Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    21
    Points
    8975
    Posts
  2. putthan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    14707
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33807
    Posts
  4. P.S.பிரபா

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1866
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/15/24 in all areas

  1. 9 points
    2007, நான் அத்தொழிற்சாலையில் இணைந்து கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகியிருந்தது. என்னைப்போலவே இங்குவந்து, தம்மை நிலைநிறுத்திக்கொள்ள பல இந்தியர்களும், இலங்கையர்களும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலம். வெள்ளை நிறத்தவரின் தொழிற்சாலை, வேலைத்தளத்தில் அணியின் மேலாளர்களில் இருந்து அதியுயர் நிர்வாகத் தலைவர்கள் எல்லோருமே வெள்ளை நிறத்தவர்கள். அவர்களுடன், அவர்கள் பேசும் மொழியினையும், பேசும் சங்கேத வார்த்தைகளும் விளக்கமேயின்றிக் கேட்டுக்கொண்டு, அருகில் இருப்பவன் சிரித்தால், நாமும் சிரித்துக்கொண்டு, வேலைத்தளத்தில் சமூகப் படிகளில் நாம் ஏறலாம் என்று நினைத்திருந்த காலம். எனது வேலைத்தள அணியில் 20 பேர் இருந்தோம். எமது மேலாளர் ஒரு வெள்ளையினத்தவர். சுவிட்ஸர்லாந்தில் பிறந்து, இங்கு வளர்ந்தவர். சிலவேளைகளில் அவர் பேசுவதைக் கிரகிப்பதற்குள் அவர் அடுத்த வசனத்தைத் தொடங்கிருப்பார். புரிந்துகொள்வதற்குச் சிரமப்பட்டுக்கொண்டே பணிபுரிந்த காலம். சிலவேளைகளில் நாம் அவர்கள் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே ஆறுதலாய்ப் பேசுவர்கள். அதுகூட சிலவேளை சிரமாகத் தெரிந்தது. என்ன உலகமடா இது என்று சலித்துக்கொண்ட பொழுதுகள். ஆனால், அணியிலிருந்த வெள்ளையர்களை விட நம்மவர் வேலைகளில் சுறுசுறுப்பானவர்கள். ஊரில் கஸ்ட்டப்பட்டு வேலை தேடி, அதனைத் தக்கவைத்துக்கொள்ள அதைவிடக் கஸ்ட்டப்பட்டு வேலை செய்யும் எமக்கு இங்குள்ள வேலை கடிணமானதாகத் தெரியவில்லை. ஆகவே, வேலையென்றால் கூப்பிடுங்கள் இலங்கையர்களையும் இந்தியர்களையும் என்று வெள்ளையர்களே அவ்வப்போது பேசுவது கேட்கும். கடிண உழைப்பாளிகள் என்கிற பெயரும் எமக்கு இருந்தது. அதனால், வழமை போலவே மேலாளரின் செல்லப்பிள்ளைகள் யாரென்பதில் எமக்குள்ப் போட்டி ஏற்படுவதுண்டு. எம்மிடம் வேலை வாங்கலாம் என்று அவர் எண்ணி வந்தபோதிலும், நாம் அதனை ஒரு கெளரவமாக பார்க்க ஆரம்பித்தோம். ஆகவே, எம்மைத்தவிர வேறு எவரும் மேலாளரின் மதிப்பிற்கு பாத்திரமாயிருப்பது எமக்கு எரிச்சலைத் தரும். அந்தக் காலமொன்றில்த்தான் அவன் வந்தான். என்னை விட வயதில் சிறியவன். 26 அல்லது 27 வயதிருக்கலாம். மிகவும் திடகாத்திரமானவன். வெள்ளையினத்தவன். சுருள் சுருளான மயிர்க்கற்றைகள் பொன்னிறத்தில் வளர்ந்திருக்க தனது பெயர் சொல்லி ஒருநாள்க் காலையில் அணியின் கூட்டத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டான். அவன் பற்றி மேலாளர் அறிமுகம் கொடுத்தபோது மனதிற்குள் சிறிய எரிச்சல். "எமக்கெல்லாம் இந்த அறிமுகம் கொடுத்தார்களா, இல்லையே? இவனுக்கு மட்டும் எதற்கு இந்த அறிமுகம்?" என்கிற கேள்வி. விடை எமக்குத் தெரியவில்லை. அணியில் பணிபுரிந்தவர்களில் கீழ்மட்ட வேலைகள், இடைநிலை வேலைகள், உயர் நிலை வேலைகள் என்று மூன்று பிரிவுகளாகாப் பிரிக்கப்பட்டிருந்தோம். இடைநிலை வேலைகளை பெரும்பாலும் இந்தியர்களும் இலங்கையர்களும் செய்துகொள்ள கீழ்மட்ட வேலைகளையும் உயர் மட்ட வேலைகளையும் வெள்ளையர்களே பார்த்துக்கொண்டார்கள். அவனும் கீழ்மட்டத்திலிருந்தே ஆரம்பித்தான். எமக்குக்கீழ் இருக்கிறான் என்பதால் அவன் பற்றி அதிக அக்கறை காண்பிப்பதை நாம் மறந்துவிட்டோம். ஆனால், அடிக்கடி அணிக் கூட்டங்களில் அவனின் பெயர் அடிபடும். அவனது பெயரை அணியின் மேலாளர் உச்சரிக்கும்போது வியப்பும், எரிச்சலும் ஒருங்கே வந்து போகும். ஆனாலும் அவன்குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என்று இருந்துவிட்டோம். நாட்கள் செல்லச் செல்ல அவன் அணியில் முக்கியமானவர்களில் ஒருவனாகிப் போனான். கூட்டங்களில் அவன் பேசுவதை மேலாளர் உன்னிப்பாகக் கேட்பது புரிந்தது. அவன் ஈடுபட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து அவர் அடிக்கடி பெருமையுடன் பேசும்பொழுதுகளில் அதே எரிச்சல் வந்து போகும். ஆனால், அவன் குறித்த எமது பார்வைகள் தவறானவை என்பதை அவன் தொடர்ச்சியாக நிரூபித்து வந்தான். இலங்கையில் பொறியியல் படித்துப் பட்டம் பெற்றவன் என்கிற பெருமையும், இங்கிருக்கும் வெள்ளைக்காரனை விடவும் நாம் படித்தவர்கள் என்கிற எண்ணமும் அவனை எம்மிலும் கீழானவனாகப் பார்க்கத் தூண்டியது எமக்கு. அதனாலேயே அவனின் திறமைகளை ஏறெடுத்தும் பார்க்க நாம் நினைக்கவில்லை. ஆனால் எமது எண்ணங்களையும், பெருமைகளையும் அவன் மிக இலகுவாக உடைத்துக்கொண்டே எம்மை நோக்கி வந்துகொண்டிருந்தான். ஒருநாள் திடீரென்று கீழ்மட்ட அணியில் இருந்த அவனை எமது, அதாவது நடுத்தர வர்க்க அணியில் கொண்டு வந்து இணைத்தார் மேலாளர். எமக்கோ தூக்கிவாரிப் போட்டது. "இது எப்படித் தகும்? நாம் படித்தவர்கள் இல்லையா? பண்ணைகளில் ஆடு மாடு மேய்த்துக்கொண்டு நின்றவனை எம்மோடு, சரிக்குச் சமமாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். வெள்ளைக்காரன் என்பதால்த்தானே இதுவெல்லாம்?" என்கிற எண்ணம் தலையில் ஏறி அமர்ந்துகொள்ள அவன் மீது தேவையில்லாமல் எரிச்சலை வாரியிறைக்கத் தொடங்கினோம். ஆனால், அவனுக்குத்தான் நாம் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறோம் அல்லது எமக்குள் என்ன பேசிக்கொள்கிறோம் என்பதுபற்றி எதுவும் தெரியாதே? அவனோ எம்மிடம் மிகவும் சகஜமாகப் பழகினான். சில வேளைகளில் எம்மிடமே வந்து சில விடயங்களை எப்படிச் செய்யலாம் என்று கூடக் கேட்பான். விரும்பாதுவிடினும் கூட, அவன் கேட்கும்போது நாம் உதவியிருக்கிறோம். அவனும் நன்றியுடன் சென்றுவிடுவான். சில காலத்தின் பின்னர் இந்தியர்கள் மற்றும் இலங்கையர்கள் என்று கிட்டத்தட்ட ஒரே காலப்பகுதியில் வேலையில் இணைந்தவர்களுக்கு அணியில் மேல்த்தட்டுப் பிரிவில் பதவி உயர்வு கிடைத்தது. அவ்வாறு பதவி உயர்வு கிடைத்துச் சென்றவர்களில் நானும் ஒருவன். மூன்று அல்லது நான்கு வருடங்கள் இருக்கலாம். 2010 வாக்கில் அவனையும் பதவியுயர்வு கொடுத்து எமக்குச் சமனானவனாக ஆக்கி அழகுபார்த்தது நிர்வாகம். இத்தனைக்கும் அவன் எம்மை வெறுக்கவில்லை. நிர்வாகத்திற்கு நெருக்கமானவன் என்பதைத்தவிர அவனை நாம் வெறுப்பதற்கு வேறு எந்த காரணங்களும் எமக்கு இருக்கவில்லை. அவன் குறுகிய காலத்தில் காட்டிய அதீத வளர்ச்சி எமக்குள் அச்சத்தை ஏற்படுத்தியிர்ந்தாலும் கூட, அவன் எமக்குப் போட்டியாக வரலாம் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.
  2. 6 points
    ஒரு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் சென்றிருக்கலாம், 2012 என்று ஞாபகம். எமக்கு அடுத்த நிலைக்கான பதவி ஒன்று வெற்றிடமாகவ வரவே நானும் இன்னும் இரு இந்தியர்களும் அந்த நிலைக்கு விண்ணப்பித்தோம். 6 வருடங்களாக அந்தத் தொழிற்சாலையில் பணியாற்றி வருவதால் அனுபவமும், தேர்ச்சியும், ஆங்கிலத்தில் ஓரளவிற்குச் சரளமாகப் பேசும் வல்லமையும் வந்து சேர்ந்துவிட்டதால், நேர்முகப்பரீட்சையில் இலகுவாக சித்தியடைந்துவிடலாம் என்று எண்ணியிருந்தேன். நேர்முகப் பரீட்சை நாள். வீட்டில் நான் செய்த தயார்ப்படுத்தல்களும், என்னைவிட வேறு எவரும் இந்தப் பதவிக்குத் தகுதியற்றவர்கள் இல்லை என்கிற அகம்பாவமும் ஒன்றுசேர நேர்முகப் பரீட்சையினை எதிர்கொண்டேன். ஆனால், அங்கும் ஒரு சிக்கல் இருந்தது. எனது அணியில் எனக்கு சற்று மேலான பதவியில் இருந்து பின்னர் மேற்பதவியொன்றில் பணிபுரிந்த ஒருவனும் நேர்முகப் பரீட்சைக்கான மூன்று தேர்வாளர்களில் ஒருவனாக இருந்தான். அவனுடன் அடிக்கடி நான் முரண்பட்டுக்கொண்டது நினைவில் வந்து போகவே அன்று காலையில் இருந்த அகம்பாவம் முற்றாகக் களைந்துபோக, எச்சரிக்கையுணர்வு மனதில் குடிபுகுந்து கொண்டது. நேர்முகத் தேர்வு கடிணமானதாக இருக்கவில்லை எனக்கு. எல்லாமே தெரிந்த விடயங்கள் தான். முடிந்தவரையில் மிகவும் நீண்ட பதில்களை அளித்தேன். "போதும் அடுத்த கேள்விக்குப் போகலாம்" என்று தேர்வாளர்களே இடைமறித்த சமயங்களும் இருந்தது. சுமார் 45 நிமிடங்கள் பேசியிருப்பேன், மிகுந்த நம்பிக்கையுடன், தேர்வு அறையினை விட்டு வெளியே வந்தேன். மறுநாள் என்னுடன் அதே பதவிக்கு விண்ணப்பித்த இரு இந்தியர்களையும் சந்தித்தபோது, என்னைப்போலவே தாமும் சிறப்பாகச் செய்ததாகக் கூறியபோதும் எனக்குள் இருந்த நம்பிக்கை சிறிதும் அசையவில்லை. ஆனால், அன்று மாலையே திடீரென்று மனதில் இடி வீழ்ந்தது போலாகிவிட்டது. நாம் விண்ணப்பித்த அதே பதவிக்கு அவனும் விண்ணப்பித்திருந்தான் என்பதும், அவனும் மிகவும் திறமையாக நேர்முகத் தேர்வைச் செய்தான் என்பதும் எனக்குத் தெரிய வந்தது. நம்பமுடியவில்லை. "இது எப்படிச் சாத்தியம்? நாம் விண்ணப்பிக்கும் பதவி எம்மைப்போன்ற அனுபவம் உள்ளோருக்கானது. இவனோ சின்னப் பையன், எமது அனுபவத்துடன் ஒப்பிடும்போது, மிகக் குறைந்த அனுபவத்தைப் பெற்றிருந்தவன். இவனை நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருக்கவே கூடாது" என்று மனம் சொல்லியது. அடுத்தவாரம் நேர்முகத் தேர்வின் முடிவுகள் வெளிவரவே நாம் மனமுடைந்து போனோம். எவரும் எதிர்பார்க்காதிருக்க, அவனுக்கு அந்தப் பதவியினை நிர்வாகம் கொடுத்தது மட்டுமல்லாமல் அவனையே எமக்குப் பொறுப்பான மேலாளனாகவும் ஆக்கியது. பெருத்த கோபமும், அதிர்ச்சியும், எரிச்சலும் வந்து மனதில் குடிகொண்டது. இந்தியர்களையும், இலங்கையனான என்னையும் வேண்டுமென்றே தவிர்த்து தமது இனத்தவனை பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள் என்று எமக்குள் பேசத் தொடங்கினோம். இது ஓரளவிற்கு உண்மை என்பதை பின்வந்த நாட்களில் எம்மால் உணரக் கூடியதாக இருந்தது. அவனுக்குப் பதவியுயர்வு கொடுத்து சில மாதங்களின் பின்னர் நேர்முகத் தேர்வில் தேர்வாளனாகக் கலந்துகொண்டவனுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. தென்கொரியாவைச் சேர்ந்தவன். அங்கு பிறந்திருப்பினும் மிகச் சிறிய வயதிலேயே அவுஸ்த்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்துவிட்டவன். இயல்பான இனவாதி. குறிப்பாக இந்தியர்களையும், இலங்கையர்களையும் வெளிப்படையாகவே வெறுப்பவன். என்னுடன் பேசிக்கொண்டிருக்கும்போது எதேச்சையாக, "அவனை நாம் தான் அப்பதவியில் அமர்த்தினோம். அப்பதிவியே அவனுக்காக உருவாக்கப்பட்டதுதான். அவனை இன்னும் மேல்நோக்கி எடுத்துச் செல்வதே எமது நோக்கம்" என்று மிகச் சாதாரணமாகக் கூறினான். "அப்படியானால் எமது நிலை என்ன?" என்று சற்றுக் கோபத்துடன் கேட்டேன். "உனது நிலையா? நீயும் அவனும் ஒன்றா?" என்று அவன் என்னிடம் கேட்டான். அதன் பின்னர் என்னிடம் கூறுவதற்கு எதுவுமே இருக்கவில்லை.
  3. 3 points
    நான் பணிபுரியும் தொழிற்சாலையிலிருந்து அவன் ஏறக்குறைய 100 கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் இன்னொரு கிளையில் பணிபுரிய ஆரம்பித்திருந்தான். இயல்பாகவே நட்பாகவும், மிகுந்த தோழமையோடும் பழகும் அவனுக்கு போகுமிடமெல்லாம் நண்பர்களை உருவாக்கிக்கொள்வதென்பது கடிணமானதாக ஒருபோதும் இருந்ததில்லை. ஏதாவது பயிற்சிநெறிக்காக அவனது தொழிற்சாலைக்குச் செல்லும்போது வணக்கம் சொல்லிக்கொள்வோம். அவனது சகோதரன் என்னுடைய அணியில் பணிபுரிவதால் இடைக்கிடையே அவன் குறித்து விசாரித்துக்கொள்வேன். எமக்குள்ளான பிரச்சினைகள் குறித்து அவன் தனது இளைய சகோதரனுக்குச் சொல்லியிருக்கலாம். ஆகவே, நான் அவனுடன் பேசும்போது சில விடயங்கள் குறித்து என்னிடம் கேட்பான் அவனது இளைய சகோதரன். இப்படியே கழிந்துசென்ற சில வருடங்களில் அவன் ஒரு வியட்நாமியப் பெண்ணை மணமுடித்துவிட்டான் என்றும், தொழிற்சாலைக்கு அருகிலேயே, கடற்கரையினை அண்டிய வீடொன்றில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான் என்றும் அறிந்தபோது சந்தோசமாக இருந்தது. தனக்குப் பிடித்த இடத்தில், பிடித்த பெண்ணுடன் மகிழ்வாக வாழ்வதென்பது எல்லோருக்கும் கிடைக்கக் கூடியது அல்லவே, அதுதான் அந்த மகிழ்ச்சி என்று வைத்துக்கொள்ளுங்கள்.
  4. பெப் 19 நடைபெறவிருந்த மாநாட்டுக்குத் தடை. சிறிதரன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பொதுச்சபைக் கூட்டங்களும் யாப்பின்படி முரணானவை என்று வழக்குப் போடப்பட்டுள்ளது. முன்னாள் பா. உ. பா.அரியநேத்திரன் வாட்ஸப்பில் பகிர்ந்தது.. ——— இன்று தமிழரசுக்கட்சிக்கு எதிராக இரண்டு வழக்குகள் விபரம். 1)இது திருகோணமலை வழக்கு முழுவிபரம்.. இலங்கை தமிழரசி கட்சியின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடாத்த வேண்டாம் என திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று (15) இடைக்கால தடை விதித்து கட்டானையொன்றினை பிறப்பித்துள்ளது. திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இன்றைய தினம் இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 14 நாட்களுக்கு செயற்படும் வகையில் மேற் குறித்த இடைக்கால கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் மனுதாரரின் பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவக்குமாருடன் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் மற்றும் சட்டத்தரணி புரந்தன் ஆகியோர் ஆஜராகினர். கடந்த 21 மற்றும் 27ம் திகதிகளில் நடை பெற்ற பொதுச் சபை கூட்டங்கள் சட்டத்துக்கு முரணானதும், செல்லுபடியற்றது என வாதம் முன்வைக்கப்பட்டது. எனவே குறித்த இரண்டு பொதுச் சபை கூட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகள் சட்டத்திற்கு முரணானதும் செல்லுபடியற்றது எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது. தமிழரசு கட்சியின் அமைப்பு விதி அனுமதிக்கின்ற தொகையை விட அதிகளவான உறுப்பினர்கள் பொதுச் சபை கூட்டங்களில் பங்குபற்றி குறித்த தெரிவுகளின் போது வாக்களித்துள்ளமையினால் குறித்த கூட்டம் சட்டமுரணானது எனவும் இதன் போது நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. குறித்த சமர்ப்பணங்களின் அடிப்படையில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த மாநாட்டிற்கு திருகோணமலையில் மாவட்ட நீதிமன்றம் இரு வாரங்களுக்கு இடைக்காலை தடை உத்தரவு விதித்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி திறந்த நீதிமன்றில் அழைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கினை திருகோணமலை சாம்பல்தீவு -கோணேசபுரியைச் சேர்ந்த சந்திரசேகரம் பரா என்பவர் சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவகுமார் ஊடாக இவ் வழக்கினை தாக்கல் செய்ததும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த வழக்கில் மாவை சேனாதிராஜா, சி.ஸ்ரீதரன், எம்.ஏ.சுமந்திரன், சண்முகம் குகதாசன் உட்பட தமிழரசு கட்சியின் ஏழு முக்கியஸ்தர்கள் எதிர் மனுதாரர்களாக பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2)யாழ்பாண நீதிமன்ற வழக்கு! அடுத்து யாழ்பாணம் நீதிமன்றில் வழக்கு இலங்கை தமிழரசுக் கட்சி மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாண நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன் எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு உறுப்பினர் பீற்றர் இழஞ்செழியன் சட்டத்தரணி குருபரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையே இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு தடை உத்தரவு வழங்கப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளுக்கும் பின்னணியில் ஒருதரப்பே உள்ளது என்பதுதான் உண்மை.! தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை! இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இடைக்கால தடைவிதித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி வரை தேசிய மாநாட்டை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் முன்னிலையாகியிருந்தார். மேலும் தேசிய மாநாட்டுக்கு தடைகோரி யாழ். நீதிமன்றத்திலும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1369933
  5. 2 points
    2012 இலிருந்து 2015 வரையான காலப்பகுதியில் அவன் எமக்குப் பொறுப்பாகவிருந்தான். எமக்குத்தான் அவனுடன் பேசப் பிடிக்கவில்லையாயினும், அவன் என்றும்போல சகஜமாகவே பழகினான். சிறிது காலம் செல்லச் செல்ல அவன் மீதிருந்த வெறுப்பும், கோபமும் மறையத் தொடங்கியது. அவனுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்கிற நிலை வந்தபின்னர் வேறு வழி தெரியவில்லை எனக்கு. மற்றைய இரு இந்தியர்களும் அவனை சிறிதும் சட்டை செய்யவில்லை, அவனுக்கும் அது நன்றாகவே புரிந்தது. அனுபவத்தாலும், அறிவிலும் நாம் அவனைக் காட்டிலும் சிறந்தவர்கள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும், ஆகவே அவனும் அவர்களது நடத்தைபற்றிக் கண்டும் காணாதவன் போலச் சென்றுவிடுவான். அவனுடன் ஓரளவிற்கேனும் பேசுபவன் என்கிற ரீதியில் என்னுடன் வந்து அவ்வப்போது பேசுவான். அவ்வாறான வேளைகளில் அவனது இன்னொரு பக்கம் குறித்த விடயங்கள் சிலவற்றை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. மலையேறுதல், ஸ்கேட் போர்டிங் எனப்படும் மட்டைகளில் ஓடுதல் போன்ற விளையாட்டுக்கள் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன. ஆசியாவின் உணவை விரும்பிச் சாப்பிடும் அவனுக்கு ஆசியப் பெண்களையும் பிடிக்கும் என்பதும் எனக்குத் தெரியவந்தது. தொழிற்சாலையின் வினைத்திறன் அதிகரிக்கும் செயற்பாடுகளில் அவன் எடுத்த முயற்சிகளுக்கு என்னாலான உதவிகளை வழங்கினேன். அவனோடு தொடர்ந்தும் முரண்பட்டுக்கொண்டு பயணிப்பதில் பயனில்லை என்பதும் புரிந்தது. தொழிற்சாலையின் வருடாந்த கிறிஸ்துமஸ் நிகழ்வுகள், ஏனைய கொண்டாட்டங்களில் அவன் கலந்துகொள்வான். நானும் அடிக்கடி அங்கு சமூகமளிப்பதால் அவனது வேலைக்குப் புறம்பான வாழ்வுபற்றியும் அறிய முடிந்தது. சில காலம் எமது தொழிற்சாலையில் இருந்துவிட்டு இதே நிறுவனத்தின் இன்னொரு தொழிற்சாலைக்கு மாற்றலாகிப்போனான் அவன். அவனது வளர்ச்சிபற்றி எனக்குள் இருந்த பொறாமையோ, அல்லது வெறுப்போ அப்போது முற்றாக மறைந்திருக்க, அவன் பற்றி அவ்வப்போது பேசிக்கொள்வதுடன் அவன்பற்றிய எனது சிந்தனைகள் நின்றுபோகும். மாதத்தில் ஒருமுறையாவது எமது தொழிற்சாலைக்கு வருவான். வந்தால், அனைவருடனும் சிரித்துப் பேசுவான். தவறாமல் என்னிடம் வந்து "எப்படியிருக்கிறாய் நண்பா?" என்றுவிட்டுச் சிரிப்பான். "இருக்கிறேன், நீ எப்படி?" என்று கேட்பேன். "உனக்குத் தெரியும்தானே என்னைப்பற்றி? எதனையும் சீரியசாக எடுக்கமாட்டேன். வாறது வரட்டும் , பார்க்கலாம் என்று இருக்கிறேன்" என்று சொல்வான். அவனது இளைய சகோதரன் அப்போது எமது தொழிற்சாலையில் பணிபுரியத் தொடங்கியிருந்தான். எனது அணியில் அவன் இடம்பெற்றிருந்ததால், அவனது சகோதரன் பற்றி அடிக்கடி கேட்டுக்கொள்வேன்.
  6. இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024 இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இந்த வருடம் நடக்க இருப்பதாக கூறுகிறார்கள்.இந்த தேர்தலுக்காக சிங்கள கட்சிகள் இப்போதிருந்தே ஆயத்தமாகத் தொடங்கிவிட்டன. ஐக்கிய தேசிய கட்சி ராஜபக்ச கட்சி சார்பாக ரணிலும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் சயித் பிரேமதாசவும் மக்கள் விடுதலை முன்னணி சார்பாக அனுர குமாரவும் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.இனிவரும் காலங்களில் இன்னும் புதிதாக யார் வேண்டுமானாலும் களமிறங்கலாம். இதுவரை இலங்கையில் நடந்த எந்த ஒரு தேர்தல்களிலும் நான் வாக்குச் செலுத்தவில்லை.இலங்கை ஜனாதிபதி தேர்தல்கள் சட்டதிட்டங்களைப் பற்றி எதுவும் இதுவரை அறிய முற்படவில்லை. எனவே இந்த வருடம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் எந்த சிங்கள கட்சிக்கும் வாக்கு போட்டு பிரயோசனமில்லை.வழமை போன்றே ஏதாவது உத்தரவாதம் தருவார்கள்.இல்லாவிட்டால் வெளியே சொன்னால் சிங்கள மக்கள் இதைச் சாட்டாக வைத்தே எமக்கு வாக்குப் போட மாட்டார்கள் என்று சொல்லி இரகசியம் பேணுவார்கள்.வென்ற பின்பு இப்படி கதைத்ததையே மறந்துவிடுவார்கள். ஆகையினால் அடுத்த தேர்தலில் யாராவது ஒரு தமிழர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் தமிழர்கள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணினேன். ஆனாலும் இப்போ தான் தெரிகிறது போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை என்றால் இரண்டாவது யாருக்கு புள்ளடி போட்டிருக்கிறார்கள் என்று பார்த்து அதையும் கணக்கிலெடுப்பார்கள் என்கிறார்கள். அப்படியானால் தமிழர் ஒருவர் பொது வேட்பாளராக களமிறங்கி பிரயோசனம் இல்லை.இந்த நிலையில் பொது வேட்பாளராக இரு தமிழர்கள் களமிறங்கி முதலாவதாகவும் இரண்டாவதாவும் இரு தமிழர்களுக்கும் வாக்குப் போட்டால் தமிழர்களின் வாக்குகள் சிங்கள கட்சிகளுக்கு போவதை தடுக்கலாமா? இப்படி செய்வார்களாக இருந்தால் முதலாவது அல்லது இரண்டாவது வேட்பாளரை மலையகத் தமிழர் ஒருவரை நிறுத்தலாம். இதுவரை ஜனாதிபதி தேர்தலுக்காக மக்களை ஒன்று சேர்த்து அவர்களை எந்த ஒரு தமிழ் அரசியல் கட்சியும் ஒழுங்குபடுத்தியதாக தெரியவில்லை. வெளிநாடுகளே இலங்கையில் யார் ஜனாதிபதியாக வரப் போகிறார் என்று கருத்துக் கணிப்புகளை நடாத்தி முன்னணியில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள தொடங்கிவிட்டார். ஐரோப்பா அமெரிக்கா போன்றவை ரணிலுக்கு ஆதரவாக மறைமுகமாக பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.எதிரும் புதிருமாக இருந்த இந்தியாவும் ஜேவிபியும் ஒன்றாகியுள்ளனர்.இது யாருமே எதிர் பார்க்க ஒன்று.அரசியலில் வெட்கம் மானம் சூடு சுறணை இருக்கக் கூடாது என்பார்கள்.அதையே தான் இந்தியா செய்துள்ளது. மாலைதீவை விட்ட மாதிரி இலங்கையையும் விட தயாரில்லை என்பதையே இந்தியாவின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. அனுர குமாரவைக் கூப்பிட்டு கதைத்த பின்பும் ஜேவிபி ஆதரவாளர்களிடமிருந்து இந்தியாவுக்கு எதிரான பழைய போக்கு மாறவில்லை என்கிறார்கள். வெளிநாடுகள் தங்களுக்கேற்ற அரசியல் தலைவர்களை கொண்டுவர முயற்சி பண்ணுகிறார்கள்.இதில் அவர்களை குறை கூறி பிரயோசமில்லை. இதே நிலையை அமெரிக்க இந்திய சங்கீதத்துக்கு ஆடாமல் மற்றவர்களை ஆட வைக்க வேண்டும்.
  7. புத்திசாலி மட்டுமே சகுனியாகலாம் இல்லாவிட்டால் மங்குனி என்றுதான் அழைப்பார்கள். 🤣
  8. இதை தேர்தல் நடக்கும் போதே சூரியன் எப் எம் காரர் சொல்லிட்டாங்கள். சுமந்திரன்.. போலி சனநாயக வேடம் போட்டு விட்டுக்கொடுப்பது போல போக்குக்காட்டிக்கொண்டு... விட்ட பதவியை பறிப்பார் என்று. இது இந்த சட்டாம்பிக் கும்பலுக்கு புதிதல்லவே. இதால தான் உதய சூரியன் அந்தமிச்சுது.. எனி வீடும் தரைமட்டமாகிடும். சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட அலுவலை கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார்.. சிங்கள எஜமான விசுவாசத்தோடு. தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்து சின்னாபின்னமாக்கினார். இப்ப தமிழரசுக் கட்சியையும் சின்னாபின்னமாக்கிட்டார். எனி மிஞ்ச ஒன்றுமில்லை. தமிழர்களின் ஒருமித்த குரலுக்கும் வாய்ப்பில்லை. எனி என்ன சுமந்திரன் காட்டில் அடை மழை தான். அடுத்த பாராளுமன்றில்.. நிச்சயம் சுமந்திரன் சிங்கள அமைச்சுப் பதவி பெறுவார். கூட மாவையும் மகனுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி கேட்பார்.
  9. சுமந்திரனைப் புத்திசாலி என்கிறீர்கள்? எல்லோரினது கண்களிலும் விரலை விட்டு ஆட்டுகிறார் அல்லவா? 🤣
  10. பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்.
  11. தமிழரசு கட்சிக்காக நீதிமன்றில் வாதாடுவேன்! சுமந்திரன் திட்டவட்டம். யாழ்ப்பாணம், திருகோணமலை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, இடைக்காலக் கட்டாணைகள் வழங்கப்பட்டுள்ள வழக்குகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் நீதிமன்றங்களில் முன்னிலையாகி அந்த வழக்குகளுக்கு எதிராக வாதாடுவேன். என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகவும், கட்சியின் பொதுக் குழுக் கூட்டங்களின் முடிவுகளுக்கு எதிராகவும், கட்சியின் தலைவர்கள் கேட்டுக் கொண்டால் அவர்களுக்காக நீதிமன்றங்களில் முன்னிலையாகி அந்த வழக்குகளுக்கு எதிராக வாதாடுவேன்." வழக்கில் எதிராளி ''இந்த வழக்குகள், கட்டாணைகள் குறித்து இன்று காலையிலேயே கொழும்பில் கேள்விப்பட்டேன். திருகோணமலை வழக்கில் என் பெயரும் எதிராளியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக இப்போது அறிந்துள்ளேன். ஏனைய எதிராளிகளான எமது கட்சியின் சகாக்கள் கேட்டுக்கொண்டால் அவர்களுக்காகவும் இந்த வழக்கில் முன்னிலையாகி கட்சிக்காக வாதாடுவேன்.'' என தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/sumandran-says-i-will-argue-for-itak-in-court-1708003071 இப்படியொரு சுத்து மாத்து மனிதனை என் வாழ்நாளில் முதன் முதலா பார்க்கிறேன் .
  12. இப்படியான பிரச்சனைகளில் ஆட்களை போட்ட காலம் முடிந்து இப்ப வழக்கு போடும் காலம் வந்தது ஒரு முன்னேற்றம் தானே. 😂
  13. கடந்த காலங்களில் இவர்களது தகிடுதித்தங்களை வெளியே இருந்து விமர்சித்தவண்ணமே இருந்தனர், அவர்களது கருத்தை உண்மையாக்குமாப்போல் செய்யும் சுத்துமாத்தால் இப்போ இவர்கள் நடுத்தெருவில் மானங்கெட்டு நிற்கிறார்கள். எதற்கெடுத்தாலும் அவர்கள் ஜனநாயக விரோதிகள் என விமர்சித்துக்கொண்டிருந்த இவர்களே ஒரு ஜனநாயகப் பொதுவெளியில் யாப்பு மற்றும்ம் சட்ட வரையறைகளுக்குள் ஒரு நிர்வாகக்குழுவைத் தெரிவுசெய்யும் விடையத்தில் எந்தவித இங்கிதமும் இல்லாது நடந்துள்ளார்கள். இந்த வழக்கை நீதித்துறைக்கு யார் எடுத்துச் சென்றார்கள் என்பதை வெளியே சொல்ல எந்தவொரு வெகுஜன ஊடகத்துக்கும் துணிவில்லை.
  14. 1 point
    மன்னிப்பெல்லாம் எதற்கு தொடருங்கள் என்பது ஆர்வமாக இருக்கிறேன் என்று அர்த்தம் உங்கள் வசதிப்படி தொடரலாமே.....உடனுக்குடன் எழுதுங்கள் என்று அர்த்தமல்ல .உங்கள் எழுதும் ஆற்றல் நிறையவே நல்ல மாற்றமடைந்துள்ளது. பாராட்டுக்கள்.
  15. அதற்காக தான் இயற்கையே அதைக் கொடுக்கவில்லை.
  16. 1 point
    மன்னிக்க வேண்டும், வேலையில் நிற்கிறேன், பின்னேரம் தொடரலாமா?
  17. 1 point
    தொடருங்கள் வாசிக்கும் ஆவலுடன். ....நாடு விட்டு நாடு வந்து நம்மவர்கள் ஏராளம் பிரச்சினைகள் வேலையிடங்களில்.சந்தித் தார்கள். இன்னும் நடக்கிறது. அவனிடம் எதோ ஒன்று ...இருக்கலாமோ ?
  18. 1 point
    ரஞ்சித் உங்களது ஆங்கில மொழிபெயர்ப்பை எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டிருக்க இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுகிறீர்கள்? இது சும்மா கதைக்காகத் தானே? எமக்கு ஓரளவு ஆங்கிலம் தெரிந்தாலும் கதைத்துப் பழகாததால் ரொம்பவும் கூச்சமாக இருக்கும்.
  19. 1 point
    தென் கொரியர்கள் தெற்காசியாவைச் சேர்ந்தவர்களை மதிப்பதில்லை. வெள்ளையர்களையும் தம்மவர்களையுமே உயர்வாக நினைப்பர். இப்போதெல்லாம் தென்கொரியா சென்ற இந்தியர்கள் இன்ஸ்ராகிராமில் இதைக் கூறி வருத்தப்படுகின்றனர். மேலும் தாங்கள் கொரிய மொழி கதைத்தால் அதை அவர்கள் கேவலப்படுத்துவதாகவும் கூறி வேதனைப்பட்டனர். கோராவிலும் இது பற்றி பட்டறிவுப் பகிர்வுகள் உண்டு.
  20. 1 point
    தொடர்ந்து எழுதுங்கள் ரஞ்சித். வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்.
  21. 1 point
    ரஞ்சித் அண்ணை யாழின் 26ஆம் அகவைக்கான சுய ஆக்கங்களில் பதிந்திருக்கலாமே?!
  22. https://www.un.org/securitycouncil/sanctions/1267/aq_sanctions_list/summaries இல்லை இல்லை. ஐநா கூட சில அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகள் என்று பட்டியலிட்டுள்ளது... ஆனால் இதற்குள் புலிகளுமில்லை, கமாஸுமில்லை. அந்தக்காலத்திலிருந்தே தான் இரு அமைப்புகளுமில்லை.
  23. சும்மா சும்மா வெள்ளிக்கிழமைகளில் ஐஞ்சாறு கறிகள் பொரியல் செய்து மினக்கட்டு ....ஸ்......சப்பா ..... இன்று அவற்றுக்கு மாற்றாக இந்த எலுமிச்சசை சாதம் ஒன்று போதும்......சும்மா அதிரும்.......! 😂
  24. 0 points
    ஒரு ஆறு அல்லது ஏழு மாதங்கள் இருக்கலாம். வழமை போல எனது பணித்தளத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பணியாளர்களுடன் பேசுவது போல அன்று பேசிக்கொண்டு வந்தேன். அவனது இளைய சகோதரனைப் பார்த்துப் பேசலாம் என்று போனபோது எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இயல்பாகவே குறும்புத்தனம் மிக்க அவனது சகோதரனின் முகம் வாடியிருந்தது. பணி ஆரம்பிக்கும் முன்னர் நடக்கும் கூட்டத்தில் அவனது முகத்தைக் கவனித்தேன், வழமையான புன்னகை இருக்கவில்லை. ஆகவேதான், "ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?" என்று கேட்டேன். சிறிது நேரம் மெளனத்திற்குப் பின்னர், மூச்சினை ஆளமாக இழுத்துக்கொண்டு பேசினான். "அண்ணாவுக்குச் சற்றுச் சுகமில்லை" என்று அவன் கூறவும், "அப்படியென்ன சுகமில்லை, மருந்தெடுத்தால்ப் போயிற்று" என்று நான் சர்வ சாதாரணமாகக் கூறினேன். "இல்லை, அவன் சில நாட்களாகவே அடிக்கடி கோபப்படுகிறான். எவருடனும் பேச விரும்புகிறான் இல்லை. நாங்கள் அவனை அப்படிப் பார்த்ததில்லை". என்று கூறினான். "சரி, வைத்தியரிடம் அழைத்துச் சென்றீர்களா?" என்று கேட்க, "ஆம், அழைத்துச் சென்றோம். அவனுக்கு மூளையில் கட்டியொன்று இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். பெரும்பாலும் அது புற்றுநோயாக இருக்க வாய்ப்பிருக்கிறது" என்று கூறிவிட்டு அமைதியானான். அவனது கண்கள் கலங்கியிருந்தன. எனக்கோ எதுவுமே சொல்லத் தெரியவில்லை. "இல்லை, அப்படியிருக்காது. உனது அண்ணனன் சிறந்த உடற்பயிற்சியாளன், திடகாத்திரமானவன், அவனுக்கு புற்றுநோய வரச் சந்தர்ப்பமில்லை" என்று அவனை ஆசுவாசப்படுத்தினேன். ஆனால், அவனுக்குத் தெரியும் நான் சொல்வது வெற்றுச் சமாதானம் தான் என்பது. நாட்கள் செல்லச் செல்ல அவனது உடல்நிலை மோசமாயிருக்க வேண்டும். அவனது சகோதரன் அடிக்கடி லீவு எடுக்கத் தொடங்கினான். "அண்ணாவை ஒவ்வொரு வைத்தியராகக் கூட்டிச் செல்கிறோம். அவனது உடல்நிலை மோசமாகிக்கொண்டு போகிறது. புற்றுநோயென்று உறுதிப்படுத்தி விட்டார்கள். சத்திர சிகிச்சை மூலம் அகற்றும் கட்டத்தை அவன் தாண்டி விட்டான். கீமோ (கதிர்வீச்சு ரீதியிலான‌ சிகிச்சை) ஆரம்பித்திருக்கிறோம். உயிர் பிழைப்பதற்கான சாத்தியப்படு மிகவும் குறைவென்றாலும், எம்மாலான அனைத்தையும் அவனுக்காகச் செய்துகொண்டிருக்கிறோம்...."இப்படி ஏதாவது ஒரு மனம் நொருங்கிப்போகும் செய்தியும், சாத்தியமே அற்ற நம்பிக்கை தொக்கு நிற்கும் வசனங்களும் அவனிடமிருந்து அவ்வபோது வந்து போகும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.