Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    7055
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46798
    Posts
  4. இணையவன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    5
    Points
    7596
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/17/23 in Posts

  1. உலக நாடுகள் என்ன செய்தன? ஹிற்லரின் நாசிக் கட்சியின் ஆட்சியில் ஜேர்மனி வந்த காலப் பகுதி ஒரு அசாதாரணமான உலகக் சூழல் நிலவிய காலம். முதல் உலகப் போரினால் ஒரு லட்சம் இளைஞர்களையும், அதே காலப்பகுதியில் ஐந்து லட்சம் வரையான மக்களையும் இன்புழுவன்சாப் பெருந்தொற்றினால் இழந்த அமெரிக்கா, 1929 இல் உருவான பொருளாதார மந்த நிலையினால் கடுமையாகப் பாதிக்கப் பட்டது (இந்த மந்த நிலை- Great depression, ஏதோ ஒரு வகையில் 1939 வரை நீடித்தது). எனவே அமெரிக்கா ஒரு உலக சக்தியாக யாருக்கும் தோன்றவில்லை அப்போது. ஆனால், தங்கள் காலனிகள், சக்தி மிக்க கடற்படைகள் என்பவை காரணமாக பிரிட்டனும், பிரான்சும் இராணுவ ரீதியில் பலமாக இருந்த காலம் அது. நாடுகளின் சங்கம் (League of Nations) என்ற ஐ.நாவின் முன்னோடியான அமைப்பு அமெரிக்காவினால் முன்னின்று உருவாக்கப் பட்டாலும், அமெரிக்கா அந்த அமைப்பில் நிரந்தர உறுப்பினராகவில்லை. மாறாக, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் ஆகிய நிரந்தர உறுப்பினர்களோடு, சில டசின் நாடுகளை உறுப்பினர்களாக வைத்துக் கொண்டு "கூட்டுப் பாதுகாப்பு (collective security)" என்ற அடிப்படையில் நாடுகளின் சங்கம் இயங்கியது. ஆனால், செயல் திறன், அமலாக்கல் சக்தி என்பன குறைந்த ஒர் அமைப்பாக இருந்ததால் உண்மையிலேயே உலகின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பிரச்சினைகளை நாடுகளின் சங்கத்தால் தீர்க்க இயலவில்லை. உதாரணமாக, நிரந்தர உறுப்பினரான ஜப்பான், சீனாவின் மஞ்சூரியாப் பகுதியை ஆக்கிரமித்த போது, நாடுகளின் சங்கத்தினால் கண்டனம் மட்டுமே தெரிவிக்க முடிந்தது - இந்தக் கண்டனமே ஜப்பான் தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளக் காரணமாக இருந்தது. ஜேர்மனி கூட ஒரு குறுகிய காலப்பகுதியில் நாடுகளின் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப் பட்டது. ஹிற்லர் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் காரியங்களில் ஒன்றாக அந்த அமைப்பில் இருந்து ஜேர்மனியை விலக்கிக் கொண்டார். இதன் மூலம், உலகப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக வரப் போகும் இரு நாடுகள் நாடுகளின் சங்கத்தைப் புறக்கணிக்கும் வசதி வாய்ப்பு அமைந்தது. இப்படி உலக நாடுகள் - குறிப்பாகப் பலம் பொருந்திய நாடுகள்- தங்கள் உள்விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்த காலப்பகுதி (isolationism என்பார்கள்)ஹிற்லருக்கும், கிழக்கில் ஜப்பானியர்களுக்கும் மிக வாய்ப்பான காலமாக இருந்தது. மொத்தத்தில், ஜேர்மனியின் புதிய நாசி அரசை உலக நாடுகள் வித்தியாசமாகப் பார்க்கவில்லை என்று தான் பின்னர் வெளி வந்த இராஜதந்திரப் பரிமாற்றங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மாறாக, அரவணைத்துச் செல்லும் (appeasing) முயற்சி கூட 1932 முதல் ஆரம்பித்து விட்டது. உதாரணமாக, அமெரிக்கா, வெர்சை உடன்படிக்கையின் படி ஜேர்மன் மீது விதித்த பொருளாதாரத் தண்டனைகளை ஈடு செய்ய, குறுகிய காலக் கடன்களை வழங்கியிருந்தது. 1932 இல், ஜேர்மனியின் பொருளாதரப் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு அந்தக் கடன்களை வசூலிப்பதை தற்காலிகமாக ஒத்தி வைத்தது (debt moratorium - வட்டி மட்டும் கட்ட வேண்டிய நிலை). இதன் பின்னர், 1934 இல் ஹிற்லர் ஒரு சட்டத்தை இயற்றி, சகல வெளிநாட்டுக் கடன்களையும் ஒரு தலைப் பட்சமாக நிறுத்தி வைத்தார். இதனால், ஜேர்மன் பணம் நாட்டை விட்டு வெளியே செல்வது வெகுவாகக் குறைக்கப் பட்டது. பொருளாதாரத்தில் ஒரு கண் வைத்திருந்த நாசிகள் கடன்களின் சுமையில்லாமல் மூச்சு விடக் கிடைத்த இடைவெளியில் நாசிகள் ஜேர்மன் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் தீவிரமாக ஈடுபட்டனர். ஜேர்மன் மக்களின் தொழில் நுட்பத் திறமை, உயர்ந்த கல்வி மட்டம், அதிகாரத்திற்குப் படிந்து எதையும்செய்யும் நடத்தைப் போக்கு (இதை முறைப்பாடு செய்யாமல் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் stoicism என்றும் சொல்வார்கள் - இது ஜேர்மன் தேசிய அடையாளங்களுள் ஒன்று என்று கூடச் சிலர் சொல்வர்!) என்பன நாசிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன. வேலையற்ற ஜேர்மனியருக்கு வேலை வழங்க, கட்டுமானத் திட்டங்கள் உருவாக்கப் பட்டன - உலகின் முதல் நெடுஞ்சாலை வலையமைப்பு ஆட்டோ பான் (Autobahn) என்ற பெயரில் ஜேர்மனியில் உருவானது. இரும்புப் பொருட்கள் உற்பத்தி, எண்ணை சுத்திகரிப்பு, செயற்கை இறப்பர், இரசாயனங்கள் என ஏராளமான பொருட்களின் உற்பத்தி அளவு ஒரிரு ஆண்டுகளிலேயே பல மடங்குகளால் அதிகரித்தது நாசிகளின் ஆட்சியில். அதே வேளையில், வேலையில்லாதோருக்கு சீருடைகளை அணிவித்து, புதிது புதிதாக ஆயுதப் படைப்பிரிவுகளை உருவாக்கும் வேலையும் நடந்தது. காக்கிச் சட்டைகள் (brown shirts) என்று அழைக்கப் பட்ட ஹிற்லர் இளைஞரணியும் ஒரு தனிப் படையாக வளர்க்கப் பட்டது. நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் அதிகரித்தது. நாசிகளை நம்பிக்கையுடன் ஆதரித்த மக்கள் "இது பொற்காலம்" என மகிழ்ந்து அவர்களது கூட்டங்களில் மந்திர சக்தியால் ஆட்கொள்ளப் பட்ட பொம்மைகள் போலக் கலந்து குதூகலித்தனர், ஆர்ப்பரித்தனர். ஆனால், இந்த 1930 களின் நாசி ஜேர்மன் பொருளாதாரம் ஒரு போர்க்காலப் பொருளாதாரம் என்பது முன்னுரிமை வழங்கப் பட்ட துறைகளைப் பார்க்கும் போதே தெளிவாக யாருக்கும் தெரிந்து விடும். அதாவது, வெர்சை உடன் படிக்கையின் படி ஆயுதப் படைகளை நவீன மயப்படுத்தும் உரிமையை இழந்த ஜேர்மனி, மறைமுகமாக தன் இராணுவப் பற்களைத் தீட்டிக் கொண்டிருந்தது. இதனை எத்தனை உலக நாடுகள் புரிந்து கொண்டிருந்தன என்பதில் வரலாற்றியலாளர்கள் முரண்படுகின்றனர் - ஆனால், ஹிற்லர் தன்னைச் சுற்றி வைத்திருந்த ருடோல்f ஹெஸ், ஜோசப் கோயபல்ஸ், ஹேர்மன் கோறிங் ஆகிய பெரிய தலைகள் ஜேர்மனியின் ஆயுத மயமாக்கலின் நீண்டகால நோக்கத்தை அறிந்திருந்தனர். உதாரணமாக, வெர்சை உடன் படிக்கையின் படி, ஜேர்மன் விமானப்படையொன்றைக் கட்டியெழுப்ப தடை இருந்தது. ஆனால், ஜேர்மனியில் பல சிவிலியன் விமான நிறுவனங்கள் முதல் உலகப் போர் காலத்திலேயே இருந்திருக்கின்றன. ஹெர்மன் கோறிங், இந்த சிவிலியன் விமான நிறுவனங்களின் திறமை வாய்ந்த விமானிகளை இரகசியமாக ஒன்று சேர்த்து, பயிற்சியளித்து ஜேர்மன் விமானப் படையை கண்காணிப்புக் குறைந்த ஜேர்மன் நாட்டுப் புறங்களில் கட்டியமைத்து வந்தார். இவ்வாறு உருவாக்கப் பட்ட ஜேர்மன் விமானப்படை (Luftwaffe), இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனுக்கு மிகுந்த சவாலாக விளங்கியது குறிப்பிடத் தக்கது. இருளிரவின் ஆரம்பம் இவ்வளவு தொழில்நுட்ப, பொருளாதார, கல்வி மேலாண்மை கொண்ட ஜேர்மன் சமுதாயம், "ஆரியர்கள்" அல்லாத யூதர்கள், றோமா மக்கள் ஆகியோரையும், ஓரினச் சேர்க்கையாளர்களையும், லூதரன் கிறிஸ்தவர்கள் அல்லாத ஏனைய கிறிஸ்தவர்களையும் எப்படி ஒதுக்கி வைத்தது? ஒதுக்கி வைத்தது மட்டுமல்லாமல், அவர்களை எப்படி வகை தொகையின்றிக் கொன்றொழித்தது? இத்தகைய இருண்ட மாற்றங்கள் 1933 இலிருந்து ஆரம்பிக்கின்றன - ஹிற்லரின் பேச்சுக்கள் செயல் வடிவம் பெற்றன. சாதாரண ஜேர்மன் மக்களும், ஜேர்மனியில் வசித்த வெளிநாட்டவர்களும் கூட "நாசிகள் ஒன்றும் மோசமில்லை"😎 என்று சான்றிதழ் கொடுக்கும் அளவுக்கு எப்படி பொருளதாரம், கலாச்சார மேன்மை ஆகிய பொன்முலாம் கொண்டு நாசிகள் தங்கள் மிருகத் தனத்தை மறைத்தனர்? இது தான் நண்பர்களே வரலாறு திரும்பும் ஒரு சிறந்த உதாரணக் கதையாக இருக்கிறது. -இன்னும் வரும் ஜஸ்ரின்
  2. திரும்பும் வரலாறு - பாகம் 3 – நாசிகள். fபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) ஒரு வித்தியாசமான பேர்வழி. பயிர்கள் வளர நைதரசன் அவசியம். ஆனால், காற்றில் நிறைந்திருக்கும் நைதரசன் வாயுவை எல்லாப் பயிர்களாலும் பயன்படுத்திக் கொள்ள இயலாது. ஹேபர், நைதரசனை அமோனியா உரமாக மாற்றும் வழியைக் கண்டு பிடித்தது உலக விவசாய உற்பத்திக்குப் பாரிய பங்களிப்புச் செய்தது. இந்தக் கண்டு பிடிப்பிற்காக அவருக்கு இரசாயனவியலில் நோபல் பரிசும் கிடைத்தது. ஹேபரின் அடுத்த கண்டு பிடிப்பு கொஞ்சம் விவகாரமானது. குளோரின் வாயுவை, வாயுவாகவே குடுவையில் வைத்திருக்கும் முறையை ஹேபர் கண்டு பிடித்த போது, முதலாம் உலகப் போர் முடிவிற்கு வந்து கொண்டிருந்தது. ஹேபர், பிரெஞ்சுப் போர் முனைக்கு தனது குளோரின் வாயுச் சிலிண்டர்களை ஜேர்மன் படையினரோடு சேர்ந்து எடுத்துச் சென்று பதுங்கு குழியில், காற்று பிரெஞ்சுப் படைகள் இருந்த பக்கம் வீசும் வரைக் காத்திருந்தார். காற்று வளமாக வந்த வேளையில் குளோரின் வாயுவைத் திறந்து விட்டார். காற்றோடு சேர்ந்து பிரெஞ்சுப் படைகளின் பக்கம் நகர்ந்த குளோரின் வாயு தான் முதலாவது இரசாயன ஆயுதம். தரையோடு சேர்ந்து பரவிய குளோரின் வாயு எதிரிகளின் பதுங்கு குழிகளுக்குள்ளும் இறங்கி அவர்களை மூச்சுத் திணற வைத்தது. குளோரின் வாயுவினால் உடனடியாக இறக்காதோர் கண் பார்வை, நுரையீரல் என்பன நிரந்தரமாகப் பாதிக்கப் பட்டு சில நாட்களில் இறப்பர். அந்த மரணம் வரை உடல் அனுபவிக்கும் உபாதை கொடூரமானது. இவ்வாறு ஒரு தடவையில் ஜேர்மனி பயன்படுத்திய குளோரின் வாயுவினால் மட்டும் ஆயிரத்திற்கு சற்று அதிகமான பிரெஞ்சு, கனேடியப் படைகள் இறந்தனர். ஹேபருக்கு ஜேர்மனியில் மதிப்பு உயர்ந்தது, ஆனால் அவர் தனது விஞ்ஞான அறிவை இவ்வாறு பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஹேபரின் மனைவி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இதில் சுவாரசியமான தகவல் என்னவெனில், ஹேபர் ஒரு ஜேர்மனிய யூதர்! ஆனால், ஜேர்மன் தேசபக்தி காரணமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, 1933 இல் ஹிற்லர் ஆட்சிக்கு வந்த வேளையிலும் மேலும் சில இரசாயனவியல் வாயுக்களைக் கண்டறிந்து ஜேர்மனியின் விஞ்ஞான வளர்ச்சிக்கு உதவிக் கொண்டிருந்தார். இவ்வாறு இவர் அடுத்துக் கண்டு பிடித்த வாயு, ஐதரசன் சயனைட் வாயு. சிக்லோன் (Zyklon) என்று அழைக்கப் பட்ட இந்த நச்சு வாயுவை இலகுவாக சில திண்மப் பொருட்களிலிருந்து தயாரிக்கும் வழியை ஹேபர் கண்டு பிடித்தார். இந்த நச்சு வாயுவை பூச்சி கொல்லியாகப் பாவிக்கும் நோக்கமே ஹேபரினுடையதாக இருந்தது. ஹேபரின் இந்தக் கண்டு பிடிப்புத் தான் அடுத்த 5 ஆண்டுகளில், சிக்லோன் - பி என்ற பெயரில் மில்லியன் கணக்கான யூதர்களை வாயு அறைகளில் அடைத்து வைத்துக் கரப்பான் பூச்சிகள் போல சில நிமிடங்களில் கொலை செய்யப் பயன் படுத்தப் பட்டது. ஆனால், இது நடப்பதற்கு முன்னரே ஹேபரின் யூத அடையாளம் காரணமாக அவரையும் ஜேர்மன் நாசிகள் ஒதுக்கி வைத்து விட்டமையும் நடந்தது. திட்டமிட்ட யூத ஒதுக்கல் முதலில், எடுத்தவுடனேயே நாசிகள் யூதர்களையும் ஏனையோரையும் கொலை செய்ய ஆரம்பிக்கவில்லை. உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன, சர்வதேச வர்த்தகம், இராஜ தந்திர உறவுகள், 1936 பேர்லின் ஒலிம்பிக் என்பன இன்னும் ஜேர்மனியை படுகொலைகள் செய்ய விடாமல் தடுத்திருந்தது. ஆனால், சில திட்டமிட்ட நாசி நடவடிக்கைகள் யூதர்களைக் குறி வைத்தன (இது முழுமையான பட்டியல் அல்ல!): 1. யூதர்களின் வியாபாரங்களைப் புறக்கணிக்கும் படி கோரும் பிரச்சாரம் மூலம் யூதர்களின் பொருளாதாரம் முடக்கப் பட்டது. இது மட்டுமன்றி, புதிதாக ஆரம்பிக்கப் படும் வியாபரங்களில் யூதர்கள் முழு உரிமையாளர்களாக இருக்க முடியாத கட்டுப் பாடுகளும் உருவாக்கப் பட்டன. 2. வர்த்தக சங்கங்களில் யூதர்கள் அங்கத்துவராக இருக்க முடியாத சட்டங்கள் உருவாக்கப் பட்டன. நாசி ஆதரவாளர்களால் நிர்வகிக்கப் பட்ட தொழிற்சங்க அமைப்புகளே முன்னின்று இந்த ஒதுக்கல்களைச் செயல் படுத்தினர். 3. சட்டத்தரணிகளாக, மருத்துவர்களாக, மருந்தாளர்களாக யூதர்கள் பணி செய்யும் அனுமதியை ஜேர்மன் நகரங்களும் மானிலங்களும் மறுத்தன. 4. ஒரு கட்டத்தில், ஜேர்மன் யூதர்களின் பிரஜாவுரிமையைப் பறித்து விடும் சட்டமொன்று வரைபாக சில மாதங்கள் விவாதிக்கப் பட்டது. இறுதியில், சர்வதேச எதிர்ப்பு வரலாமென்பதால் அதை நிறைவேற்றாமல் விட்டார்கள். ஆனால், 1938 அளவில் ஜேர்மன் யூதர்களின் கடவுச் சீட்டுகளைத் தற்காலிகமாகப் பறிமுதல் செய்து, அதில் "ஜெ" என்ற எழுத்தைக் குறித்துத் திருப்பிக் கொடுத்தார்கள். இந்த "ஜெ" என்ற எழுத்துக் குறித்த கடவுச் சீட்டுகளை ஜேர்மன் அதிகாரிகள் புதுப்பிக்க மறுத்ததால், நடைமுறையில் ஜேர்மன் யூதர்கள் தங்கள் குடியுரிமையை இழந்தனர். 5. ஜேர்மன் பாடசாலைகளில் யூதக் குழந்தைகள் சேர முடியாமல் தடை வந்தது. ஒரு கட்டத்தில் எல்லா யூதர்களையும் ஒன்று கூட்டி, பஸ்களில் ஏற்றி நகரின் ஒரு மூலையில் யூதர்களுக்கு மட்டுமே உரியதான ஒரு குடியேற்றத்தில் ஒதுக்கி வாழ வைத்தனர். நினைத்த நேரத்தில், ஜேர்மன் பொலிஸ், காக்கிச் சட்டைக் கும்பல் என்பன இங்கே நுழைந்து யாரையும் கைது செய்ய, தாக்க இந்தக் குடியேற்றங்கள் வாய்ப்பாக இருந்தன. யூதர்கள் அல்லாதோருக்கும் சட்டரீதியான ஒதுக்கல் முன்னரே குறிப்பிட்டது போல, றோமா எனும் ஜிப்சி மக்களும் கூட யூதர்களுக்கு இணையாகப் பாதிக்கப் பட்டனர். இன்னொரு விதமான கொடுமையான ஒதுக்கலையும் நாசிகள் சட்ட ரீதியாக்கினர்: 1933 இல், நாசிகள் உடற்குறைபாடுகள் தொடர்பான ஒரு சட்டத்தை இயற்றினர்: Law for the Prevention of Progeny with Hereditary Diseases. இந்தச் சட்டத்தின் நோக்கம், அப்பழுக்கற்ற ஆரிய இனமாக ஜேர்மனியர்களை மாற்றும் போலி விஞ்ஞான நோக்கமாக இருந்தது (Eugenics - இதை மனிதர்களில் செய்யவே முடியாதென்பது வேறு கதை). அடுத்த 8 வருடங்களில், ஹிற்லரின் கட்டளைப் படி, “ஒபரேஷன் T4” எனும் பெயரில் இரகசியமாக முன்னெடுக்கப் பட்ட திட்டத்தின் கீழ், மூன்று லட்சம் வரையான உடல், மன ஊனங்கள் உடையவர்கள் வாயுக் கூடங்களிலும், விஷ ஊசிகளாலும் கருணைக் கொலை செய்யப் பட்டனர். உண்மையில், யூதர்களைக் கொல்லப் பயன்படுத்தப் பட்ட சிக்லோன் பி விஷவாயு, இந்த உடல் ஊனமுற்றோரில் தான் பரீட்சித்துப் பார்க்கப் பட்டது. பின்னர், 1938 இல் இருந்து இதே முறை மூலம் யூதர்களும் கொல்லப் பட்டனர். இறுதித் தீர்வு - “Final Solution” 1938 நவம்பர் 9 ஆம் திகதி "உடைந்த கண்ணாடி இரவுகள்" (Kristallnacht) என அழைக்கப் படுகிறது. அந்த இரவில் தான், கும்பலாக நாசி ஆயுததாரிகளும், காக்கிச் சட்டைகளும் ஜேர்மன் யூதர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு சில நூறு யூதர்களைக் கொன்றனர். ஆயிரக் கணக்கான யூதர்கள் கைது செய்யப் பட்டு, புச்சன்வால்ட் வதை முகாமிற்கு அனுப்பப் பட்டனர் - இவர்களுள் பெரும்பாலானோர் நச்சு வாயு அறைகளில் பின்னர் கொல்லப் பட்டனர். இதே ஆண்டில், நாசிகள் ஆஸ்திரியாவையும், பின்னர் செக்கோஸ்லோவாக்கியாவையும் எதிர்ப்பின்றிக் கைப்பற்றி, அங்கே வாழ்ந்த யூதர்களையும் வெவ்வேறு வதை முகாம்களில் அடைத்தனர். ஜேர்மனிக்கு வெளியே, போலந்தில் இருந்த ஆஸ்விற்ஸ் வதை முகாம் தான் அதிக கிழக்கு ஐரோப்பிய யூதர்களைப் பலி கொண்ட கொலைக்களம். ஆனால், வதை முகாம்களில் மட்டுமன்றி சில இடங்களில் திறந்த வெளிகளிலேயே யூதர்கள் பெருந்தொகையாகக் கொல்லப் பட்டனர். இத்தகைய திறந்த வெளிக் கொலைக்களங்களில் முக்கியமானதாக உக்ரைன் தலைநகர் கியேவிற்கு அண்மையில் இருக்கும் பாபி யார் (Babi Yar) பள்ளத் தாக்கு விளங்குகிறது. இந்தப் பகுதியை இயற்கைப் புதைகுழியாகப் பயன்படுத்தி, சுமார் 34,000 யூதர்களை நாசிகள் சில நாட்களில் இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டே கொன்றொழித்தனர். இந்த பாபி யார் படுகொலையில் அந்தக் காலப் பகுதியில் சோவியத் எதிர்ப்பாளர்களாக இருந்த உக்ரைனிய ஆயுதக் குழுக்களும் பங்கு கொண்டிருந்தன. 1938 முதல் 1945 வரையான காலப்பகுதியில் மூன்றுக்கு மேற்பட்ட வதை முகாம்கள், ஏனைய திறந்த வெளிக் கொலைகளங்களில் கொல்லப் பட்ட யூதர்களின் எண்ணிக்கை மட்டும் 6 மில்லியன்கள். இதை விட மேலதிகமாக நாசிகளால் கொல்லப் பட்ட ஏனையோர் 4 மில்லியன் வரை இருப்பர். இப்படி, செறிவான, வினைத்திறனான மனிதக் கொலையே முழுமூச்சாக இயங்கிய ஒரு அரச நிர்வாகத்தை அது வரை உலகம் கண்டிருக்கவில்லை. “மிகுந்த வீரரான” 😎ஹிற்லர், இத்தனை படுகொலைப் பழிக்குப் பின்னரும் பொறுப்பை முன்வந்து ஏற்றுக் கொள்ள முடியாமல், தன் காதலியோடு தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவரது குற்றத்தில் பங்கு கொண்ட பலர் பிடிக்கப் பட்டு மரண தண்டனைக்குள்ளாகினர். இஸ்ரேல் சில நாசிகளை, தென்னமெரிக்கா வரைப் பின் தொடர்ந்து துரத்திச் சென்று பிடித்து வந்து இஸ்ரேலில் வைத்துத் தூக்கில் போட்டது சுவாரசியமான கதை. ஆனால், ஹிற்லர் இருக்கும் போதே அவருக்குத் தண்ணி காட்டிக் கலங்கடித்த ஒரு கதாநாயகனும் இருந்தார்: அவர் அக்கால பிரிட்டன் பிரதமர் வின்ஸ்ரன் சேர்ச்சில்! சேர்ச்சிலின், அவர் தலைமையில் நாசிகளுக்கு சவால் விட்ட பிரிட்டனின் கதை நாசிகளின் நரவேட்டையை விட உரத்துச் சொல்லப் பட வேண்டிய வெற்றிக் கதை! - வெற்றிக் கதை தொடரும்- -ஜஸ்ரின்
  3. முன் குறிப்பு பாகம் IV ம் V ம் இக்கதையின் இரு வேறுபட்ட முடிவுகள் (கிளைமாக்ஸ்). ———————————————— பாகம் IV இன்று ஒரு மிக முக்கியமான நாள். அவனுக்கும் இவனுக்குமான அந்த சம்பாசணை நிகழ்ந்து கிட்டத்தட்ட பதின்மூன்று மாதங்கள் உருண்டோடி விட்டிருந்தன. அதன் பின் வைத்திய நண்பனின் ஆலோசனையின் பெயரில் அவன் இவனுடன் தொடர்பு ஏற்படுத்துவதை அறவே தவிர்த்து விட்டிருந்தான். பதின்மூன்று மாதங்கள் முன்னதாக நடந்த அன்றைய சம்பாசணையின் போது இவனுக்கு… நீ கட்டாயம் ஒரு சைக்கியாடிரிஸ்டை பார்க்க வேண்டும் மச்சான்…. உடல் காயம் போலத்தான், மனக்காயமும். இரெண்டுக்கும் ஒரு அளவுக்கு மேல் மருந்து அவசியம்….. என தயங்கி, தயங்கி அவன் சொல்லி இருந்தான். இவனும் கூட சற்றே மனம் நிதானப்பட்ட ஒரு நிமிடத்தில்… நீ சொல்றது சரிதான் மச்சான்…. எனக்கு ஏதோ பிசகீட்டுது எண்டு விளங்குது…கெதியா காட்டோணும்…மருந்து எடுக்கோணும்…. இல்லாட்டில் முழு விசராக்கிப்போடும்… என சொல்லியும் இருந்தான். ஆனால் அடுத்த நொடியே, போரிஸ், ஏலியன், மனைவி என வேதாளம் மீண்டும் மரத்தில் ஏறிவிட்டது. இதை எல்லாம் கருத்தில் எடுத்த வைத்திய நண்பன் அவனுக்கும், இவனுக்கும் மட்டுமான உறவை மட்டும் அல்ல, இத்தனை மாதகாலமும் இவனுக்கும் அவனின் வட்டத்தில் மனைவியை தவிர மிகுதி அனைவருக்குமான தொடர்புகள் அனைத்தையும் துண்டித்தே சிகிச்சையை தொடர்ந்தான். இந்த ஏற்பாட்டின் பலனாக, தன்னையும், மனைவியையும், வைத்தியரையும் தவிர வேறு எவருக்கும் இந்த பிரச்சனையின் ஆழம் தெரியாது என்ற நம்பிக்கையோடு இத்தனை மாதகாலமாக இவனும் தொடர்ந்து சிகிச்சையை எடுத்து வந்தான். இவனோடு தொடர்பில் இல்லாதபோதும் வைத்திய நண்பனோடும், திருமதி இவனோடும் அவன் தொடர்பில் இருந்து, இவனுக்கு வழங்கப்படும் மருந்துகள், சிகிச்சைகள் பற்றி முழுவதுமாக அறிந்தே இருந்தான். நேற்று வைத்திய நண்பன் பேசும் போது இவன் கிட்டதட்ட முழுவதுமாக தேறி விட்டான் எனவும். அன்றைய சம்பாசணையை பற்றி இவனுக்கு அதிகம் நியாபகம் இல்லை எனவும். அதை பற்றி கதைப்பதை தவிர்த்து, வழமை போல் உரையாடலை தொடரும் படியும் அவனுக்கு கூறி இருந்தான். இதோ…நெஞ்சம் நிறைந்த படபடப்போடு அவன் மொபலை எடுத்து இவனின் வாட்சப் நம்பரை அழுத்த தயாராகி விட்டான்……. அழைப்பை எடுக்க முதல், வைத்திய நண்பன் கடைசியாக சொன்னதை மீண்டும் ஒரு முறை அவன் நினைவு படுத்தி கொண்டான். மச்சான்…மறந்தும் வாயை விட்டுடாதயடா…இவனுக்கு தனக்கு வந்த பிரச்சனை எவ்வளவு பெரிசு…தான் என்ன குழிசையள் எடுத்தது…இனியும் என்ன குழிசையள் எடுக்க வேணும்…எல்லாம் வடிவா தெரியுமடா. ஆனால் இவனை பொறுத்தவரை…இது எதுவும் உனக்கு தெரியாது…அதை நீ மறந்துடாத… ——————————— இவனுடனான தொலைபேசி அழைப்பு நினைத்தததை விட சகஜமாகவே போய் கொண்டிருந்தது. ஆனால் உறவு முன்னர் போல் அந்நியோனியமாக இல்லை என்பதாக அவனுக்கு தோன்றியது. தொடர்பு விட்டு போனமைக்கு பரஸ்பரம் மன்னிப்புகள், குடும்பத்தினர் நலம் விசாரிப்புகள் என வழமையான விடயங்கள் பேசித்தீர்ந்த பின் உருவான அந்த அசெளகரியமான நிசப்தத்தை கலைத்து கொண்டு…இவன் தானாகவே பேசினான். மச்சான்…அண்டைக்கு நான் கதைக்கேக்க கொஞ்சம் அப்செட்டா இருந்தனாண்டா… ஒரு சின்ன ஸ்டிரெஸ்…நித்திரை கொண்டு எழும்பினதும் அது சரியாப் போச்சு…. என்ன சொல்வது என தெரியாத அவன்…ம்ம்…என்று சொல்லி விட்டு இதை எப்படி கையாள்வது என யோசித்து கொண்டிருக்கும் போதே…இவன் தொடர்ந்தான்…. நல்ல காலம் மச்சான்…. உண்ட பேய் கதையை கேட்டு நான் டொக்டரிட்ட போய் இருந்தா என்னை பைத்தியம் எண்டே முடிவு கட்டி இருப்பாங்கள்…. இனிமேலாவது கண்டதையிம் வாசிச்சு போட்டு…அட்வைஸ் பண்ணுறன் பேர்வழி எண்டு மற்றவனுக்கு விசர்பட்டம் கட்டாத மச்சான்……. அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளாத அவன்…கதையை மேலும் வளர்க்க விரும்பாதவனாக…… ம்……ம்…ம் கொட்டினான். #stigma #கேடிசூழ் #கறை #வடு (யாவும் கற்பனை) பாகம் IV முற்றும்.
  4. தையல்கடை. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(1). சுமதி சதயம் நட்ஷத்திரம் கும்பராசி...... அன்று லீவுநாளானபடியால் சுமதி வீட்டில் சின்ன சின்ன வேலைகள் செய்து கொண்டிருக்கிறாள்.எல்லாம் வளந்திட்டுதுகள் ஒரு வேலையும் செய்கிறதில்லை.பிள்ளைகளுக்கு திட்டும் நடக்குது.தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கு. சுமதி ஒரு பெரிய ஹோட்டலில் முப்பதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மேலாளராக பணிபரிகிறாள்.அவளுக்கு ஒரு வீட்டுக்காரரும் இரண்டு பிள்ளைகளும் ஒரு கணவனும் இருக்கிறார்கள். மூத்தவன் முகிலன் பதினெட்டு வயது அடுத்து வானதி பத்து வயது. அவர்கள் இப்போதும் வாடகை வீட்டில் இருப்பதால், இப்ப உங்களுக்கு புரிந்திருக்கும் அவளின் வீட்டுக்காரர் யார் என்று.......!கணவன் சுரேந்தரும் வீடுகள் விற்கும் வாங்கும் ஒரு ஏஜென்சியில் மேலாளராக இருக்கிறார். சுமதிக்கு நல்ல ஊதியமும் காரும் கொம்பனி கொடுத்திருக்கு. இவற்றைவிட அவளுக்கு நன்றாகத் தையல் வேலை தெரியும். அதனால் வீட்டில் ஒரு தனியறையில் தையல் மிசின் வைத்து அக்கம் பக்கம் தெரிந்தவர்கள், உறவினர்களுக்கெல்லாம் ஆடைகள் நவீன மாடல் ப்ளவுஸ்கள் தைத்து கொடுத்து உபரியாக சம்பாதிக்கிறாள். இதெல்லாம் இருந்தபோதிலும் அவளுக்கென்று ஒரு ஆசை இந்த "லா சப்பலில்" சொந்தமாக ஒரு தையல்கடை போடவேண்டும் என்று. அதற்குத் தோதாக சென்றவாரம்தான் எதேச்சயாக அவள் சேகரிடம் கட்டிய சீட்டு ஒன்று சீட்டு கேட்டு ஏற்றுகிற வல்லுநர்கள் வரத் தவறியதால் குறைந்த கழிவில் சுமதிக்கு கிடைத்திருக்கு. அந்தப் பணம் இன்னும் சில நாட்களில் கைக்கு வந்து விடும்.என்ன ஒரு பிரச்சினை என்றால் அதை அப்படியே வங்கியிலும் போட முடியாது. நூற்றியெட்டு கேள்விகள் கேட்பாங்கள். இன்றைய நாளில் வீட்டில் வைத்திருப்பதும் பிரசினைதான்.கள்ளர்களுக்கும் உளவாளிகள் உண்டு.அவங்களும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஆயுதங்களைக் கொண்டுவந்து வெகு சுளுவாக பணம் நகைகள் மட்டும் எடுத்துக் கொண்டு போயிடுறாங்கள். பக்கத்தில ஐ போன் 14 இருந்தாலும் தொடுகிறதில்லை. வீடும் அலுங்காமல் குலுங்காமல் பூட்டியபடியே இருக்கும். ஆனால் சுமதிக்கு நகைகள் பற்றி பயமில்லை. அவையெல்லாம் வங்கிப் பெட்டியில் ஆழ்நிலைத் தியானத்தில் இருக்கின்றன. இவன் மூத்தவன் முகிலன் மட்டும் ஒரு பெட்டையாய் பிறந்திருந்தால் ஒரு சாமத்தியவீடு செய்து அதைக் காரணம் காட்டியாவது கொஞ்சப் பணத்தை வங்கிகளில் போட்டிருக்கலாம்.இப்போதைக்கு அதற்கும் வழியில்லை. அவனுக்கும் இப்ப பதினெட்டு வயதாகின்றது. ஒரு காதில் கடுக்கணும் போட்டுக்கொண்டு உரித்த சேவல் மாதிரி ஒரு மோட்டுச் சைக்கிளில் யுனிக்கு போய்வாறார். சுமதியின் கை பழக்கத்தில் வேலைகளை பர பர வென்று செய்ய மனம் தனக்குள் கணக்கு போட்டுக்கொண்டு இருக்கு. உடனே மூளைக்குள் பளிச் என ஒரு யோசனை, ஏன் நான் இந்தப் பணத்தைக் கொண்டு "லா சப்பலில்" ஒரு கடை போடக் கூடாது. நாலு தையல் மிசின் வாங்கிப் போட்டு மூன்று நாலு ஆட்களை சம்பளத்துக்கு வைத்துக்கொண்டு வியாபாரம் ஆரம்பிக்கலாம் தானே. மெலிதாகத் தோன்றிய எண்ணம் நேரம் செல்ல செல்ல விருட்ஷமாய் வளர்ந்து கொண்டிருக்கு. அப்போது செற்றியில் கிடந்த அவளது போன் ரிங்டோன் " ரஞ்சிதமே ரஞ்சிதமே " என்று அழைக்கிறது. செய்த வேலையை அப்படியே போட்டு விட்டு அங்கு போகிறாள். கவிதாதான் அழைப்பு எடுத்திருந்தாள். ஓ .கவிதா எப்படி சுகம் என்று தொடங்கி அக்கம் பக்கம் மற்றும் நண்பர்கள் எல்லாரையும் அலசிக் கழுவிக் கொண்டிருக்கும் பொழுது தொலைகாட்சியில் ஒரு ஐயா அங்கவஸ்திரம் அணிந்து வீபூதி சந்தனம்,குங்குமம் எல்லாம் போட்டுக் கொண்டு இராசிபலன் சொல்லுகிறார்.அப்போது வீட்டின் அழைப்புமணி ஒலிக்கிறது. பொறடி கவிதா ஆரோ பெல் அடிக்கினம்,நான் பிறகு எடுக்கிறன். என்ர வீட்டுக்காரர்தான் வாறதெண்டவர் அவராய்த்தான் இருக்கும் என நினைத்துக்கொண்டு கதவைத் திறக்க அவர்தான் நிக்கிறார். பொறுங்கோ அங்கிள் கவர் எடுத்துக் கொண்டு வாறன் என்று சொல்லி உள்ளே சென்று செக் இருந்த கவரைக் கொண்டுவந்து அவரிடம் குடுத்து விட்டு அவர் சொன்ன "A " ஜோக்குக்கு சிரித்து கதைத்துக் கொண்டிருக்க.... இராசிபலனில், எதிலும் நிதானத்தை கடைபிடிக்கும் கும்பராசி அன்பர்களே ! உங்களுக்கு ஏழரை சனியின் கடைக்கூறு நடைபெறுவதால் மிச்சம் இருக்கும் இரண்டு வருடங்களும் நீங்கள் மிகக் கவனமாய் இருக்க வேண்டும். மேலும் இன்னும் இரு மாதங்களில் குருபகவான் ஆறாம் வீட்டில் மறைவதால் சனியும் உக்கிரேன் மாதிரி உக்கிரமாக உங்களை வாட்டும். பிரச்சினைகளும் எந்தப் பக்கம் என்றில்லாமல் ரஷ்ய ஏவுகணைகள் போல் அடுத்தடுத்து வந்து தாக்கும். அதனால் இப்ப இருக்கிற பணத்தை, சொத்துக்களை பாதுகாத்து வைத்திருந்தாலே போதுமானது.இரு வருடங்களுக்கு புதிதாய் முதலீடுகள் செய்வதை தவிர்த்தல் நல்லது.சதயம் நட்ஷத்திரத்தில் பிறந்த கும்பராசிக்காரர்களே உங்களின் கும்பம் ஓடிகிற அளவுக்கு சுமை இருப்பதால் எதிலும் கவனம் தேவை........தொடர்ந்து அடுத்து அழகிய கண்களையுடைய மீனராசி அன்பர்களே.........! அப்போது அந்த பலூன் ஜோக்குக்கு சிரித்தவாறு உள்ளே வந்த சுமதி அட கும்பராசிக்கு சொல்லி முடிஞ்சாச்சுது போல, ச் சா.... மிஸ் பண்ணிட்டன் என்று சொல்லியபடி செற்றியில் அமர்கிறாள். சற்று நேரத்தில் அவளது கணவன் சுரேந்தர் வேலையால் அலுத்துக் களைத்து வீட்டிற்குள் வருகிறார். இன்னும் தைப்பார்கள்........! 🥻
  5. திரும்பும் வரலாறு: நாசிகள் அண்மைக் காலமாக "திரும்பும் வரலாறு" (repeat of history or historic recurrence) என்பது பிரபலமான ஒரு சொற்றொடராக மாறியிருக்கிறது. வரலாறு மீள மீள நிகழ்வதற்கு பிரதான காரணம் வரலாற்றிலிருந்து தலைவர்களும், தலைவர்களைத் தேர்வு செய்யும் மக்களும் பாடங்கள் கற்றுக் கொள்ளாமை தான் என்பது ஒரு தெளிவான அவதானம். எனவே, வரலாற்றின் மைல் கற்களாக விளங்கிய சம்பவங்கள், நபர்கள் பற்றிய தரவுகளைப் பதிவு செய்யலாம். முதலில் ஹிற்லர், நாசிகள் பற்றி ஆரம்பித்து, இரண்டாம் உலகப் போர், ஸ்ராலின், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் என்று ஒரு சுற்று வரலாம். ஆர்வமுடையோர் இணைந்திருங்கள். மூலங்கள் பற்றிய தகவல்களை ஒவ்வொரு பகுதியும் நிறைவுறும் போது தருகிறேன். ஆனால், விக்கிபீடியா மூலமாகப் பயன்படுத்தப் படவில்லை என்பதை உறுதி செய்கிறேன்! ஹிற்லர் எப்படிப் பதவிக்கு வந்தார்? முதலாம் உலகப் போர் 1918 இல் முடிவுக்கு வந்த போது ஐரோப்பாவின் எல்லைகள் பாரிய மாற்றங்களையடைந்தன. முதல் உலகப் போரின் போது கடல் வழியிலும், தரைவழியிலும் ஜேர்மனியின் படைகள் விளைவித்த மனிதப் பேரழிவு அளப்பரியது (முதலில் நீர்மூழ்கிக் கப்பல்களை பெருமளவில் பாவித்த நாடாக ஜேர்மனி இருந்தது, அனேக தாக்குதல் இலக்குகள் சிவிலியன் போக்கு வரத்துக் கப்பல்களாக இருந்தன!). ஜேர்மனி தோல்வியடைந்த போது வெர்சை உடன்படிக்கையின் வழியாக கடுமையான தண்டனைச் சுமைகள் ஜேர்மனி மீது சுமத்தப் பட்டன. 33 பில்லியன் டொலர்கள் வரையான போர் நட்ட ஈடு, காலனிகள் உட்பட்ட பல நிலப் பரப்பின் இழப்பு, இராணுவ ஆளணிக் குறைப்பு, ஆயுதங்கள் வாங்க, உற்பத்தி செய்வதற்கான கட்டுப் பாடுகள், என்பன ஜேர்மனியின் தண்டனைகளில் அடங்கின. இந்தப் போரில் காயமடைந்து மீண்ட படையினனான ஹிற்லர் ஆரம்பித்த கட்சி தான் "தேசிய சோசலிஸ்ட் கட்சி" எனப்பட்ட நாசிக் கட்சி. நாசிக் கட்சியின் நோக்கம் ஆட்சியைப் பிடிப்பது. இதற்கு உகந்த நுட்பமாக அவர்கள் தேர்ந்து கொண்டது, அண்மைய வரலாற்றில் ட்ரம்ப், பொல்சனாரோ, மோடி, ப்றெக்சிற்றின் தலைமைச் சிற்பியான நைஜல் பரார் போன்றோர் தேர்ந்து கொண்ட அதே ஜனத்திரள்வாத முறை. ஜனத்திரள் வாதம் நேர்மையான விடயங்களால் பலம் பெறுவதை விட மறைத்தன்மையான மனித உணர்வுகளால் பலம் பெறுவது தான் வரலாற்றில் அதிகம் நிகழ்ந்திருக்கிறது. நாசிக் கட்சி தங்கள் ஜனத்திரள் வாத வெற்றிக்காகத் தேர்ந்து கொண்ட அந்த மறைத்தன்மையான உணர்வு யூதர்கள் மீதான சந்தேகமும், எதிர்ப்புணர்வும். ஏன் யூதர்கள் மீது எதிர்ப்புணர்வு? ஏனெனில், ஜேர்மனியில் அந்தக் காலப்பகுதியில் வசித்த வேற்றினத்தவர்களுள், யூதர்கள் தான் பல வழிகளில் பிரபலமான இனக் குழுவாக இருந்தனர். பொருளாதார நடவடிக்கைகளில் மேலாண்மை மட்டுமன்றி, அரசியல் கலாச்சாரப் பரப்பிலும் யூதர்கள் முன்னணி வேற்றினத்தவராக இருந்தனர். கால் மார்க்ஸ் ஒரு யூதர், ஜேர்மனியுட்பட பல ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசக் கட்சிகளின் தலைமையில் அதிகம் யூதர்கள் இருந்தனர். விஞ்ஞானத் துறையிலும் (ஐன்ஸ்ரைன் சிறந்த உதாரணம்) அவர்களுக்கு தனியிடம் இருந்தது. இவ்வாறு ஜேர்மன் மக்கள் ஏற்கனவே உணர்ந்திருந்த ஒரு "யூத மேலாண்மை பற்றிய அச்சம்" நாசிக் கட்சியின் மக்கள்திரள்வாத ஆயுதமாயிற்று! ஆனால், யூதர்களுக்கு மேலதிகமாக, ஏனைய மத, இனக்குழுக்கள், ரஷ்யாவின் சிலாவிக் இன மக்கள் ஆகியோரும் நாசிக்கட்சியின் வெறுப்பிலக்குகளாக விளங்கினர். இந்த சிலாவிக் இன மக்கள் மீதான வெறுப்பிற்கு வளங்களைக் கொள்ளையடிக்கும் ஜேர்மனியின் நீண்ட கால இலக்கும் ஒரு காரணமாக இருந்தது. ஆரிய இனமான நீலக் கண்ணும், வெள்ளைத் தோலும் கொண்ட ஜேர்மனியர்கள், லூதரன் கிறிஸ்தவ நெறிப்படி குடும்பங்களில் நிறையப் பிள்ளைகள் பெற்றுப் பெருகும் போது, அவர்கள் வாழ அவசியமான நிலம், சோவியத் ரஷ்யாவிடமிருந்து பறிக்கப் பட வேண்டுமென்பது நாசிக் கட்சியின் கொள்கை. எனவே, சிலாவிக் மக்கள், "மனித இனத்திற்குக் கீழானவர்கள்" என்ற வெறுப்புணர்வை நாசிக் கட்சியினர் பரப்பத் தயங்கவில்லை. இந்தக் “கீழ்மனிதர்களான” சிலாவிக் மக்களை விடக் கீழான நிலையில் தான் யூதர்கள் வைத்துப் பார்க்கப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1921 அளவில், நாசிக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ஹிற்லர் வெளிப்படையாக இந்தக் கொள்கைகளைப் பேசி வந்திருக்கிறார். சாதாரண அரசியல் கட்சிகள் போலல்லாது, நாசி கட்சிக்கு ஒரு ஆயுதப் படையும் இருந்தது. Storm troopers என்று அழைக்கப் பட்ட இந்தப் படையில், ஹிற்லர் போலவே முதல் உலகப் போரிலிருந்து அவமானத்துடன் திரும்பி வந்த முன்னாள் படையினர் இருந்தனர். பல்லாயிரம் உறுப்பினர்கள் கொண்ட இந்த படை, பவாரியாவின் மாநில அரசைக் கவிழ்க்க முயன்று தோற்ற போது தான் ஹிற்லர் மற்றும் நாசிக் கட்சி பற்றிய முதல் எச்சரிக்கை ஜேர்மன் அரசுக்குக் கிடைத்தது. ஜேர்மன் அரசினால் ஒரு வருடம், இதற்காக சிறை வைக்கப் பட்ட போது தான் ஹிற்லர் தனது ஜனத்திரள்வாத, இனவெறிக் கொள்கைகளை நூலாக (Mein Kampf) எழுதினார். இந்த நூல், 1932 இல் ஜேர்மன் பாராளுமன்றத்தில் மிகப் பெரிய கட்சியாக நாசிக் கட்சி விளங்க ஒரு முக்கிய காரணியாக இருந்தது. இதனால், ஜேர்மன் ஜனாதிபதியினால், ஹிற்லர் வேந்தராக நியமிக்கப் படும் நிலையும் உருவானது. ஜேர்மன் மக்கள் என்ன நினைத்தனர்? தீவிர இனவெறிக் கொள்கை கொண்ட ஹிற்லரையும், நாசி கட்சியையும் 1932 பொதுத் தேர்தலில் ஜேர்மன் வாக்காளர்கள் ஆதரித்துப் பெரும்பான்மை வழங்க பல காரணங்கள் அப்போது இருந்தன. ஜேர்மனி முதல் உலகப் போரில் மிகவும் அவமானப் படுத்தப் பட்டதாக ஜேர்மனிய மக்களில் பெரும்பகுதியினர் உணர்ந்தனர். அதன் பின்னான தண்டனைகளால் ஜேர்மனியின் பணவீக்கம், வேலையில்லாதோரின் வீதம், என்பன கட்டுக்கடங்காமல் அதிகரித்தன. ஜேர்மன் ஜனாதிபதியாக இருந்த வொன் ஹிண்டன்பேர்க் வயசாளி, நோய்வாய்பட்ட நிலையில் தனது ஓய்வு வாசஸ்தலத்தில் இருந்தவாறே, கீழதிகாரிகளூடாக ஆட்சி செய்து கொண்டிருந்தார். இந்தப் பின்னணியில், மூன்று இளமையும், துடிப்பும் கொண்ட அரசியல் தலைவர்கள் மக்கள் முன் வலம் வந்தனர்: ஹிற்லர், ஹெஸ், கோயபல்ஸ் ஆகிய மூவரும் தான் அந்த "ஜனத்திரள்வாத" இளம் தலைவர்கள். எனவே, ஒரு நம்பிக்கையான எதிர்காலம் வேண்டி, ஜேர்மன் வாக்காளர்கள் நாசிக் கட்சிக்கு வாக்களித்தனர். இந்த மானசீகமான ஆதரவோடு, நாசிக் கட்சியின் ஆயுதப் படையினர் நாசிக் கட்சி எதிர்ப்பாளர்களுக்குக் கொடுத்த வன்முறை அச்சுறுத்தலும் சேர்ந்து தான் நாசிக் கட்சியும், ஹிற்லரும் ஜேர்மனியின் ஆட்சியைப் பிடித்தனர். பதவிக்கு வந்த பின்னர் ஹிற்லரின் நடவடிக்கைகள் ஹிற்லர் வேந்தராகப் பதவியேற்று சில மாதங்களில், ஜேர்மன் பாராளுமன்றம் தீயூட்டப் பட்டது. இந்த எரியூட்டலுக்கு ஜேர்மன் கம்யூனிஸ்டுகள் காரணமெனப் பிரச்சாரம் செய்த நாசிகள், ஒரு ஒல்லாந்து நாட்டு கம்யூனிஸ்டைக் கைது செய்தனர். ஹிற்லரின் விமானப் படையைப் பின்னாளில் கட்டியெழுப்பிய தீவிர நாசியான ஹேர்மன் கோறிங் நேரடியாக நீதிமன்றம் சென்று, கைது செய்யப் பட்ட ஒல்லாந்துக் கம்யூனிஸ்டின் மரண தண்டனையை உறுதி செய்தார். அதே நேரம் மிக முக்கியமான இன்னொரு விடயமும் நாசி ஜேர்மனியின் எதிர்காலப் போக்கை நிர்ணயித்தது: பாராளுமன்றம் எரிக்கப் பட்ட சம்பவத்தைக் காரணம் காட்டி, ஹிற்லர் ஜேர்மன் ஜனாதிபதியை அவசரகாலச் சட்டத்தை அமல் படுத்தத் தூண்டினார். இதனால், சகல அரசியலமைப்பு வழியான மக்கள் உரிமைகளும் ஒரே இரவில் ரத்துச் செய்யப் பட்டன. இந்த உரிமைகள் ரத்தினால், நாசிகளை ஆதரித்த ஜேர்மனியர்களுக்கு ஒரு பாதிப்பும் வரவில்லை- ஆனால், யூதர்கள், கம்யூனிஸ்ட்டுகள், நாசி எதிர்ப்பாளர்கள், ஊடக சுதந்திரம் என்பன நன்கு பாதிக்கப் பட்டன. ஹிற்லரின் கட்சிக் கொள்கைகள் செயல் வடிவம் பெற ஆரம்பித்தன! -இன்னும் வரும் ஜஸ்ரின்
  6. நுணாவிலானுக்கும் அகஸ்தியனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  7. நுணாவிலான் அகஸ்தியன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்........! 💐
  8. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(5). அன்று "லா சப்பலில்" சுரேந்தர் சுமதியின் தையல்கடை "லக்கி டெய்லரிங் அன்ட் டெக்ஸ்டைல்ஸ்" அதிக ஆடம்பரமின்றி எளிமையாக திறப்புவிழா நடந்தேறியது. அங்கிருக்கும் அக்கம் பக்கத்து கடை முதலாளிமார் வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்கள் என பலரும் வந்திருந்து சிறப்பித்திருந்தார்கள்.எல்லோருக்கும் சிற்றூண்டிகளுடன் குளிர்பானங்களும் வழங்கப் பட்டன. கண்ணாடி அலுமாரிகள் நிறைய துணிகள்,புடவைகள் இத்யாதியுடன் நவீனமான நான்கு தையல் மெஷின்களும் கொலுவீற்றிருந்தன.சுமதி சுரேந்தர் ,ரோகிணி,மிருதுளா, பிரேமா எல்லோரும் விருந்தாளிகளை விழுந்து விழுந்து உபசரித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் குறும்பாக அக்காமாரே மத்தியானம் சாப்பாடும் இருக்குதோ என்று கேட்க ரோகிணி முன்வந்து ஓமண்ணை பக்கத்தில கோயிலில் அன்னதானம் நடக்குது வயிறு முட்ட சாப்பிட்டுட்டு போகலாம் என்று சொல்ல எல்லோரும் சிரிக்கிறார்கள். அன்றுமட்டும் சுமதிக்கு பணமாகவும் பரிசுப் பொருட்களாகவும் நிறைய சேர்ந்திருந்தன. காரணம் அவள் எல்லோர் வீட்டு வைபவங்களுக்கு போய் தாராளமாய் மொய் வைத்துவிட்டு வருவாள். அதுகள் எல்லாம் இப்ப வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன.அவையெல்லாம் தனியாக பிரேமாவின் பாதுகாப்பில் இருந்தன. ஆரம்பத்தில் கடை வேலைகளைக் கவனிப்பதற்காக சுமதி ஒருமாதம் விடுப்பு எடுத்திருந்தாள். அடுத்தநாள் சுமதியின் போனில் துறைமுகத்தில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வருகின்றது. அதில் அவள் இந்தியாவில் இருந்து தருவித்த சில பெட்டிகள் வந்திருப்பதாகவும் அவற்றை வந்து பெற்றுக்கொள்ளும் படியும் குறிப்பிட்டிருக்கின்றது. அந்தப் பெட்டிகளுக்குள்தான் நிறைய துணிமணிகள், றோல்கோல்டு ஆபரணங்கள்,கைக்கடிகாரங்கள் மற்றும் தையல்களுக்கு தேவையான ஊசிகள்,கிளிப்புகள் லொட்டு லொசுக்குகள் எல்லாம் இருக்கின்றன.அவற்றை எடுப்பதற்காக ஒன்லைனில் ஒரு வானை ஒழுங்கு செய்துகொண்டு பாரிஸில் இருந்து 200 கி.மீ. தூரத்தில் இருக்கும்" le havre"என்னுமிடத்துக்கு பயணப் படுகிறாள். வானை ஒட்டிக்கொண்டு வந்தவர் ஒரு இளைஞன்.நல்ல களையான முகம் முகத்தில் இருக்கும் குறுந்தாடி மிகவும் அழகாய் இருக்கின்றது. (இந்த சுரேனிடம் சொல்லுறனான் நீங்கள் ஒரு தாடி வையுங்கோப்பா உங்களுக்கு எடுப்பா இருக்கும் என்று சொன்னால் மனுஷன் கேட்குதே இல்லை. இந்தப் பொடியனுக்கு நல்ல வடிவாயிருக்கு என்று நினைத்துக் கொள்கிறாள்) இருவரும் பிரெஞ்சில் கதைத்துக் கொண்டு வருகிறார்கள். வெளியே மென்மையான மழைத்தூறல். வானின் வைப்பர் 10 செக்கண்டுக்கு ஒருமுறை அசைந்து கொண்டிருக்கு. வானுக்குள் A / C யின் கதகதப்பு இதமாய் இருக்கிறது. --- என்ன இன்று மழை பெய்து கொண்டிருக்கும் போல ....(இங்கு அறிமுகம் இல்லாதவருடன் பேச்சு வரும்பொழுது முதல்ல காலநிலை பற்றி கதைப்பினம்). --- பெரிசாய் மழை வராது, நாள் முழுதும் இப்படித்தான் தூறிக்கொண்டிருக்கும். --- என்பெயர் சுமதி......உங்களை எப்படி அழைப்பது..... ---என் பெயர் கபிரியேல் ஜான்சன் .....ஆனால் முதற்பெயர் கபிரியேல் மேடம்..... ---மேடம் அவசியமில்லை நீ சுமதி என்றே அழைக்கலாம்.....கபிரியேல் நீ கனகாலமாக இங்கு வேலை செய்கிறாயா .....(இங்கு பெரும்பாலும் வயது வித்தியாசமின்றி ஒருமையிலும் பெயர் சொல்லியும் அழைப்பது வழமை). --- ஓம் சுமதி, சுமதி அழகான பெயர்.......மூன்று வருடங்கள் இருக்கும். --- உனக்கு இந்த வேலை நல்லா பிடித்திருக்குது போல ரசித்து வண்டி ஓட்டுவதுபோல் தெரிகிறது. --- ரொம்பப் பிடிக்கும் சுமதி ஆனால் இந்த வாரத்துடன் எனது வேலை ஒப்பந்தம் முடிவடைகிறது. இனி வேறு வேலை தேட வேண்டும்.... --- எதற்காக வேலையை விடுகிறாய். --- எங்கள் கொம்பனியை வேறொரு கொம்பனி வாங்கியிருக்கிறார்கள். அவர்களின் கொம்பனி பாரிசில் இருந்து வெகு தூரத்தில் இருக்கிறது அதுதான் சிலரை சம்பளத்துடன் நிப்பாட்டுகிறார்கள். --- இதற்கு முன் நீ என்ன வேலை செய்தனி. --- நான் முன்பு ஒரு தோல் ஆடைகள் தைக்கும் பக்டரியில் வேலை செய்தேன். சில நாட்களில் அந்த தோல் சுவாசம் எனக்கு அலர்ஜி ஆகி விட்டது.அதனால் அதை விட்டுட்டு இந்த வேலையில் சேர்ந்தேன். --- அப்படியா.....அதற்குள் வானும் அவர்களது பொதி இருக்கும் களஞ்சிய அறைக்கு வந்து விட்டிருந்தது. அங்கிருந்த அவர்களின் பார்சல்கள், பெட்டிகள் எல்லாம் எடுத்து வானில் ஏற்றிவிட்டு அருகே இருந்த கடற்கரையில் ஒரு நல்ல ரெஸ்டூரன்ரில் போய் மதிய உணவை சாப்பிட்டபின் பில் குடுக்கப் போன காபிரியேல்லை சுமதி தடுத்து தானே பணமும் டிப்ஸும் குடுக்கிறாள். சிறிது ஓய்வெடுத்தபின் இருவரும் பரிசுக்கு திரும்பி வருகிறார்கள். ஏன் சுமதி நீங்கள் இவ்வளவு பொருட்கள் இறக்குமதி செய்திருக்கிறீர்கள் ஏதாவது ஒன்லைனில் விற்பனை செய்கிறீர்களா...... --- இல்லை கபிரியேல்,நான் சமீபத்தில்தான் லா சப்பலில் ஒரு தையற்கடை திறந்திருக்கிறேன்.அதற்குத்தான் இவையெல்லாம். இனியும் மலேசியா சிங்கப்பூரில் இருந்தெல்லாம் பொருட்கள் இறக்குமதி செய்ய வேண்டும். ---வெறும் தையற்கடை மட்டுமா. --- தையற்கடையுடன் டெக்ஸ்ட்டைலும். இப்போது நாங்கள் அங்குதான் போகிறோம், அப்போது நீ பார்க்கலாம். மேலும் நீ விரும்பினால் கொஞ்ச நாள் எனது கடைக்கு வந்து வேலை செய்யலாம். பின்பு உனக்குப் பிடித்த வேலை கிடைத்ததும் தாராளமாக நீ விலகிச் செல்லலாம். --- ஓ.....நீங்கள் இவ்விதம் சொன்னதுக்கு நன்றி சுமதி, ஆனால் நான் யோசித்து பதில் சொல்கிறேன். இன்னும் தைப்பார்கள்......! 🥽
  9. தமிழர் ஒற்றுமை தின்னைவேலி வங்கிக்கொள்ளையினையடுத்து ஜெயவர்த்தன மிகுந்த சீற்றம் கொண்டார். பொலீஸ் மாதிபர் ஸ்டான்லி சேனநாயக்கவையும், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டெனிஸ் பெரேராவையும் உடனடியான கூட்டம் ஒன்றிற்கு அவர் அழைத்தார். இக்கூட்டத்திற்கு பணாகொடை பகுதியில் அமைந்திருந்த மேற்குக் கட்டளைப்பிரிவின் தளபதியான பிரிகேடியர் சிறில் ரணதுங்கவையும் டெனிஸ் பெரேரா அழைத்துச் சென்றார். அவர்களைப் பார்த்து ஜெயவர்தன பின்வருமாறு கூறினார், "இதனை இப்படியே அனுமதித்துக்கொண்டிருக்க முடியாது. இது உடனடியாக நிறுத்தப்படவேண்டும். நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது, ஆனால் இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" என்று கூறினார். பொலீஸ் அதிபரும், இராணுவத் தளபதிகளும் நடைமுறையில் இருக்கும் சட்டங்களை மேலும் இறுக்கவேண்டும் என்று ஜெயவர்த்தனவிடம் கேட்டுக்கொண்டார்கள். புலிகளைத் தடை செய்ய அமுல்ப்படுத்தப்பட்ட விசேட சட்டம் அவர்களை அடக்கப் போதுமானதல்ல என்று அவர்கள் வாதிட்டனர். இதனை உடனடியாக ஏற்றுக்கொண்ட ஜெயவர்த்தன, தனது செயலாளரான மனிக்டிவெலவை அழைத்து சட்டமா அதிபரை உடனடியாக தொடர்புகொண்டு பொலீஸாருக்கும் இராணுவத்திற்கும் தேவையான சட்டத்தினை உடனடியாக வரையும்படி உத்தரவிட்டார். புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கைக்கு பிரிகேடியர் சிறில் ரணதுங்கவை பொறுப்பாக நியமிக்குமாறு இராணுவத் தளபதி ஜெயவர்த்தனவிடம் சிபாரிசு செய்தார். சிறில் ரணதுங்க 1979 ஆம் ஆண்டு தை மாதம், போராளிகளைத் தேடிக் கைதுசெய்யும் நடவடிக்கைக்குப் பொறுப்பாக சிறில் ரணதுங்க ஜெயவர்த்தனவினால் நியமிக்கப்பட்டார். அவரது முதற்பணி, தனது நடவடிக்கைகளுக்கு உதவியாக யாழ்ப்பாணத்தில் இராணுவ உளவுத்துறையின் அமைப்பொன்றினை உருவாக்குவதாக இருந்தது. இப்பணிக்கு அவர் கப்டன் சரத் முனசிங்கவை பொறுப்பாக அமர்த்தினார். பலாலி இராணுவப்படைத் தளத்தில் சரத் முனசிங்க தனது உளவுப் பிரிவை ஆரம்பித்ததுடன் யாழ்ப்பாணத்தில் பொலீஸாருக்கும் இராணுவத்தினருக்கும் பலவீனமான பகுதிகள் என்று கண்டறியப்பட்ட வல்வெட்டித்துறை உட்பட பல பகுதிகளின் வரைபடங்களை அவர் தயாரித்தார். யாழ்ப்பாண இராணுவத் தளபதியாக சிறில் ரணதுங்க 1979 ஆம் ஆண்டு மாசி மாதம் நியமிக்கப்பட்டார். தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கெதிராக தனது இராணுவத்தைத் தீவிரமாகப் பலப்படுத்திவந்த அதேவேளை, தனது அரசியல் விளையாட்டான போராளிகளுக்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் இடையிலான விரிசலை தொடர்ந்தும் அதிகரிக்கும் காரியத்திலும் ஜெயவர்த்தன ஈடுபட்டு வந்தார். மாவட்ட அமைச்சர் பதவிகளைக் காட்டி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தனது வலைக்குள் வீழ்த்திவிடலாம் என்று ஜே ஆர் போட்ட திட்டம் அவ்வளவாகப் பலனளிக்கவில்லை என்பதை அவர் புரிந்து வைத்திருந்தார். இளைஞர்களிடமிருந்து தமது செயற்பாடுகளுக்கு அதிகரித்துவந்த எதிர்ப்பினையடுத்து ஜே ஆர் இன் மாவட்ட சபை அமைச்சர்ப் பதவிகளுக்கான தமது விருப்பத்தினை முன்னணியினரால் உறுதிபடக் கூற முடியவில்லை. ஆகவே, ஆவணி 2 ஆம் திகதி தொண்டமானுடன் பேசிய ஜெயவர்த்தனா, உத்தேச மாவட்ட சபை அமைச்சரவையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு மூன்று அமைச்சுப் பதவிகளை தான் வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். "நான் அமிர்தலிங்கத்திடம் எனது மாவட்டசபை அமைச்சர்கள் திட்டம் பற்றிக் கூறியிருந்தேன். அவர் இதுகுறித்து உங்களிடம் ஏதாவது பேசினாரா?" என்று தொண்டைமானைப் பார்த்து அப்பாவியாகக் கேட்டார் ஜெவர்த்தன. மறுநாள் அமிர்தலிங்கத்தைச் சந்தித்த தொண்டைமான் இதுகுறித்துக் கேட்டார். அதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், "நாம் ஜெயவர்த்தனவின் சலுகையினைப் பற்றிச் சிந்தித்து வருகிறோம், ஆனால் இதுவரை எந்த முடிவினையும் எடுக்கவில்லை" என்று கூறினார். அமிர்தலிங்கத்துடன் தொடர்ந்தும் பேசிய தொண்டைமான், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஜெயவர்த்தனவின் மாவட்ட சபை அமைச்சுப் பதவிகளை ஏற்க முன்வரும் பட்சத்தில் அவர்களுக்கு மூன்று அமைச்சர்களை வழங்க ஜெயவர்த்தன தயாராக இருப்பதாகக் கூறினார். மறுநாளான ஆவணி 4 ஆம் திகதி தொண்டைமானுடன் பேசிய ஜே ஆர், தான் கேட்ட விடயம் குறித்து அமிர்தலிங்கத்துடன் பேசினீர்களா என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த தொண்டைமான், ஜே ஆரின் கோரிக்கையினை தான் அமிர்தலிங்கத்திடம் முன்வைத்ததாகவும், அதனை அவர் எற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவருக்கும் ஒரு அமைச்சுப்பதவி வழங்கப்படும் என்று தான் கூறியதாகவும் அவர் சொன்னார். இந்தச் சந்தர்ப்பத்தினைப் பாவித்துக்கொண்ட ஜெயவர்த்தன தொண்டைமானைப் பார்த்து, "உங்களுக்கு ஒரு அமைச்சுப்பதவியினைத் தந்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? மாவட்டசபை அமைச்சரவையில் என்னவிருக்கிறது? ஆகவே அதைவிடுத்து எனது அமைச்சரவையில் இணைந்துகொள்ளுங்கள். நீங்கள் என்னை அழைத்தால், நானும் உங்களை அழைக்கிறேன், என்னுடன் இணைந்துகொள்வீர்களா? " என்று மீண்டும் தொண்டைமானிடம் வினவினார் ஜே ஆர். தொண்டைமானும் மறுபேச்சின்றி ஒத்துக்கொண்டார். ஆனால், தனது தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும் தன்னுடன் தொடர்ந்தும் வைத்திருக்க ஜே ஆர் அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஜெயவர்த்தனாவுக்கு இது மிகெப்பெரிய வெற்றியாக அமைந்தது. தமிழ் இனத்தின் ஒரு பகுதியை அவர் தன்பக்கம் இழுத்துவிட்டிருந்தார். தமிழ் மக்களின் போராட்டத்தினைப் பலவீனப்படுத்தி, குறிப்பிடத்தக்களவு பாதிப்பினை அதற்கு அவர் இதன்மூலம் ஏற்படுத்தினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் தனது வலைக்குள் எப்படியாவது வீழ்த்திவிடவேண்டும் என்று அவர் முயன்று வந்தார். இதனையும் செய்துவிட்டால், இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் முன்னால் தான் பக்கச்சார்பற்ற ஒரு அதிபர் என்றும், சிறுபான்மையின மக்களையும் அரவணைத்துச் செல்லும் தலைவர் என்று காட்டிவிடலாம் என்று அவர் எண்ணினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மிகவும் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது. அதன் பெருமளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப்பதவிகளைப் பெற்றுவிட மிகவும் ஆவலாக இருந்தனர், ஆனால் இளைஞர்கள் இவர்களின் விருப்பிற்குக் கடுமையான எதிர்ப்பினைக் காட்டி வந்தனர். இறுதியாக, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அரசியல்ப் பீடம் தமக்கு 5 மாவட்ட அமைச்சுப்பதவிகள் தரப்படுமிடத்து ஜே ஆர் இன் கோரிக்கையினை ஏற்றுக்கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தது. ஜெயவர்த்தனவுடன் பேசிய அமிர்தலிங்கம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய வடமாகாண மாவட்ட அமைச்சுப்பொறுப்புக்களை தமக்குத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், ஜே ஆர் பிடிவாதமாக மூன்று மாவட்ட அமைச்சுப்பதவிகளைத்தான் தரமுடியும் என்று மறுக்கவே, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அவரின் காலை வாரிவிட்டது. ஐப்பசி 5 ஆம் திகதி ஜெயவர்த்தன 24 மாவட்டங்களுக்கான அமைச்சர்களின் பெயர்களை அறிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட அமைச்சர் பொறுப்பினை காலியாக விட்டிருந்த ஜே ஆர், அது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்காக ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். ஆனால், இதனை முன்னணியினர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடவே குருநாகல் மாவட்ட உறுப்பினரான உக்கு பண்டா விஜேக்கோனை இப்பதவிக்கு ஜே ஆர் நியமித்தார். யாழ்ப்பாண மாவட்ட அமைச்சரான விஜேகோனின் செயலாளராக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் எதிர்ப்பாளாராக இருந்த வைத்திலிங்கம் துரைசாமியை அவர் நியமித்தார். இதேவேளை, தனது அடியாளும் பிரபல சிங்கள இனவாதியுமான சிறில் மத்தியூவை தமிழர் ஐக்கிய முன்னணியினருக்கு எதிராகவும், தமிழினத்திற்கெதிராகவும் தொடர்ச்சியான இனவாதப் பிரச்சாரங்களை நடத்தும்படி ஜே ஆர் முடுக்கி விட்டார். தமிழர்களுக்கெதிரான இனவாதப் பேச்சுக்கள், துண்டுப்பிரசுரங்கள், புத்தகங்கள் என்று மிகத்தீவிரமாக தமிழருக்கெதிரான விஷமப் பிரச்சாரத்தில் சிறில் மத்தியூ இறங்கியிருந்தார். தமிழ் மக்களுக்கெதிராக சிங்கள மக்களை மிகவும் சாதுரியமான வகையில் திருப்பிக்கொண்டிருந்ததுடன், சிங்கள இனவாதத்தினையும் தொடர்ந்தும் தூண்டிக்கொண்டிருந்தார். கைத்தொழில் அமைச்சராகவிருந்த சிறில் மத்தியூ தனது அமைச்சில் பணிபுரிந்த பலரையும் இந்த இனவாதப் பிரச்சாரத்திற்கு முழுமூச்சுடன் ஈடுபடும்படி பணித்திருந்தார். தமிழர்களைப் பேய்கள் என்று விழித்து அவராலும் அவரது உதவியாளர்களாலும் பிரசுரிக்கப்பட்ட புத்தகங்கள் அரச அச்சகக் கூட்டுத்தாபானத்தில் அச்சிடப்பட்டு, கைத்தொழில் அமைச்சினூடாக சிங்கள மக்கள் மத்தியில் அரச வெளியீடுகளாக விநியோகிக்கப்பட்டு வந்தன. சிறில் மத்தியுவினால் வெளியிடப்பட்ட முதலாவது இனவாதம் கக்கும் புத்தகம் "சிங்களவர்களே, பெளத்த சமயத்தைக் காத்திட எழுந்திருங்கள்" என்று தலைப்பில் வெளிவந்தது. 1979 ஆம் ஆண்டில் மத்தியுவினால் மேற்கொள்ளப்பட்ட இனவாதப் பிரச்சாரங்களைத் தாங்கிவந்திருந்த அப்புத்தகம், ஈரோஸ் அமைப்பினரால் அமைக்கப்பட்ட மத்திய மாகாணத்தினையும் இணைத்த தமிழீழ வரைபடத்தினையும் கொண்டிருந்தது. அந்த வரைபடத்தின்படி சிலாபம் வரையிலான வடமேற்குக் கரைகளையும் மத்திய மலைநாட்டின் தமிழர் அதிகமாகச் செறிந்துவாழும் பகுதிகளையும் சேர்த்து தமிழரின் தாயகமான தமிழீழம் என்று அது அடையாளப்படுத்தியிருந்தது. டெயிலி நியூஸ் பத்திரிக்கையின் ஊடகவியலாளன் என்கிற வகையில் நான் கைத்தொழில் அமைச்சரான சிறில் மத்தியூவுடன் அவரது இளைப்பாறும் விடுதிக்கு ஒருமுறை சென்றிருந்தேன். அங்கு நான் நின்ற நாளில், அவரது அமைச்சகத்தின் அதிகாரிகள் சிறில் மத்தியூவினால் எழுதப்பட்ட முதலாவது புத்தகத்தின் பிரதிகளை கொண்டுவந்து கொடுத்தார்கள். அவர் புத்தளம் சீமேந்துத் தொழிற்சாலைக்கு பரிசோதனை தொடர்பாகச் சென்றிருந்தார். என்னிடம் புத்தகத்தின் ஒரு பிரதியைத் தந்துவிட்டு, "இந்த வரைபடத்தைப் பாருங்கள், இதனை உங்களது நாடென்று நீங்கள் உரிமைகோருவது நியாயமா?" என்று என்னைக் கேட்டார். அவர் எழுதிய முதலாவது புத்தகத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் சிங்களவர்களின் புராதன வாழிடங்கள் என்று கூறியிருந்தார். அப்பகுதிகள் சிங்கள மன்னர்களால் ஆளப்பட்ட பகுதிகள் என்றும், சிங்கள மக்களே அங்கு வாழ்ந்துவந்ததாகவும் அவர் எழுதியிருந்தார். தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கி பி 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை மீது படையெடுத்து, அங்கு வாழ்ந்த சிங்களவர்களை தெற்குநோக்கித் துரத்திவிட்டதாக அவர் மேலும் கூறுகிறார். சரித்திர கால சிங்களச் சின்னங்களை முற்றாக அழித்துவிட்டு தமிழர்கள் இன்று வடக்கையும் கிழக்கையும் தமது நாடென்று அநீதியாக உரிமைகோருவதாக அவர் சாடுகிறார். தான் எழுதிய புத்தகத்தின் பிரதிகளை ஒவ்வொரு பெளத்த விகாரைகளூடாகவும் மக்களுக்கு விநியோகிக்க அவர் நடவடிக்கை எடுத்திருந்தார். அவரது இரண்டாவது புத்தகம் தமிழர்களின் கடைகளைப் புறக்கணிக்குமாறு சிங்களவர்களைக் கேட்டிருந்தது. இலங்கையின் பொருளாதாரத்தினை தமிழர்கள் அதன் கழுத்தில் பிடித்து வைத்திருப்பதாக அவர் எழுதியிருந்தார். "சில்லறை வியாபாரமும், மொத்த வியாபாரமும் முற்றிலுமாக தமிழர்களின் கைகளில் சிக்கியிருப்பதாக" அவர் கூறினார். "புறக்கோட்டை சந்தையில் தமிழர் மொத்தவியாபாரத்தின் மீது வைத்திருந்த கட்டுப்பாட்டை சிங்களவர்கள் அழிக்கவேண்டும்" என்று அவர் கேட்டிருந்தார். மேலும், "சிங்களவர்கள், சிங்களவர்களின் கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்கவேண்டும்" என்றும் வேண்டுகோள் விடுத்தார். இந்தப் புத்தகமும், துண்டுப்பிரசுரங்களும் சிங்கள வியாபாரிகளூடாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இன்னொரு புத்தகம் மலையக தோட்டத் தொழிலாளர்களை இலக்குவைத்து எழுதப்பட்டிருந்தது. பெளத்த சிங்கள கலாசாரத்திற்கு அச்சுருத்தல் கொடுக்கும் வகையில் இந்திய தமிழ்த் தொழிலாளர்கள் வளர்ந்துவிட்டதாகவும், மலையகமெங்கும் இந்துக் கோயில்களை அவர்கள் கட்டிவருவதாகவும், இதுவே முதன்மையான அச்சுருத்தலாக மாறியிருப்பதாகவும் ஆது கூறியது. சரித்திரப் பழமைவாய்ந்த கண்டி இராச்சியத்திற்குற்பட்ட மலையகத்திலிருந்து பெளத்த மதமும், சிங்களக் கிராம வாழ்க்கையும் இந்தியத் தமிழர்களால் அழிக்கப்பட்டு வருவதாகவும் அது கூறியது. இந்தப் புத்தகமும் மலை நாட்டிலுள்ள அனைத்து பெளத்த விகாரைகள் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. நான்காவது புத்தகம் "புலிகள் யார்" என்கிற தலைப்பில் வெளிவந்தது. உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் எல்லாத்தமிழர்களையும் புலிகள் என்று நிறுவுவதே இப்புத்தகத்தின் நோக்கம். மகாவம்சக் கதையினை சிங்களவர்களுக்கு மீள நினைவுபடுத்திய இப்புத்தகம் சிறிலங்கா பெளத்த சிங்கள மக்களுக்கு மட்டுமே உரியது என்றும், தமிழர்கள் இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்களே என்றும் கூறியது. தமிழர்கள் ஒன்றில் தமிழ்நாட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும், அல்லது சிங்கள பெளத்தர்களில் தயவிலேயே இங்கு வாழமுடியும் என்று வாதிட்டது. இப்புத்தகமும் சிங்கள வியாபாரிகள், சமூக அமைப்புக்கள், பெளத்த விகாரைகள் ஊடாக சிங்கள மக்களிடம் கொண்டுசேர்க்கப்பட்டது. தமிழர்கள் மீது மிகவும் திட்டமிட்ட முறையில் தாக்குதல் ஒன்றினை நடத்துவதற்காக சிங்களவர்களைத் தயார்செய்து வந்த அதேவேளை, சிறில் மத்தியூ தன்பங்கிற்கும் சிங்கள பெளத்தர்களின் ஆவேசத்தை கட்டியெழுப்ப முயன்றார். சிறிமாவினால் கொண்டுவரப்பட்டு பின்னர் தமிழர்களின் எதிர்ப்பினால் பின்வாங்கப்பட்ட பல்கலைக்கழக அனுமதி முறையினை மீளவும் தான் கொண்டுவருவேன் என்று அவர் சூளுரைத்தார். தமிழர்களின் அழுத்தத்திற்குப் பயந்தே சிறிமா பல்கலைக்கழக அனுமதி முறையில் மாற்றங்களைச் செய்திருந்தார் என்று சிங்களவர்கள் மத்தியில் இருந்துவந்த கசப்புணர்வை மீளவும் தட்டியெழுப்புவதே அவரது நோக்கமாக இருந்தது. ஆவணி 4 ஆம் திகதி, 1977 ஆம் ஆண்டு அரசால் கொண்டுவரப்பட்ட கொள்கைப் பிரகடணத்தை சிங்கள இனவாதிகளும், ஆசிரியர்களும், கல்விமான்களும் கூட்டாக எதிர்க்கத் தொடங்கியிருந்தார்கள். 1972 ஆம் ஆண்டிலிருந்து சிங்கள மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட சலுகைகள் இரத்துச் செய்யப்படுவதை அவர்கள் முற்றாக நிராகரித்தார்கள். சிங்களத் தேசிய அமைப்புக்கள் மெரிட் முறையில் பல்கலைக்கழக அனுமதியினை வழங்குவதை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று பிரகடணம் செய்தார்கள். மெரிட் முறை மூலம் மீளவும் பெருமளவு தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் நுழையும் அபாயம் இருப்பதாக அவர்கள் வாதிட்டார்கள். பொறியியல் மற்றும் மருத்துவ பாடநெறிகளுக்கு உள்வாங்கப்படும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை சிங்கள மாணவர்களைக் காட்டிலும் அதிகமாகிவிடும் என்று அவர்கள் எச்சரித்தார்கள். 1978 ஆம் ஆண்டு மாசி மாதத்தில் புதிய மெரிட் முறைக்கு எதிராக பாடசாலைகளைப் பகிஷ்கரிக்கப்போவதாக உயர்கல்வி மாணவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை இறுதிநேரத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர்களை அரசால் கைதுசெய்யப்பட்டதனால் இடம்பெறாது போனது. தன்னை ஒரு சிங்களத் தேசியவாதியாக நிறுவுவதில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார் மத்தியூ. 1977 ஆம் ஆண்டு மார்கழி 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தமிழ் பரீட்சையாளர்கள் தமிழ் மாணவர்களுக்கு அதிகமான புள்ளிகளை வழங்கிவருவதாக மீண்டும் கூறிய அவர், தன்னிடம் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவற்றினை மறுநாள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் காண்பிக்கப்போவதாகவும் கூறினார். இதற்குப் பதிலளித்த சிவசிதம்பரம், தமிழர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள் எனும் மத்தியூவினது குற்றச்சாட்டினை தாம் முற்றாக நிராகரிப்பதாகக் கூறினார். தான் கூறியவாறே, மார்கழி 12 ஆம் திகதி தனது கஒத்தொழில் அமைச்சின் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினை மத்தியூ கூட்டினார். நான் டெயிலிநியூஸ் பத்திரிகைக்காக அந்த பத்திரிகையாளர் மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரசாயணவியல்ப் பேராசிரியர் பி பி ஜி எல் சிறிவர்த்தனவும் இம்மாநாட்டில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் உயிரியல்ப் பிரிவில் பரீட்சையெழுதிய இரு தமிழ் மாணவர்களின் விடைத்தாளகளை மத்தியூ பத்திரிக்கையாளர்களுக்குக் காண்பித்து, நுளம்பொன்றின் வாழ்க்கைச் சக்கரம் தொடர்பான கேள்வியொன்றிற்கு ஒதுக்கப்பட்ட புள்ளிகளைக் காட்டிலும் அதிகமான புள்ளிகள் அம்மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டினார். மனித நாகரீகத்திற்கு முரணான வகையில் தமிழ் மாணவர்களுக்கு அதிகமான புள்ளிகள் தமிழ்ப் பரீட்சையாளர்களால் வழங்கப்பட்டுவருவதாக அவர் கூறினார். தமிழ்ப் பரீட்சையாளர்கள் நேர்மையற்று நடப்பதாகவும், இதன் விளைவாக பெருமளவு சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு நுழையும் வாய்ப்பினை இழந்திருக்கிறார்கள் என்றும், இந்தச் சூழ்ச்சி 1968 ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார். ஆனால், மாணவர்களின் விடைத்தாள்கள் இரகசியமாக வைக்கப்படும்போதும், சிறில் மத்தியூ அவ்விடைத்தாள்களை எங்கணம் பெற்றார் என்று சில பத்திரிக்கையாளர்கள் அவரைக் கேட்டபோது அவர் பதிலளிக்கது மெளனம் காத்தார். ஆனால், அரச ஆதரவு சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் மத்தியூவின் இந்தக் குற்றச்சாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து தமது தலைப்புச் செய்தியாக மறுநாள் வெளியிட்டன மகிழ்ந்தன. தனது பத்திரிக்கையாளர் மாநாட்டினைத் தொடர்ந்து இன்னொரு விஷமத்தனமான துண்டுப்பிரசுரத்தை "ஒரு கொடூரமான சதி" எனும் பெயரில் வெளியிட்டார். அதில் தமிழ் பரீட்சையாளர்கள் தமிழ் மாணவர்களுக்கு அதிகப்படியான புள்ளிகளை வழங்குவதன் மூலம் பெருமளவு தமிழ் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக் கொடுக்கிறார்கள் என்று புனையப்பட்டிருந்தது. இது தமிழத் தேசியத்தின் சதி என்று நிறுவ அவர் மும்முரமாக முயன்றுவந்தார். இதனை பாரிய பிரச்சினையாக உருவாக்கிவிட்ட அவர், சிங்கள மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனதில் கடுமையான தாக்கத்தினை இந்தச் சதி ஏற்படுத்திவிட்டிருப்பதாக பிரச்சாரப்படுத்தினார். இதன் பின்னர் அரசாங்கம் மாவட்ட ரீதியிலான ஒதுக்கீட்டு முறையினை அறிமுகப்படுத்தியது. இதன்படி 30 வீதமான பல்கலைக்கழக அனுமதிகள் மெரிட் முறை மூலமும், 55 வீதமானவை மாவட்டத்தின் சனத்தொகை அளவின் அடிப்படையிலும், மீதி 15 வீதமானவை பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன. ஆனால், மாவட்ட ரீதியில் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் முறையினை அறிமுகப்படுத்தவே சிறில் மத்தியூவின் பிரச்சார நாடகத்தினை அரசாங்கம் பாவித்ததாகக் கூறப்படுகிறது. இதனைச் செய்ய அரசு நினைத்திருந்தால், தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தது செய்திருக்க முடியும். ஆனால், தமிழ் மக்களின் எண்ணங்களுக்கோ, உணர்வுகளுக்கோ மதிப்பளிக்காத அரசும் சிங்கள ஊடகங்களும் இதனைத் தெரிந்தே செய்துவந்தன. இதுவும் ஒரு முக்கிய காரணம் தமிழர்கள் தாம் அந்நியப்படுத்தப்படுவதாக எண்ணுவதற்கு. தமிழர்கள் தமிழ்த் தேசியம் நோக்கி நகரத் தொடங்கியதோடு, தமக்குள் ஒற்றுமையின் அவசியத்தையும் உணரத் தலைப்பட்டனர். இவை நடப்பதற்கு சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் சூறாவளி அநர்த்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. இதன்போது சிறில்மத்தியூ நடந்துகொண்ட விதமும் தமிழர்கள் தாம் தனித்து வாழவேண்டும் என்கிற எண்ணக்கருவை மேலும் உறுதிப்படுத்தியிருந்தது. பாரிய அலைகளுடன் கூடிய சூறாவளியொன்று கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளை கடுமையாகச் சேதப்படுத்திக்கொண்டு பொலன்னறுவை ஊடாகக் கடந்து சென்றிருந்தது. இப்பகுதிகளில் இயங்கிவந்த அரச கூட்டுத்தாபனங்களில் பணிபுரிந்து வந்த சிங்கள் அதிகாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட சர்வதேச மற்றும் உள்ளூர் நிவாரண உதவிகளை திசை திருப்பி பாதிப்படையாத பொலொன்னறுவை உட்பட்ட பல சிங்களப் பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர். சூறாவளியினால் கடுமையான அழிவுகளைச் சந்தித்திருந்த தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய அவரச உதவிகள் இதனால் மறுக்கப்பட்டன. சர்வதேசத்திலிருந்து கிடைத்த நிவாரணப் பொருட்களை ஏற்றிவந்த பாரவூர்திகளை வீதிகளில் தடைகளையிட்டு மறித்த சிங்களக் காடையர்கள், அவற்றினை சிங்களப் பகுதிகளுக்குத் திருப்பிவிட்டனர். கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழருக்கு அனுப்பப்பட்ட பொருட்களை அரசும், சிங்களக் காடையர்களும் இணைந்து பாதிக்கப்படாத சிங்களப் பகுதிகளுக்கு அனுப்பியதை அறிந்தபோது வடபகுதித் தமிழர்கள் கொதித்துப் போயினர். ஆகவே, கிழக்கின் தமிழர்களுக்கான நிவாரண உதவிகளை தாமே செய்ய முடிவெடுத்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், சமூக அமைப்புக்கள், மத அமைப்புக்கள் மற்றும் ஆயுத அமைப்புக்கள் இந்த நிவாரண ஒருங்கிணைப்புப் பணியில் முன்னின்று செயற்பட்டன. ஆயுத அமைப்புக்களில் புலிகளும் ஈரோஸ் அமைப்பும் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பினைச் செய்திருந்தன. சிறிய குழுக்களாக செயற்பட்ட இந்த அமைப்புக்கள் கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்று அவர்களின் வாழிடங்களைத் திருத்தவும், வாழ்க்கையை மீள ஒருங்கிணைக்கவும் உதவிசெய்தனர். இவர்களுள் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய ஒரு இளைஞரின் பெயர் இன்பம். விஸ்வஜோதி எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் நிவாரண உதவிகளை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் திருபியிருந்தவேளை இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டார். கடுமையான சித்திரவதைகளின் பின்னர் கொல்லப்பட்ட அவரது உடல் பண்ணைப் பாலத்தின் கீழிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தது. 1979 ஆம் ஆண்டின் காலப்பகுதியில், யாழ்ப்பாணக் குடாநாட்டை பாரிய கொலைக்களமாக ஜெயவர்த்தனா மாற்றியிருந்தார். இதுபற்றிய செய்திகளை பின்னர் விரிவாகப் பார்க்கலாம். சூறாவளி அநர்த்தத்தின்பொழுது சிங்கள அதிகாரிகளும் அரசும் நடந்துகொண்ட விதம் பாராளுமன்றத்திலும், தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் வெளிவரத் தொடங்கியபோது, சிங்கள அதிகாரிகள் மீதிருந்த நம்பிக்கையினை தமிழர்கள் இழக்கத் தொடங்கினர். கிழக்குத் தமிழர்களுக்கென்று இந்தியாவினால் வழங்கப்பட்ட தரம்வாய்ந்த சேலைகள் கொழும்பு தெருவோரக் கடைகளில் மிகவும் குறைந்த விலைக்கு சிங்களவர்களால் விற்கப்பட்டன. இதுபற்றி அரச அதிகாரிகளிடம் வினவியபோது, இந்தியச் சேலைகளை விற்றுப் பெற்ற பணம் அரசின் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டதாகக் கூறினர். மேலும், சூறாவளியினால் வீடுகளை இழந்து தங்க இடமின்றித் தத்தளித்துக்கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு சர்வதேசத்தால் அனுப்பப்பட்ட கூடாரங்கள் கொழும்பின் அரச கிட்டங்கிகளில் குவிக்கப்பட்டு பழுதடைந்து போயின. தமிழர்கள் தங்களைத் தாமே இனிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் தமிழரிடையே வளர ஆரம்பித்திருந்தது. குறிப்பாகக் கொழும்பில் வாழ்ந்துவந்த தமிழரும் இதனை உணரத் தடலைப்பட்டனர். சூறாவளி நிவாரணச் செயற்பாடுகளில் கொழும்புத் தமிழரும் இணைந்துகொண்டனர். ஜெயவர்த்தன அரசானது தனது நடவடிக்கைகளாலும், மாற்றாந்தாய் மனப்பாங்கினாலும் 1978 - 79 காலப்பகுதியில் தமிழ் ஆயுத அமைப்புக்களின் வளர்ச்சிக்கு வழிகோலியிருந்தது. புலிகள் மற்றும் டெலோ அமைப்புகள் மீது ஓரளவுக்குச் செல்வாக்குச் செலுத்தும் நிலையில் இருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தொடர்ந்தும் பலவீனப்படுத்துவதிலேயே ஜெயவர்த்தனா தனது கவனத்தைச் செலுத்தி வந்திருந்தார். பிரபாகரன், உமா மகேஸ்வரன், தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் ஆகியோ அன்றுவரை அமிர்தலிங்கம் - சிவசிதம்பரம் ஆகியோரின் அறிவுரைகளைக் கேட்டும் மதித்தும் வந்திருந்தனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைக் கொண்டு தமிழ் ஆயுத அமைப்புக்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, முன்னணியினருக்கும் ஆயுத அமைப்புக்களுக்கும் இடையே பகைமையினை வளர்த்து அதனை விரிவாக்குவதிலேயே ஜெயவர்த்தன தனது முழுக்கவனத்தையும் செலுத்தியிருந்தார். ஜெயவர்த்தனா வன்முறையில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆதரவாளர்களுக்கு தான் வழங்கிய அதே தண்டனையினைத்தான் தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கு அவர் வழங்க விரும்பினார். அது அரச பயங்கரவாதம் !
  10. மண் அரிப்பு... எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
  11. இன்று பிறந்தநாளை கொண்டாடும்.. @nunavilan, @Ahasthiyan ஆகியோருக்கு... உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🙂
  12. தின்னைவேலி வங்கிக்கொள்ளை மக்களை எப்படி அணிதிரட்டுவது, தனது போராட்ட அமைப்பை எவ்வாறு விரிவுபடுத்துவது என்கிற பிரபாகரனின் சிந்தனைகளை அடிப்படையாக வைத்தே தின்னைவேலி வங்கிக்கொள்ளை திட்டமிடப்பட்டது. சர்வதேச கவனத்தினை ஈர்ந்திருந்த இரத்மலானை விமானத் தகர்ப்பிற்குப் பின்னர் பாரிய வங்கிக்கொள்ளை ஒன்றினை நடத்தவேண்டும் என்று பிரபாகரன் விரும்பினார். இதனைத் தயார்ப்படுத்துவதற்கு அவருக்கு ஒருமாதகாலம் தேவைப்பட்டது. வங்கியில் காவலுக்கு நிற்கும் பொலீஸ் அதிகாரியின் உப இயந்திரத் துப்பாக்கியினைக் கைப்பற்றுவதே அவரது திட்டத்தின் முதலாவது இலக்கு. இதற்கு செல்லக்கிளியை அவர் பொறுப்பாக நியமித்தார். பிரபாகரன் உட்பட 6 பேர் கொண்ட அணியின் தலைவராக செல்லக்கிளியே பிரபாகரனால் நியமிக்கப்பட்டார். தின்னைவேலியில் இயங்கிவந்த மக்கள் வங்கியின் காசாளரான சபாரட்ணத்துடன் நட்பாகப் பேசத் தொடங்கினார் செல்லக்கிளி. செல்லக்கிளியுடன் பேசும்போது சபாரட்ணம் தமது கிளைகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளின்போதும் தமது வங்கியிலிருக்கும் பணத்தினை யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் பிரதான அலுவலகத்திற்குக் கொண்டுசெல்வதாகக் கூறியிருந்தார். வங்கிக் கிளைகளில் சேரும் பணம் நேர்த்தியாக சூட்கேஸுகளில் அடுக்கப்பட்டு, பிரதான காசாளரின் அறையில் வைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை பகல்வேளைகளில் பிரதான அலுவலகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. வங்கியின் வரைபடம், உள்நுழையும், வெளியேறும் வாசல்கள் குறித்த தகவல்களை சபாரட்ணம் செல்லகிளிக்கு வழங்கினார். வங்கியில் மேலாளர் உட்பட 8 ஊழியர்கள் வேலைபார்த்து வந்தார்கள். செல்லக்கிளியே ஒருமுறை நேரே வங்கிக்குச் சென்று நடைமுறைகளை அவதானித்து வந்தார். தமிழீழத்தின் எல்லைகள் 1978 ஆம் ஆண்டு மார்கழி 5 ஆம் திகதி, வங்கி தனது அலுவல்களைத் தொடங்கி சரியாக ஒரு மணிநேரத்தின்பின்னர் வங்கி நோக்கி நகர்ந்தது புலிகளின் அணி. வங்கியின் வாயிற்கதவருகே உப இயந்திரத் துப்பாக்கியுடன் காவலுக்கு நின்ற பொலீஸ் கொன்ஸ்டபிள் கிங்ஸ்லி பெரேரா அருகில்ச் சென்று அவர்மீது தாக்குதல் நடத்திய செல்லக்கிளி அவரது இயந்திரத் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டதோடு, அதனாலேயே அவரைச் சுட்டார். வாயிலின் மறுபுறத்தில் நின்றிருந்த ரிசேர்வ் கொன்ஸ்டபிளான சச்சிதானந்தம் நடப்பதைக் கண்டவுடன் ஓடத் தொடங்கினார். அவரையும் சுட்டுக்கொன்ற செல்லக்கிளி, அவ்விடத்திலேயே காவலுக்கு நின்றுகொண்டார். பிரபாகரனும் மற்றைய நான்கு போராளிகளும் ஊழியர்களை மேலாளரின் அறைக்குள் இட்டுச் சென்றதோடு, சூட்கேசுகளில் இருந்த பணத்தினை உரைப்பைகளில் நிரப்பிக்கொண்டனர். தாம் அங்கிருந்து கிளம்பிச் செல்லும்வரை ஊழியர்களை அசையவேண்டாம் என்று அவர்கள் எச்சரித்திருந்தனர். அவர்கள் கொள்ளையிட்ட பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறும் வேளை கோப்பாய் பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த ஜீப் வண்டியொன்று தற்செயலாக அப்பகுதியூடாக வந்தது. கோப்பாய் பொலீஸ் நிலைய அதிகாரி, ஜெயரட்ணம் எனும் கொன்ஸ்டபிளை காசோலை ஒன்றை மாற்றுவதற்காக வங்கிக்கு அனுப்பியிருந்தார். ஜீப் வண்டியிலிருந்து ஜெயரட்ணம் கீழிறங்கவே அவர்மீது செல்லக்கிளி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார். மற்றையவர்கள் ஜெயரட்ணத்தை இழுத்து வெளியே வீசிவிட, புலிகளின் அணி கொள்ளையிட்ட பணத்தோடு பொலீஸ் வண்டியில் தப்பிச் சென்றது. கொன்ஸ்டபிள் ஜெயரட்ணம் காயங்களுடன் தப்பித்துக்கொண்டார். மிகப்பெரிய வங்கிக்கொள்ளையினை கச்சிதமாக முடித்துக்கொண்ட புலிகளின் அணி, தமது இரண்டாவது இயந்திரத் துப்பாக்கியையும் இந்த நடவடிக்கையில் கைப்பற்றிக்கொண்டது. கொள்ளையிடப்பட்ட பணத்தின் பெறுமதி 1,180,000 ஆக இருந்ததோடு, அக்காலத்தில் இது பெருந்தொகையாக கணிக்கப்பட்டது. அன்று புலிகளுக்கு உதவிய வங்கியின் காசாளரான சபாரட்ணம் இன்று வன்னியில் புலிகளின் நிதிச் சேவைக்கு தலைவராக இருக்கிறார். இன்று புலிகளின் நிதிப்பொறுப்பாளராக இருக்கும் சபாரட்ணம் ஒரு காலத்தில் ரஞ்சித்தப்பா என்று அழைக்கப்பட்டதுடன் இன்று தமிழேந்தியென்றும் அழைக்கப்பட்டு வருகிறார். இயக்கத்தில் இணைந்த திறைமையுள்ள இளைஞர்கள் தின்னைவேலி வங்கிக்கொள்ளையினையடுத்து தமிழேந்தி எனப்படும் சபாரட்ணம் புலிகளுடன் இணைந்துகொண்டார். பிரபாகரனின் செயல்வீரமும், மனதை வசீகரிக்கும் ஆற்றலும் இயக்கத்திற்கு புதிய உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் பெற்றுக்கொடுத்தது. பல திறமைசாளி இளைஞர்கள் புலிகள் இயக்கம் உருவக்கப்பட்டபின்னர் அதனோடு இணையத் தொடங்கினார்கள். நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டவுடனேயே பேபி சுப்பிரமணியம் எனும் இளங்குமரன் இயக்கத்தில் இணைந்துகொண்டார். மேலும் இரத்மலானை விமானத் தகர்ப்பிலும் அவர் பங்கெடுத்திருந்தார். 1977 இல் குமரப்பாவும் பண்டிதரும் இணைந்தார்கள். 1978 இல் கிட்டு, மாத்தையா, ரகு ஆகியோர் இணைந்தார்கள். இவர்கள் எல்லோருமே மிகவும் திடகாத்திரமாக இருந்ததுடன் வெற்றித்தளபதிகளாகவும் வலம்வந்தார்கள். ஆனால், பேபி சுப்பிரமணியம் இராணுவத்துறையிலிருந்து விலகி கல்வித்துறைக்குப் பொறுப்பாக இயங்கிவருகிறார். மாத்தையா தலைமைக்கெதிரான துரோகத்திற்காக மரணதண்டனை வழங்கப்பட ஏனைய தளபதிகள் மாவீரர்களாகிவிட்டதுடன் இன்றுவரை புலிகளாலும், தமிழ் மக்களாலும் மிகவும் அன்பாக நினைவுகூறப்பட்டு வருகின்றனர். இரத்மலானை விமானத் தகர்ப்பின் பின்னரான காலத்தில் கிட்டு, மாத்தையா மற்றும் ரகு ஆகியோர் இயக்கத்தில் இணைந்துகொண்டனர். அவர்கள் எல்லோரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள். கிட்டு பிரபாகரனுக்கு நெருங்கிய உறவினராக இருந்ததுடன், அவருக்கான பயிற்சியினை பிரபாகரனே வழங்கினார். சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் எனும் இயற்பெயரைக் கொண்ட கிட்டு வல்வை சிதம்பராக் கல்லூரியில் கல்விகற்றவர். அவரது தந்தை நெல்லியடியில் அச்சகம் ஒன்றை நடத்திவந்தவர், சமஷ்ட்டிக் கட்சியின் தீவிர ஆதரவாளர், தந்தை செல்வாவின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்த சீடர். கிட்டுவின் தாயாரான இராஜலட்சுமியும் சமஷ்ட்டிக் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்ததுடன் 1961 ஆம் ஆண்டில் இடம்பெற்ற யாழ்ப்பாணச் செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற சத்தியாக்கிரக நிகழ்வில் ஒரு வயதுப் பாலகனான கிட்டுவையும் சுமந்துகொண்டு கலந்துகொண்டவர்கள். கிட்டு, குடும்பத்தின் கடைசிப்பிள்ளயாக 1960 ஆம் ஆண்டு தை 2 ஆம் திகதி பிறந்தார். மகாத்மா காந்தியின் அகிம்சை வழிமுறைகளில் மிகவும் நாட்டம் கொண்டிருந்த கிட்டுவின் பெற்றோர்கள் தமது மூத்த மகனுக்கு காந்திதாசன் என்று பெயர் வைத்தனர். இன்று அவர் இந்தியாவில் வாழ்ந்துவருகிறார். காந்திதாசனுக்குப் பின்னர் இரு பெண்பிள்ளைகள் பிறக்க, இறுதியாக கிட்டு பிறந்தார். கிட்டுவின் மரணம் மிகவும் சோகமான முறையில் நடந்தது. ராஜலட்சுமி தனது தள்ளாத வயதிலும் சமூகத்தில் தாழ்த்தப்பட்டுவாழும் பெண்களின் வாழ்வை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கிருஷ்ணகுமார் இயக்கத்தில் இணையும்போது வெங்கட் என்று அழைக்கப்பட்டு பின்னர் வெங்கட் அண்ணா என்று செல்லமாக அழைக்கப்படலானார். இறுதியில் எல்லோராலும் செல்லமாக கிட்டண்ணா என்று விரும்பி அழைக்கப்பட்டார். பிரபாகரனினால் ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்ட கிட்டு பிரபாகரனோடும், கலபதியோடும் தோளுக்குத் தோள் நின்று செயற்பட்டவர். துரையப்பா மீதான தாக்குதலில் புலிகள் அணியின் குறிபார்த்துச் சுடும் வீரராகவும் பங்கெடுத்தவர். துரையப்பாவின் கொலையின்பின்னர் பிரபாகரனுடன் கிட்டுவும் 1979 இல் தமிழ்நாட்டிற்குச் சென்றிருந்தார். மாத்தையாவின் இயற்பெயர் கோபாலசாமி மகேந்திரராஜா. அவர் 1956 ஆம் ஆண்டு பருத்தித்துறையில் பிறந்ததோடு சிதம்பராக் கல்லூரியில் கல்விகற்றவர். அவரையும் பிரபாகரனே பயிற்றுவித்தார். இயக்கத்தின் உபதலைவர் நிலைக்கு உயர்ந்த மாத்தையா வன்னிப்பகுதிக்குப் பொறுப்பாகச் செயற்பட்டிருந்தார். கிட்டுவுடனான மாத்தையாவின் தனிப்பட்ட குரோதமே அவரின் வீழ்ச்சிக்குக் காரணமாகியது. ரகு பொலீஸ் துறையில் சேர விண்ணப்பித்திருந்தார். அவர் வல்வெட்டித்துறையில் பிறந்தமையினால் பொலீஸார் அவரை சேர்க்க மறுத்துவிடவே அவர் புலிகளுடன் சேர்ந்துகொண்டார். பிரபாகரன் தனது முழு நேரத்தையும் தனது போராளிகளைப் பயிற்றுவித்தல், ஆயுதங்களைச் சேகரித்தல், பணத்தினைச் சேகரித்தல் என்பதிலேயே செலவிட்டார். அவர் தனது போராளிகளை அர்ப்பணிப்பு மிக்க, இலட்சியத்தினால் உந்தப்பட்ட, குற்றமேதுமற்ற, ஒழுக்கம் மிக்க, தலைமைக்கு விசுவாசமான வீரர்களாக உருவாக்கினார். ஒழுக்கமும் விசுவாசமுமே வெற்றிகரமான விடுதலை அமைப்பை உருவாக்கும் என்று பிரபாகரன் உறுதியாக நம்பினார்.
  13. நுணாவிலான், அகஸ்தியன் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்.
  14. எதிரியிடமிருந்து ஆயுதங்களைப் பறித்தல் இத்தொடரை எழுதும்போது நான் சேகரித்த விடயங்களை எனது வாசகர்களோடு பகிரும் அதேவேளை அவர்களிடமிருந்து இத்தொடர் குறித்த தகவல்கள், திருத்தங்கள் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதன் மூலம் எமது வாழ்நாளில் தமிழ் இனம் கண்ட ஒப்பற்ற ஆளுமை பற்றி எமது வருங்கால சந்ததியினரும் அறிந்துகொள்ளும் வகையில் ஆவணம் ஒன்றைத் தயார்ப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். வாசகர்களின் கருத்துக்களை எனது தொடரினுள் உள்வாங்குவது எனது நோக்கமல்ல, மாறாக அவற்றினை எனது தொடருக்குச் சமாந்தரமாக குறிப்பிட்டுச் செல்வதன்மூலம் எதிர்கால எழுத்தாளர்களுக்கும், வரலாற்றாசிரியர்களுக்கும் தமது பதிவுகளை மேற்கொள்ள உதவுவதே எனது நோக்கமாகும். பிரபாகரன் ஒரு தனி மனிதன் அல்ல, அவன் ஒரு நிகழ்வு. உலகின் ஒப்பற்ற கெரில்லா தலைவர்களுள், விடுதலைப் போராட்ட வீரர்களுள் முதன்மையானவன். அவன்பற்றி எழுதப்படுவதும், ஆராயப்படுவதும் கருத்தாடப்படுவதும் மிக மிக அவசியம். இதுவரை எனக்குக் கிடைக்கப்பெற்ற வாசகர்களின் கருத்துக்களில் ஒரு சிலவற்றைப் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன், ****************************************************************************************************** எனது அக்கத்தில் நான் இட்ட முக்கியமான வழு ஒன்று பற்றி கனடாவில் வசித்து வரும் அம்பலவானர் செல்லத்துரை தெரிவித்த கருத்திலிருந்து ஆரம்பிக்கலாம், அவரது மின்னஞ்சலின இங்கே பிரசுரிக்கிறேன், ஐயா, உங்களின் பதின் நான்காவது அத்தியாயத்தில் புனித மாணிக்கவாசகரின் சுலோகமான நாம் யார்க்கும் குடியல்லோம் என்பதை தங்கத்துரை பாடியதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால், இந்த சுலோகம் திருநாவுக்கரசரால் பாடப்பட்டதே ஒழிய, மாணிக்கவாசகரினால் அல்ல, ஆகவே தயவுசெய்து திருத்தி விடுங்கள். நான்கு சைவ புனிதர்களுள். அப்பரே முதன்மையானவர். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வருமே அவர்களாகும். நான் ஒரு இந்து. இந்தப் பெயர்கள் எனது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன. எனது சிறுவயதில் முதியோரிடமிருந்து குட்டுக்களை வாங்காது இவற்றை நான் மனப்பாடம் செய்துவைத்திருக்கிறேன். இந்தத் தவற்றினை நான் எவ்வாறு செய்தேன் என்று எனக்கே புரியவில்லை. அதற்காக வருந்துவதோடு, அதனை திருத்தியும் விட்டேன்.1957 ஆம் ஆண்டிலிருந்து ஒரு செய்தியாளனாக வலம்வரும் எனக்கு எனது தரவுகளில் ஏற்படும் தவறுகள் மிகுந்த அச்சத்தினை ஏற்படுத்தி விடுகின்றன. *********************************************************************************************************** சங்கம் இணையத்தின் ஆசிரியரின் கருத்து, "உங்களின் பிரபாகரன் பற்றிய தொடரினை தொடர்ச்சியாக வாசித்துவரும் ஒருவரை சங்கம் இணையத்தள உறுப்பினர் கூட்டத்தில் சந்தித்தேன். அவர் என்னிடம் கேட்ட முதலாவது கேள்வி, "சபாரட்ணம் இத்தொடரினை எழுதி முடித்தபின்னர் அதனை ஒரு புத்தகமாக வெளியிடப் போகின்றாரா?" என்பதுதான். உங்களின் தொடரினை வாசித்து தான் பெற்ற அனுபவத்தினைத் தொடர்ச்சியாக அவர் விபரித்துக்கொண்டு சென்றார். அத்தொடரினை பக்கச்சார்பில்லாத, உண்மையான தகவல்களைக்கொண்ட, நேர்த்தியாக அமைக்கப்பட்ட முழுமையான ஆவணம் என்று அவர் என்னிடம் கூறினார். நீங்கள் எழுதும் விதத்தினைப் பார்க்கும்போது அச்சம்பவங்களினை நேரில் கண்ட அனுபவம் ஏற்பட்டதாக அவர் கூறுகிறார். இத்தொடரினை தான் தொடர்ச்சியாக வாசித்துவருவதாகவும் தனது நண்பர்களுக்கும் இத்தொடர் குறித்து கூறிவருவதாகவும் என்னிடம் பேசும்போது அவர் கூறினார்" பிரபாகரனின் இளமைக் காலத்தில் தானும் சைக்கிளில் பிரபாகரன் சென்ற பேரணிகளுக்குச் சென்றதாகக் கூறும் அவர், உங்களின் தொடரினை வாசிக்கும்போது தனது பழைய நினைவுகளை மீட்கக்கூடியதாக அமைந்ததாகக் கூறினார்" என்று சங்கம் இணைய ஆசிரியர் என்னிடம் தெரிவித்தார். அந்த மனிதருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டே, அவர்கூட தனது அனுபவங்களை எழுதலாமே என்று கேட்டுக்கொண்டேன். பிரபாகரன் தனது இளமைக் காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நீள அகலங்களுக்கெல்லாம் சைக்கிளில் பயணித்து குடாநாட்டின் வீதிகள், ஒழுங்கைகள், குச்சொழுங்கைகள் என்று சகல பகுதிகளையும் தெளிவாக அறிந்துவைத்திருந்தார் என்பது நாம் அறிந்ததே. பிரபாகரன் பேரணிகளுக்கும், அரசியல்க் கூட்டங்களுக்கும் சைக்கிளிலேயே சென்று வந்தார். ஆகவே, அவர் பயணித்த இடங்கள், நிகழ்வுகள் மற்றும் அவருடனான சம்பாஷணைகள் என்பனவற்றை ஆவணப்படுத்தி வைத்திருப்பது எமக்கு உதவியாக இருக்கும். ஆகவேதான் அந்த மனிதரிடம் பிரபாகரன் குறித்த விடயங்களை எழுதுமாறு கேட்டிருந்தேன். ********************************************************************************************************** இவ்வாறே இன்னொரு கடிதம் ஒன்று கனடா கார்ள்ட்டன் பல்கலைக்கழகத்தில் இரசாயணவியல் கற்கும் மாணவர் ஒருவரிடமிருந்து வந்திருந்தது. அவரது கடிதத்திலிருந்து சில பகுதிகள், "இத்தொடரை எழுதுவதற்காக சபாரட்ணம் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். இத்தொடர் மூலம் பல விடயங்களை நான் அறிந்துகொள்ள முடிந்ததோடு, அவர் எழுதும் விதமும் மிகவும் நன்றாக இருக்கிறது" என்று கூறியதோடு, இந்தத் தொடரினை தனது பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சங்கம் இணையத் தளத்திலும் தரவேற்றம் செய்யப்போவதாகவும் கூறியிருந்தார். இவ்வாறான ஊக்கப்படுத்தல்கள் எனக்கு மனநிறவினைத் தருகின்றன. மற்றையவர்களும் இதுபோன்ற செயல்களைச் செய்யலாம். இவர்களைப்போன்றே இன்னும் பலரும் இதுகுறித்து எழுதவேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் தமது கருத்துக்களை சங்கம் இணையத்தின் ஆசிரியருக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி டி. சபாரட்ணம் ************************************************************************************************************* இரண்டு விதிகள் 1978 ஆம் ஆண்டி இரண்டாவது அரைப்பகுதியில் தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கிடையில் பாரிய அறிவுசார் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வந்தன. இரு பிரச்சினைகளான தனிநபர் தீவிரவாதம் மற்றும் வங்கிக்கொள்ளை என்பன பேசுபடுபொருளாக இருந்தன. மாக்ஸியச் சிந்தனையைக் கொண்டிருந்த ஆயுத அமைப்புக்கள் இந்த இரு செயற்பாடுகளையும் ஒழுக்கக்கேடானவை என்றும் சமூகக் கோட்பாடுகளுக்குப் புறம்பானவை என்றும் விமர்சித்தன. தனிநபர்களைக் கொல்வது விடுதலைப் போராட்டம் ஆகாது என்றும் அவர்கள் வாதிட்டனர். அவர்களைப்பொறுத்தவரை வங்கிக்கொள்ளை என்பது மக்களின் பணத்தினைக் கொள்ளையடிப்பதுதான் என்று கருதப்பட்டது. மக்கள் புரட்சிக்காக அணிதிரட்டப்படவேண்டும் என்றும், போராட்டத்தினைச் சுமக்கும் நிலையினை மக்கள் உருவாக்கவேண்டும் என்றும் அவர்களால் கூறப்பட்டது. ஈரோஸ் அமைப்பின் ஆதரவாளர்களே இந்த விவாதங்களை ஆரம்பித்து வைத்திருந்தார்கள். அவ்வியக்கத்தின் ஸ்த்தாபகரான ரத்ணா எனப்படும் ரத்திணசபாபதி யாழ்ப்பாணத்தில் அப்போது தங்கியிருந்தார். அவர் ஏற்கனவே லெபனானில் ஆயுதப் பயிற்சியை முடித்திருந்தவர். அவரது கனவு தத்துவார்ந்த அடிப்படியில் அமைந்திருந்ததோடு, மிகவும் விரிவானதாகவும் இருந்தது. மேலும், பாட்டாளி வர்க்கத்தின் ஆயுதப்போராட்டமாகவே அவர் விடுதலைப் போராட்டத்தை விளங்கிக்கொண்டிருந்ததுடன், மத்திய மலைநாட்டில் வசித்துவந்த மலையகத் தமிழர்களையும் உள்ளடக்கியதாக போராட்டம் அமையப்பெறவேண்டும் என்றும் அவர் விரும்பினார். அவர் தன்னுடன் தமிழீழத்திற்கான வரைபடம் ஒன்றையும் கொண்டுவந்திருந்தார். அதில் வடக்குக் கிழக்கு மாகாணங்களுடன் மத்திய மாகாணமும் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால், பிரபாகரனோ மிகவும் எளிமையான யதார்த்தவாதியாக இருந்தார். ஆதலால், மார்க்ஸிய தத்துவவாதிகளிடமிருந்து அவர் வேறுபட்டவராகக் காணப்பட்டார். தமிழீழத்தின் பகுதிகள் மட்டுமல்லாது போராட்டத்தின் தத்துவார்த்த அடிப்படை தொடர்பிலும் வேறுபட்ட எண்ணங்களைக் கொண்டிருந்தார். அவரைப்பொறுத்தவரை தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்துவரும் வடக்கும் கிழக்கும் இணைந்த நிலப்பகுதியே தமிழீழம் என்று கருதப்பட்டது. மத்திய மலைநாடு கண்டிய சிங்களவர்கள் சரித்திர காலம் தொட்டு வாழ்ந்துவரும் ஒரு பகுதி என்று பிரபாகரனினால் உணரப்பட்டது. அவர் தன்னை ஒரு மார்க்ஸியவாதியாக அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. தொழிலாளர் பற்றியோ, பாட்டாளி வர்க்கம் பற்றியோ, வர்க்கவேறுபாடற்ற சமுதாயம் பற்றியோ அவர் ஒருபோதும் பேசவில்லை. தனது சிறுபராயம் முதல் அவருக்கிருந்த ஒரே கவலை தமிழினத்தின் பாதுகாப்பு மட்டும்தான். தமிழர்கள் சிறுமைப்படுத்தப்பட்ட இனமாக கருதப்படுவதை அவர் வெறுத்தார். அவர்கள் சுதந்திரமாகவும், சுயகெளரவத்துடனும் பாதுகாப்புடனும் வாழவேண்டும் என்று அவர் விரும்பினார். சிங்களக் காடையர்களாலும், இராணுவத்தாலும் அவர்கள் அச்சுருத்தப்படுவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சோசலிசம் தொடர்பான பிரபாகரனின் நிலைப்பாடு என்பது தமிழினத்தை சாதிய வேற்றுமைகள் அற்ற சமூகமாக மாற்றவேண்டும் என்கிற விருப்பிற்கு அப்பால் வேறு எதுவாகவும் இருக்கவில்லை. சாதிய வேறுபாடுகள் போராட்டத்திற்குப் பாதகமாக அமையும் என்று அவர் நம்பினார். சாதிய வேற்றுமைகள் தமிழர்களின் ஒற்றுமையினைக் குலைத்துவிடுவதோடு, பலமான ஆயுதப் போராட்ட அமைப்பொன்றினை உருவாக்குவதையும் தடுத்துவிடும் என்று அவர் கருதினார். யாழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் பிரபாகரனுடன் ஒருமுறை பேசும்போது, ஆயுதப் போராட்டத்திற்கு முதல் மக்கள் அரசியல்மயப்படுத்தப்படவேண்டும் என்று கூறியிருந்தார். அதனை உடனடியாக கையை வீசி மறுத்த பிரபாகரன், "என்ன அரசியல்மயப்படுத்தல்?" என்று கேட்டார். "மக்களுக்கு இன்று தேவையானது செயல்கள் மட்டுமே. நாம் செயலில் முதலில் இறங்கவேண்டும். மக்கள் எம்மைப் பிந்தொடர்வார்கள்" என்று அவர் கூறினார். அதையேதான் அவர் செய்தும் காட்டினார். அவரது போராட்டத்தின் முறையாகவும் அதுவே இருந்தது. திருப்பியடி, கடுமையாகத் திருப்பியடி, மீண்டும் மீண்டும் திருப்பியடி, இடைவேளையின்றி திருப்பியடி, மக்கள் உன்னுடன் இருப்பார்கள் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. தனது நிலைப்பாட்டிலிருந்து இரு முக்கிய விதிகளை அவர் வரைந்தார். போராட்டத்திற்கான ஆயுதங்களை உனது எதிரியிடமிருந்தே பறித்துக்கொள். எதியிடமிருந்தே உனது போராட்டத்திற்குத் தேவையான பணத்தினைக் கொள்ளையடி என்பதுதான் அவையிரண்டு விதிகளும். புலிகள் இராணுவத்தினரிடமிருந்தும், பொலீஸாரிடமிருந்துமே தமது பெரும்பாலான ஆயுதங்களைக் கைப்பற்றியிருந்தனர். எந்தவொரு ராணுவ நடவடிக்கையினதும் முக்கிய குறிக்கோளாக இருப்பது எதிரியிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றுவதுதான் என்று பிரபாகரன் தனது போராளிகளுக்குச் சொல்லிவந்தார். போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் தமக்குத் தேவையான பணத்தின் பெரும்பகுதியை இரு அரச வங்கிகளான மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றைக் கொள்ளையிட்டதன் மூலம் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
  15. நுணாவிலான், அகஸ்தியனுக்கு இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள்
  16. நுணாவுக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்…!
  17. யாழ் கள தகவலின்படி இன்று பிறந்த நாள் காணும் நுணாவிலான் மற்றும் அகஸ்தியனுக்கு இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள்.இருவரும் மென்மெலும் பல பிறந்தநாள் மெழுகுதிரி கொழுத்தி கேக் வெட்டிட வாழ்த்துக்கள்.
  18. ஐயன் வள்ளுவர் கன்யாகுமரி......! 🙏
  19. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(4). பிறிதொருநாள் சுமதி வெளியில் இருந்து தனது வீட்டுக்குள் வரும் போது அங்கு அவள் கணவன் சுரேந்தருடன் ஒரு ஆணும் பெண்ணுமாக இருவர் கதைத்துக் கொண்டிருப்பது தெரிகிறது.அவளும் அவர்கள் தனது கணவனின் நண்பர்கள் என நினைத்துக் கொண்டு அவர்களுக்கு bonjour (வணக்கம்) சொல்கிறாள்.திரும்பி அவள் உள்ளே போக எத்தனிக்கையில் சுரேந்தர் அவளை அழைத்து இவர் எனது வேலையிடத்து சக நண்பர்.எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர். இந்தப் பெண் மிருதுளா இவரது மருமகள் என்று சொல்ல அவர்களும் சுமதிக்கு bonjour சொல்கின்றனர். தொடர்ந்து இவாவும் இங்கு தையல் வகுப்புகளுக்கு போயிருக்கிறா. மற்றும் புடவைக் கடைகளில் விற்பனைப் பகுதியில் வேலைசெய்த அனுபவமும் இருக்கு என்று சொல்ல சுமதியும் மிருதுளாவைப் பார்க்கிறாள். அவள் மிகவும் இளமையாகவும் அழகாகவும் இருக்கிறாள். வயதும் ஓரு இருபத்தைந்துக்குள்தான் இருக்கும். சரளமாக பிரெஞ்சும் கதைக்கிறாள்.......அவர்களும் இவர்களின் கடையில் வேலை கேட்டுத்தான் வந்திருந்தார்கள். மிருதுளாவுடன் கதைத்த சிறிது நேரத்திலேயே அவள் கடையை நிர்வகிக்கக் கூடிய ஆளுமையான பெண் என்று சுமதி புரிந்து கொள்கிறாள். சுமதி ஆண்களைப் பார்த்து நீங்கள் சற்று நேரம் கதைத்துக் கொண்டிருங்கள் என்று சொல்லி விட்டு, மிருதுளாவைக் கூட்டிக் கொண்டு தான் தைக்கும் மிசின் உள்ள அறைக்குப் போகிறாள்.அங்கு அவள் ஒரு ப்ளவுஸ் துணியையும் அதை கத்தரித்து தைக்க வேண்டிய அளவுகளையும் குடுத்து இதை இப்போது உன்னால் வெட்டித் தைக்க முடியுமா என்று கேட்க, மிருதுளாவும் ஓம்....டிசைனை சொல்லுங்கள் என்று எதுவித பதட்டமுமின்றி சொல்கிறாள். உடனே சுமதி அவளிடம் இது ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியுடையது,ஒரு நாற்பது வயதிருக்கும். அளவுகளைப் பார்த்தாலே உனக்குப் புரியும். அவவுக்கு கொஞ்சம் பெரிய மார்புகள். நார்மலா சிறிது கீழிறங்கி இருக்கும். அதனால் ப்ளவுசில் அவை எடுப்பாக இருப்பதுபோல் "கப்" வைத்து தைக்க வேண்டும். அவவுக்கு இடுப்பிலும் சிறிது சதை போட்டிருக்கு, அதற்கேற்றாற் போல் கீழ்ப்பட்டி 5 செ.மீ அகலமாயும் இருக்கட்டும். மற்றது பின்பக்கம் பிரா லேஸ் மட்டத்துக்கு ஓப்பனாக இருக்கட்டும். கழுத்தடியில் குஞ்சம் வைத்து ஒரு நாடா தைத்து விடு. கவனம் இது அவ நாளைக்கு ஒரு திருமணத்துக்கு போடுவதற்காக கொண்டு வந்து தந்தவ. நல்ல ரிச் லூக்கா இருக்க வேண்டும். --- நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தடித்த துணியில் உள்ளே லைனிங் வைத்து "கப்" எடுப்பாக இருக்கும்படி தைக்க வேண்டும். முக்கியமான இடங்களில் "ஷி துரூ" வாகவும் இருக்க வேண்டும். ..... ஓம் அப்படித்தான், லைனிங் துண்டும் மேசையில் இருக்கு, நீங்கள் வேலை செய்யுங்கோ, நான் போய் முகம் கழுவிவிட்டு வருகிறேன் என்று கிளம்பும் பொழுது மிருதுளாவும் அந்த சில்க் துணிக்கேற்றவாறு மிசின் ஊசி மற்றும் பொபின் இலக்கங்களை சரிசெய்கிறாள். அதை பார்த்த சுமதியும் திருப்தியுடன் ம்......இவளிடம் கொஞ்சம் விசயம் இருக்கு என்று நினைத்துக் கொண்டு கதவைச்சாத்தி விட்டு போகிறாள்......! சற்று நேரத்தின் பின் சுமதி தன்னை சிறிது அலங்கரித்துக் கொண்டு ட்ரேயில் நான்கு கோப்பியும் சீனிக்கட்டிகளும் சிறிய கரண்டிகளுடனும் வந்து ஆண்களிடம் இரண்டைக் குடுத்து விட்டு அறைக்குள் சென்று மிருதுளாவுக்கும் கோப்பியை வைக்கும் போது அவளும் அந்த ப்ளவுசை தைத்து முடித்து அங்கிருந்த பொம்மைக்கு அதை அணிவித்து பினிஷிங் வேலையை செய்து கொண்டிருந்தாள். சுமதிக்கு அவளை மிகவும் பிடித்து விட்டது. தான் சொன்னதை அப்படியே புரிந்து கொண்டு சிறப்பாக வேலை செய்திருந்தாள். மேலும் தன கற்பனையையும் செலுத்தி தேவையான இடங்களில் பொன் நிற லேஸ்சும் சின்ன முத்துக்களும் தைத்திருந்தாள். பின் இருவரும் கோப்பியை அருந்திவிட்டு கதைத்துக் கொண்டு ஹாலுக்கு வருகின்றார்கள்.......! இன்னும் தைப்பார்கள்.........! 🦺
  20. சாமி நாராயணி சாமி நாராயணி சாமி நாராயணி சாமி நாராயணி சாமி நாராயணி சாமி நாராயணி சாமி நாராயணி சாமி நாராயணி
  21. சிவன் மாடு என்றால் இதுதான்......! 🤣 🤣
  22. சரி இதுக்கு போய் சத்தியம் எல்லாம் வேணாம்.எனக்கு தெரியும் றீகாப்பில் முக்கியமாக மேலும் உடல் உறுப்புக்கள் இயங்குவதற்கு ஏற்றால் போல் சிலவற்றைப் பழக்குவார்கள்..மறுபடியும் சக பணியாளரோடு பேசிக்கொள்வது நல்லது..யாரும் தெரிந்து கொண்டு எந்த தவறும் விடுவதில்லை தானே. பேசி பார்த்தால் தொடர்ந்து பேச விருப்பப்டுபவர் போன்று இருந்தால் பேசுங்கள் இல்லையேல் தவிர்த்து விடுங்கள்.👋 .உங்கள் அவதானக்குறைவும் விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் இல்லயா.✍.கோவிக்க வேணாம்.சொல்ல வேண்டும் போல் இருந்தது.😆👋
  23. உங்களை இடித்தவன் வேணுமென்று செய்திருக்க மாடடான் எதோ அவதானபிழைபோல ...யாரிடமாவது தூது விடுங்கள் அவனை மன்னித்து விட்ட்தாக. அவனுக்கும் அச்ச உணர்வு இருக்கும் தானே. .
  24. நிறை கூடுனால் திரும்பவும் இறக்குவது மிகவும் சிரமம். உங்கள் வீட்டிலேயே டாக்ரர் உள்ளபடியால் இதைப் பற்றி அதிகம் எழுத விரும்பவில்லை. நீங்கள் நலமாக இருக்க வேண்டும்.அவ்வளவே.
  25. முதலாவது விமானத் தகர்ப்பு 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பினை அமுல்ப்படுத்திய நிகழ்வினை கெளரவிக்க புரட்டாதி 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நிகழ்வொன்றினை அரசு ஒழுங்குசெய்திருந்தது. இந்நிகழ்வில் பங்குபற்றும் முன்னணியினரின் விருப்பு இளைஞர்களின் கடுமையான அழுத்தத்தினையடுத்து கைவிடப்பட்டது. 1972 ஆம் ஆண்டு அமுல்ப்படுத்தப்பட்ட குடியரசு யாப்பின்மூலம் தமிழர்களின் கழுத்தில் கட்டப்பட்ட தூக்குக் கயிற்றினை 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு மேலும் இறுக்கியிருக்கிறது என்று இளைஞர்கள் வாதிட்டு வந்தனர். 1978 ஆம் ஆண்டி யாப்பு ஒற்றையாட்சி முறையினை மேலும் உறுதிப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. சிங்கள மொழிக்கும் பெளத்த மதத்திற்குமான அதியுயர் இடம் இந்த யாப்பிலும் மேலும் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டதுடன், பெளத்த மதத்தினை மேலும் மேம்படுத்தும் நோக்குடன் பெளத்த சாசன அமைச்சு எனும் அதிகாரம் மிக்க அமைச்சுப் பொறுப்பும் இந்த யாப்பின்மூலம் உருவாக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த சிங்கள மொழிக்கான உத்தியோகபூர்வ அந்தஸ்த்து இந்த யாப்பின்மூலம் மேலும் விரிவாக்கப்பட, தமிழ் மொழியிலான நிர்வாகம் தமிழ் பேசும் பகுதிகளுக்கு மட்டுமே என்று சுருக்கப்பட்டது. வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழர்கள் தமது நிர்வாகத் தேவைகளை சிங்கள மொழியிலேயே செய்துகொள்ளவேண்டிய நிலையினையும் இந்த யாப்பு ஏற்படுத்தியது. 1972 ஆம் ஆண்டி யாப்பினை அடிமைச் சாசனம் என்று அன்று கூறிய நீங்கள் இன்று அதனைவிடவும் அநீதியான யாப்பினை எப்படி ஆதரிக்க நினைக்கிறீர்கள்? என்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இளைஞர்கள் கேள்வியெழுப்பி வந்தனர். அமிர்தலிங்கத்திடம் பதில் இருக்கவில்லை. அவரால் செய்ய முடிந்ததெல்லாம் அரசியல் யாப்பு நிகழ்வினைப் புறக்கணித்த தீர்மானத்தை அடக்கி வாசிப்பதும் இளைஞர்களால் முன்வைக்கப்பட்ட கறுப்புக்கொடி போராட்டத்தை நிராகரித்ததும் மட்டும்தான். ஜெயவர்த்தனவின் அரசுக்கெதிராக இளைஞர்கள் செய்யும் எந்தப் போராட்டமும் இன்னொரு இனக்கலவரத்தை ஏற்படுத்திவிடும், ஆகவே அரசியல் யாப்பிற்கெதிரான எந்தப் போராட்டத்திலும் இறங்கி ஜெயவர்த்தனவை ஆத்திரப்படுத்த வேண்டாம் என்று கூறி இளைஞர்களை அடக்கி வைக்க முயன்றார். ஆனால், அமிர்தலிங்கத்தின் பயமுருத்தல்களை இளைஞர்கள் சட்டை செய்யவில்லை. வடக்குக் கிழக்கின் பெரும்பாலான பகுதிகளில் அரசியல் யாப்பு நிகழ்விற்கெதிராக கறுப்புக் கொடிகளை தமிழர்கள் பறக்கவிட்டார்கள். மட்டக்களப்பில் பஸ் வண்டிமீது குண்டுவீசப்பட்டதுடன் ஊர்காவற்றுரையில் இன்னொரு பஸ் வண்டி எரியூட்டப்பட்டது. இன்னொரு குண்டு பஸ் வண்டியினுள் வெடிக்கவைக்கப்பட்டது. இதற்குப் பதிலடியாக மட்டக்களப்பில் வாழ்ந்துவந்த காசி ஆனந்தனை அரசு கைது செய்தது. இவை சிறிய சம்பவங்கள் மட்டுமே. புலிகள் இந்த சம்பவங்கள் எவற்றிலும் ஈடுபட்டிருக்கவில்லை. எயர் சிலோன் என்று அழைக்கப்பட்ட இலங்கையின் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்றினைத் தகர்க்கும் திட்டத்தில் புலிகள் அப்போது ஈடுபட்டிருந்தார்கள். விமானங்களைக் கடத்துவதோ அல்லது குண்டுவைத்துத் தகர்ப்பதோ அன்றைய காலத்தில் சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்த சம்பவங்களாக இருந்தமையினால், தாமும் அவ்வாறான தாக்குதல் ஒன்றினைச் செய்யவேண்டும் என்று பிரபாகரனும் உமாவும் திட்டமிட்டனர். பாலஸ்த்தீனியர்கள் இதனைச் செய்திருந்தனர். வேறு சில கெரில்லா அமைப்புக்களும் இவ்வாறான விமானத் தகர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆகவே, தாமும் அதனைச் செய்ய வேண்டும் என்று புலிகள் முடிவெடுத்தனர். இத்தாக்குதல் நடவடிக்கைக்கு நால்வர் பொறுப்பாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் பிரபாகரன், உமா மகேஸ்வரன், பேபி சுப்பிரமணியம் மற்றும் ராகவன் ஆகியோராகும். பிரபாகரனும் பேபி சுப்பிரமணியமும் நேரம் குறித்து வெடிக்கும் குண்டினைத் தயாரிப்பதில் ஈடுபட உமா மகேஸ்வரனும் ராகவனும் விமானத்தை தெரிவுசெய்தல், தாக்குதலின் பின்னரான பிரச்சார நடவடிக்கைகளைத் திட்டமிடல் ஆகியவற்றில் ஈடுபட்டனர். மேம்படுத்தப்பட்ட குண்டுகளைத் தயாரிப்பதில் வல்லுனராக பிரபாகரன் இருந்தார். அவ்வாறே, குண்டுகளை நேரம் குறித்து வெடிக்கவைக்கும் பொறிமுறையினை பேபி சுப்பிரமணியம் என்று அழைக்கப்படும் இளங்குமரன் அறிந்துவைத்திருந்தார். ஆகவே, இருவரும் இணைந்து ஒரு நேர வெடிகுண்டினைத் தயாரித்து முடித்தனர். பாராளுமன்ற அமர்வின் உத்தியோகபூர்வ ஆரம்ப நாளான புரட்டாதி 7 ஆம் திகதியே குண்டினை வெடிக்கவைப்பது என்று மத்திய குழு முடிவெடுத்திருந்தது. இரத்மலானையிலிருந்து பலாலிக்கு நடத்தப்படும் விமான சேவையில் அமர்த்தப்பட்டிருந்த அப்ரோ 748 ரக விமானத்தில் இரு ஆசனங்கள் புலிகளால் பதிவுசெய்யப்பட்டன. அன்று இரத்மலானையில் 35 பயணிகளுடன் விமானம் வந்திறங்கியது. பேபி சுப்பிரமணியமும், ராகவனும் குண்டின் நேரப் பொறியை அமுக்கிவிட்டு இறுதியாக விமானத்தை விட்டு இறங்கி, விரைவாகவே விமான நிலையத்திலிருந்தும் வெளியேறிச் சென்றனர். மாலைதீவுக்கான பயணிகள் விமானத்தில் ஏறுவதற்குச் சற்று முன்னதாக குண்டு வெடித்தது. குண்டுவெடிப்பினை விசாரணை செய்த பொலீஸார், மாலைதீவிற்குச் செல்லும் வழியிலேயே குண்டினை வெடிக்கவைக்க புலிகள் திட்டமிட்டிருந்தார்கள் என்று கூறியபோதும், புலிகள் அதனை முற்றாக மறுத்துவிட்டனர். பாலகுமாரன், பேபி சுப்பிரமணியம், தங்கன் பேபி சுப்பிரமணியம் தற்போது புலிகளின் நிர்வாகத்தில் கல்வித்துறைக்குப் பொறுப்பாக இருந்துவருகிறார். புலிகளிடமிருந்து விலகிய ராகவன் இன்று இங்கிலாந்தில் வாழ்ந்துவருகிறார். லண்டனில் இருந்த தனது தொடர்பாளர்கள் மூலம் விமானத்தைத் தகர்த்தது புலிகளே என்று உமா மகேஸ்வரை உரிமை கோரி அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார். "எமது விடுதலைப் போராட்டத்தினை நசுக்கி, இலட்சியத்தைத் தகர்த்து, சலுகைகள் மூலம் எமது விடுதலைத் தீயை அணைத்துவிடலாம் என்று கனவுகாணும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு இந்த விமானத் தகர்ப்பு ஒரு பாடமாக இருக்கட்டும்" என்று என்று அந்த அறிக்கை கூறியது. இத்தாக்குதலின் மூலம் இணக்க அரசியலை நடத்திவந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்று ஜெயவர்த்தனா கொண்டிருந்த திட்டம் ஆட்டம் காணத் தொடங்கியது. கொழும்பில் இதேவகையான உரிமைகோரும் அறிக்கையினை வெளியிட்டிருந்த உமா மகேஸ்வரன் அந்தக் கடிதத்தில் புலிகள் இயக்கத்தின் தலைவர் என்று கையொப்பம் இட்டிருந்தார். தம்மீதான தடையினூடாகவும், விமானத் தகர்ப்பு நடவடிக்கை மூலமும் சர்வதேசத்தில் விமானத் தகர்ப்பில் ஈடுபடக்கூடிய வல்லமையினைப் பெற்றிருந்த ஒரு சில விடுதலை அமைப்புக்களில் ஒன்றாக புலிகளும் ஆகிப்போனார்கள். தமது முதலாவது நேர வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் இந்த நிலையினை அடைந்தார்கள் புலிகள்.
  26. செய் அல்லது செய்ய விடு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் மூன்றாவது மாநாடு ஆவரங்காலில் ஆடி 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இளைஞர்களின் ஆத்திரத்தினை முன்னணியினர் அப்போது மிகவும் தெளிவாக உணர்ந்திருந்தனர். "நீங்கள் செய்யுங்கள், அல்லது எங்களைச் செய்ய விடுங்கள்" எனும் மனநிலைக்கு இளைஞர்கள் வந்திருந்தனர். பேரணிகளுக்கு எதிராகப் பொலீஸார் விதித்திருந்த தடைகளையும் மீறி முத்துக்குமாரசாமி தலைமையில் சுமார் 300 இளைஞர்கள் அச்சுவேலிச் சந்தியிலிருந்து மாநாடு நடைபெற்ற ஆவரங்கால் நோக்கி பேரணியாக "செய் அல்லது எம்மைச் செய்ய விடு" எனும் கோஷத்தினையும் எழுப்பியவாறு சென்றனர். மாநாடு நடைபெற்ற மைதானத்தினுள் உள்நுழைந்த இளைஞர்கள், அந்த மைதானத்தைச் சுற்றிக் கோஷமிட்டவாறே சென்றதுடன், அங்கிருந்தவர்களுக்கு தாம் கொண்டுசென்ற துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர். அதில், 1977 ஆம் ஆண்டு மக்களால் வழங்கப்பட்ட ஆணைக்கு அமைவாக தமிழீழ தனிநாடு நோக்கிய பயணத்தை முன்னணியினர் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது. அமிர்தலிங்கம் இநத நடவடிக்கையினால் அதிருப்தியடைந்து காணப்பட்டதுடன், இளைஞர் மேல் தனக்கிருந்த கட்டுப்பாடு முற்றாக இல்லாமற்போனதையும் உணர்ந்துகொண்டார். மைதானத்தில் அடாத்தாக உள்நுழைந்திருந்த இளைஞர்கள் மீது அமிர்தலிங்கத்தின் அடியாட்களில் ஒருவரான ஜனசேகரன் எனப்படும் "பரந்தன் ராஜன்" தாக்குதலில் ஈடுபட்டதுடன், இளைஞர்களின் கைகளிருந்த துண்டுப்பிரசுரங்களையும் பறிக்க முனைந்தார். ஆனால் இதே பரந்தன் ராஜன் சில காலத்திற்குப் பின்னர் அமிர்தலிங்கத்தைக் கைகழுவி விட்டு ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி எனப்படும் ஈ பி ஆர் எல் எப் அமைப்பில் இணைந்துகொண்டதுடன், அதற்குப் பின்னரான காலத்தில் இந்திய அணுசரணையுடன் ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி எனப்படு ஈ என் டி எல் எப் எனும் ஆயுதக் குழுவையும் ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத் தக்கது. மைதானத்தினுள் நுழைந்திருந்த இளைஞர்கள் மீது அமிர்தலிங்கத்தின் அடியாட்கள் தாக்குதல் நடத்திக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டே "தளபதி" என்று அழைக்கப்பட்ட அமிர்தலிங்கம் மேடையில் வீற்றிருந்தார். இளைஞர்களுக்கும் அமிரின் ஆட்களுக்கும் இடையே நடந்துகொண்டிருந்த கைகலப்பில் மக்களின் கவனம் சென்றிருக்க, அதனைத் திசைதிருப்பும் முகமாக பெண்ணொருவர் மேடையில் ஏறி பாடத் தொடங்கினார். அவளது பாடல் பலரின் கரகோஷத்தினையும் பெற்றது. "துவக்கு போரைத் துவக்கு துவக்கும் போரைத் துவக்கு" என்று அவள் பாடினாள். நீ திட்டமிட்ட போரை உடனே தொடங்கு என்பது போலவும் துவக்கினைக் கொண்டு ஆயுதப்போராட்டத்தினைத் தொடங்கு என்பது போலவும் இரட்டை அர்த்தத்தில் அப்பாடல் அவளால் பாடப்பட்டது. அங்கிருந்த பெரும் எண்ணிக்கையான இளைஞர்களின் மனோநிலையினை அப்பாடல் வெளிக்காட்டியது. மாநாட்டில் கலந்துகொண்ட தமது உறுப்பினர்கள் மூலம் முன்னணியினருக்குக் கடுமையான செய்தியொன்றினைச் சொல்ல இளைஞர்கள் விழைந்திருந்தனர். மக்கள், முன்னணியினர் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து விட்டதாக இளைஞர்கள் விமர்சித்தனர். முன்னணியினரின் தலைமை எடுக்கும் முடிவுகளை கண்டிக்கும் இரு தீர்மானங்களையும் இளைஞர்கள் நிறைவேற்றினர். முதலாவது தீர்மானம், தமிழப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக தமிழீழப் பாராளுமன்றத்திற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், தமிழீழத்திற்கான அரசியல் யாப்பினை வரையவேண்டும் என்றும் கேட்டிருந்தது. இரண்டாவது தீர்மான தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான விதிமுறைகளை உடனடியாக வரையவேண்டும் என்றும் கேட்டிருந்தது. இளைஞர்களால் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானங்களை அமிர்தலிங்கத்தின் ஆதரவாளர்களான வண்ணை ஆனந்தன் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோரே ஆதரித்திருந்தனர். பரமேஸ்வரன் கோப்பாயைச் சேர்ந்தவர் என்பதும், தமிழ் மாணவர் பேரவையினால் கோப்பாய் வங்கி மீது நடத்தப்பட்ட தோல்வியடைந்த கொள்ளைச் சம்பவத்திலும் ஈடுபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. முன்னணியினருடனான அவரது நெருக்கத்தையடுத்து ஆவரங்கால் மாநாட்டினைத் தலைமையேற்று நடத்தும் பொறுப்பு அவருக்கு முன்னணியினரால் வழங்கப்பட்டிருந்தது. அவர் தனது தலைமை உரையில், "தலைவர்கள் உடனடியாகச் செயற்படவேண்டும். அவர்கள் நேரத்தை வீணடிக்கக் கூடாது. மக்கள், தலைவர்களின் செயற்பாட்டிற்காகக் காத்திருக்கிறார்கள், அதற்காக எந்தத் தியாகத்தினையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். எமது செயற்பாட்டிற்கான திட்டத்தினை தலைவர்கள் உடனடியாக வரைய வேண்டும். அதனைப் பிந்தொடர்ந்து வர நாம் காத்திருக்கிறோம்" என்று பரமேஸ்வரன் கூறினார். வண்ணை ஆனந்தன் பேசும்போது, தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தாம் செய்யவேண்டிய கடமையிலிருந்து விலகாது பயணிக்கவேண்டும் என்று நினைவுறுத்திப் பேசினார். வி யோகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் முன்னணியினரின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அறிவுருத்தும் பேச்சு இரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையே முன்னர் ஏற்பட்ட பிணக்கு ஒன்றினை அடிப்படையாக வைத்தே பேசப்பட்டது. ஆவரங்கால் மாநாட்டிற்கு இரு வாரங்களுக்கு முன்னதாக அரசின் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் யாழ்ப்பாணத்தில் தனது கிளை ஒன்றினைத் திறந்திருந்தது. இந்த திறப்பு நிகழ்வுக்கு அமிர்தலிங்கம் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தாலும், அவர் தனது சார்பாக யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் வி யோகேஸ்வரனையும், உடுவில்த் தொகுதி உறுப்பினர் எஸ் தர்மலிங்கத்தையும் அனுப்புவதாகத் தீர்மானித்திருந்தார். இந்தச் செய்தி வெளியில் பரவவே, பெருமளவு இளைஞர்கள் யோகேஸ்வரனின் வீட்டின் முன்னால் திரண்டு, அந்நிகழ்விற்குச் செல்லவேண்டாம் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அங்கு பேசிய யோகேஸ்வரன், " அமிர் அண்ணா எங்களுக்கு இட்ட கட்டளைக்கு அமைய நாம் அந்நிகழ்வில் பங்கெடுப்போம், இதில் சமரசத்திற்கு இடமில்லை" என்று இளைஞர்களைப் பார்த்துக் காட்டமாகக் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், அவரின் வீட்டு வாயிலின் முன்பாக அமர்ந்து அவரது பயணத்தைத் தடுக்க முயன்றனர். ஆனால், இளைஞர்கள் எதிர்பாராத தருணத்தில் தனது வீட்டின் மதிலை தாண்டிக் குதித்த யோகேஸ்வரன், இளைஞர்களின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். இன்னொரு இளைஞர் குழு காப்புறுதி நிறுவனத்தின் கிளையின் அருகே காத்திருந்து அங்கு வந்த தர்மலிங்கத்தைக் கைகளில் பிடித்துக்கொண்டதுடன், நிகழ்விற்குச் செல்லவிடாமல்த் தடுக்கும் முகமாக அவரை வெளியே இழுத்துவர முற்பட்டது. அவர்களைத் தள்ளி வீழ்த்திவிட்டு தர்மலிங்கமும் திறப்புவிழாவில் கலந்துகொண்டார். ஆனால், அமிர்தலிங்கத்தினால் மற்றைய இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் போல இளைஞர்களைத் தள்ளிவிட்டுச் செல்ல முடியவில்லை. ஆகவே, இளைஞர்களை அப்போதைக்குச் சமாளிக்க அவர்களின் தீர்மானங்களைப் பரிசீலிக்க இரு குழுக்களை அமைப்பதாகக் கூறினார். எது எப்படி இருந்தாலும், ஆவரங்கால் மாநாடு இளைஞர்களின் வளர்ந்துவரும் அதிருப்தியினை முன்னணியினருக்குத் தெளிவாகக் காட்டியிருந்தது. அழுத்தம் கொடுக்கும் சக்தியாக அதுவரை இருந்த இளைஞர்கள் தற்போது தீர்மானம் எடுக்கும் சக்தி எனும் நிலைக்கு வளர்ந்திருந்தனர். மேலும், ஜெயவர்த்தனவினால் முன்வைக்கப்பட்ட மாவட்ட சபைகளுக்கான அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளும் முன்னணியினர் உத்தேச தீர்மானத்திற்குத் தமது கடுமையான எதிர்ப்பினை இளைஞர்கள் காட்டியிருந்தனர்.
  27. நீங்கள் மறபடியும் வேலைக்கு திரும்பி சென்றதில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
  28. ஏலம் மணக்கும் போடி · #முப்பது_வருஷத்துக்கு முன்னால ஒரு #கல்யாணவீட்டுக்கு போனோம்னா... #ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்டிருக்கும். பெண்கள் அமர கலர் கலரா பவானி ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கும். #சின்ன சின்ன பசங்க எல்லாம் ஓடியாடி விளையாடி கொண்டிருப்பார்கள். #பெரியவர்கள் தாம்பூலம் நிறைந்த வாயோடு அரசியல் முதல் அகில உலக கதை வரை பேசிக்கொண்டு இருப்பார்கள். #மண்டத்துல ஒரு ஓரமா பச்ச பெல்ட் கட்டுன பெருசுங்க எல்லாம் சட்டைய கழட்டி போட்டுட்டு ரம்மி விளையாடிக்கொண்டு இருப்பார்கள். #சட்டைப்பையில் டெஸ்ட்டரோடு அங்கேயும் இங்கேயும் திரியும் மைக்செட் காரரை ஏதோ விஞ்ஞானி மாதிரி பார்ப்பார்கள். #விஷேஷத்துக்கு வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களை பைலட் ரேஞ்சுக்கு மதித்து அவர்களை உபசரிப்பார்கள். வழ வழப்பான #சில்க்துணியில் பெரியகாலரோடு சட்டை அணிந்து ,தலை முடியை வித்தியாசமாக சீவியிருக்கும் இளைஞர்களை ஹீரோ போல பார்ப்பார்கள். #விஷேஷத்துக்கு இருசக்கர வாகனங்களில் வந்தாலே தனிமதிப்புண்டு. அதிலும் புல்லட் ,எஸ்டி, ராஜ்தூத் "சில்வர் ப்ளஸ் போன்ற வாகனங்களில் வருவோருக்கு சிறப்பு மரியாதை நிச்சயம் உண்டு. #சாப்பாட்டு பந்தியில் நிச்சயம் ஒரு சண்டையும் கோபித்து கொண்டு அடம்பிடிக்கும் நிகழ்வும் நடக்கும். இப்படியாக.. ஒரு விஷேஷத்துக்கு போயிட்டு வந்தோம்ன்னா அங்கு நடந்த நிகழ்வுகளின் நினைவு சுவடுகள் மறைய மாதங்களோ #வருடங்களோ ஆகும். எப்ப இந்த பாழாய்போன #செல்போன் வந்துச்சோ...குறிப்பா இணைய வசதியோட ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் வந்துச்சோ... அப்போ மறைந்து போனது மனித நேயமும் சக மனித நட்பு பாராட்டலும். #இப்போல்லாம்.... பஸ்சுல ,ட்ரையின்ல ,கல்யாண வீட்டுல எழவு வீட்டுல, பார்க்குல, பீச்சுல, தியேட்டர்லனன்னு....இப்படி எங்கெங்கு போனாலும் குனிந்த தலை நிமிராம பக்கத்துல என்ன நடக்குதுன்னு கூட தெரியாம கைப்பேசியே கதின்னு கிடக்குறோம். #காக்கா கத்துது...மாமாவும் அத்தையும் வரப்போறாங்கடான்னு ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி அந்த உறவுகளின் வருகைக்காக ஏங்க வைத்த தாய்மார்களின் குரல்கள் மழுங்கடிக்கபட்டு... வாட்சப் வீடியோ கால்களின் சத்தங்கள் சகல வீடுகளிலும் ஒலிக்க தொடங்கிவிட்டது. #விஞ்ஞான வளர்ச்சி அவசியம்தான். அதுவே நம் மெய்ஞானத்தை அழிக்கிற காரணியாக மாறிவிடக்கூடாது. (படித்ததில் பிடித்தது)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.