Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87997
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    38778
    Posts
  4. இணையவன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    6
    Points
    7596
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/09/23 in all areas

  1. திரும்பும் வரலாறு: நாசிகள் அண்மைக் காலமாக "திரும்பும் வரலாறு" (repeat of history or historic recurrence) என்பது பிரபலமான ஒரு சொற்றொடராக மாறியிருக்கிறது. வரலாறு மீள மீள நிகழ்வதற்கு பிரதான காரணம் வரலாற்றிலிருந்து தலைவர்களும், தலைவர்களைத் தேர்வு செய்யும் மக்களும் பாடங்கள் கற்றுக் கொள்ளாமை தான் என்பது ஒரு தெளிவான அவதானம். எனவே, வரலாற்றின் மைல் கற்களாக விளங்கிய சம்பவங்கள், நபர்கள் பற்றிய தரவுகளைப் பதிவு செய்யலாம். முதலில் ஹிற்லர், நாசிகள் பற்றி ஆரம்பித்து, இரண்டாம் உலகப் போர், ஸ்ராலின், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் என்று ஒரு சுற்று வரலாம். ஆர்வமுடையோர் இணைந்திருங்கள். மூலங்கள் பற்றிய தகவல்களை ஒவ்வொரு பகுதியும் நிறைவுறும் போது தருகிறேன். ஆனால், விக்கிபீடியா மூலமாகப் பயன்படுத்தப் படவில்லை என்பதை உறுதி செய்கிறேன்! ஹிற்லர் எப்படிப் பதவிக்கு வந்தார்? முதலாம் உலகப் போர் 1918 இல் முடிவுக்கு வந்த போது ஐரோப்பாவின் எல்லைகள் பாரிய மாற்றங்களையடைந்தன. முதல் உலகப் போரின் போது கடல் வழியிலும், தரைவழியிலும் ஜேர்மனியின் படைகள் விளைவித்த மனிதப் பேரழிவு அளப்பரியது (முதலில் நீர்மூழ்கிக் கப்பல்களை பெருமளவில் பாவித்த நாடாக ஜேர்மனி இருந்தது, அனேக தாக்குதல் இலக்குகள் சிவிலியன் போக்கு வரத்துக் கப்பல்களாக இருந்தன!). ஜேர்மனி தோல்வியடைந்த போது வெர்சை உடன்படிக்கையின் வழியாக கடுமையான தண்டனைச் சுமைகள் ஜேர்மனி மீது சுமத்தப் பட்டன. 33 பில்லியன் டொலர்கள் வரையான போர் நட்ட ஈடு, காலனிகள் உட்பட்ட பல நிலப் பரப்பின் இழப்பு, இராணுவ ஆளணிக் குறைப்பு, ஆயுதங்கள் வாங்க, உற்பத்தி செய்வதற்கான கட்டுப் பாடுகள், என்பன ஜேர்மனியின் தண்டனைகளில் அடங்கின. இந்தப் போரில் காயமடைந்து மீண்ட படையினனான ஹிற்லர் ஆரம்பித்த கட்சி தான் "தேசிய சோசலிஸ்ட் கட்சி" எனப்பட்ட நாசிக் கட்சி. நாசிக் கட்சியின் நோக்கம் ஆட்சியைப் பிடிப்பது. இதற்கு உகந்த நுட்பமாக அவர்கள் தேர்ந்து கொண்டது, அண்மைய வரலாற்றில் ட்ரம்ப், பொல்சனாரோ, மோடி, ப்றெக்சிற்றின் தலைமைச் சிற்பியான நைஜல் பரார் போன்றோர் தேர்ந்து கொண்ட அதே ஜனத்திரள்வாத முறை. ஜனத்திரள் வாதம் நேர்மையான விடயங்களால் பலம் பெறுவதை விட மறைத்தன்மையான மனித உணர்வுகளால் பலம் பெறுவது தான் வரலாற்றில் அதிகம் நிகழ்ந்திருக்கிறது. நாசிக் கட்சி தங்கள் ஜனத்திரள் வாத வெற்றிக்காகத் தேர்ந்து கொண்ட அந்த மறைத்தன்மையான உணர்வு யூதர்கள் மீதான சந்தேகமும், எதிர்ப்புணர்வும். ஏன் யூதர்கள் மீது எதிர்ப்புணர்வு? ஏனெனில், ஜேர்மனியில் அந்தக் காலப்பகுதியில் வசித்த வேற்றினத்தவர்களுள், யூதர்கள் தான் பல வழிகளில் பிரபலமான இனக் குழுவாக இருந்தனர். பொருளாதார நடவடிக்கைகளில் மேலாண்மை மட்டுமன்றி, அரசியல் கலாச்சாரப் பரப்பிலும் யூதர்கள் முன்னணி வேற்றினத்தவராக இருந்தனர். கால் மார்க்ஸ் ஒரு யூதர், ஜேர்மனியுட்பட பல ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசக் கட்சிகளின் தலைமையில் அதிகம் யூதர்கள் இருந்தனர். விஞ்ஞானத் துறையிலும் (ஐன்ஸ்ரைன் சிறந்த உதாரணம்) அவர்களுக்கு தனியிடம் இருந்தது. இவ்வாறு ஜேர்மன் மக்கள் ஏற்கனவே உணர்ந்திருந்த ஒரு "யூத மேலாண்மை பற்றிய அச்சம்" நாசிக் கட்சியின் மக்கள்திரள்வாத ஆயுதமாயிற்று! ஆனால், யூதர்களுக்கு மேலதிகமாக, ஏனைய மத, இனக்குழுக்கள், ரஷ்யாவின் சிலாவிக் இன மக்கள் ஆகியோரும் நாசிக்கட்சியின் வெறுப்பிலக்குகளாக விளங்கினர். இந்த சிலாவிக் இன மக்கள் மீதான வெறுப்பிற்கு வளங்களைக் கொள்ளையடிக்கும் ஜேர்மனியின் நீண்ட கால இலக்கும் ஒரு காரணமாக இருந்தது. ஆரிய இனமான நீலக் கண்ணும், வெள்ளைத் தோலும் கொண்ட ஜேர்மனியர்கள், லூதரன் கிறிஸ்தவ நெறிப்படி குடும்பங்களில் நிறையப் பிள்ளைகள் பெற்றுப் பெருகும் போது, அவர்கள் வாழ அவசியமான நிலம், சோவியத் ரஷ்யாவிடமிருந்து பறிக்கப் பட வேண்டுமென்பது நாசிக் கட்சியின் கொள்கை. எனவே, சிலாவிக் மக்கள், "மனித இனத்திற்குக் கீழானவர்கள்" என்ற வெறுப்புணர்வை நாசிக் கட்சியினர் பரப்பத் தயங்கவில்லை. இந்தக் “கீழ்மனிதர்களான” சிலாவிக் மக்களை விடக் கீழான நிலையில் தான் யூதர்கள் வைத்துப் பார்க்கப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1921 அளவில், நாசிக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ஹிற்லர் வெளிப்படையாக இந்தக் கொள்கைகளைப் பேசி வந்திருக்கிறார். சாதாரண அரசியல் கட்சிகள் போலல்லாது, நாசி கட்சிக்கு ஒரு ஆயுதப் படையும் இருந்தது. Storm troopers என்று அழைக்கப் பட்ட இந்தப் படையில், ஹிற்லர் போலவே முதல் உலகப் போரிலிருந்து அவமானத்துடன் திரும்பி வந்த முன்னாள் படையினர் இருந்தனர். பல்லாயிரம் உறுப்பினர்கள் கொண்ட இந்த படை, பவாரியாவின் மாநில அரசைக் கவிழ்க்க முயன்று தோற்ற போது தான் ஹிற்லர் மற்றும் நாசிக் கட்சி பற்றிய முதல் எச்சரிக்கை ஜேர்மன் அரசுக்குக் கிடைத்தது. ஜேர்மன் அரசினால் ஒரு வருடம், இதற்காக சிறை வைக்கப் பட்ட போது தான் ஹிற்லர் தனது ஜனத்திரள்வாத, இனவெறிக் கொள்கைகளை நூலாக (Mein Kampf) எழுதினார். இந்த நூல், 1932 இல் ஜேர்மன் பாராளுமன்றத்தில் மிகப் பெரிய கட்சியாக நாசிக் கட்சி விளங்க ஒரு முக்கிய காரணியாக இருந்தது. இதனால், ஜேர்மன் ஜனாதிபதியினால், ஹிற்லர் வேந்தராக நியமிக்கப் படும் நிலையும் உருவானது. ஜேர்மன் மக்கள் என்ன நினைத்தனர்? தீவிர இனவெறிக் கொள்கை கொண்ட ஹிற்லரையும், நாசி கட்சியையும் 1932 பொதுத் தேர்தலில் ஜேர்மன் வாக்காளர்கள் ஆதரித்துப் பெரும்பான்மை வழங்க பல காரணங்கள் அப்போது இருந்தன. ஜேர்மனி முதல் உலகப் போரில் மிகவும் அவமானப் படுத்தப் பட்டதாக ஜேர்மனிய மக்களில் பெரும்பகுதியினர் உணர்ந்தனர். அதன் பின்னான தண்டனைகளால் ஜேர்மனியின் பணவீக்கம், வேலையில்லாதோரின் வீதம், என்பன கட்டுக்கடங்காமல் அதிகரித்தன. ஜேர்மன் ஜனாதிபதியாக இருந்த வொன் ஹிண்டன்பேர்க் வயசாளி, நோய்வாய்பட்ட நிலையில் தனது ஓய்வு வாசஸ்தலத்தில் இருந்தவாறே, கீழதிகாரிகளூடாக ஆட்சி செய்து கொண்டிருந்தார். இந்தப் பின்னணியில், மூன்று இளமையும், துடிப்பும் கொண்ட அரசியல் தலைவர்கள் மக்கள் முன் வலம் வந்தனர்: ஹிற்லர், ஹெஸ், கோயபல்ஸ் ஆகிய மூவரும் தான் அந்த "ஜனத்திரள்வாத" இளம் தலைவர்கள். எனவே, ஒரு நம்பிக்கையான எதிர்காலம் வேண்டி, ஜேர்மன் வாக்காளர்கள் நாசிக் கட்சிக்கு வாக்களித்தனர். இந்த மானசீகமான ஆதரவோடு, நாசிக் கட்சியின் ஆயுதப் படையினர் நாசிக் கட்சி எதிர்ப்பாளர்களுக்குக் கொடுத்த வன்முறை அச்சுறுத்தலும் சேர்ந்து தான் நாசிக் கட்சியும், ஹிற்லரும் ஜேர்மனியின் ஆட்சியைப் பிடித்தனர். பதவிக்கு வந்த பின்னர் ஹிற்லரின் நடவடிக்கைகள் ஹிற்லர் வேந்தராகப் பதவியேற்று சில மாதங்களில், ஜேர்மன் பாராளுமன்றம் தீயூட்டப் பட்டது. இந்த எரியூட்டலுக்கு ஜேர்மன் கம்யூனிஸ்டுகள் காரணமெனப் பிரச்சாரம் செய்த நாசிகள், ஒரு ஒல்லாந்து நாட்டு கம்யூனிஸ்டைக் கைது செய்தனர். ஹிற்லரின் விமானப் படையைப் பின்னாளில் கட்டியெழுப்பிய தீவிர நாசியான ஹேர்மன் கோறிங் நேரடியாக நீதிமன்றம் சென்று, கைது செய்யப் பட்ட ஒல்லாந்துக் கம்யூனிஸ்டின் மரண தண்டனையை உறுதி செய்தார். அதே நேரம் மிக முக்கியமான இன்னொரு விடயமும் நாசி ஜேர்மனியின் எதிர்காலப் போக்கை நிர்ணயித்தது: பாராளுமன்றம் எரிக்கப் பட்ட சம்பவத்தைக் காரணம் காட்டி, ஹிற்லர் ஜேர்மன் ஜனாதிபதியை அவசரகாலச் சட்டத்தை அமல் படுத்தத் தூண்டினார். இதனால், சகல அரசியலமைப்பு வழியான மக்கள் உரிமைகளும் ஒரே இரவில் ரத்துச் செய்யப் பட்டன. இந்த உரிமைகள் ரத்தினால், நாசிகளை ஆதரித்த ஜேர்மனியர்களுக்கு ஒரு பாதிப்பும் வரவில்லை- ஆனால், யூதர்கள், கம்யூனிஸ்ட்டுகள், நாசி எதிர்ப்பாளர்கள், ஊடக சுதந்திரம் என்பன நன்கு பாதிக்கப் பட்டன. ஹிற்லரின் கட்சிக் கொள்கைகள் செயல் வடிவம் பெற ஆரம்பித்தன! -இன்னும் வரும் ஜஸ்ரின்
  2. விறகு வைத்து எரித்து வீடு சூடாக்கினால் தீ அணைக்கும் படை வருவதில்லையே?
  3. அந்த ஜேர்மன் காதலர்கள்.... ஒருமுறை வேறொரு வீட்டில்.. இரவு தங்கியிருந்த போது, திடீரென்று மின்சாரம் நின்று விட்டதாம். 😮 வீட்டில் உள்ள ஒருவரும் பதட்டப் படாமல், ஒவ்வொரு இடத்திலும் ஆயத்தப் படுத்தி வைத்திருந்த எண்ணை 🪔 விளக்குகளை ஏற்றிவிட்டு... தமக்கு தலையில் மாட்டக் கூடிய, மின்கல விளக்கும் தந்து விட்டு, மின்சார பிறப்பாக்கியை (ஜெனரேட்டர்) இயங்க வைக்க, எண்ணை விட ஆயத்தமான போது.. தாங்கள் தடுத்து, இந்த எண்ணையை... நீங்கள் வேறு ஏதாவது தேவைக்கு பயன் படுத்துங்கள் என்று கூறியதை கேட்டு, அவர்கள் மகிழ்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டார். 😎 அந்த இருட்டுக்குள் தாங்கள் வெளியே வந்து, அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்து வானத்தை பார்த்து ரசித்ததும் இனிய அனுபவம் என்றார். 😂 அடுத்த நாளும்... மின்சாரம் இல்லாததால், அவர்கள் விறகு அடுப்பில் சமைத்ததை.. ஆரம்பம் முதல் இறுதி வரை அதிசயத்துடன் பார்த்து ரசித்ததாக குறிப்பிட்டு, அவர்கள் சமைத்துத் தந்த வாழைப்பூ கறியின் சுவை... இன்றும் மறக்க முடியாதுள்ளதாம். வாழைப்பூ என்று, ஒன்று... உள்ளதென்றும், அதில் கறியும் வைக்கலாம் என்று, அறிந்து கொண்டநாள் அதுவாம். 😋 அந்த வேளை எடுத்த படங்களையும் எனக்கு காட்டினார். 😂 ஜேர்மனியில் இருக்கும் வரை... விறகு அடுப்பில் சமைப்பதைப் பற்றி கேள்விப் பட்டிருந்தாலும், நேரில் பார்த்த போது.... எதிர் பார்த்ததை விட புது அனுபவமாக இருந்ததாம். 🙂
  4. காக்கா நரிக் கதை I ain’t playin பொறுப்பு துறப்பு கதைமாந்தர்கள், சம்பவங்கள் யாரையும் குறிப்பன அல்ல. கதை சொல்லி, தானே தன் வாழ்க்கையில் நரியாகவும், காக்காவாகவும் இருந்துள்ளார், இருக்கிறார், இருப்பார் என்பதை ஏற்று கொள்கிறார். ——————-//////————//////——————— நரிக்கு மனம் பக்…பக்… என்று அடித்துக்கொண்டது. இன்னும் ஒரு அரை வினாடி மட்டும்தான்…. பாடுகிறேன் பேர்வழி என்று இந்த அண்டங்காக்காய் மட்டும் வாயை திறக்கட்டும்… வடையை ஒரே லபக்கில் முழுங்கி விட வேண்டியதுதான். இந்த ஒரு வடைக்காக எத்தனை பாடு? எத்தனை பிரயத்தனம்? எத்தனை அவமானம்? காகத்தின் இந்த கர்ணகடூர ஓசையை கூட இசை என்று பொய்யாக புகழும் படி ஆயிற்றே…. அதுவெல்லாம் கூட பரவாயில்லை, என் சுயத்தை மறைத்து, நல்லவன் போல அல்லவா நடிக்கும் படி ஆயிற்று ? எத்தனை பெரிய ஒறுப்பு அது? பாட வாய் எடுத்தது போல் இருந்த காகத்தின் வாயில் நரியின் ஒட்டு மொத்த கவனமும் குவிந்திருந்தது. ஆனால் காகமோ பாடுவதாகக் காணோம். கால்களில் வடையை பற்றி கொண்டு, தலையை ஸ்லோமோசனில் இடமும், வலமுமாக திருப்பியது. இடையிடையே கண்களை திறந்து மூடிக்கொண்டது. பிறகு தலையை கீழே குனிந்து வடையை சில நிமிடங்கள் வெறித்துப் பார்த்து கொண்டிருந்தது. நரிக்கு இருப்பு கொள்ளவில்லை. வடை எல்லாம் பெரிய மேட்டரே இல்லை. சொல்லப்போனால் நரிக்கு வடை மேல் அதிக இஸ்டம் கூட இல்லை. இந்த காகத்தோடு வீணடித்த நேரத்தை, ஒரு ஆட்டு மந்தையில் செலவழித்திருந்தால் ஒரு கறி விருந்தேசாப்பிட்டு இருக்கலாம். ஆனால் அதுவல்ல முக்கியம். இது ஒரு விளையாட்டு, காகத்தின் வடையை கவர வேண்டும். அவ்வளவுதான். இந்த காகத்தை ஏமாற்றி விட்டேன் என என் சக நரிகளுக்கு நிரூபிக்க வேண்டும். அனைவர் முன்னிலையிலும் காகத்தை கேலிக்குள்ளாக்க வேண்டும். முக்கியமாக காகத்துக்கு ஒன்றும் தெரியாது என்று நிறுவ வேண்டும். அப்போதான் காகம் சொல்வது எதையும் இனி இந்த காடு நம்பாது. நரி சொல்லே மந்திரம் என இந்த காடு கட்டுப்படவேண்டும். அதற்கு என்ன தியாகமும் செய்யலாம். காகம் இப்போ பாடத்தயாராவது போல தெரிகிறது. ஆனால் வடையோ இன்னமும் காகத்தின்கால்களில்டையேதான் சிக்கிகொண்டுள்ளது. என்னது ஒரு அற்ப காகம் நம்மை விட குறுக்குப்புத்தி உடையதாக இருக்குமோ? நரிக்கு சந்தேம் சற்றே எட்டிப்பார்க்க தொடங்கியிருந்தது. காகம் மெதுவாக குனிந்து வடையை வாயில் கவ்வி…. தொப் … என்று நரியின் முகத்தில் விட்டெறிந்தது…. காகம் பாட மட்டும் இல்லை, நரியோடு பேசக்கூட செய்யவில்லை. பறந்தே போயிற்று.
  5. மெய்தீண்டாக் காதல் டூயட் பாடல் . ஆண் : அன்பே .....! பெண் : அத்தான்....! மௌனம் அவன் மடியில் சாய்ந்து சொல்லுங்கள் அத்தான்.....! ஆண் : நிலவை மூடி அசையும் முகிலாடையை விலக்கிடவே கரம் தயங்கிடுதே பெண்: நாணம் கொண்ட நானும் நாணம் கெட்டு நிக்கிறேன் மனசாலும் உன் செயலை தடுக்கலையே ஆண் : பாட்டன் வழி வந்த பழக்கதோசம் பேரன் என்னிடமும் நிறைந்திடுதே பெண் : பூட்டி வழி வந்த பண்பாட்டை -- முழுதாய் என் உடலும் காத்திடுதே இருவரும்: மலர்மாலை சூடி மங்கலநான் சுமந்து மங்கியதோர் நிலவினில் மறைபொருள் யாவும் தேடியே மகிழ்ந்தே உறவாடலாம் இருவரும் இணைந்தே இன்பம் காணலாம்......! யாழ் அகவை 25 க்காக ஆக்கம் சுவி ......!
  6. என்னுடன் தற்போது Reha Clinic‘ல் தெரப்பி செய்து கொண்டு இருக்கும், 25 வயதுடைய ஜேர்மன் இளைஞனும் அவனது நண்பியும், சென்ற வருடம் 2022 மாசி மாதமளவில் “Gotha Go Home“ போராட்டம் மும்முரமாக நடந்து கொண்டிருந்த போது இலங்கைக்கு நான்கு கிழமை ✈️ சுற்றுலாவில் 🛩 சென்றவர்கள். பெடியனுக்கு… 25 வயது என்ற படியால், அவன் என்றே தொடர்ந்து குறிப்பிடுகின்றேன். 😁 அவன் போன நேரம்… காலி முகத் திடல் மட்டுமல்லாது பல இடங்களிலும் ஆர்ப்பாட்டாங்கள் நடந்து கொண்டு இருந்தாலும்… தங்களை அது பெரிதாக பாதிக்கவில்லை என்றும், பார்ப்பதற்கு சுவராசியமாக இருந்ததாக குறிப்பிட்டார். ஶ்ரீலங்கா போய் இறங்கிய நேரம் ஒரு ஐரோ 280 ரூபாய் இருந்தது என்றும், பிறகு தினமும் 📈 அதிகரித்து சென்று 380 ரூபாயில் வந்து நின்றது மகிழ்ச்சியாக இருந்தது என்று சொன்னார். ஒரு முறை 🚅 ரயிலில் போக… ரயில் நிலையத்துக்கு சென்று பயணசீட்டு கேட்ட போது, அங்கு இருந்த அரச 👨🏻‍✈️ ஊழியர் இனி ரயில் ஒண்டும் ஓடாது, வேண்டுமென்றால் மலிவான விலையில் வாடகைக் 🚙 கார், சாரதியுடன்… ஒழுங்கு செய்து தருவதாகவும், இலங்கையில் நிற்கும் காலம் முழுக்க அதனையே பாவிக்கலாம் என்றும்… ஒரு நாள் வாடகை 250 ஐரோ படி, மிகுதி மூன்று கிழமைக்கும் மொத்தமாக முற்பணம் செலுத்த வேண்டும் என்றும் அந்த ரயில் நிலைய அரச அதிகாரி கேட்டாராம். தான் ஹோட்டேலுக்கு போய் யோசித்து சொல்வதாக சொல்லிவிட்டு வந்துவிட்டாராம். அடுத்த நாள் பார்த்தால்… வழமை போல் ரயில் ஒடுவதாகவும். நல்ல காலம் ஒரு ஏமாற்று பேர் வழியிடம் இருந்து தப்பி விட்டதாகவும் குறிப்பிட்டார். 🚂 ரயிலில்… கதவருகே இருந்து… அவனும், நண்பியும் தொங்கிக் கொண்டு சாகசம் செய்தபடி போன தருணங்கள் மிக இனிமையான நிகழ்வுகளில் ஒன்றாக குறிப்பிட்டார். 🐘 யானையில் சவாரி செய்ததையும், யானையை தொட்டு குளிப்பாட்டியதையும் அடிக்கடி குறிப்பிடுவதோடு… மற்றைய ஜேர்மன்காரருக்கும் அந்தப் படங்களை காட்டி பெருமைப் பட்டுக் கொள்வார். 😀 நான் இலங்கையில் வசிக்கும் போது…. சிவனொளிபாத மலை, சிகிரியா போன்றவற்றை பார்க்கவில்லை என்று அறிந்ததும்… நான் பார்க்காததை, தான் பார்த்து விட்டதாக… அவருக்கு அற்ப சந்தோசமும் உள்ளது. 😂 உணவு வகைகளில்…. விதம் விதமான 🥬 மரக்கறி வகைகள் தமக்கு மிகவும் பிடித்தவை என்றும், தாம் மாமிசம் சாப்பிடாதவர்கள் என்பதால், தம் வாழ் நாளில் சாப்பிடாத 🥒 மரக்கறிகளை உண்டதாகவும், அதிலும் பிலாக்காய் கறியின் 🌶 சுவையையும் பாராட்டினார். 🍌 வாழைப்பழம் எல்லாம்… ஒரே மாதிரி என்று நினைத்துக் கொண்டிருந்த தனக்கு…. இலங்கை சென்ற பின்தான் தெரிந்ததாம் சிவப்பு, பச்சை நிறங்களிலும்… வித்தியாசமான அளவுகளிலும், சுவைகளிலும் வாழைப்பழங்களை பார்த்து ஆச்சரியப் பட்டதாக கூறினார். ஒரு முறை, தான் வாங்கிய ரயில் பயணச் சீட்டு குறிப்பிட்ட ரயிலுக்கு செல்லாது என தெரிந்து கொண்ட உள்ளூர் தம்பதிகள்.. தம்முடைய செலவிலேயே புதிய ரயில் பயணச் சீட்டை வாங்கித் தந்ததை நன்றியுடன் குறிப்பிட்டார். எப்போ, எங்கு… சாப்பிடப் போனாலும் தினமும் பருப்புக் கறியை தந்து, தனக்கு வெறுப்பு ஏற்படுத்தி விட்டார்களாம். 😂 ஜேர்மனிக்கு வந்து ஒரு வருடமாகியும் பருப்பை கண்டால் வெறுப்பாக இருக்குதாம். 🤣 பெடியன்… யாழ்ப்பாணம், நயினாதீவு எல்லாம் போயிருக்கிறான். 🥰யாழ்ப்பாண பயணம்தான்… இலங்கையிலேயே தனக்குப் பிடித்த இடம் என்றான். அது வரை, நான் அங்கு பிறந்ததாக அவனுக்கு சொல்லவில்லை. அவனாகவே சொன்ன கருத்து அது. ஏன் யாழ்ப்பாணம் பிடிக்கும் என்று கேட்ட போது… வெள்ளைக்காரர் ஒருவரும் இல்லாமல் தாங்கள் மட்டும் அந்த மக்களிடையே வித்தியாசமாக இருந்தது தனக்கு மிகவும் பிடித்துக் கொண்டதாக கூறினார். பிற்குறிப்பு: கிளினிக்கில் இருந்து கைத்தொலை பேசியில் எழுதியதால், பதிவை… வர்ணமயமாக மெருகூட்ட முடியாமைக்கு மன்னிக்கவும். இன்னும் இரண்டு நாள்தான் இங்கு இருப்பேன். பெடியனிடம் உங்கள் சார்பாக கேட்க வேண்டிய கேள்விகள் இருந்தால் கீழே எழுதவும். கேட்டு பதில் சொல்கின்றேன். 😁 புதன் கிழமை வீட்டிற்கு செல்வதால்… அதற்குப் பின் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வராது. 🤪 🤣
  7. தண்டவாளம்… பழசாக இருக்கின்ற படியால், 60’ம் கலியாண சோடிகளாக இருக்கும். 😂
  8. நிழலி, நான் பகிடிக்கு சொன்ன முத்த விசயத்தை… நீங்கள் உடனே நம்பியதை பார்க்க சரியான அப்பாவியாக இருப்பீர்கள் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. 🤣
  9. உலக நாடுகள் என்ன செய்தன? ஹிற்லரின் நாசிக் கட்சியின் ஆட்சியில் ஜேர்மனி வந்த காலப் பகுதி ஒரு அசாதாரணமான உலகக் சூழல் நிலவிய காலம். முதல் உலகப் போரினால் ஒரு லட்சம் இளைஞர்களையும், அதே காலப்பகுதியில் ஐந்து லட்சம் வரையான மக்களையும் இன்புழுவன்சாப் பெருந்தொற்றினால் இழந்த அமெரிக்கா, 1929 இல் உருவான பொருளாதார மந்த நிலையினால் கடுமையாகப் பாதிக்கப் பட்டது (இந்த மந்த நிலை- Great depression, ஏதோ ஒரு வகையில் 1939 வரை நீடித்தது). எனவே அமெரிக்கா ஒரு உலக சக்தியாக யாருக்கும் தோன்றவில்லை அப்போது. ஆனால், தங்கள் காலனிகள், சக்தி மிக்க கடற்படைகள் என்பவை காரணமாக பிரிட்டனும், பிரான்சும் இராணுவ ரீதியில் பலமாக இருந்த காலம் அது. நாடுகளின் சங்கம் (League of Nations) என்ற ஐ.நாவின் முன்னோடியான அமைப்பு அமெரிக்காவினால் முன்னின்று உருவாக்கப் பட்டாலும், அமெரிக்கா அந்த அமைப்பில் நிரந்தர உறுப்பினராகவில்லை. மாறாக, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் ஆகிய நிரந்தர உறுப்பினர்களோடு, சில டசின் நாடுகளை உறுப்பினர்களாக வைத்துக் கொண்டு "கூட்டுப் பாதுகாப்பு (collective security)" என்ற அடிப்படையில் நாடுகளின் சங்கம் இயங்கியது. ஆனால், செயல் திறன், அமலாக்கல் சக்தி என்பன குறைந்த ஒர் அமைப்பாக இருந்ததால் உண்மையிலேயே உலகின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பிரச்சினைகளை நாடுகளின் சங்கத்தால் தீர்க்க இயலவில்லை. உதாரணமாக, நிரந்தர உறுப்பினரான ஜப்பான், சீனாவின் மஞ்சூரியாப் பகுதியை ஆக்கிரமித்த போது, நாடுகளின் சங்கத்தினால் கண்டனம் மட்டுமே தெரிவிக்க முடிந்தது - இந்தக் கண்டனமே ஜப்பான் தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளக் காரணமாக இருந்தது. ஜேர்மனி கூட ஒரு குறுகிய காலப்பகுதியில் நாடுகளின் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப் பட்டது. ஹிற்லர் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் காரியங்களில் ஒன்றாக அந்த அமைப்பில் இருந்து ஜேர்மனியை விலக்கிக் கொண்டார். இதன் மூலம், உலகப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக வரப் போகும் இரு நாடுகள் நாடுகளின் சங்கத்தைப் புறக்கணிக்கும் வசதி வாய்ப்பு அமைந்தது. இப்படி உலக நாடுகள் - குறிப்பாகப் பலம் பொருந்திய நாடுகள்- தங்கள் உள்விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்த காலப்பகுதி (isolationism என்பார்கள்)ஹிற்லருக்கும், கிழக்கில் ஜப்பானியர்களுக்கும் மிக வாய்ப்பான காலமாக இருந்தது. மொத்தத்தில், ஜேர்மனியின் புதிய நாசி அரசை உலக நாடுகள் வித்தியாசமாகப் பார்க்கவில்லை என்று தான் பின்னர் வெளி வந்த இராஜதந்திரப் பரிமாற்றங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மாறாக, அரவணைத்துச் செல்லும் (appeasing) முயற்சி கூட 1932 முதல் ஆரம்பித்து விட்டது. உதாரணமாக, அமெரிக்கா, வெர்சை உடன்படிக்கையின் படி ஜேர்மன் மீது விதித்த பொருளாதாரத் தண்டனைகளை ஈடு செய்ய, குறுகிய காலக் கடன்களை வழங்கியிருந்தது. 1932 இல், ஜேர்மனியின் பொருளாதரப் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு அந்தக் கடன்களை வசூலிப்பதை தற்காலிகமாக ஒத்தி வைத்தது (debt moratorium - வட்டி மட்டும் கட்ட வேண்டிய நிலை). இதன் பின்னர், 1934 இல் ஹிற்லர் ஒரு சட்டத்தை இயற்றி, சகல வெளிநாட்டுக் கடன்களையும் ஒரு தலைப் பட்சமாக நிறுத்தி வைத்தார். இதனால், ஜேர்மன் பணம் நாட்டை விட்டு வெளியே செல்வது வெகுவாகக் குறைக்கப் பட்டது. பொருளாதாரத்தில் ஒரு கண் வைத்திருந்த நாசிகள் கடன்களின் சுமையில்லாமல் மூச்சு விடக் கிடைத்த இடைவெளியில் நாசிகள் ஜேர்மன் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் தீவிரமாக ஈடுபட்டனர். ஜேர்மன் மக்களின் தொழில் நுட்பத் திறமை, உயர்ந்த கல்வி மட்டம், அதிகாரத்திற்குப் படிந்து எதையும்செய்யும் நடத்தைப் போக்கு (இதை முறைப்பாடு செய்யாமல் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் stoicism என்றும் சொல்வார்கள் - இது ஜேர்மன் தேசிய அடையாளங்களுள் ஒன்று என்று கூடச் சிலர் சொல்வர்!) என்பன நாசிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன. வேலையற்ற ஜேர்மனியருக்கு வேலை வழங்க, கட்டுமானத் திட்டங்கள் உருவாக்கப் பட்டன - உலகின் முதல் நெடுஞ்சாலை வலையமைப்பு ஆட்டோ பான் (Autobahn) என்ற பெயரில் ஜேர்மனியில் உருவானது. இரும்புப் பொருட்கள் உற்பத்தி, எண்ணை சுத்திகரிப்பு, செயற்கை இறப்பர், இரசாயனங்கள் என ஏராளமான பொருட்களின் உற்பத்தி அளவு ஒரிரு ஆண்டுகளிலேயே பல மடங்குகளால் அதிகரித்தது நாசிகளின் ஆட்சியில். அதே வேளையில், வேலையில்லாதோருக்கு சீருடைகளை அணிவித்து, புதிது புதிதாக ஆயுதப் படைப்பிரிவுகளை உருவாக்கும் வேலையும் நடந்தது. காக்கிச் சட்டைகள் (brown shirts) என்று அழைக்கப் பட்ட ஹிற்லர் இளைஞரணியும் ஒரு தனிப் படையாக வளர்க்கப் பட்டது. நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் அதிகரித்தது. நாசிகளை நம்பிக்கையுடன் ஆதரித்த மக்கள் "இது பொற்காலம்" என மகிழ்ந்து அவர்களது கூட்டங்களில் மந்திர சக்தியால் ஆட்கொள்ளப் பட்ட பொம்மைகள் போலக் கலந்து குதூகலித்தனர், ஆர்ப்பரித்தனர். ஆனால், இந்த 1930 களின் நாசி ஜேர்மன் பொருளாதாரம் ஒரு போர்க்காலப் பொருளாதாரம் என்பது முன்னுரிமை வழங்கப் பட்ட துறைகளைப் பார்க்கும் போதே தெளிவாக யாருக்கும் தெரிந்து விடும். அதாவது, வெர்சை உடன் படிக்கையின் படி ஆயுதப் படைகளை நவீன மயப்படுத்தும் உரிமையை இழந்த ஜேர்மனி, மறைமுகமாக தன் இராணுவப் பற்களைத் தீட்டிக் கொண்டிருந்தது. இதனை எத்தனை உலக நாடுகள் புரிந்து கொண்டிருந்தன என்பதில் வரலாற்றியலாளர்கள் முரண்படுகின்றனர் - ஆனால், ஹிற்லர் தன்னைச் சுற்றி வைத்திருந்த ருடோல்f ஹெஸ், ஜோசப் கோயபல்ஸ், ஹேர்மன் கோறிங் ஆகிய பெரிய தலைகள் ஜேர்மனியின் ஆயுத மயமாக்கலின் நீண்டகால நோக்கத்தை அறிந்திருந்தனர். உதாரணமாக, வெர்சை உடன் படிக்கையின் படி, ஜேர்மன் விமானப்படையொன்றைக் கட்டியெழுப்ப தடை இருந்தது. ஆனால், ஜேர்மனியில் பல சிவிலியன் விமான நிறுவனங்கள் முதல் உலகப் போர் காலத்திலேயே இருந்திருக்கின்றன. ஹெர்மன் கோறிங், இந்த சிவிலியன் விமான நிறுவனங்களின் திறமை வாய்ந்த விமானிகளை இரகசியமாக ஒன்று சேர்த்து, பயிற்சியளித்து ஜேர்மன் விமானப் படையை கண்காணிப்புக் குறைந்த ஜேர்மன் நாட்டுப் புறங்களில் கட்டியமைத்து வந்தார். இவ்வாறு உருவாக்கப் பட்ட ஜேர்மன் விமானப்படை (Luftwaffe), இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனுக்கு மிகுந்த சவாலாக விளங்கியது குறிப்பிடத் தக்கது. இருளிரவின் ஆரம்பம் இவ்வளவு தொழில்நுட்ப, பொருளாதார, கல்வி மேலாண்மை கொண்ட ஜேர்மன் சமுதாயம், "ஆரியர்கள்" அல்லாத யூதர்கள், றோமா மக்கள் ஆகியோரையும், ஓரினச் சேர்க்கையாளர்களையும், லூதரன் கிறிஸ்தவர்கள் அல்லாத ஏனைய கிறிஸ்தவர்களையும் எப்படி ஒதுக்கி வைத்தது? ஒதுக்கி வைத்தது மட்டுமல்லாமல், அவர்களை எப்படி வகை தொகையின்றிக் கொன்றொழித்தது? இத்தகைய இருண்ட மாற்றங்கள் 1933 இலிருந்து ஆரம்பிக்கின்றன - ஹிற்லரின் பேச்சுக்கள் செயல் வடிவம் பெற்றன. சாதாரண ஜேர்மன் மக்களும், ஜேர்மனியில் வசித்த வெளிநாட்டவர்களும் கூட "நாசிகள் ஒன்றும் மோசமில்லை"😎 என்று சான்றிதழ் கொடுக்கும் அளவுக்கு எப்படி பொருளதாரம், கலாச்சார மேன்மை ஆகிய பொன்முலாம் கொண்டு நாசிகள் தங்கள் மிருகத் தனத்தை மறைத்தனர்? இது தான் நண்பர்களே வரலாறு திரும்பும் ஒரு சிறந்த உதாரணக் கதையாக இருக்கிறது. -இன்னும் வரும் ஜஸ்ரின்
  10. விறகு வைத்து எரித்து வீடு சூடாக்கினால் தீ அணைக்கும் படை வருவதில்லையே? நேரே சுடுகாடு தான்.
  11. 🤣 சிரிப்போ சிரிப்பு 🤣 · Rejoindre P Baskar Uadangudi · · போன வாரம் யோகா கிளாஸ்க்கு போயிருந்தேன்... முதல் நாள் : எங்க குரு மனசை பத்தி Class எடுத்திட்டு இருந்தார்.. நம்ம உடம்பை Control பண்றதை விட., மனசை Control பண்றது கஷ்டம்.. ஏன்னா நம்ம மனசு சாமி கும்பிடும் போது வெளியில விட்ட செருப்பை நினைக்கும்.. விரதம் இருக்கும் போதுதான் பிரியாணியபத்தி நினைக்கும்.. இதுக்கு எங்க குரு சொன்ன ஒரு உதாரணம்.. நீங்க ஒரு காரை Start பண்றீங்க.. ஆனா அந்த கார்... Right-ல திருப்பினா - Left-ல போகுது., Left-ல திருப்பினா - Right-ல போகுது., Gear-ஐ முன்னாடி போட்டா - பின்னாடி போகுது.., பின்னாடி போட்டா - முன்னாடி போகுது.., அப்ப நீங்க என்ன பண்ணுவீங்கன்னு கேட்டார்.. மெக்கானிக்கிட்ட விடுவேன்னு ஒருத்தரும்.., காரை விட்டு இறங்கிடுவேன்னு இன்னொருத்தரும் சொன்னாங்க.. அந்த காரை வித்திடுவேன்னு மற்றொருவரும் சொன்னாங்க.. ஆனா எங்க குருவோ.., " Brake போட்டு காரை முதல்ல நிறுத்தணும்..! " அதுதான் நீங்க உடனடியா செய்ய வேண்டியதுன்னு சொன்னார்.. அப்ப பக்கத்துல இருந்தவர் கிட்ட கிசுசிசுன்னு ஒன்னு கேட்டேன் .. அவர் அப்படியே ஷாக் ஆயிட்டார்.. அப்ப குரு பார்த்துட்டார் என்ன கேட்டேனா.. ? " ஏன் சார்.. அந்த டப்பா கார்ல ப்ரேக் மட்டும் ஒழுங்கா வேலை செய்யுமா..? நிக்கிறதுக்கு பதிலா வேகமா போயிடிச்சின்னா என்ன பண்றதுன்னு? " இப்ப முதல்ல வாயை Control பண்ணுறது எப்படின்னு பயிற்சி நடக்குது .,
  12. தாய்லாந்தில் கண்டு பிடிக்கப் பட்ட 100 மீற்றர் உயரமானதும்.. 800,000 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மரத்தின் தொல்பொருள் மிகுதி. Fossil trees that have come close to today's tallest redwood heights have been found in northern Thailand. The longest of the petrified log measures 72.2 meters (237 feet), suggesting the original tree towered more than 100 meters (330 feet) in a humid tropical forest about 800,000 years ago. Ancient Sighting Mystery
  13. சயனைட் செலுத்தப் பட்டதால் ஏற்பட்ட மரணம் என கண்டு பிடிக்க 2 மாதங்கள் எடுத்துள்ளதா?
  14. வெளிநாடுகளில் விறகு வைத்து சமைத்தால் தீஅணைக்கும் படை தான் வரும்.
  15. டபுள் பைக்கட் போட்டு பாருங்கள் அத்துடன் நல்லா கொதிக்க வைத்து சூடு பறக்க ஆத்தி எடுங்கள் லண்டன் சுவையை விட நன்றாக இருக்கும் பிளேன் டீ என்றால் நன்றாக சூடுபடுத்தி ஆத்தி எடுக்கணும் துர் அதிஷ்ட வசமாக லண்டனில் உள்ள ஒருபாவுக்கு மூன்று வடை விக்கும் கடைகளில் இருக்கும் சேல்ஸ் வுமணிடம் பிளேன் டீ கேட்டால் அருவருப்பாக முதலில் எங்களை பார்ப்பார்கள் அதன்பின் சோகமாக முகத்தை வைத்து கொண்டு பாரதி ராஜாவின் படங்களில் வருவது போல் சிலோ மோஷனில் சீனி போட்டு கரண்டியால் கலக்கி தருவார்கள் ஆத்தி எடுத்து தாங்க என்றாலும் காது கேளாதவர் போல் பிளேன் டீ கப்பை நீட்டுவார்கள் .😃
  16. தமிழ் சிறீ வந்துடடார் அத்தனையும் ஈஸ்ட்மன்ட் கலரில் அனுபவமாய் அசத் தல். நடத்துங்க தலீவா ! தினமும் ஆவலுடன்...
  17. போடுங்க போடுங்க எழுத்துக்களை மட்டுமல்ல செய்திகளையும் கலர்கலராக போடுங்கள்.
  18. காசி ஆனந்தனாக மாறிய காளிமுத்து சிவானந்தன் வைகாசி 6 ஆம் திகதி மாலைவேளை, நல்லூர் முடமாவடிப்பகுதியில் அமைந்திருந்த பத்மனாதனின் வீட்டிற்கு அருகில் தனது அமைப்பின் உறுப்பினர்கள் சிலரை தங்கத்துரை வேவுபார்க்க அனுப்பியிருந்தார். இருள் பரவத் தொடங்கியவேளை பத்மானாதனும் அவரது மனைவியும் காரில் ஏறிச் சென்றதாக அவருக்கு உறுப்பினர்கள் செய்தியனுப்பினர். அதனையடுத்து பத்மனாதனின் வீட்டிற்குச் சென்ற தங்கத்துரையும் அவரது உறுப்பினர்கள் சிலரும், அங்கிருந்த பத்மனாதனின் பிள்ளைகள் ஒருவரிடம் தாம் பத்மனாதனின் மனைவியிடம் திருமணம் ஒன்றை பதிவுசெய்வது தொடர்பாகப் பேச வந்திருப்பதாகக் கூறினர். பத்மனாதனின் மனைவி திருமணப் பதிவாளராகச் செயற்பட்டு வந்திருந்தார். தமது பெற்றோர், நண்பர்கள் சிலரைப் பார்க்கச் சென்றிருப்பதாகவும், விரைவில் வந்துவிடுவார்கள் என்றும் பிள்ளைகள் தங்கத்துரையிடம் கூறினர். இதனைத் தொடர்ந்து, தாம் வீதியின் ஓரத்தில் அவர்கள் வரும்வரைக் காத்திருப்பதாகச் சொல்லிவிட்டு வீட்டிற்கு வெளியே சென்றனர் தங்கத்துரையும் உறுப்பினர்களும். பத்மனாதன் திரும்பிவரும்வரை அவரது வீட்டு முகப்பில் அவர்கள் காத்திருந்தனர். பத்மனாதன் காரை விட்டு இறங்கி வாயிற்கதவை திறக்க எத்தனித்தபோது ஜெகன் தனது கைத்துப்பாக்கியினால் பத்மனாதனின் நெற்றிப்பொட்டில் சுட்டார். 55 வயது நிரம்பியிருந்த பத்மனாதன் நிலைகுலைந்து வீழ்ந்து அவ்விடத்திலேயே மரணமானார். அவரைக் கொன்றவர்கள் எதுவித தடயமும் இன்றி இருட்டினுள் மறைந்துபோனார்கள். பத்மனாதனின் கொலையுடன், வடக்கில் பொலீஸாரின் கட்டமைப்பை அழிக்கவே போராளிகள் முயல்கிறார்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்ட அரசு, தேவநாயகம் தயாரித்து வந்த போராளிகளுக்கெதிரான சட்டங்களை உடனடியாக உருவாக்கி நடைமுறைப்படுத்துவதில் அதீத அக்கறை காட்டியது. அதன்படி புலிகளையும், அவர்களின் அமைப்பினை ஒத்த ஏனைய அமைப்புக்களையும் தடை விதிக்கும் சட்டத்தின் வரைவினை தேவநாயகம் முன்வைத்தார். இந்த வரைபு அரசியலமைப்புச் சட்ட ஆணைக்குழுவினரிற்கு ஜே ஆர் இனால் அனுப்பப்பட்டதோடு, அதனை உடனடியாக சட்டமாக்கும்படியும் அவரால் அழுத்தம் கொடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் ஒரு பகுதியில் இயங்கிவந்த நீதிமன்றிற்குச் சென்ற தேவநாயகம் இத்தடை சட்டமாக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். இந்த வழக்குத் தொடர்பான சில தகவல்களை நான் டெயிலிநியூஸ் பத்திரிக்கையில் பதிவிட்டிருந்தேன். இச்சட்டத்தின் ஊடாக பொலீஸாருக்கும், இராணுவத்திபருக்கும் வழங்கப்படவிருக்கும் அதீத அதிகாரம் குறித்து நீதிமன்றம் அச்சம் கொண்டிருந்தது. இச்சட்டம் பொலீஸாருக்கும், இராணுவத்தினருக்கு சந்தேக நபர்களைக் கைதுசெய்தல், தடுத்து வைத்தல், அவர்களின் சொத்துக்களை கையகப்படுத்துதல், மரண தண்டனை வழங்கல் உட்பட பல தங்குதடையின்றிய அதிகாரங்களை வழங்கியிருந்தது. இசாட்டத்தினைப் பாவித்து அரசாங்கம் எதிர்க்கட்சிக்குச் சார்பான தொழிற்சங்கங்களைக் கூட துன்புறுத்த முனையும் என்றும் சிறிமாவின் வழக்கறிஞர் தனது கட்சியின் அதிருப்தியினைத் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய தேவநாயகம் எதிர்க்கட்சியினரது அச்சம் தேவையற்றது என்றும், இச்சட்டம் ஒருவருட காலத்திற்குள் அகற்றப்பட்டுவிடும் என்றும் உறுதியளித்தார். இந்தச் சட்டத்தை அரசாங்கம் நீட்டித்துக்கொள்ளும் உத்தேசம் இருக்கிறதா என்று நீதிபதிகள் வினவியபோது, தேவநாயகம் பின்வருமாறு பதிலளித்தார், "நாம் இந்தச் சட்டத்தினை ஒருவருடத்திற்கு மேலாக நீட்டிக்க வேண்டிய தேவை இருக்காது. இந்த ஒருவருட காலத்திற்குள் பயங்கரவாதிகளை முற்றாக அழித்துவிடுவோம் என்று எமது அரசாங்கம் உறுதியாக நம்புகிறது" என்று கூறினார். இதனையடுத்து இச்சட்ட நகலை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இச்சட்டத்தின் மூல அரசியல் யாப்பிற்கு பாதிப்பேதும் ஏற்பட்டுவிடாதென்று கூறியதோடு, இதனை பாராளுமன்றத்தில் விவாதப்பொருளாக்கவும் அனுமதியளித்தது. பாராளுமன்றத்தில் இந்த வரைபு பலத்த ஆதரவுடம் வைகாசி 18 ஆம் திகதி சட்டமாக்கப்பட்டது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் சேர்ந்து சுதந்திரக் கட்சியினர் இந்த சட்டத்திற்கு எதிராக வக்களிக்க 131 ஆதரவு வாக்குகளுக்கு 25 எதிர் வாக்குகள் என்கிற அடிப்படையில் இந்தத் தடை சட்டமாக உருவாக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் தனக்கிருந்த அறுதிப்பெரும்பான்மையினைப் பாவித்து மிக இலகுவாக இச்சட்டத்தினை ஜே ஆர் நிறைவேற்றினார். காசி ஆனந்தன் இச்சட்டத்தினைப் பாவித்து பொலீஸார் பிரபாகரன் தலைமையிலான 38 போராளிகளின் பெயர்களை தேடப்படுபவர்களாக அறிவித்தனர். இந்த போராளிகளின் படங்கள் மற்றும் அவர்களின் பெயர்கள் அடங்கிய சுவரொட்டிகளை கொழும்பிலும், தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் பொலீஸார் ஒட்டினர். இவ்வாறு தேடப்பட்ட போராளிகளில் பலர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் இளைஞர் பிரிவின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்பதும், இவர்கள் முன்னர் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. தேடப்பட்டு வந்த 38 இளைஞர்கள் 26 இளைஞர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் வழக்கறிஞர்களின் ஆலோசனைக்கிணங்க வைகாசி 26 ஆம் திகதி பொலீஸாரிடம் சரணடைந்தனர். இவர்களுள் காசி ஆனந்தன், மாவை சேனாதிராஜா, வண்ணை ஆனந்தன், புஸ்பராஜா, நடேசானந்தன், சிறி சபாரட்ணம், சபாலிங்கம் மற்றும் சந்ததியார் உற்பட பலரும் இருந்தனர். இவர்கள் எவருமே பஸ்டியாம்பிள்ளையின் கொலையுடன் தொடர்புபட்டிருக்கவில்லையென்பதும், அக்கொலையில் ஈடுபட்ட எவருமே சரணடையவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. தேடப்படும் இளைஞர்களின் பட்டியலில் காசி ஆனந்தனின் பெயரும் சேர்க்கப்பட்டது கேலிக்குரிய விடயமாக பல தமிழ் ஊடகவியலாளர்களால் அன்று பார்க்கப்பட்டது. அவரது உண்மையான பெயர் காளிமுத்து சிவானந்தன் ஆக இருந்தபோதும், கவர்ச்சிக்காக தனது பெயரை அவர் காசி ஆனந்தன் என்று மாற்றியிருந்தார். அவர் மட்டக்களப்பு அமிர்தகழியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவர் கவிதைகளை எழுதிவந்ததோடு, சமஷ்ட்டிக் கட்சியின் கூட்டங்களில் தனது கவிதைகளைப் பாடியும் வந்தவர். சமஷ்ட்டிக் கட்சி வன்முறையற்ற போராட்டங்களை ஆரம்பித்த 60 களின் காலப்பகுதியில் அவர் எழுதிய இரு கவிதைகள் மிகவும் பிரபலமாக இருந்தன. ################################# "பத்துதடவை படை வராது, பதுங்கிப் பாயும் புலியே தமிழா' செத்து மடிதல் ஒரு தரம் அன்றோ?, சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!" ################################# "வெறிகொள் தமிழர் புலிப்படை, அவர் வெல்வார் என்பது வெளிப்படை" காசி ஆனந்தனின் கவிதை எழுதும் விருப்புப் பற்றிப் பொலீஸார் அறிந்திருக்கவில்லை. இவை புலிகள் அமைப்போ அல்லது அவர்களின் முன்னைய அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் அமைப்போ உருவாகும் முன்னரே வெளிவந்திருந்த கவிதைகள். தனது கவிதைகளில் புலி எனும் பதத்தினைப் பாவித்தமைக்காகவே காசி ஆனந்தனையும் தேடப்படுவோர் பட்டியலில் பொலீஸார் சேர்த்திருந்தனர். சோழர்களின் வழித்தோன்றல்கள் என்றும் தம்மை கூறிக்கொள்ளும் இலங்கைத் தமிழர்கள் புலியினை தமது இலட்சினையாக வரிந்துகொள்வது அக்காலத்தில் இயல்பாக இருந்தது. என்னிடம் உமா பேசும்போது பஸ்டியாம்பிள்ளையின் கொலைக்குப் பின்னரான நிலைமைகள் குறித்து பிரபாகரன் திருப்தியுடன் காணப்பட்டதாகக் கூறினார். பஸ்டியாம்பிள்ளையின் கொலைச் சம்பவத்தினூடாக பொலீஸாரிடமிருந்து புலிகள் கைப்பற்றியிருந்த உப தானியங்கித் துப்பாக்கியை பிரபாகரன் பொக்கிஷம் போலப் பாதுகாத்து வைத்திருந்ததாக உமா கூறினார். சமூக விரோதிகளின் கொலைகளுக்கான உரிமை கோரல்கள் மற்றும் தம்மீதான தடை ஆகியவற்றின் மூலம் உலகில் அடக்குமுறைக்குள் அகப்பட்டிருக்கும் மக்களின் விடுதலைக்காககப் போரிடும் போரட்ட அமைப்புக்களில் ஒன்றாக புலிகளும் ஆகிப்போனார்கள். தம்மீதான தடையினை ஜே ஆர் தமக்களித்த பரிசாக பிரபாகரன் கருதியதாக உமா கூறினார். "தமிழ் ஆயுதக் ககுழுவுக்கெதிராக தமது அரசாங்கம் போராடுவதாக ஜே ஆர் உலகிற்கு அறிவித்தார். இதைவிட மேலான பரிசொன்றினை ஜே ஆரினால் புலிகளுக்கு வழங்கியிருக்க முடியாது. ஆகவே, ஜே ஆர் எமக்கு வழங்கிய கெளரவத்திற்கு நாம் தகுதியுடையவர்கள் தான் என்பதை நிரூபிக்க நாம் ஏதாவது பாரிய நடவடிக்கை ஒன்றினைச் செய்யவேண்டும் என்று எண்ணினோம். இங்கிருந்தே அவ்ரோ விமானத்தைத் தகர்க்கும் திட்டம் உருவானது" என்று உமா மேலும் கூறினார். புலிகளையும் ஏனைய தமிழ் ஆயுத அமைப்புக்களையும் தடை செய்யும் தீர்மானத்தை ஜே ஆர் நிறைவேற்றியபின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போனமை போராளிகளுக்குக் கடுமையான ஏமாற்றத்தினை அளித்திருந்தது. ஆத்திரமடைந்த இளைஞர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமைக்கெதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினர். இத்தலைவர்களுக்கு எதிராக யாழ் வைத்தியசாலை மதிலில் எழுதப்பட்டிருந்த வாசகம் இவ்வாறு கூறியது, " கேட்டது தமிழ் ஈழம், கிடைத்ததோ ஜப்பான் ஜீப்" பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜே ஆரினால் வழங்கப்பட்ட ஜப்பானிய ஜீப் வண்டிகளை முன்வைத்தே மேற்படி வாசகம் எழுதப்பட்டிருந்தது. தந்தை செல்வா இருக்கும்வரை அரசாங்கத்திடமிருந்து வந்த சலுகைகள் எல்லாவற்றையும் வேண்டாம் என்று உதறித்தள்ளியிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது அவற்றை மிகுந்த ஆவலுடன் பெற்றுக்கொள்ளும் நிலைமைக்கு இறங்கியிருந்தனர். அமிர்தலிங்கத்திடம் இதுகுறித்த அவரது நிலைப்பாடுபற்றிக் கேட்டேன், "அவர்கள் இன்னும் வெறும் பையன்கள் தான். சூழ்நிலையின் நுணுக்கங்களை புரிந்துகொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இல்லை" என்று என்னிடம் அவர் கூறினார். மேலும், தான் கூறப்போவதை வெளியே பதிவிட வேண்டாம் என்று என்னைக் கேட்டுக்கொண்டபடியே, "உங்களின் எதிரி யாரென்பது குறித்து நீங்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். எங்கள் மீது பாய்வதற்கு அவர் தயாராகிக்கொண்டு இருக்கிறார்" என்றும் அவர் கூறினார். உண்மையாகவே அப்படியான பாரிய திட்டம் ஒன்றில் ஜே ஆர் ஈடுபட்டிருந்தார். ஆனால், அவரது திட்டம் கடுமையான தோல்வியினைச் சந்தித்தது. அவரது நோக்கம் தமிழர் ஐக்கிய முன்னணியினரை தமிழர்கள் மத்தியிலும், தேசிய அளவிலும் பலவீனப்படுத்துவதாகவே இருந்தது. இதன் மூலம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் அடங்கிப்போய், தன்னிடம் பணிந்து வந்து தனது தயவினை நாடுவார்கள் என்று அவர் எதிர்பார்த்தார். இதன்மூலம் சர்வதேசத்தில் தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியும் என்றும், தமிழ்ப் போராளிகளை முற்றாக அழித்துவிட முடியும் என்றும் அவர் நம்பினார். தமிழர்களைத் தாக்குவதற்கென்றே ஜே ஆரினால் அரவணைக்கப்பட்டு வந்த சிறில் மத்தியூ எனும் சிங்கள இனவாதியை அமிர்தலிங்கத்தின்மீது காரசாரமான விமர்சனங்களை முன்வைக்கும்படி ஜே ஆர் ஏவிவிட்டார். இதனையடுத்து விசேட பத்திரிக்கையாளர் மாநாடொன்றினைக் கூட்டிய சிறில் மத்தியூ புலிகளுக்குப் பின்னால் இருந்து தூண்டிவிடுவது அமிர்தலிங்கமே என்று அடித்துக் கூறினார். புலிகளின் உரிமைகோரல் கடிதமே அமிர்தலிங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான தொடர்பினை வெளிப்படுத்துகிறது என்று அவர் வாதிட்டார். இதன்ம்முலம், அமிர்தலிங்கத்தை தற்காப்பு நிலைக்குத் தள்ள சிறில் மத்தியுவினால் முடிந்தது. அமிர்தலிங்கமும் சிறில் மத்தியூ வைத்த பொறிக்குள் வீழ்ந்ததுடன், புலிகளால் வெளியிடப்பட்ட கடிதம் போலியானது என்றும், பொலீஸாரே இந்த கடிதத்தினைப் புலிகளின் பெயரில் வெளியிட்டனர் என்றும் கூறத் தலைப்பட்டார். "சகல சந்தேகங்களுக்கும் அப்பால், இக்கடிதம் பொலீஸாரின் உயர்மட்டத்தின் திட்டப்படி வெளியிடப்பட்டது என்பதை முழு அத்காரத்துடன் என்னால் கூறமுடியும். புலிகளால் வரையப்பட்ட கடிதம் என்று போலியாக அனுப்பப்பட்ட இக்கடிதம் அரச அதிகாரத்திலிருக்கும் சில சக்திகளால் உருவாக்கப்பட்ட நாடகம்" என்று பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கம் கூறியதோடு, புலிகள் என்கிற அமைப்பே இல்லையென்றும் வாதிட்டார். மேலும், அமிர்தலிங்கத்தின் மனைவியான மங்கையற்கரசிக்கெதிரான விஷமப் பிரச்சாரத்தில் இறங்கிய சிறில் மத்தியூ, தமது கனவான ஈழத்தை அடைய சிங்களவரின் குருதியில் குளிக்க தமிழர் தயாராக இருப்பதாக மங்கையற்கரசி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதாகவும் அவர் கூறினார். மேலும், சிங்களவர்களின் தோலில் செருப்புக்களைச் செய்து தாம் அணியப்போவதாக மங்கையற்கரசி பேசியதாகவும் அவர் கூறினார். இவ்விரு குற்றச்சாட்டுக்களையும் அமிர்தலிங்கம் முற்றாக மறுத்திருந்தார். ஜே ஆர் பின்னர் இன்னொரு பொறியினையும் அமிர்தலிங்கத்திற்கெதிராக வைத்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை ஆனி 10 ஆம் திகதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன், இதற்கு மிகப்பெரிய பிரச்சாரத்தினையும் வழங்கினார். போராளிகள் இதனால் சினமடைந்தனர். ஆகவே, இந்த அழைப்பினை ஏற்கவேண்டாம் என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு அவர்கள் கூறினர். ஆனால், அவர்களின் வேண்டுகோளை அமிர்தலிங்கம் நிராகரித்தார். தங்கத்துரை அணியினர் மீண்டும் தாக்குதலில் இறங்கினர். பஸ்டியாம்பிள்ளைக்குப் பின்னர் தமிழ் ஆயுத அமைப்புக்களைக் கண்காணித்து வந்த இன்னொரு தமிழ் பொலீஸ் அதிகாரியான உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் குட்டிப்பிள்ளை குமார், வெள்ளிக்கிழமை அன்று கோயிலிக்குச் செல்லும்போது தனது கைத்துப்பாக்கியைக் கொண்டுசெல்வதில்லை என்பதை தங்கத்துரை அணியினர் அறிந்து வைத்திருந்தனர். ஆகவே ஆனி 9, வெள்ளிக்கிழமை அன்று கோயிலில் பூஜைக்காக வாழைப்பழங்களையும் ஏனைய பொருட்களையும் கொள்வனவு செய்ய வல்வெட்டித்துறை நகர்ப்பகுதிக்கு கால்நடையாக குமார் வந்தார். அப்பகுதியில் மறைந்திருந்த குட்டிமணியும் ஜெகனும் குமார் மீது பாய்ந்து அவரை கீழே வீழ்த்திக் கொன்றனர். குமாரின் கொலை ஜே ஆருக்கும், அமிர்தலிங்கத்திற்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகக் கருதப்பட்டது. ஜே ஆரின் தடைபற்றி தாம் சிறிதும் கவலைகொள்ளவில்லை என்று டெலோ அமைப்பு அறிவித்திருந்தது. ஆனால், அமிர்தலிங்கத்திற்கு அனுப்பப்பட்ட எச்சரிக்க மிகத் தெளிவானது, "ஜே ஆர் உடன் எந்த தொடர்புகளையும் வைத்துக்கொள்ள வேண்டாம்" என்பதே அது. அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும், சம்பந்தனும் ஆனி 10 ஆம் திகதி அழைக்கப்பட்ட கூட்டத்தில் ஆஜராகியிருந்தனர். அங்கு பேசிய ஜே ஆர், மாவட்ட ரீதியிலான நிர்வாகத்தை மக்கள் முன் எடுத்துச் செல்வது குறித்து தான் கவலைப்படுவதாகவும், ஆகவே மாவட்ட மட்டத்திலான அமைச்சர்களை நியமிப்பது குறித்து தான் சிந்தித்து வருவதாகவும் கூறினார். மேலும், இந்த மாவட்ட அமைச்சர்கள் திட்டம் வெற்றிபெற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும் தனக்கு ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். "உங்களுக்கு நான் சில மாவட்ட அமைச்சர் பதவிகளைத் தரப்போகிறேன், நீங்களே அந்த மாவட்டங்களை நடத்திக்கொள்ளுங்கள். ஆகவே, இதுபற்றிச் சிந்தித்து, இத்திட்டம் வெற்றிபெற நாம் ஒன்றிணைந்து வேலை செய்யலாம்" என்று அவர்களைப் பார்த்து ஜே ஆர் கூறினார். இதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், "இதுபற்றி மேலதிக விபரங்களைத் தாருங்கள், நாம் இதுகுறித்து சாதகாமன் முறையில் பரிசீலிக்கிறோம்" என்று கூறினார். இந்தப் பேச்சுவார்த்தையின் தகவல்கள் லேக் ஹவுஸ் பத்திரிக்கைகளான டெயிலி நியூஸ், தினகரன் மற்றும் தினமின ஆகிய நாளிதழ்களுக்கு வேண்டுமென்றே கசியவிடப்பட்டன. தான் செய்ய விரும்பியதை ஜே ஆர் செய்துகொண்டார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் போராளிகளுக்கும் இடையே பகைமையினை இதன்மூலம் அவர் உருவாக்கினார். அமிர்தலிங்கத்தின் இந்த செயற்பாடு போராளிகளை மிகவும் ஆத்திரப்பட வைத்திருந்தது, குறிப்பாக டெலோ இதுகுறித்து கடுமையான அதிருப்தியைக் கொண்டிருந்தது. ஆகவே அவர்களின் பிரச்சாரக் கிளை ஜே ஆர் மீதும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மீதும் மிகக் காரசாரமான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியது. இதே காலப்பகுதியில் தமிழ் மக்களிடமிருந்து போராளிகள் பற்றிய தகவல்களைத் தமக்கு வழங்கிவருபவர்களின் எண்ணிக்கை வற்றுப்போனதையும், தமிழ் மக்கள் பொலீஸாரிடமிருந்தும், இராணுவத்திடமிருந்தும் தம்மை அந்நியப்படுத்திக்கொண்டுள்ளார்கள் என்பதையும் பொலீஸார் தெளிவாக அறிந்துகொண்டனர். தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான பிளவு இங்கிருந்து விரிவாகத் தொடங்கியிருந்தது.
  19. அருமை, சுவியர்...! ஏதோ முக்கியமான விசயம் சொல்ல வாறியள் எண்டு மட்டும் விளங்குது..!😄 அது என்ன எண்டு மட்டும் பிடிபடுகுது இல்லை...! தொடரட்டும் உங்கள் களப்பணி....!
  20. சமிபாடு எவ்வாறு நடைபெறுகிறது??

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.