Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. MEERA

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    5418
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87990
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    19134
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/26/24 in Posts

  1. இங்கு மற்றைய நாடுகள் தடைசெய்ய காரணம் விவசாயத்தின் போது உபயோகிக்கப்படும் மிதமிஞ்சிய பூச்சிக் கொல்லிகள். 2022 இல் Eu இந்த எத்திலின் சோதனையை குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு கட்டாயாமாக்கினார்கள். மார்ச் மாதத்திலிருந்து U.K. கட்டாயாமாக்கி உள்ளது. தற்போது இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் செத்தல் அரிசி மல்லி சீரகம் உட்பட பலவற்றிற்கு Pesticide சோதனை செய்யப்பட வேண்டும். அதேபோல் இந்தியாவிலிருந்து சிறீலங்கா சென்று Product of Sri Lanka என்று U.K. வரும் செத்தல் மிளகாய் ( மிளகாய் தூள் உட்பட) இனி Aflatoxins அளவு பரிசோதனை செய்யப்படும். மேலதிக விபரங்கள் https://www.legislation.gov.uk/uksi/2024/120/schedule/1/made https://www.legislation.gov.uk/uksi/2024/120/schedule/2/made
  2. நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன். நாங்கள் என்ன செய்தோம். போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம். 2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள். ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
  3. @goshan_che உங்களுக்கு ஊரிலிருந்து வரும் பொருட்கள் Food Grade bags இல் பொதி செய்யப்பட்டனவா? நிச்சயமாக இல்லை. இவை கூட நோய்களுக்கான காரணியாக அமையலாம். மேலும் சிறீலங்காவில் ஓர்கானிக் பயிர்ச் செய்கை என்றால் இரசாயனக் கிருமிநாசினிகள் பாவனையற்று விவசாயம் செய்தால் போதும் என்ற நிலையே காணப்படுகிறது. ஆனால் மாட்டு எரு பயன்படுத்தப்பட்டால் மாட்டின் உணவு கூட ஓர்கானிக் ஆக இருத்தல் வேண்டும். அதேபோல் தாவரக் கழிவுகள் பயன்படுத்தப்படும் போது அந்த தாவரங்கள் ஓர்கானிக் முறையில் வளந்திருக்க வேண்டும். இது ஓர் சங்கிலித் தொடர்…. 100% ஓர்கானிக் உங்களுக்கு பாரிய விவசாயத்தில் கிடைக்காது.
  4. நெடுமாறன் ஐயா முதலில் காங்கிரசில் இருந்தவர்தான். இந்திரா காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தார். ஆனால் என்றும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை மாற்றியதில்லை. பிஜேபி எதிர்ப்பு என்பது இப்போ தமிழகத்தில் உள்ள மதவாத எதிர்ப்பு சக்திகள் அனைத்துக்கும் வாழ்வா, சாவா போராட்டம். இதில் எங்களுக்கு காங்கிரசை பிடியாது என்பதால் நெடுமாறன் போனோர் இந்தியா கூட்டணியை ஆதரிக்க கூடாது என நாம் நினைப்பது சுயநலமும், தேவையில்லாமல் அவர்கள் வீட்டு விசயத்தில் மூக்கை நுழைக்கும் செயலுமாகும். ஈழ போராட்டம் தமிழ்நாட்டு அரசியலில் தீர்மானிக்கும் விடயம் அல்ல. அவர்கள் தமக்கு முக்கியமான விடயங்களின் அடிப்படையிலேயே விடயங்களை தீர்மானிப்பர். மன்சூரும் ஈழவிடுதலை நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை எனிலும், இவர் காங்கிரசில் சேர்ந்தது சுய இலாபத்துக்கு. நெடுமாறன் ஐயா இந்தியா கூட்டணியை ஆதரிப்பது பிஜேபி வரக்கூடாது என்பதால்.
  5. வீரத்துடன் போட்டியில் குதித்துள்ள @தமிழ் சிறி. மற்றும் @ஈழப்பிரியன் அண்ணையளுக்கு ஒரு சல்யூட்🤪 பாத்தியளே பெரிசுக்கு குசும்ப🤣. விட்டால், வீரப்பா, நம்பியார், செந்தாமரை, ரகுவரன், பிரகாஷ்ராஜ் எண்டு போடுவார் போல கிடக்கு🤣
  6. நான் நினைக்கிறேன் பையன் போனில் இருந்து வேக வேகமாய் அடித்து பதிவுக்கு அனுப்புவதால்தான் எழுத்துக்கள் சரியாக வேகாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சொற்பிழைகள் ஏற்படுக்கின்றன ....... அதைக் கவனித்து சரிசெய்ய அவருக்கு அவகாசம் குடுக்காமல் வருகிற எல்லோரும் அவரோடு மோதினால் அவரால் என்ன செய்ய முடியும்.......மற்றும்படி நான் பார்த்தவரை பையனுக்கு நல்ல தமிழ் விளக்கம் இருக்கு........! 😁
  7. இத வாசிக்க வாசிக்க எனக்கு அந்த தம்பியின்ரை நினைப்புத்தான் வருது. அந்த தம்பியும் உப்புடித்தான் அச்சு தவறாமல் உதே மாதிரி எழுதும். யாழ்களத்தில எங்கையெண்டாலும் மிளகாய்த்தூள் பிரச்சனை எண்டால் முதல் ஆளாய் வந்து நிக்கும் அந்த தம்பி...🤣 இப்ப எங்க நிக்குதோ.......என்ன செய்யுதோ...சாப்பிட்டுதோ....என்னமோ? ஒரு நேரம் சும்மா இருக்காது அந்த தம்பி....குறு குறுவெண்டு ஏதாவது எழுதி/கிறுக்கிக்கொண்டே இருக்கும்...😂
  8. தமிழ்நாட்டை ஏமாற்றும் தலைவர்கள். காவேரி பற்றி பேசாத முதலமைச்சர் மானம் கெட்ட முதலமைச்சர் அப்போ. தமிழ்நாட்டு விசிக தண்ணீர் விடுமாறு போராடும். கர்நாடகா விசிக தண்ணீர் விடக் கூடாது என்று போராடும். தலைவர் -திருமா.
  9. என்னைப் பொறுத்தவரை இங்கு கடைகளில் விற்கும் பொருட்களை வாங்குவதே பாதுகாப்பானதாக இருக்கும் ( 100% அல்ல). இறக்குமதியாளர்கள் Port Health மற்றும் Trading Standard இன் நடவடிக்கைகளினால் சரியான முறையில் செயற்படுவார்கள். U.K. வரும் எல்லா கொள்கலன்களும் திறக்கப்பட்டு பரிசோதிக்கப்படுவதில்லை. ஆனாலும் பரிசோதித்தால் என்ன நடக்கும் என்பதையிட்டு இறக்குமதியாளர்கள் பயப்படுவார்கள்.
  10. கோசானின் புண்ணியத்தால் எம்மவர்களின் இறக்குமதி வியாபாரம் தொடர்பாக ஆராய வெளிக்கிட்டு இப்ப பல விடயங்கள் தெரிய வந்துள்ளது.
  11. யாழ்ப்பாணம் மயோசின் காலத்தில் கடல் உயிரினங்களின் இறந்த உடல்களின் எச்சங்கள் மூலம், பின்னர் தரை உயர்வால் உருவாக்கப்பட்டதாக கூறுகிறார்கள் (கிட்டதட்ட 20 மில்லியன் ஆண்டுகள்). அதனால் யாழ்ப்பாணம் சுண்ணாம்புக்கல் நிலப்பிரதேசம் என வகைப்படுத்துகிறார்கள் (அதனால நிலத்தடி நீர் கொண்டுள்ளது). இந்த சுண்ணாம்புக்கற்கள் உறுதியானவை இல்லை, அதனாலேயே சில குகை அமைப்புக்கள் யாழ்ப்பாணத்தில் இலகுவாக காணப்படுகிறது. இந்த சீமெந்து தயாரிப்பு நிலத்தடி நீரினையும் யாழ்ப்பாண நிலப்பரப்பின் உறுதித்தன்மையினையும் பாதிக்கும் அத்துடன் காற்று மாசுபட்டுதலலால் மக்களுக்கு பெருமளவில் சுவாச சம்பந்தமான நோய் ஏற்படுவதுடன் புற்றுநோயும் ஏற்படலாம். தற்போது சுவாச சம்பந்தமான நோய் உலகில் தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது, இந்த துறை ஒரு செல்வம் கொழிக்கும் ஒரு துறையாக உள்ளது இந்த நோய் ஒரு நீண்ட கால நோயகிவிடுவதால் இந்த வியாதிகளுக்கான மருந்து உற்பத்தி ஒவ்வொரு ஆண்டிற்கும் அதிகரித்து செல்லுகிறது. இந்த வேலை வாய்ப்புகள் மூலம் பெறுவதினை விட பல மடங்கு அந்த மக்கள் இழப்பார்கள். ஆனாலும் யாழ்ப்பாணத்திலிருந்து முன்னரும் கிளிங்கரில் (சீமெந்தாக இல்லாமல்) தென்பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதாக நினைவுள்ளது சின்ன வயதில் தெருவில் பச்சை சிறிய கற்கள் பார்த்த நினைவுள்ளது. மக்கள் சிந்தனையில்லாத தலைவர்கள் இருக்கும்வரை மக்கள் போராட்டங்களால் எந்த பிரயோசனமும் கிடையாது என்றே நினைக்கிறேன், கழுதைக்கு வாழ்க்கைப்பட்டால் உதைபட்டே ஆகவேண்டும் எனும் நிலையில் எமது மக்களின் நிலை!
  12. அடுத்த வாரம் பார்ப்போம். ஜூன் 2 ஆரம்பம்!
  13. இன்று காலை அலுவலகத்திற்கு வந்துகொண்டு இருந்தேன். நிறைய கம்பெனிகள் இங்கே சனி ஞாயிறு விடுமுடை. சிப்காட்டுக்குள் போய்க்கொண்டு இருக்கும் போது ரோடு வெறிசோடி கிடந்தது. தூரத்தில் போகும் போதே அந்த காட்சி என் கண்ணில் பட்டது. ஒரு டிவிஎஸ் வண்டி ரோட்டோரமாக நின்றுகொண்டு இருந்தது. ரோட்டில் ஒரு முதியவர் நின்று கொண்டு தார்ரோட்டில் கொட்டிக்கிடக்கும் சாதத்தை பார்த்துக்கொண்டே நிற்கிறார். அவர் கையில் வெறும் டிப்பன் பாக்ஸ் ஒன்று ஒரு சின்ன பாக்ஸ் ஒன்று இருக்கிறது. அவர் கீழே கிடந்த உணவை வெறித்து பார்த்துக்கொண்டு இருக்கிறார். அவரைப்பற்றி சொல்லனும்னா படிச்சவர் மாதிரி இருந்தார். கண்ணாடி அணிந்து இருந்தார், வயது அறுபது நெருங்கும் தோற்றம். வெள்ளை சட்டை, பிரவுன் கலர் பேண்ட். அவர் பக்கத்தில் நெருங்குவதற்கு முன்பே என்ன நடந்தது என்று யூகித்துவிட்டேன். கொண்டு போன லன்ச் பேக் அருந்து , கீழே விழுந்து, கொண்டு போன உணவு எல்லாம் கொட்டிவிட்டது. சில காட்சிகளை பார்த்துவிட்டு அந்த இடத்தை நம்மால் கடக்க முடியாது. ஒரு இரண்டு வார்த்தை உச்சு கொட்டிவிட்டாவது சென்றால்தான் திருப்தியாக இருக்கும். நானும் அதே நோக்கத்தோடு வேகத்தை குறைத்து நின்று… “ஐயோ கீழே கொட்டிருச்சா”. அவர் தலையை மட்டும் அசைத்தார். அப்போதுதான் முகத்தை பார்த்தேன் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது. உடைந்து போய் நின்றார். அய்யா… இதுக்குபோய் ஏன் கலங்குறீங்க? தப்பா நினைக்க வேண்டாம். லன்ச்க்கு பணம்வேணா தரேன். விடுங்க அய்யா கொட்டியதை அள்ளவா முடியும்.. உங்க முகத்தை பார்க்க கஷ்டமா இருக்கு..” என்று முட்டாள்தனமாக பேசிட்டேன். என்னை ஒரு பார்வை பார்த்துட்டு அவர் பர்ஸ் எடுத்து காட்டினார். நிறைஞ்சு இருந்தது. “என் ஒய்ப் ஆசை ஆசையா காலையில் ஐந்து மணிக்கு எழுந்து எனக்கு பிடிச்சதை சமைச்சு கொடுப்பா சார். மூட்டுவலி & சுகர் இருக்கு. உடம்புக்கும் முடியல அவளுக்கு. மதியம் போன் பண்ணுவா சார் “எப்படி இருக்கு டேஸ்ட் ? உப்பு சரியா இருக்கா? நல்லா இருக்கா?னு கேப்பா சார்….” அதற்க்கு மேலே என்னாலும் பேச முடியவில்லை. அவருக்கும் வார்த்தை வரலை. ஒரு சில வார்த்தைகள் தான் ஆனால் அர்த்தம் ஓராயிரம். கீழே கிடந்த உணவை அவர் வாஞ்சையா அள்ளி ஒரு கேரிபேக்கில் போட ஆரம்பித்தார். “ரோட்டில் கிடந்தா வேஸ்ட் ஆகிடும். ஏதாவது நாய்க்கு வச்சா சாப்பிடும்…” தனக்குத்தானே பேசிக்கொண்டார். எனக்கு அவர் சொன்ன வார்த்தையும், அதன் வலியும் அப்படியே இருக்கு இன்னும்.சோறு என்பது ஒரு பொருள் அல்ல. அதை சமைப்பவர்களின் அன்பு. எத்தனை முறை உதாசீனம் செய்திருக்கிறேன். “மதியம் பாக்ஸ் ரெடியா இருக்கு. இன்னிக்கி அவியல் செஞ்சேன்.”“வேண்டாம்… ஆபீசில் சாப்பிட்டுகிறேன்.” நைட் ….”வாங்க புதினா சட்னி இருக்கு .சாப்பிடலாம்” “வெளில சாப்பிட்டுட்டேன்”. “ஒண்ணே ஒன்னு டேஸ்ட் பாக்கலாமே”. “வயிறு புல்லா இருக்கு. வேண்டாம்.” எத்தனை முறை நோகடிச்சு இருக்கிறோம். மிக பெரிய உதாசீனம் அது. சுருக்கென்று இருக்கிறது. சாப்பாடுதானே வயிறு நிறைஞ்சா போதாதா? அப்படி இல்லை. நாம சாப்பிடுற சாப்பாட்டில் உப்பு இருக்கோ, காரம் இருக்கோ, புளிப்பு இருக்கோ…. தெரியாது ஆனால் சமைப்பவர்களின் அன்பு இருக்கு. சாப்பிட்டா நிறைவது நம்ம வயிறு மட்டும் இல்லை. அவர்களின் மனசும் சேர்ந்தே நிறைகிறது. கொஞ்சம் பாராட்டலாம். அட பாராட்ட கூட வேண்டாம். ஒரு “தேங்க்ஸ்” சொல்லி பழகலாம். “நல்லா இருக்கு, தேங்க்ஸ்பா” என்று சொல்லலாமே. இரண்டு மணி நேர அடுப்படி போராட்டம் உங்களின் ஒரே ஒரு வார்த்தையில் மகிழ்ச்சியாக மாறுமே..!!!!! “உணவே மருந்து இதயத்திற்கும்” படித்ததில் பிடித்து பகிர்கிறேன்.
  14. என்னதான் கோபதாபம் இருந்தாலும் விவசாய பயிர்களை அழிக்காதீர்கள். 🙏🏼 கோபமிருந்தால் சம்பந்தப்பட்டவருக்கு கன்னத்தில் இரண்டு அறை அறைந்து விட்டு செல்லுங்கள். பலன் தரும் பயிர்கள் உங்களுக்கு என்ன பாவம் செய்தது? 😠
  15. Dijibotiநாடு போன்று சிறிலங்காவும் வருகின்றது ....சோமாலியாவின் ஒர் சிறிய பகுதியை பிரித்து இந்த நாட்டை உருவாக்கி சகல நாடுகளின் படைத்தளங்களையும் அமைத்து சுற்றுலாவை ஊக்கப்படுத்துவது போல சிறிலங்காவையும் அதே டெம்பிளெட் நாடாக மாற்ற முனைகின்றனர்...உலக சண்டியர்கள் .......
  16. நானும் ஒரு காலத்தில் உறைப்பு சாப்பிடுவதில் சிங்கம் தான். எங்கடை ஆக்களுக்கு போத்தில் தூள் இல்லையெண்டால் சமைக்கவே தெரியாது எண்ட முடிவுக்கு வரலாம். உங்களுக்கு உறைப்பு காரம் வேணும் எண்டால் உறைப்பு பச்சை மிளகாயை வெட்டி போடலாம் இல்லை செத்தல் மிளகாயை நொருக்கிப்போட்டு போடலாம்.. ஆனால் போத்திலில் வரும் மிளகாய் தூளை என்றுமே பாவிக்காதீர்கள். இது என் 25 வருடங்களுக்கு முன்னரான சொந்த அனுபவம். வயிற்று வலி உபாதைகளும் அதற்கான பரிசோதனைகளும் என்னை ஒரு வழி பண்ணி விட்டது. இது எனது சொந்த அனுபவம் மட்டுமே. மிளகாய்த்தூள் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் கெடுதல் என நான் சொல்ல வரவில்லை. என் தனிப்பட்ட கருத்து இது யாழ்களத்திற்கு பாதிப்பு ஏற்படுமாயின் இந்த என் கருத்தை நீக்கி விடுங்கள். @இணையவன் @நிழலி
  17. நெடுமாறன் ஜயாவின் வரலாறு தெரியாமல் இருப்பது தான் காரணம். நாமெல்லாம் வெறும் தூசி அவர் முன்னால். நெடுமாறன் ஜயா, வைகோ போன்ற சிலர் வெளியில் தெரியும் ஆனால் முகம் தெரியாத எத்தனையோ திராவிடர் கழக, திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் பல லட்சக்கணக்கில்....?
  18. த‌லைவ‌ரே உங்க‌ளுக்கு அறிவோ அறிவு.................எப்ப‌டி க‌ண்டு பிடிச்சிங்க‌ள் ஆம் சுவி அண்ணா கைபேசியில் இருந்து வேக‌மாக‌ எழுதும் போது சில‌ எழுத்துக்க‌ள் ச‌ரியா ரைப் ப‌ண்ணு ப‌டுதில்லை கார‌ண‌ம் கை நிக‌ம் வ‌ள‌ந்தால் இன்னொரு எழுத்தையும் கூட‌ ப‌தியுது நிதான‌மாய் எழுதினால் ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை சுவி அண்ணா....................... கிட்ட‌ த‌ட்ட‌ 9வ‌ருட‌மாய் கைபேசியில் இருந்து தான் எழுதுகிறேன்🙏🥰..................................................................
  19. மிக்க நன்றி, உங்கள் ஆழமான கருத்துக்கு "அறை வாங்கினேன் மறு கன்னத்திலும் ஏசுவே இனி என்ன செய்ய? குறை கூறும் சமூகத்தில் இருக்கும் வரை ஏசுவே இனி என்ன செய்ய? கறை பிடித்த வம்பு பேசு பவர்களால் ஏசுவே நிம்மதி இழந்தாளே என்னவள்? சிறை வாழ்வு கொண்டு நான் இங்கு ஏசுவே நிம்மதியைத் தேடுகிறேன்?"
  20. வாழ்க்கை என்பது அவ்வளவு இலகுவானதல்ல. நாங்கள் இருவர் தான். எந்த மூன்றாவது நபருடைய உட்புகுதலும் கருத்துக்களும் வாழ்வை திரிபு படுத்திவிடும். அடுத்த வீட்டை பார்த்து எப்பொழுது நாம் எம் வாழ்வை அமைத்துக் கொள்ள முயல்கிறோமோ அத்துடன் எம் வாழ்வு கலைந்து விடும். அவனவன் கவலைகளை அவரவர் தலையணைகளே அறியும். நன்றி.
  21. என் inspiration ஆல் இப்படி பல தரவுகளை ஆராய்ந்தமை அதை நான் உட்பட பலருக்கு அறியதந்தமைக்கு நன்றி. என் கட்டுரை வேறு எந்த பலனை தராவிடிலும் - இது ஒன்றே போதும். நான் எப்பவுமே இவற்றை அங்குதான் போய் சாப்பிடுவது. தவிரவும் கோப்பித்தூள், மிளகாய்தூள், எல்லாம் அங்கே இருந்து நேரடியாக அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டேன்.
  22. அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  23. படித்தேன் பிடித்திருந்தது
  24. மன்சூர் அலிகான் 1994 காலப்பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவு . (அப்பொழுது நான் இந்தியாவில் இருந்தேன். ) 1999 இல் Dr கிருஷ்ணசாமியின் புதிய தமிழகத்தில் சேர்ந்து சட்டசபை தேர்தலில் பெரியகுளத்தில் கிட்டதட்ட ஒரு இலட்சம் வாக்குகளை பெற்று 3 ஆம் இடத்தை பிடித்தார். ( புதிய தமிழகம் இம்முறை அதிமுக கூட்டணி). 2009 இல் சுயேட்சையாக கேட்டார். (நாடாளுமன்ற தேர்தல்). 2019 இல் நாம் தமிழர் கட்சி சார்பாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். அதன் பிறகு ‘தமிழ்த் தேசிய புலிகள்’ என்ற கட்சியை உருவாக்கினார். இப்பொழுது காங்கிரஸ். அடுத்தது ?
  25. உங்கள் கொள்கையை ஏற்கனவே அறிந்ததுதானே. ஏனவே ஆச்சரியம் ஏதுமில்லைலை.
  26. ப‌ல‌ வாட்டி அதை சொல்லி பெரும் த‌லைவ‌ரை புக‌ழ்ந்து இருக்கிறார்.......................பெரும் த‌லைவ‌ர் கால‌த்தில் இருந்த‌ காங்கிர‌ஸ் ம‌க்க‌ள் ம‌த்தியில் பெருத்த‌ ஆத‌ர‌வோடு இருந்த‌வ‌ர்க‌ள் பெரும் த‌லைவ‌ரின் ம‌றைவுக்கு பிற‌க்கு த‌மிழ் நாட்டில் காணாம‌ போச்சு காங்கிர‌ஸ் 2013ம் ஆண்டு ஈழ‌த்தில் ந‌ட‌ந்த‌ இன‌ அழிப்புக்கு எதிராக‌ அகிம்சை வ‌ழியில் போராடின‌ மாண‌வ‌ர்க‌ளை த‌மிழ் நாட்டு காங்கிர‌ஸ் குண்ட‌ர்க‌ள் தாக்கினார்க‌ள் அதில் ஒரு சில‌ மாண‌வ‌ர்க‌ளுக்கு காய‌ம் ஏற்ப‌ட்ட‌து உற‌வே......................... 10ஆண்டு ஆட்சியை இழ‌ந்து விட்டின‌ம் மோடி வ‌ட‌ நாட்டு ம‌க்க‌ளின் ஆத‌ர‌வோடு மீண்டும் பிர‌த‌ம‌ர் ஆகுவார் அடுத்த‌ 5 ஆண்டுக்குள் என்ன‌ ந‌ட‌க்கும் ஏது ந‌ட‌க்கும் என்று யாருக்கும் தெரியாது..............................
  27. நான் இலங்கை சென்ற போது ஆசைபட்டு அரச போக்குவரத்து பஸ்சில் பயணம் செய்ய விரும்பியதை உறவினர்கள் விரும்பவில்லை.
  28. நாங்கள் கொழும்புக்கு போறம்....😂 நாலு கொத்துரொட்டி கடை திறக்கிறம்....😁 வெள்ளவத்தையிலை அஞ்சு...அஞ்சு வடே வடே கடை திறக்கிறம்...🤣 சிலோன்ரை ஒட்டுமொத்த கடனையும் அடைக்கிறம்.... 🙃 திரும்பி வாறம் ஜெயவே வா 😎
  29. நான் ஆட்சிக்கு வந்தால் ஒரு கூப்பனுக்கு ஒரு கொத்து அரிசி தருவன் எண்டு சொல்லுற தேர்தல் அரசியல் கலாச்சாரத்திலிருந்து வந்த உங்களுக்குமா இன்ஞும் அரசியல் தந்திரங்கள் புரியவில்லை? ஐயோ பாவங்கள்....🤣 வெள்ளைக்காரன் சொல்வதெல்லாம் உண்மை . வெள்ளைக்காரன் சொல்வதையே செய்வான். செய்வதையே சொல்வான் என நம்பும் கூட்டம் இன்னும் யாழ்களத்தில் இருப்பது விநோதத்திலும் விநோதம்.😁
  30. திராவிடத்தை கடுமையாக எதிர்க்கும் நா.க வில் இருந்து விலகிச் சென்ற சிலர், திமுக வில் இணைந்து, திராவிட சிந்தாந்தத்தை போற்றி வருவது போன்றது தான் மன்சூர் அலிகானும் ஈழத் தமிழர்களை நாசம் செய்த செய்த காங்கிரஸை நா.க வில் இருக்கும் வரைக்கும் எதிர்த்து விட்டு, இன்று அதே காங்கிரசில் சேர்ந்து அவர்களைப் போற்றுகின்றார்... அதுவும் சோனியாவின் மகள் பிரதமராக வேண்டும் என்று விரும்புகின்றார். இந்திய, தமிழக அரசியல் கட்சிகளும் இலங்கையில் இன்றிருக்கும் தமிழ் கட்சிகளும் ஒரே குட்டைக்குள் ஊறிக் கிடக்கும் கட்சிகள். இவற்றில் இது நல்லது, அது நல்லது என்ற வித்தியாசம் எதுவும் இல்லை.
  31. "விசுவாசம்" நான் சாதாரண வகுப்பில் தமிழ் கற்கும் ஒரு மாணவன். எமது ஆசிரியர் இன்று எம்மை 'விசுவாசம்' பற்றி கவிதை எழுதும்படி பணித்தார். எமது இனத்தின் இருப்பை, அடையாளத்தை, பண்பாட்டை காட்டுவது தாய் மொழி என்று அதே ஆசிரியர் நேற்று கூறியது ஞாபகம் வருகிறது. இன்று விசுவாச [višvāsa] என்ற வடமொழியை, நல்ல தமிழ் சொற்களான உண்மை, நம்பிக்கை, மாறாத பற்று போன்றவை இருக்கும் பொழுதே பயன் படுத்துகிறார் என்பது எனக்கு கோபமாக வந்தது. என்றாலும் அதை நான் வெளிக்காட்டவில்லை. இலங்கையில் தமிழ் பேசும் மக்கள், எந்த மதத்தை பின்பற்றுபவர்கள் என்றாலும் என்றும் தம் தாய் மொழியில் மாறாத பற்று கொண்டவர்களாகவே அநேகமாக இருக்கிறார்கள். அப்படியான குடும்பம் ஒன்றில் தான் நான் பிறந்தேன். எனக்கு மொழி, நாடு இரண்டிலும் நல்ல பற்று உண்டு என்றாலும் என் மேல் அதிலும் கூடிய நம்பிக்கை உண்டு. உன்னை அறிந்தால் தான் உலகம் அறிவாய், அது போலவே பற்றும் என்பது என் வாதம். ஒரு நாள் நான் என் குட்டி தங்கையுடன் ஒரு பாலத்தை கடக்க வேண்டி இருந்தது. அந்த பாலம், பல ஆண்டுகளாக திருத்தப் படாமல், அரசால் கவனிக்கப்படாமல் இருக்கிறது. ஆனால் எமக்கு, எம் கிராமத்துக்கு அது ஒன்று தான் எம்மை பட்டணத்துடன் இணைக்கும் குறுகிய வழி. தேர்தல் காலத்தில் மக்களிடம் நாம் உங்களில் பெரும் பற்றுடன் இருக்கிறோம் என்று கூறி வரும் அரசியல் வாதிகள், தேர்தலின் பின், தங்கள், தங்கள் குடும்பத்தின் வருமானத்தை பெருக்குவதிலேயே முழு பற்றாக இருக்கிறார்கள். ஆமாம், வருமானத்துக்காக பற்று இல்லாமல் தமிழ் படிப்பிக்கும் என் ஆசிரியர் போல! எனக்கு பாலத்தை கடக்கும் பொழுது, மூன்று மாதத்துக்கு முன், ஒரு சிறுமி அங்கு தவறி விழுந்து மரணித்தது ஞாபகம் வந்தது. நாம் அந்த நிகழ்வின் பின், மாற்று வழியாக நீண்ட தூரம் வாடகை மோட்டார் வண்டியில் பயணித்தே பட்டணம் போனோம். ஆனால் இன்றைய வாழ்க்கை செலவின், எதிர்பாராத அதிகரிப்பு அதற்கும் முற்றுப் புள்ளி வைத்து விட்டது. எனவே நான் என் தங்கையிடம், ' என் குட்டி செல்லமே, என் கையை இறுகப் பிடித்துக் கொண்டு வா, அப்படி என்றால் பயம் இல்லை' என்றேன். ஆனால், என் புத்திசாலி தங்கையோ, 'இல்லை அண்ணா, நீங்களே என் கையை பற்றிக் கொண்டு வாருங்கள்' என்றார். எனக்கு ஒரே கோபம். இரண்டுக்கும் என்ன வித்தியாசம், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் என்னை சமாளித்துக் கொண்டு, தங்கையிடமே ஏன் என்று விளக்கம் கேட்டேன். தங்கையோ, சிரித்துக் கொண்டு, அதில் பெரிய வித்தியாசம் உண்டு என்றார். 'நான் உங்கள் கையை பிடித்துக் கொண்டு போனால், ஏதாவது தற்செயலாக நடந்தால், அநேகமாக நான் பிடியை தளர்த்தி விடுவேன், ஆனால் அண்ணா, நீங்கள் என் கையை பிடித்து இருந்தால் கட்டாயம், உயிரைக் கொடுத்து, உங்க பிடியை விடமாட்டீர்கள்' என்றார். அப்ப தான் என் தங்கை என் மேல் வைத்த மாறாத பற்று, நம்பிக்கை எவ்வளவு என்று உணர்ந்தேன்! தங்கை சொன்ன பாடம் எனக்கு புது தெம்பையும் தந்தது. பிழை விடுபவர்கள் [ஆசிரியர் போல்] , ஏமாற்றுபவர்கள் [அரசியல்வாதிகள் போல்] தவறான வழியில் போகாமல் [விழாமல்] தடுக்க வேண்டின் , நாம் அவர்களை பிடித்து இருக்க வேண்டும். அவர்கள் நாம் இல்லை என்றால், தாம் இல்லை என்பதை உணர வேண்டும். ஆமாம் அவர்களின் நம்பிக்கை, பற்று [விசுவாசம்], எமக்கு அவர்கள் மேல் இருப்பது போல, அவர்களுக்கும் எம் மேல் இருக்கவேண்டும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  32. ஆனல், இவை பெரிய தொகையில் கொடுக்க முடியுமா என்பது கேள்வி? இவை ஒவ்வொன்றும் ஆக குறைந்தது $1.5 மில்லியன். மற்றது, ரஷ்யாஇவற்றை தேடி அழிக்கும், தடுக்கும் முயற்சி. அத்துடன், ரஷ்யா இப்பொது retooling செய்து வருகிறது, அதுக்கு சீன பல்உபயோக பொருட்களை விற்பதாக US அனுப்பி இருக்கிறது Blinken ஐ சீனவை எச்சரிப்பதற்கு, சீன (நமுட்டுச்) சிரித்துக் கொண்டே வரவேற்றது.
  33. 1987 முதல் 1990 வரையான இந்திய ஆக்கிரமிப்புப்படை தமிழர் தாயகத்தில் செய்த அட்டூழியங்களை வெற்றியாக ஒருவரால் பார்க்கமுடிகிறதென்றால், அந்த அட்டூழியங்களில் பங்குகொண்ட ஒருவராலேயே அது முடியும் என்பது வெளிச்சமாகிறது. புலிநீக்கம் செய்துவிட்டு இந்திய கூலிகளின் மீளுருவாக்கம் செய்யலாம் என்கிறீர்களா? எதை மறைத்தாலும், மண்டையில் உள்ள கொண்டையை மறைக்க முடியாது போய்விட்டதே??!!
  34. பத்மநாபாவின் கூலிப்படையான ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பே வடக்குக் கிழக்கில் இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் இணைந்து தமிழர்களுக்கெதிரான அட்டூழியங்களில் ஈடுபட்டு வந்தது. தனது பொம்மையான வரதராஜப் பெருமாளையும், சுரேஷ் பிரேமச்சந்திரனையும் கொண்டு அவர் தமிழர் தாயகத்தில் செய்தது அக்கிரமங்களேயன்றி வேறில்லை. இந்திய ரோவின் பூரணப் பாதுகாப்பில் இருந்துகொண்டு, தான் எந்த மக்களுக்காகப் போராடக் கிளம்பினாரோ அதே மக்களை அடிமைகளாக, அந்நியப் படையொன்றின் உதவியுடன் ஆண்டபோது , தமிழ் மக்களின் விடுதலை வீரன் எனும் தகமையினை இழந்து பலநாளாயிற்று. கொல்லப்பட்டபோது அவர் அந்நிய ஆக்கிரமிப்பு அரசொன்றின் கைக்கூலிதான். ரஜீவினல் தமிழர் அடைந்த நலன் என்று எதுவும் இல்லை. அவர் செய்த ஒப்பந்தம் இந்தியாவின் நலன்களுக்கானது மட்டுமே. அவரைக் கொன்றதால் புலிகள் அடைந்ததும் ஒன்றுமில்லை. கொல்லப்பட்டிருக்கத் தேவையில்லை. புலிநீக்க அரசியல் தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும், அந்நிய சக்திகளின் கைக்கூலிகள் அதுகுறித்துப் பேசத் தேவையில்லை. இதனைச் சொல்வதன் மூலம் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் அராஜக ஆட்சியை நியாயப்படுத்துவதோடு, இந்திய நலன்காக்க உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தையும் இவர் நியாயப்படுத்துகிறார். ஆக, இவர் வருவதும் பதம்நாபா, வரதர் முகாமிலிருந்துதான் என்பதை உறுதிப்படுத்துகிறது.
  35. 1987 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் பற்றி பலர் கிலாகித்து எழுதுகின்றனர். தமிழர்களின் உரிமைகளைக் காத்துக்கொள்ள இந்தியா முன்னின்று செய்த அளப்பரிய சேவை என்றும் இதனைக் கருதுகின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. இவ்வொப்பந்தம் செய்யப்பட்டதே இலங்கையின் ஒருமைப்பாட்டினைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும், இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் தான். இதைத்தவிர இந்த ஒப்பந்தத்தில் ஈழத்தமிழருக்குச் சார்பாகவென்று எவையுமே இருக்கவில்லை. 1. எந்த தமிழினத்தின் சார்பாக இவ்வொப்பந்தத்தினைச் செய்வதாக இந்தியா கூறிக்கொண்டு வந்ததோ, அந்தத் தமிழினத்தின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கத் தேவையான குறைந்தபட்ச முயற்சியினைக் கூட அது எடுக்கவில்லை. 2. ஏற்கனவே பலவீனப்பட்டுப் போயிருந்த தமிழரின் அரசியல் உரிமைகளை மேலும் பலவீனப்படுத்தும் சிங்களத்தின் முயற்சிகளைத் தடுக்கும் எந்த ஏற்பாடும் ஒப்பந்தத்தில் இருக்கவில்லை. 3. ஆனால், தமிழர்களின் நிலையினை மேலும் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளே ஒப்பந்தம் முழுதும் பரவிக்கிடந்தன, உதாரணத்திற்கு வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க தமிழர் தாயகத்தில் சில பகுதிகளில் மட்டுமே நடத்தும் சர்வஜன வாக்கெடுப்பு சமாதான ஒப்பந்தம் என்கிற பெயரில் கைச்சாத்திடப்பட்டு, சிங்கள அரசின் அகம்பாவத்தைக் கட்டுப்படுத்தும் வழிகளின்றி, தமிழர் மீதான அடக்குமுறையினை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற இந்தியாவினால் சமாதானத்தைக் கொண்டுவரமுடியாது போனமையே ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டதன் காரணம். எந்தத் தமிழரின் நலன்காக்க ஒப்பந்தம் செய்வதாகக் கூறிக்கொண்டு இந்தியா வந்ததோ, அதே தமிழரின் நலன்களை விற்று தனது நலனை மட்டுமே அது காத்துக்கொள்ளப்போகிறது என்கிற உண்மை தெரியவந்தபோது ஒப்பந்தம் தோல்வியடைவதை எவராலும் தடுக்க முடியாது போய்விட்டது. இதற்குப் புலிகள் பொறுப்பல்ல, முழுப்பொறுப்பும் இந்தியாவையே சாரும். இந்தியாவினதும், இலங்கையினதும் கூலிகளாகச் செயற்பட்ட ஏனைய இயக்கங்கள் புலிகளை அழிக்கத் துணைபோனபோது, புலிகளளும் அவர்களை அழித்தது சரிதான். புலிகளுடந்தான் உங்களின் முரண்பாடென்றால், அரசியலையும், போராட்டத்தையும் விட்டு விட்டு ஒதுங்கியிருக்கலாம். எதிரியுடன் போய்ச் சேரவேண்டிய தேவை என்ன? எந்த மக்களுக்காகப் போராடுகிறோம் என்று கிளம்பினீர்களோ, அதே மக்களை இந்தியாவோடும், இலங்கையோடு சேந்து அழித்தபோது, உங்களை அழிப்பதைத் தவிர வேறு என்ன தெரிவினை புலிகளுக்கு விட்டுவைத்தீர்கள்? இலங்கையில் இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்களுக்குப் பின்னர், இலங்கக்யில் இந்தியா இருப்பதே தனது சொந்த நலன்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காகத்தான் என்று வெளிச்சமாகிய பின்னர், தமிழர்களின் போராட்டத்தை அழித்தேனும் தனது நலனைப் பாதுகாத்துக்கொள்ள இந்தியா உறுதிபூண்டிருப்பது தெரிந்த பின்னர், அவர்களை வெளியேற்ற எவருடன் சேர்ந்தால்த்தான் என்ன?
  36. எனக்கு ஒரு டவுட் என்னவென்றால்..குசா தாத்தா வீட்டு அண்டை அயலவர் , உற்றார், உறவினர் எல்லாம் நீங்கள் தானோ..?🖐️அப்புறம் இதை வைச்சே திரியை ஓட விடாதீங்கோ புறோ...😀
  37. ஓம் அண்ணா நானும் இதை முதலில் நம்பவில்லை. உண்மை தானாம். வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் ஈரானுக்கு அளித்துவருகின்ற மிகபெரும் ஆதரவை கவனத்தில் எடுத்து அவர்களை சந்தோசபடுத்துவதற்காக இவ்வளவு பிரச்சனைகளை மேற்குலகும் இஸ்ரேலும் தந்துகொண்டிருக்கின்ற நேரத்திலும் இலங்கை சென்று அணைக்கட்டை திறந்துவிட வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பார்.
  38. அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிய அரசியல்வாதிகளால் தமிழரின் நலனும், தேசமும் எவ்வாறு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒருமுறை நீங்கள் இங்கு பதிய முடியுமா? ஏன் கேட்கிறேன் என்றால், எந்த அரசு எமக்கான தீர்வைத் தரவில்லை என்று நாம் சொல்கிறோமோ, அதே அரசுடன் இணைந்து அதனைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகிறீர்கள். தனக்கெதிராகப் போராடியபோது கொடுக்காத விடயங்களை, தன்னுடன் சேரும்போது கொடுத்துவிடும் என்கிறீர்கள். சரி, அப்படியே இருக்கட்டும். தேவநாயகம், இராசதுரை, டக்ளஸ், தொண்டைமான், கதிர்காமர், பிள்ளையான், கருணா, வியாழேந்திரன், அங்கஜன், மகேஸ்வரன் தம்பதிகள் போன்ற தமிழர்கள் அரசில் நேரடியாகவோ அல்லது கூட்டணிக் கட்சியாகவோ அங்கம் வகித்தவர்கள். இவர்களைத் தன்னுடன் வைத்துக்கொண்டதன் மூலம் சிங்களம் அடைந்த ஒரு பிரச்சார நண்மை என்னவென்றால் தமிழர்கள் எம்மோடு இருக்கிறார்கள், எமது கொள்கைகளை ஆதரிக்கிறார்கள், அவர்களது நலன்களை நாம் பாதுகாக்கிறோம் என்று கூறுகிறார்கள், ஒருசில தமிழர்கள் தான் முரண்டுபிடித்துக்கொண்டு நிற்கிறார்கள் என்று சர்வதேசத்தில் தனக்கு நற்சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடிந்தமைதான். ஆனால், இத்தமிழ் அரசியல்வாதிகளால் காக்கப்பட்ட தமிழர்களின் நலன்கள் என்ன? தொண்டைமான் கூட மலையக மக்களின் பல விடயங்களில் அரசுடன் விட்டுக்கொடுத்தே செல்ல வேண்டியதாயிற்று. அவர்களின் அன்றாட வாழ்க்கை நூற்றாண்டுகளாக இன்னும் அப்படியே கிடக்கிறது. ஏனைய தமிழ்த் தலைவர்கள் என்ன செய்தார்கள் என்று எமக்குத் தெரியும். இத்தனை தமிழ்த் தலைவர்களும் ஏறத்தாள அடிமைகளைப்போன்றே அரசில் ஒட்டியிருந்தார்கள். அப்படியிருக்க, இனிவரும் தலைமுறை சிங்கள அரசுடன் எவ்வாறான இணக்கப்பட்டுடன் செல்லாம் என்று கருதுகிறீர்கள்? இவர்களையும் தமது "தமிழ் நண்பர்களாக" அரசு சர்வதேசத்தில் காட்டாது என்பது என்ன நிச்சயம்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.