Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    8910
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19167
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46808
    Posts
  4. ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    7401
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/28/21 in all areas

  1. சாதனை புரிந்த சிங்கப்பெண்.......! 👍
  2. பாடல் -வாலி இசை -வி .குமார் பாடியவர் -Singer - T.M. Soundararajan, A.L.Raghavan, K. Jamuna Rani, Swarna . . . மூன்று தமிழ் தோன்றி விளையாடியதும் இங்கே நாலடியும் ஐந்து வகை காவியமும் இங்கே ஆறறிவும் தெளிவு பெற தேடியது இங்கே நான் பிறந்து பூங்கவிதை பாடியதும் இங்க பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே ? பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே ? நான் பாடிய பாட்டை மீண்ண்டும் கேட்க வந்தேனே உயிர் கொண்டு வந்தேனே
  3. டக்குன்னு பாத்தா அதெண்டு நினச்சேன் ,,💀
  4. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணா
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் ஐயா🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂
  6. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஈழப்பிரியன் அண்ணா.
  7. ஈழப்பிரியனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் ........! 🌹
  9. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா ( அண்ணா)
  10. தோழர் ஈழப்பிரியன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂
  11. ஈழப்பிரியனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  12. நான் இந்தியாவுக்குத் தப்பியோடியதாக அமெரிக்கத் தூதுவர் பிளேக் பொய் கூறுகிறார் - கருணா சினம் காலம் : மார்கழி 31, 2010 மூலம் : ஷாமின்ட்ர பேர்டிணான்டோ, ஐலண்ட் பத்திரிக்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் உதவியோடு, 2004 இல் கருணா தமிழகத்திற்குத் தப்பியோடி ஒளிந்துகொண்டதாக அன்றைய அமெரிக்க தூதுவர் ரொபேட் பிளேக் கூறியிருப்பதை பிரதியமைச்சரான கருணா பொய்யென்று மறுத்துரைத்திருக்கிறார். "தூதுவர் பிளேக்கின் குற்றச்சாட்டு அபத்தமானது" என்று ஐலண்ட் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான கருணா சினத்துடன் கூறினார். பிளேக்கினால் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையொன்றில் நம்பத் தகுந்த வட்டாரங்களின் செய்திகளின்படி கருணாவால் வழிநடத்தப்பட்ட துணைராணுவக் குழுவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் குழு புலிகளுக்கெதிரான நாசகார நடவடிக்கைகளின் அரச ராணுவத்துடன் சேர்ந்து இயங்கியதாகக் குறிப்பிட்டிருந்தார். 2007 மே மாதம் பிளேக்கின் கேபிள் அறிக்கையின்படி தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தனது துணைராணுவக் குழுவை கருணா இயக்கிவந்ததை நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தியதாகக் கூறியிருந்தார். மேலும் 2004 இல் தமிழ்நாட்டிற்குத் தப்பியோடி மறைந்துவாழ்ந்த கருணா 2006 ஆடி வரைக்கும் அங்கேயே இருந்து துணைராணுவக் குழுவினரின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், இன்னொரு துணைராணுவக் கொலைக்குழுவான டக்கிளஸ் தேவானந்தாவின் உதவியோடு கருணாவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராஜசிங்கத்தை 2005 மார்கழி 25 நத்தார் ஆராதனையின்போது ஆலயத்தில் வைத்து தனது கொலைக்குழு ஆயுததாரிகள் மூலம் சுட்டுக் கொன்றார் என்றும் தனது அறிக்கையில் ரொபேட் பிளேக் குறிப்பிட்டிருந்தார். கருணாவின் படுகொலைகள் பற்றி மேலும் விவரித்திருந்த ரொபேட் பிளேக்கின் அறிக்கை, கருணாவின் கட்டளையின்பேரிலேயே அவரது ஆயுதக் குழுவினர் இன்னொரு தமிழ் கூட்டமைப்பு உறுப்பினரும், சட்டத்தரணியுமான நடராஜா ரவிராஜை 2006 கார்த்த்க்கை 10 ஆம் திகதி கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொன்றனர் என்றும் கூறியிருக்கிறார்.
  13. அமெரிக்காவின் தூதுவரான ரொபேட் பிளேக் வோஷிங்டனுக்கு அனுப்பிய செய்திக்குறிப்பொன்றில் புலிகள் வெளிநாட்டு உதவிகளை தமது போர் நடவடிக்கைகளுக்குப் பாவித்திருக்கலாம் என்று கூறியிருப்பதாகத் தெரிகிறது. ஐ நா அமைப்பின் கிளை நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட புலிகளின் சமாதானச் செயலகம் அவற்றின் உதவியோடு தமது பலத்தைப் பெருக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. ஆனால், இந்த உதவிகள் பற்றி ஐலண்ட் பத்திரிக்கை இந்த ஐ நா அமைப்புக்களின் கிளை நிறுவனங்களை விசாரித்தபோது, புலிகளின் நடவடிக்கைகள் பற்றி பேச மறுத்துவிட்டன. மேலும், பிளேக்கின் செய்திக்குறிப்பின்படி புலிகளால் உள்நாட்டில் சேகரிக்கப்பட்ட பணம் புலம்பெயர் தமிழரால் வழங்கப்பட்ட பணத்தில் சிறு துளி மட்டுமே என்று கூறப்பட்டிருக்கிறது. பிளேக்கின் கருத்துப்படி புலிகளுக்காக இயங்கும் புலம்பெயர் அமைக்களின் மூலமே வெளிநாடுகளிலிருந்து புதிய ஆயுதங்களை புலிகள் கொள்வனவு செய்து வன்னிக்கு அனுப்பி வந்தனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை புலநாய்வுச் சேவைகளின் கருத்துப்படி புலிகளின் வெளிநாட்டு நிதிவளங்கள் சில இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதாகவே தெரிகிறது. கடந்த மே மாதம் தமது மரபுவழி போரிடும் சக்தியை புலிகள் இழந்துவிட்டிருந்தாலும்கூட, அவர்களின் சர்வதேச நிதி வலையமைப்பு இன்னமும் இயங்குவதாகவே தெரிகிறது. புலிகளின் சார்பு புலம்பெயர் அமைப்பான உலகத் தமிழர் பேரவை மகிந்த ராஜபக்ஷவின் லண்டன் விஜயத்தையொட்டி அவரைக் கைதுசெய்து போர்க்குற்றங்களுக்காகவும், மனித நேயத்திற்கெதிரான குற்றங்களுக்காகவும் விசாரிக்க முயன்றிருந்ததும் குறிப்பிடத் தக்கது. முற்றும்
  14. நோர்வே அரசாங்கத்தின் சார்பில் எரிக் சொல்கெயிம் புலிகளுக்குக் கொடுத்த பெருமளவு பணம்பற்றி சுதந்திரமான விசாரணைகள் வேண்டும் - மீண்டும் வலியுறுத்தும் கருணா காலம் : 30 மார்கழி 2010 மூலம் : தி ஐலண்ட் நேற்று கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழு அமர்வில் கலந்துகொண்ட கருணா சமாதானக் காலத்தில் நோர்வே அரசாங்கத்தின் பெருமளவு பணத்தினை எரிக் சொல்கெயிம் புலிகளுக்கு வழங்கினார் என்றும், அதுதொடர்பான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் என்றும் கேட்டிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் முகமாக கருத்துத் தெரிவித்திருக்கும் எரிக், இலங்கையில் அரசியல் ஆதாயத்திற்காக பொய் கூறுவதும், ஒரு நாட்டையோ அல்லது ஒருவரையோ அவமானப்படுத்துவதும் பொதுவாகப் பலராலும் முன்னெடுக்கப்படும் அரசியல் தந்திரங்கள் என்று கூறியிருக்கிறார். கருணாவின் குற்றச்சாட்டுப்பற்றி மேலும் தெரியவருவதாவது. "நோர்வேயின் அபிவிருத்தி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சரிக் எரிக் சொல்கெயிம் சமாதான காலத்தில் நடந்துகொண்ட விதம் பற்றி இலங்கை தீவிர விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நோர்வே அரசாங்கத்தின் சார்பாக புலிகளுக்கு அவரால் வழங்கபட்ட பெருமளவு பணம் பற்றி கட்டாயம் அவர் விசாரிக்கப்படவேண்டும்" என்று அவர் கேட்டிருந்தார். கருணா நோர்வேயின் சமாதான முயற்சிகள் தொடர்பாக விமர்சித்து வருவதற்குப் பதிலளிக்கும் வகையில் நோர்வே செய்தித்தாள் ஒன்றில் எரிக் இலங்கை அரசியல்வாதிகளின் தந்திரம்பற்றிப் பேசியிருந்தார். இதனையடுத்தே கருணா இலங்கை அரசு சார்பாக நோர்வே மற்றும் எரிக்கிற்கு எதிரான விமர்சனங்களை வைத்து வருகிரார். அதில் குறிப்பாக நோர்வேயினால் வழங்கப்பட்ட பணம் புலிகளால் யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூரியிருந்தார். நோர்வே செய்திச் சேவைக்கு பேட்டியளித்த எரிக், கருணாவின் குற்றச்சாட்டுக்கள் பைத்தியக்காரத் தனமானவை. பொதுவாகவே இலங்கை அரசியல்வாதிகளும் அவர்களது ஆதரவாளர்களும் பொய்களை தமது அரசியல் ஆதாயத்திற்காகப் பாவிப்பார்கள், இதுவும் அப்படியானதொரு குற்றச்சாட்டுத்தான்" என்று கருணாவின் விமர்சனத்தை நிராகரித்திருந்தார். இதனால் கொதிப்படைந்த கருணா புலிகளுக்கு நோர்வியினால் வழங்கப்பட்ட பணம் பற்றிய முழுவிபரங்களும் வெளிவரும்வரை நோர்வே மீதும் ஏனைய உதவிவழங்கும் நாடுகள் மீதும் இலங்கையரசு விசாரணை நடத்தவேன்டும் என்று மீண்டும் கோரியிருந்தார். நோர்வேயின் அபிவிருத்திக்கான நிறுவனமான நோராட்டின் தகவல்களின் படி இலங்கையின் தனது சமாதான முயற்சிகளுக்கென்று 1997 இல் இருந்து 2009 வரையான காலப்பகுதியில் சுமார் 100 மில்லியன் கொரோணர்களை அது ஒதுக்கியிருந்தது. ஸ்கன்டிநேவிய யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் மற்றும் சமாதான செயலகத்திற்கான செலவுகள் என்று நோர்வே திட்டமிட்ட இந்த 100 மில்லியன் தொகை, நோர்வே அரசினால் இலங்கையின் சமாதானத்திற்காககவும் அபிவிருத்திக்கென்றும் 1997 முதல் 2009 வரையான காலப்பகுதியில் ஒதுக்கப்பட்ட 2.5 பில்லியன் உதவித்தொகையினுள் அடங்கும் என்றும் நோர்வே அரசு வெளிப்படுத்தியிருந்தது. இதனையடுத்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் பிரதியமைச்சர் கருணா, தற்போது தாம் புலிகளுக்குப் பணம் கொடுத்ததுபற்றி நோர்வே ஒத்துக்கொண்டுவிட்டதாகவும், ஆகவே புலிகளின் சமாதானச் செயலகத்திற்கென்று வழங்கப்பட்ட 100 மில்லியனில் புலிகளின் ராணுவப் பிரிவிற்குக் கொடுக்கப்பட தொகைபற்றிய விபரங்களை நோர்வே முன்வைக்கவேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். இலங்கை அரசு சார்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட சிலரின் கருத்துப்படி, போர் முடிந்த கடந்த ஒன்றரை ஆண்டுகளிலிலங்கை அரசு இந்த நிதிக் கொடுப்பனவு பற்றி விசாரணைகளை ஆரம்பிக்கவில்லையென்றும், இந்த நிதிக் கொடுப்பனவுகள் புலிகளால் யுத்தத்திற்கென்று ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் ஏனைய யுத்த உபகரணங்கள் வாங்க பயன்படுத்தப்பட்டதாகவும், ரணிலின் அரசு இதனைக் கண்டும் காணாததுபோல இருந்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.
  15. பயங்கரவாதத்தின் மூலம் சிங்களவர்களின் தேசத்தைக் கூறுபோட்டு தமக்கான தனிநாடொன்றினை ஏற்படுத்தமுடியாது என்பதை உணர்ந்துகொண்ட கருணா அம்மான் தனது சக தமிழ் பிரிவினைவாதிகளை உதறிவிட்டு, பிரிவினைவாதத்தினைத் தோற்கடிக்க, தனது உயிரைக் கூடப் பணயம் வைத்து சிங்களவருடன் கைகோர்த்துக்கொண்டார். முழுச் சிங்கள தேசமே அவரை தம்மில் ஒருவராக (அவரது கடந்தகாலம் எப்படியிருந்தாலும்கூட) இருகரம் நீட்டி அரவணைத்துக்கொண்டது. அப்படியானால், சிங்களவர்களால் தமக்கு ஏற்பட்டதாகக் கூறும் பிரச்சினைகளை மறந்து தமிழர்கள் ஏன் சிங்களவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது? இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாம் இன்று அடைக்கலம் தேடிக்கொண்டிருக்கும் நாடுகளை தமது தற்போதைய வாழிடங்களாகக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையினைத் துண்டாடி, தனிநாடு அமைக்கப் போராடும் பயங்கரவாதிகளுக்கு உதவுவதன் மூலம் தமது தாய்நாட்டின்மீது தமக்கு பற்று அறவே இல்லையென்பதை அவர்கள் வெளிக்காட்டியிருக்கிறார்கள். பயங்கரவாதிகளை ஆதரிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒருபோதுமே இலங்கைநாட்டின்மீது தேசப்பற்றுக்கொண்டவர்களாக இருக்கமுடியாது. ஆனால், சிங்களவர்களிடமிருந்து அநீதியாகப் பிரித்தெடுக்கப்படும் நாட்டில் வாழும் ஆசைமட்டும் அவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் தமது ஈழக்கனவைக் கைவிடும்வரைக்கும் அவர்கள் இலங்கையின் குடிமக்களாக ஒருபோதுமே இருக்கமுடியாது. தமிழ் இனவாத அரசியலைக் கைவிட்டு, பிரிவினைவாதத்தைத் தூக்கியெறிந்து, தேசிய அரசியலில் தன்னையும் ஒரு அங்கமாக்கி இலங்கைத் திருநாட்டின் இறையாண்மையையும், பிரதேச ஒருமைப்பாட்டையும் கட்டிக்காத்திட கருணா அம்மான் எடுத்திருக்கும் இந்த துணிச்சலான முடிவினை மேற்குலக ராஜதந்திரிகளான ரொபேட் ஓ பிளேக், டேவிட் மில்லிபாண்ட், பேர்னாட் குச்னர் போன்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொண்டு, இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று இருப்பதாக சர்வதேசத்தில் பறையறைவதை நிறுத்திட வேண்டும். இலங்கை எனும் இறையாண்மை உடைய நாட்டினுள் இவர்கள் செய்யும் தலையீடுகள் ஏற்றுக்கொள்ளமுடியாதவை. இலங்கையில் இருப்பதாக இவர்கள் கூறிவரும் இனரீதியிலான, அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் கூட உள்நாட்டில், சம்பந்தப்பட்டவர்களிடையேயான சுமூகமான பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்த்துக்கொள்ள்ப்படவேண்டும். சிங்களவர்களுக்கு எதிராகச் செயற்படுவதன் மூலம் இனப்பிரச்சினியினை தீர்க்க முடியாது. மாறாக, அவர்களுடன் சேர்ந்து இயங்கி, அவர்களையும் தீர்வின் பங்காளர்களாக ஏற்றுக்கொண்டு, அவர்களின் அபிலாஷைகளையும் பூர்த்திசெய்து, பொதுவான இலக்கினை நோக்கி முன்னேறுவதன் மூலமே எமது தாய்நாட்டினை அபிவிருத்தி செய்ய முடியும். சிங்களவர்களை அனுசரித்து, விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டு சமாதான சூழ்நிலையினை உருவாக்கி நாமும், எமது வருங்கால சந்ததிகளும் சந்தோசமாகவும், அமைதியாகவும் வாழும் நிலையினை இதன்மூலமே எம்மால் ஏற்படுத்த முடியும். பெரும்பான்மை, சிறுபான்மை எனும் வேறுபாடுகள் களையப்பட வேண்டும், எல்லோரும் இலங்கையர் எனும் நாட்டுப்பற்றும், உணர்வும் ஏற்படுத்தப்படுதல் வேண்டும். கருணா அம்மான் எனும் ஒப்பற்ற மனிதன் எமக்கு தரும் செய்தி அதுதான் ! http://www.lankaweb.com/news/items/2010/01/18/karuna-amman-stands-above-all-tamil-politicians-tamil-writers-and-intellectuals-as-a-patriotic-sri-lankan-a-catalyst-of-unity/
  16. இலங்கை எனும் நாடு முற்றான அபிவிருத்தியை நோக்கிச் செல்வதற்கு, அங்கு வாழும் சமூகங்கள் இல்லாத இனப்பிரச்சினைபற்றித் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருக்கமுடியாது. தமது சமூகங்களுக்கிடையே இருக்கும் பிணக்குகளை சமாதானமுறையில் பேசித் தீர்த்துக்கொண்டே முன்னேறிச் செல்லவேண்டும். ஏனைய சமூகங்கள் மீது தேவையற்ற வெறுப்பினையும், காழ்ப்புணர்வினையும் உமிழ்வதைத் தவிர்த்து அச்சமூகங்களை அனுசரித்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும். தனது இன அடையாளத்தினைத் தூக்கியெறிந்து, இன அடிப்படையிலான அரசியலை உதறித்தள்ளிவிட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்ததன் மூலம் தமிழர்கள் சிங்கள அரசியல்வாதிகளுடன் ஒற்றுமையாகச் சேர்ந்து செயற்பட்டு இந்த நாட்டினைக் கட்டியெழுப்பமுடியும் என்பதை மற்றைய தமிழர்களுக்கு கருணா அம்மான் காட்டியிருக்கிறார். ஒரு நாட்டினுள் இருக்கும் சமூகங்களிடையே ஒரு பிணக்கு ஏற்படுத்துமிடத்து, அப்பிணக்கு அந்த சமூகங்களுக்குள், வெளியார் தலையீடின்றி, உள்நாட்டிலேயே பேசித் தீர்க்கப்படவேண்டும். இச்சமூகங்களில் ஒன்று, அயல்நாட்டில் உள்ள சமூகம் ஒன்றுடன் கலாசார , மொழி ரீதியிலான தொடர்புகளைக் கொண்டிருந்தாலும்கூட அந்நியத் தலையீடுகள் கட்டாயம் தவிர்க்கப்படவேண்டியதொன்று என்பதை அச்சமூகம் நினைவில் வைத்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு இலங்கையில் வாழும் தமிழர் தொடர்பாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தலையீடு செய்வதை நாம் குறிப்பிடமுடியும். தமிழினத்தின் இனவாத அரசியல்வாதிகள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனையவர்களான மனோ கணேசன், சம்பந்தன், குமார் டேவிட், ராஜன் பிலிப், லின் ஓர்க்கேர்ஸ், பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் லீலா ஐசக் போன்றவர்கள் கருணா அம்மானிடமிருந்து ஏராளமான விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டு, பெரும்பான்மைச் சிங்கள பெளத்தர்கள் மேல் இனவெறுப்பைக் காறி உமிழ்வதனை விட்டு விட்டு அவர்கள் சிங்களப் பெரும்பான்மையினத்தை அனுசரித்து, சகிப்புத்தன்மையுடனும், சகோதர உணர்வோடும் நெருங்கிப் பழகி இறையாண்மையுள்ள இலங்கைத் திருநாட்டைக் கட்டிக்காக உழைக்கவேண்டும். தமிழ் இனவாத அரசியல்வாதிகளும், கல்விமான்களும், ஊடகவியலாளர்களும், எழுத்தாளர்களும் சிங்கள இனத்தின்மீது இனவெறுப்பைக் கக்கி வரும் நிலையில் சிங்கள் பெளத்த அரசியல்வாதிகளும், கல்விமான்களும் பத்திரிக்கையாளர்களும் மட்டுமே இன்றுவரை இன ஐக்கியத்தையும், இனங்களுக்கிடையேயான ஒற்றுமையினையும் நிஒலைநாட்டவேண்டும் என்று தொடர்ச்சியாக கேட்டுவருகிறார்கள். எல்லா நாடுகளிலும் இனப்பிரச்சினைகள் இருக்கின்றன. அவை எல்லாமே பெரும்பான்மையினத்துடன் சமரசமாகி, அவ்வினத்தை அனுசரித்துப்போய், தமக்கான சலுகைகளைப் பெற்றே தீர்க்கப்பட்டிருக்கின்றன. மாறாக அப்பெரும்பான்மையினத்தை சண்டைக்கிழுத்து, மிரட்டி அல்லவென்பதை மற்றைய இனங்கள் உணர்ந்துகொண்டிருக்கின்றன. கருணா அம்மான் இந்த நாட்டில் வாழும் அனைத்துத் தமிழருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார். அவரின் பாதச் சுவடுகளைப் பின்பற்றி ஏனைய தமிழர்களும் தமது பிரிவினைவாதச் செயற்பாடுகளைக் கைவிட்டு, சிங்களப் பெரும்பான்மையினத்தோடு சேர்ந்து, தமக்கு இருப்பதாக அவர்கள் நினைக்கும் பிரச்சினைகளை சுமூகமாக சிங்களவருடன் பேசித் தீர்த்துக்கொள்ள முன்வரவேண்டும். விட்டுக்கொடுப்பும், புரிந்துணர்வும், அமைதியும் நிரம்பிய சூழலினை உருவாக்குவதன்மூலம் நாம் இதனைச் சாத்தியமாக்கிட முடியும்.
  17. தாய்நாட்டிற்கு பாரிய ஆபத்துக்கள் வந்தபோதும், பிளவுபடுத்தப்பட்டு அழிக்கப்படும் சூழ்நிலை உருவானபோதும் ஒற்றைத் தமிழன் தன்னும் சிங்களவருடன் சேர்ந்து ஒற்றுமையாக ஒருநாட்டில் வாழவேண்டும் என்று குரல் கொடுக்கவில்லை. ஒரு தமிழர்தன்னும் சிங்கள பெளத்தர்களின் அரசியலினை அனுசரித்து வாழலாம் என்று கூறவில்லை. சிங்கள பெளத்தர்கள் மீதான தமிழர்களின் வெறுப்புணர்வின் உச்சத்தில்தான் இனவெறுப்பின் நெருப்பிலிருந்து, சிங்கள பெளத்தர்களுடன் தோள் தோள் கொடுத்து, இந்த நாட்டினை கொடூரமான பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டு, ஒருமைப்பாட்டினை மீள நிறுவிட உண்மையான நோக்கத்தோடு ஒரு தமிழன் எழுந்து வந்தான். இந்த ஒற்றைத் தமிழன் கூட அதே இரத்தவெறிபிடித்த பயங்கரவாதிகளின் இனத்திலிருந்து, இந்த நாட்டைத் துண்டுபோட முன்னின்று உழைக்கும் தமிழினத்திலிருந்து வந்தாலும்கூட, இந்த நாட்டின்மேல் அவன் வைத்த அசைக்கமுடியாத பற்றும், இல்லாத இனப்பிரச்சினைக்காக சிங்களவர்களுடம் மோதி ஒருபோதுமே தன்னால் வெற்றிபெறமுடியாது எனும் தெளிவும், சிங்களவருடன் பேசியே தமிழருக்குத் தேவையானதைப் பெற்றுக்கொள்ளமுடியும் எனும் அசைக்கமுடியாத நம்பிக்கையும் கொண்டு அவன் வந்தான். இலங்கை எனும் தனது தாய்நாட்டின்மேல் அவன் வைத்திருக்கும் பாசம் சாதாரண தமிழர்களை விடவும், புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தாய்நாட்டைப் பிரிக்கக் கோரும் தமிழர்களைவிடவும் பன்மடங்கு உயர்ந்தது. இதனாலேயே அவன் தனது தோற்றத்திற்கும் மீறிய அதியுயர் மனிதனாகத் திகழ்கிறான். சட்டங்கள் மூலமோ, நீதித்துறையின் தலையீடுகள் மூலமோ அல்லது அரசியல் ரீதியான அதிகாரப் பரவலாக்கம் மூலமோ பல்லினங்களுக்கிடையே ஒற்றுமையினை நிலைநிறுத்த முடியாது. அது சமாதானத்தை வேண்டும் ஒவ்வொருவரிடமிருந்து மனதளவில் ஆரம்பிக்கவேண்டும். கருணா அம்மான் தெரிந்தோ தெரியாமலோ தனது இன அடையாளத்திலிருந்து தன்னை விலத்தி , வெளியே வந்து, சிங்களவர்களைப் பகைக்காது, அவர்களை ஆத்திரமூட்டாது சலுகைகளைப் பெற முடியும் என்று தனது சக தமிழர்களுக்குக் காட்டியிருக்கிறார். தனது முன்னுதாரணத்தின்மூலம் சிங்கள பெளத்த பெரும்பானமையினரோடு சேர்ந்து ஒற்றுமையாக இந்நாட்டில் தமிழர்கள் வாழமுடியும் என்பதைக் காட்டியிருக்கிறார். ஒரு தேசத்தின் அடையாளமே அத்தேசத்தில் வாழும் பல்லினங்களின் ஒற்றுமையிலேயே தங்கியிருக்கிறது. ஒற்றுமையில்லாத சமூகங்களைக் கொண்டு ஒரு தேசத்தினை உருவாக்குவது சாத்தியமில்லை.
  18. தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் புத்திஜீவிகள் என்று அனைவரைக் காட்டிலும் ஒற்றை மனிதனாகப் பிரகாசித்து இலங்கையின் ஒருமைப்பாட்டினை நேசிக்கும் கருணா அம்மான் காலம் : தை, 18, 2010 இணையம் : லங்கா வெப் மூல ஆக்கம் : சார்ள்ஸ் பெரேரா இலங்கையில் தமிழர்கள் இலங்கையர் எனும் அடையாளத்தைத் துறந்து தங்களுக்கென்று தமிழர்கள் எனும் அடையாளத்தைத் தேட முனைகிறார்கள். சிங்களவர்களை பெரும்பான்மையினமாக ஏற்றுக்கொள்ள இன்றுவரை மறுத்தே வருகிறார்கள். இல்லாத இனப்பிரச்சினையொன்று இருப்பதாக காட்டிக்கொண்டு சிங்களவர்களுக்குச் சமனான உரிமைகளைக் கேட்கிறார்கள். உதாரணத்திற்கு சம்பந்தனையும் அவரது கூட்டாளிகளையும் எடுத்துக்கொண்டால் அவர்கள் ஒருபோதுமே ஒருமித்த இலங்கையினை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களைப்பொறுத்தவரை இலங்கை எனும் நாடு சிங்களவருக்கும் தமிழர்களுக்கிடையேயும் பிரிக்கப்படவேண்டும் என்கிற நோக்கம் இருந்துவருகிறது. இவர்களைத்தவிர ஆனந்தசங்கரியாகவிருக்கட்டும் அல்லது டக்கிளஸ் தேவானந்தாவாக இருக்கட்டும், தமது கடிசிகளின் பெயரில்த் தன்னும் இந்த தனித்தமிழ் அடையாளத்தைப் பேணவே விரும்புகிறார்கள். இவர்களுக்கும் அப்பால் தம்மை நடுநிலையான, வெளிப்படையான எழுத்தாளர்கள் என்று காட்டிக்கொள்ளும் படித்த தமிழர்களான குமார் டேவிட், பாக்கியசோதி சரவணமுத்து, ராஜன் பிலிப் மற்றும் லின் ஓர்கேர்ஸ் போன்றவர்கள் கூட தமது தமிழ் எனும் அடையாளத்தைக் காவிக்கொண்டு இல்லாத ஒரு இனப்பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் என்று கேட்கிறார்கள். கடந்த முப்பது வருடங்களாக பயங்கரவாதம் எனூம் புற்றுநோயுடன் சேர்ந்தே வாழ்ந்தபோதிலும்கூட, தமிழர்கள் ஒருபோதுமே அந்தப் பயங்கரவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. அவர்களின் மெளனம் பயங்கரவாதத்திற்கான அவர்களது சம்மதமாகவே தெரிந்தது. அதுமட்டும் அல்லாமல் பயங்கரவாதிகளுக்கு தார்மீக ஆதரவும் வழங்கி இலங்கையிலிருந்து தமிழர்களுக்கென்று ஈழம் எனும் தனிநாட்டினை பிரித்து எடுக்கவே அவர்கள் செயற்பட்டார்கள். ஆகவே, பயங்கரவாதத்திற்கெதிரான போரினை முன்னெடுக்கும் முழுப் பொறுப்புமே சிங்கள பெளத்தர்களிடம் திணிக்கப்பட்டது. ஏனென்றால், தமிழர்களுக்கு இந்த நாட்டின்மீது பற்று இருக்கவில்லை, அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பயங்கரவாதிகளுடன் இணைந்து தமக்கான நாடொன்றினை இலங்கையில் ஏற்படுத்துவதுதான். பயங்கரவாதத்தினை உதறியெறிந்து, சிங்களவருடன் தோளுக்கு தோள் நின்று பயங்கரவாதத்தினை முறியடித்து நாடு பிளவுபடாமல் காக்குக் போருக்கு தமிழர்கள் உதவவில்லை. சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வதை மறுக்கும் அதேவேளை, சிங்களவரது நாட்டில் தமக்கென்று ஒரு பகுதியினை பிரித்தெடுக்க அவர்கள் பின்னிற்கவில்லை. நாடு பயங்கரவாதிகளால் பிளவுபடுவதைத் தடுக்கும் போரில் ஒரு தமிழராவது இதுவரை தமது உயிரைத் தியாகம் செய்யவில்லை. ஆனால், பயங்கரவாதிகளோடு தம்மையும் இணைத்து, தார்மீக ஆதரவு வழங்கி, பணத்தினை வாரியிறைத்து தாம் பிறந்த நாட்டையே துண்டாடி தமக்கென்று ஒரு தனிநாட்டினை உருவாக்கவே முனைந்தார்கள்.
  19. போரினை நிறுத்தவும், எமது படைவீரர்களைக் குற்றஞ்சாட்டவும் சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து பெருமளவு நாட்டு மக்கள் பணத்தினையும், தனது கட்சியின் பணத்தினையும் ரணில் செலவுசெய்துவருகிறார். இலங்கைக்கு உதவுவதை நிறுத்துமாறு உலக நாடுகளைக் கேட்டுவருகிறார். அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளவர்கள் முள்ளந்தண்டற்ற கோழைகள். சர்வதேச மனிதவுரிமைவாதிகள் வன்னிப் பயங்கரவாதியின் குற்றங்களையும், அவனுக்கு ஆதரவாக ஒத்தூதும் ரணில் போன்றவர்களின் குற்றங்களையும் முதலில் விசாரிக்கட்டும். வன்னிப்பயங்கரவாதி பிரபாவினதும் அவனது சகாக்களினதும் போர்க்குற்றங்களுடன் ஒப்பிடும்பொழுது கருணா அம்மான் செய்தவை பெரிய போர்க்குற்றங்கள் இல்லை. பாரிய போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வரும் இரத்த வெறி பிடித்த பிரபா எனும் காட்டேறியினை அழிப்பதற்குத் தடையாக இருப்பதும் ஒரு போர்க்குற்றம்தான் என்று ஐ நா சாசனம் சொல்கிரது. ஆகவே கருணாவை விசாரிக்குமுன் வன்னிப் பயங்கரவாதியையும் அவனுக்கு ஆதரவாக போரினை நிறுத்தக் கோரும் ரணிலும் போர்குற்றங்களுக்காக விசாரிக்கப்படவேண்டும். கருணா அம்மானையோ அல்லது இலங்கையின் எந்தத் தலைவரையோ போர்க்குற்றங்களுக்காக விசாரிக்கக்கோரும் இங்கிலாந்து, இலங்கையினை ஆக்கிரமித்து, அந்த நாட்டு மக்களை அடிமைப்படுத்தி, இனங்களிடையே பபகைமையினை வளர்த்து, எமது இனம் மீது இனக்கொலையினை நிகழ்த்தியதற்காக எம்மாலும் அந்த நாட்டின்மேல் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தக்கல் செய்யமுடியும் என்பதையும் நினைவில் வைத்திருப்பது நல்லது. அடுத்ததாக ளுயிஸ் ஆர்பர் எனும் ஐ நா அதிகாரி ஓமந்தையில் தனது அலுவலக ஒன்றினை திறக்க விரும்புவது வன்னிப்பயங்கரவாதி பிரபாகரனைப் பாதுகாக்கவே என்பது தெளிவாவதால், உலகப் பயங்கரவாதிகளைப் பாதுகாக்க பணிபுரியும் இந்ட்த கிரிமனலை உலக அமைப்புக்களிடமிருந்து துரத்தும் நேரம் வந்துவிட்டது. அவ்வாறே ஐ நா வின் செயலாளர் நாயகம் பா கீ மூனுக்கு ஒரு பயங்கரவாதியை பயங்கரவாதியாக அடையாளம் காண்பதில் இன்னமும் பிரச்சினையிருக்கிறது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? இறுதியாக, இன்றிருக்கும் இங்கிலாந்து, நோர்வே மற்றும் ஐ நா தலைவர்கள் எல்லோருமே சுத்த முட்டாள்கள் என்பது எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. http://www.lankaweb.com/news/items08/270108-7.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.