Leaderboard
-
suvy
கருத்துக்கள உறவுகள்20Points33600Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்17Points3057Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்10Points46783Posts -
nedukkalapoovan
கருத்துக்கள உறவுகள்8Points33035Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/06/24 in all areas
-
முடிவிலி
10 pointsமுடிவிலி ------------- சமீபத்தில் இங்கே ஒரு பாதிரியாருக்கு பெரிய மாரடைப்பு வந்து கொஞ்ச நேரம் இறந்து போய்விட்டார். பின்னர் அவருக்கு உயிர் திரும்பவும் வந்துவிட்டது. இப்படித்தான் வைத்தியசாலையில் சொன்னார்கள். இது செய்திகளிலும் வந்து இருந்தது. பாதிரியாரும் இடைப்பட்ட, அவர் இறந்திருந்த, நேரத்தில் அவர் வேறு ஒரு இடத்திற்கு போய் வந்ததாகச் சொன்னார். இதை Near Death Experience (NDE) என்று சொல்கின்றனர். இந்த வாழ்வின் முடிவில் இருந்து சாவின் விளிம்பு வரை போய் வருதல். அடிக்கடி உலகில் எங்காவது நடக்கும் ஒரு நிகழ்வு இது. பொதுவாக இந்த அனுபவம் பெற்றவர்கள் அநேகமாக வெளிச்சமான, பிரகாசமான, பூந்தோட்டங்கள் நிறைந்த, வாசனைகள் பரவும், ஒளி சுற்றிச் சுழலும், தெரிந்தவர்கள் மற்றும் முன்னோர்கள் மிதந்து கொண்டிருக்கும் ஒரு இடத்திற்கே போய் வந்ததாகச் சொல்வார்கள். அவர்கள் போய்ப் பார்த்து வந்த இடம் சொர்க்கம் என்பதன் விளக்கம் இது போலும். ஆனால் இந்தப் பாதிரியார் தான் நரகத்திற்கு போய் வந்ததாகச் சொல்கின்றார். ஒரே இருட்டு, அதைத் தாண்டினால் மனிதர்கள் நான்கு கால்களில் நடக்கின்றார்கள், அவர்களின் கண்கள் வெளியே தள்ளப்பட்டிருக்கின்றன, சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கின்றார்கள், நெருப்பில் விழுகின்றனர் என்று பாதிரியார் அவர் போய் வந்த இடத்தை விபரித்திருந்தார். இதற்கு முன்னர் வாழ்வின் முடிவு வரை போய் வந்தவர்கள் சொன்னவற்றை வைத்து, இங்கே பூமியில் என்ன செய்தாலும், என்ன கூத்து ஆடினாலும், கடைசியில் எல்லோரும் சொர்க்கத்திற்கு தான் போவார்கள் போல என்று அசமந்தமாக இருந்துவிட்டேன். மற்ற இருட்டான இடத்திற்கும் ஆட்கள் அனுப்பப்படுகின்றனர் என்று இப்பொழுது தான் தெரிய வந்துள்ளது. 40 வயதிற்கு மேல் ஒருவரது விதிப்பயனை, ஊழ்வினையை மாற்றவே முடியாது என்று தமிழ்நாட்டின் இன்றைய முன்னணி சிந்தனையாளர், தத்துவஞானி, ஆன்மீக அறிஞர் ஒருவர் சமீபத்தில் சொல்லியிருக்கின்றார். இந்த அறிஞரைப் பார்த்து, 'என்ன உங்களின் தத்துவம் எல்லாம் ஒரே ஓட்டை ஒடிசலாக இருக்குதே. சுட்ட தோசையையே திருப்பி திருப்பி சுடுகிறீர்களே' என்று ஒரு சாதாரண மனிதன் கேட்டுவிட்டார். சினம் கொண்ட அந்த அறிஞர் அந்த சாதாரண மனிதன் நரகத்திற்கு போவார் என்பதையே இப்படிப் பூடகமாகச் சொன்னாராம். நரகம் போய் வந்த பாதிரியார் தான் இங்கு வாழ்க்கையில் விட்ட பிழைகள் என்ன என்னவென்று சொன்னதிலிருந்து அறிவது என்னவென்றால், நான் அங்கு போகும் பொழுது இந்த அறிஞர் கூட அங்கு நாலு கால்களில் நடந்து கொண்டிருப்பார் என்றே தெரிகின்றது. கிட்டத்தட்ட எனக்குத் தெரிந்த எல்லோரும் அங்கே தான் இருப்பார்கள் அல்லது எனக்குப் பின்னால் வரப் போகின்றார்கள். இதே கூட்டம் தான் அங்கேயும், முடிவற்ற ஒரே வாழ்க்கை. இனிமேல் இதிலிருந்து தப்புவதற்கு வழியில்லை என்றாலும், இப்பவே கொஞ்சம் கொஞ்சமாக பழகிக் கொள்ளலாம். ஒரு கிழமைக்கு மூன்று தமிழ்ப் படங்களும் மூன்று தெலுங்குப் படங்களும் விடாமல் பார்த்து வந்தால், நரகத்தைக் கூட ஒரு கலைக் கண்ணோட்டத்தில் பார்க்கும் பக்குவம் வந்துவிடும்.10 points
-
என்ன பார்ட்டி இது??
6 pointsஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து இருந்தேன். என்ன பார்ட்டி இது,? எதுக்கு அப்பா இதை ஏற்பாடு செய்கிறார்? அப்பா ஏன் ரிஸ்க் எடுக்கிறார்? இது கொஞ்சம் வேறு மாதிரி மாறிவிடும் அல்லவா? என்று மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டாலும் அப்பா சரியாக செய்து முடிப்பார் என்று பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தார்கள். அப்பாமாருக்கு பிடித்த சாப்பாடுகள் மற்றும் குடிவகைகள் அனைத்தும் மேசையில் இருக்கவேண்டும் என்றும் சொல்லியிருந்தேன். எனது மக்கள் மருமக்களுடன் மருமக்களின் தகப்பனார்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்று கண்டிப்பாக சொல்லி விட்டிருந்தேன். அவரவர் மாமனார்களை அழைத்து வரவேண்டியது அந்தந்த மக்களின் வேலை என்றும் பிரித்துக் கொடுத்து இருந்தேன். பார்ட்டி ஆரம்பிக்கும் நேரம் எல்லோரும் வந்து அமர்ந்தார்கள். மேசையில் மக்கள் மற்றும் மருமக்கள் எமக்கு பிடித்த பல உணவுகளை தாமே சமைத்து கொண்டு வந்து வைத்திருந்தார்கள். அத்துடன் பலவகையான குடிவகைகளும் வைக்கப் பட்டிருந்தன. பார்ட்டி ஆரம்பித்தது. இங்கே யாரும் எதுவும் சொல்லக் கூடாது. போதும் என்று கையை காட்டுவது கண் சிமிட்டுவது என்று எதுவும் எவரும் சொல்ல வேண்டாம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் குடிக்கலாம். மக்களிடம் கேட்டேன் கேள்வி ஏதாவது இருந்தால் கேளுங்கள் பதில் சொல்கிறேன் என்று. சாப்பிட குடிக்க இந்த பார்ட்டி செய்யவில்லை என்று தெரியும் அப்பா. அப்படியானால் ஏதோ வேறு காரணம் இருக்கும் அது என்ன என்று மகன் கேட்டான். அப்பாக்கள் தமக்கு என்று எதுவும் கேட்கமாட்டார்கள். நாங்கள் இறந்த பின்னர் நீங்கள் எங்களுக்கு என்ன செய்தும் பிரயோசனம் இல்லை எனக்கு அவற்றில் நம்பிக்கையும் இல்லை. இன்றைக்கு நீங்கள் விரும்பி உங்கள் கைகளால் சமைத்து பரிமாறி இருப்பதும் எமக்கு என்ன பிடிக்கும் என்று பார்த்துப்பார்த்து வாங்கி மேசையில் வைத்திருப்பதும் தான் எமக்கான படையல். இருக்கும் போது கொடுக்கப்படுவது மட்டுமே சாலச்சிறந்தது. அதுவே தேவையும் கூட. நன்றாக குடித்து வயிராற சாப்பிட்டு சந்தோசமாக விடைபெறும் போது சொன்னார்கள் மறக்க முடியாத அனுபவம் என்று. கலந்து கொண்டவர்கள் என் சம்பந்திமார் மூவர். பார்ட்டியின் பெயர் சம்பந்தி பார்ட்டி. 🙏6 points
-
மயிலம்மா.
4 pointsமயிலிறகு ......... 06. அவர்களுடைய சம்பாஷணை மேலும் தொடர வாமுவும் சுந்துவும் மெல்லமாக கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அப்பொழுது அவர்களின் பேச்சில் "வட்டி வைத்தி"யின் பெயர் காதில் விழ வாமுவும் நண்பனை ஜாடையால் மறித்து அவர்களின் பேச்சைக் கவனிக்கச் சொல்கிறான். அவர்களில் ஒருத்தர் எங்கட வட்டி வைத்தி செத்துட்டார் எல்லோ .....மற்றவர் அந்தக் குத்தியன் என்னெண்டு செத்தவன்.....ஆரும் வெட்டி கிட்டி போட்டாங்களோ என்று கேட்க இன்னொருவர் அவனை யார் வெட்டுறது.அந்தத் தைரியம் இங்கு யாருக்கு இருக்கு.....அது நடந்து ஒருமாதத்துக்கு மேல் இருக்கும், அண்டைக்கு நல்ல மழை அவர் மோட்டார் சைக்கிளில் வேகமாய் வந்திருக்கிறார் அது சறுக்கி ரோட்டுக் கரைப் பள்ளத்துக்குள் விழுந்திட்டுது அவருக்கு மேல சைக்கிள். அடுத்தநாள் விடியலுக்க வேலைக்குபோனவைதான் கண்டு தகவல் குடுத்தவை. துலைவான் எத்தனை பேரிட்ட அறா வட்டி வாங்கி அந்தக் குடும்பங்களை அழிச்சவன். அவன் செத்தது நல்லதுதான் என்று இப்படிப் போகுது கதை......சுந்து வாமுவிடம் என்னடா விஷயம் என்று கேட்க அவர்தாண்டா மாங்காய்க்கு கல் எறிய வந்து துள்ளினார் அந்த வட்டி வைத்தி கொஞ்ச நாட்களுக்கு முன் செத்துட்டாராம். எண்டாலும் பாவம்டா அந்தப் பெண்.சின்ன வயது என்று வாமு சொல்கிறான். பின் இருவரும் வெளியே வருகினம். அப்போது வாமன் தன் பொக்கட்டில் இருந்து ஒரு கவர் எடுத்து சுந்துவிடம் தந்து இந்தா இதை வைத்துக் கொண்டு எதையும் யோசிக்காமல் பல்கலைக்கழகத்துக்கு சென்று கவனமாய்ப் படி. நான் அடிக்கடி சென்று உன் வீட்டைப் பார்த்துக் கொள்கிறேன்.ஏதாவது அவசரம் என்றால் விதானையார் வீட்டுக்கு போன் செய்து கதைக்கலாம். ( அங்கு சில இடங்களில் மட்டும்தான் தொலைபேசி வசதி உண்டு). வாமு நீ என்ர நல்ல நண்பன்டா. நீ உனக்கு மோட்டார் சைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த காசை எனக்குத் தருகிறாய்.எனக்கும் தற்போது வேறு வழியில்லை.உனக்கு என்ன கைம்மாறு செய்யப்போறேனோ தெரியவில்லை. விடுடா அதை....வா நான் உன் வீடுவரை வந்துட்டுப் போகிறேன். திங்கள் கிழமை உன்னை வழியனுப்ப வருகிறேன் என்று சொல்லி இருவரும் சைக்கிள்களில் செல்கிறார்கள். வீட்டுக்கு வந்த சுந்தரேசன் தன் தாயிடம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். வாமன் பணம் தந்தவன், இந்தாங்கோ இதை நீங்கள் கவனமாய் வைத்திருந்து நான் போகும்போது தாருங்கோ என்று சொல்லி மயிலம்மாவிடம் கொடுக்கிறான். அவளும் அதை வாங்கிக் கொண்டு அவன் வரேல்லையே என்று வினவ அவன் என்னோடு வீடுவரைக்கும் வந்திட்டு வேறு அலுவலாய்ப் போகிறான் என்று சொல்லிவிட்டு உள்ளே போகிறான். அட அவன் வந்திருந்தால் ஒரு வாய் தேத்தண்ணி குடிச்சுட்டுப் போயிருப்பான் என்று அவள் சொல்ல கூட இருந்த பூவனம் போம்மா நீயும் உன்ர தேத்தண்ணியும், அவங்கள் நீ குடுத்த காசை வீணாக்காமல் "புல்" அடித்து விட்டு வாறாங்கள்.....சும்மா போடி உனக்கு அவங்களைக் குறை சொல்லாட்டில் செமிக்காது.... ஒரு வழியாக அடுத்து வந்த திங்களில் சுந்தரேசனும் வாமுவுடன் சேர்ந்து சென்று புகையிரதத்தில் கிளம்பி விட்டான். வாமனும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுந்துவின் வீட்டுக்கு சென்று சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்து விட்டு வருவான். இடைக்கிடை விதானையார் வீட்டுப் போனிலும் நண்பனுடன் கதைத்து விட்டு அந்த செய்திகளையும் இவர்களுக்கு சொல்லிவிடுவான்.அப்படித்தான் சுந்து அங்கு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விட்டதையும் "பகிடி வதை"யெல்லாம் பகிடியாய் போய் இப்ப வகுப்புகள் எல்லாம் நல்லபடியாய் போவதாகவும் சொல்லியிருந்தான். ஆனால் தனக்கு தனியாக நடந்த பகிடிவதைகளின் ரகசியங்களை வாமனிடம் மட்டும் பகிர்த்திருந்தான். வாமனும் அவற்றை யாருக்கும் சொல்லவில்லை. வாமனுக்கும் இப்போதெல்லாம் வேலை அதிகமாகிறது.அரசு விதானையும் அவன் கெதியாய் கிராமசேவகர் ஆகிவிடுவான் என்பதால் அவனுக்கு பலதரப்பட்ட வேலைகளையும் பழக்கி விடுவதில் ஆர்வமாகி அவனைத் தனியாகவும் வேலைகளைக் கவனிக்க அனுப்பி வைப்பதுண்டு.ஆகையால் மயிலம்மாவின் வீட்டுக்கு முன்பு போல் போய்வர நேரம் கிடைப்பதில்லை. அப்படித்தான் அன்று வேலை முடிந்து கிடைத்த நேரத்தில் மயிலம்மா வீட்டுக்கு வந்திருந்தான்.அங்கு மயூரியும் கனகமும் கவலையுடன் திண்ணையில் இருந்து கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்து என்ன விசயம் நீங்கள் கவலையாய் இருக்கிறதுபோல் தெரியுது. அதொன்றுமில்லையடா வாமு நேற்று பூவனத்தின்ர கலியாணம் சம்பந்தமாய் மாப்பிள்ளையின் தாய் தேப்பன் வந்து கதைத்தவை. அவையின்ர பாட்டி இப்பவெல்லாம் அடிக்கடி சுகயீனமாய் கிடக்கிறாவாம்.தான் சாகமுன் பேரனின் கலியாணத்தைப் பார்க்க ஆசைப்படுகிறாவாம். அதனால் வாறமாதம் ஒரு பொதுநாளாய்ப் பார்த்து கலியாணத்தை வைத்தால் நல்லது என்று சொல்லி எங்களையும் அதற்கேற்றாற் போல் ஆயத்தப் படுத்தும்படி சொல்லிபோட்டுப் போகினம். நானும் இப்பதான் என்ர மகனும் மேற்படிப்புக்கு வெளியூர் போயிருக்கிறான், ஒரு ஆறுமாதம் பொறுத்தால் நல்லது என்று சொல்லவும் அவர்கள் அதை காதில் வாங்கியது மாதிரித் தெரியேல்ல. அதுதான் ஒரே யோசனையாய் கிடக்கு. அதுக்குள்ளே இவள் கனகத்தின்ர புருசனும் நேற்று பின்னேரம் நல்ல வெறியில மதவடி வீதியால் வர எதிரில் ஒரு மாடு வந்திருக்கு, இவர் அதோட சொறியப் போக அது இவரை முட்டி மதகில விழுத்திட்டுப் போயிட்டுது. இவருக்கு முன்வாய் பல்லு ரெண்டு உடைஞ்சிட்டுது. அவர் இப்ப எங்க ஆஸ்பத்திரியிலோ என்று வாமு கேட்க கனகமும் அந்தாள் உந்தப் பரியாரியிட்ட மருந்து வாங்கிப் போட்டுகொண்டு வந்து வீட்டில படுத்திருக்கு என்று சொல்லிப்போட்டு சரி நீங்கள் இருந்து கதையுங்கோ நான் போய் அவர் சாப்பிட ஏதாவது கஞ்சி வைச்சுக் குடுக்கப்போறன்........! 🦚 மயில் ஆடும் ......!4 points
-
ட்ரம்ப் போட்டியிடுவதை மாநிலங்கள் தடுக்க முடியாது: அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு
நிக்கி பின் வாங்கிவிட்டாராம் 😄 இனி சிங்கம் சிங்கிள்...😂3 points
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடையே பாலம் கட்டப்படாதது ஏன்?
அவர்களுக்கு சம்மதமா சம்மதமா வடக்கு கிழக்கு இணைய சம்மதமா காத்தான்குடி சம்மதிக்குமா மஞ்சள் கட்ட பிரம்மச்சாரிகள் சம்மதிப்பார்களா? சுமந்திரன் சும்மா இருப்பாரா? 🤣3 points
-
இந்தின் இளம்பிறை
2 pointsஇந்தின் இளம்பிறை -------------------------------- ஒரு உறவினர்களின் திருமண விழா மெக்ஸிக்கோவில் உள்ள ஒரு இடத்தில் நடந்தது. இப்பொழுது சில பிள்ளைகள் வேறு தேசம் ஒன்று போய், அங்கு விழா வைப்பதையே விரும்புகின்றனர். திருமண விழா முடிந்து அடுத்த நாளும் நான் அந்த விழா நடந்த இடத்திற்கு போயிருந்தேன். அன்று அந்த இடம் மிகவும் பரிதாபமாக இருந்தது. ஆதலால், நான் அந்த இடத்தை இரண்டு படங்கள் எடுத்தேன், இன்று நானாவது எடுப்போமே என்று. நேற்று ஒரு சோடி செருப்பு அங்கே காணாமல் போயுள்ளது, அதைக் கண்டால் எடுத்து வரவும் என்ற தகவலையும் கையோடு வைத்திருந்தேன். கடலோர மணல் மேல் போட்டிருந்த மேடை இன்னமும் அங்கேயே இருந்தது. ஆனால் கடற்கரை வெள்ளை மணல் திட்டு திட்டாக மேடையெங்கும் ஏறி ஒழுங்கில்லாமல் பரவிக்கிடந்தது. மேடை மேலே கட்டியிருந்த முக்கால்வாசி அலங்காரத் துணிகள் விழுந்து அங்கங்கே குவியலாகக் கிடந்தன. இன்னும் விழாமல் இருந்தவை இனிமேல் விழுவதற்காக கடல் காற்றில் பறந்து கொண்டிருந்தன. ஒரு கிரேக்கச் சிலையில் இருந்து அதன் கடைசி உடுபுடவையும் காற்றில் பறக்கத் தயாராக இருப்பது போல. நான் படமெடுக்கும் போது இரண்டு உல்லாசப் பயணிகள் அந்த மேடையின் ஓரத்தில் அமர்ந்து அருந்திக் கொண்டிருந்தனர். இதற்கு முந்தைய நாள், திருமண நாளன்று, மேடையில் இவர்கள் இருவரும் இருந்து அருந்திக் கொண்டிருக்கும் இடத்திற்கு கொஞ்சம் உள்ளே புரோகிதர் அமர்ந்திருந்தார். அவருக்கு முன் சிறிய நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. இந்த இரு பயணிகளின் இடத்தில் நான் அமர்ந்திருந்தேன். புரோகிதர் குஜராத்தை சேர்ந்தவர் என்றும், அவர் இப்பொழுது மெக்ஸிக்கோவில் வசிப்பதாகவும் அங்கே சொல்லியிருந்தனர். புரோகிதர் ஒரு கையில் தேங்காயையும், இன்னொரு கையில் கல் ஒன்றையும் கொடுத்து, அந்தத் தேங்காயை சரியாக அவர் சைகை செய்யும் நேரத்தில் என்னை உடைக்கச் சொன்னார். தேங்காயை சரி வட்டப் பாதிகளாக உடைக்க வேண்டும் என்ற அழுத்தம் இலங்கை மீதான சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தம் போன்ற தவிர்க்க முடியாத ஒன்றாக இரண்டு மூன்று நாட்களாக என்னை தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. புரோகிதர் கொடுத்த கல்லுக்கு நிகரான கல்லை நான் ஊரில் மயிலியதனைப் பக்கம் இருக்கும் மண்டபக்கிடங்கு பகுதியில் சிறு வயதில் பார்த்திருக்கின்றேன். எல்லாப் பக்கமும் கூரான, எங்கே பிடிப்பது எங்கே அடிப்பது என்பதைக் கண்டுபிடிக்க முடியாத ஒரு மர்மக்கல் அது. மயிலியதனைக்கும், மெக்ஸிக்கோவிற்கும் 'ம' வரிசையில் ஆரம்பிக்கின்றன என்ற ஒற்றுமையுடன், கல்லிலும் இன்னொரு ஒற்றுமையும் இருந்தது. புழுக்கொடியலுக்கு தோதான சில்லுச் சில்லாக தேங்காய் சிதறப் போவது திண்ணம் என்று தெரிந்தது. முக்கிய பார்வையாளரான என் துணைவி மற்றும் இதர பார்வையாளர்களுக்கு மண்டபக்கிடங்கு கல் தான் என் கையில் இருக்கும் ஆயுதம் என்று தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. நடப்பவை நடந்த பின் முழுப்பழியையும் சுமக்க வேண்டியது தான். இயேசு பிறப்பதற்கு முன், அவர் பிறந்த தேசத்தில், ஆடுகள் மீது மனிதர்களின் பாவங்களும் பழிகளும் ஏற்றப்பட்டு, அவை பாலைவனத்திற்குள் துரத்தி விடப்பட்டன என்று சொல்கின்றனர். பின்னர் எல்லோருடைய பாவங்களையும் ஏற்க பாலன் இறங்கி மனிதனாக வந்தார். இன்று சனத்தொகை எக்கச்சக்கமாக எகிறி ஏறி விட்டதால், தேவபாலன் தனியாக எல்லாவற்றையும் சுமக்க முடியாமல் திக்குமுக்காடிப் போய் நிற்கின்றார். இந்த தேங்காய் உடைப்பதில் ஏதும் பிழை, பாவம் வந்தால் நானே தான் சுமக்கவேண்டும் ஓங்கி அடிக்கின்ற அந்தக் கணத்தில் தேங்காய் முழுதாக கையை விட்டுப் பறந்தது. அன்று புரோகிதரின் இடுப்பு எலும்பு தப்பியது ஒன்பதாவது அதிசயம். மயிரிழையில் தப்பினார். புரோகிதர் என்ன நடந்தது என்று கூட்டிப் பெருக்கி உணர்வதற்குள், நான் தேங்காயை பாய்ந்தெடுத்து சில்லுச் சில்லாக குத்தி தட்டில் போட்டுவிட்டேன். மிக அருமையாக தேங்காயை உடைத்ததற்காக எல்லோரையும் கை தட்டுமாறு புரோகிதர் சொன்னார். மறுபேச்சில்லாமல் கூட்டமும் தட்டியது, ஐயர் சொல்லிவிட்டாரே. எல்லாம் முடிந்த பின், தனியாக இருந்த புரோகிதரிடம் மெதுவாகக் கேட்டேன். 'குஜராத்தில் கல்யாண வீட்டில் தேங்காயை கல்லால் தான் குத்துவீர்களா?' 'குஜராத்தா, அது எங்கேயிருக்கின்றது?' 'அப்ப நீங்கள் இந்தியர் இல்லையா?' 'மெக்ஸிகன்.' இங்கு ஏற்கனவே பல அர்த்தங்கள் ஏற்றப்பட்டு விட்ட ஒரு கனமான சொல் இது. அந்தச் சொல்லுக்கு இருக்கும் அர்த்தங்களை மீறி புதிதாக எதையும் சிந்திக்க முடியவில்லை. எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சமூகநீதிச் சட்டம் தமிழ்நாட்டில் இருப்பது தெரியும். ஆனால் பழைய அர்ச்சகர்கள் கோயில் நடையைப் பூட்டுவதும், நீதிமன்றம் மீண்டும் திறப்பதும் என்று, அங்கே அதுவே இன்னும் ஒரு இழுபறியில் தான் போய்க் கொண்டிருக்கின்றது. இது இன்னுமொரு பரிமாணம். 'அப்ப இந்த மந்திரங்கள், சுவாஹா, ராதா, கிருஷ்ணா, பிரபஞ்சம்,....' 'நான் சில காலம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கூட்டத்தில் இருந்தேன்.' 'அ.....' 'இந்த மாதிரி சிலவற்றை அங்கே கேட்டிருக்கின்றேன். இப்ப எல்லாம் ஃபோனிலும் இருக்குது தானே. அப்படியே பார்த்து வாசிக்க வேண்டியது தான்.' 'ம்.....' அப்படியே தொலைந்து போனதாகச் சொன்ன சோடிச் செருப்பை தேடத் தொடங்கினேன்.2 points
-
பலஸ்தீன் தனி நாட்டை உருவாக்க இலங்கை ஆதரவளிக்க வேண்டும்: குவைத் அழைப்பு
பலஸ்தீன மக்களின் விடுதலையை ஆதரிக்கிறது யதார்த்தம். நாமும் ஆதரிக்கிறோம். அந்த மக்கள் பூரண சுதந்திர தேசத்தில் இஸ்ரேல் மற்றும் இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பில் இருந்தும் விடுதலை பெற்று சுதந்திர பலஸ்தீனத்தில் வாழனும். ஆனால்.. காசா படுகொலையை விட மோசமான படுகொலை தமிழீழம் கேட்டு போராடிய மக்கள் மீது முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய (ஒரே நாளில் 50,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போதும் கண்டிக்காத கண்ணீர் விடாத உள்ளூர் முஸ்லிம் சமூகம் உட்பட) போது பால்சோறு சாப்பிட்ட உள்ளூர் முஸ்லிம் தலைவர்களும்.. மகிந்தவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய உலக முஸ்லிம் தலைவர்களும் எந்த மூஞ்சியை வைச்சுக்கிட்டு இந்த கோரிக்கையை முன் வைப்பீங்க. ****2 points
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
தேசியத்துக்காக மக்கள் இல்லை. மக்களுக்காக தான் தேசியம். ஆகவே மக்களில் இருப்பு இருந்தால் தான் ஆரோக்கியமான தேசியத்தை கட்டி எழுப்ப முடியும். இல்லையெனில் நோய்வாய்ப்பட்ட வெறும் அடிப்படைவாதத்தை மட்டுமே தேசியம் என்ற பெயரில் வளர்ததுவிட்டு புலம பிக்கொண்டிருக்க மட்டுமே முடியும். எந்த பயனுமற்ற அழிவை நோக்கியதாக இருப்பதால் தமிழ் மக்களுக்கு என்ன பயன் என்று யோசித்துப்பார்த்தீர்களா? பாலஸ்தீன பிரச்சனை இப்போதும் இழுபடுவதற்கு ஹமாஸ் பயங்கரவாதம் முக்கிய காரணங்களில் ஒன்று. அரபாத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை குழப்பியது ஹமாஸ் என்ற பயங்கரவாத அமைப்பு தான்.2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- இந்தின் இளம்பிறை
2 pointsஆசான் அவர்களே, நானும் கிட்டத்தட்ட நீங்கள் சொல்லுவதையே சொல்ல முயன்றிருக்கின்றேன். அந்தப் புரோகிதர் அவரின் கைத்தொலைபேசியில் பார்த்து, வாசித்து, பொருள் சொன்னவை பலவும் தற்கால நடைமுறையில் இருந்து எங்கோ தள்ளியும், ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவுமே இருந்தன. அநதப் புரோகிதர் மெக்ஸிக்கோ நாட்டைச் சேர்ந்தவர் என்று நான் என் உறவினர்களுக்கு சொன்னவுடன், அவர்கள் எல்லோரினதும் நாடிகள் அப்படியே தளர்ந்து போய்விட்டன. இது இன்னொரு பிரச்சனை. பிற்குறிப்பு: நான் இங்கு இணைந்து ஐந்து நாட்களே. ஆனால் உங்களையும், இங்கிருக்கும் பலரையும் பல வருடங்களாக தொடர்ந்து வாசித்து வருகின்றேன். உங்கள் எழுத்தினதும், ஆக்கங்களினதும் வாசகன் நான். இப்படியான ஒரு சந்தர்ப்பம் அமைந்தது நான் செய்த ஒரு பாக்கியமே. நன்றிகள் ஆசான்.2 points- மயிலம்மா.
2 pointsமயிலிறகு ....... 05. எடேய் ....அப்போது நீ கவனிச்சனியே அவன் தன்ர மோட்டர் சைக்கிள் சைட் பெட்டியில் இருந்து ஒரு மஞ்சள் பை எடுத்து அவளிடம் பணம் பத்திரம், கவனமாய் கொண்டுபோய் பெட்டியில் வை என்று கொடுத்ததை. தோராயமாய் பார்த்தாலும் ஐந்தாறு லட்சங்களாவது இருக்கும் இல்லையா.....அதை சொல்லும்போது சுந்துவின் குரலில் ஒரு அவாவும் தடுமாற்றமும் இருக்கு. ஓமடா .....நானும் கவனித்தனான் ஆனாலும் அதடா என்பவனை இடைமறித்து அதுமட்டும் கிடைத்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துடுமடா. பூவனத்தின் கல்யாணம்,என்ர படிப்பு,உன்ர மோட்டார் சைக்கிள் மற்றும் ஊருக்குள் ஒரு மளிகைக் கடை என்று எல்லாம் செய்யலாம்டா...... சுந்துவுக்கு கொஞ்சம் வெறி ஏறீட்டுது. டேய் வாமு அவன்ர சேட்டைக்கு எப்படியாவது அதை அடிச்சுக்கொண்டு வரவேணும். குரல் உசாராய் சத்தமாய் வருகிறது. உனக்கென்ன பைத்தியமாடா சுந்து ....அப்படி ஏதாவது நடந்தால் உடனே அவருக்குத் தெரிந்து போயிடும் நாங்கள்தான் செய்திருப்பம் என்று...... பிறகு உன்ர படிப்பு, தங்கச்சியின் கல்யாணம் எல்லாம் பாழாகிடும்.இப்ப நீ ஒன்றுக்கும் யோசிக்காமல் போய்ப்படு.பிறகு பார்க்கலாம் என்று சொல்கிறான். மயிலம்மா அறைக்குள் தன் அலுமாரியில் எதையோ தேட பூவனம் அங்கு தேநீர் கோப்பைகளுடன் வருகிறாள்.தாயைப் பார்த்து என்னம்மா தேடுகிறாய் .....இல்லையடி இன்று முழுதும் செத்தவீடு, மார்அடிச்சு அழுதது, நடை என்று ஒரே அலுப்பாய் இருக்கு அதுதான் இந்த மருந்துப் போத்தலை இங்கினதான் எங்கேயோ வைத்தனான் காணேல்ல ஓ......அதுவா அதைத்தான் அவங்கள் இரண்டு பேரும் எடுத்து குடிச்சுட்டு அலட்டிக் கொண்டிருக்கிறாங்கள். அப்படியே.....சரி சரி அத விடு, உந்தத் தேத்தண்ணியைத் தா குடிப்பம். நீ அவங்களுக்கு நல்லா இடங் குடுக்கிறாய் சொல்லிப் போட்டன் என்று தாய்க்கும் தேநீரைக் குடுத்துட்டு தனது தேநீரை எடுத்துக் கொண்டு வெளியே போகிறாள் பூவனம். அடுத்தநாள் காலை பத்து மணியளவில் தபால்காரர் சைக்கிளில் மயிலம்மா வீட்டுக்கு முன் வந்து நின்று மணியடிக்க பூவனம் சென்று அவரிடமிருந்து பதிவுத்தபால் ஒன்றை கையெழுத்திட்டு வாங்கி வருகிறாள். வரும்போதே அண்ணா உனக்கொரு கடிதம் வந்திருக்கு வந்து பாரேன் என்று அழைக்கிறாள். அடுக்களையில் இருந்து மயூரியும் சுந்துவும் ஒரே நேரத்தில் வெளியே வருகிறார்கள். சுந்து வந்து தங்கையிடம் இருந்து கடிதத்தை வாங்கிக் கவனமாகப் பிரித்துப் படிக்கிறான்.அதில் அவன் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்குத் தேர்வாகி இருப்பதாகவும் வரும் திங்கள் கிழமை குறிப்பிட்ட ஆவணங்களுடன் வந்து சேந்து கொள்ளும்படி தெரிவிக்கப் பட்டிருந்தது.அதை அறிந்ததும் அவர்களுக்கு மிகவும் சந்தோசமாய் இருக்கு. அம்மா நான் இந்த நல்ல செய்தியை வாமனிடம் போய் சொல்லிப்போட்டு வாறன்.இதைக் கேட்டதும் அவன் மிகவும் சந்தோசப்படுவான் என்று சொல்லிவிட்டு தாயைப் பார்க்க அவளும் இருடா வாறன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று கொஞ்ச பணம் எடுத்துவந்து மகனிடம் குடுக்கிறாள். பணத்தை வாங்கியதும் சுந்து சந்தோசத்துடன் சைக்கிளில் சிட்டாய்ப் பறக்கிறான்.இதை பார்த்த பூவனம் அம்மா இவங்கள் குடிக்கப் போறாங்கள், நீ வேற அவங்களுக்கு காசு குடுக்கிறாய்.... நீ சும்மா இருடி அவங்கள் என்னண்டாலும் செய்யட்டும். அங்க படிக்கப்போனால் இனி எப்ப அவனைப் பார்க்கபோறோமோ....நீ போய் அடுப்பில மா அவிய வைத்தனான் என்னெண்டு போய்ப் பார்....நான் ஒருக்கால் கனகத்தைப் பார்த்துட்டு வருகிறேன்.....பக்கத்து வீட்டுக்கு நடந்து செல்கையில் அவளின் மனம் கணக்குப் போடுகிறது. இன்று வெள்ளி அடுத்து சனி,ஞாயிறு பின் திங்கள் வந்துடும்.இதற்குள் பணத்துக்கு என்ன செய்வது. இப்ப ஒரு இரண்டாயிரம் இருந்தால் கூட போதும் பிறகு பார்த்து நிலத்தை ஈடு வைத்து எண்டாலும் பிள்ளையின் படிப்புக்கு உதவ முடியும். அவன் படித்து ஆளாயிட்டான் என்றால் எங்கட பஞ்சம் தீர்ந்திடும்.அதுக்குள் இவளின் சம்பந்தம் வேற நான் முந்தி, நீ முந்தி என்று நிக்குது.எல்லாவற்றையும் நினைக்க நினைக்க மயூரிக்கு மண்டை விறைக்குது. அங்கு வீட்டு வாசலில் கனகம் நிற்பதைக் கண்டு விரைவாக நடக்கிறாள். வாமு வீட்டை போன சுந்து அங்கு அவனைக் காணாது அவனின் தாயிடம் விசாரிக்க அவவும் அவன் அரசு விதானையார் கூப்பிட்டு போயிட்டான். இப்ப வரும் நேரம்தான் நீ உந்த வாங்கில இரு தம்பி. நான் தேத்தண்ணி போட்டுக்கொண்டு வாறன் என்று உள்ளே போகிறாள். சிறிது நேரத்தில் வாமுவும் சைக்கிளில் வந்து இறங்குகின்றன். அவனைக் கண்டதும் ஓடிச்சென்று வாமுவைக் கட்டிப்பிடித்த சுந்து தனக்கு பல்கலைக்கழகத்துக்கு வரச்சொல்லி கடிதம் வந்திருக்கு என்று சொல்லிவிட்டு சட்டென்று அமைதியாகின்றான்.அவனின் முகவாட்டத்தைப் பார்த்த வாமு என்னடா சொல்லு என்று கேட்க அவனும் வாற திங்கள் போகவேணும் இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு அதற்குள் பணத்துக்கு என்ன செய்யிறதென்றுதான் யோசிக்கிறன். எட மடையா, அதெல்லாம் வெல்லலாம், நீ ஒன்றுக்கும் யோசிக்காத.நீ இருந்து தேத்தண்ணியைக் குடி நான் உடுப்பு மாத்திக்கொண்டு வாறன் என்று உள்ளே போகிறான்.சிறிது நேரத்தில் இருவரும் தாயிடம் சொல்லிக்கொண்டு சைக்கிள்களில் வெளியே போகின்றார்கள். அந்த ஊரில் இருக்கும் ஒரேயொரு பாரில் சுந்து ஒருபோத்தல் சாராயம் வாங்கப் போக வாமு அவனிடம் கணக்க வேண்டாம் அரைப் போத்தல் வாங்கு போதும் என்று சொல்லி அரைபோத்தல் சாராயமும் இரண்டு பிளாஸ்டிக் கப்பும் அத்துடன் குடல் கறியும் வாங்கிக்கொண்டு வருகிறான். இருவரும் அங்கிருந்த சிறு மேசையில் அமர்ந்து கொள்கிறார்கள். பக்கத்தில் ஒரு மேசையில் நாலுபேர் ஊர் உலகத்தில் நடக்கிற பல விஷயங்களையும் கதைத்து சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். சுந்துவும் போத்தலை எடுத்து உள்ளங்கையில் ரெண்டு குத்து குத்தி மூடியிலும் குத்திவிட்டு மூடியைத்திருக அதுவும் மெல்லிய இழை தளர்ந்து புதுமணப்பெண்போல் முனகிக் கொண்டு திறந்து கொள்கிறது.ஒரு சுகந்தமான வாசனை அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது. அப்படியே அந்தப் பொன்னிறத் திரவத்தை இரண்டு கிளாஸ்களிலும் பாதி பாதியாக ஊற்ற வாமுவும் பக்கத்து மேசையில் இருந்து தண்ணி வாங்கி அதில் கலந்து விடுகிறான்.இருவரும் ஆளுக்கொரு மிடறு குடிக்கிறார்கள்.பின் வாமு பொக்கட்டில் இருந்து சிகரெட் பெட்டியை எடுத்து அவனுக்கும் ஒன்றைக் குடுத்து தானும் ஒன்றை வாயில் வைத்துக் கொண்டு தீப்பெட்டி தேட பக்கத்து கதிரையில் இருந்தவர் இங்காலுப்பக்கம் திரும்பாமல் தன்னிச்சையாய் தனது சிக்ரெட்டை நெருப்புடன் இவனிடம் தருகிறார். வாமனும் அதை வாங்கி தன் வாயில் இருந்த சிக்ரெட்டைப் பற்றவைத்து சுந்துவிடம் குடுத்துட்டு அவனிடமிருந்த சிக்ரெட்டை வாங்கி தான் பத்தவைச்சுக்க கொண்டு அவரிடம் அவருடையதைக் குடுத்து விடுகிறான். 🦚 மயில் ஆடும் ........!2 points- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
2 points- மயிலம்மா.
2 pointsமயிலிறகு......... 04. அப்போது கனகம் என்ன மயூரி பூவனத்தின் கல்யாண விடயங்கள் எப்படிப் போகுது என்று கேட்கிறாள். அதுதான் கனகம் நானும் யோசிக்கிறன். ஒரு வழியும் காணேல்ல. மாப்பிள்ளை பொடியன் நல்ல பிள்ளை. அவை சீர்செனத்தி என்று எதுவும் கேட்கேல்ல, அதுக்காக நாங்கள் பிள்ளையை வெறுங்கழுத்தோட அனுப்ப ஏலுமே. ஏதோ அவளுக்கு செய்யவேண்டியதை செய்துதானே அனுப்பவேணும். ஓம் அதுவும் சரிதான் மயூரி, நீ தினமும் கும்பிடுகிற அம்பாள்தான் உனக்கு ஒரு வழி காட்டுவாள். கனக்க யோசிக்காத என்று சொல்கிறாள். பின் இருவரும் நீராடி ஈரஉடுப்புகளையும் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். அப்ப நான் போட்டு பிறகு வாறன் மயூரி என்று சொல்லி கனகம் செல்ல அவள் பின்னால் கோமளமும் தாயுடன் போகிறாள். மயிலம்மாவும் ஒயிலாக நடந்து படியேறி வீட்டுக்குள் வர முன் அறையில் இருந்து வாமனும் சுந்துவும் போனமாதம் நடந்த ஒரு சம்பவம் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். சுந்து வாமனிடம், எட வாமு, நாங்கள் அந்த மதகில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தால் அவருக்கென்ன வந்தது அவற்ர வீட்டுக்குள்ளேயே போனனாங்கள். அது இல்லடா சுந்து நாங்கள் அந்த மாங்காய்க்கு கல் எறிந்ததுதான் பிரச்சினை. திண்ணையில் ஆச்சி இருக்கிறா, இங்கால அவற்ர வைப்பு நிக்குது அதுதான். ஓ....அப்ப அவற்ர வைப்பாட்டிக்கு கெத்து காட்ட எங்களை பேசிபோட்டுப் போறார் என்கிறாய். ஓமடா .....எண்டாலும் நீ ஒண்டைக் கவனிச்சனியே அந்தப் பெண் இஞ்சாலுப் பக்கமாய் வந்து ரெண்டு மாங்காயை மதிலுக்கு மேலால் போட்டுட்டு மற்றதுகளைப் பொறுக்கிக் கொண்டு போனதை. ஓமடா....நானும் பார்த்தனான்.....எண்டாலும் நீ தடுத்திருக்கா விட்டால் அடுத்த கல்லால அவற்ர மண்டையை உடைத்திருப்பன். போடா ....உனக்கு விஷயம் தெரியாது சுந்து....நான் பகுதி நேரமாய் வேலை செய்கிற அரசு விதானையார் இருக்கிறார் எல்லோ அவரிட்ட இவர் ஒருநாள் ஒரு ஆலோசனை கேட்க வந்தவர்.அவரும் இவரோட கதைத்து அனுப்பினாப்பிறகு என்னிடம் சொன்னவர், இப்ப வந்தவர் யார் தெரியுமோ, இவர்தான் வைத்திலிங்கம். ஆனால் எல்லோருக்கும் காசை வட்டிக்கு விட்டு தொழில் செய்கிறவர்.அதால இவருக்கு "வட்டி வைத்தி"என்றுதான் சொல்லுறவை.உவங்களோட வலு கவனமாய் புழங்க வேண்டும்.கொழுவுபட்டால் "பிலாக்காய் பிசின்மாதிரி" லேசில பிரச்சினை தீராது.உவர் கொஞ்ச காலத்துக்கு முந்தித்தான் ஒரு பிள்ளையை அவளின் பெற்றோரிடம் இருந்து உங்கட வட்டிக்கும் முதலுக்குமாய் இவள் என்னோட இருக்கட்டும் என்று சொல்லி கொண்டு வந்திட்டார். அதால அவற்ர மூத்த சம்சாரமும் பிள்ளைகளும் பேச்சுப்பட்டு அடிபாடுகளுடன் இருக்க நான் போய்த்தான் அவர்களின் பிரச்சினையை தீர்த்து வைத்தனான். பிறகு அவளுக்கு தனியாக வீடு வளவும் குடுத்து வைத்திருக்கிறார். அது இதுவாகத்தான் இருக்கும். அவையளுக்கும் நிறைய சொத்து பத்தெல்லாம் இருந்தது எல்லாம் இவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி வட்டி குடுத்து எல்லாம் பறிபோட்டுது.பத்தாதற்கு பெட்டையையும் கூட்டிக்கொண்டு வந்து வைத்திருக்கிறார் என்று சுந்துவுக்கு வாமு சொல்கிறான். இவர்கள் கதைப்பது தன்பாட்டுக்கு காதில் விழ பக்கத்து அறையில் மயிலம்மா ஈரப்பாவாடையை கால்வழியே கழட்டி விட்டுட்டு வேறு ஆடைகளை எடுத்து அணிந்து கொள்கிறாள்.ஒரு கனம் அங்கிருந்த நிலைக்கண்ணாடியில் தன் பிம்பம் தெரிய தன்னை மறந்து ரசித்தவள்..... ம்.....என்று ஒரு பெருமூச்சு அவளிடம் இருந்து வெளிப்படுகிறது. பொடியங்கள் கதைக்கும் "வட்டி வைத்தி" பற்றி அவளுக்கும் தெரியும்.அவரின் மனைவியுடன் மயிலம்மா நல்ல பழக்கம். அவர்களின் வயல் அறுவடைக்காலங்களில் மயிலம்மாவும் கனகமும் அங்கு சென்று வேலை செய்துவிட்டு கூலி வாங்கிக் கொண்டு வருவது வழக்கம். அவர் வைத்திருக்கும் பொடிச்சியைப் பற்றியும் அவர் மனைவி மயிலம்மாவிடம் மனம்விட்டு கதைக்கும் நேரங்களில் சொல்லி இருக்கிறா. அதுவும் வைத்தி வயல் பக்கம் வந்துட்டு விசுக்கென்று மோட்டார் சைக்கிளை திருப்பி சீறிக்கொண்டு போகும்போது ....ம் ...."சொந்தக் காணிக்குள் உழமுடியாத மாடு வெளியூருக்கு போச்சுதாம் பவிசு காட்ட " என்று ரெண்டு கையையும் விரிச்சு நெளிச்சுக் காட்டுவாள்..... என்னக்கா இப்படிச் சொல்லுறியள் என்று கேட்டால் பின்ன என்னடி, அந்தப் பொடிச்சிதான் பாவம். இது அங்க போய் மூக்கு முட்ட குடிச்சுட்டு சோத்தையும் விரலால அலைஞ்சு போட்டு அப்படியே வேட்டி போனஇடம் தெரியாமல் குப்புறப் படுத்திட்டு சாமத்தில எழும்பி வரும். இதெல்லாம் சும்மா ஊருக்கு பவிசு காட்ட வேறு ஒன்றுமில்லை என்று சொல்லுவாள். அங்கால பூவனம் இருவருக்கும் தேநீர் கொண்டுவந்து தருகிறாள். சுந்து அவளிடம் இப்ப எங்களுக்கு வேண்டாம் எடுத்துக்கொண்டு போ என்று சொல்ல அவளும் எனக்குத் தெரியும் நீங்கள் என்ன குடிக்கிறீங்கள் என்று சொல்லி நெளித்துக் கொண்டு போகிறாள். அப்போது வாமு சுந்துவிடம் டேய் , உன்ர தங்கச்சி பூவனத்தின்ர சம்பந்தம் எந்தளவில இருக்குது என்று கேட்கிறான்.... அதெடா நல்ல சம்பந்தம்தான் ஆனால் நடக்கிறது சந்தேகமாய்தான் இருக்கு......ஏனடா ......வேறை என்ன பணம்தான் பிரச்சினை. உனக்குத்தான் தெரியுமே அப்பா நல்லா சம்பாதித்தவர்தான், அம்மாவையும் வேலை செய்ய விட்டதில்லை.எங்களையும் நல்லா பார்த்துக் கொண்டவர். ஆனால் சொத்தென்று பெரிதாய் எதுவும் சேர்த்து வைக்க வில்லை.அவர் எதிர்பாராமல் இறந்து போனபடியால் எங்களிடம் மிஞ்சியது இந்த வீடும் வளவும் பின்னால் இருக்கும் வயலும்தான். இந்த நிலைமையில் அம்மா எங்களை ஆளாக்கி படிப்பிக்கிறதே பெரிய காரியம். நானும் இனி பல்கலைக்கழகத்துக்கு போகவேணும். அந்தக் கடிதத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறன். அது வந்தாலும் அங்கே போறதுக்கு கூட என்ன வழியென்று தெரியவில்லை. அப்படி கடிதம் வந்தாலும் நீ யோசிக்காத சுந்து. நான் மோட்டார் சைக்கிள் வாங்கவென்று சேர்த்து வைத்திருக்கிற காசை உனக்குத் தருவன். அதுக்கில்லையடா வாமு, சிலரிடம் பணம் தானாய்ப் போய்க் குவியுது, நாங்கள் முயற்சி இருந்தும் கால்காசுக்கு கல்லில நார் உரிக்க வேண்டிக் கிடக்கு. வாழ்க்கை என்றால் அப்படித்தான் சுந்து. நாளைக்கு நீயும் பெரிய ஆளாய் வருவாய்.வறுமையும் இப்படியே நீடிக்காது.........! மயில் ஆடும்.........! 🦚2 points- ஆதி அறிவு
1 pointஆதி அறிவு ------------------- இப்பொழுது வரப்போகும் புகைவண்டி மூன்றாவது தடத்தில் வந்து கொண்டிருக்கின்றது. முதலாவது மேடையில் நிற்பவர்கள் மேம்பாலத்தில் ஏறி அடுத்த பக்கம் போகவும் என்ற அறிவிப்பு தலைக்கு மேலேயிருந்து வந்து கொண்டிருந்தது. அங்கு முதலாவது தடம், இரண்டாவது தடம், மூன்றாவது தடம், முழு நிலையத்திற்கும் சேர்த்து நான் ஒருவனே முதலாவது மேடையில் நின்று கொண்டிருந்தேன். மனிதர்களின் குறுக்கீடுகள் எதுவும் இல்லாமல், இது செயற்கை நுண்ணறிவு கொண்ட ஒரு இயந்திரம் செய்யும் அறிவிப்பாகக் கூட இருக்கலாம். சுற்றிவர மெல்லிய இருட்டு கவிழ்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது திடீரென ஒருவர் முன்னால் தோன்றி, எனக்கு ஏதாவது சில்லறைகள் கொடு என்று கேட்கக்கூடும். கேட்பதைக் கொடுத்தால், தோன்றியது போலவே மறைந்தும் விடுவார்கள். ஆனால் ஒரு டாலர் கூட கையிலோ, பையிலோ இல்லை. கடன் மட்டைகள், காசு மட்டைகள் செல்லாத இடம் இது. வந்து கேட்பவர் என் வங்குரோத்து நிலை கண்டு கோபப்படவும் கூடும். இந்த நிலையில் 'நோ இங்கிலீஸ்' என்று சொல்வது தான் உசிதம். முழுதும் துறந்து தெருக்களில் வாழும் இந்த மனிதர்களிடம் மொழிப்பற்று, தீவிரம் இருக்க சாத்தியமில்லை. இங்கு எவரும் எவரையும் ஆங்கிலம் தெரியாது என்பதற்காக அடித்ததாகவோ அல்லது சுட்டதாகவோ நான் இதுவரை கேள்விப்பட்டதும் இல்லை. மூன்றாம் மேடைக்குப் போக முன், முதலாம் மேடையின் பின்புறம் பிரயாணச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று இன்னும் ஒரு அறிவிப்பு மேலிருந்து என் மீது இறங்கியது. தனி ஒரு மனிதனுக்காக அரசு இயந்திரம் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தது. அறிவிக்கும் குரல் இருமி, கம்மி, புகைவண்டி நிற்கப் போகும் அடுத்த அடுத்த தரிப்பிடங்களைச் சொன்னது. உலகில் செயற்கை நுண்ணறிவு இன்னமும் இருமத் தொடங்கவில்லை, ஆதலால் இந்த இடத்தில் இன்னும் ஒரு சாதாரண மனிதனும் என்னுடன் இருக்கின்றார் என்ற அந்த நினைப்பே ஆறுதலாக இருந்தது. இன்னும் ஒருவர் அவசரமாக வந்தார். வீடு வேண்டாம் என்று வீதியில் வாழ்பவர்களை அடையாளம் காண்பது மிகவும் இலகு. இவர்கள் ஒரு வீட்டுச் சாமான்களை தங்களுடன் எப்போதும் சுமந்து கொண்டு திரிவார்கள். சுமக்கும் தள்ளு வண்டி கூட அருகில் இருக்கும் பெரிய கடைகளில் ஒன்றினுடையதாக இருக்கும். வந்தவர் கடகடவென்று என்னைத் தாண்டி, உயர்த்தியில் ஏறி, அவசர அவசரமாக உயர்த்தியின் கதவை மூடி, மேம்பாலத்தில் ஓடி நடந்து, மறுபக்க உயர்த்தியால் இறங்கி, மூன்றாவது மேடையில் உயர்த்தியின் பின்பக்கம் ஒளித்து நின்றார். புகைப்பதைத் தவிர, செயல்கள் என்று இவர்கள் வேறு எதுவும் செய்வதில்லை. பல புகைத்தல்கள் இங்கே சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டும் உள்ளது. ஒளித்து நின்று புகைக்க வேண்டிய கட்டாயமும் இவர்களுக்கு இல்லை. இலங்கையில் 28 கோடி ரூபாய்கள் பெறுமதியான ஆணிகளை ஒரு பாலத்தில் இருந்து சிலர் திருடிச் சென்றுள்ளனர் என்ற சமீபத்திய செய்தி நினைவில் மின்னி மறைந்தது. பார்த்துக் கொண்டே இருக்க, நீளம் பாய்தலுக்கு ஓடி வருபவர் போன்று ஒரு பெண்மணி ஓடி வந்தார். நின்றார். 'ஜேக்கப், உன்னை எனக்கு அக்கு வேறு ஆணி வேறாகத் தெரியும். (தடை செய்யப்பட்ட வார்த்தை). (தடை செய்யப்பட்ட வார்த்தை). நீ அந்த உயர்த்தியின் பின்னால் ஒளிந்து நிற்கின்றாய். (இரண்டு தடை செய்யப்பட்ட வசனங்கள்). ஜேக்கப் வெளியில் வரவேயில்லை. புகைவண்டி வந்து கொண்டிருந்தது. ஜேக்கப் அங்கே தான் ஒளித்து இருக்கின்றார் என்று அந்தப் பெண்ணுக்கு எப்படித் தெரியும் என்று எனக்கு விளங்கவில்லை. வாழ்க்கை வீடோ வீதியோ, ஜேக்கப்பிற்கும் இது என்றும் விளங்கப் போவதில்லை.1 point- துவாரகா உரையாற்றியதாக...
1 pointஅட இன்னும் இந்த திரி அனையவில்லையாக்கும் அப்ப பிளான் பண்ணியே நிறைய எலிகள் உள் வந்துள்ளன . குறை ஒன்றும் வேண்டாம் கள உறவு @ரசோதரன் திரிக்குள் போனபின் ஒரு பீலிங்1 point- என்ன பார்ட்டி இது??
1 pointஆனால் அம்மாமாரையும் அழைத்திருக்கடவேண்டும் அவர்கள் இந்த வயதில் தனியாக இருப்பதிலும் பார்க்க நாலு பேரோஐட கதைத்தால் நல்லதுதானே. ஆனால் காணுமப்பா என்று 2வது ரவுண்டு தொடங்க முதலே சாப்பாட்டைக் கொண்டு வந்து நீட்டுவார்கள். அதுதான் வீசுகண்ணை அழைக்கவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் விசுகண்ணை பார்ட்டிக்கு நல்ல ஐடியா குடுத்திருக்கிறியள்.1 point- சுழிபுரம்: புத்தர் சிலையை அகற்றா விட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும் - சுகாஷ் எச்சரிக்கை!
மீசைகார நண்பன்.. கவனிச்சா.. மீசை இல்லா நண்பன்.. இராணுவ முகாம் வாசலில்.. இராணுவத்துக்கு பைல் காவிக்கிட்டு நிற்பாரே. அந்தளவுக்கு நெருக்கம்.. இருவரும். 🤣1 point- என்ன பார்ட்டி இது??
1 pointதம்பியும் திருமணமாகி ஆண்டுகள் உருண்டோடுகின்றன. இன்னமும் பூச்சி புழு ஒன்றையும் காணோம். இல்ல கனபேர் திருமணமாகி குடும்ப கட்டுப்பாடாம் என்று கட்டுப்பாடை விட்டா ஒன்றையும் காணோமே என்று மருந்து மாத்திரை என்றும் கோவில் குளமென்றும் திரிவார்கள்.1 point- முருகன், ரொபட் பயஸ் உள்ளிட்டவர்களையாவது உயிருடன் விடுதலை செய்யுங்கள் - இந்திய மற்றும் இலங்கை அரசிடம் சிறிதரன் எம்.பி. வேண்டுகோள்
இன்றைய உலகில் அரசியல் நாகரீகம் எங்கிருக்கின்றது? மனிதாபிமானமே இல்லாத உலகில் அல்லவா வாழ்கின்றோம்.....🙃1 point- சுழிபுரம்: புத்தர் சிலையை அகற்றா விட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும் - சுகாஷ் எச்சரிக்கை!
கட்சி பேதமின்றி போராடுதல் தான் ஒரே வழி. ரனிலுக்கு ஒரு வாக்கும் போகாமல் செய்ய வேண்டும்.1 point- என்னை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதி - நூல் வெளியிடுகின்றார் கோட்டாபய
நன்றாக ஆட்சி செய்தது சிங்கள மக்களுக்கும் மேற்குக்கும் பிடிக்கவில்லை போல.🙂1 point- சுழிபுரம்: புத்தர் சிலையை அகற்றா விட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும் - சுகாஷ் எச்சரிக்கை!
நான் நினைக்கிறேன் இப்படியே அடர்த்தியான.. சிங்கள இராணுவ இருப்பை நாம் சகித்துக் கொண்டிருப்போமானால்.. வலிவடக்கு முழுவதும்.. வன்னியும்.. புங்குடுதீவு போன்ற பகுதிகளும்.. சிங்கள பெளத்த மயமாகும் காலம் மறறைய இடங்களை விட விரைவாக நிகழ்ந்தேறும். ஏனெனில்.. இந்த புத்தர் சிலை வரவு என்பது சகட்டுமேனிக்கு அரசமரம் உள்ள இடமெல்லாம் வருகுது. அது சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு இராணுவத்தின் வேலிக்குள் இருந்தால் என்ன வெளியில் இருந்தால் என்ன. மக்கள் சுகாஷிற்கு ஆதரவு வழங்காலும் விட்டாலும் பரவாயில்லை.. அவரின் இந்த வேண்டுகோளை அதிதீவிரமாகக் கொள்ளாவிட்டால்.. மாதகலை.. அழுத்து சுழிபுரம்.. சிங்களத்தின் முன்னேறிப்பாய்தலை.. புலிப்பாய்ச்சல் மூலம் முறியடித்து.. புக்காரா (1) வீழ்த்தி.. எம் மறவர்கள் உயிர் கொடுத்து மீட்ட நிலங்கள் எல்லாம் இப்போ எம் கண் முன்னாலேயே பறிபோகிறது. நவாலி தேவாலய மக்களின் உயிர்பலிகளையும் இந்த நில ஆக்கிரமிப்பை மையப்படுத்தியே சிங்களம் மேற்கொண்டிருந்தது. குறிப்பாக சந்திரிக்கா- ரத்வத்தை கூட்டு இனப்படுகொலைக் கும்பல்.1 point- என்ன பார்ட்டி இது??
1 pointநமக்கு இந்த நிலையை அடைய நிறைய காலம் இருப்பதனால்.. அடைந்தால்.. கருத்துச் சொல்லலாம். மற்றும்படி.. ஒரு ஓசிப் பார்ட்டிக்கு எப்படி எப்படி எல்லாம் ஐ டியா போடுறாய்ங்கப்பா. 🤣1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- என்ன பார்ட்டி இது??
1 pointமாமனார்களை மட்டும் எப்படி அழைப்பது? என்னை யாராவது எங்காவது தனியே வா என்றால் நான் போக மாட்டேன். தொடக்கத்திலா முடிவிலா இதைக் கேட்டீர்கள்?1 point- முடிவிலி
1 point- என்ன பார்ட்டி இது??
1 pointஆஹா.....சம்பந்திகளைக் கௌரவித்து இருக்கிறீர்கள்.......நல்ல விடயம்...... ஏன் மருமக்களின் தாய்மாரையும் அழைத்திருக்கலாம் ......இனி அவர்கள் வீடுகளுக்கு போனால் சம்பந்தி ஐயா தேநீர் போட்டுத்தருவார் வாங்கிக் குடியுங்கோ என்று சொல்லிப்போட்டு ஆட்கள் நழுவிப் போயிடுவினம்........! 😂1 point- ட்ரம்ப் போட்டியிடுவதை மாநிலங்கள் தடுக்க முடியாது: அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு
மேலே கருத்துக்களைப் பார்க்கையில் "இறைச்சிக் கடைக்காரனுக்கு வாக்குப் போடும் அப்பாவிக் கோழிகள்"என்ற கோசானின் வாக்கியம் நினைவில் வருகிறது. ட்ரம்ப் வரக்கூடும். வந்தால், முன்னரை விட தீவிரமாக ஐரோப்பிய அமைப்புகளில் இருந்து அமெரிக்காவின் பங்களிப்பை வெட்டிக் கொள்வார். இதன் ஒரு அங்கமாக நேட்டோவில் அமெரிக்கப் பங்களிப்புக் குறைக்கப் படும். நேட்டோ இராணுவ ரீதியில் பலவீனமானால், அதனை பலப் படுத்தக் கூடிய ஒரு தலைமை நாடு இன்னும் ஐரோப்பாக் கண்டத்தில் இல்லை. புரின் உக்ரைனைத் தாண்டி பால்ரிக் நாடுகளையும் தட்டிப் பார்க்கக் கூடும். போலந்து, ஜேர்மனி கூட ஆக்கிரமிக்கப் படா விட்டாலும், மறைமுக அச்சுறுத்தல்களோடு போராட வேண்டிய நிலை வரலாம். ஆனால், இதெல்லாம் எங்கள் தமிழ் குடியேறிகளுக்குக் கவலை தரும் விடயங்களேயல்ல! ஆக மிஞ்சிப் போனால், இருக்கவே இருக்கிறது அமெரிக்கனின் Ramstein airbase தளமும், C-17 Globe Master உம்! ஒரு ஷொப்பிங் பையோடு போய் வரிசையில் நின்றால் ஏறிப் பறந்து இங்கால வந்து விடலாம்😂! பிறகு இங்க இருந்து "அமெரிக்க, ஏகாதிபத்திய, சுரண்டல் வாத..." என்று பொங்கி, உண்டு, உறங்கிக் கழிக்க வேண்டியது தான்!1 point- பிரான்ஸ் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை!
உண்மையை சொன்னால், அடிக்க வருவார்கள். வேண்டாம்... விட்டுடுங்க.1 point- ட்ரம்ப் போட்டியிடுவதை மாநிலங்கள் தடுக்க முடியாது: அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு
பைடன் நிர்வாகத்தின் மிகக் கீழ்த்தர சனநாயக செயற்பாடுகளையும் அமெரிக்க சனநாயகத்தின் சாக்கடை தனத்தையும் இனங்காட்டிய சிங்கம். பெட்டை வழக்கு.. கிழவி வழக்கு.. பாலியல் வன்கொடுமை வழக்கு.. கப்பம் வழக்கு.. ஊழல் வழக்கு.. புட்டினுடன் சேர்த்து தேசத்துரோக வழக்கு.. ஆவண மோசடி வழக்கு.. இப்படிப் பல... கடைசியில்... தேர்தலில் நிற்கக் கூடாது வழக்கு வரை போட்டாங்கள். சிங்கம் சீறி பாய்ஞ்சடிச்சு வெளில வந்திட்டுது. ஆனால் என்ன ஒரு சனநாயக நாட்டில்... சட்டம் எப்படி எல்லாம் தவறாக ஒரு தனிமனிதனை முடக்க பாவிக்கப்பட முடியும் என்பதை.. இது இன்னும் அரைகுரை சனநாயக நாடுகளாக விளங்கும் நாடுகளுக்கு.. பாடமாக்கி இருப்பது தான் மிகப் பெரிய ஆபத்து. குறிப்பாக தெற்காசிய சன நாய் அகம்.. இதனை லபக் என்று அள்ளிக்கொள்ளும். ரம்புக்கு எதிராக அதிகம் மறைமுகமாக உழைப்பது அமெரிக்க ஊடகங்களை விட பிபிசி தான். பிபிசி மிக பக்கச்சார்பான ஊடகம்.1 point- தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி குற்றம்சாட்டு
1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு இனத்தையே அழித்து விட்டு கூடவே இலங்கையில் இருந்து கிடைக்கும் இரட்டை ஜனாதிபதி பென்சனில் நடைபயிறசியின் பின் நிம்மதியாக லண்டன் தெருவில் காலார இருக்கிறா என்றால் ???????????????1 point- சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் - ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் பற்றி அதிகாரிகள் கூறுவது என்ன?
உண்மைகளை தவிர வேறு இல்லை. அது ஏன் அண்ணா அது ஏன் அண்ணா முஸ்லிம் மதத்தை மட்டும் X என்று சொல்ல வேண்டும்? இந்துக்கள் கெட்டது செய்தால் இந்துக்கள் செய்துவிட்டார்கள் என்று தாராளமாக சொல்லலாம் ஆனால் முஸ்லிம்கள் முஸ்லிம் மதபோதனைபடி தீமைகள் செய்தால் மட்டும் அவர்களாக செய்யவில்லை அமெரிக்கா வந்து சதி வேலை செய்து அந்த மதத்தில் உள்ள சிலரை தவறு செய்ய வைத்துவிட்டனர்.அதற்கு முஸ்லிம் மதத்தை குறைசொல்ல கூடாது.அது தான் அமைதியான ஒரே ஒரு மதம்.எல்லோரும் சேர வேண்டிய மதம் 🙆♂️ [90 வீதமானவர்கள் மத போதனைகளை பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர் அந்த போதனையை மறுபரிசீலனை செய்வதையோ அல்லது மாத்தி யோசிப்பதையோ மகாபாதக செயலாக கருதுகின்றனர் ] அந்த முஸ்லிம் மதத்தில் கூட நான் இதை எல்லாம் பின்பற்ற மாட்டேன் ஏற்று கொள்ள மாட்டேன் அவசியம் காலத்திற்கு ஏற்ப முஸ்லிம்மத போதனைகள் மறுபாசீலனை செய்யபட வேண்டும் என்று சொல்லும் நல்வர்கள் உள்ளனர். இந்த வெள்ளை அடிக்கும் உன்னதமானவர்கள் அந்த நல்ல முஸ்லிம்களுக்கும் தீமை செய்கின்றனர்.1 point- பால் குடிப்பது நல்லதா? யாரெல்லாம் பால் குடிக்கக் கூடாது?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 6 மார்ச் 2024, 02:40 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் 'எங்கள் நிறுவனத்தின் பிஸ்கட்டில் அதிக பால் உள்ளது, எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பை பாலில் கலந்து குடித்தால் உங்கள் பிள்ளைகள் பல சாதனைகளைப் புரிவார்கள்' போன்ற பால் தொடர்பான பல விதமான விளம்பரங்களை பல வருடங்களாக தொலைக்காட்சியில் பார்த்திருப்போம். உலகிலேயே அதிகமாக பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா தான். 2022-23ஆம் ஆண்டில் இந்திய நாட்டின் மொத்த பால் உற்பத்தி 230.58 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. மாட்டுப்பால் என்பது மனித உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான, ஆரோக்கியமான ஒரு பானம் என்ற கருத்து இந்திய சமூகத்தில் பரவலாக உள்ளது. இரவில் ஒரு கிளாஸ் பால் குடித்துவிட்டு தூங்குவதை பலர் ஒரு தினசரி பழக்கமாக கடைபிடிக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட குழந்தைப் பருவத்தைக் கடந்த பிறகு, மனிதனைத் தவிர வேறு எந்த மிருகமும் வாழ்நாள் முழுவதும் பால் குடிப்பதில்லை, குறிப்பாக வேறு மிருகத்தின் பாலை. பால் என்பது தினமும், எல்லோரும் குடிக்கக்கூடிய ஒரு பானம் தானா? அதிலுள்ள சத்துக்கள் என்ன? தினசரி எவ்வளவு பால் எடுத்துக்கொள்ளலாம்? யாரெல்லாம் பால் குடிக்கக்கூடாது? போன்ற பல கேள்விகளுக்கான பதிலே இந்தக் கட்டுரை. பட மூலாதாரம்,GETTY IMAGES அசைவம் சாப்பிடுவோருக்கு பால் அவசியமா? பால் என்பது கால்சியம், புரதம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்த ஒரு பானம் தான், ஆனால் அசைவ உணவை போதுமான அளவு எடுத்துக் கொள்பவர்களுக்கு பாலை உணவில் சேர்த்துக் கொள்ளாவிட்டாலும் எந்த பிரச்னையும் ஏற்படாது என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமார். "புதிய கற்காலத்தின் போது மனிதர்களுக்கு பல விதமான சத்துக் குறைபாடுகள் இருந்தன. எனவே அதை பூர்த்தி செய்ய, கால்நடைகளை அதிகம் வளர்த்து, கிடைக்கும் பாலை தினமும் அருந்தும் வழக்கம் தோன்றியது. அந்த காலத்தில் விவசாய பொருட்களை மட்டுமே நம்பி இருக்க முடியாத நிலை இருந்ததால் தோன்றிய இந்த பழக்கம், 10,000 வருடங்களாக சமூகத்தில் தொடர்கிறது. இப்போது நமது டயட்டை சரியாக திட்டமிட்டால், பால் அவசியமில்லை" என்கிறார் மருத்துவர் அருண் குமார். "சைவ உணவுகளை மட்டுமே உண்பவர்கள் கண்டிப்பாக பால் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பிட்ட அளவு உள்ளது. எல்லோருக்கும் பால் ஒத்துக்கொள்ளுமா என்று கேட்டால், இல்லை. காரணம் பாலில் லாக்டோஸ் எனும் சர்க்கரை உள்ளது. அதை ஜீரணிக்க நமது குடலில் லாக்டேஸ் எனும் என்சைம் இருக்க வேண்டும். இந்த என்சைம் இல்லையென்றால் பல உடல்நலக் கோளாறுகள் உண்டாகும்" என்கிறார் மருத்துவர். பட மூலாதாரம்,DOCTORARUNKUMAR/FACEBOOK படக்குறிப்பு, குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமார் பாலில் உள்ள சத்துக்கள் என்ன? "பொதுவாக பால் என்றாலே அதிகமாக எடுத்துக்கொள்ளப்படுவது பசும்பால் தான். அதற்கடுத்து எருமைப் பால். கலோரிகளைப் பொறுத்தவரை நூறு கிராம் பசும்பாலில் 67 கலோரிகள் உள்ளது, ஆனால் எருமைப் பாலில் 117 கலோரிகள் உள்ளது. இதனால் தான் எருமைப் பால் தொடர்ந்து குடித்தால் உடல் எடை கூடுகிறது" என்கிறார் மருத்துவர் அருண் குமார். "நூறு கிராம் பசும்பாலில் கால்சியம் சத்து 120 என்ற அளவிலும், எருமைப் பாலில் 210 என்ற அளவிலும் உள்ளது. புரதங்களைப் பொறுத்தவரை பசும்பாலில் 3.2 என்ற அளவிலும், எருமைப் பாலில் 4.3 என்ற அளவிலும் உள்ளது. ஆனால் இது கேசின் புரதம், அதாவது இவ்வகை புரதங்கள் ஜீரணத்திற்கு உகந்தவை அல்ல. இதனால் தான் நமது குடலில் லாக்டேஸ் என்சைம் இல்லையென்றால் பல உடல்நலப் பிரச்னைகள் உண்டாகும் என முன்னர் கூறியிருந்தேன். அதே போல கொழுப்பைப் பொறுத்தவரை பசும்பாலில் 4.1, எருமைப் பாலில் 6.5. எனவே எருமைப்பாலில் தான் சத்துக்கள் அதிகமாக உள்ளன" என்கிறார் மருத்துவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இயற்கையாக பால் என்பது பெரியவர்கள் குடிக்கக்கூடிய பானமாக இருந்ததில்லை என்கிறார் மருத்துவர் அருண் குமார். யாரெல்லாம் பால் குடிக்கக்கூடாது? தொடக்கத்தில் இந்த லாக்டேஸ் என்சைம் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளிடம் மட்டுமே இருந்ததாகவும், ஆனால் மனிதனின் தினசரி பால் அருந்தும் பழக்கத்தால் காலப்போக்கில் மனித உடல் தன்னை மாற்றிக்கொண்டது எனவும், எனவே இயற்கையாக பால் என்பது பெரியவர்கள் குடிக்கக்கூடிய பானமாக இருந்ததில்லை என்கிறார் மருத்துவர் அருண் குமார். "பால் என்பது அஜீரணக் கோளாறுகளுடன் நேரடி தொடர்புடையது. சிலர் மிகவும் சாதாரணமாக தினமும் ஒரு லிட்டர் பால் வரை குடிப்பார்கள். ஆனால் லாக்டோஸ் அலர்ஜி இருப்பவர்களுக்கு அரை கிளாஸ் பால் குடித்தால் கூட வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் பிற வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். இவர்கள் பாலை தவிர்க்க வேண்டும்." என்கிறார் மருத்துவர். "மாட்டுப்பாலில் அதிகளவு சத்துக்கள் உள்ளதால் இதை குழந்தைகளுக்கு கொடுப்பதால் எடை கூடும் தான், ஆனால் அதை மட்டுமே கொடுப்பது நல்லதல்ல. சில குழந்தைகள் மாட்டுப்பாலை குடித்துவிட்டால் வேறு உணவுகளை தவிர்த்து விடுவார்கள். அது ஆபத்தானது, ஏனென்றால் மாட்டுப்பாலில் இரும்பு சத்து மிகவும் குறைவாக உள்ளது." "ஒரு குழந்தை 13 லிட்டர் பால் குடித்தால் தான் ஒரு நாளுக்கு தேவையான இரும்பு சத்தைப் பெற முடியும். அவ்வளவு பால் குடிப்பது சாத்தியமில்லை. அது மட்டுமில்லாது பாலில் இருக்கும் அதிகப்படியான கால்சியம் கிடைக்கும் சிறிதளவு இரும்பு சத்தையும் பாதியாக குறைத்து விடும். எனவே ரத்தசோகை ஏற்படும்" எனக் கூறுகிறார் மருத்துவர் அருண் குமார். "ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தவிர சிறந்த உணவு வேறு எதுவும் இல்லை. ஆனால் சில குழந்தைகளுக்கு நான்கு மாதத்தில் கூட மாட்டுப்பால் கொடுக்கிறார்கள். இதனால் புரதம் சார்ந்த அலர்ஜி ஏற்பட்டு, வயிற்றில் இரத்தக் கசிவு ஏற்படும் வாய்ப்பு கூட உள்ளது. நீர்சத்து குறைபாடு முதல் சிக்கல்கள் உண்டாக வாய்ப்புள்ளது. 2 வயதுக்கு மேல் தான் மாட்டுப்பாலை நன்றாக ஜீரணிக்கும் சக்தி அவர்களுக்கு வரும்" என்கிறார் மருத்துவர் அருண் குமார். படக்குறிப்பு, ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன் தினசரி எவ்வளவு பால் குடிக்கலாம்? சில ஆண்டுகளுக்கு முன்பு 'கிரிக்கெட் வீரர் தோனிக்கு மிகவும் பிடித்த பானம் பால். தினமும் நான்கு லிட்டர் பசும்பால் குடிப்பதால் தான் அவரால் எளிதாக ஹெலிகாப்டர் ஷாட்களை அடிக்க முடிகிறது' என்ற செய்தி இணையத்தில் பரவியது. இதற்கு ஒரு பேட்டியில் பதிலளித்த தோனி, தான் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பால் வரை மட்டுமே எடுத்துக்கொள்வதாக கூறியிருந்தார். "தோனியைப் போல அனைவராலும் 1 லிட்டர் பாலை தினசரி எடுத்துக்கொள்ள முடியாது. அவர் செய்யும் உடற்பயிற்சிக்கு அது சரியாக இருக்கலாம். சராசரி மனிதர்களுக்கு அது ஆரோக்கியமானது அல்ல, ஆனால் 400 மில்லி வரையிலான பால் அல்லது 400 கிராம் தயிர் நிச்சயமாக எடுத்துக்கொள்ளலாம்" என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன். "இப்போது பல குடும்பங்களில் வாரத்தில் இரண்டு அல்லது ஒரு நாள் மட்டும் தான் அசைவ உணவு எடுத்துக்கொள்கிறார்கள். எனவே அவர்களுக்கு தினமும் பால் எடுத்துக்கொள்வது நல்லது தான். ஆனால் முதியவர்களுக்கு பால் தொடர்பான அஜீரணக் கோளாறுகள் இருந்தால், மோராக 400 மில்லி வரை எடுத்துக்கொள்ளலாம்." என்கிறார் அவர். பட மூலாதாரம்,SARAVANAKUMARM/FACEBOOK படக்குறிப்பு, ஹோமியோபதி மருத்துவர் சரவண குமார். பாலுடன் சர்க்கரை சேர்த்து குடிக்கலாமா? "காலையில் 200 மில்லி, இரவில் 200 மில்லி என ஒரு நாளுக்கு 400 மில்லி வரை பாலை எடுத்துக்கொள்வது பாதுகாப்பான அளவு. ஆனால் பாலில் சர்க்கரை கலந்து குடிப்பதை தவிர்க்க வேண்டும். பாலில் ஏற்கனவே போதுமான அளவு கலோரிகள் உள்ளதால், தொடர்ந்து பல வருடங்களுக்கு பாலில் சர்க்கரை சேர்த்து குடிப்பது உடலுக்கு ஆபத்தாக மாறிவிடும்" என எச்சரிக்கிறார் ஹோமியோபதி மருத்துவர் சரவண குமார். "உதாரணமாக ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்து இருவேளை பால் குடிக்கிறோம் என்றால், ஒரு நாளுக்கு 40 கிராம் சர்க்கரை. அதுவே ஒரு மாதத்திற்கு என கணக்கு போட்டால் பாலுடன் மட்டுமே ஒரு கிலோவுக்கு அதிகமான சர்க்கரையை நாம் உட்கொள்கிறோம். குழந்தை பருவத்திலிருந்தே இதை செய்கிறோம் என்றால் சற்று யோசித்து பாருங்கள். எனவே சர்க்கரை இல்லாமல் பால் குடிப்பது ஒரு நல்ல வழியாக இருக்கும்" "அல்சர், லாக்டோஸ் அலர்ஜி இருந்தால் கண்டிப்பாக பாலை தவிர்க்க வேண்டும். அஜீரணக் கோளாறுகள் இருந்தால் பால் அருந்தக் கூடாது. கால்சியம் சத்து பெறுவதற்கு பால் தவிர்த்து பார்த்தால், அசைவம் உண்பவராக இருந்தால் ஆட்டுக் கால் சூப், முட்டையின் வெள்ளைக் கரு, ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். நெய், வெண்ணெய், நிலக்கடலை, கீரைகள் ஆகியவையும் கால்சியம் நிறைந்த உணவுகள்" என்று கூறுகிறார் ஹோமியோபதி மருத்துவர் சரவண குமார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஏ1 அல்லது ஏ2 பால், எது சிறந்தது? நாட்டு ரக மாடுகளின் ஏ2 ரக பால் புரதம் நிறைந்தது என்றும் ஏ1 ரகம் சார்ந்த வெளிநாட்டு மாடுகளின் பாலை தொடர்ந்து பருகி வந்தால் சர்க்கரை நோய் உட்பட பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்ற கருத்து உண்மையா என மருத்துவர் அருண்குமாரிடம் கேட்டோம். "இது தொடர்பான ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடந்துள்ளன. பாலில் உள்ள சில புரத அமைப்புகளில் வேறுபாடுகள் இருக்கிறது, ஆனால் ஏ1 பால் உடலுக்கு நல்லதல்ல என்பதற்கு எந்த வலுவான ஆதாரமும் இல்லை. நம் நாட்டு மாடுகளில் 98% ஏ2 ரக பாலை தரக்கூடியவை தான். எருமைப் பால் என்பது 100% ஏ2 தான். வெளிநாட்டு மாட்டினமான ஜெர்சி மாடுகள் கூட ஏ2 பாலை தான் கொடுக்கின்றன. சில வெளிநாட்டு இனங்கள் மட்டுமே ஏ1 ரக பாலைக் கொடுக்கின்றன." என்கிறார் மருத்துவர் அருண்குமார். இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணனிடம் கேட்ட போது, "ஏ1 பாலா, ஏ2 பாலா என ஆராய்ச்சியெல்லாம் செய்யத் தேவையில்லை. கடைகளில் அல்லது பண்ணைகளில் கிடைக்கும் பாலை நன்கு காய்ச்சி குடித்தாலே போதும்" என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/cn3mg8rkxypo1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- யாழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த வெளிநாட்டவர்கள்...! குவியும் பாராட்டுக்கள்
மிசனரிகள் ஈழ மண்ணில் தோற்றுப் போனதிற்கு இந்த வேடதாரித்தனம் தான் முக்கிய காரணம். அதனால் தான்.. சிலதை இங்கு அழுத்தம் திருத்தமாகவும் கூற முனைந்தது. அதனை புரிந்து கொள்ள முடியாத சிலர்.. வழமை போல். அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி புத்தா. மக்களுக்கு வழிகாட்டும்.1 point- கருத்து படங்கள்
1 point1 point- சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
கட்டுரை ஆசிரியர் தனது பார்வையைத் தெளிவாகக் கூறியுள்ளார். நாவலர் தொடர்பாக Tamilnation கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.1 point- நடனங்கள்.
1 pointஎண்ணமே ஏன் உன்னால… உள்ள புகுந்தது தன்னால… கண்ணமே என் கண்ணால… வெந்து செவந்து புண்ணாக…1 point- சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
தமிழ் தேசியம் வேண்டியது எங்களுக்கு ... தமிழ் தேசியத்தை விரும்பும் மக்களூக்கு அதை அவர்கள் விரும்பினால் போதும் .... நீங்கள் கூறுவது தமிழ் ஈழத்தை அங்கிகரிக்க ஒரு நாடும் இல்லை என.... தமிழ் தேசியம் ,தமிழ் ஈழம் இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு .. தமிழ் தேசியத்திற்கு அங்கிகாரம் தேவையில்லை... தமிழ் ஈழத்திற்கு அங்கிகாரம் தேவை .. தமிழ் தேசியம் தமிழ் மக்களால் தக்க வைக்கப்பட்டால் அது தமிழ் மக்களின் இருப்புக்கு நன்மை பயக்கும்... நாடுகள் உருவாக்கப்படுவது அந்த நாட்டு மக்களின் விருப்பத்துக்கு அமைய அல்ல ஏனைய சக்திகளின் விருப்பத்துக்கு அமைய என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு.... 50 நாடுகள் அங்கிகரித்தும் பலஸ்தீனம் இன்னும் நாடாக செயல் படவில்லை என்பது உலக அறிந்த விடயம் ... உங்கன்ட பாசையில் சொல்வது என்றால் 50 நாடுகள் சின்சா போட்டும் ஐ.நாட்டில் ..பஜனையை 75 வருடங்களுக்கு மேலாக நடத்தியும் வெற்றி பெற வில்லை .... ஆகவே ... தமிழ் தேசியம் பற்றி கதைத்தால் அது தமிழ் ஈழம் அல்ல1 point- பிரான்ஸ் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை!
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
1 point- மயிலம்மா.
1 pointமயில் என்றால் ஒயிலாகத்தான் நடக்கும் மேல் வழியாக கழட்டி இருக்களாம் ஆசிரியர் கொஞ்சம் குசும்பு பிடித்தவர் போலே1 point- தூய அடையாளம்
1 pointஅப்படித்தான் செய்கின்றார்கள்.......👍 அத்துடன் சில அமெரிக்கர்களின் பூகோள அறிவு கொஞ்சம் விசித்திரமானது. ஒரு நீண்ட நேர இலங்கை, இந்தியா பற்றிய விளக்கத்தின் பின்னும், நீங்கள் கடைசியாக இந்தியாவில் உள்ள உங்கள் வீட்டிற்கு எப்போது போனீர்கள் என்று என்னைக் கேட்டவர்களும் உண்டு. சில வருடங்களின் முன், வட கொரியா மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் ஒன்றை நடத்தலாம் என்ற ஐயம் இருந்தது. இங்கு ஒரு தொலைக்காட்சியில் உலக வரைபடத்தை போட்டு, வட கொரியா எங்கிருக்கின்றது என்று பலரை நேரலையில் கேட்டனர். ஒருவர் சிறிது நேரம் நன்றாக யோசித்து விட்டு, அமெரிக்காவிற்கு மேலே (கனடாவை) தொட்டுக் காட்டினார்...........😀1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- மயிலம்மா.
1 pointமயிலிறகு........ 03. அப்போது மயிலம்மாவின் மகன் சுந்தரேசன் என்னும் சுந்துவும் அவன் நண்பன் வாமதேவனும் சைக்கிளில் வந்து இறங்குகின்றனர்.அம்மா வேலர் அப்பா இறந்துட்டாராம்.....உங்களிடம் சொல்லச் சொன்னவை என்று சுந்து சொல்கிறான். எப்படியும் இன்று பின்னேரம் எடுத்து விடுவார்கள். சரியில்லை, எதுக்கும் நாங்கள் நேரத்துக்கு போவம் என்னடி கனகம். ஓம் மயூரி, நான் போய் சீலை மாற்றிக்கொண்டு வருகிறன்.பக்கத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு போக கிளம்பியவளை நில்லடி நானும் உன் கூடவாறன் என்று சொல்லி விட்டு இரண்டு பொடியலையும் பார்த்து பிள்ளைகள் நான் சமைச்சு வைத்திருக்கிறன், வடிவாய் போட்டு சாப்பிடுங்கோ என்று சொல்லும் போது மயிலம்மாவின் மகள் பூவனமும் கனகத்தின் மகள் கோமளமும் தனித்தனி சைக்கிளில் வந்து இறங்குகின்றனர். அம்மா வேலர் அப்பா செத்துட்டாராம் இண்டைக்கே எடுக்கினமாம் என்று சொல்ல ....ஓம் இப்பதான் அண்ணன்மார் சொன்னவங்கள். சரி, நீங்களும் அண்ணன்மாரோட கொழுத்தாடு பிடிக்காமல் இருக்கிறதை போட்டுச் சாப்பிடுங்கோ. நாங்கள் அங்க போயிட்டு வாறம் என்று வீட்டினுள் போகிறாள். அறைக்குள்ளே கொடியில் கிடந்த பாவாடையை எடுத்து அதில் இருந்த கிழிசலை ஒருபக்கம் மறைவாக விட்டு கட்டிக்கொண்டு இருப்பதிலேயே நல்லதொரு வெள்ளைப் புடவையை எடுத்துக் கட்டிக் கொள்கிறாள். மயிலம்மா மகள் பூவனம் பெரியவளான நாள் தொட்டு தனக்கென ஒரு சீலையோ நகையோ வாங்கியதில்லை.கிடைக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து அவளுக்கென ஆடைகளும், நகைகளும் வாங்கி விடுவாள். மேலும் சுந்தரேசனின் படிப்புக்கும் காசு தேவையாய் இருக்கும். ஆனாலும் அவை போதாது என்று அவளுக்கும் தெரியும். அவள் வெளிக்கிட்டு வெளியே வரும்போது மயிலம்மாவிடம் ஒரு கம்பீரமும் சேர்ந்து வருகின்றது. இனி அந்த அயலைப் பொறுத்தவரை எங்கும் அவள் பேச்சு செல்லும். அனைவரும் அவளுக்கு மரியாதை குடுத்து நடந்து கொள்வார்கள். கணவன் இருக்கும்வரை அந்த ஊரில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுக்கும் அவர்கள் முதன்மையானவர்களாக இருந்திருக்கிறார்கள். ஒருநாள் அவள் கணவன் லொறியால் மோதுண்டு இறந்தபின் அவள் தானாகவே சிலபல நல்ல காரியங்களில் முன்னுக்கு நிற்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டாள். மயிலும் கனகமும் தாழ்வாரத்தில் கிடந்த "பாட்டா"வைப் போட்டுக் கொண்டுவந்து படலையைத் திறக்க வெளியே அவர்களின் பசுமாடு கன்றுடன் நிக்கிறது அவற்றை உள்ளே விட்டு சத்தமாய் பிள்ளை லெச்சுமி வருகுது கட்டையில் கட்டிப் போட்டு குண்டானுக்குள் இருக்கும் கழனிய எடுத்து வை என்று சொல்லி படலையை சாத்தி கொழுவிவிட்டு வெளியில் இறங்கி நடக்கிறார்கள்.பக்கத்தில் அம்மன் கோயில் குறுக்கிட அங்கு டேப்பில் சன்னமாய் தேவாரப்பாடல் ஒலிக்கின்றது.அங்கு வந்த மயிலம்மா ஐயரிடம் ஐயா வேலர் மோசம் போயிட்டாராம் என்று சொல்லிவிட்டு, இனி ஐயா பிணம் சுடுகாட்டில் தகனமாகும் வரை நடை திறக்க மாட்டார் என்று கனகத்திடம் சொல்லிக்கொண்டு சுவாமியைப் பார்த்து கன்னத்தில் போட்டுகொண்டு செத்த வீட்டுக்குப் போகிறார்கள். அங்கு சின்ன சின்ன சண்டை சச்சரவுகளுடன் கிருத்தியம் முடிந்து பாடை வேலியைப் பிய்த்துக் கொண்டு போக இவர்கள் இருவரும் கிளம்பி வீட்டுக்கு வருகிறார்கள்.செத்தவீட்டால் வர நாலு மணிக்கு மேலாகி விட்டது. வீட்டில் நாலு பொடியலும் வெகு மும்மரமாய் தாயம் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.ஒரே சத்தமும் கும்மாளமுமாய் இருக்குது.அதைப் பார்த்த கனகம் ஓமனை உந்த மும்மரத்தை படிப்பிலே காட்டினால் எங்கேயோ போயிடுவீங்கள்,இதுக்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று சொல்ல, விடு கனகம் அதுகளும்தான் என்ன செய்யிறது.சும்மா விளையாடட்டும் நீ வா நாங்கள் குளத்துல தோய்ஞ்சு போட்டு வருவம் என்று கனகத்தையும் கூட்டிக்கொண்டு போகிறாள். போகும்போது எட்டி அடியெடுத்து நடக்க மயிலம்மாவின் பாட்டா செருப்பு அறுந்து விடுகிறது.உடனே அவள் தடுமாறி விழ இருந்து சமாளித்துக் கொள்கிறாள்.பிள்ளைகள் சிரிக்க வாமன் எழுந்து வந்து அந்த அறுந்த செருப்பை எடுத்து யாரிடமாவது ஒரு ஊசி இருந்தால் தாங்கோ என்று கேட்க மயிலம்மாவே தனது சட்டையில் குத்தியிருந்த ஊசியை கழட்டி அவனிடம் தருகிறாள். வாமனும் அதைக்கொண்டு செருப்பை சரிசெய்து அவளிடம் தர அவளும் போட்டுகொண்டு கனகத்தின் பின்னால் போகிறாள். குளத்தில் இருவரும் ஆடைகளைக் களைந்து அலம்பிக் கரையில் வைத்து விட்டு நன்றாக முங்கி நீந்தித் தோய்கிறார்கள்........! மயில் ஆடும்....... 🦚1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 point- மயிலம்மா.
1 pointமயிலிறகு.........02. இந்தப் பக்கம் அடுப்பின் மேல் புகட்டில் குளத்தில் பிடித்த பெரிய பெரிய யப்பான் மீன்கள் கீறி உப்பில் போட்டுப் பிரட்டி எடுத்து பனைநாரில் கோர்த்து தொங்குது. அங்கால வாழைத்தார் ஒன்றும் கயிற்றில் தொங்குது. அதி ஒரு எலி இடைப்பழம் ஒன்றை கொறித்து சுவைத்துக்கொண்டிருக்கு. அப்போது எவ்வித அசுமாத்தமும் இன்று ஒரு சாரைப் பாம்பு அந்த எலியைப் பார்த்துக் கொண்டு மெதுவாக நகருது. அதைக் கண்ட கனகம் அம்மாடி பாம்பு என்று கத்திக் கொண்டு மயிலம்மா அருகில் எட்டி அடியெடுத்து வருகிறாள். அந்த சலசலப்பு கேட்டு எலியும் திரும்பி பாம்பைப் பார்த்து வாழைத்தாரில் இருந்து எதிர் வளைக்குத் தாவ சடாரென பாம்பும் இரண்டு முழ நீளத்துக்கு தனது உடலை வீசி அந்தரத்தில் வைத்தே லபக்கென்று எலியைக் கவ்விப் பிடித்து சரசரவென பனைமட்டையில் சறுக்கி சுவரில் ஊர்ந்து குசினி மூளைக்குள் சுருண்டு கொள்கிறது. இவ்வளவும் ஒரு கனப் பொழுதுக்குள் நடந்து முடிகின்றது. காணக்கிடைக்காத காலமெல்லாம் மறக்க முடியாத ஒரு காட்சி அதுபாட்டுக்கு இயல்பாக நடந்து முடிந்தது. கனகம் ஒரு எட்டில் கதவால் பாய்ந்து முத்தத்துக்கு வர மயிலம்மா கேத்திலுக்குள் கொஞ்சம் தேயிலையும் போட்டு பனங்கருப்பட்டியையும் எடுத்துக் கொண்டு பதட்டமில்லாமல் வெளியே வருகிறாள். என்ன மயூரி மெதுவாக வருகிறாய், பாம்பு பாய்ந்து புடுங்கினால் அப்ப தெரியும் உனக்கு. பதறாத கனகம். அது குட்டியாய் இருந்து இங்கினதான் தெரியுது. முன்பு ஒருநாள் அதை உடும்போ பிராந்தோ கடித்து குற்றுயிரும் குலையுயிருமாய் இந்தத் தாழ்வாரத்தில் வந்து கிடந்தது நாய் குரைக்குது, பூனை சீறுது அப்போது நானும் வாமனும் ஓடிவந்து பார்த்தால் இது சுருண்டு கிடக்குது. எனக்கு அதை அடித்துக் கொல்ல மனம்வரவில்லை. வாமன் அதுக்கு ஒரு சிரட்டையில் பால் ஊத்தி வைக்க குடிச்சுது. பிறகு அதை ஒரு பெட்டியில் போட்டு நான் கொஞ்சம் சாம்பலும் மஞ்சலும் கலந்து கொட்டி விட்டன். சில நாட்களாக அதுக்கு வாமனும் நானும் தினம் ஒரு மீனும் ஒரு முட்டையும் குடுத்து வர அதுவும் தேறி வந்திட்டுது.என்ர மகன் சுந்து அதுக்கு கிட்டவும் வரமாட்டான் அவ்வளவு பயம்.பூவனம் அதைத் தொடமாட்டாள் ஆனால் பயமும் இல்லை.அது அவள் அருகாகப் போய் வரும்.எங்கட நாயும் பூனையும் கூட அதோடு சேட்டைகள் செய்வதில்லை. வாமு கண்டான் என்றால் அதோடு தூக்கி விளையாடாமல் போகமாட்டான். இந்தக் கூத்து எப்ப நடந்தது.எனக்குத் தெரியாதே. அது நீ கலியாணம் கட்டி புகுந்தவீடு போன நாட்களில் நடந்தது.. இப்ப நீ இங்கு வந்து ஒரு வருசம் இருக்குமா .....ம்.....இருக்கும். காலம் போற போக்கு....என்று சொன்ன கனகம் உனக்கு இரவில பயமில்லையா .....இல்லை. அது இரவில் வீடுகளில் தங்காது. மேலும் அதுக்கு இங்கு புழங்கும் ஆட்களையும் மிருகங்களையும் நன்றாதத தெரியும். நீ இந்த தேத்தண்ணியைக் குடி என்று குடுக்கிறாள். இவர்கள் கதைத்துக் கொண்டு தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் போது பாம்பும் குசினிக்குள் இருந்து வெளியேறி பின்னால் காட்டுக்குள் உள்ள புற்றுக்குப் போகிறது.........! மயில் ஆடும்........! 🦚1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Marlyn Monroe வின் காலடியில் மனைவியும் நானும். Plam Springs California வில்1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இந்தின் இளம்பிறை