Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    33600
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87993
    Posts
  3. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    16477
    Posts
  4. அன்புத்தம்பி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    5633
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/25/22 in all areas

  1. பார்வை ஒன்றே போதுமே........(3). வீட்டுக்கு வந்ததும் மகேஸ்வரி விரைவாக சோறும் ஆக்கி மீன்குழம்பும் ஒரு கீரையும் வைக்கிறாள்.....சித்ரா ஓடிப்போய் பெட்டிக்குள் இருந்து தகப்பனின் ஒரு சாரமும் டீ - சேர்ட்டும் எடுத்து வந்து சாமிநாதனிடம் தர அவரும் அதை வாங்கி உடுத்திக் கொள்கிறார்.....பின் அவர் திண்ணையில் இருந்து பார்க்க, மழைக்கு வீட்டின் கூரையில் இருந்து ஒழுகிய இடங்களில் வாளி , சட்டி என்று வைத்திருந்தார்கள். திண்ணைக்கும் குசினிக்கும் இடையில் இருக்கும் பனைமட்டை வரிச்சின் இடைவெளியில் மகேஸ்வரி குந்தியிருந்து கால்களை அகட்டி வைத்து அம்மியில் அரைப்பது தெரிகிறது.அவர் பார்வையை வேறு பக்கம் திருப்பி வெளியே எழுந்து வருகிறார்.இவ்வளவு ஏழ்மையிலும் அவர்களது விருந்தோம்பல் அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அப்போது அவர்களது மகன் முத்து ஒரு சைக்கிளில் வந்து அதை திண்ணையில் சாத்தி விட்டு சாமிநாதனைப் பார்த்தபடி வீட்டுக்குள் போகிறான்....அங்கு அவனுக்கு சித்ரா நடந்ததை சொல்லி முடிக்கவும் மகேஸ்வரி குரல் கொடுக்கவும் சரியாக இருக்கின்றது. தம்பி கத்தியை எடுத்து கொண்டுபோய் வாழையிலை ரெண்டு வெட்டிக்கொண்டு வா. திண்ணையில பாயைப்போடு பிள்ளை சாப்பாடு முடிஞ்சுது அவரைக் கூப்புடு. எல்லோரும் சாப்பிட்டு முடிந்தபின்பு வெளியே இருந்து வெறியில் வந்த ஒருவர் இவர்களிடம் பணம் கேட்டு சண்டை பிடித்து விட்டு கண்டபடி தூசண வார்த்தைகளால் பேசிக்கொண்டு போகிறார். விருந்தாளிக்கு முன்பாக கடங்காரன் வந்து கத்திவிட்டுப் போனது அவர்கள் மூவருக்கும் ஒருமாதிரி கூச்சமாக இருந்தது. ஆனாலும் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தப் பையன் முத்துதான் இப்பொழுது தகப்பன் பார்த்துவந்த வேலையை செய்துகொண்டு வருகின்றான். தமக்கை சித்ரா படிப்பதற்காகவும் குடும்பச் செலவுகளுக்காகவும் தனது படிப்பை நிறுத்தி வைத்து விட்டு சம்பாதித்து கொண்டுவந்து தாயிடம் குடுக்கிறான். ஆனாலும் தான் இப்பொழுது அவர்களுக்கு எப்படி உதவ முடியும். இன்று தான் ஒரு அசந்தர்ப்பமான சூழ்நிலையில் இவர்களைச் சந்திக்க வேண்டியதாகி விட்டது. தான் கொடுத்த சங்கிலியைக்கூட அவர்கள் வாங்கவில்லை. ம்...என்று ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டார். பின் மாலையாகி நேரத்துக்கே இருட்டத் தொடங்கி விட்டது. அதனால் அவர்களிடம் சொல்லி விடைபெற்றுக்கொண்டு அவர் கிளம்பி விட்டார். அடுத்தநாள் நன்றாக அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த சாமிநாதனின் தலையில் யாரோ தண்ணி ஊற்றுவதை உணர்ந்து பதறியடித்துக் கொண்டு எழுந்தவர் திகைப்புடன் நிமிர்ந்து பார்க்க கடை திறப்பதற்காக வந்து சிப்பந்தி சோமு கடை விறாந்தையில் யாரோ பிச்சைக்காரன் படுத்திருப்பதைக் கண்டு எரிச்சலுடன் அவர்மீது வாளித்தண்ணியை கொட்டி விட்டான். அவருக்கு கொஞ்சம் கோபம் வந்தாலும் அதை அடக்கிக்கொண்டு பேசாமல் எழுந்து வெளியேவர, அப்போது எதிர்ப் பக்கத்து கடையில் இருந்து ஒரு பையன் வீதியைக் கடந்து ஓடிவந்து சோமுவை கடிந்து விட்டு ஐயா நீங்களா, அட நீங்கள் இரவு வீட்டில் தங்கி விட்டு காலையில் கிளம்பியிருக்கலாமே என்று சொன்னான். அப்போது சோமு என்ன முத்து இவரை உனக்கு முன்பே தெரியுமா என்று வினாவ ஓம் சோமு தெரிந்தவர்தான் நேற்று வீட்டுக்கு வந்திருந்தார்......! பார்ப்போம் இனி.........! ✍️
  2. பார்வை ஒன்றே போதுமே........(2). ஆங்காங்கே வயல் வெள்ளத்துக்குள் வந்திருந்த சின்ன மீன்களை கொக்கு, நாரை போன்ற சில பறவைகள் கொத்திக்கொண்டு பறப்பதும் ஒன்றோடொன்று சண்டை பிடிப்பதும் பார்க்க ரம்மியமாக இருக்கின்றது. இவ்வளவு பிரச்சினைக்குள்ளும் எவ்வளவு காலமாச்சுது இப்படியெல்லாம் ரசிச்சு என மனம் எண்ணிக் கொண்டது. தூரத்தில் ஒரு மேட்டில் ஒராள் நிற்பதைக் கண்டு அங்கு செல்கிறார். அது ஒரு நடுத்தர வயதுடைய பெண் என்று தெரிகின்றது. அந்தப் பெண்ணும் இவரைக் கண்டு விடுகிறாள். இவரது கோலத்தைப் பார்த்ததும் அங்கிருந்து செல்வதற்கு எத்தனிக்கிறாள். உடனே சாமிநாதனும் ஆம் அதுதான் அவரது பெயர் தன்னை சுதாகரித்துக் கொண்டு அவளைப் பார்த்து அம்மா போகாதேங்கோ , கொஞ்சம் நில்லுங்கோ என்றதும் அவள் சற்று நின்று, ம்....என்ன என்பதுபோல் பார்க்கிறாள். அப்பொழுது ஒரு குமர்ப் பிள்ளையொன்று வயலுக்குள் இருந்து ஆளளவு உயர்ந்திருந்த நெற்கதிர்களை விலத்திக் கொண்டு யாரம்மா இவர் என்னவாம் என்று கேட்டவாறே வரப்பில் ஏறி வருகின்றாள். அவள், கையில் ஈர்க்கில் கோர்த்தபடி அஞ்சாறு மீன்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன. தெரியவில்லையம்மா, அதுதான் விசாரித்து கொண்டிருக்கிறேன் என்கிறாள். சாமிநாதனும் பயப்பிடாதையுங்கோ, கணக்க யோசிக்க வேண்டாம். நான் பக்கத்து ஊர்தான், அதோ அந்தக் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது யாரோ என்னுடைய உடுப்புகளை எடுத்துக் கொண்டு போட்டினம். சுருக்கமாக தன் கதையை சொல்லிவிட்டு எனக்கு ஒரு உதவி செய்வீங்களோ, நான் கட்டுறதுக்கு ஏதாவது ஒரு துண்டு தரமுடியுமோ என்று கேட்கிறார். ஆனாலும் அவர்களுக்கும் கொஞ்சம் யோசனையாய்த் தானிருக்கு. அவரின் நிலையைப் பார்க்க பாவமாயும் இருக்கு. அப்போது அந்தப் பிள்ளை சித்ராவும் சிறிதும் யோசிக்காமல் இந்தாங்கோ ஐயா இப்ப இந்தத் துண்டைக் கட்டுங்கோ என்று தனது தாவணியை எடுத்துக் குடுத்துவிட்டு, அதோ அங்குதான் எங்கள் வீடு இருக்கிறது அங்கே அப்பாவின் சாரம் இருக்கு வாங்கோ எடுத்துத் தாறன் என்கிறாள். அவரும் அதை வாங்கிக் கொண்டு தனது கழுத்தில் கிடந்த சங்கிலியை எடுத்து அவளிடம் குடுக்க அந்தச் சுட்டிப்பெண்ணும் என்ன ஐயா ஒரு தாவணிக்கு சங்கிலி தாறீங்கள் இது ரோல்ட்கோல்டோ என்று பகிடி விட உடனே தாய் மகேஸ்வரி சும்மா இருடி உனக்கு வாய் ரெம்ப நீளம் என்று அவளை அதட்டி விட்டு பரவாயில்லை, அது உங்களிடமே இருக்கட்டும் என்கிறாள். இப்பொழுது அவரைப்பற்றிய எண்ணம் மாறி நல்ல எண்ணமாக வருகிறது. பின் அவரைப் பார்த்து உங்களை பார்த்தால் பசியோடு இருப்பதுபோல் தெரிகிறது, வீட்டுக்கு வாங்கோ சாப்பிட்டுட்டு போகலாம் என்று சொல்ல மூவரும் கதைத்து கொண்டே வீட்டுக்கு செல்கின்றனர். அவர்களின் பேச்சில் இருந்து மகேஸ்வரியின் கணவன் மாணிக்கம் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. அங்குள்ள சிறிய நகரத்தின் கடை வீதியில் பாதையோரத்தில் சின்ன இடத்தில் இருந்து தொழில் செய்து வந்திருக்கிறார். அவர்களுக்கு முத்து, சித்ரா என்று இரண்டு பிள்ளைகள். உழைப்பதில் தான் குடிப்பதுபோக கொஞ்சம் வீட்டுக்கும் கொடுப்பார்.ஊரில் நிறையக் கடன் வாங்கி வைத்திருந்தார். கடன் குடுத்தவர்கள் மாணிக்கத்தைக் கண்டால் வேறு பக்கமாக ஓடிவிடுவார்கள்....இவர் ஒன்றும் சண்டியனில்லை எங்கே மீண்டும் கடன் கேட்டு விடுவார் என்று.... கொசுவுக்கு பயந்து நாங்கள் வலைக்குள் படுப்பதுபோல்தான் இதுவும். கடந்த வருடம் இவரது நண்பரும் இன்னொருவரும் தவறணையில் சண்டை பிடித்த பொழுது மாணிக்கம் இடையிலே புகுந்து விலக்குப் பிடிக்கப் போய் எதிர்பாராமல் வயித்தில கத்தியால் குத்து வாங்கி இறந்து விட்டார். மாணிக்கத்துக்குப் பயந்து ஓடி ஒழிச்ச கடங்காரர் எல்லாம் இப்ப குளிர் விட்டுப்போய் வீட்டுக்கு வந்து கண்டபடி பேசி சண்டை பிடித்து விட்டு போவார்கள்.......! பார்ப்போம் இனி......! ✍️
  3. உ பார்வை ஒன்றே போதுமே கண்கள் பேசும் காதல் மொழிக்கு வார்த்தைகள் வெறும் சுமையே. இருநாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் அந்த மண்சாலை குண்டும் குழியும் சேறும் சகதியுமாக இருந்தது.இரு மருங்கிலும் வயல்கள். கதிர்கள் அலைபோல் அசைய பச்சைபசேல் என்று குளிர்ச்சியாக இருந்தது. கதிர்களைத் தழுவிவரும் காற்றில் மண்மணம் கமழ்ந்து உடலுக்கு புத்துணர்சியைத் தருகின்றது. அந்தப் பாதையில் ஒரு மனிதர் தனது வீட்டை விட்டு வெளியேறி பல நாட்களாக இலக்கின்றி நடந்து கொண்டே இருக்கின்றார்.நாளும் கிழமையும் கூட அவருக்கு மறந்து விட்டது.தான் வாழ்ந்த நகரத்தையும் தனது சொகுசான வீடு, ஆடம்பரமான கார்கள்,அன்பான மனைவி வளர்ந்துவிட்ட அழகழகான ஆணும் பெண்ணுமாய் இரண்டு பிள்ளைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்தாயிற்று. மேலே அண்ணாந்து பார்க்கையில் சூரியன் மதியத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தது.இவ்வளவு நாளும் பசியும்,களைப்பும் தெரியவில்லை.ஆனால் இப்பொழுது வயிறு பசி பசி என்று ஓலமிடுகின்றது.பசி ஒன்றும் அவருக்கு புதிதல்ல.சிறுவயது மற்றும் இளமைப் பருவங்களில் பசியோடு பங்காளியாக இருந்தவர்தான்.கடந்த பதினைந்து இருபது வருடங்களுக்கும் மேலாக அவரது இடைவிடாத உழைப்பின் பயனாக அது அவரை விட்டு வெகுதூரம் விலகியே இருந்தது.ஆனால் இப்பொழுது அவருக்கு பசித்ததும் கூடவே சிரிப்பும் வந்தது. இப்பொழுதுதான் உடல் உபாதையும் தொடர்ந்து நன்றாகத் தோய்ந்து குளிக்கவேண்டும் என்ற எண்ணமும் வந்தது.எங்காவது வாய்க்காலோ, குளமோ தென்படுகின்றதா என்று சுற்றிவரப் பார்த்துக்கொண்டே நடக்கின்றார்.அவர் எதிர்பார்த்த படியே அங்கு ஒரு குளத்தைக் கண்டதும் ஸ்நானம் செய்வதற்காக தனது கோட்சூட் சேர்ட் பூட்ஸ் எல்லாவற்றையும் கழட்டி ஓரமாக வைத்துவிட்டு அருகில் இருந்த பற்றைக்குள் ஒதுங்கிவிட்டு வந்து குளத்தில் அலுப்புத்தீர நன்றாக முங்கி முங்கி தோய்ந்து விட்டு வெளியே வந்தார். அங்கே பார்த்தால் அவர் கரையில் கழட்டிவைத்த ஆடைகள், பொருட்கள் எதுவும் அங்கில்லை.யாரோ வீதியால் சென்றவர்கள் அவற்றை எடுத்து சென்றிருக்க வேண்டும். அவரது கைபேசி மட்டும் கீழே புல்லுக்குள் கிடந்தது. அவர்கள் அவசரத்தில் எடுக்கும்போது இது நழுவி கீழே விழுந்திருக்க வேண்டும். எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டார். இவ்வளவு நாளும் கோபத்தில் மழுங்கிக் கிடந்த மூளை இப்பொழுதுதான் தன் உணர்வடைந்திருந்தது. தான் இப்பொழுது எங்கிருக்கிறோம் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை.தன்னை ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொண்டதும் மீண்டும் அவருக்கு சிரிப்பு வந்தது. இடுப்பில் ஒரு ஜட்டி, கழுத்தில் டாலருடன் கூடிய தடிமனான தங்கச் சங்கிலி,கையில் தங்கச் செயின் போட்ட கடிகாரம்,விரல்களில் வகைக்கொன்றாக நாலு மோதிரங்கள் இப்படி இருந்தால் யாருக்குத்தான் சிரிப்பு வராது. அப்படியே வயலுக்குள் இறங்கி வரப்புகளில் மேல் வெறுங் கால்களுடன் யாராவது தென்படுகினமா எனப் பார்த்துக் கொண்டு நடந்து போகிறார்......! பார்வை .....(1) 👁️ பார்ப்போம் இனி ......! ✍️
  4. வார இறுதிநாட்களில் அநேகமாக இங்கிலிசு பிரேக் பாஸ்ட் சாப்பிடுவது அடியேனின் வழமை.அதற்காக நீங்கள் நினைக்க கூடாது அடியேன் ஆங்கிலபட்டதாரி என்று ..முட்டை பொறியள்,சொசெஜ்,பேக்கன், பாணை டொஸ்ட் பண்ணி தக்காளி சோசுடன் சாப்பிடுவது வழமை.. முட்டையையும்,சொசெஜ்யையும் தாயார் பண்ணி கோப்பையில் வைத்து விட்டு பேக்கனை போட்டேன் சட்டி நல்லா சூடா இருந்திருக்க வேணும் அத்துடன் சட்டியில் எண்ணையும் இருக்கவில்லை ,புகையும் கறுகிய மணம் வீட்டினுள் பரவ, தொலைகாட்சியில் பக்தி சணலில் பக்திபரவசத்துடன் எதோ பார்த்து கொண்டிருந்த சம்சாரம் "என்னப்பா செய்யிறீங்கள் கறுகி மணக்குது" "பேக்கன் பொரிச்சனான் அது கொஞ்சம் எரிஞ்சு போய்விட்டது ,உமக்கும் பேக்கன் பொரிக்கவா" "ஐயோ கடவுளே இன்றைக்கு நல்லூர் தேர் , ஆகஸ்ட் மாதமென்றால் நல்லூர் கலகலப்பாக இருந்த காலம் அது.நல்லூரானுக்கு கொடியேற்றிவிட்டார்கள் என்றால் யாழ்ப்பாணமே கலகலப்பாகி விடும் .ஊர்களில் உள்ள சைக்கிள்களில் முக்கால்வாசி இரவுபகலாக நல்லூரானின்ட பக்த போடிகளை தாங்கியபடி ஓடிக்கொண்டே இருக்கும்.இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகளும் கிழங்கு அடுக்கிய கணக்கில் சனத்தை ஏற்றிகொண்டு ஓடித்திரியும்.எங்களை போன்ற பெடியள் பக்தி பரவசத்தில் வேஸ்டியுடன் முருகனை காணும் ஆவலுடன் சைக்கிளில் செல்வோம்.கோவிலுக்கு செல்வது என்றால் வீட்டில் இலகுவில் அனுமதி கிடைத்து விடும், அப்பாவும் கவனமாக பாவிக்கும் தனது சைக்கிளையும் தந்து விடுவார். கோவிலுக்கு அருகாமையில் செல்ல செல்ல நடந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிடும் .முருகனின் தரிசனத்திற்கு வெளிக்கிட்ட எங்களுக்கு வீதிகளில் தரிசனம் கிடைக்க தொடங்கிவிடும் .சைக்கிள் தரிப்பிடத்திற்க்கு ஒரு ரூபா கொடுக்க வேண்டும் அது பெரிய காசு...5 ரூபா கொண்டு போவது என்பது பெரிய விடயம். சைக்கிளை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு தரிசனத்திற்கு உள்ளே சென்று விடுவோம்.முருகனின் தரிசனத்தை விட எங்களுக்கு விரும்பிய அழகு தரிசனத்தை தேடி அலைந்து திரிவோம்.அநேகமாக விரக்தியடைந்து வெளியே வருவோம் .காரணம் முருகனும் எங்களை கண்டு கொள்வதில்லை ..நாங்கள் தரிசனம் தேடி சென்ற பெண்களும் கண்டு கொள்வதில்லை.கடலை ஆச்சி மட்டும் எங்களை தனது வருமானத்திற்காக வாங்கோ வாங்கோ என கூவி அழைப்பார் .சைக்கிள் பார்க் காசை தவிர மிகுதி பணத்திற்கு கச்சான் சோளப்பொறியல் மற்றும் குச்சி ஐஸ்கிறீம் வாங்கி சாப்பிட்டபடியே வீடு சென்று விடுவோம். நாங்கள் கடலை வாங்க வெளி வீதி வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது கொஞ்சம் எஙகளைவிட அலங்காரம் அதிகம் போட்ட ஆண்களும் பெண்களும் நடுத்தர வயது த‌ம்பதியினர் வீதிகளில் வலம் வந்து கொண்டிருப்பார்கள் . மச்சான் ஆட்களை தெரியுதே என நண்பர்கள் கேட்பார்கள் தெரியவில்லை மச்சான் என்று சொன்னால் ,என்னடா மச்சான் உவையள் கொழும்பில் வேலை செய்கின்ற கோஸ்டிகள் திருவிழாவுக்கு வந்திருக்கினம். பார்க்க தெரியுது பசையுள்ள கோஸ்டிகள் என்று என‌ சொல்லி விட்டு "நாங்களும் இப்படி வருவோமல்ல" என அடுத்த பில்டப்பை போடுவோம். இந்த வழமை நாங்கள் தொழில் மற்றும் உயர்கல்வி தேடி செல்லும் வரை தொடர்ந்தது. ஒரு நாள்திருவிழா முடிந்து வீடு வந்த பொழுது அம்மா சொன்னார் "தம்பி உனக்கு தபால் வந்திருக்கு எதோ வேலைக்கு நேர்முக பரீட்சைக்கு கூப்பிடிருக்கிறாங்கள் போல தெரியுது, நீ ஒவ்வோரு நாளும் போய் கும்பிட்ட அந்த நல்லூரான் கைவிட மாட்டான்" "ஒம் அம்மா" அம்மாவுக்கு தெரியுமோ நாங்கள் என்னத்துக்கு முருகனிட்ட போனோம் என்று, இல்லை நான் தான் சொல்ல முடியுமோ விசயத்தை... இரண்டு நாளில் கொழும்புக்கு செல்ல வேண்டியிருந்தது எனது மாமா கொழும்பில் வாழ்ந்த காரணத்தால் பெரிய பிரச்சனைகள் இருக்கவில்லை .இரவு நேர (மெயில்) தபால் வண்டியில் செல்வதற்கு நண்பர்கள் கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு சைக்கிளில் அழைத்து சென்றார்கள். நல்லூரானின் தேர் திருவிழா முடிந்த கையுடன் கொழும்புக்கு பயணமானேன்.கோண்டாவில் புயையிரத நிலையத்தில் பிலாப்பழசீமேந்து பைகளுடனும் முருங்கைகாய் கட்டுகளுடனும் சனம் முண்டியடித்து கொண்டு நின்றது .அப்ப தான் புரிந்தது கொழும்பில் பணிபுரியும் இளைஞர்கள் ,குடுமபத்தினர் நல்லூரானை தரிசித்து விட்டு மீண்டும் கொழும்புக்கு செல்வதறகு நிற்கின்ரனர் என்பது.அதை பார்த்தவுடன் எனக்கு வேலை கிடைத்தால் நானும் இப்படி வந்து போகலாம என்று நம்ம மனசு கற்பனையில் மிதக்க தொடங்கி விட்டது பல கற்பனைகளில் அதுவும் கடந்து போனது கொழும்பில் முருகன் எனக்கு வேலை தரவில்லை ..ஆனால் ஒவ்வொரு வருட உறசவத்திற்க்கும் தன‌து பக்தர்களை தாங்கி வரும் வேலைய யாழ்தேவிக்கு கொடுத்துகொண்டிருந்தான். நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மக்கள் வெளியேற யாழ்தேவி,மெயில் வண்டி போகுவரத்து துண்டிக்கப்பட கொழும்பு பக்தர்கள் வருவது தடைப்பட, யாழ் பக்தர்களை எம்பெருமான் அலங்கார கந்தன் வெளிக்கிடுங்கோடா வெளிநாட்டுக்கு என ஆணையிட அந்த ஆணையை நிறைவேற்ற யாழ்தேவியை பிடித்து கொழும்பு வந்து சேர்ந்தவர்களில் நானும் ஒருத்தன், வெளிநாடு செல்வதற்காக கொழும்பில் இருக்கும் பொழுது கதிர்காமம் போகும் வாய்ப்பு ஏற்பட்டது.பூசாரி பூட்டிய திரைக்கு பின்னால் வாயையும் மூக்கையும் கட்டி பூஜை செய்து விட்டு எங்களுக்கு தீபத்தை தொட்டு வழிபட நீட்டிக்கொண்டு வந்தார். "என்ன மச்சான் ஐயர் பூணுலை மறைக்க , சேர்ட்டும் அணிந்து கொண்டு வாரார் " "இவர் ஐயர் இல்லை இவரை கபராலை என்று சொல்லுறவையள், பரம்பரை பரம்பரையாக அவையள் இப்படித்தான் செய்யிறவையள் " " கேள்வி பட்டனான் இப்ப தான் பார்க்கிறேன்" " ஏன் செல்வசந்நிதியிலும் இப்படித்தானே" " அங்க நான் போகவில்லை" "சனம் சன்னதியிலிருந்து இங்க நடந்து வாரவர்கள்" "முருகா வெளிநாட்டுக்கு போக உதவி செய் என்று தமிழிலும் ,தெரிந்த சிங்களத்திலயும் விண்ணப்பத்தை போட்டு விட்டு வந்தேன்" முருகா நீ தமிழனா சிங்களவனா என்ற கேள்வியை எழுப்பியவாறு பஸில் கொழும்பு திரும்பிகொண்டிருந்தோம் . "டேய் வெளிநாட்டுக்கு போகவேணும் என்று விண்ணப்பம் போடுறாய் எந்த நாட்டுக்கு என்று கேட்டியா? ஒழுங்கா அப்பிளிகேஷன் போடத் தெரியாது இதில நான் சிங்களவனா தமிழனா என்ற கேள்வி..பே...." தெகிவள பயின்டா.... சத்தம் கேட்டு திடுகெட்டு எழுந்து பஸிலிருந்து இறங்கினேன். வெளிநாட்டிலயே வேலை செய்யும் வாய்ப்புக்கள் கிடைத்தது. தமிழர்களில் பலர் வெளிநாடுகளில் தங்கள் அரைவாசிகாலத்தை கழிகின்றனர் அந்த வகையில் எனக்கும் அந்த சந்தர்ப்பம் கிடைத்து. சிங்கள முருகன் கொடுத்ததோ தமிழ் முருகன் கொடுத்தானோ என்ற பிரச்சனை இல்லை காரணம் நமக்கு இப்ப‌ அவுஸ் முருகன் இருக்கிறான் . நல்லூரானின்ட தேர் காலத்தில் மச்சம் சாப்பிட்டு விட்டேன் என்ற பயத்தில் அடுத்த நாள் காலையில் குளித்து வெளிக்கிட்டு நம்ம சிட்னி முருகனிட்ட போனேன் . கோவிலில் கந்தர் நின்றார்.மூக்கு வாய்க்கு ஒழுங்காக கச்சை கட்டியிருக்கினமோ என்று பார்த்து ஆட்களை எண்ணி உள்ளே அனுப்பி கொண்டிருந்தார். என்னை கண்டவுடன். " இப்ப நல்லூரானிட்ட நின்று இருக்க வேணும் இந்த கொரானா கோதாரி எல்லாத்தையும் கெடுத்து விட்டது" "அதுதான் இன்றைக்கு நானும் கோவிலுக்கு வந்தனான்" " என்ன நீ மச்சம் சாப்பிட்டு போட்டியாம் நல்லுரானின்ட திருவிழா காலத்தில்" முருகன் மறந்தாலும் இந்த சுற்றியிருக்கிற சனம் விடாது போட்டு கொடுத்துவிடுவாங்கள் முருகனிட்ட என்று புறுபுறுத்த வாறு "மறந்து போய் சாப்பிட்டு விட்டேன் ,எஸ்கியூஸ் மீ மூருகா" என்றேன்...... கண்ணை திறந்தேன் ஐயர் வாயை கட்டியிருநந்தார் மாஸ்க் என்ற போர்வையில் தீபத்தை நீட்டினார் தொட்டு கும்பிட்டுவிட்டு முருகா தொண்டைமானாறு சன்னிதியிலிருந்து சிட்னி வரை மெளன‌மாக இருந்து உன்னுள் என்னை தேடு என்று சொல்லுறாய் போல.....என்று நானும் மெளனமாக வீடு திரும்பினேன்.
  5. ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப் போகுமா ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப் போகுமா ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
  6. புத்தனின் நகைச்சுவை ஆரம்பம் முதல் முடிவு வரை நல்ல குசும்பான கதை😀
  7. கொழும்புகாரர் வந்த மாதிரி அவுசிலிருந்து நீங்களும் போய் படம் காட்டேலாமல் போட்டுதென்ற கவலை தெரியுது. பரவாயில்லை முருகன் எங்கே போயிடப் போறார். “புத்தா சீ யூ நெக்ஸ் இயர்” என்று சொன்னவர் கேட்டதோ?
  8. புத்தனின் சிறுகதைகள் வாசித்து நீண்ட நாட்களாகி விட்டது. பதிந்ததில் மகிழ்ச்சி.
  9. பழைய நினைவுகளை கிளறிய, நல்ல கதை புத்தன். 👍🏽
  10. புத்தனுக்கு என்று தனிப்பட்ட ஒரு எழுத்து நடை எப்போதும் உண்டு...! அதே நேரம் சிட்னி முருகனுடன் ஒரு தனகலும் கட்டாயம் இருக்கும்! கன காலம் முருகனைக் காணவில்லை..! புத்தன் நினைவு படுத்தலுக்கு நன்றி..! சிட்னி முருகனுக்குக் கப்பறாளை பூசை செய்யும் உவமானத்தை மிகவும் ரசித்தேன்! முருகன் நிச்சயம் சிங்களவனல்ல! வசதியாக வாழத் தெரிந்த ஒரு மறத் தமிழன்...!
  11. உங்களின் அருமையான கதை அந்தநாள் ஞாபகத்தை எனக்குக் கொண்டுவந்தது புத்தரே, எனது இல்லத்தரசி அன்று என் காதலியாக இருந்ததால் உங்களைப்போல் நல்லூரில் பெண்களுக்குக் கடலைபோடும் எண்ணத்திற்குக்கூட என் இதயம் இடம்தரவில்லையே.😩
  12. மனத்தோட்டம் போதுமென்று......! 😍
  13. எப்போதும் போல சிட்னி முருகனோட தான்.ஒரே முருகனை ரொய் ஆக்காமல் வேற ஏதாவது ஒன்றை எடுத்து வாங்கோ .✍😃👋
  14. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி
  15. கதையில் நிறைய ஊர் வாசனை வருகின்றது…!கதை சொல்லி சிம்பிளாகவும், அதே நேரம் கருப்பொருளில் கவனமாகவும் கதையை நகர்த்தும் விதம் அழகு..! தொடருங்கள்…!
  16. எதையும் தாங்குவேன் அன்புக்காக......! 👍
  17. தோழர்களை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி..💐
  18. புத்தன், உங்கள் இந்த சிறுகதையை யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தவா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.