல் பற்றி மட்டும் குறிப்பிடுகிறேன்.ஏன்டி முத்தம்மா ,ஏது புன்னகை என்னென்ன எண்ணங்கள் என்ற தலைப்பில் இசையமைப்பாளர் பாடிய திரைப்படப் பாடல்( படத்தின் பெயர் ஆறு புஷ்பங்கள்) அந்த மெட்டில் *ஏங்கி நிற்கின்றேன் ஏந்தல் வாசலில்* என ஒரு பாடலை கவிஞர் அவர்கள் எழுதினார்கள். இப்பாடலை நண்பர் கலைமாமணி குல்முஹம்மது, மற்றும் பல பாடகர்கள் மேடை நிகழ்ச்சியில் பாடி இருக்கின்றனர். தாலிப் அவர்கள் இசைத்தட்டில் பாட போகும்போது திரைப்பட பாடல் மெட்டை மாற்றி சொந்த மெட்டமைத்து பாடினார்.இசைத்தட்டில் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.. (12 பாடல்கள் தான் குறிப்பில் உள்ளது. மேலும் பல பாடல்கள் பாடி இருக்கலாம்) தாலிப் அவர்களுடன் சேர்ந்து பாடியிருப்பவர் பாடகி S. சரளா அவர்கள்... 🛑பாடகரின் சொந்த ஊர் வடகரை(மாயவரம்) என்ற போதிலும், அவர் வாழ்ந்தது, தொழில் புரிந்தது எல்லாமே மலேசியாவில்தான்.அதனால் தமிழ்நாட்டில் பலருக்கு தெரியவில்லை.. அவர் பாடுவதை தொழிலாக கொள்ளாத காரணத்தால் மேடைகளில் ஒளி வீசவில்லை..1982 ல் ஒரே ஒருமுறை அவரை நாகூரில் சந்தித்து இருக்கிறேன்.. அவரிடமிருந்து சில தகவல்கள் அப்போது பெற்றேன்.. அதன் பிறகு தொடர்பு கொண்டதில்லை..2010ல் இறைவனடி சேர்ந்தார். அவர் மறைந்து விட்டாலும் அவர் பாடிய பாடல்கள் என்றென்றும் மனதில் நிறைந்து வாழும்..o அவர் இசைத்தட்டில் பாடிய 12 பாடல்களின் விபரம்..... 🔻1, இன்ஷா அல்லாஹ், இன்ஷா அல்லாஹ் ஏகன் அல்லா கட்டளை ஏற்று, 🔻2,எத்தனை ஆயிரம் நபிகள் வந்தனர் இப்புவிமீதிலே, 🔻3, தென்னகத்தின் திருவிளக்கு, 🔻4, அருளான அன்பான அல்லாஹூவே, 🔻5, அல்லா அல்லா எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் நீதானே, 🔻6, வானில் உதித்த வெண்மதிபோல் தீனில் உதித்த ஜோதியே, 🔻7, இருள் சூழ்ந்த நேரம்( நபிமணியே எங்கள் நாயகமே), 🔻8, வான்மேவும் வல்லோனின் புகழ் பாடுவோம், 🔻9, அல்லாவை தவிர யாரிடமும் கையேந்தி விடாதீர்கள், 🔻10,ஏங்கி நிற்கின்றேன் ( எஜமானே எங்கள் நாகூரா), 🔻11, அல்லாவின் தூதே அருள் தீபமே எங்கள் யாநபி, 🔻12, செல்வோம் செல்வோம் செம்மல் நபியை கண்டு வருவோம். சிந்தைத் திகழ் மதினா...... என்ன நண்பர்களே இப்போது இந்த பாடல்கள் உங்கள் இதய வானொலியில் ஒலிக்க தொடங்கி இருக்குமே.உங்கள் எண்ணச் சுடரை பதியுங்கள்... +++++++++++++++++++ கவிஞர் நாகூர் காதர்ஒலி1 point- ஐம்பதில் ஆசை
1 point- ஐம்பதில் ஆசை
1 pointஎன்னைப்போல ஆக்கள் தான் வந்த புதிசிலை இரவுபகல் பாராமல் நாயடி பேயடி அடிச்சு வேலை செய்தது.வீட்டுக்கு காசு அனுப்பவேணும்.அக்கா தங்கச்சி சகோதரங்களுக்கு உதவ வேணும்.சொந்தங்களுக்கு உதவ வேணும் எண்டு ஆயிரம் சோலிகள். இப்ப நிலமை கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக்கொண்டு வருது.எமக்கு அடுத்த சமுதாயம் அனுபவிக்கின்றார்கள்.1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- பாவத்தின் சம்பளம்
1 pointபாகம் 2 வரட்டும் இந்த திகில வாசிக்க நம்ம பழைய ஸ்கூல் நியாபகம் வருது அங்கயும் இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்தது தெரியுமா என்ன? கதையை இன்னும் கற்பனைக்குள் இட்டு இன்னும் நீட்டி முடிந்திருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும் வாழ்த்துக்கள் நண்பா இன்னும் வரட்டும் கதைகள் எழுத அனுமதி கிடைக்கல இந்தப்பகுதிக்குள் இப்பதான் கிடைச்சது அதானல் எழுதமுடியல மீண்டும் வாழ்த்துக்கள்1 point- கொஞ்சம் சிரிக்க ....
1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதைத் தான் தீர்க்கதரிசி என்பது. பின்நாளில் நடப்பதை முன் கூட்டியே சொல்வது.1 point- ஐம்பதில் ஆசை
1 pointஒரு நாளுக்கு மூன்று அவித்த முட்டைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கே... இதில குறைவான உணவு என்று வேற 😉1 point- ஐம்பதில் ஆசை
1 pointமூச்சு எப்படி விட வேண்டும் என்று தெரியாது. எனக்கு ஆஸ்மா இருந்தபடியால் ஓடும்போது அதிமாக சத்தத்துடன் மூச்சு வாங்கும். 😀 இதயம் கூடுதலாக அடிப்பது உங்கள் கற்பனையாக இருக்கலாம். இருந்தாலும் அளவுக்கு மீறி இதயம் துடித்தால் ஓடவோ நடக்கவோ வேண்டாம். இப்போது குறைந்த விலையில் இதயத் துடிப்பை அறியும் கைக்கடிகாரங்கள் உள்ளன. துல்லியமாக அளக்க வேண்டுமானால் நெஞ்சில் கட்டிக் கொள்ளும் பட்டி 40யூரோவிலிருந்து கிடைக்கும். வயதைப் பொறுத்து ஒருவரது அதிகப்படியான இதயத் துடிப்பு வேறுபடும். பெண்களுக்கு BPM = 226 - வயது ஆண்களுக்கு BPM = 220 - வயது (உதாரணமாக உங்களுக்கு 40 வயதென்று வைத்துக் கொண்டால் : 220 - 40 = 180 BPM) மன்னிக்கவும் உடையார். அப்படியானால் தயங்காமல் ஓடுங்கள்.1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointகடவுளுக்கும் மேலான "கெளரவ" கருணா அம்மாண்........................... கொழும்பு டெலிகிராப் கட்டுரை : ஆவணி 25, 2015 அரந்தலாவையில் சிங்கள விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட காலத்தில் கருணாவே கிழக்கு மாகாணத்திற்கான புலிகளின் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். அவ்வாறே 1990 இல் புலிகளிடம் சரணடைந்த 600 சிங்கள, முஸ்லீம் பொலீஸாரை இழுத்துச்சென்று சுட்டுக்கொன்றபோதுகூட கருணாவே கிழக்கு மாகாண விசேட தளபதியாக இருந்தார். இதே காலப்பகுதியில் கருணாவின் கட்டளையின் கீழ் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பள்ளிவாசல் படுகொலைகள், சம்மாந்துறைப் படுகொலை, பல்லியகொடல்ல மற்றும் கொணேகல படுகொலைகள் ஆகியன இடம்பெற்றிருந்தன. இப்படுகொலைகள் எவையுமே கருணாவின் அனுமதியின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் , இன்றுவரை எந்த சிங்கள, முஸ்லீம் அரசியவாதியோ தமது மக்கள் படுகொலைசெய்யப்படக் காரணமான கருணாவினை கேள்விகேட்க முன்வரவில்லை. அவர்களைப் பொறுத்தவரை தமது அரசியல் லாபங்களுக்காக கருணாவின் பாவங்களை அவர்கள் மன்னித்துவிட்டார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. கருணாவை அரசுடன் இணைத்து செயற்படுவது குறித்து அவர்கள் விருப்பம் கூடத் தெரிவித்திருக்கிறார்கள். சிங்கள தலைவர்களைப் பொறுத்தவரையில் பிரபாகரனைக் கொன்று, புலிகளை அழித்து, தமிழரை ஆட்கொள்வதுடன் ஒப்பிடும்போது, கருணாவின் படுகொலைகள் பற்றிப் பேசுவது முக்கியமற்ற ஒரு விடயமாக இருக்கலாம். ஆனால், முஸ்லீம் தலைவர்களுக்கு என்னவாயிற்று? தமது மக்களைப் படுகொலைசெய்து, தமது வர்த்தகர்களைப் பணத்திற்காகக் கடத்திச்சென்று கொன்று, காணாமலாக்கிய கருணா மீது ஏன் இதுவரை ஒரு முஸ்லீம் தலைவர் தன்னும் கேள்வி எழுப்பவில்லை?1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointசெய்திக்குறிப்பு 1 : மார்கழி 2011 சிறார்களை தனது துணைராணுவக் குழுவில் இணைத்த கருணா ஆங்கிலத்தில் : உவிந்து குருகுலசுரிய 2005 ஆம் ஆண்டு, இலங்கையினுள்ளும், வெளியேயும் மனிதவுரிமைகளுக்கான செயற்பாடுகளில் ஈடுபட்டதற்காக ராதிகா குமாரசுவாமிக்கு அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா தேஷமான்ய எனும் உயர்ந்த கெளரவத்தினை வழங்கியிருந்தார். ராதிகா அப்பொழுது ஐ நா வின் சிறுவர்களுக்கும் ஆயுதப் பிணக்குகளுக்குமான நடவடிக்கைக் குழுவில் விசேட பிரதிநிதியாகச் செயலாற்றிவந்தார். ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்டுவரும் சிறுவர் சிறுமியரின் உரிமைகள் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே அவரது பிரதான கடமையாக இருந்து வந்தது. கார்த்திகை 2011 இல், இனியபாரதி என்றழைக்கப்படும் புஷ்பகுமார் எனும் நபருக்கு இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதே உயர் கெளரவமான தேஷமான்ய எனும் பட்டத்தினை வழங்கி கெளரவித்திருக்கிறார். கடந்த 18 ஆம் திகதி திருக்கோயில் பகுதியில் இடம்பெற்ற ஆடம்பர நிகழ்வொன்றில் இனியபாரதிக்கு இந்த நாட்டின் மகத்தான கெளரவம் வழங்கப்பட்டதை அம்பாறையிலிருந்த அவரது அலுவலகம் சண்டே லீடர் பத்திரிக்கை இதுதொடர்பாக அவர்களைத் தொடர்புகொண்டபொழுது உறுதிப்படுத்தியிருந்தது. யார் இந்த இனியபாரதி ? சிறுவர் சிறுமியரை கடத்திச் சென்று கட்டாய ராணுவப் பயிற்சியின் பின்னர் துணைராணுவக் குழுவில் இணைத்துவருபவர் என்று ஐ நா வால் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் இவர். கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், அக்கரைப்பற்று, திருக்கோயில், வினாயகபுரம் ஆகிய பகுதிகளில் பலநூற்றுக்கணக்கான கடத்தல்களுக்கும் காணாமற்போதல்களுக்கும் காரணமானவர் என்று மக்களால் அடையாளம் காணப்பட்டவர் இவர். ராஜபக்ஷவின் அரசில் துணையமைச்சராகவிருக்கும் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் துணைராணுவக் குழுவில் மிக முக்கிய ஆயுததாரியாகச் செயற்பட்டு வருபவர் இவர். அதுமட்டுமல்லாமல், அம்பாறை மாவட்டத்தின் மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டுவருபவர் இவர். அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான விசாரணைக் குழுவின் அமர்வுகளில் சாட்சியமளித்த மக்களில் 90 வீதமானவர்கள் தமது பிள்ளைகள், கணவன்மார்கள், மனைவிமார்களைக் கடத்திச் சென்று காணமாலக்கியது இனியபாரதியே என்று வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியிருந்தனர். திருக்கோயிலில் அமைந்திருக்கும் கருணா துணை ராணுவக் குழுவின் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இலக்கத்தகடு பத்திரிக்கையால் மறைக்கப்பட்ட வெள்ளை நிற வானும் அருகே இனியபாரதியுடன் அவரது சகா ஜீவேந்திரனும் கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்கள் அனைத்திலும் வாக்காளர்களுக்கு கொலைப் பயமுருத்தல் விடுத்தது, மகிந்தவின் கட்சிக்கு வாக்களிக்குமாறு அச்சுருத்தியது, தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டது போன்ற பல வன்முறைகளில் இனியபாரதியே தலைமை தாங்கிச் செயற்பட்டதாக தேர்தல்க் கண்காணிப்பாளர்கள் அறிக்கைகளை விடுத்திருக்கின்றனர். இந்த வன்முறைகளின்பொழுது குற்றவாளியென்று கண்டறியப்பட்ட இனியபாரதிக்கு 10 வருட சிறைத்தண்டனையினை கல்முனை நீதிமன்றம் வழங்கியிருந்தது. இனியபாரதியும் அவரது வெள்ளை வான் கடத்தல்களும் நான் இந்த மனிதரை ஆனி 19, 2007 அன்று திருக்கோயிலில் அமைந்திருக்கும் அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். சுதந்திர ஊடகம் சார்பாகவும், இலங்கை ஊடக நிலையம் சார்பாகவும் நானும், சர்வதேச ஊடக நிலையத்தின் இயக்குனர் டேவிட் டாட்ஜ், சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் சுகுமார் முரளிதரன், இலங்கை ஊடகத் தொழிலாளர்கள் சார்பாக அதுல லியனகே மற்றும் இலங்கை முஸ்லீம் ஊடகவியலாளர் அமைப்பின் ஜாவிட் முனவ்வரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டோம். பேச்சுக்களில் ஈடுபட்ட சுதந்திர ஊடகவியலாளர்களும், இனியபாரதியுடன் அவரது உதவித் தலைவரும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு கருணா குழுவினால் இழைக்கப்பட்டு வந்த அநீதிகளைச் சரிசெய்யும் நோக்கிலேயே எமது இந்தப் பயணம் அமைந்திருந்தது. அந்தவருடத்தில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு இனியபாரதியால் பல தடவைகள் கொலைப்பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன. நாம் அம்பாறை மாவட்ட கருணா துணைராணுவக் குழுத் தலைவரும் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளருமான இனியபாரதி மற்றும் அவரது உப தலைவரான ஜீவேந்திரன் ஆகியோரை அவர்களின் அலுவலகத்தில் அன்று சந்தித்தோம். அவரது அலுவலகத்தினுள்ளே பல சிறுவர்கள் ஆயுதங்களுடன் நடமாடுவதை நான் கண்டேன். அதுல லியனகேயுடன் சேர்ந்து இரகசியமாக அச்சிறுவர்களைப் படமெடுக்க நான் எண்ணினேன். அத்துடன், அவர்களின் அலுவலகத்தின் முன்னால், இலக்கத்தகடு பத்திரிக்கையினால் மறைக்கப்பட்ட வெள்ளைநிற வான் ஒன்றைக் கொண்டோம். அருகில் சென்று பார்க்கும்பொழுதுதான் அவ்வாகனத்தில் இலக்கத்தகடே இருக்கவில்லையென்பது எமக்குப் புரிந்தது. கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவின் இலக்கத்தகடற்ற வெள்ளை நிற வான் தற்போதைய தேசமான்ய கெளரவத்தினைப் பெற்றிருக்கும் இனியபாரதியுடன் சேர்த்து அவ்வாகனத்தினைப் படம்பிடித்துக் கொண்டேன். அவர்களுடன் கூடவே ஆயுதம் தாங்கிய இரு சிறுவர்களையும் நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இப்புகைப்படம் என்னாலேயே முதன் முதலாக வெளிக்கொண்ரப்பட்டது. பல்வேறு ஊடகங்கள் இப்புகைப்படத்தினைப் பகிருமாறு என்னிடம் கேட்டுக்கொண்டபோதும்கூட, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளரின் பாதுகாப்புக் கருதி அதனைப் பகிர நான் விரும்பியிருக்கவில்லை. கருணா துணைராணுவக் குழுவினரின் அலுவலகத்தின் முன்னால் இலக்கத்தகடற்ற வெள்ளைநிற வாகனம் நிறுத்தப்பட்டிருப்பது அவர்கள் ஆட்களைக் கடத்திச் செல்ல இந்த வாகனத்தைப் பாவிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. பலநூற்றுக்கணக்கான கடத்தல்கள் மற்றும் காணாமற்போதல்கள் தொடர்பான முறைப்பாடுகள் பொலீஸாரிடம் கிடைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்றுவரை ஒருவர் கூட விடுவிக்கப்படவுமில்லை, குற்றமிழைத்தவர்கள் கைதுசெய்யப்படவுமில்லை. பலவந்த சிறுவர் ராணுவப் பயிற்சியும் இனியபாரதியும் ஐ நா சிறுவர் நிதியத்தின் அறிக்கைப்படி, "64 வீதமான சிறுவர்கள் புலிகளால் கட்டாய ராணுவப் பயிற்சிக்கு இணைக்கப்பட்டிருக்கலாம்" என்று கூறுகிறது. ஆனால், தவறாகப் பிரசுரிக்கப்பட்ட இவ்வறிக்கையினைப் பார்த்த பிரபல சிறுவர் உரிமைகள் அமைப்பின் பிரமுகர் ஒருவர் என்னிடம் தொடர்புகொண்டு, கடத்தப்பட்ட சிறுவர்கள் அரச ராணுவத்தாலும் கருணா குழுவாலும் கடத்தப்பட்டிருக்கும்பொழுது, இதனைப் புலிகள் செய்தார்கள் என்று அறிக்கை வெளியிடுவது எப்படிச் சாத்தியம் என்று வினவினார். அரசு நேரடியாக கடத்தல்களில் ஈடுபடவில்லையென்று நான் கூறினாலும் கூட, இவ்வளவு பெரிய தவறை இந்தவறிக்கை எப்படி சுமந்து வந்தது என்று எண்ணுகிறேன். ஆனால், உண்மையென்னவெனில், அரசின் ஆதரவுடனேயே கருணா துணைராணுவக் குழு இக்கடத்தல்களைச் செய்துவருகிறது என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். புலிகளுடனான போருக்காகவே இவர்கள் தமிழ்ச் சிறார்களைக் கடத்திச்சென்று பயிற்றுவிக்கிறார்கள் என்பது வெளிப்படையானது. கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட செய்திக்குறிப்பில் இங்குநடக்கும் கடத்தல்களும் காணாமற்போதல்களும் பற்றி அமெரிக்கா நன்கு அறிந்தே வைத்திருக்கிறதென்பது தெளிவாகிறது. அத்துடன், நாட்டின் ஜனாதிபதி மகிந்த மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ஆகியோருக்கும் இக்கடத்தல்கள் பற்றி தெளிவாகவே தெரிந்திருக்கிறது. கருணாவினால் கட்டாய ராணுவப் பயிற்சிக்காக கடத்தப்பட்டு போரில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்கள் "ஜனாதிதிபதியுடனும், பாதுகாப்புச் செயலாளருடனுமான சந்திப்புக்களில் எமது இரு நாடுகளுக்குமிடையேயான பரஸ்பர ராணுவ உதவிகளைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்கு சிறுவர்களை துணைராணுவப் படையில் இணைக்கும் விடயம் தொடர்பாக கவனத்தில் எடுக்கப்படவேண்டும் என்று தூதுவர் கோரியிருந்தார். அதன் போது பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர், துணைராணுவக் குழுக்களை நிராயுதபாணிகளாக்கும் நடவடிக்கையினைத் தாம் ஆரம்பித்திருப்பதாகவும், அதன் ஒரு கட்டமாக துணைராணுவப் படையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட சிறுவர்களை விலக்குவதும் அடங்கும்" என்றும் கூறியிருந்தார். மே மாதம் 26 ஆம் திகதி, 2009 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட இந்த கேபிள் செய்தியின் காலப்பகுதியில் தூதுவராக ரொபேட் ஓ பிளேக்கே இருந்தார். அமெரிக்காவுக்கு, சிறுவர்களை படையில் சேர்த்து போரில் ஈடுபடுத்திவருவது இலங்கை அரசும், துணைராணுவக் குழுக்களும்தான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் யுனிசெப் அமைப்பு புலிகளை மட்டும் குற்றஞ்சாட்டுவது ஏன்? அவர்கள்கூட அரசாங்கத்தின் பிரச்சார இயந்திரமாக மாறிவிட்டனரா? கோத்தாபய அவர்கள் ஐலண்ட் பத்திரிக்கைக்கு வழங்கிய பேட்டியில் "100 ஆட்டிலெறிக் குண்டுகளால் செய்யமுடியாததை ஒரு மூளைச்சலவை செய்யப்பட்ட சிறுவர் தற்கொலைப் போராளியைக் கொண்டு பிரபாகரனால் செய்யமுடிந்தது. இன்று சிறுவர்களை நாம் படையில் சேர்க்கிறோம் என்று முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள் அன்றே பிரபாகரனுக்கெதிராக நடவடிக்கைகளில் இறங்கியிருந்தால் அவர்களால் ஆயுதங்களைத் தருவித்தோ, கட்டமைப்புக்களை உருவாக்கியோ போராடியிருக்க முடியாது. அவர்களின் சொத்துக்களை, கட்டமைப்பினை, வங்கிக் கணக்குகளை முடக்கியிருந்தால், அவர்களாகவே போராட்டத்தைக் கைவிட்டு, சிறுவர்களை இணைப்பதையும் நிறுத்தியிருப்பார்கள். ஆகவே, இன்று முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள், யுனிசெப்பை விமர்சிக்காமல், புலிகளுக்கெதிரான அதன் விமர்சனத்தை ஆதரிக்க வேண்டும்" என்று கூறினார். பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவை ஐலண்ட் நாளிதழுக்கு வழங்கிய செய்தியில் இறுதிப்போரில் நடந்த மனிதவுரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறல் பற்றிப் பேசுபவர்கள், சிறுவர்களை படையில் சேர்த்தது பற்றிப் பேசவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். அப்படியானால், புலிகளால் சேர்க்கப்பட்ட சிறுவர்கள் மட்டுமல்லாமல் அரசாலும், துணைராணுவக் குழுக்களாலும் சேர்க்கப்பட்ட சிறுவர்கள் பற்றியும் பேசப்படுவதுதான் நியாயமாக இருக்கும்.1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 06, புரட்டாதி 2016 தமிழர்களின் வாழ்வாதார முடக்குதலோடும், தாயகச் சிதைப்போடும் முன்னெடுக்கப்பட்டுவரும் "கிழக்கின் அபிவிருத்தி" - உபயம் கருணா கடந்த மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வனவள அமைச்சினூடாகவே தமிழர் தாயகச் சிதைப்பும், சிங்களக் குடியேற்றங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. ஆனால், புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்கிற போர்வையில் தமிழர்களின் வாழ்வாதார கால்நடை மற்றும் மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்பட்டுவருவதோடு, அவர்களின் தாயகமும் சிங்களக் குடியேற்றங்களால் கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது. தமிழரின் மேய்ச்சல் நிலங்கள் இவ்வருட ஆரம்பத்திலிருந்து இன்றுவரைக்கும் குறைந்தது 1000 ஹெக்டெயர்கள் பசுமையான மேய்ச்சல் நிலங்கள் அடங்கலாக பெருமளவு தமிழர் நிலம் சிங்களக் குடியேற்றத் திட்டங்களால் காவுகொள்ளப்பட்டிருக்கிறது. கிரான் பால்ப்பண்ணை விவசாயிகள் அமைப்பின் தலைவரான திரு நிமலன் கந்தசாமி இதுபற்றிக் கூறுகையில் தமது மேய்ச்சல் நிலங்களை அடாத்தாக அபகரித்துக் குடியேறிவரும் சிங்களவர்களின் பாதுகாப்பிற்கென்று ராணுவமும், சிங்கள ஊர்காவல்ப்படையும், முன்னாள் ராணுவ - காவல்த்துறை அதிகாரிகளும் அரசால் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், இவர்களே தமிழரை இந்நிலங்களிலிருந்து அச்சுருத்தி விரட்டிவருவதாகவும் தமது கால்நடைகளைக் கொன்றும் களவாடிச் செல்வதாகவும் கூறுகிறார். தமிழர்களின் மேய்ச்சல் நில அபகரிப்பு மயிலத்த மடு மற்றும் மாதவணை ஆகிய பகுதிகளிலேயே அதிகமாக நடைபெற்று வருவதாகவும், இப்பகுதிகளில் நாள்தோறும் சிங்களவர்கள் குடியேறிவருவதாகவும் இவர் கூறுகிறார். கடந்த 3 வருடங்களில் மட்டும் குறைந்தது 1000 பசுக்கள் சிங்களவர்களால் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலநூற்றுக்கணக்கான பசுக்களை சிங்களவர்கள் கொன்றபின்னர் எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க அரச ஆலோசனைப்படி தமிழர்களின் வாக்குகளால் பதவிக்குக் கொண்டுவரப்பட்ட இனவாதி மைத்திரிபால தமிழர்கள் மேல் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இந்த திட்டமிட்ட இனரீதியிலான ஆக்கிரமிப்பினை உலகம் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றது என்று பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். கிழக்கு வாழ் கல்வியாளர்களின் கருத்துப்படி, அமெரிக்காவில் வெள்ளையினத்தவர்கள் குடியேறியபோது, மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்களைக் கொன்று நிலத்தினைக் கைப்பற்றியதற்கு ஒத்ததாக இன்று மட்டக்களப்பில் நடைபெறும் சிங்களக் குடியேற்றங்கள் திகழ்வதாகக் கூறுகின்றனர். திரு கந்தசாமி மேலும் கூறுகையில், " கிழக்கு மாகாணத்தின் சிங்கள ஆளுநராக இருக்கும் ஒரு இனவாதி , மைத்திரியின் கிழக்கு மாகாண ஆலோசகராக பதவி வகிப்பதோடு, அரசால் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிங்கள ஆக்கிரமிப்பினை ஆதரிப்பதாகவும், தமிழர்களின் இதுதொடர்பான முறைப்பாடுகளை அசட்டை செய்துவருவதாகவும் கூறுகிறார். தமிழரின் மேய்ச்சல் நிலங்களை சிங்களக் குடியேற்றங்கள் மூலம் அபகரிக்கும் கைங்கரியம் 2007 ஆம் அண்டிற்குப்பிறகே அரசுகளால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கருணாவின் துணையுடன் கிழக்குமாகாணம் ராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் வந்தபின்னர் இவை துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இவர் கூறுகிறார். இலங்கை அரசாங்க பாற்பண்ணை அமைப்பின் அனுமதிப் பத்திரங்களைக் கொண்டே தமது கால்நடைகளை தமது மேய்ச்சல் நிலங்களில் மேய்த்துவருவதாக இப்பகுதித் தமிழர்கள் கூறுகின்றனர். தமது மேய்ச்சல் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருவதாலும், கால்நடைகள் கொல்லப்பட்டுவருவதாலும் விரக்தியுற்றிருக்கும் தமிழப் பண்ணையாளர்கள், அரசின் பாற்பண்ணை அமைப்பிற்குத் தாம் வழங்கிவரும் பாலினை தற்போது நிறுத்திவைத்து தமது எதிர்ப்பினைக் காட்டிவருகின்றனர். நாட்டின் மொத்த பாற்பொருட்கள் உற்பத்தியில் 22 வீதத்தினை மட்டக்களப்பு பண்ணையாளர்கள் வழங்கிவருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. சிங்களக் குடியேற்றத்திற்கும் தனக்கும் தொடர்பில்லையென்று கூறிவரும் அரச பாற்பண்ணை அமைப்பு, தெற்கில் சிங்களப் பண்ணையாளர்களுக்குக் கொடுக்கும் விலையினைக் காட்டிலும் மிகக் குறைந்த விலைகே தமிழ்ப் பண்ணையாளர்களிடமிருந்து பாலினைக் கொள்வனவு செய்துவருவதாகவும் நிமலன் குறிப்பிடுகிறார். தமிழ் பண்ணையாளர்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் முறைப்பாடுகளையடுத்து இப்பகுதிக்கு விஜயம் செய்த அரச அதிகாரிகளும், காவல்த்துறை அதிகாரிகளும் நிலைமையினை ஆராய்ந்து, தமிழர்களின் நிலங்கள் அடாத்தாக ஆக்கிரமிக்கப்படுவதையும், கால்நடைகள் கொல்லப்படுவதையும் ஆதாரங்களுடன் அறிக்கையாக கிழக்கு மாகாண இனவாத ஆளுநரிடம் சமர்ப்பித்திருக்கின்றனர் என்று தெரியவருகிறது. கடந்த வைகாசி மாதம் கிழக்கு மாகாண ஆளுநரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான களுபாகே ஒஸ்டின் பெர்ணான்டோ என்பவனுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்க அவன் தொடர்ந்தும் மறுத்துவருவதாகத் தெரிகிறது. ஆளுநர் மாளிகை அதிகாரிகளிடமிருந்து வைகாசி மாதம் முடிவிற்கிடையே பதிலளிக்கப்படும் என்று கூறப்பட்ட போதிலும் நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை பதிலோ, நடவடிக்கையோ எடுக்கப்படவில்லையென்று தமிழ்ப் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். மகாவலி திட்டம் "பி" - படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பகுதி மகாவலி திட்டம் "பி" பிரிவானது தமிழர்களின் மேய்ச்சல் நிலங்களை அபகரிக்கும் நோக்கத்துடனும், அவர்களின் வாழ்வாதாரத்தினை அழிக்கும் நோக்கத்துடனும் மட்டுமே முன்னெடுக்கப்பட்டுவருவதாக தமிழர்கள் தெரிவிக்கின்றனர். திரு நிமலன் கந்தசாமியின் கருத்துப்படி 2007 வரை படுவான்கரையின் தமிழர்களின் காணிகளும் வாழ்வாதாரமும் தமிழீழ விடுதலைப் புலிகளால் காக்கப்பட்டு வந்தது. ஆனால், பிரதேசவாதம் பேசிக்கொண்டு அரசுடன் சேர்ந்து சொந்த இனத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கியிருக்கும் சிலரால் இன்று மட்டக்களப்பு மாவட்டமே முற்றான சிங்களமயமாக்கலின் ஆபத்தினை எதிர்நோக்கியிருப்பதாகத் தெரிவித்தார். சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து 2007 வரை புலிகளால் காக்கப்பட்டு வந்த படுவான்கரை இது இவ்வாறிருக்க, அரச வனவளக் கூட்டுத்தாபனம் தமது நடவடிக்கைகளுக்கு தமிழ்ப் பண்ணையாளர்கள் முட்டுக்கட்டைபோடுவதாகவும், மேய்ச்சல் நிலங்களில் இருந்து அகல மறுப்பதாகவும் கூறி 2010 இல் வழக்கொன்றினைத் தாக்கல் செய்திருக்கிறது. ஆகவே, தமிழ்ப் பண்ணையாளர்கள் தமது குற்றத்தினை ஒத்துக்கொண்டு, மேய்ச்சல் நிலங்களை விட்டு அகன்று, வனவள அமைச்சின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கவேண்டும் என்றும் சிங்கள நீதித்துறையின்மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறது. "நாம் செய்யாத குற்றத்திற்காக நாம் ஏன் பொறுப்பெடுக்கவேண்டும்? எமது தாயகத்தை அபகரித்து, எமது வாழ்வாதாரத்தைச் சிதைத்துவருவது அரசல்லவா? அவர்கள்தானே உண்மையான குற்றவாளிகள்?" என்று திரு நிமலன் கேள்வியெழுப்புகிறார். "கொல்லப்பட்ட எமது கால்நடைகளை புகைப்படமெடுத்தும், தகுந்த ஆதாரங்களிக் கொண்டு ஏறாவூர்ப் பொலீஸில் நாம் முறைப்பாடு செய்தபோதும், சிங்கள குடியேற்றவாசிகளுக்கெதிராக தம்மால் நடவடிக்கையெடுக்க முடியாது என்று கூறுகிறார்கள்" என்று நிமலன் மேலும் சொன்னார். தமிழர்கள் தமது நிலங்களுக்காகவும், காவுகொள்ளப்படும் கால்நடைகளுக்காகவும் தொடர்ந்தும் போராடிவருமிடத்து சிங்களக் குடியேற்றவாசிகள் மேலும் மேலும் தமிழர் பகுதிகளுக்குள் ஊடுருவி நிலங்களைப் புதிதாக ஆக்கிரமித்து வருவதோடு, அவ்விடங்களில் புத்த விகாரைகளையும் கட்டிவருவதாகவும் நிமலன் கூறுகிறார். "எமது மேய்ச்சல் நிலங்களை, முற்றாக அழித்து, தெற்கிலிருந்து கொண்டுவரப்படும் ஏழைக் கூலித் தொலிழாளர்களைக் கொண்டு விவசாய மண்ணை பல படிமங்களாகக் கொட்டிப் பரவிவருகிறார்கள். இந்த நிலங்கள் விவசாயத்திற்கு உகந்ததல்ல என்பது அவர்களுக்குத் தெரியும், ஆகவே இதன்பின்னால் இவர்களிடம் வேறு ஏதோவொரு திட்டமிருக்கிறது. இவர்கள், பல்வேறான சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ராணுவத்தையும், ஊர்காவல்படையினரையும் இணைத்து செயற்படுத்திவருகிறார்கள்" என்றும் நிமலன் மேலும் கூறினார். மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் பெரும்பகுதி திட்டம் "பி" பிரிவிற்குள்ளேயே அடங்குகிறது. மொத்த திட்டத்தின் நில அளவான 75,441 ஹெக்டெயர்களில் மட்டக்களப்பு - பொலொன்னறுவை மாவட்டங்களில் மட்டும் 27,179 ஹெக்டெயர்கள் நிலம் இத்திட்டத்திற்குள் உள்வாங்கப்படுகிறது. இதிலும் பெரும்பகுதி மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இருக்கின்றது. ஆகவே, பொலொன்னறுவை மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பு மாவட்டத்தின் பகுதிகளை சிதைத்து, மகாவலித் திட்டம் எனும்பெயரில் பொலொன்னறுவை மாவட்டத்துடன் இணைத்து சிங்களவர்களைக் குடியேற்றும் கைங்கரியத்தில் பல்லாண்டுகளாகவே இப்பகுதியில் செயற்பட்டு வரும் ஒருவர் என்று தெரியவருகிறது. தமது பிராந்திய, சர்வதேச நலன்களுக்காக ஒரு இனவாத அரசிற்கு முண்டுகொடுத்து, பணத்தினை வாரி இறைத்துவரும் சக்திகள், தமிழரின் தாயகம் இனரீதியாகச் சிதைக்கப்பட்டு, தமிழரின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு, தமிழர்கள் ஏதிலிகளாக விடப்படுவதற்கு இதுவரையிலும் உதவியே வருகின்றன என்று கிழக்கு மாகாண கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 30, ஐப்பசி 2015 தெற்கிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள மத யாணைக் கூட்டங்களைப் பாவித்து தமிழர்கள் விரட்டியடிப்பு - உபயம் சிங்கள ஆக்கிரமிப்பிற்கு துணையாக நின்ற துணைராணுவக் குழுக்களின் துரோகம் தமிழர் தாயகத்தை சிறுகச் சிறுகத் துண்டாடி ஈற்றில் அவர்களின் வாழிடங்களிருந்து நிரந்தரமாகவே விரட்டிவிடும் சிங்கள அரசின் இனரீதியிலான நில ஆக்கிரமிப்பிற்கான ஏதுநிலையினை கருணாவும் அவனுடைய சகாக்களும் ராணுவத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் இன்று தமிழர் தாயகத்தில் தங்குதடையற்ற சிங்கள ஆக்கிரமிப்பு இடம்பெறுவது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தவகையில் 2007 இற்கு முன்னர் கனரக பீரங்கிகளினாலும், விமானக் குண்டுவீச்சினாலும் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் இழந்த தமிழினம் தற்போது மதம் பிடித்த காட்டு யானைகள் வடிவில் உயிர்களையும், வாழ்வாதாரத்தினையும் இழந்துவருகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் காட்டு யானைகளின் அட்டகாசம் தானே என்று தெரிந்தாலும், இதன் பின்னாலிருக்கும் சூட்சுமம் மிகவும் திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்டுவரும் செயற்கையான அனர்த்தம் என்றால் அது மிகையில்லை. 2007 வரை புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த படுவான்கரைப் பகுதியில் தற்பொழுது மீள்குடியேறியுள்ள தமிழர்களின் நிலங்களில் அதிகப்படியான காட்டுயானைகளின் தாக்குதல்கள் நடக்கத் தொடங்கியிருக்கிறன. இத்தாக்குதல்களில் பெருமளவு தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, பல வீடுகள், விவசாயப் பயிர்கள் என்பன நாசமக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இத்தாக்குதல்கள் பற்றிக் கூறும் படுவான்கரையினை தனது பிறப்பிடமாகவும் வாழ்ந்த இடமாகவும் கொண்ட பல தமிழர்கள் இந்த யானைகளின் அட்டகாசம் தாம் இதுவரையில் பார்த்திராதவொன்று என்று குறிப்பிடுகின்றனர். இந்த யானைகளின் தாக்குதல்களின் பின்னால் தம்மை தமது நிலங்களிருந்து நிரந்தரமாக விரட்டியடிக்கும் சிங்கள ஆக்கிரமிப்பு அரசின் கை மறைந்திருக்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர். மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்தின் பட்டிப்பளை - கச்சகொடி கிராம அபிவிருத்திச் சபையின் தலைவரான யோகராசா கணேஷ் இதுபற்றிக் கூறுகையில், தம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ள பல முறைப்பாடுகளை பிரதேச செயலக அதிகாரிகளோ வனவள அமைச்சகமோ ஏற்றுக்கொள்ள மறுத்துவருவதாகவும், அதேவேளை சிங்களக் குடியேற்றக் கிராமங்களுக்கு தேவையானளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுவருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். "யுத்தம் நடைபெற்ற காலத்தில் எமது பகுதிகளில் யானைகாளின் தாக்குதல் எதுவுமே இருக்கவில்லை. காட்டுயானைகளை காண்பதென்பது மிக அரியவிடயமாகவே அப்போது இருந்தது. எப்போதாவது ஊர்மனைகளுக்குள் வரும் யானை எதுவித சேதத்தினையும் செய்யாது திரும்பிச் சென்றுவிடும். ஆனால், இப்போது அப்படியல்ல. கூட்டமாக மதம் பிடித்த யானைகள் வருகின்றன. இவை கண்ணில்ப் படும் மக்களைக் கொல்வதுடன் வீடுகள், பயிர்கள் என்பவற்றிற்கும் கடுமையான சேதத்தினை உண்டுபண்ணுகின்றன" என்று அவர் கூறுகிறார். இலங்கை வனவிலங்கு திணைக்களத்தின்படி தென்பகுதிக் காடுகளிலிருந்து பல அபிவிருத்தித் திட்டங்களுக்காக அப்பகுதி நிலங்கள் உபயோகிக்கப்பட்டபோது அக்காடுகளில் சுற்றித்திருந்த பல யானைகளை மட்டக்களப்பு மாவட்டத்தின் காடுகளில் தாம் இறக்கிவிட்டதாகக் கூறுகிறார்கள். குறிப்பாக அம்பாந்ந்தோட்டை, மத்தளை போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்ட துறைமுகம் மற்றும் விமான நிலையங்களுக்கான காட்டு நிலங்களிலிருந்து பிடிக்கப்பட்ட யானைகளே மட்டக்களப்பில் காடுகளுக்குள் விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் இப்பகுதிகள் இருந்தகாலத்தில் யானைகளின் பயம் இருக்கவில்லையென்று படுவான்கரை மக்கள் தெரிவிக்கின்றனர். புலிகளின் முகாம்களும், காவலரண்களும் இப்பகுதியெங்கும் பரவிக் கிடந்ததனால் யானைகள் இப்பகுதிக்குள் நுழைவதென்பது தடுக்கப்பட்டே வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், 2007 இன் பின்னர் துணைராணுவக் குழுக்களின் உதவியோடு கிழக்குமாகாணம் புலிகளிடமிருந்து ராணுவத்தால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டபின்னர் நிலைமை மாறியிருப்பதோடு, தென்பகுதி யானைகள் மட்டக்களப்பு காடுகளில் இறக்கிவிடப்படுவதும் நடந்துவருகிறதென்று மேலும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர். "எமது பிள்ளைகளால் பாடசாலைக்குச் செல்ல முடியவில்லை. வீட்டின் வருமானத்திற்காக ஆண்கள் வேலைக்குச் செல்வது கடிணமாக இருக்கிறது. வேலைக்குப் போகாது வீட்டிலிருந்து தமது குடும்பங்களை யானைகளிடமிருந்து காக்கவேண்டியிருப்பதால் பெருமளவு குடும்பங்கள் கடுமையான பிரச்சினைகளை சந்தித்துவருகின்றன. அண்மையில்கூட வெல்லாவெளிப் பகுதியில் வீட்டில் தனியாக உதவியின்றி இருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரை யானை அடித்துக் கொன்றிருக்கிறது" என்று அவர் மேலும் கூறினார். "காட்டுயானைகளின் அட்டகாசத்தினைப் பொறுக்கமுடியாத ஊர்மக்கள் வெல்லாவெளி பிரதேச செயலகத்தின் முன்னால் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்". "யானைகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரியபோது, "ஒன்று அல்லது இரண்டு யானைகள்தான் இருக்கின்றன. அவற்றையும் வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்றுவிட்டோம், இனி பிரச்சினையில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், யானைகளின் அட்டகாசம் தொடர்கிறது, மேலும் அதிகாரிகள் சொல்வதுபோல ஒன்றோ இரண்டு யானைகளோ அல்ல, அவை கூட்டமாக வருகின்றன" என்று அவர் மேலும் கூறுகிறார். 2007 இல் புலிகள் கச்சக்கொடி பகுதியிலிருந்து முற்றாக வெளியேறியபின்னர் இதுவரையில் யானைகளின் அட்டகாசத்தில் குறைந்தது 27 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 40 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் 20 வீடுகள் முற்றாக நாசமாக்கப்பட்டிருப்பதோடு, பெருமளவு பயிர்களும் நாசமாக்கப்படுள்ளன. "யானைகள் கூட்டம் கூட்டமாகவே தாக்குதலில் ஈட்டுபடுகின்றன. இவை எங்கிருந்து வந்தன என்பது பெரும் புதிராகவே இருக்கிறது" என்று கணேஸ் கூறுகிறார். மட்டக்களப்பு மாவட்டத்தின் அம்பாறையுடனான எல்லைப்பகுதியில் குடியேறிவரும் சிங்களவர்களுக்கு ராணுவமும், சிங்கள துணைராணுவக் குழுவொன்றும் யானைகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு வழங்கிவருகின்றன என்று தெரியவருகிறது. ஆனால், தமிழர்களின் கிராமங்களின் எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் ஊர்காவல் நிலையங்கள் யானைகள் தமிழர் பகுதிக்குள் ஊடுருவுவதை அனுமதிப்பதுடன், வேண்டுமென்றே தடைகளைத் தளர்த்திவருவதாகவும் தமிழ்மக்கள் முறையிட்டுவருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் துணைராணுவக்குழுக்களின் துணையுடன், சிங்கள அரசு பெருமளவு சிங்களவர்களைக் குடியேற்றிவருகிறது. அம்பாறை, பொலொன்னறுவை எல்லைகளில் இடம்பெறும் இக்குடியேற்றங்களை ஊக்குவிக்கும் முகமாக இவ்வெல்லைகளில் அமைந்திருக்கும் தமிழர் கிராமங்களுக்குள் காட்டுயானைகளின் ஊடுருவலினை அரசாங்கம் ஊக்குவித்துவருவதாக மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் பணிபுரியும் சமூக சேவக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழர்கள் தாமாகவே பாதுகாப்புக் கருதி இடம்பெயர்ந்தபின்னர் அப்பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றுவது இலகுவென்று அரசு நினைப்பதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். படுவான்கரைப்பகுதிகளில் தற்போது குடியேறிவரும் சிங்களவர்கள் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், அறுகம்பை, உகன ஆகிய பகுதிகளிலிருந்தும், கண்டி , நுவர எலிய மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் வந்திருப்பதாக மட்டக்களப்பு செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு குடியேறிவரும் பெருமளவு சிங்களவர்கள் சிங்கள ராணுவ வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. கச்சகொடி கிராம அபிவிருத்தி சபைத் தலைவரின் கருத்துப்படி, 2007 இல் இப்பகுதியில் யுத்தம் முடிவிற்கு வந்தபோது சுமார் 350 குடும்பங்கள் இப்பகுதியில் வசித்து வந்ததாகவும், அதன்பின்னர் இடம்பெற்றுவரும் யானைகளின் தாக்குதல்களையடுத்து பலர் வெளியேறிவிட்ட நிலையில் தற்பொழுது வெறும் 62 குடும்பங்களே கச்சக்கொடி பகுதியில் வாழ்வதாகவும் கூறுகிறார். மீதமுள்ள தமிழர்களில் பலர் கச்சக்கொடிப் பகுதியினை விட்டு வெளியேறும் எண்ணத்திலேயே இருப்பதாகவும், சிங்கள அரசும் இதைத்தான் எதிர்பார்க்கிறது என்று அவர் மேலும் கவலையுடன் கூறுகிறார்.1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 19, மாசி 2015 அம்பாறையில் செயற்பட்டுவரும் அரச ராணுவக் கொலைக்குழுவிற்கெதிராக நடவடிக்கையெடுங்கள் - அரசைக் கோரும் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் ராணுவக் கொலைக்குழு ஆயுததாரிகள் - கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், இனியபாரதி எனப்படும் புஷ்பகுமார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், மகிந்த ராஜபக்ஷவின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளரும், கருணா கொலைக்குழுவின் மிக முக்கிய ஆயுததாரியுமான இனியபாரதி என்றழைக்கப்படும் புஷ்பகுமாரை உடனடியாகக் கைது செய்து, தண்டனை வழங்குமாறு அம்பாறை மாவட்டத்தில் இவனால் வலிந்து காணமலாக்கப்பட்ட பலநூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளின் பெற்றோர் அரசை வேண்டிக்கொண்டுள்ளனர். 2007 இற்குப் பின்னர் ஆக்கிரமிப்பு ராணுவத்தால் அம்பாறை மாவட்டம் முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து இனியபாரதியால் இதுவரையில் குறைந்தது 200 இளைஞர்களும் யுவதிகளும் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டிருப்பதாக பதிவுசெய்யப்பட்டிருக்கும் முறைப்பாடுகளிலிருந்து தெரியவருகிறது. மேலும், புலிகளிடமிருந்து பிரிந்து பொதுவாழ்க்கைக்கு திரும்பிய பல முன்னாள்ப் போராளிகளும் இவனது குழுவினரால் காணாமலாக்கப்பட்டிருப்பதோடு, அவர்கள் பற்றிய பதிவுகள் தொடர்ச்சியாக மறைக்கப்பட்டே வந்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. அம்பாறை மாவட்டத்தில் ராணுவப் புலநாய்வுத்துறையினரின் வழிகாட்டலில் இனியபாரதி தனக்கென்று தனியான கொலைக்குழுவொன்றினை நடத்திவருவதாகத் தெரிகிறது. சுமார் 700 ஆயுதம் தரித்த கொலைக்குழுவினர் இவனது கட்டுப்பாட்டில் இயங்குவதோடு, கடத்தல்கள், காணாமற்போதல்கள், கப்பம் உட்பட மிகக் கொடூரமான வன்முறைகளில் இவனும் இவனது குழுவும் அம்பாறை மாவட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக பல சர்வதேச அமைப்புக்கள் உட்பட பல மனிதவுரிமைக் குழுக்கள் குற்றஞ்சாட்டியிருந்ததோடு, மகிந்தவின் அரசுக்கும் இவனுக்குமான நெருக்கம் பற்றியும் மிகத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியிருந்தன. இனியபாரதி ஆரம்பத்தில் செய்த கொலைகளில் குறிப்பிடத் தக்கது கிழக்கின் அனுபவம் மிக்க செய்தியாளரான ஐய்யாத்துரை நடேசன் என்பவரது படுகொலையாகும். 2004 இல் அவரது இல்லத்திற்கு மிக அருகே இனியபாரதியால் பலதடவைகள் தலையில் சுட்டுக்கொல்லப்பட்ட நடேசனின் மரணத்தில் தற்போது ஜனாதிபதியாகவிருக்கும் மைத்திரிபால சிரிசேனவின் பங்களிப்பும் இருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. இனியபாரதியால் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஐய்யாத்துரை நடேசனின் இறுதி நிகழ்வு ராணுவப் புலநாய்வுத்துறையின் அதிகாரி அபயரட்ணவின் நேரடி வழிகாட்டலில் செயற்படும் இனியபாரதியின் கொலைக்குழு, கருணா கொலைக்குழு அங்கத்தவர்களையும், ஈ என் டி எல் எப் எனும் இந்தியாவின் துணையுடன் இயங்கும் துணைப்படையின் உறுப்பினர்களையும், சில முஸ்லீம் ஆயுதக் குழு உறுப்பினர்களையும் கொண்டு அமைக்கப்பட்டது. பெரும்பாலும் கடத்தல்கள், காணாமலாக்குதல்கள், படுகொலைகள் ஆகியவற்றில் ஈடுபடும் இக்கொலைக்குழு அவ்வப்போது தமிழ் முஸ்லீம் சமூகங்களிடையேயான பிணக்கினை பெரிதுபடுத்தவும் மகிந்த அரசினால் பாவிக்கப்பட்டு வந்தது, இன்றும் நிலை அப்படித்தான். 2005 இல் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற நடவடிக்கையொன்றில் சரணடைந்த இரு இனியபாரதி கொலைக்குழு உறுப்பினர்களின் தகவல்களின்படி இனியபாரதி மைத்திரிபால சிரிசேன, டக்கிளஸ் தேவானந்தா மற்றும் அதாவுள்ளா அக்கியோருடன் மிக நெருக்கமான தொடர்புகளைப் பேணிவந்திருந்தான் என்று தெரியவந்திருந்தது. இவ்வாறு புலிகளிடம் சரணடைந்த இனியபாரதியின் கொலைக்குழு உறுப்பினர்கள், தாம் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்றும், தாம் இனியபாரதியுடன் சேர்ந்தது அவனைக் கொல்வதற்காகவே என்றும், தாம் தப்பி வருமுன்னர் இனியபாரதியையும், அவனது சகாக்கள் சிலரையும் கொன்றுவிட்டுத் தப்பிவந்ததாகவும் கூறியிருந்தனர். ஆனால், இனியபாரதி அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிவிட்டான் என்பது நாம் அறிந்ததே. கடந்த புதனன்று, திருக்கோயில் பிரதேச செயலகத்தின்முன்னால் கூடிய ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோயில் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 70 உறவினர்கள் தமது பிள்ளைகளைக் கடத்திச் சென்று கொன்றுபோட்ட இனியபாரதியின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இனியபாரதியின் கொலைக்குழு முகாம் அமைத்திருந்த பகுதியில் அகழ்வுகளை மேற்கொண்டு தமது சொந்தங்களின் எச்சங்கள் இருக்கின்றதா என்று கண்டறியப்படவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டனர். இனியபாரதியின் கொலைமுகாமிலிருந்து தப்பிவந்த ஒரு சிலரின் தகவல்ப்படி இனியபாரதியால் கடத்திக் கொண்டுவரப்பட்ட பல இளைஞர்கள் இம்முகாமிலேயே கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் மிகக் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறியிருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. அத்துடன், தம்பிலுவில் பகுதியில் அமைந்துள்ள மத்திய சந்தைப் பகுதியில் இனியபாரதி அமைத்திருக்கும் அவனது "பாதுகாப்பு வீடு" உடனடியாகச் சுற்றிவளைக்கப்பட்டு அவன் கைதுசெய்யப்படவேண்டும் என்றும் கோரியிருந்தனர். இனியபாரதி இப்போராட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் த. கலையரசன் கூறுகையில் 1990 ஆம் ஆண்டிலிருந்து 2008 வரையான காலப்பகுதியில் ஆலையடிவேம்பு, திருக்கோயில், காரைதீவு, நாவிதான்வெளி, அக்கரைப்பற்று, சம்மாந்துரை, பொத்துவில் மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் இருந்து மட்டும் குறைந்தது 5000 தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் காணாமற்போயுள்ளனர் என்றும், இவர்களுள் பலநூற்றுக்கணக்கானவர்களின் காணாமற்போதல்களோடு இனியபாரதி நேரடியாகத் தொடர்புபட்டிருக்கிறான் என்றும் கூறினார். இந்த ஆர்ப்பாட்டங்களில் அம்பாறை மாவட்டத்தின் கூட்டமைப்பு உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேருவும் பங்கெடுத்திருந்தார்.1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 28, ஆனி 2013 தமிழர்களின் விவசாயத்திற்கான நீரை நிறுத்தி தமது உல்லாச விடுதிகளுக்கு வழங்கும் பிள்ளையானும் மகிந்தவும் தமிழர்களின் விவசாயத்திற்கும், வாழைச்சேனை காகித ஆலைக்கும் வழங்கப்பட்டுவரும் நீரினை நிறுத்தி, தமது உல்லாசப் பயணிகள் விடுதிக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவரான பிள்ளையானும் அவரது எஜமானர்களில் ஒருவருமான மகிந்தவும் வழங்கிவருவதாக பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அரசாங்கத்தின் நிதியமைச்சினை தன்னகத்தே வைத்திருக்கும் மகிந்த வாகனேரிக்குளத்திலிருந்து பெறப்படும் நீரினை அப்பகுதியில் இருக்கும் விவசாயிகளுக்கு வழங்குவதனை முற்றாகத் தடுத்திருப்பதாகவும் தெரிகிறது. நிதியமைச்சினால் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருக்கும் பணிப்புரையின்படி கல்க்குடா மற்றும் பாசிக்குடா ஆகிய பகுதிகளில் பிள்ளையானினாலும், மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினாலும் நடத்தப்படும் உல்லாசப் பயணிகள் விடுதிகளுக்கே இந்த நீர் வழங்கப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், வாழைச்சேனை காகித ஆலைக்கு காவத்த முனைப் பகுதியிலிருந்து வழங்கப்படும் நீரினை முற்றாகத் தடுக்குமாறும் நிதியமைச்சு நீர்ப்பாசனத் திணைக்களத்தினைப் பணித்திருக்கிறது. வாகனேரிக் குளத்திலிருந்து பெறப்படும் நீரினால் சுமார் 8,156 ஏக்கர்கள் நிலத்தில் விவசாயம் செய்வது ஏதுவாக்கப்பட்டிருந்ததோடு, குறைந்தது 6700 குடும்பங்கள் பயனடைந்துவந்தன என்பது குறிப்பிடத் தக்கது. அத்துடன் இதே நீர்ப்பாசனத் திட்டத்திலிருந்து காகித ஆலைக்கும் நீர் வழங்கப்பட்டு வந்ததனால் குறைந்தது 700 தமிழ் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பைப் பெற்றிருந்தனர். தற்போது மகிந்த அரசினாலும், பிள்ளையானினாலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நீர்ப்பாசனத் தடையின்மூலம் குறைந்தது 7500 தமிழர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் இப்பகுதி இருந்த காலத்தில் 1994 இலிருந்து விவசாயத்திற்கும் காகித ஆலைக்கும் தங்குதடையின்றி நீர்ப்பாசனம் வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத் தக்கது.1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 4, மார்கழி, 2011 மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கியமான எல்லைக் கிராமங்களில் ஒன்று சிங்கள மயமாகிறது - உபயம் கருணா பதுளை - செங்கலடி ஏ 5 நெடுஞ்சாலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருக்கும் முக்கிய தமிழ்க் கிராமம் ஒன்று சிங்கள மயமாகிறது. மங்கள ஆறு எனும் தூய தமிழ்க் கிராமத்திலிருந்து சுமார் 2500 ஏக்கர்கள் கொண்ட பகுதி பிரித்தெடுக்கப்பட்டு சிங்கள வர்த்தகர் ஒருவருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் வழங்கப்படவிருக்கிறது என்று படுவான்கரை மக்கள் தெரிவிக்கின்றனர். மீள்குடியேற்றப் பிரதியமைச்சராக இருக்கும் துணைராணுவக் குழுத் தலைவர் கருணாவின் தலைமையில் மகிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு குழு இப்பகுதியில் அண்மையில் நில அளவையில் ஈடுபட்டதுடன், எல்லைகளையும் நிர்ணயம் செய்திருக்கின்றனர். கடந்த ஒருவாரமாக இந்த நில அளவை, எல்லை நிர்ணய வேலைகள் நடந்துவருகின்றன. தமிழர்களின் முக்கிய நிலப்பரப்பான "மங்கள ஆறு" எனும் இக்கிராமத்திற்கு ஆக்கிரமிப்புச் சிங்கள ராணுவ "மங்கள கம" எனும் சிங்களப் பெயரினைச் சூட்டியிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். புலிகளின் கட்டுப்பாட்டில் படுவான்கரை இருந்த பொழுது புலிகளின் முன்னணித் தாக்குதல் பிரிவான ஜெயந்தன் படையணி இக்கிராமத்தில் தனது தளங்களை அமைத்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இன்று இந்நிலம் சிங்களவர்களால் தமிழ்த் துரோகிகள் துணையுடன் ஆக்கிரமிக்கப்படுவது கண்டு அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதேவேளை கிழக்கின் தமிழர்களின் இன்னொரு கிராமமான பட்டிப்பளைப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் தெவுலாளக்குளம் எனும் கிராமம் சிங்களவர்களால் அரச துணையோடு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த மேய்ச்சல் நிலமான இப்பகுதியிலிருந்து போரினால் தமிழர்கள் விரட்டப்பட்ட நிலையில், இப்பகுதியில் சிங்களவர்களை அரசு துணைராணுவக்குழுவினரின் உதவியோடு குடியேற்றி வருகிறது. இப்பகுதியில் கால்நடை மேய்ச்சலில் ஈடுபடும் தமிழர்களை அடித்துத் துன்புறுத்தியும் கால்நடைகளைச் சுட்டுக்கொன்றும் ஆக்கிரமிப்பில் ஈடுபடும் சிங்களவர்கள் பலமுறை தமிழர்களின் மாடுகளை களவாடிச் செல்வதாகவும் கால்நடை வளர்ப்பவர்கள் முறையிட்டிருக்கின்றனர். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=346741 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
0 points- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
0 pointsகடவுளுக்கும் மேலான "கெளரவ" கருணா அம்மாண் கொழும்பு டெலிகிராப் கட்டுரை : ஆவணி 25, 2015 "பிரேமினிக்கு நடந்த கொடூரம் மிகவும் மிருகத்தனமானது. சற்று நிறங்குறைந்தவராக இருந்தாலும், அவர் அழகானவர்தான். கடத்தி இழுத்துச் செல்லப்பட்ட அவரை இன்னொரு முகாமிற்குக் கொண்டுசென்று முதலில் வன்புணர்வில் ஈடுபட்டவர் அவரைக் கடத்திய சிந்துஜன் தான். அதற்குப் பிறகு நடந்தது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் ஆயுததாரிக் குழுவினரால் அவர் மீது நடத்தப்பட்ட கூட்டுப் பாலியல் வன்புணர்வு. அங்கிருந்த அனைவரும் ஒவ்வொருவராக அந்தப் பெண்மீது தமது வக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டனர். எல்லாமாக 14 கருணா குழு ஆயுத தாரிகள் அன்று பிரேமினியைக் கூட்டாக வன்புணர்ந்திருந்தார்கள். ஆரம்பத்தில் கத்திக் கதறிய பிரேமினியின் அழுகுரல்கள் நேரம் போகப் போக உயிரற்ற முனகல்களாக மாறி இறுதியில் ஓய்ந்துபோயின". "எமது இச்சைகளைத் தீர்த்துக்கொண்ட பின்னர் அவரைக் கட்டிற்குள் இழுத்துச் சென்றோம். அவர் அழவில்லை, அவர் முகத்தில் எந்தச் சலனமும் இருக்கவில்லை" என்று பிரேமினியைக் கூட்டாக பாலியல் வன்கொடுமை புரிந்த கருணா குழு ஆயுததாரி ஒருவர் பின்னர் கூறினார். அவரது கூற்றுப்படி பிரேமினியை வாட்களால் துண்டு துண்டுகளாக வெட்டி அந்தக் காட்டுப்பகுதியெங்கும் வீசியெறிந்திருக்கிறார்கள் கருணா குழுவினர். நீர்வேலியைச் சேர்ந்த காணாமல்போன இளைஞர் ஒருவரின் தாயாரை நான் அறிந்திருந்தேன். அவரது இழப்பின் வலி மிகக் கொடியது. உங்களின் உறவொன்று கடத்தப்பட்டு, கடுமையான சித்திரவதைகளை அனுபவித்து பின்னர் கொடூரமாகக் கொல்லப்படுவதும் அதனை நீங்கள் வேறு வழியின்றி அமைதியாக ஏற்றுக்கொண்டு வாழப்பழகுவதும் கொடுமையானது. உங்களின் குடும்பத்தில் ஒருவர் காணாமற் போய்விட்டால் அவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா, அவர் உயிருடன் இருந்தால் எங்கிருக்கிறார், அவரைக் கடத்தியவர்கள் அவரை எப்படி நடத்துகிறார்கள், அவருக்கு என்னவகையான கொடுமைகளை அவர்கள் வழங்குகிறார்கள், அவரை விடுவிப்பதென்றால் நாம் யாரை அணுகவேண்டும் என்று பல கேள்விகள் உங்களுக்கு இருக்கும். ஒருவர் கடத்தப்படும்பொழுது, கடத்தப்பட்டவரைப் போலவே, அவரைப் பறிகொடுத்த உறவுகளுக்கு இருக்கும் வலியும் மிகவும் கொடியது. தனது மகன் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்று நிச்சயமில்லாது, அச்சத்தினுள் வாழும் அந்தத் தாயாரின் வலி பெரியது. தேடிக் களைத்த நிலையில் தனது மகன் எங்கே என்று சாத்திரிகளை அவர் போய்க் கேட்டார். அவர்களில் பலர் உனது மகன் உனது வீட்டிலிருந்து தெற்குத்திசையில் எங்கோவொரு இடத்தில் இன்னும் உயிருடன் தான் இருக்கிறான் என்று கூறியிருக்கிறார்கள். அதனால் அந்தத் தாயும் தனது மகன் தென்னிலங்கையில் எங்கோவொரு இடத்தில் இன்னும் உயிர்வாழ்வதாக எண்ணி வாழ்ந்துவருகிறார். தனது மகன் இன்னும் உயிருடன் இருக்கிறான் எனும் நினைவே அவனைத் தேடும் அவரது முயற்சியில் அவரைச் சளைக்காமல் இயங்கவைத்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருமுறையும் தொலைபேசி அழைக்கும்போது அது தனது மகனாகவோ அல்லது மகனின் இருப்பைப் பற்றி தெரிந்தவர்கள் ஆராவதோ இருக்கக் கூடாதோ என்று அவர் ஏங்குகிறார். அவரது மகன் காணமலாக்கப்பட்டு இத்துடன் ஐந்து வருடங்களாகிவிட்டன. அவர்போன்றே இன்னும் பல்லாயிரக்கணக்கான தாய்மார்கள் வடக்குக் கிழக்கில் தமது பிள்ளைகளைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள். வலிந்து காணமலாக்கப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமது பிள்ளைகளையோ, துணையினையோ, பெற்றோர்க்களையோ கடத்தியவர்கள் யாரென்பது அவர்களின் உறவுகளுக்குத் தெரிந்திருந்தது. கடத்தியவர்கள் கருணா குழுவா, டக்கிளஸ் குழுவா, ராணுவமா அல்லது பொலீஸா என்பதை அவர்கள் நன்கு அறிந்தே வைத்திருந்தார்கள். முக்கியமாக கடத்தியவர்கள் எந்த முகாமிலிருந்து வந்திருந்தார்கள் என்பதும் அவர்களுக்கு நன்கே தெரிந்திருந்தது. பலநேரங்களில் தமது உறவுகளைக் கடத்திச்சென்ற தனிநபர்கள் பற்றிய விபரங்கள் கூட அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், இன்றுவரை இந்தக் கடத்தல்களின் சூத்திரதாரிகள் கைதுசெய்யப்படவுமில்லை, அவர்கள்மேல் இலங்கையின் நீதித்துறை வழக்குகள் எதனையும் பதிவுசெய்யவுமில்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான அமைப்பின் முன்னால் சாட்சியமளித்த பலநூற்றுக்கணக்கான தாய்மார்கள் தமது பிள்ளைகளைக் கடத்திச் சென்றது கருணா குழுதான் என்று வெளிப்படையாகவே சாட்சியமளித்திருந்தாலும் இன்றுவரை எந்தச் சிங்கள அரசும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க மறுத்தே வருகின்றன0 points - ஒரு துரோகத்தின் நாட்காட்டி
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.