Leaderboard
-
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்13Points3034Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்10Points33330Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்7Points46969Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்7Points20343Posts
Popular Content
Showing content with the highest reputation on 05/16/24 in all areas
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆறெல்லாம் கள்ளானால் அதுக்குள்ளே நான் விழுந்து நீச்சல் அடிப்பேன் நாடெல்லாம் பெண்ணானால் நடுவிலே நான் இருந்து பார்த்து ரசிப்பேன்6 points
-
தங்கள் உறவுகளை நினைவுகூருவதை தடுக்க சட்டத்தில் இடமில்லை: ரணில் சுட்டிக்காட்டு.
6 points
- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
3 pointsஏமாற்றம் இலங்கையின் கறுப்பு பக்கம் ☹️ நான் நினைத்தேன் கடவுள் மேல் உள்ள பக்தி காரணமாக ஆண்கள் கோவிலில் ஆபாசமாக மேலே ஆடை இல்லாமல் நிற்கின்றனர், தமிழ் அரசியல்வதிகள் மற்றும் ரணில் வாக்குகள் பெற்று கொள்வதற்காக அப்படி செய்கின்றனர்.சைக்கிளை உருட்டிக்கொண்டு கோவில் பாதையால் போன கிருபன் அய்யாவை சேட்டை கழட்ட சொன்னது பலியல் துன்புறுத்தல்.3 points- "காணாமல் போன கணவனை இன்னும் தேடுகிறாள்"
"காணாமல் போன கணவனை இன்னும் தேடுகிறாள்" இலங்கையின் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்த நேரத்தில், பலர் பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்தனர். இவ்வாறு சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். அது மட்டும் அல்ல, இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதலும் 1980 ஆம் ஆண்டிலிருந்தே ஏராளமான மக்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டிருந்தாலும், 1983 முதல் 2009-ம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போதே மிகக் கூடுதலான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். ஆனால் அது யுத்தம் மௌனித்த பின்பும் இன்னும் தொடருவது தான் ஆச்சரியமான விடயம். மேலும் உலக அளவில் இலங்கையில்தான் அதிகமானோர் காணாமல் போவதாக `மனித உரிமைகள் கண்காணிப்பகம்’ கூறியிருப்பதும் கவனிக்கத் தக்கது. பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு அல்லது பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதியைக் கோருவதோடு, இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இம்முறை, 30 ஆகஸ்ட் 2020, அனிதா என்ற பெண்மணி வவுனியாவில் இதற்கு தலைமை தாங்கினார். இலங்கையின், வவுனியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் அனிதா வாழ்ந்து வந்தார். அவளும் அவளது கணவன் அர்ஜுனும் அமைதியான வாழ்க்கையை அங்கு நடத்தி வந்தனர், அவர்கள் தங்களை சூழ்ந்து உள்ள சமூகத்தின் பிரச்சனைகளில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்ததுடன் நேரடியாக பங்கும் பற்றினார்கள். அர்ஜுன் ஒரு ஆசிரியராக இருந்தார், மேலும் அனிதா உள்ளூர் பெண்கள் குழுவின் முன்னேற்றத்திற்கும், அரச இயந்திரங்களாலும் இராணுவத்தாலும் அடிக்கடி எதிர்நோக்கும் இனவாத அடக்குமுறை செயல்களை தடுக்கும் நடவடிக்கைகளுக்கும் மற்ற பெண்களுடன் முன் நின்று அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். மேலும் பெண்களின் கல்வி மற்றும் அவர்களுக்கான தேவையான அதிகாரம் ஆகியவற்றிற்காக தன்னுடைய வாதத் திறமையை அங்கு வெளிக்காட்டினார். வெளியில் சென்ற நம் குடும்பத்தினர், சரியான நேரத்தில் வீடு திரும்பாவிட்டால் நம் மனம் எவ்வளவு பதறிப்போகும். நவீன தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட காலத்தில், அவற்றின் மூலம் தொடர்புகொள்ள முயல்வோம். அப்படியும் தொடர்புகொள்ள முடியவில்லையென்றால், அவர்கள் வீட்டுக்கு வந்து சேரும்வரை அதைப் பற்றியே நம் மனம் யோசித்துக்கொண்டிருக்கும். சரி ... அந்தக் காத்திருப்பு நேரம், நிமிடங்களாக, மணிகளாக, பல மணி நேரங்களாக இருந்தால் பரவாயில்லை. பல ஆண்டுகளென்றால் அப்படிக் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் என அவருக்குப் பிரியமானவர்கள் எவ்வளவு துயரத்தில் உழல்வார்கள் ... அப்படிக் காணமல் போனவர்களும், மற்றவர்களால் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் அவர்களின் குடும்பத்தினர் எவ்வளவு மனவேதனைக்கு ஆளாவார்கள். அதை அனிதா பல சந்தர்ப்பங்களில் நேரடியாக பார்த்தவள். ஆனால் அது தனக்கும் வரும் என்று என்றுமே சிந்திக்கவில்லை. பழந்தமிழரின் வாழ்வில் திருமணத்திற்கு முந்தைய காதல், வாழ்வியல் நெறிமுறையாகவே இருந்துள்ளது. திருமணத்திற்கு முந்தைய ‘காதல் வாழ்வை’, களவொழுக்கம் என்றும், திருமணத்திற்கு பிறகு ‘அவர்களின் இல்லற வாழ்வு’, கற்பொழுக்கமாகவும் போற்றப்பட்டுள்ளது. இவை இரண்டையும் கண்டவள் தான் அனிதா. அவளின் முதல் சந்திப்பே ஒரு ஆச்சரியமான நிகழ்வு தான். அர்ஜுன் படிப்பித்தல் முடிந்து தன் வீடு திரும்பிக்கொண்டு இருந்தான். திடீரென கடும் மழை வந்துவிட்டது. என்ன செய்வது என்று தெரியாதவன், அங்கே பக்கத்தில் இருந்த, குண்டுகளால் சேதமாக்கப்பட்ட கட்டிடத்துக்குள் நுழைந்தான். என்ன ஆச்சரியம் அழகே உருவான ஒரு இளம் பெண் அங்கே பதுங்கி இருப்பதைக் கண்டான். அவளின் கண்கள் பயத்தைக் காட்டின, அவன் என்ன எது என்று விசாரிக்க அருகில் சென்றான். "எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!" அர்ஜுனும் அவளைப் பார்த்தான், அவளும் அவனைப் பார்த்தாள், அவர்களுடைய கண்கள் ஒன்றை ஒன்று கவ்வி உண்டன, இருவரும் நிலை தடுமாறினர், இருவருடைய உணர்வுகளும் ஒன்றாகிவிட்டன. அவள் தான் அனிதா. திடீரென இராணுவம் அங்கு சுற்றிவளைப்பதை அறிந்த அவள், அதில் இருந்து தப்ப அங்கு பதுங்கி இருந்தது தெரியவந்தது. அர்ஜுன் அவளுக்கு ஆறுதல் கூறி, இருவரும் ஒருவரை ஒருவர் பற்றி அறிமுகம் செய்தனர். ஒருவரை ஒருவர் அறிய அறிய, ஒன்றாகிவிட்ட அவர்களின் உணர்வுகளுக்கு வெட்கமும் இல்லாமல் போய்விட்டது. தங்களை அறியாமலே இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து சிறிது நேரம் கண்களையும் மூடிவிட்டார்கள். "தாழ் இருள் துமிய, மின்னித் தண் என வீழ் உறை இனிய சிதறி ஊழின் கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப் பெய்து இனி வாழியோ பெரு வான், யாமே, செய் வினை முடித்த செம்மல் உள்ளமோடு, 5 இவளின் மேவினம் ஆகிக் குவளைக் குறுந்தாள் நாள் மலர் நாறும் நறு மென் கூந்தல் மெல் அணையேமே." தங்கிய இருள் அழியும்படி மின்னி, மின்னல் வெட்டி, குளிர்ந்த நீர்த்துளிகளைச் சிதறி, மரபிற்கு ஏற்ப, சிறு குச்சிகளைக் கொண்டு அடிக்கும் முரசினைப் போல முழங்கி, இடித்து இடித்து, அதாவது தொடர் இடிமின்னலுடன், இப்பொழுது பொழிந்து ,நீ வாழ்வாயாக, பெரிய மேகங்களே! நான், செய்ய வேண்டியப் [ஆசிரியப்] பணியை முடித்து நிறைவுடன், இவளுடன் இருப்பதற்கு [இப்ப] விரும்பி வந்துவிட்ட நான், சிறிய காம்பினை உடைய புதிதாக மலர்ந்த குவளை மலரின் நறுமணம் வீசும் மென்மையான கூந்தலை மெலிதாக அணைத்துக் கொண்டுஇருக்கிறேன் என்று மேகத்திடம் சொல்வதுபோல தனக்குள் முணுமுணுத்தான். இது தான் அனிதாவின் முதல் சந்திப்பு. அவர்கள் இருவரும் இணைபிரியா காதலர்களாக, கணவன் மனைவியாக அன்றில் இருந்து இன்றுவரைக் காணப்பட்டனர். ஒரு நாள், தேசிய பாதுகாப்பு தொடர்பான விசாரணைகளை நடத்துவதாகக் கூறி, அவர்களது கிராமத்தில் அரசுப் படைகள் இறங்கியபோது, அவர்களது வாழ்க்கை எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியது. அர்ஜுன், கிராமத்தைச் சேர்ந்த பல ஆண்களுடன், விசாரணைக்காக வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டார். தங்கள் அன்புக்குரியவர்களின் கதி என்ன என்று கிராமத்துப் பெண்கள் பதற்றமும் பயமும் கொண்டு பின் தொடர முற்பட்டார்கள். என்றாலும் அரசு தற்காலிக ஊரடங்கு சட்டம் போட்டு அதை நிறுத்திவிட்டனர். நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும் மாறியது, ஆனால் பிடித்துக்கொண்டு போனவர்கள் திரும்பி வருவதற்கான அறிகுறி இன்னும் காணப்பட வில்லை. அனிதா, அர்ஜுன் மீதான அன்பாலும், நீதியின் ஆழமான உணர்வாலும் தூண்டப்பட்டு, கண்ணகி போல நீதிக்கு குரல்கொடுக்க, குரலற்றவர்களின் குரலாக மாறினாள். அவள் மற்றும் சிலரின் துணைகளுடனும் ஆதரவுடனும் அயராது பிடித்துக்கொண்டு போனவர்களின் இருப்பிடம் பற்றிய தகவல்களைத் தேடி, அவர்களின் விடுதலைக்காக வாதிட்டார். வெளியே சென்று வீடு திரும்பாதவர்கள், ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பாதவர்கள், கடத்திச் செல்லப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் என காணாமல்போன இவர்களது உறவினர்கள் நம்பிக்கை இழக்காமல் தங்கள் உறவுகளைத் இன்னும் தேடிவருகின்றனர். அவர்களுடன் அனிதா போராட்டங்களில் கலந்து கொள்ளவும், மனித உரிமை அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும், அதே நேரம் நாளாந்த வாழ்வில் தனது சமூகம் எதிர்கொள்ளும் அநீதிகளுக்கு எதிராக பேசவும் தொடங்கினார். அது மட்டும் அல்ல, அப்படியான மற்ற குடும்பங்களுக்கு வலிமை மற்றும் துன்பங்களைத் தாங்கும் திறன் மற்றும் கடினமான வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்து மீள்வது போன்றவற்றுக்கு அவள் ஒரு அடையாளமாக மாறினாள். மேலும் மற்றவர்களுடன் ஒன்றாக, அவர்கள் ஒரு ஆதரவு வலைப்பின்னலை [நெட்வொர்க்கை] உருவாக்கி, தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொண்டதுடன் அவர்களின் கூட்டுக் குரலாக அதை பெருக்கினர் அல்லது மாற்றினார். காணமல் போனோர் குறித்து விசாரிப்பதற்காக கடந்த 2017ல் சாலிய பீரிஸ் தலைமையில் காணமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்த அலுவலகம் 2019லிருந்து யாழ்ப்பாணத்திலும் செயல்பட்டு வருகிறது. ஆனால், காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவினர்களைப் பொறுத்தவரை இந்த அலுவலகத்தின் செயல்பாடுகளை அவர்கள் ஏற்கவில்லை. அதனை மரணச் சான்றிதழ் வழங்கும் அலுவலகம் என குற்றம் சாட்டுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை, முழுமையான விசாரணை நடந்து, உண்மை கண்டுபிடிக்கப் பட்டு, நீதி வழங்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். இதைத்தான் அனிதா முதன்மை படுத்தி தன்னை அதில் இணைத்துக் கொண்டாள். எவ்வாறாயினும், அரசாங்கம் இவர்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்காமல், வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய கூற்றுக்களை நிராகரித்தது. என்றாலும் அனிதா, மனம் தளராமல், நீதிக்கான தனது போராட்டத்தைத் தொடர்ந்தாள், வழக்கறிஞர்கள், ஆர்வலர்களைச் சந்தித்தாள், மேலும் சர்வதேச அமைப்புகளை அணுகினாள். ஆரம்பத்தில் ஆதரவளித்த சமூகம், அதிகாரிகளின் அழுத்தத்தை உணரத் தொடங்கியது. சில கிராம மக்கள், பின்விளைவுகளுக்கு பயந்து, அனிதாவிடமிருந்தும் போராட்டத்தில் பங்கு பற்றுவதில் இருந்தும் தங்களைத் தூர விலக்கினர். இதனால் அனிதா தனிப்பட்ட சவால்களையும் எதிர்கொண்டாள். ஆனாலும், அவள் விடா முயற்சியுடன், தன் கணவன் மீதான அன்பாலும், உண்மை வெல்ல வேண்டும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையாலும் தனது போராட்டத்தை விடாமல் தொடர்ந்தாள். வருடங்கள் செல்ல செல்ல அனிதாவின் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. உலகெங்கிலும் உள்ள மனித உரிமை அமைப்புகள், பத்திரிகையாளர்கள் மற்றும் அக்கறையுள்ள குடிமக்கள் நீதிக்கான அழைப்பில் இணைந்தனர். அரசாங்கத்தின் மீதான அழுத்தம் அதிகரித்தது, எனவே இதை எப்படியும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என இறுதியாக அரசும் தீர்மானத்தித்தது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஆனால், நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், அரசு தலைவர்கள் மாறினார்கள். மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது. என்றாலும் அனிதாவின் பயணம் அநீதியை எதிர்கொள்வதில் ஒரு தனி நபரின் தைரியத்தின் சக்திக்கு சான்றாக அமைந்தது, மற்றவர்கள் தங்கள் உரிமைகளுக்காக நிற்கவும், உண்மை மற்றும் பொறுப்புக்கூறலைத் தேடவும் அது தூண்டியது. ஆனால் அனிதா ? அவளுக்கு என்ன நடந்தது? ஒரு மர்மமாக தொடர்கிறது. அனிதா இப்ப தன் சுய நினைவை இழந்துவிட்டாள் அல்லது இழக்கச் செய்யப்பட்டு விட்டாள்? அவள் அர்ஜுனை முதல் முதல் சந்தித்த அந்த பாழடைந்த கட்டிடத்துக்குள் பைத்தியக்கார பெண்ணாக வாழத் தொடங்கிவிட்டாள். "கனவு எல்லாம் எரிந்து சாம்பலாகிப்போன நாள் ஒன்றில் தெருவில் தனித்து நின்றாள் சிரித்துக் கொண்டு அர்ஜுன் அர்ஜுன் என்றாள் கடந்து போனவர்கள் பைத்தியம் என்றார்கள் தூரத்தில் போய்நின்று வேடிக்கை பார்த்தார்கள் கூட்டமாய் நின்று அவள் வரலாறு கூறினார் ஏளனமாய் பார்த்து மௌனமாகவும் போனார்கள் விதி சதி செய்து வீதிக்கு வந்தாள் கதி இதுவே என முன்னையது அழைக்க பாழடைந்த கட்டிடத்துக்கு உள்ளே புகுந்தாள் அன்பே அன்பே என்று எங்கும் தேடினாள்" அனிதா அர்ஜுனை தேடி பேதுற்றுப் புலம்பிக் அந்த பாழடைந்த கட்டிடத்துக்குள் அங்கும் இங்கும் ஓடினாள். தன் காதல் கணவனை கண்டீரோ என்று சத்தம் போட்டு கேட்டுக் கொண்டு அலைந்தாள். இராணுவத்தின் பிடியில் வலாற்காரமாக இழுத்து செல்லப்பட்ட , “மலையொத்த தோள்கள் கொண்டவனே” என்று கதறினாள். "கச்சினன் கழலினன் தேம்தார் மார்பினன் வகையமைப் பொலிந்த வனப்பமை தெரியல் சுரியலம் பொருநனைக் கண்டிரோ" என" ஒரு சங்கப் பாடலை முழங்கினாள். உலகில் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பைத்தியம் பிடித்தவர்களாகவே இருக்கிறோம். இவளோ கணவனை அடைய, மீட்டு எடுக்கும் முயற்சியில் , சிலரின் வஞ்சகத்தால், பாவம் உண்மையாகவே பாதிக்கப்பட்டு, என்ன செய்கிறோம் என்று அறியாமல், கணவனை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறாள். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]2 points- கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
இப்படி ஓரு மொக்குத்தனமான பதில் உங்களிடம் இருந்து வந்திருப்பது சற்று எதிர்பார்தது தான். மொக்குத் தனமான நாட்டில் ஓர் மொக்கன் சர்வதேச விமானநிலையத்தினுள் ஆயுதங்களுடன் நுளைய முற்றப்படதை தமிழ்வின் பெயர் குறிப்படாமல் பிரச்சனைகளை தவிர்த்தது நல்லதே.2 points- முன்னாள் போராளியின் வெற்றிப்பயணம் | இப்படித்தான் வாழ வேண்டும் | Orvasanai | IBC
2 points- கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
நாங்கள் நீங்கள் எல்லோரும் சொந்த பெயரிலா வாறம்?2 points- சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
அவர்கள் உடைத்து இருக்க வேண்டியது கையை அல்ல!2 points- குஜராத்: இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளி உணவுப் பதிவர்
3 மணி நேரங்களுக்கு முன்னர் குஜராத்தின் சூரத் நகரைச் சேந்த அங்கித் பரன்வால் ஒரு ஃபுட் விலாகர். சூரத் நகரத்தில் இருக்கும் உணவகங்கள், கஃபேடேரியாக்கள், ரெஸ்டாரண்டுகளுக்கு சென்று தன்னுடைய யூடியூப் சேனல் பார்வையாளர்களுக்காக சிறந்த மற்றும் புதிய உணவு வீடியோக்களைப் பதிவு செய்து வெளியிடுகிறார். “இந்தியாவின் முதல் மாற்றுத் திறனாளி ஃபுட் விலாகர் நான் தான் என்று நினைக்கிறேன். என்னால நடக்க, நகர முடியாது, ஆனாலும் இந்தத் துறையில் நுழைந்தேன். நான் இந்த தொழிலில் என்னால் முடிந்ததை செய்கிறேன்”, என்கிறார் அங்கித் பரன்வால். தொடர்ந்து உற்சாகமாக பேசும் அவர், “நான் சூரத்தில் பிஆர்டிஎஸ் திட்டத்தில் 18 மாதங்கள் வேலை செய்தேன். கொரோனா வந்த பிறகு, என் வேலையை இழந்தேன். வேலைக்காக பல இடங்களில் விண்ணப்பித்தேன், ஆனால் கிடைக்கவில்லை. நான் ஒரு உணவுப் பைத்தியம், பலவகையான உணவுகளை ருசிக்க விரும்புவேன். இதற்கு முன்பாக, சில வெப் சீரிஸ்கள், குறும்படங்களை எடுத்துள்ளேன். நடக்க முடியாத ஒருவர் ஃபுட் வீலாகிங் செய்வது இதுவே முதல் முறை. மக்கள் எனது வீடியோக்களை விரும்பினார்கள், அவர்களால் நான் இன்று பிரபலமாகிவிட்டேன்.” என்கிறார் அங்கித். பிபிசியிடம் பேசிய அங்கித்தின் தாய் அன்னு பரன்வால், “அங்கித் பிறந்த போது அவனுக்கு முதுகில் புற்றுநோய் கட்டி இருந்தது. அங்கித் மூன்று மாத குழந்தையாக இருந்தபோது, மருத்துவர்கள் அந்த கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்தனர். அங்கித் 1 வயதாக இருந்தபோதும், அவனது கால்களில் எந்த அசைவும் இல்லை. நாங்கள் மருத்துவர்களைக் கலந்தாலோசித்தோம், ஆனால் அவர்களால் அங்கித்தின் நிலைமைக்கான சரியான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் இந்த விஷயங்களைச் செய்யத் தொடங்கிய போது நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். அவனுடைய பணி மற்றும் அர்ப்பணிப்புக்காக மக்கள் இன்று அவனைப் பாராட்டுகின்றனர்” என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/ce9rqn3z3d2o2 points- மனிதகுலப் பேரழிவை நிகழ்த்தும் இஸ்ரேல்! கையறு உலகம்!
நான் சாதாரண மனிதன் அண்ணா. எனக்கு சிலவற்றை மறக்க மன்னிக்க வராது. மறக்க மன்னிக்க கூடிய பாதகங்களையா செய்து முடித்தார்கள் கொண்டாடினர்கள். அவர்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால்...???2 points- குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நெடுந்தீவில் அனுஷ்டிப்பு
படகின் இயந்திர அறைக்குள் ஒவ்வொருவராக அழைத்து கோடரிகளாலும், வாட்களாலும் வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். கொல்லப்படுபவர்களின் ஓலம் வெளியே கேட்காதிருக்க, உயிருடன் இயந்திர அறைக்கு வெளியே இருந்தவர்களைத் தமது பெயர்களை உரக்கக் கத்திச் சொல்லுமாறு பணிக்கப்பட்டிருக்கிறார்கள். வெட்டிச் சாய்க்கப்பட்டவர்களிடையே உயிருடன் இருந்த இருவரை 2000 ஆண்டுகளின் ஆரம்பத்தில் தினக்குரல் பேட்டி கண்டிருந்தது. ஆழ்ந்த இரங்கல்கள்! செய்தது ஜெயார் அண்ணை, நவாலி சென்பீட்டர்ஸ் படுகொலை, புதுக்குடியிருப்புப் பாடசாலைப் படுகொலை நினைவுகளை அனுஷ்ட்டிக்கேக்கை அவாவையும் கூப்பிடலாம்.2 points- சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
செருப்பை சாணியில் முக்கி அடிப்பது என்பது இதுதானா🤣 அதுவும் அந்த அட்டணக்கால்😎. #மாதர் தம்மை கேலி பேசும் மூட வாயை மூடுவோம்.2 points- த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு!
2 pointsயாழில் சிலர்எழுதும் கருத்துக்களை அவர்கள் வாசிக்கினம் போல. 😀2 points- வாழும் போதே கொண்டாடுவோம்.
1 pointஒவ்வொருவரும் வாழும் போதே அவர்கள் திறமையை பாராட்டி மகிழ வேண்டும். அதுதான் அவர்களுக்கும் மகிழ்சி தரும் செயல். இறந்த பின் மணி மண்டபம் கட்டுவதோ பெரிய சிலைகள் அமைப்பதோ பயனற்றது.1 point- மரச் சிற்பம் - ஷோபாசக்தி
1 pointமரச் சிற்பம் ஷோபாசக்தி பாரிஸ் நகரத்தில் இந்த வருடம் நிகழவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளைக் குறித்துத் தினப் பத்திரிகையிலிருந்த தலைப்புச் செய்தியை மீறியும் எடுத்த எடுப்பிலேயே இன்னொரு செய்தி எனது கண்களை இழுத்தது. கண்கள் அந்தச் செய்தியை வாசிக்கும்போது, எனக்குக் கிட்டத்தட்டச் சித்தம் கலங்கிவிட்டது என்றே சொல்லலாம். நான் அந்தச் செய்தியை நம்ப முடியாமல் மூன்று தடவைகள் திரும்பத் திரும்ப வாசித்தேன். பிரான்ஸில் இப்போது படு வேகமாக முன்னணிக்கு வந்துகொண்டிருக்கும் தேசியவாதக் கட்சியொன்றின் தலைவர்களில் ஒருவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார்: “எமது தந்தையர் நாடு இப்போது வாழ்வதற்கு அபாயகரமான நிலமாகிவிட்டது. குற்றக் குழுக்களதும் கலகக்காரர்களதும் கரிய பாதங்களுக்குக் கீழே இந்தத் தூய நிலம் அழுந்திகொண்டிருக்கிறது. இந்த ஒழுங்கற்றதன்மையிலிருந்து மீள்வதற்கு நமக்கு ஒரேயொரு வழியே உள்ளது. பிரான்ஸின் தனித்த பெருமைக்குரிய, மகத்தான பிரெஞ்சுப் புரட்சியின் சின்னமான மரச் சிற்பத்தை மீண்டும் நாங்கள் பொது முற்றங்களில் நிறுவ வேண்டும்.” பிரெஞ்சு மொழியில் உயிருள்ளவை, உயிரற்றவை எனப் பலவற்றுக்கும் செல்லப் பெயர்கள் அன்றாடப் பேச்சுகளில் சரளமாகப் புழக்கத்திலுண்டு. பொலிஸ்காரனுக்கு ‘கோழி’ என்பதும் பெண்ணுக்கு ‘தெள்ளுப்பூச்சி’ என்பதும் ஆண்குறிக்கு ‘சேவல்’ என்பதும் செல்லப் பெயர்கள். ‘மரச் சிற்பம்’ என்ற செல்லப் பெயரால் குறிப்பிடப்படுவது கில்லட்டின். ‘லே மிஸரபிள்’ நாவலில் விக்டர் ஹியூகோ “ஒருவர் தனது சொந்தக் கண்களால் கில்லட்டினைப் பார்க்காத வரை, மரணதண்டனை குறித்து அவருக்கு அலட்சியம் இருக்கலாம். ஆனால், அதைப் பார்த்ததும் அதிர்ச்சியால் அவரது மூளை கலங்கிவிடும்” என்று சொல்கிறார். விக்டர் ஹியூகோவை நான் முழுமையாகவே விசுவாசிக்கிறேன். நான் என்னுடைய கண்களால் அந்த மரச் சிற்பத்தைப் பார்த்திருக்கிறேன். அது தற்செயலாக நிகழ்ந்ததுதான். பாரிஸ் நகரத்திலுள்ள ‘ஓர்ஸே’ அருங்காட்சியகத்தில் தஸ்தயேவ்ஸ்கியின் புகழ்பெற்ற தலைப்பைக் கடனாகப் பெற்று ‘குற்றமும் தண்டனையும்’ என்றொரு கண்காட்சி நடந்தது. அந்தத் தலைப்பால் கவரப்பட்டுத்தான் நான் கண்காட்சிக்குப் போயிருந்தேன். அங்கேதான் பிரான்ஸிலிருக்கும் கட்டக் கடைசி கில்லட்டினைக் காட்சிக்கு வைத்திருந்தார்கள். அந்த மரச் சிற்பம் பதினான்கு அடி உயரமானது. அந்தச் சிற்பத்தின் பீடம் ஏழடி நீளமும் இரண்டடி அகலமுமானது. மரணதண்டனை விதிக்கப்பட்ட மனிதரை அந்தப் பீடத்தில் குப்புறப் படுக்க வைப்பார்கள். கைகளும் கால்களும் உடலோடு சேர்த்துத் தடித்த கயிறுகளால் பிணைக்கப்பட்டிருக்கும். மரச் சிற்பத்தின் ஆசனவாய் போன்று தோற்றமளிக்கும் துளையில் அந்த மனிதரின் கழுத்துப் பகுதி செருகப்படும். துளைக்கு இந்தப் பக்கம் அவரின் உடலும் அந்தப் பக்கம் தலையும் இருக்கும். அவரது ஆன்மா அப்போது எங்கிருந்திருக்கும்? மரச் சிற்பத்தின் கிரீடம் போல உச்சியில் தொங்கிக்கொண்டிருக்கும் கனமான, கூர்மையான கத்தி விசையுடன் இறக்கப்பட்டதும் தலை முண்டத்திலிருந்து எகிறி விழும். அதை ஏந்துவதற்குக் கீழேயொரு அழுக்குப் பிரம்புக் கூடை வைக்கப்பட்டிருக்கும். பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்ட எல்லா கில்லட்டின்களும் இந்த வடிவத்திலேயே இருந்ததாகச் சொல்ல முடியாது. புரட்சி நடுவர் மன்றம் நாடு முழுவதுமுள்ள பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு மரணதண்டனை விதித்துக்கொண்டேயிருந்ததால், சுலபமாகக் கையிலேயே எடுத்துச் சென்று காரியத்தை முடித்துவிட குட்டியான நடமாடும் கில்லட்டின்கள் கூட அப்போது நூற்றுக்கணக்கில் உருவாக்கப்பட்டன. ஓர்ஸே அருங்காட்சியகத்திலிருந்து ஏதேதோ குழப்பமான எண்ணங்களுடன் சித்தம் கலங்கியவனாகத்தான் நான் வெளியே வந்தேன். அந்த அருவருக்கத்தக்க இரத்த மரச் சிற்பம் அன்று முழுவதும் என்னுடைய மூளையை விட்டு அகல மறுத்தது. பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் அந்த மரச் சிற்பத்தால் தலை கொய்யப்பட்டவர்கள் எனது தலைக்குள் அரூபப் படிமங்களாக, ஒலி எழுப்பாமல் பேசிக்கொண்டே அலைந்தார்கள். பாரிஸ் நகரத்தின் புரட்சிச் சதுக்கத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த மரச் சிற்பங்களை நோக்கி அழைத்துச் செல்லப்படுகையில் அவர்கள் எதைப் பேசியிருப்பார்கள்? என்ன நினைத்திருப்பார்கள்? பேரரசர் பதினாறாம் லூயி மரச் சிற்பத்தின் ஆசனவாய்க்குள் தனது தலையை நுழைக்கும்போது, “நான் எனது எதிரிகளை மன்னிக்கிறேன்” என்று கூறியது உண்மைதானா? மகாராணி மரி அந்துவானெட் மரச் சிற்பத்தில் படுக்க வைக்கப்பட்டு; கழுத்தில் கத்தி பிசிறில்லாமல் இறங்குவதற்காக அவரது நீளமான தலைமுடி பிடரிக்கு மேலாகச் சிரைக்கப்பட்டபோது, அவர் எதை நினைத்திருப்பார்? மகாராணி தனது எட்டு வயது மகன் லூயி -சார்ள்ஸைக் கட்டாயப்படுத்தி அவனோடு செக்ஸ் வைத்துக்கொண்டார் என்று புரட்சி நடுவர் மன்றம் குற்றம் சாட்டியபோது “உங்களுக்கல்ல! இங்கிருக்கும் தாய்மார்களுக்கு நான் சொல்கிறேன்…ஒரு தாய்மீது சுமத்தப்படும் இத்தகைய குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க இயற்கை என்னைத் தடுக்கிறது” என்று சொல்லியிருந்தாரே… அந்த இயற்கையைத்தான் அந்தக் கடைசி நிமிடத்தில் அவர் நினைத்திருப்பாரா? புரட்சியின் முக்கிய தலைவர்களான தாந்தோனும்,ரொபஸ்பியரும் ஒருவர் பின் ஒருவராக அடுத்த வருடமே புரட்சிச் சதுக்கத்திற்கு அழைத்து வரப்பட்டு இந்த மரச் சிற்பத்தில் படுக்க வைக்கப்பட்டபோது, அவர்கள் எதை நினைத்திருக்கக் கூடும்? அவர்களது தாரக மந்திரமான சுதந்திரம் -சமத்துவம் – சகோதரத்துவம் என்பதைக் கடைசி விநாடியில் அவர்கள் உச்சரித்திருப்பார்களா? புரட்சிச் சதுக்கத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டம் “துரோகிகளைக் கொல்லுங்கள்!” என்று ஆர்ப்பரித்த வார்த்தைகள்தான் அவர்களது காதுகளில் விழுந்த கடைசி வார்த்தைகளா? கில்லட்டின் படுகொலைகளைத் தூண்டிய புரட்சி நாயகர்களில் அதிமுக்கியமானவரான ‘மக்கள் தோழன்’ மாராவின் இருதயத்தில் சமையல் கத்தியைப் பாய்ச்சிக் கொன்ற இருபத்துநான்கு வயது யுவதி சர்லோத் கோர்தே இந்த மரச் சிற்பத்தை நோக்கி அழைத்துச் செல்லப்படுகையில் என்ன நினைத்திருப்பார்? “நான் எனது கடமையை நிறைவேற்றிவிட்டேன்! இந்த மனிதரின் உத்தரவால் இலட்சக்கணக்கானவர்கள் கில்லட்டினில் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்காகவே நான் இவரைக் கொன்றேன்” என்று மாராவின் பிணத்தின் முன்னே நின்று அவர் சொன்ன வார்த்தைகள் அவருடன் கடைசிவரை இருந்து அந்த அழுக்குப் பிரம்புக் கூடையில் தெறித்து விழுந்திருக்குமா? நான் பத்திரிகையை மேசையில் வீசிவிட்டு, நொறுங்கிவிழும் நிலையிலிருந்த ஜன்னலை மெதுவாகத் திறந்து கடல் காற்றை உள்ளே வரவழைத்தேன். மார்ஸேய் நகரத்தில் கடற்கரையை ஒட்டியிருக்கும் இந்தப் பழைமையான தங்கு விடுதியில்தான் கடந்த ஒரு வாரமாக நான் தங்கியிருக்கிறேன். பாரிஸில் கடுங்குளிரும் பனிப்பொழிவும் ஏற்படும்போது, கொஞ்சம் வெப்பத்தையும் கடலையும் தேடிக்கொண்டு தெற்குப் பிரான்ஸிலுள்ள ஏதாவதொரு கடற்கரை நகரத்திற்கு நான் வந்துவிடுவேன். பழைமையைக் காப்பாற்றுவதில் இந்த விடுதி நிர்வாகம் கடும் கவனத்தைச் செலுத்துகிறது. விடுதியில் தங்குபவர்களுக்கு தினப் பத்திரிகையை இலவசமாக வழங்கும் கலாசாரத்தை நிறுத்தாத பிரான்ஸின் மிகச் சில தங்கு விடுதிகளில் இதுவுமொன்று. உளுத்துப்போயிருக்கும் அறைக் கதவின் கீழால் இன்று காலையில் அவர்கள் மடித்துத் தள்ளிவிட்ட சனியன் இப்போது என்னில் தொற்றிக்கொண்டு என்னை மூச்சுத் திணற வைக்கிறது. அறைக்குள் நுழைந்த காற்று என்னை ஆற்றுப்படுத்துவதற்குப் பதிலாக மேலும் சோர்வுக்குள்ளேயே தள்ளிவிட்டது. எழுதும் மேசையின் முன்னால் அமர்ந்து ஏதாவது எழுதுவதற்கு முயற்சித்தேன். ஓர் எழுத்தைக் கூட என்னால் எழுத முடியவில்லை. நேரம் காலை பத்தரை மணியாகிவிட்டது. கோப்பி ஒன்று குடித்தால் புத்துணர்ச்சியாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றவே காலணிகளை மாட்டிக்கொண்டு வெளியே புறப்பட்டேன். மறக்காமல் அந்தப் பத்திரிகைச் சனியனைச் சுருட்டிக் கையில் எடுத்துக்கொண்டேன். அந்தப் பத்திரிகைக்காக அனபெல் அம்மையார் காத்திருப்பார். அனபெல் அம்மையாரை இந்த நகரத்திற்கு வந்த முதல் நாளே நான் சந்தித்திருந்தேன். நான் இந்த நகரத்திற்கு இரயிலில் வந்திறங்கும்போது, காலை ஒன்பது மணியிருக்கும். மதியம் பன்னிரண்டு மணிக்குத்தான் அறை கொடுப்போம் என்று விடுதி நிர்வாகி சொன்னார். அதுவரை நேரத்தைப் போக்குவதற்காக விடுதிக்கு எதிரேயிருந்த கஃபேக்குச் சென்றேன். தாழ்வாரத்தில் போடப்பட்டிருந்த வட்டமான சிறிய மேசையொன்றைத் தேர்ந்தெடுத்து உட்கார்ந்துகொண்டேன். அதுதான் புகை பிடிப்பதற்கு வசதி. எக்ஸ்பிரஸோ கோப்பி ஒன்றுக்குச் சொல்லிவிட்டு, தெருவை வேடிக்கை பார்ப்பதும் சிகரெட் புகைப்பதுமாக நான் நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தபோதுதான், அந்த கஃபேயை நோக்கி அனபெல் அம்மையார் மெது மெதுவாக நடந்து வந்தார். அவருக்குக் கிட்டத்தட்ட எழுபது வயதிருக்கும் என்றே நினைக்கிறேன். அவரது வெண்ணிறக் கால்களிலும் கைகளிலும் தாடையிலும் பொன்னிறத்தில் பூனை ரோமங்கள் மினுங்கின. முற்றாக நரைத்திருந்த தலையில் அங்கங்கே திட்டுத் திட்டாக முடிகள் உதிர்ந்திருந்தன. அவற்றை மறைப்பதற்காகவோ என்னவோ சிறுமிகள் கட்டும் வண்ண ரிப்பன்கள் சிலவற்றைத் தலையில் குறுக்குமறுக்காகக் கட்டியிருந்தார். அவரது சிறிய சாம்பல் நிறக் கண்களின் கீழே சதை திரண்டு அழுகிய தோடம்பழச் சுளைகளைப் போலத் தொங்கின. அனபெல் சராசரிக்கும் குறைவான உயரமுள்ளவர். ஆனால், கனத்த உடல்வாகு. கழுத்தும் கைகளும் கால்களும் பெருத்துக் கிடந்தன. உண்மையில் அவை வீக்கங்களாகத்தான் இருக்க வேண்டும். முழங்கால் வரைக்குமான கவுன் அணிந்திருந்தார். காலுறைகளைச் சுருட்டி விட்டிருந்தார். புடைத்திருந்த ஒரு துணிப் பையைக் கையில் சுமக்க முடியாமல் சுமந்துவந்தார். அவர் ஒரு குடி நோயாளி என்பதைத் தெளிவாக அடையாளம் காட்டுவதுபோல, அவரது முகம் காற்று நிரப்பப்பட்ட ரோஜா நிற பலூன் போல ஊதியிருந்தது. அனபெல் எனக்கு அருகிலிருந்த மேசையில் உட்கார்ந்துகொண்டார். அவர் மூச்சிரைக்கும் சத்தம் பெரிய புறாவொன்று குனுகுவதைப் போல எனக்குக் கேட்டது. பரிசாரகர் வந்து “நல்ல நாளாகட்டும் மேடம் அனபெல்! இன்று எப்படியிருக்கிறீர்கள்? நலம்தானே? நான் உங்களுக்கான கோப்பையை எடுத்து வந்திருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு மது நிரம்பிய சிறிய கண்ணாடிக் கோப்பையை அனபெலின் மேசையில் வைத்தார். அனபெல் கோப்பையை என் முகத்திற்கு நேரே தூக்கிக் காட்டிவிட்டு, ஒரே மடக்கில் கோப்பையைக் காலி செய்து, வெற்றுக் கோப்பையை மேசையின் ஓரத்தில் வைத்தார். பின்பு, தனது துணிப் பைக்குள்ளிருந்து கற்றையாகப் பத்திரிகைளை எடுத்து மேசையில் பரப்பி வைத்துக்கொண்டு வாசிக்கத் தொடங்கினார். எனக்குப் பொழுது போகாமல், அவர் என்ன வாசிக்கிறார் எனக் கண்களை எறிந்து பார்த்தேன். அவர் வாசித்தது எல்லாமே முந்தைய தின, முந்தைய வாரப் பத்திரிகைகளே. நான் அவரைக் கவனிப்பதை அனபெல் எப்படி உணர்ந்தார் என்று தெரியவில்லை… திடீரெனத் தலையை என் பக்கம் திருப்பி “நண்பரே! உங்களை முன்பு இங்கே பார்த்ததாக எனக்கு ஞாபகம் இல்லையே. எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவருடைய குரலில் இரண்டு விஷயங்களை நான் கவனித்தேன். அனபெலின் குரலில் ஆண்தன்மை மிகுந்திருந்தது. அந்தக் குரல் எந்தவித உணர்ச்சியோ பாவமோ இல்லாமல் ‘Votre attention, s’il vous plaît’ என இரயில் நிலையங்களில் தினமும் ஒலிக்கவிடப்படும் தட்டையான அறிவிப்புப் போலவே ஒலித்தது. அவர் எப்போதுமே இப்படித்தான் பேசினார். எல்லா உணர்ச்சிகளும் -அப்படி ஏதாவது அவரிடமிருந்தால் -ஒரே தொனியில்தான் அவரிடமிருந்து வெளிவந்தன. அடுத்தடுத்த நாட்களில் நான் ஒன்றைத் தெரிந்துகொண்டேன். அனபெல் ஒவ்வொரு நாளும் காலை பத்து மணிக்கு அந்த கஃபேக்கு வந்துவிடுகிறார். மாலை ஆறு மணிவரை அங்கேயே ஒரு மேசையில் உட்கார்ந்திருக்கிறார். ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை ஒரு கோப்பை மது வரவழைத்துக் குடித்துவிட்டுப் பத்திரிகைகளைப் படித்தவாறிருக்கிறார். அந்தப் பத்திரிகைகளைக் குப்பைத் தொட்டிகளிலும் தெருக்களிலும் அவர் சேகரிக்கிறார். எனக்கு தங்கு விடுதியில் தள்ளிவிடப்படும் பத்திரிகையை மேலோட்டமாக மேய்ந்துவிட்டு, அனபெலிடம் கொடுப்பதை நான் வழக்கமாக்கிக்கொண்டேன். நான் விடுதியின் மாடிப்படிகளில் இறங்கி வரும்போது, மனம் ஆற்றாமல் மாடிப்படியிலேயே உட்கார்ந்து மீண்டும் ஒருமுறை அந்த மரச் சிற்பச் செய்தியைப் படித்தேன். எத்தனை தடவைகள் படித்தாலும் ஒரே செய்திதான் இருக்கும் என்பதைக் கூடப் புரிந்துகொள்ளாத அளவுக்கு அந்தச் செய்திச் சனியன் என்னுடைய மூளையை மழுங்கடித்துவிட்டது. நான் கஃபேக்குச் சென்றபோது, தாழ்வாரத்தின் இடது பக்க மூலையிலிருந்த மேசையின் முன்னே அனபெல் பத்திரிகையொன்றை வாசித்தவாறே அமர்ந்திருந்தார். “பொன்ஜூர் மேடம் அனபெல்” எனக் கூறிக்கொண்டே, கையில் எடுத்துச் சென்ற பத்திரிகையை அந்த மேசையில் வைத்துவிட்டு, அவருக்கு எதிரே அமர்ந்துகொண்டேன். இந்த ஒரு வாரத்திற்குள்ளேயே ஒரே மேசையில் அமர்ந்து குடிக்குமளவுக்கு எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. என்னிடம் வந்த பரிசாரகர் “ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்? உடல்நலம் சரியாக இருக்கிறதல்லவா? இந்த உப்புக் காற்று சிலருக்கு ஒத்துவருவதில்லை. உங்களுக்கு கோப்பி எடுத்துவருகிறேன்” எனச் சொல்லிவிட்டுப் போனார். அப்போது அனபெல் வெடிப்புற்றிருந்த தனது மெல்லிய உதடுகளைக் குவித்துக்கொண்டு என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். பத்திரிகையிலிருந்த மரச் சிற்பச் செய்தியை நான் அனபெலிடம் தொட்டுக் காட்டினேன். அவர் அதைப் படித்து முடிக்கும்போது, அவருக்கான அடுத்த கோப்பை மது வந்துசேர்ந்தது. ஒரே மடக்கில் குடித்துவிட்டு, வாயைக் கைக்குட்டையால் ஒற்றிக்கொண்டிருந்தார். நான் பொறுக்க முடியாமல் “நூற்றாண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட இரத்த மரச் சிற்பங்களை மீண்டும் தோண்டி எடுத்து இந்தக் காட்டுமிராண்டிகள் பொது முற்றங்களில் நிறுவப் போகிறார்களாம். அதையும் இந்த வெட்கங்கெட்ட பத்திரிகை வெளியிட்டிருக்கிறது” என்றேன். அனபெல் ஏதாவது இரண்டு வார்த்தைகளை -எப்போதும் போல உணர்ச்சியற்ற குரலில் – சொன்னால் கூட என்னுடைய மனது சற்று ஆறுதலடையும் போலிருந்தது. அனபெல் கைக்குட்டையை மடித்துக்கொண்டே சொன்னர்: “நூற்றாண்டுகளுக்கு முன்பல்ல. நாற்பத்தேழு வருடங்களுக்கு முன்புவரை மரச் சிற்பம் இயங்கிக்கொண்டேயிருந்தது. அது வெட்டிய கடைசித் தலை இந்த நகரத்தில்தான் புதைக்கப்பட்டிருக்கிறது.” அனபெலுக்கு காலையிலேயே போதை ஏறிவிட்டது, அதனால்தான் உளறுகிறார் என்றே நான் முதலில் நினைத்தேன். ஆனால், நான் இதுவரை பழகிப் பார்த்ததில் அனபெல் ஒருபோதுமே போதையால் உளறியது கிடையாது. அவர் எப்போதுமே திருத்தமாகவும் திட்டவட்டமாகவும்தான் பேசுகிறார்… இரயில் நிலைய அறிவிப்புப் போல. “என்ன சொல்கிறீர்கள்…நாற்பத்தேழு வருடங்களுக்கு முன்பாகவா?” என்று நான் கேட்டேன். “10-ம் தேதி, செப்டம்பர் 1977, அதிகாலை 4.40 மணி” என்று அதே உணர்ச்சியற்ற குரலில் அனபெல் சொன்னார். என்னால் அதை நம்பவே முடியவில்லை. இதை வாசிக்கும் உங்களால் நம்ப முடிகிறதா என்ன? ஜோன் போல் சார்த், சீமோன் து புவா, மிஷல் ஃபூக்கோ, ரோலோன்ட் பாத், பிரான்சுவா த்ரூபோ, கொடார்ட் என மாபெரும் சிந்தனையாளர்களும் கலைஞர்களும் அப்போது இங்கே வாழ்ந்துகொண்டிருந்தார்கள். 1977-ல் பிரான்ஸின் அதிபராகயிருந்த கிஸ்கார்ட் தன்னுடைய இளம் வயதில், ஹிட்லரின் நாஸிப் படைகளை எதிர்த்துத் தீரமாகப் போராடியவர். இந்த மாமனிதர்கள் எல்லாம் வாழ்ந்த காலத்தில் இரத்த மரச் சிற்பம் எப்படி இயங்கியிருக்க முடியும்? எனவே, அனபெல் அம்மையார் ஏதோ நினைவுத் தடுமாற்றத்தில் பேசுகிறார் என்றே நான் முடிவெடுத்தேன். ஆனாலும், ஏதோ ஒன்று என்னை உந்தித் தள்ள, அனபெல் அம்மையாரிடம் “யாரின் தலை வெட்டப்பட்டது?” என்றொரு குறுக்குக் கேள்வியைக் கேட்டேன். இப்போது அவரது நினைவுத் தடுமாற்றம் தெளிந்துவிடும். “ஹமிடா என்ற இருபத்தேழு வயது மனிதனைத்தான் கொன்றார்கள். அவனது குடும்பப் பெயர் ஜோண்டூபி” என்று அதே உணர்ச்சியற்ற குரலில் அனபெல் சொன்னார். அனபெல் சொல்வதை இப்போது என்னால் எப்படி நம்பாமல் இருக்க முடியும்! கொல்லப்பட்டவரின் குடும்பப் பெயர் முதற்கொண்டு தேதி, நேரத்துடன் சொல்கிறாரே. ஆனாலும், எனது சந்தேகம் முழுவதுமாகத் தீர்ந்ததாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் பிரெஞ்சு வரலாறு, பிரெஞ்சுப் பண்பாடு போன்றவற்றின் மீதான எனது தீவிர வாசிப்பில் எனக்கு இன்னும் நம்பிக்கையிருந்தது. எனவே நான் அனபெல்லிடம் “இதெல்லாம் எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று கேட்டேன். சற்று நேரம் மவுனமாக இருந்த அனபெல் பரிசாரகரை அழைத்து இன்னொரு கோப்பை மது கேட்டார். மது வந்ததும் ஒரே மடக்கில் குடித்துவிட்டுப் பேசத் தொடங்கினார். அவர் பேசப் பேச நான் அவரை முழுமையாக நம்பத் தொடங்கினேன். நான் எந்தக் குறுக்கீடும் செய்யாமல் அவர் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தேன். அதே உணர்ச்சியற்ற குரலில் மிகத் தட்டையான பாவங்களோடு அனபெல் சொன்னார்: “ஹமிடா எங்களது வீட்டு மாடியறையில் சில காலம் தங்கியிருந்தான். எனக்கு அப்போது பதினான்கு அல்லது பதினைந்து வயதிருக்கும். அவன் துனிஷியன். தன்னுடைய பத்தொன்பதாவது வயதில் வேலை தேடி இந்த நகரத்திற்குக் கப்பலில் வந்திறங்கியவன். அவனுக்கு மரங்கள் வெட்டும் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. செபஸ்டியனும் அதே தொழிற்சாலையில்தான் வேலை செய்துகொண்டிருந்தார் -செபஸ்டியன் என்பது எனது அப்பா. சிறுவயதிலிருந்தே பெயர் சொல்லித்தான் நான் அவரை அழைப்பேன்- செபஸ்டியனுக்கு ஹமிடாவைப் பிடித்திருந்தது. ‘ஹமிடா புத்திசாலிப் பையன், கடுமையான உழைப்பாளி’ என்றெல்லாம் அடிக்கடி சொல்வார். இந்தப் பழக்கத்தில்தான் அவன் எங்களது மாடியறையில் வாடகைக்குக் குடியேறினான். அந்தக் காலத்தில் இந்த நகரத்திலிருந்த இளைஞர்களிலெல்லாம் பேரழகன் ஹமிடாவே என்று யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். கன்னங்கரேலென்ற சுருட்டை முடி. அகலமான நெற்றி. புன்னகைக்கும் ப்ரவுண் நிறக் கண்கள். கற்சிற்பம் போலக் கடைந்தெடுத்த உடல்வாகு. மென்மையாகவும் இனிமையாகவும் பேசி யாரை வேண்டுமானாலும் வசியம் செய்யக்கூடியவன். அவன் எங்கள் வீட்டில் தங்கியிருந்த காலத்தில்தான், அந்த மோசமான விபத்து நடந்தது. தொழிற்சாலையில் வண்டியொன்றின் சக்கரத்திற்கு அடியில் ஹமிடாவின் வலது கால் சிக்கிக்கொண்டது. அவனது வலது கால் தொடைக்குக் கீழே முற்றாகத் துண்டிக்கப்பட்டுவிட்டது என்று செபஸ்டியன் என்னிடம் சொன்னபோது, நான் நாள் முழுவதும் அழுதவாறேயிருந்தேன். ஹமிடா நீண்ட காலம் மருத்துவமனையில் இருந்தான். அங்கே சந்தித்த ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டு அவளுடனேயே வசிக்கச் சென்றுவிட்டான். அந்தப் பெண்ணைக் கொலை செய்ததற்காகத்தான் அவனைக் கைது செய்தார்கள். அவன் கைதாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அவனை வீதியில் தற்செயலாகப் பார்த்தேன். செயற்கைக் கால் அணிந்திருந்ததால் கொஞ்சம் தடுமாறித்தான் நடந்தான். ‘அதே முகவரியில்தானே வசிக்கிறாய் அனபெல்?’ என்று கேட்டான். ‘ஆம்’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அதுதான் நான் அவனைக் கடைசியாகப் பார்த்தது. அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட நாளன்று செபஸ்டியன் நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தார். வீட்டுக்குத் திரும்பி வந்ததும், யாரிடமும் எதுவும் பேசாமல் குடிக்கத் தொடங்கினார். நாள் முழுவதும் குடித்துக்கொண்டேயிருந்தார்…” நான் பொறுமையிழந்து குறுக்கிட்டேன். “ஆனால், அந்த மனிதனை கில்லட்டினில்தான் வெட்டினார்களா அனபெல்?” ‘ஆம்’ என்பது போல அனபெல் தலையசைத்தார். நான் கண்களை மூடி அந்த மனிதன் மரச் சிற்பத்தில் படுக்க வைக்கப்பட்டு வெட்டப்படும் காட்சியைக் கற்பனை செய்ய முயற்சித்தேன். அவனுடைய செயற்கைக் காலை என்ன செய்திருப்பார்கள்? அந்த மனிதனுடைய கடைசி நிமிடம் எதுவாக இருந்தது? ‘என்ன யோசிக்கிறாய்?’ என்பது போல அனபெல் என்னைப் பார்த்தார். மனதில் இருந்ததைச் சொன்னேன். பின்பு இருவரும் மவுனமாக இருந்தோம். அடுத்த கோப்பை மது வந்ததும், அனபெல் ஒரே மடக்கில் கோப்பையைக் காலி செய்துவிட்டு “நான் அதை உனக்குச் சொல்கிறேன்” என்றார். உணர்ச்சியற்ற அதே வறட்டுக் குரல்! 2 1977 செம்டம்பர் 9-ம் தேதியன்று, மரணதண்டனைக் குற்றவாளியின் கருணை மனுவை பிரான்ஸின் அதிபர் கிஸ்கார்ட் நிராகரித்தார். அன்று பிற்பகல் மூன்று மணிக்கு விசாரணை நீதிபதியான திருமதி. மொனிக் மாபெலிக்குச் சிறைச்சாலைத் தலைவரிடமிருந்து ஒரு தகவல் கிடைத்தது. அடுத்த நாள் விடிகாலையில் திருமதி. மாபெலியின் முன்னிலையில் குற்றவாளியின் தலை மரச் சிற்பத்தின் ஆசனவாய்க்குள் திணிக்கப்படவுள்ளது. மாபெலியைச் சிறைக்கு அழைத்துச் செல்வதற்காக வண்டியொன்று அதிகாலை நான்கு மணிக்கு மாபெலியின் வீட்டுக்கு வரும். இந்தத் தகவலைக் கேட்டதும் திருமதி. மாபெலி இலேசாகச் சஞ்சலமடைந்தார். குற்றவாளியின் முகம் அவரது மனதில் தோன்றி அவருக்கு ஒருவிதப் பதற்றத்தைக் கொடுத்தது. தனது மகன் ரெமியை விடக் குற்றவாளி ஒரு வயது மட்டுமே இளையவன் என்ற ஞாபகம் அவரது மூளையில் சிரங்கு போல பரவிக்கொண்டிருந்தது. வழக்கு விசாரணைகள் முடிவுற்றுத் தீர்ப்பு வழங்கும் நேரம் வந்தபோது, குற்றவாளியின் வழக்கறிஞரான ஜோன் குடாரோ “மோசமான விபத்தில் தன்னுடைய காலை இழந்ததிலிருந்து ஹமிடா ஜோண்டூபி அதிர்ச்சியால் மனச் சமநிலை குழம்பிப் போய்விட்டார். எனவே மாண்புமிகு நீதிபதி கருணையுடன் இந்த அங்கவீனரை அணுகிக் குறைந்தபட்சத் தண்டனையே வழங்க வேண்டும்” எனக் கோரியது மீண்டும் இப்போது நீதிபதி மாபெலியின் காதுகளில் ஒலிக்கிறது. ஆனால், நடக்கவிருக்கும் இரத்தச் சடங்கிலிருந்து மாபெலியால் தப்பிக்கவே முடியாது. நாளை விடிந்ததும் நடைபெறப் போகும் நிகழ்வில் சட்டப்படி அவர் இருந்தே ஆகவேண்டும். மாலை ஏழுமணிக்கு திருமதி. மாபெலி தனது தோழி பஸ்ரியானாவுடன் திரையரங்குக்குச் சென்று திரைப்படமொன்றைப் பார்த்தார். திரைப்படம் முடிந்ததும் பஸ்ரியானாவின் வீட்டுக்குச் சென்றார். தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிச் செல்வதை நினைத்தாலே அவருக்குப் பதற்றமாகியது. அதிகாலை நான்கு மணிக்கு அவரைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல வாகனம் வரவிருக்கிறது. எனவே “நாங்கள் இன்னொரு திரைப்படம் பார்க்கலாமா?” என்று பஸ்ரியானாவிடம் மாபெலி கேட்டார். தோழிகள் இருவரும் நொறுக்குத் தீனிகளைத் தின்றவாறே தொலைக்காட்சியில் ஒரு படத்தைப் பார்த்தார்கள். அந்தப் படம் முடியும்போது, அதிகாலை ஒரு மணியாகிவிட்டது. மாபெலி சேர்வாகத் தனது வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணியாகிவிட்டது. அவரால் உறங்கவே முடியவில்லை. மூன்றரை மணிக்குக் கட்டிலை விட்டு எழுந்து தயாராகி, உத்தியோக உடைகளை அணிந்துகொண்டார். அன்றைக்குக் கடிகார முள் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருப்பதாக உணர்ந்தார். சரியாக அதிகாலை நான்கு மணிக்கு அவரது வீட்டுக்குக் கார் வந்தது. மாபெலி காரில் ஏறி அமர்ந்துகொண்டார். காருக்குள் சாரதியோடு ஓர் அதிகாரி முன்னிருக்கையில் அமர்ந்திருந்தார். யாரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. அந்த வாகனம் ‘பூமெற்ஸ்’ சிறைச்சாலையை நோக்கி விரைந்தது. மாபெலி சிறைச்சாலையைச் சென்றடைந்தபோது, அவரை எதிர்பார்த்து எல்லோரும் தயாராக நின்றிருந்தார்கள். அங்கே ஓர் அணி உருவானது. அந்த அணியில் மாபெலி, அட்டர்னி ஜெனரல், குற்றவாளியின் வழக்கறிஞர், சிறையதிகாரிகள், காவலர்கள், மரச் சிற்பத்தை இயக்குபவர்கள், மதக் கடமையை நிறைவேற்றி வைக்கும் இமாம் என முப்பது பேர் இருந்தார்கள். அவர்கள் மரச் சிற்பம் வைக்கப்பட்டிருக்கும் பகுதியை நோக்கி ஊர்வலமாக நடந்துபோனார்கள். இந்தச் சடங்கில் கலந்துகொள்பவர்களின் காலடிகள் தரையில் பதியாமலிருக்க பழுப்பு நிறக் கம்பளங்கள் பாதையில் விரிக்கப்பட்டிருந்தன. வழியில் ஒரு மூலையில் நாற்காலியொன்று இருந்தது. அங்கே மாபெலியும் இன்னும் சிலரும் நின்றுவிட, மற்றவர்கள் குற்றவாளியை அழைத்துவரச் சென்றார்கள். அவர்களோடு இமாமும் போனார். “குற்றவாளி படுத்திருக்கிறார்… ஆனால், தூங்கவில்லை” என்று ஓர் அதிகாரி மாபெலியிடம் தெரிவித்தார். இரண்டு நிமிடங்கள் கழித்து “குற்றவாளி இப்போது மரத்தாலான தனது செயற்கைக் காலைப் பொருத்திக்கொண்டிருக்கிறார்” என்று இன்னொரு அதிகாரி சொன்னார். அந்தப் பழுப்பு நிறத் கம்பளங்களில் கால்களை மெதுவாக வைத்துக் குற்றவாளி நடந்துவந்தார். அவரது கைகளில் முன்புறமாக விலங்குகள் மாட்டப்பட்டிருந்தன. மாபெலியைக் கண்டதும் குற்றவாளி மெல்லிய புன்னகையுடன் மாபெலியின் கண்களைப் பார்த்தார். மாபெலி தனது கையிலிருந்த ஆவணங்களைச் சரி பார்ப்பது போல பாவனை செய்து கண்களைத் தாழ்த்திக்கொண்டார். மாபெலிக்கு அருகிலிருந்த நாற்காலியில் குற்றவாளி உட்காரவைக்கப்பட்டார். குற்றவாளி நிதானமான குரலில் “எனக்கு ஒரு சிகரெட் வேண்டும்” என்றார். ஒரு காவலர் குற்றவாளியின் உதடுகளில் சிகரெட்டைப் பொருத்திப் பற்ற வைத்தார். குற்றவாளி நிதானமாகப் புகையை ஓர் இழுப்பு இழுத்துவிட்டு, விலங்கிடப்பட்ட தனது கையை உயர்த்தி வாயிலிருந்த சிகரெட்டை எடுத்துக்கொண்டே “இந்தக் கைவிலங்கு மிகவும் இறுக்கமாக இருக்கிறது” என்றார். கைவிலங்கைத் தளர்த்திப் பூட்டுவதற்கு ஒரு காவலர் முயற்சித்தார். மரச் சிற்பத்தை இயக்கவிருக்கும் சார்ல் செவாலியரும் அவரது உதவியாளரான இளைஞரும் அப்போது குற்றவாளிக்கு வலதுபுறத்தில் நின்றிருந்தார்கள். கை விலங்கைத் தளர்த்தும் காவலரின் முயற்சி வெற்றியளிக்காததால், விலங்கை அகற்றிவிட்டுக் குற்றவாளியின் கைகளைக் கயிற்றால் பிணைப்பதற்குத் தீர்மானித்தார்கள். குற்றவாளியின் கைவிலங்கு அகற்றப்பட்டதும் சார்ல் செவாலியர் குற்றவாளியின் தோளைத் தட்டிக்கொடுத்து “பார் தம்பி… இப்போது நீ சுதந்திரமாக இருக்கிறாய்” என்று சொன்னபோது, மாவெலி திடுக்குற்றுப் போனார். அவர் ஓரக் கண்ணால் குற்றவாளியைப் பார்த்தார். குற்றவாளி எதையோ யோசித்தவாறு அமைதியாக உட்கார்ந்திருந்தார். ஒருவேளை அவர் பிறந்து வளர்ந்த துனிஷியா நாட்டை அவர் நினைத்திருக்கக் கூடும். தன்னுடைய பால்ய வயது ஞாபகங்களை மீட்டிப் பார்த்திருக்கக் கூடும். தான் கடந்துவந்த மெடிட்டரேனியன் கடலை அவர் நினைத்திருக்கக் கூடும். தன்னால் கொல்லப்பட்ட தனது முன்னாள் காதலியைக் கூட அவர் நினைத்திருக்கலாம். குற்றவாளியின் கைகள் சில நிமிடங்களுக்குப் பிணைக்கப்படாமல் இருந்தன. அவர் புகைத்துக்கொண்டிருந்த சிகரெட் முற்றாக எரிந்து முடிந்துவிட்டது. குற்றவாளி இன்னொரு சிகரெட் கேட்டபோது, அவருக்கு அது வழங்கப்பட்டது. அவர் இப்போது முடிந்தளவுக்கு மெதுவாகப் புகையை இழுத்தார். இனித் தப்பிக்க முடியாது. அந்த சிகரெட் முடியும்போது, அவரது வாழ்க்கையும் முடியவிருக்கிறது. நிலமையின் தீவிரத்தை இப்போதுதான் உணர்ந்தது போல குற்றவாளியின் முகம் இறுகிக்கொண்டே வந்தது. இந்த சிகரெட் எவ்வளவு நேரத்திற்குத்தான் எரியும் என்று மாபெலி நினைத்துக்கொண்டார். குற்றவாளி தனது வழக்கறிஞரைத் தனக்கருகே அழைத்துப் பேசினார். கிசுகிசுப்பான குரல்களிலேயே குற்றவாளியும் வழக்கறிஞரும் பேசிக்கொண்டார்கள். அவர்கள் பேசி முடித்தபோது, குற்றவாளியின் இரண்டாவது சிகரெட்டும் முழுவதுமாக முடிந்திருந்தது. குற்றவாளி அந்த நாற்காலியில் அமர்ந்து கால் மணி நேரம் ஆகிவிட்டது. அப்போது இளைஞரான ஒரு காவலர் தனது கைகளில் ஒரு குடுவையோடும் அழகிய கண்ணாடிக் கோப்பையுடனும் வந்து “நீ சிறிது ரம் அருந்த விரும்புகிறாயா?” என்று குற்றவாளியிடம் கேட்டார். ‘ஆம்’ என்பதுபோலக் குற்றவாளி மெதுவாகத் தலையசைத்தார். அந்தக் காவலர் கண்ணாடிக் கோப்பையில் பாதியளவுக்கு மதுவை ஊற்றிக் குற்றவாளியிடம் கொடுத்தார். குற்றவாளி மிக மிக மெதுவாக மதுவை உறிஞ்சி மிடறு மிடறாகக் குடித்தார். அவர் மதுவை அனுபவித்துக் குடிப்பது போன்று பாவனை செய்கிறார் என்பது மாபெலிக்குப் புரிந்தது. உண்மையில், குற்றவாளி தான் உயிருடன் இருக்கும் நேரத்தை நீடிக்கவே விரும்புகிறார். உயிரோடு இருப்பதற்கு மேலதிகமாக ஒரேயொரு விநாடி கிடைத்தால் கூட அந்த விநாடியையும் அவர் வாழ்ந்துவிட ஆசைப்படுகிறார் என்பது அங்கிருந்த எல்லோருக்கும் தெளிவாகவே புரிந்தது. நேரத்தை நீட்டிக்கும் முயற்சியில் குற்றவாளி என்னவெல்லாமோ செய்தார். தனது வழக்கறிஞரிடம் மீண்டும் பேசினார். வழக்கறிஞரிடமிருந்து ஒரு தாளை வாங்கிப் படித்துவிட்டு, அதைச் சுக்குநூறாகக் கிழித்து ஒரு சிறையதிகாரியிடம் கொடுத்து “தயவு செய்து குப்பையில் போடுங்கள்” என்றார். அந்த அதிகாரி குப்பையை வாங்கித் தனது காற்சட்டைப் பைக்குள் திணித்துக்கொண்டார். அந்த அதிகாரியிடம் “சிறையறையில் இருக்கும் என்னுடைய புத்தகங்களை என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று குற்றவாளி கேட்டார். “சட்டப்படி நடந்துகொள்வோம்” என்றார் அந்த அதிகாரி. அப்போது, குற்றவாளி இமாமைத் தனக்கருகில் அழைத்தார். இமாம் அரபு மொழியில் ஏதோ சொல்ல, குற்றவாளியும் ஏதோ சொன்னார். அப்போது மாபெலிக்கு அருகில் நின்றிருந்த அதிகாரி ஒருவர் “தன்னை ஹலால் முறையில் வெட்டுமாறு கேட்கிறானா அவன்” என்று எரிச்சலோடு முணுமுணுத்தது மாபெலிக்குத் தெளிவாகவே கேட்டது. மாபெலி சடாரெனத் திரும்பி அந்த அதிகாரியைப் பார்க்க, அந்த அதிகாரி அசட்டுத்தனமான இளிப்புடன் கண்களைத் தாழ்த்திக்கொண்டார். கண்ணாடிக் கோப்பையில் இப்போது ஒரு மிடறு மதுதான் எஞ்சியிருக்கிறது. அதைக் குடித்துவிட்டால் தனது வாழ்க்கை முடிந்துவிடும் என்பது குற்றவாளிக்கும் தெரியும். எனவே, குற்றவாளி தனது கடைசி முயற்சியைச் செய்தார். தனக்கு இன்னொரு சிகரெட் கொடுக்குமாறு மிகவும் பணிவாகவும் நிதானமாகவும் கேட்டார். ஒரு காவலர் இன்னொரு சிகரெட்டைக் குற்றவாளிக்கு வழங்க எத்தனித்தபோது, மரச் சிற்பத்தை இயக்கவிருக்கும் சார்ல் செவாலியர் குறுக்கிட்டார். அவர் தனது பொறுமையை இழக்கத் தொடங்கியிருந்தார். “இந்த மனிதனிடம் நாங்கள் ஏற்கனவே மிகவும் அன்பாகவும் கருணையாகவும் அளவுக்கு மிஞ்சிய மனிதாபிமானத்துடனும் நடந்துகொண்டிருக்கிறோம். இப்போது அவற்றுக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று அவர் சொன்னதும், அட்டர்னி ஜெனரல் தலையிட்டு சிகரெட் வழங்கப்படுவதைத் தடுத்து நிறுத்திவிட்டார். குற்றவாளி பணிவான குரலில் மறுபடியும் கேட்டார்: “எனது கடைசிச் சிகரெட்டைத் தாருங்கள்” அந்தக் குரல் மாபெலியின் இருதயத்தை நன்னியது. குற்றவாளி தெளிவான மனநிலையில் இருக்கிறார் என்பதில் மாபெலிக்கு எந்தச் சந்தேகமுமில்லை. இன்னொரு சிகரெட் புகைப்பதன் மூலம் மரச் சிற்பத்தில் படுப்பதை இரண்டு நிமிடங்கள் தாமதப்படுத்துவதைத் தவிர தன்னால் வேறெதுவும் செய்துவிட முடியாது என்பது குற்றவாளிக்குத் தெளிவாகப் புரிந்திருக்கிறது. உண்மையில், படுக்கைக்குச் செல்வதைத் தாமதப்படுத்த எல்லா வழிகளையும் பயன்படுத்தும் குழந்தையைப் போலத்தான் குற்றவாளியும் கில்லட்டின் படுக்கைக்குச் செல்வதைத் தாமதப்படுத்த எல்லா வழிகளிலும் முயன்றார். குற்றவாளி நாற்காலியில் அமர்ந்து இருபது நிமிடங்களாகிவிட்டன. இனியும் தாமதிக்க முடியாது என்பது போல குற்றவாளியைத் தவிர மற்ற எல்லோருமே ஆளை ஆள் பார்த்துக்கொண்டார்கள். கண்ணாடிக் கோப்பையிலிருந்த கடைசி மிடறு மதுவைக் குடிக்குமாறு ஓர் அதிகாரி குற்றவாளியை ஊக்கப்படுத்தினார். குற்றவாளி அதிகாரியின் கண்களை உற்றுப் பார்த்துவிட்டு, கண்ணாடிக் கோப்பையைக் கவிழ்த்து, கடைசி மிடறு மதுவை நிலத்தில் ஊற்றினார். ஒரு நிமிடம் அங்கே உண்மையான அமைதி நிலவியது. யாரும் எதுவுமே பேசவில்லை. குற்றவாளிக்கு இடது புறம் நின்றிருந்த மாபெலிதான் மவுனத்தைக் கலைத்தார். “நேரமாகிறது” என்று சிறையதிகாரியிடம் சொன்னார். நாற்காலியில் அமர்ந்திருந்த குற்றவாளியின் தோள்களை இரண்டு காவலர்கள் தங்களது வலுவான கைகளால் பற்றிப்பிடித்து, குற்றவாளியின் உடலைச் சற்றே இடது பக்கமாக மாபெலி நின்றிருந்த திசைக்குத் திருப்பினார்கள். உடனேயே வலது பக்கத்திலிருந்த சார்ல் செவாலியரும் அவரது உதவியாளரும் குற்றவாளியின் கைகளை ஆளுக்கொன்றாகப் பற்றிக் குற்றவாளியின் முதுகுக்குப் பின்புறமாக இழுத்துவைத்துக் கயிற்றால் கட்டத் தொடங்கினார்கள். அப்போது குற்றவாளியின் கண்கள் மாபெலியின் கண்களின் மீதிருந்தன. குற்றவாளியின் கண்களில் தெரிந்தது வேதனையா, இறைஞ்சுதலா, வெறுப்பா, ஆத்திரமா, குற்றவுணர்ச்சியா அல்லது இவை எல்லாமே அந்த ப்ரவுண் நிறக் கண்களில் இருந்தனவா என்பதை மாபெலியால் கண்டுபிடிக்க முடியவில்லை. கைகளைக் கட்டுவதற்குப் பதிலாகக் குற்றவாளியின் கண்களைக் கட்டிவிட்டால், தான் தப்பித்துக்கொள்ளலாம் எனக் குழந்தைத்தனமாக திருமதி. மாபெலி நினைத்துக்கொண்டார். குற்றவாளியின் கைகள் கட்டப்பட்டதும், சார்ல் செவாலியரின் உதவியாளர் ஒரு கத்தரிக்கோலை எடுத்து, குற்றவாளி அணிந்திருந்த சிறைச் சீருடையின் கழுத்துப் பகுதியை வெட்டத் தொடங்கினார். ஆனால், அவர் கோணல்மாணலாக அந்த நீலநிறச் சீருடையை வெட்டும்போது, கத்தரிக்கோலின் நுனி குற்றவாளியின் கழுத்துப் பகுதியில் குத்தி ஒரு சொட்டு இரத்தம் சிகப்பு மாணிக்கக் கல் போன்று குற்றவாளியின் பின்கழுத்தில் முகிழ்த்தது. அதைக் கண்டதும் குற்றவாளியைத் தவிர அங்கிருந்த எல்லோருமே பதறிப்போனார்கள். மாபெலி ‘அய்யோ’ என்று தன்னையறியாமலேயே சத்தம் போட்டுவிட்டார். சார்ல் செவாலியர் பாய்ந்து சென்று உதவியாளரிடமிருந்து கத்தரிக்கோலைப் பிடுங்கிக்கொண்டு “பன்றியே! உன்னால் ஒரு வேலையையும் சரிவரச் செய்ய முடியாதா? என்னுடைய வேலைக்கு உலை வைக்கவா பார்க்கிறாய் பைத்தியகாரப் பயலே” என அடங்கிய குரலில் உதவியாளரைத் திட்டினார். குற்றவாளி அப்போது அசையாமல் இருந்தார். சார்ல் செவாலியர் நீலநிறச் சீருடையின் கழுத்துப் பகுதியை இலாவகமாக வெட்டி எடுத்தார். இப்போது குற்றவாளியை எழுந்து நிற்குமாறு உத்தரவு பிறந்தது. குற்றவாளி மெதுவாக எழுந்து நின்று தலையைக் கவிழ்ந்து பூமியைப் பார்க்கிறார். அவர் இந்தப் பூமியில் எதை விட்டுச் செல்கிறார்? ஒரு மிடறு மதுவா? நாற்காலிக்கு அருகிலிருந்த ஒற்றைக் கதவு திறக்கப்பட்டது. குற்றவாளியை அழைத்துக்கொண்டு இந்த ஊர்வலம் மரச் சிற்பத்தை நோக்கிச் சென்றது. சிறையின் உள் முற்றத்தில் மரச் சிற்பம் நிமிர்ந்து நிற்கிறது. குற்றவாளி அதைப் பார்ப்பதைத் தவிர்ப்பதற்காகக் கண்களை ஆகாயத்தை நோக்கி உயர்த்தினார். தனது கடைசிக் காட்சி ஆகாயமாக இருக்க வேண்டும் என்றுகூட அவர் விரும்பியிருக்கலாம். ஆனால், அந்தச் சிறை முற்றத்தில் கறுப்புத் திரை கட்டி ஆகாயம் மறைக்கப்பட்டிருந்தது. ஹெலிகொப்டரிலிருந்து யாராவது மரணதண்டனைக் காட்சியைப் படம் பிடிக்கலாம் என்பதால் ஆகாயத்தை மறைத்துவிட்டார்கள். சிறை முற்றத்தில் நிகழவிருப்பதை ஒரு சிறு பறவையால் கூடக் காண முடியாது. சார்ல் செவாலியர் ஒரு சிறிய செங்கம்பளத்தை எடுத்துவந்து திருமதி. மாபெலிக்கு முன்னால் தரையில் விரித்தார். குற்றவாளியின் செயற்கைக் காலை சார்ல் செவாலியரின் உதவியாளர் கழற்றி எடுத்தார். இப்போது குற்றவாளி நகரத் தொடங்கினார். கைகள் பின்புறமாக இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்த நிலையில், அவர் ஒற்றைக் காலால் துள்ளித் துள்ளிச் சென்று மரச் சிற்பப் பீடத்தில் தட்டுத் தடுமாறி ஏறிக் குப்புறப் படுத்துக்கொண்டார். அவர் இன்னொரு சிகரெட்டோ, குடி தண்ணீரோ கேட்டுவிடக் கூடாது என்று மாபெலி கடவுளை வேண்டிக்கொண்டார். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அங்கிருந்து அகன்றுவிடவே மாபெலி விரும்பினார். மரச் சிற்பம் உயிர்த்து அசைந்தபோது, அதன் ஆசனவாயிலிருந்து இரத்தம் பெருக்கெடுத்து வழிந்தது. வேறு வழியில்லை… இப்போது திருமதி. மாபெலி அந்த அழுக்குக் கூடையைப் பார்வையிட்டு அதனுள்ளே ஒரு தலை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சார்ல் செவாலியர் அந்தக் கூடையைத் தூக்கிக்கொண்டு வந்து மாபெலியிடமும், அட்டர்னி ஜெனரலிடமும் காண்பித்தார். பின்பு, கூடையிலிருந்து தலையை எடுத்துச் சென்று, செங்கம்பளத்தில் மெதுவாக வைத்தார். அவரின் உதவியாளார் குற்றவாளியின் செயற்கைக் காலை எடுத்துவந்து அந்தத் தலையின் அருகே வைத்தார். ஒரு மனித முகம் காலில் முளைத்திருப்பது போல அது இருந்தது. 3 இதைப் படிக்கும் உங்களாலேயே அனபெல் அம்மையாரின் கடைசி வார்த்தைகளிலிருந்து மீள முடியவில்லையென்றால், இதையெல்லாம் நேரிலே கேட்டுக்கொண்டிருந்த என்னுடைய மனம் என்ன நிலையில் இருந்திருக்கும் என்று சற்றுக் கற்பனை செய்து பாருங்கள். அதேவேளையில், இந்தக் கதையெல்லாம் அனபெல் அம்மையாருக்கு எப்படி இவ்வளவு துல்லியமாகத் தெரிந்திருக்கிறது என்ற குழப்பமும் என்னுள் எழுந்தது. இதுவொரு கற்பனைக் கதையாக இருந்தால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும் என்று என்னுடைய மனது தவிக்காமலில்லை. நான் அனபெல்லிடம் அதைக் கேட்டேவிட்டேன். “இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?” அனபெல் அதே உணர்ச்சியற்ற குரலில் சொன்னார்: “நீதிபதி மாபெலி அன்று அதிகாலை 5.10 மணிக்குத் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பினார். எழுதும் மேசையின் முன்னே உடனேயே உட்கார்ந்து, இரண்டு வெள்ளைத் தாள்களில் இதையெல்லாம் எழுதினார். எழுதிய தாள்களை எடுத்து மடித்து ஒரு கடித உறையினுள் வைத்து மூடி ஒட்டினார். அந்தக் கடித உறையைத் தனது மகன் ரெமியிடம் கொடுத்து, தன்னுடைய மரணத்தின் பின்பாக அதை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிடுமாறு சொன்னார். திருமதி. மாபெலி இறந்ததற்குப் பின்பாக அந்தக் கடித உறை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்பு, எப்படியோ அந்த இரண்டு தாள்களும் ஒரு பத்திரிகையில் பிரசுரமாகின. கலங்கரைவிளக்கத்திற்குப் பக்கத்திலுள்ள குப்பைத் தொட்டியிலிருந்து அந்தப் பத்திரிகையை நான் கண்டெடுத்தேன். அப்போது திடீரென ஒரு கேள்வி என்னுடைய மனதில் எழுந்தது. உடனடியாகவே அந்தக் கேள்வியை அனபெல்லிடம் கேட்டேன்: “தனது மரணத்திற்குப் பின்பு வெளியிடுவற்காக நீதிபதி. மாபெலி எழுதியது போலவே, தனது மரணத்திற்குப் பின்பு வெளியிடுவதற்காகக் குற்றவாளியும் எதையாவது எழுதி யாரிடமாவது கொடுத்து வைத்திருக்கலாமல்லவா?” அப்போது பரிசாரகர் மதுக் கோப்பையைக் கொண்டுவந்து அனபெல் முன்னால் வைத்தார். அனபெல் எதுவும் பேசாமல் அந்தக் கோப்பையை எடுத்துப் பொறுமையாக அருந்திக்கொண்டிருந்தார். அவர் அருந்தும் விதத்தைப் பார்த்தால், இந்த ஒரு கோப்பை மதுவை தனது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அவர் மிடறு மிடறாகக் குடித்துக்கொண்டேயிருப்பார் என்றே எனக்குத் தோன்றியது. (இமிழ் – மார்ச் 2024) https://www.shobasakthi.com/shobasakthi/2024/05/06/மரச்-சிற்பம்/1 point- கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
1 point- கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
குழப்பம் விளக்கம் தரலால், குழப்பம் உயிரிலும் ஓம்பப்படும். இனிய இரவாகட்டும்.1 point- சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சவுக்கு சங்கர் தான் இலங்கைக்கு கஞ்சா கடத்துபவர் என்று புதிய வழக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 😂1 point- கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
1 point- சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
பல் என்று சொல்கிறீர்கள் போலுள்ளது ....... அதை நான் ஆமோதிக்கிறேன்......! 😁1 point- சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
1 point- வாழும் போதே கொண்டாடுவோம்.
1 pointஹீ .....ஹீ ....... தன்னடக்கம் சொல்வதற்குத் தடுக்கின்றது........! 😁1 point- அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
எனக்கு இந்த கட்டுமான விடயங்களில் சீனாவை பிடிக்கும்........ அவர்களுக்கு பாலம் செய்ய ஆறில் இருந்து 1 வருடம் மெத்த........! 😴1 point- "இன்றே இணைவோம் ஒற்றுமையாய்"
1 point"இன்றே இணைவோம் ஒற்றுமையாய்" "இன்றே இணைவோம் ஒற்றுமையாய் நாம் இழந்த உரிமைக்கு குரல் கொடுப்போம்! இளிச்ச வாய்கள் இனி வேண்டாம் இடித்து கூறுவோம் துணிந்து நிற்போம்!" "காட்டிக் கொடுத்து கோட்டை கட்டியது காலம் கடத்தி நீதி ஏமாற்றியது காவலனாக இருந்தே வேலி மேய்ந்தது காணும் இனி விலகி நில்!" "முரசு முழங்கு தானை மூவருங்கூடி அரசவை இருந்த தோற்றம் போலப் தமிழர் ஒன்றாய் கூடித் திரண்டால் சிறைகள் எங்கே வெற்றி எமதே! " [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] [முரசு முழங்கு தானை மூவருங்கூடி - வெற்றி முரசு முழங்கும் படையையும் உடைய மூவேந்தர்கள் ஒன்றாகக் கூடி]1 point- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
1 pointஐ.பி.எல். ப்ளே ஓவ் வாய்ப்பை உறுதிசெய்ய சன்ரைசர்ஸுக்கு ஒரு புள்ளியே தேவை 16 MAY, 2024 | 06:45 PM (நெவில் அன்தனி) பாரத தேசத்தில் நடைபெற்றுவரும் 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் ப்ளே ஓவ் வாய்ப்பை உறுதி செய்வதற்கு ஒரே ஒரு புள்ளி தேவைப்படும் பெட் கமின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இன்று இரவு தனது 13ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்தாடவுள்ளது. இன்றைய போட்டி ஒருவேளை மழையினால் கழுவப்பட்டால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு புளளியைப் பெற்று 15 புள்ளிகளுடன் ப்ளே ஓவ் சுற்றுக்குள் நுழைந்துவிடும். அல்லது போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும். எவ்வாறாயினும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு இன்னும் ஒரு போட்டி பஞ்சாப் கிங்ஸுடன் மீதம் இருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தனது சொந்த மைதானத்தில் இன்றைய போட்டியை எதிர்கொள்வதால் அவ்வணிக்கு அனுகூலமான முடிவு கிடைக்கும் என கருதப்படுகிறது. அதேவேளை, கொல்கத்தாவுடனான போட்டி மழையினால் முழுமையாக கைவிடப்பட்டதால் ப்ளே ஓவ் வாய்ப்பை முதலாவது அணியாக இழந்த குஜராத் டைட்டன்ஸ், தனது கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றியுடன் விடை பெற எதிர்பார்க்கிறது. இந்த இரண்டு அணிகளும் முதல் சுற்றில் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி சந்தித்துக்கொண்ட போது குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்களால் மிகவும் இலகுவாக வெற்றிபெற்றிருந்தது. இரண்டு அணிகளையும் ஒப்பிடும்போது ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல என்றே கூறத் தோன்றுகிறது. ஆனால், இன்றைய போட்டியில் எந்த அணி தவறுகள் இழைக்காமல் மிகவும் திறமையாக விளையாடுகிறதோ அந்த அணிக்கே வெற்றி கிடைக்கும். எவ்வாறாயினும் இந்தப் போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு தீர்மானம் மிக்க போட்டியாக அமைவதால் அவ்வணி வெற்றிபெறுவதற்கு கடுமையாக முயற்சிக்கும் என்பது உறுதி. https://www.virakesari.lk/article/183728 மழையால மச் நடக்காது போல, அப்ப சன்ரைசர்ஸ் பிளேஓவ் உறுதி!1 point- சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
காடெல்லாம் கஞ்சாவானால், அதில், கால் கிலோவை நான் இழுப்பேன்🤣 கை உடைந்து இந்த மாரி கட்டுப்போட்டால், கையை தூக்க கூடாது. அதுக்காகத்தான் இப்படி brace போடுவது. இப்ப பலர் கேட்க்கும் கேள்வி என்னவென்றால்…இந்தளவு முறிவோடு சவுக்கு எப்படி டி சேர்ட் போட்டார்? வழமையா இந்த காயம் உள்ளோர் பட்டன் சேர்ட் போடுவதுதான் வழக்கம்.1 point- "இன்றே இணைவோம் ஒற்றுமையாய்"
1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அரை இறுதிபோட்டியில் இந்தியா விளையாடுமென்றால் அப்போட்டி கயானாவில் தான் நடைபெறும் என ICC யின் அறிவிப்பு. இதனால் 72வது கேள்விக்குதான் இந்திய பதில் வரவேண்டும். 71 வது கேள்வியில் கேட்கப்பட்ட இடத்தில் இந்தியா விளையாடமாட்டினம்.1 point- 34 வயதில் பாட்டி ஆன இன்ஸ்டாகிராம் பிரபலம்.!
சிங்கப்பூரில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர், 34 வயதில் பாட்டி ஆகி இருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதத்தை எழுப்பியுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த உணவக உரிமையாளரான ஷிர்லி லிங் என்பவர், இன்ஸ்டாகிராமில் பல்வேறு வகையான வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர். கடந்த அன்னையர் தினத்தன்று இன்ஸ்டாவில் வாழ்த்து ஒன்றை பதிவிட்ட அவர், தனது 17 வயது மகனுக்கு குழந்தை பிறந்திருப்பதாக குறிப்பிட்டார். இளம்வயதில் பாட்டி ஆகி இருப்பதில் சாதகம் மற்றும் பாதக அம்சங்கள் இருப்பதாகவும், குடும்பத்தை பொறுப்புடன் நடத்துவது குறித்து மகனுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் அப்பெண் பதிவிட்டுள்ளார். மேலும், இளம்வயதில் தாயாவது பெரும் இன்னலை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்ட அவர், தனது மகனை கண்டிப்பதற்கு பதிலாக, பொறுப்புள்ள நபராக மாற்றுவதற்கு முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். ஷிர்லி லிங்கிற்கு 17 வயதில் முதல் திருமணம் ஆன நிலையில், 3 முறை மறுமணம் செய்த அவர், தற்போது 5 குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.இதில், முதல் திருமணத்தில் பிறந்த 17 வயது மகனுக்கு தான், கடந்தாண்டு திருமணமாகி தற்போது குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், இளம் வயதில் பாட்டி ஆன இன்ஸ்டா பிரபலம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். https://thinakkural.lk/article/3017631 point- முள்ளிவாய்க்கால் கஞ்சி : திருகோணமலையில் நால்வர் கைது
கஞ்சி காய்ச்சுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது மூதூர் நீதிமன்றம் - சட்டத்தரணி சுகாஷ் 16 MAY, 2024 | 05:13 PM (துரைநாயகம் சஞ்சீவன்) கஞ்சி காய்ச்சுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டிருந்த தடையை மூதூர் நீதிமன்றம் அகற்றியிருப்பதாக சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார். மூதூர் நீதிமன்றில், சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள நால்வருக்கு எதிரான வழக்கானது, நகர்த்தல் பத்திரத்தின் மூலம் வழக்கு விசாரணைக்காக நீதிபதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் இன்றைய தினம் (16) எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் எதிரிகளின் சார்பாக சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் முன்னிலையாகியிருந்தார். இதன்போது முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிபதி, இவ்வழக்கில் எதிரிகள் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள காரணத்தினால் அவர்கள் தொடர்பான அறிக்கையை துரிதமாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதுடன், மூதூர் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சுவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த தடையை அகற்றுவதாக கட்டளை பிறப்பித்திருக்கிறது. தென்னிலங்கையிலே பாற்சோறு கொடுப்பது சட்ட விரோதமாகாது என்றால் எவ்வாறு வடக்கு, கிழக்கிலே கஞ்சி கொடுப்பது சட்ட விரோதமாகும் என்பது போன்ற பல கேள்விகளை வாதங்களாக நீதிமன்றில் முன்வைத்ததாகவும் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார். அத்துடன் இந்த வழக்கில் எதிரிகள் சார்பாக பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் சட்டத்தரணிகள் தாமாகவே முன்னிலையாகியிருந்ததாகவும் இதற்காக அவர்களுக்கு தான் நன்றி கூறுவதாகவும் இந்த வழக்கானது தமிழ் - முஸ்லிம் இன ஒற்றுமைக்கு வலுச்சேர்க்கின்ற வழக்காக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக மாணவி உட்பட நான்கு பேர் சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் இவர்கள் மீது ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டு மறுநாள் திங்கட்கிழமை (13) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது நால்வருக்கும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து மன்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த நால்வரின் கைது தொடர்பில் சம்பூர் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் கண்டனங்கள் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/1837141 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆகா பையா இத்தனை நாளா கணக்கு போட்டு போட்டியில் குதித்துள்ளீர்கள். இலங்கை மேல ரொம்பவும் நம்பிக்கை போல இருக்கு. மறக்காமல் தாத்தாவையும் கொற இழுவையில் கொண்டு வாங்கோ.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பையா எனக்கு இந்தக் கேள்விக் கொத்தைப் பார்க்கவே தலை தானா சுத்துது......பிரியன் கூகுள் சீற்றால் பதிந்து இருக்கிறார் ..... எனக்கு அது கொஞ்சம் சிரமம்..... யாராவது சாதாரண கேள்விக் கொத்தில் பதியும்வரை பார்த்திருக்கிறேன்....... பின் நான் அதில் இருக்கும் அணிகளை அழித்து விட்டு எனது மண்டைக்குள் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து வைத்திருக்கும் அணிகளை இறக்கலாம் என்று இருக்கின்றேன்.......! 😂1 point- இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம்
வேற என்ன ரணிலுக்கு வாக்கு எந்தளவில் இருக்கு என்று நாடி பிடித்து பார்க்கத் தான்.1 point- முள்ளிவாய்க்கால் கஞ்சி : திருகோணமலையில் நால்வர் கைது
இது ரணிலை விழுத்தவென்றே யாரோ செய்த சதி. ரணில் தான் தமிழர்களிள் நண்பனாச்சே.1 point- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவிலுக்குள் மேற்சட்டையுடன் போக விட மாட்டார்கள். எனினும் விஹாரைக்கு வரும் ஆமிக்காரர் யூனிபோமுடன் உட் செல்வார்கள். ஐயரும் அவர்களுக்கு வரிசையை விலக்கி முன்னுரிமை அளிப்பதைக் கவனித்தேன். ஆனால் சப்பாத்து அணியவில்லை.1 point- ஆபத்தான தலைவலிகள் - எப்படி கண்டுபிடிப்பது??DANGEROUS HEADACHES - HOW TO IDENTIFY IT?? Dr Prabhu
1 point1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024 கேள்விக்கொத்து அதிகபட்ச புள்ளிகள் 208 போட்டி முடிவு திகதி வெள்ளி 31 மே 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA எதிர் CAN 🇺🇸🇺🇸🇺🇲🇺🇲🇺🇲 2) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பபுவா நியூகினி WI எதிர் PNG 🇯🇲🇬🇾🇹🇹🇧🇧 3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM எதிர் OMA 🇳🇦🇳🇦🇳🇦🇳🇦🇳🇦🇳🇦 4) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா SL எதிர் SA 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 5) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா AFG எதிர் UGA 🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫 6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ENG எதிர் SCOT 🏴🏴🏴🏴🏴🏴 7) முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து எதிர் நேபாளம் NED எதிர் NEP 🇳🇱🇳🇱🇳🇱🇳🇱🇳🇱🇳🇱 8 ) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் அயர்லாந்து IND எதிர் IRL 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 9) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி எதிர் உகண்டா PNG எதிர் UGA 🇵🇬🇵🇬🇵🇬🇵🇬🇵🇬🇵🇬🇵🇬 10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS எதிர் OMA 🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲 11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் USA எதிர் PAK 🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰 12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து NAM எதிர் SCOT 🏴🏴🏴🏴🏴🏴🏴 13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா எதிர் அயர்லாந்து CAN எதிர் IRL 🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪 14) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் NZ எதிர் AFG 🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 15) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா எதிர் பங்களாதேஷ் SL எதிர் BAN 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 16) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா NED எதிர் SA 🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦 17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS எதிர் ENG 🏴🏴🏴🏴🏴🏴🏴 18) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் உகண்டா WI எதிர் UGA 🇯🇲🇬🇾🇻🇨🇹🇹 19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND எதிர் PAK 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து OMA எதிர் SCOT 🏴🏴🏴🏴🏴🏴🏴 21) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் SA எதிர் BAN 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான் எதிர் கனடா PAK எதிர் CAN 🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰 23) முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா எதிர் நேபாளம் SL எதிர் NEP 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 24) முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா எதிர் நமீபியா AUS எதிர் NAM 🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲 25) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா எதிர் இந்தியா USA எதிர் IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 26) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் நியூஸிலாந்து WI எதிர் NZ 🇹🇹🇻🇨🇬🇾🇯🇲 27) முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து BAN எதிர் NED 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து எதிர் ஓமான் ENG எதிர் OMA 🏴🏴🏴🏴🏴🏴🏴🏴 29) முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான் எதிர் பபுவா நியூகினி AFG எதிர் PNG 🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫 30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா எதிர் அயர்லாந்து USA எதிர் IRL 🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲 31) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் SA எதிர் NEP 🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦 32) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் உகண்டா NZ எதிர் UGA 🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா எதிர் கனடா IND எதிர் CAN 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா எதிர் இங்கிலாந்து NAM எதிர் ENG 🏴🏴🏴🏴🏴🏴🏴 35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து AUS எதிர் SCOT 🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲 36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து PAK எதிர் IRL 🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰 37) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN எதிர் NEP 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 38) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா எதிர் நெதர்லாந்து SL எதிர் NED 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 39) முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் பபுவா நியூகினி NZ எதிர் PNG 🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 40) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் WI எதிர் AFG 🇹🇹🇻🇨🇬🇾🇯🇲 முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND ??🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 PAK ??🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰 CAN ?? IRL ?? USA ?? 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) #A2 - ? (1 புள்ளிகள்) IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 PAK 🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! CAN 🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦 முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG ?? 🏴🏴🏴🏴🏴🏴🏴 AUS ??🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 NAM ?? SCOT ?? OMA ?? 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) #B2 - ? (1 புள்ளிகள்) ENG 🏴🏴🏴🏴🏴🏴 AUS 🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ ??🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 WI ??🇯🇲🇬🇾🇻🇨🇹🇹 AFG ?? PNG ?? UGA ?? 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #C1 - ? (2 புள்ளிகள்) #C2 - ? (1 புள்ளிகள்) WI 🇬🇾🇻🇨🇹🇹🇯🇲 NZ 🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! UGA 🇺🇬🇺🇬🇺🇬🇺🇬🇺🇬 முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) SL ?? SA ?? BAN ?? NED ?? NEP ?? 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #D1 - ? (2 புள்ளிகள்) #D2 - ? (1 புள்ளிகள்) SL 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 SA 🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NEP 🇳🇵🇳🇵🇳🇵🇳🇵🇳🇵🇳🇵 சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1 A2 எதிர் D1 PAK SL 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 B1 எதிர் C2 ENG NZ 🏴🏴🏴🏴🏴🏴 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1 C1 எதிர் A1 IND WI 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2 B2 எதிர் D2 AUS SL 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1 B1 எதிர் D1 ENG SA 🏴🏴🏴🏴🏴🏴 58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2 A2 எதிர் C2 PAK NZ 🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2 A1 எதிர் D2 IND SA🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2 C1 எதிர் B2 WI AUS 🇬🇾🇯🇲🇹🇹🇻🇨 61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1 A2 எதிர் B1 PAK ENG 🏴🏴🏴🏴🏴🏴🏴 62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1 C2 எதிர் D1 NZ SL 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1 B2 எதிர் A1 AUS IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2 C1 எதிர் D2 WI SA 🇬🇾🇯🇲🇹🇹🇻🇨 சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) A1 B2 C1 D2 IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 WI 🇬🇾🇯🇲🇹🇹🇻🇨 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 1A - ? (3 புள்ளிகள்) #அணி 1B - ? (2 புள்ளிகள்) IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 WI 🇻🇨🇬🇾🇹🇹🇯🇲 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SA 🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦 சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) A2 B1 C2 D1 ENG 🏴🏴🏴🏴🏴🏴🏴 SL 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 2A - ? (2 புள்ளிகள்) #அணி 2B - ? (1 புள்ளிகள்) SL 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 ENG 🏴🏴🏴🏴🏴🏴 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PAK 🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰 அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்) ENG 🏴🏴🏴🏴🏴🏴🏴🏴 இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🏏 உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? CAN 🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Virat Kohli 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🏏🏏🏏🏏🏏🏏 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Jasprit Bumrah 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Travis Head 🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? AUS 🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Jasprit Bumrah 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Virat Kohli 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🏏🏏 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🥰............................................1 point- நாவினால் சுட்ட வடு( சிறுகதை)
1 pointநாவினால் சுட்ட வடு( சிறுகதை) அன்று வெளியூரில் இருக்கும் அவரது நண்பர் ஒருவர் அவரைப்பார்க்க வருவதாகப்போனில் சொன்னார். இவரும் சரி வாருங்கள் பஸ்விட்டு இறங்கியபின் போன் செய்யுங்கள் என்று சொன்னார். அவரும் சரி இன்று மாலை வருவேன் வந்து இறங்கிவிட்டுப் போன் செய்கிறேன் என்று சொன்னார். அவரும் சொன்னதைப்போலவே அன்றுமாலை வந்து பஸ்சில் இறங்கியபின் இவருக்குப்போன் செய்தார். அப்போது இவர் சொன்னார் போனில் லொக்கேசன் அனுப்பியிருப்பதாகவும் அதை அருகில் இருக்கும் ஆட்டோகாராரிடம் சொல்லி ஆட்டோபிடித்து வந்து சேருமாரும் இவர் சொல்ல அவர் சரி என்று சொல்லி விட்டு போனை கட்செய்தார்சிறிதுநேரத்தில் அவர் மீண்டும்தொடர்புகொண்டு “ அவன் 300 ரூ கேட்கிறான். அது அதிகம் பேசாமல் நீ உன் பைக்கை எடுத்துக்கொண்டு வந்து என்னைக் கூட்டிட்டுப்போ” என்றார்அதற்கு இவர் சொன்னார். ”அது சிரமம் நீ பேசாமல் அவர் கேட்டதொகையை தருகிறேன் என்று சொல்லி அந்த ஆட்டோவில் ஏறிவா நீ இங்கு வந்ததும் பணத்தை நான் தருகிறேன்” என்று சொன்னார் அதற்கு அவரும் ”சரி அதுபோல் செய்கிறேன்” என்றார். ஆனால் அவர் சொல்லி 45 நிமிடம் ஆகியும் அவர் வந்து சேரவில்லை. எனவே யோசித்துவிட்டு மீண்டும் தொடர்பு கொண்டபோது அவர் “ நான் நடந்து வந்துகொண்டிருக்கிறேன் நீ கொடுத்தாலும் காசு தான் நான் கொடுத்தாலும் காசுதான் ஆனால் அவன் கேட்பது அநியாயம் அதனால் நடந்து வந்துகொண்டிருக்கிறேன் பக்கத்தில் வந்துவிட்டேன் இங்கேயாவது வந்து அழைத்துப்போ” என்று சற்று கோபத்துடன் சொன்னார் அதைக்கேட்டு இவருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. சரி நடந்து போய் அழைத்து வருவோம் என்று மனைவியிடம் சொல்லிவிட்டு அழைக்கப் போனார் வீட்டுக்குக்கொஞ்சதூரத்தில் அவர் பெரிய பையைத் தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு சற்றே நொண்டியபடி நடந்து வந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் இவர் சொன்னார்” வீணாக ஏன் சிரமம் ஆட்டோ பிடித்து வரவேண்டியதுதானே? “ என்றார் அதற்கு அவர் இவரைத்திட்டத்தொடங்கிவிட்டார். ”சரியான கஞ்சன் நீ காசுசெலவாகும் என்று அத்தனை சொல்லியும் திரும்ப நடந்தே வந்திருக்கிறாய் மனுசனா நீ இந்தா இந்தப்பையை பிடி “ என்றார் இவரோ”கொஞ்சம் சிரமம் பார்க்காமல் நீங்களே உங்கள்பையைக்கொண்டுவாங்க” என்றதும் அவர் கோபம் உச்சமடைந்தது. “உன்னப்போய்ப்பார்க்கவந்தேனே அதுதான் நான் செஞ்ச பெரிய தப்பு ஜமுக்காளத்தில் வடிகட்டிய கஞ்சனா இருக்க மனுசனா நீ மனுசன் கஸ்டத்தைப்புரிஞ்சிக்கமாட்டியா” என திட்டத் தொடங்கினார். அப்போது இவர் சொன்னார் ”வாங்க வீட்டுலபோய் பேசிக்கலாம் திட்டுறதை வீட்டுல வந்து திட்டுங்க என்றார் அழமாட்டாத குறையாக அவர் கோபம் தனியவில்லை கோபத்துடனே வீட்டுக்கு வந்து உள்ளே வந்தவுடன் இவரின் மனைவியிடம் கோபத்தோடு சொன்னார் ”இந்தக் கஞ்சனுடன் எப்படிம்மா குடித்தனம் நடத்துற” என்று கோபத்துடன் கத்தினார் அப்போது அவர் மனைவிசொன்னாள் “ அது கிடக்கட்டுமுங்க அண்ணா இந்தாங்க தண்ணி சாப்பிடுங்க “ என்று சொல்லி தண்ணீர் கொடுத்தாள் இவர் அதை கையில்வாங்கிக்கொண்டு மீண்டும் ஏதோ சொல்லதொடங்கியவுடன் அவள் சொன்னாள் “ ””உங்களுக்கு விசயம்தெரியுமா நேற்றுத்தான் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்ச்சார்ஜ் ஆகி வந்தார் அவர் பைக் கார் எதையும் ஓட்டக்கூடாது அதுமட்டுமல்ல பாத் ரூமில்கூட கதவைப்பூட்டக்கூடாது தனியாக எங்கும் போககூடாது”” என்றவுடன் ”என்னம்மா சொல்ற அதிர்ச்சியா இருக்கு என்ன ஆச்சு அவருக்கு?”” என்று கண்கலங்ககேட்டபோது அவள் சொல்லத்தொடங்கினாள் “போனமாசம் இன்னேரம் எங்க இருந்தோம் தெரியுமா?” என நடந்ததைச் சொல்லத் தொடங்கினாள் அந்தச் சிறப்பு மருத்துவத்திற்காகப் பெயர்பெற்ற அந்த மருத்துவமனையின் நோயாளிகளின் உடனிருக்கும் உறவினர்கள் காத்திருக்கும் பகுதியில் அவள் கண்ணீரோடு அமர்ந்திருந்தாள். அவளின் கணவன் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். தன்னுடைய இஸ்டதெய்வம் குலதெய்வம் இன்னும் கண்ணில் கண்ட மற்றும் தோன்றிய தெய்வங்களை யெல்லாம் வேண்டிக்கொண்டு கவலையோடு காத்திருந்தாள். அவளின் கணவன் நிலை மிகவும் மோசமாக இருந்தது இன்னும் என்ன வியாதி என்று கண்டுபிடிக்கப்படவில்லைஇது ஆரம்பித்து ஒரு 10 நாட்கள் இருக்கும். அன்றய தினம் பணிக்குப்போய்விட்டு வீடு திரும்பிய அவர் வரவேற்ப ரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டி ருந்தார். இவள் சமையல் அறையில் சமைத்தபடி பேசிக் கொண்டிருந்தாள். பேசிக்கொண்டிருந்த அவரிடம் இருந்து கொஞ்சநேரமாகச் சப்தம் எதுவும் வரவில்லை. ”பேசிக்கொண்டே தூங்கிவிட்டார் போல” என்று நினத்துக்கொண்டு சமையலைத் தொடர்ந்தவள் ஏதோ ஒரு வேலையாக வரவேற்பரைக்கு வர அவர் சோபாவில் இருந்து கீழே விழுந்து கிடந்தார். அவர் கிடந்த கோலம் ஏதோ வித்யாசமாகத்தெரிய போய் தூக்கிப் பார்த்தபோது அவருக்கு சுயநினைவு இல்லை உடனே இவளுக்கு படபடப்பாகி என்ன செய்வது என்று தோன்றாமல் அழ ஆரம்பித்தாள். வீட்டிலிவர்கள் இருவர் மட்டுமே இருக்க என்ன செய்வதென்று தெரியவில்லை உடனே அவரது கைப்பேசியை எடுத்து கடைசியாகப் பேசிய நண்பரை அழைத்தாள் பதட்டத்டோடு” அண்ணா இவர் மயங்கிவிழுந்துட்டார் என்னன்னு தெரியல உடனே வாங்க “ என்று திக்கித்திணறிச்சொல்லி முடிக்குமுன் அழுகை முந்திக்கொண்டது ஆனால் அவர் உடனே ஏதோ ஆபத்து என்று உணர்ந்து தன் நண்பரையும் வரச்சொல்லிவிட்டு அங்கு விரைந்தார் சில நிமிடங்களில் அவர்கள் இருவரும் வீட்டுக்கு வந்து சூழ்நிலை பார்த்துவிட்டு ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொல்லிவிட்டு அவர் முகத்தில் நீர்தெளித்து அவரை நினைவுக்குக் கொண்டுவர முயன்றார்கள். ஆனால் நினைவு திரும்ப வில்லை. அதற்குள் ஆம்புலன்ஸ் வர அவரை இரண்டாவது மாடியில் இருந்து ஒரு சேரில் அமரவைத்து கீழே கொண்டு வந்து பின் ஆம்புலன்ஸில் ஏற்றினர். அவர்கள் பல்ஸ் சோதனை செய்துவிட்டு உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார்கள். அந்த மருத்துவமனை ஒரு அரசு மருத்துவமனை. அங்கே கொண்டுசென்றதும் அவருக்கு முதலுதவி மற்றும் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. கொஞ்சநேரத்தில் அவருக்கு நினைவு திரும்பியது ஆனால் அவருக்கு நடந்தது எதுவும் நினைவில் இல்லை. எனவே அங்கு அனுமதிக்கப்பட்டு கண் காணிப்பில் வைக்கப்பட்டார். அதற்குள் இவரை அறிந்தவர்கள் நண்பர்கள் என தகவல் பறந்து பெரும் கூட்டம் அங்கே கூடிவிட்டது. வந்தவர்கள் எல்லாம் தங்களுக்குள் இவரைப்பற்றிப் பேசிக்கொண்டார்கள் ” நல்ல மனுசன் எல்லோருக்குக் உதவ ஓடிவருவாரு இவருக்குப்போய் இப்படியா” என்றும் “ ஒரு கெட்டபழக்கமும் இல்ல சிகிரெட் தண்ணி கிண்ணி எதுவும் தொடமாட்டாரு அதுவுமில்லாம மலையேறும் பயணம் ( ட்ரெக்கிங்) அடிக்கடி போறவரு அதுனால ஹார்ட் பிராபளம் இருக்குக்காது கொஞ்சவயசு வேற என்னதான் ஆச்சுன்னு தெரிய்லையே” என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்கள்.அதற்குள் மருத்துவமனை ஊழியர்கள் ”அவர் நல்லாயிட்டார் ஒன்னும் பிரச்சனை யில்லை தொந்தரவு செய்யாமல் போங்க” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். நேரம் இரவு 8 மணிக்கு மேலாக கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்தது. 24 மணிநேரக் கண்காணிப் பில் அவர் வைக்கப்பட்டார். அன்று இரவு அவருக்குக் கடுமையான காய்ச்சல். அதனால் அதற்கு மருந்துகள் கொடுத்து கவனித்துகொண்டிருந்தார்கள். காய்ச்சல் குறையவில்லை. மறுநாள் இரத்தம் யூரின் மற்றும் எக்ஸ்ரே எல்லா டெஸ்ட்டுகளுமெடுத்தபின்னே மருத்துவர் இவளை அழைத்துச்சொன்னார் “ அவருக்கு ஹீமோகுளோபீன் இறங்கிட்டே இருக்கு காரணம் தெரியவில்லை அதனால அவரை மேல் சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பப்போகிறோம் தயாராகிக்கொள்ளுங்கள் “ என்று அவளிடம் சொன்னார் அவளுக்கு படப்படப்பாக வந்தது . கூட வந்திருந்த நண்பர்களிடம் பேசக்கூட முடியாமல் அழத் தொடங்கினாள். அதற்குள் அவள் பெண் நண்பர்கள் வந்து விசாரித்துக்கொண்டிருந்தார்கள். அவரை சிறப்பு மருத்துவ மனைக்கு அழைத்துச்செல்லப்போகின்றார்கள் என்று தெரிந்தவுடன் அதில் ஒரு பெண் இவளிடம் சொன்னாள்”” நீயும் கூடப்போகனுமே உனக்கு வேண்டிய துணிமணி பணம் வீட்டில் போய் எடுத்து வந்து தயாராக இருக்கனுமே வா வீட்டுக்குப்போய்ட்டு வரலாம்” என்று சொல்லி இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்றாள் வீட்டுக்குபோய் வேண்டிய வற்றை எடுத்துக்கொண்டு சாமி அறையில் போய் காசு முடிந்துபோட்டு வேண்டிக்கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு வந்தாள். அங்கு சிறப்பு மருத்துவமனைக்குப்போக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தகவல் அறிந்து அங்கு பெரும் கூட்டம் கூடிவிட்டது. ஆம்புலன்சில் அவருடன் இவள் மற்றும் நண்பர்கள் இருவர் ஏறிக்கொள்ள சிறப்பு மருத்துவமனை விரைந்தது அங்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததால் அங்கு அனைத்தும் தயார் நிலையில் இருந்ததன அங்கு போய் சேர்ந்ததும் அவர் சிறப்பு கண்காணிப்பு பிரிவு( ஐ.சி.யூ)வில் சேர்க்கப்பட்டார். தொடர் சிகிகிச்சை தொடங்கியது. ஆனால் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை சிறப்புமருத்துவமனையில் பலவிதமான மருத்துவப்பரி சோதனைகள் நடத்தப் பட்டன.ஆனாலும் வியாதி என்னவென்று தெரியவில்லை. ஆனால் ஹீமோ குளோபின் மாத்திரம் குறைந்து கொண்டிருந்தது மீண்டும் அவருக்கு மயக்கம் வந்து போய்க் கொண்டி ருந்தது மருத்துவர்களுக்கே ஒரு சவாலாக விளங்கியது. என்ன வென்று கண்டுபிடிக்கப் படவில்லை.இவளுக்கு அழுது அழுது கண்கள் வீங்கிவிட்டது. கூட இருந்தவர்கள் வற்புறுத்திச் சாப்பிடச்சொன்னார்கள். அவள் மனசு ஏற்காததால் முடியவில்லை அப்போது கூட இருந்தவர்கள் சொன்னார்கள்.” அவருக்குப்பிரச்சனை நீயும் போய் ப் படுப்பது என்று முடிவு செஞ்சுட்டயா ஏதாவது பேருக்காவது சாப்பிடு ”” என்று திரவ உணவாக பழரசம் போன்றவற்றை வற்புருத்திக்கொடுத்துக் குடிக்கச்சொன்னார்கள். கொஞ்சம் சாப்பிட்டாள். இப்போதும் சிகிச்சையில் முன்னேற்றம் இல்லை பிரச்சனை கண்டு பிடிக்கப் படவில்லை. இதற்கு நடுவே இவரை அனுப்பியமருத்துவமனையில் இவரைப் போலவே அறிகுறியுடன் ஒருவர் சேர்க்கப்பட்டார். அவருக்கும் இதே பிரச்சனை. மயக்கம் ஹீமோ குளோபிபின் குறைவு என்ற பிரச்சனைகளுடன் . அது மருத்துவர்களை யோசிக்கவைத்தது. அவருடைய வீடு ஏற்கனவே வந்தவரின் வீட்டின் பின்புறம் இருந்தது. ஒரே பிரச்சனையில் இருவர் ஒரே இடத்திலிருந்து. இது மருத்துவர்களை யோசிக்கவைத்தது. இவரும் சிறப்பு சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். சிறப்புமருத்துவமனையிலும் இது பிரச்சனையை உருவாக்கியது. அங்கு மருத்துவ நிபுனர்கள் கூடி ஆராய்ச்சி செய்தனர். இதற்குஇடையில் முதலில் வந்த நோயளிக்கு நிலைமை மிக மோசமாக அவர் சிறப்பு தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டார் அதற்குள் அடுத்த திடுக்கிடும்தகவல். அதே பிரச்சனை யுடன் மூன்றாவதாக ஒருவர் மருத்து வமனைக்கு வந்தவுடன் பிரச்சனை பெரிதாகியது அப்போது அது தனிமனிதனின் பிரச்சனையில் இருந்து சமூகப் பிரச்சனை ஆகியது.இந்தத்தகவல் பரவ அந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் பீதிக்குள்ளானார்கள் எல்லோர் மனதிலும் கவலை அப்பியது. இன்னும் யாருக்குப்பிரச்சனை வரப்போகிறதோ என்று பரபரப்பாகியது. மருத்துவமனைகள் எச்சரிக்கை செய்யப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டன. தகவல் சிறப்பு மருத்துவமனைக்கும் பறந்தது. அங்கும் இதைப்போல ஓரிரு நோயாளிகள் வந்திருந்தார்கள்இது அனைவரையும் கலக்கமடையச்செய்தது இப்பொழுது இவள் மிகவும் பீதிக்குள்ளானாள். அதி தீவிர கண்காணிப்புசிகிச்சைப் பிரிவுக்கு அவள் கணவன் மாற்றப்பட்டதும் மேலும் இரு நோயாளிகள் அதே பிரச்சனையுடன் வந்ததும் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அப்போதுதான் அவள் தெய்வங்களை வேண்டத்தொடங்கினாள். இதற்கு நடுவே இளம் மருத்துவர் ஒருவர் வந்து நோயாளியைப் பார்த்து விட்டுச்சொன்னார். ”இது ஒரு விதப்பூச்சிக்கடியினால் வரும் பிரச்சனை,எனவே அந்தக்கோணத்தில் சிகிச்சையை தொடங்கலாம் என்று அறிவுருத்தினார். பின் முதலில் வந்த நோயாளியிடம் ”சமீபத்தில் பூச்சி கடி ஏதாவது ஏற்பட்டதா ?”எனக் கேட்டார் அப்போது அவர் நினைவுக்கு வரவில்லை எதுவும் . அதனால் அவரின் மனைவி வர வழைக் கப்பட்டுவிசாரித்தார். “ சமீபத்தில் உங்கள் கணவரைப் பூச்சிகள் ஏதும் கடித்ததாகச்சொன்னாரா? “ எனக்கேட்கஅவள் யோசித்துவிட்டுச்சொன்னாள் “ அவரது கம்புக்கூட்டில் சின்னதாக ஒரு பூச்சி கடித்த தடம் அவர் காண்பித்தார் ஒருநாள் லேசாகச்சிவந்து வீங்கியிருந்தது ஆனால்மறுநாள் சரியாகிவிட்டது” என்றாள். அதேபோல் மற்ற இரண்டுநோயாளிகளும் விசாரிக்கப்பட்டனர். அவர்களுக்கும் இதே அனுபவங்கள் இருந்தன. ஒருவருக்கு தொடையிலும் இன்னொருவருக்குக் கழுத்துப்பகுதியிலும் கடித்ததாக அறியப்பட்டது இந்தத்தகவல்கள் பரிசீலிக்கப்பட்டுபின் பூச்சிக்கடி நிபுனர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டபோது பல தகவல்கள் வந்தன. “ இது ஒருவகைப்பூச்சிக்கடியால் வருவது அந்தப்பூச்சிக்கு லெப்டோரொம்பீடியம் என்றுபெயர் அதைசிக்கர் என்றும் சொல்லுவார்கள்(Leptorombidium also known as chigger) மருத்துவ உலகில், என்றும் அந்தப்பூச்சி எலிவளைகளுக்கு அருகே கூடு கட்டி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் என்றும் பெரும்பாலும் அது லார்வா நிலையில் இருந்து வளரும்போது எலிகளைத்தான் தாக்கும் சில நேரங்களில் எலிகள் இல்லாத சூழ்நிலையில் இடம் பெயர்ந்து மனிதனையும் கடிக்கும். இது மனிதர்களைக் கடிக்கும்போது குறிப்பிட்ட சில இடங்களில் தான் கடிக்கும் அதவாது கைஅக்குள் தொடைஇணையுமிடம் கழுத்துப்பகுதி போன்ற இடங்களில் கடித்து உள்ளே சென்று இரத்தத்தில்கலந்து பின் ஹீமோகுளோபினை சாப்பிட ஆரம்பிக்கும். “ என்று தெரியவந்தது ””மேலும் சொல்லத்தொடங்கினாள் ””இப்போது பிரச்சனை தெரிந்துவிட்டது. மருத்துவம்? அதுவும் பலவித கலந்தாய்வுகளுக்குப்பின் கிடைத்தது மருந்துகள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை தொடர்ந்தது. கிட்டத்தட்ட 21 நாட்கள் சிகிச்சைக்குப்பின் சரியாகத் தொடங்கியது. நல்ல வேளையாக இது பரவும் நோய் அல்ல என்பது நிம்மதி. மேலும் லார்வா நிலை கடந்து பூச்சி ஆகிவிட்டால் அது இவ்வளவு பாதிப்பைத்தராது என்றும்,ஆராய்ச்சிகள் சொன்ன தகவல் நிம்மதி அளித்தது இப்போது ஓரளவு சகஜ நிலைக்குத்திரும்பினார்கள் மூன்று நோயாளிகளும். அதற்கிடையில் அந்த பூச்சிகளை ஒழிக்கும்மருந்துகள் வரவழைக்கப்பட்டு அந்தப்பகுதிகளில் தெளிக்கப்பட்டன.அதன் பின் யாரும் பாதிக்கப்படவில்லை. இது பெரும்பாலும் மழைக் காலங்களில் வருவதாக அறியப்பட்டது ஓரளவு சரியானபின்னே வீட்டுக்கு அனுப்பினார்கள் அப்போது சொன்னதுதான்இவை 1) தொடர்ந்து மருந்துகள் சாப்பிடவேண்டும்2) தனியாகப்பயணம் கூடாது 3)வண்டிகள் எதுவும் ஓட்டக்கூடாது 4) பாத் ரூமில்கூட தாப்பா போடக்கூடாது 5)மற்றவர் பார்வையிலேயே இருக்க வேண்டும். பொழைச்சது பெரும்பாடாப்போச்சுது ஏதோ வேண்டிக்கொண்ட சாமிகள் மருத்துவர் வடிவில் வந்துகாப்பாற்றின”” என்றாள் இதைக்கேட்டவுடன் வந்தவர் கண்களில் நீர் வழியத்தொடங்கியது. “வெவரம் தெரியாம நான் கண்டபடி பேசிட்டேனே என்னை மன்னிப்பாயா” என்று கைகளைப்பிடித்துக்கொண்டு அழுதேவிட்டார் அப்போது இவர் சொன்னார். “ பரவாயில்லை நடந்தது அறியாமல்தானே பேசினீர்கள் தவறில்லை” ‘’ என்ன இருந்தாலும் நான் அப்படிப்பேசி இருக்கக்கூடாது “என்று சொல்லும்போது அவர் கண்களில் இருந்து வழிந்தநீர் இவர் கைகளை நனைத்தது அ.முத்துவிஜயன் All reaction1 point- நாவினால் சுட்ட வடு( சிறுகதை)
1 pointபல சந்தர்ப்பங்களில் நாங்களும் அப்பிடித்தான், மற்றவர் நிலைமை தெரியாமல் பேசுவது. பகிர்விற்கு நன்றி அக்கா.1 point- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🤣..... கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும் எதுவுமே மாறாவில்லை என்றே தெரிந்தது. அதே 'மிரட்டல்' பார்வை அன்றிலிருந்து இன்று வரை தொடர்கின்றது. யாரும் மிரட்டலாம். நான் கூட யாராவது கோவில் வீதியில் மேல் சட்டை போட்டிருந்தால், 'ஆ, சட்டையை கழட்டலாம்...' என்று அந்த அகப்பட்ட மனிதரை மிரட்டலாம்........😀.1 point- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
இது இன்னமும் மாறவில்லையா! ஊரில் இருக்கும்போது ஒரே ஒரு முறை திருவிழா இல்லாத, ஆளரவம் அற்ற நாள் ஒன்றில் சிவனுக்கும் அம்மனுக்கும் பொதுவான வீதியில் சைக்கிளை உருட்டிக்கொண்டு போகும்போது திடீரென்று ஒருத்தர் வந்து சேர்ட்டைக் கழட்டச் சொன்னார்! நான் கோவிலுக்குள் போகவில்லை; வீதியால்தானே போகின்றேன் என்று சொன்னபோது, மிரட்டல் பார்வையுடன் சேர்ட்டைக் கழட்டித்தான் போகவேண்டும் என்றார்! சரி ஏன் பிரச்சினை என்று சேர்ட்டைக் கழட்டிவிட்டு, சாரத்துடன் சைக்கிளை உருட்டினேன். வீட்டில் இருந்து காற்சட்டையோடு வெளியே போனால் அம்மா தூர இடம் போகின்றான் என்று கண்டுபிடித்துவிடுவார். அதனால் ஊர் உலாத்தப்போகும்போது சாரத்தை எப்பவும் காற்சட்டைக்கு மேலால் போட்டுக்கொண்டு போவதுண்டு!1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
சனிக்கிழமை பெங்களூரில் RCB எப்படியும் CSK ஐ வெல்லும்! Run rate இலும் மேலே போகும்! சென்னையில் pitch மாறிவிட்டது. அதிகமான ஓட்டங்களை எடுக்கத் திணறுகின்றார்கள். எனவே, இறுதிப் போட்டியில் KKR க்கு வாய்ப்பு அதிகம்1 point- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மனித உரிமைகள் மற்றும் நீதி போன்ற விடயங்களில் எந்த அழுத்தங்களையும் கொடுக்காதவை. தமிழரை எதிரியாக பார்ப்பவை. ஆனால் மேற்குலகு சில அழுத்தங்களை வைக்கும். எனவே சிறீலங்கா சீன இந்திய கால்களை தான் குளிப்பாட்டும்.1 point- பிக்குவினால் ஆக்கிரமிக்கப்பட்ட திரியாய் வளத்தாமலையடி நாகதம்பிரான் ஆலயம் சப்த நாக விகாரையாக மாற்றம்
1 pointஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தியானம் வந்துவிட்டது போலும்.🤣1 point- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
0 pointsபடம் இல்லாத இலங்கைப் பயணம் - நான்கு ------------------------------------------------------------------- ஊருக்கு பயணம் போனால் ஊரில் சிலரை போய் பார்ப்பது தவிர்க்க முடியாத ஒரு விடயம். அவர்கள் வயதான நெருங்கிய சொந்தமாகவோ, அல்லது ஆசிரியர் போன்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் காட்டும் அன்பும், வாஞ்சையும் உண்மையானது, அதை உணரக் கூடியதாகவே இருக்கும். பலர் எங்களை இன்னும் சிறுவர்களாகவே நினைத்தும் கதைப்பார்கள். எங்களின் கதைகளை கேட்பதை விட, அவர்களின் கதைகளை சொல்வதிலேயே ஆர்வமாக இருப்பார்கள். மீண்டும் சந்திக்கும் அடுத்த முறை என்று ஒன்று இருக்குமா அல்லது இல்லையா என்று தெரியாததால், அவர்கள் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சிலவற்றை சொன்னாலும், அது ஒரு பெரிய அசௌகரியத்தை உண்டாக்குவதில்லை. மாறாக, பார்த்து விட்டு கிளம்பும் போது, மனம் கொஞ்சம் கனக்கும். முதல் போன இடத்திலேயே, 'நீ இந்த தலைமயிரை முதலில் வெட்டு. இது என்ன கோலம். முக்கால்வாசி வெள்ளையாக வேற இருக்குது...' என்றார் நான் பார்க்கப் போனவர். 'சரி, வெட்டிறன்...' என்று தலையை நன்றாகவே ஆட்டினேன். சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்தில் இருந்தே இந்த 'நீட்டுத் தலைமயிர்' பிரச்சனை தொடருகின்றது. பள்ளிக்கூடத்தில் இன்றைக்கு யாருக்கு எதுக்கு அடிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கின்ற சில ஆசிரியர்கள், ஏன் தலைமயிரை வெட்டவில்லை என்று அதில் பிடித்து இழுத்தே அடிப்பார்கள். பின்னர் வீட்டில், பின்னர் ஊரில் என்று தடைகள் வந்து கொண்டேயிருந்தது. இன்று எல்லாமே கொட்டி விட, மிச்சமாக இருக்கிற நாலு முடியை நீட்டாக வளர்க்க நினைத்தாலும், அதுவும் முடியாது போல. ஒரு புதிதாகக் கட்டப்பட்ட சிறிய வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். அவரின் துணை சில மாதங்களின் முன் இறந்து போயிருந்தார். இங்கு ஊரில் புதிதாக கட்டப்படும் வீடுகள் மூன்று வகைகளில் இருக்கின்றன. முதலாவது மிகவும் அடக்கமான சிறிய வீடுகள். வீட்டின் முன்பக்கம் திறந்த ஒரு விறாந்தை. அங்கு இருக்கும் கதவை திறந்தால், உள்ளே ஒரு சிறிய மண்டபமும் இரண்டு அறைகளும். அதன் பின்னால் ஒரு சிறிய மண்டபம்/நடை, அதன் பின்னால் ஒரு சமையலறை. உள்ளிருக்கும் மண்டபத்தின் முடிவில் ஒரு குளியலறையும் கட்டப்பட்டிருக்கும். மிகவும் சிறிய ஒரு காணித் துண்டுக்குள்ளேயே, அரை பரப்பு அளவுள்ளது, இந்த மாதிரி வீட்டை பலரும் கட்டியிருக்கின்றனர். ஊருக்குள் காணிகள் என்றும் பெரிதாக இருந்ததில்லை. மிகவும் நெருக்கமாக அமைந்த வீடுகள். ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இருப்பவர்கள் இந்த மாதிரி புது வீட்டைக் கட்டிக் கொள்கின்றனர். கடைசிக் காலத்தில் ஊரில் வந்து இருக்கப் போவதாக சில புலம் பெயர்ந்தவர்களும் இதே போன்ற அடக்கமான வீடுகளை கட்டியிருக்கின்றனர். அடுத்த வகை புது வீடுகள் மிகப் பெரியவை, ஆடம்பரமானவை. அமெரிக்க பாணியில் அமைந்த வீடுகள். கனடா, அவுஸ்திரேலியாவிலும் இதே போன்ற வீடுகள் பின்னர் அமெரிக்காவைத் தொடர்ந்து கட்டப்பட்டன. இப்பொழுது இவை ஊரில் கட்டப்படுகின்றன. இரண்டு அல்லது மூன்று மாடிகளும் உண்டு. ஊருக்கு கொஞ்சம் வெளியே அயல் கிராமங்களில் ஓரளவு பெரிய காணியை வாங்கி இந்த மாதிரியான வீடுகளை கட்டிக் கொள்கின்றனர். ஊருக்குள்ளே என்றால் சிறிய இடத்தில் மேலே மேலே அடுக்கடுக்காக கட்டிக் கொள்கின்றனர். சில வீடுகளில் பல நிறங்களில் விட்டு விட்டு எரியும் மின் விளக்குகள் உள்ளேயும், வெளியேயும் பளிச்சிடுகின்றன. சில கோடிகளில் மொத்த செலவை சொல்கின்றனர். இந்த வகை வீடுகளுக்குள் போய் வரும் போது, ஒரு இலட்சியத்தின் முடிவு இந்த வீடுகளோ என்ற நினைப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. சிலர் வெளிநாட்டில் இருந்து வீட்டை கட்டி விட்டு, வருடம் முழுவதும் வீடுகளைப் பூட்டியே வைத்துள்ளனர். சிசிடிவியின் துணையுடன் வீட்டைப் பார்த்துக் கொள்கின்றனர். சில வருடங்களின் முன் மிக அதிகமாக இருந்த திருட்டுப் பயம் இப்பொழுது பெருமளவு குறைந்து விட்டது. பல வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவியே அதற்குக் காரணம். ஒரு வீட்டில் இருக்கும் சிசிடிவி சுற்றிவர இருக்கும் பல வீட்டை காவல் காக்கின்றது. ஆனால் இந்த சிசிடிவியால் தேவையில்லாத சில புதுப் பிரச்சனைகளும் உண்டாகியிருக்கின்றது. உங்கள் வீட்டு சிசிடிவி பதிவுகளை பார்க்க வேண்டும் என்று சிஐடி மற்றும் போலீசார் சில வீடுகளுக்கு வந்து, துப்பு துலக்கிய நிகழ்வுகளும் உண்டு. அப்படி சிஐடி பதிவுகளைத் துப்புத் துலக்கி ஒரு பெரிய கேரளா கஞ்சா கடத்தலை பிடித்ததாக ஒரு கதையையும் சொன்னார்கள். மூன்றாவது வகை புது வீடுகள் அரசாங்கத்தின் வீடு கட்டும் திட்ட உதவியுடன் கட்டப்படுவன. இந்த திட்டம் மிக நன்றாக செயற்படுகின்றது போன்று தெரிகின்றது. ஒரு வீட்டைக் கட்ட அரசாங்கத்தால் பத்து இலட்ச ரூபாய்கள் ஒரு குடும்பத்திற்கு பகுதி பகுதியாக வழங்கப்படுகின்றது. இரண்டு அறைகள், ஒரு மண்டபம், சமையலறை கொண்ட ஒரே மாதிரியான வீடுகள். பலர் வீட்டைக் கட்டும் போதே, பின்னர் அதை நீட்டி பெரிதாக்க்கும் திட்டத்துடன் கட்டி, பெரிதாக்கியும் உள்ளனர். சில கட்டுப்பாடுகள் இருப்பதாகச் சொன்னார்கள், உதாரணம்: கூரை ஓட்டுக் கூரையாக இருக்க வேண்டும், அஸ்பெஸ்டாஸ் சீட் பாவிக்கக் கூடாது. 'தனிய இருக்க இரவில் பயமாக இருக்குது...' என்றார். என்ன சொல்வது என்று தெரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். இவர் லண்டன் போய் பிள்ளைகளுடன் சில வருடங்கள் இருந்து விட்டு, அங்கு இருக்க முடியாது, இருக்க விருப்பம் இல்லை என்று திரும்பி ஊர் வந்தவர். இப்பொழுது பிள்ளைகள் வந்து கூட்டிக் கொண்டு போகப் போகின்றனர் என்றார். வேறு வழி ஏதும் இருப்பதாகவும் தெரியவில்லை. பொதுவாக, ஒரு துணை போய் விட, தனியாக இருப்பவர்கள் தனிமையில் ஒரு துயரத்துடனும் பயத்துடனும் இருக்கின்றனர் போன்றும், இருவராக இருப்பவர்கள் சாதாரணமாக இருப்பது போன்றும் தோன்றியது. இதே போன்ற இன்னொருவரிடம் போயிருந்த பொழுது, அவருக்கு நோர்தேர்ன் தனியார் மருத்துவமனை மீது இருந்த ஆதங்கம் முழுவதையும் சொன்னார். அவரின் துணைக்கு உடம்புக்கு மிகவும் முடியாமல் போக, யாழ் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு ஆரம்பத்தில் இருந்தே, வாசல் காவலாளிகள் உடபட, எவரும் தன்மையுடன் நடக்கவில்லை என்றார். மூன்று நாட்களின் பின்னர் நீங்கள் நோர்தேர்ண் போங்கள் என்று யாழ் பெரியாஸ்பத்திரியிலிருந்து இவர்களை நோர்தேணிற்கு அனுப்பியிருக்கின்றனர். நோர்தேர்ணில் 'பாசத்தை பணமாக்கினார்கள்' என்பது அவர் எனக்கு சொன்ன அதே வார்த்தைகள். 15 நாட்கள் மேல் அங்கிருந்த அவரின் துணை, அதற்கு மேல் அவர்களின் நிதி நிலைமையால் முடியாதென்று வீடு வந்து, இரண்டோ மூன்று நாட்களில் இறந்து போனார். பல இலட்சங்கள் ஒரு பயனும் இல்லாமல் செலவழிந்தது என்றும் சொன்னார். ஆனால் ஒரு தடவை கூட ஒரு வைத்தியரும் தன்னை சந்திக்கவில்லை என்றார். அவர் தினமும் அங்கே இருந்திருக்கின்றார். ஆனால் தினமும் மாலையில் வரும் கணக்குச் சீட்டில், வைத்தியர் வந்து பார்த்ததிற்கான கட்டணம் இருந்தது என்றார். பின்னர் இலங்கையில் இருக்கும் எனக்குத் தெரிந்த ஒரு வைத்தியர் ஒருவருடன், அவர் அங்கு நோர்தேணில் வேலை செய்வதில்லை, இப்படியான நிலைமைகள் குறித்து பொதுவாகக் கதைத்தேன். (தொடரும்........)0 points- துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்லோவாக்கியாவின் பிரதமர்.
“”நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், தங்களது சிந்தனை முழுவதும் ராபர்ட் ஃபிகோ மற்றும் அவரது அன்புக்குரியவர்கள், ஸ்லோவாக்கியாவின் மக்களோடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.“” அப்போ .... தங்கள் கவனம் உக்ரேன் - ரஸ்ய யுத்தத்தின் மீது இல்லையா? 😁0 points- குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நெடுந்தீவில் அனுஷ்டிப்பு
கண்ணீர் அஞ்சலிகள். படுகொலை நடந்து மூன்று வருடங்களின் பின் அதே படகில் நெடுந்தீவு போனேன். படகின் நடுப்பகுதி முன் பின் பகுதிகளை மறைத்தபடி, நடுவில் இருக்கும் (இதன் மேலே தான் ஓட்டியின் அறை இருக்கும்) பயணிகள் அனைவரையும் பின் பகுதிக்கு அனுப்பி விட்டு, ஒருவர் ஒருவராக முன் பகுதிக்கு அழைத்து வெட்டி கொன்றார்களாம். எவரையும் சுடவில்லையாம். பின் பகுதியில் இருந்தோருக்கு என்ன நடக்கிறது என தெரியவில்லையாம். கத்தும் போது அடி விழுவதாகவே நினைத்துள்ளார்கள், இல்லாவிடில் அதில் இருந்த பல நீந்த தெரிந்தோர் கடலில் குதித்து தப்ப முயன்றிருப்பார்கள் என்று ஊரவர்கள் சொன்னார்கள். இதை செய்தவர்கள் அப்போ 25 வயதாய் இருப்பின் இப்போ 64 வயசாளியாய் எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இறைவனோ, இயற்கையோ இவர்களில் எவருக்குமாவது தக்க தண்டனை வழங்கி இருக்குமா? எனக்கு நம்பிக்கை இல்லை. ஏன் தனியே அவாவை மட்டும் ?0 points- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
0 points👍... நீங்கள் சொல்வது மிகச் சரியே. அவர்களிடம் இருப்பவை மற்றும் ஒரு தொடர் பழக்கமே பல நடைமுறைகளை நிர்ணயிக்கின்றன. பெரிய கரண்டியால் சீனியை அள்ளிப் போடாமல், சிறிய ஒரு கரண்டியால் போடலாம் தானே என்று தான் அங்கேயும் சொன்னேன். அது ஒரு சிரிப்பாகவே முடிந்தது. வவுனியாவில் இருக்கும் உடன் பிறந்த தங்கையின் வீட்டில் தான் இது நடந்தது. 'போடா, எல்லாம் படித்துக் கிழித்தவர் சொல்ல வந்திட்டார்....' என்று இலகுவாக என்னை மறுத்து விட்டாள் என் தங்கை........😀. ஆச்சரியமாக அவர்களில் எவருக்கும், எனக்குத் தெரிந்த வரையில், தொடர் சுகயீனங்களோ அல்லது உடல்நலக் குறைகள் ஏதும் இருப்பதாகவோ தெரியவில்லை.0 points - படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.