Leaderboard
-
கிருபன்
கருத்துக்கள உறவுகள்6Points38770Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்6Points87990Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்6Points31986Posts -
மெசொபொத்தேமியா சுமேரியர்
கருத்துக்கள உறவுகள்5Points8557Posts
Popular Content
Showing content with the highest reputation on 12/25/23 in Posts
-
மனதும் இடம்பெயரும்
4 pointsஎனது மூன்றாவது சிறுகதைத் தொகுதி தயாராகிறது. அட்டைப்படத்தை வடிவமைத்துத் தந்தவர் மூணா அண்ணா. அவருக்கு நன்றி. நிறம் தான் சிறிது மாறிவிட்டது. என்னுரை பத்து ஆண்டுகளின் முன்னர் என் முதலாவது சிறுகதைத்தொகுதியும் நான்கு ஆண்டுகளின் முன் என் இரண்டாவது சிறுகதைத்தொகுதியும் வெளிவந்தபின் ஐந்து ஆண்டு ஆண்டுகால இடைவெளியில் மூன்றாவது தொகுதி வெளிவருகிறது. பெண்களால் தொடர்ந்து எழுத முடியாதவாறு பல தடைகள் குடும்பச் சூழலில் இருந்தாலும் அதையும் தாண்டி நான் காண்பவற்றை, கேட்பவற்றை எழுதும் ஆற்றல் எனக்குள்ளும் இருக்கின்றது. யாரின் புகழ்தலுக்காகவும் காத்திருக்காது என்னால் முடிந்ததைத் துணிவுடன் எழுதுவதும் எனக்கு நிறைவைத் தருகிறது. முக்கியமாய் யாழ்களமே எனது எழுத்துக்களுக்கு ஊக்கியாய் இன்றுவரை இருக்கின்றது. அதுமட்டுமன்றி என் கதைகளை விமர்சிக்கும் அத்தனை யாழ்கள உறவுகளுக்கும் நன்றிகூற நான் என்றும் கடமைப்பட்டவள். சரியோ தவறோ எம் நன்மைக்காய் விடமின்றி விமர்சிப்பவர்களின் விமர்சனங்களே என் எழுத்துக்களை மெருக்கேற்றிக் கொண்டிருக்கும். நான் கேட்டவுடன் நூல் விமர்சனம் ஒன்றை எழுதித் தந்த காரைக்கவி கந்தையா பத்தமநாதன் அவர்களுக்கும், அணிந்துரையை மிகக் குறுகிய காலத்தில் எழுதித் தந்த பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்களுக்கும், அட்டைப்படத்தை வடிவமைத்துத் தந்த யாழ்கள உறவான மூணா எனப்படும் ஆள்வாப்பிள்ளை செல்வகுமாரன் அண்ணாவுக்கும் நான் என்றும் கடமைப்பட்டவள். என்னை எழுதுவதர்க்குத் தூண்டியதே சுமேரிய வரலாறு பற்றிய தூண்டாலே. அதுபற்றிய அடிப்படை அறிவை என்னுள் தூவிய மறைந்த நாதன் சிவகணேசன் அண்ணா அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம். அணிந்துரை தமிழ் பெண் எழுத்தாளர்களுள் புலம்பெயர்ந்து வாழுகின்ற நிவேதா உதயன் கணிப்புக்குள்ளான எழுத்தாளராகஅறியப்படுபவர்.| அவருடைய தொடர் எழுத்துக்களின் அறுவடையாக“மனதும் இடம்பெயரும்” என்ற மகுடத்துடன் பத்து சிறுகதைகள் அடங்கிய தொகுதி வெளிவருகின்றது.ஈழத்துத் தமிழ் புனைவு வெளி புலம் பெயர்ந்த எழுத்தாளர்களினது பங்களிப்பால் சற்று அகலக்கால் வைத்தது என்பதை எவரும் மறுபதற்கில்லை. ஈழத்துக் குடாநாடு, இலங்கைத் தீவு என்ற நிலவியல் எல்லைகளுக்குள் நீண்ட காலம் பயணம் செய்த புனைவு வெளி, ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு என்ற செயற்பாட்டாலும் அதன் வழி உருவான கருத்துருவாக்கங்களாலும் 'புலம்பெயர் தமிழ் இலக்கியம்" என்ற அந்தஸ்த்தைப் பெற்றது. அதன் பேறாக, நாடுகளும், இயற்கையும் தட்ப வெப்பநிலைகளும், வாழ்வியலும் நேர் மறையாகவும் எதிர்மறையாகவும் நமது மனக்கண்முன் விரிந்தன. 'உலகமயமாதல்" என்ற கருத்தியல் அல்லது 'சுருங்கிய உலகு" என்ற கருத்தியலுக்கு அமைவாக எல்லாம் தான் எமது காலடியில் வந்து குவிந்தன. இதனால் புளகாங்கிதங்களும் கூடவே துயரங்களும் நம்மிடையே நிரம்பி வழிந்தன. மேற்குறித்த கருத்து நிலைகள் ஓரளவிற்குத் தேய்மானங்கண்டுள்ள நிலையில் தற்போது புலம்பெயர் தமிழ் மக்களின் தனியாள் அனுபவங்களும் கலாசாரச் சிதைவுகளும் வாழ்வியற் கோலங்களும் அரசல் புரசலாக புனைவுகளில் வெளிவரத் தொடங்கியமையின் வெளிப்பாடாகவே நிவேதாவின் இந்தத் தொகுதியில் அடங்கிய கதைகளிலும் பெரும்பாலும் முகங் காட்டுவதை இனங்காண முடிகின்றது. நமது பாரம்பரியமான பண்பாட்டில் நம் மூத்தோர் கடவுட்குச் சமமாக வைத்தென்னைப் படுபவர்கள், தாய், தந்தை, பேரன், பெயர்த்தி என அந்தத் தொகுதி நீளும் அந்தப் பெரியோரும் நம்மையும் நம் வாரிசுகளையும் “எம்மில் தம்மைக் கண்டு” மகிழ்வு கொள்பவர்கள்| நம் குடும்ப உறவுகளின் 'எல்லைக்கால்"களா நிற்பவர்கள்| அவர்களே அந்த எல்லைகளை மீறினால்… என்ற கருவை அடியாகக் கொண்ட 'தண்டனை" என்ற கதை வாசகரைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கக் கூடியது. நமது கலாசார விழுமியங்களைக் கேள்விக் குள்ளாக்கக் கூடியது. எனினும் தன் மனைவியை மத்திய கிழக்கிற்கு அனுப்பி விட்டு தன் சொந்தமகளையே வன்புணர்வு செய்யும் தந்தைகள் நிறைந்த உலகிற்தானே நாமும் வாழுகிறோம் என்று இதனால் சமாதானங் கொள்வதா அல்லது சிக்மன்ட் பிறைட்டின் உளவியற் கோட்பாட்டை முன்நிறுத்திக் சமாதானங்கொள்வதா அல்லது ஏங்கல்ஸ் குறிப்பிடும் 'புனசவா" குடும்பம் என்ற கருத்தியலில் வரலாற்றைப் பின்நோக்கிப் பார்ப்பதா என்ற வினாக்கள் இதனூடாக மேற்கிளம்புகின்றன. இவ்வாறான கருவை வெளிப்படுத்துவதற்கு 'அயல் நோக்காத்துணிவு" வேண்டும். நிவேதாவிடம் அது நிறையவே உண்டு. அவர் பாரம்பரியத்தைத் தாங்கிப்பிடிக்கும் தூணாக நிற்க விரும்பவில்லை. 'தானம் நீ", 'மன வாழ்வு", 'மனக்குரங்கு" ஆகிய மூன்று கதைகளின் கருவை ஒரே நேர்கோட்டில் வைத்துப் பார்க்க முடிகிறது. பெண்களை ஆண்களே பெரும்பாலும் ஏமாற்றுபவர்கள் என்ற பெரும்பான்மையான மதிப்பீடுகளை மறுதலித்து பெண்களும் வாய்ப்புக்கிடைத்தால் ஏமாற்றத் தயங்கார் என்ற கருத்தினை இக் கதைகளூடாக முன்வைக்கிறார் நிவேதா. தன் கல்லூரிக் காலத்தில் காதல் செய்த செந்தூரனுடன் சேர்ந்து வாழ்வதற்காக, தன்னைக் கட்டியவனுடன் போலிவாழ்வு வாழ்ந்து காதலனைக் கரம்பிடிக்கத் துடித்த நயனி, தன்னிலும் வயது கூடிய வெளிநாட்டு மணமகனைக் கரம்பிடித்து விட்டு வங்கியில் தன்னுடன் பணியாற்றும் வாகீசனுடன் வாழத்துடிக்கும் ஜீவா,கரம்பிடித்த காதலனும் கணவனுமான ரவியிடமிருந்து விவாகரத்துப் பெற்று மூன்று பிள்ளைகளுடன் கஷ்டஜீவனம் செய்தவருக்கு ஆபத்பாந்தவனாக வந்து கை கொடுத்து மறுவாழ்வு தந்து கடனாவுக்கு கூட்டி வந்து வாழவு தந்தவனை ஏமாற்றிய 'மனக்குரங்கு" கதையின் நாயகி" என இவர்கள் எல்லாம் ஏமாற்றுக்காரிகளாக நம்பிக்கைத் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை தான் நினைத்தவனை அடைதல் பெண் களுக்கான சுதந்திரம் என்ற கருத்தியலை இவ்விடத்தில் நிலைநாட்ட நிவேதா முனைகிறாரோ என்று எண்ணத்தோன்றினும் (ஏனெனில் அவரது முந்தைய கதைகள் அவ்வாறானவை) கதைகளின் முடிவுகளின் படி, நம்பி நடந்த ஆண் மக்களை ஏமாற்றிய பெண்களின் கதைகளாகவே அவற்றைக் கருத முடிகிறது. இதில் சித்திரிக்கப்பட்டுள்ள ஆண்கள் மிகவும் கண்ணியமானவர்களாகவே உள்ளனர். நிவேதாவின் இந்த மனமாற்றம் அல்லது கருத்தியல் புலம்பெயர் வாழ்வில் பெண்களின் நத்தைக்கோலங்களின் அபத்தங்களால் ஏற்பட்ட மன உளைச்சல்தான் காரணமாக அல்லது பிழைவிடுபவர் எல்லாத் தரப்பிலுமஉளர் என்ற சமாதானமா? எதுவெனப் புரியவில்லை. 'மருந்தே இல்லா நோய்" என்ற கதை இன்னோர் வகைமையான பெண்ணைக் கண்முன் நிறுத்துகிறது. பிரான்ஸில் பிறந்த மது என்ற பெண், புலம் பெயர் நாடுகளில் இன்னமும் வலுப்பெற்றுக் கொண்டிருக்கின்ற சாதீயத் தடைகளைத் தாண்டி, பெற்றோர் திர்ப்பையும் மீறிக் காதலித்த நவீன் என்பவனைக் கரம்பிடித்து இரு குழந்தைகள் பெற்ற பின்பும் தன்கணவன் வேறோர் பெண்ணுடன் காதலுறவு கொண்டுள்ளான் என்பதை அறிந்த மது அவனைத் தீவிரமாகக் கண்காணித்து கையும் மெய்யுமாக பிடித்து அவனிடமிருந்து பிரிந்து விடுவதாக இக்கதை அமைந்துள்ளது. தன் கணவன் எல்லை மீறுகிறான் என்பதை நிதானத்துடன் செல்லிடப்பேசியின்தொழில் நுட்பத்துடன் கண்காணித்து உண்மையை வெளிக்கொணரும் திறன் வாய்ந்த வளாக அவள் உருவாக்கப்பட்டுள்ளாள். ஒரு வகையில் இரு ஒரு புலனாய்வு சார்ந்த தன்மையுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனை வேறோர் வகையில் 'உளவியல் நாடகம்" என்றும் கட்டமைக்கலாம். குற்றமிழைத்த ஒருவரை அவர் சந்தேகப்படும்படியாக நடக்காமல் அவருடன் இயல்பாகப் பழகி, அதனூடாகக் கண்காணிப்பு அல்லது புலனாய்வை நிகழ்த்தி இறுதியில் இக்கட்டான ஒரு சூழலில் சிக்க வைத்து குற்றவாளியின் வாயிலாகவே குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வதை உளவியல் நாடகம் (Phலஉhழ னுசயஅய) என்பர். உளவியலாளர் அந்த முறைமைதான் இக்கதையிலும் நடந்தேறியுள்ளது. இன்னோர் வகையில் அந்தப் பெண்ணின் ஆளுமையும் தெரிய வருகிறது. தன் கணவன் தனக்குத் துரோகம் செய்வதை எந்தப் பெண்ணால் தான் பொறுத்துக்கொள்ளமுடியும் என்ற பொதுவிதியைத் தாண்டி, கல்லானாலும் கணவன் என்ற கீழைத்தேய நியமங்களைக் கடந்து, மூக்குச் சிந்தி அழுது ஆர்ப்பரிக்காது அப்பெண் நடந்து கொண்டவிதம் அவளுக்கு மேலைத்தேய வாழ்க்கை முறை தந்த துணிவும், தன்னம்பிக்கையம் தான் என எண்ணத் தோன்றியது. ஓரினச் சேர்க்கையாளர்கள் தாம் விரும்பியவாறு சேர்ந்து வாழமுடியும் என்ற மேலைத்தேய அனுமதியை அனுசரித்துச் செல்கிறது. 'நான் வசந்தன்' என்ற கதை. கதையின் ஓட்டம் சராசரியாக இருந்தாலும் கதையின் முடிவில் நிவேதா எழுதிய உரையாடல் அந்த உறவின் நன்மையை அல்லது உணர்ச்சியை புரிந்துகொள் வைக்கிறது. அழைப்பு மணி அடிக்க அகிலுக்கு இதே வேலையாய்ப் போச்சு என்று மனதுக்குள் திட்டியபடி கதவைத் திறக்கிறேன். “நான் எங்காவது போயிருந்தால் என்ன செய்வாய்? திறப்பை மறக்காமல் எடுத்துக் கொண்டு போ என்று எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டியா?” “நான் எப்ப வருவேன் என்று நீ எனக்காகக் காத்திருப்பாய் என்று எனக்குத் தெரியுமே” என்றபடி வசந்தனை ஆசை தீர இறுக அணைக்கிறான் அகில். இதில் தெரியவருவது இரண்டு ஆத்மாக்களின் ஆழமான அன்பு தான். அது அபத்தமல்ல என்பதை நிவேதா நிறுவ முனைகிறார். இந்தத் தொகுதியில் உள்ள ஏனைய கதைகள் நிவேதாவின் அனுபவம் சார்ந்தவை. ஆயின் “அவனும் அவர்களும்” என்ற கதை நிவேதாவிற்கு உருவச் செழுமையுடனும் கதை சொல்ல முடியும் என்பதற்குப் பதந் சோறாக அமைகிறது. மரணமடைந்தவரே கதை சொல்லியாக மாறி, நனவோடை உத்தியில் கதையை நகர்த்திச் செல்லும் விதத்தால் அக்கதையை இத் தொகுதியின் கணிப்புக்குள்ளாகும் கதையாக மாறியுள்ளது. தவிர நிவேதாவின்கதை சொல்லும் முறை இன்னமும் நேர்கோட்டு முறையியலைத் தாண்டிச் செல்லவில்லை. ஆயின் கதைகளின் முடிவில் அதிர்ச்சி தருவதும் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்துவதும் சில விடயங்களை வாசகரிடமே யுகத்துக்கு விட்டு விடுவதும் நல்ல சிறுகதைகளுக்கான குணாம்சங்கள். அவை நிவேதாவின் எழுத்துக்களில் துலங்கத் தொடங்கியுள்ளன. உரை நடையில் செம்மை சேர்வதும் அல்லது பேச்சோசை மிகுவதும் கதைகளின் களத்தைப் பொறுத்ததேயன்றி கதைசொல்லியின் மனவோட்டத்தை பொறுத்ததல்ல என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். மற்றும் சுய விருப்பும் வெறுப்புகளுடனான தீர்வுகள் அல்லது அபிப்பிராயங்கள் கதை சொல்லியின் நேர்மையைச் சோதிப்பனவாய் அமைந்தால் அது வெறும் வக்கிரங்களின் வெளிப்பாடாய் அமைந்துவிடும் அபாயங்களும் உண்டு. எனவே முன்வைக்கும் கருத்தைத் தர்க்கத்துடனும் ஆதாரத்துடனும் சமூகவியல் கண்ணோட்டத்துடனும் அழகியலுடனும் படைக்கும் போது கதை சொல்லி நின்று நிலைப்பார்| கதைகள் சாகாவரம் பெறும். நிறைவாக நிவேதா எனும் கதைசொல்லி இன்றும் கடந்து செல்ல வேண்டிய களமும் காலமும் அவர் முன் விரிந்து கிடக்கின்றன. அவற்றை ஒருமுகப்படுத்தும் திறன் நிவேதாவிடம் நிறையவே உண்டு. அவற்றைக் கலா பூர்வமாகக் கட்டமைத்து நமது புனைவு வெளியில் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய எழுத்தாளராக நிவேதா நிலைக்க வேண்டும் என்பது என் அவா. அது ஈடேனும் என்பதில் அசைக்க முடியா நம்பிக்கையும் எனக்குண்டு. வாழ்த்துக்களுடன் பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் தகைசால் வாழ்நாட்பேராசிரியர் பேராதனைப் பல்கலைக்கழகம்4 points
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
3 points
-
பக்கத்து வீடு
2 pointsஓ டியர். இப்போ தான் உங்களின் பக்கத்து வீடு வாசிக்க முடிந்தது. நல்ல அயலவர்கள் கிடைப்பதற்கும் கொடுத்து வைக்க வேண்டும். கொசுறு தகவல்: நண்பர் ஒருவர் உறவினர் ஒருவரின் செத்த வீட்டுக்கு சென்றார். வாசலில் பாதுகாப்பு காவலர்(security guard) நின்றார். அவரும் ஆச்சரியப்பட்டு ஏன் செத்த வீட்டில் பாதுகாப்பு காவலர் நிற்கிறார் என கேட்க, ஒருவர் இறந்தவரின் கடைசி ஆசை தனது 4 மருமகள்கள் தனது செத்த வீட்டுக்கு வரக்கூடாது என இறக்க முன் சொல்லி இருந்தாராம்.😄 அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஒழுங்கு செய்யப்பட்டதாம்.😁 அதற்கு பிறகு அந்த மருமகள்களின் ஆட்கள் செத்தவீட்டுக்கு வந்து செத்த வீடு அடிபிடியில் முடிந்து பொலிசும் வந்ததாக கேள்வி. (இடம் : கனடா)2 points
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
உங்கள் கேள்வி நியாயமானது ஆனால் அவர்கள் மேற்கு நாடுகளின் கொடிகளை பிடித்து இருப்பதற்கான குறிக்கோளை இவர்களது முன்னெடுப்பு பாதிப்பதாக அவர்கள் உணர்ந்ததன் வெளிப்பாடாக இந்த முட்டை அவர்களால் பாவிக்கப்படுகிறது போலவே தோன்றுகிறது. என்னை பொறுத்தவரை இது பொன் முட்டையே. சில தவறுகளுக்கு வருந்துவதாக அவர்களும் அறிக்கை விட்டிருப்பது முட்டையின் பெறுபெறே. நன்றி2 points
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
காணாமல் ஆக்கப்பட்டோரின் உணர்வுகளை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது, கூடாது. அதில் எவருக்கும் மாற்றுக் கருத்திருக்கும் என நான் நம்பவில்லை. ஆனால் தான்தோன்றித்தனமாக எதிரியுடன் சல்லாபிப்பவர்கள் என தாங்கள் கூறுவது அண்மையில் இலங்கை அரசைச் சந்தித்த இமயமலைக் குழுவினரை என்பது புரிகிறது. அவர்கள் அரசிடம் பேசிய விடயங்களில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றால், தாங்கள் முன்வைக்கும் ஆகக் குறைந்தபட்ச முன்மொழிவு என்ன? அல்லது தாங்கள் இமயமலைக் குழுவினர் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் ?2 points
-
கருத்து படங்கள்
2 points2 points
- இந்த ஆண்டு வீதி விபத்துகளில் இதுவரை 2163 உயிர்ப் பலிகள்!
இல்லை Seat belt . அங்கு சில வாகனங்களுக்கு Seat belt ஏ கிடையாது. 5 பேர் பயணிக்கும் வாகனத்தில் 15 பேர் பயணம் செய்தால் எப்படி ஐயா பாதுகாப்பு பட்டியை பங்கிடுவது?2 points- பக்கத்து வீடு
2 pointsநன்றி பகிர்விற்கு…. அக்கோய் தமிழ் ஆட்கள் அவசரத்திற்கு வந்து வேலை செய்வார்கள் ஆனால் உயரத்தால அகலத்தால கூட்டி குறைத்து சிக்கலில மாட்டி விடுவினம் அதோட bill உம் தர மாட்டினம். நீங்கள் பரவாயில்லை எமது வீட்டிற்கு பின் வீட்டுக்காரர் இறந்தது 4 வருடங்களிற்கு பின்னரே எமக்கு தெரிந்தது.2 points- பக்கத்து வீடு
1 pointநாங்கள் இந்த வீட்டுக்கு வந்து இருபது ஆண்டுகள் முடியப்போகிறன. காலம் தான் எத்தனை வேகமாக எல்லாவற்றையும் கடந்துபோக வைக்கிறது. ஆசைகள் தான் மனிதனை ஆட்டிப் படைக்கின்றது. எனினும் பல ஆசைகள் நிராசையாகியும் போயிருக்கின்றனதான். நல்ல ஆசைகள் முயற்சியின் காரணமாக நிறைவேறி மனதுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுப்பதோடு மட்டுமல்லாது திருப்தியுடன் வாழ்வை நகர்த்திச் செல்கின்றன. திருப்தி எப்போது இல்லாது பேராசை மேலோங்குகிறதோ அதன்பின் மனிதன் வாழ்வின் இன்பமான நாட்களைத் தொலைத்து இன்னும் இன்னும் என்று வசந்தங்களை எல்லாம் தொலைத்து ஒன்றுமில்லாதவனாகி விடுகிறான். நான் மகிழ்வாகவும் நிம்மதியாகவும் தானே இப்பொழுது இருக்கிறேன் என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். சுற்றிவர கண்ணாடி அறையினுள் தொங்கும் பூங்கன்றுகளை ஆசைதீரப் பார்க்கிறேன். எத்தனை தடவைகள் பார்த்தாலும் அலுக்காத பச்சைப் பசேல் எனவும் வண்ணவண்ண நிறங்களுடனும் பூத்துக் குலுங்கும் இந்தச் செடிக்கொடிகளை நாள் முழுதும் பார்த்துக்கொண்டே இருந்தாலும் எனக்குச் சலிப்பதில்லை. எட்டு ஆண்டுகளுக்கு முன் இதைக் கட்டியபோதும் சரி அதன்பின் சில மாதங்களாக நான் பட்ட மன வேதனையையும் எண்ண இப்போ சிரிப்புத்தான் வருகிறது. என் நீண்ட நாள் ஆசையான குளிர் காலத்திலும் பூங்கன்றுகள் வளர்ப்பதற்கான கண்ணாடி அறை ஒன்றை அமைப்பது குறித்து கணவருடன் பலநாட்கள் தர்க்கம் செய்தாகிவிட்டது. அந்தாளும் அசையிற மாதிரி இல்லை. நானும் விடுவதாய் இல்லை. “உதெல்லாம் வீண் செலவு. கொஞ்ச நாள் சும்மா இருக்க உன்னால முடியாது. காசை கரியாக்கிறதெண்டால் முன்னுக்கு நிப்பாய்” “இருந்தாப்போல செத்திட்டால் என்ர ஆசை நிறைவேறாமல் போயிடுமப்பா” “நீ ஒண்டைச் செய்ய நினைச்சால் செய்து முடிக்குமட்டும் விடவே மாட்டாய். உப்பிடிச் சொல்லிச் சொல்லியே எல்லாத்தையும் நிறைவேற்றிக் கொள்” “நான் என்ன நகை நட்டு வாங்கித் தாங்கோ என்றா கேட்கிறன்” “என்னவோ செய்து முடி” அடுத்த நாளே நான் வேலையைத் தொடங்கியாச்சு. சாதாரணமாக எந்தச் சிறிய கட்டட வேலை செய்வதாயினும் கவுன்சிலில் அதற்கான வரைபைக் கொடுத்து சிறிது பணமும் செலுத்தி அதற்கான அனுமதியைப் பெறவேண்டும். சாதாரணமாக மூன்று அடி உயரமும் மூன்று அடி நீளமும் இருந்தால் சரி. சரிவான கூரைக்கு அனுமதி தந்திருக்க, வேலை ஆரம்பிக்க வேலைகளைச் செய்வதற்கு ஒரு தமிழர் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டி ருந்தார். சமரில் முழுவதும் திறப்பதுபோல் மடியும் கதவுகள்வரை போட்டாச்சு. கூரை வேலை மட்டுமே மிகுதியாக இருக்க விக்டோரியன் ஸ்டைல் கூரை இன்னும் நன்றாக இருக்கும் அக்கா என்கிறார் அந்தத் தமிழர். எனக்கும் ஆசை எட்டிப்பார்க்க கவுன்சிலில் சாய்வான கூரை என்றுதானே கொடுத்துள்ளோம் என்கிறேன். பக்கத்து வீட்டுக்காரர் பிரச்சனை இல்லையோ என்கிறார். அந்தக் கிழவன் கொஞ்சம் துவேஷம் தான். ஆனால் கிழவி நல்லது என்கிறேன். அப்ப நான் விக்டோரியன் கூரையே போட்டு விடுறன். ஒரு ஆயிரம் பவுண்டஸ் தான் அதிகம் என்கிறார். அப்ப கவுன்சிலுக்கு அறிவிக்கத் தேவை இல்லையோ என்கிறேன். அவங்களுக்கு அறிவிச்சு திருப்ப பிளான் கீறி காசும் நாளும் விரயம் அக்கா என்கிறார். அந்தக் கூரையை எத்தனை பதிவாகப் போட முடியுமோ போடுங்கோ என்கிறேன். அவர்களும் எவ்வளவு பதிவாக்கமுடியுமோ அவ்வளவு பதித்தேதான் போட்டுவிட்டுப் பார்த்தால் மிக அழகாக இருக்க என் கண்ணே பட்டுவிடும்போல் கண்ணாடி அறை ஒளிர்கிறது. எதற்கும் ஒருக்கா அளந்து பார்ப்போம் என்று அலுமினிய அளவுநாடாவை எடுத்து அளந்து பார்க்க மூன்று மீற்றர் இருக்கவேண்டிய உயரம் முப்பது சென்ரிமீற்றர் அதிகமாக இருக்கிறது. என் மகிழ்ச்சி எல்லாம் ஒரு நொடியில் வடிந்துபோக ஒப்பந்தக்காரருக்கு போன் செய்கிறேன். அது பெரிய பிரச்சனை இல்லை அக்கா. நீங்கள் வீணாப் பயப்படாதைங்கோ என்கிறார். இதுக்கு மிஞ்சி என்ன செய்ய வருவது வரட்டும் என்று நான்கு மாதங்கள் பயத்துடனேயே கழிய குளிரும் குறைந்துகொண்டு வர சிறிது சிறிதாகப் பூங்கன்றுகள் எல்லாம் வைத்து கண்ணாடி அறை மிக அழகாகக் காட்சிதருகிறது. இலைதுளிர் காலமும் வந்துவிட எனக்கு அந்த அறையுள் நிற்பதும் இரசிப்பதுமாக காலம் நகர வெயிலும் எறிக்க ஆரம்பிக்கிறது. கணவர் கண்ணாடி அறையின் கதவுகளை முழுவதுமாகத் திறந்துவிடுகிறார். அந்தக் கண்ணாடி அறையின் அழகு தோட்டம் முழுதுமே பிரதிபலிக்கிறது. சமையல் செய்தபடியே நான் அவற்றை இரசித்தபடி இருக்க, அங்கு ஒரு சிறிய வட்ட மேசையும் கதிரைகளுமாய் நாம் உணவை அங்கு இருந்து இயற்கையை இரசித்தபடி உண்பதும் மனதுக்கு மகிழ்வாய் இருக்கிறது. வீண் காசு என்ற கணவரே உன்ர ஐடியா நல்லாத்தான் இருக்கு என்று கூற என் மனம் நிறைந்துபோகிறது. பிள்ளைகளும் படங்கள் எடுத்து அம்மாவின் பூங்கன்றுகள் என்று இன்ஸ்ரகிறாமில் படங்கள் போட எனக்குப் பெருமிதமாயும் இருக்கு. பறவைகளும் அணில்களும் போடும் உணவுகளைக் கொத்தி உண்பதும் ஒலி எழுப்புவதுமாக இருக்க அவற்றை இரசித்தபடி பார்த்துக்கொண்டிருக்கவே பொழுது போய்விட ஆறு மாதங்கள் முடிந்து போயிருந்தது. ஒருநாள் நானும் கணவரும் மட்டும் மதிய உணவை இரசித்துச் சுவைத்து உண்டு கொண்டு இருக்கிறோம். பக்கத்து வீட்டுக்கு அவர்களின் நண்பர்கள் யாரோ இருவர்கள் வந்திருக்கிறார்கள் போல. பெரிதாக சிரித்துக் கதைப்பது கேட்கிறது. சாதாரணமாக யாருமே வந்து நான் பார்ப்பதில்லை. யாராய் இருக்கும் என்கிறேன் கணவரைப் பார்த்து. நான் என்ன சாத்திரம் தெரிஞ்ச ஆளே. உன்னை மாதிரித்தான் நானும் என்று கணவர் சிரிக்க, அவர்கள் பக்கமிருந்து எமது கண்ணாடி அறையின் பக்கம் ஒரு தடி நீள்கிறது. நான் தான் அதை முதலில் பார்க்கிறேன். அங்க பாருங்கோப்பா. எங்கட சுவரை அளக்கினமோ என்கிறேன். அதுகள் என்ன செய்யுதோ. உனக்கு எப்பவும் வீண் பயம் என்றபடி அவர் திரும்பிப் பார்க்க மறுபடி மறுபடி கண்ணாடிச் சுவரில் ஒரு தடியை வைத்துப் பார்ப்பதைக் கணவரும் கண்டுவிடுகிறார். நீ சொன்னது சரிதான். உதுகள் எங்கடை சுவரை அளந்துதான் பார்க்குதுகள். பொறு பார்ப்போம் என்றுவிட ஏன் அளக்கிறீர்கள் என்று அஞ்சலாவிடம் கேட்கட்டா என்கிறேன். பேசாமல் இரு, சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி எண்டதுபோல நீ கேட்கப்போய் பெரிசுபடுத்தாதை என்றுவிட்டு எழுந்துவிட நானும் யோசனையோடு எழுகிறேன். அடுத்துவந்த ஒவ்வொருநாளும் எனக்கு நிம்மதி இன்றிக் கழிய சரியாக ஒரு மாதத்தின் பின் ஒருநாள் கவுன்சிலில் இருந்து நான் எதிர்பார்த்த கடிதம் வந்திருக்க படபடப்புடன் கடிதத்தை உடைக்கிறேன். நீங்கள் கவுன்சிலில் தந்த பிளானில் இல்லாத விக்டோரியன் ஸ்ரையில் கண்ணாடி அறையைக் கட்டியுள்ளதாக எமக்கு முறைப்பாடு வந்துள்ளது. வருகிற வெள்ளி கவுன்சிலில் இருந்து ஒருவர் அதைப் பார்க்க வருவார் என்று போட்டிருக்க, எனக்குக் கோபம், அவமானம், ஏமாற்றம் எல்லாம் ஒன்றாக எழுகின்றன. மனிசனுக்கு போன் செய்கிறேன். “அண்டைக்கே சொன்னனான். உதுகளின்ர குணத்துக்கு வளவுக்குள்ள வந்த ஆமையை அடிச்சுச் சாப்பிடாட்டிலும் எங்கேயாவது கொண்டுபோய் விட்டிருக்கவேணும். நீயும் மேளும் தடுத்திட்டியள்” “ஆமையின்ர பாவம் எங்களுக்கு எதுக்கப்பா? எப்பிடி உதுகளுக்கு நாங்கள் சாய்வான கூரைக்குத்தான் குடுத்தனாங்கள் எண்டு தெரிஞ்சது?” “நாங்கள் கட்ட முதலே கவுன்சில் அவர்களுக்கும் கடிதம் போடும்” “அப்ப முதலே உவை எங்களுக்குச் சொல்லி இருக்கலாம் தானே” “அவை உன்ர சொந்தக்காரரே. சரி வீட்டை வந்து கதைக்கிறன்” என்றபடி கணவரின் போன் நிறுத்தப்பட யோசனையோடு நானும் போனை வைக்கிறேன். . இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது நினைவில் வருகிறது. பக்கத்து வீட்டார் ஒரு ஆமையை வளர்க்கின்றனர். நாம் வந்தநாள் முதல் சமரில் பகலில் அவர்கள் பின் வீட்டுத் தோட்டத்தில் அங்கும் இங்குமாய் திரியும் இரவில் அதைப் பின் வளவில் உள்ள கட்டடத்தின் உள்ளே விட்டு அடைத்துவிடுவார்கள். ஆனால் அந்த கட்டட அமைப்பு எப்படி இருக்கு என்று பார்க்கவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தாலும் இதுவரை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததே இல்லை. ஒருநாள் பக்கத்து வீட்டு ஆமை எங்கள் வளவுக்குள் வந்துவிட்டது. இந்தப் பத்து ஆண்டுகளில் இதுதான் முதல் தடவை. மகள் கண்டுவிட்டு கணவரைக் கூப்பிட்டுக் காட்ட கணவர் அதைக் கையில் எடுத்து இரண்டு கிலோ இருக்கும் போல. கறி வைத்தால் எப்பிடி இருக்கும் என்கிறார் கணவர். நானும் மகளும் ஒரே நேரத்தில் உங்களுக்கு விசரா என்கிறோம். கிழவன்ர கொழுப்புக்கு உதுதான் செய்யவேணும் என்கிறார் மீண்டும். கடைசிவரை உதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்று நான் கூற லபக் என்று மகள் ஆமையைக் கணவரின் கைகளிலிருந்து வாங்கி விடுவவிடுவென்று கொண்டுசென்று அவர்களிடம் கொடுத்துவிட்டு வருகிறாள். அடுத்தநாள் என்னைக் காணும்போது இரண்டு மூன்று தடவை ஆமையைக் கொடுத்ததற்கு அஞ்சலா என்னிடம் நன்றி கூற எனக்கே ஒருமாதிரியாகிப்போகிறது. ************ கவுன்சில்க் கடிதம் வந்த அடுத்தடுத்த நாட்கள் வெளியே செல்லும்போது அஞ்சலாவையோ கணவனையோ கண்டும் காணாமல் செல்லவாரம்பிக்கிறேன். கணவனும் யாருக்கும் எதுவுமே சொல்வதில்லை என்று கூற நான் வணக்கம் சொல்கிறனான் என்கிறாள் மகள். அதற்கு நான் எதுவும் கூறாது அமைதி காக்கிறேன். நீங்கள் அவர்களைக் கோபித்து என்ன பயன். முதலே சரியாகச் செய்திருக்க வேண்டும். அவர்கள் இந்த நாட்டவர். நாம் வெளிநாட்டவர். சட்டதிட்டத்துக்கு அமையச் சரியாக நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன குற்றம் அம்மா என்கிறாள். என்னிடம் அதற்குப் பதில் இல்லைத்தான். எம் வீட்டுக்கு பின்னால் உள்ள எத்தனையோ வீடுகளுக்கு நாம் கட்டியதிலும் உயர்வான நான்கு மீற்றர் உயரக் கண்ணாடி அறைகள் கூடக் கட்டப்பட்டிருக்க இந்தக் கேவலம் கெட்டதுகள் எரிச்சலில் கவுன்சிலுக்குச் சொல்லியிருக்குதுகள் என்று மனதுள் பொருமியபடி அடுத்த வாரத்துக்காகக் காத்திருக்கிறேன். ஒரு வாரத்தின் பின் வந்த கவுன்சில் பொறியியலாளர் நீங்கள் கூரையை மாற்றவே வேண்டும். உயரத்தைக் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறேன். ஆனால் எல்லாம் சரி என்ற பத்திரத்தை என்னால் வழங்க முடியாது என்கிறார். இந்தளவோடு விட்டாரே என மனதில் நிம்மதி ஏற்பட வேறுவழியின்றிக் கூரை மாற்றிய செலவு 1500 பவுண்டஸ் நட்டமாகியதுதான் மிச்சம் என்று கணவர் புறுபுறுத்ததை கேட்டும் கேளாதாவளாய் இருக்க மட்டுமே முடிந்தது. மாற்றிய கூரையைப் பார்க்கும் நேரம் எல்லாம் பக்கத்து வீட்டின் மேல் வரும் கோபம் மாறாமலே ஒரு ஆண்டு ஓடிப்போக வேலை முடிந்து ஒருநாள் வந்து இறங்கும்போது பக்கத்து வீட்டின் முன் ஆம்புலன்ஸ் நிற்க என்னவாக இருக்கும்என்று யோசித்தபடி உள்ளே செல்கிறேன். அடுத்தநாள் மாலை கடைக்குச் செல்வதற்காக வெளியே சென்றபோது வழியில் அஞ்சலா வந்துகொண்டிருப்பது தெரிய நானாகவே வணக்கம் என்றுவிட்டு யாருக்கு என்ன பிரச்சனை? நீ ஓகே தானே என்கிறேன். அஞ்சலாவின் முகம் சோர்ந்து போய் இருக்கிறது. மார்க்குக்கு நேற்று காட் அற்றாக் வந்து வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவர்கள். இன்று கண் திறந்துவிட்டார். ஆனால் ஒரு காலும் கையும் இயல்பாக இல்லை என்கிறார். அவருடன் ஆறுதலாகக் கதைத்துவிட்டு வந்தாலும் நீ எனக்குச் செய்ததுக்கு வேணும் என்று என் மனம் எண்ண, அற்ப மகிழ்ச்சிகூட எட்டிப்பார்க்கிறது. அதன்பின் எப்போதாவது மார்க்கை பிரத்தியேக வாகனம் வந்து அழைத்துப்போகும். அதுதவிர வெளியே அவரைக் காணவே இல்லை. ஆனாலும் அஞ்சலாவை சுகம் கேட்பதை நான் நிறுத்தவில்லை. நாம் முதல் முதல் அந்த வீட்டுக்கு வரும்போதே வீட்டின் வாசலுக்கு அண்மையில் மிகப் பெரிய ஊசி இலை இன மரம் ஒன்று நீண்டு நெடிதாய் வளர்ந்திருந்தது. பார்ப்பதற்கு அழகாய் இருந்ததுதான். ஆனாலும் வீட்டுக்கு அண்மையில் இதை ஏன் வைத்தார்கள் என்னும் அளவு அதன் கிளைகள் வாசல் கதவைத் திறக்க முடியாதபடி பெரிதாகிக் கொண்டிருந்தன. நாம் கதவைத் திறந்து உள்ளே செல்லாது அந்த மரத்தை வெட்டுவோமா என்று கதைத்துக்கொண்டு நிற்க, பக்கத்து வீட்டு வெள்ளைக்காரர் ஒரு அறுபது வயதாவது இருக்கும் வணக்கம் என்கிறார். நாமும் வணக்கம் சொல்லி முடிய நீங்கள் தான் இங்கு குடிவருக்கிறீர்களா என்கிறார். ஓம் என்று என் கணவர் தலையாட்ட வாடகைக்கு இருக்கப்போகிறீர்களா என்கிறார் மீண்டும். இல்லை இதை நாம் வாங்கிவிட்டோம். எமது சொந்த வீடு என்று கூறி முடிய முதலே இந்தமரத்தை வெட்டிவிடுங்கள். இதன் வேர் என் வீட்டு அத்திவாரத்தையும் வெடிக்கச் செய்துவிடும் என்கிறார். என்னடா இது வந்து வீட்டுக்குள் செல்லவே இல்லை. இந்த மனிதன் மரத்தை வெட்டச் சொல்கிறதே என்கிறேன். நீயும் வெட்டுவது பற்றிக் கதைத்தாய் தானே. பிறகெதற்கு கிழவனைக் குறை சொல்கிறாய் என்று கணவர் என்னை கடிந்துவிட்டு வெட்டத்தான் வேண்டும். நாம் இன்றுதான் வந்திருக்கிறோம். நிறைய வேலைகளிருக்கு. முடிந்தபிறகு பார்ப்போம் என்று கூறி உள்ளே செல்கிறோம். ஒரு ஐந்து நிமிடங்கள் ஆகவில்லை. கதவின் அழைப்பு மணி அடிக்க யார் என்று பார்த்தால் பக்கத்துவீடுக்காரர் மரம் அரியும் வாள் ஒன்றுடன் நிற்கிறார். நான் கீழே உள்ள கிளைகளை வெட்டிவிடுகிறேன் மிகுதியை நீங்கள் வெட்டுங்கள் என்று சிரித்தபடி கூற, சரி வெட்டுங்கள் என்கிறார் கணவர். நாம் உள்ளே சென்று வேறு விடயங்களைக் கதைத்துவிட்டு வந்து பார்த்தால் மரத்தின் அரைவாசிக் கிளைகள் வெட்டப்பட்டு எம் வீட்டின் முற்றத்தில் குவிக்கப்பட்டிருக்க இனி நீங்கள் வெட்டுங்கள் என்று கூறி வாளையும் எம்மிடம் தந்துவிட்டு அவர் உள்ளே போக, நானும் கணவரும் சேர்ந்து மிகுதியை வெட்டிக் குவித்துவிட்டோம். பக்கத்து வீட்டுக் கணவன் மனைவி இருவரும் வெளியே வந்து இப்போதுதான் வீட்டைப் பார்க்க நன்றாக இருக்கு என்று முகமெல்லாம் பல்லாய் கூறிவிட்டுச் செல்ல நாமும் நல்லதொரு சனம் பக்கத்தில என்று மகிழ்ந்துதான் போனோம். அந்தமரத்தின் கிளைகளை அகற்ற நான்கு தடவை காரில் கொண்டுசெல்லவேண்டி இருந்தது வேறு கதை. அதன் பின் எம்மைக் கண்டால் ஒரு வணக்கம் சொல்வதோடு சரி. அவர்களுக்கு ஏதும் எம் உணவு செய்துகொண்டுபோய் கொடுப்போமா என்கிறேன் கணவரிடம். நாங்கள் குடுக்க, அவை தர எதுக்கு உதெல்லாம் பேசாமல் இரு என்று கணவர் சொன்னது எனக்கும் சரியாகவே படுகிறது. அதன்பின் ஐந்து ஆண்டுகள் வணக்கம் சொல்வதுடனேயே கழிகிறது. நத்தார் தினத்துக்கு இரு வாரத்துக்கு முன்னர் வாழ்த்து மடல் போட, நாமும் திருப்ப அவர்களுக்குப் போடுவதுடன் எங்கள் உறவு நிறைவடைந்துவிடும். மூன்று பிள்ளைகளுடன் இருந்த எமக்கு சமையலறை மிகச் சிறிதாக இருக்க வீட்டைப் பின்புறமாக நீட்டுவதற்கு ஆலோசித்து அந்த வேலைகளில் இறங்க, சைனீஸ் வேலையாட்கள் கூறிய பொருட்களை கடைகளில் ஓடர் செய்ய, அவர்கள் வாகனங்களில் கொண்டுவந்து இறக்குகின்றனர். மரக் குற்றிகள், நீளமான பலகைகள் என்பன வந்து இறங்குகின்றன. அவர்கள் நடைபாதையில் அவற்றை இறக்கி வைக்கின்றனர். சில பலகைகள் ஆறு மீற்றர் நீளம் கொண்டவை, அவை பக்கத்து வீட்டு வாசலைக் கடந்து நிற்கின்றன. இன்னும் சிறிது நேரத்தில் வேலையாட்கள் வந்துவிடுவார்கள். அதன்பின் அவர்கள் இறக்கியவற்றை உள்ளே கொண்டு செல்வார்கள். “நாங்கள் அதை எடுத்துக்கொண்டு போய் உள்ளே வைப்போமா” என்று கணவரைக் கேட்கிறேன். “நீ உன்ர அலுவலைப் பார். அவங்கள் தூக்கி வைப்பாங்கள்” என்று கணவர் சொல்லி முடிக்குமுன்னரே எங்கள் அழைப்புமணி கோபத்துடன் அழுத்துப்பட கணவர் சென்று கதவைத் திறக்க, பக்கத்து வீட்டு மனிதர் தன் வளவில் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நிற்கிறார். “நீயா மணியை அழுத்தினாய்” “ஓம் நான் தான். நீ உடனடியாக உந்தப் பலகைகளை எடு. எனக்கு இடைஞ்சலாக இருக்கு” “உனக்கென்ன இடைஞ்சல்? உன் வீட்டுக்குள்ளா வைத்திருக்கிறோம்” “என் வாசல் வரை வந்திருக்கு. நான் வெளியே செல்லவேண்டும்” “உனக்கு அவசரம் என்றால் கடந்து செல். இன்னும் 10 நிமிடங்களில் வேலையாட்கள் வந்து தூக்குவார்கள்” “நான் போலீசுக்கு போன் செய்யப் போகிறேன்” “தாராளமாகச் செய்” கணவர் கதவை அடித்துச் சாத்திவிட்டு வருகிறார். “என்னப்பா பிரச்சனை” “பக்கத்து வீட்டுக் கிழடு சரியான துவேஷம். மரங்கள் தனக்கு இடைஞ்சலாம். உடனே தூக்கு என்கிறது” “அதுக்குத்தான் நான் முதலே நாங்கள் தூக்குவம் என்றனான்” “நீ உன்ர அலுவலைப் பார். அவர் போலீசுக்கு அடிக்கமாட்டார். எங்களை வெருட்டுறார்” “இத்தனை ஆண்டுகளாய் இருக்கிறம். ஒரு சத்தம் கூடப் போட்டதில்லை. அடிமனதில் நாங்கள் கறுப்பர் எண்டது உதுகளுக்கு இருக்கு. அதின்ர வெளிப்பாடுதான் இது” “சரியப்பா டென்ஷன் ஆகாமல் பெல் அடிக்குது. திரும்பக் கிழவன்தானோ தெரியேல்லை. போய் கதவைத் திறவுங்கோ” அடுத்தநாள் காலை நான் வேலைக்குச் செல்ல வெளியே வர, நான் எப்ப வருவேன் என்று பார்த்துக்கொண்டு இருந்ததுபோல் பக்கத்துவீட்டுப் பெண் கதவைத் திறந்து வணக்கம் என்கிறார். அவருக்கும் வயது ஒரு ஐம்பத்தைந்து அறுபது இருக்கலாம். குறை நினைக்காதை டியர். என் கணவர் கொஞ்சம் முசுடு. நேற்று அப்படிக் கதைத்துவிட்டார். மன்னித்துக்கொள் என்கிறார். எனக்கு உடனே மனது இளகிப்போக அதனால் என்ன. நாம் எதுவும் நினைக்கவில்லை என்று கூற அஞ்சலாவின் முகம் மலர்ந்துபோக நான் பாய் என்றுவிட்டுக் காரில் ஏறுகிறேன். அதன்பின் என் கணவர் பக்கத்து வீட்டுக்காரருக்கு வணக்கம் எதுவும் சொல்வதில்லை. ஆனால் என்னை கண்டால் அவர் வணக்கம் சொல்ல நானும் சொல்வேன். அஞ்சலாவைக் கண்டால் மட்டும் நின்று கதைபேன். அவவும் நானும் பிள்ளைகளின் படிப்பு என் வேலை இப்படி இரண்டு மூன்று விடயங்களைக் கதைத்துவிட்டு போய்விடுவோம். நாம் மூன்று பிள்ளைகள் என்பதால் வாரத்தில் இரு நாட்கள் உடைகளைத் துவைத்துக் காயவிடுவோம். கோடை காலங்களில் வெளியே போட்டால் அன்றே காய்ந்துவிடும். குளிர் காலத்தில் வீட்டின் உள்ளே இரண்டு நாட்கள் எடுக்கும். கொடி முழுவதும் எம் ஆடைக்களால் நிரம்பி வழியும். ஆனால் அவர்கள் வீட்டில் இரண்டு மூன்று ஆடைகளே காயப்போட்டிருக்கும். பணத்தை ஏன் இப்படிமிச்சம் பிடிக்கின்றனர். வெள்ளைகள் வாழ்வை நன்றாகத்தானே அனுபவிக்கின்றனர். இவர்கள் மட்டும் ஏன் இப்படி என்று எண்ணிக்கொள்வதோடு சரி. கேட்பதற்கு முடியவில்லை. நாம் ஒருதடவை நானும் கணவரும் கிரேக்கத்துக்குச் சென்று வந்தபோது எம்மைக் கண்ட அஞ்சலா “ஓ விடுமுறைக்குச் சென்று வருகிறீர்களா” என்றுமட்டும் கேட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அடுத்த நாள் என்னைக் கண்டபோது எங்கே சென்றீர்கள்? என்றார். நான் கிரேக்கம் என்றதும் வாயைப் பிளந்தபடி பயமின்றிப் போய் வந்தீர்களா என்றார். நீங்கள் அங்கு சென்றிருக்கிறீர்களா? மிக அழகிய இடம். எந்தப் பயமும் இல்லை என்கிறேன். நான் லண்டன் நகருக்கே இதுவரை சென்றதில்லை. என் கணவருக்கு எங்கு செல்வதும் பிடிக்காது என்றுகூற எனக்கு நம்பமுடியாததாக இருக்கிறது. கோடை மாரி குளிர் வெயில் என்று காலங்கள் எத்தனை விரைவாகச் சென்றுவிட்டன. *********************************** நாம் லண்டன் வந்து பதினெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதை நம்பத்தான் முடியாமல் இருக்கு. பதினெட்டு ஆண்டுகளா என்னும் மலைப்போடு பல யுகங்கள் ஆகிவிட்டதான ஆயாசமும் சேர்ந்துகொள்கிறது. இத்தனை ஆண்டுகளில் பக்கத்து வீட்டுக்கு ஒருநாள் கூட நாங்கள் போக முடியவில்லையே என்னும் ஆதங்கம் மனதில் ஏற்படுகிறது. சில நண்பர்கள் அயல் நாட்டுப் பக்கத்து வீட்டாரைப் பற்றிச் சொல்லும்போது எமக்கும் ஒரு நல்ல நட்பான பக்கத்து வீடு அமைந்திருக்கலாமோ என்னும் எண்ணம் எழும். நாம் மட்டும் எல்லோரோடும் நட்போடுதான் பழகினோமா என்னும் கேள்வியும் கூடவே எழும். பிடித்தவர்களுடன் மட்டும்தானே நெருக்கமாகினோம். எமது பக்கத்து வீட்டாருக்கும் எமக்கும் நல்ல பொருத்தங்கள் இல்லைபோல என நானே என்னை ஆற்றிகொள்கிறேன். ஒருநாள் அவர்கள் வீட்டுக்கு இரண்டு மூன்று வெள்ளை இனத்தவர் வந்துபோக ஏதும் விசேடமாக இருக்குமோ என்று எண்ணியபடி செல்கிறேன். மூன்றாவது வீட்டில் வசிக்கும் ஆபிரிக்கப் பெண்மணி எப்பவாவது கண்டால் நின்று கதைப்பார். அன்று கண்டவுடன் மார்க் எப்படி இறந்தார் என்று கேட்கிறார். இறந்துவிட்டாரா? எனக்கு இதுவரை தெரியாதே என்கிறேன். நேற்று இரவு நான் வேலை முடிந்து வந்தபோது அம்புலன்சில் ஏற்றினார்கள். முகத்தை மூடியிருந்தது. அதனால்தான் கேட்டேன் என்கிறார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஊரில் என்றால் ஒருவர் இறந்தால் அடுத்தமணியே அனைவருக்கும் தெரிந்துவிடும். பக்கத்து வீட்டில் இருந்தும் எனக்குத் தெரியவில்லை என்பது வெட்கமாகவும் குற்றஉணர்வாகவும் இருக்க கணவருக்குப்போன் செய்கிறேன். கணவர் போனை எடுக்கவில்லை. அஞ்சலாவின் வீட்டுக் கதவைத் தட்ட அவரே வந்து திறக்கிறார். “நான் மார்க் பற்றிக் கேள்விப்பட்டேன்” “ஓ நேற்று மாலை இறந்துவிட்டார். இரவு ஏழு மணிவரை வீட்டில் வைத்திருந்தோம். அதன்பின் கொண்டுசென்றுவிட்டார்கள்” “ஏலாமல் இருந்தாரா” “ஆறு மாதங்கள் படுத்த படுக்கைதான். ஒரு நர்ஸ் வந்து பார்த்துவவிட்டுச் செல்வார். எனக்கு அவரை கோமில் கொண்டுபோய் விட விருப்பம் இல்லை. என் பிள்ளைகள் பலதடவை சொன்னார்கள்” “உனக்குப் பிள்ளைகள் இருக்கின்றார்களா??” “ஓம் இரண்டு ஆண் பிள்ளைகள். ஒருவன் திருமணமாகி மான்சஸ்ரரில் இரண்டு குழந்தைகளுடன் இருக்கிறான். மற்றவன் திருமணம் செய்யவில்லை. அவனும் தூரத்தில்த்தான்.” “நான் அவர்களை ஒருநாளும் கண்டதில்லையே” “அவர்களுக்கு எங்கே நேரம். கடைசி மகன் அப்பப்ப வந்துவிட்டுப் போவான். அவனுக்கும் தகப்பனுக்கும் சரிவாராது” “அவர்கள் வந்திருக்கிறார்களா?” “இல்லை நாளைதான் வருவார்கள்” “தனியாகத்தான் வீட்டில் இருக்கிறாயா? யாரும் துணைக்கு இல்லையா?” “இல்லை எனக்குப் பழகிவிட்டது” “உனக்கு உணவு ஏதும் கொண்டுவந்து தரட்டுமா??” “வேண்டாம், வேண்டாம். என்னிடம் உணவு இருக்கிறது” “ஏதும் தேவை என்றால் என்னைக் கூப்பிடு” “நன்றி தேவை என்றால் அழைக்கிறேன்” வீட்டுக்கு வந்தபின் மனதில் எதுவோ அடைத்ததுபோல் இருக்க அஞ்சலா என்னை வீட்டுக்குள் வா என்று அழைக்காததும் மனதை எதுவோ செய்ய மனிசிக்கும் என்ன பிரச்சனையோ என்று மனதைத் தேற்றிக் கொள்கிறேன். ஒரு வாரத்தின் பின் மார்க்கின் மரண வீடுக்கு நானும் கணவரும் சென்றிருந்தோம். எல்லோருடனும் கை குலுக்கிய பிள்ளைகள் எம்முடனும் அடுத்த வீட்டு ஆபிரிக்கப் பெண்ணிடமும் கை குலுக்காததை கவனித்தபின் மனதில் சிறிது ஆசுவாசம் ஏற்பட்டதுதான். ஒரு மாதம் செல்ல மீண்டும் இலைதளிர் காலத்தில் கடைசி மகன் தாயுடன் வசிக்க வந்துவிட பக்கத்து வீட்டில் பேச்சும் சிரிப்புமாக அஞ்சலாவின் வாழ்கை மாறியிருந்தது. கொடிகளில் விதவிதமாக அழகிய ஆடைகள் காய்ந்தன. எழுபத்தைந்து வயதான முகத்தில் ஒரு பளபளப்பும் மலர்ச்சியும் தெரிந்தன. கிழவியைப் பாத்தியே. விதவிதமாய் உடுப்புப் போடுது என்று கணவர் நக்கலாகக் கூற எனக்குக் கோபம் வருக்கிறது. அந்தக் கிழவன் சரியான அடக்குமுறையாளனாகத்தான் இருந்திருக்க வேண்டும். இப்பவாவது அந்த மனிசி தன் ஆசைப்படி வாழட்டுமன். உங்களுக்கு அதில் என்ன நட்டம் என்கிறேன். கடந்தவருடம் இலங்கை சென்று ஆறு மாதங்களின் பின் தான் நான் திரும்பி வந்தேன். அடுத்தநாள் நான் வெளியே செல்ல என்னைக் கண்ட அஞ்சலா “ஓ டியர் உன்னை இத்தனை நாள் நான் காணவில்லை. எங்கே சென்றாய், உனக்கு ஏதும் ஆகிவிட்டதோ என்று நான் பயந்துவிட்டேன்” என்றபடி கட்டியணைக்க நான் திக்குமுக்காடிப்போய் பேச்சற்று நிற்கிறேன்.1 point- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
அதுக்கு மாற்றா வாள் இருக்கே!😜1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point1 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
தாயகத்தை நேசிக்கும் எவரையும் சோதிக்கும் வாழ்வியல் அனுபவங்களாக எழுத்துக்கோர்வையுள் மயங்காது மனதினுள் வினாவையும், விரக்தியையும், இயலாமையையும் ஒருசேர எழுத்தர் வடித்துச்செல்கிறார். படிக்கும்போது மனம் கொத்தளித்து நொருங்கிவிடுகிறது. 32வயதில் அற்புதமான படைப்பினைத் தரும் விதம் செழிப்பு. தொடர்க நின் பணி. இணக்க அரசியல் பேசுவோரும் படித்துப் பகுத்தறியவேண்டிய பல பக்கங்கள் விரிகின்றன. நோக்குவார்களாயின் அவர்களிடமும், அவர்களிடம் உண்மையிருப்பின் கடந்து செல்லமுடியாத வினாத்தோன்றும். இதனை நூலுருவில் வெளியிட்டால் நன்று. இணைப்புக்கு நன்றி.1 point- கருத்து படங்கள்
1 point- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
இப்ப குண்டு இல்லை. அதனால் இருக்குமோ? 😂1 point- கருத்து படங்கள்
1 point- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
சரியான செயற்பாடு ... தேர் இழுக்கும் போது அங்கங்கே குத்தி வைக்கணும்.1 point- உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
முட்டை விக்கிற விலைக்கு இதென்ன விசர் வேலை….. மாட்டு சாணி….இப்பவும் free தானே?1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point1 point- பக்கத்து வீடு
1 pointஅப்ப நாலைஞ்சு வீடு வைச்சிருக்கிற என்ரை மச்சானை ஏணிவைச்சாலும் தொடேலாது எண்டுறியள்? 😂1 point- தமிழ் மக்கள் உறுதியான முடிவெடுக்க வேண்டிய நேரமிது
இதனை, அதாவது அரசுத்தலைவர் தேர்தல் தொடர்பான இந்தக் கருத்தை எவளவுதூரம் எமது மக்களும், அரசியற் கட்சிகளும் கணித்து நகரப்போகின்றன என்பதிலேயே தமிழினத்தின் இருப்பை உறுதிப்படுத்த அல்லது தமிழரும் ஒரு காத்திரமான சக்தி என்பதை வெளிப்படுத்த வாய்ப்பாக அமையும்.கடந்த காலங்களைப்போல் கையூட்டைப் பெற்றுவிட்டுக் கைகாட்டும் அரசியல்வாதிகள் போல் கடந்து போகப்போகின்றார்களா?1 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 10 ” பூமியை பாவங்களால் நிறைத்தவர்களுக்கு தண்டனையுண்டு. எங்கும் தப்பியோட முடியாதபடி நீதியின் பொறியில் அகப்படுவார்கள். கடந்த காலங்களுக்கான தீர்ப்பு வழங்கப்படும்” அதிவணக்கத்திற்குரிய பிதா இராயப்பு ஜோசப் அவர்கள் குழுமியிருந்த சனங்களுக்கு மத்தியில் உரையாற்றினார். அரச வன்கவர் படையினரால் கடுமையான நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்ட பிதா இராயப்பு ஜோசப் பின்வாங்கவில்லை. பயந்தொடுங்கி வெளிறவில்லை. நிகழ்ந்த மானுடப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டுமென குரல் கொடுத்தார். நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு என்று சொல்லி உரையை நிறைவு செய்தார். அக்கா எதையும் கவனிக்காமல் இரண்டு கைகளையும் தூக்கி முட்டுக்காலில் நின்றாள். சாட்சியமற்ற வெளியில் உதிர மறுக்கும் உதிரச் சிறகுகள் குரூரமாய் வளர்ந்திருந்த நினைவது. மூர்க்கமாய் கொந்தளித்து பற்களை நெருமினாள். அக்காவைப் பிடித்துக் கொண்டேன். அவள் கேட்டாள் “எங்கட பாதர் சொல்ற தீர்ப்பு வழங்கப்படும் நாள் எப்ப வரும் தம்பி?” அவலத்தின் புன்சிரிப்புக்கு பதில்களற்று இரையானேன். சில நாட்களில் அக்காவின் உடல் வலுவிழந்திருந்தது. யாழ்ப்பாண பெரியாஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றேன். உளநல மருத்துவ நிபுணரிடம் காண்பித்தேன். ஏற்கனவே அக்காவுக்கு வழங்கப்பட்ட மருந்துகளோடு சிலவற்றை அதிகரித்தார். வாய்ப்பிருந்தால் களவாவோடை அம்மன் கோவிலுக்கு கூட்டிச் செல்லுங்கள் என்றார். துக்க நிவாரணமற்ற வாழ்வு, சிதலங்களின் நீள் சுருள் குறுக்கு மறுக்காக ஓடிக்கிழித்த பாதையில் தனித்துவிடப்பட்டது. நரகத்தில் வெறித்து வருந்தும் பாவிகளாய் எஞ்சிய ஒவ்வொருவருமே சித்தமழிகிறோம் என்றாள் அக்கா. அவளை இறுக அணைத்து தலைதடவினேன். நாங்கள் ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறி பேருந்துக்காக நின்றோம். பீதி நிரம்பிய கண்களோடு சனங்கள் வாழப்பழகினர். எது நேர்ந்தாலும் தாங்கிக் கொள்ளுமளவு மரத்துப் போனார்கள். இராணுவத்தினர் வீதிகளின் இருமருங்கிலும் நின்று யாழ் நகரத்தை கண்காணித்தனர். “இயக்கத்தை அழிச்சிட்டினம் தானே, இப்ப ஆருக்கு பயப்பிடினம்” மாங்காய் விற்கும் சிறுவன் கேட்டான். “எடேய், தம்பியா மொக்குத்தனமாய் கதைச்சு செத்துப்போய்டாத. உன்னட்ட மாங்காய் வாங்கினது பிழையா போயிற்று” நடுநடுங்கி அங்கிருந்து விலகியோடினார் படித்த யாழ்ப்பாணன். மீளக்குடியமர்ந்து சில நாட்களிலேயே அக்காவைப் பீடித்த உளத்துயரினால் வன்னியில் வாழ முடியவில்லை. அவளை அமைதிப்படுத்தவோ சுகப்படுத்தவோ தெய்வங்களிடம் வல்லமை இல்லாதிருந்தது. சொந்தக் கிராமத்தை விட்டு வெளியேறி யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு குடியிருந்தோம். செப்பனிடப்பட்டு இரண்டு அறைகள் கொண்ட கல்வீட்டில் உறங்கி விழித்தோம். ஏழாலையிலுள்ள பரியாரியார் ஒருவரிடம் அக்காவை அழைத்துச் சென்றோம். அவர் லேகியங்களையும், சூரணங்களையும் வழங்கி சுகமாகும் என்றார். ஆனால் அதற்கான எந்தச் சமிக்ஞைகளும் தோன்றவில்லை. நாளுக்கு நாள் அவளது பிரச்சனை அதிகமாயிற்று. அக்காவுக்கு விசர் என்று யாழ்ப்பாணத்திலும் சொல்லத் தொடங்கினர். வீட்டின் முன்னே நிற்கும் வாதாம் மரத்திலேறி ஊர் விழிக்க கத்தினாள். கோவிலில் தீபாராதனை நடந்து கொண்டிருந்த போது, தன்னுடைய பாவாடையைக் கழற்றி கருவறைக்குள் வீசிவிட்டாள். கட்டுப்படுத்த இயலாமல் அவளுக்கிருந்த ஒரே காலில் உருகுதடமிட்டு கயிற்றால் இறுக்கினோம். வீட்டிற்கு வந்தவர்கள் அக்காவுக்காக பரிதாபம் கொண்டனர். எங்களைப் போன்ற கல்மனம் கொண்டவர்கள் யாருமில்லையென சொல்லினர். தெய்வத்தை விடவுமா? என்றேன். “தம்பி, டாங்க் வருகிற சத்தம் கேக்குது, பங்கருக்குள்ள வா” அக்கா சொன்னாள். அவளுடைய கணுக்காலில் கயிற்றுத் தடம் நிரந்தரமாய் பதியத் தொடங்கியது. “சண்டை முடிஞ்சுது, இனி டாங்க்ம் வராது, கிபிரும் வராது. அமைதியாய் இரு” என்றேன். “போடா விசரா. சண்டை முடிஞ்சுதோ. நீயென்ன தளபதியே. சண்டை நடக்குது. எனக்குச் சத்தம் கேக்குது.” “எடியே வே*! கொஞ்சம் சும்மா இரடி. உதால போற ஆர்மிக்காரங்கள் கேட்டால் எங்கட கெதியென்ன” வீட்டிற்கு வந்திருந்த அத்தை நடுங்கிச் சொன்னாள். அக்கா பல ஆண்டுகளாய் உறங்காதவள். எத்தனையோ மருந்துகள் கொடுத்தும் பயனில்லை. அவள் யாருடனோ கதைத்துக் கொண்டே இருக்கிறாள். தன்னுடைய பெயரை ஒவ்வொரு நாளும் ஒன்றாகச் சொல்லுகிறாள். திடீரென அழத்தொடங்கி நிலத்தில் விழுந்து துடிக்கிறாள். அவளுக்குள் நிகழ்வது என்ன? ஒரு யுகத்தின் வீழ்ச்சியைப் பொடித்து அவளுக்குள் புதைத்தவர்கள் யார்? எப்போதாவது ஜன்னல் வழியாக நட்சத்திரங்களைப் பார்த்து உறைந்திருப்பாள். ஒருநாள் என்னையழைத்துக் கேட்டாள். “இண்டைக்கு வந்திருக்கிற நட்சத்திரங்கள் எல்லாமும் ஆர் தெரியுமா?” வானத்தைப் பார்த்தபடி கேட்டேன், ஆர்? “ஆரோ! எல்லாம் எங்கட குழந்தையள் தான். நாங்கள் இதுவரைக்கும் மண்ணுக்குள்ள புதைச்ச குழந்தையள். ஷெல்லடியிலையும், கிபிர் அடியிலையும் காயப்பட்ட அதுகளின்ர கடைசி நொடித் துடிப்ப மேல உத்துப் பார் என்றாள். நம்பவியலாதபடி எல்லா நட்சத்திரங்களும் துடியாய்த் துடித்தன. தானியங்கள் சொரிவதைப் போல அவை மண்ணில் விழுந்தன. வானில் யாவும் அழிந்திருந்தன. திடுமென மழை கொட்டத் தொடங்கிற்று. அக்கா வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை படுக்கைக்கு அழைத்துச் சென்று நித்திரை கொள் என்றேன். “எனக்கு நித்திரை வரவில்லை. நீ போய் படு” சலிப்புடன் தலையாட்டிவிட்டு விலகினேன். அக்கா கட்டிலிலேயே அமர்ந்திருந்தாள். இல்லாது போன காலின் எஞ்சிய துண்டத்தை பார்த்துக் கொண்டேயிருந்தாள். எக்காளச் சிரிப்போடு எழுந்து நின்றாள். மூதாதையர்களின் காலடியென மழை சீற்றம் கொண்டாடியது. தலையைத் தாழ்த்தி உச்சாடனமாய் அக்கா எதையோ சொல்லத் தொடங்கினாள். படுக்கையை விட்டு எழுந்து வந்து அவளைப் பார்த்தேன். முகம் முழுதும் ஆக்ரோஷத்தின் தீ பழுத்து அவளுடல் காயங்களால் துடிதுடித்தது. பக்கத்தில் செல்லப் பயந்தேன். யாரோடோ அவ்வளவு வேகமாக கதைக்கத் தொடங்கினாள் அக்கா. தெய்வத்தின் லட்சணத்தோடு அகோரம் பூண்டிருந்தாள். குருதியின் வரலாற்றுப் படலம் மிதக்கும் துயரத்திவலையாக அசையாதிருந்தாள். “அக்கா” என்றழைத்தேன். அவளால் முடிந்ததெல்லாம் இதுதான் என்பதைப் போல தன்னுடைய கையிலிருந்த சிறிய தீப்பெட்டியைத் தந்து அதனைத் திறந்து பார் என்றாள். யாரோ கடித்து மிச்சம் வைத்த பிஸ்கட் கடல் மணலும் குருதியும் ஒட்டி உலர்ந்திருந்தது. மீண்டும் மீண்டும் எதுவும் புரியாமல் பார்த்தேன். “இதென்னக்காக, ஆரோ சாப்பிட்ட மிச்ச பிஸ்கட்ட எடுத்து வைச்சிருக்கிறாய். அதில ரத்தம் வேற காய்ஞ்சிருக்கு” என்றேன். “இந்த பிஸ்கட்டும் அதில ஒட்டியிருக்கிற கடல் மணலும் ரத்தமும் தான் எங்கட மிச்சம்” “ஆர் சாப்பிட்ட மிச்சமிது” “எங்கட சந்ததியோட மிச்சம். அந்த மிச்சம் சாப்பிட்ட மிச்சம்” என்று சொல்லிக்கொண்டிருந்த அக்காவின் மீது இறங்கியதொரு நிழல் கண்டேன். கண்களை மூடித் திறந்தேன். அக்கா படுக்கையில் அமர்ந்திருந்து “என்னடா” என்று கேட்டாள். என்னால் எதுவும் சொல்ல இயலவில்லை. மழை பாதாளம் வரை இறங்குகிறேன் என்பதைப் போல அடித்துப் பெய்தது. அன்றைக்கு மதியம் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. வீட்டுக்கு பக்கமிருப்பதால் நானும் அம்மாவும் சென்றோம். அக்கா வீட்டிலிருந்தாள். அவளது கையில் கோவில் நூலைக் கட்டிவிட்டேன். அம்மா காலில் கயிற்றைக் கட்டி இரும்போடு இணைத்தாள். அன்னதானம் முடித்து திரும்பிவருகிற போது அக்கா யாரோடோ கதைப்பது கேட்டது. வாசலை எட்டிப் பார்த்தால் எவரின் செருப்பும் இல்லை. நாங்கள் உள்ளே சென்றோம். அக்கா, தனக்கருகே இருந்த கதிரையை நகர்த்தி வைத்து விட்டு, “இதில இருந்து கதையுங்கோ” என்றாள். அம்மா “ஆரடி மோளே வந்திருக்கிறது” என்று கேட்டாள். “உங்களுக்குத் தெரியாதம்மா. இயக்கத்தில பெரிய ஆள். பெயர் சொல்ல வேண்டாமாம்” அக்கா சொன்னாள். “எனக்கு பெயர் மறைக்கிற இயக்க ஆளை இண்டைக்குத் தான் கேள்விப்படுகிறன். சரி சாப்பிடுகிறாரோ. சமைக்கவா.கேள்” “வேண்டாம் அவர் வெளியால போய் மச்சம் சாப்பிடுகிறாராம். இண்டைக்கு நாங்கள் விரதமெண்டு யோசிக்கிறார்” “எடியே விசரி. வந்திருக்கிறவன் இயக்கமோ, அல்லது கோவில் தர்மகர்த்தாவோ. தெய்வத்துக்கு தானே விரதமிருக்கிறம். அது என்ன கேக்குதோ குடுக்கிறதுதான் விரதம். என்ன வேணுமெண்டு கேள்” “மீன் பொரியலாம்” “சரி அரைமணித்தியாலம் கதைச்சுக் கொண்டிரு. சமையல் முடிஞ்சிடும்” என்றாள் அம்மா. நான் அடுப்படிக்குள் நுழைந்து “என்னம்மா நீயும் அவளோட சேர்ந்து விசராட்டம் போடுகிறாய்” என்று கத்தினேன். அம்மா கண்ணீரை துடைத்து வீசினாள். “ஓலமிட்டு குரல் கரைக்குமளவு சாம்பலின் பாரம் நெஞ்சில இருக்கு, ஆனால் அழக் கூடாது. கழிவிரக்கம் காட்டி துயரத்திட்ட மண்டியிடக் கூடாது. இந்தக் குறுகிய வாழ்வில சித்தம் பிறழ்ந்து வாழ்றதெல்லாம் கொடுப்பினை மோனே. கொக்காவுக்கு எதுவும் தெரியேல்ல. அவளுக்குள்ள கொந்தளிப்புமிருக்கு அமைதியுமிருக்கு. ஆனால் நல்லாய் இருக்கிற எங்களிட்ட அமைதி எங்கயிருக்கு சொல்லு. அவள் ஆரோடையாவது கதைக்கிறாளே அது காணும். எனக்கு அது நிம்மதியாய் இருக்கு” என்றாள். அம்மா கீரி மீன் பொரியலோடு சோற்றைப் பரிமாறினாள். ஏற்கனவே கால் கட்டை கழற்றியிருந்தேன். அக்கா கூந்தலை அவிழ்த்து ஒற்றைக்காலில் நின்று கொண்டு சாப்பிடத் தொடங்கினாள். கண்கள் நிறம் மாறி ஒளிர்ந்தன. வயிறு திறந்து அலறுவதைப் போல அக்கா காற்றை விட்டாள். சோற்றுக் கவளங்களை எரியும் தீயில் வீசுவதைப் போல தனக்குள் தள்ளினாள். பசியின் காலடியில் அவளுடல் நடுங்குகிறது. அவளது பசியா? யாரின் பசிக்கு அக்கா உணவு உண்கிறாள்? அம்மாவை அந்தத் காட்சி தாளமுடியாது உருக்குலைத்தது. தட்டில் மீண்டும் சோறு பரிமாறினோம். புதிய கனவு மாதிரி அக்காவுக்குள் விழித்தெழுந்தது யார்? ஒற்றைக்காலுடன் நின்றுகொண்டே உணவுண்ட அவளின் ஆங்காரம் மெல்ல மெல்ல அடங்கியது. சோற்றுத் தட்டை வீசி எறிந்தாள். யாராலும் அறியமுடியாத மொழியின் தெய்வச் சடங்கா நிகழ்ந்து முடிந்தது. அக்கா அப்படியே சிறுநீர் கழிந்தாள். வீடெங்கும் வெக்கையும் கடல் வாசனையும் எழுந்தது. அம்மா எதுவும் சொல்லவில்லை. நடப்பவற்றை பார்த்தபடி இருந்தாள். சில நாட்களுக்குப் பிறகு ஒரு மழைப் பொழுதில் அக்கா நன்றாக உறங்கினாள். கடைக்குச் சென்று திரும்பிய அம்மாவுக்கு அதுவொரு திருக்காட்சியாக அமைந்தது. சிறிய போர்வையால் அவளது கால்களை மூடினேன். “பரியாரியிடம் போய் அவள் நித்திரை கொண்டதைச் சொல்லு” என்றாள் அம்மா. போகலாமென தலையசைத்தேன். அக்கா விழிக்கும் வரை அருகிலேயே இருந்தேன். ஒருக்களித்துப் படுத்தவள் மல்லாந்து கொண்டாள். அவளுடைய பாயின் விளிம்பில் பிள்ளையார் எறும்புகள் ஓடின. அக்காவின் முகத்தில் இறுமாப்பு சேர்ந்திருந்தது. எல்லாமும் புதைந்த கடைசித் திகதியில் முள்ளிவாய்க்காலை விட்டு வெளியேற முடிவு செய்தோம். அக்கா வர மறுத்தாள். உந்தக் கெடுவார் ஆர்மிக்காரங்களிட்ட வந்து வாழ ஏலாது. என்னை ஆரேனும் சுட்டுக் கொல்லுங்கோ” என்று சத்தமாய் கத்தினாள். அன்றைக்குத் தான் இந்த இறுமாப்பை கடைசியாகக் கண்டது. அக்கா விசுக்கென விழித்தெழுந்து தலையிலடித்தபடி கேட்டாள். “நாங்கள் எப்பிடி தப்பினாங்கள்” “நாங்களும் தப்பேல்ல மோளே” என்றாள் அம்மா. திசை பிறழாது கடல் நோக்கி ஓடினாள். தன்னுடைய நிர்வாணத்தை வெறிகொண்டு படைத்து, “கடலே! மீதியற்று அழிந்து போ, லட்சோப லட்ச சனங்களின் பிணம் விழுங்கிய உன் அலைகளில் கொடுஞ்சாபம் படிந்திருக்கிறது. அழிந்து போ. பூமியிலிருந்து பாவம் மறைந்து போகட்டும். தீயோர் என்றென்றும் அழிந்து போவார்களாக!” என்றாள். அலை ஒடுங்கி இருண்டது கடல். ஊர்ந்து வந்து அக்காவின் தாள் பணிந்து “என் மகளே! மன்னிக்க” என்றது. வானத்தில் சுடர்ந்த நட்சத்திரங்கள் துடிதுடித்தபடி நடப்பவற்றை பார்த்தன. அக்கா மேல்நோக்கிப் பார்த்து “பிள்ளைகளே! உங்களின் பொருட்டு எவரையும் மன்னிக்கேன், நீங்கள் அமைதி கொள்ளுங்கள். உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்”என்றாள். மோதித்தெறிக்கும் முழக்கத்தோடு மழை பொழிய கடல் மீது ஒலித்த அவளின் குரல் நூற்றாண்டின் முறையீடு. எம்மை வஞ்சித்த பூமி அஞ்சட்டும் என்றனர் சனங்கள். https://akaramuthalvan.com/?p=13881 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- இந்த ஆண்டு வீதி விபத்துகளில் இதுவரை 2163 உயிர்ப் பலிகள்!
இதில் எவ்வளவு பேர் முன்னாள் போராளிகள் என்று தெரிந்தால் சரி ?1 point- இந்த ஆண்டு வீதி விபத்துகளில் இதுவரை 2163 உயிர்ப் பலிகள்!
நீங்கள் நான்கு சக்கர வாகனத்தை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். முன் ஆசனத்தில் இருப்பவர்கள் கூட அணிய மாடடார்கள் போலீசார் இல்லாதிருந்தால். போலீசுக்கு பயந்துதான் முன் ஆசன படி அணிகிறார்கள். அதுவும் ஆங்கில எழுத்து கொண்ட வாகனங்களில் மட்டும் தான் அணிய வேண்டுமென்று சடடமிருக்கின்றது. அதட்கு முந்திய வாகனங்களில் அணிய வேண்டிய அவசியமும் இல்லை அத்துடன் ஆசன பட்டியும் இல்லை என்று நினைக்கிறேன். பின் ஆசனத்தில் அமர்பவர்கள் அணிய தேவை இல்லை என்று சொல்வதன் அர்த்தம், போலீசார் பிடிக்க மாடடார்கள் என்பதுதான். இங்கு ஆசன பட்டி அணிவது பொலிஸாருக்கு பயந்தே தவிர தங்களது பாதுகாப்புக்கு என்பதை அநேகர் அறிவதில்லை.1 point- சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை விமானநிலையத்தில் கைது
ரவைக்களின் உள்ளே வெடி மருந்து இருக்கிறது ... வெடி மருந்து கீத்ரோ விமான நிலையத்தை கடந்து விமானத்தில் ஏறி இருக்கிறது என்றால் .... கொஞ்சம் அதிர்ச்சியான தகவல்தான். எனது ஊகத்தில் இதன் உரிமையாளர் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் வைத்திருப்பவர் உரிமத்தின் பிரதி ஒன்றையும் பாக்கில் வைத்திருந்து இருக்க சாத்தியம் உண்டு அதனோடு பொதியை பூட்டு போட்டு பூட்டியிருக்கலாம் குறித்த பொதியை ஆட்கள் யாரும் பார்க்க தேவையில்லை .... அதை ஸ்கேனர் தானகவே தடுத்து இருக்கும் அதை மீள் பரிசோதனை செய்தவர்கள் குறித்த நபர் பதிவு செய்து கொண்டு போகிறாரா? இல்லையா? எனும் குழப்ப நிலையில் அதனால் விமானத்தில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதால் ஏற்றி இருப்பார்கள் ஆனால் குறித்த நபரின் (பெயருடன்) பொதி ஒன்றில் துப்பாக்கி இருக்கிறது என்பது முதன்மை விமானிக்கும் கொழும்புக்கும் அறிவித்து இருப்பார்கள். இந்த தகவலின் அடிப்படையிலில்தான் கொழும்பில் குறித்த பொதி சுங்க அதிகாரிகளிடம் சேரும். இந்தியர்கள் பலர் டுபாய் அபுதாபியில் இருந்து தங்கத்துடன் சென்று இந்தியாவில் பிடிபடுவார்கள் தலைக்குள் வைத்தது பெண்கள் உள்ளாடைக்குள் வைத்து கொண்டு சென்று எல்லாம் பிடிபடுவார்கள் அவர்களை இந்திய அதிகாரிகள் எதோ சாமர்த்தியம் செய்து பிடித்ததுபோல செய்தி போடுவார்கள் உண்மையில் அதன் பின்னனியில் இருப்பது துபாய் அபுதாபி ஸ்கேனர்கள்தான். 24 கரட் சுத்த தங்கம் மெடல் டெக்டாட்டோரில் (Metal Detectors) பிடிபடாது அதனுடன் செப்பு கலந்த பின்தான் மெடல் டெக்டோட்டோர் சத்தம் செய்யும். இதனை சாதகம் ஆக்கியே தங்கம் கடத்துபவர்கள் செயல்படுகிறார்கள். ஆனால் துபாய் அபுதாபி ஸ்கேனர்கள் இவற்றை துல்லியமாக காட்டுகிறது ...... அவர்களுக்கு தங்கம் விற்றாயிற்று அதன் பின்பு ஒரு இந்தியரை பிடித்து சிறையில் வைத்து வழக்கு வைத்து உணவு கொடுப்பது வீண் செலவு என்பதால் இந்தியாவுக்கு தகவல் அனுப்பிவிட்டு இருந்துவிடுவார்கள் ....... விமானம் போய் இறங்குமுன்பே யார் தங்கத்துடன் வருகிறார் என்பது அவர்களுக்கு தெரிந்துகொண்டுதான் மிகுதி ஸீன் எல்லாம் உருவாக்குவார்கள் (Scene create) .1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- இந்த ஆண்டு வீதி விபத்துகளில் இதுவரை 2163 உயிர்ப் பலிகள்!
இலங்கையில் வாகனங்களில் பயணம் செய்பவர்கள் பின் இருக்கையில் உட்கார்ந்தால் பாதுகாப்பு பட்டி அணிய மாட்டார்கள். பின் இருக்கைக்கு பாதுகாப்பு பட்டி தேவை இல்லை என்று கூறுவார்கள். இவர்களுக்கு விளக்கம் கொடுக்க முடியுமா?1 point- பக்கத்து வீடு
1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 pointஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன் ....சீரும் சிறப்போடும் வாழ வாழ்த்துகிறோம்1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 pointஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன். வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்துள்ள வேண்டுகோள்
13 வது அரசியல் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டி முன்பு சில கட்சிகள் இந்திய அரசுடம் மனு கொடுத்த போது அதில் கையெழுத்திட மறுத்ததோடு அதற்கெதிராக போராட்டமும் செய்தது ஏன்? அன்று கையெழுத்திட்டவர்களை துரோகிகள் என்று கூறியது ஏன்? 13. திருத்த சட்டமூலத்தை சவப்பெட்டி என்று அடையாளப்படுத்தி அதை ஊரெல்லாக கொண்டு திரிந்து ஆர்பபாட்டம் செய்துவிட்டு இப்போது இந்திய தூதுவரை சந்தித்து அதை அமுல்படுத்த வேண்டும் என்று கேட்பது உண்மையில் மனம் திருந்தி ஜதார்ததத்தை ஏற்றுக்கொண்ட நிலை என்றால் அதை வரவேற்கத்தான் வேண்டும். கஜேந்திரகுமர் போன்ற உலக ஜதார்ததத்தை உணரும் அளவுக்கான கல்வி அறிவு உடைய, நீண்ட அரசியல் பாரம்பரியத்தில் இருந்து வந்த அரசியல்வாதிகள் குறுகிய மனம் கொண்ட குதிரை கஜேந்திரன், சுகாஸ் போன்றவர்களின் அடி முட்டாள் அரசியல் கொள்கையில் இருந்து தமிழ் மக்கள் நலன் கருதி வெளியே வர வேண்டும். அவ்வாறு செய்வது தமிழ் மக்களுக்கு நல்லது.1 point- துறவியாகும் டயானா கமகே?
1 pointஅடிவாங்கி காண்ட்பாக்கை வீசி எறிந்து, பொங்கி கத்தி துழைத்துக் கொண்டிருந்த அக்காவின், காண்ட்பாக்கை எடுத்து, வாக்கா, பொங்காத எண்டு அன்பா, அரவணைத்து கூட்டிக் கொண்டு போன வீடியோ இங்க வந்ததே, பார்க்கவில்லையோ?1 point- அமெரிக்க பொலிஸாருக்கு எதிராக வெடித்த போராட்டம்!
அமெரிக்க பொலிஸாருக்கு எதிராக வெடித்த போராட்டம்! அமெரிக்காவில், பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடைய பொலிஸார் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு மானுவல் எல்லிஸ் (Manuel Ellis) என்ற 33 வயதான நபர் வொஷிங்டன் பொலிஸாரின் காவலில் இருந்தபோது உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த நபர் பொலிஸார் தாக்கியதினாலேயே உயிரிழந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து குறித்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பொலிஸ் அதிகாரிகளையும் நீதிமன்றம் அண்மையில் விடுதலை செய்தது. இந்நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2023/13639811 point- ரஷ்யாவின் ராணுவ கூட்டாளியாக மாறுவதால் இரான் அடையப் போகும் பலன்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யா - இரான் இடையிலான உறவு 26 நிமிடங்களுக்கு முன்னர் பிப்ரவரி 2022இல் யுக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பிறகு ரஷ்யாவிற்கும் இரானுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு வலுவடைந்து வருகிறது. இரானை 'ரஷ்யாவின் சிறந்த ராணுவ கூட்டாளி' என்று அமெரிக்கா கருதுகிறது. இரான் மாஸ்கோவிற்கு பீரங்கி மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVs) உட்படப் பல்வேறு ஆயுதங்களை வழங்குகிறது. இரானுடனான ராணுவ உறவுகள் 'நேர்மறை' திசையில் வளர்ந்து வருவதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் இரு நாட்டு உறவுகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். ரஷ்யாவிற்கு ஆளில்லா விமானங்களை அனுப்பியதை ஒப்புக்கொண்ட இரான், 'யுக்ரேன் போரில் அவை பயன்படுத்தப்படாது' என்றும் கூறியுள்ளது. இருப்பினும், இரான் ரஷ்யாவுடனான ராணுவ ஒத்துழைப்பை மறைக்கவில்லை, மாறாக ரஷ்ய விமானங்களைக் கொண்டு தனது படைகளை நவீனமயமாக்கத் திட்டமிட்டுள்ளது. ரஷ்யா-இரான் பாதுகாப்பு ஒத்துழைப்பின் வரலாறு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1987ஆம் ஆண்டு, ஐ.நா தலைமையகத்தில் இரானின் மூன்றாவது அதிபர் அலி கமெனெய் மற்றும் சோவியத் யூனியனின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் விளாதிமிர் பெட்ரோவ்ஸ்கி. இராக் இரானுடன் 1980 முதல் 1988க்கு இடைப்பட்ட காலத்தில் போரில் ஈடுபட்டபோது, அதற்கு ஆயுதங்களை வழங்கிய முக்கிய நாடுகளில் சோவியத் யூனியனும் ஒன்று. ஆனால் இந்தப் போரின் முடிவு ரஷ்யாவிற்கும் இரானுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கு கதவுகளைத் திறந்தது என்றே சொல்ல வேண்டும். ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) அளித்துள்ள தகவல்களின்படி, 1989ஆம் ஆண்டில் சோவியத் யூனியனுக்கும் இரானுக்கும் இடையே ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் கீழ், இரான் சுமார் 1.9 பில்லியன் டாலர் மதிப்பிலான உபகரணங்களைப் பெற இருந்தது. 1990 மற்றும் 1999க்கு இடையில், போர் விமானங்கள், டாங்கிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவையும் இரானுக்கு வழங்கப்பட்டன. ரஷ்யாவுக்கும் இரானுக்கும் இடையிலான இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்ந்தது. எவ்வாறாயினும், இரானுக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை வெளிப்படையாக மீறுவதாக குற்றம் சாட்டப்படக்கூடாது என்பதில் ரஷ்யா எப்போதும் எச்சரிக்கையாக இருந்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவு மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் அதன் சொந்த பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறையின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்த பிறகு, ரஷ்யா தனது போரைத் தொடர ஆயுதங்களைப் பெறுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்த முயன்றது. பாலிஸ்டிக் ஏவுகணைகளின் வளர்ச்சி, உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மீதான தடைகள் அக்டோபரில் காலாவதியானபோது, ரஷ்யாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு மீண்டும் வேகம் பெற்றது. ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாஸ்கோ கண்காட்சியில், இரான் தனது ஆயுதங்களைக் காட்சிப்படுத்தியது. இது இதுவரை எந்த நாட்டிற்கும் விற்கப்படவில்லை என்பதுடன் குறிப்பாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படைக்காக (IRGC) வடிவமைக்கப்பட்டது. இந்த ஆயுதங்களின் பட்டியலில் ஜொஹீர் (Zoheer) மற்றும் அபாபில் (Ababil/Ababil OP) பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஷஹீத்-129, ஷஹீத்-133 ட்ரோன்கள் மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கும் அராஷ் ட்ரோன் ஆகியவை அடங்கும். எத்தனை ஆயுத ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 200 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ரஷ்யாவுக்கும் இரானுக்கும் இடையே எத்தனை ஆயுத ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக விரிவான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும், யு.என்.காம்டிரேட் (UN Comtrade) என்ற தரவுதளம் மற்றும் ரஷ்ய சுங்க சேவையின் தரவுகள் இது குறித்து தெளிவற்ற தகவல்களை அளிக்கின்றன. யு.என்.காம்டிரேட் தரவுகளின்படி, அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஒரு வருடத்திற்குப் பிறகு, 2016ஆம் ஆண்டு, ரஷ்யாவுக்கும் இரானுக்கும் இடையிலான ஆயுத வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சாதனை ஆண்டாக அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கடந்த 2022ஆம் ஆண்டு அல்லது இந்த (2023) ஆண்டில் ரஷ்யா மற்றும் இரானின் ஆயுத வர்த்தகம் குறித்த விரிவான மதிப்பீடு எதுவும் இதுவரை காணப்படவில்லை. ஸ்கை நியூஸ் தெரிவித்த தகவல்களின்படி, 2022இல் ரஷ்யாவுக்கும் இரானுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ராணுவ ஒப்பந்தம் சுமார் 1.7 மில்லியன் டாலர் மதிப்புடையது. இந்த ஒப்பந்தத்தில் வெடிமருந்துகள் மற்றும் ரஷ்ய தயாரிப்பான டி-72 டாங்கிகளின் பாகங்கள் உள்ளடங்குவதாகக் கூறப்படுகிறது. ஆளில்லா விமானங்களின் பெரும் பங்கு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஸ்லன் புகோவ் இரானிய ஆளில்லா விமானங்களை ரஷ்யாவுக்கு வழங்கியதை ஒப்புக்கொண்டார். யுக்ரேன் போரில் இரானிய ஆளில்லா விமானங்களை ரஷ்யா பயன்படுத்தத் தொடங்கியபோது ரஷ்யாவுக்கும் இரானுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு வலுவடைந்தது. இந்தக் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்களில் ஷஹீத்-131, ஷஹீத் -136, மொஹாஜிர்-6 ஆகியவை அடங்கும். ஷஹீத் யுஏவிகள் காமிகேஸ் ட்ரோன்கள், இரானில் தயாரிக்கப்பட்டன. ரஷ்ய ராணுவம் அவற்றை வர்ணம் பூசி ஜெரான் என்று பெயரிட்டது. நெதர்லாந்தை தளமாகக் கொண்ட 'ஏர்வார்ஸ்' என்ற அமைப்பு அளிக்கும் தகவல்களின்படி, செப்டம்பர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை யுக்ரேனில் சுமார் 2000 ஷஹீத் ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தியது. யுக்ரேனில் ரஷ்யாவுக்கு ஆதரவாக ஷாஹீத் ட்ரோன்களை இரான் வழங்கியது என்ற குற்றச்சாட்டை இரானும் ரஷ்யாவும் நிராகரித்துள்ளன. இருப்பினும், நவம்பர் 2022இல், இரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் பேசியபோது, 'போர் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பு' இரான் ' வரையறுக்கப்பட்ட' ட்ரோன்களை ரஷ்யாவிற்கு அனுப்பியதாக உறுதிப்படுத்தினார். இருந்தபோதிலும், யுக்ரேன் போரில் பயன்படுத்த ரஷ்யாவுக்கு எந்த ஆயுதமும் வழங்கவில்லை என்று இரான் தொடர்ந்து ஆணித்தரமாகக் கூறி வருகிறது. மேலும் இரானிய ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தியது தொடர்பாக யுக்ரேனால் இதுவரை எந்த ஆதாரத்தையும் முன்வைக்க முடியவில்லை என்றும் இரான் கூறியுள்ளது. ரஷ்ய ஊடகங்களும், இணையதளப் பதிவர்களும் இரானிடம் இருந்து ட்ரோன்களை பெறுகிறார்கள் என்பதை அமைதியாக ஒப்புக் கொள்கிறார்கள். ஷாஹீத்-136 ட்ரோனுடன் ஜெரான்-2 ட்ரோன் பொருந்துகிறது என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் ஜர்னல் ஜூலை 2023இல் ஒப்புக்கொண்டது. ரஷ்ய ராணுவ நிபுணரும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு நெருக்கமானவருமான ரஸ்லன் புகோவ், அக்டோபர் 2022இல் ஆர்.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இரானிய ஆளில்லா விமானங்களை ரஷ்யாவிற்கு வழங்கியதை ஒப்புக்கொண்டார். ஜூலை மாதம், ஒரு ரஷ்ய டெலிகிராம் சேனல் ரஷ்ய-இரானிய ஜெரனியம் யூஏவியின் புகைப்படங்களை வெளியிட்டது. இந்த ஆளில்லா விமானங்களில் ரஷ்ய தயாரிப்பு பாகங்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. ரஷ்யாவும் இரானும் எதை அடைய விரும்புகின்றன? பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேனில் நடந்து வரும் போரின்போது பெரும்பாலான ரஷ்ய ஆய்வாளர்கள் இரானிய யூஏவிகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர். இந்த மாதம் நடைபெற்ற அதிபர் விளாதிமிர் புதினின் வருடாந்திர செய்தியாளர் கூட்டத்தில் ஆளில்லா விமானங்கள் பற்றாக்குறை பிரச்னை எழுப்பப்பட்டது. இது குறித்து புதின் கூறுகையில், நிலைமை சீராகி வருகிறது என்றார். இருப்பினும், சில நாட்களுக்குப் பிறகு, பாதுகாப்பு அமைச்சகத்தின் இயக்குநர்கள் குழுவில் பேசிய புதின், யூவிஏகளின் உற்பத்தியை அதிகரிக்க இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று ஒப்புக்கொண்டார். சர்வதேச விவகாரங்களுக்கான ரஷ்ய கவுன்சிலின் நிபுணரான ஆண்டன் மர்தசோவ், யூஏவிகளின் 'பெரிய அளவிலான விநியோகம்' ரஷ்யாவை நோக்கிய இரானிய தலைமையின் மிகவும் 'குறிப்பிடத்தக்க நடவடிக்கை' என்று கூறுகிறார். வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியின்படி, யூஏவி உற்பத்தியை உள்ளூர்மயமாக்குவது தொடர்பாக ரஷ்யாவிற்கும் இரானுக்கும் இடையில் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதன்கீழ் இரானின் உதவியுடன் ரஷ்யா தனது நாட்டில் சுமார் 6000 ஆளில்லா தாக்குதல் விமானங்களைத் தயாரிக்கவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 151 பில்லியன் ரூபிள் அதாவது சுமார் 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ரஷ்ய ஊடக இணையதளமான புரோட்டோகால்படி , இந்த ஒப்பந்தம் 1.3 முதல் 1.4 பில்லியன் டாலர்கள் வரை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிய வருகிறது. இதன் கீழ், முதற்கட்டமாக 600 ட்ரோன்கள் முழுக்க முழுக்க இரானிய பாகங்களால் தயாரிக்கப்பட்டு, அவை ரஷ்யாவில் ‘அசெம்பிள்’ செய்யப்படும். படிப்படியாக ரஷ்ய பாகங்கள் அதில் பயன்படுத்தப்படத் தொடங்கும். இதற்காக ரஷ்யா தனது சிறப்பு பொருளாதார மண்டலமான அலபுகாவில் ஆளில்லா விமானம் தயாரிக்கும் தொழிற்சாலையை உருவாக்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலைக்கான பணிகள் நடைபெற்று வருவதாக அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனம் சில செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் நவம்பர் மாதம் தெரிவித்திருந்தது. ரஷ்ய வணிக வலைத்தளமான 'தி பெல்' தெரிவித்துள்ள தகவல்களின் படி, ஆளில்லா விமானங்களை இரான் தயாரிப்பதற்காக ரஷ்யாவிற்கு முழு உரிமையையும் விற்றுள்ளது. அதேநேரம், ரஷ்யாவுக்கு ட்ரோன்களை கொடுத்து, இரான் உள்நாட்டு ஆயுதங்களுக்கு விளம்பரம் பெறுகிறது. சில பெரிய வல்லரசுகள் இரானிய ஆயுதங்களை வாங்கத் தயாராக இருப்பதாக இரானின் சில மூத்த தளபதிகளும் இப்போது கூறி வருகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவிடம் இருந்து Su-35 ஜெட் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இரான். இதற்கு மேல் இரான் தனது ராணுவ உபகரணங்களை நவீனமயமாக்க விரும்புகிறது. குறிப்பாக, காலாவதியான ராணுவ விமானத்தை ரஷ்ய தொழில்நுட்பத்தின் உதவியுடன் நவீனப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. மத்திய கிழக்கிற்கு வெளியே ஒரு போருக்கு பங்களிக்கும் அசாதாரண நடவடிக்கையை இரான் எடுத்ததற்கான காரணங்களில் ரஷ்ய விமானங்களை வாங்குவதும் ஒன்று. ரஷ்யாவிடம் இருந்து Su-35 ஜெட் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை இரான் மார்ச் மாதம் உறுதிப்படுத்தியது. ஆனால் இந்தச் செயல்முறை தாமதமானது. இதற்கிடையில், இரான் செப்டம்பர் மாதத்தில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பல Yak-130 பயிற்சி ஜெட் விமானங்களைப் பெற்றது. எல்லாவற்றுக்கும் மேலாக, இரானின் முதல் துணைப் பாதுகாப்பு அமைச்சர் மெஹ்தி ஃபராஹி நவம்பரில், ரஷ்யாவில் இருந்து Mi-28 தாக்குதல் ஹெலிகாப்டர்கள், Su-35 போர் விமானங்கள் மற்றும் Yak-130 பயிற்சி விமானங்களுக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, அவற்றை இறக்குமதி செய்வதற்கான செயல்முறையும் நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். இந்த விமானங்களைப் பெறுவது இரானுக்கு மிகப்பெரிய சாதனையாக இருக்கும். இருப்பினும், யுக்ரேன் போரில் இரானின் அதிகரித்து வரும் தேவைகளுக்கு மத்தியில் ரஷ்யா எத்தனை விமானங்களை இரானுக்கு வழங்க விரும்புகிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/cpdlyz72vz8o1 point- பக்கத்து வீடு
1 pointஊரிலே யாரும் இறந்தால் கொஞ்ச நேரத்தில் ஊருக்கே தெரியும். வெளிநாடுகளில் அடுத்த வீட்டில் என்ன நடக்கிறதென்பதையே அறிய முடியாது. நல்ல கதை சுமே.1 point- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
1 pointhttps://www.ft.com/content/7aeb25e6-c131-4f10-863f-3a0018b36867 ☝️ ரஷ்யாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பின் பக்க விளைவான நிகழ்வு என்பதால் இங்கே இதை இணைக்கிறேன்: சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகளைப் பின்பற்றி, டென்மார்க்கும் இந்த வாரம் அமெரிக்க படைகளை தங்கள் நாட்டில் நிறுத்தி வைக்க அனுமதிக்கும் ஒப்பந்தங்களில் இணைந்திருக்கிறது. இது ஏன் முக்கியம்? நேட்டோவின் ஆரம்ப கால உறுப்பினராக இணைந்த பின்னரும், தன் நாட்டினுள் அமெரிக்கப் படைகளை நிறுத்தி வைக்கும் ஏற்பாட்டை டென்மார்க் அனுமதிக்காமல் இருந்திருக்கிறது. தற்போது டென்மார்க்கின் எதிர்காலப் பாதுகாப்புப் பற்றிய கவலை கொள்கையை மாற்றியிருக்கிறது. இதெல்லாம் ரஷ்யாவின் வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த windfall வெற்றி! (யாருக்கு வெற்றியென்று கேட்கக் கூடாது😎!)1 point- சட்டப் பிரிவு 370 தீர்ப்பு: தமிழகம் அல்லது சென்னையை யூனியன் பிரதேசமாக மத்திய அரசால் மாற்ற முடியுமா?
1 pointபட மூலாதாரம்,ANI கட்டுரை தகவல் எழுதியவர், உமாங் போட்டார் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக உறுதி செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது ஒரு மாநிலத்தை மத்திய அரசு இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க முடியுமா என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட மிக முக்கியமான கேள்வி. இந்தக் கேள்வி எதிர்காலத்தில் மிக முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது. ஏனென்றால் முதலில் குடியரசுத் தலைவர் ஆட்சியைத் திணிக்கவும், பின்னர் முழு மாநிலத்தையும் அல்லது அதன் ஒரு பகுதியையும் யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கான ஆயுதத்தை மத்திய அரசின் கையில் கொடுத்துள்ளது. பல சட்ட வல்லுநர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த முடிவு மாநிலங்கள் மீதான மத்திய அரசின் கட்டுப்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பை தளர்த்துகிறது என்று நம்புகிறார்கள். இந்தியாவில் கூட்டாட்சி அமைப்பு பிரச்னை மிகவும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. மத்திய அரசு தங்களின் அதிகாரத்தை பறிப்பதாக பல மாநிலங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் மசோதாக்களை கிடப்பில் போடுவதாக பல மாநில அரசுகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நலத் திட்டங்களுக்கான உத்தரவாத நிதி மற்றும் ஜிஎஸ்டியில் ரூ.1.15 லட்சம் கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறுகிறார். மேலும், ஒரே நாடு-ஒரே தேர்தல் என்ற எண்ணம், நாட்டின் அரசியல் மையப்படுத்தப்படும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது. பட மூலாதாரம்,SCREENGRAB/SUPREME COURT OF INDIA நீதிமன்றத்தின் முன் உள்ள முக்கிய கேள்விகள் அரசியலமைப்பின் 3-வது பிரிவு புதிய மாநிலங்களை உருவாக்கும் செயல்முறையை குறிப்பிடுகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களை இணைத்து அல்லது பிரித்து புதிய மாநிலங்களை நாடாளுமன்றம் உருவாக்கலாம் என்று கூறுகிறது. இதற்காக குடியரசுத் தலைவரின் பரிந்துரைகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தலாம். அதன் பிறகு அதை மாநிலங்களவையில் தாக்கல் செய்வது கட்டாயமாகும். 2019-ஆம் ஆண்டில், குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் ஜம்மு-காஷ்மீர் இருந்தபோது, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் கீழ், ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசங்களும், லடாக்கில் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமும் உருவாக்கப்பட்டன. எனவே, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் அமைக்கப்பட்டது செல்லுபடியாகுமா, இல்லையா என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட மிக முக்கியமான கேள்வி. பட மூலாதாரம்,ANI நீதிமன்றம் என்ன சொன்னது? ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அமைக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றம் தனது கருத்தை தெரிவிக்கவில்லை. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளதால், ஒரு மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கலாமா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இருப்பினும், யூனியன் பிரதேசமாக லடாக் உருவாக்கப்பட்டதை நீதிமன்றம் நியாயப்படுத்தியது. குடியரசுத் தலைவர் ஆட்சியில் இருந்தாலும், எந்த ஒரு மாநிலத்திலிருந்தும் யூனியன் பிரதேசத்தை உருவாக்குவதற்கு 3-வது பிரிவின் கீழ் மத்திய அரசுக்கு உரிமை உண்டு என்று நீதிமன்றம் கூறியது. குடியரசுத் தலைவர் ஆட்சியின்போது நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவரின் நடவடிக்கைகளுக்கு வரம்புகள் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES எதிர்க்கட்சிகள் கூறுவது என்ன? இந்த முடிவு கூட்டாட்சி அமைப்பை பலவீனப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர். ஒரு மாநிலம் முழுவதையும் யூனியன் பிரதேசமாக மாற்ற முடியுமா என்பது குறித்து நீதிமன்றம் எந்த முடிவையும் வழங்காதது ஏமாற்றம் அளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மூத்த வழக்குரைஞரும், காங்கிரஸ் தலைவருமான அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், அரசியலமைப்புச் சட்டத்தின்படி இதைச் செய்ய அரசுக்கு உரிமை இல்லை என்றார். இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) கருத்துப்படி, இந்த முடிவு மாநிலங்களின் கட்டமைப்பை ஒருதரப்பாக தீர்மானித்து மாற்றுவதற்கான உரிமையை மத்திய அரசுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். இந்த முடிவால், 'சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் அல்லது மும்பையை யூனியன் பிரதேசமாக்குவதில் மத்திய அரசுக்கு எந்தத் தடையும் இருக்காது' என்று எம்.பி. அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு உள்பட எந்த மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக்கலாம் - சட்ட நிபுணர் அரசியலமைப்பு சட்ட நிபுணர் அனுஜ் புவானியா, “ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக பிரிக்கும் விவகாரத்தில் முடிவெடுக்காதது அப்பிரச்னையை முற்றிலும் மறுப்பதாகும்” என்றார். மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளதால், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் விவகாரத்தில் தீர்ப்பளிப்பதை நீதிமன்றம் மறுக்க முடியாது என்று அவர் கூறுகிறார். “புதிய மாநிலங்களை உருவாக்கவும், மாநில எல்லைகளை மாற்றவும் மத்திய அரசு ஒருதரப்பாக நடவடிக்கை எடுக்கும் வகையில், 3-வது பிரிவு எழுதப்பட்டிருப்பதால், அதை தவறாகப் பயன்படுத்தாத வகையில் நீதிமன்றம் விளக்கம் அளித்திருக்கலாம்” என்றார் அனுஜ் புவானியா. “நாடாளுமன்றம் என்ன திருத்தங்களைச் செய்யலாம் என்பதைத் தீர்மானிக்கும் இத்தகைய அடிப்படைக் கோட்பாட்டு கட்டமைப்பை நீதிமன்றம் வழங்கியிருப்பதை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். இந்த வழக்கிலும் இதே போன்ற விளக்கத்தை நீதிமன்றம் அளித்திருக்கலாம்” என அவர் தெரிவித்தார்."ஆனால், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது," என்று அவர் தெரிவித்தார். ஆங்கில செய்தித்தாள் ’தி இந்து’வில் இதுகுறித்து வெளியான கட்டுரையில், ”இந்த முடிவானது குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும், அரசியலமைப்புத் திருத்தங்களை அங்கீகரிப்பது அல்லது முக்கியமான வழக்குகளை திரும்பப் பெறுவது போன்ற பெரிய மாற்றங்களைச் செய்யவும் மத்திய அரசுக்கு உரிமை அளிக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த வழக்குரைஞரும், சட்ட நிபுணருமான ஃபாலி நாரிமன் அளித்த பேட்டியில், ”இந்த முடிவின் விளைவாக இந்தியா ஒரு நாடாக மையப்படுத்தப்பட்டு வருகிறது” என்றார். மற்றொரு சட்ட நிபுணர் அலோக் பிரசன்னா ’இந்தியன் எக்ஸ்பிரஸ்’-இல், “உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் நேரடி விளைவு என்னவென்றால், மத்திய அரசு விரும்பும் போதெல்லாம், எந்த காரணத்தையும் கூறி எந்த மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக மாற்றலாம்” என எழுதியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/cldr2d07xlro1 point- Imagine Dragons - Thunder
1 pointOh, the night is my world City light painted girl In the day nothing matters It's the night time that flatters In the night, no control Through the wall something's breaking Wearing white as you're walkin' Down the street of my soul You take my self, you take my self control You got me livin' only for the night Before the morning comes, the story's told You take my self, you take my self control Another night, another day goes by I never stop myself to wonder why You help me to forget to play my role You take my self, you take my self control I, I live among the creatures of the night I haven't got the will to try and fight Against a new tomorrow, so I guess I'll just believe it That tomorrow never comes A safe night, I'm living in the forest of a dream I know the night is not as it would seem I must believe in something, so I'll make myself believe it That this night will never go....1 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
ஒரு நிலையாக இருந்து படிக்கமுடியவில்லை, வலி விடுகுதில்லை தல1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 pointமீன் செதில் வறை: தலையின் ஸ்பெஷல் ஐட்டம். மறக்கப்படாது. நிழலி, பிறந்தநாள் வாழ்த்துக்கள்.1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- Imagine Dragons - Thunder
1 pointBackstreet Boys - As Long As You Love Me (Official HD Video) Although loneliness has always been a friend of mine I'm leavin' my life in your hands People say I'm crazy and that I am blind Risking it all in a glance And how you got me blind is still a mystery I can't get you out of my head Don't care what is written in your history As long as you're here with me I don't care who you are Where you're from What you did As long as you love me Who you are Where you're from Don't care what you did As long as you love me Every little thing that you have said and done Feels like it's deep within me Doesn't really matter if you're on the run It seems like we're meant to be I don't care who you are (who you are) Where you're from (where you're from) What you did As long as you love me (I don't know) Who you are (who you are) Where you're from (where you're from) Don't care what you did As long as you love me (yeah) As long as you love me As long as you love me I've tried to hide it so that no one knows But I guess it shows When you look into my eyes What you did and where you're comin' from I don't care, as long as you love me, baby I don't care who you are (who you are) Where you're from (where you're from) What you did As long as you love me (as long as you love me) Who you are (who you are) Where you're from (where you're from) Don't care what you did (yeah) As long as you love me (as long as you love me) Who you are (who you are) Where you're from What you did As long as you love me Who you are (who you are) Where you're from (where you're from) As long as you love me Who you are As long as you love me What you did (I don't care) As long as you love me1 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 04 வீரையாவின் இடத்தைக் கண்டுபிடிக்கவே வாரங்களாயின. அவருக்கு முன்னால் இரத்த அழுத்தம் அதிகரித்து பதற்றத்துடன் அழுதபடி நின்றாள் அத்தை. எதையும் பொருட்படுத்தாமல் அத்தையளித்த சரைகளைப் பிரித்து பொருட்களைச் சரிபார்த்தார். சடங்குக்கு தேவையான பொருட்களின் பட்டியலை அத்தைக்கு தெரிவித்தது யாரென்று வீரையாவுக்குத் தெரியவில்லை. ஆனால் எல்லாப் பொருட்களும் உபரியாக வந்திருந்தன. ரெண்டு சரை சாம்பிராணித் தூளுக்குப் பதிலாக ஐந்து வந்திருந்த போதுதான் இது செவிடன் ரத்தினத்தோட ஆளென்று அடையாளம் கண்டார். வீரையாவுக்கு வன்னி முழுதும் பக்தர்கள் பெருகியிருந்தமையால் ஏற்படும் குழப்பம் தானன்றி வேறில்லை. “அழாதே” என்று சைகை செய்து, அமர்ந்து கொள்ளெனக் கட்டளையிட்டார். நிலத்தைக் கால்களால் விலக்கித் துப்பரவு செய்து கைகூப்பி அமர்ந்தாள் அத்தை. வீரையாவின் கண்களில் சிவப்பு தரித்திருந்தது. தனது இருப்பிலிருந்து மாடப்புறா ஒன்றை எடுத்தார். கால்களில் இடப்பட்டிருந்த கட்டினை அவிழ்த்தார். அதனது கண்களில் காய்கள் வளர்ந்திருந்தன. புறாவை அத்தையின் கையில் கொடுத்து குங்குமத்தை தடவினார். சாம்பலில் குருதி இறங்குவதைப் போல புறாவின் இறகுகளுக்குள் குங்குமம் புகுந்தது. அத்தை அருவருத்தபடி புறாவை இறுக்கிப் பிடித்திருந்தாள். வெறிகொண்ட கொடுங்கரமேந்தி சிறிய வெள்ளிக்கத்தியால் புறாவின் கழுத்தை அறுத்தார் வீரையா. அத்தையின் மூக்கின் கீழ்ப்பகுதியில் புறாவின் குருதிச் சாரல். சிந்தும் குருதியை குப்பியொன்றில் பிடித்து, ஏதேதோ மந்திரங்கள் சொல்லி அடைத்துக் கொண்டார். அத்தை கண்களை மூடிக்கொண்டு “என்ர தெய்வமே” என்று உடல் நடுங்கினாள். வீரையா ஒருபிடி திருநீற்றையள்ளி குப்பியிலிட்டார். புறாக்குருதியும் நீறும் குப்பியில் கலந்தன. காட்டின் திக்குகள் அறிந்து திருநீற்றை ஊதி “தெய்வம் உன்னோட இருக்கும், தெய்வம் உன்னோட இருக்கும்” என்று சொன்னார். கூப்பிய தனது கரங்களை இன்னும் இறுக்கியபடி “நீயொரு சக்தியுள்ள தெய்வமெண்டால் என்ர மகள காப்பாத்திப் போடு” என்ற அத்தைக்கு மேலே குருவியுண்டு கனிந்த காட்டுப்பழமொன்று உதிர்ந்தது. அந்தக் குப்பியை ஒரு சிறிய துணிப் பொட்டலமாக கட்டிக்கொடுத்து “ அவளின்ர கழுத்தில இது எப்பவும் இருக்கவேணும். அவளுக்கு இதைவிடவும் ஒரு காவலில்லை. துணையில்லை. விளங்குதோ” என்றார். அத்தை பயபக்தியோடு அதை வாங்கி, அவரது காலைத் தொட்டு வணங்கி எழும் போதுதான் காட்டுக்குள் சிலர் கதைக்கும் சத்தம் கேட்டது. வீரையா விழிப்புற்று தடயங்களை அழித்தார். பொருட்களை அள்ளிக் கொண்டார். புறாக்கூடையை எடுத்துக் கொண்டார். அத்தையை தன்னோடு அழைத்துச் சிறிது தூரம் ஓடிச் சென்றார். மறைவிடத்தில் பதுங்கினார்கள். அத்தைக்கு மூச்சுத் திணறியது. அகப்பட்டால் மரணமன்றி வேறேது என்றுரைத்தபடி சத்தம் கரையும் திசை வரை காதை வளர்த்தார் வீரையா. அது புதிய போராளிகளின் அணி. பயிற்சி முடித்து காடு வழியாக நடத்திச் செல்லப்படுகிறார்கள் என்பதை வீரையா விளங்கிக் கொண்டார். “சரி நீங்கள் தாறத தந்திட்டு கெதியா வெளிக்கிடுங்கோ” அத்தை தன்னுடைய பணப்பையிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்டினாள். வீரையாவுக்கு அதில் திருப்தியில்லை. “எனக்கு நீங்கள் பிச்சை போடவேண்டாம். என்ர வேலைக்கு தகுந்த காசு குடுங்கோ” என்றார் வீரையா. “இந்த மாசம்தான் நான் சீட்டு எடுக்கப்போறன். காசு வந்ததும் உங்களிட்ட செவிடன் ரத்தினம் மூலமாய் சேர்ப்பிக்கிறன். அதுவரைக்கும் பொறுத்துக் கொள்ளுங்கோ” அத்தை சொன்னாள். வீரையா சரியென்று சொல்லி தலையசைத்து “ஊருக்குள்ள போகேக்க கவனமாய்ப் போ, எந்தக் கஷ்டம் வந்தாலும் என்ர பேரைச் சொல்லிப்போடாத, தெய்வத்தைக் காட்டிக் குடுத்த பாவம் உன்ர குலத்தையே அழிக்கும்” என்றார். “வீரையாவைச் சந்திக்க காட்டில் ஒரு பாதையிருக்கு. அது இயக்கத்திற்கும் தெரியாது, ஆர்மிக்கும் தெரியாது. அமெரிக்காவுக்கும் தெரியாது, அன்ரன் பாலசிங்கத்துக்கும் தெரியாது” என்று கள்வெறியில் புலம்பிய வியட்நாம் பெரியப்பாவை இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவினர் பிடித்துச் சென்றனர். இந்தச் செய்தியோடு ஊருக்குள் நுழைந்ததும் அத்தைக்கு திகில் பெருகிவிட்டது. குளித்து முடித்து சமையல் செய்தாள். உள்ளேயொரு ஆடை அணிந்து அதற்குள் உணவைப் பத்திரமாக பதுக்கிக் கொண்டாள். மீண்டும் மேலேயொரு ஆடை. மலங்கழிக்க செல்லும் பாவனையோடு போத்தில் தண்ணீரோடு காட்டிற்குள் புகுந்தாள். காடெங்கும் அசையும் மரத்தின் இலைகள், தன்னைக் கண்காணிக்கும் காலத்தின் கண்களென அத்தை பதறினாள். பதினைந்து நாட்களாக காட்டுக்குள்ளேயே அமர்ந்திருக்கும் பூதவதியின் நிலையெண்ணி அத்தையால் எதுவும் செய்ய இயலாமாலிருந்தது. பூதவதி காத்திருக்கும் கருங்காலி மரத்தடியில் வேறு ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருடைய கையில் சிறிய கோடாரியும், தலையில் பெரிய கடகமொன்றுமிருந்தது. அத்தை புதரொன்றுக்குள் படுத்துக் கொண்டாள். கருங்காலி மரத்தின் கீழே நின்றவர் பூமியின் கீழே புதையுண்டு போவதைப் பார்த்து கூக்குரலிட்டாள். சத்தம் எழவில்லை. சில நிமிடங்கள் கழித்து அவள் சுயத்திற்கு திரும்பிய போது பூதவதியின் மடியில் கிடந்தாள். “என்னம்மா, சின்னப்பிள்ளையள் மாதிரி காட்டுக்குள்ள எதையோ பார்த்திட்டு கத்தி மயங்கிப் போறியள்” “எடியே, அது எதோ இல்ல. எங்கட கருங்காலி முனி” “நீ முனியைப் பார்த்துக் கத்தி, புலி என்னப் பிடிச்சுக் கொண்டு போகப்போகுது” என்றாள் பூதவதி. “அது இனிமேல் நடக்காது. நான் வீரையாவ போய் பார்த்து காவலுக்கு எல்லாமும் செய்து எடுத்துக் கொண்டு வந்திட்டன்” சொல்லியபடி அந்தப் பொட்டலத்தைக் கொடுத்தாள். பொட்டலம், குருதிக் கறையோடு திருநீற்று வாசமெழும் வெள்ளை நிறச் சுண்டுவிரல் போலவிருந்தது. “இதை உன்ர கழுத்தில கட்ட வேணும். புலியில்லை. எலி கூட உன்னை நெருங்காது. வீரையா சும்மா ஆளில்லை. விளங்குதா” என்றாள் அத்தை. பூதவதி சாப்பிட்டு முடித்தாள். கழுத்தில் பொட்டலத்தை கட்டிவிட்டு அத்தை காட்டை விட்டுப் புறப்பட்டாள். பூதவதி காட்டின் நடுவே சீற்றம் கொண்டு உலரும் பேய் மகளாய் தேசம் பார்த்து வெறித்திருந்தாள். வீட்டுக்கு ஒருவர் கட்டாயமாக இயக்கத்தில் சேர்ப்பிக்கப்பட்டார்கள். பிள்ளைகளைக் காப்பாற்ற வழியற்று சனங்கள் காடுகளுக்குள் பாய்ந்தனர். இரவும் பகலும் துரத்தப்பட்டனர். படையில் பலாத்கார ஆட்சேர்ப்புக்கு எதிராகக் கொதித்தனர். தெய்வங்கள் உறைந்த வெளியில் பிள்ளைகள் பலி கேட்கப்பட்டனர். வீடுகளுக்கு நடுவே சின்னச் சுரங்கங்கள் வளர்ந்தன. மூச்சுப்பிடித்து மண்ணுக்குள் கிடந்தனர். புறாக்கூடுகளுக்குள், சுடுகாடுகளுக்குள், வைக்கோல் போருக்குள், பாழ் கிணற்றுக்குள், குளத்துக்குள் என காலத்தின் வேட்டைப்பற்களுக்குள் சிக்க விரும்பாத மாம்சங்களாய் தப்பிக்க எண்ணினர். “பூமியிலுள்ள எல்லாவற்றுக்கும் எங்கட சனங்களின் ரத்தம் தேவைப்படுகிறது” விசாரணை முடிந்து விடுவிக்கப்பட்டிருந்த வியட்நாம் பெரியப்பா சொல்லிக்கொண்டிருந்தார். வீரையா காட்டின் எந்தப் பகுதியில் இருக்கிறாரென அறியவே விசாரணை நடந்திருக்கிறது.“அது இயக்கத்திற்கும் தெரியாது. ஆர்மிக்கும் தெரியாது. அமெரிக்காவுக்கும் தெரியாது, அன்ரன் பாலசிங்கத்துக்கும் தெரியாது” என்று நான் சொல்லும்போதே எனக்கும் தெரியாது என்று சொல்லியிருக்கவேணும். அது என்ர பிழை தான். அதுக்காக என்னை நீங்கள் துரோகி எண்டு நினைக்க வேண்டாம். கிட்டண்ணா யாழ்ப்பாணத்தில இருக்கும் போது, அவருக்கு நிறைய மாம்பழங்கள் குடுத்திருக்கிறன்” என்றிருக்கிறார். கடுமையான மழை பெய்து கொண்டிருந்த அதிகாலையில் காட்டிற்குள் போராளிகளின் நடமாட்டத்தைப் பார்த்த வீரையா வேறொரு திக்கில் ஓட்டம் பிடித்தார். ஆனால் பச்சை நிறப்பட்டுத் துணியையும், கால்கள் கட்டப்பட்டிருந்த மாடப்புறாவையும் அவசரத்தில் விட்டுச் சென்றிருந்தார். அணியின் தலைமை அதிகாரி அந்த இடத்தை ஆய்வு செய்ய கட்டளையிட்டார். ஆழ ஊடுருவி அப்பாவிச் சனங்களைக் கொன்று குவிக்கும் வன்கவர் வெறிப்படையைத் தேடிய அணியினரின் கண்களில் வீரையாவின் தளம் சிக்கியது. மறைத்து வைக்கப்பட்ட திருநீற்று மூட்டையும், பெருந்தொகைப் பணமும், நகைகளும், அறுக்கப்பட்ட புறாத்தலைகளும் கைப்பற்றப்பட்டது. பல்வேறு புலனாய்வு விசாரணைகளுக்குப் பிறகு வீரையாவின் இடமென உறுதியாயிற்று. காடெங்கும் விரவி தேடத் தொடங்கினர் போராளிகள். பூதவதியைப் போல பலருக்கு வீரையா பொட்டலம் கட்டிக் காவல் செய்திருக்கிறார். சிலரைத் தான் இயக்கத்தாலும் நெருங்க முடிந்தது. ஆனால் வீரையாவை அவர்கள் அன்று மதியமே நெருங்கிப் பிடித்தனர். வீரையா தன்னிடமிருந்த புறாக்களை அவர்களை நோக்கி வீசி தற்காத்திருக்கிறார். காட்டிற்குள் மண்டியிட்டு கைகளை உயர்த்தி “தனது எஜமானர்களின் குருத்தையுண்டு வாழும் பிராணிகள் அழிந்துபோம்” என்று மட்டும் வீரையா அறம்பாடியிருக்கிறார். அவர் கைது செய்யப்பட்ட செய்தி, வன்னி நிலம் முழுக்க பாய்ந்தோடியது. அவரிடம் காவல் வாங்கியவர்கள் எச்சிலை விழுங்க முடியாமல் தொண்டையைப் பிடித்துக் கொண்டு மிரண்டனர். செவிடன் ரத்தினம் உட்பட வீரையாவிற்கும் சனங்களுக்கும் இடைத்தரகராக இருந்தவர்கள் பலரையும் இயக்கம் சடுதியாக கைது செய்தது. அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை கணக்கிடப்பட்டது. ஆனால் அவரிடம் சென்று வந்த சனங்களை விசாரணைக்கு அழைக்கவில்லை. அந்தக் குழப்பமே பலருக்கு உறக்கத்தை தரவில்லை. வீரையாவை இயக்கம் சுட்டுக் கொல்லுமென அத்தை நம்பினாள். பூதவதி காட்டை விட்டு வெளியேறும் எண்ணத்தில் இருந்தாள். அத்தை வேண்டாமென தலைப்பாடாய் அடித்துக் கொண்டாள். “எத்தன நாளைக்குத் தான் இப்பிடி காட்டுக்குள்ள இருந்து ஆந்தை மாதிரி முழிக்க ஏலும். நான் போறன். அங்க போய்ச் சாகிறன்” “எடியே, நான் கும்பிடுகிற தெய்வம் உன்னைக் காப்பாத்தும். நீ கொஞ்சம் குழம்பாம இரு” “இல்ல, இஞ்ச காப்பாத்திற உன்ர தெய்வம், எல்லா இடத்திலையும் காப்பாத்தும் தானே, என்னால இனியொரு நிமிஷமும் இஞ்ச இருக்கேலாது” பூதவதியை கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் அத்தை. கழுத்தில் கிடந்த பொட்டலத்தை அறுத்து எறிந்தாள் பூதவதி. கழுத்துப் புடைத்து கண்கள் சிறுத்து புறாவாக எழுந்து பறக்க முனைந்தாள். அடுத்த கணத்தில் அவளது தலை அறுபட்டு நிலத்தில் துடிக்க, காடு ஒரு குப்பியாக அவளது குருதியை நிரப்பிக்கொண்டது. அய்யோ என்ர பிள்ளை என்று அத்தை எழுப்பிய சத்தம் கேட்டு நள்ளிராப் போழ்தின் நாய்கள் மிரண்டன. தலைமாட்டில் கிடந்த லாம்பைத் தீண்டி ஊரெழும்பியது. அத்தை வெளிச்சம் எதுவுமின்றி காட்டுக்குள் நுழைந்தாள். பூதவதியின் இருப்பிடம் நோக்கி அலறித் துடித்தது தாய்மை. ஒவ்வொரு திரளிலும் காடு இருளால் அசைந்தது. அத்தை நெடுமூச்சு விட்டு பூதவதி…பூதவதி என்று அழைத்துக் கொண்டே கருங்காலி மரத்தைக் கடக்கும் போது, அதில் நின்ற உருவம் அவளை மறித்தது. அத்தைக்கு திடுக்கிடல் எதுவுமில்லை. “என்ர முனியப்பா, வழிவிடு. துர்க்கனவு. பிள்ளையைப் பார்க்கவேணும்” முனி எதுவும் கதைக்கவில்லை. அவளைப் போ என்பதைப் போல கையசைத்தது. அத்தை பூதவதியின் இருப்பிடத்திற்குப் போன போது அங்கு அவளில்லை. இருளின் தோல் கிழித்து தன் பிள்ளையைத் தேடினாள் அத்தை. இல்லை, இல்லை. பூதவதி இல்லை. கையில் அகப்பட்ட கற்றையான தலைமுடியைப் பற்றிக் கொண்டு கதறியழுதாள். அவளுடைய காலணிகள் அறுபட்டிருந்தன. பொட்டலத்தின் முடிச்சு அவிழாமல் கழன்று விழுந்திருந்தது. காடுறைத் தெய்வங்கள் கண் மலர்த்தி கசிந்த கண்ணீர் இரவை எரியூட்டின. கருங்காலி மரத்தின் கீழே நின்றிருந்த முனிக்கு தகவல் வந்தது. அது தனது ஆயுதத்தை எடுத்துக் கொண்டு வாகனம் நிற்கும் திசையை நோக்கிப் போனது. அந்தக் காட்டிற்குள் மறைந்திருந்த எட்டுக்கு மேற்பட்டவர்களை அழைத்துக் கொண்டு முனியின் வாகனம் புறப்பட்டது அத்தைக்கு தெரியவில்லை. ஐந்து நாட்கள் கழித்து பூதவதி இயக்கத்தின் பயிற்சி முகாமிலிருந்தாள். அவளுக்கு ஆயுதத்தை தொடப் பிடிக்கவில்லை. தன்னால் முடியாதென மறுத்தாள். சில நாட்களுக்குப் பின் பயிற்சிக்கு ஒத்துக் கொண்டாள். மூன்று மாதங்களில் பயிற்சி முடிந்திருந்தது. வீரையாவின் பொட்டலம் கட்டப்பட்டிருந்த கழுத்தில் இப்போது நஞ்சு மாலை அணிந்தாள். பயிற்சி நிறைவு பெற்று தர்மபுரத்தில் நிகழ்ந்த போராளிகள் சந்திப்பில் பூதவதியைச் சென்று அத்தை பார்த்தாள். அவளுக்குப் பிடித்த பயித்தம் பணியாரமும், முறுக்கும் கொண்டு போயிருந்தாள். “நீ ஓடி வந்திடு. உன்ன நான் எப்பிடியாவது காப்பாத்தி வைச்சிருப்பன்” “அம்மா, எங்களை மன்னார் சண்டைக்கு அனுப்பப் போயினம். அங்க இருந்து வட்டக்கச்சிக்கு ஓடி வர ஏலுமே” “உனக்கு உந்த நக்கல் புண்டரியம் மட்டும் உதிர்ந்து தீராது என்ன” “அம்மா, உன்னோட இருந்தால் சாகாமல் இருக்க முடியுமோ சொல்லு. இஞ்ச எப்பிடியாய் இருந்தாலும் மண்ணுக்குள்ள தான். இந்தச் சாவில ஒரு ஆறுதல்” “என்னடி பிரச்சாரம் பண்ணுறியே” “பின்ன, கருங்காலி முனி மட்டும் என்ன, பயந்து செத்துப்போன தெய்வமே, துணிஞ்சு நிண்டவர் தானே, அதுமாதிரி நானும் நிண்டு சாகிறன். விடன்” “கருங்காலி முனியும் நீயும் ஒண்டோடி, என்னடி கதைக்கிறாய். துவக்கை கையில தூக்கினால் உங்களுக்கு தெய்வமும் தெரியுதுல்ல. கருங்காலி முனி, அண்டைக்கிரவு நான் ஓடி வரேக்க வழி மறிச்சு நிண்டது. பிறகு கை காட்டி போ எண்டு உத்தரவு சொன்னதெல்லாம் உனக்குத் தெரியாது” “அண்டைக்கு அங்க நிண்டது முனியில்லை. புலி. மேஜர் பகீரதன். பத்து நாளுக்கு முன்னாலதான் கிபிர் அடியில வீரச்சாவு அடைஞ்சிட்டார். “நீ முனியெண்டு நினைச்சு அவரிட்ட கதைச்சதை என்னட்ட சொல்லிச் சிரிச்சவர்” என்றாள். “இவங்கள் முனியாவும் உருமறைப்பு செய்யத் தொடங்கிட்டாங்களே” “இப்ப அவரும் முனி தான். நீ போய்ப்பார். கருங்காலி மரத்தடியில நிற்பார்” பூதவதி சிரித்துக் கொண்டு விடைபெற்றாள். “என்ர தெய்வமே” என்று அத்தை தன்னுடைய பிராணத்தை இழுத்து வெளியேற்றினாள். வீட்டிற்கு வந்து அழுதழுது நொந்தாள். சனங்களை ஏமாற்றி காசு, நகை போன்றவற்றை வாங்கியமைக்காக வீரையாவுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதாக செய்திகள் உலவின. மன்னார் களமுனையில் பூதவதி சமராடினாள். பகைவர் அஞ்சும் போர்க்குணத்தோடு எல்லையில் நின்றாள். விடுமுறை அளித்தும் வீடு செல்ல மாட்டேனென அடம்பிடித்தாள். மன்னாரில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான களமெங்கும் அனலாடினாள். அத்தை வீட்டுக்கு வருமாறு கடிதத்துக்கு மேல் கடிதம் கொடுத்தனுப்பினாள். பூதவதி வருவதாயில்லை. முள்ளிவாய்க்காலில் அத்தையை கூடாரத்தில் வந்து பார்த்தாள். அத்தை இப்படியே இங்கேயே தங்கிவிடு என்று கைகூப்பினாள். பூதவதி கூடாரத்தை விட்டு தனது அணியினரோடு புறப்பட்டாள். சில நாட்களில் சனங்கள் நிலத்தைக் கைகூப்பி தொழுதனர். நிலம் அவர்களை மட்டுமல்ல தன்னையும் பறிகொடுத்தது. இறுதிப்போரில் காணாமல்போனவர்கள் பட்டியலில் பூதவதியுமொருத்தியானாள். அத்தை சோதிடர்கள் சொல்வதைக் கேட்டு பூதவதி வருவாள் என்று நம்பிக் காத்திருந்தாள். ஊருக்குள் எல்லோரும் மீளக்குடியமர்த்தப்பட்டனர். நீண்ட வருடங்களின் பின்னர் பன்றி வேட்டைக்குச் சென்று திரும்பியவர்கள் கருங்காலி மரத்தின் கீழே பெண்ணொருத்தி நின்று மறைவதைக் கண்டிருக்கிறார்கள். அவளுடைய கழுத்தில் சுண்டு விரலளவில் பொட்டலம் தொங்கிக் கொண்டிருந்ததாகவும், தோளில் புறாவொன்று கால்கள் கட்டப்பட்டு பறக்க முடியாமல் சிறகடித்ததாகவும் சொன்னார்கள். அத்தை மறுகணமே கருங்காலி மரம் நோக்கி ஓடிச் சென்று பூதவதி… பூதவதி… என்று நிலம் தோய அழுதாள். மரம் அசைய மேலிருந்து நறுமணம் கமழ பொட்டலங்கள் உதிர்ந்தன. அத்தை ஒன்றைப் பிரித்துப் பார்த்தாள். ரத்தம் கண்டி நாள்பட்டிருந்த பூதவதியின் கால் பெருவிரல். “என்ர தெய்வமே” யென அதைக் கண்களில் ஒத்திக்கொண்ட அத்தையை நடுநடுங்கிப் பார்த்துக் கொண்டிருந்தது காடு. அத்தையின் முன்னே தோன்றி நின்றனர் பல்லாயிரம் முனிகள். https://akaramuthalvan.com/?p=11671 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 03 திலகாவுக்கு புற்றுநோய் என்ற தகவலை சிவபாதசுந்தரம் மாமாவின் துவச வீட்டில் வைத்துத்தான் கேள்விப்பட்டோம். புதுக்குடியிருப்பிலிருக்கும் திலகாவை பார்க்க அம்மாவும் நானும் கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டோம். தீர்ந்த போரின் சிறிய எச்சங்களையும் அழித்தொழிக்கும் தீவிரத்தோடு வேலைகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன. “சமாதானத்திற்கான போர்” வெற்றியின் வீரப்பிரதாபங்கள் வீதிகளின் இருமருங்கிலும் காட்சியாகியிருந்தன. அப்பாவிச் சனங்களின் குருதியாற்றின் தடயம் அழிக்கப்பட்டு புனரமைக்கப்பட்ட வீதியில் வாகனங்கள் விரைந்தன. “பேரழிவு முடிஞ்சுது எண்டு பார்த்தால், மிஞ்சியிருக்கிற எங்களுக்குள்ளேயும் அது ஒளிஞ்சு கிடக்குது போல. பாவம் திலகா. எத்தனை இடியைத் தான் தாங்குவாள்” அம்மா புலம்பினாள். “இப்ப எல்லாருக்கும் உந்தக் கோதாரி கான்சர் தான் வருகுது. சண்டையில உவங்கள் அடிச்ச பொசுபரசுதான் வேலையக் காட்டுதாம்” பக்கத்து இருக்கையிலிருந்தவர் சொன்னார். அம்மா வலதுகையின் ஆட்காட்டி விரலால் கண்ணீரைத் தொட்டுச் சுண்டினாள். மீண்டும் பொல பொலவென கண்ணீர் பெருகியது. “அதைச் சும்மா விடுங்கோ. துடைக்க துடைக்கத்தான் எங்கையோ இருந்து உடைப்பு எடுக்குது. ஒரு பிரயாணத்தில அழுது தீர்ந்து போகிற அளவுக்கா எங்கட உத்தரிப்புகள். அதை துடைக்காம விடுங்கோ” பக்கத்து இருக்கைக்காரர் சொன்னார். அவருடைய தலையின் ஒருபகுதி பள்ளமாக இருந்தது. நான் பார்ப்பதை விளங்கிக் கொண்டவர் “சுதந்திரபுரத்தில விழுந்த அஞ்சு இஞ்சி ஷெல். மண்டையோட்ட வைச்சு பிச்சை கேக்கிறனெண்டு நினைச்ச தெய்வம் இரங்கிக் காப்பாத்தி போட்டுது” என்றார். பேருந்திலிருந்து இறங்கினோம். திலகா வீட்டை அடைவதற்கு பிரதான வீதியிலிருந்து கொஞ்சத்தூரம் நடக்க வேண்டியிருந்தது. சிலவருடங்களுக்கு முன்பு நானும் தவேந்திரன் மாமாவும் இப்படியொரு பொழுதில் இந்தப் பாதை வழியாக நடந்து போனோம். பெருமூச்சை விட்டு ஆசுவாசமானேன். தவேந்திரன் மாமா இருபதாண்டுகளுக்கு மேலாக இயக்கத்திலிருந்தவர். பல களமுனைகள் கண்டவர். உடலெங்கும் விழுப்புண் தழும்புகள். போர் மறவர். பகையறிந்த பெயர் திலகா. உக்கிரம் கொண்டாடும் காளி. தாக்குதல்களில் அவளணி பெற்ற வெற்றிகள் பெருநிரை. தவேந்திரன் மாமாவுக்கும் திலகாவுக்கும் நீண்ட வருடங்கள் காதலுறவு. இரண்டு பேரின் தளபதிமாரும் ஒப்புதல் அளிக்க திருமணம் நடந்தேறியது. தவேந்திரன் மாமாவை இனி களம் செல்ல வேண்டாமென தலைமைச் செயலகம் உத்தரவு பிறப்பித்தது. அதனை ஏற்கமறுத்து அறிக்கை எழுதினார். ஒருநாள் இரவு தவேந்திரன் வீட்டு முற்றத்தில் வந்து நின்ற வாகனத்தை விட்டு, தலைவர் இறங்கினார். இருவருக்கும் திருமணப் பரிசு வழங்கி வாழ்த்தினார். தடல்புடலாக சமைத்து விருந்துண்டார்கள். “தவா நீ இனிமேல் சண்டைக்கு போகவேண்டாம். படையணி நிர்வாகத்தில வேலையைப் பார்” என்றார் தலைவர். “இல்லை அண்ணா நான் லைனுக்கு போறன், நிர்வாகம் எனக்குச் சரிவராது” என்று மறுத்தான் போட்டார். “நிர்வாகம் சரி வராட்டி என்னோட வந்து நில், அது உனக்கு சரிவருமோ” என்று தலைவர் கேட்டதும் தவேந்திரன் மாமாவுக்கு ஒன்றும் ஓடவில்லை. சரியென்று தலையசைத்தார். இரவு தீர்வதற்கு முன்பு வாகனம் அங்கிருந்து புறப்பட்டது. அம்மாவுக்கு ஆயிரம் தவிப்புக்கள். திலகாவின் விதி நினைத்து கலங்கினாள். ஊருக்குள் ஆங்காங்கே மனிதர்களின் நடமாட்டமிருந்தது. முழுதாய் சனங்கள் இன்னும் மீளக்குடியேற்றப்படவில்லை. போராளிகளின் புழக்கத்திலிருந்த வீடுகள் இராணுவம் முகாம்களாகியிருந்தன. திலகாவின் வீடு மாமரங்களுக்கு நடுவே இருந்தது. படலையை ஒட்டியிருக்கும் வைரவர் கோவில் கவனிப்பாரற்றுக் கிடந்தது. “இந்தக் கோயில கூட்டித் துப்பரவு செய்து குடுத்திட்டு போவம்” என்றாள் அம்மா. உள்ளே நுழைந்ததும் பாழடைந்து சிதைந்திருந்த பதுங்குகுழியைக் கண்டேன். தென்னங்குத்திகள் உக்கிக் கிடந்தன. அதனுள்ளிருந்து வெளியேறிய வீமனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அம்மா வீமன் என்றழைத்ததும் மூன்று கால்களால் கெந்திக் கெந்தி ஓடிவந்தான். அவனுக்கு முன்னங்கால் ஒன்று இல்லாமலிருந்தது. அவனுடைய குழைவும் வாலாட்டலும் வரலாற்றின் எஞ்சுதல். அம்மாவின் கையயும் முகத்தையும் நக்கித் துள்ளிக் குதித்தான். வீமனின் சத்தம் கேட்டு சாய்மனைக்கதிரையில் அமர்ந்திருந்த திலகா திரும்பினாள். அம்மாவை அடையாளம் கண்டவுடன் எழுந்தோடி வந்து கட்டியணைத்தாள். அவளுடைய உடலில் கலக்கத்தின் நடுக்கம், ஆற்றாமையின் அலைச் சீற்றம். ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்ல இயலாத ஆகக் கொடிய இருளில் அம்மாவும் திலகாவும் விம்மி அழுதனர். கொஞ்ச நேரம் எதுவும் கதையாமல் நின்றிருந்தோம். வீமன் தளர்ந்த தனது குரலினால் ஆனந்தம் பொங்க எட்டுத் திக்குகள் நோக்கி குரைத்தான். திலகா என்னை அணைத்து முத்தமிட்டாள். மாமரங்கள் பூத்திருந்தன. அன்றிரவு திலகாவுக்கு பிடித்த பால்புட்டை சமைத்துப் பரிமாறினாள் அம்மா. வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்து நிறையைக் கதைத்தோம். திலகா என்னிடம் “ உனக்கு உந்த பங்கர் ஞாபகம் இருக்கோடா” கேட்டாள். “நானும் மாமாவும் நாலு நாளில அடிச்ச பங்கரெல்லே, எப்பிடி மறக்கேலும்”. அம்மா அடுப்படியில் அப்பத்திற்கு மா தயாரித்தாள். பிடித்தது அப்பமா? தவேந்திரன் மாமாவா? என்று கேட்டால் திலகாவின் பதில் எப்போதும் அப்பமாகவிருக்கும். நாளைக்கு காலையில் குளத்தடிக்குச் சென்று மீன் வாங்கிவரவேண்டும். அங்குள்ள குளத்து மீனுக்கு நிகர்த்த உருசை எந்தச் சமுத்திர மீனுக்கும் இல்லை. வீமன் என்று குரல் கொடுத்தேன். பதுங்குகுழிக்கு மேலே வந்து நின்று, திக்குகள் பார்த்து என்னிடம் ஓடிவந்தான். “வீமன் உந்த பங்கருக்குள்ளேயே தான் இருக்கிறான். கூப்பிட்டால் தான் வெளிய வருகிறான்” திலகா சொன்னாள். “இவ்வளவு சண்டைக்குள்ளையும் உயிர் தப்பி நிண்டிட்டான். இவனைப் பார்த்ததும் என்னால நம்ப முடியேல்ல” என்றேன். “வீமனுக்கு முன்னங்கால் போன மூன்றாவது நாள் இஞ்ச இருந்து வெளிக்கிட்டனான். எங்கட மெடிக்ஸ் ஆக்களக் கூப்பிட்டு மருந்து கட்டி உந்த பங்கருக்குள்ளேயே விட்டிட்டு போனான். இத்தனை வருஷம் கழிச்சு திரும்ப வந்தால் வாலாட்டிக் கொண்டு வைரவர் கோயில் கருவறைக்குள்ள படுத்திருக்கிறான்.” வீமன் எனக்கருகே விழித்திருந்தான். அவனுடைய மூன்று கால்களையும் தடவிக் கொடுத்தபடியிருந்தேன். கண்கள் துஞ்சி சுகம் கண்டான். திடுமென விழித்தோடி பதுங்குகுழிக்குள் புகுந்தான். அம்மா சாயத்தண்ணி போட்டுக் கொண்டு வந்தமர்ந்து, “நாளைக்கு காலம்பிறயே வைரவர் கோயிலைத் துப்பரவு செய்யவேணும், வெள்ளன எழும்பு” என்றாள். “இப்ப எதுக்கு அதெல்லாம் செய்து முறியிறியள். சும்மா இருங்கோ. நீ ஆறுதலாய் எழும்படா” என்றாள் திலகா. “நீ சும்மா இரு. வளவோட வாசலில இருக்கிற தெய்வத்தை பூசிக்காம விட்டு இன்னும் தரித்திரத்த அனுபவிக்க ஏலாது” அம்மா இறுக்கமாகச் சொன்னாள். திலகா பதிலேதும் கதையாமல் சாயத்தண்ணியைக் குடித்து முடித்தாள். பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனவைகள் பற்றி எதுவும் கதைப்பதில்லை என அம்மா உறுதி பூண்டிருந்தாள். மூவரும் ஒன்றாக உறங்கச் சென்றோம். லாம்பைத் தணித்து தலைமாட்டில் வைத்துக் கொண்ட அம்மா “வெள்ளனவா எழும்பு, உன்னை எழுப்புறத ஒரு வேலையாக்கிப் போடாத” என்றாள். அருந்திய மருந்துகளின் வெக்கையில் உறங்கியிருந்த திலகாவை அம்மா போர்த்திவிட்டாள். என்னை உறக்கம் சேரவில்லை. இந்த வீட்டில் அளவற்ற ஒளியும் மகிழ்வும் நிறைந்திருந்த தருணங்கள் கண்ணுக்குள் நிறைந்தன. ஞாபகத்தின் ஒவ்வொரு துளியும் இரவின் தாழ்வாரத்தில் கோர லயத்துடன் விழத்தொடங்கின. அடுப்படிக்குத் தண்ணீர் குடிக்க போனேன். குடத்தைச் சரித்து செம்பில் நிறைத்தேன். ஆசுவாசத்திற்கு எதுவுமில்லை. மீண்டும் படுக்கைக்குப் போனேன். தணித்து வைக்கப்பட்டிருந்த லாம்பின் வெளிச்சம் விழிப்புக்கு துணையாகவிருந்தது .” “அழுதால் பயனென்ன நொந்தால் பயனென்ன ஆவதில்லை; தொழுதால் பயனென்ன நின்னை ஒருவர் சுடவுரைத்த பழுதால் பயனென்ன; நன்மையும் தீமையும் பங்கயத்தோன் எழுதாப்படி வருமோ; சலியாதிரு ஏழைநெஞ்சே” என்றுரைத்த பட்டினத்தாரை நெய்யென என்னுள் ஊற்றினேன். உறக்கம் அழிந்தது. அகலென மனம் சுடர்ந்தது. லாம்பைக் கையிலேந்தியபடி வீட்டின் வெளியே வந்தேன். காற்றணைத்தது. ஆனாலும் மாமரங்கள் அசையாதிருந்தன. இருளினுள்ளே உடல் நுழைத்து அசையாது நின்றேன். பதுங்குகுழியிலிருந்து வெளிச்சம் பிறந்திற்று. அது நொடிக்கு முன் அணைந்த லாம்பின் வெளிச்சத்தை ஒத்திருந்தது. மெல்லமாக வீமன் என்று குரல் கொடுத்தேன். அவன் வருவதாயில்லை. ஆனால் பதுங்குகுழிக்குள் அவனுடைய நடமாட்டத்தின் ஒலி துல்லியமாகக் கேட்டது. முன்னோக்கி பாதங்களை வைத்து பதுங்குகுழியை நெருங்கினேன். வீமன் வருவதற்கும் போவதற்குமான பாதையே இருந்தது. என்னால் உள்ளே செல்ல முடியவில்லை. உள்ளே கட்டளைகள் வழங்கும் சத்தம் கேட்டது. எக்கோ – த்ரீ, எக்கோ – த்ரீ ஓவர் ஓவர்.. நான் என்ர பக்கத்தால ஒரு அணியை அனுப்புறன். உங்கட எட்டில வைச்சு ஒரு தள்ளுத்தள்ளுங்கோ. விளங்குதா! “ஓமோம்…இனியவன் நீ ரெண்டு நாகத்த எடுத்துக் கொண்டு போ. அது காணும்…டெல்டா – பைவ் நான் சொல்றது விளங்குதா” சமர்க்களத்தின் உரையாடல்கள் தொடர்ந்தன. வீமன் யாரையோ நக்கிக்கொடுத்து குழையும் சிணுங்கல். ஒளியூறித் தளும்பும் பதுங்குகுழியின் மீது ஏறிநின்று “வீமன் வெளிய வா” என்று நானும் கட்டளையிட்டேன். சில நொடிகளில் வெளியே வந்து “ தம்பியா, சுகமோடா” என்று கேட்டார் தவேந்திரன் மாமா. அதிகாலையில் விழித்தெழும்பிய அம்மா தலைமாட்டில் கிடந்த லாம்பையும் என்னையும் காணாது தவித்தாளாம். அம்மாவின் திகைப்பும் அல்லலும் திலகாவை எழுப்பியிருக்கிறது. ஒரு டோர்ச் லையிற்றை கையில் பிடித்தபடி திலகா “வீமன்” என்று குரல் கொடுத்திருக்கிறாள். பதுங்குகுழியிலிருந்து பாய்ந்து சென்றிருக்கிறது. மூவருமாய் சேர்ந்து என்னைத் தேடிப் பார்த்திருக்கிறார்கள். திலகாவுக்கு கணத்தில் உறைத்து “வைரவர் கோவிலுக்கு போய் துப்பரவு செய்யிறானோ” என்றிருக்கிறாள். அங்கு சென்றிருக்கின்றனர். லாம்புமில்லை நானுமில்லை. முற்றத்திலிருந்த என்னுடைய காலடித்தடத்தைப் பார்த்து பதுங்குகுழியை வந்தடைந்து இருக்கிறாள் அம்மா. “அவன் இதுவரைக்கு வந்திருக்கிறான் திலகா. கால்தடம் இருக்கு” “இஞ்ச எதுக்கு வந்தவன். அதுவும் இந்த இருட்டுக்குள்ள” திலகா பங்கருக்கு மேலே ஏறி, மூடியிருந்த மண்ணையும் செடிகளையும் அகற்றி இடுக்கு வழியாகப் பார்த்தபோது உள்ளே நான் மயங்கிக் கிடந்திருக்கிறேன். திலகா பதறாமல் “அவனுள்ள படுத்திருக்கிறான்” என்று அம்மாவிடம் சொல்லியுள்ளாள். “பாம்பு பூச்சி இருந்தாலும்” என்று சொல்லி உள்ளே நுழைய முனைந்த அம்மாவுக்கு எந்தப்பக்கம் வாசலென்று தெரியவில்லை. “இருங்கோ வீமன் போகத்தான் ஒரு சின்ன வாசல் இருக்கு. நாங்கள் சைட்டால ஒரு பாதை வெட்டலாமென்று திலகா மண்ணை வெட்டி வீசியிருக்கிறாள்” அவளுக்கு நடப்பதெல்லாம் குழப்பத்தையே தந்தது. ஆனால் அம்மாவிடம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. வாசலை உண்டு பண்ணி உள்ளே நுழைந்த திலகாவுக்கு பதுங்குகுழியினுள்ளே அடர்ந்திருந்த வாசனை வெறிகொள்ளச் செய்தது. அவள் மூலை முடுக்கெல்லாம் தவா…தவா… என்று கதறியபடி மோதுண்டாள். ஆலாலமுண்டவனை பூமி குடைந்து தேடியரற்றும் அணங்கானாள். வெளியே நின்ற அம்மா உள்ளே ஓடிவந்தாள். திலகாவை அம்மா கட்டுப்படுத்தமுடியாமல் திணறினாளாம். என்னைத் தட்டியெழுப்பியும் சுயநினைவற்று மயங்கிக் கிடந்திருக்கிறேன். நடந்தவற்றையெல்லாம் பின்பு அம்மா சொன்னாள். அடுத்தநாள் பதுங்குகுழியைத் துப்பரவு செய்தோம். வைரவர் கோவிலில் இருந்த விக்கிரத்தையும், சூலத்தையும் தூக்கி வந்து பதுங்குகுழிக்குள் பிரதிஷ்டை செய்தோம். அந்த ஊரிலிருந்த சிலருக்கு அன்னதானம் கொடுத்தோம். மூன்று கால்களோடு வீமன் பதுங்குகுழிக்குள் உறங்கிக் கிடந்தான். “பங்கர் வைரவர்” என்றனர். அம்மாவும் நானும் அங்கிருந்து புறப்பட்ட போது பதுங்குகுழிக்குள் படுத்திருந்த வீமனிடம் “நாங்கள் போய்ட்டு வாறம் தவேந்திரன் மாமா” என்றேன். மூன்று கால்களும் திரிசூல இலைகளாய் எழுந்து ஒளிர விடைகொடுத்தான் எங்கள் வீமன். https://akaramuthalvan.com/?p=11341 point - இந்த ஆண்டு வீதி விபத்துகளில் இதுவரை 2163 உயிர்ப் பலிகள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.