Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87997
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19152
    Posts
  3. Nathamuni

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    13720
    Posts
  4. Maruthankerny

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    10720
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/02/21 in all areas

  1. இனவழிப்பு என்பதில் நேரடி போர் வெறும் 25 வீதம்தான் மற்றைய 75 வீதமும் வரலாறுகளை அழித்தல் ... கலாச்சார முறைமைகளை அழித்தல் மொழிகலப்பு நில ஆக்கிரமிப்பு ... அரசியல் அதிகார அழிப்பு போன்ற திட்டமிடலால் வெற்றிகொள்ள படுவதுதான். இது இன்னமும் ஈழத்தமிழருக்கு விளங்கவில்லை அப்ப அப்ப முன்னேற்றம் என்ற பெயரில் எதிரிகளுக்கு விளக்கு பிடிப்பதால் தாம் எதோ மக்கள் நலன் பற்றி சிந்திப்பதாக பீத்திக்கொண்டு திரிவது தவிர்த்து எதிர்வினைகள் பற்றி சிந்திப்பது இல்லை மணியோசை வந்தால் யானை வரும் பின்னே என்பது புரிவதில்லை. ஈழத்தமிழரை பொறுத்தவரை இன்று யாருமே எதிர்பார்க்காத ஒரு மிக பெருத்த பொருளாதார பலம் எங்கள் கைகளில் சிக்கி இருக்கிறது நாம் சரியான திட்டமிடலுடன் நகர்வோமாக இருந்தால் தெற்காசியாவில் ஒரு இன்றியமையாத இனமாக முன்னேறமுடியும். யாழ்பாணத்தனின் அகங்காரப்போக்கு ... சுயநலம் ... மூட சிந்தனைகள். போலிகளுக்கு வால்பிடித்து தம்மை உயர்வாக எண்ணுதல் ஒற்றுமை இன்மை. உலக வரலாற்றின் தலை சிறந்த துரோகிகள் என்பவற்றால் போர் முடிந்து 10 வருடம் ஆகியும் இன்றும் உணவு இன்றி ஒழுங்கான உடை இன்றி ஒரு மக்கள் கூட்டம் அங்கு வாழ்ந்துகொண்டு இருக்கிறது. இங்கு பதினைந்து உதவும் நிறுவனங்களும் மாதாந்த கூட்டங்களும் எந்த குறையுமில்லாது நடக்கிறது.
  2. தம்பலப் பூச்சி இதை பார்த்து இருந்தா சந்தோசம் பாக்கலீன்னா பாத்துக்கோங்க மழைக்காலத்தில் வரும் அப்புறம் பார்க்க முடியாது தொட்டு பாத்தா ரொம்ப மெதுமையா இருக்கும்
  3. ஈழத்தமிழர்கள் ஒரு தன்னிறைவு பெற்ற,வலிமையான இனமாக வருவதை இந்தியாவும் சரி, இலங்கையும் சரி விரும்பவில்லை என்பது கண்கூடு. அவர்கள் முற்றிலும் புறக்கணிப்படுவதாக எழும் முறைப்பாடுகளை சமாளிக்கவே இந்த மாட்டுக் கொட்டகை போன்ற யாழ் சர்வதேச விமான நிலையம், பாதுகாப்பிற்காக தொடருந்து வசதி, கலாச்சார மண்டபம், பிரசன்னத்தை வலியுறுத்த தூதரக அலுவலகம் போன்றவைகள்.. இவற்றை தவிர்த்து மீண்டெழ தமிழர்களுக்கு வாய்ப்புகள் உள்ளனவா..? இல்லை அவர்களை சார்ந்தே காரியத்தை சாதிப்பதா..? என்பது ஈழத்தமிழர்களின் தெரிவு. காலம் எப்படி செல்கிறது என்பதை பார்க்கலாம்!
  4. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ வான்படையான வான்புலிகளிடம் இருந்த வானூர்திகளைப் பற்றியே. இங்கு நான் எழுதும் அனைத்தும் இறுதிப்போரில் சிங்களப்படைகள் வெளியிட்ட படங்கள், மற்றும் ஓர் நெடும்தொடராக வெளிவந்த கட்டுரை ஆகியவற்றில் இருந்து கிடைக்கப்பெற்ற செய்திகளை அடிப்படையாகக் கொண்டே எழுதுகிறேன். இற்றைய தேதிவரை உலகில் இருந்த எ இருந்துள்ள அனைத்து அமைப்புகளிலும் எ நடைமுறையரசுகளிலும் தமிழீழ நிழலரசை நடாத்திய த.வி.பு. மட்டுமே சொந்தமாக வானூர்தி கட்டுமான திறனை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்தவர்கள், அதுவும் அந்தக்காலத்திலேயே! . புலிகளிடம் பறக்கக்கூடிய நிலையில் இருந்த மொத்த வானூர்திகள் (உறுதிப்படுத்தப்பட்டவை): 12 கொச்சு இலகு கீழிதைகள் (micro light gliders) - 2 தற்சுழல் பறனை(Gyroplane) - 2 சிலின் Z 143 இலகு வானூர்திகள்(Zlin Z 143 Light Aircrafts) - 5 → செம்மைப்படுத்தப்பட்ட Z 143 குண்டுதாரிகள்(Improvised Zlin Z 143 Bombers) - 2 வானலை கட்டுப்பாட்டு மாதிரி வானூர்தி (radio controlled model aircraft)- 2 செஸ்னா ஸ்கைமாஸ்ரர் (Cessna Skymaster) - 1 . புலிகளிடம் பறக்கக்கூடிய நிலையில் இருந்த மொத்த வானூர்திகள் (பூதியல் சான்றுகளோடு உறுதிப்படுத்தப்பட்டவை): 7 கொச்சு இலகு கீழிதைகள் (Micro light gliders) - 1 தற்சுழல் பறனை(Gyroplane) - 2 செம்மைப்படுத்தப்பட்ட Z 143 குண்டுதாரிகள்(Improvised Zlin Z 143 Bombers) - 2 வானலை கட்டுப்பாட்டு மாதிரி வானூர்தி (Radio controlled model aircraft)- 2 . கடலில் வைத்து அழிக்கப்பட்டதாகக் கருதப்படும் புலிகளின் வகை அறியில்லா வானூர்திகள் - 3 நான்காம் ஈழப்போரில், 7 ஒக்டோபர் 2007 அன்று சிங்கள சிறீலங்காக் கடற்படையால் தாட்டப்பட்ட(sunk) விடுதலைப் புலிகளின் கப்பல் பிரிவிற்குச் சொந்தமான படையேற்பாடு(logistics) கப்பலான எம்.வி.மற்சுசிமா இல் இலகு வானூர்திகள் இருந்த உளவுத் தகவல்கள் தமக்கு கிடைத்திருந்ததாக சிறீலங்கா கடற்படையின் முன்னாள் சேர்ப்பன்(Admiral) 'சயந்த கொலம்பக' செவ்வி ஒன்றின் போது தெரிவித்துள்ளார். அந்த வானூர்திகளின் எண்ணிக்கை மொத்தம் மூன்று என்று சிங்கள புலனாய்வாளர் 'ரொகான் குணரத்ன' தனது ஆய்வுக் கட்டுரையில் பதிவிட்டுள்ளார். ஆனால் இவை எதற்கும் பூதியல்(Physical) ஆதாரங்கள் இல்லை. அனைத்தும் வாய்மொழியே! →ஆதாரம்:Rohan_Gunarathne.pd (கப்பலுக்குள் இருந்ததோ இல்லையோ... எது எப்படி பார்த்தாலும் வான்கரும்புலி வானூர்தியாக போனவற்றைத் தவிர மேலும் மூன்று இருந்துள்ளது.) புலிகளால் வானூர்திக்கென ஆக்கப்பட்ட மாதிரி விதமறியா கொச்சு இலகு வானூர்தி மாதிரி (unknown type micro light aircraft's model )- 1 87 களில் வெள்ளோட்டம் விடப்பட்ட வானூர்தி (தோல்வி) உலகப்போர்-II வானூர்தி வடிவ வானூர்திகள் - 2 புலிகளின் வானூர்தி கட்டுப்பாட்டு அறை: 87 இருந்தே நான் கணக்கைத் தொடங்குகிறேன்.. 1) உலகப்போர்-II வானூர்தி வடிவ வானூர்தி உருவாக்கியவர்: லெப். கேணல் அப்பையா இருப்பு எண்ணிகை - 2 → புலிகளின் முதல் விமானம் -(இக்கட்டுரையானது புலிகள் காலத்தில் எழுதப்பட்டமையால் நம்பத் தகுந்தது . எனவே வாசித்துப் பாருங்கள்.. ) இவ்வானூர்தியானது 1987 'லிபரேசன் நடவடிக்கை'யின் போது வல்வெட்டித்துறையில் இருந்த புலிகளின் படைத்தளத்தில் வைத்து கைப்பற்றப்பட்டதாக சிறீலங்கா இராணுவம் அறிவித்திருந்தது. இதுவே அக்காலத்தில் ஆதாரத்தோடு வெளிவந்த புலிகளின் முதல் வானூர்தி. இதே போன்று மற்றுமொரு வானூர்தியும் அங்கிருந்ததாகவும் மேற்சுட்டியுள்ள கொழுவியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 'படிமப்புரவு: ஈழ ஆதரவு வலைத்தளம் ஒன்றில் இருந்து' இந்த வானூர்தியின் தோற்றமானது பார்ப்பதற்கு இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வானூர்தி போன்றுள்ளது. இது புலிகளின் உள்நாட்டு மானுறுத்தமாகவும் (indigenous manufacture) அறியப்படுகிறது. படத்தின் பின்னணியில் தெரிவது அழிந்துபோன ஓர் கட்டடம். அவ்வலைத்தளத்திலும் ஓர் தொழிற்சாலையில் வானூர்திகள் தரித்து நின்றபோதுதான் அழிந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது.. இது கொழுவியின் தகவல்களை உறுதிப்படுத்துவதுடன் இரண்டும் ஒன்றிசைவாகிறதல்லவா. இது என் துணிபு! கொச்சு இலகு கீழிதை (micro light glider) : →கொச்சு- சேர நாட்டு வழக்கு (எ.கா: கொச்சு வள்ளம்.. இருப்பதிலேயே சிறிய வள்ளம்) இதே போல் புலிகளிடம் மொத்தம் இரண்டு வானூர்திகள் இருந்ததாக செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இருப்பு எண்ணிகை - 2 → கீழிதை - 1 'இடது புறத்தில் நிற்பவர் கேணல் சங்கர் ஆவார். இவர்தான் வரலாற்றுக் காலத்தில் தமிழர் வான்படையின் முதல் கட்டளையாளர் என அறியப்படுபவர் ஆவார்..' 'கீழிதையின் உடல்' 'கீழிதையின் பின்பக்கம். வெள்ளை நிறத்தில் தெரிவதுதான் அதன் சுழலி' 'கீழிதையின் பக்கவாடு. ' → கீழிதை - 2 இரண்டாவது கீழிதை ஒன்று புலிகளிடம் இருந்ததாக சிங்களம் தான் கூறுகிறது.. ஆனால் இருந்தமைக்கான பூதியல் ஆதாரம் எதையும் இன்று வரை சிங்களம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செஸ்னா ஸ்கைமாஸ்ரர் (Cessna Skymaster) இருப்பு எண்ணிகை - 1 (ஆகக்குறைந்தது) ஜூலை 28, 2006 அன்று சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட ஏசியன் ரிபியூன் என்ற புலியெதிர்ப்பு மின்-செய்தித்தாளானது செஸ்னா ஸ்கைமாஸ்டர் வகை வானூர்திகள் பல மாதங்களாக வானில் பறப்பதை எழிலன்புரம், புதுக்குடியிருப்பு மற்றும் மீருகண்டி ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் அடிக்கடி பார்த்ததாகவும் செய்தி வெளியிட்டது. மேலும் இதே பகுதிகளின் மக்கள் இரு சிலின் 143 வகை வானூதிகள் பறப்பதையும் நேரில் கண்டதாக செய்தி வெளியிட்டு பின்னாளில் அது மெய்யான நிகழ்வுகளும் உண்டு என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். தற்சுழல் உலங்கூர்தி/தற்சுழல் பறனை (Gyrocopter/Gyroplane) இருப்பு எண்ணிகை - 2 1) பக்கப்பக்க இருக்கைகள் கொண்ட தற்சுழல் பறனை 'தற்சுழல் பறனையின் உடல் மேல் சுழலியைப் பொருந்துவதைக் காட்டும் படம்' 'மூலைப் பார்வை' 'முன்பக்க பார்வை' 'தோழர்கள் புடைசூழ கொடிஞ்சியில்(cockpit) 2 வானோடிகள் அமர்ந்திருக்கின்றனர்.' மேற்கண்ட திரைப்பிடிப்பில் நெகிழ்வான மகுடக்கவி(Floppy hat) அணிந்திருப்பவர் ஒரு வானோடியே. அவர்தான் பின்னாளில் வான்புலிகளின் துணைத் கட்டளையாளராய் ஆகியவர். அவருடைய இயக்கப்பெயர் லெப்.கேணல் முல்லைச்செல்வன்(குசந்தன் என்று பொதுவாக அறியப்படுபவர்) என்பதாகும். அந்தக் கறுப்புக் கண்ணாடி போட்டிருப்பவர் அச்சுதன் எ சுரேஸ் ஆவார். எனக்கு இவரைப் பற்றி ஏதும் தெரியாது. சிங்கள புலனாய்வுத் துறையின் அறிக்கைகள் மூலம்தான் இவரும் ஒரு வானோடி என்று அறிந்தேன். இவர்தான் பின்னாளில் வான்புலிகளின் கட்டளையாளராய் செயற்பட்டவர் என்று சிங்கள புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'தற்சுழல் பறனையின் வால்பகுதி' 'தற்சுழல் பறனையின் பின்பக்கச் சுழலி' முன்-பின் இருக்கைகள் கொண்ட தற்சுழல் பறனை 'தமிழீழ வானோடிகள் இருவர் (அச்சுதன் மற்றும் இன்னொருவர்) வானூர்தியோடு நின்று நிழற்படத்திற்கு பொதிக்கின்றனர்' 'தமிழீழ வானோடி ஒருவர் நிழற்படத்திற்கு பொதிக்கின்றார்' புலிகளின் வான்படை வானூர்தியொன்றின் பொறி.. எதனது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் மேலுள்ளவற்றினது மட்டும் இல்லை என்று உறுதியாத் தெரிவித்துக்கொள்கிறேன். இது சிறிய வகை இலகு வானூர்திகளிற்கான பொறியாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன். பொறி: 80 குதிரைவலு எஃவ்-30 காற்றால் குளிராகும் பொறி (80 HP F-30 air cooled engine) 'பின்பக்கத் தோற்றம்' 'பக்க வாட்டுத் தோற்றம்' சிலின் Z 143 இலகு வானூர்திகள்(Zlin Z 143 Light Aircrafts) - 5 செம்மைப்படுத்தப்பட்ட Z 143 குண்டுதாரிகள்(Improvised Zlin Z 143 Bombers) - 2 இதுதான் புலிகளின் குண்டுதாரி வானூர்தி. இது செக் குடியரசின் உண்டாக்கல்(made) ஆகும். இவற்றில் களத்தில் 2 உம், தருவிக்கப்பட்டு புலத்தில் (ஓர் ஐரோப்பிய நாட்டில்) தரித்த நிலையில் மூன்றும் இருந்தன. இந்த ஐந்து வானூர்திகளும் புலிகளிடம் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைப் புலிகளே உறுதிப்படுத்தும் விதமாக வான்கரும்புலித் தாக்குதல் முடிந்த பின்னர் வெளியிட்டிருந்த அறிக்கையில் தம்மிடம் மேலும் மூன்று வானூர்திகள் இருப்பதாக கூறியிருந்தனர் என்பது இங்கு நினைவுகூரத் தக்கது. ஆனால் புலத்தில் இருந்த மூன்றிற்குமான பூதியல் ஆதாரங்கள் எனக்குக் கிடைக்கப்பெறவில்லை. புலிகளின் வானூர்திகளின் செங்குத்து நிலைப்படுத்திகளில்(vertical stabilizer) இரண்டு தொடரிலக்கங்கள் எழுதப்பட்டிருந்தன. முறையே: 905, 906 'தாக்குதல் வானூர்தியாய் மாற்றும் முன்னர் எடுக்கப்பட்ட நிழற்படம்' 'தாக்குதல் வானூர்தியாய் மாற்றிய பின்னர் எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்ட(edited) நிழற்படம்' (விதப்பங்கள்- specifications, பெருமம்- maximum, சில்லுத் தடம் - wheel track, நெடுக்கம் - range, ஏறோட்டம்- Take-off run, இறங்கோட்டம்- Landing run) 'சிலின் 143-இன் கொடிஞ்சி (cockpit)' (மானுறுத்தம் - manufacture) 'வான்புலிகளின் வானூர்தித் தீக்குடுக்கை' இது போன்ற குண்டுகளை அந்தக் காலத்தில் தீக்குடுக்கை என்று சொல்வார்கள். இதுவே மிகவும் பொருத்தமானச் சொல். ஆனால் இது இன்று வழக்கொழிந்துவிட்டது. குண்டின் நீளம் : 114cm-127cm குண்டின் விட்டம்: 10-12" குண்டின் மொத்த எடை : 66 கி.கி. வெடிபொருள் நிறை : 55 கி.கி, வெடிபொருள் வகை : C-4 குண்டுச்(ball) சிதறல்களுடன் . 'குண்டுச்(ball) சிதறல்கள் கோர்வையாய் | தீக்குடுக்கையின் முன்பகுதி ' 'குண்டுச்(ball) சிதறல்கள் ஒற்றையாய்' 'வான்புலிகளின் வான்கலவர்களால்(airmen) சிலின் 143-இன் மின்சாரக் குண்டு அடுக்கத்தில்(electric bomb track) வழிகாட்டப்படாத குண்டுகள் (unguided bombs) பொருத்தப்படுகின்றன.' 'சிலின் 143-இன் மின்சாரக் குண்டு அடுக்கத்தில் ஆற்றப்படாத குண்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.' 'சிலின் குண்டுதாரியின் அடிப்பக்கம்' "வன்னியில் இருந்த ஓர் வான்பொல்லத்தில் (air strip) இருந்து சிலின் மேலெழும்புவதற்காக இரவு நேரத்தில் ஓடுதளத்தில் ஓடியபோது" → கடைசியாய் வான்கரும்புலித் தாக்குதலிற்குச் சென்ற வான்கரும்புலி வானோடி லெப்.கேணல் சிரித்திரன் அண்ணாவிற்கு கையிலும் நெஞ்சிலும் வெடி விழுந்ததாகவும், அதனால்தான் இவரால் மேற்கொண்டு ஓட்ட முடியாமல்போய் விழுந்தார் என்றும், நான் இரணப்பாலையில் இருந்தபோது (தாக்குதல் நடந்த 2 ஆம் நாள் - அப்போது எனக்கு 9 வயது) எனக்கு ஒருவர்(அவரது பெயரை வெளியிட விரும்பவில்லை) தெரிவித்தார். → அறியில்லா இரண்டு வான்புலிகளின் துணைவி/மனைவி-களின் மனை திருவையாறு(கிளி.) SSLR மிதிவண்டி கடைக்கு('SSLR சைக்கிள் கடை' என்றால் எல்லோருக்கும் தெரியும்) இடது பக்கமாக போகும் ஒழுங்கையில் 2008 வரை இருந்தது. இருவரும் சிங்களத்திதான். அந்த வீடு ஒருமாடி கட்டடம் ஆகும். மூன்றாவது வானூர்தியிற்கான பாகங்கள் தமிழீழத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. எதனால் அப்படிச் சொல்கிறேன் என்றால் சிறீலங்கா படையினரால் சிலினிற்கான உதிரிப்பாகங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வான்கரும்புலிகளால் கொண்டு செல்லப்பட்டதைக் காட்டிலும் இன்னொன்று இருந்தமைக்கான மற்றொரு ஆதாரமாக நான் வைப்பது யாதெனில் மே 13, 2009 அன்று சிங்களப் படைகளால் கண்டெடுக்கப்பட்ட இன்னொரு பிலிறுந்தியே (Propeller) ஆகும். இதோ உங்களின் பார்வைக்காக… 'புதைகுழியில் இருந்து பிலிறுந்தி வெளியில் கொண்டுவரப்படுகிறது' 'இரண்டு படத்திலும் உள்ள பிலிறுந்தியும் ஒன்றே. இரண்டாவது படத்தில் பிலிறுந்தியின் நடு மூடி திறந்து வைக்கப்பட்டுள்ளது' இந்த பிலிறுந்தி உதிரிப் பாகமாகவும் இருக்க வாய்ப்புகள் உண்டு. அதேநாளில் சிங்களப் படைகள் இன்னுமொன்றைக் கண்டெடுத்தன. அதுதான் கீழுள்ள சில்லாகும். இது ஒரு இலகு வானூர்திக்கான சில்லாகும். ஆகவே இது புலிகளிடம் இருந்த அந்த சிலினிற்கானதாகவும் இருந்திருக்கலாம், அல்லாமல் உதிரிப் பாகமாகவும் இருந்திருக்கலாம். 'சிங்களப் படைகளால் கண்டெடுக்கப்பட்ட முன்பக்க ஒற்றைச் சில்லு' வானலை கட்டுப்பாட்டு மாதிரி வானூர்தி (radio controlled model aircraft ) இவ்வானூர்திகளைப் புலிகள், தமது உளவு சேவைக்காகவோ அல்லது புலிகளின் வலவனில்லா வானூர்திகளின் முன்மாதிரி வானூர்தியாகவோ இருப்பதற்கு தருவித்திருக்கலாம் என்பது என் துணிபு. → (1) இந்த வண்டு கடந்த 2007 ஆம் ஆண்டு சிங்களப் படைகளால் கடற்புலிகளின் வழங்கல் அணியிடம் இருந்து கைப்பற்றப்பட்டது ஆகும். உடல் நீளம்: 5.5அடி இறக்கை நீட்டம்(wing span): 13 அடி (தோராயமாக) அதற்கான வானலை கட்டுப்படுத்தி(radio controller) செசுனா N739RF (Cessna N739RF) இது சீகல் மாதிரியைச்(seagull model) சேர்ந்த KIT விதமான வானூர்தியாகும். உடல் பகுதிகள் உதிரிகளாக: அதற்கான வானலை கட்டுப்படுத்தி (radio controller):- அதை ஒன்று சேர்ப்பதற்கான கையேடு: மாதிரி கொச்சு இலகுவானூர்தி (Model micro light aircraft) இவ்வானூர்தி மாதிரி கைப்பற்றப்பட்ட இடம் பார்ப்பதற்கு வானூர்தி பழுதுபார்க்கும் பட்டறை போன்று இருந்தது என்கிறது சிங்களம். அது தொடக்கநிலையிடமாக இருந்தாலும், அங்குள்ள கட்டுமானங்களானவை புலிகள் தமது சொந்த சரக்குகளை உருவாக்க, பராமரிக்க மற்றும் செயல்படுத்துவதற்காகப் பயன்படுத்தினர் என்பதைக் குறிக்கிறது. கைப்பற்றப்பட்ட பொருட்களினுள் பரவலான அறிவியல் இதழ் மற்றும் பல வானூர்தியியல் பொறியியல் புத்தகங்கள் இருந்தன. இவற்றுடன் அங்கு எளிய ‘நீரே செய்யும் (do it yourself)’ புத்தகங்கமும் இருந்துள்ளது. இப்புத்தகத்தில் உள்ள வழிகாட்டலின்படி பெருவங்க விங்களம் (aluminum alloy) / உலோகத் தாள்களைக் (metal sheet) கோத்திணைக்க(fabricate) கடைசல் எந்திரம்(lathe) உட்பட பல எந்திரங்கள் அங்கிருந்தன. 'எதிரி கையில் கிடைக்கக்கூடாது என்பதற்காக எரியூட்டப்பட்ட வானூர்தி மாதிரியின் எச்சம்' 'எதிரி கையில் கிடைக்கக்கூடாது என்பதற்காக எரியூட்டப்பட்ட வானூர்தி மாதிரியின் எச்சம்' 'எரியூட்டப்பட்ட வானூர்தி மாதிரியின் மையப்பகுதி' 'வானூர்தி மாதிரிப்படம்' 'வானூர்தி மாதிரிப்படம்' மேற்கண்ட வானூர்தி பற்றிய செய்திகள் இந்நிகழ்படத்தில்(video) உண்டு. மேலும் நான் மேற்கூறியிருந்த அந்த வானூர்திப் பட்டறையையும் புத்தகங்களையையும் இதில் காணலாம். புலிகளின் வான்படை அணியங்கள்(accessories) தேவிபுரத்தில், 'தெறுவைக்குளம்' என்ற சிற்றூரில் புதைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சிங்களப் படைகளால் தோண்டியெடுக்கப்பட்ட புலிகளின் வான்படை அணியங்கள்(accessories):- 'பயிற்சி பாவனையாக்கி (training simulator)' 'பறப்பு பாவனையாக்கி (flying simulator)' 'ஓடுதள மின்சூழ்கள்' 'நீல நிறத்தில் தெரிவது சிறிலங்கா படைத்துறையால் செய்து வைக்கப்பட்ட போலி பறனை உடுப்பு ஆகும். இது புலிகளினது அல்ல.' 'வட்டைகள்(tires) மற்றும் ஒருசில கோப்புகள்' 'ஒன்றன் மேல் ஒன்றாக உள்ளது தொடர்பாடல் கரணங்கள் (communication device) என்று நினைக்கின்றேன். மற்றையது கதிவீ காட்சியக கரணமாக (RADAR display device) இருக்கலாம் என்று நினைக்கின்றேன், சரியாகத் தெரியவில்லை.' சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்ட 12 வானூர்தி வட்டைகள்: 2 முதன்மைச் சில்லுகள்: உசாத்துணை: Air Tigers of LTTE Full Documentary with Video (Air Tigers of LTTE Full Documentary with Video) Dossier on ltte- pdf (read airforce section) YouTube /watch?v=PRecveMQQpc&list=LLhxWzcQVce-7x8bST_nSJ2w&index=12 http://dailymotion.om (http://dailymotion.om) (/video/x6x8v3z) Tiger aircraft rockets Palaly base, curfew in Jaffna Sri Lanka rebels say suicide air raids successful) Zlín Z-143 – Wikipedia (Zlín Z-143 – Wikipedia) (Navy Recovered a remote controlled air craft from Sea Tiger Boat (Update)) (Partially burnt 2 LTTE aircraft found in Puthukkudiyirippu- Mullaittivu) Hamilton, Dwight. "Terror Threat: International and Homegrown terrorists and their threat to Canada", 2007 ARF, PNP, RTF, RTR - What Does It All Mean? Seagull Cessna - Kits Ex-Sri Lankan navy chief describes how US helped destroy LTTE floating armories - NewsIn.Asia http://galledialogue.lk/assets/template/research_papers/2010/Prof_Rohan_Gunarathne.pdf http://eelabarathi.blogspot.com/2006/07/blog-post_115435098311053391.html https://eelam.tv/watch/sky-tigers-aircraft-accessories-வ-ன-ப-ல-கள-zlin-z-143-propeller-aircraft-tires-flight-simulat_nNjn4vd8q28u2rJ.html படிமப்புரவு: Double vie de Prabhakaran Album n°5 EelamView Dossier on ltte- pdf ruupabaahini TV YouTube /watch?v=PRecveMQQpc&list=LLhxWzcQVce-7x8bST_nSJ2w&index=12) http://dailymotion.om (/video/x6x8v3z) Sri Lanka Guardian eelamtv.com தொகுப்பு & வெளியீடு நன்னிச்சோழன்
  5. "வேற வழி தெரியல ஆத்தா...!!!!"
  6. அதுவா இப்போ முக்கியம்? புலிகள் சர்வாதிகாரிகளாகவும் பிழையான அரசியல் முடிவுகள் எடுப்பவர்களாவும் இருந்தார்கள் 1958லேயே அது தெளிவாக தெரிந்து இருந்ததால் சிங்கள கருணை மிகு புத்த மத வழிவந்து அன்பு அறம் துறவம் ஒன்றே வாழ்வின் சிர்த்தார்த்தம் என்று வாழ்ந்தவர்கள் பின்னாளில் கஸ்ரபட போகிறார்கள் என்று ......1958லேயே கொல்ல தொடங்கினார்கள். இதை நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வாரு திரியிலும் எழுதிக்கொண்டே இருக்கவேண்டும்.
  7. இல்லையே எனது நினைவின் படி ஜெயந்த தனபாலவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியும், அது செயல்பட முதலே, அதன் முக்கிய சரத்துகளை அரசியல் சட்டத்துக்கு முரணானது என ஒரு இடைக்கால தடை மூலம் உச்ச நீதி மன்றம் முடக்கி விட்டது. இது நடந்து சில மாதங்களின் பின்னே 2005 ஜனாதிபதி தேர்தல் வந்தது. எனக்கும் சரியாக நியாபகம் இல்லை ஆனால் தகவல்கள் சரி என நினைக்கிறேன்.
  8. பச்சைமிளகாய் வறுவல்.......! 👍
  9. தள்ளாடும்போதும் தளராத முதுமை.......! 👌
  10. நான் அஸ்ராஸெனிக்கா இரண்டும் போட்டுவிட்டேன். முதலாவதற்கு அடுத்த நாள் சில மணிநேரம் குளிர் காய்ச்சல் மாதிரி இருந்தது. தோள்மூட்டில் இரண்டு மூன்றுநாள் நோ இருந்தது. இரண்டாவதற்கு நோவைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஊசி போடாவிட்டால் சிலவேளை இந்திய கொரோனா அம்மன் ஆட்கொண்டு சுத்தியாட்டினாலும் ஆட்டுவார்!
  11. விடுதலைப் புலிகளின் கொடியேற்றல் நிகழ்வு & உறுதியுரை ஏற்றல் & அகவணக்கம் செலுத்தல்: https://eelam.tv/watch/அர-ய-ந-கழ-படம-க-ட-ய-ற-றல-ந-கழ-வ-உற-த-ம-ழ-ஏற-றல-அகவணக-கம-ச-ல-த-தல-full-documentry_eZ5z74mlphSquwa.html (இந்த நிகழ்படத்தை(video) எதிர்காலத்திற்காக பாதுகாத்து வைக்கவும். அரியது)
  12. முதல்மழை இவளை நனைத்ததே........! 😂
  13. சென்னை விமான நிலைய கூரை போல விழாதா என கேட்க வருகிறார் என நினைக்கிறேன்.
  14. அந்த காலம் அது அது .....
  15. வன்னியர், தலையை மொட்டையடிப்பதும் இப்போதைய ஃபேசன் என்பதையும் கவனத்தில் எடுக்கவும்...!😀
  16. எனது நினைவு வித்தயாசமாக இருக்கிறதே? மிகுந்த அளவிலன பேரம்பேசலின் பின்னர் ரனில் PTOMS இடைக்கால நிருவாகத்தை ஏற்றுக்கொண்டு சீமேந்தும் தொலைதொடர்பு சாதனங்களும் தமிழீழம் செல்ல அனுமதித்ததும், அந்த வார இறுதியில் சந்திரிக்கா மகிந்தவின் நிர்ப்பந்தத்தில் அதனால் ரனில் அரசை கலைத்ததும், அதை தொடர்ந்து வந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்து மகிந்தவை அமோக வெற்றி பெற செய்ததும், அடுத்து வந்த மாவீரர் நாள் செய்தியில் மகிந்த ஏதோசெய்வார் என்ற நம்பிக்கை வெளிப்பட்டதுமே எனது நினைவு.... அறளை பெயர்ந்து விட்டதோ என்ற பயம் வருகிறது. 🤫
  17. நன்றி நினைவு படுத்தியத்துக்கு . விவசாயியிக்கு @ போட்டும் பலனில்லை கோசான் . விவாசாயி விக் அருமையான மனிதர் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.