Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    88007
    Posts
  2. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    12
    Points
    15791
    Posts
  3. putthan

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    14676
    Posts
  4. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    9308
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/16/22 in all areas

  1. ஆண்டு 1955. Zavalichi எனும் உக்ரைனில் இருக்கும் ஒரு சிறு கிராமம். இரவு 11 மணி. வெளியில் இலேசாக பனி பெய்து கொண்டு இருந்தது. குளிர்காலத்தின் ஆரம்பகாலம் இது. நீண்ட தூரத்தில் இருக்கும் மாதா கோயிலின் மணி அடித்து 11 என்பதை காட்டியது. இரவை இருள் மூடி இருந்தது. கிராமத்தில் உள்ள எல்லாரும் எப்பவோ உறங்க போயிருந்தனர். புலோவிச் தன் நரைச்ச தாடியினை மெதுவாக தடவி விட்டுக் கொண்டு தன் கபினில் மாட்டியிருந்த அட்டவணையை மீண்டும் ஒருமுறை பார்த்து இனி அடுத்த 6 மணித்தியாலங்களுக்கு எந்த ரயிலும் வரப்போவதில்லை என்பதை நிச்சயத்துக் கொண்டார். வீட்டுக்கு சென்று மனைவி சினிக்கா சமைத்து வைத்து இருக்கும் சூப்பை குடித்து விட்டு 5 மணித்தியாலங்கள் உறங்கலாம் என நினைத்து மதியம் பாதி குடித்து மிச்சம் வைத்து இருந்த சுருட்டின் முனையில் மீண்டும் நெருப்பை பற்ற வைத்தார். புலோவிச் இந்த கிராமத்தில் இருக்கும் சிறு ரயில் நிலையத்தின் சிக்னலுக்கு பொறுப்பானவர். இரண்டாம் உலக யுத்த காலத்தில் இராணுவத்தில் இருந்து பணியாற்றி விட்டு ஒய்வு பெற்று விட்டு இப்ப இதற்கு பொறுப்பாக இருக்கின்றார். அவரது 4 மகன்களும் இராணுவத்தில் பணியாற்றுகின்றனர். மிகவும் இயல்பான வாழ்க்கை. ஒவ்வொரு கணத்தையும் ரசித்து வாழும் மனிதர் அவர். வீட்டுக்கு செல்வதற்கு நடக்க தொடங்குகின்றார். ரயில் நிலையத்தில் இருந்து நான்கு அடி தூரம் மட்டுமே நடந்து இருப்பார். தூரத்தில் ஒரு ரயில் வரும் ஓசை கேட்கின்றது. இந்த நேரத்தில் எந்த ஒரு ரயிலும் வருவதற்கு வாய்ப்பே இல்லையே என்று தன் கண்களை சுருக்கிக் கொண்டு மீண்டும் பார்க்கின்றார். அந்த ரயில் மெதுவாக ஆனால் சீராக வந்து கொண்டு இருந்தது. அதன் சக்கரங்கள் ரயில் தண்டவாளத்தில் பட்டும் படமாலும் ஒரு தாள கதியில் தவழ்ந்து கொண்டு வருவது போல இருந்தது. தான் சிக்னல் கொடுக்கவில்லையே... எப்படி இந்த ரயில் சிக்னலையும் அலட்சியப்படுத்திக் கொண்டு இப்படி வருகின்றது என அங்கலாய்ப்புடன் அதனையே உற்றுப் பார்க்கின்றார். ரயில் பழமையான ரயில். நீராவி இயந்திரம் மூலம் இயக்கப்படும் ரயில். அதன் எஞ்சின் ஏதோ ஒரு விருந்தில் சிறப்பு நடனம் ஆட வந்திருக்கும் மங்கையின் புன் முறுவல போன்று இருந்தது. அதன் அருகே மெல்லிய புகை மூட்டம் பனியின் சாரல்களுக்கு மத்தியிலும் தெளிவாக தெரிந்தது. புலோவிச் தன் 10 வருட சமிக்ஞை பொறுப்பாளர் காலத்தில் ஒரு போதுமே இந்த ரயிலை கண்டதில்லை. இப்படி பழைய ரயிலை ரஷ்சியஅரசு பயன்படுத்துவதும் இல்லை. அவர் தன் கண்களை மேலும் சுருக்கி ரயிலையே பார்த்துக் கொண்டு நிற்கின்றார். அது அவர் நிற்கும் இடத்தினை கடக்க தொடங்குகின்றது. அப்பொழுதுதான் அதை கவனிக்கின்றார். அதன் எஞ்சினில் ரயிலை செலுத்துவதற்கு எவரும் இல்லை. எஞ்சின் கண்ணாடியில் எந்த முகத்தையும் காணவில்லை. புலோவிச்சின் தோலில் இருந்து அவரது வெண்ணிற முடிகள் மெல்ல கிளர்ந்து எழுகின்றன. ரயிலின் பெட்டிகளிலும் எவரும் இல்லை போன்றே தோன்றுகின்றது. அதன் அனைத்து சிவப்பு நிற யன்னல்களும் மூடப்பட்டு இருந்தன. ஒவ்வொரு பெட்டியின் நுழைவாயில்களும் கறுப்பு நிற கதவுகளால் சாத்தப்பட்டு இருந்தன. புகைபோக்கியுனூடாக திரவ நுரை வெளியாகிக் கொண்டு இருந்தது. இறந்த காலம் ஒன்றை தனக்குள் புதைத்துக் கொண்டு அந்த ரயில் செல்வதாக புலோவிச்சுக்கு தோன்றியது ரயில் கடக்கும் போது, மாதா கோயிலின் மெழகுவர்த்தி வாசனையை ஒத்த வாசனை காற்றில் பரப்பிக் கொண்டு கடந்து கொண்டிருந்தது. வெண்ணிற அன்னம் ஒன்று தன் சிறகுகளை படபடவென அடிக்கும் ஓசையுடன் ரயில் அவரை விட்டு கடந்து செல்கின்றது. அதன் கடைசிப் பெட்டியும் கடந்து சென்ற பின் தண்டவாளத்தில் இருந்து நெடிய தூரம் சென்று மறையும் வரைக்கும் அவர் பார்த்துக் கொண்டு நின்றார். அடுத்த நாள் காலையில் தொலைபேசி மூலம் ஏனைய ரயில் நிலையங்களில் விசாரிக்கும் போது, அப்படி ஒரு ரயில் தம் நிலையங்களை கடந்து செல்லவே இல்லை என அறிந்தவுடன் அவர் செய்த முதல் வேலை, வேலையை விட்டு விலகியதே. (ரயில் இன்னும் பயணம் செய்யும்) பின் குறிப்பு: இக் கதை 'உண்மையாக நடந்தது' என்று சொல்லப்படுகின்ற ஒரு மர்மமான கதையை / செய்தியை ஒட்டி (unresolved mystery), அதைத் தழுவி புனையப்படுகின்றது.... இந்தக் கதையை கண்டிப்பாக உங்களில் சிலர் அறிந்து இருப்பீர்கள். அப்படி அறிந்து இருப்பின் இப்போதைக்கு அதை சொல்ல வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
  2. ரஞ்சித் நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கிறார் என்பதற்கு இது நல்ல உதாரணம். ""சிலரின் சில்லறைத்தனங்களைப் பார்க்கும்போது சிரிப்பதைத்தவிர வேறு எதையும் செய்யத் தோன்றுவதில்லை."" கேள்வியின் அர்த்தத்தைக்கூட புரிந்துகொள்ளும் அளவிற்கு கோபம் கண்ணை மறைக்கக்கூடாது ரஞ்ஜித் ? நேர்மையுடன் கருத்தாடப் பழகுங்கள். உங்களிடம் கேட்ட கேள்வி ""இலங்கை இனவழிப்பையொட்டி மேற்கு நாடுகள் இதுவரை வாய் திறக்காதிருப்பது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன"" இதற்கும் நீங்கள் எழுதும் முள்ளிவாய்க்கல் ஒப்பீட்டிற்கும் என்ன சம்பந்தம்? இதற்குப் பதில் இருக்கிறதா உங்களிடம் ? முழு உலகமே கைவிட்ட முள்ளிவாய்க்காலும், முழு உலகுமே ஒன்று சேர்ந்து சண்டையிடும் மரியுபொலும் ஒன்றா ? இந்த இலட்சணத்தில்தான் உமது புரிதல் இருக்குமென்றால், நீங்கள் எழுதும் துரோகத்தின் நாட்காட்டியின் நிலையை நினைக்கத்தான் சிரிப்பு வருகிறது. ஏனென்றால் துரோகத்தின் நாட்காட்டியை சரி பிழை பார்க்கவோ அல்லது ஒப்பிட்டு நோக்கவோ அல்லது எதிர்த்து வாதாடவோ யாழ் களத்தில் ஒருவரும் இல்லையே. ஒருவரது எழுத்தின் நம்பகத்தன்மை அவரது எழுத்தில் உள்ள உண்மையின் அளவில் தங்கியிருக்கிறது. அதற்கு பக்கச்சார்பான கட்டுரைகள் பலம் சேர்க்காது. புரிந்துகொள்ளுங்கள்.
  3. சரி சரி சொல்லல்ல. நீங்க தொடருங்கோ. சுமேயின் மூட்டைப்பூச்சி கதை மாதிரி இருக்கு.
  4. முள்ளிவாய்க்காலை இன்னொரு நாட்டின் யுத்தத்துடன் ஒப்பிடுவது சுத்த அயோக்கியத்தனம் என்பது எனது உறுதியான நிலைப்பாடு.
  5. 28-09-2002 இரண்டாம் பலாலித் தாக்குதல் தரைக்கரும்புலிகளில் ஒருவரும் அத்தாக்குதலில் இருகால்களிலும் விழுப்புண்ணடைந்து மயக்கமுற்ற நிலையில் சிறீலங்காப் படையினரால் பிடிக்கப்பட்ட மேஜர் தரநிலையுடைய கென்னடி அவர்கள் ஜெனிவா போர்நிறுத்தக் காலத்தில் கைதிகள் பரிமாற்றத்தின்போது சிறீலங்கா அரசாங்கத்தால் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் ஓமந்தையில் வைத்து ஒப்படைக்கப்பட்ட போது அவரை பேருவகையுடன் கட்டித்தழுவும் கட்டளையாளர் பானுவும் அதை மகிழ்வுடன் காணும் கட்டளையாளர் ஜெயம் அவர்களும் குறிப்பு: தரைக்கரும்புலி கென்னடி அவர்கள் சிறீலங்காப் படையினரால் உயிருடன் பிடிபட்ட விடையமே சிறீலங்காப் அரசாங்கத்தால் போர்க்கைதிகளின் பட்டியல் வெளியிடப்பட்ட போதுதான் விடுதலைப்புலிகளிற்கு தெரியவந்தது. அதன் பிறகுதான் அன்னாரின் பெயர் மாவீரர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
  6. பரணகோட் எனக்கு பார்கோட் என்று தொடங்கேக்க விளங்கினது, போகப்போகத்தான் விளங்கினது. நன்றி புத்தண்ணா.
  7. புத்தனும், புட்டினும்…. உலகத்திற்கு, எத்தனையோ நல்ல விடயங்களை செய்து காட்டி உள்ளார்கள் என்பதை…. புட்டின் மூலமாக, உக்ரைனில் காண்கின்றோம். ❤️ இங்கு ஒரு சிலருக்குத்தான்… புட்டினை கண்டால், அலர்ஜி. அது… அவர்களின் வெள்ளைக்கார பாசத்தால், வந்தது. 🤣
  8. புத்தன்…. பாரட்டுக்கள். தற்போதைய அரசியல் சூழ்நிலையையும், பறண கோட்டுடன் அழகாக தொடர்பு படுத்தி…. எழுதிய, அருமையான நகைச்சுவை கதை. 👍🏽😂
  9. பழைய ஞாபகங்களை மீட்டிய பதிவுக்கு நன்றி
  10. இது கட்டாயம் நம்ம சுமந்திரனாகத்தான் இருக்கும்! அவருக்குத்தான் கோர்ட் சூட் எடுப்பாக இருக்கும்!! சிங்களவரை எல்லாம் கடலுக்குள்ள தூக்கிப்போட்டுவிட்டு சிறிலங்காவை விக்கக்கூடிய திறமை அவரை விட்டால் வேறு யாரிடம் இருக்கு? புத்தன் ஐயா, முதுசொமாக இருந்த சருவச் சட்டியை வித்த விண்ணன் என்று வெளிச்சம் போட்டுக் காட்டியது கொஞ்சம் ஓவர்!😁
  11. பலாலி இரண்டாவது கரும்புலி அணி இந்த தாக்குதலில் கரும்புலி கென்னடி அண்ணாவிற்கு இரு காலிலையும் காயமேற்பட்டு அவர் மயக்கமுற்ற நிலையில் சிங்களவரால் உயிரோடு பிடிபட்டார், மேஜர் கென்னடி. மயக்கமுற முன்னர், "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.. ஆ..." எனக் கூறினார். ஆனால் இவர் உயிரோடு பிடிபட்டது புலிகளுக்கு தெரியாது. பிடிபட்ட கென்னடி அண்ணாவிற்கு சிங்களவரின் வழமையான கொடூரமான சித்திரவதை எப்படியும் நடைபெற்றிருக்கும். கரும்புலி கையில் கிடைத்தால் விடுவானா? பின்னாளில், 2002இல், அப்போது ஒப்பந்த காலத்தில் கைதிகள் பரிமாற்றத்தின்போது இவர் சிங்களவரால் விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டர். பின்னர் இவருக்கு என்ன நடந்தது எனத் தெரியாது!
  12. நீங்கள் இருவரும் சொல்லுவது ஓரளவுக்கு உண்மை. இருவருமே அடிமை முறையை கொண்டுதான் தங்களை வளப்படுத்தினார்கள், மெக்ஸிக்கர்கள் அடிமை முறையை சட்டப்படி முதலில் முடிவுக்கு கொண்டு வந்தார்கள், அனால் அமெரிக்கா கொஞ்சம் லேட். ஆங்கிலேயர்கள் infrastructureஐ நன்றாக கவனித்து தங்களுக்கு உட்பட்ட இடங்களை வளப்படுத்தினார்கள், ஸ்பானியர்கள் இந்த விடயத்தில் அவ்வளவு சொல்லும்படியாக இருக்கவில்லை. இருவருமே இங்குள்ள மக்களுடன் கலந்த முறைகளில் வேறுபாடு உண்டு. வெள்ளை அமெரிக்கர்கள், பெரும்பாலானவர்கள் ஜெர்மானியர்கள், அடுத்து ஐரிஷ் உம் ஆங்கிலேயர்களும் , இங்குள்ள native மக்களுடன் அவ்வளவாக கலக்கவில்லை, ஆனால் ஸ்பானியர்கள் நன்றாகவே கலந்தார்கள். இதன் காரணமாக இந்தியாவில் இருப்பதுபோல் மெக்சிக்கர்களிடமும் ஒருவகை சாதி முறை உண்டு. கலப்பு குறைந்த, வெள்ளையின தோற்றம் கொண்டவர்கள் உயர் சாதிகளாகவும், நன்றாக கலந்தவர்கள் குறைந்த சாதிகளாகவும் கருதப்படுவதாக மெக்ஸிகோவில் இருந்து வந்த ஒருவன் சொன்னான், எவ்வளவு தூரம் இவை அங்கெ நடையின்முறையில் இருக்கிறது என்பது தெரியவில்லை. இந்த கலப்பின் அளவு விஞ்ஞானரீதியானது நிருபிக்கப்பட்டதல்ல, நமது சாதி போன்ற ஒரு சமூக கட்டமைப்பு (Social Construct) தற்பொழுது அமரிக்காவும் மெக்ஸிகோவும் சில இடங்களை, native மக்களுக்குரிய தனி நாடுகளாக அங்கீகரித்துள்ளார்கள். அமெரிக்காவில் அவர்களுக்கும் அவர்களின் இடங்களுக்கும் வரிகள் மற்றும் இதர சலுகைகள் நிறைய உண்டு. பக்கங்களில் இருப்பவர்கள் அங்கு சென்று சாமான்களும் வாங்கிக்கொண்டு எரிபொருள் நிரப்பிக்கொண்டு வருவார்கள். பொருளாதார நிலைமைகளினால், மெக்ஸிகோவில் இவை அவ்வளவாக நன்றாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இந்த கதை எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை, முன்பு அங்கீகரிக்கப்பட்ட செவ்இந்தியர்களின் தலைவர்கள், எவரையுமே தங்கள் இனத்தில் சேர்க்கலாம், அப்பிடி சேர்த்தவர்கள் உடனடியாக அமெரிக்கா குடியுரிமை பெறுவார்கள், சில சீனர்கள் இப்படி அவர்களின் இனத்தில் சேர்ந்து அமெரிக்கர்கள் ஆனார்கள், பின்பு இந்த முறையை ஒளித்து விட்டார்கள் என்று ஒரு கதை உலாவியது. தமிழ் சிறி, எனது பிள்ளைகளுக்கு படிப்பதுக்கு உதவி செய்யும்பொழுது அந்த பாடப்புத்தகங்களிலில் இருந்து நான் இவற்றை நிறைய அறிந்து கொண்டேன். கொலம்பஸ் இறங்கியது கிழக்கு கரை. 1600 கடைசியிலும் 1700 ஆரம்பத்திலும், மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவின் மேற்கு பக்க மாநிலங்கலில் ஸ்பானிஷ் குடியேற்றங்கள் வேகமாக நடைபெற்றது. ஸ்பெயின் அரசரின் கட்டளைக்கு இணங்க, முறைப்படுத்தப்பட்ட குடியேற்றங்கள் நடைபெற்றது. படைவீரர்களுடன், பாதிரியார்களும் ஆண்களும் பெண்களுமான குழுவாக சென்று குடியேறினார்கள். அமெரிக்கா-மெக்ஸிகோ யுத்தம் நடந்தது 1848இல். அதன்முடிவில் பல மாநிலங்களை/நிலங்களை அமெரிக்கா பெற்றுக்கொண்டது. அமெரிக்காவின் கிழக்கு பக்கங்களில் (அதிக மக்கள் கொண்ட இடங்கள்) ஆங்கிலேயர்களும், நடுப்பகுதிகளில் பிரான்ஸ் உம், தென் அமேரிக்காவில் இருந்து, மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவின் மேற்குவரைக்கும் ஸ்பானியர்களும் ஆதிக்கம் செலுத்தினார்கள். கிழக்கின் சில பகுதிகளில் (உதாரணம் நியூயார்க், Delaware) Dutch West India கம்பெனி மூலம் ஹாலந்தும் ஆதிக்கம் செலுத்தி செவ்விந்தியர்களுடன் வியாபாரம் செய்தார்கள். 1776 இல் கிழக்கில் இருந்த 13 மாநிலங்கள் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது, பிறகு Louisiana மற்றும் சில நடுப்பகுதிகளை பிரான்ஸின் நெப்போலியன் உடனான ஒப்பந்தத்தின் மூலம் வாங்கினார்கள், பிறகு மெக்ஸிக்கோவிடம் இருந்து மேற்கு பகுதிகளை பிடித்தார்கள், வடஅமேரிக்காவில் ரஷ்யா இருப்பது நல்லதல்ல என்ற காரணத்தினால், கிட்டடியில் அலாஸ்காவை ரஷ்யாவிடம் இருந்து வாங்கி சேர்த்தார்கள். ரஷ்யாவிற்கும் அலாஸ்காவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் இருக்கும் இரண்டு சிறிய தீவுகளுக்கிடையில் எல்லை பகுதியை வகுத்தார்கள். ஒரு தீவு ரஷ்யாவிடமும் மறு தீவு அமேரிக்காவிடம் இருக்கிறது. தற்பொழுது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடைப்பட்ட தூரம் வெறும் 2.4 மைல்கள் மட்டுமே. நான் எனக்கு தெரிந்தவற்றை பொதுவாக, மேலோட்டமாகவே எழுதியுள்ளேன், தவறுக்கு இருக்கலாம்.
  13. பார்வை ஒன்றே போதுமே......! (9). அங்கே அவர்களது தாயார் யாரையோ கோபமாகப் பேசுவதும் இருவர் வாக்குவாதப் படுவதும் சத்தமாகக் கேட்கிறது. வெளிவராந்தாவில் வேலைக்காரம்மாவும் வாட்ச்மேனும் பதற்றமாய் நின்றுகொண்டிருக்கிறார்கள்.என்ன என்று ரவிதாஸ் அவர்களிடம் விசாரிக்க நிர்மலா விரைந்து உள்ளே போகிறாள். அந்த வேலைக்காரம்மாவும் அவனிடம் சின்னையா கொஞ்ச நாட்களாக அம்மாவின் கார் ட்ரைவர் சுந்தரத்தின் போக்கு சரியில்லை. அம்மாவிடம் அத்துமீறி நடந்து கொள்கிறான். அம்மாவும் ஏனோ அவனுக்கு பயந்து அவன் சொற்படி நடக்கிறா மேலும் அவன் கேட்க்கும்போதெல்லாம் பணமும் குடுக்குறா. அவன் குடித்து விட்டு வந்து தகராறு பண்ணினாலும் கண்டும் காணாதமாதிரி இருக்கிறா என்கிறாள். ரவிதாசும் ஓம்....நானும் பார்த்துக் கொண்டுதான் வாறன் அவற்ர போக்கு சரியில்லாமல்தான் இருக்கு. சரி என்ன என்று பார்க்க படியேறி தாயாரின் அறைக்குப் போகிறான். அங்கு ரேகாவோடு சுந்தரம் இழுபறிப்பட்டுக் கொண்டிருந்தான். இடையில் நிர்மலா அவனிடமிருந்து தாயாரைப் பிடித்து இழுக்கிறாள். அங்கு வந்த ரவிதாஸ் உடனே சுந்தரத்தின் வயிற்றில் எட்டி உதைக்க அவன் கட்டிலடியில் போய் விழுகிறான். அவனிடமிருந்து விடுபட்ட ரேகா மகளைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கதறுகிறாள். எல்லாம் என்னால்தான்.நான் குடி போதையில் செய்த தவறுகளினால்தான் என் புருசனும் எங்களை அனாதரவாய் விட்டிட்டு போயிட்டார். இன்று இந்த நாய்கூட என்மேல் கை வைக்கத் துணியுமளவுக்கு வந்து விட்டது. என்னை மன்னித்து விடுங்கோ பிள்ளைகள். முதலில் இவனை வெளியே அடித்துத் துரத்துங்கோ என்று சொல்லும்போது கட்டிலின் கீழே இருந்து எழுந்த சுந்தரத்தின் கையில் கைத்துப்பாக்கி இருந்தது.அது அன்று சாமிநாதன் கோபத்தில் எறிந்து விட்டு போன கைத் துப்பாக்கி. இண்டைக்கு உங்கள் மூவரையும் கொல்லாமல் விட மாட்டேன் என்று கத்திக் கொண்டு ரவிதாசை நோக்கி சுடும்போது மகனைக் காப்பாற்ற குறுக்கே பாய்ந்த ரேகாவின் மார்பில் குண்டு பட்டு அவள் கீழே சரிகிறாள். நிர்மலா தாயைத் தாங்கிப் பிடிக்க சுதாகரித்துக் கொண்ட ரவிதாஸ் பாய்ந்து சுந்தரத்தை மடக்குகிறான். துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடிவந்த வாட்ச்மேனும் ரவிதாஸுடன் சேர்ந்து சுந்தரத்தை அமுக்கிப் பிடித்து துப்பாக்கியைப் பறித்து விடுகிறார்கள். இருவருமாக அவனைக் கட்டிப் போட்டுவிட்டு போலீசுக்கு போன்செய்ய சற்று நேரத்தில் போலீசும் அம்புலன்ஸ் வண்டிகளும் வந்து விடுகின்றன. அதற்கிடையில் அன்று நடந்ததை ரேகா பிள்ளைகளிடம் சொல்லி மன்னிப்பு கேட்கிறாள். நான் இனி இருக்கமாட்டேன் பிள்ளைகள். நீங்கள் கவனமாய் இருங்கோ. என்றாவது அப்பாவை சந்தித்தால் தன்னை மன்னித்து விடும்படி சொல்லுங்கோ என்று சொல்கிறாள். டொக்டர் வந்து அவளுக்கு முதலுதவி செய்து ஆம்புலன்ஸில் ஏற்றும்போது ரேகாவின் உயிர் பிரிகிறது. போலீஸ் சுந்தரத்தையும் துப்பாக்கியுடன் விலங்கிட்டு அழைத்து செல்கிறது. இவை நடந்து இரண்டு மூண்டு வருடங்களாகி விட்டன. நிர்மலா முழுநேரமாக கம்பெனியைக் கவனித்துக் கொள்கிறாள். ரவிதாசும் கம்பெனி வேலைகளாக அடிக்கடி அயல்நாடுகளுக்கு செல்கிறான். அவன் குடுத்த புகாரின் பேரில் போலீஸ் சாமிநாதனை வலைபோட்டு தேடிக்கொண்டிருக்கிறது..............................................! பார்ப்போம் இனி ..................! ✍️
  14. பார்வை ஒன்றே போதுமே..........(8). சோமு அப்பால் சென்றதும் சாமிநாதன் முத்துவிடம் ஏன் முத்து அந்தக் கடையை நாங்கள் வாங்கினால் என்ன என்று சொல்ல....என்னய்யா நீங்கள் புரியாமல் கதைக்கிறீங்கள். அவ்வளவு பணத்துக்கு நாங்கள் எங்கு போவது. அதுவும் மாடியுடன் கூடிய பெரிய கடை. பின்னாலும் பெரிய வளவு இருக்கு. என்னை நம்பி யார் அவ்வளவு பணம் தருவினம். சும்மா நடக்கிறதைச் சொல்லுங்கோ. அவ்வளவு அனுபவசாலியே வியாபாரம் இல்லாமல் கடையை விக்கிறார். நடக்கும் முத்து நீ அவர் வந்தால் என்னிடம் சொல்லு, நாங்கள் அவரிடம் கதைத்துப் பார்ப்போம். பின் இருவரும் தமக்குள் யோசனையுடன் தங்கள் தங்கள் வேலைகளைத் தொடர்கிறார்கள். அப்போது முத்து தனக்குள் கதைப்பது போல் நான் இப்போது படித்திருக்கும் படிப்புக்கு இப்படி ஒரு இடம் கிடைத்தால் வசதியாகத்தான் இருக்கும். ஆனால் என்ன செய்வது..... நீ ஒன்றுக்கும் யோசிக்காதே முத்து அது சரிவரும் என்றுதான் என் மனசு சொல்லுது என்று சாமிநாதன் முத்துவுக்கு ஆறுதல் சொல்கிறார். அன்று மதியம் முத்து இருவருக்கும் சாப்பாடு வாங்குவதற்காக வீதியைக் கடந்து எதிரில் உள்ள உணவகத்துக்கு வருகிறான். அப்போது ஒரு கார் அவனைக் கடந்து வந்து அந்தக் கடைக்குமுன் நிற்கிறது. அதில் இருந்து இறங்கிய அந்த மனிதர் முத்துவைக் கண்டதும் "முத்து இங்கு கொஞ்சம் வந்துட்டு போ" என்று அழைத்தார். அவனும் என்ன ஐயா என்று அவர் முன் சென்று பவ்யமாக நின்றான்.மனதுக்குள் இப்பதான் இவரைப் பற்றி கதைத்தோம் பார்த்தால் முன்னே வந்து நிக்கிறார் என்று நினைக்கின்றான். அவர்தான் சோமு வேலை செய்யும் புடவைக் கடையின் முதலாளி. அவரும் முத்துவின் தந்தையும் பால்ய நண்பர்கள். அவனது தந்தையின் மரணச்சடங்குக்கு வந்தபோது முத்துவின் கையில் ஒரு என்பலப்பில் பணம் வைத்துக் குடுத்துவிட்டு சென்றவர். அந்தப் பணத்தை வைத்துதான் தந்தையின் இறுதிக் காரியங்களை ஒரு குறைவுமில்லாமல் செய்தவன். அவர் காரின் டிக்கியத் திறந்து சில சோடி சப்பாத்துகள், செருப்புகளை அவனிடம் குடுத்து இவை எனது மனிசி மற்றும் பிள்ளைகளுடையது, இவற்றை பழுதுபார்த்து பொலிஸ் பண்ணிக் கொண்டுவந்து தா என்று சொல்லி அவனிடம் கொடுக்கிறார். அவனும் சரி ஐயா நான் இந்த வேலைகளை முடித்து பின்னேரம் வீட்டுக்கு போகும்போது உங்கட வீட்டில் குடுத்து விட்டு போகிறேன் என்றான். அவர் பர்சில் இருந்து பணம் எடுத்து குடுக்க வரும்போது, அவனும் வேண்டாம் ஐயா இருக்கட்டும் என்று சொல்லி விட்டு பையை எடுத்துக் கொண்டு போகிறான். சாமிநாதனின் வீட்டில் அவரை எல்லா இடமும் தேடிக் களைத்து விட்டார்கள். அவர் எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அவர்களுடைய வணிக வளாகத்தில் அவர் கம்பெனி விஸ்தரிப்புக்காக வெளிநாட்டில் இருப்பதாகவும் விரைவில் வந்து விடுவார் என்றும் சொல்லி இருந்தார்கள்.ஆனாலும் ரேகாவுக்கு எல்லாம் விளங்கி விட்டது. தனது நடத்தைப் பிழையால்தான் அவர் வீட்டை விட்டுப் போய்விட்டார் என்று. இந்த உண்மையை பிள்ளைகளிடமும் சொல்ல முடியவில்லை. ரவிதாசும் நிர்மலாவும் மிகவும் கலங்கிப் போனார்கள். அப்பாவை யாராவது கடத்தி இருப்பார்களோ, அப்படியென்றாலும் இந்நேரம் கப்பம் கேட்டு போனாவது செய்திருக்க வேண்டுமே என்று தவிப்பாக இருக்கின்றது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. போலீசுக்கு தகவல் குடுக்கிறதுக்கும் தாயார் வேண்டாம் என்று தடுக்கிறா. ரேகா நினைக்கிறாள் போலீஸ் வந்தால் அவர்கள் நிட்சயம் வேலைக்காரர், ட்ரைவர்களிடம் அவர் வழக்கமாய் போகும் இடங்கள், கிளப்புகள் என்று விசாரிப்பார்கள். அப்படிவரும் போது தனக்கு மிகவும் அவமானமாய் போய்விடும். மேலும் இது வெளியே தெரிந்தால் வியாபாரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும். ரவிதாஸ்தான் மூத்த அதிகாரிகளின் உதவியுடன் கம்பெனி நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறான்.ஒரு ரகசிய ஏஜென்ட் மூலமாகவும் தகப்பனைத் தேடிக்கொண்டிருக்கிறான். நிர்மலாவும் கல்லூரி நேரம் போக மற்ற நேரங்களில் கம்பெனி வேலைகளிலும் உதவியாக இருக்கிறாள். அன்று கம்பெனியில் வேலை முடிந்து ரவிதாசும் நிர்மலாவும் ஒரேகாரில் கதைத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறார்கள். அப்போது நிர்மலா அவனிடம் அண்ணா இன்று எங்கள் கம்பெனி வக்கீல் தவராசா இருக்கிறார் எல்லோ அவர் தனது உதவியாளர் என்று ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்து அறிமுகப்படுத்தினவர். இனி எங்களது வியாபாரம் சம்பந்தமான எல்லா விடயங்களையும் அவாவிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று சொன்னவர். அப்படியா ....தவராசா தன்னிடம் ஒருவரை ஜூனியராக சேர்க்கிறார் என்றால் அவர் மிகவும் கெட்டிக்காரராகத்தான் இருப்பார். பேசிக்கொண்டு வரும்போது கார் வீட்டுக்கு வந்து போர்டிகோவில் நிக்கின்றது..........! பார்ப்போம் இனி.......! ✍️
  15. வாசக உள்ளங்களிடம் மன்னிப்பு கெரோனாவால் பாதிக்கப்பட்டு சுய தனிமைப்படுத்தலில் உள்ளதால் தொடர்ந்து எழுத முடியவில்லை. முடிந்தவரை மிக விரைவில் எழுத முயற்சிக்கிறேன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.