Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 11/07/23 in all areas
-
தமிழ்சிறி பல நல்ல கருத்து படங்களை இணைத்துள்ளீர்கள், நன்றி! ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம், இதனை புரிந்து கொண்டால் சண்டையிடும் தரப்புகளுக்கு தேவையில்லா இழப்புகளும் இல்லை வலிகளும் இல்லை.4 points
-
காஸாவில் வாழும் அப்பாவிகள் முதல் கருத்து எழுதும் கருத்தாளர்களையும் பாரபட்ஷம் இல்லமால் போட்டு தாக்குகிறீர்கள் ஐ லைக் யூ வெரி மச் நீங்கள் நல்லவரா? கெட்டவரா? என்பதுதான் புரியவில்லை4 points
-
ரஷ்யா பெப்ரவரி 24,2022 இல் உக்ரேனை ஆக்கிரமிக்க ஆரம்பித்த நாட்களில் இருந்து இன்றுவரைக்கும் ரஷ்யாவால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கையை விட, இந்த ஒரு மாதத்தில் இஸ்ரேல் காசாவில் கொன்ற அப்பாவி மக்களின் எண்ணிக்கை அதிகம். ஆனாலும் இஸ்ரேலை இன்னும் உலக வல்லாதிக்கங்கள் ஆதரிக்கின்றன - ரஷ்யாவை எதிர்க்கின்றன. ஏன் உலகம் புலிகளை அழிக்கின்றோம் என்ற கோசத்துடன், எம் மக்களை கொன்று குவிக்கும் போது மவுனமாக இருந்தது என்பதற்கான காராணத்தை நாம் வாழும் காலத்திலேயே இந்த உலகம் எமக்கு காட்டிக் கொண்டு நிற்கின்றது.3 points
-
அவுஸ் ஆப்கான் ஆட்டம் கடைசி இருபது பந்துப்பரிமாற்றங்களை தொலைக்காட்சியில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. சொல்லி வேலை இல்லை.2 points
-
இப்போ இவர்களும் அரசியல் சகதிக்குள் இறங்கிவிட்டனரா? இவர்களை பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார் யார்? சீனா வருவதால் தமிழர்களுக்கோ இவர்களுக்கோ என்ன நட்டம்? போறத்துக்கு றோட்டு போடத் தான் அடிக்கடி போய்ப் பார்க்கிறார்கள்.2 points
-
அது சரி, இந்தியாக்காரன் சொன்னால் ஸ்ரீலங்காக்காரனே கேட்கிறானில்லை. இஸ்ரேல் கட்டாயம் கேட்பான். 🤣2 points
-
இனிமேல் சீனாவின் பிரசன்னத்தை வடக்கு கிழக்கில் தவிர்க்கவே முடியாது. சீனா தமிழ்த் தரப்பிற்குச் சொல்லாமல் சொல்லும் செய்தி இதுதான்.2 points
-
வடிவேலுவின் காமெடிமாதிரி ........... வடிவேலு நடிப்பதை குறைக்க போகிறேன் என்றதும் அவருக்கு பின்னல் இழுபடும் நான்கு ஐந்துபேர் பொருளாதார பிரச்சனையால் ஓடித்திரிவதுபோல சில கருத்துக்களை வாசித்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை இதிலே தத்துவம் என்றால் உலகிற்கே நகைச்சுவையை அறிமுகப்படுத்தியது நாம்தான் என்ற தோணி2 points
-
வணக்கம் உறவுகளே, 2006ம் ஆண்டு பெப்ரவரி 22ம் திகதியிலிருந்து மார்ச் 30ம் திகதிக்கு இடையில் வெளிவந்த சண்டே லீடரின் ஒரு நாளேட்டில் புலிகளால் வெளியிடப்பட்ட முஸ்லீம் ஜிகாத் குழுவினரின் பெயர் விரிப்புகள் இடம்பெற்றிருந்தன. உங்கள் ஆராலேலும் அந்த நாளேட்டை/ அந்தக் கட்டுரையை மட்டுமாவது கண்டுபிடித்துத் தர இயலுமா? நீங்கள் செய்யப்போகும் இவ்வுதவியை என்றும் மறந்திடேன். நன்றி1 point
-
யாழிற்கு சீனத் தூதுவர் விஜயம்! இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழு யாழ்ப்பாணத்துக்கு உத்தியோக பூர்வ விஐயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 06 ஆம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள குறித்த குழுவினர் வட மாகாண ஆளுநர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் நலனோம்புத் திட்டங்களையும் குறித்த குழுவினர் பார்வையிடவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேநேரம், இலங்கைக்கான சீனத் தூதுவர் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேருக்கு மாதாந்தம் ரூபா 6,500 படி வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், சீனத் தூதுவரின் யாழ்ப்பாண விஜயத்துக்கான நிகழ்ச்சி நிரலில் யாழ். பல்கலைக் கழக விஜயம் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/13568731 point
-
இது தேவையில்லாத எதிர்ப்பு. யாழ்பாண பல்கலைகழகத்தில் படிப்பவர்களும் எதிர்க்கின்றனராமே. இது பற்றி யாழ்களத்து Vasee சிறப்பாக முன்பு சொல்லியிருந்தார் - இலங்கை தமிழ் கல்விசார் சமூகம் நுண்அரசியல் செய்கிறது 🤣1 point
-
இரண்டு பிடிகளை விட்டதிற்கு, ஆப்கானுக்கு கிடைத்த பரிசு.1 point
-
அந்தாள் தலைப்புக்கு தலைப்பு என்னை தாளித்து வைச்சிருக்கு நான் எதோ எழுதினால் .... பதில் இப்படி எழுதுகிறாரே? யார் இவர் என்று நானே குழம்பி அவருக்கு பதில் எழுத நேரம் இல்லாமல் விட்டுவிட்டேன் என்னக்கு அவர் எழுதியதற்கு இன்னமும் சில இடத்தில நான் பதிலே இன்னும் எழுதவில்லை. முன்பு இப்படித்தான் இன்னும் ஒருவர் ஈசன் என்று இருந்தார் மிக நல்ல கருத்தாளர் ஆனால் இந்துமதம் மீது அதீத பற்றுக்கொண்டு ஒரு திரியில் என்னோடு சண்டை பிடித்து கோவித்துக்கொண்டு சென்றவர் இன்னறுவரை யாழிற்கு வரவில்லை இவருடைய மனதை புண்படுத்தி எனக்கு என்ன லாபம்? எதோ அது அவருடைய நம்பிக்கை குறைந்தபட்ஷம் கருத்துக்களை எழுதுகிறார் யாழில் தொடர்ந்து எழுதட்டும் என்றே கடந்து சென்றேன் ஆனாலும் வெருண்டவன் கண்ணுக்கு எல்லாமே பேயாகவே தெரியுது கோஸான் சொன்ன யானையையும் காணவில்லை கிறிஸதவமே வெறும் மூட நம்பிக்கையில் பிறந்தது அதில் எப்படி மூட நம்பிக்கை என்பது இல்லாமல் இருக்கும் ஆனாலும் மேரி இறுதிவரை அந்த இரவோ பகலோ நடந்தை யாருக்கும் சொல்லவில்லை who is that black sheep ? என்பது இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை1 point
-
பெரியார் திருமூலர் ---- சுப.சோமசுந்தரம் நண்பன் ஒருவன் புலனத்தில் (WhatsApp) செய்திருந்த பதிவில் உள்ள செய்தி பொதுவாக நமக்குத் தெரியாத ஒன்றில்லை. இருப்பினும் நமக்கு நல்லதாய்த் தோன்றுவதை வேறு ஒருவர் சொல்லிக் கேட்கையில் அகமகிழ்வது எல்லோருக்கும் நிகழ்வதே. அம்மகிழ்ச்சியில் அடியேனுக்குத் திருமூலரின் கூற்று நினைவில் வந்தது கூடுதல் சிறப்பு. இதோ அந்த நினைவு : "படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின் நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே". -------- திருமந்திரம், பாடல் 1857. முதற் குறிப்பு :- திருமூலர் காலத்தில் கோயிலில் சிற்பங்களுக்குப் பதில் சுவற்றில் வரைந்த இறைவனின் ஓவியங்கள் (படங்கள்) வழிபடப்பட்ட நிலையும் இருந்தது. பாடற் பொருள் :- படமாடுங் கோயிலில் உறையும் இறைவர்க்கு (பகவற்கு) ஒன்றை அளித்தால், அது நடமாடுங் கோயிலான மனிதர்க்கு (நம்பர்க்கு) - வறியவர்க்கு - சென்று சேராது. நடமாடுங் கோயிலான மனிதர்க்கு அளித்தால், அது படமாடுங் கோயில் இறைவனைச் சென்றடையும். பின் விளக்கம் :- இதன் மூலம் திருமூலர் இறை மறுப்பைப் போதிக்கவில்லை (அவர் சிவத்தில் உருகியவர்). புற வழிபாட்டை விட அக வழிபாடே இறைவனைச் சென்றடையும் என வலியுறுத்துகிறார். " நலிவுற்ற எம் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எமக்கே செய்தீர்கள்" - (மத்தேயு 25:40) எனக் கிறித்துவத்திலும், "தம் பொருளை இறைவன் மீதுள்ள நேசத்தின் காரணமாக பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும் செலவு செய்வோரே நன்னெறியாளர்கள், முத்தஹீன்கள் (இறை விசுவாசிகள்)" (திருக்குர் ஆன் 2:177) என்று இஸ்லாத்திலும் உள்ளவை இங்கு உணரத் தக்கவை. திருமூலர் மேலும் நினைவூட்டினார் : "தேனுக்குள் இன்பம் கறுப்போ சிவப்போ வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்! தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல் ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!" --------------திருமந்திரம், பாடல் 3065. பாடற் குறிப்பு : புற வழிபாட்டை விட அக வழிபாட்டுச் சிறப்பைக் கூறும் திருமூலரின் மற்றொரு பாடல். எளிமையான வரிகள். இப்பாடலுக்கான எந்த உரையும் பாடலை விட எளிமையாக அமைய முடியாது. இருப்பினும்.... பாடற் பொருள் : தேனின் சுவை கறுப்பா சிவப்பா ? வானுக்குள் ஈசனைத் தேடும் மதியற்றோரே ! (இங்கு வான் என்பது புறவுலகிற்கான குறியீடு). தேனுக்குள் அதன் சுவை காட்சிப்படுத்த முடியாமல் ஒன்றறக் (inherent) கலந்ததைப் போல், இந்த ஊனுடம்புக்குள்ளேயே ஈசன் ஒளிந்துள்ளான். அஃதாவது அழிந்து போகும் மனிதனுக்குள்தான் (அல்லது எந்த ஜீவனுக்குள்ளும்) அழியாப் பரம்பொருளான இறைவன் ஒன்றறக் கலந்துள்ளான்; எனவே அங்கே தேடு என்பதே பொருள். சீவனில் சிவத்தைத் தேடு, Love thy neighbour, அன்பே சிவம் என்று பலவாறு சொல்லிக் கொள்ளலாம். பின் குறிப்பு : மெய்யெண்கள் கணத்தை (set of real numbers), (0,1) என்ற இடைவெளியில் (interval) இருவழிக் கோப்பின் (bijective map) மூலமாகப் பொருத்திய பின், என் கணிதப் பேராசிரியர் இத்திருமந்திரப் பாடலைச் சுட்டியது நினைவில் நிழலாடுகிறது. எல்லையில்லாத இறைவன் எல்லையுள்ள மனிதனில் அடக்கம் - மெய்யெண் கணம் (0,1) என்ற இடைவெளியில் அடங்கியதைப் போல். எண் படித்தாலே எழுத்தும் வரும் போல. அத்தோடு விட்டாரா திருமூலர் ? ஊனுக்குள் ஒளிந்துள்ள ஈசனைக் காட்டாமல் எப்படி நம்மைக் கடந்து போவார் ? "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம் கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே" -----திருமந்திரம், பாடல் 1823. இத்தனை எழுதிய பிறகு மேற்குறிப்பிட்ட எளிமையான வரிகளையுடைய பாடலுக்காவது விளக்கத்தை வாசிப்போர்க்கு விட்டு விடுகிறேனே ! ஒரு கணித ஆசிரியனாக, இரண்டு கணக்குகள் போட்டுக் காட்டிவிட்டு மூன்றாவதை மாணாக்கர்க்குப் பயிற்சியாகக் கொடுத்துதானே பழக்கம் ! உண்மையில் "கடவுளை மற, மனிதனை நினை" என்ற தந்தை பெரியார்தான் முதலில் நினைவுக்கு வந்தார். அதை முதலில் சொன்னால், 'வாசிப்பவர்களில்' சிலர் அத்தோடு நம்மைக் கடந்து சென்று விடுவார்கள் என்று நினைத்தேன்; திருமூலரைக் கேடயமாய் முதலில் நிறுத்தினேன். செய்திதானே போய்ச் சேர வேண்டும் என்பதில் பெரியாருக்கும் உடன்பாடு உண்டு. நண்பன் வெகு சாதாரணமாக அனுப்பிய பதிவு எவ்விதக் கொந்தளிப்புமின்றி அமைதியான நினைவலைகளை ஏற்படுத்தியது. அந்த 'எளிய' பதிவு இதுதான் :- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid024iW5hQyh6xwJTZyaSW8rwZXFR1svSovMa33PgByVPdEkN1wuUHDG3Ccac1PLhYr4l&id=100083780391980&mibextid=Nif5oz1 point
-
பால் தினகரன் குறை தீர்க்கும்கூட்டத்துக்கு போயிட்டு வாணே…!!! எல்லாம் சரி ஆயிடும்..🤣1 point
-
ஓ அப்ப பின்னால் இருக்கிறவர்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கா?1 point
-
The world is turning against Israel’s war in Gaza – and many Israelis don’t understand why? Tel Aviv and JerusalemCNN — Yoav Peled says he has started wondering if the world has gone mad. Sitting outside the Kirya, Israel’s equivalent of the Pentagon in Tel Aviv, Peled was cutting pieces of yellow ribbon off a large wheel last Thursday, handing them out to strangers passing by. The bands symbolize solidarity with the roughly 240 hostages held by Hamas in Gaza. It is this solidarity – and specifically whether it still extends beyond Israel’s borders – that Peled was questioning. I used to consider myself part of the extreme liberals, whatever they call themselves. But when I see demonstrations with cries in support of Hamas and stuff like that, I doubt that the world understands complexity … and when they can’t understand complexity, they see this as a one-sided thing and their sense of justice is very simple. But it’s not simple,” he told CNN. “I think the governments understand this, but the people… I don’t know.” As global leaders continue to pile pressure on Israel over the mounting civilian death toll from its bombardment of Gaza and huge crowds gather for pro-Palestinian protests in cities like London, Washington DC, Berlin, Paris, Amman and Cairo – almost all in support of civilians in Gaza, rather than Hamas – many Israelis are getting frustrated with what they see as unequal treatment. It’s a feeling that cuts across the deep divisions within Israeli society: the world does not understand us. https://www.cnn.com/2023/11/07/middleeast/israel-mood-gaza-war-intl-cmd/index.html1 point
-
ஒருவர் "பரிசுத்த வேதாகமம் சொல்வதெல்லாம் உண்மை, அதன் படி கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொள்ளாதோர் எல்லோரும் அழிக்கப் படுவர்" என்கிறார். அந்த முட்டாள் தனத்தை எதிர்ப்பதா அல்லது "எனக்குப் பிடிக்காதவனைத் திட்டுகிறார்" என்று குழுவாதச் சகதியில் படுத்துக் கிடப்பதா என்ற தெரிவில் ஒரு நாலு பேர் இரண்டாவது தெரிவை எடுத்திருக்கின்றனர். என்ன ஒரு தூர நோக்கு, யோசிக்கும் திறன், கோசான் சொன்னது போல "கே.எf.சிக்கு கொடி பிடித்து வாக்குப் போடும் கோழிகள்😂" !1 point
-
06 NOV, 2023 | 08:18 PM சி.சி.என் 2023 உலகக்கிண்ணத் தொடர் பல சுவாரஸ்யங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கையணி வீரர் அஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழந்த முறை குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆடுகளத்தில் நுழைந்த அவர் தனது தலைக்கவசம் பிரச்சினை கொடுத்ததால் சுமார் மூன்று நிமிடங்கள் வரை துடுப்பெடுத்தாட தயாராகவில்லை. இதையடுத்து பங்களாதேஷ் அணித்தலைவர் சகீப் அல் ஹசன் நடுவரிடம் ஆட்டமிழப்பை கோர ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிகளின் படி TIME OUT முறையில் மெத்யூஸ் ஆட்டமிழந்தவராக கருதப்பட அவர் ஆட்டமிழப்பு தீர்ப்பை வழங்கினார். ஒரு நாள் சர்வதே கிரிக்கெட் போட்டிகளைப்பொறுத்தவரை இந்த முறையில் முதன் முதலாக ஆட்டமிழந்த வீரர் என்ற பெருமையையும் வேதனையையும் சுமந்து மீண்டும் ஆடை மாற்றும் அறைக்கு திரும்பினார் மெத்யூஸ். இந்த சம்பவத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் விமர்சித்துள்ளனர். வர்ணணையாளராக இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனுஸ் இது கிரிக்கெட்டுக்கு அழகல்ல எனத் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய வீரர் கவஜா இது எப்படி Time Out ஆட்டமிழப்பாகும் என தனது ட்வீற்றர் பக்கத்தில் கேள்வியெழுப்பியுள்ளார். சில கிரிக்கெட் வீரர்கள் பங்களாதேஷ் அணித் தலைவர் சகீப் அல் ஹசனின் செயற்பாட்டுக்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இவ்வாறு வழக்கத்துக்கு மாறான ஆட்டமிழப்புகள் (Unusual dismissals) பன்னிரண்டு தடவைகள் இடம்பெற்றுள்ளன. அவை எவை என இங்கு பார்ப்போம். இந்த வழக்கத்துக்கு மாறான ஆட்டமிழப்பில் முதலில் சிக்கிக்கொண்டவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் மொகிந்திர் அமர்நாத் ஆவார். 1986 ஆம் ஆண்டு மெல்பேர்ன் மைதானத்தில் இடம்பெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 15 ஓட்டங்களை பெற்றிருந்த போது பந்தை கையில் தடுத்ததால் ஆட்டமிழந்தவராக அறிவிக்கப்பட்டார். (Handled the Ball) 1987 ஆம் ஆண்டு கராச்சியில் இடம்பெற்ற இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர் ரமிஸ் ராஜா 99 ஓட்டங்களைப்பெற்றிருந்த போது களத்தடுப்பிற்கு இடையூறு விளைவித்த காரணத்தினால் ஆட்டமிழந்தவராக அறிவிக்கப்பட்டார். (Obstructing the field) 1989 ஆம் ஆண்டு அஹமாதபாத்தில் இடம்பெற்ற இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்திய வீரர் மொகிந்திர் அமர்நாத் 28 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது களத்தடுப்பிற்கு இடையூறு ஏற்படுத்தியதற்கு ஆட்டமிழந்தார். 1999 ஆம் ஆண்டு டேர்பனில் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டியில் தென்னாபிரிக்க வீரர் டிரயல் கலினன் 46 ஓட்டங்களைப்பெற்றிருந்த போது பந்தை கைகளால் தடுத்த காரணத்திற்காக ஆட்டமிழந்தார். 2006 ஆம் ஆண்டு பெஷாவரில் இடம்பெற்ற இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இன்சமாம் உல்– ஹக் 16 ஓட்டங்களைப்பெற்றிருந்த போது களத்தடுப்புக்கு இடையூறு விளைவித்த காரணத்தினால் ஆட்டமிழந்தார். 2013 ஆம் ஆண்டு டேர்பனில் இடம்பெற்ற தென்னாபிரிக்கா– பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் மொகமட் ஹாபிஸ் பந்தை கையில் தடுத்தமைக்கு ஓட்டமெதுவும் பெறாது ஆட்டமிழந்தார். 2013 ஆம் ஆண்டு க்கெர்போஹாவில் இடம்பெற்ற தென்னாபிரிக்கா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் அன்வர் அலி 7 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது களத்தடுப்புக்கு இடையூறு விளைவித்த காரணத்திற்காக ஆட்டமிழந்தார். 2015 இல் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 10 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது களத்தடுப்புக்கு இடையூறு விளைவித்த காரணத்திற்காக ஆட்டமிழந்தார் 2015 ஆம் ஆண்டு புலவாயோவில் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் – சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியில் சிம்பாப்வே அணியின் சிபாபா 18 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது பந்தை கைகளால் தடுத்தமைக்கு ஆட்டமிழந்தார். 2019 ஆம் ஆண்டு சார்ஜாவில் இடம்பெற்ற ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்க அணிகளுக்கிடையிலான போட்டியில் ஐக்கிய அமெரிக்க அணியின் மார்ஷல் 34 ஓட்டங்களைப்பெற்றிருந்த போது களத்தடுப்புக்கு இடையூறு விளைவித்த காரணத்திற்காக ஆட்டமிழந்தார். 2021 ஆம் ஆண்டு நோர்த் சவுண்ட் மைதானத்தில் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கையணி வீரர் தனுஷ்க குணதிலக்க 55 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது களத்தடுப்புக்கு இடையூறு விளைவித்த காரணத்திற்காக ஆட்டமிழந்தார். அதன் பிறகு தற்போது 2023 ஆம் ஆண்டில் அஞ்சலோ மெத்யூஸ் குறித்த நேரத்துக்கு துடுப்பெடுத்தாட காரணத்திற்காக ஆட்டமிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/1686901 point
-
தமிழர் பிரதேசங்களை சீனாவிடமிருந்து பாதுகாக்குமாறு கோரி போராட்டம்! வடகிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தலையிட்டு தமிழர் பிரதேசங்களை சீனாவின் அத்துமீறலில் இருந்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று வவுனியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கி சென் ஹொங் தலைமையிலான குழுவினர் இரண்டாம் நாளாக இன்று நயினாதீவுக்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது நயினாதீவு நாக விகாரையில் நடந்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 500 குடும்பங்களுக்கு உலர் உணவுபொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இலங்கை மற்றும் சீனா பௌத்த நட்புறவு சங்கமும், சீனாவின் புத்த சங்கம் இணைந்து சீனாவில் உள்ள பௌத்த மக்களால் இலங்கையிலுள்ள வறிய மக்களுக்காக உலர் உணவுப் பொதிகளை வழங்கியிருந்தனர். இதேவேளை வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கத்தினரால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் 2450வது நாளாக சுழற்சிமுறை போராட்டத்தினை முன்னெடுக்கப்படும் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் உள்ள கொட்டகைக்கு முன்னால் குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றிருந்தது. இலங்கையின் வடகிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தலையிட்டு தமிழர் பிரதேசங்களை சீனாவின் அத்துமீறலில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் தாய்மார்களாகிய நாம் எமது தமிழர் தாயகத்தில் உள்ள காணிகளிலும் மீன்பிடி நீரிடத்திலும் சீனாவின் அத்துமீறலை வன்மையாக எதிர்க்கிறோம் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர். https://athavannews.com/2023/13576861 point
-
வணக்கம் வாத்தியார்.........! பார்த்தால் பார்க்க தோன்றும் பேரை கேட்க தோன்றும் பூப்போல் சிரிக்கும்போது காற்றாய் பறந்திட தோன்றும் செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா அழகாய் மனதை பறித்துவிட்டாளே துளி துளி துளி மழையாய் வந்தாளே சுட சுட சுட மறைந்தே போனாளே தேவதை அவள் ஒரு தேவதை அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோ காற்றிலே அவளது வாசனை அவளிடம் யோசனை கேட்டு தான் பூக்களும் பூக்குமோ நெற்றி மேலே ஒற்றை முடி ஆடும்போது நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும் பார்வை ஆளை தூக்கும் கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும் பாதம் ரெண்டும் பார்க்கும் போது கொலுசாய் மாற தோன்றும் அழகாய் மனதை பறித்துவிட்டாளே செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா.......! --- துளி துளி துளி மழையாய் வந்தாளே ---1 point
-
அதுதானே.....நல்ல காலம் என்னைக் காப்பாற்றினீர்கள் .......தொல்காப்பியர் கூட எனக்கு இப்படி சொன்ன ஞாபகம் இல்லை........! 😂1 point
-
உண்மை, மதங்களைக் கடந்து மனிதத்தை நேசிக்காதவரை வாய்ப்பில்லை. அதற்கான எந்தவொரு முன்னெடுப்பும் அரசுகளிடமோ மதபீடங்களிடமோ இல்லை.1 point
-
இரண்டு பேரும் குரங்குடன் ஆளை ஆள் ஒப்பிடும் நிலை. 🤣 உலக அமைதியை இனி கொண்டு வரவே முடியாது. 😭1 point
-
1 point
-
பரிசுத்த வேதாகமத்தில் அப்படி சொல்லவில்லை. அதை நான் நம்புகிறேன். உங்கள் மூட நம்பிக்கைதான் அப்படி சொல்லுகிறது. எனவே யார் குரங்கன் என்று உங்களுக்கு இப்போது விளங்கி இருக்கும். நன்றி. 🤣😂😜1 point
-
இல்லை. உங்களைப் போன்ற சிலரை அப்படி சொல்லலாம் என்பது தான் நான் 🤐 மூலம் சொல்லாமல் சொன்னது!1 point
-
1 point
-
பொன்னம்பலன்களை பொறுத்த வரைக்கும் இன்றைக்கும் கஜகேந்திரகுமார் அதைத்தான் செய்கிறார். சிங்களவர்கள் 60 : 40 என்றபோது அதை கேட்காமல் 50 : 50 என்று அடம்பிடித்து அத்தைக்கெடுத்தார். இப்போது இவர் ஈழம்தான் தீர்வு என்று நிட்கிறார். அதட்கு சந்தர்ப்பம் இருந்தால் பதில் சொல்லுங்கள். @islandசொல்லி இருப்பது சரியென்றுதான் எனக்கு தெரிகின்றது. இந்த அடைக்கலம் போன்றோர் அந்த நாட்களில் சம்பந்தன் ஐயாவுக்கு பின்னால் கோப்புகளை தூக்கிக்கொண்டு திரிந்தார். இப்போது ஐயா நடக்க முடியாமல் கிடைப்பதால் இவருக்கு எதோ ஒன்று தேவைப்படுகின்றது. இப்போது எதோ ஒரு கட்சியை வைத்துக்கொண்டு தன்னை ஒரு தலைவராக காண்பிக்க முயட்சிக்கிறார். நீங்கள்சொன்ன மாதிரி கடிதத்தையாவது எழுதி காலத்தை போக்கினால் சரிதான். மோடி இறங்கி வ்ருவதட்கு சீன தூதுவரை வரவேற்று ஏதாவது செய்தால்தான் சரிவரும்.1 point
-
எதோ ஒரு மூடத்தனம் மாயைக்குள் நானும் அடங்குகிறேன் எல்லோரும் அடங்குகிறோம் இதில் ஒருவரை ஒருவர் சாட என்ன இருக்கு? என்றே எழுதினேன் அதுக்கும் பதில் இப்படி எழுதுகிறீர்கள் மற்றும்படி யாழ்களம் உலகின் மிக முக்கிய ஒரு தளம் இங்கு marketing territory ரொம்ப முக்கியம்...... எதிர்கால சேமிப்பே இங்குதானே? தீயாய் வேலை செய்யணும் குமாரு1 point
-
உண்மையில் நான் கருத்துக்களை இப்போ அதிகம் வாசிப்பதில்லை ஏதும் புது தகவல் செய்தி இருப்பின் வாசிப்பேன் அல்லது கடந்து போய்விடுவேன் "ஆதிக்கத்தனமான" கருத்துக்களை கருத்தாளர்களை பார்க்கும்போது மட்டும் அதற்கு ஏற்ற பதில் கொடுக்கவேண்டும் என்று எண்ணி அதற்கும் நேரம் இருந்தால் மட்டும் எழுதுவேன். மற்றும்படி இப்போ நல்ல நகைசுவை கருத்துக்களாகவே ஒரு இனஅழிப்பு திரியே போய்க்கொண்டு இருக்கிறது அதில் எழுத என்ன இருக்கிறது? யார் எழுதி ... யார் மாற போகிறார்கள்? எதோ ஒரு மாயையில் எல்லோரும் லயித்து இருக்கிறோம். விலைகொடுத்து வாங்கி மூளையை சிந்திக்கும் திறன் அற்ற நிலையில் வைத்திருக்க எல்லோரும் கொஞ்சமாவது குடிக்கிறோம் நான்கு நண்பர்களுடன் சேர்ந்து செய்யும்போது அது நன்றாகவும் இருக்கிறது. சிலர் இல்லாத கடவுளை முழுமையாக நம்பி அதில் லயித்து வாழ்கிறார்கள். மூடத்தனமாக வாழ்தல் என்பதில் ஒருவரை ஒருவர் சாட முடியாமலும் இருக்கிறது அளவுகள் விடயங்கள்தான் வேறு வேறாக இருக்கிறதே தவிர எல்லோரும் எதோ ஒன்றை செய்கிறோம்.1 point
-
பாட்டும் நானே பாவமும் நானே என்று நீங்கள் பார்த்த வீடியோவுக்கு நீங்களே பதில் எழுதுகிறீர்கள் ஆனாலும் மற்றவர்களை சாடுகிறீர்கள். நல்ல தெளிவாகவும் அறிவாகவும் எழுதுவீர்கள் பின்பு இப்படி எழுந்ததனமாக ஏதும் பிதற்றலாகவும் எழுதுகிறீர்கள். எல்லோருக்கும் பதில் எழுதவேண்டும் எல்லா திரியிலும் எழுதவேண்டும் எல்லா விடயமும் எல்லோரைவிட எனக்கு அதிகம் தெரியும் அப்படியான ஏதும் எண்ணம் நிலைப்பாடு இருப்பின் அதை தலைக்கணம் என்று தமிழில் சொல்லுவார்கள் அது கூடாதது என்பது உங்களுக்கும் நன்றாகவே தெரியும். எந்த உந்துதலில் இப்படி எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது புரிவதில்லை ......... கொஞ்சம் வேக கவனம் பலவிதத்தில் பாதுகாப்பு என்று முளுமையாக நம்புகிறேன். நீங்கள் தெளிவாக எழுதினாலும் ..... வாசிப்பவரிடம் தெளிவு இல்லை என்றால் அது ஒரு வீண் வேலை என்றே எண்ணுகிறேன். குறித்த தலைப்பு .......... குறித்த கருத்துக்கள் என்று மட்டும் எழுதினால் யாழ்களமும் சிறப்புறும் என்று எண்ணுகிறேன்.1 point
-
அந்த கருமத்தை பார்த்து என்ன செய்ய போறியள்🤣. இப்படியான சைக்கோ பேக்குஞ்சுகளுக்கு பார்க்கும் அளவுக்கு எதுவும் இருக்காது, அதானாலதான் காட்டும் ஆர்வம். கொழும்பில் ஒரு ஐந்து பேர் மட்டில் வெறும் காணிக்க, தாழம் பத்தைக்க நிண்டு இப்படி ஷோ காட்டிய ஆட்களுக்கு முன்னர் போட்டு அனுப்பியுள்ளோம் (கிரிகெட் குழு). ஒருவரை பிடித்து விசாரித்தால் களுத்துறையில் டாக்டர். காலில் விழுந்து கெஞ்சியதால் அண்ணாக்கள் அனுப்பி விட்டார்கள். இப்ப யோசிக்க எதிர்காலத்தில் பேசண்ட் டை பாதுகாக்க, பொலீஸ்சில் கொடுத்து, மருத்துவ கவுன்ன்சிலுக்கும் அறிவித்திருக்க வேண்டும் என தோன்றுகிறது. ஆதாரத்தோடு மாட்டி விட்ட மாணவிக்கு பாராட்டுக்கள். # சிங்கப்பெண்ணே🫡 #ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது1 point
-
முன்னர் இவ்வாறு பிரித்து கற்பிப்பதில்லை அண்ணை, இப்ப தான் இவ்வாறு பிரித்து மேய்கிறார்கள்!1 point
-
1 point
-
இது ஆபத்தான விசையம் காரணம் தமிழ் கட்சிகளுக்கிடையில் இதுவரையில் கொள்கை ரீதியில் எந்த ஒற்றுமையும் காணப்படவில்லை அதாவது அனைத்துத் தமிழ் கட்சிகளும் பிரிந்து நின்றாலும் இறுதி இலக்குபற்றிய ஒரு பொதுவான கருத்தோ அல்லது முடிவோ இல்லாமல் இந்தியாவினது ஏனைய பிற சக்திகளினதும் கைப்பாவையாகச் செயற்படுகிறார்கள் இவர்கள் பொது வேட்பாளரைக் களமிறக்கினால் நிச்சயம் எதிர்காலத்தில் சிங்களத்தரப்பு அதை உதாரணத்துக்கு இழுத்துவிடும் "பாருங்களேன் இவர்களது அரசியல் தீர்வுபற்றி உலக அரங்கில் முன்வைத்த கோரிக்கையைச் சொந்த மக்களே நிராகரித்துவிட்டார்கள் ரணில் தரப்புக்கும் மகிந்த தரப்புக்கும் போடப்பட்ட வாக்குகள் அனைத்தும் இவர்களது தீர்வு வேண்டிய கோரிக்கைகளை நிராகரித்தகாகவே கருதவேண்டும்" எனக்கூறி அனைத்தையும் நடுத்தெருவில விட்டுவிடுவார்கள் முள்ளிவாய்க்கால் முடிவுற்ற கையோடு நடந்த அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்குக்கூட கணிசமான வாக்குகள் வடக்கிலிருந்து பெறப்பட்டது. இப்போதைக்குப் போதாக்குறைக்கு அங்கயன் வடமாகணத்தில் அதிகூடிய வாக்குகளை அதுவும் தேசியத்தலைவர் பிறந்த ஊரை உள்ளடக்கிய உடுப்பிட்டியில் பெற்றுக்கொண்டதும் டக்ளஸ் தனக்கான வாக்கை தக்கவைத்திருப்பதும் விஜயகலா தனக்கு என வாக்கு வங்கி வைத்திருப்பதும் முதலில் கணக்கில் எடுக்கப்படல்வேண்டும் இந்தப் பொது வேட்பாளர் என்பது கிட்டத்தட்ட எண்பது விகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றால்தான் கரிசனைக்கு உட்படுத்தப்படும். அதாவது அவர்கள் இந்ததேர்தலின்மூல வைக்கப்படும் செய்தி அனைத்துத் தரப்புக்கும் கொண்டுபோய்ச்சேர்க்கப்படும். ஆனால் இந்த அரசியல் தற்குறிகளால் எதையும் சாதிக்க முடியாது முறவெளியில் மாட்டுவண்டிச் சவாரிக்குப் பூட்டிய மாடுகள் இடமாகவும் வலமாகவும் இழுத்துகோண்டு ஓடுவதுபோல் இவர்களது அரசியல் இருக்கின்றது.1 point
-
“வள்ளிப்பிள்ளையின்ரை கனவிலை வந்து வைரவர் உண்மையிலேயே சொன்னவராமடி” “வைரவர் இருந்தால் ஊரைக் காவல் செய்வார்தான். கனவிலை அவர் வந்து தனக்கொரு கோயிலைக் கட்டச் சொன்னதுக்குப் பிறகும் கட்டாமல் விட்டால் கோவத்திலை அவர் ஏதாவது செய்தும் போடுவார்” எங்கள் கிராமத்தில் வைரவர் கோவில் உருவாக வள்ளிப்பிள்ளை என்பவரின் கனவில் வைரவர் வந்து சொன்னதே காரணமாக இருந்தது. வெள்ளைக்காரனிடம் இருந்து இலங்கை சுதந்திரத்தை பெறுவதற்கு முன்னர் நடந்த சம்பவம் அது. ஊரில் பரவிய வள்ளிப்பிள்ளையின் கனவு, தனியாக வாழ்ந்து கொண்டிருந்த முதலியார் சுப்பிரமணியத்தார் காதுகளுக்கு போய்ச் சேர்ந்தது. தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் சுவாமி அறையில் ஒரு அலுமாரியில் வைத்துப் பூட்டி இருக்கும் முதலியாருக்கும் ஒரு காவல் தெய்வம் தேவைப்பட்டது. கறுத்த நாயுடன் அதுவும் அம்மணமாக வைரவர் ஊரில் வலம் வரும் போது ஒருத்தருக்கும் இரவில் நடமாடத் துணிவு இருக்காது என்று கணக்குப் போட்டு, தன் வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு சின்னத் துண்டு காணியை வைரவர் கோயிலுக்காக முதலியார் தானமாகத் தந்தார். சின்னதாகக் கட்டப்பட்ட கோயிலுக்கு, வைரவர் குடியிருந்த அறையின் வாசலில் ஒரு அலங்கார வளைவாக பித்தளையால் செய்த விளக்குகளையும் அமைத்துக் கொடுத்தார் முதலியார். ஒரு வாரம்தான் ஆகியிருக்கும். வைரவர் இருட்டில் இருந்தார். விளக்குகளைக் காணவில்லை. தன் விளக்குகளைக் காப்பாற்ற முடியாத வைரவரால் தனக்கு ஒரு பயனும் வரப் போவதில்லை என்று முதலியாருக்கு விளங்கி விட்டது. துன்னாலை என்ற இடத்தில் இருந்து ஒருவரை அழைத்து வந்து தன் வீட்டில் காவலுக்கும் எடுபிடி வேலைகளுக்கும் வைத்துக் கொண்டார். வைரவருக்கு நாள்தோறும் மாலையில் வடைமாலை போட்டு பூசை நடந்தது. வைரவர், கோயிலுக்குள்ளேயேதான் இருந்தார். போ.மு (போராட்டத்துக்கு முன்னர்), போ.பி இரண்டு காலத்திலும் வைரவர் எதற்காகவும் கவலைப்பட்டதே இல்லை. லண்டனில் இருந்து வந்த விஸ்ணு என்பவர் இப்பொழுது வைரவருக்கு மடம் கட்டித் தந்திருக்கிறார். எந்தக் காலத்திலும் நேரடியாக வந்து கடவுள் “பக்தா, எனக்கு ஒரு கோயில் கட்டித் தா” என்று மனிதனிடம் கேட்டதே இல்லை. எப்பொழுதும் கனவில்தான் வருவார். ஆனாலும் சமீப காலமாக “கடவுள் கனவில் வந்தார்” என்று சொல்பவர்கள் இல்லை என்ற நிலை வந்திருக்கிறது. கனவிலும் மனிதனிடம் வர கடவுள் பயப்படுகிறாரோ தெரியவில்லை. யேர்மனியில் நான் வசிக்கும் பாடன் வூர்ட்டம் பேர்க் (Baden Württemberg) மாநிலத்தில் அங்கொன்று இங்கொன்றாக பல கடவுள்கள் வாசம் செய்கிறார்கள். அதிலும் மாநிலத்தின் தலைநகரான ஸ்ருட்காட் (Stuttgart) நகரில் இரண்டு பிள்ளையார்கள் இருக்கிறார்கள். ஒருவர் ‘புலிப் பிள்ளையார்’ மற்றவர் ‘புளொட் பிள்ளையார்’. ஆக, பிள்ளையாளர்களின் உரிமையாளர்கள் யார் யார் என்று இப்பொழுது உங்களுக்கு விளங்கி இருக்கும். ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு க் கொண்டாட்டம்’ என்பார்கள். இங்கே கடவுள்களுக்குத்தான் கொண்டாட்டம். யேர்மனி வாழ் தமிழ் அமைப்பொன்றின் உள்வீட்டுக் கலவரத்தால் பிரிந்தவர்களால் இப்பொழுது பிள்ளையாரின் தம்பி ‘ சிறீ பாலமுருகன்’ 18.10.2023 அன்று 10:48 முதல் 12:00 மணிவரை உள்ள சுபமுகூர்த்த வேளையில் ஸ்ருட்காட் நகரில் குடியேற இருக்கிறார். இந்த விபரம் சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. அந்த விபரத்தில் தலைவர், செயலாளர் தொலைபேசி எண்களைக் குறிப்பிட்டது மட்டுமல்லாமல் மறக்காமல் கோயில் குருக்களின் தொலைபேசி எண்களையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். எழுபது வருடங்களுக்கு முன்னர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. “கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே கருத வேண்டியதை மறந்தாச்சு - பழங் கதைகளைப் பேசி காலம் வீணாச்சு” photo- P.S.பிரபா (யாழ் இனையம்) கவி அருணாசலம்1 point
-
நான் தமிழ் படித்தனான் ஆனால் இந்தச்சுழிகள் எல்லாம் தனியாகப் படிக்கவில்லை......நீங்கள் யாரெல்லாம் பாடசாலையில் இவற்றைப் படித்திருக்கிறீர்கள், சும்மா எல்லாம் கையைத் தூக்கக் கூடாது.......! 😁1 point
-
1 point
-
சந்திப்பதால் எது பிரயோசனம் உண்டோ? நேர விரயம்தான் மிச்சம். சீன தூது குழு யாழுக்கு விஜயம் செய்திருக்கிறார்கள். அவர்களிடம் பேசியதாவது ஏதும் செய்தால் நல்ல முடிவு வர சந்தர்ப்பமிருக்குது.1 point
-
இலங்கையில் எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் கருத்துச் சுதந்திரம் என்ன விலை தான்..?! களனி.. ஜெயவர்த்தன புரவில் நின்று கொண்டு.. தமிழர்களின் உரிமையை பற்றிக் கதைக்க முடியாது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நின்று கொண்டு.. இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தைப் பற்றிக் கதைக்க முடியாது. அதேபோல்.. பல சிங்களப் பல்கலைக்கழகங்களில்.. ஜே வி பி பயங்கரவாதம் பற்றிக் கதைக்க முடியாது. ஆனால்.. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மட்டும்.. விபச்சாரி போல்.. நடந்து கொள்ளனும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். விபச்சாரி.. விபச்சாரத்துக்கு மறுத்தால் பாசிசம்.. ஆமாம் என்றால்.. கருத்துச் சுதந்திரம். இதுதான் பாசிச கருத்துச் சுதந்திர விபச்சாரம்.1 point
-
இத எங்கையோ கேட்டிருக்கனே…. ஆ ஞாபகம் வந்திட்டு… இது சண்டை என்றால் ஜனங்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ஈழத்தமிழர்களின் அழிவை நியாயப்படுத்தி சட்டசபையில் முழங்கிய ஜெயலிதாவின் குரல்… 👍 👍1 point
-
உப்படித் தான் 2003களில் நான் பாடசாலையில் படித்த காலத்தில் சதாமுசேன் அனுகுண்டு வைத்து இருக்கிரார் அதுக்காக இராக் மீது போர் தொடுக்கப் போகிறோம் என்று கிலம்பினவை தான் அமெரிக்கன் சதாமை கைது செய்து தூக்கில் போட்டாச்சு அனு குண்டு எங்கை இதுவரை அதற்கான விளக்கம் இல்லை உலகை சுரன்டு கொழுத்த பூதமான அமெரிக்காவிடம் அதே போல் தான் அமெரிக்கன்ட கள்ள குழந்தை இஸ்ரேல் மருத்துவமனை மீது அம்பிலேஸ் மீது தாக்குல் செய்து விட்டு ஏதாவது பொய்யை அவுட்டு விடனும் தானே அந்த பொய்களுக்கு முட்டுக் கொடுக்க உங்களை போல ஒவ்வொரு இனத்தில் குறைந்தது 1000 பேர் இருந்தால் போதும் இஸ்ரேல் அமெரிக்கன் செய்யும் அநிதிகளை மறைத்து பொய் பரப்புரை செய்ய 👍1 point
-
தீபாவளிக்கு தீர்வு வரும் என்று... சம்பந்தன் சொன்னது எல்லாம், பொய்யா... கோபால். 😂1 point
-
ஆமா இந்தியா அமேரிக்கா ஏமாற்றியது ஐயா அப்ப என்ன வெள்ளியோ பார்த்து கொண்டிருந்தவர். ஒரு விடயத்தையும் ஒரு இராஜதந்திர அணுகுமுறையில் செய்யவில்லை. கூட்டி வந்த சும், விக்கி ஆளையாள் அடிபட்டு, இப்ப இவருக்கே ஆப்பு அடிக்கினம். சும், விக்கி. பியசேன, முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண விட்டு கொடுப்பு ரணில், மைத்திரி, சந்திரிகா, சரத், சம்பந்தன் ஐயாவை ஏமாற்றியோர் லிஸ்ட் மிக பெரியது. ஏமாறுவதையே தொழிலாக கொண்டு தானும் ஏமாந்து இனத்தையும் நடுதெருவில் விட்டு விட்டு, இப்போ அமரிக்கா, இந்தியா என சாட்டு சொல்கிறார். ஒரு வித தலைம பண்பும் இல்லாதவர் தான் என்பதை மிக தெளிவாக 15 வருடத்தில் நிறுவி உள்ளார். இதன் மிக பெரிய ஆதாரமே தனக்கு அடுத்து சும் அல்லது சிறீதரன் என்ற நிலையில் கட்சியை விட்டு செல்வதுதான். இப்போ நிக்சன் உட்பட எல்லாரும் சம் போக கூடாது என அந்த்ரப்படுவது, சும் அந்த இடத்துக்கு வருவதை தவிர்க்க (நியாயமான அந்தரிப்புத்தான்). இதுதான் எங்கள் பிரதிநிரிகளின் சீத்துவம்.1 point
-
அமெரிக்காவும் ஹிந்தியாவும் மட்டுமா இவரை ஏமாத்தினது.. கொழும்பில இருக்க வீட்டைக் கொடுத்து எதிர்கட்சி தலைவர் பதவி கொடுத்து... 13+ குப்பையில் போட்ட மகிந்த.. இந்தா நல்லாட்சி வருகுது.. தீர்வு வருகுது என்ற ரணில் - சந்திரிக்கா - மைத்திரி முக்கூட்டு கூட்டணி.. எல்லாம் தான் இவரை ஏமாத்தி இருக்குது. ஆனால்.. இவர்..சொந்த மக்களின் மண்ணின் பிள்ளைகளான புலிகளை... சொந்த மக்களை.. மண்ணை அழித்து.. ஆக்கிரமிப்புக்குள் வைத்து.. எதிரிகள் போடப் போகும் பிச்சைக்கு காத்திருந்து.. இப்ப அந்தப் பிச்சையும் கிடைக்கவில்லை.. என்று கொட்டாவி விடுவது போல் இனத்துரோகம் எதுவும் இருக்க முடியாது. சாகும் போதாவது அந்த வலியை உணர்ந்து கொண்டே சாகட்டும்.1 point
-
முஸ்லீம்களை தற்காலிகமாக் தாம் வெளியேற்றியது ஒரு தவறுதான், முஸ்லிம்கள் மீண்டும் யாழில் சென்று குடியமர்வதில் எந்த தடையும் இல்லையென்று புலிகள் அறிவித்திருந்தனர். இன்று புலிகளும் இல்லை ஆயுத போராட்ட சூழ்நிலையும் இல்லை, எவரும் இவர்களை தமது சொந்த இடத்துக்கு வரவேண்டாம் என்று தடுக்கவும் இல்லை. இருந்தும் மூன்று தசாப்தத்துக்கு முன்னர் நடந்து இன்று முற்றிலும் நிலமை மாறிவிட்ட சூழலில்கூட வேண்டுமென்றே அதனை அடிக்கடி பிரச்சாரப்படுத்துகிறார்கள் காவித்திரிகிறார்கள், என்றால் கண்டிப்பாக தமிழர்மேல் கொண்ட இன குரோதமேயன்றி வேறெதுவும் இல்லை. முஸ்லீம்களை படுகொலை செய்தார்கள் என்று எப்போதுபார் கூவி திரிகிறார்களே, ஒரு ஆயுதமோதல் இடம்பெற்ற காலத்தில் அனைத்து மக்கள் கூட்டத்தினரும் கொல்லப்பட்டனர், முஸ்லீம்கள் கொல்லப்பட்டதை பெரும் எடுப்பில் பிரச்சாரமாக செய்கிறார்களே... என் கேள்வி இந்த யுத்தத்தில் எந்தவித பக்க சார்புமின்றி, எந்தவிதமான ரானுவ பங்களிப்புமின்றி முஸ்லிம்கள் ஒதுங்கியிருந்தார்களா? எந்தவிதத்திலும் யுத்தத்தில் பங்கெடுக்காமல் தாமுண்டு தம் வேலையுண்டு என்றிருந்த முஸ்லீம்கள்மேல்தான் புலிகள் பாய்ந்தார்களா? இன்றுவரை முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதை வெளியில் சொல்லியிருக்கிறார்களா? சொல்லமாட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்கே தெரியும், பேரினவாதத்தால் தூக்கில் தொங்கவிடப்பட்டுக்கொண்டிருந்த தமிழர் கூட்டத்தை தாமும் சேர்ந்துதான் சிங்களவனுடன் கூட நின்று ஆளுக்கொரு பக்கமாக நின்று தூக்கி கயிற்றில் கொழுவினார்கள் என்பது. அளவுக்குமீறி பொறுமை கடந்த நிலையில்தான் புலிகள் இவர்கள்மேல் கை வைத்தார்கள் என்பது அவர்களுக்கும் தெரியும் எமக்கும் தெரியும். தமிழர்களுக்கே உள்ள பெரும்நோய் மறதி என்பது, இல்லையென்றால் வருடாவருடம் இவர்களைப்போல் நாமும் முஸ்லீம் கூட்டத்தினாலும் அவர்கள் ஊர்காவல் படையினாலும் கொல்லப்பட்ட தமிழர்களை வடக்குகிழக்கில் நினைவு கூர்ந்தால் இவர்களின் வாய் கொஞ்சமாவது எப்போதோ அடங்கியிருக்கும் ஆககுறைந்தது எந்தவிதமான போர் சூழலும் இல்லாத நிலையில் தேவாலயங்களில் .தற்கொலைகுண்டு தாக்குதலை நடத்தி இஸ்லாமிய பயங்கரவாதிகள் எம் மக்களை கொன்று குவித்ததை, சஹ்ரான் என்ற இஸ்லாமிய அடிப்படைவாதி தமிழர்மேல் மேற்கொண்ட படுகொலையை வருடா வருடம் பெரும் எடுப்பில் நினைவுகூரவேண்டும். இல்லையெனின் அவர்கள் அப்பாவிகள் நாம் மட்டுமே கொடூரர்கள் என்ற இவர்களின் விஷம பிரச்சாரம் காலம் காலமாக எம்மீது பழியாய் சுமத்தப்படும். எம் அரசியல்வாதிகளும், அரசியல் அமைப்புக்களும் கடந்த காலத்தில் நாங்கள் பிறரை அடித்தவர்கள் அல்ல அடித்தவர்களை திருப்பி அடித்தவர்கள் என்பதை எப்போதுமே இவர்களைபோல பிரச்சாரம் செய்ய தவறியதன் விளைவு இன்று தமிழர் என்ற இனத்தை கொடூரவாதிகளாக காண்பிக்க கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது இஸ்லாமிய சதி கூட்டம்.1 point
-
9 மாதத்தில்... 613 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப் பட்ட காணொளி. We were good, we were gold Kinda dream that can't be sold We were right 'til we weren't Built a home and watched it burn Mm, I didn't wanna leave you I didn't wanna lie Started to cry, but then remembered I I can buy myself flowers Write my name in the sand Talk to myself for hours Say things you don't understand I can take myself dancing And I can hold my own hand Yeah, I can love me better than you can Can love me better I can love me better, baby Can love me better I can love me better, baby Paint my nails cherry red Match the roses that you left No remorse, no regret I forgive every word you said Ooh, I didn't wanna leave you, baby I didn't wanna fight Started to cry, but then remembered I I can buy myself flowers Write my name in the sand Talk to myself for hours, yeah Say things you don't understand I can take myself dancing, yeah I can hold my own hand Yeah, I can love me better than you can Can love me better I can love me better, baby Can love me better I can love me better, baby Can love me better I can love me better, baby Can love me better Oh, I I didn't wanna leave you I didn't wanna fight Started to cry, but then remembered I I can buy myself flowers (oh) Write my name in the sand (mm) Talk to myself for hours (yeah) Say things you don't understand (you never will) I can take myself dancing, yeah I can hold my own hand Yeah, I can love me better than Yeah, I can love me better than you can Can love me better I can love me better, baby (oh) Can love me better I can love me better (than you can), baby Can love me better I can love me better, baby Can love me better I1 point