Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    8910
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    33600
    Posts
  3. வாலி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    5064
    Posts
  4. Paanch

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8133
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/10/22 in all areas

  1. தகவல் தொழிற்நுட்பம் அதிவேகத்தில் முன்னேறியவுடன் பல விடயங்களை உடனுக்குடன் நேரலையாக கையடக்க கருவிகளில் பார்த்து அறியக்கூடியதாக உள்ளது. முன்பெல்லாம் எமக்கு ஈழத்து கலைஞர்கள் யாரென்றே தெரியாது. இலங்கை வானொலியில், அல்லது தமிழ் நாட்டில் வரும் ஊடக துணுக்குகளில் மட்டுமே அறியக்கூடியதாக இருந்த ஈழத்து கலைஞர்களின் முகம், தற்பொழுது பலரும் பார்த்து அறியக்கூடியதாக உள்ளது. அவ்வகையில் முன்பு காட்பெர்டில்(Hot Bird) வந்துகொண்டிருந்த "படலைக்கு படலை" காணொளியை சில வருடங்களுக்கு முன் பார்த்து வந்தேன். அத்தொடரில் கவர்ந்த கலைஞர்களான 'சிறீதரன் மாணிக்கம்' மற்றும் 'பாஸ்கி' ஆகியோரின் இயல்பான ஈழத்து தமிழில் நகைச்சுவை ரொம்ப பிடிக்கும். அந்த கலைஞரின் நேர்முக பேட்டியை இன்று ரசித்து பார்த்தேன். ஒவ்வொரு கலைஞரின் பின்புலத்திலும் சோகம் உண்டு போலும்..! வளர்க வளமுடன்..🌹
  2. உனக்குமட்டுமா?உலகம். ********************** எமக்கு கிடைத்தது ஒரு பூமி-இங்கு பிறப்போர் அனைவற்க்கும் சமநீதி பிறப்பும்,இறப்பும் எம்மிடமில்லை-நீ பெரியவன் என்பது யாருக்குத் தெரியும். உலகில் பிறந்தது எத்தனைகோடி-எனி உலகுக்கு வருவது எத்தனை கோடி உலகு எனக்கு கீழென நினைத்தவன் ஒருவன் கூட உயிரோடு இல்லை தெரிந்தும்,தெரிந்தும் செய்யும் பிழைகளை தேசம் ஒருபோதும் வாழ்த்துவதில்லை. வாழும் போது பணக்காரன்,ஏழை வாழ்வு முடிவில் பெட்டிக்குள் சமமே காலையும் மாலையும் சூரிய,சந்திரன் காணாமல் போனால் உன்னிலை என்ன வாழும் வயசோ நூறாண்டு காலம் வையகம் உனதென போர்கள் செய்கிறாய். காலைச் சூரியன் உதிக்காவிட்டால் கறண்டால் வெளிச்சம் கொடுக்கவா முடியும். அன்பும் பாசமும் ஆளட்டும் உலகை அனைத்து உயிர்களும் ஒருதாய் பிள்ளை நெஞ்சக் கறள்களை நீக்கியெறிவோம் நின்மதியான நல் வாழ்வினைப் பெறுவோம். -பசுவூர்க்கோபி.
  3. அருமையான கவிதை கோபி ஆனால் யார் கேட்கிறார்கள்.......! 👍
  4. சில நேரங்களில்: சில விடையங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் போவதும் நன்றே...
  5. இலங்கை வங்குரோத்தானபின் இலங்கைக்கு இராணுவ, அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுப்பதற்கு இராணுவம் இலங்கையிலிருப்பது அவர்களுக்கு மேலதிக சாதகம் அத்னால் தமிழ்சிறியின் செய்தி உண்மையாவதற்கு சந்தர்ப்ப சாத்தியம் அதிகம் அதனை முன்னரே வெளியிட்டமையால் ஜூலியன் அசாஞ் மாதிரி நிலமை தமிழ்சிறிக்கு வராமலிருக்க வேண்டும்.
  6. அப்பிடியேண்டால் எங்கடை தமிழ்சிறி ஒரு இராணுவ/அரசியல் அஷ்டவதானி
  7. இவிங்க சொல்றதை இப்படி இல்லை இல்லை என்று குத்தி முறிவதை பார்த்தால் உண்மையிலே தரையிறங்கும் ஐடியா உள்ளது போல் உள்ளது .😃
  8. அன்பும் பாசமும் ஆளட்டும் உலகை அனைத்து உயிர்களும் ஒருதாய் பிள்ளை இப்படி மனிதம் வாழ்ந்தால் என் இந்த தொல்லை. அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
  9. கத்தரி + குடைமிளகாய் சேர்ந்த வித்தியாசமான கறி ......! 😁
  10. கொழும்பிம் புறந‌கர் பகுதியான ராகமையில் மிகவும் அமைதியான மனதிற்கு ரம்மியாமான சூழலில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. இது ஒரு பிரபலமான பஸிலிக்கா (பேராலயம்). ஆழகிய சிற்ப வேலைப்பாடுகளை கொண்டது, வீட்டுக்கு அருகாமையில் என்பதால் அடிக்கடி அந்த தேவாலயத்திற்கு வருவேன். தனிமையில் சில மணித்தியாலங்கள் செலவிடுவேன். பல ஏக்கர் ரப்பர் தோட்டங்களுக்கு மத்தியில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. இன்றுமப்படியே ஒரு அழகிய மாலை பொழுது லெந்து காலப்குதியின் 4வது ஞாயிற்றுக்கிழமை. தேவாலயத்தில் பாடல்கள் முடிந்து 1ம், 2ம் வாசகங்கள் வாசிக்கப்பட்ட பின் பாதர் தனது பிரசங்கத்ததை துவங்கினார். ஒருவருக்கு இரண்டு குமார்கள் இருந்தார்கள். இதில் இளையவன் தனக்குறிய ஆஸ்தியின் பாகத்தை பிரித்து எடுத்து கொண்டு தூரதேசம் சென்று பரஸ்திரியின் சகவாசத்தால் எல்லாவற்றையும் இழந்து போனான். அபொழுது அந்நாட்டில் கடும் பஞ்சம் உண்டாகியது அவன் அந்நாட்டில் உள்ள ஒரு பிரசையிடம் பன்றி மேய்க்கும் வேலை கிடைத்து அதை செய்துகொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவனால் பசி தாங்க முடியவில்லை. பசியில், பன்றிகள் திங்கும் தவிட்டால் தன் பசியை தீர்க்க் முயன்றான். முடியவில்லை. மனம் திருந்தி, நான் என் தகப்பனிடம் செல்வேன் அவரிடம் ஒரு வேலைக்காரனாகவாவது இருப்பேன் என நினத்துகொண்டு உடனடியாக தகப்பனிம் திரும்பி செல்கின்றான். தூரத்தில் இவன் வரும்போது தகப்பன் இவனை கண்டு ஓடோடி வந்து கட்டித்தழுவி என் மகனே வருமையா என அழைத்து சென்று குளிக்க வைத்து நல்ல உடை உடுத்த்தி ஆடொன்றை அடித்து விருந்து வைத்த்து புசித்து களிப்புடன் கொண்டாடி மகிழ்கின்ரார்கள். அப்பொழுது வெயிலில் வேலை செய்து நாள் பூராகஷ்டப்பட்டு களைத்துபோய் வரும் மூத்த மகன் தூரத்தில் தன் வீட்டில் நடக்கும் களியாட்ட சத்தத்தினை கேட்கின்றான். யாரது, என்ன நடக்கின்றது என ஒரு வேலையாளிடம் வினவுகின்றான். அவன் இதோ உம் தம்பி நீண்ட நாட்களுக்கு பிறகு திரும்பி வந்துள்ளார் அவருக்காக உன் தகப்பன் இந்த விருந்தை ஏற்பாடு செய்துள்ளார் என்றார். கோபமுற்ற மூத்த மகன் வெளியில் இருந்து தந்தையை கூப்பிடுகின்றான். என்ன காரியம் செய்தீர், விலைமகளிருடன் சொத்தை அழித்தொழித்த இந்த உம்முடைய இளைய மகனுக்காவா இந்த ஆட்டம் ஆடுகின்ரீர். இவ்வளவு காலம் உமக்கு கீழ் அடிமைபோல் வேலை செய்த எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியை நண்பர்களுடன் சந்தோசமா அடித்து சமைத்து சாப்பிட தந்துள்ளீர்களா? நான் இன்றிலிருந்து இந்த வீட்டிட்குள் வரமாட்டேன் என்கின்றான். கதை கேட்ட எனக்கும் ஆத்திராமக வந்தது. சீ என்ன தகப்பன் இவன் இவ்வளவு அனியாயமாக தன் மூத்த மகனை நடத்துகின்றாரே. இது சரியால்ல. தொடர்ந்து கேட்க மனமில்லை படியில் இருந்து எழுந்து வீட்டிட்கு நடக்க தொடங்கினேன். ******************************************************************************************************* தெற்கு லண்டன். 2009 பெப்ரவரி மாத்த்தில் ஒரு நாள். வேலை முடிந்து வரும்போது இரவு 7 மணி இருக்கும் குளிரில் வந்தபடியால் களைப்பில் கட்டிலில் சிறிது நேரம் சாய்ந்திருந்தேன். கதவு தட்டப்பட்டது. கதவை திறந்தேன் பக்கத்து அறை நண்பன் சிவாவுடன் ஒருவர் இருந்தார். ஒரு 40 வயது மதிக்கலாம் கட்டை தடித்த உருவம், மானிறம் குளித்து பல நாட்கள் ஆன ஒரு தோற்றம். பற்கள் காவி பிடித்து இருந்தது. கண்கள் சிவந்து இருந்தது. வலிமைமிக்க உடலமைபு ஒர் குளப்படிகாரர் போலவே தெரிந்தார். சிவா அவரை என்னிடம் அறிமுகப்படடுத்தினார். இலங்கையில் கிழக்கு மாகாணம் என்றார். என்னிடம் நன்றாக கதைத்தார். கொழும்பில் தனக்கு பல சிங்கள நண்பர்கள் இருப்பதாக கூறினார். அன்றிலிருந்து அவர் எங்கள் நண்பரானார். நன்றாக கதைப்பார். அதிகம் குடிப்பார் நன்கு ருசியாக‌ சமைப்பார். ஓய்வு நேரங்களில் தமிழ்படங்கள் பார்ப்போம். 5 நாள் வேலைக்கு போனான் அஅடுத்துவரும் 7 நாட்களுக்கு வேலைக்கு போக மாட்டார். குடித்து விட்டு வீட்டில் இருப்பார். இந்தியாவில் இருக்கும் தனது மனைவியுடன் அடிக்கடி போனில் கதைப்பார். அவருக்கு ஒரு நிரந்தரமான தொழில், வீடு இல்லாதபடியால் அவரால் மனைவியை தன்னிடம் அழைத்துக்கொள்ள முடியவில்லை. பல சந்தர்ப்பங்களில் தனிமையில் கதைத்த்து கொண்டிருப்பார். ஏதோ ஒன்றை குறித்து கவலைப்படுபவர் போல இருந்தார். ஒருநாள் அவரின் அறை கதவு மூடியிருந்தது. யாரோ விசும்பி அழும் சத்தம் கேட்டது. பின்னர் யாருடனோ விவாதிப்பது போல் சத்தம் கேட்டது. ஒன்றும் புரியவில்லை. அவரது அறையக் கடந்து என்னுடய அறைக்கு சென்றேன். பின்பொரு நாள் கழிவறைக்கு நான் சென்றபோதும் அது உள்ளாள் மூடப்பட்டிருந்தது. யாரொ விசும்பியழும் சத்தம் கேட்டது. நான் "இதை ஏன் செய்தேனோ தெரியவில்லை ...... தெரியவில்லை" என்னை மன்னியுங்கள்" என யாரோ கூறுவது தெளிவாக கேட்டது. ஒருநாள் நாட்டு அரசியலை பற்றி பேச்சு திரும்பியது. திடீரென அவருக்கு கோபம் வந்தது. இந்த.....மக்களால் தானே நான் இதை செய்யவேண்டி வந்தது. இப்பொழுது நாட்டுக்கும் போக முடியாதுள்ளது என்றார். மேசையில் ஓங்கி குத்தினார். அப்பொழுது நான் அறிந்து கொண்டேன் இவர் பலசாலியான மூர்க்கதனம் மிக்க‌ ஒரு மனிதன் என. காலப்போக்கில் ஒவ்வொருவரும் பிரிந்து போய் விட்டோம். 2018 மார்ச் மாதம் கொழும்பு. அது ஒரு பெரிய வியாழக்கிழமை நாள். கணனி முன் உட்கர்ந்து இணையத்தை தட்டினேன். பிரபலமான அந்த தமிழ் இணயத்தளத்தை பார்வையிட்டவாறு இருந்த என் கண்ணில் அந்த மரண அறிவித்தல் கண்ணில்பட்டது. எங்கேயோ கண்ட முகம் சிறிது மாறி இருந்தது. ஆம் அதே முகம் அவரேதன் எனக்கு அடுத்த அறையில் இருந்தவர்தான். எனக்கு கொஞ்சம் சோகமாகவும் கவலையாகவும் இருந்தது. என்னுடன் அன்பாக‌ ஒன்றாக இருந்து சமைத்து சாப்பிட்டவர் அல்லவா இவர். கடைசியில் இத்தனை காலத்திற்கு பின்னர் இப்படி மரண அறிவித்தலில் இவரை காண்பேன் என நினைக்கவில்லை. என்னவேன்று இறந்தார் என தெரியவில்லை. சரி இவரது பெயரை கூகுல் செய்து பார்ப்போம் என கொபி பெஸ்ட் செய்து தேடினேர். அது அனேமேதய தமிழ் தளம் திடிரேன பொப்அப் செய்து ஸ்க்ரீனில் வந்தது. வீட்டினுள் அன்று நான் மட்டு தனியே இருந்தேன். ஒரே நிசப்தம் ஒரு மெல்லிய காற்று என்னை ஸ்பரித்து சென்றது. தலையங்கத்தை வாசித்தேன் லண்டனின் வாழ்ந்து வந்த ஒரு கொடூரன் மரணம். அதில் இவருடைய படம் போடப்பட்டு இருந்தது. இவர் செய்த பல குற்றச்செயல்கள் பட்டியல் இடப்பட்டிருந்தது. அதில் ஒன்று இவர் ஒரு கர்ப்பிணி பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது. எனக்கு உடலெல்லாம் ஆடத்தொட‌ங்கிவிட்டது அட இவருடனா இறைச்சிகறி வைத்து சாப்பிட்டோம் / ஒன்றாக படம் பார்த்தோமே / இரத்தக்கறை படிந்த கைகளல்லவா.. உடலெல்லாம் பற்றி எறிவது போல் இருந்தது. இப்படியும் குரூரர்கள் இருக்கின்ரார்களா என மனம் பதைபதைத்தது. வீட்டை உடனடியாக மூடி விட்டு தேவாலயத்தை நோக்கி ஓடினேன். ஆலயத்தில் நிறைய கூட்டம் இருந்தது. பாதர் அன்று நீண்டதொரு பந்தியை வாசித்த்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் யூதாசை பற்றி பின்வறுமாறு வாசித்தார்: அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியத்திடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள். அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். பூசை முடிந்து எல்லோரும் சென்றபின் அதே மெல்லிய காற்று என்னை ஸ்பரித்தது. பாதர் வெளியே வந்து நின்றார். பாதரிடம் கேட்டேன் யூதாஸ் நல்லவானா? கெட்டவனா? நிச்சயமாக அவன் கெட்டவன். காட்டிகொடுத்த‌வன் அல்லவாவா? ஆம் அவன் தன் பாவங்களுக்காக மனஸ்தாபபட்டனும் கூட‌ என்றேன். நிச்சயமாக அவன் பாவி நரகத்தில் இருப்பான் என்றார். அவர் சொல்லி முடிக்க‌வும் அந்த பேரலயத்தின் கடிகாராம் டாங்.. டாங் என ஆறு முறை மணியடித்தது பாதர் என்னை கடந்து சென்று விட்டார். மழைதூர ஆரம்பிக்கின்றது. மெதுவாக வீட்டை நோக்கி நடக்கின்றேன். இப்பொழுது அந்த மெல்லிய ஸ்பரிசம் இல்லை. காற்று வேகமாக அடித்தது. ம‌ரங்கள் விர்ர்...விர்ர்.. என வேகமாக அசைந்தன‌ அதன் மத்தியில் யாரோ விசிந்து..விசிந்து அழும் அழுகை சத்தம் என் காதில் ரீங்காரமிட்டபடி இருந்தது. கொழும்பான் அனுபவம் - 2
  11. நல்ல பாடத்தைத் தரும் சிறப்பான கதை......பாராட்டுக்கள் கொழும்பான்......! 👍 இந்தக் கதைக்குமுன் இருக்கும் இரண்டு கதைகளையும் கொஞ்சம் பார்க்கவேணும்.......! சிறிது முன்ன பின்ன இருக்கலாம் விடயம்தான் முக்கியம்.....! 1 - ஒரு மூதாட்டியின் பணப் பையில் இருந்து ஒரு காசு தவறி விழுந்து காணாமல் போய் விடுகின்றது.....அவள் எல்லா இடத்திலும் தரையைப் பெருக்கித் தேடுகிறாள், கிடைக்கவில்லை. பின் விளக்கைக் கொண்டு கட்டில், அலுமாரிக்கு கீழ் தேடி அதை கண்டு எடுத்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்து விடுகிறாள்......! 2 - ஒரு இடையனின் மந்தையில் இருந்து ஒரு ஆடு மேயும்போது வழிதவறி காட்டுக்குள் போய் விட்டது. அந்த இடையனும் மற்ற ஆடுகளை விட்டு விட்டு இந்த ஒரு ஆட்டைத் தேடிக் கொண்டு காட்டுக்குள் போகிறான்.நெடுந்தூரம் சென்றும் காணவில்லை. உடனே அவன் குரல் கொடுத்துக் கொண்டே அதைத் தேடுகின்றான். சிறிது நேரத்தில் தன் எஜமானனின் குரல் அந்த வழிதவறிய ஆட்டுக்குக் கேட்க அதுவும் குரல் வந்த திசைநோக்கி குரல் கொடுக்கின்றது. இப்படியே குரலின்மூலம் ஆடும் அவனும் ஒன்று சேர்ந்து சந்தோசமாக வீடு திரும்புகின்றனர்......! 3 - அடுத்ததாக நீங்கள் சொன்ன கதை......! கவனிக்கப்பட வேண்டியவை : காசு குரல் கொடுக்காது, தானாக திரும்பியும் வராது....அப்படியானவர்களை இறைவன் தானே சென்று தேடிபி பிடித்து அருளுகின்றான்......! வழித்தவறும் ஆடுகள் பட்டிக்கு திரும்புவது சிரமம். அப்படியானவர்களை இறைவனும் அழைக்கிறான், அவர்களும் தங்கள் முயற்சியின் மூலமாகவும் இறைவனை வந்தடைகிறார்கள்.....! மனிதனுக்கு இது அவசியமில்லை..... தப்பான வழியில் சென்றவன் தானாகத்தான் திருந்தி வரவேண்டும். அப்படி வருபவனை இறைவன் மனமுவந்து இரு கரம் நீட்டி ஏற்றுக் கொள்கின்றான்.......! யூதாஸைப் பொறுத்தவரை முதல் இரவு விருந்தின் போது நீ என்னைக் காட்டிக் கொடுப்பாய் என்று அவனிடம் ஏசுநாதர் சொல்கிறார், அப்படியே மற்றுமொரு சிஷ்யரிடம் "கோழி கூவும் முன் மும்முறை என்னை மறுதலிப்பாய்" என்றும் சொல்லியிருக்கிறார்..... அவர் விரும்பியிருந்தால் அங்கிருந்து தப்பியிருக்கலாம். அதுமட்டுமன்றி தனக்கு கிடைக்கப்போகும் தண்டனையின் கொடூரமும் அவருக்கு தெரிந்திருக்கின்றது.....அதனால்தான் அவர் தேவனிடமும் எனக்கு இது தேவைதானா என்னை நான் இந்த தண்டனைக்கு ஒப்பு குடுக்க வேண்டுமா என்றும் கேட்டு பிரார்த்தனை செய்கின்றார்.....அப்பவும் அவர் தப்பி சென்றிருக்க முடியும்.....ஆனால் விதியின் வசம் தன்னை ஒப்புக்கொடுத்து தண்டனையை தானே ஏற்றுக்கொள்கின்றார்.........அதனால் யூதாஸ் கெட்டவரல்ல, ஏனைய அப்போஸ்தலர்களை விட யுதாசின் மரணம்தான் மிகவும் பரிதாபகரமானது.......! 💐 நன்றி கொழும்பான்.இது நிறைய நினைவுகளை மீட்டி விட்டது.......! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.