Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    23
    Points
    87993
    Posts
  2. Justin

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    7055
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    34974
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/18/23 in all areas

  1. நன்றி வசி. நீங்கள் நடந்த சம்பவத்தையும், மனித மனத்தையும்... வித்தியாசமான முறையில் ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். //மனித மனம் வித்தியாசமானது, மனதில் ஏற்படும் வலிகளை உணராதிருக்க முயற்சி செய்யும் 1.உளப்பூர்வமாக தான் தவறே செய்திருந்தாலும் தவறு தனது பக்கமல்ல என நினைத்து அதனால் ஏற்படும் வலியினை கடக்க முற்படும். 2.சம்பவத்தினை அப்படியே மறந்து விட்டு விடும்.// நீங்கள், கூறியற்றவைத்தான் விபத்தை ஏற்படுத்தியவரும் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கின்றார் என நினைக்கின்றேன். 🙂 சென்ற... திங்களிலிருந்து வெள்ளி வரை தினமும் மூன்று மணித்தியாலம் வரை வேலை செய்துள்ளேன். அவன் என்னைத் தேடி வந்து கதைக்க முயற்சிக்கவில்லை என்பது மிகுந்த ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்துகின்றது. 🙁 கடந்த 15 மாதத்தில்... வேலையிடத்தில் உள்ள வேலையாட்களும், மனேஜரும் பல தடவைகள் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துக் கொண்டிருந்த போதும்... இவன் ஒரே ஒரு தடவை மட்டும்.. அதுகும் ஒரு நிமிடம் மட்டுமே கதைத்தான். அதிலிருந்தே அவனின் போக்கு எனக்கு பிடிக்கவில்லை. 😎 இவ்வளவிற்கும் விபத்து நடந்து நான் வைத்திய சாலையில் இருந்த போதும், Reha´வில் இருந்த போதும்... அந்த விபத்தை கையாண்ட பொலிஸ்காரர் இருவர் நேரே நான் சிகிச்சை பெறும் இடத்திற்கே வந்து... அவன் மீது, வழக்கு தொடுக்கப் போகின்றேனா என்று கேட்டு.. தாங்களே, அரசு சார்பில் வழக்கை கொண்டு நடத்துவதாகவும்... ஆம் என்றால், ஒரு மாதத்துக்குள் பதில் தர வேண்டும் என்றும் சொன்னார்கள். நான்.... வீட்டிலும் மனைவி, பிள்ளைகளிடம், இது பற்றி கதைத்த போது... அவன் தவறுதலாக செய்தற்கு... எதற்கு வழக்கு போட்டு தண்டிக்க வேண்டும் என்றும், அத்துடன் அவன் சிறு பிள்ளைகளின் தந்தை என்றும்... ஏன் அவனை சிரமப் படுத்துவான் என்றும் சொன்னார்கள். நானும், அவர்கள் சொல்வேதே சரி என்று... காவல்துறையினரிடம் வழக்குப் போடவில்லை என்று சொல்லி விட்டேன். அவர்களும் எழுதி வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள். இப்போ... இவனின் செயலைப் பார்க்க, வழக்கு போட்டு "சிப்பிலி" ஆட்டி விட்டிருக்கலாமோ என யோசிக்கின்றேன். 🙂
  2. முன் குறிப்பு பாகம் IV ம் V ம் இக்கதையின் இரு வேறுபட்ட முடிவுகள் (கிளைமாக்ஸ்). ———————————————— பாகம் IV இன்று ஒரு மிக முக்கியமான நாள். அவனுக்கும் இவனுக்குமான அந்த சம்பாசணை நிகழ்ந்து கிட்டத்தட்ட பதின்மூன்று மாதங்கள் உருண்டோடி விட்டிருந்தன. அதன் பின் வைத்திய நண்பனின் ஆலோசனையின் பெயரில் அவன் இவனுடன் தொடர்பு ஏற்படுத்துவதை அறவே தவிர்த்து விட்டிருந்தான். பதின்மூன்று மாதங்கள் முன்னதாக நடந்த அன்றைய சம்பாசணையின் போது இவனுக்கு… நீ கட்டாயம் ஒரு சைக்கியாடிரிஸ்டை பார்க்க வேண்டும் மச்சான்…. உடல் காயம் போலத்தான், மனக்காயமும். இரெண்டுக்கும் ஒரு அளவுக்கு மேல் மருந்து அவசியம்….. என தயங்கி, தயங்கி அவன் சொல்லி இருந்தான். இவனும் கூட சற்றே மனம் நிதானப்பட்ட ஒரு நிமிடத்தில்… நீ சொல்றது சரிதான் மச்சான்…. எனக்கு ஏதோ பிசகீட்டுது எண்டு விளங்குது…கெதியா காட்டோணும்…மருந்து எடுக்கோணும்…. இல்லாட்டில் முழு விசராக்கிப்போடும்… என சொல்லியும் இருந்தான். ஆனால் அடுத்த நொடியே, போரிஸ், ஏலியன், மனைவி என வேதாளம் மீண்டும் மரத்தில் ஏறிவிட்டது. இதை எல்லாம் கருத்தில் எடுத்த வைத்திய நண்பன் அவனுக்கும், இவனுக்கும் மட்டுமான உறவை மட்டும் அல்ல, இத்தனை மாதகாலமும் இவனுக்கும் அவனின் வட்டத்தில் மனைவியை தவிர மிகுதி அனைவருக்குமான தொடர்புகள் அனைத்தையும் துண்டித்தே சிகிச்சையை தொடர்ந்தான். இந்த ஏற்பாட்டின் பலனாக, தன்னையும், மனைவியையும், வைத்தியரையும் தவிர வேறு எவருக்கும் இந்த பிரச்சனையின் ஆழம் தெரியாது என்ற நம்பிக்கையோடு இத்தனை மாதகாலமாக இவனும் தொடர்ந்து சிகிச்சையை எடுத்து வந்தான். இவனோடு தொடர்பில் இல்லாதபோதும் வைத்திய நண்பனோடும், திருமதி இவனோடும் அவன் தொடர்பில் இருந்து, இவனுக்கு வழங்கப்படும் மருந்துகள், சிகிச்சைகள் பற்றி முழுவதுமாக அறிந்தே இருந்தான். நேற்று வைத்திய நண்பன் பேசும் போது இவன் கிட்டதட்ட முழுவதுமாக தேறி விட்டான் எனவும். அன்றைய சம்பாசணையை பற்றி இவனுக்கு அதிகம் நியாபகம் இல்லை எனவும். அதை பற்றி கதைப்பதை தவிர்த்து, வழமை போல் உரையாடலை தொடரும் படியும் அவனுக்கு கூறி இருந்தான். இதோ…நெஞ்சம் நிறைந்த படபடப்போடு அவன் மொபலை எடுத்து இவனின் வாட்சப் நம்பரை அழுத்த தயாராகி விட்டான்……. அழைப்பை எடுக்க முதல், வைத்திய நண்பன் கடைசியாக சொன்னதை மீண்டும் ஒரு முறை அவன் நினைவு படுத்தி கொண்டான். மச்சான்…மறந்தும் வாயை விட்டுடாதயடா…இவனுக்கு தனக்கு வந்த பிரச்சனை எவ்வளவு பெரிசு…தான் என்ன குழிசையள் எடுத்தது…இனியும் என்ன குழிசையள் எடுக்க வேணும்…எல்லாம் வடிவா தெரியுமடா. ஆனால் இவனை பொறுத்தவரை…இது எதுவும் உனக்கு தெரியாது…அதை நீ மறந்துடாத… ——————————— இவனுடனான தொலைபேசி அழைப்பு நினைத்தததை விட சகஜமாகவே போய் கொண்டிருந்தது. ஆனால் உறவு முன்னர் போல் அந்நியோனியமாக இல்லை என்பதாக அவனுக்கு தோன்றியது. தொடர்பு விட்டு போனமைக்கு பரஸ்பரம் மன்னிப்புகள், குடும்பத்தினர் நலம் விசாரிப்புகள் என வழமையான விடயங்கள் பேசித்தீர்ந்த பின் உருவான அந்த அசெளகரியமான நிசப்தத்தை கலைத்து கொண்டு…இவன் தானாகவே பேசினான். மச்சான்…அண்டைக்கு நான் கதைக்கேக்க கொஞ்சம் அப்செட்டா இருந்தனாண்டா… ஒரு சின்ன ஸ்டிரெஸ்…நித்திரை கொண்டு எழும்பினதும் அது சரியாப் போச்சு…. என்ன சொல்வது என தெரியாத அவன்…ம்ம்…என்று சொல்லி விட்டு இதை எப்படி கையாள்வது என யோசித்து கொண்டிருக்கும் போதே…இவன் தொடர்ந்தான்…. நல்ல காலம் மச்சான்…. உண்ட பேய் கதையை கேட்டு நான் டொக்டரிட்ட போய் இருந்தா என்னை பைத்தியம் எண்டே முடிவு கட்டி இருப்பாங்கள்…. இனிமேலாவது கண்டதையிம் வாசிச்சு போட்டு…அட்வைஸ் பண்ணுறன் பேர்வழி எண்டு மற்றவனுக்கு விசர்பட்டம் கட்டாத மச்சான்……. அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளாத அவன்…கதையை மேலும் வளர்க்க விரும்பாதவனாக…… ம்……ம்…ம் கொட்டினான். #stigma #கேடிசூழ் #கறை #வடு (யாவும் கற்பனை) பாகம் IV முற்றும்.
  3. திரும்பும் வரலாறு: நாசிகள் அண்மைக் காலமாக "திரும்பும் வரலாறு" (repeat of history or historic recurrence) என்பது பிரபலமான ஒரு சொற்றொடராக மாறியிருக்கிறது. வரலாறு மீள மீள நிகழ்வதற்கு பிரதான காரணம் வரலாற்றிலிருந்து தலைவர்களும், தலைவர்களைத் தேர்வு செய்யும் மக்களும் பாடங்கள் கற்றுக் கொள்ளாமை தான் என்பது ஒரு தெளிவான அவதானம். எனவே, வரலாற்றின் மைல் கற்களாக விளங்கிய சம்பவங்கள், நபர்கள் பற்றிய தரவுகளைப் பதிவு செய்யலாம். முதலில் ஹிற்லர், நாசிகள் பற்றி ஆரம்பித்து, இரண்டாம் உலகப் போர், ஸ்ராலின், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் என்று ஒரு சுற்று வரலாம். ஆர்வமுடையோர் இணைந்திருங்கள். மூலங்கள் பற்றிய தகவல்களை ஒவ்வொரு பகுதியும் நிறைவுறும் போது தருகிறேன். ஆனால், விக்கிபீடியா மூலமாகப் பயன்படுத்தப் படவில்லை என்பதை உறுதி செய்கிறேன்! ஹிற்லர் எப்படிப் பதவிக்கு வந்தார்? முதலாம் உலகப் போர் 1918 இல் முடிவுக்கு வந்த போது ஐரோப்பாவின் எல்லைகள் பாரிய மாற்றங்களையடைந்தன. முதல் உலகப் போரின் போது கடல் வழியிலும், தரைவழியிலும் ஜேர்மனியின் படைகள் விளைவித்த மனிதப் பேரழிவு அளப்பரியது (முதலில் நீர்மூழ்கிக் கப்பல்களை பெருமளவில் பாவித்த நாடாக ஜேர்மனி இருந்தது, அனேக தாக்குதல் இலக்குகள் சிவிலியன் போக்கு வரத்துக் கப்பல்களாக இருந்தன!). ஜேர்மனி தோல்வியடைந்த போது வெர்சை உடன்படிக்கையின் வழியாக கடுமையான தண்டனைச் சுமைகள் ஜேர்மனி மீது சுமத்தப் பட்டன. 33 பில்லியன் டொலர்கள் வரையான போர் நட்ட ஈடு, காலனிகள் உட்பட்ட பல நிலப் பரப்பின் இழப்பு, இராணுவ ஆளணிக் குறைப்பு, ஆயுதங்கள் வாங்க, உற்பத்தி செய்வதற்கான கட்டுப் பாடுகள், என்பன ஜேர்மனியின் தண்டனைகளில் அடங்கின. இந்தப் போரில் காயமடைந்து மீண்ட படையினனான ஹிற்லர் ஆரம்பித்த கட்சி தான் "தேசிய சோசலிஸ்ட் கட்சி" எனப்பட்ட நாசிக் கட்சி. நாசிக் கட்சியின் நோக்கம் ஆட்சியைப் பிடிப்பது. இதற்கு உகந்த நுட்பமாக அவர்கள் தேர்ந்து கொண்டது, அண்மைய வரலாற்றில் ட்ரம்ப், பொல்சனாரோ, மோடி, ப்றெக்சிற்றின் தலைமைச் சிற்பியான நைஜல் பரார் போன்றோர் தேர்ந்து கொண்ட அதே ஜனத்திரள்வாத முறை. ஜனத்திரள் வாதம் நேர்மையான விடயங்களால் பலம் பெறுவதை விட மறைத்தன்மையான மனித உணர்வுகளால் பலம் பெறுவது தான் வரலாற்றில் அதிகம் நிகழ்ந்திருக்கிறது. நாசிக் கட்சி தங்கள் ஜனத்திரள் வாத வெற்றிக்காகத் தேர்ந்து கொண்ட அந்த மறைத்தன்மையான உணர்வு யூதர்கள் மீதான சந்தேகமும், எதிர்ப்புணர்வும். ஏன் யூதர்கள் மீது எதிர்ப்புணர்வு? ஏனெனில், ஜேர்மனியில் அந்தக் காலப்பகுதியில் வசித்த வேற்றினத்தவர்களுள், யூதர்கள் தான் பல வழிகளில் பிரபலமான இனக் குழுவாக இருந்தனர். பொருளாதார நடவடிக்கைகளில் மேலாண்மை மட்டுமன்றி, அரசியல் கலாச்சாரப் பரப்பிலும் யூதர்கள் முன்னணி வேற்றினத்தவராக இருந்தனர். கால் மார்க்ஸ் ஒரு யூதர், ஜேர்மனியுட்பட பல ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசக் கட்சிகளின் தலைமையில் அதிகம் யூதர்கள் இருந்தனர். விஞ்ஞானத் துறையிலும் (ஐன்ஸ்ரைன் சிறந்த உதாரணம்) அவர்களுக்கு தனியிடம் இருந்தது. இவ்வாறு ஜேர்மன் மக்கள் ஏற்கனவே உணர்ந்திருந்த ஒரு "யூத மேலாண்மை பற்றிய அச்சம்" நாசிக் கட்சியின் மக்கள்திரள்வாத ஆயுதமாயிற்று! ஆனால், யூதர்களுக்கு மேலதிகமாக, ஏனைய மத, இனக்குழுக்கள், ரஷ்யாவின் சிலாவிக் இன மக்கள் ஆகியோரும் நாசிக்கட்சியின் வெறுப்பிலக்குகளாக விளங்கினர். இந்த சிலாவிக் இன மக்கள் மீதான வெறுப்பிற்கு வளங்களைக் கொள்ளையடிக்கும் ஜேர்மனியின் நீண்ட கால இலக்கும் ஒரு காரணமாக இருந்தது. ஆரிய இனமான நீலக் கண்ணும், வெள்ளைத் தோலும் கொண்ட ஜேர்மனியர்கள், லூதரன் கிறிஸ்தவ நெறிப்படி குடும்பங்களில் நிறையப் பிள்ளைகள் பெற்றுப் பெருகும் போது, அவர்கள் வாழ அவசியமான நிலம், சோவியத் ரஷ்யாவிடமிருந்து பறிக்கப் பட வேண்டுமென்பது நாசிக் கட்சியின் கொள்கை. எனவே, சிலாவிக் மக்கள், "மனித இனத்திற்குக் கீழானவர்கள்" என்ற வெறுப்புணர்வை நாசிக் கட்சியினர் பரப்பத் தயங்கவில்லை. இந்தக் “கீழ்மனிதர்களான” சிலாவிக் மக்களை விடக் கீழான நிலையில் தான் யூதர்கள் வைத்துப் பார்க்கப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1921 அளவில், நாசிக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ஹிற்லர் வெளிப்படையாக இந்தக் கொள்கைகளைப் பேசி வந்திருக்கிறார். சாதாரண அரசியல் கட்சிகள் போலல்லாது, நாசி கட்சிக்கு ஒரு ஆயுதப் படையும் இருந்தது. Storm troopers என்று அழைக்கப் பட்ட இந்தப் படையில், ஹிற்லர் போலவே முதல் உலகப் போரிலிருந்து அவமானத்துடன் திரும்பி வந்த முன்னாள் படையினர் இருந்தனர். பல்லாயிரம் உறுப்பினர்கள் கொண்ட இந்த படை, பவாரியாவின் மாநில அரசைக் கவிழ்க்க முயன்று தோற்ற போது தான் ஹிற்லர் மற்றும் நாசிக் கட்சி பற்றிய முதல் எச்சரிக்கை ஜேர்மன் அரசுக்குக் கிடைத்தது. ஜேர்மன் அரசினால் ஒரு வருடம், இதற்காக சிறை வைக்கப் பட்ட போது தான் ஹிற்லர் தனது ஜனத்திரள்வாத, இனவெறிக் கொள்கைகளை நூலாக (Mein Kampf) எழுதினார். இந்த நூல், 1932 இல் ஜேர்மன் பாராளுமன்றத்தில் மிகப் பெரிய கட்சியாக நாசிக் கட்சி விளங்க ஒரு முக்கிய காரணியாக இருந்தது. இதனால், ஜேர்மன் ஜனாதிபதியினால், ஹிற்லர் வேந்தராக நியமிக்கப் படும் நிலையும் உருவானது. ஜேர்மன் மக்கள் என்ன நினைத்தனர்? தீவிர இனவெறிக் கொள்கை கொண்ட ஹிற்லரையும், நாசி கட்சியையும் 1932 பொதுத் தேர்தலில் ஜேர்மன் வாக்காளர்கள் ஆதரித்துப் பெரும்பான்மை வழங்க பல காரணங்கள் அப்போது இருந்தன. ஜேர்மனி முதல் உலகப் போரில் மிகவும் அவமானப் படுத்தப் பட்டதாக ஜேர்மனிய மக்களில் பெரும்பகுதியினர் உணர்ந்தனர். அதன் பின்னான தண்டனைகளால் ஜேர்மனியின் பணவீக்கம், வேலையில்லாதோரின் வீதம், என்பன கட்டுக்கடங்காமல் அதிகரித்தன. ஜேர்மன் ஜனாதிபதியாக இருந்த வொன் ஹிண்டன்பேர்க் வயசாளி, நோய்வாய்பட்ட நிலையில் தனது ஓய்வு வாசஸ்தலத்தில் இருந்தவாறே, கீழதிகாரிகளூடாக ஆட்சி செய்து கொண்டிருந்தார். இந்தப் பின்னணியில், மூன்று இளமையும், துடிப்பும் கொண்ட அரசியல் தலைவர்கள் மக்கள் முன் வலம் வந்தனர்: ஹிற்லர், ஹெஸ், கோயபல்ஸ் ஆகிய மூவரும் தான் அந்த "ஜனத்திரள்வாத" இளம் தலைவர்கள். எனவே, ஒரு நம்பிக்கையான எதிர்காலம் வேண்டி, ஜேர்மன் வாக்காளர்கள் நாசிக் கட்சிக்கு வாக்களித்தனர். இந்த மானசீகமான ஆதரவோடு, நாசிக் கட்சியின் ஆயுதப் படையினர் நாசிக் கட்சி எதிர்ப்பாளர்களுக்குக் கொடுத்த வன்முறை அச்சுறுத்தலும் சேர்ந்து தான் நாசிக் கட்சியும், ஹிற்லரும் ஜேர்மனியின் ஆட்சியைப் பிடித்தனர். பதவிக்கு வந்த பின்னர் ஹிற்லரின் நடவடிக்கைகள் ஹிற்லர் வேந்தராகப் பதவியேற்று சில மாதங்களில், ஜேர்மன் பாராளுமன்றம் தீயூட்டப் பட்டது. இந்த எரியூட்டலுக்கு ஜேர்மன் கம்யூனிஸ்டுகள் காரணமெனப் பிரச்சாரம் செய்த நாசிகள், ஒரு ஒல்லாந்து நாட்டு கம்யூனிஸ்டைக் கைது செய்தனர். ஹிற்லரின் விமானப் படையைப் பின்னாளில் கட்டியெழுப்பிய தீவிர நாசியான ஹேர்மன் கோறிங் நேரடியாக நீதிமன்றம் சென்று, கைது செய்யப் பட்ட ஒல்லாந்துக் கம்யூனிஸ்டின் மரண தண்டனையை உறுதி செய்தார். அதே நேரம் மிக முக்கியமான இன்னொரு விடயமும் நாசி ஜேர்மனியின் எதிர்காலப் போக்கை நிர்ணயித்தது: பாராளுமன்றம் எரிக்கப் பட்ட சம்பவத்தைக் காரணம் காட்டி, ஹிற்லர் ஜேர்மன் ஜனாதிபதியை அவசரகாலச் சட்டத்தை அமல் படுத்தத் தூண்டினார். இதனால், சகல அரசியலமைப்பு வழியான மக்கள் உரிமைகளும் ஒரே இரவில் ரத்துச் செய்யப் பட்டன. இந்த உரிமைகள் ரத்தினால், நாசிகளை ஆதரித்த ஜேர்மனியர்களுக்கு ஒரு பாதிப்பும் வரவில்லை- ஆனால், யூதர்கள், கம்யூனிஸ்ட்டுகள், நாசி எதிர்ப்பாளர்கள், ஊடக சுதந்திரம் என்பன நன்கு பாதிக்கப் பட்டன. ஹிற்லரின் கட்சிக் கொள்கைகள் செயல் வடிவம் பெற ஆரம்பித்தன! -இன்னும் வரும் ஜஸ்ரின்
  4. ஒரு ஊர்ல கோர்ட்ல கேஸ் ஒண்ணு நடக்குது. அந்த ஊர் அம்மணி ஒருவரை சாட்சியா விசாரிச்சுக் கிட்டிருக்காங்க...! வாதி தரப்பு வக்கீல்: "ஏம்மா உங்களப் பத்தி சுருக்கமா சொல்லுங்க..." அம்மணி : "என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு ? உன்னைப்பத்தி சொல்லவா ? நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப் பய. சின்னச் சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே..., அப்புறம் ஒருநாள் நம்ம ஊரு கோயில் உண்டியலை உடைச்சு நகை, பணம் எல்லாம் திருடிட்டே.. ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான். இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற..." அதிர்ந்து போனார் வக்கீல். மெல்ல சமாளிச்சிகிட்டு, "சரிம்மா.. இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?" ன்னு கேட்டார். அம்மணி : "தெரியுமாவா; இந்த மொள்ளமாரி சின்ன வயசுல, ஊர் பொண்ணுங்க ஒண்ணைக்கூட விட்டு வைக்க மாட்டான். சரியான பொம்பளை பொறுக்கி, பஞ்சாயத்து இவனை ஊர விட்டு ஒதுக்கி வச்சுருச்சு... இப்போ என்னமோ, கோட்டு போட்டுக்கிட்டு வந்து நிக்கிறான் !" ஜட்ஜ் : (அவசரமா மேஜையை தட்டி) "அரை மணி நேரம் கழித்து கோர்ட் மீண்டும் கூடும்" ன்னு உத்தர விட்டுட்டு வக்கீல்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்தார். அறைக்குள் நுழைந்த அந்த இரு வக்கீல்களிடமும் ஜட்ஜ் சொன்னாரு பாருங்க...! "கோர்ட் மறுபடியும் ஆரம்பிச்சதும் நீங்க ரெண்டு பேரும் 'இந்த ஜட்ஜ் ஐயாவை தெரியுமா?' ன்னு அந்த அம்மணிகிட்ட கேட்டீங்கன்னா செருப்பு பிஞ்சுடும், ஜாக்கிரதை !!"
  5. தையல் கடைக்கு... தமிழ்ப் பெயரை, வைக்காத... சுவியருக்கும், சுமதிக்கும் வன்மைமாயன கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். 😎 கதை சூடு பிடிக்கத் தொடங்குகின்றது தொடருங்கள் ✍️ சுவியர். வாசிக்க ஆவலாக உள்ளோம். அந்தக் கடையில்... தனிய பெண்களுக்கான பிளவுஸ் மட்டும்தான் தைப்பார்களா. 😂 ஆண்களுக்கு... சாரம் தைத்து தர மாட் டார்களா. 🤣 ஓம் என்றால்... பத்து பற்றிக் சாரம் தைக்கிற பிளான் இருக்கு. 😁
  6. ஃபரீனா அவர்களின் குரலில் ஆடும் தேனிலா பாடும் தேனிலா
  7. இணைந்திருக்கிற எல்லோருக்கும் நன்றி - தனித்தனியாக வந்த கேள்விகளுக்கு பின்னர் பதில் எழுதுகிறேன். ஆனால், கோசானின் கருத்துக்கு இப்பவே எழுத வேண்டும்: உடைந்த றெக்கோர்ட் போல 5 வருடங்களாக போலிச் செய்திகள், சதிக் கதைகள், திரித்த வரலாறுகளின் பின் செல்லுதல் ஆகியவற்றால் வரக் கூடிய தீமைகளைச் சொல்லி வந்தும் அதனால் எவ்வளவு பயன் விளைந்தது எனத் தெரியவில்லை. சலிப்பு வந்தாலும், என் பிள்ளை வாழப் போகும் உலகை இப்படியே விட்டுப் போக முடியாது என்பதால் ஒரு சிறு முயற்சி, கடைசி முயற்சி என்று கூடச் சொல்லலாம். இதை நான் ஆரம்பிக்க 2 முன்மாதிரிகள் அல்லது ஊக்கிகள்: 1. மரியோ லிவியோ, ஒரு அமெரிக்க பௌதீகவியலாளர், விஞ்ஞான மறுப்பிற்கெதிராகச் செய்லபடும் ஒரு எழுத்தாளர். அவர் கருத்தின் படி இளம் வயதினர் (impressionable age? யாழை வாசிப்போரில் இவர்கள் எத்தனை வீதமென அறியேன்!) விஞ்ஞானத்தையும், வரலாற்றையும் அறியச் செய்தால் 10 வருடங்களில் உலகம் இப்போதிருப்பதை விட முன்னேற்றகரமாக இருக்கும் என்கிறார். 2. யாழ் கள ரஞ்சித்தும் நன்னியரும்: சளைக்காமல் எங்கள் இனம் பற்றிய பதிவுகளைத் தொடராகப் பதிவதில் அவர்கள் காட்டும் உழைப்பும் ஆர்வமும் மெச்சத்தக்கவை. இவர்களின் உழைப்பு எனக்கு வராதெனினும், தொலைவிலாவது பின் தொடர முனைகிறேன்.
  8. கோவையை சுற்றியுள்ள சுற்றுலா தளங்கள்: பசுமை நிறைந்த அதிகம் அறியப்படாத பகுதிகள் மோகன் பிபிசி தமிழுக்காக 48 நிமிடங்களுக்கு முன்னர் பசுமை நிறைந்த கோவை மாவட்டத்தைச் சுற்றி பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. ஒரு நாள் பயணமாக சென்று வரக்கூடிய பெரிதும் அறியப்படாத இடங்கள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். கோவை குற்றாலம் - சிறுவாணி நீர் வீழ்ச்சி கோவைக்கு மிக அருகில் உள்ள சுற்றுலாத் தளங்களுள் கோவை குற்றாலமும் ஒன்று. அருவிகளுக்குப் பெயர் போன குற்றாலத்தை அடியொட்டி கோவை குற்றாலம் என்கிற பெயர் வந்துள்ளது. சிறுவாணி நீர்வீழ்ச்சிதான் பரவலாக கோவை குற்றாலம் என்று அழைக்கப்படுகிறது. கோவையிலிருந்து எளிதாக அடையக்கூடிய இடமாக கோவை குற்றாலம் அமைந்துள்ளது. கோடை வெயிலின் வெப்பத்தைத் தணிக்கவும் சிறிய தொலைவில் பைக் ரைடு செல்ல விரும்புபவர்களும் தேர்வு செய்யும் இடமாகவும் உள்ளது. நகரின் மையப்பகுதியான காந்திபுரத்திலிருந்து 40 கி.மீ பயண தூரம். காந்திபுரத்திலிருந்து நேரடி பேருந்துகள் உள்ளன. சொந்த வாகனத்திலும் செல்லலாம். சாடிவயல் சோதனை சாவடியில் வாகனங்களை நிறுத்திவிட வேண்டும். நுழைவுச் சீட்டு பெற்ற பிறகு வனத்துறையினரின் வாகனத்தில் அழைத்துச் செல்வார்கள். அதன் பின்னர் சிறிது தூரம் காட்டுப் பகுதிக்குள் நடந்து சென்றால் கோவை குற்றாலத்தை அடையலாம். நொய்யல் நதி இங்குதான் தொடங்குகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கேத்தரின் நீர்வீழ்ச்சி கோவையில் வசிப்பவர்கள் தேநீர் குடிப்பதற்குக்கூட ஊட்டி வரை செல்வார்கள் எனப் பிரபலமாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் வழக்கமான இடங்களைவிடவும் சாகசமான பயணங்களை மேற்கொள்ளும் இடங்களும் உள்ளன. அதில் கேத்தரின் நீர்வீழ்ச்சியும் ஒன்று. கோத்தகிரியிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதன் பிறகு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தேயிலை தோட்டங்கள் வழியாகக் காட்டிற்குள் பயணம் செய்தால் கேத்தரின் நீர்வீழ்ச்சியை அடையலாம். வனப்பகுதிக்குள் இருப்பதால் குளிரான வானிலையே இங்கு நிலவும். நீர்வீழ்ச்சியிலும் பற்களை நடனமாட வைக்கும் உறை குளிர் வெப்பநிலையில் நீர் ஆர்ப்பரித்து ஓடும். காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை சுற்றுலா பயணிகள் செல்வதற்கு உகந்த நேரம். இந்தியாவின் 'ஜுராசிக் பார்க்', டைனோசர் முட்டைகளின் வழிபாடு மற்றும் கடத்தல் – கள நிலவரம் குருசடை தீவு, கண்ணாடி படகு சவாரி: ராமநாதபுரம் மாவட்டத்தில் அறியப்படாத சுற்றுலா தலங்கள் சென்னையைச் சுற்றி இப்படியும் கூட சுற்றுலா தலங்கள் உள்ளனவா- - BBC News தமிழ் கொடிவேரி அணைக்கட்டு கோவையிலிருந்து 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கொடிவேரி அணைக்கட்டு. கோவையிலிருந்து ஒன்றரை மணி நேர பயணத்தில் கொடிவேரியை அடைந்துவிடலாம். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் வட்டத்தில் அமைந்துள்ள கொடிவேரி தடுப்பணை பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எளிதாக வந்து செல்லும் விதத்தில் மூன்று மாவட்டங்களுக்கும் மையமான இடத்தில் கொடிவேரி அணைக்கட்டு அமைந்துள்ளது. நீர்வரத்து சரியாக உள்ள காலங்களில் பொதுமக்கள் அணைக்கட்டில் குளிக்க அனுமதிக்கப்படுகிறது. 90களில் முக்கியமான படப்பிடிப்பு தளமாகவும் கொடிவேரி விளங்கியுள்ளது. சின்னத்தம்பி திரைப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. ஆனைக்கட்டி கோவையைச் சுற்றி பல்வேறு மலைவாசல் தலங்கள் இருந்தாலும் எளிதாக அடையக்கூடிய இடமாக ஆனைக்கட்டி உள்ளது. கோவையிலிருந்து 30 கி.மீ தொலைவில் தமிழ்நாடு - கேரளா எல்லையோரத்தில் ஆனைக்கட்டி அமைந்துள்ளது. பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்கள் ஆனைக்கட்டியைச் சுற்றிலும் அமைந்துள்ளன. இங்கு சுற்றுலா தலங்கள் அதிகளவில் இல்லை. இங்குள்ள மிதமான வானிலையை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் தனியார் ரிசார்ட்களில் தங்குவது வழக்கம். கோவையைச் சுற்றி பைக் ரைட் செல்ல விரும்புபவர்கள் தேர்வு செய்யும் இடங்களில் ஆனைக்கட்டியும் இடம்பெறும். பரளிக்காடு சூழல் சுற்றுலா கோவை மாவட்டம் காரமடையில் அமைந்துள்ளது பரளிக்காடு சூழல் சுற்றுலா. கோவையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பில்லூர் அணையையொட்டி அமைந்துள்ளது பரளிக்காடு கிராமம். இங்கு வனத்துறையால் சூழல் சுற்றுலா ஒருங்கிணைக்கப்படுகிறது. வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அனுமதி. இணைய வழியாக மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது. பரிசல் பயணம், பழங்குடியினர் விருந்து மற்றும் ஆற்றுக் குளியல் என வனத்துறையால் முழுமையாக இந்த சுற்றுலா ஒருங்கிணைக்கப்படுகிறது. கோவை மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ளவர்கள் காடு, மலை சார்ந்து ஒரு நாள் சுற்றுலா சென்று வர ஏதுவான இடமாகப் பரளிக்காடு உள்ளது. மலம்புழா அணை கோவையிலிருந்து 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மலம்புழா அணை. கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் கோவையிலிருந்து எளிதாக செல்லும் இடமாக உள்ளது மலம்புழா அணை. மலம்புழா அணை அருகே பூங்காவும் பல பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. படகு பயணம், கேபில் கார் பயணம் என சாகசம் நிறைந்த பல விஷயங்கள் இங்கு அமைந்துள்ளன. மலம்புழா அணை அருகே சிறிய நீர்வீழ்ச்சிகளும் அமைந்துள்ளன. வால்பாறை கோவையிலிருந்து ஒரு நிறைவான பயணம் செல்பவர்கள் தேர்வு செய்யும் பட்டியலில் தவிர்க்காமல் வால்பாறை முதலிடத்தில் இருக்கும். கோவையிலிருந்து 100 கிமீ தொலைவில் வால்பாறை அமைந்துள்ளது. பொள்ளாச்சியில் இருந்து 40 கிமீ மலைப்பாதையில் பயணம் செய்தால் வால்பாறையை அடையலாம். வால்பாறை செல்லும் வழியில் தேயிலை தோட்டங்கள் நிறைந்து பசுமை போர்த்தி காணப்படும். மேல் சோலையாறு அணை, சின்ன கல்லார், நல்லமுடி வியூ பாயிண்ட் ஆகியவை வால்பாறையில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள். ஆழியாறு அணை, குரங்கு நீர் வீழ்ச்சி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ளது ஆழியாறு அணை. கோவை - வால்பாறை செல்பவர்கள் அவசியம் வந்து செல்லும் இடமாகவும் ஆழியாறு அணை உள்ளது. அணையின் மேல் பகுதியில் முழு நீளத்திற்கும் நடந்து செல்ல முடியும். அணையின் எழில்மிகு தோற்றத்தை முழுவதும் ரசிக்க முடியும் என்பதால் இளைஞர்கள் போட்டோ ஷூட் எடுக்கும் முக்கியமான இடமாகவும் ஆழியாறு அணை உள்ளது. இங்கு பூங்கா, மீன் காட்சியகம், பார்க் தமிழ்நாடு மீன்வளத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆழியாறு அணையிலிருந்து 5 கி.மீ தொலைவில் குரங்கு நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. ஆழியாறு அணைக்கு வருபவர்கள் நிச்சயம் குரங்கு நீர் வீழ்ச்சிக்குச் செல்வார்கள். வெள்ளியங்கிரி ட்ரெக்கிங் கோவை மாவட்டம் போலுவாம்பட்டியில் வெள்ளியங்கிரி கோயில் அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மக்கள் வனத்துறையால் அனுமதிக்கப்படுவார்கள். வெள்ளியங்கிரி ஏழு மலைகளைக் கொண்டுள்ளது. ஆறு கிலோ மீட்டர் தூரம் மலை பாதைகளில் பயணித்து ஏழு மலைகளைக் கடந்து சென்றால் வெள்ளியங்கிரி மழை உச்சியை அடையலாம். பக்தர்கள் மட்டுமில்லாமல் ட்ரெக்கிங் செல்ல விரும்பும் பலரும் தேர்வு செய்யும் இடமாக வெள்ளியங்கிரி உள்ளது. பாலமலை கோவை மாநகருக்கு அருகிலேயே அமைந்துள்ள ஒரு சிறிய மலைக் குன்றுதான் பாலமலை. இங்கு அரங்கநாதர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கோவனூர் வழியாகச் சென்றால் பாலமலையை அடையலாம். நகரின் கூச்சல்களுக்கு நடுவே சிறிது நேரம் இளைப்பாற விரும்புபவர்கள் இந்த இடத்தைத் தேர்வு செய்யலாம். பாலமலையில் நிலவும் மிதமான வெப்பநிலையையும் இயற்கை காட்சியையும் ரசித்துவிட்டு வரலாம். உடுமலைப்பேட்டை கோவையிலிருந்து 70 கிமீ தொலைவில் உடுமலைப்பேட்டை அமைந்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்தின்கீழ் வரும் இந்தப் பகுதியில் திருமூர்த்தி அணை, அமராவதி அணை முக்கியமான சுற்றுலா தலமாக அமைந்துள்ளன. திருமூர்த்தி அணைக்கு மேல் பஞ்சலிங்க நீர் வீழ்ச்சி உள்ளது. நுழைவுச் சீட்டு பெற்றுக்கொண்டு செல்ல முடியும். 20 நிமிடங்கள் நடைபயணமாகச் சென்றால் நீர் வீழ்ச்சியை அடையலாம். திருமூர்த்தி அணையிலிருந்து 20 கிமீ தொலைவில் அமராவதி அணை அமைந்ந்துள்ளது. https://www.bbc.com/tamil/india-64682857 தமிழ்நாட்டிற்கு சுற்றுலா செல்வோர் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
  9. தையல்கடை. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(1). சுமதி சதயம் நட்ஷத்திரம் கும்பராசி...... அன்று லீவுநாளானபடியால் சுமதி வீட்டில் சின்ன சின்ன வேலைகள் செய்து கொண்டிருக்கிறாள்.எல்லாம் வளந்திட்டுதுகள் ஒரு வேலையும் செய்கிறதில்லை.பிள்ளைகளுக்கு திட்டும் நடக்குது.தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கு. சுமதி ஒரு பெரிய ஹோட்டலில் முப்பதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மேலாளராக பணிபரிகிறாள்.அவளுக்கு ஒரு வீட்டுக்காரரும் இரண்டு பிள்ளைகளும் ஒரு கணவனும் இருக்கிறார்கள். மூத்தவன் முகிலன் பதினெட்டு வயது அடுத்து வானதி பத்து வயது. அவர்கள் இப்போதும் வாடகை வீட்டில் இருப்பதால், இப்ப உங்களுக்கு புரிந்திருக்கும் அவளின் வீட்டுக்காரர் யார் என்று.......!கணவன் சுரேந்தரும் வீடுகள் விற்கும் வாங்கும் ஒரு ஏஜென்சியில் மேலாளராக இருக்கிறார். சுமதிக்கு நல்ல ஊதியமும் காரும் கொம்பனி கொடுத்திருக்கு. இவற்றைவிட அவளுக்கு நன்றாகத் தையல் வேலை தெரியும். அதனால் வீட்டில் ஒரு தனியறையில் தையல் மிசின் வைத்து அக்கம் பக்கம் தெரிந்தவர்கள், உறவினர்களுக்கெல்லாம் ஆடைகள் நவீன மாடல் ப்ளவுஸ்கள் தைத்து கொடுத்து உபரியாக சம்பாதிக்கிறாள். இதெல்லாம் இருந்தபோதிலும் அவளுக்கென்று ஒரு ஆசை இந்த "லா சப்பலில்" சொந்தமாக ஒரு தையல்கடை போடவேண்டும் என்று. அதற்குத் தோதாக சென்றவாரம்தான் எதேச்சயாக அவள் சேகரிடம் கட்டிய சீட்டு ஒன்று சீட்டு கேட்டு ஏற்றுகிற வல்லுநர்கள் வரத் தவறியதால் குறைந்த கழிவில் சுமதிக்கு கிடைத்திருக்கு. அந்தப் பணம் இன்னும் சில நாட்களில் கைக்கு வந்து விடும்.என்ன ஒரு பிரச்சினை என்றால் அதை அப்படியே வங்கியிலும் போட முடியாது. நூற்றியெட்டு கேள்விகள் கேட்பாங்கள். இன்றைய நாளில் வீட்டில் வைத்திருப்பதும் பிரசினைதான்.கள்ளர்களுக்கும் உளவாளிகள் உண்டு.அவங்களும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஆயுதங்களைக் கொண்டுவந்து வெகு சுளுவாக பணம் நகைகள் மட்டும் எடுத்துக் கொண்டு போயிடுறாங்கள். பக்கத்தில ஐ போன் 14 இருந்தாலும் தொடுகிறதில்லை. வீடும் அலுங்காமல் குலுங்காமல் பூட்டியபடியே இருக்கும். ஆனால் சுமதிக்கு நகைகள் பற்றி பயமில்லை. அவையெல்லாம் வங்கிப் பெட்டியில் ஆழ்நிலைத் தியானத்தில் இருக்கின்றன. இவன் மூத்தவன் முகிலன் மட்டும் ஒரு பெட்டையாய் பிறந்திருந்தால் ஒரு சாமத்தியவீடு செய்து அதைக் காரணம் காட்டியாவது கொஞ்சப் பணத்தை வங்கிகளில் போட்டிருக்கலாம்.இப்போதைக்கு அதற்கும் வழியில்லை. அவனுக்கும் இப்ப பதினெட்டு வயதாகின்றது. ஒரு காதில் கடுக்கணும் போட்டுக்கொண்டு உரித்த சேவல் மாதிரி ஒரு மோட்டுச் சைக்கிளில் யுனிக்கு போய்வாறார். சுமதியின் கை பழக்கத்தில் வேலைகளை பர பர வென்று செய்ய மனம் தனக்குள் கணக்கு போட்டுக்கொண்டு இருக்கு. உடனே மூளைக்குள் பளிச் என ஒரு யோசனை, ஏன் நான் இந்தப் பணத்தைக் கொண்டு "லா சப்பலில்" ஒரு கடை போடக் கூடாது. நாலு தையல் மிசின் வாங்கிப் போட்டு மூன்று நாலு ஆட்களை சம்பளத்துக்கு வைத்துக்கொண்டு வியாபாரம் ஆரம்பிக்கலாம் தானே. மெலிதாகத் தோன்றிய எண்ணம் நேரம் செல்ல செல்ல விருட்ஷமாய் வளர்ந்து கொண்டிருக்கு. அப்போது செற்றியில் கிடந்த அவளது போன் ரிங்டோன் " ரஞ்சிதமே ரஞ்சிதமே " என்று அழைக்கிறது. செய்த வேலையை அப்படியே போட்டு விட்டு அங்கு போகிறாள். கவிதாதான் அழைப்பு எடுத்திருந்தாள். ஓ .கவிதா எப்படி சுகம் என்று தொடங்கி அக்கம் பக்கம் மற்றும் நண்பர்கள் எல்லாரையும் அலசிக் கழுவிக் கொண்டிருக்கும் பொழுது தொலைகாட்சியில் ஒரு ஐயா அங்கவஸ்திரம் அணிந்து வீபூதி சந்தனம்,குங்குமம் எல்லாம் போட்டுக் கொண்டு இராசிபலன் சொல்லுகிறார்.அப்போது வீட்டின் அழைப்புமணி ஒலிக்கிறது. பொறடி கவிதா ஆரோ பெல் அடிக்கினம்,நான் பிறகு எடுக்கிறன். என்ர வீட்டுக்காரர்தான் வாறதெண்டவர் அவராய்த்தான் இருக்கும் என நினைத்துக்கொண்டு கதவைத் திறக்க அவர்தான் நிக்கிறார். பொறுங்கோ அங்கிள் கவர் எடுத்துக் கொண்டு வாறன் என்று சொல்லி உள்ளே சென்று செக் இருந்த கவரைக் கொண்டுவந்து அவரிடம் குடுத்து விட்டு அவர் சொன்ன "A " ஜோக்குக்கு சிரித்து கதைத்துக் கொண்டிருக்க.... இராசிபலனில், எதிலும் நிதானத்தை கடைபிடிக்கும் கும்பராசி அன்பர்களே ! உங்களுக்கு ஏழரை சனியின் கடைக்கூறு நடைபெறுவதால் மிச்சம் இருக்கும் இரண்டு வருடங்களும் நீங்கள் மிகக் கவனமாய் இருக்க வேண்டும். மேலும் இன்னும் இரு மாதங்களில் குருபகவான் ஆறாம் வீட்டில் மறைவதால் சனியும் உக்கிரேன் மாதிரி உக்கிரமாக உங்களை வாட்டும். பிரச்சினைகளும் எந்தப் பக்கம் என்றில்லாமல் ரஷ்ய ஏவுகணைகள் போல் அடுத்தடுத்து வந்து தாக்கும். அதனால் இப்ப இருக்கிற பணத்தை, சொத்துக்களை பாதுகாத்து வைத்திருந்தாலே போதுமானது.இரு வருடங்களுக்கு புதிதாய் முதலீடுகள் செய்வதை தவிர்த்தல் நல்லது.சதயம் நட்ஷத்திரத்தில் பிறந்த கும்பராசிக்காரர்களே உங்களின் கும்பம் ஓடிகிற அளவுக்கு சுமை இருப்பதால் எதிலும் கவனம் தேவை........தொடர்ந்து அடுத்து அழகிய கண்களையுடைய மீனராசி அன்பர்களே.........! அப்போது அந்த பலூன் ஜோக்குக்கு சிரித்தவாறு உள்ளே வந்த சுமதி அட கும்பராசிக்கு சொல்லி முடிஞ்சாச்சுது போல, ச் சா.... மிஸ் பண்ணிட்டன் என்று சொல்லியபடி செற்றியில் அமர்கிறாள். சற்று நேரத்தில் அவளது கணவன் சுரேந்தர் வேலையால் அலுத்துக் களைத்து வீட்டிற்குள் வருகிறார். இன்னும் தைப்பார்கள்........! 🥻
  10. என்னுடன் தற்போது Reha Clinic‘ல் தெரப்பி செய்து கொண்டு இருக்கும், 25 வயதுடைய ஜேர்மன் இளைஞனும் அவனது நண்பியும், சென்ற வருடம் 2022 மாசி மாதமளவில் “Gotha Go Home“ போராட்டம் மும்முரமாக நடந்து கொண்டிருந்த போது இலங்கைக்கு நான்கு கிழமை ✈️ சுற்றுலாவில் 🛩 சென்றவர்கள். பெடியனுக்கு… 25 வயது என்ற படியால், அவன் என்றே தொடர்ந்து குறிப்பிடுகின்றேன். 😁 அவன் போன நேரம்… காலி முகத் திடல் மட்டுமல்லாது பல இடங்களிலும் ஆர்ப்பாட்டாங்கள் நடந்து கொண்டு இருந்தாலும்… தங்களை அது பெரிதாக பாதிக்கவில்லை என்றும், பார்ப்பதற்கு சுவராசியமாக இருந்ததாக குறிப்பிட்டார். ஶ்ரீலங்கா போய் இறங்கிய நேரம் ஒரு ஐரோ 280 ரூபாய் இருந்தது என்றும், பிறகு தினமும் 📈 அதிகரித்து சென்று 380 ரூபாயில் வந்து நின்றது மகிழ்ச்சியாக இருந்தது என்று சொன்னார். ஒரு முறை 🚅 ரயிலில் போக… ரயில் நிலையத்துக்கு சென்று பயணசீட்டு கேட்ட போது, அங்கு இருந்த அரச 👨🏻‍✈️ ஊழியர் இனி ரயில் ஒண்டும் ஓடாது, வேண்டுமென்றால் மலிவான விலையில் வாடகைக் 🚙 கார், சாரதியுடன்… ஒழுங்கு செய்து தருவதாகவும், இலங்கையில் நிற்கும் காலம் முழுக்க அதனையே பாவிக்கலாம் என்றும்… ஒரு நாள் வாடகை 250 ஐரோ படி, மிகுதி மூன்று கிழமைக்கும் மொத்தமாக முற்பணம் செலுத்த வேண்டும் என்றும் அந்த ரயில் நிலைய அரச அதிகாரி கேட்டாராம். தான் ஹோட்டேலுக்கு போய் யோசித்து சொல்வதாக சொல்லிவிட்டு வந்துவிட்டாராம். அடுத்த நாள் பார்த்தால்… வழமை போல் ரயில் ஒடுவதாகவும். நல்ல காலம் ஒரு ஏமாற்று பேர் வழியிடம் இருந்து தப்பி விட்டதாகவும் குறிப்பிட்டார். 🚂 ரயிலில்… கதவருகே இருந்து… அவனும், நண்பியும் தொங்கிக் கொண்டு சாகசம் செய்தபடி போன தருணங்கள் மிக இனிமையான நிகழ்வுகளில் ஒன்றாக குறிப்பிட்டார். 🐘 யானையில் சவாரி செய்ததையும், யானையை தொட்டு குளிப்பாட்டியதையும் அடிக்கடி குறிப்பிடுவதோடு… மற்றைய ஜேர்மன்காரருக்கும் அந்தப் படங்களை காட்டி பெருமைப் பட்டுக் கொள்வார். 😀 நான் இலங்கையில் வசிக்கும் போது…. சிவனொளிபாத மலை, சிகிரியா போன்றவற்றை பார்க்கவில்லை என்று அறிந்ததும்… நான் பார்க்காததை, தான் பார்த்து விட்டதாக… அவருக்கு அற்ப சந்தோசமும் உள்ளது. 😂 உணவு வகைகளில்…. விதம் விதமான 🥬 மரக்கறி வகைகள் தமக்கு மிகவும் பிடித்தவை என்றும், தாம் மாமிசம் சாப்பிடாதவர்கள் என்பதால், தம் வாழ் நாளில் சாப்பிடாத 🥒 மரக்கறிகளை உண்டதாகவும், அதிலும் பிலாக்காய் கறியின் 🌶 சுவையையும் பாராட்டினார். 🍌 வாழைப்பழம் எல்லாம்… ஒரே மாதிரி என்று நினைத்துக் கொண்டிருந்த தனக்கு…. இலங்கை சென்ற பின்தான் தெரிந்ததாம் சிவப்பு, பச்சை நிறங்களிலும்… வித்தியாசமான அளவுகளிலும், சுவைகளிலும் வாழைப்பழங்களை பார்த்து ஆச்சரியப் பட்டதாக கூறினார். ஒரு முறை, தான் வாங்கிய ரயில் பயணச் சீட்டு குறிப்பிட்ட ரயிலுக்கு செல்லாது என தெரிந்து கொண்ட உள்ளூர் தம்பதிகள்.. தம்முடைய செலவிலேயே புதிய ரயில் பயணச் சீட்டை வாங்கித் தந்ததை நன்றியுடன் குறிப்பிட்டார். எப்போ, எங்கு… சாப்பிடப் போனாலும் தினமும் பருப்புக் கறியை தந்து, தனக்கு வெறுப்பு ஏற்படுத்தி விட்டார்களாம். 😂 ஜேர்மனிக்கு வந்து ஒரு வருடமாகியும் பருப்பை கண்டால் வெறுப்பாக இருக்குதாம். 🤣 பெடியன்… யாழ்ப்பாணம், நயினாதீவு எல்லாம் போயிருக்கிறான். 🥰யாழ்ப்பாண பயணம்தான்… இலங்கையிலேயே தனக்குப் பிடித்த இடம் என்றான். அது வரை, நான் அங்கு பிறந்ததாக அவனுக்கு சொல்லவில்லை. அவனாகவே சொன்ன கருத்து அது. ஏன் யாழ்ப்பாணம் பிடிக்கும் என்று கேட்ட போது… வெள்ளைக்காரர் ஒருவரும் இல்லாமல் தாங்கள் மட்டும் அந்த மக்களிடையே வித்தியாசமாக இருந்தது தனக்கு மிகவும் பிடித்துக் கொண்டதாக கூறினார். பிற்குறிப்பு: கிளினிக்கில் இருந்து கைத்தொலை பேசியில் எழுதியதால், பதிவை… வர்ணமயமாக மெருகூட்ட முடியாமைக்கு மன்னிக்கவும். இன்னும் இரண்டு நாள்தான் இங்கு இருப்பேன். பெடியனிடம் உங்கள் சார்பாக கேட்க வேண்டிய கேள்விகள் இருந்தால் கீழே எழுதவும். கேட்டு பதில் சொல்கின்றேன். 😁 புதன் கிழமை வீட்டிற்கு செல்வதால்… அதற்குப் பின் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வராது. 🤪 🤣
  11. கந்தையர் சும்மா அவசரப் படக்கூடாது, அவ இப்பதானே கடை திறந்து பிரச்சினைகளை சந்திக்கிறா........வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே......! 😁
  12. சிறியண்ணை மீண்டும் வேலைக்கு போவது மிகவும் மகிழ்வான விடயம் ...உங்களுக்கு தாக்குதல் எற்படுத்தியவனும். நீங்களும் முன்பு ஒரே பகுதியில் வேலை செய்தீர்கள். ...இப்போது மாத்தி விட்டார்களா ? அதுவும் நல்லது தான் சிலசமயம். நீங்கள் அவனுக்கு சாத்தவும். கூடும் 🤣 அவனுக்கும். கூட அந்த பயம் இருக்கலாம் ...மனிதாபிமானம் வேண்டும் தான்...அது ஏற்கனவே வழக்கு போடமால் விட்டதில். காட்டப்பட்டுள்ளது..இனி நீங்கள் வழியப்போய். கதைப்பது அழகு இல்லை ஏனெனில் உங்களில் பிழை என்று ஒரு விம்பம். எற்பட வாய்ப்புகள் உண்டு” ஆனால் அவன் மன்னிப்பு கேட்டு கதைத்தால். தொடர்ந்தும். பழைய மாதிரி பாழாகி கொள்ளலாம்...எனது தனிப்பட்ட கருத்துகள் மட்டும்
  13. எனக்கு சட்டம் தெரியாது, ஆனால் இது ஒரு பாரதூரமான குற்றம் என நினைக்கிறேன் (crime negligence). அவர் மீது வழக்கு தாக்கல் செய்யாமல் விட்டு விட்டமையால் அவர் தப்பித்தார் என நினைக்கிறேன், நீங்கள் மிகவும் நல்ல மனிதராக இருக்கிறீர்கள், உங்களது குடும்பத்தினரும் தான். உங்களுக்கு வேலையிலிருந்து நட்ட ஈடு கிடைக்கவில்லையா?(சரியாக தெரியவில்லை எனது கருத்து தவறாக இருக்கலாம்),
  14. ஓம்.....அவையள் தான் தைக்கினம்........நன்றி வருகைக்கும் கருத்துக்கும் ஏராளன் ........! 👍 உங்களின்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.......கொஞ்சம் ஊறுகாய் உணவுக்கு மட்டுமல்ல கதைக்கும் தேவையாய் இருக்கிறது.......! 😁 என் நிலைமை உங்களுக்கென்ன தெரியும், மனுசியைக் கூட்டிக் கொண்டு தையல் கடையெல்லாம் ஏறி இறங்கியதில் வந்த அனுபவம்தான்.......! 😂
  15. M.R. ராதா சொன்னது தான் 25 வருசமாக பொய்யை மட்டுமே சொன்ன வக்கீல் நீதிபதியானவுடன் நீதி தருவான் என்று நினைக்கும் மக்கள் கூட்டம் தானே நாம்??
  16. அவரைப் பற்றி என்ன வரலாறு தெரியுமோ?!
  17. லொறி சாரதி, பைலட்டாக.. வந்த போது. 😂
  18. மனநோயாளர்கள் எவருமே தானாகவே வைத்தியரை நாடமாட்டார்கள். கட்டாயம் இன்னொருவரின் துணை தேவை. ஆனால் அந்த துணை யார் என்பதே பிரச்சனை. கோசான் நீங்க நம்புகிறீர்களோ இல்லையோ இந்த கதை மாதிரியே எனது நெருங்கிய உறவு ஒருவருக்கும் நடந்தது. இன்னமும் கனடாவில் இருக்கிறார்கள்.நாளாந்தம் கதைத்த நாம் இப்போ 1 1/2 -2 வருடங்களாக தொடர்பேதும் இல்லை. அவரது பிள்ளைகள் கூட இப்போது தொடர்பைக் குறைத்துக் கொண்டார்கள்.
  19. மீண்டும் முருக்க மரம் எறியதுக்கு வாழ்த்துக்கள். அந்த ஒளிந்து கொண்ட, ஆளை தேடிப் பிடித்து, என்னப்பா, அடுத்து யாரு எண்டு கேட்டு வையுங்கோ. இந்த 15 மாதமும் உங்கள் மனதை உற்சாகமாக வைத்திருந்த கள உறவுகளுக்கு நன்றிகள். சிறியர் விசுவாச மடையர் இல்லை. 😁 வீட்டில் இராமல், சும்மா பம்பலுக்கு போய் இருக்கிறார். 😜 இதனிடையே, போனவருசம், ஏப்ரல் முதலாம் திகதி இந்திய, இலங்கை அரசுகளையே விழி பிதுங்க வைத்தார்.🤣
  20. இதே வெள்ளையள் என்றால் கோட் கேசென்று போய் மில்லியன் கணக்கில் வாங்கிக் கொண்டு செற்றில் ஆகிடுவாங்கள். நாம தமிழராச்சே.. விசுவாச மடையர்கள். அடுத்தவனுக்கு உழைத்தே தேய்வது நம்ம ஜீன். வாழ்த்துக்கள் சிறியர். உடம்பு ஒத்துழைத்தால் மட்டும் கூடிய நேரம் வேலை செய்ய ஒத்துக்கொள்ளுங்கள். உடம்பை வருத்தி ஒத்துழைக்கச் செய்ய வேண்டாம்.
  21. ஒரு வியாபாரத்தைத் தொடங்கி நடத்தும் போது வதும் பிரச்சனைகளைத் தெளிவாக அறிந்திருக்கின்றீர்கள். அதுவும் மூளை கூடிய எமது இனத்தவரைக் கொண்டு நடத்துவது இன்னும் கஷ்டம். தொடருங்கள்…!சுமதி நன்றாகக் கையாள்கிறார்..!
  22. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(6). கடந்த இரண்டரை மாதங்களாக கடை நல்ல வருமானத்துடன் நடந்து கொண்டிருக்கு. சுமதியும் காலையில் தனது வேலைக்கு போவதும், மாலையில் கடைக்கு வந்து வேலையும் செய்து, கணக்கு வழக்கெல்லாம் பார்த்துக் கொண்டு போவதும் வழமை. கடையில் பிரேமா, ரோகிணி, மிருதுளா மற்றும் கபிரியேல் வேலை செய்கிறார்கள். மூன்று பெண்களும் காலை 8:30 க்கு வேலைக்கு வந்து மாலை 5:00 மணிக்கு கிளம்பி விடுவார்கள்.கபிரியேல் மட்டும் மதியம் 13:00 மணிக்கு வந்து 20: 00 மணி வரை இருந்து சுமதியுடன் சேர்ந்து வேலை செய்து விட்டு கடையை பூட்டிக்கொண்டு போவார்கள். சுமதி அப்படி அவர்களின் வேலை நேரத்தை அமைத்திருந்தாள். மிருதுளாவும், சுமதியும் ஆடைகள் வெட்டித் தைப்பதைப் பார்த்து பார்த்து கபிரியேலும் தைக்கப் பழகியிருந்தான்.அதற்கு அவன்முன்பு தோல் பக்டரியில் வேலை செய்ததும் ஒரு காரணம். லா சப்பலில் செவ்வாயில் இருந்து ஞாயிறுவரை கடைகள் திறந்திருக்கும். திங்கள் பெரும்பாலான கடைகள் பூட்டியிருக்கும். அன்று செவ்வாய் கிழமை. பிரேமாவிடம் ஒரு வேலை சொல்வதற்காக சுமதியும் காலை 8:40 க்கு கடைக்குப் போன் செய்கிறாள். யாரும் போன் எடுக்கவில்லை. என்ன பார்ப்பம் என்று காரில் 9:00 மணிக்கு வந்திருந்தாள். கடை பூட்டி இருக்குது. திறப்புகளில் ஒரு செட் பிரேமாவிடம் இருக்கும். பிரேமாதான் காலையில் எட்டரைக்கு கடை திறப்பது.அவள் இன்னும் வரவில்லை. தன்னிடம் இருந்த சாவியைப் போட்டு கடையை திறந்து விட்டு வேலை செய்யும்போது 9:15 க்கு மிருதுளாவும் ரோகிணியும் வருகின்றார்கள். --- என்ன மிருதுளா இப்ப வாறீங்கள்.நான் எட்டரைக்கெல்லோ கடை திறக்க வேண்டும் என்று சொன்னனான். --- இல்லை அக்கா நாங்கள் எட்டரைக்கு வந்திடுவோம்.ஆனால் பிரேமாவிடம்தான் சாவி இருக்கு. அவ 9:30 போல்தான் வந்து கடையை திறக்கிறவ. --- இது எவ்வளவு நாளா நடக்குது.ஏன் நீங்கள் இதை எனக்கு முன்பே சொல்லவில்லை. சனி,ஞாயிறு நான் காலையில் கடைக்கு வரும்போது நீங்கள் மூவரும் எட்டரைக்கே வருகிறீர்கள் தானே. --- சிறிது நேரம் இருவரும் பேசாமல் நிக்க ரோகிணி முன்வந்து, அது வந்து அக்கா கிழமை நாட்களில் அவ ஒன்பதரைக்குத்தான் வாறவ. ஏனென்று தெரியாது. --- அப்ப மத்தியானம் என்ன செய்கிறனீங்கள். --- மத்தியானமும் அவ 11:30 க்கு வெளியே போவா பின் 14:30 க்குத்தான் வாறவ. நானும் மிருதுளாவும் இங்கேயே சாப்பிட்டுட்டு தொடர்ந்து வேலை செய்துகொண்டிருப்போம். 13:00 மணிக்கு கபிரியேலும் வந்திடுவான். --- சரி....அவனின் நேர அட்டவனை 13:00 லிருந்து 20:00 வரை என்று சொல்லி விட்டு சரி நீங்கள் போய் வேலை செய்யுங்கோ. அவர்கள் சென்று தங்களது மிஷின்களில் அமர்ந்ததும் பிரேமா கையில் ஒரு பெரிய பையுடன் அசைந்து அசைந்து வருகிறாள். தூரத்தில் வரும்போதே கடை திறந்திருப்பதைக் கண்டு இன்னும் வேகமாக அரக்கப் பரக்க ஓடி வருகிறாள். கடைக்குள் வந்த பிரேமா எதிர்பாராமல் அங்கு சுமதியை கண்டதும் திகைத்துப் போய் விட்டாள். சுமதியும் எதுவும் தெரியாததுபோல் இருக்க அவள் சென்று தனது மிஷினில் அமர்ந்து கொள்கிறாள். சிறிது நேரம் கழித்து சுமதி பிரேமாவிடம் என்ன பிரேமா இவ்வளவு தாமதமாக வாறீங்கள். --- அது சுமதி திடீரென்று வீட்டில் விருந்தாளிகள் வந்திட்டினம், நேற்றிரவு படுக்க நேரமாயிட்டுது. அதுதான் வரத் தாமதமாயிட்டுது. --- நீங்கள் போன் செய்திருந்தால் நான் வந்து திறந்திருப்பேன். அல்லது மிருதுளாவிடம் திறப்பைக் கொடுத்திருக்கலாம். --- நான் அதை யோசிக்கேல்ல சுமதி. --- கடை திறந்து இந்த இரண்டரை மாதத்தில் நீங்களும் ரோகிணியும் கன விடுமுறைகள் எடுத்திருக்கிறீங்கள். பத்தாதற்கு இடையிலயும் சோற் லீவுகளும் எடுக்கிறீங்கள். இப்படியென்றால் நான் என்னென்று கடையை நடத்துவது.உங்களை நம்பித்தானே நான் இந்தக் கடையை விட்டுட்டு போறனான்.சரி வேலையை செய்யுங்கோ. எனக்கு வேலை இருக்கு நான் போட்டுவாறன். வெளியே போகிறாள்.....! வெளியே வந்த சுமதி தனது சித்தப்பா முறையான ஒருவரிடம் போகிறாள். அவர் இப்போது பென்ஷன் எடுத்துக்கொண்டு இருக்கிறார்.முன்பு ஒரு சொசைட்டியில் இரவுக் காவலாளியாக ஒரு பெரிய நாயும் வைத்துக்கொண்டு வேலை பார்த்தவர். அந்த நிர்வாகம் அவருக்கும் நாய்க்கும் தனித்த தனியாக சம்பளம் கொடுத்து வந்தது. அவர் ஒய்வு பெற்ற சில மாதங்களில் அந்த நாயும் வயதாகி இறந்து விட்டது. --- என்ன பிள்ளை திடீரென்று உனக்கு சித்தப்பாவின் ஞாபகம் வந்திருக்கு. --- அதொன்றுமில்லை சித்தப்பா நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். --- என்ன உதவி, என்ன செய்யவேணும் சொல்லு. --- நான் கடை திறந்தது உங்களுக்கு தெரியும்தானே,அங்கு நாலுபேர் வேலை செய்கிறார்கள். அவர்கள் வேலைக்கு எந்தெந்த நேரம் வருகினம், எப்பப்ப வெளியே போக்கினம் என்றெல்லாம் ஒரு இரண்டு கிழமை வேவு பார்த்து எனக்கு அப்பப்ப தெரிவிக்க வேண்டும். நீங்கள் கடைப்பக்கம் வந்தாலும் என்னை தெரிந்தமாதிரி காட்டிக் கொள்ளக் கூடாது. சரியா ....! --- அதுக்கென்ன துப்பறிய சொல்கிறாய் செய்திட்டால் போச்சு. --- நான் சித்தப்பா, என்ர வேலைக்கு காலம போயிட்டு பின்னேரம்தான் கடைக்கு வாறானான். வந்து பார்த்தால் அங்கு சரியாக வேலை நடப்பதில்லை போல் தெரிகிறது.அதுதான் உங்களிடம் வந்தனான். --- ஓம்.....எனக்கு விளங்குது பிள்ளை என்று சொல்லிவிட்டு அவர் குடுத்த ஜூசையும் குடித்து விட்டு சுமதி வீட்டுக்கு போகிறாள்..........! இன்னும் தைப்பார்கள்..........! 🎽
  23. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(5). அன்று "லா சப்பலில்" சுரேந்தர் சுமதியின் தையல்கடை "லக்கி டெய்லரிங் அன்ட் டெக்ஸ்டைல்ஸ்" அதிக ஆடம்பரமின்றி எளிமையாக திறப்புவிழா நடந்தேறியது. அங்கிருக்கும் அக்கம் பக்கத்து கடை முதலாளிமார் வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்கள் என பலரும் வந்திருந்து சிறப்பித்திருந்தார்கள்.எல்லோருக்கும் சிற்றூண்டிகளுடன் குளிர்பானங்களும் வழங்கப் பட்டன. கண்ணாடி அலுமாரிகள் நிறைய துணிகள்,புடவைகள் இத்யாதியுடன் நவீனமான நான்கு தையல் மெஷின்களும் கொலுவீற்றிருந்தன.சுமதி சுரேந்தர் ,ரோகிணி,மிருதுளா, பிரேமா எல்லோரும் விருந்தாளிகளை விழுந்து விழுந்து உபசரித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் குறும்பாக அக்காமாரே மத்தியானம் சாப்பாடும் இருக்குதோ என்று கேட்க ரோகிணி முன்வந்து ஓமண்ணை பக்கத்தில கோயிலில் அன்னதானம் நடக்குது வயிறு முட்ட சாப்பிட்டுட்டு போகலாம் என்று சொல்ல எல்லோரும் சிரிக்கிறார்கள். அன்றுமட்டும் சுமதிக்கு பணமாகவும் பரிசுப் பொருட்களாகவும் நிறைய சேர்ந்திருந்தன. காரணம் அவள் எல்லோர் வீட்டு வைபவங்களுக்கு போய் தாராளமாய் மொய் வைத்துவிட்டு வருவாள். அதுகள் எல்லாம் இப்ப வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன.அவையெல்லாம் தனியாக பிரேமாவின் பாதுகாப்பில் இருந்தன. ஆரம்பத்தில் கடை வேலைகளைக் கவனிப்பதற்காக சுமதி ஒருமாதம் விடுப்பு எடுத்திருந்தாள். அடுத்தநாள் சுமதியின் போனில் துறைமுகத்தில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வருகின்றது. அதில் அவள் இந்தியாவில் இருந்து தருவித்த சில பெட்டிகள் வந்திருப்பதாகவும் அவற்றை வந்து பெற்றுக்கொள்ளும் படியும் குறிப்பிட்டிருக்கின்றது. அந்தப் பெட்டிகளுக்குள்தான் நிறைய துணிமணிகள், றோல்கோல்டு ஆபரணங்கள்,கைக்கடிகாரங்கள் மற்றும் தையல்களுக்கு தேவையான ஊசிகள்,கிளிப்புகள் லொட்டு லொசுக்குகள் எல்லாம் இருக்கின்றன.அவற்றை எடுப்பதற்காக ஒன்லைனில் ஒரு வானை ஒழுங்கு செய்துகொண்டு பாரிஸில் இருந்து 200 கி.மீ. தூரத்தில் இருக்கும்" le havre"என்னுமிடத்துக்கு பயணப் படுகிறாள். வானை ஒட்டிக்கொண்டு வந்தவர் ஒரு இளைஞன்.நல்ல களையான முகம் முகத்தில் இருக்கும் குறுந்தாடி மிகவும் அழகாய் இருக்கின்றது. (இந்த சுரேனிடம் சொல்லுறனான் நீங்கள் ஒரு தாடி வையுங்கோப்பா உங்களுக்கு எடுப்பா இருக்கும் என்று சொன்னால் மனுஷன் கேட்குதே இல்லை. இந்தப் பொடியனுக்கு நல்ல வடிவாயிருக்கு என்று நினைத்துக் கொள்கிறாள்) இருவரும் பிரெஞ்சில் கதைத்துக் கொண்டு வருகிறார்கள். வெளியே மென்மையான மழைத்தூறல். வானின் வைப்பர் 10 செக்கண்டுக்கு ஒருமுறை அசைந்து கொண்டிருக்கு. வானுக்குள் A / C யின் கதகதப்பு இதமாய் இருக்கிறது. --- என்ன இன்று மழை பெய்து கொண்டிருக்கும் போல ....(இங்கு அறிமுகம் இல்லாதவருடன் பேச்சு வரும்பொழுது முதல்ல காலநிலை பற்றி கதைப்பினம்). --- பெரிசாய் மழை வராது, நாள் முழுதும் இப்படித்தான் தூறிக்கொண்டிருக்கும். --- என்பெயர் சுமதி......உங்களை எப்படி அழைப்பது..... ---என் பெயர் கபிரியேல் ஜான்சன் .....ஆனால் முதற்பெயர் கபிரியேல் மேடம்..... ---மேடம் அவசியமில்லை நீ சுமதி என்றே அழைக்கலாம்.....கபிரியேல் நீ கனகாலமாக இங்கு வேலை செய்கிறாயா .....(இங்கு பெரும்பாலும் வயது வித்தியாசமின்றி ஒருமையிலும் பெயர் சொல்லியும் அழைப்பது வழமை). --- ஓம் சுமதி, சுமதி அழகான பெயர்.......மூன்று வருடங்கள் இருக்கும். --- உனக்கு இந்த வேலை நல்லா பிடித்திருக்குது போல ரசித்து வண்டி ஓட்டுவதுபோல் தெரிகிறது. --- ரொம்பப் பிடிக்கும் சுமதி ஆனால் இந்த வாரத்துடன் எனது வேலை ஒப்பந்தம் முடிவடைகிறது. இனி வேறு வேலை தேட வேண்டும்.... --- எதற்காக வேலையை விடுகிறாய். --- எங்கள் கொம்பனியை வேறொரு கொம்பனி வாங்கியிருக்கிறார்கள். அவர்களின் கொம்பனி பாரிசில் இருந்து வெகு தூரத்தில் இருக்கிறது அதுதான் சிலரை சம்பளத்துடன் நிப்பாட்டுகிறார்கள். --- இதற்கு முன் நீ என்ன வேலை செய்தனி. --- நான் முன்பு ஒரு தோல் ஆடைகள் தைக்கும் பக்டரியில் வேலை செய்தேன். சில நாட்களில் அந்த தோல் சுவாசம் எனக்கு அலர்ஜி ஆகி விட்டது.அதனால் அதை விட்டுட்டு இந்த வேலையில் சேர்ந்தேன். --- அப்படியா.....அதற்குள் வானும் அவர்களது பொதி இருக்கும் களஞ்சிய அறைக்கு வந்து விட்டிருந்தது. அங்கிருந்த அவர்களின் பார்சல்கள், பெட்டிகள் எல்லாம் எடுத்து வானில் ஏற்றிவிட்டு அருகே இருந்த கடற்கரையில் ஒரு நல்ல ரெஸ்டூரன்ரில் போய் மதிய உணவை சாப்பிட்டபின் பில் குடுக்கப் போன காபிரியேல்லை சுமதி தடுத்து தானே பணமும் டிப்ஸும் குடுக்கிறாள். சிறிது ஓய்வெடுத்தபின் இருவரும் பரிசுக்கு திரும்பி வருகிறார்கள். ஏன் சுமதி நீங்கள் இவ்வளவு பொருட்கள் இறக்குமதி செய்திருக்கிறீர்கள் ஏதாவது ஒன்லைனில் விற்பனை செய்கிறீர்களா...... --- இல்லை கபிரியேல்,நான் சமீபத்தில்தான் லா சப்பலில் ஒரு தையற்கடை திறந்திருக்கிறேன்.அதற்குத்தான் இவையெல்லாம். இனியும் மலேசியா சிங்கப்பூரில் இருந்தெல்லாம் பொருட்கள் இறக்குமதி செய்ய வேண்டும். ---வெறும் தையற்கடை மட்டுமா. --- தையற்கடையுடன் டெக்ஸ்ட்டைலும். இப்போது நாங்கள் அங்குதான் போகிறோம், அப்போது நீ பார்க்கலாம். மேலும் நீ விரும்பினால் கொஞ்ச நாள் எனது கடைக்கு வந்து வேலை செய்யலாம். பின்பு உனக்குப் பிடித்த வேலை கிடைத்ததும் தாராளமாக நீ விலகிச் செல்லலாம். --- ஓ.....நீங்கள் இவ்விதம் சொன்னதுக்கு நன்றி சுமதி, ஆனால் நான் யோசித்து பதில் சொல்கிறேன். இன்னும் தைப்பார்கள்......! 🥽
  24. அப்ப பிரோமா செலக்ரட். சுவி நீங்க தையலிலும் கில்லாடி போல கப் எல்லாம் வைத்து தைக்கிறீங்க.
  25. அவர்கள் தைக்கிறது இருக்கட்டும், சுவியர்…! உங்களுக்கு எப்படி இவ்வளவு பெண்களின் உடல் வாகு தெரியும்?😁 தொடருங்கள்….!
  26. திரும்பும் வரலாறு - பாகம் 3 – நாசிகள். fபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) ஒரு வித்தியாசமான பேர்வழி. பயிர்கள் வளர நைதரசன் அவசியம். ஆனால், காற்றில் நிறைந்திருக்கும் நைதரசன் வாயுவை எல்லாப் பயிர்களாலும் பயன்படுத்திக் கொள்ள இயலாது. ஹேபர், நைதரசனை அமோனியா உரமாக மாற்றும் வழியைக் கண்டு பிடித்தது உலக விவசாய உற்பத்திக்குப் பாரிய பங்களிப்புச் செய்தது. இந்தக் கண்டு பிடிப்பிற்காக அவருக்கு இரசாயனவியலில் நோபல் பரிசும் கிடைத்தது. ஹேபரின் அடுத்த கண்டு பிடிப்பு கொஞ்சம் விவகாரமானது. குளோரின் வாயுவை, வாயுவாகவே குடுவையில் வைத்திருக்கும் முறையை ஹேபர் கண்டு பிடித்த போது, முதலாம் உலகப் போர் முடிவிற்கு வந்து கொண்டிருந்தது. ஹேபர், பிரெஞ்சுப் போர் முனைக்கு தனது குளோரின் வாயுச் சிலிண்டர்களை ஜேர்மன் படையினரோடு சேர்ந்து எடுத்துச் சென்று பதுங்கு குழியில், காற்று பிரெஞ்சுப் படைகள் இருந்த பக்கம் வீசும் வரைக் காத்திருந்தார். காற்று வளமாக வந்த வேளையில் குளோரின் வாயுவைத் திறந்து விட்டார். காற்றோடு சேர்ந்து பிரெஞ்சுப் படைகளின் பக்கம் நகர்ந்த குளோரின் வாயு தான் முதலாவது இரசாயன ஆயுதம். தரையோடு சேர்ந்து பரவிய குளோரின் வாயு எதிரிகளின் பதுங்கு குழிகளுக்குள்ளும் இறங்கி அவர்களை மூச்சுத் திணற வைத்தது. குளோரின் வாயுவினால் உடனடியாக இறக்காதோர் கண் பார்வை, நுரையீரல் என்பன நிரந்தரமாகப் பாதிக்கப் பட்டு சில நாட்களில் இறப்பர். அந்த மரணம் வரை உடல் அனுபவிக்கும் உபாதை கொடூரமானது. இவ்வாறு ஒரு தடவையில் ஜேர்மனி பயன்படுத்திய குளோரின் வாயுவினால் மட்டும் ஆயிரத்திற்கு சற்று அதிகமான பிரெஞ்சு, கனேடியப் படைகள் இறந்தனர். ஹேபருக்கு ஜேர்மனியில் மதிப்பு உயர்ந்தது, ஆனால் அவர் தனது விஞ்ஞான அறிவை இவ்வாறு பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஹேபரின் மனைவி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இதில் சுவாரசியமான தகவல் என்னவெனில், ஹேபர் ஒரு ஜேர்மனிய யூதர்! ஆனால், ஜேர்மன் தேசபக்தி காரணமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, 1933 இல் ஹிற்லர் ஆட்சிக்கு வந்த வேளையிலும் மேலும் சில இரசாயனவியல் வாயுக்களைக் கண்டறிந்து ஜேர்மனியின் விஞ்ஞான வளர்ச்சிக்கு உதவிக் கொண்டிருந்தார். இவ்வாறு இவர் அடுத்துக் கண்டு பிடித்த வாயு, ஐதரசன் சயனைட் வாயு. சிக்லோன் (Zyklon) என்று அழைக்கப் பட்ட இந்த நச்சு வாயுவை இலகுவாக சில திண்மப் பொருட்களிலிருந்து தயாரிக்கும் வழியை ஹேபர் கண்டு பிடித்தார். இந்த நச்சு வாயுவை பூச்சி கொல்லியாகப் பாவிக்கும் நோக்கமே ஹேபரினுடையதாக இருந்தது. ஹேபரின் இந்தக் கண்டு பிடிப்புத் தான் அடுத்த 5 ஆண்டுகளில், சிக்லோன் - பி என்ற பெயரில் மில்லியன் கணக்கான யூதர்களை வாயு அறைகளில் அடைத்து வைத்துக் கரப்பான் பூச்சிகள் போல சில நிமிடங்களில் கொலை செய்யப் பயன் படுத்தப் பட்டது. ஆனால், இது நடப்பதற்கு முன்னரே ஹேபரின் யூத அடையாளம் காரணமாக அவரையும் ஜேர்மன் நாசிகள் ஒதுக்கி வைத்து விட்டமையும் நடந்தது. திட்டமிட்ட யூத ஒதுக்கல் முதலில், எடுத்தவுடனேயே நாசிகள் யூதர்களையும் ஏனையோரையும் கொலை செய்ய ஆரம்பிக்கவில்லை. உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன, சர்வதேச வர்த்தகம், இராஜ தந்திர உறவுகள், 1936 பேர்லின் ஒலிம்பிக் என்பன இன்னும் ஜேர்மனியை படுகொலைகள் செய்ய விடாமல் தடுத்திருந்தது. ஆனால், சில திட்டமிட்ட நாசி நடவடிக்கைகள் யூதர்களைக் குறி வைத்தன (இது முழுமையான பட்டியல் அல்ல!): 1. யூதர்களின் வியாபாரங்களைப் புறக்கணிக்கும் படி கோரும் பிரச்சாரம் மூலம் யூதர்களின் பொருளாதாரம் முடக்கப் பட்டது. இது மட்டுமன்றி, புதிதாக ஆரம்பிக்கப் படும் வியாபரங்களில் யூதர்கள் முழு உரிமையாளர்களாக இருக்க முடியாத கட்டுப் பாடுகளும் உருவாக்கப் பட்டன. 2. வர்த்தக சங்கங்களில் யூதர்கள் அங்கத்துவராக இருக்க முடியாத சட்டங்கள் உருவாக்கப் பட்டன. நாசி ஆதரவாளர்களால் நிர்வகிக்கப் பட்ட தொழிற்சங்க அமைப்புகளே முன்னின்று இந்த ஒதுக்கல்களைச் செயல் படுத்தினர். 3. சட்டத்தரணிகளாக, மருத்துவர்களாக, மருந்தாளர்களாக யூதர்கள் பணி செய்யும் அனுமதியை ஜேர்மன் நகரங்களும் மானிலங்களும் மறுத்தன. 4. ஒரு கட்டத்தில், ஜேர்மன் யூதர்களின் பிரஜாவுரிமையைப் பறித்து விடும் சட்டமொன்று வரைபாக சில மாதங்கள் விவாதிக்கப் பட்டது. இறுதியில், சர்வதேச எதிர்ப்பு வரலாமென்பதால் அதை நிறைவேற்றாமல் விட்டார்கள். ஆனால், 1938 அளவில் ஜேர்மன் யூதர்களின் கடவுச் சீட்டுகளைத் தற்காலிகமாகப் பறிமுதல் செய்து, அதில் "ஜெ" என்ற எழுத்தைக் குறித்துத் திருப்பிக் கொடுத்தார்கள். இந்த "ஜெ" என்ற எழுத்துக் குறித்த கடவுச் சீட்டுகளை ஜேர்மன் அதிகாரிகள் புதுப்பிக்க மறுத்ததால், நடைமுறையில் ஜேர்மன் யூதர்கள் தங்கள் குடியுரிமையை இழந்தனர். 5. ஜேர்மன் பாடசாலைகளில் யூதக் குழந்தைகள் சேர முடியாமல் தடை வந்தது. ஒரு கட்டத்தில் எல்லா யூதர்களையும் ஒன்று கூட்டி, பஸ்களில் ஏற்றி நகரின் ஒரு மூலையில் யூதர்களுக்கு மட்டுமே உரியதான ஒரு குடியேற்றத்தில் ஒதுக்கி வாழ வைத்தனர். நினைத்த நேரத்தில், ஜேர்மன் பொலிஸ், காக்கிச் சட்டைக் கும்பல் என்பன இங்கே நுழைந்து யாரையும் கைது செய்ய, தாக்க இந்தக் குடியேற்றங்கள் வாய்ப்பாக இருந்தன. யூதர்கள் அல்லாதோருக்கும் சட்டரீதியான ஒதுக்கல் முன்னரே குறிப்பிட்டது போல, றோமா எனும் ஜிப்சி மக்களும் கூட யூதர்களுக்கு இணையாகப் பாதிக்கப் பட்டனர். இன்னொரு விதமான கொடுமையான ஒதுக்கலையும் நாசிகள் சட்ட ரீதியாக்கினர்: 1933 இல், நாசிகள் உடற்குறைபாடுகள் தொடர்பான ஒரு சட்டத்தை இயற்றினர்: Law for the Prevention of Progeny with Hereditary Diseases. இந்தச் சட்டத்தின் நோக்கம், அப்பழுக்கற்ற ஆரிய இனமாக ஜேர்மனியர்களை மாற்றும் போலி விஞ்ஞான நோக்கமாக இருந்தது (Eugenics - இதை மனிதர்களில் செய்யவே முடியாதென்பது வேறு கதை). அடுத்த 8 வருடங்களில், ஹிற்லரின் கட்டளைப் படி, “ஒபரேஷன் T4” எனும் பெயரில் இரகசியமாக முன்னெடுக்கப் பட்ட திட்டத்தின் கீழ், மூன்று லட்சம் வரையான உடல், மன ஊனங்கள் உடையவர்கள் வாயுக் கூடங்களிலும், விஷ ஊசிகளாலும் கருணைக் கொலை செய்யப் பட்டனர். உண்மையில், யூதர்களைக் கொல்லப் பயன்படுத்தப் பட்ட சிக்லோன் பி விஷவாயு, இந்த உடல் ஊனமுற்றோரில் தான் பரீட்சித்துப் பார்க்கப் பட்டது. பின்னர், 1938 இல் இருந்து இதே முறை மூலம் யூதர்களும் கொல்லப் பட்டனர். இறுதித் தீர்வு - “Final Solution” 1938 நவம்பர் 9 ஆம் திகதி "உடைந்த கண்ணாடி இரவுகள்" (Kristallnacht) என அழைக்கப் படுகிறது. அந்த இரவில் தான், கும்பலாக நாசி ஆயுததாரிகளும், காக்கிச் சட்டைகளும் ஜேர்மன் யூதர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு சில நூறு யூதர்களைக் கொன்றனர். ஆயிரக் கணக்கான யூதர்கள் கைது செய்யப் பட்டு, புச்சன்வால்ட் வதை முகாமிற்கு அனுப்பப் பட்டனர் - இவர்களுள் பெரும்பாலானோர் நச்சு வாயு அறைகளில் பின்னர் கொல்லப் பட்டனர். இதே ஆண்டில், நாசிகள் ஆஸ்திரியாவையும், பின்னர் செக்கோஸ்லோவாக்கியாவையும் எதிர்ப்பின்றிக் கைப்பற்றி, அங்கே வாழ்ந்த யூதர்களையும் வெவ்வேறு வதை முகாம்களில் அடைத்தனர். ஜேர்மனிக்கு வெளியே, போலந்தில் இருந்த ஆஸ்விற்ஸ் வதை முகாம் தான் அதிக கிழக்கு ஐரோப்பிய யூதர்களைப் பலி கொண்ட கொலைக்களம். ஆனால், வதை முகாம்களில் மட்டுமன்றி சில இடங்களில் திறந்த வெளிகளிலேயே யூதர்கள் பெருந்தொகையாகக் கொல்லப் பட்டனர். இத்தகைய திறந்த வெளிக் கொலைக்களங்களில் முக்கியமானதாக உக்ரைன் தலைநகர் கியேவிற்கு அண்மையில் இருக்கும் பாபி யார் (Babi Yar) பள்ளத் தாக்கு விளங்குகிறது. இந்தப் பகுதியை இயற்கைப் புதைகுழியாகப் பயன்படுத்தி, சுமார் 34,000 யூதர்களை நாசிகள் சில நாட்களில் இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டே கொன்றொழித்தனர். இந்த பாபி யார் படுகொலையில் அந்தக் காலப் பகுதியில் சோவியத் எதிர்ப்பாளர்களாக இருந்த உக்ரைனிய ஆயுதக் குழுக்களும் பங்கு கொண்டிருந்தன. 1938 முதல் 1945 வரையான காலப்பகுதியில் மூன்றுக்கு மேற்பட்ட வதை முகாம்கள், ஏனைய திறந்த வெளிக் கொலைகளங்களில் கொல்லப் பட்ட யூதர்களின் எண்ணிக்கை மட்டும் 6 மில்லியன்கள். இதை விட மேலதிகமாக நாசிகளால் கொல்லப் பட்ட ஏனையோர் 4 மில்லியன் வரை இருப்பர். இப்படி, செறிவான, வினைத்திறனான மனிதக் கொலையே முழுமூச்சாக இயங்கிய ஒரு அரச நிர்வாகத்தை அது வரை உலகம் கண்டிருக்கவில்லை. “மிகுந்த வீரரான” 😎ஹிற்லர், இத்தனை படுகொலைப் பழிக்குப் பின்னரும் பொறுப்பை முன்வந்து ஏற்றுக் கொள்ள முடியாமல், தன் காதலியோடு தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவரது குற்றத்தில் பங்கு கொண்ட பலர் பிடிக்கப் பட்டு மரண தண்டனைக்குள்ளாகினர். இஸ்ரேல் சில நாசிகளை, தென்னமெரிக்கா வரைப் பின் தொடர்ந்து துரத்திச் சென்று பிடித்து வந்து இஸ்ரேலில் வைத்துத் தூக்கில் போட்டது சுவாரசியமான கதை. ஆனால், ஹிற்லர் இருக்கும் போதே அவருக்குத் தண்ணி காட்டிக் கலங்கடித்த ஒரு கதாநாயகனும் இருந்தார்: அவர் அக்கால பிரிட்டன் பிரதமர் வின்ஸ்ரன் சேர்ச்சில்! சேர்ச்சிலின், அவர் தலைமையில் நாசிகளுக்கு சவால் விட்ட பிரிட்டனின் கதை நாசிகளின் நரவேட்டையை விட உரத்துச் சொல்லப் பட வேண்டிய வெற்றிக் கதை! - வெற்றிக் கதை தொடரும்- -ஜஸ்ரின்
  27. 15 மாதத்தின் பின் வளமைக்கு திரும்பியுள்ளீர்கள் சந்தோசம். சில நேரங்களில் நீங்கள் எதிர்பார்ப்பது போல அவரது தவறினை உணர்ந்து கொண்டிருப்பார் என்றில்லை, எதற்கும் கவனத்துடன் அணுகவும். மனித மனம் வித்தியாசமானது, மனதில் ஏற்படும் வலிகளை உணராதிருக்க முயற்சி செய்யும் 1.உளப்பூர்வமாக தான் தவறே செய்திருந்தாலும் தவறு தனது பக்கமல்ல என நினைத்து அதனால் ஏற்படும் வலியினை கடக்க முற்படும். 2.சம்பவத்தினை அப்படியே மறந்து விட்டு விடும். ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இரு வழி பாதை கொண்ட வீதியால் வேலை முடித்து அதிகாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தேன், மழை இருட்டு வேறு; ஒரு வீதி சிக்னலில் எதிர் தரப்பில் வந்த கார்கள் இரண்டு விபத்துகுள்ளாகியிருந்தது. வார இறுதி என்பதால் பெரிதாக வாகனங்கள் வீதியில் இல்லை, அதனால் எதிர் தரப்பில் வந்த 3 வாகனங்கள், விபத்து வாகனங்களை தவிர்ப்பதற்காக நான் செல்லும் பாதையினூடாக வந்தன. அதனை அவதானித்தமையால் எனது வாகனத்தினை சிறிது தொலைவிலேயே நிறுத்திவிட்டேன். கடைசி வாகனம் கடந்த பின் எனது வாகனத்தினை எடுக்க தயாரான போது எங்கிருந்தோ(அதுவரையிலும் எனது பாதையில் ஒரு காரும் வரவில்லை) வந்த கார் எனது காரின் பின் மோதியது. காரினை பக்கத்தில் இருந்த பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினேன், என்னை பின் தொடர்ந்த அந்த காரும் எனது காரின் பின் நிறுத்தினார், காரில் இருந்து இறங்கி அந்த காரின் உரிமையாளரினை பார்த்து கேட்டேன் உனக்கு ஒரு பிரச்சினையுமில்லையா? அவர் அதிர்ச்சியில் இருந்தார், ஆனாலும் இல்லை எனக்கு எந்த பிரச்சினையுமில்லை, உனக்கு எதுவும் பிரச்சினையா எனக்கேட்டார். ஆனாலும் அவரது பதட்டத்தினை பார்த்து சொன்னேன் விபத்தினால் இருவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. பாதிப்பு வாகனத்திற்குதான், உன்னிடம் காப்புறுதி உள்ளதல்லவா எனக்கேட்டேன், ஆம் என்றார். அதனால் பிரச்சினை இல்லை என கூறிவிட்டு எனது விபரங்களை அவரிடம் கொடுத்து விட்டு அவரது விபரங்களை கோரினேன். அதுவரை என்ன நடந்தது என தெரியாத அவர் என்னிடம் என்ன நடந்தது எனக்கேட்டார், நடந்தவற்றை கூறினேன் அதில் அவருக்கு திருப்தியில்லை, எதற்காக வாகனத்தினை நிறுத்தி வைத்திருந்தாய் என கேள்வியினை திரும்ப திரும்ப கேட்டார், பின்னர் புரிந்து கொண்டேன் அவர் தவறு எனது என்பதாக நிறுவ முயல்கிறார். நீண்டநேர வேலை நித்திரையும் இல்லை, மீண்டும் வேலை ஆரம்பிப்பதற்கு 6 மணித்தியாலமளவில்தான் நேரம் இருந்தமையால், எனக்கு நேரம் இல்லை நான் போகிறேன் என கூறிவிட்டு வந்து விட்டேன், அத்துடன் அவர் பதற்றம் எல்லாம் நீங்கி தன்னை தற்காத்து கொள்ளும் அளவில் நல்ல தெளிவில் இருந்தார். வீட்டிற்கு வந்து குளித்து விட்டு இணையத்தில் வாகன விபத்தினை பதிவு செய்ய தயாராகி கொண்டிருக்கும் போது அவர் தொலைபேசியில் அழைத்தார். நல்ல வேளை உனது காரில் மோதினேன், இல்லாவிட்டால் ஏற்கனவே மற்ற இரண்டு கார் விபத்தினை வீதியின் ஓரமாக பார்த்து கொண்டிருந்த மக்கள் மேல் மோதியிருப்பேன் என்றார்(அவர் எனது காரினை மோதுவதை தவிர்ப்பதற்காக காரினை வீதியின் ஓரமாக திருப்பியிருந்தார்). இந்த தகவலை அவர் அங்கிருந்த மக்களிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்(தவறு யார் பக்கம் என அறியும் அவரது முயற்சியில்).
  28. நன்றி நுணாவிலான். நீங்கள் சொல்வது நூறு வீதம் உண்மை. வேலைக்குப் போவதால்… மனம், உடலில் பெரிய மாற்றம் தெரிகின்றது. 👍🏽 நன்றி ராஜவன்னியன். 🙂 வேலைக்குப் போறதே… பாதி நேரம் பராக்குப் பார்க்கவும், விடுப்பு கதைக்கவும்தானே… 🤣
  29. நன்றி குமாரசாமி அண்ணை. முக்கியமாக உடல் நிறை அதிகரிக்காமல் இருக்கவும், தினமும் நேரத்தை ஒழுங்கு முறையில் கடைப் பிடிப்பதற்காகவுமே… எவ்வளவு கெதியில் வேலையை ஆரம்பிக்க முடியுமோ, அவ்வளவு கெதியில் வேலைக்குப் போக விரும்பினேன். 🙂
  30. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(3). "லா சப்பல்" யூரோப் மட்டுமன்றி உலகில் இருக்கும் புலம்பெயர்ந்தவர்கள் எல்லோருக்கும் அது ஒரு மயக்கும் சொர்க்கம். அங்கிருந்து மனைவி அல்லது காதலியை கையைக் கோர்த்துக் கொண்டு சிறிது தூரம் நடந்து சென்றால் கூடப் போதும் உலக அதிசயமாம் ஈபிள்டவர் கண்முன் தெரியும். அந்த இடத்தில் ஒரு சதுர அடி இடம் எடுப்பதே பெருங் கஷ்டம். சுரேந்தரும் சுமதியும் பல தரகர்கள், நண்பர்கள் எல்லோரிடமும் சொல்லி சொல்லி ஒரு மாதிரி கடையொன்று வாடகைக்கு எடுத்திருந்தார்கள். அந்தக் கடைக்கு கீழேயும் சாமான்கள் வைத்து எடுக்க சௌகரியமாக பாதாள அறையொன்று உண்டு.கடையை அவர்கள் ஒரு தகுதிவாய்ந்த கம்பனிமூலமாக தமது வேலைகளுக்கு ஏற்றவாறு திருத்தி,பாதாள அறை உட்பட வர்ணங்கள் பூசி அங்கு தமக்கும் ஒரு ஆபிஸ் அறையும், நிலைக் கண்ணாடியுடன் உடைகள் மாற்றும் அறையும் அமைத்து முன்பக்கம் விராக்கிகள்,கண்ணாடி அலுமாரிகள் எல்லாம் பொருத்தி விட்டிருந்தார்கள். கடைக்கு "லக்கி டெய்லரிங் அன்ட் டெக்ஸ்டைல்ஸ்" என்று பெயர்பலகையும் நியான் லைட்டுடன் பூட்டி விட்டிருந்தார்கள். பின் வங்கியிலும் கடன் எடுத்து நான்கு நவீன மாடல் தையல் மிஷின்களும் இன்னபிற சாமான்களும் வாங்கிப் போட்டிருந்தார்கள். இன்னும் 15/20 நாளில் கடை திறப்புவிழா செய்யுமளவுக்கு வேலைகள் முடிந்து விட்டிருந்தன. சுமதி தையல்கடை திறக்கப் போகிறாளாம் என்னும் செய்தி அவளது உறவினர்கள் நண்பர்கள் வட்டாரத்தில் "அணைந்த எரிமலையாய் புகைந்து அமேசன் காட்டுத் தீயாய் " வியாபித்து அடுத்து வந்த கலியாணவீடு,சாமத்திய வீடு,பிறந்தநாள் கொண்டாட்டங்களில் எல்லாம் முக்கியமான பேசுபொருளாகி இருந்தது. அன்று காலை பத்து மணியிருக்கும் சுமதி தொலைக்காட்சியில் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் சீரியஸாக பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கைத்தொலைபேசி "ரஞ்சிதமே"என்று அழைக்கிறது. ---ஹலோ....ஓ....ஓ நான் சுமதி யார் நீங்கள் என்று கேட்க , அக்கா அது நான்தான் பிரேமா நீங்கள் வீட்டிலேயே இருக்கிறீங்கள். உங்களிடம் ஒரு விஷயம் கதைக்க வேணும் ..... ---ஓம்....இண்டைக்கு விடுமுறைதானே வீட்டில்தான் நிக்கிறன், என்ன விஷயம் சொல்லுங்கோ.... --- இருங்கோ அக்கா, நான் பக்கத்துலதான் நிக்கிறன் ஐந்து நிமிசத்தில அங்கு வாறன் போன் கட்டாகின்றது. தொடர்ந்து சற்று நேரத்தில் அழைப்பு மணி ஒலிக்க சுமதி கதவைத் திறக்கிறாள். பிரேமா கையில் ஒரு சொக்கிலேட் பெட்டியுடன் உள்ளே வருகிறாள். --- வாங்கோ பிரேமா ! வந்து இருங்கோ, கண்டு கனகாலம். என்ன குடிக்கிறீங்கள். --- பிரேமாவும் சொக்கிலேட் பெட்டியை அவளிடம் கொடுத்து விட்டு கொஞ்சம் தயங்கியபடி அது வந்து சுமதியக்கா நீங்கள் "லா சப்பலில்" தையல்கடை திறக்கப் போவதாக அறிந்தனான்.அதுதான் உங்களிடம் வேலை இருக்குமோ என்றுதான்......எனக்கு தையல் வேலை எல்லாம் தெரியும். --- சுமதியும் அவளிடம், பிரேமா நான் அங்கு தையல்கடை திறக்கத்தான் போறன். ஆனால் அதுக்கு "pole emploi " (ஆட்களின் தகுதிக்கு ஏற்றபடி வேலை எடுத்துக் கொடுக்கும் அதிகாரமுள்ள அரசாங்க அமைப்பு) மூலமாகத்தான் ஆட்கள் எடுக்க பதிஞ்சிருக்கிறன். மேலும் எனக்கு புதிய மொடல் மிசின்களில் ஆடைகளை நன்றாக வெட்டித் தைக்கத் தெரிந்த ஆட்கள்தான் வேணும். பெண்களின் சட்டைகள், ப்ளவுஸ்கள் மட்டுமன்றி பிள்ளைகளின் உடுப்புகளும் தைக்கத் தெரிந்திருக்க வேணும். நேற்றுத்தான் அப்படி ரோகிணி என்றொரு பிள்ளையையும் எடுத்தனான். அதுசரி நீங்கள் இங்கு தையல் வகுப்புகளுக்கு போன சான்றிதழ்கள் ஏதாவது வைத்திருக்கிறீங்களோ. --- இல்லையக்கா , நான் ஊர்ல தையல் வேலை எல்லாம் செய்தனான்.அக்கம் பக்கம் எல்லாம் நான்தான் தைத்துக் குடுக்கிறது. நீங்களும் இங்கு எல்லாருக்கும் தைத்து குடுக்கிறனீங்கள் என்று எனக்குத் தெரியும்.நீங்கள் கொஞ்சம் கொஞ்சம் டிசைன்கள் காட்டித் தந்தால் நான் கெதியா தச்சுப் போடுவன். ---பிரேமா நீங்கள் கடைசியா எப்ப தைத்தனீங்கள். எனக்குத் தெரிந்து நீங்கள் இங்கு வந்தே பத்து வருடங்கள் இருக்கும் போல ....... ---ஓமக்கா, கொஞ்சம் டச் விட்டுப் போச்சு என்டாலும் நான் சமாளிச்சுடுவன். --- அதுக்கில்லை பிரேமா ஏற்கனவே 5 / 6 பேர் என்னிடம் வேலை கேட்டிருக்கினம்.அதிலும் எனக்கு இந்த ஆபிரிக்கன்ஸ் , அல்ஜீரியன்ஸ் ஆட்களின் ஆடைகளும் தைக்கத் தெரிந்திருக்க வேணும். எதுக்கும் உங்கட பெயரையும் நான் குறித்து வைத்து கொள்கிறன். பின்பு வளமையாய் கதைத்து விட்டு போகும் போது அக்கா நானும் கடைக்கு கிட்டத்தான் இருக்கிறன் இருப்பது நிமிச நடை கடைக்கு வாறதுக்கு என்று சொல்லி விட்டு போகிறாள். அதுவரை அறைக்குள் இருந்து இவர்களின் உரையாடல்களை கேட்டுக் கொண்டிருந்த சுரேந்தர் வெளியே வந்து சுமதியிடம், இஞ்ச பாருமப்பா நீங்கள் ஒரேயடியா "pole emploi" வில் இருந்து ஆட்கள் எடுத்தால் அவர்கள் கண்டதுக்கும் "லோ " கதைப்பினம். இவர்களை மாதிரி ஒன்றிரண்டு பேர் இருப்பதுதான் நல்லது. பயபக்தியுடன் பணிவாக வேலை செய்வினம் என்று சொல்ல, ஓமப்பா நீங்கள் சொல்வதும் சரிதான் என்று சுமதியும் ஆமோதிக்கிறாள். இன்னும் தைப்பார்கள் ..........! 👗
  31. கதை சூடுப்பிடிக்கின்றது போல கிடக்குது…! தொடருங்கள், சுவியர்….!
  32. இப்பிடியே சொல்லிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.. ஆடத்தெரியாதவன் மேடை சரி இல்லை எண்டமாதிரிதான் போகவிருப்பமில்லாதவன் கூறும் ஒவ்வொரு சாட்டும்.. ஏதோ அமெரிக்கா ஜரோப்பாவில் வாழுறவன் மட்டும் நூறு இரு நூறு வயசு வரையும் வாழுறாங்கள் சிறிலாங்காவில் இருப்பவன் அஞ்சு வயதில் மருந்து இல்லாமல் சாகிறான்.. இஞ்ச யாழ்ப்பாணத்தில சகல மருந்தும் இருக்கு.. காசிருந்தா சரி.. ஒரே ஒரு காரணத்தை சொல்லுங்கோ எனக்கு பொருளாதாரம் போதுமானதா இல்லை அதால சிறீலங்கா வந்து செற்றிலாக விருப்பமில்லை எண்ட உண்மைக்காரணத்தை.. மற்றதெல்லாம் சும்மா சப்பை கட்டு.. காசு இருந்தா ராஜவாழ்க்கை சிறீலங்காவில.. காசில்லாட்டி பிச்சைக்கார வாழ்க்கை பிரித்தானியா கனடாவிலையும்.. தற்ஸ் ஆல் யுவரானர்.. உதாரணத்துக்கு எவ்வளா காசிருந்தாலும் வெளிநாட்டில் டிறைவர் வீட்டு வேலை சமையலுக்கு ஆள் வைக்கேலா.. தன் வேலைய தான் தான் செய்யோணும்.. சம்பளம் குடுத்து கட்டாது.. ஆனால் இலங்கையிலோ தமிழ் நாட்டிலோ ஒரு வைத்தியர் அல்லது பொலிஸ் அதிகாரி அல்லது பிஸினஸ்மான் வீட்டில் இதுக்கு எல்லாத்துக்கும் ஆள் இருக்கும்.. அதுக்குத்தான் சொன்னன் காசுஇருந்தா இங்கைதான் சொர்க்கம் வெளிநாட்டில் அல்ல.. அங்கு பிச்சைக்கார வாழ்க்கை.. அவசர சிகிச்சைக்கு அப்பலோவுக்கு கூட போகலாம்.. அதால ஊருக்கு போய் இருக்க என்னட்ட காசில்லை எண்டு நேர்மையா சொல்லுங்கோ.. அதவிட்டிட்டு மற்றதெல்லாம் உங்களை நீங்களே ஆறுதல்படுத்த சொல்லிக்கொளவது..
  33. உலக நாடுகள் என்ன செய்தன? ஹிற்லரின் நாசிக் கட்சியின் ஆட்சியில் ஜேர்மனி வந்த காலப் பகுதி ஒரு அசாதாரணமான உலகக் சூழல் நிலவிய காலம். முதல் உலகப் போரினால் ஒரு லட்சம் இளைஞர்களையும், அதே காலப்பகுதியில் ஐந்து லட்சம் வரையான மக்களையும் இன்புழுவன்சாப் பெருந்தொற்றினால் இழந்த அமெரிக்கா, 1929 இல் உருவான பொருளாதார மந்த நிலையினால் கடுமையாகப் பாதிக்கப் பட்டது (இந்த மந்த நிலை- Great depression, ஏதோ ஒரு வகையில் 1939 வரை நீடித்தது). எனவே அமெரிக்கா ஒரு உலக சக்தியாக யாருக்கும் தோன்றவில்லை அப்போது. ஆனால், தங்கள் காலனிகள், சக்தி மிக்க கடற்படைகள் என்பவை காரணமாக பிரிட்டனும், பிரான்சும் இராணுவ ரீதியில் பலமாக இருந்த காலம் அது. நாடுகளின் சங்கம் (League of Nations) என்ற ஐ.நாவின் முன்னோடியான அமைப்பு அமெரிக்காவினால் முன்னின்று உருவாக்கப் பட்டாலும், அமெரிக்கா அந்த அமைப்பில் நிரந்தர உறுப்பினராகவில்லை. மாறாக, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் ஆகிய நிரந்தர உறுப்பினர்களோடு, சில டசின் நாடுகளை உறுப்பினர்களாக வைத்துக் கொண்டு "கூட்டுப் பாதுகாப்பு (collective security)" என்ற அடிப்படையில் நாடுகளின் சங்கம் இயங்கியது. ஆனால், செயல் திறன், அமலாக்கல் சக்தி என்பன குறைந்த ஒர் அமைப்பாக இருந்ததால் உண்மையிலேயே உலகின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பிரச்சினைகளை நாடுகளின் சங்கத்தால் தீர்க்க இயலவில்லை. உதாரணமாக, நிரந்தர உறுப்பினரான ஜப்பான், சீனாவின் மஞ்சூரியாப் பகுதியை ஆக்கிரமித்த போது, நாடுகளின் சங்கத்தினால் கண்டனம் மட்டுமே தெரிவிக்க முடிந்தது - இந்தக் கண்டனமே ஜப்பான் தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளக் காரணமாக இருந்தது. ஜேர்மனி கூட ஒரு குறுகிய காலப்பகுதியில் நாடுகளின் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப் பட்டது. ஹிற்லர் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் காரியங்களில் ஒன்றாக அந்த அமைப்பில் இருந்து ஜேர்மனியை விலக்கிக் கொண்டார். இதன் மூலம், உலகப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக வரப் போகும் இரு நாடுகள் நாடுகளின் சங்கத்தைப் புறக்கணிக்கும் வசதி வாய்ப்பு அமைந்தது. இப்படி உலக நாடுகள் - குறிப்பாகப் பலம் பொருந்திய நாடுகள்- தங்கள் உள்விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்த காலப்பகுதி (isolationism என்பார்கள்)ஹிற்லருக்கும், கிழக்கில் ஜப்பானியர்களுக்கும் மிக வாய்ப்பான காலமாக இருந்தது. மொத்தத்தில், ஜேர்மனியின் புதிய நாசி அரசை உலக நாடுகள் வித்தியாசமாகப் பார்க்கவில்லை என்று தான் பின்னர் வெளி வந்த இராஜதந்திரப் பரிமாற்றங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மாறாக, அரவணைத்துச் செல்லும் (appeasing) முயற்சி கூட 1932 முதல் ஆரம்பித்து விட்டது. உதாரணமாக, அமெரிக்கா, வெர்சை உடன்படிக்கையின் படி ஜேர்மன் மீது விதித்த பொருளாதாரத் தண்டனைகளை ஈடு செய்ய, குறுகிய காலக் கடன்களை வழங்கியிருந்தது. 1932 இல், ஜேர்மனியின் பொருளாதரப் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு அந்தக் கடன்களை வசூலிப்பதை தற்காலிகமாக ஒத்தி வைத்தது (debt moratorium - வட்டி மட்டும் கட்ட வேண்டிய நிலை). இதன் பின்னர், 1934 இல் ஹிற்லர் ஒரு சட்டத்தை இயற்றி, சகல வெளிநாட்டுக் கடன்களையும் ஒரு தலைப் பட்சமாக நிறுத்தி வைத்தார். இதனால், ஜேர்மன் பணம் நாட்டை விட்டு வெளியே செல்வது வெகுவாகக் குறைக்கப் பட்டது. பொருளாதாரத்தில் ஒரு கண் வைத்திருந்த நாசிகள் கடன்களின் சுமையில்லாமல் மூச்சு விடக் கிடைத்த இடைவெளியில் நாசிகள் ஜேர்மன் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் தீவிரமாக ஈடுபட்டனர். ஜேர்மன் மக்களின் தொழில் நுட்பத் திறமை, உயர்ந்த கல்வி மட்டம், அதிகாரத்திற்குப் படிந்து எதையும்செய்யும் நடத்தைப் போக்கு (இதை முறைப்பாடு செய்யாமல் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் stoicism என்றும் சொல்வார்கள் - இது ஜேர்மன் தேசிய அடையாளங்களுள் ஒன்று என்று கூடச் சிலர் சொல்வர்!) என்பன நாசிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன. வேலையற்ற ஜேர்மனியருக்கு வேலை வழங்க, கட்டுமானத் திட்டங்கள் உருவாக்கப் பட்டன - உலகின் முதல் நெடுஞ்சாலை வலையமைப்பு ஆட்டோ பான் (Autobahn) என்ற பெயரில் ஜேர்மனியில் உருவானது. இரும்புப் பொருட்கள் உற்பத்தி, எண்ணை சுத்திகரிப்பு, செயற்கை இறப்பர், இரசாயனங்கள் என ஏராளமான பொருட்களின் உற்பத்தி அளவு ஒரிரு ஆண்டுகளிலேயே பல மடங்குகளால் அதிகரித்தது நாசிகளின் ஆட்சியில். அதே வேளையில், வேலையில்லாதோருக்கு சீருடைகளை அணிவித்து, புதிது புதிதாக ஆயுதப் படைப்பிரிவுகளை உருவாக்கும் வேலையும் நடந்தது. காக்கிச் சட்டைகள் (brown shirts) என்று அழைக்கப் பட்ட ஹிற்லர் இளைஞரணியும் ஒரு தனிப் படையாக வளர்க்கப் பட்டது. நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் அதிகரித்தது. நாசிகளை நம்பிக்கையுடன் ஆதரித்த மக்கள் "இது பொற்காலம்" என மகிழ்ந்து அவர்களது கூட்டங்களில் மந்திர சக்தியால் ஆட்கொள்ளப் பட்ட பொம்மைகள் போலக் கலந்து குதூகலித்தனர், ஆர்ப்பரித்தனர். ஆனால், இந்த 1930 களின் நாசி ஜேர்மன் பொருளாதாரம் ஒரு போர்க்காலப் பொருளாதாரம் என்பது முன்னுரிமை வழங்கப் பட்ட துறைகளைப் பார்க்கும் போதே தெளிவாக யாருக்கும் தெரிந்து விடும். அதாவது, வெர்சை உடன் படிக்கையின் படி ஆயுதப் படைகளை நவீன மயப்படுத்தும் உரிமையை இழந்த ஜேர்மனி, மறைமுகமாக தன் இராணுவப் பற்களைத் தீட்டிக் கொண்டிருந்தது. இதனை எத்தனை உலக நாடுகள் புரிந்து கொண்டிருந்தன என்பதில் வரலாற்றியலாளர்கள் முரண்படுகின்றனர் - ஆனால், ஹிற்லர் தன்னைச் சுற்றி வைத்திருந்த ருடோல்f ஹெஸ், ஜோசப் கோயபல்ஸ், ஹேர்மன் கோறிங் ஆகிய பெரிய தலைகள் ஜேர்மனியின் ஆயுத மயமாக்கலின் நீண்டகால நோக்கத்தை அறிந்திருந்தனர். உதாரணமாக, வெர்சை உடன் படிக்கையின் படி, ஜேர்மன் விமானப்படையொன்றைக் கட்டியெழுப்ப தடை இருந்தது. ஆனால், ஜேர்மனியில் பல சிவிலியன் விமான நிறுவனங்கள் முதல் உலகப் போர் காலத்திலேயே இருந்திருக்கின்றன. ஹெர்மன் கோறிங், இந்த சிவிலியன் விமான நிறுவனங்களின் திறமை வாய்ந்த விமானிகளை இரகசியமாக ஒன்று சேர்த்து, பயிற்சியளித்து ஜேர்மன் விமானப் படையை கண்காணிப்புக் குறைந்த ஜேர்மன் நாட்டுப் புறங்களில் கட்டியமைத்து வந்தார். இவ்வாறு உருவாக்கப் பட்ட ஜேர்மன் விமானப்படை (Luftwaffe), இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனுக்கு மிகுந்த சவாலாக விளங்கியது குறிப்பிடத் தக்கது. இருளிரவின் ஆரம்பம் இவ்வளவு தொழில்நுட்ப, பொருளாதார, கல்வி மேலாண்மை கொண்ட ஜேர்மன் சமுதாயம், "ஆரியர்கள்" அல்லாத யூதர்கள், றோமா மக்கள் ஆகியோரையும், ஓரினச் சேர்க்கையாளர்களையும், லூதரன் கிறிஸ்தவர்கள் அல்லாத ஏனைய கிறிஸ்தவர்களையும் எப்படி ஒதுக்கி வைத்தது? ஒதுக்கி வைத்தது மட்டுமல்லாமல், அவர்களை எப்படி வகை தொகையின்றிக் கொன்றொழித்தது? இத்தகைய இருண்ட மாற்றங்கள் 1933 இலிருந்து ஆரம்பிக்கின்றன - ஹிற்லரின் பேச்சுக்கள் செயல் வடிவம் பெற்றன. சாதாரண ஜேர்மன் மக்களும், ஜேர்மனியில் வசித்த வெளிநாட்டவர்களும் கூட "நாசிகள் ஒன்றும் மோசமில்லை"😎 என்று சான்றிதழ் கொடுக்கும் அளவுக்கு எப்படி பொருளதாரம், கலாச்சார மேன்மை ஆகிய பொன்முலாம் கொண்டு நாசிகள் தங்கள் மிருகத் தனத்தை மறைத்தனர்? இது தான் நண்பர்களே வரலாறு திரும்பும் ஒரு சிறந்த உதாரணக் கதையாக இருக்கிறது. -இன்னும் வரும் ஜஸ்ரின்
  34. இலங்கையை பொறுத்தவரை தேவை இல்லாமல் வாகன ஒலி எழுப்புவது எரிச்சலை ஊட்டியதாக மட்டும் குறிப்பிட்டார். வேறு குறைகளை தெரிவிக்கவில்லை. 🙂 ஆனால் பிடித்தவைகளை நிறைய பட்டியலிட்டார். ✅ 1) திருகோணமலையில் நீருக்கு அடியில் நீந்தும் பயிற்சியை ஜேர்மன் மொழியில் பெற்று அங்கேயே கடலுக்கு அடியில் சென்று பவளப் பாறைகளை பார்த்து ரசித்தமை… 2) நுவரேலியாவில் 🫖 தேயிலை தோட்டம், தேயிலை பதனிடும் முறைகளை அறிந்து கொண்டமை…. 3) கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் குடித்த சுவையான ☕️ கோப்பியைப் போல் வேறு எங்கும் குடிக்கவில்லையாம். அந்த வீட்டுக்காரர் அவர்கள் தோட்டத்தில் விளைந்த கோப்பியை வறுத்து தயாரித்த கோப்பி என்றார். வரும் போது அவர்களிடம் அதே கோப்பித் தூளை வாங்கி வந்து, இங்கு கோப்பி தயாரித்தால்… அந்த வாசனையும், சுவையும் வரவில்லை என்றார். 4) இலங்கை போன கையுடன்… மரத்தால் செய்த ஒன்றரை அடி உயரமான யானை 🐘 சிற்பம் ஒன்றை 40 ஐரோவிற்கு வாங்கி விட்டு அதை பாதுகாப்பாக எங்கு வைப்பது என்று தெரியாமல்…. யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, நுவரேலியா எல்லாம் காவிக் கொண்டு திரிந்தவராம். அந்த யானையை வைக்க… சீன போலி தயாரிப்பான Adidas Rucksack 🎒 ஒன்று மலிவு விலையில் வாங்கி, அதற்குள் வைத்துக் கொண்டு திரிய வசதியாக இருந்ததாம். இலங்கையில் பிரச்சினை கொடுக்காத அந்தப் பை… திரும்பி வரும் வழியில், டுபாயில் விமானம் மாறும் போது, அறுந்து விட்டதாம். 😁 பிறகென்ன… டுபாய் டியூட்டி free’யில், ஒறிஜினல் Adidas பை வாங்கி… ஜேர்மனி வந்து சேர்ந்தாராம். 🤣
  35. டொக்ரரின் உழைப்பில் மண்ணைப் போட்ட அண்ணாச்சி.
  36. ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான். அந்த ஊரை அடுத்து இருந்த மடத்தில் இரவு நேரத்தில் அவன் தூங்குவான். நள்ளிரவில் திருடர்கள் சிலர் அந்த மடத்திற்கு வருவது வழக்கம். அந்தத் திருடர்களுக்கும், அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. “இவர்கள் ஒருநாள் திருடுகிறார்கள். பல நாள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நானோ நாள்தோறும் பிச்சை எடுத்து அலைகிறேன். மீந்து போன பழைய உணவே கிடைக்கிறது. உப்பு சப்பில்லாத அதைச் சாப்பிட்டு சாப்பிட்டுச் சலித்து விட்டது. இவர்களுடன் சேர்ந்து திருட வேண்டும். வளமாக வாழ வேண்டும்’ என்று நினைத்தான் அவன். தன் எண்ணத்தை அவர்களிடம் சொன்னான். அதற்குத் திருடர் தலைவன், “திருடுவது எளிது அல்ல. அதற்குத் திறமை வேண்டும். நீ எங்களுடன் சேர்ந்து திருட வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் கேள். தருகிறோம்,” என்றான். “எதுவும் எனக்கு இனாமாக வேண்டாம். நீங்கள் திருடச் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன். நானாக எதையும் செய்ய மாட்டேன்,” என்றான் அவன். “இன்றிரவு பண்ணையார் மந்தையில் ஆடுகளைத் திருடப் போகிறோம். நீயும் வா,” என்றான் திருடர் தலைவன். இரவு நேரம், திருடுவதற்கு அவர்கள் புறப்பட்டனர். இடுப்பில் சங்கை கட்டிக் கொண்டு அவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். எங்கும் இருட்டாக இருந்தது. அவர்கள் அனைவரும் பண்ணையாரின் மந்தைக்குள் நுழைந்தனர். திருடர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆட்டின் கழுத்தைப் பிடித்து தூக்கினர். அப்படித் தூக்கினால் ஆடு கத்தாது. திருடிப் பழக்கம் இல்லாத அவன் ஆட்டின் காலைப் பிடித்துத் தூக்கினான். அதனால் அந்த ஆடு கத்தியது. ஆட்டின் கத்தலைக் கேட்ட திருடர் தலைவன் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கு. அது கத்தாது என்று சொல்ல நினைத்தான். கழுத்தை “சங்கு’ என்று சொல்வது வழக்கம். “சங்கைப் பிடி! சங்கைப் பிடி,” என்று மெல்லியதாக குரல் கொடுத்தான். இதைக் கேட்ட பிச்சைக்காரன், சங்கை ஊதும்படி சொல்கிறான் திருடர் தலைவன். சங்கு ஊதும் திறமையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தான். ஆட்டைக் கீழே விட்ட அவன் இடுப்பில் இருந்த சங்கை எடுத்தான். வலிமையாக ஊதினான். சங்கோசை எங்கும் கேட்டது. அங்கே காவல் இருந்தவர்கள் விழித்து கொண்டனர். பிறகு என்ன? பிச்சைக்காரனை கூட்டு சேர்த்த திருடர்கள் சிறைக்குச் சென்றனர். இதிலிருந்து வந்ததுதான் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழி. Sreenivasan T

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.